அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, April 28, 2021

பாகற்காய் பிரட்டல் ,பொரியல் 

 சென்ற பதிவில்  ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து  வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில் இருந்து பாகற்காய் பக்கம் தாவியது எனது மனம் . 

                                                                                


அதீஸ் பேலஸின் அப்டேட்டில் இன்று Bitter Gourd Pachchadi | சுலபமான கசப்புக்குறைந்த பாவற்காய்ச் சம்பல் | நீரிழிவு நோய்க்குகந்த ரெசிப்பி

https://www.youtube.com/watch?v=9iRMj4aNrhI

=============================================================================

சில மாதங்கள் முன்பு என் கணவர் ஏசியன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளிர் பச்சை நிற பாகர்காய்களை வாங்கி வந்தார் .இப்படிப்பட்ட வித்தியாசமான நிறத்தில்  பாகற்காயை நான் பார்த்ததில்லை .எங்கம்மா மிதி பாகல் வகைகளை வில்லிவாக்கம் மார்க்கெட் ,பெரம்பூர் மார்க்கெட் போகும்போது வாங்கி சமைப்பார் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது அது .மெலிசா மெலிதாக நறுக்கி  தேங்காய் எண்ணெயில் வதக்கி அத்துடன் கீறிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்து பொரிப்பார் .வாசனை நல்லாவே இருக்கும் ஆனால் அதெல்லாம் நான் அப்போ சாப்பிட்டதில்லை :) அதன் அருமை காலம் கடந்த பின் தான் தெரிகிறது .

இங்கே கிடைக்கும் பாகற்காய்கள் எங்கள் நாட்டிலிருந்து வருபவையல்ல என்பது பின்னர்தான் கண்டறிந்தேன் எல்லா பெட்டிகளிலும் ஜமைக்கா சூடான் கென்யா மொராக்கோ  என்றிருக்கும் .என்ன காய்கறியாக  இருந்தாலும் நம்மூர் சுவை மணம் வரவே வராது .சரி கணவர் வாங்கி வந்த வெளிர்  பச்சை பாகலுக்கு வருகின்றேன் .

                           இதுதான் அது 

                                                                                
அதைப்பார்த்ததும் எப்படி செய்வதென்று கேட்டு அதீஸ் பேலஸ் ஓனருக்கு பூனை ஓலை அனுப்பியதும் லிங்க் வந்தது :) பாகற்காயும்  ரீட் மோரும் :) பாவற்காயும், றீட் மோர்http://gokisha.blogspot.com/2017/03/blog-post_73.html   அவர் சொன்னமாதிரியே  சூப்பரான சுவையில் பாகற்காய் பிரட்டிய பொரியல் வந்தது .

                                                                                    


இந்த பாகற்காய் விதைகளை எத்தனையோ முறை வீட்டில் நட்டு வளர்க்க முயன்றேன் அவையும் நல்லா வளரும் அழகா அருகில் நட்டு வைத்த கம்பு குச்சிகளை அருகிலுள்ள பிற செடிகளை , சின்ன பிள்ளைங்க அப்பா அம்மா கைகளை பிடிப்பதுபோல் பிடித்து  க்ளைம்பெர்ஸ் போல் கொடி கிளை நுனி  விட்டு வளர்ந்து அழகாய் மஞ்சள் நிற பூ பூக்கும் அந்த  தருணம் வின்டர் தொடங்கி வளர்ச்சி தடைபட்டு மடியும் .அதனால் வீட்டில் பாகல் வளர்ப்பு விதை  நடுவதை நிறுத்தி விட்டேன்  . 

==========================================================================

நம் நாட்டில்  தற்போதைய நிலை நோய் தோற்று எல்லாம் விரைவில் நீங்கி சுமூக நிலை வர அனைவரும் பிரார்த்திப்போம் .கேள்விப்படும் விஷயங்கள் மனதை பதைபதைக்க வைக்குது .

                                                         *********************

42 comments:

 1. பாகற்காய் அநியாயத்துக்கு வெளிறி இருக்கிறது!  துணி வெளுத்த தண்ணீரை ஊற்றி விட்டார்களோ!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) இது படத்தில் க்ளியரில்லை ..பாக்க இன்னமும் வெளிர் பச்சை .ஸ்ரீலங்கன் பாகற்காய் ஸ்ரீராம் இது 

   Delete
 2. மிதி பாகற்காய்  என்றால் சிறியதாக இருக்கும்.  இலேசாக இருந்தால் பச்சையாக நறுக்கிப் போட்டு உப்பு போட்டு, எ.ப சாறு பிழிந்து அப்படியே கூட சாப்பிடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. அதே அதே குட்டியா இருக்கும் அம்மா சமைச்சிருக்காங்க 

   Delete
 3. நாட்டின், தமிழ்நாட்டின் தற்போதைய தொற்றுநிலை மிக பயங்கரமாக இருக்கிறது.  வெளியே செல்லவே அச்சப்படும் நிலை.  விரைவில் நிலைமை சீராகும் என்கிறார்கள்.  நம்புவோம்.  வேண்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் தகவல்கள் செய்திலாம் பார்க்க கேட்க நடுங்குது .மக்கள் கொஞ்சம் அவதானமா இருந்திருக்கலாம் ,இதில் கூட்டங்கள் பெர்த்டே திருமண விழா தொலைக்காட்சி நிகழ்ச்சின்னு ஒரே அட்டகாசம் :(

   Delete
 4. ஆஹா இதென்னது இது அதீஸ் பாலஸில் பாகற்காய் சம்பல் என்றால் நீங்களும் பாகற்காயா!!! ஹாஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹீஹீ அவங்க போஸ்ட் பார்த்து பொருத்தமா சேர்த்துட்டேன் படம் எடுத்து வச்சிருந்தேன் 

   Delete
 5. ஏஞ்சல் இந்த வெளிர்ப்பச்சை பாகற்காய் இங்கு நல்லா கிடைக்கிறது!! நான் வாங்குவதுண்டு என்றாலும் அதிகம் பயன்படுத்துவது மற்ற பச்சை மற்றும் காட்டுப் பாவக்காய், மிதி பாவக்காய் எல்லாம்..

  இங்கு காட்டுப் பாவக்காயும் கிடைக்கிறாது வித்தியாசமான ஷேப்..உருண்டையா இருக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கே இந்த வெளிர்பச்சை ஸ்ரீலங்கன் கடையில் கிடைக்குது இதுதவிர தாய்லாந்து வெரைட்டியும் உண்டு அது ரொம்ப SOFT ஆ இருக்கும் நம்மூர் பாகற்க்காய் தான்  சுவை கீதா.நீங்க என்ஜாய் பண்ணுங்க கிடைக்கும்போது அங்கே . 

   Delete
 6. இந்த பாகற்காய் விதைகளை எத்தனையோ முறை வீட்டில் நட்டு வளர்க்க முயன்றேன் அவையும் நல்லா வளரும் அழகா அருகில் நட்டு வைத்த கம்பு குச்சிகளை அருகிலுள்ள பிற செடிகளை , சின்ன பிள்ளைங்க அப்பா அம்மா கைகளை பிடிப்பதுபோல் பிடித்து க்ளைம்பெர்ஸ் போல் கொடி கிளை நுனி விட்டு வளர்ந்து அழகாய் மஞ்சள் நிற பூ பூக்கும் அந்த தருணம் வின்டர் தொடங்கி வளர்ச்சி தடைபட்டு மடியும் .அதனால் வீட்டில் பாகல் வளர்ப்பு விதை நடுவதை நிறுத்தி விட்டேன் . //

  அப்படியே கையை நீட்டுங்க ஹைஃபைவ் தட்டிக்கிறேன்.


  எனக்கும் அதே அனுபவம். இதோ இப்ப கூடா நல்லா வளர்ந்திருக்கு பூவும் பூத்தது அவ்வளவுதான்....

  என்றாலும் முயற்சியை விடப் போவதில்லை...அடுத்து மீண்டும் முயற்சி செய்யப் பொகிறேன்..ஏன்னா பழைய வீட்டில் பக்கத்துவீட்டில் பின்புறம் நான் சும்மா அந்தக் குழந்தைகளிடம் கொடுத்துநாம் நட்டு வைப்போம் என்று நாங்கள் போட்டு செடி வளர்து காய் காய்த்து இரு முறை பாகற்காய் பொரியல் அப்புறம் பிட்லை செய்து அவங்களுக்கும் கொடுத்து நானளும் சாப்பிட்டோம். இந்த வீட்டில் சின்ன பாத்ரூம் சைஸ் அளவு ஏரியாவில் மண் இருந்தும் வளர்க்கலைனா? ஹாஹாஹா

  கத்தரி காய்த்து பிட்லை செய்தேன் ரசவாங்கி செய்தேன், புதினா நல்லா வந்திருக்கு, பாலக் வந்தது....தக்காளிக்காய் பல முறை கூட்டு செய்தாச்சு இப்பத்தான் அது ஓய்ந்தது. கறிவேப்பிலை தள தளன்னு மரம் (ஏற்கனவே இருந்ததுதான்) ரோட்டில் பொவோரும் வருவோரும் வந்து பறித்துக் கொண்டு போகும் அளவு...பதிவுக்கு வைச்சுருக்கேன் கொஞ்சம் ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கே பிரச்சினை வெதர்தான் .தளதளன்னு வளர்ந்து போவது கஷ்டமா இருக்கும் .ஆனா மணத்தக்காளி மட்டும் காய்ந்தாலும் அடுத்த சீசனுக்கு தழைச்சி வளருது .இங்கே கிழங்கு கேரட் நல்லா வரும் வெண்டைக்காய் கத்திரி வரமாட்டேங்குது .பீன்சும் வளருது .குறைந்த கால பயிர்செடி மட்டும் ட்ரை பண்ணனும் 

   Delete
 7. பாகற்காய் பொரியல் சூப்பரா இருக்கே ஏஞ்சல்!!!!

  பூஸாரின் ரெசிப்பி போய் பார்க்கிறென்,...பார்த்திருப்பேன் என்று நினைவு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா .பார்த்திருப்பீங்க அங்கேயும் .ருசியா வந்தது எனக்கு பூசாரின் ரெசிப்பி 

   Delete
 8. பாகற்காய் புளிக் குழம்பு போல தாளித்து வதக்கி எடுத்து பொரியலாகச் செய்வது போல !! அவர் ரெசிப்பி. பார்த்தேன்...சூப்பர்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ரெசிப்பி நல்லா வந்தது .அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் 

   Delete
 9. மிக நல்ல பாகற்காய் பொரியல்.
  உங்க அம்மா செய்வது போலத்தான்
  நானும் முன்பு செய்வேன். இப்போது பாவக்காயை அதனுடைய கசப்புடன் சாப்பிடக் கற்றுக் கொண்டுவிட்டேன். நன்றி ஏஞ்சல்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வல்லிம்மா அப்போ அம்மா செய்யும்போது தொட்டதில்லை இப்போ கிடைத்தால் விடறதில்லை .நான் தக்காளி சேர்த்தும் காரமா செய்வேன் ரசத்துக்கு நல்லா இருக்கும் 

   Delete
 10. ஆஹா இன்று ஒரே பாவக்காயாப்போச்சே:))... கசப்பு எனினும் அதுவும் ஒரு சுவைதான்.

  உண்மைதான் எனக்கும் இப்போ நியூஸ் பார்க்க விருப்பமில்லை, மனம் பதை பதைக்குது.. எங்கு போய் முடியப்போகிறதோ.. டெல்லி, பெங்களூர்தான் ஆகவும் கொடுமையாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா வாங்க அதீஸ் பேலசம்மா .கசப்புனாலும் ருசி அதனால்தான் உங்க  போஸ்டுக்கு  சேர்த்தே போட்டேன் என் சமையலை .அப்புறம் கொஞ்சம் பிளாகையும் கன்சிடர் பண்ணுங்க ப்ளீஸ் .

   Delete
 11. இது கேரளா பாகற்காய். கசப்பு மிகக் கம்மி யாக இருக்கும். இதை வட்டமாக மெல்லிசாக நறுக்கி தேங்காய் எண்ணையில் பொரித்து தயிரில் போட்டு பச்சடி செய்வார்கள். கல்யாண விருந்தில் 21 ஐட்டம்களில் இதுவும் ஒன்று.

   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே சார் /இது இலங்கை பாகர்காயாம் .நான் நினைக்கிறன் இலங்கை மற்றும் கேரளாவுக்கு உணவில் ஒரு தொடர்பு இருக்கு .இந்த பச்சடியைத்தான் அதீஸ் பேலஸில் ரெசிப்பி போட்டிருக்காங்க :) தேங்காயெண்ணையில் பொரித்தால் எந்த காயும் ருசிதான் 

   Delete
 12. பாகற்காய் சுவையே தனி... மிகவும் பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ .ஒருக்காலத்தில் தொட்டதில்லை இப்போ மருத்துவ குணம் அறிந்து அடிக்கடி சாப்பிடறோம் .நானா தேநீரும் குடிக்கிறேன் 

   Delete
 13. நான் பலவித பாகற்காய்களைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் போட்டிருக்கும் வெளிர் நிற பாகலும் அதில் ஒன்று. மிது பாவக்காய் நல்லா இருக்கும். இங்க வந்த பிறகு நிறைய தடவை பாகற்காய் வாங்கி அதில் நல்லா ரோஸ்டா கறி பசங்களுக்குச் செய்துபோடுவேன். எனக்கு பாகல் சாம்பார் மட்டும்தான் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இது இலங்கையில் இருந்து வருவதாம் .நல்லா இருந்தது சமைக்க .இனிமே அதுவும் எப்படி இருக்குமோ தெரிலா .காரணம் இலங்கை ஒரு குட்டி சைனாவாகிட்டு வருதாம் :( ஆமை புகுந்த வீடு பழமொழி கணக்காகப்போகுது அந்த நாட்டு நிலை .சைனா எல்லாத்திலும் ஜீன் MODIFY செய்யும் நாடு இலங்கையில் விளையும் காய்களிலும் செய்யமாட்டாங்கன்னு என்ன நிச்சயம் .எனக்கு புளி போட்டு சமைத்து சிவப்பரிசியுடன் சாப்பிட சுவையா இருந்திச்சி 

   Delete
 14. பஹ்ரைன்ல, சைனா சேப்பங்கிழங்கு வரும், நல்லா பெருசா (நம்ம ஊர் சேப்பங்கிழங்கைவிட 1 1/2 மடங்காவது பெரிசு) வரும். சைனா இஞ்சில தோல் சீவுவது எளிது. ஆனால் மருத்துவக் குணம் நம்ம ஊர் காய்கறிக்குத்தான் உண்டு (இயற்கையா விளையுது. சைனா, அதன் ஜீன் மாற்றங்கள் செஞ்சிருப்பாங்க). நம்ம ஊர் புடலங்காய்ல பல வகைகள் உண்டு. பங்களாதேஷ் புடலங்காய் பச்சைல கோடுகளோடு தடிமனான பாம்பைப் பிடித்துக்கொண்டு வந்தது போல இருக்கும்.

  அதுபோல சௌசௌ அபூர்வம். நம்ம ஊர் ஆட்களைவிட பிலிப்பினோஸுக்குத்தான் அது பிடிக்குமாம்.

  ReplyDelete
  Replies
  1. என்னது !!! பாகல் சாம்பாரா !!! ரெசிப்பி ப்ளீஸ் .எங்கள் பிளாகில்  விரைவில் எதிர்பார்க்கிறேன் 

   //சௌசௌ // chayote .என்கிறாங்க ஆனால் கொஞ்சமும் நம்மூர் பெங்களூர் கத்திரிக்கா சுவை கிட்டயும் வராது .அம்மா கடலைப்பருப்பு தேங்காய் போட்டு அப்புறம் சாம்பாரில் போட்டும் செய்வாங்க ஸ்ஸ் ஹ்ஹா அவ்ளோ டேஸ்டி 
   //

   Delete
  2. அந்த சைனா கத்திரி  சைனா கிழங்கு எதையும் கிட்ட சேர்ப்பதில்லை காரணம் அவ்ளோ கஷ்டப்பட்டாச்சு தோலெல்லாம் அரிப்பு ..ஆனா இது எனக்கு மட்டும் ..அநேகமா ஹைப்ரிட் வெரைட்டிக்கும் எனக்கும்  சூட் ஆகலை புடலங்காயும் கேரளா ஹைபிரிட் குண்டு வெரைட்டி சாப்பிட்டு பட்டாச்சு .இப்போல்லாம் ஆர்கானிக் தான் இல்லைன்னா பாக்ஸை பார்த்து எந் நாட்டிலிருந்து வருதுன்னு கன்பார்ம் செஞ்சுதான் வாங்கறோம்  .

   Delete
  3. //என்னது !!! பாகல் சாம்பாரா !!! ரெசிப்பி ப்ளீஸ் .எங்கள் பிளாகில் விரைவில் எதிர்பார்க்கிறேன் /

   என்னது..  பாகல் சாம்பார் கேள்விப்பட்டதில்லையா ?!   சாம்பார், பிட்லே எல்லாம் ஃபேமஸாசே!

   Delete
 15. பாகற்காய் கொஞ்சம் வெளிர் பச்சையாக இருந்தால் கசக்காது. நல்ல பச்சை நிறம் கசக்கும். மிதி பாகல் வாங்கி வந்த உடனே சமைக்கணும். இல்லைனா பழுத்துடும். பாகல் செடிக்கு நீங்க நல்ல முற்றிய பாகற்காயைப் பழுக்க வைத்து உள்ளே உள்ள விதைகளை எடுத்துக் காய வைத்து விதைச்சுப் பாருங்க. பாகல்பழம் சிவப்பாக இருக்கணும். உள்ளே விதைகளும் சிவப்புச் சதையோடு இருக்கும். சாதாரணமாக வாங்கும் பாகற்காயின் விதைகளை நட்டால் செடி வரலாம். வராமலும் போகலாம். ஆனால் பலன் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. அக்கா செடி வளருது கொடியும் வளருது  ஆனா அதுக்குள்ள குளிர் வரத்தால்  வளர்ச்சி நின்னுடுது .மிதி பாகல் அபூர்வமா கிடைக்கும் உடனே வாங்கிடுவேன் 

   Delete
 16. மிதி பாகல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் பிஞ்சா விதை இல்லாமல் இருந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
  வெளிர் பச்சை பாகற்காய் மதுரையிலும் கிடைக்கும். கசப்பு தன்மை குறைவு அதில்.

  ஏசியன் சூப்பர் மார்க்கெட்டில்தான் மகனும் இது போன்ற நம் நாட்டுகாய்கள் வாங்கி வருவான்.

  ReplyDelete
 17. //நம் நாட்டில் தற்போதைய நிலை நோய் தோற்று எல்லாம் விரைவில் நீங்கி சுமூக நிலை வர அனைவரும் பிரார்த்திப்போம் .கேள்விப்படும் விஷயங்கள் மனதை பதைபதைக்க வைக்குது .//

  ஆமாம் ஏஞ்சல். அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம் . அவர்தான் மக்களை நல்லபடியாக வாழவைக்க வேண்டும். உதவி செய்தவர்களுக்கும் இந்த நோய் வந்த செய்திகளை படிக்கும் போது இன்னும் வருத்தமாக இருக்கிறது.

  மக்கள் மிகவும் அச்சத்தோடு வாழும் காலமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அக்கா உங்க பதிவில் பின்னூட்டம் போட விட மாட்டேங்குது   blogger 

   Delete
  2. ஏன் என்று தெரியவில்லையே!

   Delete
 18. சீக்ரெட் மிஷன் சொல்லி சென்றவிதம் அருமை

  ReplyDelete
  Replies
  1. 😎😎😎😎😎😎 secret mission is I In engalblog my friend 😂😂

   Delete
 19. பாகற்காய் எத்தனை கசப்பானாலும் விரும்பி சாப்பிடுவேன்.. இங்கே இந்திய கடைகளில் நம்ம ஊர் பாகற்காய்கள் (அடர்த்தியான பச்சை நிறத்தில்) கிடைக்கின்றது, கிலோ £8.00.

  ReplyDelete
 20. பாகற்காய் பிரட்டல் சாப்பிட்டு அலர்ஜி ஆகிவிட்டதா? இல்லை அதிரடியன் சேனலில் வருவதை இங்கே கலாய்க்கக் கூடாதுன்னு உத்தரவா?

  எழுதவே இல்லையே

  ReplyDelete
 21. அதுக்கப்புறம் சொந்தச் சமையல் கிடையாதா? பதிவையே காணோமே.. ஒருவேளை பிரட்டல், உங்கள் கணவருக்குப் பிரட்டலை ஏற்படுத்தி, இனி உணவுப் பதிவெல்லாம் தன் மீது டெஸ்ட் செய்யக்கூடாது என்று ஸ்டிரிக்டா சொல்லிட்டாரா? ஹாஹா

  ReplyDelete