அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

Friday, October 09, 2020

சும்மா ஒரு ஹாய் :)

 நலமாக இருக்கின்(றேன் )றோம்  :))


                                                                                
வலையுலக  நட்புக்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா .


                                                                                    


அவ்வப்போது வலைப்பதிவுகள் பக்கம் எட்டி பார்ப்பதுண்டு சமீபமா அதற்கும் நேரமில்லாமல் பறந்துக்கொண்டிருக்கின்றேன் !!

எதை எழுத !!எதை விட எனுமளவுக்கு பற்பல அனுபவங்கள் சுற்றி நடக்கும் விஷயங்கள் .இயன்றவரைக்கும் சந்தோஷத்தை மட்டும் பரப்பி செல்ல விரும்பி செய்தியில்  படிச்ச குறும்புக்கார  செல்லங்கள் பற்றிய சில பகிர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன் .

எங்க இங்கிலாந்தில் lincolnshire பகுதியில் கிளி வகை பறவைகளுக்கென ஒரு சரணாலயமுண்டு சுட்டி இங்கே 

ஒரு விஷயத்தை குறிப்பிடனும் இப்போ இந்த ஆண்டு மார்ச் முதல் பல செல்லங்கள்  சில உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டு இப்படி சரணாலயங்கள் மற்றும் ரெஸ்க்யூ சென்டர்களுக்கு வந்தடைகின்றன .இதில் யாரை குற்றம் சொல்ல :( .சரி விஷயத்துக்கு வருவோம் .இந்த கிளிகள் சரணாலயத்துக்கு செப்டெம்பர் மாதம் 5 ஆப்பிரிக்க கிளிகள் வந்து சேர்ந்தன .இவ்வகை பறவைகள் மிகவும் அறிவார்ந்தவை ஒரு வார்த்தை காதில் கேட்டால் உடனே அதை திருப்பி சொல்லும் அறிவுக்கூர்மை படைத்தவை . இதே சரணாலயத்தில் ஒரு ஆப்பிரிக்க கிளி சமீபத்தில் பின்னணி பாடகி  beyonce போல பாட்டு  பாடி அசத்தியது .

                                                                          அது போல இந்த செல்லங்களுக்கு அவற்றை வளர்த்த உரிமையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்தார்களா அல்லது இவை அவர்கள் பேசியதுகேட்டு அதை பதித்துக்கொண்டனவான்னு தெரியலை ஆனா அந்த வார்தைகளை சரணாலயத்தில் போவோர் வருவோர் கூட்டமாக செல்வோர் முன் ஒன்று சொல்ல அதை இன்னோன்று   தொடர  மற்றவை எல்லாம் சேர்ந்து கொண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிருக்குங்க .இவற்றின் சேட்டைகளை பார்த்து ஊழியர்களும் சிரிக்க அதுகளுக்கு செம குஷியாகி தொடர்ந்து அதையே பேசி பேசி சிரிச்சிருக்குங்க !! கடைசியில் நிர்வாகம் time out பனிஷ்மென்ட் கொடுத்து பிரிச்சி தனிமை படுத்தியிருக்காங்களாம் பொல்லா கிளிகளை .

                                           ****************************************

எங்க வீட்டு தோட்டத்துக்கு நிறைய பறவைகள் வராங்க மணிப்புறா ,குண்டுப்புறா ராபின்ஸ் சிட்டுக்கள் அணிலன் அணிலா தவிட்டு குருவி வகை கருங்குருவிகள் இப்படி நிறைய .ஒரு பறவை வீடும் வாங்கியாச்சு செட் பண்ணணும் .இவர்களுடன் புதிதாய் ஒரு சாம்பல் புறா ஒரு மாதத்துக்கும் மேலே நான்  தோட்டத்துக்கு போகும்போது தோள்மேலே வந்தமர்ந்து பாசமழை பொழிந்தது கணவர் பின்னாலும் மிக அருகில் வரும் எங்கள் வீட்டு ஓட்டு மீதே இருக்கும் நாங்கள் உணவு நீர் வைப்பதுண்டு .

                                                                                   

                                                                      

                                                                                  


மகள் இந்திய பெயர் ஏதாச்சும் வைக்கலாம்னு சொல்ல ரெண்டு பெயர்களை சொல்ல ஒன்று தேர்வாகியது இப்போ அந்த புறா பெயர் விஜய் :))))))) செல்லமா  விஜுன்னு கூப்பிடறேன். பிறிதொரு நாள் படமெடுத்து பார்த்தபோது கண்டுபிடித்தது அதன் காலில் ஒரு வளையம் .அது ரேஸ் புறா எங்கிருந்தோ வந்திருக்கு அமெரிக்காவிலிருந்து கூட வந்திருக்கலாம் :) அவனா போகும் வரை உணவிட தீர்மானிச்சிருக்கிறோம் . அநேகமா இங்கேயே செட்டில் ஆகிடுவான்னு நினைக்கிறேன் இப்போ புதுசா பெண் தோழியும் அவருக்கு கிடைச்சிருக்கு :) அமேசானில்  பறவை வீடு ஆர்டர் கொடுத்து வந்திருக்கு .பனி மழைக்கு அவங்க உட்கார இருக்கும் 


அப்புறம்  இந்த கடினமான காலகட்டத்தில் கூடுமானவரைக்கும் மனதை ரிலாக்ஸ்டா அழுத்தமின்றி வச்சிக்கோங்க .முக்கியமா போர் எலிகளே !!  

                                                                         


 பொதுவெளியில் மனசஞ்சலம் தரும் விஷயங்களை பெருமளவில் பகிர்வதை தவிருங்கள்  கொஞ்சம் வயதில் பெரியவர்களை மனதிற்கொண்டு எதையும் செய்யுங்கள் .எல்லாருக்கும்  எல்லாவற்றையும் படிக்கும் பார்க்கும்  மனதிடம் இருக்காது .நம்ம கண்முன்னாடி பசியோடு யாராச்சும் இருந்தா இயன்றவரை ஒருவேளை உணவாச்சும் வாங்கி கொடுங்க . இது ஒரு செயின் ரியாக்ஸன்போல் தொடரும் அன்பு வளரட்டும் .

மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு 

                                                                                

***********************************************************************************50 comments:

 1. Replies
  1. வாங்க வாங்க ட்ரூத் :) ஹாயோ ஹாய் 

   Delete
 2. உங்களின் வருகை மிக ஆச்சிரியமிக்கதாகவே இருக்கிறது.. ஆமாம் உங்களுக்கு வயசு அதிகமாகிவிட்டதோ அட்வைஸ்கள் அதிகம் உங்களிடம் இருந்து வருகிறதே

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா கர்ர்ர்ர் :) greta thurnberg என்றொரு பெண் ட்ரம்புக்கே அட்வைஸ் குடுத்தா அவளுக்கு இப்போதான் 17 வயசு :)அட்வைசலாம் இல்லை ட்ரூத் இப்போ கோவிட் டைம்  நிறைய மன உளைச்சல்கள் ஏற்படுத்து சில விஷயங்கள் இங்கே நபாக்குது செய்தியில் படிச்சப்போ அக்கம்பக்கத்தினர் சொன்னது பல்வேறு சண்டை சச்சரவுகள் பெறுகின்றது இந்த மார்ச் மாதத்திலிருந்துதானாம் .அதனால்தான் சொன்னேன் 

   Delete
 3. கடந்த வாரம் நான் செய்த ஒரு முட்டாள் தனத்தால் ரிப் எலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறேன் கொரோனாவில் இருந்து பிழைத்தேன் காரஜ்டோர் விழுந்த போது அதில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினேன். இப்போது ரிப் எலும்பு உடைந்த போதும் இன்னும் உயிர் பிழைத்து இருக்கிறேன்.... இருந்த போதிலும் என்னை பொருத்தவரையில் இந்த ஆண்டு அதிர்ஷடமிக்க ஆண்டாகவே இருக்கிறது.. காரணம் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதால் 6 வாரத்தில் எலும்பு முறிவு சரியாகி விடும் என்று டாக்கர் சொல்லியிருக்கிறார். அதுவரை வீட்டுலதான் அரெஸ்ட்

  ReplyDelete
  Replies
  1. கவனமாக இருங்கள் நண்பரே! உங்கள் உடல்நிலை சீராகப் பிரார்த்திக்கிறோம். வீட்டில் இருந்தால் என்ன? உங்களால் அதையும் பலனுள்ள நாட்களாக மாற்ற முடியும். மீண்டும் கவனம்!

   Delete
  2. அச்சோ என்ன நண்பா கவனமாக இருக்கவும் .கராஜ் கதவு ஹெவியாச்சே .நாம் எதிர்பார்க்காத நேரத்தில் என்னென்னமோ நடந்துடுத்து .எங்களுக்கும் இப்படி பல சம்பவங்கள் கடந்த 10 மாதத்தில் நடந்திருக்கு ஆனாலும் ஒவ்வொருமுறையும் கடவுள் காப்பாத்துறார் .நல்லா ரெஸ்ட் எடுங்க .உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க .crutches கொடுத்தார்களா ? அதிக கவனமுடன் இருக்கவும் .

   Delete
  3. //6 வாரத்தில் எலும்பு முறிவு சரியாகி விடும் என்று டாக்கர் சொல்லியிருக்கிறார். அதுவரை வீட்டுலதான் அரெஸ்ட்//

   கவனமாய் இருங்கள். எவ்வளவு ஓய்வு எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்.

   Delete
  4. கவனமா இருங்க ட்றுத். உடம்பை பார்த்துக்குங்க. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.Take care.

   Delete
  5. கொரோனாவிலிருந்து தப்பித்துவிட்டீர்கள். ஆண்டவன் கருணை உங்கள் பக்கம்தான். விரைவில் நலம் பெற்று வாங்க மதுரைத்தமிழன். ப்ரார்த்திக்கிறேன்.

   Delete
  6. @ ட்ரூத் நான் rib ஐ ஹிப் னு படிச்சிட்டேன் ..கவனமா இருங்க டேக் கேர் 

   Delete
 4. நீங்களும், அதிரவும் நலம் தானே?
  உங்களை அம்முவிடம் விசாரித்தேன் . பேசினால் கேட்டதாக சொல்ல் சொன்னேன்.
  நீங்கள் பகிர்ந்த விஷயங்களில் மனதை கவர்ந்த விஷ்யத்தை முதலில் பாராட்டி விட்டேன்.

  எனக்கும் மகன் பறவைகள் வசிக்க கூடுகள் அனுப்பி இருக்கிறான்( இரண்டு) பறவைகள் வரும் நாளை எதிர்ப்பார்த்து இருக்கிறது.

  //பொதுவெளியில் மனசஞ்சலம் தரும் விஷயங்களை பெருமளவில் பகிர்வதை தவிருங்கள் கொஞ்சம் வயதில் பெரியவர்களை மனதிற்கொண்டு எதையும் செய்யுங்கள் .எல்லாருக்கும் எல்லாவற்றையும் படிக்கும் பார்க்கும் மனதிடம் இருக்காது //

  மிக அருமையாக சொன்னீர்கள்.
  தொலைக்காட்சிகளும் , வாட்ஸ் அப் செய்திகளை கொடுப்பவர்களும் இதை யோசித்தே பார்ப்பது இல்லை. தொலைக்காட்சியில் பார்க்க தவறியதை சிலர் எடுத்து வேறு பகிர்கர்கள்.

  //நம்ம கண்முன்னாடி பசியோடு யாராச்சும் இருந்தா இயன்றவரை ஒருவேளை உணவாச்சும் வாங்கி கொடுங்க . இது ஒரு செயின் ரியாக்ஸன்போல் தொடரும் அன்பு வளரட்டும் .//
  கண்டிப்பாய் இது போல் செய்து வந்தால் அன்பு வளரும் என்பது உண்மை.

  காணொளிகள் பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //தொலைக்காட்சியில் பார்க்க தவறியதை சிலர் எடுத்து வேறு பகிர்கர்கள்.// மனதை வேதனையில் ஆழ்த்தும் செய்திகளை நானும் பகிர்கிறேனே! :)

   Delete
  2. ஹாஹ்ஹா கீதாக்காவின் ஸ்மைலி பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளுது ..

   Delete
  3. அது கீதாக்கா .இப்போ பலருக்கு வெவேறு மனஉளைச்சல்கள் .எழுதவோ சொல்லவோ முடியாதஅளவுக்கு நிறைய விஷயங்கள் நடக்குதுக்கா .அது சிலர்மனதை இன்னமும் கஷ்டப்படுத்தவேண்டாமேன்னு நினைச்சேன் .நானா செய்திலம படிப்பதே இல்லை .இந்த பரவி நியூஸ் கூட கூகிளில் வந்து .

   Delete
  4. வாங்க கோமதிக்கா நாங்க  நலம்க்கா .நேரம் கிடைக்கும்போது எப்படியாவது ஒரு பதிவாச்சும் போட நினைச்சி போட்டேன் .உங்க வீட்டில் பறவைகள் வரும்போது காணொளி எடுங்க சீக்கிரம் குடியமர்வார்கள் :)இங்கே விதவிதமா கூடு அமைப்பு இருக்கு .மிக்க நன்றிக்கா 

   Delete
  5. நன்றி கோமதி அக்கா நலம்தான்.. உங்கள் பக்கமும் வந்திட்டேன். என்னை ஆரும் தேட வைக்கக்கூடாது, இடைக்கிடை பிரசண்ட் சொல்லோணும் என நினைச்சாலும் அப்பப்ப தேட வைத்து விடுகிறேன் எல்லோரையும்:).

   Delete
 5. Replies
  1. வாங்க பானுக்கா :) மிக்க சந்தோஷமக்கா 

   Delete
 6. நலமே....
  "கிளிகள் கெட்ட வார்த்தை பேசாது
  கேட்ட வார்த்தைதான் பேசும்"

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ .உண்மைதான் நாம் பேசுவதை கேட்டுத்தான் கேட்டு போயிருக்காங்க :)எதை கற்றுக்கொடுக்கிறோம் எதை பேசுகிறோம் பிள்ளைகள் முன்பு அதாவது அவையும் பிள்ளைகள்தான் இல்லையா .எங்க வீட்டில் முன்பு ஊரில் ஒரு கிளிப்பிள்ளை இருந்தது என் பெயரை விதவிதமான தொனியில் அழைக்கும் .அது அப்பா அம்மா பாட்டி எல்லாரையும் என்னை அழைப்பதை கவனிச்சிருக்கு :)

   Delete
  2. //பனிஷ்மென்ட் கொடுத்து பிரிச்சி தனிமை படுத்தியிருக்காங்களாம் பொல்லா கிளிகளை .//

   தேவகோட்டை ஜி சொன்னது போல் கிளிகள் கேட்ட வார்த்தைகளை பேசி இப்போது தனிமை சிறை.

   Delete
 7. இன்று காலை எங்கள் பிளாக்கில், எங்கள் விருப்பம்' என்ற லிஸ்டின் கீழ் அதிராவின் இடுகையைப் பார்த்தேன். உங்கள் இருவரின் நினைவும் வந்தது. இருவருமே ரொம்பவே பிஸியாகிவிட்டீர்கள் (அல்லது preference has changed). எப்படியோ இன்று ஒரு இடுகை போட்டுவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் நலம்தானே :) மேடத்தை பதிவு போட சொல்லி மிரட்டியிருக்கேன் இல்லேன்னா வெயிட் ஏறும்னும் செக் வச்சேன் அதுக்கு பயந்தே பதிவு ஒன்று அங்கே வரலாம் விரைவில் :)
   preference என்றில்லை சிலநேரம் ஓயாத வேலை அதில் அப்படியே ரெஸ்ட் எடுத்துடுவேன் .விரைவில் அதாவது 2021 இல் நிலைமை கொஞ்சம் சீராகும்ன்னு நம்புகிறேன் :) 

   Delete
  2. டக் என்று 2121 என்று படித்தேன். அப்புறம் தவறு என் கண்ணாடி மீதுதான் என்று புரிந்தது. ஹாஹா.

   Delete
  3. ஹாஹா :)))  2121 ஆஆஆ .இந்த வருஷம் எப்போ முடியும்னு ஒரு ஆவலிருக்கு ஆனாலும்  நீங்க ரொம்ப வேகமா போய்ட்டேங்க :)

   Delete
  4. மறக்காமல் நினைவு வைத்திருப்பதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.. சிலர் என்னை மறந்திட்டினம் தெரியுமோ ஹா ஹா ஹா:))..

   நான் என்ன வச்சுக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்ன்.. ஆரோ யூனியக் கிழவியை அனுப்பிச் சூனியம் வச்சிட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா புளொக் திறக்கவே முடியாமல் இருக்குது...
   அஞ்சு அடி பொறுக்க முடியாமல்தான் ஓடி வருகிறேன்...:))

   Delete
 8. கிளிகளின் சிரிப்பும் குறும்பும் சுவாரஸ்யம்.  நலம்தானே?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் :) எங்களுக்கும் வளர்க்க ஆசை ஆனால்  ரெண்டு பேர் ஜெசி மல்ட்டி தயாரா இருக்காங்க பறவை வேட்டைக்கு :)நாங்கள் நலம் நீங்களும் நலம்தானே 

   Delete
 9. ஹாய் அஞ்சு நீண்ட நாளைக்கு பின். நலம்தானே. பூஸார் எப்படி இருக்கிறார்.
  இப்போ எங்க வீட்டிற்கும் விசிட்டேர்ஸ்தான். அவர்கள் குளிர்காலம் ஆரம்பம் ஆனதும் வரத்தொடங்கிட்டாங்க.
  இந்த கிளி பற்றி நானும் இங்கு சானலில் பார்த்தேன். புறாவுக்கு பெயர் விஜய் ஆ... ஹா..ஹா..
  உங்களை, பூஸாரை கோமதி அக்கா நலம் விசாரிச்சாங்க. அடிக்கடி இல்லாவிட்டாலும் இடையிடையே வாங்க. நலமோடு,மகிழ்வாக இருங்க. Take care Anju.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரியா நாங்கள் நலமே .ஹாஹாஹா விஜய் கூட இன்னொரு பெயரும் சொன்னேன் பொண்ணு அந்த நடிகர் படத்தை கூகிள் செஞ்சு வேணாமா ஹி இஸ் ஓல்ட் னு சொல்ட்டா :))))))) பேரை சொன்னா என்னை உயிரோடு புதைச்சிருவாங்க ரசிகசிகாமணிகள் :) ரகசியமா அச்சொல்றேன் :)உங்களுக்குமட்டும் 
   நிறைய பறவை உணவு வாங்கி ஸ்டார்க் செஞ்சுட்டோம் .மிக்க நன்றி ப்ரியா 

   Delete
  2. ஹாய் அம்முலு.. நான் இங்க இருக்கிறேன்ன்.. இங்க இங்க..:))

   Delete
 10. பாடும் கிளிகள் பற்றித் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்தேன். கிளிகளுக்கும் தண்டனையா? பாவம்! ஆனால் இவற்றின் அறிவு நம்மை வியக்க வைக்கிறது. உங்கள் செல்லம் மடியை விட்டுக் கீழே இறங்குவதே இல்லையோ? பூஸார் நலமா? எல்லோரும் ரொம்பவே பிசியா இருக்கீங்க போல! முடிஞ்சப்போ வாங்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா நீங்களும் அனைவரும்  நலம்தானே .இது சின்ன தண்டனைதான் :) இல்லேன்னா அதுங்களுக்கு அது தப்புன்னு தெரியாம திருப்பி செய்யுங்க :)செல்லம்ஸ் போட்டி போட்டு மடியில் இருப்பாங்க :) நேரமிருக்கும்போது நிச்சயம் அனைவர் பக்கமும் வறேன்க்கா 

   Delete
  2. கீசாக்கா நான் வந்திட்டனே.. இனி உங்களுக்குத் தொல்லைதான் ஹா ஹா ஹா:))

   Delete
 11. உங்க புது வளர்ப்பு விஜய்க்கு வாழ்த்துகள். ஜோடி சேர்ந்ததுக்கும் வாழ்த்துகள். விரைவில் குடும்பம் பெருகவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா நன்றிக்கா :) 

   Delete
 12. ஆஹா....அற்புதமான படங்களுடன் பகிர்ந்த விதம் இந்த லாக்டவுன் வெறுமையை கொஞ்சம் விரட்டிவிட்டது...தொடர்ந்தால் மகிழ்வோம்...வாழ்த்துகளுடன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா ..நேரம் கிடைக்கும்போது நிச்சயம் தொடர்கிறேன் 

   Delete
 13. //அமேசானில் பறவை வீடு ஆர்டர் கொடுத்து வந்திருக்கு .பனி மழைக்கு அவங்க உட்கார இருக்கும்//

  நல்லது. அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க்கா .வீடு வந்திடுச்சு .ஹாண்ட் அஸெம்பிள் னு சொல்லியிருந்தது ஆனா ட்ரில்லிங் செய்யணும் இப்போ அதுக்கும் மெஷின் ஆர்டர் கொடுத்தாச்சு 

   Delete
 14. விஜய்க்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா சொல்லிடறேன் விஜய்கிட்ட 

   Delete
 15. மனிதர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவில்லை...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ உண்மைதான் இன்னிக்கும் அதுங்ககளைப்பற்றி நிய்யூஸ் என்னன்னா இன்னும் மறக்கலையாம் கேட்ட கெட்ட வார்த்தைகளை அதுங்க .ஒன்னு சொல்ல மற்றது சிரிக்குதாம் 

   Delete
 16. எப்படியோ வெளியே எட்டிப் பார்த்திருக்கிறீர்கள். நல்லது.
  அதிராவும் இப்படி ஏதாவது செய்வாரா.. இல்லை, ட்ரம்ப் அங்கிளை ஜெயிக்கவச்சிட்டுத்தான் திரும்பப்போவதாக சபதம் செய்திருக்கிறாரா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன் சார் :)மேடம் இப்போ தீவிர டிஸ்கஷனில் :) ட்ரம்ப்பா கமலாவான்னு :) யோசிச்சிட்டு ஒரு வழியா  வருவாங்கன்னு நினைக்கிறேன் :)

   Delete
  2. ஆஆஆஆஆஆஆ என்ன ஆச்சரியம்.. ஏ அண்ணன்கூட என்னை இன்னும் மறக்கவில்லை:))... ட்றம்ப் அங்கிள் நேசறிப்பிள்ளைபோல.. போக மாட்டேன் என அடம்பிடிக்கிறாராம் பதவியை விட்டு:)) ஹா ஹா ஹா.

   Delete
 17. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ கேட்க மறந்திட்டனே:)).. அஞ்சு நலம்தானே?:)) எப்பூடி இருக்கிறீங்க? பார்த்து எவ்ளோ நாளாச்சு:))

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ வாங்க வாங்க பல்லி :) ராணி ..பார்த்து எவ்ளோ நாளாச்சா அநேகமா முன்ஜென்மமா இருக்கும் :)அப்புறம் உங்கூரில் கோவிட் லாம் எப்படி இருக்கு ?? நான் நலம் விசாரிச்சதா சொல்லுங்க :))

   Delete