அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Thursday, April 01, 2021

பலூன் சிறுமி !!                                          மேலேயுள்ள படம் Girl With Balloon  . இந்த படம் 2002 இல் banksy என்ற ஸ்ட்ரீட் ஆர்டிஸ்ட்டால் வரையப்பட்டது. ஏற்கனவே இவரைப்பற்றி எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் .தனது graffiti எனப்படும் சுவர் சித்திரங்களால் 90 கள்  முதல் இங்கிலாந்தில் ஆரம்பித்து தற்சமயம் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபலமானவர் ..

இந்த பான்ஸ்கி /BANKSY .நம் நாட்டில் வீட்டின் வெளிப்புற சுவற்றில் தேர்தல் நேரத்தில் நாம் கட்சி சின்னங்களை பார்த்திருப்போம் ,சிறுநீர் கழிக்காதே ,எச்சில் துப்பாதே அல்லது ஏதேனும் விளம்பரம் ,அல்லது சுவரொட்டிகள் ஆக்கிரமிப்பை பார்த்திருப்போம் :)

நைட்டோட நைட்டா வருவார் யாருக்கும் தெரியாமல் படத்தை ஸ்டென்சில் ஓவியமா சுவற்றில் தீட்டிவிட்டு போய்டுவார் .இப்படி இவர் கைவண்ணம் இங்கிலாந்து மற்றும் பற்பல நாடுகளில்  இருக்கு.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பின்னணியும் உண்டு  ..ஆனால் இதுவரைக்கும் இந்த banksy யாருன்னே யாருக்கும் கண்டுபிடிக்க இயலவில்லை.


இடைவேளையில் அதீஸ் பேலஸ் அப்டேட் :) லன்ச் பாக்ஸ் ரெசிப்பி 

https://www.youtube.com/watch?v=E7eu59QpEqQ


 ..லஞ்ச் செய்து சாப்பிட்டுக்கிட்டே பாருங்க :) ப்ரோக்கோலியின் நற்குணங்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க அதீஸ் .

இடைவேளை லன்ச் டைம் முடிஞ்சு :) இப்போ பலூன் சிறுமி பக்கம் போவோம் .

 Banksy அவரது படங்களை இந்த சுட்டியில் பார்க்கவும்

.https://www.canvasartrocks.com/blogs/posts/70529347-121-amazing-banksy-graffiti-artworks-with-locationsஇவர் சில படங்களை கான்வாஸில் ஆர்ட் போல் வரைந்து  ikea பிரேமில்  போட்டு  விற்றுள்ளார் .எல்லா தரவும் விற்பனையும் அவர் தலையிடாம; நடக்கும் .அப்படி இவரது மேற்சொன்ன படம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டு ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையானது அந்த விற்பனை நடக்கும்போதே அவர் பிரேமில் மறைத்து  பொருத்தி வைத்த shreddar அந்த படத்தை துண்டுகளாக்கியது .இதுவரையில் எதற்காக அவர் அதை வெட்டி துண்டாக்கினார் என்பது யாரும் அறியவில்லை .இதற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்படுது .அவருக்கே உண்மை வெளிச்சம் .

       love is in the air கடைசியில் love is in the bin ஆகிடுச்சு !!                                                                  **********************************************************************************


17 comments:

 1. ஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ

  ReplyDelete
  Replies
  1. வாங்க மியாவ் வாங்க .எப்படியாச்சும் அப்டேட் கொடுக்கணும் னு பிடிவாதமா இருந்தேன் .அந்த பலூன் சிறுமி பட வாசகம்தான் என்னை உந்தி தள்ளி பதிவை எழுத வைச்சது 

   Delete
 2. ஆச்சர்யம்.  ஏன் அதை அவர் அதில் பொருத்தினார்?  ஒரு மாதிரி ஞானக் கிறுக்கர் போல!

  ReplyDelete
  Replies
  1. global exposureglobal exposure தான் காரணம்னு சொல்றாங்க .முதலில் முதலாளித்துவ எதிரி அதனால் இந்த ஆர்ட் கேலரிஸ் நிறைய பணம் சம்பாதிப்பதால் வேணும்னே அவர் இப்படி செட் செஞ்சு shred பண்ணினதா நினைச்சாங்க ஆனா கவனிச்சீங்கன்னா அந்த படம் பாதி தான் வெட்டிப்பட்டிருக்கு .மீதி அதிலே தொங்கிட்டிருக்கு அதோட இவ்ரதஹு படத்தை நிறையபேர் பிரிண்ட் போட்டு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சதில் கொஞ்சம் கோபம் .அரசாங்கம் மேல் கோபம் இப்படி நிறைய காரணங்கள் இருப்பினும் இந்த வெட்டின ஆர்ட்க்கு பிறகு தொடர்ந்து 3 நாளுக்கு  இன்டர்நெட் இன்ஸ்டா ட்விட்டர் இதில் இவர்தான் அசைக்க முடியா ஹீரோவா யிருந்தாராம் 

   Delete
 3. சுட்டியில் போய் பார்த்தேன்.  மிக அற்புதமான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க  நன்றி  ஸ்ரீராம்.எங்கே ஸ்டென்சில் ஆர்ட் பார்த்தாலும் அவரோடதா  இருக்குமான்னு மகளிடம் கேட்பேன்  :) இவரோட ஆர்ட்ஸ் தற்கால நிலை அரசியல் சூழல் உலக வர்த்தகம் ஏழ்மை எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் 

   Delete
 4. அறியாத தெரியாத புது விஷயம். அதீஸ் பாலஸின் அப்டேட்டைத் தவறாமல் கடமை உணர்வுடன் செய்து வருவதும் பாராட்டத்தக்கது. புதிய ஒன்றைத் தெரிந்து கொள்ளக் கொடுத்ததுக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா மிக்க நன்றி .அப்படியாவது நானும் ஆக்டிவா யிருக்கேனே :) இல்லைன்னா பிளாக்கை நான் கைவிட்டிருப்பேன் எப்பவோ :)) இந்த பதிவு போல் முன்பு லவுட் ஸ்பீக்கர்ன்னு நிறைய கதம்பம் எழுதுவேன் .உலகமுழுக்க உள்ள இன்டரெஸ்டிங் செய்திஸ் இப்போ சில வருஷமா விட்டுட்டேன் மீண்டும் தொடர்கிறேன் 

   Delete
 5. வாசகம் மிக அருமை! வேண்டாத விஷயங்களை இப்படி பலூனைப்போல பறக்க விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
  ஓவியர் பான்ஸ்கி பற்றிய விபரங்களும் மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா ..ஆமாம் உண்மைதான் தேவையற்றவற்றை பறக்க விட்டா எவ்ளோ நல்லா இருக்கும் .BANSKY  ஓவியங்கள் பல அர்த்தமுள்ளவை .மிக நன்றிக்கா வருகைக்கு

   Delete
 6. Replies
  1. மிக்க நன்றி சகோ 

   Delete
 7. இன்றைக்கு புதிய விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க. நன்று

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் முன்பு இதுபோல் லவுட் ஸ்பீக்கர்ன்னு தலைப்பிட்டு நிறைய பகிர்ந்திருக்கிறேன் .கொஞ்சம் ஒரே பதிவில் எஸ்ஸே போல் அமைந்தும் இருந்ததால் :) எனக்கே போரடிச்சு நிறுத்தினேன் மீண்டும் தொடர முயல்கிறேன் .

   Delete
 8. //அவர் பிரேமில் மறைத்து பொருத்தி வைத்த shreddar அந்த படத்தை துண்டுகளாக்கியது .இதுவரையில் எதற்காக அவர் அதை வெட்டி துண்டாக்கினார் என்பது யாரும் அறியவில்லை .இதற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்படுது .அவருக்கே உண்மை வெளிச்சம் .//

  இதை படிக்கும் போது வருத்தமாய் இருக்கிறது அவர் வரைந்த ஓவியம் வெட்டி துண்டாக்குவது கொடுமை.

  லவுட் ஸ்பீக்கர் மீண்டும் உயிர் பெற்றது மகிழ்ச்சி.
  நிறைய புதிய விஷ்யங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
 9. மகன் போன முறை ஒரு இடத்திற்கு கூட்டி போனான் . அதில் நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள ஓவியங்கள் போல நிறைய கட்டிடங்களில் வரைந்தும் உயிர் உள்ள மனிதர்கள் போல பொம்மைகளையும் வைத்து இருந்தார்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. நம்மிடமிருக்கும் துன்பங்களை வெளியே அனுப்பினால்தான் நமக்கு ஹப்பி:)).. ஆனா அதை ச்ச்சும்மா வெளியே அனுப்ப முடியாது:)) ஆரிடமாவது கொட்டினால்தான் முடியும்:)).. அதுக்கு ஒரு லாப் எலி வேணும்:))))

  ReplyDelete