அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Tuesday, February 23, 2021

மனிதர்கள் பலவிதம் , மனங்களும் பலவிதம் .

 

நீண்ட நெடுநாட்கள் கழித்து நாங்கள் வாக்கிங் போனோம் .


                                                                           


குளிர் பனிப்பொழிவு எல்லாம் குறைந்து நல்ல வெதர் .     .நாங்க செப்டம்பரில் இருந்தே அந்த பக்கம் போகலை .இன்னிக்கு போனப்போ நிறைய மாற்றங்கள் மண் ரோடா இருந்த இடம் இப்போ தார் போட்டு சீரமைச்சு இருக்காங்க .

வாக்கிங் போகுமுன்னே ஒரு அப்டேட் :)


சரி எல்லாரும் போன வாரம் எங்க அதீஸ் பக்கம் யூ டியூப் சேனலை பார்த்து ரசிச்சிருப்பீங்க .இது இவ்வார அப்டேட் .

கேல் கீரை சுண்டல் மற்றும் சொதி 

                     https://www.youtube.com/watch?v=tKLLjctknAY

                                                  

இப்போ வாங்க நடப்போம் :)

                                                                புதிய பாதை :)


                                         இதுதான் அந்த பாதை   மேலிருப்பது                                                                                                    இப்போதைய காட்சி 

                                                    இது பழைய மண் பாதை     


                                                                                            

இதனால்   முதியோர் குறிப்பா   mobility scooters பயன்படுத்துவோருக்கும் ,

குழந்தைகளை பிராம்  புஷ் சேரில் கொண்டு செல்லும் பெற்றோருக்கும் நல்ல வசதி .  சுலபமா அவங்க வாகனத்தில் போகலாம் .பாதி தொலைவு போகும்போது நம்ம கோழித்தோழி ஹென் வீடு வந்தது . அவரைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன் பாகற்காயில் சிக்கனை கலந்து சூப்பாக்கி தந்தவர் :) போன வருடம் சந்தித்தப்போ அவரது மூத்த மகள் ஆக்ஸ்போர்டில் இன்டர்நெஷனல் law   படிக்க சீட் கிடைத்ததை சந்தோஷத்துடன்  சொன்னார் .அவர்கள் பற்றி நாங்க  பேசிட்டே போகும்போது  இனிய ஆச்சர்யம் எதிரில் பார்த்தால்  அவரின் இரண்டாவது மகன் நடந்து வந்தான் . உயரமாய் வளர்ந்து இருக்கான் இப்போ .எங்கள பார்த்து  ஓடி வந்து  அருகில் நின்று விசாரித்து பேசினான் :)

ஹீஹீ எங்களை அங்கிள் ஆன்ட்டின்னு கூப்பிடல்லை அது  இன்னும் சந்தோசம் :) .அக்கா ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டாளென்றும் பிறகு அம்மாவிற்கு புதிய லைஃப் பார்ட்னர் கிடைத்துள்ளார்னும் கூறினான் .

கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது எங்களது அன்பை அவரிடம் கூறுமாறு  சொன்னேன் .அந்தப்பெண் மிகவும் கஷ்டப்பட்டவர் இந்த பிள்ளைகள் மூத்தது  பெண்  3  வயது இந்த சிறுவன் 2 வயதிருக்கும்போது கணவர் கொடுமை தாளாமல் பிரிந்து தனியே பிள்ளைகளை வளர்த்து இப்போ பல வருடங்கள் கழித்து  தனது வாழ்க்கைக்கும் ஒரு நல்ல துணையை தேடியுள்ளார் . 

**********************************************************************************

இந்த கனவு உள்ளுணர்வு என்பது எத்தனை தூரம் உண்மையென்பது தெரியாது ஆனால் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் நம்மை பலகீனப்படுத்தும் என்பது மட்டும் 100 சதவீதம் உண்மை .

நான் போன வருடம் அப்போ ரெகுலர் வாக்கிங் போன நேரம் ஒரு நாள் இரவு தூக்கத்தில் ஒரு மண் சாலையில் வழுக்கி விழுறாப்ல கனவு கண்டேன் .அடுத்த நாள் அந்த பாதையில் போகும்போது இந்த 

                                                                              


ஸ்லோப் வந்ததா , குறுக்கு வழியில்  போக இது வசதி . கொஞ்சம்  விரைவில் போலாம்னு யோசிச்சேன்  அதான் அந்த யானைக்குட்டி காணொளி ஒன்று சமீபத்தில் வைரலாச்சே மண்சரிவில்   சறுக்கி விளையாடும் அது மாதிரி போலாம்னு நினைச்சேன் உடனே  என் கனவு நினைவுக்கு வந்துச்சா ஆசையை கைவிட்டேன் :)  எதுக்கு வம்பு :) 

***********************************************************************************

ஒவ்வொரு காதலும் ஒவ்வொருவிதம் நாமெல்லாம் யோசிப்போம் அப்பா அம்மா மிகவும் அன்பாக வளர்க்கும் பிள்ளைகள் அவர்கள் காதலில் விழும்போது நம்மூர் பெற்றோருக்குத்தான் அந்த ஆதங்கம்  ஏக்கம் இதெல்லாம் அதிகம்னு . ஆனா வெளிநாட்டிலும் இப்படித்தான் இருக்காங்கன்னு தெரியுது .சமீபத்தில்  சந்தித்த ஒரு பெண்மணி .அவருக்கு சுமார் 80 - 85 வயதிருக்கும் இந்த வயதிலும் மிக அழகு .ஆனால் மிக மோசமா மனம் பாதிக்கப்பட்டவர் .படுக்கையில் படுத்தே இருப்பார் எதையோ யோசித்தவாறு உணவு நீர் எதிலும் விருப்பமில்லை .

                            இந்த விட்டேற்றியான குணத்தின் காரணம் அவரது ஒரே மகள் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தது அதுமட்டுமின்றி மகளின் கணவன் அந்த மகளின் ஒரு போட்டோ கூட இந்த தாய்க்கு கிடைக்காமல் பண்ணியிருக்கிறார் ஒரு பொருள் கூட அவர் நினைவா இவரிடமில்லை .சிலர் மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமா இருக்காங்கன்னே  புரியலை :( . மகளின் திருமணத்தில்  ஆரம்பம் முதல் இவருக்கு விருப்பமில்லையாம் . மகள் இவருக்கு கொடுத்த ஒரு முத்து காதணியை காதில் அணிந்திருந்தார். என்னிடம் மிக சந்தோஷமா சொன்னார்  அது அவரது மகள்  வேலைக்கு போய் முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு  கிஃப்டா தந்ததாம் .அப்பப்போ காதை இறுக்க டைட்டா  பிடிச்சுக்கறார் .பிறகு தனது  ஒரே சகோதரி பற்றி சொன்னார்  .மிக சிறந்த நர்ஸிங் கல்லூரியில் படித்து வேலைக்கு சேர்ந்துள்ளார் .வேலைக்கு சேர்ந்து அங்கு மருத்துவமனையில் சந்தித்த ஒரு வெளிநாட்டு அரச குடும்ப வாரிசை காதலித்து சொல்லாமல் கொள்ளாமல்  வீட்டை விட்டு போனாராம் காரணம் அந்த அரச குடும்பம் வேறு நாடு இந்நாட்டினருடன் தொடர்பு கூடாததாம் .இதில் பரிதாபம் என்னனா இவர்களின் தந்தை மகளை ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் வீட்டுக்கு அழைத்து வருவாராம் வேலை முடிந்து .என்றாவது  தனது  மகள் தன்னிடம் வர மாட்டாளான்னு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ரெயில் நிலையத்தில் மாலை  6 முதல் இரவு 10 மணி வரை காத்திருந்து வீடு திரும்புவாராம் .இந்த சம்பவம் 60 ஆண்டுக்கு முன் நடந்தது .பிறகு தந்தை தாய்            மரித்து இப்போ இந்த பெண்மணிக்கே 85 கிட்ட வயதிருக்கும் 17 வயதில் போன தங்கையுடன் இதுவரை தொடர்பேயில்லை . சில பல  விஷயங்களை கேள்விப்படும்போது ஆண்களில் சிலர் இப்படி முசுட்டுத்தனமாக முன்கோபியாக குடும்பத்தைவிட்டு பெண்களை பிரிக்குமளவுக்கு இருக்கிறாரகளே என கோவமா வருது . 

சரி மற்றொரு பதிவில் சந்திப்போம் .


ஏஞ்சல் .

**********************************************************************************


                                                  

55 comments:

 1. அடடா என்னா இது என் கண்ணையே நம்ப முடியவில்லை:).. அடுத்தடுத்துப் போஸ்ட்:)) ஹா ஹா ஹா புதுவருடப் பலனோ:)).. இதே உற்சாகம் தொடரோணும்.. இடையில ஓஃப் ஆகிடக்குடா அதிராவைப்போல:))..

  ஹா ஹா ஹா வோக்கிங் போகும் அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம் அதீஸ் :) வருக வருக :) தினமும் போஸ்ட் போட ஆசைதான் :) கிடைக்கிற நேரத்தில் எழுதி வச்சதையெல்லாம் இங்கே வெளியிடப்போறேன் .அது off அல்லது on பட்டன் தொட[போறது நம்ம கைதானே :) அதனால் off பட்டனை டிசேபிள் செஞ்சுட்டேன் .
   //ஹா ஹா ஹா வோக்கிங் போகும்  // அஞ்சு அண்ட் கணவர் // அழகோ அழகு....இதென்ன புதுசா என்னை மாதிரி கு கு :) ஆகிட்டீங்க ஹாஹாஹா .முழுசா சொல்லணும் 

   Delete
 2. //சரி எல்லாரும் போன வாரம் எங்க அதீஸ் பக்கம் யூ டியூப் சேனலை பார்த்து ரசிச்சிருப்பீங்க .இது இவ்வார அப்டேட் .//

  அவ்வ்வ்வ்வ்வ்:)) இனி நான் விட்டாலும் என்னை அஞ்சு விடமாட்டா போல இருக்கே:)).. ஓ மை கடவுளே.. நான் நிறையக் கடனாளி ஆகிறேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. உங்க நெக்லஸை கொடுத்து கடனை அடைச்சிடுங்க. என்ன ஏஞ்சல் நான் சொல்லுறது சரிதானே?

   Delete
  2. ஹஹ்ஹா :) இதென்ன மியாவ்  கடன் அது இதுன்னு .இதுக்கு பதில் உண்மையை சொல்லனும்னா ஒரு பக்கம் எழுதி தீர்க்கலாம் ஆனா குப்பையை மனசில் வைக்கக்கூடாதுன்னு ஸ்ரீராம் ஒருக்க சொன்னாரா அதிலிருந்து மீ குட் கேர்ள் ஆகிட்டேன் .நமக்குள்ள என்ன மியாவ் கடன் அது இதுன்னு நாமென்னாப்டியா பழகறோம் .அந்த பச்சைக்கல் நெக்லஸ் மோதிரம் தந்துடுவீங்கதானே எனக்குதான் அது :)

   Delete
  3. //உங்க நெக்லஸை கொடுத்து கடனை அடைச்சிடுங்க. என்ன ஏஞ்சல் நான் சொல்லுறது சரிதானே?//
   ஹ்ஹஹ்ஹா :) பாருங்க ஒரே மாதிரி கமெண்ட் பண்ணியிருக்கோம் ஹை 5 ட்ரூத் 

   Delete
  4. //ஆனா குப்பையை மனசில் வைக்கக்கூடாதுன்னு ஸ்ரீராம் ஒருக்க சொன்னாரா//

   ஹிஹிஹி...   இது எப்போ?

   Delete
  5. அதாவது //மனிதமனம் நல்லவற்றை மறக்கும் கெட்டவற்றை மட்டும் மறக்காதுன்னு சொன்னீங்க :))))) ஒரு பின்னூட்டம் மயில் செய்தியில் :)))))))))))

   Delete
 3. ஆஆ அந்தப் பழைய பாதையையோ புதுசாக மாற்றியிருக்கினம்.. ஆனா நீங்க.. பழையதில் போகிற போதும், புதியதில் வருகிறபோதும் படமெடுத்திருக்கிறீங்க:)) மீ கண்டுபிடிச்சிட்டனே:) எப்பூடி என் கிட்னியா?:))

  இதில நீங்க தடக்கி விழுந்தால்:) அவ்ளோதேன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. தடுக்கி விழுந்தா பாதையில் யாரோ பெரிய பதுங்கு குழி வெட்டி வைச்சிருக்கிறதா நினைப்பாங்க

   Delete
  2. ஹஹ்ஹா எஸ் .
   /தடுக்கி விழுந்தால் //கர்ர்ர்ர் என் தூக்கம் போச் .

   Delete
  3. //Avargal UnmaigalFebruary 23, 2021 at 10:12 PM
   தடுக்கி விழுந்தா பாதையில் யாரோ பெரிய பதுங்கு குழி வெட்டி வைச்சிருக்கிறதா நினைப்பாங்க///

   சேசே ஒரு பிரண்டா நீங்க :) விழுந்தா எவ்ளோ வலிக்கும் தெரியுமோ அதுவும் விழுந்து விழுந்து எழும்பற எனக்குதான் தெரியும் அருமை பெருமை எருமை எல்லாம் :)

   Delete
  4. விழுந்தா வலிக்கும் தெரியுமா? பூமிக்கும் வலிக்கும் என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது. பாவம் பூமி

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

   Delete
 4. //இதனால் முதியோர் குறிப்பா mobility scooters பயன்படுத்துவோருக்கும்///

  மக்களே இது அஞ்சு தன்னைச் சொல்லவில்லையாக்கும்:)), ஆனா நீங்க அப்பூடி நினைச்சால்.. நான் ஒண்ணும் வாணாம் சொல்ல மாட்டேன்ன்:)) மாறிக்கீறி அஞ்சுவாக்கும் இப்பூடிப் போவது என நினைச்சிடப்போறீங்களோ என அண்டலைன் பண்ணிட்டேன்ன்:)).. ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் எப்படியாவது என்னை என் வயசை வெளிகாட்டணும்னு     உங்களுக்கு பெரிய ஆவல் .பரவால்ல என்னைவிட பெரியவங்க இப்படி கலாய்க்கும்போது சந்தோஷம்னுதேன் :)வாங்களேன் சேர்ந்தே வண்டியோட்டிட்டு போவோம் :)

   Delete
 5. இப்போ பலரைக் காண்பதே இல்லை நாம், அதனால பழையவர்களைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கும்...

  ///அதான் அந்த யானைக்குட்டி காணொளி ஒன்று சமீபத்தில் வைரலாச்சே மண்சரிவில் சறுக்கி விளையாடும் அது மாதிரி போலாம்னு ///

  ஆவ்வ்வ்வ் அது ஆப்புரிக்க:)) ஆனை சறுக்கினதைப்போல இங்கின, இங்கிலாந்து ஆனை:)) சறுக்கி, முழங்கால் எல்லாம் அடி பட்டுவிட்டதோ:)) ஹா ஹா ஹா அதனாலதான் டேவடைக் கிச்சின் லொக்டவுனில இருக்குதுபோல ஹையோ ஹையோ:))

  ReplyDelete
  Replies
  1. ஹை ஆசை தோசை அப்பளம் வடை .நானா தான் அலெர்ட் ஆகிட்டேனே .கனவு காப்பாத்திடுச்சு 

   Delete
 6. கடசிப்பரா.. மனதை என்னமோ பண்ணுது.. இப்படி எத்தனையோ கதைகள் இருக்கும்.. நம் காதுக்கு சிலதுதானே வருது... ஓகே நேக்கு நிற்க நேரமில்லையாக்கும்.. பிக்கோஸ்ஸ் மீ தான் இப்போ படுபிரபல்யமான ஊஊஉ ரியூப்பராஆஆஆச்சே:)) ஹா ஹா ஹா மி ஓடிடுறேன்:))

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா மியாவ் .பல விஷயங்கள் நெஞ்சை நெருடும் .ஆனாலும் பகிர்ந்தா மனசும் லேசாகும் .எனக்கு கவர்ந்தது அந்த அப்பாவின் அன்பு இந்த தாயின் அன்பு .ஓகே ஓகே நீங்க அடுத்த வீடியோ ரெடி பண்ணிடுங்க :)

   Delete
 7. Replies
  1. ஹலோ இட்ஸ் மீ :)) ஒண்ணுமில்ல ட்ரூத் சும்மா அடெல் மாதிரி பாடிப்பார்த்தேன் :) ப்ளீஸ் டோன்ட் ரன் 

   Delete
 8. மனிதர்கள் & மனமும் பலவிதம்

  ஆமென்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ..நீங்களும் பலரை பல்வேறு மனிதர்களை கடந்து வந்திருப்பிங்க    .ஆமென் ஆமென் 

   Delete
 9. அன்பு ஏஞ்சல், அருமையான பதிவு. நடக்கும் செல்லங்கள் மிக அழகு! எனக்கு என்னவோ. இந்தக் கனவுகளில் விதவிதமாக வரும் ஸ்டார் ட்ரெக் பார்ததால். அந்த வித விதமான மனிதர்கள் நேற்று சொப்பனத்தில்:)

  அதீஸ் மேடம் சீரியசாகப். பதிவிடுகிறார்களா.

  நல்ல தோழிகள் நிறைவாக வாழ ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா .செல்லங்கள் இங்கே இப்படி நடப்பதை நேரிலும் பார்க்கிறேன் வல்லிம்மா .ஆமாம் அதீஸ் மேடம் யூ டியூபில் கால்  பதித்தாச்சு .மிக்க நன்றிம்மா வருகைக்கு.

   Delete
 10. அடடே...  இவ்வளவு காலம் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமலா இருந்தீர்கள்?  இரண்டு பூனைகளும் நடப்பது ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் காலம் வேறு ஷிஃப்ட் அதில் நடக்க முடியாத போச்சு .இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆகி இல்லை ஆக்கி இருக்கேன் அதில் டைம் இருப்பதால்தான் இங்கே பதிவுகள் உங்கள்பக்கம் பின்னூட்டம்னு கொஞ்சமாச்சும் நேரம் கிடைக்குது .வேலையில் நடப்பது மட்டுமே எங்கள் வேலை :) கண்கொத்தி பாம்பா பார்த்துட்டே இருக்கணுமே :)

   Delete
 11. அதிரா பக்கம் சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு நோட்டிபிகேஷன் வரவில்லை.  இதேபோலத்தான் எல்கே மனைவி சேனல், ஆதிவெங்கட் சேனல்களும் நோட்டிபிகேஷன் வருவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அந்த bell ஐகானை க்ளிக் செஞ்சீங்களா ?அப்போதானே நோட்டிபிகேஷன் வரும் எனக்கு உடனே போனில் காட்டும் அதீஸ் அங்கே பதிவிட்டவுடன் 

   Delete
  2. அதைச் செய்யாமல் இருப்பேனா?  செய்தும் வருவதில்லை.

   Delete
  3. ஆஆஆ !!!ச்சர்யம் ..யு டியூபில் சைன் இந்த பண்ணித்தானே வச்சிருக்கீங்க அப்படியும் வரலையா 

   Delete
 12. கனவுகள் எனக்கும் விதம் விதமாக வருகின்றன.  சில ரொம்பவே குழப்புகின்றன.  பின்னர் காத்திருந்து அதன் தாக்கம் பின்னாளில் ஏதாவது வாழ்வில் தெரிகிறதா என்று பார்க்கிறேன் நானும்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா :)  எனக்கு அலர்ஜி தாக்கம் இருந்தா கனவு கொஞ்சம் அதிகமா வரும் .சேர்த்து வைங்க கனவுகளை :)

   Delete
  2. நேற்றைய  கனவில் என் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு டீச்சர்கள் தேரில் வந்து ஏதோ சொன்னார்கள்!!  என்ன அர்த்தமோ!

   Delete
  3. டீச்சர்கள் வந்தாக தேரில் வந்தாக ஆஆ ஹா ,கர்ணன்  மூவி  பார்த்திருப்பீங்க .இல்லைன்னா பெஸ்ட் ஸ்டூடன்ட் of year ---- க்கு சர்டிபிகேட் கொடுக்க வந்திருக்கலாம் 

   Delete
 13. சினிமாவில் வருவது போல இருக்கிறது ரயில்வே ஸ்டேஷனை சென்று காத்திருந்து வருவது..   சிலபேர் இப்படி இருக்கிறார்கள்தான்.  அவருக்கு இந்தத்தாய் மேல் என்ன வருத்தமோ...   அதேபோல அவர் சகோதரியை நிச்சயம் சீக்கிரமே சந்திப்பார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .பலவிஷயங்கள் அன்றாட வாழ்வில் நடப்பதைத்தான் சினிமாக்காரங்க சுட்டுடறாங்க :) யர்ரகன்டா இதுவும் ஒரு டிராமாவாகவோ சீரியலாகவோ இங்கிருந்தே கருவை எடுத்து போவாங்க .//அந்த ஒரு ஜோடி முத்து தோடு // டைட்டில் சூப்பரா இல்ல வருத்தமில்லை எல்லாம் பணம் மணி காசு ..அதை எடுக்கத்தான் இவ்ளோ பிரயத்தனம் 

   Delete
 14. வாக்கிங் போகும் செல்லங்கள் அழகு.
  பெற்றோர்களின் அன்பு மனதை கனக்க வைத்து விட்டது. மகளை இழந்த தாயின் சோகம் , மகளை தேடும் தகப்பனின் பாசம் இரண்டும் மனதை சங்கடப்படுத்தி விட்டது.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா .பெற்றோர் பிள்ளைங்க மேல் வைச்ச அன்பு மாறவே மாறதுக்கா ..இந்த மாதிரி வாத்துசெல்லங்களும் ஜோடிபோட்டு நடக்கும் .பார்க்க அழகா இருக்கும் .மிக்க நன்றிக்கா .அங்கே அமெரிக்காவில் ஸ்ப்ரிங் துவங்கியாச்சா ?

   Delete
 15. நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடம், அதிலும் பூசாருடன் சேர்ந்து நீங்கள் போனது இன்னமும் சந்தோஷம். :))))))உங்கள் தோழி ஹென் நிம்மதியான வாழ்க்கையைப் புது இணையுடன் வாழவும் வாழ்த்துகள். நீங்களும் அரண்மனைக்கிளியும் இதே நட்புடன் எந்நாளும் மகிழ்ந்திருக்கவும் வாழ்த்துகள். பாதை அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஆஆ இது எங்க வீட்டு பூஸார் :) க.பூஸார் :) ஹென்னை வாழ்த்தியத்துக்கு நன்றிக்கா .உண்மையில் பாவப்பட்ட பிள்ளை அது .பாதை இப்போ புதிதா செய்துருக்காங்க .மிக்க நன்றிக்கா

   Delete
 16. 85 வயதுத் தோழியின் துயரம் மனதைக் கலக்கிவிட்டது. உலகில் மனிதர்களின் கொடூரத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்க்கா ..இந்த வயதிலும் அத்தனை அழகு எ.அவர் சில க்ரீம்களுக்கு 70 களில் மாடலாக இருந்தவராம் .அன்போடு பேசினார் .இவர்கிட்டப்போய் எப்படி கொடுமையா நடக்கறாங்க பாருங்க அந்த மருமகன் 

   Delete
 17. அந்த 80 வயதுப் பாட்டியின் துக்கம் மிகப் பெரியது.
  பாவம் மன நோய் வராமலிருக்குமா.

  அடுத்தாற்போல் புதிதாகத் தன்வாழ்வைத் தொடங்கி இருக்கும் தோழிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  அதை அந்தப் பையன் நிறைவாகச் சொல்வது தான் விசேஷம்.
  அதையும் நீங்கள் நல்மனதோடு இங்கே பதிந்தது மன நிறைவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வல்லிம்மா .எப்படி ஓர் முதியவரிடம் இத்தனை கொடுமையா மனுஷரால் நடக்கமுடியுது கோவமா வருது.அதேதான் எங்கள் இருவருக்கும் மிகுந்த சந்தோசம் அந்த பையன் முகத்தில் இருந்த சந்தோஷம்தான் அவ்ளோ தெளிவா ஹாப்பியா பேசினான் 

   Delete
 18. 17 வயதில் காதலனை நம்பிப் பிரிந்த போன சகோதரி நல் வாழ்வு வாழ்வார் என்று நம்புவோம்.
  சில ஆண்கள் இப்படித்தான். என்ன ஆனாலும் மாற மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வல்லிம்மா .ஆனால் இன்னமும் தனது உறவுகளை பார்க்காமல் அவரால் எப்படி இருக்க முடிகிறது அதோடு 17 வயதில் எப்படி யாரையோ நம்பி பெற்றோர் உற்றாராய் விட்டு போறாங்க .புரியாத புதிர் .நலல இருக்கணும் நல்லா இருக்கட்டும் 

   Delete
 19. Replies
  1. வாங்க சகோ ..ஆமாம் பல நிகழ்வுகள் வேதனை தருவன தான் 

   Delete
 20. கதம்பமாக எழுதிட்டீங்க. நல்லது.

  1. புதிய லைஃப் பார்ட்னர்... விதவித கலாச்சாரம். கலாச்சாரங்களே, நம்ம வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு உதவுவதுதானே. நல்லா இருக்கட்டும்.
  2. நானும் நிறைய முறை, இரயிலிலிருந்து ஸ்டேஷனில் ஏதேனும் வாங்க இறங்கி இரயில் புறப்பட்டுச் செல்வதுபோல கனவு கண்டுள்ளதால், இரயிலிலிருந்து இறங்குவதற்கு மிகவும் யோசிப்பேன். அதிலும், இரயில் நகர ஆரம்பித்துவிட்டால், சில ஜடங்கள் நுழைவாயிலில் நின்றுகொண்டு, நாம் ஏறமுடியாமல் போயிடுமோ என்றெல்லாம் நினைப்பேன். ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே.
  3.85 வயதிலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையாகிவிட்டதே அந்தப் பெண்மணிக்கு. பாவம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் .ஆமாம் .எது நம்மை சந்தோஷமாக வைக்கதோ அதை செய்யணும் .அதுதான் வெளிநாட்டவர் வாழ்வுமுறை .. கிட்டத்தட்ட 18 வருஷம் அவர் தன்னந்தனியே அந்த ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தார் .இப்போவாச்சும் செட்டில் ஆகிறாரேன்னு சந்தோஷப்பட்டோம் நாங்க .
   இரயில் ஏறும்போது அடைச்சிட்டு நிற்பது !!!! ஆஆ எத்தனை வருஷமாச்சு அந்த காட்சிகள் எல்லாம் பார்த்து .நானா எத்தனையோ முறை பயத்தில் ஏறாமல் ரெயிலை மிஸ் செஞ்சுட்டு லேட்டா போயிருக்கேன் :) பீச் ட்ரெயின் திருவள்ளூர் ட்ரெயின் எல்லாத்திலும் .கனவுகள் நம்மை எச்சரிக்கின்றன என்பது உண்மைதான் .அதுதான் பாவம் அந்த பெண்மணி .வயதான காலத்திலும் நிம்மதியற்ற வாழ்க்கை .

   Delete
 21. கல கல கதம்பம் ...

  முதல் பெண்மணி பற்றி வாசிக்கும் மிக மகிழ்ச்சி/...

  ஆனால் அந்த பாட்டியின் நிலை வாசிக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு .மிக்க நன்றிப்பா 

   Delete