அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Sunday, March 07, 2021

ஊ...ஊசிகுறிப்புக்கள் :)

                                                                                 



                                                                        அனைவருக்கும் வணக்கம் :) 2019 இல் வருட இறுதியில்  ஆரம்பிச்ச புயல் எங்க நாட்டை விட்டு  மட்டுமில்லை  எந்த நாட்டையும் விட்டு  கரைக்கடக்கவில்லை அதை இல்லாமப்பண்ண  முயன்றாலும் பல்வேறு ரூபத்தில் புதுசு புதுசா தினுசுதினுசா அங்கங்கே வெடிக்குது .கடந்த ஒரு வருஷமா உறவினர்களை சந்திக்கவில்லை  ஆலயத்துக்கும் கூட்டு பிரார்த்தனைக்கு போகவில்லை சிலகாலம் சர்வீஸ் நடந்தாலும் மாஸ்க் போட்டு உள்ளே அமரணும் பாட்டு பாடவோ கைகுலுக்கவோ முடியாதது .

                            கை என்றதும் ஒன்று நினைவுக்கு வருது கைவளை குலுங்க அதீஸ் பேலஸ் அரண்மனைக்கிளி புதிய ரெசிப்பி போட்டிருக்காங்க :)    பீன்ஸ் கறி| அவரைப் பிரட்டல் | இலங்கை சமையல்   https://www.youtube.com/watch?v=Oj68luqW2s8

=========================================================================

ஊசி பதிவு தொடர்கிறது :)

                                    சர்ச்சுக்கு போனா அங்கே காபி டீ அருந்த முடியாதது.யார்  வந்தாலும் போனாலும் உக்கார்ந்தாலும் அவங்க இருந்த இடத்தை fogging செய்யணும் வேலை இடத்தில உள்நுழையும்போதே motion sensor fogging chamber வழியே நுழைந்து அது நம்மூர் கல்யாணங்களில் குட்டிப்பொண்ணுங்க பன்னீர் தெளிக்கறாப்ல disinfection ஸ்ப்ரேவை தெளிச்சு நம் டெம்பெறச்சரையும் பார்த்து நார்மல் டெம்பெறச்சர் யூ கேன் ப்ரொசீட்ன்னு சொல்லி அனுப்பும் . 

                                    இத்தனை களேபரத்திலும் ஒவ்வொரு நாடும் போட்டிபோட்டு இந்த புயலுக்கு தீர்வு கண்டுபிடிக்க முற்பட்டாங்க .வேறே வழியில்லை வாக்சின் மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையில்  ஊசி  தயாராகிவிட்டது முதலில் ஹெல்த் கேர் செக்டரில் இருப்போருக்கும் 90 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர் அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு முதல்கட்ட வேக்சினேஷன் த்துவங்கியது .இதை ஹாஸ்பிடல் செக்டர் என்பதால் முதலில் வேக்சின்  போட வேண்டிய கட்டாயம் எனக்கு .கட்டாயம் என்றால் நானா ஓகே சொன்னால்தான் போடுவாங்க  .அதற்குள் பல அனுமானங்கள் பல  தியரிகள் மீம்ஸ் :) உறவு வட்டத்திலும் எல்லார் பார்வையும் எனைநோக்கி பாயும் தோட்டாக்களாய் :) நானா ஊசிபோட்டுக்கிட்டபின் என்னை பார்த்து அவங்க போட்டுப்பாங்களாம்😀😀😀😀😀😀😀😀😀 :)))))) .இன்னும்சிலர் புற்றுநோய்க்கு எய்ட்ஸுக்கு வாக்சின் கண்டுபிடிக்க முடியலை ஆனால் இதுக்கு மட்டும்  இவ்ளோ சீக்கிரமா எப்படின்னு குறுக்கு கேள்வி கேட்டு அடிவயிற்றில் சந்தேக  மரண பீதியை கிளப்பி விட்டாங்க .

இப்படி ஏற்கனவே சாதாரண  ஊசி பேரைக்கேட்டாலே  100 அடிதூரம் ஓடி ஒளியும் என்னை இந்த பயமுறுத்தல்கள் பேயாய் படுத்தியெடுத்தன . இறுதியில் ஒருநாள் ஊசிபோட்டுக்கலாம்னு முடிவெடுத்தேன்.எனக்கு முதல் தடுப்பூசி டிசம்பர் மாதம் பாதியில் போடப்பட்டது  :) வலிக்காதுதானேன்னு அந்த நர்ஸிடம் 5 முறை கேட்டுக்கொண்டேன் .அவர் சொன்னார் //நான்  பொய்ச்சொல்லமாட்டேன் கட்டாயம் கொஞ்சம் வலிக்கும் 2 நாளில்   வலி போயிடும்////னு .அதேபோல் நடந்தது .ஊசி குத்தி முடிச்சதும் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ஸ்டார் ஒட்டிவிடராப்பல எனக்கு இந்த ஸ்டிக்கரை ஒட்டி விட்டாங்க :))) .பிறகு இரண்டாவது ஊசி 4 வாரத்தில் போடவேண்டியது 3 மாதத்திற்கு பின் என்று ஒத்தி வைக்கப்பட்டது .மூன்றுமாதம் கழித்து முந்தின தினம் தான் இரண்டாவதும் போட்டாங்க எனக்கு . ஆக தடுப்பூசி போட்டாச்சு எனக்கு :) .



டிஸ்கி ..இது தடுப்பூசிக்கு விளம்பரம் அல்ல :)  .இது அவரவர் விருப்பம் மனம் விரும்பினால் மட்டுமே நாம் எதையும் செய்யமுடியும் .அதனால்தான் வேறெந்த விவரமும் பதிவில் எந்த ஊசி என்பதைக்கூட சொல்லவில்லை :)

***********************************************************************************

சமீபத்தில் இணையத்தில் உலவும் இந்த காணொளி எல்லாம் நம்மூர்க்காரங்க கைங்கர்யம்தான் :)

                                                                                       



மற்றுமொரு பதிவில் உங்களை சந்திக்கின்றேன் .

                                                                            


34 comments:

  1. இரண்டாவது தடுப்பூசி 28 நாட்களில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இங்கு நிறையபேர் இரண்டு ஊசியலையும் போட்டுக்கொண்டு விட்டார்கள்.  இப்போது ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது,  இந்தியா வந்திருக்கும் அப்பாதுரை கூட தன் அம்மாவுக்கு அரசு ஆஸ்பத்திரி அழைத்துச் சென்று முதல் கட்ட தடுப்பூசி போட்டு விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் .எனக்கு 4 வாரத்தில் இரண்டாவது குத்த வேண்டியது சிலபல அரசின் அறிவிப்புகளில் 3 மாதமாச்சு .நீங்கள் போட்டாச்சா 1!!??? இங்கே ஜூன் மாதமுதல் லாக்டவுன் எல்லாம் அப்படியே போயிடும்னு சொல்றாங்க அதுக்குள்ள பெரும்பாலோனோர் ஊசி குத்தி முடிச்சிருப்பாங்க .பாப்போம் என்ன நடக்குதுன்னு 

      Delete
  2. காணொளி புரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. https://www.republicworld.com/world-news/uk-news/hilarious-k3g-memes-about-prince-harry-and-meghan-stepping-down.html

      Delete
    2. ஹாஆஆஹாஆ :) புரியல்லியா :))அது சில பல வருஷ முன் கபி குஷி கபி ஹம் அப்படின்னு ஒரு படம் வந்த்தது அந்த படத்தின் சீன்ஸும்  இங்கிலாந்து அரச குடும்பதில் நடக்கும் விஷயங்களும் ஒரே போல்  இருக்குன்னு டிக்டக் மீம்ஸ்  போடறாங்க :))

      Delete
  3. தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதற்கு வாழ்த்துகள். இதே போல் அனைவருக்கும் போடப்பட்டு இந்தக் கொடிய தொற்றை வெல்வோம். ஊசிக்குறிப்புகள் என்றதும் என்னமோ, ஏதோ என்று ஓடோடி வந்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜமான ஊசிக்குறிப்புகள்! :)))))))

    ReplyDelete
    Replies
    1. ஹஆஹாஆ :)  ஏமாத்திட்டேனா :))) அது வேறொரு போஸ்ட் போடவந்து டிராக் மாறி ஊசியில் இறங்கினேன் :)ஆமாம்கா இங்கே ஜூனிலிருந்து நிலைமை சீராகும்ன்னு சொல்றாங்க 

      Delete
  4. காணொளி புரியவில்லை.

    தடுப்பூசி உங்களுக்கு அவசியம் அல்லவா ஏஞ்சல்.
    நீங்கள் போட்டுக் கொண்டது மகிழ்ச்சிமா. என்றும் நலமுடன் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஆஆஹாஆ :) புரியல்லியா :))அது சில பல வருஷ முன் கபி குஷி கபி ஹம் அப்படின்னு ஒரு படம் வந்த்தது அந்த படத்தின் சீன்ஸும்  இங்கிலாந்து அரச குடும்பதில் நடக்கும் விஷயங்களும் ஒரே போல்  இருக்குன்னு டிக்டக் மீம்ஸ்  போடறாங்க :))

      Delete
    2. Prince Harry and Meghan announced that they wished to step back from their royal duties and the internet has found some similarities to a Bollywood movie.

      Delete
  5. நான் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைப்பற்றி யோசிக்கலை. விரைவில் போட்டுக்கணைம், தைரியம் வந்தவுடன்.

    ReplyDelete
    Replies
    1. ஊசிதானே நெல்லைத்தமிழன் :) அதுசரி யாருக்கு தைரியம் வரணும் :))))))))))))))) ஊசிக்கா உங்களுக்கா ?

      Delete
  6. இங்கே இப்போது உங்க நாட்டுத அளவிற்கு கெடுபிடி இல்லை

    ReplyDelete
    Replies
    1. ட்ரூத் இப்போ கெடுபிடி அதிகம்தான் ஆனா கொஞ்சம் கொஞ்சமா ரிலாக்ஸ் செய்யப்போறாங்க ஜூன் மாதம் சராசரிக்கு திரும்பும் என்கிறாங்க 

      Delete
  7. ஹலோ என்ன அநியாயமாக இருக்கிறது பீன்ஸ் கறிக்கெல்லாம் வீடியோவா விட்டால் அடுப்பு எப்படி பத்த வைக்கிறது என்று எல்லாம் வீடியோ போடுவாங்க போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. நநீங்க வேற ட்றுத்:)).. சுடுதண்ணி வைப்பதுகூட சிலருக்கு ஒழுங்காத் தெரியாது:))..

      ஜோக் ஐத் தாண்டி, உண்மையில ஒரு அக்கா, தனியே இருக்கிறா, முழுநேர வேலை, பெரும்பாலும் ரேக் எவேதான் சாப்பாடு, எப்போதாவது ஹொலிடேயில் சமைப்பா, சமைக்கத் தெரியாது.. அவவுக்கு பீன்ஸ் கறி சரியான விருப்பமாம், நான் சனல் தொடங்கிய காலம் தொடங்கி, ஈசியா ஒரு பீன்ஸ் கறி போடுங்கோ என ஒரே வேண்டுகோள்..

      இப்படி இன்னும் சில வேண்டுகோள்கள் கியூவரிசையில் நிக்குது தெரியுமோ:))

      Delete
  8. நான் முதல் தடுப்பூசியை கடந்த வாரம் போட்டுவிட்டுதான் எங்கள் ப்ளாக்கில் புதன் கிழமை பதிவில் போய் அட்டகாசம் பண்ணி வைத்தேன் ஹிஹீ...

    முதல் ஊசிப் போட்ட எனக்கு கைவலி மட்டுமல்ல 3 நாட்கள் காய்ச்சலும் இருந்தது... இந்த மாத இறுதியில் இன்னொரு ஊசி போடனும்... இங்கு தயாரிக்கப்பட்ட ஊசி என்பதால் மிக நம்பிக்கை எனக்கு....

    இப்போது ஜான்சன் & ஜான்சன் தாயாரித்து ஊசி கடந்த வாரத்தில்தான் அப்ருவல் ஆனது.. இது ஒரே ஒரு ஷாட் மேலும் இதை மற்ற ஊசிகள் போல பீரிசரில் வைக்க தேவை இல்லை என்பதால் கையால்வது மிக எளிது... ஆனால் கம்பெனியின் பெயர் இதற்கு முன்பு பல காரணங்களில்னால் கெட்டு போயிருந்ததால் பலரு யோசிக்ககிறார்கள்

    இங்கு மூன்று மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருக்கிறது ஜுன் ஜீலை தட்டுப்பாடு ஒரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர்ல முதல் ஊசி போட்டேன் அப்புறம் கவர்ன்மென்ட் சிலபல காரணங்களால் 4 வாரா இடைவெளியை 12 வீக்சாக்கி  ஒருவழியா வெள்ளிக்கிழமைதான் இரண்டாவதும் போட்டேன் .இருமுறையும் கைவலி மட்டுமிருந்தது .எனக்கு போடப்பட்டது வேறு இப்போ வேறு ஒன்றை போடறாங்க நீங்க சொன்ன ப்ரீசர் பிரச்சினை அதற்கில்லை 

      Delete
  9. தடுப்பூசி குறிப்புகளுக்கு வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ .நான் விரிவா எதையும் சொல்லலை காரணம் பயபடுத்த வேண்டாம்னு 

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஆஆஆ இது எப்போவாக்கும் வெளி வந்துது....
    அது என் கொப்பி வலது ஊசிக்குறிப்பாக்கும் ..... நேக்கு நீடி வேணும்:)... ஆஆஆ ஊசிக் குறிப்பில ஊசி இருக்குதே:).. அப்போ ஓகே....
    என்னாது கைவளையலோடு பீன்ஸ் பிரட்டலோ அவ்வ்வ்வ்வ்வ் வைரக் கல் பதிச்சது எனவும் சொல்லியிருக்கோணுமாக்கும்:).. இட்ஸ் ஓகே... மீக்கு த எருமை சே சே தற் பெருமை பிடிக்காதூஊஊஊ:)

    ReplyDelete
    Replies
    1. மொபைலில் ஏதோ எரர், அதனால ஒரே கொமெண்ட் 3 தடவை வந்துவிட்டது.

      Delete
    2. ஹஆஹாஆ :) நினைச்சேன் நீங்க ஊசிக்கு குதிப்பீங்கன்னு  :) அந்த வைரவளையல் எனக்கு தரப்போறேன்னிங்களே அதுவா இது ::))

      Delete
  13. தடுப்பூசி போட்டுக்கொண்டமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா 

      Delete
  14. முதல் படத்தில இருப்பது, அஞ்சு வீட்டு எலியோ? பொம்பிளை எலி:)) கண்டுபிடிச்சிட்டேன் சட்டை போட்டிருக்கிறா:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஆ கியூட் தானே மியாவ் :) கர்ர்ர்ர்ர் இருங்க போய்ஸ் எலிகள் கிட்ட சொல்றேன் :)

      Delete
  15. ஊக்கேயில வக்சீன் போட்டு ஓரளவு முடிஞ்சு வருது.. ஸ்கூல் தொடங்க முன் ரீச்சேர்ஸ் க்கு போடச்சொல்லி, புக் பண்ணச் சொல்லிச்சினம், அது கொஞ்சம் தூரப் போய்ப் போடோணும், நான் போகவில்லை, எங்கள் ஏரியாவுக்கு என் வயசு முறை வரட்டும் போடலாம் என இருக்கிறேன்..

    இப்போ 60+ ஆட்களுக்குப் போடுகிறார்கள்.. அதிலதான் அஞ்சு போட்டவ:))..

    எனக்கு 16+ வரோணுமெல்லோ போட:))... ஹையோ ஏன் முறைக்கிறீங்க நான் ஓடிடுறேன் வீடியோ எடுக்க சனலுக்கு..:))

    ReplyDelete
    Replies
    1. ///எங்கள் ஏரியாவுக்கு என் வயசு முறை வரட்டும் //

      ஹலோ உங்க வயசுமுறைக்கு இப்போ உங்களுக்கு ஊசி குத்தியிருக்கணுமே :)) ஐ மீன் 90 மேலே குத்திருப்பாங்க 

      Delete
  16. ஆஹா படு வேகமாகப் பதிவுகள் வருகின்றன, அப்போ இனி நான் அடிக்கடி ஊரியூப்ல வீடியோப் போட்டு அஞ்சுவைத் தேனி:) போல வச்சிருக்கப்போகிறேன்:)) ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. போடுங்க மியாவ் போடுங்க :) சேர்ந்து செல்வோம் 

      Delete
  17. வருகிற வாரத்தில் புக் செய்துள்ளோம்...அது உடலுக்குமட்டுமல்ல மனதுக்கும் கொஞ்சம் தைரியம் கொடுக்கிறது தானே..

    ReplyDelete