அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Thursday, February 18, 2021

அதிரடியாய் யூ டியூபில் குதித்த பூஸார் !!!!!!!! 🐱🐱🐱🐱🐱🐈🐱🐱🐱🐱🐱🐱 Athees Palace ,you tube channel :)

 அதிரடியாய் யூ டியூபில் குதித்த பூஸார் !!!!!!!!  

                                                        ஆஆவ் அரண்மனையாம் :)

இப்போதான் புரியுது அரண்மனைக்கிளி பட்டப்பெயரின் பின்னணி :)


வருக !!வருக !!அனைவரும் வருக :)

எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் சொல்லப்போறேன் :) நமது நட்புக்கள் எந்த விஷயத்தில் முன்னேறினாலும் நமக்கே நாமே செய்த சாதித்த  ஒரு சந்தோஷமும் திருப்தியும் வரும் அதுபோல் நமது இனிய அதிரடி பூஸார் யூ டியூபில் தனது வாலை :)) சேசே டெய்ல் ஸ்லிப் :) தனது பொற்பாதங்களை எடுத்துவைத்து உள்ளார் .

பல்லாண்டுகாலமாக ஐ  மீன் எங்க தாத்தா பாட்டி காலத்திலிருந்தே அதாவது அதிராவுக்கு 6 வயதிருக்கும்போதே அவர் தேம்ஸில் குதிக்க போவதாக சொல்லிவந்தாராம் ..இதெல்லாம் எங்க தாத்தா அவர்  டைரியில் எழுதி வைத்தது இப்போ உதவுது நமக்கு ..

                                                                       


இங்கே சில வாரமுன் சடார்னு  திரும்பி பார்த்துட்டு கழுத்து லேசா சுளுக்கினத்தில் :) கொஞ்சம் நாட்கள்  அமைதியா இருந்தேன் ஒரு நாள் திடீரென மெயில் பெட்டியை திறக்க அங்கே ஒரு catmail  😹😹😹😹😹 ஒரு யூ டியூப் லிங்குடன் இணைப்பாக வந்தது  அதை திறக்க ..//எல்லாருக்கும் வணக்கம்னு //

எங்கேயோ கேட்ட தேனினும் இனிய குரல் :) என் கண்ணையே என்னால் நம்ப முடியலை :) தேன் ஒரு காதில் நுழைந்து மறு  காதுக்கு வந்துடுச்சு அதிர்ச்சியில் .

சரி கமிங் டு பொயிண்ட் :) நீண்டநெடுங்காலமா தேம்ஸில் தள்ளுவேன் இல்லை தனது ஹெவி  வெயிட் தாங்காமல் குதிப்பேன் என்று சொல்லி வந்த பூஸார் சடாரென  என்கிட்டே கூட சொல்லாமல் :)ஒரு யூ ட்யூப் காணொளி பக்கத்தை திறந்துள்ளார் . 

அந்த யூடியூபின் பெயர் அதீஸ் பேலஸ் 

                                                                         

1,    https://www.youtube.com/watch?v=eBI1-UmfD6Y

2,https://www.youtube.com/watch?v=i6qxhHb05qshttps://www.youtube.com/watch?v=i6qxhHb05qs

3,  https://www.youtube.com/watch?v=USbY3Zuwj9c

4, https://www.youtube.com/watch?v=e07iK5uky2E

5,  https://www.youtube.com/watch?v=3WjQuVULUbo


எனக்கு இந்த யூடியூப் விஷயம் தெரிஞ்ச உடனே நமது வலைப்பூ  நட்புக்களுக்கு  தெரிவிக்க சொன்னேன் ஆனா அந்த குண்டு பூனை ரொம்ப ரொம்ம்ம்ப ஷை ஷையா இருந்ததால் :) நானே தைரியமாக இன்னிக்கு பதிவை வெளியிட்டு பூஸாரின் புதிய யூ டியூப் பக்கத்தை பற்றிய அறிவிப்பை இங்கே வெளியிட்டு விட்டேன் :)


                                                          பாருங்களேன் ஷையா இருப்பதால் கோப்பைக்குள் உக்கார்ந்திருக்கு குண்டு பூஸ் :)                  நமது நட்புக்கள் அனைவரும் நமது அதிரடியின்  

    யூ டியூப் காணொளி பக்கத்துக்கு அதாவது அதீஸ் பேலசுக்கு  சென்று அந்த மணியை அடி அடின்னு அடிச்சு :) சப்ஸ்க்ரைப் செய்யுமாறு பேரன்புடன் வேண்டுகிறேன் .         மேலும் அனைத்து 

காணொளிகளையும் லைக் செய்யுங்க சப்ஸ்க்ரைப் செய்யுங்க :)


அதீஸ் உங்களிடம் ஒரு கேள்வி வலைப்பூ பிளாக்ஸ் பக்கம் உங்களுக்கு நான் செக் அங்கேயும் நான்தான் செக்கா :)))

                                               

அப்புறம் மியாவ் நீங்கள் நிறைய செய்முறை குறிப்புகள் மற்றும் பற்பல க்ராப்ட்ஸ் மற்றும் நிறைய விஷயங்களை யூ டியூபில் பகிர்ந்து  மகிழ்விக்கணும்னு வாழ்த்துகிறேன் .

  நட்புக்களே நீங்களும் உங்களது பேராதரவை அதீஸுக்கு  யூடியூபிலும் அளிக்குமாறு வேண்டுகிறேன்        .


அத்துடன் கூச்சப்படாம இந்த முறுக்குகளை எல்லாரும் எடுத்துக்கோங்க எல்லாம் பேலஸில் சுட்டதுதான் :)))

                                                                   

                   

                                                                                              

இப்படிக்கு 

5 அஞ்சு :) ஏஞ்சல் 

 

oooo ஊசிக்குறிப்பு :) அங்கே அதீஸ் என்று மட்டும்தான்  தான் பெயர்சொல்லி அழைக்கவேண்டுமென எனக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போடப்பட்டுள்ளது :) 


அப்போ இனிமே குண்டுபூஸ் என்று அழைக்க முடியாதோ அதீஸ் உங்களை :)))

47 comments:

 1. யூ டியூபில் குதித்த பூஸார் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் அதீஸ்

  ஏஞ்சல் நீங்கள் சொன்னதற்கு நன்றி. அங்கு போய் பார்க்கிறேன்.

  முறுக்கு பார்க்க அழகாய் இருக்கிறது, ருசியும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  //அப்புறம் மியாவ் நீங்கள் நிறைய செய்முறை குறிப்புகள் மற்றும் பற்பல க்ராப்ட்ஸ் மற்றும் நிறைய விஷயங்களை யூ டியூபில் பகிர்ந்து மகிழ்விக்கணும்னு வாழ்த்துகிறேன்//

  உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் ஏஞ்சல்.
  நீங்களும் யூ டியூபில் ஆரம்பிக்க போகிறீர்களா?
  நீங்களும் செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா .நலம் தானேக்கா .அங்கே குளிர் அதிகமா ?இங்கே ஸ்னோ கொட்டி இப்போ மழை கொட்டோகொட்டுனு கொட்டுது . மிக்க நன்றிக்கா அதீஸ் அரண்மனைக்கு சென்று பாருங்க :)முறுக்கு நல்லா இருக்கில்லையா .நானும் செய்யப்போறேன் அவங்க ரெசிப்பி பார்த்து .
   ///நீங்களும் யூ டியூபில் ஆரம்பிக்க போகிறீர்களா?நீங்களும் செய்யலாம்//

   ஆஆவ் :) இல்லக்கா எனக்கு தொடர் வேலைப்பளு .நாளைக்கும் அதிகாலை ஷிப்ட் .நேரத்தை இழுத்து பிடிச்சி வகித்தன மற்ற வேலைகளை செய்கிறேன் .
   நட்புக்கள்  இப்படி புதிய முயற்சிகள் தொடங்கும்போது ஒரு சந்தோசம் அதில் நானும் பங்கெடுத்துக்கறேன்:)) thanks Gomathy akkaa

   Delete
  2. மிக்க நன்றி கோமதி அக்கா.. சனலுக்கும் உடன் வருகை தந்து சப்ஸ்கிரைபர் ஆகிட்டீங்க மிக்க நன்றி.

   அஞ்சுவையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன், ஆனா அவவுக்கு எப்போ தைரியம் வருகிறதோ அப்போ தொடங்குவா:))

   Delete
  3. //வாழ்க வளமுடன் அதீஸ்
   //
   ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.

   Delete
 2. எனக்கு குளி அதிகம் தான்.
  இங்கு, இரண்டு நாள் ஸ்னோ கொட்டியது பூ தூவலாக
  முறுக்கு செய்யுங்கள் குளிருக்கு சாப்பிட நன்றாக இருக்கும்.

  வேலைப்பளுக்கு இடையே நட்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்க்கா .எனக்கு நேரம் இன்னும் கொஞ்சம் அதிகமா கிடைச்சா போதும் :) அடிக்கடி வலைப்பக்கம் உலவுவேன் . பிடிச்ச க்ராப்ட்ஸ் கூட செய்ய நேரமில்லை இப்போலாம்க்கா .மிக்க சந்தோசம் உங்க பின்னூட்டம் பார்த்ததில் .

   Delete
 3. மிகவும் சுவாரஸ்யமான விவரங்கள்.  அவர் பிறந்த நாளில் இவற்றை நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. அஞ்சூஊஊஊஊஊ ஸ்ரீராம் என்ன ஜொள்றார்ர்ர்ர்ர்ர்?:))

   Delete
  2. உ.வெ. சாமிநாதய்யர் இடுகையில் வரவேண்டிய கமெண்டா?

   Delete
  3. ஹா ஹா ஹா ஓ அப்படியோ நெல்லைத்தமிழன்:)), நானும் என்னமோ ஏதோ.. ஸ்ரீராமுக்குத்தான் ஞாபக சக்தி இல்லையே.. எப்பூடி??? எண்டெல்லாம் நினைச்சுப்புட்டேன் ஹா ஹா ஹா:))

   Delete
  4. ஹஹ்ஹஹாஆஆ ஆஅஹா ஹீஈ :))))))) நிஜம்மா மீக்கும் இப்போதான் புரிஞ்சது நனையும் எப்பூடி எப்பூடின்னு குசம்பிபோய்ட்டேன் :))))))))))))

   Delete
 4. அரண்மனை அன்னக் கிளி (அன்னக் கிளி என்றால் சாத்த்தை மட்டும் சாப்பிடும் கிளியோ?... கேட்கணும்) துவங்கிய யூ டியூபிற்கு வாழ்த்துகள்.

  இந்தச் செய்தி ஏன் உங்களுக்கு ஒரு காதில் தேள் நிழைந்து மறு காதில் அந்தத் தேள் வந்ததுபோல இருக்கணும்?

  ReplyDelete
  Replies
  1. ///(அன்னக் கிளி என்றால் சாத்த்தை மட்டும் சாப்பிடும் கிளியோ?... கேட்கணும்) //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அரண்மனைக் கிளி தரையில நடக்காதாக்கும்:)).. வானத்தில பறக்கும்:))

   //துவங்கிய யூ டியூபிற்கு வாழ்த்துகள்.//
   மிக்க நன்றி நெல்லைத்தமிழன், கையைக் காட்டுங்கோ, விரலில மை இருக்கோ எனப் பார்க்கோணும்:))

   //இந்தச் செய்தி ஏன் உங்களுக்கு ஒரு காதில் தேள் நிழைந்து மறு காதில் அந்தத் தேள் வந்ததுபோல இருக்கணும்?///
   ஹா ஹா ஹா அஞ்சுட தூக்கம் போச்சே:)) ஹா ஹா ஹா

   Delete
  2. ஹையோ என்னாச்சு ரெண்டு பேருக்கும் கண் அவுட்டோ :) தேன் தேன் தேன் ஹனி ஹனி 

   Delete
 5. நேரம் கிடைக்கும்போது நூ டியூப் பார்க்கிறேன்.

  ஷை என்பதால், தன் மகன் திருமணத்துக்கும் செக்கை அனுப்பி எல்லோரிடமும் சொல்லச் சொல்லி செக்கையே அழைக்கச் சொல்வாரோ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்படி இல்லை நெல்லைத்தமிழன், நான் போஸ்ட் போட்டுச் சொல்லத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன், ஆனா 4 போஸ்ட் போட்டுவிட்டுக் கொக்கரிக்கக் கூடாதெல்லோ என ஷையாகிப் போய்:), இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும், இன்னும் கொஞ்சம் போஸ்ட் போட்டபின் சொல்லலாம் என இருந்தேன், அதற்குள் என் செக் போஸ்ட் போட்டு விட்டா:))

   Delete
  2. நான் பார்த்துவிட்டேன். (arts & crafts தவிர). நான் தமிழ்ப்பையன் ஹாஹா

   Delete
  3. ஓ மை கோட்ட்ட் அது நீங்கள்தானோ ஹா ஹா ஹா .. யாரோ புளொக்கிலிருந்துதான் வந்திருக்கிறார் எனத் தெரியும் ஆனா ஆராக இருக்கும் என நினைச்சேன் ஹா ஹா ஹா நல்லவேளை சொன்னமைக்கு நன்றி.

   Delete
 6. அடடே...    ஆச்சர்யமான மற்றும் சந்தோஷமான செய்தி.  உடனே அங்கே சென்று பார்த்து விடுகிறேன்.  வாழ்த்துகளும் பாராட்டுகளும் 

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்... கொஞ்சக்காலமாக புளொக் எழுதுவது வெறுப்பாகிக்கொண்டே வந்துது, அப்போதான் ஏதும் மாற்றம் செய்தால் என்ன என நினைச்சேன், மனம் எதை விரும்புதோ அதையே செய்யுங்கோ என்றார்கள் வீட்டிலும்.. அதனால ஆரம்பித்துவிட்டேன்.. இது ஒருவித புத்துணர்வாக இருக்குது.

   Delete
  2. யூ டியூபிற்கும் பிளாக் பதிவுக்கும் வித்தியாசம் உண்டு. அங்க யூ டியூபில், காணொளிக்குள்ள கமெண்ட் மட்டும்தான் போடமுடியும். கலாய்க்க முடியாது (கூடாது). அது சினிமா பார்ப்பது போல. பிளாக் என்பது, மற்றவர்களைச் சந்தித்துப் பேசுவது போல என்று நினைக்கிறேன்.

   Delete
  3. உண்மைதான் நெல்லைத்தமிழன், எனக்கும் நிறைய எழுதப் பேசத்தான் பிடிக்கும், ஆனா அதை அங்கு பண்ண முடியாது...

   Delete
 7. அதிராவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கில்லர்ஜி, அங்கு வந்து மை பூசிட்டீங்களோ?:) கைச் சின்னி விரலைக் காட்டுங்கோ மை இருக்குதோ எனச் செக் பண்ணோணும்:).

   Delete
 8. அட! பூஸாரும் யூ ட்யூப் ஆரம்பிச்சாச்சா? அதுக்கு ஏஞ்சல் விளம்பர மானேஜரா? ஏஞ்சல், சம்பளம் நல்லா வாங்கிடுங்க!விடாதீங்க பூஸாரை! எனக்கு முடிஞ்சப்போப் போய்ப் பார்க்கிறேன் பூஸாரின் சமையல் குறிப்புக்களை. அதைப் பார்த்ததும் எனக்குச் சமையலே மறந்துடாம இருக்கணும். இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

  ReplyDelete
  Replies
  1. ///அதைப் பார்த்ததும் எனக்குச் சமையலே மறந்துடாம இருக்கணும். இஃகி,இஃகி,இஃகி,இஃகி!///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீசாக்கா முதல்ல சப்ஸ்கிரைப் பண்ணி ஆஜீர்வதியுங்கோ அதிராவை ஜொள்ளிட்டேன்:))

   Delete
 9. இங்கே படத்திலே காட்டி இருக்கிற தேன்குழலெல்லாம் பூஸாரே பண்ணினதா? அல்லது அவங்க மறுபாதி பண்ணிட்டுப் பூஸார் பெயரைப் போட்டுக்கொண்டு விட்டாரா? எப்படியோ யூ ட்யூப் சானல் ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப்பாதி செய்தாலென்ன:), இந்தப்பாதி செய்தாலென்ன:), முறுக்கு சரியாக வந்தால் சரிதான்:)) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.

   Delete
 10. ஆஆஆஆ எனக்குப் போஸ்ட் பார்த்த நேரத்திலிருந்து ஒரே ஷை ஷையா வருதே:)).. சனல் தொடங்கிய உடனேயே கூக்குரல் போடலாமோ?:)) என்றுதான் இன்னும் கொஞ்சக்காலம் போகட்டும் சொல்லலாம் என இருந்தேன்.. என் செக்:)) போஸ்ட் போட்டு விட்டா.. ஹா ஹா ஹா அழகான அறிமுகத்துக்கு மிக்க நன்றி 5.[அஞ்சு]..

  இது ஒரு புது விதமான பொழுதுபோக்காகவும் உற்சாகமாகவும் இருக்குதெனக்கு:))

  ReplyDelete
 11. //அப்போ இனிமே குண்டுபூஸ் என்று அழைக்க முடியாதோ அதீஸ் உங்களை :)))//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு ஆசை:))

  ReplyDelete
 12. //அதீஸ் உங்களிடம் ஒரு கேள்வி வலைப்பூ பிளாக்ஸ் பக்கம் உங்களுக்கு நான் செக் அங்கேயும் நான்தான் செக்கா :)))///

  ஆஆஆஆஆ அங்கே செக் உடன் அட்வைஸர் எனும் பதவியும் சேர்த்தெல்லோ உங்களுக்கு பதவியேற்றம் பண்ணியிருக்கிறேன்:)).


  ///அப்புறம் மியாவ் நீங்கள் நிறைய செய்முறை குறிப்புகள் மற்றும் பற்பல க்ராப்ட்ஸ் மற்றும் நிறைய விஷயங்களை யூ டியூபில் பகிர்ந்து மகிழ்விக்கணும்னு வாழ்த்துகிறேன் .//

  நன்றி நன்றி... இப்போ எனக்குக் லெக்ஸ் எங்கின வைப்பது காண்ட்ஸ் எங்கின வைப்பதென்றே புரியுதில்லை:)) போகப்போகச் சரியாகிடும், ஆனா வீடியோ எடிட்டிங் மட்டும் படுபயங்கர இன்றஸ்ட்டா இருக்குது... ஹா ஹா ஹா... எனக்கு கிரஃபிக் வேர்க்ஸ் ரொம்பப் பிடிக்கும்..

  ReplyDelete
 13. ///அத்துடன் கூச்சப்படாம இந்த முறுக்குகளை எல்லாரும் எடுத்துக்கோங்க எல்லாம் பேலஸில் சுட்டதுதான் :)))//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எவ்ளோ கஸ்டப்பட்டு என் ஃபிரெண்ட் பிரீத்தியிடம் கொடுத்து அரைச்சுச் சுட்டிருக்கிறேன்.. ஓசியில சப்ளை பண்ணாவே:)).. கையில மை இருந்தால் மட்டும்தான் முறுக்கு எடுக்க விடுவேன்:)) ஹா ஹா ஹா..

  அனைத்துக்கும் மிக்க நன்றி அஞ்சு, இதுவும் இந்த புதுவருடத்தில் நீங்க எனக்குக் கொடுத்த ஒரு இன்ப அதிர்ச்சி:))

  ReplyDelete
 14. அடாடா...... இங்குமா அந்த அதிரடி, அட்டகாச, அழும்பு, அலட்டல் அதிரா? வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ. வெல்கம் டு ஸ்வீட் சிக்ஸ்டீன்.  ReplyDelete
  Replies
  1. பொதுவா கோபு சார் ஸ்பெல்லிங் மிஸ்டேக் (மிச்ரேக்கு) விடமாட்டார். ஆனால் இங்க 'ஸ்வீட் சிக்ஸ்டி' என்று எழுதுவதற்குப் பதிலாக 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்று எழுதியிருக்கிறார். (அதாவது அவரது ஸ்வீட் சிக்ஸ்டி கிளப்புக்கு அதிராவை அழைக்கிறாராம்) பிழை திருத்தம் செய்யாமல் எப்படி பின்னூட்டம் போட்டிங்க?

   Delete
  2. ///ஆனால் இங்க 'ஸ்வீட் சிக்ஸ்டி' என்று எழுதுவதற்குப் பதிலாக 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்று எழுதியிருக்கிறார்//

   நான் ஜொன்னனே:) நான் ஜொன்னனே.. “கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி குடுக்க விடாராம்:), இடையில நிண்டு தடுப்பாராம்”.. அந்தக் கதையாவெல்லோ இருக்குது இந்தக் கதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   ஹா ஹா ஹா அது மிச் இல்லை நெல்லைத்தமிழன்:)).. மிசுரேக்கூஊஊஊஉ.. அப்பூடி வரோணும்:))

   Delete
 15. //அதிரடியாய் யூ டியூபில் குதித்த பூஸார் !!!!!!!! //

  தொப்பென்று தேம்ஸ்ஸில் குதிக்கப்போவதாக அல்லவா கடந்த 61 ஆண்டுகளாகச் சொல்லி வந்தார்கள் ! ..... ஏன் இந்த திடீர் மனமாற்றம்? :((((( 

  யூ-டியூப் புக்கு வந்த போதாதகாலம் என நெல்லைத்த தமிழன் சுவாமி அங்கு முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. நல்லவேளையாக நான் யூ-டியூப், முகநூல் முதலிய எந்தப்பக்கமும் போவது இல்லை. தப்பித்தேன்டா சுவாமீஈஈஈ :)        

  ReplyDelete
  Replies
  1. // நல்லவேளையாக நான் யூ-டியூப், .... முதலிய எந்தப்பக்கமும் போவது இல்லை. தப்பித்தேன்டா சுவாமீஈஈஈ :)///

   பூனை கண்ணை மூடினா பூலோகம் இருண்ட கதையாவெல்லோ இருக்குது:)).. நான் எங்கினமோ:)) ஓரிடத்தில்... ஒருவரது யூ ரியூப்பில கோபு அண்ணனின் 4 வரிக் கொமெண்ட் பார்த்திட்டேனே:)).. அதிராவை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)) ஹா ஹா ஹா...

   அது போகட்டும் கோபு அண்ணன், யூ ரியூப் இல்.. அஞ்சுவும் நெல்லைத்தமிழனும் வந்து கொமெண்ட் போட்டிச்சினம்.. அது யூ ரியூப் பெயர் என்பதால எனக்கு ஆரெனப் புரியவில்லை ஆரம்பம்:)).. அதில வேறு.. டகோதரி:)), டோளி.. ஹா ஹா ஹா எண்டெல்லாம் என்னை அழைச்சதும்.. ஆரோ புதாக்களாக்கும் என மீயும் மிக அடக்கொடுக்கமாகப் பதில் போட்டேன்.. பின்புதான் பார்த்தால் ..முன்னே வந்தவர் அஞ்சு.. பின்னே வந்தவர் நெ தமிழன் ஹையோ ஆண்டவா:)) ஹா ஹா ஹா..

   நன்றி கோபு அண்ணன்.. மிக்க நன்றி.. நீங்கள் என்னதான் சண்டைப்பிடிச்சாலும், வாய் வீரம் பேசினாலும் உங்களை நாங்கள் விடுவதாய் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா சப்ஸ்கிரைப் பண்ண வச்சிட்டமே:)) ஹா ஹா ஹா.

   Delete
 16. தாமதாகப் பார்க்கிறேன் .
  அனபு அதீஸ், அன்பு அஞ்சு
  இனிய வாழ்த்துகள்.
  முறுக்கு சூப்பராக இருக்கு.
  யூடியுபுக்கு அன்பு வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அதிரா...


  நானும் பார்த்துட்டேன் ,,,sub பண்ணிட்டேன் ...

  ஹி ஹி சில காலமா எனக்கும் ஒரு சேனல் இருக்கு ...விதம் விதமா வித்தியாசமா சில பல வீடியோக்கள் போடுவது உண்டு ..வாய்ப்பு இருக்கும் போது பாருங்கள் அஞ்சு , அதிரா ..

  https://youtu.be/WsuYsDVYCzM

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு .அஆவ் உங்களுக்கும் யூ டியூப் இருக்கா !!! இவ்ளோ நாள் ஏன் சொல்லலை கர்ர்ர் :) இதோ வரேன் அங்கே ஜெஸ்ஸி ஆர்ட்ஸ் :) அதிராக்கும் சொல்லியாச்சுப்பா ..

   Delete
  2. சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் :) உங்க குரல் செம கியூட் தெளிவான அழகான உச்சரிப்பு 

   Delete
  3. நன்றி அனு, உங்கட வீடியோப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.. மீயும் சப் பண்ணிட்டேன்..

   Delete
 18. ஏஞ்சல், அதிரா சகோதரிகள் இருவருக்கும் வணக்கம்.

  அதிரா சகோதரியின் பதிவை பார்த்ததும், அங்கிருந்து இங்கும் வந்து வந்து விட்டேன். உங்கள் (சகோதரி அதிராவின்) புது அரண்மனை வரவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பிஸியில்தான் நீங்கள் (அதிரா) இதுவரை காணாமல் போய் விட்டீர்களா? உங்கள் யூடியூப் சேனல் நன்றாக வளர்ந்து செழிக்க என் மனம நிறைந்த வாழ்த்துகள். செய்தி தெரிவித்த சகோதரி ஏஞ்சலுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். புதுமையை படைக்கும் இருவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா அக்கா .உங்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள் .தேம்ஸில் நீந்தி இங்கே வருகைதந்ததற்கும் நன்றீஸ் :)

   Delete