அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Saturday, April 03, 2021

ஒலிப்பெருக்கி .... 2021 April 3 rd

                          சில வருஷங்களுக்கு   முன் ஒலிப்பெருக்கி செய்திகள்னு உலக செய்திகளை தொகுத்து வழங்கி வந்தேன் .சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும்  அதை துவங்கி உள்ளேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன் :)

இன்றைய பகிர்வில்  முதலில்  அதீஸ் பேலஸ் UTUBE பூசாரின்  குரு பற்றிய செய்திகள் :)

                                                                              


ZOOM மீட்டிங்கில் தான் நமது வாழ்க்கையே என்றாகிப்போனது கடந்த ஒரு வருடமாக .கல்யாணம் , பிறந்தநாள் ,இன்டெர்வியூ ,எல்லாம் கணினி மூலமே நடந்துகொண்டிருக்கு .நானே 5 கோர்ஸ் செய்து முடிச்சேன் ZOOM இல் !!! .இந்த கோவிட் பிரச்சினையால் ஐரோப்பாவில் உயிரியல் பூங்காக்கள் எல்லாம் மக்கள் வருகையின்றி மூடி வைக்கப்பட்டன .சில பூங்காக்கள் இழுத்து மூடும் நிலைக்கு வந்தப்போ சோஷியல் மீடியா உதவியுடன் பணம் சேர்த்து அவை  மூடுவதை தடுக்கப்பட்டன .

                                                                       


உயிரியல் பூங்கா திறந்திருந்தா சாதாரண நாட்களில் அவை தினமும் பொதுமக்களை பார்க்கும் சாத்தியமுண்டு .இந்த பண்டமிக்கால் அவற்றுக்கும் மனஉளைச்சல் வரக்கூடாதுன்னு அங்கு வேலை செய்பவர்கள் இப்படி பக்கத்து பூங்காவில் வசிக்கும் இவர்களது உறவினர்களை தினமும் ஜூம் வழியே சந்திக்க ஏற்பாடு செய்திருக்காங்க . இந்த மீட்டிங் நடைபெற்றது செக்கோஸ்லாவாக்கியா நாட்டில் .

                                                                          தலைக்கு தில்ல பாருங்க :) மல்லாக்க படுத்து zoom ஆன்லைன் பாக்குது :)


செக்கோஸ்லாவாக்கியா நாட்டில் இரண்டு  உயிரியல்  பூங்காக்களை சேர்ந்த மனிதக்குரங்குகளை ZOOM மூலமாக     அவர்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்த பக்கத்து  ஜூ விலுள்ள பங்காளிகளை ஆன்லைனில் சந்திக்க வைத்திருக்கிறார்கள்  .

                                                                                    


நாம் மீட்டிங்கில் பேசும்போது ஒலி கேட்கும் ஆனால் பார்வையாளர்கள் நலன் கருதி  ஒலியை மியூட் செய்திருக்காங்க .  ஆறம்பத்தில்  ஸ்க்ரீனில் தங்களது அங்காளி பங்காளிகளை  முகங்களை பார்த்ததும் ரகளை நடந்ததாம் பிறகு நம்மைப்போல் ஸ்போர்ட்ஸ் சேனல்  பார்க்கிறமாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே கூலா  தங்கள் தூரத்து உறவுகளை பார்க்க ஆரம்பிச்சதுகளாம் :) 

https://safaripark.cz/en/about-us/news/chimps-in-safari-park-and-brno-zoo-zoom-every-day

************************************************************************************

அடுத்து வருவதும்  அதீஸ் அவர்களின் மேதகு  குரு பற்றிய பகிர்வுதான்  அதுக்கு முன்னாடி அதீஸ் பேலஸ்  லேட்டஸ்ட் அப்டேட் :)

https://www.youtube.com/watch?v=OUXLha1QjpA

Healthy Spinach Egg Omelette | Sri Lankan cooking | சத்தான கீரை முட்டை பொரியல்

***********************************************************************************

பதிவு தொடர்கிறது :)

                                  சில வருடமுன்பு ஜாம்பியா நாட்டின் உயிரியல் பூங்காவிலுள்ள ஜூலி என்ற சிம்பன்சி பல வருடங்களாக ஒற்றைகாதில் மட்டும் நீண்ட ஒரு புல் துண்டை செருகிட்டு வலம் வருமாம் .அது எதுக்கு அப்படி நீள புல்லை காதில் செருகிட்டு இருக்குன்னு யாருக்குமே தெரியலை .

காதிலிருந்து புல்லு  விழுந்தாலும்  மறுபடியும் அதை எடுத்து காதுகுள்ளே வச்சிக்குமாம்!!!

                                                                                  


ஒருவேளை இந்த பொண்ணு ஜூவுக்கு போச்சோ என்னமோ :) அதைப்பார்த்து இதுவும் செய்ஞ்சிருக்குமோன்னு எனக்கு சந்தேகம் :) 

                                                                                 


.இந்த பழக்கத்தை ஜூலியின் உடன் இருந்த  7 சிம்பன்சிகளும் தொடர ஆரம்பித்தனவாம் .ஜூலி போனபின்பும் மூன்று சிம்பன்சிகள் அதேபோல் புல் காதணியுடன் திரிகின்றன ,இதிலிருந்து நாம் அறியவருவது என்னவென்றால் அவற்றுக்கும் FASHION இல் ஆசை உண்டு .நம்மைப்போல தனித்துவமாக இருக்க விரும்புகின்றன :)


**********************************************************************************

இது மார்ஸ் ரோவர் பற்றிய செய்தி

====================================== 

செவ்வாய் கிரகத்தில்  உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. நம்மளால்தான் செவ்வாய்க்கு போக முடியாது ஆனா நம்ம பெயர் அங்கே போனா எப்படி இருக்கும் !! இதற்கான ஒரு வசதியை நாசா போன வருஷம் அறிவித்தது https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020

நாசா ரோவரில்   நாம் அவர்களின் தளத்துக்கு அனுப்பும் பெயர்களை பெயர் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களைக் பதிவு செஞ்சு ரோவர் விண்கலத்தில் செவ்வாய்க்கு அனுப்பி வைச்சாங்க .
                                                 

                  சிவப்பு வட்ட சிப்பில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கு 

உலகம்  முழுதும் இருந்து  1,246,445 பேர் பெயர்களை அனுப்பி வைச்சாங்க ! 
அதில் முதல் 6 இடத்தை பிடித்த   நாட்டினர் .
UNITED STATES 529386
UNITED KINGDOM 77329
INDIA 59041
BRAZIL 46689
CANADA 44240
AUSTRALIA 33215

இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கு :) அந்த யுனைடெட் கிங்டம் 77329 இல் ஒரு பெயர் எங்க வீட்ல இருந்து செவ்வாய்க்கு போயிருக்கு :)))))))) இதை வச்சே நாசாவில் காணி நிலம் வாங்கிபோட்டுடனும் :) 


***************************************************************************************

22 comments:

 1. ஒலிபெருக்கி (இடைல ப் வருமோ?!) சுவாரஸ்யமான செய்திகளைக் கொண்டிருக்கிறது.  சிம்பன்ஸிகளும் ஜூம் மீட்டிங்கில் உறவு, நப்புகளைக் காண்பது ஆச்ர்யமான தகவல்.  முதலில் ரகளை நடந்ததே அவைகளால் இவற்றை கவனிக்க என்பதற்கான ஆதாரம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ இது எப்பூடி ஆள் மாறிப்போச்ச்ச்ச்:)).. நேற்றுப் போஸ்ட் பார்த்த அடுத்த கணமே, மீ தான் 1ஸ்ட் என ஓடி வந்து ஒரு கொமெண்ட் போட்ட நிமதியோடுதான் நித்திரைக்குப் போனேன், என் மொபைல் கொமெண்ட்ஸ் இப்போ வருகுதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. போகவில்லை என்றாவது காட்டலாம் அதுவும் இல்லை... கொமெண்ட் போய் விட்டதுபோலவே அக்ட் பண்ணுதே:))

   Delete
  2. மாத்திட்டேன் :) @sriram

   Delete
  3. ஆஹா.. ஓகே.. நான்தான் முதல் கமெண்ட் என்பது ஆச்சர்யம்!

   Delete
 2. ஒரு செய்தி படித்திருக்கிறேன்.  முன்னர் எப்போதோ ஒரு குரங்கு பழத்தையோ எதையோ கடல் நீரில் கழுவி விட்டு சாப்பிட்டதாம்.  அடுத்தடுத்து வெவ்வேறு தீவில் இருந்த குரங்குகள் இதைப் பின்பற்ற ஆரம்பித்ததாம்.

  ReplyDelete
  Replies
  1. என் குரு இனத்துக்கு மனிதரை விட அறிவு அதிகமாம் ஸ்ரீராம்..

   Delete
  2. அவர்களிலிருந்துதானே நாம்..!

   Delete
 3. 'செவ்வாயை வென்ற ஏஞ்சல்' என்று உங்களுக்கு பட்டம் கொடுத்த்துடலாம்.  அதனால் உடனே செவாய்க்கிழமைக்கு ஏதாவது எழுதி அனுப்புங்கள்..  நீண்ட நாட்களாச்சு!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சைக்கிள் ஹப் ல பிளேன் ஓட்டுவதென்பது இதுதானோ:))

   Delete
  2. அதிரா.. நீங்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளுக்கு எழுதி்அனுப்பி கனகன காலமாச்சு!

   Delete
 4. பல்சுவை பதிவு நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வீடு மாறினதில இருந்து ரொம்பவும்தான் அமைதியாகிட்டார் நெல்லைத்தமிழன்..:)).. இனி பெயரை மாத்திடுவோம்ம்.. “அமைதித்தமிழன்” என ஹா ஹா ஹா..

   Delete
 5. zoo க்கு அதீஸ்பேலஸ் ஒனர் போய் தன் குடும்பத்தினரை பார்த்து பேசி வந்து இருக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. ட்றுத் சே.. சே.. இம்முறை நீங்களும் லாஸ்ட்டோ?:).. எனக்குத்தான் யூ ரியூப் ஓனர் ஆகிட்டதால ரைம் கிடைக்குதில்லை:)).. உங்களுக்கு என்ன பிரச்சனை ட்றுத்:)).. மோடி அங்கிளைக் கலைப்பதிலேயே ரைம் போயிடுதுபோல:)) ஆனாலும் இன்னும் பிடிக்க முடியவில்லை அவரை உங்களால ஹா ஹா ஹா சரி சரி நான் என் குருவைப்:)) பார்க்க ஓடிடுறேன்.

   Delete
 6. சிம்பன்சி செயல் வியப்பு...

  ReplyDelete
  Replies
  1. எந்த சிம்பன்ஸியை சொல்லூறீங்க நம்ம நாட்டில ஒரு சிம்பன்ஸி இந்த கொரோனா காலத்தில் மங்கிபாத் நிகழ்ச்சி நடத்திகிட்டும் தமிழகத்திற்கு சில தடவைகள் வந்தும் போய் இருக்கின்றன ஏன் அது அமோசன் காட்டிற்கும் சென்று வந்து இருக்கிரதே அதை சொல்லுறீங்களா

   Delete
 7. நான் இந்த போஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை:)).. என் ரெசிப்பி வரும்போது நீங்க ஆழ்ந்த துயிலில் இருப்பீங்கள் என்றெல்லோ நினைச்சிருந்தேன்:)).. இவ்ளோ ஸ்பீட்டா போஸ்ட் வரும் என துளிகூட நம்பவில்லை ஹா ஹா ஹா:))

  ReplyDelete
 8. மை.. குரு என்றாலே அறிவு அதிகமானவர்தானே...:))

  //சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் அதை துவங்கி உள்ளேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன் :)///

  ஹையோ ஆரும் குறுக்கில நிக்காதையுங்கோ.. மீ ஓடிடுறேன் தேம்ஸ்க்கு:))

  ReplyDelete
 9. மிக அருமையான செய்திகள் அன்பு ஏஞ்சல்.
  சிம்ப்பன்சி காதணி பற்றி முன்பு கேள்விப் பட்டிருக்கிறேன்.

  அருமையான உயிரினங்களுக்கு செக் அரசு இந்த சூம்
  சந்திப்பு எற்படுத்தி இருப்பது நலமே.

  நாமும் யாரையும் காணாமல் அலுத்துத் தான் போகிறொம்.
  நமக்கும் வாட்ஸாப் இருப்பதால் வண்டி ஓடுகிறது.

  செவ்வாயில் ஏஞ்சல் பெயர். மிகப் பொருத்தம். அன்பு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. //ஆறம்பத்தில் ஸ்க்ரீனில் தங்களது அங்காளி பங்காளிகளை முகங்களை பார்த்ததும் ரகளை நடந்ததாம் பிறகு நம்மைப்போல் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்கிறமாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே கூலா தங்கள் தூரத்து உறவுகளை பார்க்க ஆரம்பிச்சதுகளாம் :) //

  இதை படித்தவுடன் சிரிப்பு ஏற்பட்டது.கற்பனையில் பார்க்கும் போது அவைகளின் மகிழ்ச்சி நமக்கு மேலும் மகிழ்ச்சியை தருகிறது.
  செய்திகள் எல்லாம் அருமை. காணொளிகள் அருமை.
  ஒலிபெருக்கி சொல்லிய செய்திகள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 11. அனைத்து செய்திகளும் சுவாரஸ்யம்.

  ReplyDelete
 12. ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
  யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் பாடல் மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete