அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, March 31, 2021

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் :)

                                         இசைக்கு மயங்காதோர் யாருமுண்டோ !! என்னைப் பொறுத்தவரை நல்ல இசைக்கு மொழி/ மதம்/  அதெல்லாம் கிடையாது  எந்த பாட்டு என்னுள் அதிர்வை ஏற்படுத்துதோ அதை ரிப்பீட் மோடில் கேட்பேன் .நல்ல குரல்வளம் என்பது உண்மையில் இறைவன் கொடுத்த வரம் :) எனக்கு அவ்வரம் கிட்டியில்லா :) 

                                                                            இன்று பதிவிற்குள் செல்ல உங்கள் அனைவருக்கும் அதீஸ் பேலஸ் இலிருந்து ரெண்டு வட்டல் //,பரிசல்  எடுத்துட்டு வந்தேன் :) 

இன்றைய அப்டேட் அதீஸ் பேலஸிலிருந்து :))


                                                                


Easter egg decorations | Edible woven egg baskets | உண்ணக்கூடிய எக் கூடைகளைப் பாடிக்கொண்டே செய்வோமா?

அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ  நான் பாட்டு பற்றி போஸ்ட் எழுத அங்கே யூ டியூப்  தலைப்பில் பாடிக்கிட்டே செய்றாங்க :)))))))

https://www.youtube.com/watch?v=My0BVwgT6jg


சரி இப்போ பதிவிற்கு செல்வோம் :)

எங்க மகள் வயிற்றில் இருக்கும் போது அம்மா சொன்னாங்க ///நல்ல மியூசிக் போட்டு கேளு இசை கேட்டால் குழந்தை அறிவா வளரும்னு  // . யார்  குரலையோ  கேட்டு எதுக்கு வளரனும் நம்ம குரலை கேட்டே வளரட்டும் என்று  கொஞ்சம் உச்சஸ்தாயில் பாட ஆரம்பிச்சேன் :) அப்போவே டொம்முனு ஒரு உதை எனக்கு ஒன்னும் புரியல அப்புறம் கவனித்ததில் நான் பாடும் போதெல்லாம் உதைப்பா ஆனா  பேசும்போது அமைதியா இருப்பா !!!!  .. 

இதென்ன சோதனை ன்னு பாட்டு பாடறதை விட்டு விட்டேன் . பிறகு அவள் பிறந்ததும் அவளை  தூங்க வைக்க எடுத்தேன் நம்ம அஸ்திரத்தை .2 மாசம்தான் இருக்கும் பாட்டு பாடினேனா , ஒரு குட்டி கை அப்படியே என் வாயை மூடிச்சு :) அப்படிதான் உடை ,டயப்பரிமாற்றும்போதும் அந்த குட்டி பாதங்கள் என் வாயைமூடும் :)  இனியும் நமக்கு இந்த அவமானம் வேணாம்னு பாடுவதை நிறுத்திட்டேன் :)  

                                                எங்க கணவர் வழியில் அனைவரும் நல்ல குரல் வளம் உள்ளவர் என் மாமனார் நிறைய இசைக்கருவிகளை வாசித்தாராம் .மியூசிக் நொட்செல்லாம் கையால் எழுதியிருக்கார் .நல்லவேளை பின்னாளில் மகள் வளர்ந்து  மாமனாரின் ஜீன்ஸை எடுத்துக்கொண்டு சர்ச் கொயரில் சேர்ந்து உச்சஸ்தாயில் பாடும் போது கேட்க பேரானந்தம் எங்களுக்கு .சின்ன வயதில் காதில் கேட்ட பாட்டெல்லாம் பாடுவா . கெட்சப் சாங் என்று ஒரு பாட்டு வரும் mtv யில்  அந்த பாட்டுக்கு ஆட்டம் போடுவா :). ஆனாலும் நான்  பெரும்பாலும் ஆலயத்தில் பாடும் கிறிஸ்தவ பாடல்களை மட்டும் போட்டு காட்டுவேன் .

பிறகு வளர்ந்ததும் மெல்ல  தமிழ் பாடல்களை கேட்க ஆரம்பிச்சா . அப்பப்போ மலையாள பாடல்களையும்  கேட்பாள் .பாடம் படிக்கும் போது மெல்லிய  ஸ்மூத் இசை ஒலிக்கத் தான் பாடம் படிப்பா .தமிழ் பாட்டுக்களை தேடி   கேட்கும்போது  யூ டியூபில்  ஒரு படத்தின் பாடல் வந்தது பாடல் நல்ல பாடல் இசையும் அருமை ஆனா ஊடே அவ சொல் ஒன்று கதாநாயகன் பேசுவது போல் அருவெறுப்பாக இருந்தது  .ஆங்கிலத்தில்  அடிக்கடி அங்கங்கே இங்கே  கேட்கும் சொல் என்றாலும்  நல்ல இசை ஊடே அவமாய் அந்த சொல்லை மனம் ஏற்கவில்லை.மகளும் அர்த்தத்தை கேட்க அது swear வார்த்தை   என்று சொல்லி சமாளித்தேன்  . 

நான்  நிறைய பாடல்களை கேட்பேன் ஒவ்வொரு genre .அப்படி சமீபத்தில் எதேச்சையா கேட்டுட்டே இருக்கும் பார்த்துட்டே இருக்கும் பாடல் என்ஜாய் எஞ்சாமி :) .அந்த பாடல் குரல் இசை அந்த பெண் தீ யின் நடனம் எல்லாம் சூப்பர்ப் .உடனே எல்லாரும் கவர் சாங் என்று  அந்த பெண்ணைப் போல் நடனமாட முயன்று கேவலப்படுத்தி இருக்குங்க :( . ஒய் திஸ் கொலவெறி பாட்டு இங்கே வெள்ளையர் மத்தியில் பிரபலமானது போல்  குக்கூ குக்கூ சீக்கிரம்  இங்கிலாந்து  பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கப்போகுது !!! 

இசையும் பாடலும் நம்மோடு பின்னிப் பிணைந்தவை .இசை கேட்கும்போது  பலவிதமான உணர்வுகளை நம்முள் ஏற்படுத்தும். கொஞ்சம் காலமாக vj  தொலைக்காட்சியின் அபார பாட்டுக்கார் :) நிகழ்ச்சியை பார்க்கின்றேன் சிலருக்கு என்னே குரல்வளம் என்று  அதிசயிப்பேன் . ஆனால அந்த ஜட்ஜுகள் ஒருவரை மட்டும்  சொல்லிவச்சாப்ல ப்ரீ பிளான்ட் ஆக  ப்ரொமோட் செய்றாப்ல தோணும் சில நேரம். 

மேலும் இது போட்டி இதில் எமோஷனுக்கு அதிகம் முக்கியத்துவம் தந்து  பார்வையாளர்களை எமோஷனலா தாக்கி சிலருக்கு ஒட்டு போட வைக்கிறாங்களோன்னும் தோணும் . ஒரு எபிசோடில் எப்பவும் நல்ல பாடும் ஒருவர் அன்று சுமாராத்தான் பாடினார் ஆனா அன்று ஸ்பெஷலா  வந்த ஜட்ஜ்  அவரை ஆஹா ஓஹோன்னு கண்ணீர் மல்க  நா தழுதழுக்க புகழ்ந்தார் . அவர் ரிபீடடா பாராட்ட அந்த புதிதாக மணமான போட்டியாளர்   டமால்  டமால்னு அவர் காலில்  விழுந்து வணங்க கூடவே போட்டியாளரின் புது மனைவியும்   அவரின் காலில் விழ ..ஹேய் செம காமெடி :) 

                                                                             


சரி  இசைக்கு வருவோம் நமக்கு மட்டுமல்ல பல செல்லங்களுக்கு இசை ஒரு அருமருந்து .ஒரு முறை அப்படிதான் எதோ யூ டியூபில் ஒரு பாடல் ஆட்டோ பிளேயில் வந்தது //பாருருவாய //.. இனிமையா இருந்தது ,உடனே  படத்தை தேடி பார்த்தேன் படம் மனதில் ஒட்டவில்லை இவ்ளோ இனிய பாடல் அந்த படத்திலேனு தோணினது .

10  நிமிஷத்துக்கு மேல் பார்க்கவில்லை ஆனா  எங்க மல்ட்டிக்கு அந்த குரலும் இசையும் என்னமோ செஞ்சிடுச்சோ தெரியல ஒரே உருண்டு பிரண்டு .அடுத்த பாட்டு இளையராஜாவின் சிம்பொனி தேவாரப்பாடல் :) அதற்கும்  ஒரே எமோஷனல் ஆகிட்டா :) பூனைகளும் இசைக்கு மயங்கும் என்பதை அறிந்தேன் அதீஸ் கூடஎப்பவும் பூஸ் ரேடியோவிலேயே இருப்பாங்க இல்லையா :)))) . இப்போ ஜெஸியும் மல்ட்டியும் அதீஸ் பேலஸ் சேனலை போட்டதும் அதீஸ் குரலுக்கு     அசையாம இருப்பாங்க :) .அதீஸ் நேயர் விருப்பம் உங்க சேனலில் ஒரு பாடல் பாடி வெளியிடுங்க :))))))))  

பதிவுலகில் பாடல்களை தேடி பதிவிடும் இருவரால்  ,தெரியாத அறியாத நாம் பிறப்பதற்கு முன் வெளிவந்த  பாடல்களெல்லாம் அறியமுடிகிறது :) அந்த இருவரிலொருவர் ஸ்ரீராம் இன்னொருவர் அதீஸ் பேலஸ் உரிமையாளர் மியாவ் :)  ஹஆஹாஆ :)

                                *****************************************************


40 comments:

 1. ஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ... இல்லையோ?:))

  ReplyDelete
  Replies
  1. ல்லல்ல்ல்ல்ல்ல் யின்னு சொல்லலை :) நீங்கதான் firstttt 

   Delete
 2. //நல்ல குரல்வளம் என்பது உண்மையில் இறைவன் கொடுத்த வரம் :)//

  யூ மீன்:)) அதீஸைப்போல:)) ஹா ஹா ஹா... நான் தான் இன்று வீடியோவில் பாடுறேனே அயகாக:)) ஹா ஹா ஹா .. நான் வீடியோல பாட முன் நீங்க போஸ்ட் எழுதியிருப்பீங்கள்.. அதெப்பூடி தலைப்பு எனக்குப் பொருந்துது ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்ன்:)) பாட்டைக் கேட்டு எல்லோரும் கலைக்க முதல்:))

  ReplyDelete
  Replies
  1. அதுதான் பாருங்க இந்த போஸ்ட் ரெண்டு நாள் முன்னேயே எழுதினேன் :) intuition :))) 

   ///பாட்டைக் கேட்டு எல்லோரும் கலைக்க முதல்:))//
   கலைக்கறதுக்கு அவங்க  அலைவான்னு செக் பண்ணுங்க :)))))))))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   அது அலைவ்:) என்பதைக் கண்டுபிடிக்க நேக்கு ஒரு நாள் ஆச்ச்ச்ச்:)).. அவசரமா.. அலைவாங்க:)) எனும் அர்த்தத்தில படிச்சு.. அவ்ளோ நல்லாவா பாடுறேன் எண்டெல்லாம் ஓசிச்சனே ஹா ஹா ஹா:))

   Delete
 3. //அப்புறம் கவனித்ததில் நான் பாடும் போதெல்லாம் உதைப்பா ஆனா பேசும்போது அமைதியா இருப்பா !!!! //
  இப்பவும் இது தொடருமே:)).. நான் வீட்டில பாடினால்.. ஒரு செல்ல முறைப்பான பார்வை வரும் என்னை நோக்கி:)) எனக்கு இதெல்லாம் டோண்ட் கெயார்:)) ஹா ஹா ஹா என் வழீஈஈஈஈஇ தனீஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈ:))

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ் :) என்னால் அடி  உதைலாம் தாங்க முடியாது :) எனக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கு  உண்ண .பேச மட்டும் வாயை திறக்கலாம் 

   Delete
  2. ஆஆஆஆஆஆ அனைத்தும் உண்ண வாய் திறக்கலாமோ?:)) சமோசா?:))

   Delete
 4. உண்மைதான் குரல் இனிமையோ இல்லையோ.. சிலருக்கு சிலரின் குரல் நன்கு பிடித்துப் போய் விடுகிறது,

  //அதீஸ் நேயர் விருப்பம் உங்க சேனலில் ஒரு பாடல் பாடி வெளியிடுங்க :)))))))) //
  ஆவ்வ்வ்வ் என் சனலை இழுத்து மூட வைக்க:) ஐடியா ஆரம்பம்ம்ம்மாகிட்டுது:)) கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. சேசே வியூஸ் இன்க்ரீஸ் ஆக ஐடியா தந்தேன்பா 

   Delete
 5. //பதிவுலகில் பாடல்களை தேடி பதிவிடும் இருவரால் ,தெரியாத அறியாத நாம் பிறப்பதற்கு முன் வெளிவந்த பாடல்களெல்லாம் அறியமுடிகிறது :) அந்த இருவரிலொருவர் ஸ்ரீராம் இன்னொருவர் அதீஸ் பேலஸ் உரிமையாளர் மியாவ் :) ஹஆஹாஆ :)//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் ஹஹ்ஹா அந்த அழகான ஒரு சோடி கண்கள் பாட்டு கேட்டே மலைச்சேன் தெரியுமோ :))

   Delete
  2. அதைக் கேட்கும்போதெல்லாம் நான் சொர்க்கம் போய் மீள்வேன் தெரியுமோ இப்பவும்:))

   Delete
 6. இசையைப் பற்றிய நல்ல பதிவு.

  இசைக்கு மயங்காதவர் எவர்?

  ReplyDelete
  Replies
  1. யெஸ்ஸ்ஸ் :) பாருங்க நீங்களே ரிப்பீட்டடா மயங்கி இருக்கீங்க :))))

   Delete
 7. இசையைப் பற்றிய நல்ல பதிவு.

  இசைக்கு மயங்காதவர் எவர்?

  ReplyDelete
  Replies
  1. எதற்கு இரண்டு வாட்டி சொல்லி இருக்கிறார்?   ரொம்ப மயங்கி விட்டாரோ?

   Delete
 8. இசைக்கு மயங்காதவர்கள் எவரும்மில்லை! பாடல்கள் தான் வேளைப்பழுவினை போக்குகின்றது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ,நூற்றுக்கு நூறு உண்மை 

   Delete
 9. எனக்கு என்னவோ ரிப்பீட் மோட் எல்லாம் பிடிக்காது.  ஒரு பாட்டை ஒரு தரம் கேட்டால் மறுபடி கேட்க இரண்டு நாட்களாவது ஆகவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா நான் என்ஜோய் எஞ்சாமியை ஒரே நாளில் 20 டைம் கேட்டேன் :) அப்புறம் பாருருவையாவை 10 தரத்துக்கு மேல் கேட்டேன் 

   Delete
  2. எனக்கு படங்களில் ரிப்பீட் பிடிப்பதில்லை, இருப்பினும் சிலது ரிவியில் போட்டால் பார்த்ததுண்டு மீண்டும்.

   ஆனால் பாட்டு.. ஹையோ அது சொல்லவே முடியாது.. எத்தனையோ பாட்டுக்கள் ரிப்பீட்டில ரிப்பீட்டோ ரிப்பீட்டில கேட்டதுண்டு..
   >இந்த வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்...
   >அழகான ஒரு ஜோடி கண்கள்
   >நான் தேடும் செவ்வந்திப்பூவிது
   >அடி என்னடி உலகம்
   >செந்தாளம் பூவில் வந்தாடும்..
   >மீன் கொடித் தேரில்...

   இது போதுமோ இன்னும் வேணுமோ.. இவை எல்லாம் பல நூறு தடவைகள் கேட்டது.. இதை விடப் பலது சில நூறு தடவைகள் கேட்டது இருக்கு ஹா ஹா ஹா..

   Delete
 10. பூனைகளும் பாடலுக்கு மயங்கும் என்பது ஆச்சர்யம்தான்.  எப்படிக் கண்டுபிடித்தீர்கள் அதை?  அதுவும் குறிப்பாக இந்தப் பாடலுக்குதான் அது மயக்குகிறது என்று எப்படித் தெரிந்தது?

  ReplyDelete
  Replies
  1. பொன்னார் மேனியனே போனில்தான் கேட்டுட்டிருந்தேன் ..லேண்ட்லைனில் கால் வர மொபைலை தரையில் வச்சிட்டு போய் வந்து பார்த்தா மல்ட்டி போனை கட்டி பிடிச்சிட்டு உருளுது .:) அப்படிதான் அதீஸ் வாய்ஸ் கேட்டாலும் நெளிஞ்சி வளைஞ்சி உருளும் .அது பூனைகளின் குணம் எது விருப்பமோ அதை பார்த்து இப்படி தலையை முட்டி பிளாட்டா விழுந்து கட்டிப்பிடிக்கும் 

   Delete
  2. //அப்படிதான் அதீஸ் வாய்ஸ் கேட்டாலும் நெளிஞ்சி வளைஞ்சி உருளும்//

   ஆஆஆஆஆஆ அடுத்து அப்போ கட் cat ரெசிப்பீஸ் போடப்போறேன்ன்:))

   Delete
 11. பாடல்கள் எப்போது வந்தால் என்ன?  நமக்கு பிடித்திருந்தால் கேட்க வேண்டியதுதான்.  நானே நான் பிறப்பதற்கு முன்னால் வந்த இளையராஜா பாடல்களை எல்லாம் தேடித்தேடிப் போடவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் :) எனக்குதான் படங்கள் பற்றி தெரியல ..ஆமா இளையராஜா எப்போ பிறந்தார் ??

   Delete
 12. கல்யாணத்திற்கு அப்புறம் மாமி பாடும் பாடலை கேட்கவே நேரமில்லை ஹும்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) ட்ரூத் உண்மையாவா ?? :)) நீங்களும் பாடுவீங்களா :) அவங்ககூட 

   Delete
 13. இசை பற்றிய பதிவு சிறப்பு. உங்க மகள் பாடியிருப்பதை பகிர்ந்து கொள்ளுங்களேன். என்னாது? அதிரா பாடிக்கொண்டே சமைக்கிறாரா? கேட்டு விட்டு சொல்கிறேன். எங்கள் வீட்டிலும் எல்லோரும் நன்றாகப் பாடுவார்கள். நான் மட்டும்... ஹும்... ..((  என் மகள் சிறுமியாக இருந்த பொழுது  ஒரு முறை நான் பாடிக் கொண்டிருந்தேன். என் மகள்,"அம்மா , ப்ளீஸ் ஸ்டாப்" என்றாள், நான் கேட்காமல் தொடர்ந்து பாடினேன். அவள்," அம்மா, பா..டா..த.., நன்னா இல்ல" என்றாளே பார்க்கணும். 

  ReplyDelete
  Replies
  1. அப்போ நம்ம குரல் உலகிற்கு அறிமுகமாகாததன் காரணம் நம்ம பொண்ணுங்க தானா ??? :)))நான் தொலைவில் இருந்து ரெக்கார்ட் செஞ்சேன்கா .நெக்ஸ்டைம் அருகில் இருந்து ரெகார்ட் செய்றேன் .

   Delete
 14. கொஞ்சம் உச்சஸ்தாயில் பாட ஆரம்பிச்சேன் ://

  அதுதான் சர்ச் கொயரில் சேர்ந்து உச்சஸ்தாயில் பாடி இருக்கிறார் பெண்.
  குக்கூ குக்கூ தலைவெட்டி பாடல் இப்போது பேரனுக்கு பிடித்த பாடலாக போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா :) எனக்கில்லாத குரல் அவளுக்கிருக்கு அதில் சந்தோஷமே .உங்க பேரனுக்கும் அந்த பாட்டு பிடிச்சிருக்கா :))

   Delete
 15. //பூனைகளும் இசைக்கு மயங்கும் என்பதை அறிந்தேன் அதீஸ் கூடஎப்பவும் பூஸ் ரேடியோவிலேயே இருப்பாங்க இல்லையா :)))) . இப்போ ஜெஸியும் மல்ட்டியும் அதீஸ் பேலஸ் சேனலை போட்டதும் அதீஸ் குரலுக்கு அசையாம இருப்பாங்க :) .அதீஸ் நேயர் விருப்பம் உங்க சேனலில் ஒரு பாடல் பாடி வெளியிடுங்க :)))))))) //
  எல்லா உயிரினமும் இசைக்கு மயங்கும். தாவரங்களும் , புழு பூச்சிகளும் இசைக்கு மயங்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்க்கா இசை தெய்வீகத்தன்மை கொண்டது நம்மை ஆட்கொள்ளும் சந்தோஷப்படுத்தும் 

   Delete
 16. பல செல்லங்களுக்கு இசை ஒரு அருமருந்து//

  இசை நல்ல மருந்து , அருமருந்து தான் செல்லங்களுக்கு மட்டுமல்ல. என் போன்றவர்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்க்கா .எப்போ நேரம் கிடைக்குதோ அப்போல்லாம் .அமர்ந்து ரிலாக்ஸ்டாக பாட்டு கேளுங்க 

   Delete
 17. கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
  இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
  அதன் உயிரசதை அசைவதே - என்றும் மன நாதத்தில்...

  உயிர்களின் சுவாசம் காற்று,
  அந்த காற்றின் சுவாசம் கானம்,
  உலகே இசையே... ஏ...
  ஏந்திர வாழ்கையின் இடையே,
  நெஞ்ச ஈரத்தில் புசிவதும் இசையே,
  எல்லாம் இசையே... ஏ...
  காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
  கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
  தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
  அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
  யுத்த தளத்தில் தூக்கம் கலைந்து,
  கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

  இசையோடு வந்தோம்...
  இசையோடு வாழ்வோம்...
  இசையோடு போவோம்...
  இசையாவோம்...

  ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்... இசையாலே எனது புதிய நாளை, நீ இன்று திறந்தாய்...

  இன்னிசை நின்று போனால் என் இதயம்,
  நின்று போகும் இசையே... உயிரே...
  எந்தன் தாய்மொழி இசையே,
  என் இமைகள் துடிப்பதும் இசையே,
  எங்கும் இசையே,
  மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
  கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
  ஐம்புலங்கள் எந்தன் இருப்பு,
  செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
  நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
  ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

  இசையோடு வந்தேன்...
  இசையோடு வாழ்வேன்...
  இசையோடு போவேன்...
  இசையாவேன்...

  ReplyDelete
 18. நான் சொல்ல வந்ததை அன்பு தனபாலன் சொல்லிவிட்டார்.
  ஆமாம் இசைக்கு ஏது காலம். மனம் எதில் லயிக்கிறதோ
  அதைக் கேட்டு மகிழ வேண்டியது தலையாய
  கடமை. அன்பு ஏஞ்சல் நீங்கள் சொல்லி இருப்பதால்
  அந்த'எஞ்சாய் எஞ்சோய்'' பாடலைக் கேட்டுப்
  பார்க்கிறேன்.
  விஜய் டிவி யில் நல்ல பாடகர்கள் வந்தாலும்,
  சிலரை அவர்களே உச்சத்துக் கொண்டு போய் விடுவார்கள்.
  ஜெசியும் மல்ட்டியும் கேட்க்கும்
  பாடல்கள்
  உண்மையில் நன்றாகத் தான் இருக்கும்.

  மகள் பாடுவது அதுவும் சர்ச்சில் பாடுகிறாள் என்றால்
  மிகவும் மதிப்புக்குரிய விஷயம்,
  நலமுடன் இருங்கள் அன்பு ஏஞ்சல்.

  ReplyDelete