அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

3/10/20

எரிச்சல் ஏகாம்பரம்

எரிச்சல் ஏகாம்பரம் 🙅🙅🙅
=====================

                                                                         


இன்றைய கதை நாயகர் இவரே  :) இவர் சிரிப்புன்னா கிலோ எவ்வளவு என்று கேட்கும் வகை .இவரைவேலை செய்யுமிடத்தில் சந்தித்தேன் .நான்  வேலை சேர்ந்த புதிதில் இவர் வருடாந்திர விடுப்பில் இருந்ததால் 3 வாரங்களுக்கு இவரை சந்திக்க வாய்ப்பில்லாமற்போனது ,அதுக்கப்புறம் தொடர்ச்சியா 


                                                                                

எனக்கு 8 இல் இருந்து .5 கழிச்சா வருமே அதுதான் ..டீம் லீடர் என்பதால் மற்றும் நான்  புது ஊழியர் என்பதாலும் எ ஏ வின் அட்டகாசம் தாங்க  முடியலை .எதை செஞ்சாலும் குற்றம் வேறு யாரோ  செய்ததுக்கெல்லாம் என்னையே குற்றம் சாட்டுவார் இந்த எ ஏ . 


உதாரணத்துக்கு பகல் உணவு நேரத்தில் வார்டில் சந்தானம் போன்றோர் உணவு சாப்பிடவே மாட்டார்கள் அதனால் டைனிங் ஹாலில் அவர்களுடன் அமர்ந்து அவர்களை பேசி சாப்பிட வைக்கணும் .அப்படி ஒரு நாள் டின்னர் ஹோஸ்டஸ் சந்தானத்தின் முன் சூப் தட்டை வைத்து அதில் ஒரு முள் கரண்டியை வைத்து விட்டார் தவறுதலாக .எரிச்சல் சும்மா இருக்குமா நானேதான் வைத்ததாக என்னை முறைத்து திட்டியது //நான் இல்லை நான் வைக்கலைனு /பதறினேன் ஆனா அதை வைத்த  பிரிட்டிஷ் ஊழியர்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர் . சரி அவர்கள் வைத்தால்தான் என்ன அத எடுத்துட்டு சூப் கரண்டியை தருவதில் தவறில்லையே என்ற மனப்பாங்கு எரிச்சலுக்கு துளியுமில்லை .குற்றம் கண்டுபிடிச்சிட்டோம்ல என்ற அல்ப சந்தோஷம் எரிச்சலுக்கு .

இன்னொரு நாள் மற்றொரு பேஷண்டுக்கு கண்ணாடி கோப்பையில் காபி வைக்கப்பட்டிருந்தது நான் டெஸ்கில் ஹாண்ட் ஓவரை பார்த்துக்கொண்டிருந்தேன் .எரிச்சல் நுழைந்த வேகத்தில் //ப்ரெஷர் எகிறி  எதற்கு கண்ணாடி கோப்பையை வைத்தாய் ?? என்று எகிறியது அந்த நேரம் விசிட்டர்ஸும் இருந்தாங்க ஒரு மருத்துவரும் இருந்தார் .நான் தைரியத்தை துணைக்கு கூப்பிட்டு /நோ நான் அதை வைக்கவில்லை என்று உரக்க திட்டவட்டமா மறுத்தேன் ..இப்போ எரிச்சல் கொஞ்சம் அடங்கி ஓஹோ அப்போ ஹபீப்  செஞ்சிருப்பார்னு இன்னொரு ஊழியரை பழி சொன்னது .உடனே நான் சொன்னேன் எனக்கு தெரியாது ..என்று .

.நிதானமா  கவனித்ததில் எரிச்சலுக்கு யாரையும் பிடிப்பதில்லை அவரது நாட்டை சேர்ந்தவரை தவிர ..அப்படிதான் ஒரு டின்னர் ஹோஸ்டஸ் இலங்கை பெண்மணியிடம் வாய் காட்டி அவர் //i know what i am doing ,stop bossing around // என்று மூக்கை உடைத்தார் .அதை சந்தோஷமா சிரிப்பை அடக்கிட்டு பார்த்தேன் .பின்னே நம்மால் முடியாததை இன்னொருவர் செய்யும்போது சந்தோஷம் பொங்கி வழியாம போகுமா :))  

வேலையிடத்தில் டீம் லீடர் யாரை கேட்கிறார்களோ அவர்களை அந்த வார்டுக்கு அனுப்பணும் இதனால் எரிச்சல் நமக்கு வாய்ச்ச அடிமை என்ற நோக்கில் அப்பாவி வெள்ளந்தி எதிர்த்து பேசாத குணமுடைய ஸ்ஸ்ஸ் சரி சரி :) என்னை  எப்பவும் தேர்வு செய்தார்  .

இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது குற்றம் சொல்லும் :) இதில் கிறிஸ்துமஸ் வந்ததா .நான் எல்லாருக்கும் வாழ்த்து சொல்றமாதிரி இதுக்கும் சொல்லிட்டேன் :)))))) ஆத்தாடி எரிச்சல் எரி கணை ஆகிடுச்சு :) அது விஷயம் என்னனா அவர்  7த் டே அட்வென்டிஸ்ட்டாம் :)))) எனக்கு இது தெரியாமா வாழ்த்திட்டேன் ..உடனேயே உர்ர்ன்னு முறைத்தது முறைச்சதுமில்லாமா ஆங்கிலிகன் கிறிஸ்தவ முறை பற்றி திட்டோ திட்டு .. .

 ஹையோ சாமீ இப்படி எனக்கொரு ஐடியாவை அவரே  எடுத்து கொடுத்திட்டார்  அது என்னனா அந்த 7த் டே வகை கிறிஸ்டியன்ஸ் வெள்ளி சனி வேலை செய்யமாட்டாங்க :) உற்ச்சாக மிகுதியில் எனது ஷிஃப்டை மாற்றி விட்டேன் :))))))))))) அப்படியும் ஒரு நாள் அவருடன் வேலை வரும் அப்படி ஒரு நாள் fire ட்ரில் ஒலிக்க நான் கையில் கிளிப் பேட் வைத்திருந்தேன் obs டீட்டெயில்ஸ் எழுதுவது அதையும் தூக்கிட்டே மெயின் ஹாலுக்கு நடக்க அதற்கும் திட்டியது :)) அது என் தவறுதான் ..fire ட்ரில்லின்போது எதையும் தூக்கிட்டு போகக்கூடாது :))  என்ன செய்ய இவரை பார்த்தா செய்யவேண்டியதையும் மறந்து விடுகிறேன் நான் .இதுதான் ஒர்க் பிளேஸ் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள் .  it's ok not to be okஎன்பதை அவர் புரிஞ்சிக்கணும் .

போன வாரம் பார்த்தப்போ எரிச்சல் எதோ டயர்டா நடந்து வந்தார்  என்னாச்சுன்னு விசாரிச்சா அதுக்கு கையில் ஆர்த்ரைட்டீஸாம்  விரல்கள் வீங்கி கையும் வீங்கி இருந்தது .பாவமா இருந்தது .டேக் கேர்னு சொல்லிட்டு வந்தேன் .இப்போல்லாம் என்னை வேறு ஸ்பெஷல் வார்டில் போடுகிறார்கள் எப்போதாவதே எரிச்சலை சந்திக்கின்றேன் .எரிச்சல் அப்படியேதான் இருக்கார்  ஒரு மாற்றமுமில்லை .


========================================================================கொரோனா அட்டூழியங்கள் ..
இது வந்தாலும் வந்தது இங்கே ஒரு கடையிலும் ஆண்டி பாக்டீரியல் ஜெல் ஆல்கஹால் ரப் சானிடைசர் ஜெல் எதுவும் இல்லை எல்லா ஷெல்பும் காலியா இருக்கு .இன்று துரித உணவு பாஸ்தா ஷெல்பும் காலி சூப்பர்மார்கெட்டில் .எல்லாத்தையும் வாங்கி குவிக்கிறார்கள் மக்கள் .
                                                                                      


எங்கள் ஆலயத்தில்  இந்த வாரம் peace இந்திய முறைப்படி எல்லாரும் வணக்கம் சொன்னார்கள் வழக்கமா செய்யும் கைகுலுக்குவது தடை தர்காலிகமா :) 
ஒரு வைரஸ் ஒரு நொடியில்  பிரிட்டிஷ் ஆப்பிரிக்க பிரென்ச் போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே !!

                                     *************************************************


50 comments:

 1. //ஒரு வைரஸ் ஒரு நொடியில் பிரிட்டிஷ் ஆப்பிரிக்க பிரென்ச் போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே //

  இதுதான் காலத்தின் கோலம் நாளை எதுவும் மாறும் என்பதற்கு இதுவே சாட்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ :) எல்லாரும் நம்மை போல் வணக்கம் சொல்லிக்கிட்டாங்க .உண்மையில் அது சந்தோஷமாவே இருந்தது அழகாகவும் இருந்தது .எதுவும் எப்பவும் மாறலாம் உண்மைதான் 

   Delete
 2. தொடர்வதற்காக முதலில் ஒரு பின்னூட்டம் போட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஆங் சரி சரி :) நானும் தூக்கம் போட்டுட்டு வரேன் :)

   Delete
 3. ஒர்க் பிளேஸ் ஸ்ட்ரெஸ் அறிந்தேன்...

  ஒரு வைரஸ் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து கொண்டு வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. அதை ஏன் கேட்கறீங்க சகோ தாங்க முடியலை கொரோனா அட்றாஸிடீஸ் :)  பொருளை தேவையில்லாமா வாங்கி குமிக்குது ஒரு கூட்டமே 

   Delete
 4. ஏஞ்சலுடன் கொஞ்சிவிளையாடும் எரிச்சல் ஏகாம்பரம் என்று தலைப்பு வைத்திருக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர் :) உங்களை நேரில்  வந்து சந்திச்சு அடிக்க ஒரு சான்ஸ் கிடைச்சு அதையும் கொரோனா தடுத்திடுச்சே :) ஏப்ரலில் நியூயார்க் வர இருந்தோம் இப்போ ட்ரிப் கேன்சல்ட் தப்பிச்சுட்டே வரீங்க :)) 

   Delete
 5. எரிச்சல் மனிதரை என்ன செய்வது?
  இப்படி சிலர் எல்லாத்துக்கும் எரிச்சல் பட்டுக் கொண்டு எப்படி திட்டலாம் என்று காரணம் தேடுபவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். அவருக்கு எப்போது தெரிய போகிறதோ!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்க்கா அவர் கெட்டபெயரை சம்பாதிக்கிறார் .இவர் போன்றோர் திருந்தமாட்டாங்கக்கா 

   Delete
 6. //எங்கள் ஆலயத்தில் இந்த வாரம் peace இந்திய முறைப்படி எல்லாரும் வணக்கம் சொன்னார்கள் வழக்கமா செய்யும் கைகுலுக்குவது தடை தர்காலிகமா :)
  ஒரு வைரஸ் ஒரு நொடியில் பிரிட்டிஷ் ஆப்பிரிக்க பிரென்ச் போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே !!//


  எல்லோரும் இந்தியர் ஆனால் நல்லதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா :) இன்றும் கைகூப்பி வணக்கம் தான் PEACE நேரத்தில் செய்தாங்க :) எல்லாருக்கும் சிரிப்பு 

   Delete
 7. //போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே !!// - நீங்க வேற ஏஞ்சலின். நான் தலைநகரில் வெங்கட்டை சந்தித்தபோது, அவர் கைகுலுக்காமல் நமஸ்தே சொன்னது மட்டுமல்ல, யாரிடமும் கை குலுக்காதீர்கள், கொரானா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளில் இதுவும் ஒன்று என்றார். (அப்போ வரை அதைச் சிந்தித்துப் பார்க்கலை). அப்புறம் எதைத் தொட்டாலும், சானிடைஸர் போட்டுடலாமா என்ற எண்ணம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா நம்மூரிலும் இப்படி கவனமா இருப்பது SAFETY மெஷர்ஸ்எடுப்பது நல்லதே ,இங்கே 20 செகண்ட் TAP சுடுநீரில் எல்போலருந்து கழுவ சொல்றாங்க நோய் தொற்றை தவிர்க்க ,

   Delete
 8. குருஷேத்திரத்தில்தான் நாங்கள் மாஸ்க் வாங்க முனைந்தது. அப்போவே பல கடைகள்ல கிடைக்கலை. அவங்களும் நாங்க 100 ஆர்டர் பண்ணினா 30 கூட வருவதில்லை என்றார்கள். ஒரு கடையில் 60 ரூபாய்க்கு 3 மாஸ்க் வாங்கினேன் (10 வாங்கியிருக்கலாம்) பெங்களூரில் மாஸ்க் கிடைப்பதே அரிதாக இருக்கு.

  உடனேயே தேவையோ தேவையில்லையோ மக்கள் வாங்கிக் குவிப்பதே அவுட் ஆஃப் ஸ்டாக்குக்குக் காரணம்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதேதான் நெல்லைத்தமிழன் இங்கே டாய்லெட் ரோல்ஸ் எல்லாம் முடிஞ்சு ஒரு ஸ்டூடன்ட் மகளின் ப்லாட்மேட் கிச்சன் பேப்பரை வாங்கி ரெண்டா வெட்டி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டான் :))நம் மக்கள் அடுத்தவர் பங்கையுமில்ல வாங்கி பதுக்கறாங்க .இன்னிக்கு ஒருவர் என் முன்னே செல்பில் இருந்த ரெண்டு பாராசெட்டமோலை எங்கே நான் எடுத்துடுவேனோன்னு அவசரவசரமா GRAB செஞ்சார் சிரிப்புதான் வந்தது :) 

   Delete
 9. 'கடுவன் பூனை'கள் எல்லா ஆஃபீஸிலும் இருப்பார்கள். இவங்களை எப்படி நைஸ் பண்ணி வச்சுக்கலாம் என்று எப்படி முனைந்தாலும் நமக்கு ஃபெயிலியர்தான்.

  ஒருவேளை அவர் வீட்டில் எலி, வெளியில் புலியோ?

  ReplyDelete
  Replies
  1. @ நெல்லைத்தமிழன் உண்மையில் இபோஸ்ட்டுக்கு கடுவண்பூனைன்னு தான் டைட்டில் வச்சேன் ஆனா எனக்கு பிடிச்ச பூனையை எரிச்சலுக்கு சமமா நினைக்க முடில்ல :))))))))))))))

   Delete
 10. //எதை செஞ்சாலும் குற்றம் வேறு யாரோ செய்ததுக்கெல்லாம் என்னையே குற்றம் சாட்டுவார் இந்த எ ஏ.// இப்படிபட்டவர்கள் கூட வேலை செய்யவேணுமென்றால் ஸ்ட்ரெஸ் வராமல் இருக்குமா. ஒழுங்கா செய்யும் வேலைகூட செய்யமுடியாமல் போகும்.
  //எனக்கு 8 இல் இருந்து .5 கழிச்சா வருமே அதுதான்// ஹா..ஹா..ஹா

  //நமக்கு வாய்ச்ச அடிமை என்ற நோக்கில் அப்பாவி வெள்ளந்தி எதிர்த்து பேசாத குணமுடைய ஸ்ஸ்ஸ் சரி சரி :) என்னை எப்பவும் தேர்வு செய்தார் //ஆவ்..இப்ப ஒருவர் பொயிங்கி எழுவாரேஏஏஏஏ....
  முதலில் ஒரு நிமிஷம் சகோ.கில்லர் ஜீ பக்கமோ என யோசித்தேன். நல்ல தலைப்பு எரிச்சல் ஏகாம்பரம்.

  இந்த கொரோனா வந்தாலும் வந்ததிச்சு.. சனம் படும் பாடு. ஆனா இங்கு கொஞ்சம் பரவாயில்லை. ஆனா எங்கட ஆட்கள்தான் அலப்பறை. தாங்கமுடியல. சுப்பர்மார்கெட், தமிழ்கடை பொருட்கள் எல்லாம் இவர்கள் வீட்டில். எத்தனை நாட்களுக்கு வாங்கி சேவ் செய்றது. இதில பொலிடிக் வேற இருக்காம் என சொல்லிதிரிகிறார்கள். இங்கு அதைவிட துருக்கிகாரர் அகதிகளை வைத்து பேரம் பேசுகிறார்கள். இருபக்க இடி.
  /ஒரு வைரஸ் ஒரு நொடியில் பிரிட்டிஷ் ஆப்பிரிக்க பிரென்ச் போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே !!// ஹா..ஹா..ஹா. உண்மைதான் அஞ்சு. இங்கு மியூசிக் க்ளாஸ் ல் ஒருத்தருக்கு ப்ர்த்டே பார்ட்டி நடந்தது. அவர் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வாழ்த்தை பெற்றார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா அந்த அப்பாவி வெள்ளந்தி பார்த்து பிஞ்சு மயக்கம் போட்டாம் :)) நம்மாலான செயல் ஹாஹா 
   //இதில பொலிடிக் வேற இருக்காம் என சொல்லிதிரிகிறார்கள். இங்கு அதைவிட துருக்கிகாரர் அகதிகளை வைத்து பேரம் பேசுகிறார்கள்.//
   அஆவ் புரியலை விளக்கமா மயில் அனுப்புங்க :) இப்போல்லாம் ஜெர்மன் நியூஸ் சரியா காதுக்கு வரமாட்டேங்குது :)நம்ம மக்கள் தெரியுமிதானே :)) டாய்லெட் எப்பரும் பாராசெட்டமாலும் சுத்தமா இல்லை ஒரு இடத்திலும் .

   Delete
 11. ஒரு வைரஸ் ஒரு நொடியில் பிரிட்டிஷ் ஆப்பிரிக்க பிரென்ச் போலந்து ஸ்பானிஷ் நாட்டினரை இந்தியராக்கி விட்டதே !!

  காலம் செய்த கோலம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா .உண்மைதான் 

   Delete
 12. இம்மாதிரித் தான் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் கணக்கு டீச்சர். என்னைக் கண்டாலே ஆகாது. மற்ற ஆசிரியைகளுக்கு என்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்னால் இவங்க என்னை வகுப்பை விட்டு எப்படியாவது வெளியேத்தறதிலேயே இருப்பாங்க. என்னோட உடை, பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம்னு அத்தனையையும் கேலி செய்வார். கணக்கு வகுப்பில் மட்டும் நான் நானாக உணர மாட்டேன். அதுக்காகவே செக்ரடேரியல் கோர்ஸும் எடுத்தேன். சாதாரணக் கணக்கு முறைகள் தான் படிக்கணும். ஆனால் அப்போவும் இவங்க என்னோட வகுப்புக்கே வந்துட்டாங்க! 11 ஆம் வகுப்பு வரை இருந்துட்டுத் தான் என்னை விடுவிச்சாங்க! அவங்களுக்கு நான் நல்லாப் படிக்க மாட்டேன் என்னும் எண்ணம். ஆகவே கணக்கில் நான் வாங்கும் மதிப்பெண்களைப் பார்த்துட்டுக் காப்பி அடிக்கிறேன்னு நினைச்சு எனக்கு மட்டும் வேறே கேள்விகளைக் கொடுத்துத் தனியே உட்கார வைச்சு எழுதச் சொல்லுவாங்க! இப்படி எத்தனையோ நினைவுகள் உங்க எரிச்சல் ஏகாம்பரத்தைப் பார்த்ததும் வருது! நம்ம பிஞ்சோட மொழியில் பொயிங்கி வருது. :))))

  ReplyDelete
  Replies
  1. உங்களோட பின்னூட்டத்தைப் படித்த பிறகு எனக்கு கல்லூரியில் நடந்தது நினைவுக்கு வருது. எங்க வகுப்பில் பிஸிக்ஸ் எடுப்பவர் துறைத் தலைமையான ஸ்டீபன் அவர்கள். அவருக்கு என் வகுப்பில் இருக்கும் (சென்னையிலிருந்து பாளை வந்து படிக்கும்) ராஜன் என்பவனை எதுக்கோ பிடிப்பதில்லை. அவன், வகுப்பில் என்ன செய்தாலும், சும்மா உட்கார்ந்திருந்தாலும் ஏதேனும் குறை கண்டுபிடித்துத் திட்டுவார். அவன் பக்கத்தில் இருக்கும் என்னை ஒன்றுமே சொல்ல மாட்டார். எனக்கு உதவிகளும் செய்வார் (இண்டேர்னல் எழுத முடியலை சார். உடம்பு சரியில்லை என்று சொன்னால், சரி..இந்தா கேள்வித்தாள்..இப்போவே உட்கார்ந்து 2 மணி நேரத்தில் பதில் எழுது என்றெல்லாம் சொல்வார்). ஆனால் ராஜன், கால் ஆட்டினால், அவனை அதை வைத்து கிண்டல் செய்வார். என்ன செய்தாலும் ஒரு குறை கண்டுபிடிப்பார்.

   இதுக்கெல்லாம் காரண காரியம் அறிவது கஷ்டம். என்னவோ ஒண்ணு, ஒருத்தரை இன்னொருவருக்குப் பிடிக்காமல் செய்துவிடுகிறது.

   Delete
  2. @ நெல்லைத்தமிழன் உண்மைதான் ஆனா இப்படிப்பட்டவங்களால் நமக்கு நம்முடைய தன்னம்பிக்கை குறையுதே .அதோட எல்லாரையும் ஏற்கும் மனப்பாங்கு அவங்களுக்கு ஏன் இல்லை :( அதுவும் ஆசிரியர்னா எப்படி பெருந்தன்மையுடன் இருக்க வேண்டியவர் .எனக்கும் ஒரு டீச்சர் இருந்தார் என்னை எப்பவும் திட்ட முனைவார் நான் மட்டுமில்லை அடுத்த வகுப்பு பெண்களிலும் சிலரிடம் இப்படி வெறுப்பை உமிழ்வார்  ஆனால் பிறகு கண்டுபிடித்தோம் அவருக்கு தன்னை விட நிறமானவரை பிடிப்பதில்லை என்பதை :( 

   Delete
  3. @ கீதாக்கா இப்படி நிறைய இருக்குக்கா எனக்கும் :)

   Delete
  4. @ கீதாக்கா இப்படி நிறைய இருக்கு எனக்கு ஆனா பழசை மறந்துட்டேன் இப்போ சமீபத்தில் நடந்தது மட்டும் எழுதினேன் :))))))))))

   Delete
  5. பொய்ங்கியாவது ஆற்றாமையை தீர்க்கணும்க்கா இல்லைன்னா நமக்கு ஹெல்த் பிரச்சினை வரும் :)

   Delete
 13. ஓஒ இது எப்போ நடந்துதூஊஊ:)... கர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா நித்திரை கொள்ளும் நேரம் பார்த்து என்னென்னமோ எல்லாம் நடக்குதே...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ :) நீங்க தூங்காத நேரத்தை சொல்லுங்க அப்புறம் மற்றத்துக்கு வரேன் :)))))))))))

   Delete
 14. என்னைக்கண்டாலே ஆகாதா அதிகாரிகள் ஓரிருவர் எனக்கும் இருந்திருக்கிறார்கள்.  சக ஊழியர் ஒருவர் பயங்கர வெறுப்பேற்றுவார்.  எரிச்சலாய் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நம்மைப்போல் பலருக்கு எரிச்சல்களால் தொல்லையோ :)

   Delete
 15. மாஸ்க் முதல் சானிடைசர் வரை இங்கும் எலலாமே டிமாண்ட் ஆகிவிட்டது!  வருமுன் காப்போம்.  கூட்டமான இடங்கள் எல்லாம் சற்று காலியாகவே இருக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. ஹான்ட் ஜெல் ஒரு கடையிலுமில்லை  ரெடிமேட் உணவுகள் ஷெல்பும் காலியாகி இருக்கு ..ஆனா பாருங்க ஒரு மாசம் கழிச்சி எல்லாம் குப்பையில்தான் போகும் அடுத்தவருக்கு விடாம வாங்கி குமிக்கிறாங்க பாராசெட்டமோலைகூட 

   Delete
 16. முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர், நமக்குண்டு பண்பாடு...   அடி அம்மாடி நமக்குண்டுபண்பாடு என்றொரு பாடுஉண்டு.   அதன் அர்த்தத்தை வெளிநாட்டினர் இப்போது உணரத்தொடங்கி இருக்கின்றனர்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் உண்மைதான் இப்போ யாரும் அடுத்தவர் விட்டு 5 ஸ்டேப் தள்ளித்தான் நிக்கிறாங்க கடையில்கூட .

   Delete
 17. அஆவ் எல்லாருக்கும் வெளியே போயிட்டு வந்து ரிப்லை தரேன் நட்பூஸ் 

  ReplyDelete
 18. அன்பு ஏஞ்சல்,
  எத்தனையோ சம்பவங்கள்.
  அத்தனையும் கிளப்பிவிட்டு விட்டது உங்கள் பதிவு.
  நான் வெளியே நிறைய சந்தித்ததில்லை.
  வீட்டினில் பெரியவர்கள், அவர்களது உறவினர்கள்,
  எல்லோரையும் சமாளிக்க முடியாமல்

  வேப்ப மரத்தடியில் ஒளிந்து கொண்டு விடுவேன்.
  நீங்கள் சொல்லும் எரிச்சலுக்கு அல்சர் இருக்கோ என்னவோ.

  மன்னிக்க முயலுங்கள். வேற வழி. இல்லையெனில்
  உங்கள் உடல் நலம் பாதிக்க வைத்து விடுவார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா . எல்லா அனுபவங்களும் நம்மை பண்படுத்த என்று நினைச்சுக்கறேன் வல்லிம்மா :)எரிச்சலுக்கு கொஞ்சம் பொறாமை குணம்னு நினைக்கிறேன் .ஹாஸ்பிடல் பேஷண்ட்ஸ் என்னிடம் ன்பாய் பழகுவது அவருக்கு உறுத்தல் .மன்னிச்சுட்டேன் வல்லிம்மா அவரை ஆனாலும் ஒரு ஷிஃப்ட் செய்வதும் கடினம் அவருடன் 

   Delete
 19. //அப்பாவி வெள்ளந்தி எதிர்த்து பேசாத குணமுடைய ஸ்ஸ்ஸ் சரி சரி :) என்னை எப்பவும் தேர்வு செய்தார் .//

  ஸ்ஸ்ஸ் விடிய இந்த வரி பார்த்து மயங்கி, இப்போதான் எழுந்து வந்தேன்.. ஒரு சுவீட் 16 பிள்ளை நித்திரை என்றதும்.. என்னவெல்லாம் நடக்குதிங்கின பாருங்கோவன்..

  ReplyDelete
  Replies
  1. ஹஆஹாஆ :) மேலே ப்ரியாவும் உங்களை தான் நினைத்தார் :) எப்படியோ என்னால் தூங்கி எழும்பினீங்களா இல்லையா :) அதுக்கு என் அக்கவுண்டில் பணம் போடவும் 

   Delete
 20. //அதையும் தூக்கிட்டே மெயின் ஹாலுக்கு நடக்க அதற்கும் திட்டியது :)) அது என் தவறுதான் ..fire ட்ரில்லின்போது எதையும் தூக்கிட்டு போகக்கூடாது :)) //

  ஹா ஹா ஹா உங்களுக்கும் அந்த ஏ ஏ இடம் திட்டு வாங்காட்டில் பொழுது விடியாதுபோலும்:)).. இப்படியும் ஒராள் வேணும்தான் நம்மைக் கொஞ்சம் ஸ்ரோங் ஆக்க:)).. வாழ்க ஏ ஏ.. வளர்க அவர் சேவை:)).. அவரால இனி அஞ்சு பிரேவ் லேடி:) ஆகிடப்போறா:))... ஹா ஹா ஹா இப்பூடிப் பொஸிடிவ்வா சிந்திக்கோணும்..

  எனக்கு இப்படி சங்கடமான சமயம் சிரிப்புத்தான் வரும் அஞ்சு கோபத்துக்குப் பதில், கோபப்படவே மாட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஹலோ நீங்களும் என் கணவரும் பேசி வச்சி என்னை கேலி பண்றீங்க :) இதைத்தான் அவரும் சொன்னார் //உங்களுக்கு எரிச்சல் போல் ஒரு ஆள் இல்லைனா உங்களை கைல பிடிக்க முடியாதுன்னு :))நாநன்னிக்கு சிரிச்சிட்டுதான் இருந்தேன் ஹையோ ஹையோ 

   Delete
 21. உண்மைதான் அஞ்சு, ஆட்கள் பொருட்கள் வாங்கி ஓய்கின்றனர், ஏதோ குறைகிறது என்பதுபோல சொன்னார்கள், இன்று நியூஸ் பார்க்க மீஇண்டும் வயிற்றைக் கலக்குதே... கடவுளே நல்லதே நடக்கட்டும்.. சைனாவிலும் மக்கள் பாவம்தானே.. கஸ்டப்படுகிறார்களே..

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கும் ப்ரெண்டுடன் வேறு ஒரு சிட்டிக்கு போனேன் அங்கேயும் எல்லா பெயின்கில்லர்ஸ் ஆன்டிபாக் ஜெல்ஸ் முடிஞ்சு ..எல்லாம் panic ஆறாங்க 

   Delete
 22. கதைதான் எழுதப்போகிறீர்கள் என்று நினைத்தேன். கதையல்ல, நிஜம் என்று புரிந்தது. சிலர் அப்படித்தான், தானும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள், மற்றவர்களையும் சந்தோஷமாக இருக்க விட மாட்டார்கள். நான் இந்த மாதிரி மோசமான அனுபவங்களுக்கு ஆளானதில்லை. என் மகளை ஒரு பெண் அதிகாரி இப்படித்தான் படுத்தினார். 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுக்கா ..மனிச்சாலும் மறக்க முடியாதபடி இவங்க பிஹேவியர்ஸ் இருக்கு ..அது துவக்கத்தில் இருந்து பய உணர்வு நம் முகத்தில் காட்டி குடுத்திடுது அதனால்தான் அட்வான்டேஜ் எடுக்கறாங்க சிலர் 

   Delete
 23. ஹை ஏஞ்சல் எல்லோரும் சுகம் தானே. ஸ்டே ஸேஃப். பணிக்குச் சென்று கொண்டிருக்கிறீர்களா? ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக் கொண்டு. மகள் வந்திருப்பார். சுகம் தானே. உங்களுக்கும் மகள் வந்திருப்பது சந்தோஷமாக இருக்கும்.

  எரிச்சலைப் போல நிறைய எரிச்சல்கள் இருக்காங்கப்பா..சும்மா அடங்கிப் போகாதீங்க. சண்டை எல்லாம் போட வேண்டாம் அந்த ஸ்ரீலங்கன் பெண் சொன்னது போல் அமைதியாக ஆனால் அழுத்தமாகச் சொல்லிட்டே போங்க...எப்பவுமே இப்படி எரிச்சல்களை கொஞ்சம் ஓவர்டேக் செய்தால் அடங்கும்..

  ஒரு டவுட் 7த்டே அட்வென்டிஸ்ட் ம் க்ரைஸ்ட் நம்பிக்கை உடைவர்கள் தானே ஏன் விஷ்ஷை ஏற்கவில்லை? ஓ ஓகே காட் இட்...அடுத்த லைன் படிச்சுட்டேன்...

  போன வாரம் பார்த்தப்போ எரிச்சல் எதோ டயர்டா நடந்து வந்தார் என்னாச்சுன்னு விசாரிச்சா அதுக்கு கையில் ஆர்த்ரைட்டீஸாம் விரல்கள் வீங்கி கையும் வீங்கி இருந்தது .பாவமா இருந்தது .டேக் கேர்னு சொல்லிட்டு வந்தேன்//

  இது இது இதுதான் நம்ம ஏஞ்சல்!!
  நானும் இதைத்தான் சொல்ல வந்தேன். அழுத்தமாகச் சொல்லி உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் நான் எல்லோரையும் அன்பு செய்பவள் என்பதைக் காட்டினால் ஒரு வேளை கொஞ்சம் அடங்குமோ அடங்கா விட்டாலும் நாம் நம்ம இப்படியான நல்ல கேரக்டரை மாத்திக்க வேண்டாமே ந்னு...சூப்பர் ஏஞ்சல்!!!

  இப்படியான எரிச்சல்கள் தாங்களும் மகிழ்ச்சிaயக இருக்கமாட்டாங்க.....மத்தவங்களையும் சந்தோஷமாக வைக்க மாட்டாங்க...ஹூம் நாம கடந்து போக வேண்டியதுதான். வாட் டு டூ ஹான்(இதை அலெக்ஸ் சொல்லுவது போல் சொல்லிப் பார்க்கவும்!!) ஹிஹிஹி

  மக்கள் எல்லாத்தையும் வாங்கிக் குவிப்பது ஹூம் என்ன சொல்ல...நாமெல்லாம் எல்லாருக்கும் வேண்டுமே என்று கரெக்ட்டா கொஞ்சம் எக்செஸா வாங்கிப்போம் கூட ஒன்னு அல்லது ரெண்டு...இங்கு இன்னும் அந்தப் பிரச்சனை வரலை குறிப்பா எங்க ஏரியாவில். ஆனால் மெடிக்கலில் சானிட்டைசர் கிடைப்பதில்லை. மாஸ்க்கும்.

  ஓகே அட்டெண்டன்ஸ் வைச்சாச்சு ஹா ஹா ஹா..அப்புறம் நீங்க பதிவு போட்டா நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா எனக்கே தெரியாது!!!

  கீதா

  ReplyDelete
 24. இவர்கள் உண்மையில் நல்லவர்களாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது, இதே பாணியில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அநேகர் உண்டு. வெகு சிலரே நமக்கு பணி குறித்து விசயங்களை சொல்வார்கள், பலர் நம்மையும் குழப்பி மேலே இவனுக்கு ஒண்ணுமே தெரில என்று போட்டுவிட்டு மேலே இருப்பவர்களை தங்கள் மகுடிக்கு ஆட விடுவார்கள்
  இந்த மனப்பாங்கு கொண்டோரில் கணிசமானோர் அடுத்த ஊழியர்களின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள இயலாதவர்கள்

  ReplyDelete
 25. எரிச்சல் ஏகாம்பரமா?
  அவர் இத்தனையை செய்வாரா?
  அருமையான பதிவு

  ReplyDelete