அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, April 21, 2021

நினைவுப்பறவை சிறகடித்தபோது , TapiocaPudding ,

 Tapioca pudding  ...ஜவ்வரிசி பாயசம் .


                                                            thanks google :) 


                                                     

                           அமெரிக்கர் மற்றும்  ஐரோப்பியர்களுக்கு பொதுவா உணவு விஷயத்தில் எல்லாம் ஒழுங்குமுறையாக இருக்கணும் காலை உணவு  என்றால்  porridge ஓட்ஸ் ,கார்ன் ப்ளேக்ஸ் /cornflakes ,ரொட்டி டோஸ்ட் அத்துடன் மார்மலேட்/marmalade  அல்லது ஜாம் .இனிப்பு பிடிக்காதவங்க marmite ,bovril இதை வெண்ணை தடவி ரொட்டியில் மேலே பரப்பி சாப்பிடுவாங்க ..அல்லது சமைத்த ப்ரேக்பாஸ்ட் என்றால்  வேகவைத்த /வெதுப்பிய தக்காளி ,பொரித்த முட்டை ,பேகன் /bacon  ,பேக்ட் பீன்ஸ் /baked beans  ,மஷ்ரூம்ஸ் ,சாசேஜஸ்/sausages ,hash brown  இப்படி  விதவிதமா இருக்கும் . 

                                                                                    


காலை உணவை// EAT LIKE A  KING// என்பதற்கேற்ப தான் இவர்களது உண்ணும்  பழக்கம் இருக்கும் .

===========================================================================

ஒரு சிறு விளம்பர இடைவேளை :)

)  அசைவ மீன் கட்லெட் 

https://www.youtube.com/watch?v=Rbj99lxtsgQ  

Sri Lankan Fish Cutlet | evening snack | starter recipe | இலங்கையின் சுவைமிக்க பேமஸ் ஆன மீன் கட்லெட்

===========================================================================
மற்றும் முந்திரி பகோடா 

சூப்பரான சுவையான கலகலப்பான மொறுமொறுப்பான :) பக்க 

 உணவுக்காக :)  அதீஸ் பேலஸின் சமீபத்து அப்டேட் :)

https://www.youtube.com/watch?v=0hWV22ikyXY

===========================================================================

இடைவேளை முடிந்தது .இப்போ உணவுக்கு செல்வோம் :)

பிறகு மதிய உணவு என்றால் அதில் ஸ்டார்ட்டர் சூப் பிறகு மெயின் கோர்ஸ் இதில் குறைந்தது 5 வகை காய்கறிகள் இருக்கும்.

                                                                         


           

 வேகவைத்த அல்லது வதக்கிய காரட் ,பீன்ஸ் ரோஸ்ட் கிழங்கு மசித்த கிழங்கு இறைச்சி வகை வெரைட்டியில் ஒன்று அது மேல் ஊற்றி சாப்பிட கிரேவி பொடி gravy granules  , இது பாக்கெட் செய்யப்பட்ட டப்பாவில் இருக்கும் அதை கொதிக்கும் நீரில் போட்டு கலக்கி குழம்பாய் ஊற்றுவாங்க எல்லா காய்கறிகள் மீதும் .உணவு உண்டபின் கட்டாயம் ஒரு புட்டிங்/dessert  இருக்கும்  நம்ம ஊரில்உணவு உண்டபின்  ஒரு ஸ்வீட் சாப்பிடுவோம் அது போல தான் .ஹீஹீ ஆனா இவங்க வெற்றிலை பாக்குக்கு பதில் கொஞ்சம் உணவு சாப்பிடும்போதே சோமபானம் குடிப்பாங்க .


                                                                                


இவ்ளோ நேரமும் தலைப்புக்கு வரவில்லை இப்போதான் தலைப்பு என்ட்ரி ஆகிறது :) இவர்களின் புடிங்  என்றால் அது ஸ்பாஞ் கேக் மீது க்ரீம் அல்லது கஸ்டர்ட் ஊற்றி தருவாங்க  அப்படி இல்லைன்னா பழ COCKTAIL ,மிக அபூர்வமாக ஒரு ரெஸ்டாரண்டில் நான் சாப்பிட்டபோது எனக்கு வைக்கப்பட்ட புடிங் பெயர்  Tapioca pudding .இந்த டாபியோக்கா புட்டிங்கை இவர்கள் க்ரீம் சர்க்கரை ,பால் மற்றும் சில நேரம் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து செய்கிறார்கள் .

போன நூற்றாண்டு வரை Britain's most hated school pudding என்றழைக்கப்பட்ட இந்த ஜவ்வரிசி புடிங் இப்போ மீண்டும் இந்த நூற்றாண்டில்   கொஞ்சம் பிரபலம் ஆகிட்டு வருது .அதன் மீது கிரீம் மற்றும் கொஞ்சம் ஜாம் சேர்த்து சாப்பிடறாங்க .நம்ம ஊர்  ஜவ்வரிசி பாயாசம் தான் இங்கே இங்கிலாந்தில் Tapioca pudding என்று அழைக்கிறார்கள் :) என்னத்தான் நம்ம ஊரில் பாயசம் என்று ஜவ்வரிசிக்கு இடம் கிடைத்தாலும் இதன் ஆதி மூலம் பிரேஸில் நாடு என்கிறார்கள் .அவர்கள்தான் மரவள்ளிக்கிழங்கில் இருந்து இந்த ஜவ்வரிசியை உருவாக்கியிருக்காங்க  .     

 இங்கே மருத்துவமனையில் வார்டில்  இதே உணவுதான் அனைவருக்கும் அளிக்கப்படும் .அப்படி எங்களது வார்டிலும் இந்த ஜவ்வரிசி டிஸ்ஸர்ட் ஒருமுறை பார்த்தேன் .   ஒருவரும் சீந்தாமல் அப்படியே இருந்தது அலுமினிய பாக்குகளில் .அங்குள்ள நர்ஸ் ஒருவர் சொன்னார் அவர் போர்டிங் ஸ்கூலில் படிக்கும்போது 80  களில் இந்த புடிங் தினமும் உணவில் இருக்குமாம் சாபபிடாம டின்னர் ஹாலைவிட்டு போகக்கூடாதுன்னு      ஆசிரியர்கள் கடும் உத்தரவு போடுவாங்கலாம் அதனாலேயே பல மாணவர்களுக்கு இந்த டாபியாக்கோ  புடிங் மீது வெறுப்பு என்றார் .                                                                                                                                                 

ரெஸ்ட்டாரென்ட் மென்யூவில்  மற்றும் மருத்துவமனை வார்டில் இந்த ஜவ்வரிசி புடிங் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் பழைய நினைவு வந்தது .அது திருமணமான புதிதில் ஜெர்மனிக்கு போனதும் நானும்  என் கணவரின் தம்பி மனைவியும் சீக்கிரமே நட்பாகிட்டோம் .சில விஷயங்கள் ஒரு சிலரை உடனே சேர்த்து வைக்கும் அதுபோல என்னையும் அவரையும் இணைத்தது ஒரே ஒரு விஷயம்தான் அது ரெண்டு பேருக்கும் சமையல் தெரியாதது :))) 

என்னுடைய ஜவ்வரிசி பாயசம் மற்றும் உளுந்து வடை புராணம் அடுத்த பதிவில் தொடரும் :)........................


36 comments:

  1. ஜவ்வரசி புட்டிங் - என்னவோ போங்க..உங்க படம் பார்த்ததும் ஜவ்வரிசிப் பாயசம் சாப்பிடணும்னு ஆசை ரொம்பவே வந்துடுச்சு. மனைவிட்ட இப்போ சொல்லி, நாளை பண்ணச் சொல்லணும். ஆமாம் அந்த புட்டிங்ல, நம்ம மாதிரி, நெய்யில் வறுத்துச் சேர்த்த முந்திரி, உலர் திராட்சை இல்லைனா...எப்படி பாயசம்னு ஒத்துக்க முடியும் சொல்லுங்க?

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஅ அதெப்பூடி நெ தமிழன் இம்முறை 1ஸ்ட்டூஊஊ:)).. சமையல் பக்கம் மணத்ததும் ஓடி வந்திட்டார் கர்ர்ர் ஹா ஹா ஹா:))..

      நீங்க வேற நெல்லைத்தமிழன், பாயாசப் படம் பார்த்ததும் நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல கான்ஸும் ஓடல்ல... ஏனெனில் அஞ்சு செய்த ரெசிப்பி என நினைச்சுப் படம் பார்த்துப் பயந்திட்டேன்:))).. இப்பூடிச் சமைச்சாவோ அஞ்சு என:))

      Delete
    2. //அந்த புட்டிங்ல, நம்ம மாதிரி, நெய்யில் வறுத்துச் சேர்த்த முந்திரி, உலர் திராட்சை இல்லைனா...எப்படி பாயசம்னு ஒத்துக்க முடியும் சொல்லுங்க?//

      ஹாஆஹா நான் இதைத்தான் குக் கிட்டே சொன்னேன் நாங்க நெய்யில் cashew ரெய்சின்ஸ் வருது சேர்ப்போம்னு .அவர் நெய்னா என்னன்னு கேட்டார் :) ஸ்ஸ்ஸ் யப்பா அந்த சுவையை அவருக்கு விளக்க முடியுமா :) 

      Delete
  2. மேலையர்களின் உணவைச் சொல்லியிருக்கீங்க. நானும் அதில் நிறைய அனுபவப்பட்டவன்.

    ஹோட்டல்கள்ல, ப்ரெட் டோஸ்ட், அதுல ஹனி, வெண்ணெய் என்று சாப்பிடுவேன். நிறைய பழங்கள் சாப்பிடுவேன். அப்புறம் ஆரஞ்ச் ஜூஸ். ஓட்ஸ் இல்லாமல், மற்றதுலாம் இருக்கும், நட்ஸ்லாம் இருக்கும். அதில் பால், ஹனி விட்டுச் சாப்பிடுவேன் (காலை உணவு பெரும்பாலும் ஓசிதானே...அதனால இதெல்லாம் நிறையவே சாப்பிட்டுடுவேன். ஹாஹா. அடுத்த வேளை எங்க சாப்பிடப்போறோமோ என்ற நினைவில்)

    ReplyDelete
    Replies
    1. milk brioche rolls  ,croissant இவையும் இருக்கு அப்புறம் pretzel  சின்னமன் ரோல் கூட சாப்பிடுவாங்க  இவங்க திக் ஆரஞ் ஜூஸ் சுத்தமா பிடிக்காது எனக்கு .நான் சாப்பிடுவது இப்போல்லாம் கவுனி அரிசி/ஆளிவிதை சேர்த்த  கஞ்சி .முன்பு க்ளூட்டன் இல்லா கார்ன் ப்ளெக்ஸ் சாப்பிடுவேன் இப்போ அது மில்க் சுவை பிடிக்கலை .நான் முந்திலாம் ஒரு நேந்திரம் சிப்ஸ் பாக்கெட் வச்சிப்பேன் :) அதுபோதும் 

      Delete
  3. இந்த டெஸர்ட் எதுவுமே எனக்குப் பிடிக்காது. வித விதமான கேக்குகள்லாம் இருக்கும். எதையும் தொடப்பிடிக்காது. நம்ம ஊர் இனிப்பு வகைகள் ரொம்பவே அபூர்வமா இருக்கும். அதனால நான் சாதம், பருப்பு சாப்பிடுவேன் (எனக்காக அதனைச் செய்து தருவாங்க). பிளாக் ஃபாரஸ்ட் கேக் இருந்தால் சாப்பிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான் இந்த கேக் வெரைட்டிஸ் பிடிக்காது எனக்கு மார்க் அண்ட் ஸ்பென்சரில் ஒரு fruit க்ளூட்டன் இல்ல கேக் கிடைக்கும் அதை மட்டும் எப்பவாச்சும் சாப்பிடுவேன் அது டேஸ்டி ஆனா ரொம்ப இனிப்பா இருக்கும் 

      Delete
  4. எனக்கு ஜவ்வரிசி பாயசத்துல, நைலான் ஜவ்வரிசி ரொம்பப் பிடிக்கும். பஹ்ரைன்ல நிறைய நல்ல குவாலிட்டி கிடைக்கும் (நான் நிஜமா கிலோ கணக்குல வாங்கிடுவேன்) இங்க வந்து ஒரு தடவை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணினேன் சுமார்தான்.

    எனக்கு உணவுக்கு இடைல எதையாவது சாப்பிடும் கெட்ட வழக்கம் உண்டு. அதைத் தவிர்க்க, நான் ரொம்ப வருஷமாவே, நைலான் ஜவ்வரிசி 15 எடுத்து வாய்க்குள்ள போட்டுக்கொண்டுவிடுவேன். அது ஊறி சாப்பிடுவதற்குள் அடுத்த வேளையே வந்துடும். இந்த விநோத பழக்கம் வேற யாருக்குமே இருக்காதுன்னு நினைக்கிறேன். ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. இந்த புட்டிங் நைலான் வகை சவ்வரிசில தான் செய்றாங்க ஆனா நம்ம பாயாசம்தான் சூப்பர் . chewy tapioca balls, Boba tea; Boba nai cha; Tapioca tea இதெல்லாமும் நைலான் ஜவ்வரிசி சேர்த்து செய்றதுதானே .
      உண்மையில் இப்படி சவ்வரிசி சாப்பிடறதை இப்போதான் கேள்விப்படறேன் :)) 

      Delete
  5. //சூப்பரான சுவையான கலகலப்பான // - கொஞ்சம் பயத்துடனே போனேன். இன்று ராம நவமி. அவங்க எதையாவது போட்டிருக்கப்போறாங்களே என்ற கலக்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கோழி மீன் எல்லாம் கலகலக்காதாக்கும் ஹையோ ஹையோ:))

      Delete
    2. ஹாஹாஆ :) @நெல்லைத்தமிழன் வேற ஏதாச்சும் இருந்தா நான் அப்டேட் கூட இணைச்சிடுவேன் :) என்னை நம்பி போகலாம் :) பயப்படாதீங்க 

      Delete
  6. ஸ்டார்ட்டர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.  அதைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது.  அப்புறம் மெயின் கோர்ஸ் எப்படி சாப்பிட!  என் மகன்கள் சூப் போட்டு விட்டு ஸ்டார்ட்டர் என்று போட்டு அப்புறம் மெயின் கோர்ஸ் என்பார்கள்.  பெரும்பாலும் ஆரம்பத்திலேயே நான் அம்பேல் ஆகிவிடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீராம் அவங்க மாதிரி நம்மால் உண்ண  முடியாது .அவங்களுக்கு நம் உணவு மலைப்பு :)சூப் மட்டுமே எனக்கு போதுமானது 

      Delete
  7. இந்தமுறை உங்கள் பதிவுக்கு வரும் முன்னரே நான் அதீஸ் பேலஸ் சென்று பார்த்து விட்டேனே...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ இப்போ ஸ்ரீராமுக்கு நோட்டிபிகேசன் வருது:))

      Delete
    2. ஹாஹாஆ :) அதீஸ் பேலஸ் ஓனருக்கு குஷியை பாருங்க :)

      Delete
  8. என்னென்னவோ சொல்கிறீர்கள்...   புடிங், டெஸெர்ட்..   நான் அதெல்லாம் முயற்சிப்பதே இல்லை.  எப்போதும்போல் இட்லி, வடை, தோசைதான்!

    ReplyDelete
    Replies
    1. நாம் இரண்டு பேரும் ஒரே இனம் ஸ்ரீராம்

      Delete
    2. @ ஸ்ரீராம் இது இவங்க டிஸ்ஸர்ட் நாம் இனிப்பு சாப்பிடுவோம் பாயசம் கேசரி போல் அதுதான் இவங்க டிஸ்ஸர்ட் 

      Delete
  9. அன்பு ஏஞ்சல்.
    டாப்பியோகா புட்டிங்க்.
    நினைக்கவே சிரமம்.
    ஜவ்வரிசி பாயசமாவது நிறைய முந்திரிப் பருப்பு மிதக்க
    சுவைக்கலாம்.
    யூகேயில் அது எப்படி இருந்திருக்குமோ.
    பாவம் அந்த மாணவ மணிகள்.

    என்னுடைய காலை உணவு
    பழைய சாதமும் மோரும். வறுத்த பாதாம்
    வயிற்றை அமைதியாக வைத்திருக்கிறது:)
    அடுத்த பதிவில் உறவுகள் அனுபவித்த சமையலை
    எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லிம்மா //மோஸ்ட் ஹேட்டட்  டிஸ்ஸர்ட் //ஆம் இது ஸ்கூல் பிள்ளைங்க பாவம் ,இது நம்மூர் ஸ்டைலில் இல்லை அப்படியே ஊறவைச்சு வடாம் செய்யும்போது திக்  ஆக வருமே அப்படி இருக்கு நெய் மற்ற வாசனை ஏதுமில்லை தொடர்கிறேன் வல்லிம்மா :)

      Delete
  10. ரபியோகா புடிங் என்றதும் ஏதோ மரவள்ளிக் கிழங்கை அவிச்சுச் செய்த புடிங்கோ என நினைச்சுட்டேன்ன்:)).. எப்பூடி எல்லாம் ஒரு அப்பாவிப் பிள்ளையை ஏமாத்தீனம்:)).. என்னைச் சொன்னேன்:))..

    ReplyDelete
    Replies
    1. ஹலோ அதீஸ் :) இதை டாபியோகா pearls என்றுதான் சொல்றாங்க :)க்க்க்ம்க்கும் அப்படியே ஏமாத்திட்டாலும் :)

      Delete
  11. //அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களுக்கு பொதுவா உணவு விஷயத்தில் எல்லாம் ஒழுங்குமுறையாக இருக்கணும்///

    ஐரோப்பியர்களுக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்க ஆனால் அமெரிக்கர்களை சேர்க்காதீங்க நான் பார்த்த வரையில் காலையில் பேகல் டோனட் சிப்ஸ் வாழைப்பழன் என்று சாப்பிடுகிறார்கள்


    மதியம் அநேகபேர்கள் மெக்டோனால்டில் அல்லது பர்கர்கிங்கில் வாங்கிய பர்கர் ஃப்ரஞ் பரை சாப்பிடுகிறார்கள் அல்லது பீட்சா சாப்பிடுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. !!!ஆஅஆவ் அப்போ அமெரிக்கன்ஸ்  ஐரோப்பியர் போல் இல்லையா ?? தெரிஞ்சிருந்தா அவங்களை சேர்த்திருக்க மாட்டேன் :)  பொதுவா வெளிநாட்டினார்னு சொல்லலாம் ஆனால் இங்கே ஐரோப்பிவிலேயே பல வேறுபாடு இருக்கு .உண்மையில் ஜெர்மன்காரங்க ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ப்ரேக்பஸ்ட் விஷயத்தில் 

      Delete
  12. ஜவ்வரிசி புடிங் பார்க்க ஜவ்வரிசி பால் பாயசம் போலவே இருக்கிறது.

    //இந்த புடிங் தினமும் உணவில் இருக்குமாம் சாபபிடாம டின்னர் ஹாலைவிட்டு போகக்கூடாதுன்னு ஆசிரியர்கள் கடும் உத்தரவு போடுவாங்கலாம் அதனாலேயே பல மாணவர்களுக்கு இந்த டாபியாக்கோ புடிங் மீது வெறுப்பு என்றார் //
    எதையும் கண்டிப்பு படுத்தி சாப்பிட வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு வெறுப்புதான் வரும்.

    ஜவ்வரிசி பாயசம் மற்றும் உளுந்து வடை புராணம் படிக்க ஆவல்.
    அதிராவின் முந்திரி பக்கோடா பார்த்து விட்டேன் ஏஞ்சல்.

    ReplyDelete
  13. படங்கள் ஆசையை தூண்டுகிறது சகோ

    ReplyDelete
  14. புதியவற்றை அறிந்தேன்...

    ReplyDelete
  15. //அதுபோல என்னையும் அவரையும் இணைத்தது ஒரே ஒரு விஷயம்தான் அது ரெண்டு பேருக்கும் சமையல் தெரியாதது :)))// ஹா ஹா! அப்புறம்?? தெரிந்து கொள்ள ஆவல்.
    நானே இப்போதுதான் உடம்பை எப்படி குறைப்பது என்று யோசிக்கிறேன்.இந்த சமயத்தில் போய்..

    ReplyDelete
  16. முன்னெல்லாம் கல்யாணங்களில் முதல்நாள் மாலை/இரவு உணவில் ஜவ்வரிசிப் பாயசம் கட்டாயமாய் இருக்கும். இப்போல்லாம் யாருமே பண்ணுவது இல்லை, சில ஓட்டல்கள் தவிர்த்து. அவங்க தான் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இனிப்பு தரோம்ங்கற பேரிலே ஜவ்வரிசிக் கஞ்சியைப் பாயசம்ங்கற பேரிலே கொடுப்பாங்க.

    ReplyDelete
  17. ஆஹா! நீங்களும் உளுந்து வடை பண்ணப் போறீங்களா? நானும்!

    ReplyDelete
  18. இங்கத்தேய சில உணவுகள் தயாரித்து தயாரித்து மனம் சலிச்சுப்போச்சு!))) பாயசம் தாங்கோ குடித்துப்பார்ப்பம்!))

    ReplyDelete
  19. பாயசத்தில் முந்திரிப்பருப்பைக்காணவில்லையே?))

    ReplyDelete
  20. இங்கத்தேய சாப்பாடு செய்து செய்து மனம் சலித்துவிட்டது.பாயசத்தில் முந்திரிப்பருப்பு இருக்கோ![[

    ReplyDelete
  21. ஹயோ மிஸ்ட் உங்க போஸ்ட்!!! என்னது இது ச்சே...

    சரி சரி இது ஜவ்வரிசி கஞ்சி ந்னு சொல்லுங்க ஹா ஹா ஹா ஹா...நம்மூரில நெய்ல வறுத்து பருப்புகள் உலர் பழங்கள் சேர்த்தா பாயாசம்...வெல்லம் போட்டு தேங்காய்ப்பால் ஊற்றி அது ஒரு வகை...ஜவ்வரிசில ஃபெல்லூடா இப்படி வெரைட்டி உண்டே..ஜவ்வரிசி வடை அது இதுன்னு...ஜவ்வரிசி உப்பும்மான்னு...நீங்க சொல்லிக் கொடுத்து அசத்துங்க ஏஞ்சல்...அப்புறம் எல்லாரும் உங்களை செஃப் ஆக்கிடுவாங்க! அதீஸ் பாலஸ்ல யாருக்கோ புகையுதாம்!!!!!

    உங்க ரெசிப்பி பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

    கீதா

    ReplyDelete