அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

6/4/20

ஏதோ நினைவுகள் ....சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப்பாரு !!

                                                                             1, இங்கே நான் அடிக்கடி ஆடுமேய்க்கபோவேனே அங்கே சமீபத்தில் நடந்த சம்பவம் ..அந்த இடத்தில்  ரெஸ்க்யூ sanctuary நடத்தும் மூதாட்டிக்கு ஒருநாள்  காலையில் அழுக்கு உடையுடன் ஒரு truck  ட்ரைவர் ஒரு பெண் ஆட்டை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார் .
அந்த வண்டியோட்டி மொத்தமாக அவற்றை எங்கே எடுத்துகொண்டுபோவார்னு சொல்லவேண்டியதில்லை அனைவருக்கும் தெரிந்திருக்கும் .அப்படி ஒவ்வொன்றாக வண்டியில் ஏற்றும்போது ஒரு ஆடு வயிறு வீங்கி இருக்கவும் இவருக்கு சந்தேகம் .அது ஒரு கர்ப்பிணி ஆடு .உடனே என்ன செய்திருக்கிறார் மனமின்றி அதை விலை கொடுத்து வாங்கி இந்த மூதாட்டியின் காப்பகத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார் மூன்று நாட்களில் அந்த ஆடு 3 அழகிய குட்டிகளை ஈன்றுள்ளது .

2,ஒரு குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் அருகருகில் வசித்து வந்தார்கள் .இவர்களில் ஒருவர் வீட்டில் ஒரு பெண் ஆடு வாங்கி வளர்த்தனர் அது கொஞ்சம் நாளில் ஒரே ஒரு ஆண் கிடாய் ஆட்டுக்குட்டியை ஈன்றது .சில நாட்களில் அந்த தாய் ஆடு என்ன காரணத்தாலோ இறந்துவிட்டது அதன் குட்டிக்கு 1 மாதமிருக்கும் அதை விற்க ஏற்பாடு நடந்தபோது பக்கத்துவீட்டு  சகோதரரின் பெண் அதை தனக்கு கொடுத்துவிடும்படி கெஞ்சி கேட்கவும் அவரும் கொடுத்துவிட்டார் இல்லைன்னா அந்த ஆட்டுக்குட்டி யின் முடிவு விரைவில் வந்திருக்கும் .சுமார் பல வருடங்கள் அந்த ஆட்டுக்குட்டி அந்த பெண்ணுடன் வளர்ந்தது 12 வருடங்கள் .


3,ஒருமுறை காரில் பயணித்துக்கொண்டிருந்தோம் இது ஜெர்மனியில் இருந்தபோது .அப்போது நான்  நான்கு மாத கர்ப்பம் .ரெகுலர் செக்கப்புக்காக போய்க்கொண்டிருந்தோம் .அது ஒரு நல்ல கோடைகாலம் ஜூலை மாதம் . ஜெர்மானியர்கள் பெரிய பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பகுதி அது .குட்டி கிராமப்புறம் தோட்டங்கள் என சூழப்பட்ட பகுதி . எல்லார் தோட்டத்திலும் சிறு pond அமைத்து அதில் மீன்கள் ஆமைக்குட்டிகள் வளர்ப்பார்கள் பெரும்பாலும் .அதில் ஒரு ஆமைக்குட்டி வெயிலுக்கு மெதுவே  நடந்து மெயின் கேட்டை தாண்டி ரோட்டுக்கு வந்து விட்டது .
                                                                              

நாங்கள் காரில் போகும்போது கணவர் நடுரோட்டில் அதை பார்த்து நிறுத்தி அதை கையால் தூக்கி அந்த வீட்டில் கொடுத்துவிட்டு வந்தார் ..கணவர் கொஞ்சம் கவனமின்றி ஒட்டியிருந்தாலும் அவ்வுயிர் போயிருக்கும் .எனக்கும் அது ஒரு பாவத்தை சுமந்த உணர்வாகவே இருந்திருக்கும் .
சிலர் மட்டும் ஏன் அன்பெனும் கருணையெனும் உணர்வின்றி வாழ்கிறார்கள் ? இது அவர்களின் வளர்ப்பா சூழலா என்ன காரணம் ? கொடூரகுணங்கள் தொடராதிருக்க அடுத்த சந்ததிக்காவது இனி வளரும் சந்திதிக்காவது நல்ல மனநலத்துடன் வளரும் சூழலை உருவாக்குவோம் . .மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது நல்ல மனநலத்துடன் நல்ல பாதுகாப்பான சூழலில் வளர்வோர் வளர்க்கப்படுவோர் தவறு செய்ய பாவம் செய்ய 99% தயங்குவர் . 

உள்ளன்போடு ஒரு காரியத்தை செய்யும்போது நிச்சயம் அதிசயங்கள் நடக்கும் .நிறையபேருக்கு செடி தண்ணி ஊற்றின அசையும் நன்றி சொல்லுமா என்றெல்லாம் சந்தேகம் வரக்கூடும் .

ஆனால்  உண்மையான அன்புடன் செய்யும்போது எதுவும் சாத்தியமே.

 4, எங்கள் மகள் போன வருடம் குதிரைகள் வளர்க்குமிடத்தில் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸுக்கு சென்றிருந்தாள் .அங்குள்ள குதிரைகளுக்கு கால்கழுவி உணவிட்டு அவற்றின்  கழிவுகளை நீக்கி பராமரிக்கணும் .ஹோஸ் பைப்பால் கால் கழுவி நீர் நிரப்பி வைக்கணும் .
ஒரு குதிரையின் கால்களை கழுவிட்டபோது முதுகில்  ஒட்டி இருந்த  அழுக்கு தூசி இலையை நீக்கி விட்டதும் அந்த குதிரை முன்னங்காலை தூக்கி கண்களை கண்ணடித்தாற்போல் காட்டியதால் அப்போ அருகில் இருந்த அதன் பராமரிப்பாளர் சொன்னாராம் ..அந்த குதிரை மகளுக்கு நன்றி தெரிவித்தது என்று. 
ஒருமுறை பார்த்தேன் ஒரு காட்சி கண்டு கதி கலங்கியது ..எங்கள் மகளைவிட  உயரமான ஒரு குதிரையை நடத்தி ஒட்டிக்கொண்டு சென்றாள் .அவளுக்கு பயமில்லையாம் .
                                                                           

                                                                              

அக்குதிரையும் நாய்க்குட்டிபோல் அவளுடன் நடந்து சென்றது .நாங்க காரில் அமர்ந்திருந்தபோது படமெடுத்தேன் !! மற்றொருமுறை இவள் ஷூ  தடுக்கி விழ பார்த்தபோது ஒரு குதிரை முன்னங்காலால் அவளை தாங்கி பிடித்துமிருக்கின்றது .

நிறைய சம்பவங்கள் எழுதலாம் அவ்வப்போது பகிர்கின்றேன்
                                                                               
நிறைய உணர்ச்சிவசப்பட்டு கோபத்துடன் ஆதங்கத்துடன் எழுத நினைத்தேன் .கோபம் வந்தா சற்று நேரம் அமைதியஇருக்கணும்னு அப்பா சொல்வார் .கோபப்படுவதாலும் வார்த்தைகளை கொட்டுவதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை நடந்தகொடுமைகளுக்கு தீர்வும் கிடைக்கபோவதுமில்லை தனது  தவற்றை உணராதோருக்கு தான் செய்வது தவறென்று புரியாத கொடூரர்களுக்கு தண்டனையும் வீண்தான் .இந்த பூமி எல்லா உயிருக்கும் சொந்தமானது என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டியது கட்டாயம் .

சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப்பாரு !!இந்த வரிகளை அங்கிள் கமல் அவர்களின்  பாடலில் இருந்து தலைப்பிற்கு  எடுத்துள்ளேன்  .

60 comments:

 1. கேரளா சம்பவம் உங்களை இந்தப் பதிவு எழுதத் தூண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.   நேற்றுமுதல் மனதை அறுக்கும் சம்பவமாக இருக்கிறது அது.  அந்தக்கொடூரனுக்கு எப்படி அபப்டி ஒரு மனம் வந்ததோ?  அப்போதும் மதம் பிடிக்காத இந்தப் பெண்யானை யாரையும் துன்புறுத்தவில்லை என்பது படித்தபோது மனம் கலங்கி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. அந்த  துர் சம்பவம் பற்றி முழுதும் படிக்கலை ஸ்ரீராம் .எங்கே நடந்தது என்பதுகூட இப்போ உங்கள் மூலமே அறிகின்றேன் ..ஓரிரு வரிகள் செய்திகளில் தலைப்பை மட்டும் வாசித்ததே இதயத்தை நொறுங்கி போகச்செய்தது :(

   Delete
  2. திரும்பவும் நினைத்துப்பார்க்க இயலாத சம்பவம் ஸ்ரீராம். ஒருத்தருக்கு எப்படி அந்த மாதிரி கொடூர மனசு வந்தது? வளர்ப்பாலா இல்லை வெறுப்பாலா?

   நான் நடைப்பயிற்சி செய்யும்போது கீழ பார்த்துக்கொண்டே நடப்பேன், ஏதாவது எறும்பு வரிசை, நத்தை, மண்புழு, இரயில் பூச்சி போன்றவைகளை தவறுதலா மிதித்துவிடக்கூடாது என்று.

   Delete
  3. எங்கள் புளொக்கில் கீதா சொல்லும்போது, ஏதோ நடந்திருக்குது யானைப்பிள்ளைக்கு என மட்டும் புரிஞ்சது, ஆனா சில விசயம் எனில் அடிச்சுப்பிடிச்சு தேடிப் பார்ப்பேன், ஆனா இது ஆண்டவா நல்லவேளை என் கண்ணில் எதுவும் படவிலை, இனியும் பட்டிடக்கூடாது என வேண்டிக் கொண்டேன்.. எனக்கு அதை அறிய விருப்பமே இல்லை...

   எல்லோரும் அதைப் பெரிதாகக் கதைப்பதைப் பார்த்தால், மனம் பதைக்கிறது.

   Delete
  4. வேண்டாம் மியாவ்  கொஞ்சம் நாள் எந்த வாட்சாப் செய்தியும்கூட பார்க்கவேண்டாம் பொதுவா நான் எப்பவும் சில விஷயங்களை எழுதுமுன் வல்லிம்மா கோமதிக்கா கீதாக்கா இவங்க கண் முன் வருவாங்க அதனால் அவங்க மனசு கொஞ்சம் கூட வருத்தப்படக்கூடாது அதானால் எனக்கு தெரிந்ததைக்கூட சொல்லாமல் இலைமறை காய்போல் சொல்லிட்டேன் ..ஒரு ஆராய்ச்சி அம்புஜத்தையே ஆராயவிடாமல் தடுத்துவிட்டது இந்த செய்தி :(

   Delete
  5. ஏஞ்சல் நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் நல்ல மனதுக்கு நன்றி.
   மனம் தாங்க மாட்டேன் என்கிறது.
   இந்த மாதிரி விஷயங்களை பார்ப்பது, கேட்பது எல்லாம்.

   நம்மை நம்பி வாழும் ஜீவன்களை எப்படி வதைக்க முடிகிறது, அதுவும் இப்படி கடுமையாக . எவ்வளவு பெரிய விலங்கு நம் அன்புக்கு கட்டுபட்டு சிறு சங்கிலியில் கட்டுண்டு கிடக்கிறது. நல்ல பாகன்கள் கூட அவை விளையாடி களிப்பதை பார்த்து இருக்கிறேன்.

   Delete
  6. நடிகர் பிரித்விராஜ் இந்த சம்பவத்துக்கு சற்றே வக்காலத்து வாங்கி இருக்கிறார் - ட்விட்டரில்.

   Delete
  7. ப்ரித்விராஜா :( சே  

   Delete
 2. நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவங்களில் இருக்கும் நேயம் எல்லாமே மனதைத் தொடுகிறது.  குதிரை நன்றி சொல்வதை நினைத்துப் பார்க்கும்போதே மனம் மகிழ்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் எல்லா மனிதரும்  வாயால் பேசினால் இந்த ஐந்தறிவு ஜீவன்கள் கண்களால் பார்வையால் பேசும் .அனுபவபூர்வமா உணர்ந்தது கண்டது . 

   Delete
  2. ஒரு இளவயது நாய் செல்லம் புதிய அறிமுகம் எங்கள் அலுவலக காம்பவுண்டில்..    அது இன்று என் அருகில் வந்து குழைந்ததைப் பார்க்க வேண்டுமே...   தரையில் படுத்து உருண்டு...  என் கை ஒரே ஒரு முறை அதன் மீது பட்டதும் எம்பி எம்பி என்மேல் நின்றது!

   Delete
  3. நெக்ஸ்ட்  time அதுகிட்ட வந்தா லண்டன்லருந்து ஒரு ஹாய் சொன்னதா சொல்லிடுங்க ஸ்ரீராம் :)

   Delete
 3. மிகவும் நெகிழ வைத்த பதிவு.

  உயிர்களிடத்தில் அன்பு வேணும்.

  (ஆனா உங்க நண்பி கே.எஃப்.சி இதையெல்லாம் காதுல வாங்குவாங்களா?)

  ReplyDelete
  Replies
  1. //(ஆனா உங்க நண்பி கே.எஃப்.சி இதையெல்லாம் காதுல வாங்குவாங்களா?)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அதாரது என்னைப்பற்றிப் பேசுவது:), முதலில் அஞ்சு வீட்டில நிறுத்தச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா...

   இல்ல நெ தமிழன், இங்கு அசைவம் என்பது, பக் பண்ணி, ஏதோ வெஜிடபிள் போலவே செல்ஃபில அடுக்கியிருக்கும், அதனால நமக்கு கஸ்டமாக இருப்பது குறைவு, ஆனா உண்மையில் நம் நாடுகளில், கடையில போய் வாங்குவதாயின் நான் எப்பவோ அசைவத்தை விட்டிருப்பேன் ... சமீபத்தில் கூட ஊரில் ஒருவர் சொன்னார், ஆடு கோழி எல்லாம் கடைக்கு வந்து கேபியூ முடிஞ்சதனால கடை திறக்க ரெடியாகிட்டினம் என.. அதைக் கேட்டதும் நான் நினைச்சேன்ன் சத்தியமாக விட்டிடுவோமா சாப்பிடுவதை என.. இப்படியான விசயம் அறியும்போது மனதுக்கு கஸ்டமாக இருக்கும்...

   ஆனா நான் முழு ஞானி ஆனதும் விட்டிடுவேன்:)).. பிறகு அஞ்சு கெஞ்சுவா.. பிளீஸ் அதிரா கொஞ்சம் சாப்பிடுங்கோ என ஹா ஹா ஹா..

   Delete
  2. //முதலில் அஞ்சு வீட்டில நிறுத்தச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா...//

   கர்ர்ர் நான் முட்டை கூட சாப்பிடுவதில்லை .கணவர் மட்டும் எப்பவாவது சமைச்சுப்பார் ...இப்பவும் ஒரு வார்த்தை சொன்னாலும் எனக்காக உடனே முழு  சைவம் ஆகிடுவார் .நான் அந்த காரியத்தை செய்ய விரும்பலை .நீங்க சொன்ன ப்ரி பேக்ட் என்பதால்தான் ஓகே சொல்கிறேன் .எனக்கு ஊருக்கு போகவே பிடிக்காத காரணத்தில் இதுவும் ஒன்று :

   Delete
  3. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

   Delete
 4. Truck driver செய்த செயல் ரொம்பவே மனதை உருக்கியது. உங்கள் கணவரும் நல்ல செயலைச் செய்திருக்கிறார்.

  எப்பவுமே இரக்க சுபாவம், ஏமாற்றாத தன்மை போன்றவற்றை நாம வெளிப்படையா காண்பிக்கும்போதுதான் நம்ம பசங்களும் அதைக் கத்துக்குவாங்க. சும்மா அட்வைஸ் பண்ணினா யாருக்குமே பிடிக்காது.

  மகளுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நெல்லைத்தமிழன் நாங்க இதுவரைக்கும் இதை செய் அதைசெய்ன்னு சொன்னதில்லை நாங்கள் செய்வதை பேசுவதை அவள் வாட்ச் செய்கிறாள் என்பது எங்களுக்கு தெரியும் அதனால் மிக கவனமுடன் பேசுவோம்  /மகள் அதை தொடர்கிறாள் .

   அந்த ரெஸ்க்யூ SANTUARY வைத்து நடத்தும் மூதாட்டிக்குத்தான் உங்கள் ரசிப்பி ஸ்வீட் போளி செய்து கொடுத்தேன் அவர் வீகன் வேறு .அவரிடம் வரும் ஆடு பன்றி எல்லாம் இப்படிப்பட்ட பின்னணி உள்ளவைதான் .ஒருமுறை பார்த்தப்போ 50 கோழிகள் உலாத்தறாங்க ஒரு பண்ணையில் இருந்து அங்கு மோசமான கண்டிஷனில் இருந்ததால் இவரிடம்  இன்னொரு  நல்மனதுள்ளவர் மொத்தமா வாங்கி கொடுத்திருக்கிறார் இன்னொரு ட்ரைவர் .
   மிக்க நன்றி நெல்லைத்தமிழன் 

   Delete
 5. தலைப்பை உலக்கை நாயகரிடமிருந்து எடுத்தீர்களா?

  நானும் முதலில் வாசித்தபோது புரியாமல், ஏதோ மனநலம் சார்ந்த பதிவு என்று நினைத்துவிட்டேன். புரிகிற தலைப்பா வைக்கக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா கமல் அங்கிள்கிட்ட ரொம்ப பிடிச்சதே அந்த புரியாம பேசுவாரே அதுதான் :)முதல் வார்த்தை //சினை // ரீசன்ட் சம்பவத்தால் மிகவும் பாதித்ததால் எடுத்துக்கிட்டேன் பதிவுக்கு .அன்பே சிவனில் வருமே யார் யார் சிவம் அந்த பாட்டை கண்ணை மூட்டிட்டு அப்படியே கேட்பேன் .அப்படித்தானா சமீபத்து கொரோனா பாட்டும் கொஞ்சம் பிடிச்சுப்போச்சு 

   Delete
  2. அன்பே சிவம் பாட்டு எனக்கும் பிடிக்கும் ஏஞ்சல், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும்.

   Delete
 6. தங்கள் உள்ளத்தை மொழிபெயர்த்துள்ளீர்கள்.
  சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப்பாரு!!
  அருமை, பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ 

   Delete
 7. நான் நியூஸ் வாசித்தது மட்டும்தான் அஞ்சு. கடவுளே என்ன கொடுமை.எனக்கு இன்னமும் மனம் ஆறவே இல்லை. எப்படி இப்படி மனம் வருகிறது. எனக்கு எழுத முடியேல்லை.
  உங்கள் கணவர் நல்லகாலம் கண்டுவிட்டார். நீங்க சொன்னமாதிரி பின் வாழ்நாள் முழுதும் கவலையாக இருந்திருக்கும்.
  குதிரையின் நன்றியுணர்வை என்ன சொல்வது.
  driver மனசில கொஞ்சம் ஈரம் இருந்திருக்கு. இல்லாவிட்டால் பாவம் அந்த ஆடு.
  நீங்க இருவருமே இரக்க சுபாவம் உள்ளவர்கள். மகளுக்கு இல்லாமல் இருக்குமா.

  ReplyDelete
  Replies
  1. நான் ஓரிரு வரி மட்டுமே அதும் ஹெடிங் மட்டுமே பார்த்தேன் ப்ரியா :( 
   உண்மைதான் கணவர் அந்நேரம் 20 - 30 ஸ்பீடில் தான் ஓட்டுவார் அதுவும் அது FARMERS வீடு பக்கம் என்பதால் மிக ஸ்லோவா போனார் ..எனக்கு நெஞ்சே வெடிச்சிருக்கும் எதாச்சும் தவறா நடந்திருந்தா .

   உண்மைதான் ப்ரியா .எல்லா உயிரும் தனது குழந்தையை எதிர் நோக்கி இருக்கும் .அந்த ஆட்டை படத்தில் பார்த்தேன் இன்னமும் எதோ அதிர்ச்சியில் இருந்து மீளாததுபோல் இருந்தது  .

   Delete
 8. உண்மையில் எல்லா ஐந்தறிவு படைத்த உயிரினத்துக்கும் நன்றியுணர்ச்சி இருக்கு. சாதாரண சிட்டுவே 2 நாள் உணவு கொடுத்துவிட்டு 3ம் நாள் காணவில்லையே என வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்ப இவங்களுக்கு எப்படி தெரிந்தது. உணவு கொண்டு வர அதுவும் தெரிந்து படபடத்துக்கொண்டு மகிழ்ச்சியில் சத்தம் வேற.
  /ஹாஹ்ஹா கமல் அங்கிள்கிட்ட ரொம்ப பிடிச்சதே அந்த புரியாம பேசுவாரே அதுதான் ://ஆ.. உங்களுக்குமா. எனக்கும் பிடிக்கும். அன்பே சிவம் எனக்கு பிடித்தமான படம். நானும் முதல் என்னவோ என யோசித்தேன். ஆனா வித்தியாசமான பதிவா இருக்குமென வந்தால், மனதை நெகிழவைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் பிடிச்ச பாட்டா அது HI 5 :) சினிமானாலும் அந்த பாட்டு மனசுக்கு நெருக்கமான பாட்டு ரசித்து கேட்பேன் எப்பவுமே .நிறைய விஷயங்களில் கமல் அங்கிளுடன் உடன்படாட்டியும் சில விஷயங்களில் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு மனிதரா :)

   உங்க வீட்டில் சிட்டுகள் எங்க வீட்டில் புறாக்கள் தலையை அசைத்து கூரைமேலமர்ந்து பார்க்கும் :)மகிழ்ச்சி ப்ரியா மனசை சந்தோஷமா வைக்க இவை நமக்கு உதவுது 

   Delete
 9. ஆஆஆஆஆஆஆ நீங்க எங்கேயோ போயிட்டீங்க அஞ்சு.. தலைப்பைப்பார்த்துப் பயந்து, இது அஞ்சுவின் பக்கமோ இல்லை கரந்தை அண்ணனோ என ஒருகணம் நிலை தடுமாறி, தட்டித்தடவி, அங்கின பிடிச்சு இங்கின பிடிச்சு நிதானத்துக்கு வந்து:).. புளொக்குக்கு வந்து சேர்ந்தேன்.. ஆனா எனக்கு என்னமோ தெரியல்ல, சரியான தமிழ் அதுவாக இருப்பினும்.. சினையுறுதல் எனும் தமிழ்ச்சொல் என்னமோ போல இருக்கும்....

  ஆஆஆஆஆ கமல் அங்கிளின் வசனத்தைக் கெட்டியாகப் பிடிச்சீங்களோ? அது எப்பூடி? நீங்க எப்போ இந்தப் பாட்டெல்லாம் கேட்டீங்க கர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா உங்களையே தடுமாற வச்சிட்டேனா :) வெற்றி வெற்றி ..பொதுவா  சினை என்ற சொல்லை  விலங்குகளுக்கு மட்டும் யூஸ் பண்ணுவாங்க .கமல் அங்கிள் கொரோனா பாட்டு அது :) அதில் வந்த ஒரு வரி 

   Delete
 10. முதலாவது.. மனதை உருக்குது, இப்படிப் பலர் இருக்கிறார்கள் அஞ்சு, நமக்குத் தெரிவதில்லை வெளியே. ஒரு மீன் பிடிப்பவர், அவரின் மீன் பிடிக்கும் முறைகள், மீன்கள் பற்றிச் சொல்லும்போது சொன்னார், அவர்களுக்குத் தெரியுமாம், சில மீன்கள், நண்டு எல்லாம் சினையுடன் இருப்பதைப் பார்த்ததும், மீண்டும் அவற்றைத்தூக்கிக் கடலிலே போட்டு விடுவார்களாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் அந்த சினை  மீன்கள் விஷயம் பற்றியும் எழுத நினைத்தேன் போஸ்ட் பெரிசாகிடும்னு விட்டுட்டேன் .இங்கே மீன் பிடிப்பவர்களில் பெரும்பாலும் உணவுக்கு பிடிப்பதில்லை பிடித்து மீண்டும் ஆற்றில் விடுவாங்க .அந்த TRUCK ஒட்டியும் மூதாட்டியும் வெள்ளையர்கள்தான் ..இப்படி நிறையபேர் இருக்காங்க 

   Delete
 11. ஆமைக்க்குட்டி என்றதும், என் “இமயவரம்பனை” நினைத்துக் கொண்டே.. இப்போ எங்கிருக்கிறானோ என்ன பண்ணுறானோ...:)..

  ரோட்டில் எதைக் கண்டலும் நெஞ்சு பதைக்கிறது, அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தால், கண்ணீர்க்கூட வந்துவிடுகிறது எனக்கு..

  இப்படி உங்கள் கணவரைப்போலத்தான், அண்ணனும் நடு ரோட்டில் காரை நிறுத்தி ஒரு பூஸ்குட்டியைக் காப்பாற்றி விட்டார், பின்பு திரும்பிவரும்போது.. சொன்னேனே அக்கதையை.. விதி வலியது பல நேரங்களில்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் பிஞ்சு அந்த இமையா நினைவா QUILLING கூட செஞ்சீங்க நினைவிருக்கு .அதை மீண்டும் ரி பப்லிஷ் பண்ணுங்க உங்க அப்பாவின் நண்பரிடம் சென்று //இமையா எங்கேன்னு கேட்டது கூட நினைவிருக்கு 

   Delete
 12. ஆஆஆஆஅ உங்கள் மகளுக்கு துணிவு அதிகம்தான்.. நீங்கள் இப்படிக் குதிரைக்கு அருகில பொவீங்களோ அஞ்சு?.. அம்மாடி நான் 4 அடி தள்ளியே நிற்பேனாக்கும்.. எனக்கு யானை, குதிரை.. இவற்றுக்கு அருகில் போகப் பயம், சவாரி செய்யவே மாட்டேன்ன்ன்..

  ஒரு தடவை நுவரெலியாவில் என நினைக்கிறேன், ஒரு பார்க்கில் குதிரைச் சவாரி இருந்தது, கணவர் கூப்பிட்டார் வாங்கோ ஏறலாம் என, நான் மறுத்தே விட்டேன், அவரையும் விடவில்லை ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. முட்டுக்காட்டில் ஒரு குட்டி யானையுடன் விளையாடி இருக்கிறேன் .மகளுக்கு புலி க்கும் சிங்கத்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆசைங்கிறா :))))))))

   Delete
 13. ///நிறைய உணர்ச்சிவசப்பட்டு கோபத்துடன் ஆதங்கத்துடன் எழுத நினைத்தேன்//

  ஆஆஆஆஆஆஆஆஅ ஹையொ ஆண்டவா, நல்லவேளை இங்கிலாந்து எரிஞ்சிருக்கும் .. ஜேசு காப்பாற்றிவிட்டார்ர்ர்ர் ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் ..திட்டறதாலோ கோவப்படறதாலோ  ஒன்றும் ஆகப்போவதில்லை நடந்த அநியாயம் நடந்ததுதான்

   Delete
 14. எ சிங்கிள் அக்ட்////
  உண்மைதான்... ஒரு புன்னகிகூட பல சமயம் பலரைக் காப்பாற்றி இருக்கு.

  சமீபத்தில் ஒரு ஸ்பீச்சில் கேட்டேன், ஒரு பெண், ஒரு டொக்டருக்குப் போன் பண்ணுகிறார், டொக்டர் நான் சாகப்போகிறேன், சூசைட் பண்ண ரெடியாகிட்டேன், ஆனா கடசியில் ஒருதரம் இதை உங்களுக்குச் சொல்லிப்போட்டுச் சாகலாம் என ஆசைப்படுறேன் என...

  அப்போ அந்த டொக்டர் பதட்டப் படாமல், சொன்னார்.. நீ சாவதைப் பற்றி எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனா எதுக்காகச் சாகப்போகிறாய் என்பதை மட்டும் என்னிடம் சொல்லிவிட்டுச் சா.. என..

  உடனே ஒரு மணி நேரமாக தன் பிரச்சனைகளை அவரிடம் அப்பெண் சொனனர், பொறுமையாகக் கேட்ட டொக்டர் சொன்னார், சரி இனி நீ போய்ச் சா என.. உடனே அப்பெண் சொன்னா..

  இல்லை டொக்டர் என் முடிவை மாத்திவிட்டேன்.. டொக்டர் கேட்டார் ஏன்?

  அவ சொன்னா:
  இதுவரை என் பிரச்சனையை ஒருவர்கூடச் செவி கொடுத்துக் கேட்டது கிடையாது, அதனாலேயே சாக முடிவெடுத்தேன், இப்போ நீங்கள் முழுவதும் கேட்டீங்கள், என் மனம் அமைதியாகி விட்டது, அதனால என் முட்டுத்தீர்ந்தது பொலாகி இருக்கிறது.. இனி நான் நிம்மதியாக வாழ நினைக்கிறேன்..

  என்றாராம்... இப்படி எத்தனை இருக்குது உலகில்... ஆனா இன்னொன்று, ஒவ்வொன்று நடப்பதும், ஒவ்வொருவர் அனுபவிப்பதும், அவரவர் விதிப்படியேதான் நடக்கிறது.. அதனால அனைத்துக்கும் நாம் கவலைப்பட வெளிக்கிட்டால்ல்ல்.. யாராலும் வாழ முடியாது..

  ReplyDelete
  Replies
  1. அவர் நல்ல மருத்துவர் தான் ... அவசர உலகில் யோசிக்க கூட நேரமில்லை அதனாலே குற்றங்கள் பெருகிடுச்சி .ஸ்பீச் மிக அருமை பிஞ்சு .நீங்க சொல்வது சரிதான் ஆனால் ஒருமனிதன் இன்னொரு உயிரின் விதியை நிர்ணயிப்பது எவ்வகையில் நியாயம் .

   Delete
  2. அன்பு அஞ்சு மா. எத்தனை இளகிய இதயம். இந்தக் குணத்தைக் கண்டு மீண்டும் மீண்டும்
   நெகிழ்கிறேன்.

   தங்கள் மகள் குதிரையிடம் பயப்படாததில்
   அதிசயம் இல்லைமா. கருணை மனதை எந்த மிருகமும் புரிந்து கொள்ளும்.
   ஆட்டுக்குட்டியைக் காத்த அந்த லாரி ட்ரைவருக்கும், அனைத்து உயிர்களுக்கும் துணையாக
   இருக்கும் அந்த மாவுக்கும்
   எப்பொழுதும் வளமுடன் இருக்க வாழ்த்துகள்.

   தங்கள் கணவரின் கவனம் அதிசயிக்க வைக்கிறது.
   நம் ஊரில் நடந்த கொடூரம் ..சொல்ல வார்த்தையில்லை.

   Delete
  3. மிக்க நன்றி வல்லிம்மா அந்த மூதாட்டிக்கு இறைவன் நல்ல உடல்பலத்தை தரணும்னு பிரார்த்திப்போம் .தனியொருவரா இக்காரியத்தை செய்கிறார் .
   கணவரிடம் படித்து படித்து சொல்லியிருக்கிறேனம்மா வண்டி ஓட்டும்போது சிறு பறவைகள் வரலாம் எந்த உயிருக்கும் பாதிப்பு வரக்கூடாதுன்னு .மிக்க நன்றி வல்லிம்மா 

   Delete
 15. உள்ளன்போடு ஒரு காரியத்தை செய்யும்போது அதிசயங்கள் நடக்குதோ இல்லையோ, நல்லதே நடக்கும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ டிடி நிச்சயம் .நல்லது நடக்கும் 

   Delete
 16. நினைவலைகள் மனதை கனமாக்கி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ ..எழுதறதா வேணாமான்னு யோசிச்சி எழுதினது இந்த பதிவு 

   Delete
 17. இந்தச் செய்தி எனக்குத் தெரிந்ததுமே துடித்துப் போய்விட்டேன். மனசே இன்னமும் ஆறவில்லை. பாவிகள்! எப்படித்தான் மனசு வந்ததோ தெரியலை! நம்பிக்கையோடு சாப்பிட்ட அந்த யானைக்குக் கிடைத்த பரிசு மரணம்! கடவுளின் நாட்டில் இப்படி ஒரு சம்பவம்! :(

  ReplyDelete
  Replies
  1. கடவுளின் தேசம் :( கடவுள் பார்த்துட்டுதான்க்கா இருக்கார் நான் கடவுள்கிட்டயே பொறுப்பை விட்டுட்டேன் எபோலாம் அநீதி ஏற்படுது நிச்சயம் தண்டனை கிடைக்கும் .

   Delete
 18. நீங்கள் சொல்லி இருப்பது போல நானும் சில மிருகங்களின் நன்றி உணர்ச்சியைப் பார்த்திருக்கேன். அதுவும் நாய் எனில் கேட்கவே வேண்டாம். இப்போக் கூட எங்கள் மகள் வளர்க்கும் ஷேன் வாட்சப்பில் எங்கள் குரலைக் கேட்டதுமே வாலை ஆட்டிக் கொண்டு நாங்க இருக்கும் அறையில் சென்று முகர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து நாங்கள் சோஃபாவில் உட்காரும் இடத்தையும் முகர்ந்து பார்க்கும். இவ்வளவு பாசம் உள்ள ஜீவன்கள்! இவற்றைக் கொல்ல எப்படி மனம் வந்ததோ! விரட்டி விட்டிருக்கலாம். ஆனால் கடைசியில் இது விவசாயிக்குக் காட்டு மிருகங்களால் தொல்லை. அதனால் தற்காப்புக்குப் போட்டிருந்ததில் யானை மாட்டிக்கொண்டு சாவு என்பார்கள். முடிந்து போய்விடும். :(

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதாக்கா .எல்லா உயிருக்கும் அன்பும் நேசமும் தெரியும் .இங்கே சைட் பாரில் ஒரு ஹாம்ஸ்டர் இருக்கேஅதுவே எத்தனை அன்புடன் பழகுச்சி தெரியுமாக்கா .

   Delete
 19. உங்கள் அனுபவங்கள் மனதை நெகிழ வைத்தன! எதை விதைக்கிறோமோ அது தான் கிடைக்கும் என்பார்கள். உங்கள் குழந்தை அன்பையும் மனித நேயத்தையும் விதைத்து ஒரு வாயில்லா பிராணியின் அன்பையும் அக்கறையையும் திரும்பப்பெற்று மனதை நெகிழ்த்தி விட்டாள்!
  பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.
  " எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிற‌க்கையிலே
  அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"!
  அதனால் பாராட்டுக்கள் அனைத்தும் உங்களைத்தான் சேர வேண்டும்!
  பாராட்டுக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோ அக்கா.
   அன்பை கொடுத்தா அன்பு பன்மடங்கா கிடைக்கும்க்கா 

   Delete
 20. நினைவுகள் பகிர்வில் அன்பு, பாசம், இரக்கம் எல்லாம் இருக்கிறது ஏஞ்சல்.
  உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும்.
  டிரக் டிரைவரின் கருணை மனம் வாழ்க! பக்கத்துவீட்டு பெண் மனம் கவர்ந்தாள்.
  உங்கள் மகள் வயிற்றில் இருக்கும் போதே அப்பா, அம்மாவின் அன்பு, கருணையை கற்றுக் கொண்டார். குதிரை அவர் செய்த அன்பான பராமரிப்பு நன்றி சொல்லாமல் இருக்குமா?விலங்குகள் எல்லாம் அன்பானவை. "பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே! பாசம் காட்டி நேசம் வைத்தால் விலங்குகூட தெய்வமே." பாடல் நினைவுக்கு வருது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா ..வேலைக்கு புறப்படறேன் வந்து பின்னூட்டமளிக்கறேன் 

   Delete
 21. நான் எப்படி உங்கள் பதிவை பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவங்கள் எல்லாமே நெகிழ வைக்கின்றன.

  ReplyDelete
 22. இறைவணக்கத்தின் பின் 'உலகத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் நலமாக இருக்கட்டும்'என்றுதானே வேண்டுகிறோம். அன்று நடந்த சம்பவத்தை அறிந்ததும் வீட்டில் அனைவருமே கவலை கொண்டோம்.

  இப்படியும் கொடிய மனம்.

  ReplyDelete
 23. ஏஞ்சல் வெரி வெரி சாரி எப்படியோ பதிவை மிஸ் செய்திருக்கிறென். ஓ மை...10 நாள் ஆகிருக்கு எப்படி...ரொம்ப ரொம்ப ஸாரி ஏஞ்சல்..

  1. சிலதெல்லாம் கேட்க மனதிற்கு வருத்தமாக இருக்கும். ஆனால் எப்படியோ அந்த அம்மா ஆடு காப்பகத்திற்கு வந்து குட்டியும் போட்டதே...

  2. அதே அதே ஆடு காப்பாற்றப்பட்டது.

  ஆமைக்கு வருகிறேன் தனி கருத்து

  ஏஞ்சல் சமீபத்து யானை சம்பவம் கேட்டிருப்பீங்களே மனம் ஆறவில்லை. இப்படியும் மக்களா எல்லாரையும் நிக்க வைச்சு....பூர்த்து பண்ணிக்கோங்க

  கீதா

  ReplyDelete
 24. ஒரு முறை நைட் வண்டியில்வ் அந்துகொண்டிருந்தேன் என் டூவில்லரில் சென்னையில் இருந்தப்ப. நாங்க ஐ ஐ டி ஒட்டித்தனஏ இருந்தோம் அப்ப ரோடில் என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என்று நைட் வெளிச்சம் வேறு அவ்வளவாக இல்லை என் வண்டி அடிச்ச டிம் லைட் தான்...கீழே இறங்கிப் பார்த்தால் ஆமை அப்படியே இருந்தது. ஏதோ வண்டி அடித்துவிட்டுப் போயிருக்கு. பாவம் தொட்டதும் டக்கென்று முகம் சுருங்கியது.. ஓகே உயிர் இருக்குன்னு எடுத்துட்டு வீட்டுக்குப் போய்ட்டு லைட்டில் பார்த்தால் அடிபட்டது தெரிந்தது. அதனை தண்ணீரால் கழுவி ஒரு பக்கெட்டில் போட்டு ஆசுவாசப்படுத்தி அப்புறம் கேரட் கோஸ் எல்லாம் கொடுத்துப் பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட்டது. மறு நாள் ஐ ஐ டி ஒட்டி இருக்கும் கிண்டி பார்க்கில் கொடுத்துவிட்டு வந்தேன். அதே போல சென்னையில் வேறொரு வீட்டில் இருக்கறப்ப மழை பெய்ததில் வீட்டின் பின் ஆமை . தண்ணீரில் அதையும் எடுத்து நானும் மகனும் கிண்டி பார்க்கில் கொடுத்துவிட்டு வந்தோம்.

  உங்கள் கணவரும் அழகா கொண்டு விட்டு வ்ந்திருக்கார் சூப்பர்..

  கீதா

  ReplyDelete
 25. சிலர் மட்டும் ஏன் அன்பெனும் கருணையெனும் உணர்வின்றி வாழ்கிறார்கள் ? இது அவர்களின் வளர்ப்பா சூழலா என்ன காரணம் ? கொடூரகுணங்கள் தொடராதிருக்க அடுத்த சந்ததிக்காவது இனி வளரும் சந்திதிக்காவது நல்ல மனநலத்துடன் வளரும் சூழலை உருவாக்குவோம் . .மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது நல்ல மனநலத்துடன் நல்ல பாதுகாப்பான சூழலில் வளர்வோர் வளர்க்கப்படுவோர் தவறு செய்ய பாவம் செய்ய 99% தயங்குவர் .

  உள்ளன்போடு ஒரு காரியத்தை செய்யும்போது நிச்சயம் அதிசயங்கள் நடக்கும் .நிறையபேருக்கு செடி தண்ணி ஊற்றின அசையும் நன்றி சொல்லுமா என்றெல்லாம் சந்தேகம் வரக்கூடும் .

  ஆனால் உண்மையான அன்புடன் செய்யும்போது எதுவும் சாத்தியமே.//

  அதே அதே அப்படியே டிட்டோ செய்கிறேன் ஏஞ்சல்!!

  கீதா

  ReplyDelete
 26. அந்த குதிரை மகளுக்கு நன்றி தெரிவித்தது என்று. //

  பார்த்திருப்பீங்க பொதுவா செல்லங்கள் நாம அதுக்கு ஆசுவாசப்படுத்தினா ரொம்பவே நன்றி சொல்லும். எங்கள் கண்ணழகியிடம் இதனை அதிகம் பார்க்கிறேன். அதே போல ரோடில் இருக்கும் பைரவர்கள், மாடு செல்லங்களும் அப்படியே நிறைய நன்றி சொல்லும்.


  ஒருமுறை பார்த்தேன் ஒரு காட்சி கண்டு கதி கலங்கியது ..எங்கள் மகளைவிட உயரமான ஒரு குதிரையை நடத்தி ஒட்டிக்கொண்டு சென்றாள் .அவளுக்கு பயமில்லையாம் .//

  அன்பு இருக்கறப்ப பயம் ஏது ஏஞ்சல்!

  அக்குதிரையும் நாய்க்குட்டிபோல் அவளுடன் நடந்து சென்றது .நாங்க காரில் அமர்ந்திருந்தபோது படமெடுத்தேன் !! மற்றொருமுறை இவள் ஷூ தடுக்கி விழ பார்த்தபோது ஒரு குதிரை முன்னங்காலால் அவளை தாங்கி பிடித்துமிருக்கின்றது .//

  அற்புதம்! உண்மைதான் ஏஞ்சல். அவற்றிற்கு என்னவோ எப்படியோ புரிந்து நிறைய நமக்கு நன்மை செய்யும். இன்னும் எழுதுங்க

  கீதா

  ReplyDelete
 27. நிறைய உணர்ச்சிவசப்பட்டு கோபத்துடன் ஆதங்கத்துடன் எழுத நினைத்தேன் .கோபம் வந்தா சற்று நேரம் அமைதியஇருக்கணும்னு அப்பா சொல்வார் .கோபப்படுவதாலும் வார்த்தைகளை கொட்டுவதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை நடந்தகொடுமைகளுக்கு தீர்வும் கிடைக்கபோவதுமில்லை தனது தவற்றை உணராதோருக்கு தான் செய்வது தவறென்று புரியாத கொடூரர்களுக்கு தண்டனையும் வீண்தான் .இந்த பூமி எல்லா உயிருக்கும் சொந்தமானது என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டியது கட்டாயம் .//

  டிட்டோ டிட்டோ எகெய்ன்.

  அதே அதே ஏஞ்சல்

  யானை சம்பவம் நான் பார்க்கவே இல்லை ஏஞ்சல் செய்தி மட்டுமே உட்னஏ நான் அதைப் பார்க்கத் தயாராக இல்லை என்று எந்த வீடியோவும் பார்க்கவில்லை. அதன் பின் செய்தி பார்க்கவும் இல்லை. வாச்டப்பில் அந்த செய்தி பற்றி வந்தால் திறக்கவே மாட்டேன்.

  என் கோபத்தை எழுத்தில் போட்டு விடணும் என்று நினைத்தேன் ஆனால் நோ யூஸ் என்று அமைதியாய்...வேண்டாம் ஏஞ்சல் எல்லா உயிர்களும் சந்தோஷமா இருக்கட்டும். வேதனையே வேண்டாம்..

  கீதா

  ReplyDelete