அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, March 26, 2014

South Africa to Croatia...அழகிய மனதை மயக்கும் உருக்கும் காதல் கதை !


மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல :)
அதையும் தாண்டி புனிதமானது !!
பார்த்த காதல் ,பார்க்காமல் காதல் ,நெட் காதல் ,ஒருதலை காதல் ,
பொருந்தா காதல் ,முகபுத்தக காதல் :)இதையெல்லாம் தூக்கி 
கடலில் கொட்டுங்க :)

                                                         Rodan and Malena :)
                                                                                           

இன்னிக்கு நாம பார்க்கப்போவது !!

இரண்டு நாரைகளின் அழகிய மனதை மயக்கும் உருக்கும்
 காதல் கதை !
தென் ஆப்பிரிக்காவில் இருந்து ரோடான் என்ற ஆண் பறவை 
குரோயாஷியாவில் இருக்கும் மலேனா  என்ற  தனது 
காதல் இணையைகாண  ஒவ்வோர் ஆண்டும் எட்டாயிரம் 
மைல்கள் பிரயாணம் செய்து வருகின்றது ..
பயணத்தின் இடையே மனிதர்களை போல ட்ரான்சிட் விமானமோ 
இல்லை தங்கி இளைப்பாறவோ இந்த பறவையினால் முடியாது .!!

இந்த இருவரில் ஆண் நாரையின் பெயர் ரோடன் 
பெண்ணின் பெயர் மலேனா !


இதில் மலேனா என்ற பெண் பறவையினால் 
 பறக்க முடியாது :( .......

                                                                                                      
1993 ஆம் ஆண்டு இத்தாலிய வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் 
சுட்டதில் ஒரு பக்க இறக்கை உடைந்தது .
அப்போதில் இருந்து இதனை Stjepan Vokic என்ற நல்ல மனிதர் தனது 
வீட்டின் கூரைபகுதியில் இடம் அமைத்து கொடுத்து 
பாதுகாத்து வருகின்றார் .
                                                                                                 

ஒவ்வோர் ஆண்டும் பறவைகள் வசந்த காலத்தில் வேறு 
இடங்களுக்கு  இடம்பெயரும் அப்படி ஒருமுறை தனது 
காதலனை அதாவது ரோடானை சந்தித்திருக்கு மலெனா .
இருந்து சுமார் ஏழெட்டு வருடங்களுக்கும் 
மேல் ரோடான் ஆண்டுதோறும்மார்ச் மாதம் ஒரு குறிப்பிட்ட 
தேதியில் ..குறிப்பிட்ட நேரத்தில்  மத்திய தரைக்கடல் ,மலை, 
பாலைவனம் இவற்றையெல்லாம் கடந்து 
குரோயாசியாவுக்கு பயணித்து (டைம் டேபிள் ரொம்ப
 ஸ்ட்ரிக்டா பின்தொடர்கிறார் ) :)
முட்டை இட்டு குஞ்சு பொரித்து ,அவற்றுக்கு பறக்கவும் கற்று கொடுத்து
 பிள்ளைகளை தன்னுடன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்து செல்கின்றதாம் .

இதுவரை 32 நாரை குஞ்சுகள் தந்தையுடன் ஆப்பிரிக்காவிற்கு 
பயணித்திருக்கின்றன !
மலேனாவினால் தனது இணையுடன் பறக்க முடியாது ஆனால் 
ஆண்டுதோறும் காதல் கணவனின் வருகைக்காக ஆவலுடன் 
எதிர்பார்ப்புடன் காத்துகொண்டிருக்குமாம் ! 
இதனை பாதுகாத்துவரும் Stjepan ஒரு சாதாரண
 நடுத்தரவர்க்க மனிதர் .மலேனாவிற்கு உணவு வாங்க தன் 
தொலைபேசியையும் கூட விற்று இருக்கின்றார் ..
                                                                                                           


(மானையும் முயலையும் கொன்று சுட்டு தின்னும் மனித 
முதலைகள்  இதை சற்று கவனிக்க வேண்டும்  )

ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு கவலையாக இருக்குமாம் 
அந்த ஆண் வருமாவென்று !! இதன் பாதுகாபாளர்  கவனிதிருக்கார் 
மலேனா  சரியான நேரத்துக்கு பதட்டத்துடன் பார்த்து
கொண்டிருக்குமாம் ரோடானின் வரவை நோக்கி !


ஆனால் அந்த பறவை தனக்காக காத்து கொண்டிருக்கும் 
இணையை காண அதற்க்கு ஏமாற்றம் தர கூடாதென அறிந்திருக்கின்றது ,
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தாங்கும் ரோடான் ஆகஸ்ட் மாதம் 
குஞ்சுகளோடு பயணிக்கும் பிறகு மலெனா அடுத்த வசந்த காலத்துக்கு 
தனது இணையின் வரவிற்கு காத்து கொண்டிருக்கும் !!

இதுவல்லவோ காதல் !!!இது இவர்களின் பனிரெண்டாவது மண நாள் 


நேற்று aljazeera சானலில் இதனை ஒளிபரப்பினார்கள் ..இம்முறை ஒரு மணிநேரம் சீக்கிரமே ரோடன் வந்துட்டாராம் காதல் மனைவியை காண !


27 comments:

 1. மலேனா பறவையின் நிலை வருத்தம்...

  இதுவல்லவோ காதல் அல்ல... இது தான் காதல்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ..தவறாமல் எனது பதிவுகளுக்கு வருகை தந்து என்னை ஊக்குவிக்கிறீர்கள் .மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 2. அற்புதமான பறவைக் காதல்! இத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி ஆண்டுதவறாமல் வரும் Rodan ஒரு சூப்பர் மேன் தான்! :) காதல் வாழ்க! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Mahi :)

   Delete
 3. அருமை ..... மிக அருமையான ஆத்மார்த்தமான காதலர்கள். ;) படிக்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக .... எழுச்சியோ எழுச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 4. அழகான காதல்...ம்ம்ம்...நம்ம வெளிநாட்டு வாழ்க்கையையும் இது கூட சேர்க்கலாமோ ?!

  மனதிற்கு நெகிழ்ச்சி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் மனோ

   Delete
 5. அற்புதமான ,அழகான காதல். உண்மையில் இது மனிதர்கள் உணர்ந்து கொள்ளமுடியாது. ரோடனுக்கு எவ்வளவு அன்பு மலெனாவில். அழகான மனதை உருக்கும் காதல் கதை.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Priya

   Delete
 6. ஆஹா இது ஒரு காதல் காவியம் அஞ்சலின்!ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Nesan

   Delete
 7. பறவை வாழ்க்கையும் அதிசயமானது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி imma :)

   Delete
  2. இது வலைச்சரம் மூலமான வருகை. :-) திரும்பவும் முழுவதும் படிச்சேன்.

   Delete
 8. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல :)
  அதையும் தாண்டி புனிதமானது !..................................................!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Anuradha Prem

   Delete
 9. வணக்கம்,தங்கையே!நலமா?///மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!///அருமையான பகிர்வு!நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .i am fine :)

   Delete
 10. பறவைகளின் காதல் மிக அற்புதமானது.
  பெண் பறவையை பாதுகாத்துவரும் மனிதர் அருமையானவர். மனிதநேயம் மிக்க . அவருக்கு வாழ்த்துக்குள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அம்மா

   Delete
 11. இது தான் உண்மையான காதல்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Adhi

   Delete
 12. Very touching and sad to read.

  ReplyDelete
 13. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,தங்கச்சிக்கும் குடும்பத்தினருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்க குடும்பத்தார் அனைவருக்கும்.

   Delete
 14. பறவையின் காதல்,ஒழுக்கம், பெறுப்புணர்வு, அப்பப்பா. அன்பு...ஆஹா..சிலிர்க்கிறது..ஏஞ்சலின்.

  ReplyDelete