அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, April 14, 2021

ஒரு வண்ணத்துபூச்சியான பட்டுக்குட்டியின்கதை

                                              இன்றைய பதிவில் உருமாற்றம் /transformation பற்றிய ஒரு குட்டி ஸ்டோரி சொல்லப்போறேன் .இந்தக் கதையை எனக்கு சொன்னவர் என்னுடைய  ப்ரொபஸர் . 

                                        

 நாம் நமது உள்ளார்ந்த ஆற்றல்கள் திறமைகளை  உணர்வது வெளிக்கொணர்வது எவ்வளவு முக்கியம் என்பது பற்றி இந்த உருமாற்றம் கதையை சொன்னார் .

கதைக்கு செல்லும் முன்  இரண்டு அப்டேட்ஸ் அதீஸ் பேலஸிலிருந்து ..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்டேட் 2,https://www.youtube.com/watch?v=PubtgN_tvp0

 Simple and Spicy Mushroom Curry | சுலபமான சுவையான மஸ்றூம் பிரட்டல் | Sri Lankan cooking


அப்டேட் 1https://www.youtube.com/watch?v=NEqSMojHnrc

                     --Cheese Patties | Sri Lankan cooking

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

                              கதைக்கு செல்வோம் .....

                                                வலிமை :)

                             இது தான் இன்னும் உருமாற்றம் அடையவில்லை இன்னும் கம்பளிப்பூச்சி நிலையில் இருக்கிறது என்று நம்பிய ஒரு பட்டாம்பூச்சியின் கதை  .அழகிய வனம் ஒன்றில் ஒரு குட்டி கூட்டுப்புழு பிறந்ததாம் .அது கல் ,முள் ,கம்பி இதையெல்லாம் கஷ்டப்பட்டு தனது குட்டி கால்களால் கடந்து,  ஊர்ந்து நடந்து டயர்ட் ஆகிப்போனதாம் .ஒருநாள் இப்படி சோர்ந்து ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தது .அப்படியே மேலே பார்த்தப்போ பெரிய பசுமையான மரம் குளுகுளுவென இருக்க அந்த கூட்டுப்புழு தனது பயண திசையை மாற்றி மரத்தின் மேலேறிச்சாம் .

                                                                           


                                                                                

ஒவ்வொரு முறையும் மேலேறும்போது இலைகளில் இருந்து வழுக்கி விழுவதும் மீண்டும் மேலேறுவதுமாக இருந்தது கூட்டுப்புழு .ஒரு வழியாக அந்த பட்டுக்குட்டி மரத்தின் உச்சிக்கு போய் அங்கிருந்து தன்னை சுற்றியுள்ளவற்றை குட்டி கண்களை வைத்து ஆச்சர்யமுடன் பார்த்ததாம் .

 நீலவானம் ,பஞ்சுப்பொதி மேகக்கூட்டங்கள் சில்லென்ற காற்று நறுமண மலர்கள் என வித்தியாசமான ஒரு அனுபவம் அதற்கு கிடைத்தது .அப்பாடி எத்தனை இன்னல்களுக்கப்பால் இந்த மாதிரி நிம்மதியா சுவாசிக்க முடியுதுன்னு அங்கே தங்கிடுச்சு .அதற்கு தன்னுள் வேறு உருமாற்றம் நிகழப்போவதை அது அறிந்திருந்தாலும் அந்த சூழல் அதற்கு பிடித்தமானதால்   தான் கூட்டுப்புழுவாக இருந்ததால்தான் மரமேறி வரமுடிந்தது ன்னு நினைத்தது .பிறகு அங்கேயே ஒரு இலையின் கீழ் படுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு போனது .இப்போ அதைச்சுற்றி அது நிம்மதியா தூங்கும்போது எந்த இடையூறும் வரக்கூடாதுன்னு அதைச்சுற்றி ஒரு கடின சுவர் உருவானது.  கூட்டுப்புழுவால் எங்கும் நகரவியலாதபடி அந்த சுவர் தடுப்பு போட்டது .

அது உறங்கி தூக்கம் கலைந்து எழும்பி பார்த்தபோது தன்னால் அசைய முடியாதபடி எதுவோ தடுக்குதுன்னு தன்னை சுற்றி கஷ்டப்பட்டு திரும்பி பார்த்தது .தனது பின்னால்  இரண்டு நீல நிற இறக்கை முளைத்திருப்பதை அதனால் பார்க்க முடிந்தது .இப்படியும் அப்படியும் அது அசைந்த போது அந்த கூடு உடைந்து வெளியே வந்தது மீண்டும் திரும்பி பார்த்தப்போ அந்த நீல பளபளக்கும் இறக்கைகளை  பார்த்து பயந்து அப்படியே மேல் பக்கம் மூடியவாறே  கால்களால் நடந்தது   .

                                                                              


                       இப்போ அது ஒரு அழகிய  வண்ண    பட்டாம்பூச்சி .ஆனால் அதற்கு தான் பட்டாம்பூச்சியாக மாறியது தெரியவில்லை தான் இன்னும் கூட்டுப்புழு என நினைத்து முன்பு  ஊர்ந்து நகர்ந்த நினைப்பில் மரத்தில் ஊர்ந்து நடந்தது .அதற்கு நடக்கவே முடியவில்லை  புதிதாய் முளைத்த அதன் இறக்கைகள் மிகவும் பாரமாக இருந்தன .மீண்டும் முந்தி பார்த்த நீல வானத்தையும் முகில்களும் பார்க்க அதற்கு ஆசையா இருந்தது .மேலேறி செல்ல முடியாததால் ஓவென்று தேம்பி அழுதது  .அப்போ அந்த பக்கம் வந்த ஒரு கருப்பு வெள்ளை  பட்டாம்பூச்சி அதனிடம் எதற்கு அழுகிறாய் என கேட்டது ?                                                           


                                      அதற்கு அந்த நீல பட்டாம்பூச்சி ... //என்னால் முன்பு  கஷ்டப்பட்டாவது நடக்க முடிந்தது இப்போ என் மேல் ஏதோ எக்ஸ்ட்ராவா வளர்ந்திருக்கு அதனால் என்னால் நகரவே முடியல என்றது // உடனே அந்த க .வெ  பட்டாம்பூச்சி படபடவென சிறகடித்து அழகாய் வட்டமிட்டு சொன்னது //நீ உனது கால்களுக்கு கடும் பாரத்தை கொடுக்கிறாய் உனது சிறகுகளை அடித்து  என்னை போல் பற .//.அதைப்போலவே  நீல பட்டாம்பூச்சி செய்தப்போ அதற்க்கு உலகமே அழகாய் தெரிந்தது முன்பைவிட இலகுவாய் இன்னும் மேலெழும்பி செல்ல காற்றோடு விளையாட முடிந்தது .இந்த பட்டாம்பூச்சியைப்போலத்தான் பலர் நமக்குள் உள்ள வலிமையை ஆற்றலை உணராமல்  முன்செல்லாமல் இருந்த இடத்தில அப்படியே இருக்கிறோம்  . நம்மிடம் உள்ள வலிமை ஆற்றல், சக்தி இவற்றை நாம் குறைவாக எடைபோட்டு வாழ்வை  வீணாக்குகிறோம் .

குட்டி ஸ்டோரி முடிந்தது .

பின்குறிப்பு 

=============


பட்டுக்குட்டி...caterpillar 


ஒரே நிறத்தில் பட்டாம்பூச்சி கிடைக்காததால் பிரவுன் நீலம் என படங்கள் மாற்றிப்போட்டுள்ளேன் .:))


அப்புறம் இங்கே அதீஸ் பேலஸ் அப்டேட் மட்டுமே வழங்கப்படும் .குட்டி ஸ்டோரி பார்த்து யாரும் வலிமை அப்டேட் கேட்டுடாதீங்க :))))))))))))))))))))))

13 comments:

 1. இந்த பதிவிற்கு என்ன கருத்து சொல்லலாம்?

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ நோஓஓஓஓஓஓஓஒ இது டப்பூஊஊஊஊ.. கொஞ்சம் தலை சுத்துது என ஓய்வெடுத்தால் போதும் உடனே அம்பேரிக்காவில இருந்தெல்லாம் ஜம்ப் ஆகிடுவினம் கர்ர்ர்ர்:)) மீ தான் 1ஸ்ட்டூஊஊஊ:))

   Delete
  2. கருத்தெல்லாம் ஜொள்ளாமல் அதிராவின் பலஸ் ஐப் பாருங்கோ:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ஓடிடுறேன்ன்:))

   Delete
  3. அதிஸ் பேலஸ் போய் லைக் போட்டுட்டு ஒடி வந்துட்டனே பயமாக இருக்கு எங்கடா மீனை வெட்டியது மாதிரி என்னையும் வெட்டி விடுவிங்களோ என்று

   Delete
 2. அருமையான கதை - ஒரு பாடம்...

  ReplyDelete
 3. அப்டேட் என்றாலே வலிமைதானா?!!!

  ReplyDelete
 4. பதிவு படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்த பாடல்...

  பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா..

  https://www.youtube.com/watch?v=npPfAC0JRWg

  ReplyDelete
 5. இந்தக் கதை படிச்சிருக்கேன். பட்டுப் பூச்சிப் பட்டுப் பூச்சி பாப்பா பாடல் தான் எனக்கும் நினைவில் வந்தது. பலரும் தங்கள் சக்தி தெரியாத ஆஞ்சநேயராகத் தான் இருக்கின்றனர். நல்லதொரு பாடம்.

  ReplyDelete
 6. எனக்கு என் பிரச்சனை:)).. போஸ்ட் போடுவீங்க எனும் நினைப்பே இல்லை எட்டிப் பார்க்க முடியாமல் வீட்டிலும் வேலை.. இப்போதான் மின்னல் தட்டி ஓடி வந்தால் நியூ போஸ்ட்ட்ட்:)).. நில்லுங்கோ பட்டாம்பூச்சியைப் பிடிசிசிட்டு சே செ படிச்சிட்டு வாறேன்ன்:)).

  ReplyDelete
 7. ஆஆஅ இந்தப் பட்டாம் பூச்சிக் கதை எனக்கு தெரியாது.. ஆனா ஒரு விதத்தில இதுவும் விதியின் பயனாகத்தானே நடக்குது.. தன்பாட்டில கூடு வந்து தன் பாட்டில சிறகு முளைக்குது...

  நான் இப்போ முழு ஞானியாகிட்டேன்:)).. நமக்கு நன்மையோ தீமையோ எது நடந்தாலும் அது விதி என எடுக்கப் பழகிவிட்டேன்:))..

  எல்லாமே நமக்கு ஏற்கனவே எழுதப்பட்டிருக்குது, அதன்படிதான் அனைத்தும் நடக்குது ஆனால் நமக்குத்தான் முன்கூட்டியே தெரிவதில்லை.. அதனாலதான் துன்பப் படுகிறோம்ம்..

  அந்தக் குட்டிப் பட்டுக்குட்டிப் பட்டாம் பூச்சிக்குக்கூட, இன்னொறு கறுப்பு வெள்ளையான
  “ஞானி”ப் பட்டாம்பூச்சி:)) அதாவது மீயைப்போன்ற ஒன்று உபதேசம் சொன்னதாலதானே அது பறந்தது:))..

  அப்பூடித்தான் அதிரா சொல்லும் உபதேசங்களைக் கேட்டு நடந்தால் நீங்களும் வானில பறக்கலாமாக்கும்:)).. ஹையோ எனக்கு என்னமோ ஆச்சு:)) லக்ஸறி லைவ் முடிஞ்சு ஸ்கூல் தொடங்கப் போகுது எனும் ரென்சனில என்னமோ எல்லாம் ஜொள்றேன் நான்:)) ஹா ஹா ஹா..

  இருப்பினும் இந்தக் குட்டிப் பட்டுச்செல்லத்தின் கதை எழுதியவிதம் எனக்குப் பிடிச்சுப்போச்சூ:)).. எனக்கும் ஒரு பட்டுக்குட்டி வேணும்:)).., ஆனா அது நெளிவது எனக்குப் பிடிக்காது உடம்பெல்லாம் கூசும்:)).. நெளிஞ்சு ஊராமல், எழும்பி நடந்தால், நான் வளர்ப்பேனாக்கும்:))

  ReplyDelete
 8. நல்ல கதை. நம் உண்மையான சக்தி தெரியாதவரை நம்மிடம் இருப்பவை நமக்குப் பாரமாகத் தோன்றும். உண்மைதான்.

  மாரல் ஸ்டோரி எழுதும் அளவு வயதானவராக (அனுபவத்தில்) ஆகிட்டீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. கதை செம. கதை உண்மைதான்...ஏஞ்சல். இது எனக்கும் என் ஆசிரியை சொன்னாங்க கல்லூரியில். அதுவும் தனியா கூட்டி வைத்து என்னோடு பேசியப்ப எனக்கு உந்து சக்தி அளிக்க சொன்ன கதை.

  ஆனால் நம் திறமை நமக்கே தெரிந்தாலும் கூட அதை வெளிக் கொணர தகுந்த சூழல் வேண்டும். இல்லை என்றால் அது இன்னும் பாரம்தான்...அதுவும் அழுத்தம் கொடுக்கும் பாரம்..
  அதீஸ் பேலஸ் போய்க் கொண்டிருந்தேன். இடையில் முடியவில்லை போக வேண்டும்..

  அங்க செஃப் வேலை இருக்கான்னு கேட்டு சொல்லுங்க அப்ளை பண்ணுறேன்..ஆனா ஒன்லி வெஜிட்டேரியன்!!!!!

  ரொம்ப நாளாச்சு பார்த்து...தொடர்ந்து வர முயற்சி செய்யறேன்..பார்ப்போம்

  கீதா

  ReplyDelete
 10. சமீபத்தில் பஞ்சாபி தொலைக்காட்சி நெட்வொர்க் அதிபரின் ஒரு பேச்சு கேட்க நேர்ந்தது...அதில் அவர் ப்ரொஃபசர் சொன்னதை அவர் வேதமந்திரமாகக் கொண்டதாக இதை ஒரு பதிவாக யோசித்தேன். பார்ப்போம்

  கீதா

  ReplyDelete