அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Saturday, March 27, 2021

நினைவுப்பறவை சிறகடிக்குது :) Hyperosmia to Anosmia


நினைவுப்பறவை சிறகடிக்குது :)


நினைவு 3,  


                                                யாரது :) கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனைங்கிறது .பாருங்க செல்லம்  முகர்கிறது                                        


இந்த வாசனைதான் நமது வாழ்க்கையில் எத்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றது ..எனக்கு புது புத்தகத்தை வாங்கியதும் வீட்டுக்கு கொணர்ந்து ஒரு மூலையில் அமர்ந்து புத்தகத்தை  திறந்து  கண்களை மூடி அப்படியே   முகர்ந்து பார்ப்பது ஒரு ஆசை . அப்படிதான் புதுத்துணியும் நம்மூரில் பிளாஸ்டிக் கவரில் போட்டு அழகா புதுசாயிருக்கும் வாசனை .இங்கே அப்படியில்லை எல்லாரும் ஆடை   விற்கும் கடையிலேயே அவற்றை அணிந்து பார்க்கும் வசதி உண்டு .

உடை மாற்றும் அறை  சென்று பிட்டிங் சரியா இருக்கா என்று  பார்ப்பது உண்டு .ஒருவேளை அந்த துணிகளின் புது வாசனையை எல்லாரும் போட்டு பார்ப்பதால் எடுத்து விடுத்தோ தெரியலை.ஆனால் நாங்கள் இங்குள்ள கடையில் துணி வாங்கினால் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் கிருமிநாசினி போட்டு அலசித்தான் யூஸ் பண்ணுவோம்  .துணி புதுத்துணி வாசனைன்னா  கோ ஆப்டெக்ஸ் ,தில்லையாடி வள்ளியம்மை காதி அங்காடிகளில் துணி வாசனை அலாதி.

 அதேபோல்தான் புது கரன்சியின் வாசனையும். இங்கே இப்போ பிளாஸ்டிக் நோட்டுகள் மடிச்சா  மடங்கிடும்   மடங்கிய அழுத்திய மார்க் தெரியும் .நம்ம மனமும் நாசித்துவாரங்களும் நல்ல வாசனைக்கே பழகிவிட்டன .துர் வாசனைக்கு வெறுப்புதான் வரும் :) முக்கியமா சாராயம் ,சிகரெட் ,weed  ரப்பர் எரிந்த வாசனை . அப்புறம் ஷிங்கார் கும்கும் என்று ஒரு லிக்விட் பொட்டு சாந்துப்பொட்டு வருமே அதன் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும் நடன வகுப்பில் ஆண்டு இறுதி நிகழ்ச்சிக்கு மேக்கப்பில் அங்கம் வகிக்கும் இந்த சிங்கார :) பொட்டு.புருவம் மேல் புள்ளிக்குத்தி விடுவாங்க. மைசூர் போகும் வழியில் சோப்புக்காயா அல்லது சிகைக்காயா எதோ மரங்கள் நிறைய இருக்கும் அந்த பக்கம் பேருந்து கடந்து போனா அதுவும் நம்மை ஆட்கொள்ளும் . 

                                                                                    


அப்புறம் ஆலயங்கள் அங்குள்ள விபூதி வாசமும் அங்குள்ள விளக்கு எண்ணெய் ,தீபம் எல்லாம் கலந்த ஒரு வாசனை அதுவும் பிடிக்கும் .இரவுநேரம் மல்லிச்செடியின் அருகே நடந்தா மல்லிப்பூவின் வாசனை வரும் அது அலாதி .வறுகடலை வறுக்கும்/அவிக்கும்  வாசனை எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா :) . எனக்கு பஜ்ஜி வடை எண்ணெயில் பொரிக்கும் வாசம் பிடிக்காது . 

உணவு வாசனை பற்றி சொல்லும்போதுநினைவுக்கு வருது  ஒரு படம் சமீபத்தில் பார்த்தேன் பெயர் தீனி ..கர்ர்ர்ர் கொஞ்சம் நல்ல பெயரா வைக்கக்கூடாதா . ஹீரோ வாசனையை வைத்தே உணவு சுவையா இல்லையான்னும்  உணவு வகைகள் சுவை எல்லாம் முகர்ந்து பார்த்து  வாசனை  சேர்த்து அருமையா சமைப்பார் .இன்னிக்கு லெமன் ரைஸ் செய்துட்டு அப்படியே வாசனையை முகர்ந்தேன் :) ஒவ்வொரு உணவிற்கும் தனி மணமுண்டு .அதீஸ் பேலஸில் அலாதி  மணம் வீசும்ன்னு நினைக்கிறேன் .அதான் மேடம் தினமும் விதவிதமா சமைக்கிறாங்களே :) 

ஆவ் அப்டேட் சொல்லமறந்துட்டேன் ..சமீபத்தைய அப்டேட் ..

கேக்  பேக்கிங் வாசனை வருதா :)) அதீஸ் மேடம் heart கேக் செய்து அதுக்கு டிரஸ் எல்லாம்  விட்டிருக்காங்க :)) ஸ்ஸ்ஸ் அதான் பட்டர் ஐஸிங் :))

//Love Heart Cake with Icing | Easy fluffy cake |ஒரு கிலோ பட்டர் கேக்கில் ஐசிங் செய்வது எப்படி//
இட்லி வார்த்து அது ஸ்டீம் வருமே இட்லிப்பானையில் அந்த வாசனையும் ,தோசை சுடும் வாசனையும் பில்ட்டர் காப்பி வாசனையும்  பிடிக்கும் .நான் பெரும்பாலும் உணவின் வாசனையை தூர இருந்தே கண்டுபிடிப்பேன் :) . பச்சரிசி வாசனை பிடிக்கும் அளவுக்கு இங்கே விற்கும் அமெரிக்கன் /புழுங்கல் அரிசி பிடிக்காது . சாம்பாரில் என்ன காய் போட்டிருக்காங்க என்றெல்லாம் பார்க்காமலே சொல்லுவேன் .அந்த சாம்பாருடன் நெய் சேர்த்த வாசனை அதுவும் பிடிக்கும் :) 

                                                                                      


புற்களின் பச்சை வாசனை பிடித்து அதிகநேரம் அங்கே இருக்க புல் அலர்ஜியை கொண்டு வந்ததால் இப்போல்லாம் புற்கள் பக்கம் போவதில்லை .இவ்வளவெல்லாம் பிடித்த எனக்கு செயற்கை நறுமணங்கள் பிடிக்காது .அவை தலை வலியை உண்டாக்கும் .நெயில் பாலிஷ் வாசனையும், ஸ்ப்ரேயின் வாசனையும் எனக்கு அனஸ்தீஷியா எபக்ட்டை கொடுக்கும் . அப்புறம் பவுடரில் ஊரில் இருக்கும்போது  பாண்ட்ஸ் பவுடரில் மைல்ட் வாசனை மட்டும் பிடிக்கும்  .மழை சாரலின்  வாசனையும் எலுமிச்சை இலையை கிழித்தால் வரும் வாசனையும் கருவேப்பிலை  இலையின்வாசமும்   பிடிக்கும் .வாசனைகள் பழைய நினைவையும் தூண்டி விடும் . தோட்டத்தில் லாவெண்டர் செடி ஒன்றினை நட்டு வைக்க அது புதராகி அதன் தேனை குடிக்க bumble bee கூட்டமாய் வர எனக்குத்தெரியாமல் கணவர் செடியை பிச்சி போட்டுட்டார் ..ஒன்றுமில்லை பொறாமை அந்த தேனீக்கள் என்னை ஒன்னும் செய்யாம அவரை கொட்டிட்டு :) கூடவே ஜெஸியும் கொட்டு வாங்கி .

                                                      ஒரு குட்டி தண்டு புதினாவை வேண்டாமென்று சொல்லியும் தரையில் நட்டு வச்சார் இவர் அது புதராய் வளர்ந்து கடைசியில் எந்த செடி ரோஜா ,நஸ்ட்டுரியம் ,ப்ரிம்ரோஸ் என எதன்  இலையை கிள்ளினாலும் மின்ட் வாசம் அடித்தது :) பிறகு அதையும் கஷ்டப்பட்டு அடக்கினார் கணவர் .


ஆமாம் இப்போ எதுக்கு இத்தனை வாசனை புராணம் !!! அது சரியா ஓராண்டுக்கு முன்  க்ரேட் மோப்ப செம்மலாக இருந்த  எனக்கு தீ நுண்மி பாதிப்பின்போது ஒன்றுமே தெரியாமப்போச்சு அதுவும் மூன்று மாதத்துக்கு சுவை மணம் இன்றி மிகவும் அவதிப்பட்டேன் .இதை வைத்துத்தான் எனக்கு  வைரஸ் அட்டாக் வந்தது என்பதை உறுதி செய்தார்கள் . 


Hyperosmia is a heightened or increased sense of smell

Anosmia is when a person can't detect odor at all.

உங்களில் யாருக்காவது இந்த அதீத நுகரும் தன்மை இருக்கா ?  :)


அடுத்த பதிவில் சந்திப்போம் .

48 comments:

 1. ஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதீஸ் மேடம் அந்த ஹார்ட் :) இது வேற ஹார்ட் கேக் உங்களுக்கே :_)

   Delete
 2. என்ன ஒரே லவண்டர் வாசமா வருதே:)... இடையில கேக் வாசமும்😍

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) நீங்க ஸ்கொட்லான்ட்டில் செய்ரது உலகெலாம் வாசம் வீசுது 

   Delete
 3. //யாரது :) கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனைங்கிறது .பாருங்க செல்லம் முகர்கிறது //

  அது கற்பூரட்த்ஹையோ முகருது:) நான் லவண்டர் பூவை எண்டெல்லோ நினைச்சேன்:))

  //இந்த வாசனைதான் நமது வாழ்க்கையில் எத்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றது//
  உண்மைதானே.. கியூரெக்ஸ் ஐ ஒருக்கால் மணந்து பாருங்கோ அஞ்சு:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர் செல்லங்களுக்கும் வாசனை தெரியும்னு சொன்னேன் :)என்னது கியூடெக்ஸ்சா !!! சாமி என்னை கொல்ல சதி தீட்டறிங்களா 

   Delete
 4. //ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் கிருமிநாசினி போட்டு அலசித்தான்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன கிருமிநாசினி:)) ஹா ஹா ஹா...

  சாந்துப்பொட்டு என்றதும்தான் நினைவுக்கு வருது, நாங்கள் சின்னனில், எப்பவும் வைக்கும் கறுப்புப் பொட்டு, காச்சித்தான் அம்மா தருவா.. அதன் வாசம் இப்பவும் மூக்கில் நிற்குது..

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா மியாவ் அந்த கருப்பு பொட்டு வீட்டில் செய்வாங்க .எனக்குக்கூட எனக்குக்கூட :) ஹையோ வெக்கமா யிருக்கு திருஷ்டி பொட்டுக்கு செஞ்சி வச்சி விட்டிருக்காங்க :)
   .கர்ர்ர்ர் :) உங்களுக்கு தெரியாததில்லை இங்கே எல்லாரும் போட்டு பார்ப்பாங்க அப்போ ஜெர்ம்ஸ் இருக்கும்ல :) அதுக்குதான் கிருமி நாசினி .இப்போல்லாம் சானிடைசர் போட்டுத்தான் கையே குடுக்கறேயோம் .

   Delete
  2. அந்த கறுப்பு பொட்டு அநேகமா கற்றாழை தேங்காய் எல்லாம் சேர்த்து செய்வாங்கன்னு நினைக்கிறன் 

   Delete
 5. //உங்களில் யாருக்காவது இந்த அதீத நுகரும் தன்மை இருக்கா ? :)//

  இருக்கே:)).. நீங்கள் புளொக்குக்கு உருண்டு:) வரும்போதே நான் கண்டுபிடிச்சிடுவேனே:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :))) அது நீங்களும் நானும் ஒரே இடத்தில இருக்கும்போது நிலம் உங்க சைடில் வெயிட்டுக்கு இறங்குதா நான் அப்டியே உருளரேன் 

   Delete
 6. இந்தப் பதிவின் வாசனையையும் சொல்லலாம்...வெகு நாட்களுக்குப் பின் நான் விரும்பி இரசிக்கும் வாசனைகளை நினைக்க வைத்ததால்..அருமையான பதிவு.வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா .ஆமாம்  வாசனைகள் நம் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பிணைந்தவை .மிக்க நன்றி 

   Delete
 7. அருமையா எழுதி இருக்கீங்க..  உங்களுக்குத் பிடிக்காத பல வாசனைகள் எனக்கும் பிடிக்காது.  பிடித்த வாசனையும் நிறைய ஒற்றுமை.  வாசனை இல்லாய் என்றால் வாழ்க்கையே இல்லை. சுவை இல்லை!  என் நண்பர் ஒருவர் பல வருடங்களாக அனோஸ்மியாவால் அவதிப்படுகிறார்.  நாம்தான் அவதிப்படுகிறார் என்று சொல்கிறோம்.  இவரைப் பற்றி எங்கல்பிளாக்கில் கூட எழுதி இருந்தேன்.  

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .சில வாசனைகளை குறிப்பிடாமல் தவிர்த்திட்டேன்  :) அதோட சில வாசனைகள் நமக்கு உணர்வோடு பிணைந்த நினைவுகளையும் தட்டி எழுப்பும் அதனால்தான்  ரொம்ப கவனமா வார்த்தைகளை யோசிச்சி சேர்த்தேன் .என் உறவுக்கார பெண் ஒருவருக்கு ஏதோ தலையில் அடிபட்டதால் இந்த வாசனை விஷயம் இல்லாமல் போனது .அனொஸ்மியா என்பதை சென்ற வருடம்தான் உணர்ந்தேன் அப்பளம் பொரிச்ச வாசனைகூட தொலைவில் இருந்து பிடிச்சிடுவேன் :) வாசனை இல்லா வாழ்க்கை இல்லை உண்மைதான் :)

   Delete
 8. ஆம்...  கொரோனா பாதித்தபோது நாங்களும் வாசனை தெரியாததிலிருந்துதான் கண்டுபிடித்தோம்,  பக்கத்து வீட்டுத்தந்த பரிசு!  முதலில் காபிப்பொடி வாசனை தெரியவில்லை.  அப்புறம் ஊதுபத்தி வாசனை, அப்புறம் டெஸ்ட் செய்து பார்த்தால் விக்ஸ் வாசனை!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் ஹையோ அதை நினைச்சா நடுங்குது .இப்படிக்கூட ஒரு வைரஸ் நமது மோப்பத்திரனை ஷட் டவுன் செய்யுமான்னு  ஆச்சர்யமா இருக்கு ..இங்கே கொரோனா டீடாக்ட் பண்ணின மார்ச் ஏப்ரலில் இந்த அனோஸ்மியா இல்லை பிறகுதான் மூன்றாவது சிம்ப்டமா சேர்த்தங்க ஏப்ரலில் இருந்து 

   Delete
 9. தேர்ந்த சமையல்காரர்கள் வாசனையை வைத்தே உப்பு குறைவு, புளிப்பு அதிகம் என்றெல்லாம் கண்டுபிடிப்பார்கள்.  சில பெர்பியூம் வாசனைகள் எனக்கு அலர்ஜி, வெறுப்பு மற்றும் தலைவலியை உண்டுபண்ணும்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான். நான் வைத்திருக்கும் சில செண்டுகள் எனக்குத் தலைவலியை உண்டுபண்ணக்கூடியவை. பையனுக்கு நான் வைத்திருக்கும் குட்டிக்குரா செண்ட் பிடிக்காது. கரப்பான் பூச்சி மருந்து வாசனை அடிக்குதும்பான். அவன் உபயோகிக்கும் பெர்ஃப்யூம் எனக்கு மட்டிப்பால் ஊதுபத்தி வாசனை வருதும்பேன்.

   பொதுவா நான் உபயோகிப்பதில் ஜவ்வாது பெர்ஃப்யூம் எல்லோருக்கும் பிடித்தது.

   Delete
  2. @ ஸ்ரீராம் @ நெல்லைத்தமிழன் .எனக்கு எந்த பெர்பியூம் செண்ட்டும் பிடிக்காது .தலை வலிக்கும் ..காரணம் என்ன தெரியுமா எந்த மனமும் முதலில் நாசி வழி உள் சென்று நேர மூளையில் சென்றடையுது .அங்கிருந்து அது இம்மிதியேட்டா மற்ற உடல் பாகங்களுக்கு info அனுப்பும் .ஸ்ட்ரோங் வாசனைக்கு உடனே தலை வலிக்குது .ஜவ்வாது நான் பவுடரா வாங்கி அதில் பன்னீர் சேர்த்து கையில் தேய்க்க சொல்லியிருக்கேன் கணவரை .என்னால் சென்ட் ஸ்மெல் தாங்க முடியாதே :)

   Delete
 10. நல்லாவே வாசனை பிடிச்சிருக்கீங்க. எனக்கும் இந்த செயற்கை மணங்கள் பிடிக்காது. பவுடர் கூடப் பயன்படுத்துவதே இல்லை. மல்லிகைப்பூ வாசனையும், பாக்குப்பூக்கள் வாசனையும், பவளமல்லி வாசனையும் சேர்ந்து வரும் முன்னெல்லாம் எங்க அம்பத்தூர் வீட்டுத் தோட்டத்தில். காலை எழுந்திருக்கும்போதே மணம் ஊரைத் தூக்கும். அக்கம்பக்கம் வீடுகளில் எல்லாம் சொல்வாங்க.

  ReplyDelete
  Replies
  1. அராபியர்களின் வழக்கம், முற்று முழுக்க செண்ட் போட்டுக்கொள்வது. பெண்கள்லாம் மிக விலை உயர்ந்த பெர்ஃப்யூம் போட்டுக்குவாங்க (விலை உயர்ந்த- இதுக்கு அர்த்தம் குவாலிட்டி, எவ்வளவு நேரம் அந்த வாசனை இருக்கும் என்பதைப் பொறுத்தது. சில பெர்ஃப்யூம்கள் 24 மணி நேரத்துக்கும் மேலேயே அதே வாசனையோட இருக்கும்).

   எங்க கம்பெனில ஒரு வடநாட்டவன் வேலைபார்த்தான். அடிக்கடி, எம்.டி. அராபியர் அறைக்குப் போகணும் (ரிப்போர்ட், இன்வெண்டரி டீடெயில்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு). கொஞ்சம் வியர்வை நாற்றம் வரும்-காரணம் வெளியில் உள்ள வெப்பநிலை, குளிர்சாதனம் எல்லா இடத்திலும் இருந்தாலும்). எத்தனையோ முறை இண்டைரக்டா சொல்லிப்பார்த்து கடுப்பாயிட்டார் போலிருக்கு. ஒரு நாள், ஒரு டப்பா முழுவதும் செண்ட் பாட்டில்களாக அவனது மேசையில் கொண்டுபோய் வைக்கச் சொல்லிட்டார்.

   நான் எப்போதுமே பெர்ஃப்யூம் போடும் ஆள். குறைந்தது 50 ரோல் ஆன்களாவது என்னிடம் இருக்கும், பத்து வித வித பெஃப்யூம்களாக.

   Delete
  2. @ கீதாக்கா :)) ஹாஹாஹா .எனக்கு முதல் பிரச்சினை அதீத நினைவு இரண்டாம் பிரச்சினை அதீத வாசனை நுகர்தல் .அதான் போன வருஷம் கிட்டத்தட்ட 4 டு 5 மாசம் ஆனது வாசனை உணர்வு திரும்ப .இப்பவும் எனக்கு 90 % தான் வந்திருக்கோன்னு டவுட் .எப்படி சொல்றேன்னு கேட்டா :) அது இங்கே சிலர்  கூட்டமா இருப்பாங்க மாலை வேளையில் அவர்களது கடைகளை கடந்தா  தெரியும் .ஒரு போதை வஸ்து  பிடிப்பாங்க அதெல்லாம் எப்படி என்னன்னு தெரியாதது ஆனா அந்த ஏரியா பக்கம் நடக்க முடியாதது குமட்டும் ,  இப்பவும் அவ்வழி நடக்கிறேன் ஆன்னா வாசனை வரல்லியே ??? அந்த வஸ்து யூஸ் பண்றவங்களை கடந்தாலும் ஒன்னும் தெரியலை அநேகமா இன்னும் நானா முழுதும் குணமடையல்லையோன்னு டவுட் 

   Delete
  3. பவளமல்லி எங்க வீட்டிலும் இருந்ததே .அதோட மாம்பூ வாசனை கொய்யாப்பூ வாசனை ஊசிமல்லி வாசனை எல்லாம் நல்லா இருக்கும் .அதென்ன பாக்குப்பூ ??  நானா நுகரவில்லையே ?? எப்படி இருக்கும் 

   Delete
  4. //சில பெர்ஃப்யூம்கள் 24 மணி நேரத்துக்கும் மேலேயே அதே வாசனையோட இருக்கும்).///

   @ நெல்லைத்தமிழன் இது ரொம்ப கெட்டதாச்சே அதுவ்வும் என்னைமாதிரி ஆளாய் இருந்து மயங்கி மயங்கி விழுவேன் :))
   ஹாஹா நான் காரில் கூட பெற்பியூம் air freshener போடா விடமாட்டேன் .தலை வலிக்கும் 

   Delete
 11. இப்போ இங்கே அபார்ட்மென்டில் எங்களுக்குக் கீழே யாரோ சிகரெட் பிடிக்கும் நாற்றம்.துர்நாற்றம்! :( என்ன செய்வது! அதீஸ் சமையலில் ரொம்ப மும்முரம் போல. ஆளைக் காணவே காணோம். இங்கே மட்டும் வராங்க! சம்பளமெல்லாம் ஒழுங்காக் கொடுக்கிறாங்களா இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அக்கா எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தை கேட்டு உறுதி செஞ்சுதான் தேடினார் .காரணம் எங்கப்பாவுக்கு எனக்கும் ஒரே சுவாச பிரச்சினையுண்டு அது யாராச்சும் கொஞ்சம் தொலைவில் சிகரெட் பிடிச்சாலும் நானாக நெஞ்சை பிடிச்சிட்டு இருமுவோம் !! இப்போ எங்க மகளுக்கு ஜீன்ஸ் இல் அதே பிரச்சினை வந்திருக்கு .அந்த வாசனை நம் சுவாசப்பையில் சென்றி எரிக்குறாப்ல இருக்கும் சே :(

   Delete
  2. ஹாஹாஹா சம்பளம் இன்னும் வரலை :) எப்படியும் வாங்கிடுவேன் 

   Delete
 12. பதிவைப் படித்த பிறகு எனக்கு உணவு வாசனை வந்துவிட்டது. இன்று வீட்டில் சேவை, புளிசேரி, கற்கண்டு அரிசி பாயசம். மாலை உணவு மெத்தி ஆலு சப்ஜி, சப்பாத்தி.

  நான் 5,6வது படிக்கும்போது தெரு முனையிலேயே என் வீட்டில் அம்மா என்ன பண்ணியிருக்கிறார் என்று வாசனை வந்துடும் (எனக்கு... அப்போ ஏதேனும் பண்ணினா). இங்க சில சமயம், என்ன இன்னிக்கு உருளை வெங்காய வாசனை வருதேன்னு கேட்டால் மனைவி, நான் அதெல்லாம் பண்ணலை..மேல் flatலேர்ந்து உங்களுக்கு வாசனை வந்திருக்கும்கறா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா .மென்யூ சூப்பரா இருக்கே !! உருளை பொடிமாஸ் வாசனை வெண்டைக்காய் வாசனை புளிக்குழம்பு வாசனை எனக்கு தெருக்கோடி வீட்டில் மூலையில் செஞ்சாலும் வரும் :) என்ன சொல்லுங்க நம்ம தென்னிந்திய அதுவும் தமிழ்நாட்டு உணவுக்கே தனி மணம்  சுவை உண்டு .பில்டர் காபி வாசனை அப்பப்பா சூப்பரோ சூப்பர் 

   Delete
 13. எனக்கு அதீத நுகரும் தன்மை உண்டு (மூன்று வருடங்களுக்கு முன்னால் அது சுத்தமாகப் போய்விட்டது). ஆபீஸ்ல, ப்ளக் எரியும் வாசனை வருதுன்னு நான் சொல்லி, மத்தவங்க செக் பண்ணிக் கண்டுபிடித்து தீ ஆபத்தைத் தவிர்த்திருக்காங்க. அந்த சமயத்துல, எங்க ஆபீஸ்ல ஒரு பெண் (திருமணமானவ, கர்னாடகாவைச் சேர்ந்தவ) வேலை பார்த்தாள். அவளுக்கு நுகரும் சக்தியே இல்லையாம். Gas leak ஆச்சுனா என்ன பண்ணுவீங்க என்று கேட்டதற்கு அதற்கு மட்டும் சேஃப்டி வால்வோ ஏதோ வச்சிருக்காங்களாம். பாவம் இல்லையா?

  அதீத நுகரும் சக்தி எனக்குக் கெடுதலாக அமைந்ததும் உண்டு. தாய்வான்ல, அவங்க உணவு வாசனை எனக்கு ரொம்பவே குமட்டும். தாய்வானீஸ் உணவு, அப்புறம் ஃபிலிப்பினோஸ் சமைக்கும் வினிகரில் வறுக்கும் மீன் - இவை எனக்கு ரொம்பவே குமட்டும்.

  உடனே, அதிரா சமையலைச் சாப்பிடவோ பார்க்கவோ நமக்கு நுகரும் சக்தி இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன என்று கேட்டுடாதீங்க ஏஞ்சலின். அதிரா உங்களை கோச்சுக்கப்போறாங்க.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு போன வருஷம் கோவிட் வந்தப்போ தான இந்த அனோஸ்மியா வந்து மோப்பம் போச்சு :) எனக்கொரு வழக்கமுண்டு பிடிக்காத வாசனை என்றால்  மூச்சை இழுத்து இழுத்து உள்வாங்கி கோபப்படுவேன். fresh மார்க்கெட்டில் பழம் காய்கறிக்கடைகளுக்கு மட்டும் போவேன் மற்றவற்றை கணவர் வாங்குவார் .இங்கே ஓபன்  மார்க்கெட்டில் ஒரு சைனீஸ் கடையில் துரியன் பழத்தை வெட்டி வைச்சு மக்களை அலற ஓடிஏ விட்டிருக்கார் ஒரு கடைக்காரர் .உடனே கம்ப்ளெயிண்ட் போய் அந்த அங்காடியில் துரியனை  தடை .நானா முகர்ந்ததில்லை அவ்ளோ மோசமாவா இருக்கும் ??ஹாஹாஹா அதீஸ் மேடத்தின் சில ரெசிப்பீஸ் செய்தேன் வீட்டில் செம்ம வரவேற்பு :) அதனால் வாசனை நல்லாத்தான் இருக்கும்னு நம்புவோம் 

   Delete
 14. Replies
  1. மிக்க நன்றி சகோ

   Delete
 15. சுவையை உணர்வதும் ஒரு இரசனைதான் ஆனால் இப்போது நாசிகள் செயல் இழ்ந்துவிட்டது நவீன சுத்திருகரிப்பு மருந்தை பயன்படுத்துவதால்![[

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்குநூறு உண்மை .எனக்கு ப்ளீச் வாசனையா பெரும் அவதி .உடனே அரை மயக்கத்துக்கு கொண்டு போகுது :( ரொம்ப தலையும் வலிக்கும் 

   Delete
 16. புத்தகவாசனை இன்னும் பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா தெரியுமே அதுவும்  கவிதை தொகுப்பு புது புத்தகம்னா உங்களுக்கு ரொம்பவே பிடிக்குமே :)

   Delete
  2. எனக்கும் புத்தகவாசனை பிடிக்கும்

   Delete
  3. புது புக் வாசனை பிடிக்காதோர் யாருமே  இருக்க மாட்டாங்க :) 

   Delete
 17. உங்களுக்கு பிடித்த பல வாசனைகள் எனக்கும் பிடிக்கும்... அதோட ரசத்திற்கு தாளிக்கும் போது வரும் வாசனை பிரியாணிக்கு இஞ்சி பூண்டு வெங்காயம் வதக்கும் போது வரும் வாசனை மிளகு குழம்பிற்கும் பொருட்களை வதக்கும் வாசனை ஊறுகாய் தயாரிக்கும் வசானை இப்படி பல சொல்லிக் கொண்டு போகலாம்.. ஆ மறந்துட்ட்டேன் சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. ஹலோ நீங்க கண்டுகொண்டதை  மாமியும்  கண்டு கொண்டார்கள் :) ஹீஹீஹீஹீயே :) 

   Delete
  2. ஸ்ஸ்ஸ் யெஸ்ஸ்ஸ் :) அந்த ரசம் தாளிக்கும் வாசனை ஆஹா ..ஒருமுறை என் கணவர் தாளிக்கும்போது தீச்சிட்டார் :) லேஸாதான் தீச்சார் ஆனாலும் கண்டுபுடிச்சிட்டேன் :) நான் ரசத்தை செய்துட்டு 3 /4 மணிநேரம் கழிச்சு திறந்து வாசனை பார்ப்பேன் :))

   Delete
  3. ஊறுகாயினதும் அப்பா தாளிக்கும் செய்யும் நாரத்தை/ கிச்சிலிக்கா  ஊறுகாய் நினைவுக்கு வருது ட்ரூத் .அவர் செய்யும் களாக்காய் ஊறுகாய் வேலைக்கு கொண்டுபோவேன் அங்கிருக்கவங்க எல்லாம் சொல்வாங்க ஊறுகாய் வாசம் வீசுதுன்னு 

   Delete
 18. எல்லா வாசனையும் பிடிக்கும் என்ற நீங்கள் பிறந்த குழந்தையிடம் இருந்து வரும் வாசத்தை மறந்து ஏனோ? எனக்கு பிடித்தது பால் மணம் மாறாத குழந்தையின் வாசம்

  ReplyDelete
  Replies
  1. ஆஆவ்வ்வ் !!! ட்ரூத் அதை மறக்கலை .அந்த குழந்தை வாசம் தெய்வீக மணம் :) இங்கே நானா சொன்னவை பொதுவான மணங்கள் .அப்புறம்  பூனைக்குட்டி நாய்க்குட்டி ,  முட்டையில் இருந்து  ஈரத்துடன் வெளிவந்து பின் காய்ந்த புஸு புஸு கோழிக்குஞ்சு புறாக்குஞ்சு அணில்குட்டி கன்னுக்குட்டி  ஆட்டுக்குட்டி பன்னிக்குட்டி எல்லாத்திலையும் ஒரு தனி வாசம் இருக்கும் அது நம் கைப்படாதவரைக்கும் தான் அந்த வாசம் நிற்ற்கும் . 

   Delete
 19. அன்பு ஏஞ்சல்,
  உங்கள் நுகரும் சக்தி பூரணமாகத் திரும்ப
  பிரார்த்தனைகள்.
  நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனை
  மணங்களும் எனக்கும் பிடிக்கும்.

  தீய்த்த வாசனை நோக அடிக்கும்.
  இத்தனை விவரமாக வாசனைகளை அலசுவதை இப்போதுதான் படிக்கிறேன்.

  அதீதமான சென்செடிவ் நீங்கள்.

  ReplyDelete
 20. //எனக்கு செயற்கை நறுமணங்கள் பிடிக்காது .அவை தலை வலியை உண்டாக்கும் .//
  எனக்கும் செயற்கை நறுமணங்கள் பிடிக்காது.

  முன்பு நல்ல வாசனை கெட்ட வாசனைகளுக்கு தும்மல் போட்டு கொண்டு இருந்தேன்.
  அப்புறம் மூச்சு பயிற்சி யோகா கற்றுக் கொண்ட பின் தான் தும்மல் சரியாச்சு.
  இந்த மாதம் பூக்களின் மகரந்தங்கள் பறந்து சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும் இல்லையா?


  ReplyDelete