அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

Have a Great Day Dear Friends :)

2/5/20

பேருந்தில் ஜன்னலோரம் :))


நட்புக்களுக்கு அன்பான பிப்ரவரி வணக்கங்கள் :)

                                                                               

                                                                           
                                                                   
எல்லாரும் நலமா இருக்கீங்களா :) என்னாச்சோ ஏதாச்சோ புரியலை வலைப்பக்கம் வர  கிடைப்பது அரிதாகிவிட்டது இப்படியே போனா எல்லாரும் என்னை மறந்திடுவீங்க அதனால் தூக்கத்தில் இருந்து எழும்பி வந்துட்டேன் :) 
விட்ட இடத்தில இருந்து துவங்க தற்சமயம் இஷ்டமில்லை ,அது மனநலம் அடுத்த பதிவில் வரும் .ஆகவே சமீபத்தில் கண்ட, ரசித்த /நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன் .
பேருந்தில் இளம்காற்று வீச ஜன்னலோரம் அமர்வதும் சுகம் .நம்மூரில் கொஞ்சம் கஷ்டம்தான் கூடவே குப்பைலாரியும் பயணிக்கும் நறுமணத்துடன் .ஆனா இங்கே வித்தியாசம் .அப்படி பயணிக்கும்போது ரசித்தவை :)

சம்பவம் 1,
==========

                                                                                    


ஒரு பேருந்து பயணிக்கின்றது அதில் சுமார் 10 பேருக்கு இருக்கையில் இருந்தார்கள் .இங்கே கால் போர்ட் தொங்குதல் திறந்த காற்று வீசும் ஜன்னலோரங்கள் கிடையாது என்பதை அறிவீர்கள் . வெயில் காலங்களில் ஜன்னல் திறக்க ஸ்பெஷல் அமைப்பை பயன்படுத்தனும் .பேருந்து புறப்பட்டதும் ஓட்டுநர் கதவுகளை மூடிடுவார் .அடுத்த நிறுத்தத்தில் வரும்போது அவரே கதவை திறப்பார் .(இதே முறை நம் நாட்டில் வந்துடுச்சா ?? )
இப்படி பேருந்து பயணிக்கும்பாதையில் நடுரோட்டில் ஒரு அறிவிலி மொபைலை காதுக்குள் நுழைத்து தன்னிலை மறந்து நடந்து சென்றது ஓட்டுநர் சடாரென பிரேக்கை அமுக்க பேருந்து  ஒரு குலுங்கு குலுங்கியது ..அப்போ கேட்ட வசனங்கள் .

shit 
------ ஒரு வேற்று மொழி கெட்ட வார்த்தை 

------------ மற்றொரு கெட்ட வார்த்தை  இது ஆங்கிலத்தில் 

குட்னெஸ்மீ 

ஜீசஸ் 

ஓ மை god 

ஹே பக்வான் 

ஒரு சம்பவம் எத்தனை விதமான  வினைகளை வெளிப்படுத்தியது என்று யோசித்தேன் .சரி இதில் மேலுள்ள வார்த்தைகளில் நான் சொன்னது எதுவா இருக்கும்னு சரியா சொல்றவங்களுக்கு :)

இந்த படத்தில் உள்ள பொருள் பரிசாக வழங்கப்படும் :)

                                                                              


சம்பவம் 2,
===========


                                                                             

இதே பேருந்து நான் ஜன்னலோரம் என்னோடு 5 /6 பேர் .இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு அழகிய பாட்டி பஞ்சாப்  சிங்கபெண்  தங்கம் :)  தூக்கமாட்டாமல் இரண்டு பெரிய பைகளை தூக்கிக்கொண்டு ஏறினார் .ஏறும்போதே கண்ணாடி கூட்டில் இருக்கும் ஓட்டுனருக்கு வணக்கம் மகனே நலம்தானே என்று விசாரித்தார் பேருந்து கூடுதல் உற்சாகத்துடன் பயணித்தது உள்ளே நுழைந்தவாறே எல்லாருக்கும் குட்டி கரங்களை வீசி அன்பை பரிமாறிக்கொண்டார் .

பிறகு அவருக்கான முன்னே உள்ள ஸ்பெஷல் முதியோர்  இருக்கையில் அமர்ந்து தனது பைகளை பிரிக்க துவங்கினார் .ஒரு பெட்டி வந்தது அதிலிருந்து நெய் வாச லட்டு விநியோகம் பேருந்தில் உள்ளோருக்கு நடந்தது :) தயக்கத்துடன் வாங்கி கொண்டேன் :) வேணாம்னு சொன்னா பாட்டி முகம் வாடும்ல :) .லட்டு விநியோகம் முடிந்ததும் அடுத்தது வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு :)  நான் கடைசி உயர இருக்கையில் இருந்ததால் எல்லாம் எனக்கு தெரிந்தது :) பேருந்தில் இருந்த வெள்ளையர்களுக்கு ஆச்சர்யம் தயக்கம்னு கலவையா உணர்வு ப்ரவாகம் :) அவர்கள் தயக்கத்தை பாட்டி தள்ளி அனைவர் கையிலும் பழங்களை திணித்தார் .பிறகு தனக்கு கடவுள் கொடுத்ததை அனைவருடனும் பகிர்கிறேன் என்றார் :) மனம் பஞ்சாய் சந்தோஷத்தில் மிதக்க அதே உற்சாகத்துடன் அவசரப்பட்டு ஒரு நிறுத்தம் முன்னாடியே இறங்கி (தெரியாமத்தான் ) அசடு வழிய நெய் மணம் வீசும் லட்டை பிடித்தவாறு   நடக்க துவங்கினேன் :)

சம்பவம் 3
===========

                                                                                   

இதுவும்  பேருந்து நிறுத்தத்தில் :) குளிர் வாட்டும் மாலை வேளையில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு அழகிய காதல்  ஜோடி வந்தனர் .நிறுத்தத்தில் இருந்த அனைவர் விழிகளும் அவர்களை நோக்கி .அதில் ஆண் 60 ஆம் எண்  பேருந்து  போய் விட்டதா என்று கேட்டார் ..இல்லை என்றோம் பிறகு தனது கையுறைகளை மற்றும் தனது மப்ளர் ஐயும் தனது ஜோடிக்கு அணிவித்து விட்டார் .சுற்றியுள்ளோர் அவர் கவனத்தில் வரலை .தனது இணைக்கு குளிர் தாக்க கூடாதென்பது மட்டுமே அவர் நினைப்பில் இருந்தது .இருவரும்  நன்றி புன்னகையை பரிமாறிக்கொண்டனர் .இணையின் முகத்தில் குளிருக்கும் வெட்கத்துக்கும் சேர்த்து கன்னம் சிவப்பை தந்திருந்தது .பிறகு பேருந்து வந்தது மெதுவாக நடந்து பிளாட்பாரம் வந்தார்கள் நான் கையை சிக்னல் காட்டி பேருந்தை நிறுத்தினேன் .நன்றி இருவர் உதடுகளிலுமிருந்து வந்தது .
பிறகு உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தனர் ஜன்னலோரம் :)
வெளியில் இருந்து தெரிந்தது தாத்தா பாட்டிக்கு பிஸ்கட் ஊட்டுவது :)
ஒரு அழகிய தருணம்  மெல்லிய பூங்காற்று வீசிச்சென்ற உணர்வு .என் பின்னாலிருந்து //bless them // என்ற ஓரிரு குரல்கள் ஒலித்தன ..அப்பாடா நான் மட்டுமில்லை இன்னும் சிலரும் அந்த ஜோடிகளை ரசித்திருக்கிறார்கள் :) தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அகவை  80 இற்கு மேலிருக்கும் .

சம்பவம் 4
===========
இதை நான் பார்க்கவில்லை எனது சரிபாதி சொன்னார் :)

போன வாரம் ஆசிய ரெஸ்டாரண்டில் உணவு வாங்க சென்றார் அங்கே மேசை இருக்கையில் ஒரு முதிய சென்னை தாத்தா பாட்டி அமர்த்திருந்தனராம் அவர்கள் முன்னே உளுந்துவடை பாஸந்தி மற்றும் மைசூர்பாகு தட்டில் இருந்திருக்கு .பாட்டி தயங்க தாத்தா விடாமல் ஈஸ்வரி... வீட்டுக்கு போனா இதெல்லாம் கிடைக்காது நந்தினி தர மாட்டா .நல்லா சாப்பிடுன்னு ஊட்டி விட்டாராம் .பாவம் அந்த ஜோடிகளுக்கு சுகர் பிரச்சினை எதுவும் இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டோம் :) 

ஊர் முழுக்க தண்டோரா அடிச்சி திருமணம் புரிந்து விரைவில் பிரியும் இக்கால காதலும்  :(     ...வயதானாலும் இளமை மாறா அக்கால காதலும் கண்முன்  மாறி மாறி தோன்றியது  .எல்லாரும் சந்தோஷமா இருங்க நாலு பேருக்கு சந்தோஷத்தை மட்டும் அளவில்லாம கொடுங்க :) அன்பு அலையலையாய்  பரவட்டும்.

விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் :) 

*********************************************************************************

76 comments:

 1. நாங்கள் நலமே...    நீங்களும் நலம்தானே?   அதென்ன பிப்ரவரி வணக்கம்?!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :)  அதுவா :) இதுக்கு முந்தி ஜனவரிலதான் போஸ்ட் போட்டேன் அதான் இப்போ சும்மா பிப்ரவரி வந்து வணக்கம் சொல்லிக்கிட்டேன் 

   Delete
  2. ///அதென்ன பிப்ரவரி வணக்கம்?!!!//

   அது வந்து ஸ்ரீராம்.. பெப்ரவரி எனில் அஞ்சுவுக்கு ஒரு லவ்வு வந்திடும் அது ஏனெனில்.. ஏனெனில்... பல குயின்கள்.. .... ...... ,சரி வாணாம்:)) ஹா ஹா ஹா..

   Delete
 2. நீங்களும் தோழியும் பேசி வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் வலைப்பக்கம் கைகோத்து வந்திருக்கிறீர்கள் போல...   நாங்களெல்லாம் இங்கு இருக்கிறோம், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையை சொல்லனும்னா ..இப்படி சேர்த்து பேசிவச்சு வரலைன்னா அப்படியே பிளாக்கை மறந்து வேலை யில் மூழ்கிடுவோம் .அதனால்தான் ஒரு முடிவோடு இருவரும் போஸ்ட் போட்டுட்டோம் :)

   Delete
  2. அதிரா மிரட்டிப் போட வச்சா எனச் சொல்லவில்லை அஞ்சு கர்ர்ர்ர்:))..

   ஸ்ரீராம் எங்கு போகாவிட்டாலும் உங்கட பக்கம் மட்டும் அப்பப்ப தலை காட்டினேன் நான்... அதை மறந்திட்டீங்க:(.

   Delete
  3. நன்றி அதிரா... கோபு ஸார் உங்களைத் தேடினார்!

   Delete
  4. கோபு அண்ணன் என்னைத் தேடவில்லை என்றால்தான் அது உலக அதிசயம் ஸ்ரீராம் ஹா ஹா ஹா.. பாவம் அவர் தேடிக்கொண்டுதான் இருப்பார்ர்.. எனக்குத்தான் பலசமயம் போகமுடியாமல் இருக்கும்.

   Delete
 3. நம் நாட்டிலும், அதிலும் சென்னையிலும் மூடிக்கொள்ளும் கதவுள்ள பேருந்துகள் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.  எனக்கு அந்தப்பரிசு வேண்டாம்.   அதிராவுக்குத் தெரியாமல் எடுத்தால் அவர் அடிப்பார்!  ஆனாலும் பதிலில் என் சாய்ஸ் ஓ மை காட்!

  ReplyDelete
  Replies
  1. அஆவ் !! வந்தாச்சா மூடும் கதவுகள் ..ஆனா புளிமூட்டையாய் இருக்கும் கூட்டத்தில் மூச்சே விட முடியாதே !!!!!!!!!!!
   தவறான விடை :) அது உங்களுக்கில்லை அந்த கல் சட்டி யாருக்கோ :))))))))))

   Delete
  2. ///அதிராவுக்குத் தெரியாமல் எடுத்தால் அவர் அடிப்பார்! ///
   ஹா ஹா ஹா எப்பூடி எல்லோரையும் மிரட்டி வச்சிருக்கிறேன் பாருங்கோ:))..

   அது வந்து ஸ்ரீராம் அஞ்சு சொன்ன வார்த்தை...

   “ஏ கஸ்மாலம் வீட்டில சொல்லிட்டு வந்தாயா?”.. ஹா ஹா ஹா இதுவாத்தான் இருக்கும் ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   படங்களில பார்க்கிறோமே..... ஹையோ ஹையோ.

   Delete
  3. அதை அவர் சாய்ஸில் தரவேயில்லையே...

   Delete
  4. சரியா சொன்னிங்க :ஸ்ரீராம் ) பூனைக்கு குறும்பு 

   Delete
 4. இரண்டாவது பேருந்து சம்பவம் எனக்கு ஒருஜோக்கை நினைவு ப்படுத்துகிறது.  ஒருபாட்டி தினமும் கண்டக்டருக்கு ஒரு பிஸ்தா பருப்பு கொடுக்கும் ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா !! எனக்கு தெரில ஆனா பல சம்பவங்கள் இன்னும் நடக்கிறது நாம் கவனிப்பதில்லை 

   Delete
  2. ஜோக்கை மறந்து விட்டீர்களா? அச்சச்சோ... என்ன ஒரு ஜோக் அது...

   Delete
 5. அடுத்த இரண்டு சம்பவங்களும் கவிதை.   இரண்டாவது சம்பவம் அமிதாப் நடித்த ஒருபடத்தை நினைவுபடுத்துகிறது. பாகுபன் என்று நினைவு.

  ReplyDelete
  Replies
  1. நான் அவர்கள் ஏறிச்சென்றபிறகும் புன்னகைத்த முகத்துடனே இருந்தேன் :))))))))) அவங்க ஹேப்பினஸ் எனக்குள் புகுந்த உணர்வு SOOO ஸ்வீஈட் .பாகுமான் தேடிபார்கனும் .அமிதாப்தான் கொஞ்சம் அந்த கேரக்டருக்கு எப்படினு யோஜிக்கிறேன் :) 

   Delete
  2. அந்த தம்பதியரை பார்த்து என் கணவருக்கு ரொம்ப கவலை ..பெரியவர் //நந்தினி தர மாட்டா விட மாட்டான்னு // பயந்துட்டே சொல்றார் ..// இதை சொல்லி சொல்லி மாய்ந்தார் கணவர் 

   Delete
  3. நந்தினி அக்கறையான பெண் என்று தெரிகிறது. அமிதாப் பாக்பன்னில் நல்லா பண்ணி இருப்பார். ஜோடி ஹேமமாலினி.

   Delete
  4. ஹ்ம்ம் இருக்கலாம் :) பார்க்கிறேன் அமிதாப் படத்தை 

   Delete
 6. வயதோடு வந்தாலும் காதல்...    அது வயதாகி வந்தாலும் காதல்...   இந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லத்தேவையில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா இந்த வரி நினைவு வந்தது :) அது உங்க ட்ரேட்மார்க் வசனம் அதை சுட மனசு வரலை ஹாஆஆ 

   Delete
  2. அது பாடல் வரிதானே... யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாமே...

   Delete
  3. அப்படியா :) இது தெரியாம போச்ச்சே :)

   Delete
 7. அற்புதமான அனுபவங்கள். தாத்தா, பாட்டி காதல் மிக அழகு. ஒரு பூந்தோட்டத்துக்குள்ளேயே இருந்த மாதிரி. அதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டது இன்னமும் சிறப்பு. அழகான கவிதை. இந்தியத் தாத்தா பாட்டிக்கும் ஒருவருக்கொருவர் தனியாக வந்து சாப்பிடும் அளவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கே. நீடூழி வாழட்டும். நீண்ட நாட்கள் கழித்து வந்து ஓர் அழகான கவிதையைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா .உண்மையில் நானெழுதும்போது பாதிதான் விளங்கும்  அங்கே நேரில் பார்த்திருந்தா  அவ்ளோ உற்சாகமாகியிருப்பிங்க .அதை எழுத்தில் வடிக்கமுடியாது .இந்த பயணங்களில் நான் சிரித்த அதாவது கன்னம் அகன்ற நிலையிலேயே இருந்தேன் முகம் சுருக்காமல் ..இங்கே பெரும்பாலான தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளை கவனிக்க வருவாங்க .எங்க பகுதியில் நாலைந்து குட்டி ரெஸ்டாரண்ட்ஸ் இருக்கு அதுவும் குஜராத் ரெஸ்டாரண்ட் வித் சென்னை சமையல் :) அதனால் நிறைய பேர் பார்க்கலாம் .மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்துக்கும் 

   Delete
 8. தரமான சம்பவங்கள்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி :) மிக்க நன்றி 

   Delete
 9. உங்களையெல்லாம் 110 க்கு அடித்துதான் கூப்பிடவேண்டியிருக்கு..ஹா..ஹா. 2 பேரும் ஓரேநேரத்தில் போஸ்ட் போட்டால் எங்கு போவது.... 🤣 🤣
  இங்கு பேருந்து வசதிகள் மாதிரி ஊருக்கும் வரனும் என நினைப்பேன். ஆனா இங்கு கொஞ்சம் மனிதாபிமானம் கொஞ்சம் குறைவோ என நினைப்பேன்.(எல்லாரையும் இல்லை) ஏனெனில் இங்கு வயதானவர்கள் வந்தால் எழும்பி இடம் கொடுத்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். சிலவேளை சில பெரிசுகள் இருக்காயினம். அப்ப எனக்கு குழப்பம். இடம் கொடுப்பதா, வேண்டாமா... இருப்பார்களா,மாட்டார்களா என.. நீங்க ஜீசஸ் என்றிருப்பீங்க. அல்லது குட்னெஸ்மீ. சரியான விடையாயினும் அந்த பரிசு வேண்டாம்..வேண்டாம்.
  மொபைல் அறிவிலி மாதிரி இங்கும் நிறைய இருக்கு. நடக்கபோகும்போது அறிவிலி ஒன்று மின்கம்பத்தில மோதுண்டு விழுந்தெழும்பி போகுது.. நடபாதையில் போகாமல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பாங்க..
  மற்ற 2 கதையும் உண்மையில் நெகிழ்ச்சியானது. எனக்கு சில்லுகருப்பட்டி படம்தான் ஞாபகம் வருது. டைமிருந்தா கண்டிப்பா பாருங்க அஞ்சு.
  "நாலு பேருக்கு சந்தோஷத்தை மட்டும் அளவில்லாம கொடுங்க :) அன்பு அலையலையாய் பரவட்டும்.""👍👍👍

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ :) என்ன பண்றது ப்ரியா இல்லைன்னா அப்டியே விட்டிடுவோம்னு ஒரு மாதிரி கடகடன்னு போஸ்ட் போட்டுட்டோம் இருவருமே .நீங்களும் இன்னிக்கு புது பதிவு போடுங்க :)
   //ஏனெனில் இங்கு வயதானவர்கள் வந்தால் எழும்பி இடம் கொடுத்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.//உண்மைதான் ஜெர்மனியர்களுக்கு பிறர் கிட்ட உதவி எதிர்பார்ப்பது பிடிக்காது வேண்டாம்னு சொல்லிடுவாங்க .குட்னெஸ் மீ //மிக சரியான விடை :) ப்ரியாவுக்கு அந்த கத்திரிக்கா பிரட்டல் பார்சல் :)நான் பார்த்துட்டேன் ப்ரியா .சில்லு கருப்பட்டி சூப்பர் படம் .மிக்க நன்றி ப்ரியா .எங்களோடு இன்னும் விடாமல் தொடர்பில் இருப்பதற்கு :)  எங்களை தட்டி கொடுத்து உற்சாகமூட்டுவதற்கும்.

   Delete
 10. ஆஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது... கொஞ்சம் ரயேட் என்று சொல்லி ஒருநாளைக்கு ஏழியா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கே கர்ர்ர்ர்:)) அன்று பார்த்து போஸ்ட்டும் போட்டு முழிச்சிருப்பா அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. சொல்லாம செய்வதே அஞ்சா அஞ்சு 

   Delete
 11. //அதனால் தூக்கத்தில் இருந்து எழும்பி வந்துட்டேன் :) //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆர் எழுப்பிவிட்டது ஆரு போஸ்ட் போடச் சொல்லி மிரட்டியது என்பதையும் ஜொள்ளோணும்:)

  ReplyDelete
  Replies
  1. ஹஆஹாஆ யெஸ் நீங்க உசுப்பாட்டி அப்டியே சோம்பி இருந்திருப்பேன் :) 

   Delete
 12. //shit
  ------ ஒரு வேற்று மொழி கெட்ட வார்த்தை //

  இதை வெளிநாட்டவர் பாவிப்பதைக் காட்டிலும் நம்மவர்களே அதிகம் பாவிக்கிறார்கள்.. ஸ்டைலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  //ஹே பக்வான் //
  ஹையோ இது எந்த நாடு? ஹா ஹா ஹா... நல்லாத்தான் பொறுக்கியிருக்கிறீங்க.. விழுவதை எல்லாம்:).

  ReplyDelete
  Replies
  1. மிகவும் உண்மை அதிரா ..நம் மக்க்ஸ்க்ளுக்கு எதோ பெரிய பெருமைன்னு நினைப்பு ..ஹே பகவான் :)) அட ஆண்டவா அட பகவானே ..

   நான் எப்பவும் விழித்து பசித்திருப்பேன் :) காது ராணி காது மூக்கும் அப்படியே :)

   Delete
 13. ///இந்த படத்தில் உள்ள பொருள் பரிசாக வழங்கப்படும் :)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அச்சச்சோ இதைத்தட்டிக் கேய்க்க ஆருமே இல்லையோ.. என் அநாமிகாவும் நித்திரையாகிட்டாபோலவே... இருங்கோ, அநாமிகாவுக்கு ஒரு பொடிகார்ட் ரெடி பண்ணப்போறேன் இப்போ..

  ReplyDelete
  Replies
  1. அந்த அனாவையே கடத்திடுவேன் பிஈ கேர்புல் :))

   Delete
 14. //ஒரு பெட்டி வந்தது அதிலிருந்து நெய் வாச லட்டு விநியோகம் பேருந்தில் உள்ளோருக்கு நடந்தது//

  ஓ இப்படியும் நடக்குதோ.. இங்கு இப்படி ஆரும் குடுக்கவும் மாட்டினம் வாங்கவும் மாட்டினம்... நான் எங்கே பஸ் இல் போனேன், ஆனா பொதுவா ஆரும் எதையும் கொடுப்பதில்லை.. அது தப்பெல்லோ.. அதிலும் சமைத்த இப்படியான லட்டு வகை எனில் யாரும் கொடுக்க மாட்டார்களே.. பயம்தான் காரணம்...

  ReplyDelete
  Replies
  1. அதிரா... உங்களுக்குக் கூடவா அந்த பாட்டி ஜோக் ஞாபகமில்லை?

   Delete
  2. நான் நிறைய கொமெடி பார்ப்பேன் ஸ்ரீராம் ஆனா எதைச் சொல்றீங்களெனத் தெரியவில்ல்லை.. ஏதும் லிங் இருப்பின் போட்டு விடுங்கோவன்..

   Delete
  3. அது படக் காமெடி அல்ல, படித்த / பகிர்ந்த காமெடி!

   Delete
  4. ஹாஹாஆ :) மியாவ் ச .வி :) இப்போ புரியுதோ நேக்கு ஒன்னும் புரியலைன்னா அமைதியா இருந்துடுவேன் :)) 

   Delete
 15. ///இதை நான் பார்க்கவில்லை எனது சரிபாதி சொன்னார் :)///

  இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈஈ:)).. இதில மீதிப்பாதி ஆரூஊஊஊஉ? ரஜனி அங்கிள்? கமல் அங்கிள்?:)) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊஊஊஊஊ 6 வயசிலிருந்தே:))

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை சிறந்த பாதின்னு எழுதியிருக்கணுமோ :)) ஹையோ ஹா இந்த பூனையால் இருக்கிற அறிவும் போச்சு எனக்கு 

   Delete
 16. ///ஊர் முழுக்க தண்டோரா அடிச்சி திருமணம் புரிந்து விரைவில் பிரியும் இக்கால காதலும் :( ...வயதானாலும் இளமை மாறா அக்கால காதலும் கண்முன் மாறி மாறி தோன்றியது ///

  ஆஅவ்வ்வ்வ் இப்போஸ்ட்டின் சமரியை இப்போ மீ ஜொள்றேன்.. மக்களே கவனமாகக் கேட்டுக்கோங்க:))..

  அதாவது நம் நாட்டில் இளையவர்களைக் காண்பது அரிது பஸ் இல்.. பொதுவா இங்கு பஸ் எனில் அதில் ஏறுவோர் எல்லோரும் 60+ மக்களே:)).. அந்த பஸ்ஸில அஞ்சுவையும் இப்போ ஏற விட்டாச்சூஊஊஊஊஊஊஊ:)).. இதுக்கு மேலயும் அஞ்சுவின் வயசைப் பற்றி எல்லாம் மீ பேசவே மாட்டேன்:))..

  அப்போ இங்கு பஸ் பயணம் எனில் இந்த வயதானோரின் ரொமான்ஸ்ரிக் மட்டும்தான் காண முடியும்.. யங் கப்பிள்ஸ் எல்லாம் அதிராவைப்போல இருப்பினம், பஸ் ரொமான்ஸ் எல்லாம் கிடையாதாக்கும் ஹா ஹா ஹா..

  அதிலும் ஸ்கொட்லாந்தில்.. 60+ எனில் லோக்கல் பஸ் + ரெயின் ஃபிறீ... இதேபோல அண்டர் 14 க்கு ரெயின் ஃபிறீ...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ போதும் புகழ் பாடினது இனிமே ஸ்கொட்லான்ட் படாத பாடு படப்போகுது :) எங்ககிட்டருந்து ஒன்றும் கிடைக்கலைன்னே இனி உங்களுக்கு எதுவும் free இல்லை :)))))

   சமரி நல்லா இருக்கு :)இளையோர் லண்டன் பகுதியில் மோஸ்ட்லீ ரெயில் பஸ் டியூப் டிராம் பயன்படுத்தறாங்க ..இன்னும் சிலர் கிறீன் லவ்வர்ஸ் என்னைப்போல் பெட்ரோல் டீசல்    இயற்கைக்கு பங்கம் வராம பஸ்ஸில் போறோம் :)))))))))))

   Delete
  2. க்ரீன் லவர்ஸ் நடந்துதானே போகணும், கதர் உடுத்திக்கிட்டு பச்சை மக்காச் சோளம் சாப்பிட்டுக்கிட்டு

   Delete
  3. அவ்வ்வ் :) நானா பயணிப்பது க்ளீன் க்ரீன் நோ எமிஷன் பேருந்தில் :)))))))))))

   Delete
 17. இக்காலத்திலும் நல்ல நல்ல யங் கப்பிள்ஸ் இருக்கினம் அஞ்சு... நம் பார்வைக்கு வருவதில்லை, நல்ல விஷயங்கள் வெளியே வருவதைக் காட்டிலும், சண்டை, டிவோஸ், கொலை இப்படியான விசயங்களே கடுகதி எக்ஸ்பிரெஸ் போல காதுக்கு வந்து சேருது...

  ஒரு தம்பதிகள் 60 வயசாகியும் ஒற்றுமையாக இருப்பார்களாயின்[வெளிநாட்டில்] அவர்கள் நிட்சயம் வயதானதும் மிகவும் அந்நியோன்யமாக இருப்பினம்... நம் நாடெனில்.. கடசிவரை சிங்கம் புலி, எலி பூனை இப்படியே வாழ்வை முடிப்போர் பலருண்டு..

  இந்நாட்டில் எனக்குப் பிடிச்ச விஷயம், தம்பதி எனில், நல்ல அந்நியோன்யமாக இருப்பினம், இலை தகறாறு எனில் பிரிஞ்சிடுவினம்... அடிபட்டு உதைபட்டு ஒன்றாக இருப்பதில்லை.

  இன்னும் நிறைய பஸ் பயணம் செய்து, பல தாத்தா பாட்டிகளைப் பார்த்து நீங்களும் விரைவில் பாட்டியாகோணும் என வாத்து:)கிறேன்:))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ உண்மைதான் அதிரா.இங்கே பல நல்ல விஷயங்கள் இருக்கு ஆனா நம் நாட்டில் இவங்க உடை உணவை மட்டும் எடுத்துக்கறாங்க இவர்களின் நல்ல பழக்கங்களை கத்துக்கிட்டா சிறப்பா இருக்கும் .
   சீக்கிரம் நாமெல்லாம் பாட்டி ஆகிறோம் பஸ்ஸில் ஊர்வலம் போறோம் ரைட் :)))))

   Delete
  2. நீங்க ரெண்டுபேரும் இன்னும் 60+ ஆகலையா? அதிராகூட 61 என தன்னைக் குறிப்பிடுவாரே.

   இவ்வளவு பெரியவங்களாக இருக்கீங்கன்னு மரியாதைலாம் கொடுத்தேனே

   Delete
  3. ////அதிராகூட 61 என தன்னைக் குறிப்பிடுவாரே.////
   கர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு வரவர மறதி நெ தமிழன்:)... அது அஞ்சுவுக்கு 60+ ....
   அதிராவுக்கு டுவீஈஇட்ட்ட்ட்ட்ட் 16ஆக்கும்.... அஞ்சுவுக்கு மருவாதை குடுங்கோ:)..

   Delete
  4. ஹாஹ்ஹா :) அதிரா என்னை விட 3 வயது மூத்தவர் 61 :) இது உண்மை உண்மை உண்மையோ உண்மை . எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல எடிரிக்கு ரெண்டும் போகரத்தில் தான் ஜந்தொஷமே 

   Delete
 18. அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன. கடைசிச் சம்பவம் பல்வேறு நினைவுகளை வரவழைத்தது.

  சமீப்ப் பயணத்தில் 65+ உள்ள பேராசிரியர் சொன்னார்.. அவர் அப்பா தினமும் புகையிலை உபயோகிப்பாராம். அவர் ஜீன்ஸுக்கு அது சரியாக வந்தது போல. 85 வயதில் அவர் பையன் தான் படித்தது, மருத்துவர்கள் சொல்வது இவைகளை வைத்து புகையிலையைத் தடை செய்துட்டாராம். அவர் அப்பா, கொஞ்சமாவது புகையிலை தாடா எனக் கெஞ்சுவாராம். இரண்டே மாத்த்தில் இறந்துவிட்டாராம். பேசாம புகையிலையை அனுமதித்திருந்தால் நூறு வயது வரை ஆரோக்கியமா வாழ்ந்திருப்பர், நானே அவர் மரணத்துக்கு வித்திட்டுவிட்டேன் என கில்டியாக எப்போதும் நினைப்பேன் என்றார்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் .உண்மை சம்பவங்கள் எப்பவும் ரசனையானவை அதுவும் பாசிட்டிவிட்டி உள்ளவற்றை ஷேர் செய்யும்போது நம் சந்தோசம் எல்லாருக்கும் பரவுது இல்லையா .அந்த சீக்கிய பாட்டி கியூட் ..அதே அதே ..மனதுக்கு சந்தோஷமானவற்றை இழக்கும்போது நோயின் வீரியம் அதிகரிக்கும் .எனக்கு தெரிந்த ஒருவர் 85 வயது வரை சங்கிலி புகை பிடிப்பார் ( அடுத்த வாரம் செயின் ஸ்மோக்கர் பெயர் காரணம் என்னானு கௌ சாரிடம் கேட்கலாம் :))  
   அவர் புகை பிடிப்பதை திடீர்வ்ன் விட்டதும் இறந்தார் .எதை வேணும்னாலும் சமாளிக்கலாம் இந்த கில்ட்டி உணர்வு மிகவும் மோசமானது உங்கள் நண்பர் அதையே நினைக்க வேணாம்னு சொல்லுங்க .அவரின் தந்தைக்கான நேரம் வந்ததும் சென்றார் என்று . நினைக்க சொல்லுங்க .இன்னொன்றும் இருக்கு ஒரேயடியா எந்த பழக்கத்தையும் சடார்னு நிறுத்தகக்கூடாது .கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தலாம் .

   Delete
 19. இனிய காலை வணக்கம் ஏஞ்சல் ,அதிரா,
  எனக்கும் ஃபெப்ருவரி மிகப் பிடித்த மாதம்.
  காதல் மாதம்.
  அதுவுமந்த வயோதிகத் தம்பதிகள் மிக இனிமை.
  இளம் காதலர்கள் கூடத்தான். அன்பு எப்படி எல்லாம் பரிமளிக்கிறது,.
  மிக மிக நன்றி ஏஞ்சல்.
  பாட்டி ஜோக் ஆ. நிஜமாக நடந்தது என்று நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆ வல்லிம்மா இங்கு வந்தும் அதிராவுக்கு வணக்கம் சொல்லியிருக்கிறா.. காலை வணக்கம் வல்லிம்மா....

   Delete
  2. வாங்க வல்லிம்மா .மூன்று சம்பவங்களும் உண்மை சம்பவம் .பாட்டி சீக்கியர் பஸ்ல  எனக்கு மோத்தி சூர் லடூ தந்தார் .ஸ்ரீராம் ஜோக்கை நுழைச்சி உங்களை குழப்பிட்டார் :)) 

   Delete
 20. வேலண்டைன் மாதத்திற்கு ஏற்ற பதிவு. கிருஷ்ணா ஸ்வீட்ஸிலும், வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலிலும் தனியாக உட்கார்ந்து போளியை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் வீட்டில் கிடைக்காததை வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறார்களோ? சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்களோ என்றுதான் தோன்றும். 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுக்கா தேங்க்ஸ் :)  இதை பிப் 14 போட்டிருக்கலாமோன்னு :)) பரவால்ல முந்தினாலும் நல்லதே காதல் வாழ்க :)உண்மைதான் வீட்டில் கடும் சட்டதிட்டங்கள் .வயதானோர் சுகவீனமானாலும் பிரச்சினைதான். .பாவம்தான் முதியோர் .மிக்க நன்றிக்கா 

   Delete
  2. கிருஷ்ணா வெங்கடேஸ்வரா தேங்காய் போளி ...கொஞ்சம் பின்னோக்கி செல்கிறேன் எங்கப்பா அவரது மூத்த அக்காவுக்கு (75) திருட்டுத்தனமா போளீ  வாங்கி ஒளிச்சி தருவார் :) இதை அவர் மறைவிற்கு பின்னே அந்த கடைக்காரர் சொன்னபோதான் தெரிஞ்சது எங்களுக்கே

   Delete
 21. "குட்னெஸ் மீ" என்றுதான் சொல்லியிருப்பீர்கள் என்று யூகித்து இரண்டாம் இரண்டாம் இடத்தை பிடிக்கிறேன். அதற்கெல்லாம் பரிசு கிடையாதோ?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா பானுக்கா :) மிக சரியான விடை அந்த இரும்பு வாணலி ப்ரியாக்கு வேணாமாம் நீங்களே எடுத்துக்கலாம் :))என்னை சரியா புரிந்து வைச்சிருக்கீங்க :) என்னிக்கும் வீணில் கடவுள் பெயரை சொல்லகூடாததுன்னு எங்கப்பா ஸ்ட்ரிக்ட்டா இருந்ததால் அந்த பழக்கம் அப்படியே தொடருது . குட்னெஸ் மீ  தான் நான் அடிக்கடி சொல்வது 

   Delete
 22. எழுதிய சம்பவங்கள் மனசைத்தொட்டது ஏஞ்சல்! அதுவும் மூன்றாவது, நான்காவது சம்பவங்கள் மனதை நெகிழ வைத்து விட்டன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோ அக்கா 

   Delete
 23. ஒவ்வொன்றும் வாவ் ரக சம்பவங்கள். சிறப்பு. நல்ல ரசனை... நல்ல எழுத்து...

  தொடருங்கள், தொடர்வோம்...

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ . .நிச்சயம் உங்கள் பக்கம் வருகிறேன் 

   Delete
 24. பாவம் அந்த தாத்தா பாட்டி ! எந்த நோய் நொடியும், இருக்கக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. நானும் அதேதான் வேண்டிகிட்டேன் 

   Delete
 25. லண்டன் பஸ்சில் பல அனுபவம் கிடைக்குது போல!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..நலமா இருக்கீங்களா :).மறக்காம என்னை வலைபூவினூடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .

   Delete
 26. ஓ ஜீசஸ் என்று சொல்லி இருப்பீங்க! சென்னை அடையாறு ஆனந்தபவன் சச்சி போல இருக்கு![[[[[

  ReplyDelete