அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Saturday, January 23, 2021

திரும்பி பார்த்தபோது :)


                                                             


                 

திரும்பி பார்ப்பது நல்லதா கெட்டதா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி .

நாமெல்லாரும் பல சமையங்களில் திரும்பி பார்த்துட்டேதான் இருக்கிறோம் .கடந்துவந்த பாதை  சந்தோஷம் கஷ்டம் ,இழப்பு நல்லது கெட்டது எல்லா அனுபவங்களையும் இந்த திரும்பி பார்த்தல் மீட்டுக்கொண்டுவருது  .நல்லவற்றை இங்கே பகிர்கின்றேன் :)

போன வருஷம் கிட்டத்தட்ட வருடத்தில் பலர்  வீட்டில் இருந்து வேலை செய்தனர் ,பல மாணவர்களின் படிப்பும் ஆன்லைனிலேயே   மகள் கடந்த மார்ச் முதல் எங்களுடனே ..ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் பல மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது .பரீட்சை இல்லை ஆசிரியர்களே predict செய்யும் முறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது அதையும் கடந்து முதலாமாண்டு பிள்ளைகள் பல்கலையில் சேர்ந்தனர். இவ்ளோ களேபரதத்திலும் ஹெல்த் கேர் செக்டர் மட்டும் கட்டாயம் வேலைக்கு போக வேண்டியிருந்ததால் நான் தொடர்ந்து சென்றுவந்தேன் .இப்படின்னு தெரிஞ்சிருந்தா பினாமி சுனாமி பூஸார் மாதிரி ரீச்சர் வேலைக்கே போயிருக்கலாம் :).

போன வருடம் மூன்றாவது வீட்டில் உள்ள ஒரு பெண்மணி அவரது அப்பாவை பார்க்க வேறு சிட்டி சென்றார் .போகுமுன் எங்களிடம் வீட்டை பார்த்துக்க சொல்லிட்டு போனார்  திரும்பி வந்ததும் எனக்கு ஒரு கிஃப்ட் :) பட்டன் ரோஸ் செடி :) குளிர் என்பதால் வீட்டுக்குளேயே வளர்க்கிறேன் பூத்து குலுங்குது :)


போன வருஷ ஆரம்பத்திலேயே அதாவது மார்ச் மாதமே எங்கள் மூவருக்கும் கொர் கொர்ர்ர் ஓநா(ய் ) வந்துட்டு போய்டுச்சு .எனக்கு ஜுரம் இருமல் எதுமே இல்லை ஒரே ஒரு சிம்ப்டம் அது ருசியும் வாசனையும் இல்லாமப்போச்சு சுமார் 3 மாதங்களுக்கு எடுத்தது முழுமையா பழைய நிலைமைக்கு திரும்ப .அந்த காலகட்டத்தில் வற்றல் வடாம் , தோட்டம் எல்லாம் போட்டு இருந்தேன். 

                                                                               


அப்படி போட்ட கொண்டைக்கடலை பயிர் :)) அரை ஏக்கருக்கு பயிரிட்டுருந்தேன்னு சொன்னா அந்த கடலையே என்னை முறைக்கும்:) மொத்தமா 30 கடலைகளை விதைத்ததில் மிஞ்சியது ஒரு செடி :) 

                                                                       

                                                            
                                                                                  

                                                                               



                                           அப்பப்போ பறிச்சு சாம்பார் குழம்பு சூப்க்கு                                                                      சேர்த்தேன்            ..பச்சையாவும் சாப்பிட்டு பார்த்தேன் :) மண்ணில் இருந்து பிடுங்கிய வேர்க்கடலை சுவை .


             


எங்க தோட்டத்துக்கு நிறைய புது நட்புக்கள் வந்தாங்க :) இதில் விஜூ ரெகுலர் விசிட்டர் ஆகிட்டான் .புதுசு புதுசா சமைக்க ஆசையிருந்தாலும் பெரிசா புதிய ரெசிப்பீஸ் எதுவும் செய்யலை ஆகவே மக்கள் தப்பித்தார்கள் . கடைக்கு செல்வதே இல்லாமல் போயிற்று .எல்லாமே ஆன்லைனில் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது .உறவினர்களை அருகில் பார்த்து பல காலமாகுது .அப்பப்போ காரில் இருந்து அவரவர் வீடுகளின் முன்னே கார் ஜன்னலை திறந்து ஹாய் சொல்லிக்கறோம் .ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் நேரம் பரிசுப்பொருள் சாக்லேட்ஸ் கார்ட்ஸ் எல்லாம் எடுத்திட்டு முன்பு சொன்னேனே ஒரு பிரிட்டிஷ் நண்பி அவரை பார்க்க செல்வோம் .இந்த ஆண்டு அவரை சந்திக்க முடியலை வாழ்த்துஅட்டை மட்டும் அனுப்பினோம் .அவரிடமிருந்து மகளுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்தட்டையும் கிப்ட் கார்டும் வந்தது .நினைவாய் அனுப்பி இருக்கிறார் .

நிறைய சினிமாக்கள் பார்த்தோம் மலையாளம் /தமிழ் ஆங்கிலம் .

அப்படி பார்த்தவை சில மனதில் பதிந்தன 

VIRUS ..பதைபதைக்கவைத்த படம் கொரோனாவுக்கு முன்புவந்த  நிபா வைரஸ் பற்றி  எடுத்த படம் ஆனால்  அப்படியே 2020 இல் ஹாஸ்பிடலில் நடந்த சம்பவங்களை கண்முன் நிறுத்தியது ..

trance ,sufiyum சுஜாதாவும்  அப்புறம் Kappela  

Greatest show man ,டிஸ்னி பியூட்டி அண்ட் பீஸ்ட் ,into the woods .

,(பாவ கதைகள் இதை மட்டும் மன வலிமையற்றோர் பார்க்க வேண்டாம் )

அப்புறம் விகடன் டிவியில் வல்லமை தாரயோன்னு ஒரு டிஜிட்டல் தொடர் பார்க்கிறேன்  .

நிறைய பழைய வடிவேலு காணொளிகளை யூ டியூபில்  பார்த்தேன் பார்க்கிறேன் .

இப்போ புதிதாக ஒரு ஆர்ட் worli என்று அதில் ஆர்வம் வந்திருக்கு விரைவில் சிலவற்றை குறிப்பா பூனை ஆர்ட் quilling செய்யணும் .

இன்னும் நிறைய எழுதணும் பழையபடி வலைப்பூவை தொடரணும் என்று ஒரு உற்சாகம் வந்திருக்கு .


                                          

தானாய் உதித்த ஒரு தத்துவம் :)    

                                                                                 


                 

விழுந்ததா முக்கியம் :) 

எப்படி விழுந்தோம் என்பதை விட  விழுந்த இடத்தில் இருந்து எப்படி எழும்பறோம் என்பதே முக்கியம் :)



விரைவில் புதுப்பொலிவுடன் வலைப்பூ வலம் வரும் :))

 



83 comments:

  1. ஆஆஆஆஆஆஆஆஅ என்னா இது புதுப்போஸ்ட்ட்ட்ட்ட்ட்.. அப்பப்ப நான் ஏதும் சொன்னால் புதுப் போஸ்ட் போட்டிடுவேன் என மிரட்டுவீங்க:)), இப்படியே சொல்லிக்கொண்டே இருப்பீங்க எங்க போடப்போறீங்க என நினைச்சேன்ன்.. சே..சே... என்னை இன்று குல்ட்டை விட்டு வெளியே வரப் பண்ணிட்டீங்களே:))..

    அது என்னமோ தெரியல்ல, புளொக் என்றாலே அலெர்ஜி ஆக இருக்குது.. எவ்ளோ ஃபோஸ் பண்ணி வெளியில வந்தாலும், அப்பப்ப ஏதோ ஒரு மனக்கஸ்டமோ, குழப்பமோ வந்து மீண்டும் ஓஃப் பண்ணிப்போடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சாண் ஏற முளம் சறுக்குது.. இதில என்னமோ எங்கட ராசிக்கு ராஜயோகமாம்.. பல ஆண்டுகளுக்க்குப் பின்பு இவ்வருடம் வந்திருக்குதாம்.. ஓரிரவிலேயே லட்சாதிபதியாவோமாம்.. ஹா ஹா ஹா சிப்பு சிப்பாவே வருது... சரி சரி அஞ்சு என்னத்தைப் புலம்பி வச்சிருக்கிறாவோ இங்கின.. நில்லுங்கோ வாறேன் படிச்சிட்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க வாங்க:) மியாவ் .
      ப்ளீஸ் டேக் எ ஸ்மைல் னு போட்டிருக்கேன் எடுத்துகிட்டீங்களா :)))))))

      Delete
    2. //எவ்ளோ ஃபோஸ் பண்ணி வெளியில வந்தாலும், அப்பப்ப ஏதோ ஒரு மனக்கஸ்டமோ, குழப்பமோ வந்து மீண்டும் ஓஃப் பண்ணிப்போடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//இது ஸ்வாமி தயாளானந்தா என்ன சொல்கிறார்னா 
      //உங்களிடம் இருப்பவற்றை ( உங்க நகைப்பெட்டி க்ரெடிட் கார்ட் டெபிட் கார்ட் ) இவற்றை உங்கள் நட்புக்கு உடனே கொடுத்துப்பாருங்கள் :) துன்பம் கஷ்டம் ஓடி எல்லையில்லா ஆனந்தம் கிடைக்கும் // ரெடி ஸ்டார்ட் நானா கையை நீட்டுவேனாம் எதுவும் உங்களை off செய்யாது கமோன் கம் ஓன் 

      Delete
    3. ////ஓரிரவிலேயே லட்சாதிபதியாவோமாம்..//

      /ஹயோ  பாத்திங்களா  நான் கரெக்ட்டா சொன்னேனே 

      Delete
    4. நீங்க என்னவோ சட்டுனு திரும்பிப் பார்த்துட்டீங்க. சிலர் (நான் அதிராவைச் சொல்லலை) ஒல்லியாயிட்டேன்னு சொல்றாங்களே தவிர, திரும்புவதற்கு ரொம்ப வாரங்கள் ஆகிறது. அதனாலத்தான் அவங்களால திரும்பிப் பார்க்க முடியலை போலிருக்கு

      Delete
  2. //திரும்பி பார்த்தபோது :)//

    ஆஆஆஆஆஆ தலைப்பே இடிக்குதே:)).. திரும்ப முடியுதோ அஞ்சு?:)) இல்ல குண்டாகிட்டால் திரும்புவது கஸ்டம் என்பினம் அதுதான் கேய்ட்டேன்னாக்கும்:))..

    //திரும்பி பார்ப்பது நல்லதா கெட்டதா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி .///

    அதில நல்லதும் இருக்குது கெட்டதும் இருக்குது, எதைப்பார்க்கிறீங்க? எப்படியான சூழலில் பார்க்கிறீங்கள் என்பதுதானே முக்கியம்..

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர் :) எல்லார் முன்னாடியும் என் இமேஜை டேமேஜ் பண்றதிலேயே இருங்க  :) உண்மைதான் நான் புல் தடுக்கி விழுந்துட்டு யாரும் பார்த்தங்களான்னு மெதுவா திரும்பி பார்த்தேன் :))))

      Delete
    2. அப்பூடி எத்தனை தடவைகள் விழுந்தீங்க என்பதனையும் கரெக்ட்டாச் சொல்லோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).

      Delete
  3. உண்மைதான் போன ஏப்ரல் மே லொக்டவுன் ஒரு புது அனுபவம், கோடைகாலம் வேறு, அது மிக மகிழ்ச்சியையும்.. புதுசு கண்ணா புதுசு என்பதால ஒரு உற்சாகம் குதூகலமாகப் போய்ச்சுது.

    ஆனா இப்போ மீண்டும் லொக்டவுன், குளிர்காலம், கதவைத்திறப்பதே இல்லை... இப்போ வெறுப்பாக இருக்குது, பழைய வாழ்க்கை எப்போ வரும் என ஏக்கமாக இருக்குது... பிள்ளைகளும் பாவம், அவர்களில் குதூகலிச்சு நட்புக்களோடு உலாவரும் காலம் அநியாயமாகிக்கொண்டே போகுதே என நினைக்கக் கவலையாக இருக்குது... ஆனாலும் இதுவும் ஒரு மகிழ்ச்சியாக நிம்மதியாக.. நல்ல ரெஸ்ட் எடுக்க முடியுது. இதுவும் கடந்து போகும்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மியாவ் ஏப்ரல் மே யில் செம குஷி ஜாலியா காரிலேயே ஊர் சுற்றுவோம் லோக் டவுனில் ஆனா வின்டர் லொக்டவுன் எரிச்சலூட்டுது .பிள்ளைங்களை பல்கலைக்கழகம் அனுப்புவதே புது லைஃப் அனுபவங்களை தனியே வாழ கற்றுக்கொடுத்தலுக்கு பழக்குவது அது ஒன்றுமே பல பிள்ளைங்களுக்கு அமையலை பாவம் ..ரெஸ்ட்  எடுப்பது நல்லதுதான் ஆனா இது லோங் ரெஸ்ட்டா இல்ல இருக்கு 

      Delete
  4. //இப்படின்னு தெரிஞ்சிருந்தா பினாமி சுனாமி பூஸார் மாதிரி ரீச்சர் வேலைக்கே போயிருக்கலாம் :).//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கெல்லாம் ரீச்சர் வேலை தரமாட்டினம் தெரியுமோ:)).. அதுக்கெல்லாம் அதிராவைப்போல பொறுமை வேணுமாக்கும்:)).. ம்ஹூம்ம்...

    ReplyDelete
    Replies
    1. ஹலோ கர்ர்ர்ர் ஒரு நாள் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டு போங்க :) ஹெல்த் கேர் செக்டர் அதுவும் மெண்டல் கேர் எப்படிப்பட்டதுன்னு காட்டறேன் 

      Delete
    2. ம்ஹூம்.. என்னைக் கொல்ல ஜதி நடக்குது ஜாமீஈஈஈஈஈஈ:).. வலையில எலிகள் மாட்டலாம் ஆனால் பூனை மாட்டாதாக்கும்:))

      Delete
  5. //குளிர் என்பதால் வீட்டுக்குளேயே வளர்க்கிறேன் பூத்து குலுங்குது :)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது தந்தபோது எடுத்த போட்டோ.. அந்த “பூத்துக் குலுங்கும்” படம் எங்கே.. எனக்கு அதுதான் வேணும்ம்ம் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ:)).. ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா நீண்ட நாளுக்குப் பின்பு வந்திருக்கிறேனா.. ரயேட்டா வருது:))

    ReplyDelete
    Replies
    1. அதான் மியாவ் வந்தப்போ எடுத்தேன்  பிறகு பூத்தப்போ எடுக்கலை படத்தை ஆனா செடி நல்லா இருக்கு :)உங்களை பேய்க்காட்ட முடியுமோ முடியுமோ மோ :)

      Delete
  6. //போன வருஷ ஆரம்பத்திலேயே அதாவது மார்ச் மாதமே எங்கள் மூவருக்கும் கொர் கொர்ர்ர் ஓநா(ய் )//
    அல்லோ மருவாதை.. மருவாதை ரொம்ப முக்கியமாக்கும் அங்கிளுக்குக் கேட்டிடப்போகுது:)) அவர் இன்னும் நாட்டை விட்டுப் போகவில்லை.. இப்போ கெட்டப்பை மாத்திக்கொண்டெல்லோ ஊரெல்லாம் சுத்துறார்:)) அதுதான் பயம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))

    ReplyDelete
    Replies
    1. யமமாடி நான் வாயை மூடிக்கறேன் அதுவும் வெரைட்டியா வருதாம் எனக்கு தெரிந்த இருவருக்கு வெவ்வேறு சிம்ப்டம்ஸ் வித்யாசமான அறிகுறிகள் .எதுக்கும் அலட்டாம இருக்கேன் 

      Delete
    2. /அதிரா போடும் சமையல் குறிப்பு மாதிரிதான் இந்த கொரோனாவும் அங்கே புதுசு புதுசா வருகிறது போல

      Delete
    3. ஹாஹஆஹாஹா :)  ஆமா ஆமாவே ஆமா இப்படித்தான் நாம ரெண்டுபேரும் ப்ரண்ட்ஸ் ஓகே :) என்னைய எங்கேயும் கலாய்க்காகூடாது சொல்லிட்டேன்

      Delete
    4. பார்த்தீங்களோ பேப்பிள்ஸ்ஸ்.. சே..சே அது பீப்பிள்ஸ்ஸ் எனச் சொன்னேன்..:) ட்றுத் மட்டும்தான் அதிராவைக் கரெக்ட்டாப் புரிஞ்சு வச்சிருக்கிறார்ர்.. எனக்கு எப்பவுமே புதுசு புதுசா முயற்சிப்பதே பிடிக்கும்:)).. ஹா ஹா ஹா ஏன் ட்றுத் ஓடுறார்?:))... ட்றம்ப் அங்கிள் உவைட் டவுஸ்:) ஐ விட்டு ஓடியதைப்போல:))

      Delete
  7. ஆஹா உங்கட புண்ணியத்தில் கொண்டைக்கடலைச் செடி பார்க்கிறேன், அயகா இருக்குது... குண்டியூண்டு 8 காய்கள் வந்திருக்குதே இது எப்பூடி சூப் செய்ய முடிஞ்சுது... நல்ல வேளை நான் உங்கட பக்கத்து வீடாக இல்ல, இல்லாட்டில் உதில எனக்கும் பங்கு தந்திருப்பீங்க:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ குண்டு மியாவ் அது ஒரு தரம் முற்றியதை பரிச்சது அதுக்கப்புறம் ஏழெட்டு வாட்டி பறிச்சேன் ஒரு செடியில் சுமார் 40 -50 கிடைச்சது .குண்டுகுண்டா அழகா பசேல்னு இருக்கில்லையா :) குட்டி கோழிப் பாப்பா முட்டையில் இருந்து வந்த முதல் நாள் இப்படித்தான் இருக்கும் பொசுபொசுன்னு .

      Delete
    2. அடுத்த விளைச்சலில் உங்களுக்கும் பங்குண்டு மியாவ் :) 

      Delete
    3. கொண்டைக்கடலையா? நான் மொச்சை என்றே நினைத்தேன். 40 என்பது குறைந்த அளவுனா... அதில் என்ன செஞ்சிருப்பீங்க?

      Delete
    4. கர்ர்ர் :) மொச்சைன்னா அது அவரை கொடியில் தானே வளரும் :) .இது புளிய இல்லை மாதிரி குட்டி வெள்ளைப்பூக்கள் இருந்தது அதை படமெடுத்தேன் ஆன்னா எப்படியோ  டிலீட் ஆகிடுச்சு .

      வெஜிடபிள் சூப் பிலிப்பினோ வெஜ் சூப் செய்யும்போது சேர்த்தேன் நல்லா இருந்தது கொஞ்சத்தை சாம்பாரில் போட்டேன் .எல்லாத்தையும் தோலோடுதான் சேர்த்தேன் 

      Delete
    5. //40 என்பது குறைந்த அளவுனா... //
      இதை நீங்க நம்பிட்டீங்க? அப்பூடித்தானே நெ தமிழன்?:) ஹையோ ஹையோ ரொம்ம்ம்ம்ப அப்பாவியா இருக்கிறீங்களே:)).. அதாவது வந்து மே மேஏயில 8.. யூன் ல 6 யூலையில திரும்படியும் 8, ஓகட்டில 10, செப்டெம்[பரில திரும்ப 8:)) இப்போ கரீட்டா கல்குலேசன்?:))

      Delete
    6. https://www.chilternseeds.co.uk/item_1378b_chickpea_principe_seeds

      Delete
    7. அது நெல்லைத்தமிழன் ஒரே நேரம் 40 கிடைக்கலை .ஜூனிலிருந்து செப்டம்பர் வரை செடியில் வளர்ந்தது நானா 10/12 இப்படி பறிச்சேன் ஒரு குடும்பத்துக்கு 9 அல்லது 10 செடி தேவை அதோட என் தோட்டத்தில் செயற்கை உரம் ஏதுமில்லை பூச்சிக்கொல்லி ஏதுமில்லை .இன்னும் கொஞ்சம் கம்போஸ்ட் போட்டிருந்த அதிகம்  கிடைச்சிருக்கும் 

      Delete
  8. நான் பார்த்த மலையாளமூவியை ரிவியூ எழுத வெளிக்கிட்டேன்ன் என்னமோ சொல்லி என்னைத் தடுத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... விடமாட்டேன் அடுத்த வருடமாவது படக்கதை சொல்லியே தீருவேன்ன் அது உந்த கடலைக்காயில நடுவில இருக்கும் காயின் வண்டி மீது ஜத்தியம்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா :) கப்பேலா பட ரிவ்யூதானே .நீங்க கோழிக்கூடு கோழிகூடுன்னு சொன்னப்போ பிறகுதான் புரிஞ்சது கோழிக்கோடு அதுன்னு :)  சரி சரி இப்போவே உடனடியா ரெசிப்பி சேசே ரிவ்யூ போடுங்க பார்ப்போம் 

      Delete
    2. ஹலோ எதுக்கு அந்த குழந்தை வண்டி மேலே கைவைக்கிறீங்க பாப்பாக்கு வலிக்கும் டோன்ட் டச் :))))))

      Delete
  9. எல்லாம் சரிதான், ஆனா படம் பார்த்தேன், யூ ரியூப் பார்த்தேன் என இருக்குதே தவிர, அழகழகா அதிராவைப்போல அடக்க ஒடுக்கமாக:)) பல பல சமயல் செய்து அசத்தினேன், வீட்டைக் கிளீன் பண்ணினேன், மொப் பண்ணினேன், பழையன கழித்தேன் புதியன வாங்கி அலங்கரித்தேன் எனச் சொல்றாவோ பாருங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி சரி விடுங்கோ.. நீண்ட காலத்தால போஸ்ட் போட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்...

    அட தத்துவம் எல்லாம் வருதே இது எங்கின கொப்பியடிச்சதாக்கும்?:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மியாவ் காதை கிட்டே கொண்டாங்க :) நிறைய பொருள் புதுசா வந்திருச்சு வீட்டுக்கு :) உங்க வீட்டுக்கும் வந்தது எனக்கு தெரியுதே 

      Delete
    2. //அட தத்துவம் எல்லாம் வருதே இது எங்கின கொப்பியடிச்சதாக்கும்?:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))//

      ஹையோ இது எனக்கே உதிச்சது கீழே விழுந்து வாரினவங்களுக்கே அதன் அருமை பெருமைலாம் தெரியும் :)

      Delete
  10. ஏஞ்சல் பதிவுக்கு அதிராவின் பின்னூட்டங்கள் மனதை மகிழ்ச்சி படுத்துகிறது.

    //குல்ட்டை விட்டு வெளியே வரப் பண்ணிட்டீங்களே:))..//

    நல்லது . குளிர் குளிர் என்று குல்டில் இருக்காமல் அதிராவை வெளியே வரவழைத்த ஏஞ்சலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஆவ் வாங்க கோமதி அக்கா .அங்கே குளிர் அதிகமா ?இங்கே ஸ்னோ கொட்டி கரைஞ்சிடுச்சி .அதிரா பின்னூட்டம் போடலைன்னா விட்ருவேனா :)) மிரட்டியே வரவைச்சிட்டேன்க்கா :))

      Delete
    2. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. உங்களை இங்கு பார்த்ததும் ஏதோ பல வருடங்களின் பின்பு பார்க்கும் மகிழ்ச்சியாக இருக்குது...

      கோமதி அக்கா, அஞ்சுட தலைப்பு.. திரும்பிப் பார்க்கிறேன், ஆனா உங்களுக்கு ஒன்று சொல்லிடுறேன்.. அஞ்சுவை நம்பித் திரும்பி எதையும் பார்த்திட வேண்டாம்ம்.. திரும்பாமல் இருங்கோ..பின்னால போனதெல்லாம் போனதாகவே இருக்கட்டும்...

      சே..சே.. அதிரா ஒரு போஸ்ட் போடப்போகிறேன்ன்..”திரும்பிப் பார்த்திட வேணாம்”.. எனும் தலைப்பில்.

      Delete
    3. கர்ர்ர்ர் மியாவ்:) 

      Delete
  11. பட்டு ரோஸ் செடி அழகு, கொண்டைகடலை பயிரும் காயும் அழகு.
    பதிவும் தத்துவமும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பட்டு ரோஸ் வீட்டுக்குள்தான் இங்கே குளிரில் வைக்கிறாங்கக்கா .சம்மருக்கு வெளியில் வச்சிட்டு மீண்டு கொண்டாந்திடுவேன் .கொண்டைக்கடலை காய் பாக்க அழகா  யிருக்கில்லையா .பசேல்னு இருக்கு .தத்துவம் :))) ஹ்ஹா ரசிப்புக்கு நன்றிக்கா 

      Delete
  12. ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்க்கும்போது ஏகப்பட்ட நினைவுகள் இருக்குமே.... இருந்தாலும் வெகு காலத்துக்குப்பின் இடுகை போட்டிருக்கீங்க

    சின்ன வயதில் பார்த்த பட்டன் ரோஸ்... ரொம்ப அழகா இருக்கு. இப்போதுள்ள படத்தையும் போடுங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன் .இருக்கு இருக்கு நிறைய விஷயம் இருக்கு .நல்லனவற்றை கொஞ்சம் கொஞ்சமா எழுதறேன் பட்டன் ரோஸ் இப்போ பூக்கவில்லை செடி கிளைகள் வளர்ந்திருக்கு அடுத்த மாசம் பூக்கும் .கட்டாயம் பூத்ததும் படம் போடறேன் 

      Delete
    2. //சின்ன வயதில் பார்த்த பட்டன் ரோஸ்.///

      அதற்குப் பின் பார்க்கவே இல்லையோ நெ தமிழன்???

      Delete
  13. 2020ல் ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டது (மார்ச்சிலிருந்துதான் கொரோனா தாக்கம்). அதை மாத்திரம் நினைவுகூர்ந்தாலே நிறைய எழுதலாம்.

    பசங்க நம்மகூட இருப்பது மகிழ்ச்சி. ஆனால் அவங்களோட education life ரொம்பவே பாதிப்புக்கு ஆயிடிச்சு. எனக்கு, கல்லூரி திறந்து அவங்க ரெகுலர் படிப்புக்குப் போனா நல்லது எனத் தோன்றுகிறது. ஆன்லைன் வகுப்புலாம் ரெகுலர் வகுப்பு, அதன் சுறுசுறுப்பு இவற்றில் 90% காவு வாங்கிடுது

    ReplyDelete
    Replies
    1. அந்த கொரோனா தாக்கம் இங்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திடுச்சி நிறையபேருக்கு வேலை போச்சு பல கடைகள் நிரந்தரமா மூடியாச்சு :( பிள்ளைங்க கூட இருப்பது நல்லதுதான் ஆனா இந்த ஆன்லைன் வகுப்பு காதில் ஹெட் போன்  போட்டுட்டு பாடம் படிப்பது திகில் ஊட்டுது .நிறைய மென்ட்டல் ப்ரெஷர் ஹெல்த் ப்ராப்லம்ஸ்லாம் வருதாம் பிள்ளைகளுக்கு .

      Delete
    2. 2019 க்குள் யுனி போயிட்ட பிள்லைகள் பறவாயில்லை, ஏதோ யுனி என்றால் என்ன, லெக்சர் எனில் எப்படி இருக்கும், ஃபிரெண்ட்ஸ் ஆர் எண்டெல்லாம் சேர்ந்துவிட்டினம், ஆனா இந்த 2020 ல யூனி எண்டரான பிள்ளைகள் பாவமோ பாவம், ஆரம்பம் முதலே ஒன்லைன் ஸ்ரடீஸ்... யூனி தெரியாது, ஃபிரெண்ட்ஸ் தெரியாது.. இந்தா ஒரு வருடம் முடிவுக்கு வருகிறது, அப்போ அவர்கள் அந்த எஞோய் பண்ணும் பல்கலைக்கழக வாழ்க்கையின் ஒரு பகுதி சும்மாவே ஓடிவிட்டதே... அதை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது.

      எங்கள் மகனுக்கு நல்ல நண்பர்கள், அதனால சுற்றுகின்றனர், ஒன்றாகப் படிக்கின்றனர் பொழுது போகிறது... புதியவர்களின் நிலைமைதான் பாவம்.. இனியும் என்னாகுமோ தெரியாதே.. இந்த வருடமும் இப்படித்தான் போகப்போகிறது என்கின்றனர்...எங்களுக்கு டிசம்பரில் விட்ட ஹொலிடே இனி மார்ச்சிலதான் தொடங்கும் என்கின்றனர். அதுவும் சொல்ல முடியாது... ஒன்லைன் ஸ்ரடீஸ் ஆரம்பமாகி விட்டமையால.. திறக்கும் காலம் கூடலாம்..

      Delete

  14. ///திரும்பி பார்ப்பது நல்லதா கெட்டதா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி .///

    அழகான பெண்ணை திரும்பி பார்ப்பதை நல்லதா கெட்டதா என்பது அவர்கள் கூட வரும் கணவரை பொருத்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ட்ரூத் வாங்க :) ஹஹ்ஹா இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உங்களால் மட்டுமே முடியும் .ப்ளீஸ் உடனே ஒரு அழகான பெண்ணை  முடிஞ்சா மெலனியா  ட்ரம்பை திரும்பி பார்த்துட்டு எனக்கு சொல்லவும் :) மிஸ்ட் கால் கொடுத்தா போதும் .நானே விசாரிக்கிறேன் call போட்டு :)))))

      Delete
    2. மதுரைத்தமிழன்... அவங்க அப்படித் திரும்பிப் பார்க்கும்பொது கையில் என்ன வச்சிருக்காங்க, இரண்டு கால்லயும் செருப்பு இருக்குதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா?

      Delete
    3. நான் வயதான லேடியை எல்லாம் திரும்பி பார்ப்பதே இல்லைங்க

      Delete
    4. ட்ரூத் :) இது அநியாயம் :)))))))))))) அங்கிள் பார்த்தா அவ்ளோதான் 

      Delete
    5. ///Avargal UnmaigalJanuary 24, 2021 at 3:22 AM
      நான் வயதான லேடியை எல்லாம் திரும்பி பார்ப்பதே இல்லைங்க//

      ஆமா ட்றுத் ஆமா.. வயசாகிட்டாலே இப்பூடிப் பீலிங்ஸ் ஆண்களுக்கு வருவது இயற்கைதான் ஹா ஹா ஹா..

      ட்றம்ப் அங்கிளோடு சேர்த்து ட்றுத்தையும் நாடு கடத்தோணும்... தமிழ்நாட்டில போயிருந்து உப்பூடிப் பேசினாரெனில், சின்னமாமியுடன்.. பெரியமாமி வீட்டுக்கு அனுபிப் போடுவினம் கேப்பைக் களி சாப்பிடச்சொல்லி:))

      Delete
  15. மொச்சைக்கொட்டை செடி அழகு.

    இந்த ஊர்லதான் துவரை, மொச்சை, பட்டாணி (இதை சென்னைல பார்த்திருக்கேன்) எல்லாம் நாமே உரித்து எடுக்கும்படியாக விற்கறாங்க.

    நம்ம தோட்டத்தில் விளைந்ததை எடுத்து உபயோகிப்பதே சந்தோஷம்தான்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ் இது மொச்சையில்லை :) கொண்டை கடலை தோலோடு இருக்கு இருங்க உறிச்ச படத்தையும் இணைக்கிறேன் :)இங்கேயும்  ஆசியர் கடைகளில் துவரை ,கொண்டைக்கடலை அப்புறம் இன்னொரு குட்டி பீன்ஸ் அதுவும் தோலோட விற்கிறாங்க .ஸ்கொட்லான்ட்டில் அதெல்லாம் கிடைக்காது :)))எனக்கு பறிக்கவே மனமில்லை அவ்ளோ அழகு நிறைய ஊறவைத்த கடலையை அப்புறம் மக்கா  சோளத்தை அங்கங்கே நட்டுவைச்சேன் .என்னாச்சுன்னா நான் நட்டுன  இடத்தில ரெண்டு மூணு நாளில் எல்லாம் வெளியே கிடந்தது .நான் நட்டதை எடுத்துப்போட்டுட்டு எங்க தோட்ட  அணில்கள் அந்த இடத்தில  acorn புதைச்சிருக்குங்க :) 

      Delete
  16. புதிதா எதும் செய்ய மையற்சிக்கலை என்பது ஆச்சர்யம்தான்.

    உங்களுக்கு வேலைப்பளு குறையலை போலிருக்கு. வேலையில் கொரோனா தாக்கம் எப்படி இருந்தது?

    ReplyDelete
    Replies
    1. வேலை பிஸிதான் .கொரோனாதான் புதுசு புதுசா டிசைன் மாத்துதே மாஸ்க் ppe போடாம இருக்க முடியாதது .
      வாக்சின் போட்டாலும் ppe visor மாஸ்க் போடாம இருக்கக்கூடாதாம் 

      Delete
  17. /போன வருஷம் கிட்டத்தட்ட வருடத்தில் பலர் வீட்டில் இருந்து வேலை செய்தனர் ///


    வீட்டிலும் வேலைஸ் எய்து விட்டு வேலை இடத்திற்கும் சென்று வேலை பார்த்து வந்தேன் ஹும்ம் நானும் டீச்சராக இருந்து பலருக்கு தப்புதப்பாக சொல்லி கொடுத்து இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ட்ரூத் .நாம தப்பு பண்ணிட்டோம் .இதில் நான் ஏற்கனவே ஊரிலும் இங்கே வந்தும் ட்ரெயினிங் வேற எடுத்தேன் :)ஒருத்தர் பாருங்க ஸ்கூலுக்கு போகாம சேலரி வாங்கிட்டு quilt உள்ளே நல்லா தூங்கறாங்க :)

      Delete
    2. சேலரி வாங்கிட்டு சும்மா இருந்த கூடா பராவயில்லைங்க..... அவங்க சொல்லதராவிட்டால் புள்ளைங்க ஆன்லைனில் நல்லதை தேடி படித்து புரிந்து கொள்வார்களே அதுவே நல்லதுதான்

      Delete
    3. இந்தாங்கோ இந்தாங்கோ முதலில் இருவரும் மோர் குடிச்சிட்டு இந்தப் படத்தைப் பாருங்கோ:))

      https://i.pinimg.com/originals/0a/e9/65/0ae96567094c3c530fbd3686f825e05c.jpg

      Delete
  18. திரும்பிப் பார்க்கவே அச்சமூட்டும் ஆண்டு...  கஷ்டங்கள்  இன்னமும்தான் தொடர்கின்றன.  இரண்டாம் அலை இன்னும் மோசமாக இருக்கிறது என்கிறார்கள்.  இதுவரை இந்தியாவில் இரண்டாம் அலை பாதிப்பு இல்லை.  வருமா, அப்படியே சென்று விடுமா தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் .இங்கே பிரேசில் ,சவுத் ஆஃப்ரிக்கா னு விதவிதமா வெரைட்டிஸ் வந்தாச்சு .வெளிநாட்டினரை  உடனே இந்தியாவில் விடாதீங்க அதாவது வெளிநாட்டுக்கு போயிட்டு திரும்புவோர் 20 நாள் தனிமைப்படுத்தி இருக்கணும் .பலமணிநேரம் பிளைட்டில் இருக்காங்க இதெல்லாம் பொது சிந்தனை .பொறுப்பா நடக்கணும் அப்படி நடந்தா விரைவில் சரியாகும் நிலைமை 

      Delete
  19. கொரோனா வந்த காலத்தில் அனுபவிப்பது கொஞ்சம் கொடுமை என்றால் அது சென்ற உடன் அனுபவிப்பது இன்னும் அதிகம்.  

    ReplyDelete
    Replies
    1. வாசனை சுவை மேட்டரை சொல்றீங்களா ? எனக்கு 3 மாசமாச்சு சுவை முழுமையா தெரிய .வாசனை 95% தான் தெரியுது 

      Delete
  20. கொண்டைக்கடலையா அது!  பார்க்க வித்தியாசமாய் இருக்கிறது.  பாவக்கதைகள் சீரிஸில் மனதில் நிற்பவர் காளிதாஸ்.

    ReplyDelete
    Replies
    1. கொண்டைக்கடலைதான் ..இது காய்ந்ததும் நிறம் மாறும் .ஸ்ஸ்ஸ் அந்த பாவ கதைகள் மோசம்ப்பா .ஆனா அவர்கள் எடுத்ததில் உண்மைதானே நடந்ததுதானே .சாய்பல்லவி எபிசொட் பார்த்து 10 நாள் தூக்கம் போச்சு .சத்தார் அழ வச்சுட்டார் .

      Delete
  21. அழகான பட்டர் ரோஜாக்கள். பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பொழுதைப் பயனுள்ளதாய்க் கழிச்சதுக்குப் பாராட்டுகளும்/வாழ்த்துகளும். கொண்டைக்கடலையை இப்படியே விற்பார்கள் ராஜஸ்தான்/குஜராத்தில். வாங்கி நெருப்பு மூட்டி அதில் போட்டுச் சுட்டுச் சாப்பிடுவோம். அந்த ருசியே தனி. பால் மணக்கும் கொண்டைக்கடலைகள் உடலுக்கு ஆரோக்கியமும் கூட. குழம்பு வைத்தாலும் மணக்கும். எல்லாம் அனுபவிச்சாச்சு. முழுத்துவரையும் எங்க விட்டில் போட்டு விளைய வைத்துப் பார்த்துத் துவரைச் சுண்டல், சாம்பாரில்/கூட்டில் எனப் போட்டிருக்கோம். பட்டாணி தான் சரியாக வராமல் போச்சு. கொஞ்சம் கொஞ்சம் பெயருக்குக் கிடைக்கும். வெகு நாட்கள் கழிச்சு நல்லதொரு பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாக்கா .இந்த நெருப்பு மூட்டி சாப்பிடறது நானும் கேள்விப்பட்டேன் .இங்கே எதை போட்டாலும் முளைக்கும் ஆனா வெயில் இல்லைனா வாடிடுது .மணத்தக்காளி முளைக்கீரை பசுபுசுன்னு வந்தது கிழங்கு வந்தது .இந்த வருஷமும் போடணும் .இங்கும் தோலுடு கொண்டைக்கடலை கிடைக்குது .மிக்க நன்றிக்கா .

      Delete
  22. வருக... உற்சாகத்துடன் தொடர்க...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தொடர்ந்து எழுதறேன் சகோ .மிக்க நன்றி 

      Delete
  23. வந்த பாதையை திரும்பி பார்ப்பது நன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ உண்மைதான்.அப்போதான் நம்மை சீர்தூக்கிப்பார்க்கவும் உதவும்  மிக்க நன்றி 

      Delete
  24. திரும்ப திரும்ப திரும்பிப்பார்ப்பதும் ஒரு கொடுமைதான் கொர்னா காலத்தில்![[[

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நேசன் மனதை உறைய வாய்த்த சம்பவங்கள் நிறைய இருக்கு நல்லதை மட்டும் திரும்பி பார்ப்போம் 

      Delete
  25. கொண்டைக்கடலை அழகாய் வந்திருக்க்கு இங்கே தோட்டம் போட ஏது இடம்![[ படம்/ஏதும் பார்க்கும் ஆவம்மில்லை! பார்ப்போம் தொடரை தூசுதட்டி வலையை இனி கலகலப்பாக்குவோம்![[

    ReplyDelete
    Replies
    1. வாங்க நேசன் .இதை முன்பு grow bag லையும் வளர்த்தேன் ஆனா இவ்ளோ செழிப்பா வரலை .தொட்டியிலும் வளர்க்கலாம் .தொடரா ? எழுதுங்கள் தொடரலாம் கும்மியை 

      Delete
  26. நீங்க திரும்பிப்பார்த்த போது அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டிரம்ப் குறுக்கே விழுந்திட்டாரோ என்று ஒரு நிமிடம் ஷாக் ஆயிட்டன்![[

    ReplyDelete
    Replies
    1. ஹாஹ்ஹா நேசன் :) ட்ரம்ப் அங்கிள் தான் தனி உலகத்தில் இருக்காரே :) அவர் இருக்கார்னா நானா திரும்பவே மாட்டேனாக்கும் :)

      Delete
  27. ஹாய் அஞ்சு. நீண்டநாளைக்குபின்.. நலம்தானே. திரும்பிபார்க்க பயமா இருக்கு. 2020 மோசமான,கசப்பான அனுபவங்கள்,சம்பவங்கள் என வந்து போனது. ஒன்றிலும் மனம் ஒட்டாமலே இருக்கு. க்றிஸ்மஸ்,நியூஇயர் எல்லாம் சுவாரஸ்யமில்லாமல் கவலையுடன் போய்விட்டது. இப்போதான் மனதை டைஏர்ட் பண்ண வேணும் என எண்ணம். அதனால்தான் திரும்பி பார்க்க முடியாமல் இருக்கு.
    நான் இப்போதான் கொ.கடலை செடி பார்க்கிறேன்.பார்க்க முருங்கையிலை மாதிரி இருக்கு.
    பட்டன் ரோஸ் பார்க்க அழகா இருக்கும். விண்டர் போய் சம்மர் வந்தால்தான் நல்லாயிருக்கும்.
    இங்கும் பெப்ரவரி 14 மட்டும் லாக்டவுன்.எல்லாமே online தான்.
    நானும் வல்லமை தாராயோ பார்க்கிறேன். நல்லாயிருக்கு.ரெம்ப நாள் கழிச்சு பார்த்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ப்ரியா :) நலம்தானே ..நான் திரும்பி பார்த்தது நல்லவற்றை மட்டும் :) கெட்டதுதெரிஞ்சப்போ ஸ்க்ரீன் போட்டு மூடிட்டேன் . அது ஊர்பட்டது இருக்கு :( ஹயோ கொஞ்சமா நஞ்சமா தெரிந்து தெரியுமான்னு மனதை பதறவைத்த விஷயம்நிறைய நடந்து முடிஞ்சே .=====================================
      நீங்களும் ட்ரை பண்ணுங்க தொட்டியிலும் வளரும் கொண்டைக்கடலை .இரவு ஊறப்போட்டு அடுத்தநாள் நடுங்க .ஆனா நடும்போது பறவைகள் கண்ணுக்குப்படாம நடுங்க .எங்க வீட்ல அணில் கொஞ்சம் தோண்டிப்போட்டிருக்கு ஆனா மகள் சொல்றா ஜெஸியும் நானா நட்ட இடத்தையெல்லாம் கிளறிக்கிட்டிருந்ததுன்னு !!! வல்லமை தாராயோ நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் தான் போடறாங்க .அந்த நாத்தனார் /சித்தார்த்  மட்டும் என்கையில் கிடைச்சா அவ்ளோதான் :) 

      Delete
  28. Welcome back! நீங்களும் எழுதுங்கள், அப்படியே மற்றவர் பதிவுகளையும் எட்டிப் பாருங்கள்.

    ReplyDelete
  29. வாங்க ...வாங்க ...அஞ்சு

    திரும்பி பார்க்கும் போது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித அனுபவம் ....


    நல்லதை மட்டும் மனசில வச்சுப்போம் ...

    ஆரம்பத்தில் online கிளாஸ் நல்லாவே போச்சு ...இப்போ பசங்களுக்கு உட்காரவே முடில ...பாவம் ரொம்ப சிரம்ம படுறாங்க ...ம்ம்ம் அடுத்த மாசம் இவங்களுக்கு ஸ்கூல் திறக்கறதா சொல்லி இருக்காங்க பார்ப்போம் ...

    குட்டி ரோஜா அழகு ..

    கொண்டைக்கடலை பயிர் ...சூப்பர் ..

    ReplyDelete