அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Saturday, April 10, 2021

எது வரைக்கும் !!

 

                                                                                 


இந்த மனம் ஒரு குட்டி குரங்கு ஒரு இடத்தில் இல்லாமல்  தாவிக்கொண்டிருக்கும்.ஒரு செயின் ரியாக்ஸன் போல் எதையாவது நினைவூட்டிக்கொண்டேயிருக்கு .இன்று பதிவில் பார்க்கப்போவது வெளிநாட்டுப்பெற்றோர் மற்றும் பெண் குழந்தைகள் பற்றிய பகிர்வு .

                             சுமார் ஓன்றரை வருஷமுன் நான் எனது பெங்களூர் நண்பி மற்றும் எங்களது பொது நட்பு ஒரு பிரித்தானிய பெண்மணி மூவரும் எங்கள் மகளுடன் ஒரு இடத்துக்கு பிக்னிக் சென்றோம் .அப்போது பெங்களூர் நட்புக்கு அவரது கணவரிடமிருந்து வெளிநாட்டிலிருந்து அழைப்பு வந்தது .பேசி முடித்தபின் எங்களிடம் சொன்னார் கணவர்  மகள் பற்றி விசாரித்ததாக அவர் தினமும் இரவு மகள் உறங்கசெல்லும்முன் நலம் விசாரித்தபின் தான் அங்கே வெளிநாட்டில் அவருக்கு நிம்மதி என்றார். அப்போவே சைடில் பிரித்தானிய நண்பியின் முகம் லேசா சிவப்பதை கவனித்தேன். அப்படியும் விடாமல் நாங்க போட்டிபோட்டுக்கொண்டு உரையாடலை தொடர்ந்தோம்  .

                                    அப்போ எங்க மகள் ஐஸ்க்ரீம் வாங்க போறேன்னு சொன்னா .என் நாக்கில் saturn இருந்திருக்கும்போல :) கொஞ்சம் சத்தமா மகளிடம் பார்த்து ரோடை க்ராஸ பண்ணு பேவ்மென்ட் பக்கமிருக்கும் கார்கள் கிட்டே நடக்காதே என்று சொன்னேன் . பிறகு  பேச்சு  பள்ளி நாட்களில் எப்படி மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது தனியே விடாமல் கைபிடித்து கூட்டிவருவது இப்படி எப்படியெல்லாம் அம்மாக்களாகிய நாங்கள் குழந்தைகளை பெண் குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் கவனிக்கிறோம் என்பதுடன்   தலைவாரி பூச்சூட்டி ஊட்டி :) ,ஊட்டி ,கொடைக்கானல் :) என்று  கொஞ்சம் அதிகமாகவே அந்த பிரித்தானிய நட்பின் முன்பு அளவளாவி விட்டோம் .

                       நானும் சும்மா இல்லாமல் மகள் படிக்கும்  யூனிவர்சிட்டி அருகில் வேலை கிடைச்சா நானும்  கணவரும் அங்கே செல்வோம்  என்றெல்லாம் ஓவராக  பேசிக்கொண்டிருந்தேன் .இதையெல்லாம் நல்லா கவனித்து கொண்டு வந்த பிரித்தானிய பெண்மணி சிறிது நேரம் கழித்து எங்களை பார்த்து .என்ன நீங்கள் இந்தியர்கள் இப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகளை அவர்கள் வாழ்க்கையை வாழ விட மாட்டீர்களா என்று கோப தொனியில் கேட்டார் !! (அநேகமா நம்ம நாட்டு பெற்றோர்கள் நிறையபேரை பார்த்திட்டார் போலிருக்கு :) சிறு  இடைவெளிக்குப்பிறகு  ..எதுவரைக்கும் தொடரும் ......

=============================================================================================================================

இது இடைவேளைநேரம் அதீஸ் பேலஸில் இன்று அசைவ சமையல் குறிப்பு !!How to cut SALMON FISH and store it | Salmon மீனை சுத்தம் செய்து இப்படிப் ஃபிறீஸ் பண்ணலாமோ?


https://www.youtube.com/watch?v=DZiGEYlj80o

======================================================================================================

                                                     கொஞ்சம் தடுமாறி நாங்கள் அவருக்கு புரியவைக்க முற்பட்டோம் கடைசிவரை அவர் எங்களை பேசவே விடலை .என்னவோ பிள்ளைகளை நாங்கள் சுதந்திரமில்லாம வளர்ப்பது  வதைப்பது போலவே பேசிக்கொண்டிருந்தார் :) பிறகு பெங்களூர் நட்பு சொன்னார் ..//எங்களுக்கு பெண்குழந்தை பொக்கிஷம்போல் அதை பத்திரமா பாதுகாக்கணும் // என்று .அப்பவும் அவர் புரிஞ்சிக்கலை .பிறகு  லேசா தூறல் ஆரம்பித்ததால் அதை சாக்கிட்டு அந்த அரட்டையை  தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து   கிளம்பினோம் .

ஒரு விஷயத்தை விடாமல் தூக்கி சுமந்து யோசித்து அதைப்பற்றி நெடுநேரம் மனதில் அசைபோடுவது எனது வழக்கம் அதுவும் காலையில் சொன்ன ஒரு சிறு விஷயம்பற்றி இரவு 10 மணிக்கும் கூட  மனசு அசைபோடும் . அப்படி அசைபோட்டபோது தோன்றியது :- 


3 வயசில் கைபிடிச்சு நடக்க கற்றுக்கொடுத்தப்போ பிடிச்ச விரல்களை நாங்க இன்னும் விடவில்லையோன்னு தோணுது அதேபோல் காலமெல்லாம் நம் கைவிரல்களை கொடுக்க முடியுமா ?

ஒருவேளை வெளிநாட்டினர் வளர்ப்புதான் சரியா ? 18 வயதில் பிள்ளைகளை தனியே வீடெடுத்து தங்க அனுப்புவதுதான் சரியா ? 

எப்படி சில பெற்றோர் அவர்களுக்கு சுதந்திரம் அவசியம்போல்  பிள்ளைகளை கைகழுவி விட்டதுபோல் எதுவும் கண்டுக்காம இருக்காங்க ? 

நம்மூரில் வேர்விட்டு வளர்ந்த மரத்தை ( எங்களை வெளிநாட்டு வாழ் பெற்றோரை  ) தொட்டியில் நட்டு  வெளிநாட்டுக்கு இடமாற்றியதால் குழப்பமா ? 

நம்மூரிலும் இந்த பிள்ளை வளர்ப்பு பிரச்சினைகள் இருக்கா ?

சும்மாவே என் மனசு ஊருலகெல்லாம் சுற்றும் இப்போ செவ்வாய் கிரகம்  வரைக்கும் டிராவல் பண்ணுது :) 

***********************************************************************************

33 comments:

 1. ஆஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)).. எதுவரைக்கும்?.. ம்ஹூம்ம்ம் அதீஸ் பலஸ் வரைக்கும் தேன்ன்ன்ன்:))..

  ஹையோ மக்களே இது அஞ்சுவின் நேயர் விருப்ப ரெசிப்பி:)).. நெஞ்சு பலவீனமானவர்கள், சைவ மக்கள் தயவு செய்து பார்த்திட வேண்டாம்ம்ம்:)) மீ கட்டிலுக்குக் கீழே இப்பவே ஒளிக்கிறேன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் ... என் மகளுக்கு தான் கேட்டேன் . அதெல்லாம் கையால் தொடக்கூட மாட்டேன்.சமையலுக்கு என் கணவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் koduthaa அவர் செய்வார் .எப்பூடி நம்ம இரெயிலிங் :) ஹாஹாஹா training 

   Delete
 2. //என்ன நீங்கள் இந்தியர்கள் இப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகளை அவர்கள் வாழ்க்கையை வாழ விட மாட்டீர்களா என்று கோப தொனியில் கேட்டார் !! //

  ஹா ஹா ஹா ஒரு விதத்தில அது உண்மைதான்:)).. அது நம் தவறல்ல நம் ஜீன்ஸ் ல இருக்குதே என்ன பண்ண முடியும்??? இருப்பினும் இப்போதைய நம் தலைமுறைப் பெற்றோர் எவ்வளவோ சுகந்திரம் கொடுத்துத்தானே வளர்க்கிறோம்ம்..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் !!இப்போ எவ்வளவோ அட்வான்ஸ்ட்டா இருக்கோம் அதற்க்கே நமக்கு அவார்ட் குடுக்கணும்  :))

   Delete
 3. //.//எங்களுக்கு பெண்குழந்தை பொக்கிஷம்போல் அதை பத்திரமா பாதுகாக்கணும் // //

  ஸ்கொட்டிஸ் மக்களிடமும் இந்தக் கவலை இருக்குது, அதாவது ஆண்பிள்ளைகளை விடுவார்கள், பெண் பிள்ளைகளைக் கொஞ்சம் இரவில் வெளியே அனுப்புவதற்கெல்லாம் கட்டுப்பாடு போடுகின்றனராம் ஆனா அதைப் பெண் பிள்ளைகள் விரும்புவதில்லையாம்..

  ஒரு லேடி சொன்னா, தன் மகள் நைட் எங்காவது வேறு கேர்ள் உடன் போய் விட்டால், வீடு திரும்பும்வரை நிம்மதி இருப்பதில்லை, ஏனெனில் இந்தப் பிள்ளைகளுக்கு எதுவும் புரியாது.. பின்னாளில்தான் முழிப்பார்கள் என...

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் உண்மைதான் நான் 90 கிட் நீங்க 70 கிட் இப்போ இருப்பது  2 k கிட்ஸ் :) அவரவர்க்கு ஒவ்வொரு பாயிண்ட் of வியூஸ் :) மனா சஞ்சலம் 

   Delete
 4. ///எப்படி சில பெற்றோர் அவர்களுக்கு சுதந்திரம் அவசியம்போல் பிள்ளைகளை கைகழுவி விட்டதுபோல் எதுவும் கண்டுக்காம இருக்காங்க ?//

  வெள்ளைகள் அப்படி.. வெள்ளைகள் அப்படி எனச் சொல்லிச் சொல்லி, நம் மக்கள் நிறையக் கெட்டுப்போகின்றனர், ஆனா உண்மையில் வெள்ளையர்களின் கொள்கை ஓகே..

  அதாவது பிள்ளைகளை படு செல்லமாக நன்கு நல்லபடி வளர்க்கின்றனர், பின்பு பிள்ளைகளாக விரும்பி வெளியே போகும்போது, இறுக்கிப் பிடிக்காமல் விடுகின்றனர், அதேபோல பின்பு பிள்ளைகளுக்குப் பிரச்சனை எனில் தலை குடுத்து உதவுகின்றனர், போனனீ போ எனச் சொல்வதில்லை.. இங்கு ஸ்கொட்டிஸ் குடும்பங்களில் பெற்றோர்தான் உதவுகின்றனர்... அதிலும் தாய் மார்தான் எபவும் உதவி.. பேரக் குழந்தைகளைப் பார்ப்பதிலிருந்து அனைத்தும்.


  எனக்குத் தெரிந்த ஒரு ஃபமிலி, ஹஸ்பண்ட் பாங் மனேஜர், மனைவி பாங் இல் கிளார்க் போல. அந்த மனைவி முதல் திருமணத்தில் ஒரு மகனாம், பின்னர் இவரை மணம் முடித்து இப்போ 3 பெண் குழந்தைகள், அதில் இருவர் ருவின்ஸ், அந்த ருவின்ஸ் க்கு ஓட்டிசமாம், அதிலும் ஒரு பிள்ளை சுத்தமாக கதைக்காது, நப்கின் தானாம் இப்போ 7,8 வயசாகுதாம்..

  இதற்கு முழு உதவியும் அந்தப் பெண்ணின் பெற்றோரே செய்கின்றனராம்.. இப்படி பெற்றோர்தான் இங்கு உதவுகின்றனர்.

  நம்மவரின் பழக்கம் எப்படி எனில், என் சொல் கேட்டால் கவனிப்பேன், இல்லை உன் எண்ணப்படி நடப்பதெனில் ஓடிடு என்பது போல... அது தப்புத்தானே, பிள்ளைகளின் விருப்பத்துக்கு நாம் வளைந்து குடுக்கவும் வேணும், மிகுதி கடவுள் விட்ட வழி..!!!.

  சே..சே... ஒரு குட்டிப் போஸ்ட் போட்டு என்னை நிறையப் பேச வச்சிட்டீங்க:))

  ReplyDelete
  Replies
  1. யெஸ் உண்மைதான் எங்க பக்கத்துக்கு வீட்டி ஒரு பிரிட்டிஷ் குடும்பம் இருந்தாக பாட்டிதான் வந்து மகளின் மூத்த குட்டி மகளை பேத்தியை பார்த்துப்பார் .8 வயது பிள்ளை டவுன் சின்ரோம் .12 மணிக்கு அழும் அப்போ அம்மாவுக்கு கால் போட்டு வர வைக்குமாம் பொண்ணு .இது எப்படி எனக்கு தெரியும்னா :) ஒரு னால அவங்க வீட்டு டிவிலருந்து புகை வருதுன்னு குய்யோமுறைஒயோன்னு அந்த பொண்ணு எங்க வீட்டு கதவை தட்டுச்சி ஹெல்ப்புக்கு அதுவும் புல்தடுக்கி என்கிட்டே :))))))))))நான் மெயின் சுவிட்சை off பண்ணிட்டு எங்க வீட்ல உக்கார வச்சேன் .எவ்ளோ பயமாருந்துச்சி தெரியுமா :) இந்த விஷயத்துக்கு நீங்க டேபிள் மேலேறி என் கணவரை பாராட்டியே ஆகணும் எனக்கு மெயின் சுவிட்ச் off செய்றதை எப்பவோ கத்துக்கொடுத்தார் :))))))))))))))))

   Delete
  2. //அது தப்புத்தானே, பிள்ளைகளின் விருப்பத்துக்கு நாம் வளைந்து குடுக்கவும் வேணும், மிகுதி கடவுள் விட்ட வழி..!!!.

   சே..சே... ஒரு குட்டிப் போஸ்ட் போட்டு என்னை நிறையப் பேச வச்சிட்டீங்க:))//
   ஹலோ எச்சூஸ்மீ :) உங்களை ஒன்னு கேட்கணும்னு தோணுச்சு இந்த //வளைந்து கொடுக்கணும் //
   சரி எவ்ளோ வளைவிங்க 180 டிகிரீசா இல்லைன்னா ஆ 360 டிகிரீசா :)

   Delete
 5. ///: அனுபவம், பெண், பொது//

  அல்லோ. இதென்ன லேபல் இது?:)). யாரும் கேய்க்க மாட்டினம் எனும் தைரியத்தில கண்டபடி லேபல் போடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதில உங்களுக்கு என்ன அனுபவம்.. என்ன பெண்? என்ன பொது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ ஆண்டவா ஏன் அடிக்கடி என் நிம்மதியை யோசிக்கிறாய்ய்.. ஹையோ டங்கு ஸ்லிப்பூஊஉ.. சோதிக்கிறாயப்பா:))

  ReplyDelete
  Replies
  1. அல்லோ ::) அது எந்த லேபிளை தட்டினாலும் அந்தந்த பதிவை காட்டும்ல அதுக்குதான் :)நான்லாம் ஒரு கேள்விக்கு ஆப்ஷன் கொடுத்து ரெண்டு பதில் எழுதற ஆளு தெரியுமோ :) ரொம்ப சந்தேகம் கேட்டா   முந்திமாதிரி  பெரிய்ய போஸ்ட் போடுவேன் beeee careful 

   Delete
  2. பெண்குழந்தை , வெளிநாட்டு பெற்றோர் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் ,எனது அனுபவம் இதெல்லாம் சுவீட்டா ஷார்ட்டா எழுதினேன் 

   Delete

 6. அடேய் மதுர தேம்ஸ் நதிக்கரை யோராம் போகிடாதே உன்னை மீனு என்று நினைத்து ஒரு அம்மணி உன்னை பீஸ் பீஸ்ஸாக கட்டி ப்ளாஸ்டிக் கவரில் போஓட்டுவிடுவாங்க ஜாக்கிரதை

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்கு அதைவிட, அதனை காணொளி எடுத்து யூடியூப்ல போடறதுலதான் ஆர்வம்.

   Delete
 7. நாம் குழந்தைகள் மீது அதீத பாசம் வைக்கிறோம் அதனால்தான் பிரச்சனைகளே


  என் பொண்ணு வீட்டுக்கு பக்கதில் உள்ள காலேஜில் சேர்ந்து படிக்கிறாள் ஆனால் கொரோனா காரணமாக வீட்டில் இருந்து தான் படிப்பை தொடர்கிறாள் இப்போது அவள் வேறு ஒரு காலேஜிற்கு டிராண்ஸ்பேர் வாங்கிட்டு போகட்டுமா என்று கேட்டாள் நானும் சரி என்று சொல்லிவிட்டேன் அது வேறு ஒரு மாநிலத்தில் இருக்கிறது வீட்டில் இருந்து நாலு மணிநேர தூரத்தில் இருக்கிறது


  அடுத்த மாசம் அவள் போகிறாள் ஆனால் இப்பவே என் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது கடந்த சில நாட்களாக மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது சில நேரங்களில் கண்ணில் கண்ணீரும் வழிகிறது நான் எதையும் சொல்லி ஷேர் பண்ண வேண்டும் என்றால் அவளிடம்தான் ஷேர் பண்ணுவேன் இப்ப என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை நான் போனில் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை ஹும்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ட்ரூத் .என் கணவர்தான் மகள் மீண்டும் செப்டெம்பர் யூனிவெர்சிட்டிக்கு போறதை பற்றி ஒரே அப்செட்டில் இருக்கார் .நானா வேலைக்கு போக ஆரம்பிக்க காரணமே எங் மகள் பல்கலைக்கழகம் போனதால்தான் .இப்போ ஒரு வருஷம் பண்டமிக்கால் வீட்ல இருந்தா நாங்க 3 மணிநேரம் ட்ராவல் பண்ணிதான் பார்க்க முடியும் ..எல்லா அப்பாக்களுக்கும் மகள்கள் மீது அபார பிரியம் என்பது உண்மை . .அப்பாவும் மகளும் என்ன ரகசியம்லாம் பேசுவார்களோ என்ன தனியா விட்ருவாங்க .நீங்க ரொம்ப யோசிக்காதிங்க . கவலைப்படறது உங்க மகளுக்கு தெரிஞ்ச ஆப்செட் ஆகிடுவா குழந்தை .

   Delete
  2. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நமது தவறு நல்ல புரியும் .உங்களுக்கும் ஒரே மகள் எங்களைப்போல் .அந்த பிள்ளைகள் உலக வாழ்க்கையை தங்கள சுற்றியுள்ள உலகத்தை அறிந்து  புரிஞ்சி தெரியட்டும் .இப்போ நானா சொல்வது மனதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும் .நானே கடின மனசுடன் தான் தொலைவிலுள்ள பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தேன் .அவ விரும்பிய படிப்புக்காக .

   Delete
  3. மதுரை..   உங்கள் மகள் அந்தத் அளவு நெகிழ மாட்டார் என்று நினைக்கிறேன்.  அவர் தெளிவாகவே இருப்பார்.  

   Delete
 8. ரோமில் ரோமானியனாக இரு என்பார்களே...   அதுபோல அந்தந்த ஊருக்குத் தக்கவாறு இருந்துகொள்ள வேண்டியதுதான் என்றும் சொல்லலாம்.  பாரம்பரியத்தை விடவேண்டாம் என்றும் சொல்லலாம்!!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் உண்மைதான் .இங்கும் அசைவம் சாப்பிடாத பால் கூட சேர்க்காத vegans இருக்காங்க .உணவு விஷயத்தில் ஓகே பிரச்சினையில்லை ஆனால் பாரம்பரியத்தை கட்டி காப்பது எதுவரைக்கும் ??? 

   Delete
 9. நமது பழக்க வழக்கங்கள் அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஒத்துவராது என்னும்போது நாம் அதை மாற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை எனும்போது  நம் வழக்கத்தை ரொம்ப வெளியில் காட்டிக்கொள்ளாதிருக்கலாம்.  நிறைய அட்வைஸ் செய்வார்களே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா ஸ்ரீராம் .நான் கொஞ்சம் பெருமைக்கு எருமை மேய்ச்சுட்டேன் .தனியா இருந்திருந்தா வாயை மூடி இருந்திருப்பேன் .அது நம்மைப்போல் ஒருவர் கிடைக்கும்போது நாம கொஞ்சம் அதிகமா உற்சாகமாகவும் ஆகிடுமே அதுதான் அன்னிக்கு நடந்தது :)அட்வைஸா அவ்வ்வ் என்னமோ மனித உரிமை மீறினாப்ல இல்லையா அவங்க நினைப்பு :) 

   Delete
 10. வெளி நாட்டவர்க்கு நம் மனம் புரியாது.
  எனக்குத் திருமணம் முடிந்து சென்ற போது அம்மாவுக்கு காய்ச்சலே வந்து விட்டது.
  அப்பா தினம் கடிதம் எழுதுவர்.
  பதில் எழுதத்தான் எனக்கு நேரம் கிடைக்காது.

  மகள் திருமணமாகி அமெரிக்கா வந்த போது

  தூக்கம் கெட்டுப் பல நாட்கள் யோசித்தபடி
  இருப்பேன். முழுதும் சென்னையில் வளர்ந்த பெண்
  அமெரிக்க அரிசோனாவில் எப்படி இருக்கப்
  போகிறாளோ என்று.
  சமாளித்துவிட்டாள்.
  வாழ்க்கை தரும் பாடங்கள் விதவிதமானவை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வல்லிம்மா ,எங்கம்மாவுக்கு என்னை வெளிநாட்டில் கொடுக்க விருப்பமேயில்லை .ஆனா அப்பாதான் சரியா பிடிவாதமா  யிருந்தார் .திருமணமான புதிதில் ஒரு வருஷம் குரல் கொஞ்சம் ஒலி குறைஞ்சாலும் அங்கே பயப்படுவாங்க :)எல்லா அம்மாக்களும் அப்படிதான் .வாழ்க்கை எத்தனையோ கற்று கொடுத்தது இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன் வல்லிம்மா .

   Delete
 11. //3 வயசில் கைபிடிச்சு நடக்க கற்றுக்கொடுத்தப்போ பிடிச்ச விரல்களை நாங்க இன்னும் விடவில்லையோன்னு தோணுது அதேபோல் காலமெல்லாம் நம் கைவிரல்களை கொடுக்க முடியுமா ?//

  அவர்கள் விட்டு விட தயாராக இருந்தாலும் அம்மாக்கள் விட மனசு இல்லாமல் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

  நமக்கு எப்போதும் அவர்கள் குழந்தைகளாக தெரிகிறார்கள். என் அம்மாவும், மாமியாரும் இருந்தவரை நாங்கள் குழந்தைகளே ! அவர்கள் நமக்கு ஏதாவது சொல்லி கொண்டே இருப்பார்கள்.

  பெண் குழந்தைகள் அப்பாவிடம்தான் அதிக உரிமை எடுத்து எல்லாம் சொல்வார்கள். அம்மா கொஞ்சம் பயம் தான்.

  நான் அப்பா செல்லம். குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் அம்மாமூலம் அப்பாவை அனுகுவார்கள். நான் அப்பாமூலமே பெற்றுக் கொள்வேன்.

  மதுரை தமிழன் சொல்வதை கேட்கும் போது என் அப்பா நினைவு வருகிறது.
  என் பெண் அவள் அப்பா நினைவு வருகிறது.

  தாய் தந்தை இருவரின் வழிநடத்தலும் பிள்ளைகளுக்கு வேண்டும் எப்போதும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா ,அம்மாக்களுக்கு  எவ்ளோ வயதானாலும் பெண் பிள்ளைகள் குழந்தைகள்தான் ..நானும் அம்மாவுடன் நெருக்கமாக இருந்ததில்லை அப்பாகூடத்தான்  பேசுவேன் அப்படிதான் எங்க மகளும் .இப்போ இந்தப் பதிவே என் கணவரை நினைத்துதான் எழுதினேன். மகள் மீண்டு பல்கலைக்கழகம் போவது நினைத்து  இபோலருந்துகவலையில் இருக்கார் . 

   Delete
 12. //நெஞ்சு பலவீனமானவர்கள், சைவ மக்கள் தயவு செய்து பார்த்திட வேண்டாம்ம்ம்:)) மீ கட்டிலுக்குக் கீழே இப்பவே ஒளிக்கிறேன்ன்:))//

  அதிரா , அந்த மாதிரி சமயம் ஒரு பாட்டு, இரண்டு படங்களுடன் குட்டி போஸ்ட் போட வேண்டியதுதானே வலைத்தளத்தில்.

  ReplyDelete
  Replies
  1. கேளுங்க அதிரா .கோமதி அக்கா சொன்னதை நானும் வழிமொழிகிறேன் .பிளாகை மறக்காதீங்க 

   Delete
 13. நாம் நமது கலாச்சாரத்தில் ஊறித் திளைத்து, வளர்ந்தவர்கள்.

  அவர்களுக்கு உறவுகளின் பிணைப்பு தெரியாமலே வாழ்ந்தவர்கள், வளர்பவர்கள்.

  நமது செயல்தான் உயர்ந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் நமது பாதை சரியானதே... ஆனாலும் இப்பாதையில் தற்போது பயணிப்பவர்கள் 50 % மட்டுமே...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ சில விஷயங்கள் நமக்கு புரியா காலமாகும் .

   Delete
 14. சிலவற்றில் கண்டிப்பும் தேவை... கண்காணிப்பு அவசியம் தேவை...

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்குநூறு உண்மை சகோ 

   Delete
 15. @ஏஞ்சல்! கண்டிப்பும், கண்காணிப்பும் பெண் குழந்தை/ஆண் குழந்தை இருவருக்குமே தேவை தான். மனப்பக்குவம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. நம் நாட்டு வளர்ப்பு முறைக்கே என்னோட ஓட்டுக்கள். நீங்க சொல்வது எதுவும் தவறில்லை.

  ReplyDelete