அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Thursday, March 04, 2021

குறும் பூ :) 🌸🌺🌷🌹

 குறும் பூ :)  🌸🌺🌷🌹

மழலைகளின் குறும்பும் ,செல்லங்களின் குறும்பும் எப்பவும்  அலுக்காதவை .அவர்கள்தான் மனதில் எவ்வித  கள்ளமும் இன்றி அப்படியே இயல்பாய் குறும்பை வெளிப்படுத்துவார்கள் .அப்படி குறும்பாய் அரும்பாய் கரும்பாய் இனித்த சில தருணங்களை இன்று பகிர்கிறேன் :)

                                                                            


கொரோனா காலகட்டத்தில் பலர் ஒர்க் அட் ஹோம் என்று வீட்டிலேயே இருப்பதால் செல்லங்களுக்கு கொண்டாட்டம் வீட்டிலிருந்து ஜூம் மீட்டிங்கில் வேலை செய்வோருக்கும் படிப்போருக்கும்தான் மிக கஷ்டம் :) எங்க வீட்டில உள்ள இரண்டு நாலுகால்களும் மகள் ஜூம் வழியே லெக்சர்  லெசன் படிக்கும்போதுதான் வேண்டுமென்றே கணினியின் முன்னே செல்வார்கள் அதிலும் ஜெசி கொஞ்சம் அதிகமாகவே குறும்பு .

மல்ட்டி மகள் மடியில் அமர்ந்தவாறு வேடிக்கை பார்க்கும் ஒருமுறை லெக்சரருடன் பேசிட்டிருக்கும்போது ஜெசி கணினியில் அவர் முகத்தை கையால் தொட்டிருக்கு :).இவர்களை  ரூமை விட்டு வெளியே கதவை சாத்தினாலும் இருவரும் சேர்ந்து கதவை பரபரன்னு சுரண்டி பெரும் சத்தம் எழுப்புவாங்க :) ஒருமுறை மகள் மடிக்கணினியில் அசைன்மென்ட் பாதி எழுதி கீழே எதற்கோ வந்திருக்கா அப்போ எதோ ஒன்று அதன் மீது நடந்து எக்கசக்க நீண்ட வரிகளை சேர்த்து டைப்பியிருக்கு :) செல்லங்களுக்கு வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் அவங்களோடதுன்னு ஒரு நினைப்பு :) 

                                                                               


சமீபத்தைய அதீஸ் பேலஸ் அப்டேட் :) இது அசைவ ப்ரைட் ரைஸ் :)

How to make Prawn and Egg Fried Rice in half an hour | very easy method | இறால் முட்டை ஃபிரைட் ரைஸ்

https://www.youtube.com/watch?v=9sKW8GPOaz8

***********************************************************************************


மீண்டும் செல்லங்களின் குறும்புகள் தொடர்கிறது :))

கீழே இரண்டு காணொளிகளை இணைத்துள்ளேன் :)


ஜூம் டீச்சிங் லெசனில் ஆசிரியை படும் பாட்டை அனைவரும் ரசிப்பீங்க :) 

                                                                            


அடுத்த வீடியோ வெதர் ரிப்போர்ட்டர் படும் பாடு :))


                                                                              


***********************************************************************************

அவருக்கு பெரிய தலை 😄😄😄😄😄😂😂😂😂 :)))

=============================================


ஆங்கிலத்தில் உள்ள சொற்களை அப்படியே தமிழில் மொழி பெயர்க்க இயலாது அப்படி பெயர்த்தா நம் விழி பிதுங்கிடும் அர்த்தம் எக்கசக்க ஏடாகூடமா வரும் .மகளுக்கு தமிழ் படிக்க மிகவும் விருப்பம் .சின்ன வயதில் ///இ // வார்த்தையில் அவளது தமிழ் பயணம் அடாவடியாக நிறுத்தப்பட்டது :) அது சுழி திருப்பி எழுத முடியலைன்னு கோபப்பட்டு எழுத மாட்டேன்னுட்டா .அப்போ 8 வயதில் எழுதிய சில வார்த்தைகள் :)  

                                                                            பிறகு சமீபத்தில் போன வருடம் ஷொப்பிங் லிஸ்ட் எழுதினா நான்  எழுதியதை பார்த்து தானும் எழுதினா அதுதான் இது .


                                                                                


இப்பவும் சில பல வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பா .தமிழ் பாடல்களை ரசித்து கேட்கிறா அதைவிட மலையாளம்  ஹிந்தி பாடல்களையும் ரசிக்கிறா :) இசை நல்ல இருக்காம் . அப்படி மாறா பாடல்களில் ஒரு வரி அழகான காற்றே ..அப்படியென்றால் என்னன்னு கேட்டாள்  அதுவும் எங்க மகள் வில்லங்கமா தனித்தனியா கேட்டா அழகான மற்றும் காற்றே இரண்டையும் பிரிச்சி கேட்டா சொன்னேன் .

பலநேரங்களில் இப்படி தனித்தனி வாசகங்களில் வம்பில் மாட்டியிருக்கிறேன் 

அப்படி ஒருநாள்  big headed .....big தனியா ஹெட் தனியா கேட்டா நானா தனித்தனியா சொன்னேன் இரண்டையும் தானே தமிழில் மொழி பெயர்த்துட்டு ஒருவர் பெயரை சொல்லி அவருக்கு பெரியத்தலை என்றாள் !!!!!!!!!!!!!!!!!!!!! கொஞ்சம் அதிர்ந்து என்னம்மா சொன்னிங்கன்னு கேட்டால் // ஹி இஸ் big headed // தமிழில் சொன்னேன்மா  என்றாள் :)))))))))) மிக மிக முக்கியம் .

                                                                         ஒரு வருஷமா அனைவ ரும் விரும்பியோ விரும்பாமலோ இந்த முக கவசங்களை அணிகிறோம் .துணியால் ஆன ரீசைக்கிள் ரீயூஸ் செய்யக்கூடியவை மிக நன்று ஆனால் மருத்துவமனைகளில் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்து ரெயிலில் செல்வோர் அனைவரும் இந்த ஒருமுறை பயன்படுத்தும் மாஸ்க்கை அணிந்து செல்கிறாரகள் .அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்திய பின் அப்படியே ரோட்டில் வீசிடராங்க .இன்றும் கூட ரோட்டில் குறைந்தது 15 மாஸ்குகளை பார்த்திருப்பேன் அவை  மழைநீரோடு கடலுக்கு சென்று பெரும் பாதிப்பை ஏற்கனவே ஏற்படுத்தியாச்சு தயவுடன் வீசி குப்பையில் எரியுமுன் படத்தில் காட்டினபடி எலாஸ்டிக்கை வெட்டிட்டு வீசுங்க .இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்க .


***********************************************************************************


50 comments:


 1. ஹலோ ஹலோ நான் முதலா அல்லது அதிராவா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ட்றுத்துக்கு என்னா ஒரு பயம்:)).. நீங்கதான் இம்முறை அதீஸ் அல்ல:))

   Delete
  2. ஹலோ :) வாங்க வாங்க :)) நீங்கதான் முதல் வருகை .அதனால் உங்களுக்கு அதிரா செய்த முட்டை ராட்டு  fried ரைஸ் :)))) கூச்சப்படாம எடுத்துக்கோங்க ட்ரூத் 

   Delete
 2. நாய் அல்லது பூனைக்குட்டிகள் இல்லாத குடும்பம் நிறைவு பெற்ற குடும்பமாக இருக்காது என்பது என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்கு நூறு உண்மை ட்ரூத் ..எனக்கு சிலநேரம் தோணும் நாமும் பூனையாய் மாறி அதுங்களோட விளையாடணும்னு :)) அவ்ளோ அழகு குறும்பு 

   Delete
  2. எனக்கென்னவோ அந்த மாதிரி எண்ணமே வருவதில்லை. இங்க மத்தவங்க லிஃப்ட்ல கூட்டிக்கிட்டு வரும்போதும் அதை நான் விரும்புவதில்லை.

   Delete
  3. சின்ன வயதில் கூட உங்க வீட்டில் மாடு எதுவும் வளர்த்ததில்லையா ? .ஒருவேளை நாங்க வளர்ந்தது இப்படிப்பட்ட சூழலினாலோ என்னவோ பழகிடுச்சி :) இன்னொன்றும் சொல்லணும் நிறையபேர் சொல்லி கேள்வி   குறிப்ப மதுரைகாரங்களும் நாரோயில்காரங்களும் அதிகமா அனிமல் லவ்வர்ஸாம் :) நான்தான் ரெண்டும் கலந்த ஆளாச்சே :)   இன்னொன்று முக்கியமா சொல்லணும் உங்களைப்போல் மனநிலை இருப்பது மிக மிக நல்லது .ஆனால பாருங்க இப்போ என்னால் எந்த வதையும் நினைச்சும் பார்க்க முடியாதது  ரொம்ப  இளகிய மனசு ஆகிடுச்சி

   Delete
 3. யூடியுப் பிரபலம் வருவதற்கு முன்பு நான் வந்துட்டேன் போல ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அவுக ரெசிப்பி செய்றதில் பிஸியாம் :) 

   Delete
 4. //ஜெசி கணினியில் அவர் முகத்தை கையால் தொட்டிருக்கு :).//

  எங்களுக்குத்தான் படிப்பது பிடிக்காதென நினைச்சேன்:)) நாலுகால் செல்லங்களுக்கும் பிடிக்காதுபோல:)) அதனாலதான், முகத்தை தொடவில்லை, போதும் ஓஃப் பண்ணிட்டு ஓடிடுங்கோ என தள்ளியிருக்கு அவரின் முகத்தை ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹாஹா :) அதுக்கு அவுங்க போட்டிருந்த கண்ணாடில ஒரு கண்ணு

   Delete
 5. செல்லங்களுக்கு வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் அவங்களோடதுன்னு ஒரு நினைப்பு :) //

  நீங்கவேற, பொருட்கள் மட்டுமில்லை, வீட்டிலிருக்கும் மனிசர்கூட, அவர்களின் சேவண்ட் எனத்தான் நினைக்கினம் ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மியாவ் எங்க ஜெசி வெளில போயிட்டு வந்தா அவ paws நான் துடைக்கணும்னு கேப்பா :)

   Delete
 6. மகள் 8 வயசில எழுதினதுதான் அழகா இருக்குது:)).. எங்கட வீட்டிலயும் 6,7 வயசுவரை நிறைய எழுதினார்கள் ஆனா, தமிழ் படிக்க வாங்கோ எண்டால், இரண்டு கண்ணாலயும் அருவி ஓட ஓடத்தான் வந்திருந்து எழுதுவார்கள், அதனால அதைப் பார்க்க முடியாமல் என் கணவர் சொல்லிட்டார், இப்படிக் கஸ்டப்படுத்திச் சொல்லிக்குடுப்பது நல்லதல்ல பின்பு கொஞ்சம் வளர்ந்ததும் பார்க்கலாம் விடுங்கோ என, அப்படியே விட்டதுதான்:)).. அவர்கள் தமிழில் கதைக்கிறதே, நாம் செய்த பெரும்பாக்கியம் என நினைக்கிறேன் நான்:).

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் .எங்க வீட்லயும் இவரால்தான் அந்த அருவி ஓட்டம் காரணமா தமிழ் நிறுத்தப்பட்டது .ஆனா அழகா பேசுறா .இதுபோதும் எனக்கு :) .உங்க வீடியோவெல்லாம் மேடம் பார்க்கிறாங்க தெரியுமோ :) இந்த இறால் ரெசிப்பி அவளுக்கு காட்டினேன் :) 

   Delete
 7. ///அதுவும் எங்க மகள் வில்லங்கமா தனித்தனியா கேட்டா அழகான மற்றும் காற்றே இரண்டையும் பிரிச்சி கேட்டா சொன்னேன் .//
  ஹா ஹா ஹா உங்களுக்காகவே கரெக்ட்டா உங்கட மகள் பிறந்திருக்கிறா:))..

  ReplyDelete
  Replies
  1. அதைஏன் கேட்கறீங்க .என்னை நோக்கித்தான் வில்லங்க கெல்வேஸ் பாயும் .அவங்கப்பாகிட்ட கேட்கவே மாட்டா :)

   Delete
 8. // மிக மிக முக்கியம் .//
  ஹா ஹா ஹா எங்கட நாடுகளில், அப்படியே கழட்டி வீசும் மாஸ்க் எல்லாம் பெறுக்கி எடுத்துப்போய், கழுவிக் காயவிட்டு, புதுசுபோல விற்கிறார்களாம். ஒரு வீட்டில் 100 மாஸ்க்குகள் வெய்யிலில் காயந்ததைப் பார்த்துப் பொலீஸ் பிடித்தார்களாம்.. அதுகககவும் இனி வெட்டிப் போட்டே எறியோணும்:))

  ReplyDelete
  Replies
  1. அட கோமாளிகளா இதில்தான் ஏமாற்றுறதுன்னு இல்லையா சே வேதனை .இந்த எலாஸ்டிக் விஷயத்தை எனக்கு சொன்னது குட்டி மேடம் ஜுனியர் தங்க மீனாக்கும் .நான் யோசிச்சேன் நாம் பின்லே தானே போடறோம்னு .இன்னிக்கு வெளியே நடந்தப்பத்தான் தெரியுது மக்களின் அட்ராசிட்டிஸ் 

   Delete
 9. வீடியோக்கள் இரண்டும் ஹா ஹா ஹா.. உண்மைதான் இந்த லிக்டவுனால செல்லங்களுக்குச் செல்லம் கூடிவிட்டது, எப்பவும் எல்லோரும் வீட்டில் இருப்பதால்.. தங்களோடு பொழுதைப்போக்குங்கோ எனச் சொல்கிறார்கள்.. எங்கட டெய்சிப் பிள்ளைக்கும்தான்...

  //சமீபத்தைய அதீஸ் பேலஸ் அப்டேட் :) இது அசைவ ப்ரைட் ரைஸ் :)//
  ஹா ஹா ஹா :))

  ReplyDelete
  Replies
  1. பார்க்க நல்லா இருக்கு மியாவ் அந்த ரைஸ் . எங்க வீட்டில் ரெண்டுபேருக்கும் செய்யப்போறேன் சண்டே :)

   Delete
  2. யேசப்பா அந்த இரண்டு பேரையும் நீதானப்பா காப்பாற்றனும்

   Delete
  3. ஆமாம் ட்ரூத் :) நான்கூட டெய்லி pray பண்ணிட்டுதான் சமைக்கிறேன் :) கூட்டு பிரார்த்தனைக்கு பலன் உண்டு ..நீங்க பிரார்த்திச்சுட்டே இருங்க 

   Delete
 10. நீங்கள் சொல்வது போல செல்லங்கள் அவை நாலு காலாயினும் இரண்டு காலாயினும் மிகவும் சுவாரஸ்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. இறக்கை உள்ளவையும்தானே ஸ்ரீராம் :) ஒரு கிளி ஜூம் மீட்டிங்கில் பேசுபவர் தலைக்கு வந்துது .நிறைய காணொளிகள் இருக்கு நான் இரண்டுதான் இணைத்தேன் 

   Delete
 11. டீச்சரை விட வெதர் ரிப்போர்ட் படிப்பவர் பாடு சிரமம்!  ஆனால் இவர்களுக்கு கோபமே வரவில்லை பாருங்கள்.  எரிச்சல் கூட படவில்லை.  சுவாரஸ்யமாய் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா  பாருங்க எவ்ளோ பொறுமையா இருக்காங்கன்னு .இன்னொன்னு இருக்கு இது லைவ் ஷோ கொஞ்சம் முகத்தை சுண்டினாலும் அனிமல் ப்ரொடக்ஷன்  கேஸ் போடுவாங்க 

   Delete
  2. ஓ...   அப்படி வேற ஒண்ணு இருக்கா!

   Delete
  3. https://www.youtube.com/watch?v=dsiVVKlwEw4


   watch this video :)

   Delete
  4. ஒயிட் ஹவுஸ் மாதிரி இங்கே டவுனிங் ஸ்ட்ரீட் ப்ரைமினிஸ்டர் வீட்டில் பூனை இருக்கு அது பேர் larry ஒருநாள் அது எதோ டல்லா இருந்ததுன்னு உடனே rspca க்கு யாரையோ ரிப்போர்ட் பண்டாங்க :) டேவிட் கேமரூன் அதை ஹாப்பியா வச்சிக்கலைன்னு உடன் ப்ரைமினிஸ்டர் பாராளுமன்றத்திலே ப்ரூவ் பண்ணார் போட்டோவுடன் அவருக்கு லாரியை பிடிக்கும்னு :)

   Delete
  5. https://www.youtube.com/watch?v=7fGXmwjjYP0

   Delete
  6. இரண்டு காணொளிகளும் ரசித்தேன்.

   Delete
 12. மகளுக்கு தமிழின்மேல் ஆர்வம் வந்திருப்பது பாராட்டத்தக்கது.  அப்படியே தமிழ் புத்தகங்கள் எல்லாம் படிக்கக் கற்றுக்கொடுங்க...!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹாஹா இனிமே படிக்க டைம் இல்லை .காதுவழி பேச்ச்சு புரிந்தா போதுமென்ற நிலை 

   Delete
 13. மாஸ்க்..  உண்மைதான்..   தினசரி நான் இரண்டு மாஸ்க் பயன்படுத்துகிறேன்.  அவற்றை கட்செய்தே குப்பையில் போடுகிறேன்.

  ReplyDelete
 14. குழந்தையில் எழுத்து அழகு.

  நாய்க்கே அந்த டீச்சர் நடத்தும் பாடம் போரடிக்குதுன்னா பசங்களுக்கு எப்படி இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நெல்லைத்தமிழன்.சின்னத்தில் மிக அழகா இருந்தது எழுத்து அப்புறம் 6 ஆம் வகுப்பில் அந்த writers callus வந்தது அதில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டா பல்கலைக்கழகம் போகும்வரை இந்த பிரச்சினை இருந்தது .ஹாஹா பின்னே அதுங்களுக்கு சுவாரஸ்யம் தேவைப்படுது சும்மா கணிணிப்பார்த்து பேசினா அதான் டிஸ்டர்பி  பண்ணிருக்கு 

   Delete
 15. எங்க பெண்ணுக்கும் "இ" எழுத வராது. மாற்றி எழுதுவாள். பையர் கிட்டேயே வரமாட்டார். பேசுவது மட்டுமே தமிழ். உங்க பெண்ணின் கையெழுத்து அழகு. ஜூமில் எல்லாம் எந்த நிகழ்ச்சிகளும் பார்த்தது இல்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகளுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த ஆப் தரவிறக்கிப் பார்க்கணும் என்பதால் அந்தப் பக்கமே போகலை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா :) எனக்கு சுழி போட்டு எழுத மிகவும் பிடிச்ச எழுத்து இ  ஒரு லேடி ஆங் மீரா பக்தமீரா அமர்ந்திருக்கும் தோற்றம் மாதிரி அழகான எழுத்து  அது .உங்க பணவீக்கம் இ வரெல்லையா :) இப்போ ஒரே உற்சாகத்தோடு வரிக்கு வரி தமிழ் அர்த்தம் கேட்கிறா அதுவே சந்தோஷமாயிருக்கு .zoom  மீட்டிங்களாம் இங்கே படிப்புக்கு முக்கியம்க்கா 

   Delete
 16. செல்லங்கள் அடிக்கும் லூட்டி சுவாரசியம். மாஸ்க் பற்றி நீங்க சொல்லி இருப்பது சரியானது. ஆனால் எல்லோரும் கடைப்பிடிப்பது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. யெஸ்ஸ்ஸ் :) நானா ரசிச்சிட்டே இருப்பேன் அவற்றை .
   மாஸ்க் விஷயம் வேதனை .கட்டாயம் அனைவரும் பொறுப்புணர்வோடு இருக்கணும் .மிக நன்றிக்கா 

   Delete
 17. செல்லங்களின் குறும்பும் எப்பவும் அலுக்காதவை//

  உண்மை , பார்த்து கொண்டே இருக்கலாம்.

  மகளின் தமிழ் எழுத்து அழகாய் இருக்கிறது.

  இரண்டு காணொளிகளும் நன்றாக இருக்கிறது.

  //செல்லங்களுக்கு வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் அவங்களோடதுன்னு ஒரு நினைப்பு :)//

  குழந்தைகள் போல தானே அவைகளுக்கு எல்லாம், எல்லோரும் சொந்தம் தான்.
  சூட்கேஸ் மேல் அமர்ந்து இருக்கும் செல்லம் அழகு.

  மாஸ்கை நீங்கள் சொன்னது போல் செய்ய வேண்டும் அது தான் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அக்கா அது எங்க வீட்டு குறும்பு செல்லம் ஜெஸி 
   thanks akka

   Delete
 18. அதிரா சைவம் போடும் போது பார்க்கிறேன்.
  ஆனால், ஊசிக்குறிப்புக்கு பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அக்கா இன்னிக்கு சைவம்தான் லன்ச் பாக்ஸ் ரெசிபி அடுத்த புது போஸ்டில் இணைத்திருக்கிறேன் 

   Delete
 19. வணக்கம் மேடம் எப்டி இருக்கிங்க? இன்னைக்கு லைட்டா 'மனதோடு மட்டும்' எட்டி பார்த்தேன் , நம்ம மக்கள் இன்னும் எழுதுறாங்களா என்ன என்று லிஸ்ட் எடுத்தால் அவ்ளோ சந்தோசம் .

  மகளின் தமிழ் எழுத்து கவிதை மாதிரி இருக்கு. you tube வேற இருக்கா, சொல்லவே இல்ல. இனி தொடர்ந்து உங்களை கவனிக்கணுமே :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கௌசல்யா நலமா .லைட்டா  எட்டிபார்த்தீங்களா :) வெயிட்டா எட்டி பார்த்திருந்தா போஸ்ட் வந்திருக்குமே அங்கே :)வலைப்பூக்கள் நான் எழுதகாரணமே மனசுக்கு ரிலாக்ஸ் .அதனால் தொடர்ந்து இங்கேயே உலவிக்கொண்டிருப்பேன் :)

   Delete
  2. :-) உங்க போஸ்டை தான் வெய்ட்டா எட்டி பார்த்திட்டேன் போல, அதுதான் அங்கேயும் ஒரு பழைய போஸ்ட் தூசி தட்டப் பட்டு இன்று பப்ளிஷ் செய்யப்பட்டு விட்டது. :-))))

   என் போஸ்ட்க்கு திட்டுக்கள் ஏதும் வந்தால் அதற்கு காரணம் நீங்களே :-))))

   Delete