அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Monday, August 03, 2020

 பில்லா :)                                                             

                           எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்ச கேரக்டர்  பெயர் பில்லான்னு வைச்சிட்டேன் .ஒரிஜினல் பில்லா கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி சித்தப்ஸ்க்கும் இந்த பதிவில் வரும் பில்லாவுக்கும் கொஞ்சம் ஏறக்குறைய ஒற்றுமைகள் உண்டு . வயசானாலும் சித்தப்ஸ் மாதிரியே இவருக்கும் அழகும் ஸ்டைலும் குறையவேயில்லை .அப்புறம்  இவருக்கும்  பில்லா படத்தில் வரும் ஹீரோ வுக்கு  ஸ்ஸ்ஸ்ஸ் அதாவது அந்த கதாபாத்திரத்துக்கு இருப்பதுபோல் பல பெண் நண்பிகள் ,
                           
                             பில்லா   எங்க ஏரியாவின் அசைக்கமுடியா தாதா . சித்தப்ஸ்குனு ஒரு தனி குரல் இருப்பதுபோல் இந்த பில்லாக்கும் தனி தொனி உண்டு :)  சுமார் பல ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஏரியாவை தனது கைக்குள் வைத்திருக்கிறார் இந்த முடிசூடா மன்னன் .வேறே ஆண் பூனைகள் இந்த ஏரியாவுக்குள் நுழைய முடியாது பில்லாவை தாண்டி .ஒருமையில் ஆரம்பித்து பன்மையில் கொண்டுசெல்கின்றேன் :)இந்த பில்லாவுக்கும் வீடுபுகுந்து களவு செய்வதில் பேரானந்தம் .


அதுவும் bay விண்டோஸ் வழியே கிச்சன் ஜன்னலில் வீட்டுக்குள் நுழைந்து விடுவார் .இவர் கால்படாத வீடுகள் குறைவு எங்க பகுதியில் .நானே என் கண்ணால் பார்த்து அதிசயித்து போயிருக்கேன் !!! பூனைபாதத்தில் சத்தமில்லாம ஒரு வீட்டின் ஜன்னல் வழியே உள்ளிருந்து வெளியேறினார் :)இவ்வளவு ஏன் நாங்கள் மூவரும் ஒருமுறை வெளியே சென்று வீட்டுக்கு  திரும்பினா ஜெசி எங்களை பார்த்ததும்  எதையோ சொல்ல வந்தா .பிறகு மேலே ஓடினாள் அங்கே மகளின் ஸ்டடி டேபிளுக்கு கீழே பில்லா ஒளிந்திருந்தான் :) .

இப்படி ஆளில்லா வீடுகளில் புகுந்து அழிச்சாட்டியம் புரியும் கள்வன்   பில்லாவுக்கு பயந்து ஜன்னலை மூடி வைப்போம் .ஆனாலும் பில்லாவுக்கு சில நற்குணங்களுண்டு .அது பறவைகள் எலி எதையும் திரும்பியும் பார்க்க மாட்டார் .ஒரு நாள் நான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஜெசி ஒளிந்து ஒரு புறாவை பிடிக்க எத்தனித்தபோது வேகமாய் சென்று ஒரு பளார் விட்டு துரத்தினார் .எங்க ஜெசிக்கு ரொம்ப பயம் பில்லாவை பார்த்தால் .பில்லா என்னமா ரோட் க்ராஸ் செய்வார் தெரியுமோ !!! மனுஷங்க வேஸ்ட் ,நிதானமா இருபக்கமும் பார்த்தே ரோட் க்ராஸ் பண்ணுவார் பில்லா . 

பில்லா எதிரிகளுடன் போரிட்டு விழுப்புண்ணுடன் வரும்போது உணவு கொடுக்கும் சாக்கில் அந்த அடிபட்ட இடங்களில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காயங்களை சரிபடுத்தியிருக்கேன் .அந்த நன்றியோ என்னமோ அந்த ஜீவன் எப்பவும் என்னை அன்போடு அணுகும் சோஷியல் டிஸ்டன்ஸ் ஸ்ட்ரிக்ட்டா பின்தொடர்கிறார் இப்பவும் .அவரது ஒரு பெண் தோழி எங்கள் மல்ட்டி !!!

                                                                           
சரி பில்லா யாருன்னா எங்க வீட்டுக்கு 5 வது வீட்டில் ஒரு பாகிஸ்த்தானியர் குடும்பம் உண்டு ,முந்தி ரெண்டு பூனைக்குட்டிகளை காப்பாற்ற உதவினார் அவர் பில்லாவின் அண்ணன் :) 
தினமும் பில்லா காலைவணக்கம் சொல்லி என் கையால் உணவு சாப்பிட்டு தான் போவான் .என் கணவர் கொடுத்தா சாப்பிட மாட்டான் என்னை தேடுவானாம் :)))))))) இன்று காலை வணக்கம் சொன்னப்போ எடுத்த படம் .
                                                                       
இந்த பில்லா போனா வாரம் தொடர்ந்து 3 நாட்கள் காணவில்லை  ஆள்  அப்ஸ்காண்டிங் .அந்த பாகிஸ்தானியர் வீட்டு முன் நிறைய கூட்டம்  எல்லாரும் அமைதியாய் வெள்ளுடையில் ஏனோ  மனம் பதைபதைத்தது . பூனைக்கு இவ்ளோ மரியாதய்யான்னு மனம் குறுகுறுன்னு இருந்தது !!! பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன் என்னதான் இருந்தாலும் என் கையால் சாப்பிட்ட ஜீவன் என்னுடன் அன்பாய் பழகிய ஜீவன் .ஒரு குட்டி அடியாள் எனக்கு என்று என் கணவர் சொல்லும் அளவுக்கு நட்பு பாராட்டிய ஜீவன் ஆயிற்றே :( .

(இன்னுமொரு விஷயம் இங்கே வட இந்தியர் பாகிஸ்தானியர் ஒரே கூட்டுக்குடும்பமாக அருகருகில் வசிப்பார்கள் 4 வீடுகளை வரிசையா வாங்கி அம்மா அம்மம்மா அண்ணன் தங்கை என்று இருப்பாங்க இந்த பாட்டி அந்த டாக்சி ஓட்டுபவரின் மூத்த அக்கா வா அம்மாவானு தெரியலை அவங்க வீட்டில் 4 பாட்டிகள் இருக்காங்க அதில் மூவர் தோட்டத்துக்கு வந்து பறவைகளுக்கு உணவிடல் பில்லாவை கவனித்தல்னு இருப்பாங்க )

 மூன்றாவது நாள் காலை அவனுடைய ட்ரேட்மார்க் தொனியில் மி.யாவ் என்று ஒரு தொனி  கேட்டது கிச்சன் கதவை  திறந்தா :) !!மை வளர்ப்பு பிள்ளை பில்லா !!! வந்து சாப்பிடலை ஆனா என்னமோ சொல்லிட்டு போச்சு ..பூஸ் மொழியில் யாம் இன்னும் வல்லமை பெறாமையால் புரியவில்லை . ஆனா பில்லா பத்திரமா இருக்கான் என்பதே பெரிய திருப்தி .பிறகும் மூன்றுநாள் எட்டியும் பார்க்கலை சரியா 5 வது நாள் வந்து எங்க வீட்டுக்கு பின்  உள்ள பெட்டிமீது வந்து படுத்தான் .
                                                                                


பிறகு கேள்விப்பட்டது அவனுடைய பாட்டியார் ஒருவர் சாமிகிட்ட போய்ட்டாராம் . பிறகு  புரிந்துகொண்டது அதனால் இவன் அந்த 5 நாட்கள் எங்கும் போகலை துக்கம் அனுஷ்டித்திருக்கான் நான் கவலைப்பட்டு தோட்டத்துக்கும் வீட்டுக்குமாய் நடந்து  தேடியது அவனுக்கு புரிந்ததால் தெரிந்ததால் எனக்கு முகம் காட்டிவிட்டு தனது இருப்பை தெரிவித்து சென்றுள்ளான் ..

பூனைக்கும் அறிவிருக்கிறது .அந்த பாட்டி தினமும் இவனுக்கு  தோட்டத்தில் உணவிடுவதை பார்த்திருக்கிறேன் .

அப்புறம் பில்லா பெயரின் அர்த்தம் இதுவாம் /// Billa name meaning in Hindi is A Person whose Eyes are in Brownish Like Cat Eyes///

                              ************************************************

43 comments:

 1. பில்லா...   சுவாரஸ்யமான கேரக்டர்.  அது துக்கம் அனுஷ்டித்தது என்பது உங்கள் கற்பனையா என்று தெரியவில்லை, ஆயினும் சுவாரஸ்யம்.  நீங்கள் தேடியதால் வந்து முகம் காட்டி விட்டுச் சென்றதாய் நீங்கள் நம்புவதும் சுவாரஸ்யம்.  அழகாய் இருக்கிறான் பில்லா.   பில்லி என்றால் தெலுங்கிலும், ஹிந்தியிலும் பூனை என்று அர்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) நான் உண்மையில் பயந்திட்டேன் அவனை காணோம்னு எத்தனை முறை நடந்திருப்பேன் தெரியுமா ! தோட்டத்துக்கு போய் மூளை முடுக்கெல்லாம் தேடினேன் சில நேரம் புல்லில் படுத்திருப்பான் ..காணோம்னு பதறினது அவனுக்கு தெரிஞ்சிருக்கும் .சினிமா சீன்சில் ஹீரோயின் திரும்புவார்னு நினைக்கும்போது திரும்புவார் அதெல்லாம் நம்பறாப்ல இதையும் நம்பியே ஆகணும் :))))))))) 
   அப்புறம் நான் பில்லாவை சுருக்கமா பில் னு சொன்னா கணவர் சொல்வார் தயவுசெஞ்சு தாதாவை பில் கிளிண்டன் ஆகிடாதீங்கன்னு :)

   Delete
 2. வாயில்லா ஜீவன்களுக்கும் எத்தனை அறிவு இருக்கிறது. பாவம் பில்லா! எதிர்பார்ப்பில்லாமல் அன்பு வைக்கும் ஜீவன்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா .உண்மைதான் இப்போல்லாம் ஜீவன்கள் நம்மை நம்பி அண்டி வராங்க அந்த நம்பிக்கையை எல்லா மனுஷங்களும் புரிஞ்சிக்கணும்க்கா .அன்பான ஜீவன்கள் 

   Delete
 3. அது சரி. பில்லா பாட்டி பரலோகம் போனது போல பூசாரின் பாட்டியும் ? ரொம்ப நாளாக பூஸாரை காணவில்லை.  
  பில்லா என்பது பூனை என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் சொல்லியிருந்தீர்கள் என்றால் ஒரு அருமையான சிறுகதை ஆகியிருக்கும். ஆமாம் நேற்று எங்கள் பிளாகில் பூனை கதை படித்தவுடன் இது எழுதத் தோன்றியதோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே சார் :) பாருங்க  மை பில்லா கீழே ரெண்டுகால் பூசார அழைச்சிட்டு வந்திருக்கான் :)ஹிஹி :) நான் அனுபவங்களை அப்டியே எழுதிடுவேன் கதையாக எழுத வராதே :)) 
   ///ஆமாம் நேற்று எங்கள் பிளாகில் பூனை கதை படித்தவுடன் இது எழுதத் தோன்றியதோ?//
   உங்கள் பின்னூட்டம் பார்த்து அங்கே சென்றேன் ஏகாந்தன் சார் ஸ்டோரி இன்னும் படிக்கலை .ஆனா என் போஸ்ட் திங்கள் நைட் யூகே டைம் 11 மணிக்கே போட்டிருக்கேன் என்ன ஒரு ஒற்றுமை ..ஆச்சர்யமா இருக்கு .மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் 

   Delete
 4. //அதுவும் bay விண்டோஸ் வழியே கிச்சன் ஜன்னலில் வீட்டுக்குள் நுழைந்து விடுவார் .இவர் கால்படாத வீடுகள் குறைவு எங்க பகுதியில் .நானே என் கண்ணால் பார்த்து அதிசயித்து போயிருக்கேன் !!! பூனைபாதத்தில் சத்தமில்லாம ஒரு வீட்டின் ஜன்னல் வழியே உள்ளிருந்து வெளியேறினார் :)இவ்வளவு ஏன் நாங்கள் மூவரும் ஒருமுறை வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினா ஜெசி எங்களை பார்த்ததும் எதையோ சொல்ல வந்தா .பிறகு மேலே ஓடினாள் அங்கே மகளின் ஸ்டடி டேபிளுக்கு கீழே பில்லா ஒளிந்திருந்தான் :)//

  ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடியலை...ஜெஸி ச்சோ ஸ்வீட்டு

  இன்று எபியிலும் இந்த பில்லா போலவே ஒரு பூஸார் குடையுடன் இருப்பதைப் பார்த்தேன். இனிதான் போய் வாசிக்கணும்

  பதிவு வாசிக்கத் தொடங்கியதுமே புரிஞ்சு போச்சு இது நம்ம செல்லங்கள் பத்தினதுன்னு!!!

  கீதா


  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :) அந்த காட்சியை வீடியோவா எடுத்திருக்கணும் //அம்மா நம்ம வீட்ல திருடன் //அப்படீன்னு ஜெசி பதறின காட்சி நிஜம்மா சுவீட் :) நானும் எபி போகணும் இனிதான் 

   Delete
 5. ஆனாலும் பில்லாவுக்கு சில நற்குணங்களுண்டு .அது பறவைகள் எலி எதையும் திரும்பியும் பார்க்க மாட்டார் .ஒரு நாள் நான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஜெசி ஒளிந்து ஒரு புறாவை பிடிக்க எத்தனித்தபோது வேகமாய் சென்று ஒரு பளார் விட்டு துரத்தினார்//

  அட அட! ரசித்தேன் நினைத்து நினைத்து!! ஹா ஹா ஹா பாருங்க தாதாவானாலும் நல்ல குணம். நம்ம தமிழ்ப்படத்து ஹீரோ போலவே இருக்காரே!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா ஆமாம் கீதா இவர் ராபின்ஹுட் தாதா வகை ஒரிஜினல் பில்லா போலத்தான் .திருடனா இருந்தாலும் கொள்கைதிருடன் 

   Delete
 6. எங்க ஜெசிக்கு ரொம்ப பயம் பில்லாவை பார்த்தால் .பில்லா என்னமா ரோட் க்ராஸ் செய்வார் தெரியுமோ !!! மனுஷங்க வேஸ்ட் ,நிதானமா இருபக்கமும் பார்த்தே ரோட் க்ராஸ் பண்ணுவார் பில்லா . //

  பின்ன ஏரியாவையே வளைச்சுப் போட்டிருக்கார். நல்லா தெரிய்மாக்கும்.

  இங்கும் நம் வீட்டைச் சுற்றி ஒரு பூஸார் வளைய வந்து கொண்டிருக்கிறார். படம் எடுத்து வைச்சிருக்கேன். ரோடை அழகா க்ராஸ் செய்வார்.

  தெருவில் பழகிய பைரவர்களும் கூட ரோடை அழகா வெயிட் பண்ணி க்ராஸ் செய்வாங்க. சென்னைல கரெக்ட்டா ஜீப்ரா லைன் ல க்டப்பாங்க!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா கீதா டிராபிக் லைட்டெல்லாம் பார்த்தே கிராஸ் செய்வாங்க நாலுகால் செல்லம்ஸ் :) 

   Delete
 7. பில்லா எதிரிகளுடன் போரிட்டு விழுப்புண்ணுடன் வரும்போது உணவு கொடுக்கும் சாக்கில் அந்த அடிபட்ட இடங்களில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காயங்களை சரிபடுத்தியிருக்கேன் .அந்த நன்றியோ என்னமோ அந்த ஜீவன் எப்பவும் என்னை அன்போடு அணுகும் சோஷியல் டிஸ்டன்ஸ் ஸ்ட்ரிக்ட்டா பின்தொடர்கிறார் இப்பவும் .அவரது ஒரு பெண் தோழி எங்கள் மல்ட்டி !!!//

  ஹா ஹா ஹா ஹா விழுப்புண்!!! அதுக்கு உணவு, மருந்து என்று சூப்பர் ஏஞ்சல். ஏஞ்சல் ஏஞ்சல் தான்...

  இங்கும் பைரவர்கள், இப்ப நம்ம வீட்டைச் சுற்றி வரும் பூஸாருக்கு உணவு கொடுப்பதால் நம்ம ஃப்ரென்ட் ஆகிட்டாங்க. அப்படியே நைசா ஸ்கின் பிரச்சனைக்கு குறிப்பா பைரவருக்கு மருந்து அப்ளை செய்துவிடுவதுண்டு. பூஸார் இப்பதான் ஃப்ரென்ட் ஆகிட்டுருக்கு!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதையேன் சொல்வானேன் விழுப்புண்கள் ரணகளமா இருக்கும் பார்க்க பாவமா .நான் நைசா மருந்து போடுவேன் அதுக்கே தெரியாது நான் போடுவது 

   Delete
 8. பில்லாவோடு மல்டி தானே? படத்தில்?

  ரெண்டும் செம க்யூட்டா பாக்குது! கொஞ்ச வேண்டும் போல இருக்கு

  ஒரு நிமிஷம் பதைபதைத்துவிட்டேன் ஹையோ கூட்டமா? பில்லா ஏன் வரலை என்று ஹப்பா //மூன்றாவது நாள் காலை அவனுடைய ட்ரேட்மார்க் தொனியில் மி.யாவ் என்று ஒரு தொனி கேட்டது கிச்சன் கதவை திறந்தா :) !!மை வளர்ப்பு பிள்ளை பில்லா !!! வந்து சாப்பிடலை ஆனா என்னமோ சொல்லிட்டு போச்சு ..பூஸ் மொழியில் யாம் இன்னும் வல்லமை பெறாமையால் புரியவில்லை . ஆனா பில்லா பத்திரமா இருக்கான் என்பதே பெரிய திருப்தி .பிறகும் மூன்றுநாள் எட்டியும் பார்க்கலை சரியா 5 வது நாள் வந்து எங்க வீட்டுக்கு பின் உள்ள பெட்டிமீது வந்து படுத்தான் .//

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா மல்ட்டியேதான் :)

   Delete
 9. பிறகு கேள்விப்பட்டது அவனுடைய பாட்டியார் ஒருவர் சாமிகிட்ட போய்ட்டாராம் . பிறகு புரிந்துகொண்டது அதனால் இவன் அந்த 5 நாட்கள் எங்கும் போகலை துக்கம் அனுஷ்டித்திருக்கான்//

  ஏஞ்சல் இவர்களுக்கும் இதெல்லாம் உண்டு. உங்களிடம் அவன் சொன்ன நியூஸ் பாட்டி போயிட்டாங்க மனசு கஷ்டமாகிடிச்சு அதான் வரலை...அப்படின்னு சொல்லிட்டுப் போயிருக்கான்

  நான் கவலைப்பட்டு தோட்டத்துக்கும் வீட்டுக்குமாய் நடந்து தேடியது அவனுக்கு புரிந்ததால் தெரிந்ததால் எனக்கு முகம் காட்டிவிட்டு தனது இருப்பை தெரிவித்து சென்றுள்ளான் ..

  பூனைக்கும் அறிவிருக்கிறது .அந்த பாட்டி தினமும் இவனுக்கு தோட்டத்தில் உணவிடுவதை பார்த்திருக்கிறேன் .//

  கண்டிபபா அனு இவங்களுக்கும் அறிவு உணர்வுகள் எல்லாம் உண்டு. நாம்தான் அவங்க மொழியைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிறோம் சில சமயங்களில். பெரும்பாலும் நாம் வளர்ப்பவை சொல்வது புரிந்து விடும்.

  இருங்க செபிய பத்தி ரெண்டு வார்த்தை சொல்லிட்டுப் போறேன் ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கீதா .ரெண்டுகால் பூசாரிடம் ட்ரெயினிங் எடுக்கணும் இதற்க்கு .எனக்கு வரவேண்டியையா பாக்கி  சொல்லித்தருவாங்கன்னு நினைக்கிறன் :)

   Delete
 10. செபியை நேற்று வீடியோவில் பார்த்தப்ப, அதான் அவங்க சண்டே நைட்...

  நான் சும்மா மியாவ் நு அதே த்வனியில் சத்தம் போட்டதும் ஓடி வந்து மகனின் தோளில் ஏறி மொபைலை உத்துப் பார்த்தான். மகன் மியாவ் என்றதும் கையால் அவன் முகத்தைத் தட்டுகிறான். நான் சொன்னதும் முதலில் மொபைலைத் தட்டியவன் அப்புறம் மகனின் முகத்தைத் தட்டிக் கொண்டே இருந்தான் நன்றாகக் கவனிக்கிறான். நல்லா வளர்ந்திருக்கான். எனக்குப் போய் விளையாட வேண்டும் போல இருந்தது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஸோ ஸ்வீட் .எங்க ஜெசி மல்ட்டி கேட் கேம்ஸ் விளையாடுவாங்க கம்பியூட்டர் மொபைலில் 

   Delete
 11. அப்புறம் பில்லா பெயரின் அர்த்தம் இதுவாம் /// Billa name meaning in Hindi is A Person whose Eyes are in Brownish Like Cat Eyes///

  அட!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா மிக்க நன்றி அனைத்து பின்னூட்டப்பரிமாற்றங்களுக்கும் 

   Delete
 12. என்னவொரு அன்பு...! பில்லா மனதை கவர்ந்து விட்டான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மிக்க நன்றி :)

   Delete
 13. "அந்தப் பாட்டி" - இது பூனைப் பாட்டியா இல்லை பாகிஸ்தான் பாட்டியா? ஒரே குழப்பம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் ..என் பதிவில் வருபவர் ///பாகிஸ்தானிய பாட்டி ///
   ..ஜெசி மல்ட்டியின் பேரன்ட்ஸ் நாங்கதான் :)முந்தி மியாவ் மியாவ்ன்னு 2 பூஸ் குட்டீசை காப்பாற்றினது பத்தி போஸ்ட் போட்டிருந்தேன் அதில் வந்தவர் பில்லாவின் ரெண்டு கால் பிரதர் பாகிஸ்தானியர் .அந்த பதிவு ஆக்சிடண்டா ஜெசி  லாப்டாப்பில் ஏறி நடக்கும்போது பாதி பின்னூட்டம் அழிந்து அதனால் எடுத்துட்டேன் .

   Delete
 14. ஆஆஆஆ ஒரு பில்லாவை அனுப்பி ஒரு ஜிங்கத்தை ஜீண்டி விட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)... புளொக் வாசமே இல்லாமல் இருந்தேன் , மெயில்ல பில்லாவை அனுப்பிப் படிக்க வச்சு என்னைக் களம் இறக்கிட்டீங்க....
  பில்லாவைப் பார்த்த பின்னரும் வராமலிருக்க முடியவில்லை...
  பில்லாவுக்கு நூறு வயசு!!!

  ReplyDelete
  Replies
  1. அஆவ் !!! வாங்க மியாவ் வருகா வருக .உங்களோட சொக்லேட் கேக் செஞ்சோம் படம் எடுக்கலை மன்னிச்சூ ப்ளீச் :)வேறே போஸ்டனா சொல்லியிருக்க மாட்டேன் இது உங்க உறவினர்தானே கட்டாயம் பிடிக்கும்னு அனுப்பினேன் :)பில்லாவுக்கு 100 தான் அப்போ உங்களுக்கும் தானே :))))))))))))))) 

   Delete
  2. ஆஹா! ஞானவல்லி தன்னோட நெருங்கிய சிநேகிதியோட பதிவுக்கு மட்டும் தான் வந்து கருத்துச் சொல்லுவாங்களாம். இது என்ன அநியாயமா இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  3. எப்படி இருக்கீங்க ஞானவல்லி? ஒரு மாசத்துக்கும் மேலே ஆச்சு பார்த்து. இரண்டு பேருமே பேசி வைச்சுட்டு விடுமுறை எடுத்தீங்க போல! நல்லவேளையா நேற்று ஏஞ்சல் வந்ததால் இருவரும் நலம் எனப் புரிந்தது.

   Delete
  4. அதிரா, பள்ளி ஆரம்பித்து விட்டதா? ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறீர்களா?

   விடுமுறையை நன்கு ரசித்து குழந்தைகளுக்கு வேண்டும் என்பதை செய்து கொடுத்து இன்னும் நிறைய முடிக்க வேண்டிய (தையல்) வேலைகளை முடித்து விட்டீர்களா?

   Delete
 15. ///பூஸ் மொழியில் யாம் இன்னும் வல்லமை பெறாமையால் புரியவில்லை //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்😻😻😻😻

  ReplyDelete
  Replies
  1. ஹலோ எச்சூஸ்மீஈ எனக்கு வரவேண்டிய சம்பளபாக்கிக்கு கொஞ்சம் டியூஷன் எடுங்களேன் ப்ளீச் :)))))))))))))))))))))))

   Delete
 16. பில்லா எதிரிகளுடன் போரிட்டு விழுப்புண்ணுடன் வரும்போது உணவு கொடுக்கும் சாக்கில் அந்த அடிபட்ட இடங்களில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காயங்களை சரிபடுத்தியிருக்கேன் .அந்த நன்றியோ என்னமோ அந்த ஜீவன் எப்பவும் என்னை அன்போடு அணுகும் சோஷியல் டிஸ்டன்ஸ் ஸ்ட்ரிக்ட்டா பின்தொடர்கிறார் இப்பவும் .அவரது ஒரு பெண் தோழி எங்கள் மல்ட்டி !!!// அன்பு ஏஞ்சல்,
  படிக்கப் படிக்க ஆனந்தம். எத்தனி புத்திசாலி போக்கிரி இந்த ''பில்லா''
  நன்றாக இருக்கட்டும்.
  இந்த வாரம் பூஊஊஊஊஊஊஊனை வாரம்:)

  உங்கள் இதய மென்மை அதிசயிக்க வைக்கிறது.
  ஜெசி, மல்டி மற்றும் உங்கள் இரண்டு கால் மகளுக்கும் இனிய வாழ்த்துகள்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) வாங்க வல்லிம்மா அதேதான் இவ்வாரம் பூனை வாரம் எனக்கோ எப்பவுமே பூனைகள் வாரம்தான் :)ஆனா ஒரு கவலை இந்த பில்லா ரவுடியிசமில் பிரபு என்ற அழகு குண்டுமகன் இந்தப்பக்கம் வர்ரதில்லை .பில்லா நிஜமான அறிவாளிதான் எனக்கே ஆச்சர்யம் அவனுக்குன்னே புல்லை வெட்டாமல் வச்சிருக்கோம் ..படுத்து தூங்கறான் ஒரு ஏரியாவில் :)

   Delete
 17. //ஜெசி ஒளிந்து ஒரு புறாவை பிடிக்க எத்தனித்தபோது வேகமாய் சென்று ஒரு பளார் விட்டு துரத்தினார் .எங்க ஜெசிக்கு ரொம்ப பயம் பில்லாவை பார்த்தால் .பில்லா என்னமா ரோட் க்ராஸ் செய்வார் தெரியுமோ !!! மனுஷங்க வேஸ்ட் ,நிதானமா இருபக்கமும் பார்த்தே ரோட் க்ராஸ் பண்ணுவார் பில்லா . ///

  முரட்டு குணம் இருந்தாலும் எல்லோர் கிட்டேயும் அன்பாய் இருந்து இருக்கிறார் பில்லா.

  //உணவு கொடுக்கும் சாக்கில் அந்த அடிபட்ட இடங்களில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காயங்களை சரிபடுத்தியிருக்கேன்//

  அப்புறம்! பாசமான் அம்மாவைதேடி வரும் தான்.

  //அவனுடைய பாட்டியார் ஒருவர் சாமிகிட்ட போய்ட்டாராம் . பிறகு புரிந்துகொண்டது அதனால் இவன் அந்த 5 நாட்கள் எங்கும் போகலை துக்கம் அனுஷ்டித்திருக்கான் நான் கவலைப்பட்டு தோட்டத்துக்கும் வீட்டுக்குமாய் நடந்து தேடியது அவனுக்கு புரிந்ததால்

  தெரிந்ததால் எனக்கு முகம் காட்டிவிட்டு தனது இருப்பை தெரிவித்து சென்றுள்ளான் ..//

  பில்லாவின் பாசம் . நீங்கள் சொல்வது உண்மைதான். விருப்பமானவர்களிடம் காலை சுற்றி சுற்றி வரும். அவர்களை காணவில்லை என்றால் மனம் வாடும் தான்.

  படங்கள் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிக்கா ..பில்லா மட்டுமில்லை பிரபுவுக்கும் மறுந்துபோட்டுவிடுவேன் பிரபுவை இப்போ பில்லா இப்பக்கம் வர விடறதில்லை .பில்லா பார்க்க முரடா இருந்தாலும் அன்பானவன் .மிக்க நன்றி அக்கா .

   Delete
  2. புறாக்கள் ஓட்டுக்கு மேலிருந்து சைடவேஸில் தலையசைத்து உணவு கேட்குறாங்கக்கா :) அதுங்களுக்கு நான் இருக்கும் இடம் தெரியுது தானே ஆச்சர்யம்க்கா 

   Delete
 18. //ஆனாலும் பில்லாவுக்கு சில நற்குணங்களுண்டு .அது பறவைகள் எலி எதையும் திரும்பியும் பார்க்க மாட்டார் .ஒரு நாள் நான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஜெசி ஒளிந்து ஒரு புறாவை பிடிக்க எத்தனித்தபோது வேகமாய் சென்று ஒரு பளார் விட்டு துரத்தினார்// Wow! What a man!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுக்கா :) இந்த வடிவேலு வீரப்பா போகும்போது எதிரில் பார்த்திபன் வருவாரே அப்டித்தான் இருந்துச்சி அந்த காட்சி .இன்னொரு வீட்டின் பின் தோட்டத்தில் பெரிய ட்ராம்போலின் அப்புறம் பேர்ட்ஸ்க்கு மினி ஹோட்டல் வித் bird feeder அமைத்திருந்தாங்க இவ ஏறி மெதுவா சாப்பிடற பறவைகளை பிடிக்க எத்தனிச்சப்போதான் குறுக்கால பில்லா தடுத்தான் :))

   Delete
 19. பதிவுகளை காணவில்லையே என்று வந்தேன்.

  பில்லாவை பற்றி அறிந்தேன் ஐந்தறிவுகளுக்கு இருக்கும் நேசம்கூட சில ஆறறிவுகளுக்கு இல்லையே....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க . கொஞ்சம் நாள் ரொம்ப பிசியில் பிளாக்கை மூடி வச்சிருந்தேன் அது புது போஸ்ட் போட்டதும் எனக்கே நோட்டிபிகேஷன் காட்டலை . உண்மைதான் பில்லா மிகவும் அன்பானவன் 

   Delete
 20. பில்லாவிற்காக பிரார்த்திப்போம்!

  ReplyDelete