அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

Have a Great Day Dear Friends :)

11/17/19

ஓ மனமே ஓ மனமே !!!! (2)இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள் வரக்கூடும் யாருக்கு பிரச்சினைகள் இருக்கு .அப்படிபட்டோரை பார்க்க நேரிட்டால் எப்படி நாம் முதலுதவி செய்யணும் என்றெல்லாம் சொல்லி தரப்பட்டது .சில காணொளிகளும் காட்டினாங்க .அதோடு சில விஷயங்கள் யாருக்காவது பிடிக்கலைன்னா எழுந்து போய்டலாம்னும் சொன்னாங்க .ஒரு பெண்மணி பைபோலார் பற்றி காணொளி துவங்கியதும் எழும்பி சென்று 45 நிமிடம் பின் வந்தார் .முகமெல்லாம் சிவந்து அழுது இருந்தார் .அவர் ஒரு சீனியர் நர்ஸ் .
மன நலம் பிரச்சினைகள் அனைவருக்குமானது என்பதை உணர்த்தியது இது .

11/15/19

என் அண்ணன் ஹரி :)


                                                                        

எல்லாருக்கும் ஒரு நற்செய்தி .எனக்கு ஒரு உடன்பிறவா சகோதரன் கிடைச்சிட்டார் .சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த மனக்குறை உண்டு .என் ஸ்கூல்,கல்லூரி தோழமைகளுக்கு அண்ணன் அக்கா தங்கை தம்பின்னு நிறைய உடன்பிறப்புகள் இருப்பாங்க.அவங்க வீட்டில் நடக்கும் குறும்பு சேட்டையெல்லாம் சொல்லும்போது கஷ்டமா இருக்கும் ,நமக்கொரு அண்ணனோ தம்பியோ

11/11/19

மகளதிகாரம் :)அவளும் நாங்களும்
======================
இது மகளுடன் எங்கள் வீர தீர  :)அனுபவங்கள் .

                                                                          
                                                                      

ஒருமுறை நாங்கள் துபாய் வழியே ட்ரான்சிட்டில் சென்னை செல்லும்போது ஏர்போர்ட்டில் நான் காணாமப்போயிட்டேன் :) 
ஆனாலும் எண்ணி அஞ்சாவது நிமிஷம் தூரத்தில் கணவரையும் மகளையும் கண்டுபுடிச்சிட்டேன் ..வேகமா கிட்டே நெருங்கும்போது பொண்ணு குய்யோ முறையோன்னு அழுத்திட்டிருந்தா ரெண்ண்டு கண்ணும் டைட்டா மூடிக்கிட்டு ஒரு துளி கண்ணீர் வராம 
அம்மா வேணும் அம்மா வேணும் அம்மா இல்லேன்னா யார் எனக்கு சப்பாத்தி செஞ்சு தருவாங்க அம்மாஆ ஆஅ ...அப்படியே திரும்பி காணாம போய்டலாமான்னு நினைச்சேன் :) 
இதை பல இடத்தில சொல்லியிருக்கிறேன் ஆனாலும் வரலாற்று பாடத்தை அடிக்கடி புரட்டி பார்க்கணுமில்லையா :)

அடுத்த சம்பவம் 

ஒருமுறை எங்கள் குடும்ப நண்பி மகளின் சண்டே ஸ்கூல் ஆசிரியையுடன்  ஒரு பார்க்கிற்கு சென்றோம் எங்களுடன் மற்றொரு சிறு பெண்ணும் அவர் அழைத்து வந்திருந்தார் .மகளும் அப்பெண்ணும் ஒன்றாக சண்டே ஸ்கூலில் படிப்பவர்கள் .பார்க்கெல்லாம் சுற்றி முடித்ததும் அருகிலுள்ள ஒரு கார்தான் செண்டருக்கு போனோம் அங்கே விதவிதமான புத்தகங்கள் மற்றும் கிராஃப்ட் பொருட்கள் பிள்ளைகளுக்கு வரையும் செய்முறையுடன் கூடிய புத்தகங்கள் என நிறைய இருந்தது .அதை மகளும் அவளது குட்டி தோழியும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தனர் ஒரு கட்டத்தில் இருவரும் பேசுவது கேட்டது எங்க மகள் அப்பெண்ணிடம் சொல்லிட்டிருந்தா //TAAMRAA உனக்கு புக் வேணும்னா தயங்காம கேளு நானும் வாங்கப்போறேன் எங்கப்பா வாங்கி தருவார் //என்று சொல்லிக்கொண்டே நேரே திரும்பி அம்மா டாம்ராவுக்கும் புக் வாங்கி தருவீங்கதானே ?? .நைசா புத்தகத்தின் விலையை பார்த்தேன்  £ 12.99   மனசு ஜெர்க் ஆச்சு :)அது பார்பி கலெக்க்ஷன் அதில் ட்ரெஸ் டிசைன் எல்லாம்  டெம்ப்லேட் போல் இருக்கும் எடுத்து ஓட்டவேண்டும் .வேறு வழியில்லாமல் மகள் மனம் புண்படக்கூடாதேன்னு  அப்பெண்ணுக்கு வாங்கி கொடுத்தோம் கொஞ்சம் நேரம் கழித்து கடையை விட்டு வெளியே வரும்போது ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வந்து நின்றது அச்சிறுப்பெண்  தனது குட்டி பர்சில் இருந்து இரண்டு  பவுண்ட் எடுத்து தனக்கு மட்டும்  ஒரு பவுண்ட்  கொடுத்து ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டது :) 

சில பிள்ளைகள் மட்டும்  செம சாமர்த்தியம் :))))))))  .


=====================================================================

                                                                           ஏன் எதற்கு என்று சொல்ல தெரியவில்லை ஒரு சிலரை அவர்கள் செயல்களுக்காக மிகவும் பிடிச்சிடும் .அப்படிதான் பள்ளி நாட்களிலேயே ஹிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வழியே எனக்கு மிகவும் நெருக்கமானார் இந்த சிங்கம் வாக்காளர் அடையாள அட்டை ,வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு ,தேர்தல் ஆணையம்னா இப்படித்தான் இருக்கணும் என்று நமக்கு அடையாளப்படுத்தியவர் .அரசியல்பெருச்சாளிகளின் கண்களில் விரல் விட்டுஆட்டியவர் .அரசியல்வியாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம் மீளாத்துயலில் உறங்குகிறார் .
ஆழ்ந்த அஞ்சலிகள் என் பிரியமுள்ள  தாத்தா சிங்கத்துக்கு .

பின்குறிப்பு ,
எதற்கு எப்படி என்று புரியவில்லை ஆனால் சத்தியமான உண்மை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிவாக்கில் கணினியில் உலவிக்கொண்டிருந்தபோது திடீரென டி. என் .சேஷன் அவர்களின் நினைவு வந்தது .சில வருஷமுன்  அவர் சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்ததாக பத்திரிகையில் வாசித்தேன் அதையெல்லாம் யோசித்துக்கொண்டே உறங்க சென்றுவிட்டேன் .இன்று காலைமுதல் செய்தி எதுவும் வாசிக்கவில்லை பிறகு ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டேன் மாலை வீட்டுக்கு வந்ததும் விகடன் பக்கம் திறந்ததும் அதிர்ச்சி .அதில் சேஷன் ஐயா அவர்களின் மரண செய்தி :( 

சில நாட்கள் முன்பு கூட கீதாக்கா பக்கம் தாமரை கிழங்கு பற்றி கேட்டிருந்தேன் அது திருமதி சேஷன் அவர்கள் கணவரும் மனைவியா அவள் விகடனில் ஒரு சமையல் குறிப்பு தொடர் எழுதினாங்க அதில் தான் மெழுகுபிரட்டி தாமரைக்கிழங்குவற்றல் மோர்க்கூழ் எல்லாம் கற்றறிந்தேன் ,இன்னமும் அந்த புத்தகத்தை பத்திரமாக வைச்சிருக்கேன் .

வேலைக்கு செல்வதால் மனநலத்தொடரை விரைவில் எழுதுகின்றேன் .

========================================================================

11/4/19

ஓ மனமே ஓ மனமே !!!!

முந்தைய பதிவில் துவங்கிய ஓ மனமே  தொடர்கிறது ............

மனநலத்துக்கு உகந்த மஞ்சள் ரோஜா :) எங்க வீட்டில் பூத்தது :)

                                                                               

                                                                                


இந்த மனநலக்குறைபாட்டில் 4 நிலைகள் இருக்கு 

                                                                              
ஒவ்வொரு நிலை பற்றியும் தெரிந்துகொள்ள லிங்க்கில் சென்று வாசிக்கவும் 


 நமக்கு தலை வலிச்சா மருத்துவர்கிட்ட சொல்ல முடியும் வயிறு வலிச்சா சொல்ல முடியும் ஆனா இந்த மனநோய் பாதிப்புள்ளானோருக்கே அது தெரியாதது .அவங்களை சுற்றியுள்ளோர் சொன்னால்தான் மருத்துவருக்கு நோயாளியின் நிலை புரியும் பிறகு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து மருந்து பரிந்துரை செய்வார் .

10/30/19

பருப்பு சாதம் நெய் ,தச்சி மம்மு, மொளகு தண்ணி சூப் :)  MULLIGATAWNY SOUP 

                   தலைப்பை பார்த்ததும் இங்கயும் சமையலான்னு!!
                                                                             
                                                                             
 வடிவேலு பாணியில் ஷாக் ஆனவர்களுக்கு :)  சொல்லிக்கிடறேன் .தலைப்பில் மட்டுமே உணவு பெயர் இருக்கும் பதிவு சமையல் பதிவல்ல :)

பருப்பு சாதம் நெய் ,தச்சி மம்மு,
=================================