இன்றைய பதிவில் பொழுதுபோக்கு ,மனசுக்கு கொஞ்சம் எனர்ஜி தரும் உணவு ,பழைய படங்கள் ,அதீஸ் பேலஸ் அப்டேட் ,
Panangkizhanku|யாழ்ப்பாணத்துப் புழுக்கொடியல் செய்வது எப்படி |உடலின் இன்சுலினை அதிகரிக்க|பனங்கிழங்கு
நாம் உற்சாகமாயிருந்தா எதிராளிக்கு கொஞ்சம் பேலன்ஸ் தவறும் .
ஆனால் நாம் கொஞ்சம் வீக்கா இருந்தது வெளிக்காட்டினாலோ அல்லது உள்ளிருக்கும் பயத்தை வெளிக்காட்டினாலோ அவ்வளவுதான் எதிராளி நம்மை அடிச்சி சாய்ச்சிடும் .இந்த வீக்னஸ் எனக்கு கொஞ்சம் உண்டு அதனால் அதிகமாக பிரச்சினைகள் தலைதூக்குவதுமுண்டு .இதை தவிர்க்க என்ன செய்யலாம்னு யோசித்ததில் எதேச்சையாக ரீசண்டா கண்ணில் பட்டது மேலுள்ள படம் மற்றும் வசனம் இப்போதெல்லாம் நானும் ரவுடிதான் எதையும் தாக்கும் இதயம்தான் என்கிற ரேஞ்சில்தான் நடமாட முயற்சிக்கிறேன் .நீங்களும் செய்து முயன்றுவிட்டு உங்கள் அனுபவங்களை சொல்லுங்க :) குறிப்பாக உங்கள் மனதை வீக்காக்கும் விஷயங்கள் என்னவென்றும் சொல்லுங்க அந்த விஷயங்கள் எல்லாருக்கும் இருக்கான்னு சேர்ந்து ஆலோசிப்போம் :)
*********************
கணினியில் தேவையற்றவற்றை குப்பையில் தள்ளிகொண்டுவந்தேன் அப்போ இந்த படங்கள் கிடைத்தது .
stilt walking ..இது ஒருவகை கலை .இங்கே ஒவ்வொரு சிட்டியிலும் நல்ல சம்மர் நேரம் விடுமுறை நாட்களில் ஆண்கள் பெண்கள் தங்கள் கால்களில் இப்படி கட்டையை கட்டிக்கொண்டு அனாயசமாக ரோட்டில் நம்மருகே நடந்து வருவாங்க கைகளில் juggling செய்துகொண்டு சர்க்கஸில் கோமாளிகள் வருவதுபோல் இவங்க ஆங்காங்கே நடப்பாங்க .இதெல்லாம் நல்ல வெயில்காலத்தில் பள்ளி விடுமுறை நாளில் கட்டாயம் பார்க்கலாம் .அப்படி ஒரு கோடையில் நாங்கள் பக்கத்து சிட்டிக்கு போனப்போ இந்த உயர்ந்த மனுஷிகளை பார்த்தப்போ எடுத்த படம் .
இந்திய கடவுளர்களையும் இந்த உயரக்கட்டையில் ஏற்ற முயற்சித்திருக்காங்க ஆனா தொப்பை பிள்ளையாரை பார்த்த கண்ணுக்கு இந்த ஒல்லி வீக் பிள்ளையாரை ஏற்க மனம் வரவேயில்லை கர்ர்ர்ர்ர்ர்
நன்றி கூகிள்
இவுக சேலைகட்டிய ஸ்டில்ட் வாக்கர்ஸ் :)
நன்றி கூகிள்
இந்த நடையைப்பற்றி மேலும் சில தகவல்கள் இங்கே
பிரான்சில் ஒரு பகுதியில் பைன் மரங்கள் காடுகள் உள்ள பகுதியில் ஆடுமேய்ப்பவர்கள் இந்த ஸ்டில்ட் குச்சிகளை கட்டிட்டு காட்டுக்குள் ஆண்களும் பெண்களும் ஆடு மேய்க்க போவார்களாம் .எவ்ளோ வசதியா இருந்தா அந்த பெண்கள் அந்த குச்சியில் ஏறிகிட்டு knitting கூட செய்திருக்கிறாங்க :) நினைக்கும்போதே கண்ணு வேர்க்குது .
அடுத்த படம்
===============
போன வருஷம் லாக்டவுன் தளர்த்தியப்போ போன இடத்தில பார்த்தது :) ஆனால் காபி குடிக்க முடியலை பூஸார்களுடன். .அட்வான்ஸ் புக்கிங் செய்யணுமாம் :)))
இப்போ ஒரு quiz :) இது என்ன பொருள்னும் சமையல்குறிப்பின் பெயர் என்னவென்றும் கண்டுபிடிங்க .
அந்த சமையல் செய்முறைக்குறிப்பின் பெயர் சரியா சொல்றவங்களுக்கு அதீஸ் பேலஸில் இருந்து மஷ்ரூம் பகோரா அவங்க வீட்டு தட்டுடன் வழங்கப்படும் :))
அதீஸ் பேலஸ் தட்டு ,பகோராவெல்லாம் பார்க்க இங்கே தட்டுங்க
அப்புறம் சமீபத்தைய அப்டேட் அதீஸ் பேலஸிலிருந்து :)
Panangkizhanku|யாழ்ப்பாணத்துப் புழுக்கொடியல் செய்வது எப்படி |உடலின் இன்சுலினை அதிகரிக்க|பனங்கிழங்கு
புதிய காணொளி https://www.youtube.com/watch?v=qqJZeZmNedE
2019 இல் நண்பி ஒருவருடன் Norman castle ஒன்றிற்கு போனப்போ எடுத்த சில படங்கள் :)
உள்ளே அவங்க ஆடை அணிகள் , படுக்கை, மெத்தை, டைனிங் டேபிள், துடைப்பம் ஆடை ஆபரணம் அவங்க வேட்டைக்கு சென்று சுட்டு எடுத்துவந்தவை என்று பல இருந்தன ஆனாலும் இந்த மண் உபகரணங்கள் எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது
அதோட பணியாளர்களின் தங்கும் அறை படுக்கும் மெத்தை மற்றும் அவங்க துணிமணிகளை வைக்கும் ஒரு தொங்கும் அமைப்பு ரொம்பவே பிடிச்சதால் அந்த படங்களை இணைக்கிறேன்
இந்த கட்டிலில் எப்படி படுக்க முடியும்னு கிறுகிறுத்து மண்டை :)
=========================================================================
ஆஆஆஅஅ மனசுக்கு எனர்ஜி ஆமே அதென்ன அது என ஓடி வந்தால், அதீஸ் பலஸ் பனங்கிழங்கு போகுதே:)) ஹா ஹா ஹா ஹையோ வந்த வேகத்தில கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டேன்.. எல்லோரும் கல்லெடுக்கப் போகினமோ எனும் பயத்தில:))
ReplyDeleteவருக வருக அதீஸ் பேலஸ் ஓனர் அவர்களே :) உண்மைதானே பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் இருந்து கிடைப்பது .பனைமரம் எங்க ஸ்டேட் மரமாகும் தெரியுமோ :)அதோட இன்சுலின் பிரச்சினைக்கு தீர்வாகும்னு சொல்றீங்க இது மனதுக்கும் உடலுக்கும் உற்ச்சாக மூட்டும் விஷயமல்லவா :)
Deleteமுக்கியமான விஷயம் அந்த பனங்கிழங்கை அழகா இரண்டா பிளந்து கம்பியில் கோர்த்தீங்க .
Delete//நாம் உற்சாகமாயிருந்தா எதிராளிக்கு கொஞ்சம் பேலன்ஸ் தவறும் //
ReplyDeleteஹா ஹா ஹா இதைப் படிச்சதும் பலமாகச் சிரிச்சிட்டேன்:)) அது என்னமோ உண்மைதான்..
//ஆனால் நாம் கொஞ்சம் வீக்கா இருந்தது வெளிக்காட்டினாலோ அல்லது உள்ளிருக்கும் பயத்தை வெளிக்காட்டினாலோ அவ்வளவுதான் எதிராளி நம்மை அடிச்சி சாய்ச்சிடும்//
ஹா ஹா ஹா ஆனா நாங்கதான் எப்பவும் பில்டிங் ஸ்ரோங்கூஊஊஊ பேஸ்மெண்ட் வீக்கூஊஊஉ:)) ஆனா பேஸ்மெண்ட்டைக் கண்டுபிடிக்க முடியாது எதிராளிகளால்:))
சேம் பின்ச் விழுந்தாலும் அடிபடாத மாதிரியே நடிக்கணும் நடக்கணும் :)) எல்லாம் அனுபவம்தான் .
Delete//நானும் ரவுடிதான் எதையும் தாக்கும் இதயம்தான் என்கிற ரேஞ்சில்தான் நடமாட முயற்சிக்கிறேன்//
ReplyDeleteஹா ஹா ஹா இதே நானும் ரவுடிதான் ரேஞ்சிலதான், மீயும் ஊ ரியூப் திறந்தேன்ன்:)).
அப்போ அடுத்தது இன்ஸ்டாவா மியாவ் :)))))))))
Deletewe both are oing to participate in vijay tv cook with comali :)))))))))))))
//குறிப்பாக உங்கள் மனதை வீக்காக்கும் விஷயங்கள் என்னவென்றும் சொல்லுங்க அந்த விஷயங்கள் எல்லாருக்கும் இருக்கான்னு சேர்ந்து ஆலோசிப்போம் :)//
ReplyDeleteஎனக்கு என்னை ஆரும் ஏமாத்திட்டாங்க எனத் தெரிஞ்சால் தான் கொஞ்சம் அப்செட் ஆகிடுவேன், எனக்கு முகத்துக்கு நேராக எது சொன்னாலும் உடனே கஸ்டப்படுவேன், ஆனா பறவாயில்லை உண்மையாகச் சொல்கிறார்கள் என பின்பு மனம் அமைதியடையும், ஆனா முகத்துதி பண்ணுபவர்களை நம்பிவிடுவேன், பின்பு அது பொய்யான துதி எனத் தெரிய வரும்போது, சே இப்படி ஏமாற்றி விட்டார்களே.. நம்பினேனே எனக் கஸ்டப்படுவேன், ஆனா இதுவும் கடந்து போகும் என மனதை தேற்றிடுவேன்.. பின்ன எங்களை நாங்களேதான் தேற்றோணும்..
நெல்லைத்தமிழனோ இல்ல ட்றுத் ஓ இல்ல கீசாக்காவோ வந்து தேற்றிவிடுவினம் என எதிர்பார்க்கக்கூடா ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:))
முகத்துதிலாம் ஒரு காலத்தில் நானும் நம்பி ஏமாந்திருக்கேன் :) இப்போ நான் எதற்கும் அசையாப்புலி :)வேலையிடத்தில் பாராட்டோ பாராட்டுனு சொல்வார் ஒரு மேனேஜர் ஆன்னா அவ்வளவும் பொதுவெளியில் சொல்றதில்ல :) அப்போதான் கண்டுபுடிச்சேன் என்னிடம் அதிகமா வேலை வாங்க அவங்க காரியத்தை சாதிக்கதான் இப்படி புகழறாங்கன்னு :))இனிமே ஏமாறமாட்டேனெ
Deleteட்ரூத்துக்கு ஜூலியா ராபர்ட்சுடன் கடலை போடவே டைம் பத்தலையாம் :) இதில நம்மையெல்லாம் அவர் எப்படி தேத்தறது .கீதாக்கா வருவாங்க ஆனா அவங்க கம்பியூட்டர் பாடாய் படுத்துதாம் :) நெல்லைத்தமிழன் ஸ்ரீராம் வருவாங்க :))))))))))) என நம்புவோம்
Delete//அப்படி ஒரு கோடையில் நாங்கள் பக்கத்து சிட்டிக்கு போனப்போ இந்த உயர்ந்த மனுஷிகளை பார்த்தப்போ எடுத்த படம் .//
ReplyDeleteஇது பொதுவா அனைத்து நாடுகளிலும் இருக்குதென நினைக்கிறேன்.. விசேச ஊர்வலங்களில் நடக்கும்.. நம்மூர்ப் பொய்க்கால் குதிரைபோல...
யெஸ்ஸ்ஸ்ஸ் கார்னிவலில் போவாங்க சும்மாவே கோடையில் உசரமா நடந்து நம்மை அதிர வைப்பாங்க
Delete//இந்திய கடவுளர்களையும் இந்த உயரக்கட்டையில் ஏற்ற முயற்சித்திருக்காங்க //
ReplyDeleteஹா ஹா ஹா ஹையொ இது எங்கின.. அங்குதான் நடந்ததோ? இந்தப் பிள்ளையார் ஏதும் வேறு கிரகத்தில இருந்து வந்திருப்பார்போலும்:)).. எனக்கும் குண்டு வண்டிப் பிள்ளையாரைத்தான் பிடிக்கும்:))
devon சிட்டில னு நினைக்கிறன் இது கூகிள் படம் :)
Deleteஅதுதானே அந்த பிள்ளையாருக்கே அழகு அந்த தொப்பைதான் .இப்படி மெலிஞ்சு போன பிள்ளையாரை பார்த்த எலியே கேஸ் போடும் அவங்க மேலே
//இவுக சேலைகட்டிய ஸ்டில்ட் வாக்கர்ஸ் :) //
ReplyDeleteஓ நான் ஏதோ கீழே தெரிவது நிழலாக்கும் என நினைச்சேன்ன்.. அந்த எண்டில இருக்கும் கோல்ட் சாறி அது நானு:))
ஹாஹாஆ :) நான் இந்த குச்சி விளையாட்டுக்கு வரலப்பா :) ஏற்கனவே கால் ஆடோ ஆடுனு ஆடுது மீக்கு
Delete//பூஸார்களுடன். .அட்வான்ஸ் புக்கிங் செய்யணுமாம் :)))//
ReplyDeleteஆஆஆஆவ்வ்வ் எவ்ளோ மருவாதை:)) இனிமேல் அதிராவுடன் பேசவும் அட்வான்ஸ் புக்கிங் செய்யோணும் ஜொள்ளிட்டேன்:))
நான் நினைச்சேன் இதைப்பற்றி எழுதும்போதே நீங்க இப்படி கமெண்ட் போடுவீங்கன்னு :)))))))))))
Deleteஅதெப்பூடி இதில மட்டும் நீங்கள் நினைச்சது நடக்குது?:)).. அதிராவுக்கு இப்ப ஒரு டயமன்ட் நெக்லஸ்,, கட்டிலுக்குக் கீழ குனிஞ்சு பார்க்கேக்க, பக் பண்ணி இருக்கோணும் என நினையுங்கோ பார்ப்பம் நடக்குதோ எண்டு:))
Delete//இப்போ ஒரு quiz :) இது என்ன பொருள்னும் சமையல்குறிப்பின் பெயர் என்னவென்றும் கண்டுபிடிங்க//
ReplyDeleteparsnips???
//மஷ்ரூம் பகோரா அவங்க வீட்டு தட்டுடன் வழங்கப்படும் :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..
பக்கோறா வாங்க வரும்போது தட்டு எடுத்து வரவும்:))
//parsnips???//
Deletewrong answer :)))))))))
அரண்மனை என்றாலே அழகுதானே:)) அதனாலதான்.. அதீஸ் அரண்மனை:)) ஹா ஹா ஹா:))..
ReplyDeleteபலஸ் மிக அழகாக பராமரிக்கிறார்கள்.
உள்பகுதியை மியூசியம் போல அழகாகப் பேணுகிறார்களே... பரீஸ் நெப்போலியனின் அரண்மனை பார்த்த நினைவு வருது...
பல்சுவைக் கதம்பம் அழகு.. நன்றிகள் பல.
இந்த castle செம அழகு நான் நிறைய படங்கள் எடுத்தேன் மீதியை காணோம் :) எஸ் முக்கியமா பராமரிப்பு அவசியம் .இங்கே வெளிநாட்டில் இவற்றுக்கு முக்கியத்துவம் தராங்க .அனைத்துக்கும் நன்றி மியாவ்
Deleteபுன்னகையின் வலிமை பெரிதுதான். சமயங்களில் புன்னகைக்கவே வரமாட்டேன் என்கிறது!
ReplyDelete'நாம் உற்சாகமாயிருந்தா' பாராவில் "மேலுள்ள படம்" என்று சொல்லி இருக்கிறீர்கள். படத்தைதான் காணோம்! ஒருவேளை புன்னகைதான் அதுவோ!
ஸ்டில்ட் வாக்கிங் அனாயசமாக செய்கிறார்கள். பார்த்தாலே பயமாயிருக்கிறது.
ReplyDeleteஆமாம், பிள்ளையார் இளைத்து சுகரில் அடிபட்டவர் போல இருக்கிறார்!
ஹாஆ ஹாங் .மீ விழுந்து புரண்டு laughing :) பாவம் பிள்ளையார்
Deleteஇது என்ன என்று கேட்டிருப்பது பனங்கிழங்கு போல தெரிகிறது. மேலும் இங்கிருக்கும் லின்க்கைப் பிடித்து அதிஸ் பிளஸ் செல்லவேண்டும். எனக்கு இன்னமும் நோட்டிபிகேஷன்கள் வரவில்லை.
ReplyDeleteபுகைப்படங்கள் ரசிக்க வைத்தன.
ஹாஹஸா :) இல்லை அது வாழைக்காய் மெழுகுப்பிரட்டி :) திருமதி சேஷன் அவர்களின் ரெசிப்பின்படி செஞ்சேன்
Deleteவணக்கம் ஏஞ்சல். நலமா? நீங்கள் எ.பி.,எண்ணங்கள்(கீதா அக்கா வலைத்தளம்) தவிர வேறு தளங்களுக்கு வருவதாக தெரியவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது மற்ற தளங்களுக்கும் வாருங்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவு சுவாரஸ்யம். உயர்ந்த மனுஷிகள் அழகு. ஒல்லி பிள்ளையார்... நோ!
காணொலிகள் பார்த்து விட்டு சொல்கிறேன்.
பிள்ளையாருக்கே அழகே அந்த சிமிட்டும் குறும்புகண்களும் அழகான தொந்தியும்தானேக்கா :) அதெல்லாம் இல்லாம பிள்ளையாரை ஏற்கவே முடியாதது .ஸ்டில்ட் வாக்கில் தொப்பை வைச்சா அது வெயிட் இன்க்ரீசாகும்ன்னு தொப்பையை அவாய்ட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறன் :)) மிக்க நன்றிக்கா
Delete//இப்போ ஒரு quiz :) இது என்ன பொருள்னும் சமையல்குறிப்பின் பெயர் என்னவென்றும் கண்டுபிடிங்க .//
ReplyDeleteவழைக்காய் காரக்கறி போல் இருக்கிறது.
அந்த மஷ்ரூம் பகோரா வித் வெள்ளித்தட்டு கோமதி அக்காவுக்கு பார்சல் :)ஆமாங்க்கா .வாழைக்காய் மெழுகுபிரட்டி .எனக்கு மிகவும் பிடித்த சேஷன் ஐயா அவர்களின் மனைவி அவள் விகடனுக்கு செய்த ரெசிப்பி .ஸ்கான் செய்து போடறேன் அடுத்த பதிவில்
Deleteaaaaaaaaaaaaahhhhh grrrrrrrrrrrrr:))
Deleteஆஹா வெள்ளித்தட்டுடன் பகோரா மகிழ்ச்சி.
Delete//இது ஒருவகை கலை .இங்கே ஒவ்வொரு சிட்டியிலும் நல்ல சம்மர் நேரம் விடுமுறை நாட்களில் ஆண்கள் பெண்கள் தங்கள் கால்களில் இப்படி கட்டையை கட்டிக்கொண்டு அனாயசமாக ரோட்டில் நம்மருகே நடந்து வருவாங்க கைகளில் juggling செய்துகொண்டு சர்க்கஸில் கோமாளிகள் வருவதுபோல் இவங்க ஆங்காங்கே நடப்பாங்க//
ReplyDeleteஅனயசமாக ரோட்டில் நடப்பது வியப்பாக இருக்கிறது. அத்தனை பேரும் இந்த கலை விரும்பி படிப்பார்கள் போலும்!
இங்கு திருவிழாவில் உயரமான கட்டைகாலில் நடப்பார்கள். அதில் நடக்க தனித்திறமை வேண்டும். க்லையை படிக்க வேண்டும்.
ஒரு காணொளி பார்த்தேன் கட்டை காலோடு அனாயசமாக இருவர் சண்டை செய்வார்கள் பறந்து பறந்து குதித்து சண்டையிடுவார்கள்.
ஆமாம்க்கா இங்கே பெரும்பாலும் பல சிட்டிகளில் அரசர் சோல்ஜர் ,,மற்றும் பிரபல அரச கேரக்டர்ஸ் அந்த காலத்து ஷேக்ஸ்பியர் காரெக்டர்ஸ் எல்லாம் போல் உடை அணிந்து மேக்கப்பிலாம் போட்டு அங்கங்கே இருப்பாங்கக்கா
DeleteNorman castle படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநீல நிற தட்டானும் நன்றாக தெரிகிறது.
அதிரா சமையல் பதிவு பார்க்கிறேன்.
இங்கே நிறைய castles இருக்குக்கா எல்லாம் குட்டி குட்டி குறுநில மன்னர்களதுன்னு நினைக்கிறன் எல்லாம் உயரத்தில் அமைந்த castles
Deleteமஷ்ரூம் பகோராவும் ஊசிக்குறிப்பும் அருமையாக இருக்கிறது.அதிராவின் குரல் கேட்க இனிமை.
ReplyDeletethanks akkaa :)
Deleteவித்தியாசமான படங்கள் அருமை...
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteமஷ்ரூம் பகோடா எனக்குப் பிடிக்குமானு தெரியலை. மஷ்ரூமே சாப்பிடுவதில்லை. அதிராவின் சமையல் பதிவைப் பார்க்கணும். மறந்து போய் விடுகிறது. நாம பலவீனத்தை வெளிக்காட்டிக்கொள்வது கொஞ்சம்கஷ்டம் தான். தைரியமா இருக்கிறாப்போல் காட்டிக்கவாது செய்யணும்.
ReplyDeleteவாங்க கீதாக்கா .மஷ்ரூம் சுவை காரமா மிளகு போட்டு செய்து பாருங்க நல்லா இருக்கும் .ஆனால் நான் ப்ரைட் ரைஸ் இல்லேன்னா ரைஸ் நூடுல்சுக்கு வதக்கி சேர்ப்பேன் .மஷ்ரூம் மஞ்சூரியன்லாம் சாப்பிட்டதில்லை .பேபி மஷ்ரூம் நல்லா இருக்கும்க்கா
Deleteஇந்தக் காலில் கட்டை கட்டிக்கொண்டு நடப்பது அப்படி ஒன்றும் எளிதுனு தோணலை. காலில் வலி வருமே! ஆனால் ஆர்ச்சி/ஆர்க்கி(?) காமிக்ஸில் வரும் குள்ளமான பையர் மாணவிகளைத் தன் பால் ஈர்க்க இப்படிக் கட்டையை வைத்துக் கட்டிக்கொண்டு உயரமானவராகத் தோன்றும்படி வருவார். காமெடிக்கு நல்லா இருக்கும். உண்மையிலும் இப்படி நடப்பது இப்போத் தான் தெரியும்.
ReplyDeleteஅஆவ் நீங்க படிச்சிருக்கீங்களா ஆர்ச்சி ..நான் டிங்கில் சந்தமாமா மட்டும்தான் படிச்சிருக்கேன் .ஆனால் மூர்மார்கெட்டில் ஒரு பழைய ஆர்ச்சி பைண்டட் புக் கிடைச்சது அது எங்கே போச்சோ தெரிலா .இங்கே உண்மையில் நடப்பதை பார்த்து மீக்கு மயக்கம் வராத குறை .பின்னே அவ்ளோ உயரமா இருக்காங்க :)
Deleteஆர்ச்சி/ஆர்க்கி(?) ஒரு பெரிய கலெக்ஷனே இருந்தது. எங்க பெண்ணுக்கும், பையருக்கும்விடாமல் பல வருஷங்கள் வாங்கிக் கொடுத்திருந்தோம். இப்போத்தான் பெண்ணின் சிறிய மகள் அப்புவுக்குப் பலவற்றைக் கொடுத்தோம். லிட்டில் ஆர்ச்சியை விட எனக்கு டீன் ஏஜ் ஆர்ச்சி தான் பிடிக்கும். இப்போவும் அவ்வப்போது மனது மாறுதலுக்காகவே ஆர்ச்சி காமிக்ஸில் மிகுந்திருக்கும் ஒன்றிரண்டைத் திரும்பத்திரும்ப வாசிப்பேன்.
Deletecastle pictures நன்றாக இருக்கின்றன. அந்தக் காலம் என்பதே தனி தான். நீலத்தட்டான்கள் இருப்பதையும் இன்னிக்குத் தான் அறிந்தேன். இங்கே பச்சை நிறமே, பச்சை நிறமே தான் நிறைய!
ReplyDeleteநீலத்தட்டான்ஸ் சிவப்பு தட்டான்ஸ்லாம் இருக்குக்கா அன்னிக்கு நூற்றுக்கணக்கில் இவை சுற்றிட்டு இருந்தன ஆனா ஒண்ணுகூட சரியா போஸ் கொடுக்கல
Deleteமிக அருமையான பதிவு அன்பு ஏஞ்சல். அது வாழைக்காய் மெழுக்குப் பிரட்டியா. எப்படி செய்வது என்று சொல்லுங்கள்.
ReplyDeleteமஷ்ரூம் சாப்பிடுவதில்லை மா.
அதன் தோற்றமே என்னைத் தள்ளிவிடும் மன்னிக்கணும்.
அதீஸ் பாலஸ் நன்றாக பார்க்கப்பட்டு விரும்பப் படவும் வேண்டும்.
வாழ்த்துகள்.
நாம் சிரித்தால் உலகமும் சிரிக்கலாம்.
உங்கள் கொள்கை நல்லபடியாக யோசிக்க வைக்கிறது.
வல்லிம்மா இந்த ரெசிப்பி திருமதி சேஷன் அவள் விகடனில் பகிர்ந்து இருந்தாரா .மிக சுவையா இருந்தது அப்படியே ஸ்கான் செஞ்சு போடறேன் அவங்க குறிப்பை
Deleteஸ்டில்ட்ஸ் பெண்கள் வெகு அழகு.
ReplyDeleteஇதுத் தனித்திறமை வேண்டும்.
கால்கள் வலிக்கத்தான் செய்யும்.
நம்மூர்த் திருவிழாக்களிலும் பெரிய பொம்மைகளைக் கவிழ்த்துக் கொண்டு நடந்து வருகிறார்.
சிறு வயதில் பயமாகவே இருக்கும்:)
ஆமாம் வல்லிம்மா இங்கே சிறு வயதில் இருந்தே சிலர் பழகறாங்களாம் .
Deleteநீலத் தட்டாங்களும், அந்தப் பழமை அரண்மனையும்
ReplyDeleteவசீகரம்.
நான் அவ்வாறு பார்த்ததே இல்லைமா. மிக நன்றி.
மிக்க நன்றி வல்லிம்மா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
Deleteஅழகான காட்சிகள் ...அனைத்தும் மிக அழகு ...
ReplyDeleteமிக்க நன்றிப்பா அனு
Delete