அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, April 07, 2021

ஒலிப்பெருக்கி ..07/04/21

                                                                                   


                                                                                நாம் கல்லூரியில் படிக்கும்போது குறிப்பா  ஹாஸ்டலில் அல்லது தனி வீடு எடுத்து தங்கி இருக்கும்போது  நாம்  வாங்கும் வீட்டு உபயோக /மளிகை சாமான் பொருட்களுக்கு நம்ம பெற்றோர் ஆன்லைனில் பணம் செலுத்தினர் என்றால்  எவ்வளவு ஜாலியா இருக்கும் :) .

முதலில் அதீஸ் பேலஸ் லேட்டஸ்ட் அப்டேட்டை பார்த்துட்டு பதிவுக்குள் நுழையலாம் :) https://www.youtube.com/watch?v=hdOUd0L-RIs

Navy ship in Scotland | ஸ்கொட்லாண்ட் ஆற்றின் சில பகுதிகளும் நேவிக் கப்பலும்


எல்லாருக்கும் ஜாலியா இருக்கா இன்னிக்கு சமையல் போடல்லையாம் அதீஸ் பேலஸில் :)

                                            

எனக்கு சின்ன வயதில் ஹாஸ்டலில் தங்கி படிக்கணும் வெளியூரில் தங்கி வேலை செய்யணும்  சுயமா பெற்றோர் உதவியின்றி  நிற்கணும்  இப்படி எல்லாம் ஆசை கனவு இருந்தது .ஆனால் எங்க வீட்ல அனுமதிக்கவேயில்லை !!! உனக்கு அதெல்லாம் சரிவராது உன் ரூம்லயே உனக்கு  தனியா படுக்க பயம் நீயெல்லாம் சமாளிக்க மாட்டேன்னு சொல்லி அடக்கி வச்சிட்டாங்க !! சரி அந்த சொந்த சோகக்கதையை விட்டுத்தள்ளுவோம் :) 

                                   இங்கே tesco என்றொரு சூப்பர் மார்க்கெட் இருக்கிறது அதற்க்கு பல கிளைகளுமுண்டு அவங்க பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கென ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்காங்க ,ஒரு கார்ட் சிஸ்டம் Tesco Student Shopper   card அறிமுகப்படுத்தி இருக்காங்க .அந்த கார்டின் பின் நம்பர் பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இருவரிடமும் இருக்கும் அந்த கார்டில் 200 பவுண்டுகள் வரைக்கும் பணம் இருக்கும் அதாவது மாணவர்கள் அங்காடிகளில் வாங்கும் உணவு மளிகை சாமான்களுக்கு பெற்றோர் அந்த அக்கவுண்டில் பணத்தை ஆன்லைன் மூலம் top up செய்யலாம் .பொருட்கள் வாங்கியபின் ரசீதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னும் காட்டும் .

பொதுவா பல்கலைக்கழக மாணவர்களுக்கு இருப்பிடம் தங்குமிடம் இன்னபிற செலவுகள் இருக்கும் அவர்கள் உணவிற்கு கஷ்டப்படக்கூடாதுன்னு இந்த வசதி செய்திருக்கிறாங்க டெஸ்கோ .நிறைய மாணவர்கள் பணத்தை எப்படி செலவு   செய்றதுன்னு தெரியாம கஷ்டப்படுவாங்க.அவங்களே வீடு இருப்பிடத்துக்கும் செலவு செய்யணும் கரண்ட் பில் ,துணி தோய்க்க என்று எக்கச்சக்கமான செலவுண்டு .எல்லா பேரண்ட்சும் நம் இந்தியர் போலில்லை :) நாங்க வாராவாரம் மகளுக்கு சப்பாத்தி ,இடியாப்பம்லாம் கட்டி எடுத்துட்டு போயிருக்கோம் :) . அதை பார்த்து பிற பிரிட்டிஷ் மாணவர்களுக்கு ஆச்சர்யமாம் .என்னுடன் வேலைக்கு சேர்ந்த ஒரு நர்சிங் மாணவியும் அதை சொல்லிக்காட்டினார் அவருடன் படித்த இந்திய மாணவனுக்கு அவங்கம்மா சப்பாத்தி ரோல் செய்து ,ப்ரிட்ஜில் அடுக்கி வைப்பாராம் வரும்போதெல்லாம் .**********************************************************************************

பூக்களை நாமே பறிக்கலாம் :)  

“Blumen Zum Selber Schneiden” //pick-your-own-flower-patches  .


இது ஜெர்மனியில் நாங்கள் இருந்தப்போ அதிகமான இடங்களில் பார்த்தது உண்டு .பெரிய விளைநிலங்கள் எல்லையில்  /சாலையோரங்களில் அருகில் சிறிய patch போன்ற இடங்களில் அழகிய வண்ண  மலர் தோட்டங்கள் அமைத்து இருப்பாங்க .கோடைகாலத்தில் தான் நிறைய மலர்வகைகள் அங்கு வளர்த்து நாமே பறிக்க வசதி செய்துருப்பாங்க .அந்த தோட்டத்தில் மூலையில் ஒரு பெட்டி தேனீக்கள்  வளர்க்கும் பெட்டியின் அளவுள்ள பெட்டி இருக்கும் நாம் மலர்களை பறித்து பின் அதில் விருப்பமான காசை  போடலாம் .ஜெர்மனியர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டினர் அனைவருக்குமே  மலர்கொத்துக்கள் பூங்கொத்துகள் பூச்சாடி அமைப்பில் மலர்களை வைப்பது மிகவும் பிடிக்கும் .

                                                                                        


                                                                              


நானும் என் கணவரும்  அந்த தோட்டங்கள் அருகில் அடிக்கடி வாக்கிங் போவோம் அப்போ  கவனித்தது அடிக்கடி ஒரு  பெண் அந்த தோட்டபக்கம் வருவார்  மலர்களை பறிப்பார் பின்பு அந்த பெட்டியின் கிட்டே சென்று காசு போடுவதுபோல அருகில் சென்று கையை வைத்து  ஒன்றும் போடாமல் வருவார் !! எனக்கு கோபமாக வரும்.சில வருடங்களில் நாங்கள் இங்கே வந்துவிட்டோம்  . இன்னமும் அந்த குட்டி மலர் தோட்டங்கள் அங்கே  இருக்கான்னு  தெரியலை.

 .**********************************************************************************

 ஒரு உண்மை சம்பவத்தை பகிர்கிறேன் .ஒரு முறை  பேஷண்ட் ஒருவரை கண்காணித்துக்கொண்டிருந்தேன் என்னுடன் லுடோ விளையாடிக்கொண்டிருக்கும்போது உற்று பார்த்ததில் அவர் விரல் நகங்கள் அம்புபோல் ஊசி முனையைக்கொண்டு தீட்டி இருந்தன .அங்கே உள்ளோர் எவ்வித ஆயுதம்/பிளேட்  நெயில்கட்டர்/ சவரம் பயன்படுத்த தடை ,ஷூ லேஸ் பிளாஷ்டிக்ப்பைகள் அனுமதி இல்லை காரணம் எப்பவும் சூசைட் மோடில் இருப்பாங்க .அதீத கண்காணிப்பு அவசியம் .ஆனால் அவர் தனது நகங்களை சுவற்றில் வைத்து ஷார்ப்பா தீட்டி இருந்தார் .எதோ செய்ய தயாராக இருந்ததுபோல். .உடனே மேனேஜருக்கு சொல்ல மெதுவாய் கண்காணிப்பு மாற்றப்பட்டு 24 மணிநேரம் ஸ்பெஷல் கேர் தரப்பட்டது அவரது நகமும் வெட்டப்பட்டது .ஒன்று அவர் தன்னை மாய்திருப்பார் அல்லது இன்னொருவரை கீறி போட்டிருப்பார் .

மற்றொரு பதிவில் சந்திப்போம் .

 **********************************************************************************

40 comments:

 1. தன் வீட்டிலேயே தனி அறையில் படுக்க பயப்படும் ஒருவரை எனக்குத் தெரியும்.  ஆச்சர்யமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ இம்முறையும் சிரிராம் தான்:)) 1ஸ்ட்டூஊஊஊஊ:))..

   உங்களுக்குத்தெரியுமோ ஸ்ரீராம்.. எங்கட வீட்டில இருட்டானபின், மேல் அறையிலிருந்து தனியே கீழ் மாடிக்குக் கிச்சினுக்கோ விசிட்டிங் ஹோலுக்கோ போகவே மாட்டேன்.. கணவரிடம் சொல்லியே எதை என்றாலும் செய்விப்பேன் அல்லது அவரைக் கூட்டிக் கொண்டே போவேன்.. பிள்ளைகள் வளர்ந்த பின்பே அது கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சு, இப்போ சாமத்திலகூடப் போவேனே.

   இதுபோல 6 மணிக்கு மேல் காரில் தனியே போகமாட்டேன்[அதுக்காக மாலைக் கண் என நினைச்சிட வேண்டாம் கர்ர்ர்ர்ர்ர்:))]... இப்போ போவனே பழகிட்டேன்:))

   Delete
  2. வாங்க ஸ்ரீராம் அண்ட் அதீஸ் மியாவ் :)அந்த தனியா இருக்கும் பயமெல்லாம் ஊரில் இருந்தவரைக்கும்தான் .அங்கே ப்பேய் கனவெல்லாம் வருமே :)என் ரூம் ஜன்னலுக்கு நெட் போட்டு அடிச்சி வச்சிருந்தாங்க அப்பா ஒரு முறை எங்க வீட்டு பூஸ் வெளிப்பக்கமிருந்து அதை பிடிச்சி தொங்கிட்டிருந்தது அதை பார்த்து பயந்து அலறி ரெண்டு நாள் ஜுரம் .எங்க வீட்ல என்னை விட்டுட்டு போன அக்கூட பைரவர்கள் மியாவரகள் கோழி எல்லாமே என் பக்கத்தில் வச்சிகிட்டுதான் உக்காருவேன் 

   Delete
  3. அதிரா...   திருமணத்துக்குமுன் பாஸ் என்னிடம் கேட்டது திருமணமானபின் ஒரு பெரிய வீட்டில் குடித்தனம் செய்யவேண்டும் என்று.  வாடகை நிறைய ஆயினும் அதை நிறைவேற்றி விட்டேன்.  கீழே ஒரு பெரிய ஹால்.  கிச்சன், ரெஸ்ட்ரூம், பாத்ரூம்.  பின்னல் தோட்டம்.  ஹாலின் நடுவில் மாடிப்பபடிகள்.  மேலே சென்றால் இரண்டு அறைகள்.  இரண்டுக்குமாய் சேர்த்து அங்கும் ரெஸ்ட்  ரூம்,பாத்ரூம்.  இரவு மேலே படுப்போம்.  காலை ஐந்து மணிக்கு எழுந்து பாஸ் கீழே வந்து வாசல் தெளித்து கோலம் போடவேண்டும்.  தனியாக இறங்க பயப்படுவார்.  நானும் சும்மா இராமல் அப்போது சமீபத்தில் மறைந்த என் அத்தைமார்கள், அவர் அப்பா எல்லாம் கீழே ஹாலில் சோபாவில் வரிசையாக அமர்ந்திருப்பார்கள் என்று சொல்லி பயமுறுத்துவேன்!  அப்புறம் நானும் கூட வர, இறங்குவோம்!

   Delete
  4. ஹா ஹா ஹா அப்போ ஶ்ரீராம் அப்பவே பேய்க்காட்டியிருக்கிறீங்க:)

   Delete
  5. //படுக்க பயப்படும் ஒருவரை எனக்குத் தெரியும்// - பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ எப்போது இந்த பயம் வருதோ அப்போவே கல்யாணம் பண்ணிடவேண்டியதுதான். ஒருத்தருக்கு ஒருத்தர் துணை (ரெண்டுபேருமே பயந்தவர்களாக இருந்தால் என்ன பண்ணறது? இதுக்குத்தான் நேர்மறையாச் சிந்திக்கணும். அப்படீல்லாம் இறைவன் முடிச்சுப்போட்டுட மாட்டார் ஹாஹா)

   Delete
 2. பெட்டியில் காசு போடவில்லை என்றால் சும்மா சென்று நிற்பானேன்?  சிசி டிவி கேமிரா ஏதும் இருக்கிறதோ?  ஆக, ஏமாற்றுபவர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. நானா நினைக்கிறேன் குற்ற உணர்வில் சிசிடிவி இருக்கும்னு நினைச்சி பணம் போடற சீன காட்டியிருக்கும் அந்த பெண் :)

   Delete
 3. நகத்தைக் கூர்மையாக ஆக்கிக்கொண்டாரா?  அப்படி ஆக்கிக்கொள்ளும்வரை யாருமே கவனிக்கவில்லையா?  ஆனால் வயதானவர்களின் நகங்களில் அவ்வளவு பலம் இருக்காது என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இது வயதானவர்கள் இல்லையே .மனநல வார்டு .அவங்க ரூமி ல் ஒரு ஷவர் பாத் இருக்கும் குளிக்கணும்னா சோப் கேட்டு வாங்குவாங்க ஷேவிங் செய்யவும் பிளேட் யூஸ் பண்ண கூடாது பிளேட் யூஸ் பண்றதா இருந்தா  அருகிலியாரும் இருக்கணும் .அவ்ளோ ஜாக்கிரதையா அவங்களை கவனிக்கணும் .நகத்தை நைட் நைட்டா தீட்டி இருக்கார் .

   Delete
  2. இவர் போன்றவர்களை கண்காணிப்பது சிரமமான காரியம்தான்.

   Delete
 4. பூக்களைத் திருடுபவர்களை என்ன சொல்வது? உலகெங்கும் மனிதர்களில் அல்ப புத்தி போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதாக்கா ..திருட்டு உலகப்பிரசித்திபெற்றது :) கடையில் வாங்கினா 10 டாலர் :) அதான் இலவசமானதும் கிடைச்சதை அள்ளிப்பங்க 

   Delete
 5. ஒலிபெருக்கி நல்லா சத்தமாகக் காதில் வந்து விழுகிறது. உண்மைச் சம்பவம் நலல்வேளையாகக் கெடுதலாக நடக்கும் முன்னர் அனைவரும் காப்பாற்றப் பட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. ஹீஹீ தேங்க்ஸ் :) நிறைய இருக்கு எழுதினா மனசில் நினைவில் இருக்கணும்னு கொஞ்சமா பகிர்கிறேன் ,எஸ் அந்த நகம் அவருக்கும் கூட பணிபுரிவோருக்கும் ஆபத்து 

   Delete
 6. //இடங்களில் அழுகையை மலர் தோட்டங்கள்//- முதல்ல புரியலை.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ் :) அது இரவோடிரவா போட்ட போஸ்ட் கவனிக்கலை :) இப்போ சரி பண்ணியாச் 

   Delete
 7. அதிரா, உணவு காணொளி போடவில்லை என்பதால் மலர்க்கொத்துகள், பூக்களோடு இன்று பதிவு போட்டிருக்கீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஹ்ஹஹ்ஹா :) 

   Delete
  2. ம்ஹூம்... ஓவராத் துள்ளப்பிடா:)) முழு ஆட்டைச் சமைச்சுப் போட்டிடுவேன் பின்பு ஜாக்க்க்ர்ர்ர்ர்ர்தை:)) ஹா ஹா ஹா..

   Delete
 8. ஆசிய பெற்றோர்களால, அவங்க கலாச்சாரம் பாதிக்கப்படப்போகுதா இல்லை அவங்களால, ஆசியப் பெற்றோர்களின் கலாச்சாரம் மாறப்போகுதான்னு தெரியலை.

  நம் குணம் கடைசி வரை பசங்களுக்காகவே வாழ்வது. அவங்களுக்கு, அவங்க பசங்க பதின்ம வயது ஆன பிறகு, தங்களுக்காக வாழ்வது.

  டெஸ்கோ செய்தது வியாபாரத்தைப் பெருக்கும் தந்திரம். இதையே பிட்சா மெக்டொனால்ட்ஸ் போன்றவையும் செய்யும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆசியர்களால பிரிட்டிஸ்காரங்களும் மாறிட்டு வராங்க :) ஏற்கனவே சப்பாத்தி கடலைக்கறி பஜ்ஜி நான் பராத்தானு மாறிட்டாங்க .ஒரு பெண்மணி என்கிட்டே சூப்பர் மார்க்கெட் இல்  //haldi //எங்கிருக்குன்னு கேட்டாங்க :)))))))))))நம் குணம் நம் நாட்டு பிள்ளைங்களுக்கே பிடிப்பதில்லை இது பற்றி போஸ்ட் எழுதணும் :) 

   Delete
  2. உண்மைதான். ரொம்ப ஸ்பூன் ஃபீட் பண்ணறோம்னு நினைப்பாங்க. என் பையன் 4வது படிக்கும்போதே, ரோடை க்ராஸ் செய்யும்போது அவன் விரலைப் பிடித்தால், பின்னால் இழுத்துக்கொள்வான். அப்பா கையைப் பிடித்தால் அவன் சின்னவன்னு எல்லோரும் நினைத்துவிடுவார்களாம். இப்போதுமே ரோடை கிராஸ் பண்ணணும்னா, அவங்க விரலைப் பிடித்துக்கொள்ள எனக்குத் தோன்றும். (பத்திரமா அவங்க ரோட்டை கிராஸ் செய்யணுமே என்று)

   Delete
  3. என் மகள் எப்பவும் கேட்கிறா //எதுக்கு என்னை குழந்தைபோல ட்ரீட் பண்றீங்க //நானா சொல்வேன் 20 ஆனாலும் எனக்கு நீ 2 வயது குழந்தைதான் .எங்கிருந்தாலும் ஸ்டூடன்ட் அக்கோமொடேஷனுக்கு 9 மணிக்குள் போய்டணும்னு சொல்லியிருக்கேன் .அங்கே கூட படிக்கிறவங்க இவள் தவிர எல்லாரும் பிரிட்டிஷ் ஐரிஷ் வெல்ஷ் அவங்களுக்கு இப்படி நான் பதட்டப்படறது ஆச்சர்யமா யிருக்குன்னு சொல்வாங்களாம் :) .ஆனால் இதெல்லாம் எவ்ளோ காலம்னு  எனக்கு புரியலை .நிறைய குழப்பங்கள் நம்மூர் வளர்ப்பா இல்லை வெளிநாட்டினர்போல் இன்வால்வ் ஆகாம இருக்கணுமா இன்னும் புரியலை 

   Delete
 9. Replies
  1. இப்படி நிறைய ஐயோ சம்பவங்கள் இருக்கு சகோ .சிலது மனம் பலகீனப்படும்னு விட்டுடுவேன் 

   Delete
 10. //எல்லாருக்கும் ஜாலியா இருக்கா இன்னிக்கு சமையல் போடல்லையாம் அதீஸ் பேலஸில் :)///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. enjoy enjaamee :) vaango vaango onnayyi :))
   we are dancing

   Delete
 11. எங்கட நாட்டுப் பிரச்சனையால அடிக்கடி போக்குவரத்துப் பிரச்சனை வந்தது, அதனால நான் ஹொஸ்டலில் இருந்தேனே... என் வாழ்க்கையில நான் அனுபவிச்ச பெரும் மகிழ்ச்சிகளில் அதுவும் ஒரு கால கட்டம் எனச் சொல்லுவேன்... என்னா ஒரு மகிழ்ச்சியான காலம் அது தெரியுமோ... அஞ்சு நீங்க மிஸ் பண்ணிட்டீங்கள் அதை:))... புகைப் புகையா வருதோ:)) ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :)) நான் உங்ககூட பேச மாட்டேன் :)  எனக்கு அந்த ஹேப்பினஸ் கிடைக்காமலே போச்சு .இதுக்குன்னு மீண்டும் ஸ்கூலுக்குத்தான் போக முடியுமா இல்லை யூனிவெர்சிட்டிக்குத்தான் போக முடியுமா :)))))))

   Delete
 12. பாங் கார்ட் தவிர வேறு எந்தக் கார்ட்டும் நாங்கள் வைத்திருப்பதில்லை அஞ்சு, இன்றஸ்ட் ஃபிறீ.. அது இது என்பினம், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில இருந்து அனைத்து ஷொப்ஸ் உம் ஒவ்வொரு விதமாக கிரடிட் கார்ட் அறிமுகம் செய்திருக்குது.. எல்லாமே பிஸ்னஸ் மயம்.. அவர்களுக்கு ஆதாயம் இல்லாமல், நமக்காக எதையும் செய்வினமோ.

  பிள்ளைகளுக்கு பாங் எக்கவுன் ஓபின் பண்ணி, அதிலேயே தான் காசு போட்டு விடுவது வழக்கம் நாங்கள்.. அது சேஃப் ஆனதும் கூட.

  ReplyDelete
  Replies
  1. அது ஏகப்பட்ட கார்ட்ஸ் இருக்கு :) இது சும்மா  ஷாப்பிங் வசதிக்காக .எல்லா பிள்ளைகளுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்காங்க இங்கே .நானா சொல்லி வச்சிருக்கேன் பணத்தை வீணாக்கக்கூடாதுன்னு 

   Delete
 13. அது உண்மைதான் அஞ்சு, இப்படி பழம், காய்கறித்தோட்டங்களிலும் நடக்கிறது, எதுவும் செக் பண்ண மாட்டார்கள் நாமே பறித்து நாமே பாக் இல் போட்டு எடுத்து நெறுக்க வேண்டும், பலர் காரில் boot il சும்மா போட்டுவிட்டு.. கொஞ்சத்தை மட்டும் பாக் இல் போட்டு நெறுப்பார்கள்.. நிறைய ஆய்ஞ்சு கீழே வீசி சிந்துவினம்... பார்க்கக் கவலையாக இருக்கும்... என்ன பண்ணுவது, கடவுளுக்கும் மனச்சாட்சிக்கும் பயப்படாதோர் இப்படித்தான் இருப்பினம்...

  ஆஆஆஆஆஆ நகம் வெட்டியாச்சா..:)) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஆப்பிள் தோட்டங்களில் நுழைந்து (அல்லது ஸ்டிராபெர்ரி) எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம், வெளியில் வரும்போது 10 டாலர் கொடுத்திருந்தா அந்த அளவு பை முழுவதும் எடுத்துக்கலாம் 15 டாலர்னா, அதுக்கேற்ற பை என்று வைத்திருக்கும்போதே, உள்ளே செல்பவர்கள் நிறைய வேஸ்ட் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன். எனக்கு வெண்டைக்காயை ஒடித்து கடையில் வாங்குவதே பிடிக்காது.

   Delete
  2. ஆமாம் .நீங்களும் பார்த்திருப்பீங்க இங்கே நிறைய கீழே கொட்டி கிடைக்கும் .வீணாக்கரத்தில் வல்லவர்கள் இங்குண்டு .ஆமாம் நகம் வெட்டியாச் :) ஆல்  ஆர் safe 

   Delete
 14. அதிராவின் பகிர்வை பார்த்து விட்டேன்.

  நேவிக் கப்பலும், போகும் பாதையும், ஸ்கொட்லாண்ட் ஆற்றின் அழகும் அனைத்தும் அருமை. மலர்கள் அழகு. மற்றும் ஊசிக்குறிப்பு மிக அருமை.
  வலைத்தளத்தில் பதிவு போட்டு இருக்கலாம். எல்லோறும் பார்த்து கருத்து சொல்வார்கள். அழகிய பகிர்வு.

  ReplyDelete
 15. //உன் ரூம்லயே உனக்கு தனியா படுக்க பயம்//

  என் தங்கை ஒருத்தி இப்படித்தான் இருக்கிறாள்.
  //
  கல்லூரி மாணவர்களுக்கென ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்காங்க ,ஒரு கார்ட் சிஸ்டம் Tesco Student Shopper card அறிமுகப்படுத்தி இருக்காங்க//

  நல்லதுதான் இப்படி வசதி வந்து இருப்பது.

  //நாங்க வாராவாரம் மகளுக்கு சப்பாத்தி ,இடியாப்பம்லாம் கட்டி எடுத்துட்டு போயிருக்கோம் :) . //

  நாம் எப்போதும் அப்படித்தானே! நம் உலகம் குழந்தைகள் அவர்களுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் அங்க்கு அது கிடைக்காது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.

  ReplyDelete
 16. //அந்த தோட்டத்தில் மூலையில் ஒரு பெட்டி தேனீக்கள் வளர்க்கும் பெட்டியின் அளவுள்ள பெட்டி இருக்கும் நாம் மலர்களை பறித்து பின் அதில் விருப்பமான காசை போடலாம் .ஜெர்மனியர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டினர் அனைவருக்குமே மலர்கொத்துக்கள் பூங்கொத்துகள் பூச்சாடி அமைப்பில் மலர்களை வைப்பது மிகவும் பிடிக்கும் .//

  கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. மலர்களை பார்த்துக் கொண்டு நடப்பது மனதுக்கு இதம்.
  மலர்களை பறித்து விட்டு காசு போடலாம் எவ்வளவு நல்ல விஷயம்!
  நீங்கள் கண்ட காட்சி அந்த அம்மா செய்த செயல் மனதை வருந்த வைக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே!

  //உண்மை சம்பவம்//

  அதிக கவனம் தேவை இந்த மாதிரி பேஷண்டை கவனிப்பது. பத்திரமாக இருங்கள்.

  ReplyDelete
 17. நகம் வெட்ட அவருக்கு ஆசையில்லைப்போலும்!

  ReplyDelete