அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

1/9/20

ஓ மனமே ஓ மனமே !!!! (3)

மனம் ....3 
                                                                                 

இரண்டு மாத டிமென்ஷியா பயிற்சிக்கு பின் மீண்டும் மன நலபதிவை துவங்குகிறேன் .டிமென்ஷியாவும் ஒருவகையில் மனநலம் சார்ந்ததே .இங்கே நான் பெயர்களை தமிழில் எழுதியிருக்கிறேன் .மனநலத்துறையில் அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு தரணும் மற்றும் பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும் என்பது முக்கியமான கோட்பாடு .அடுத்தது பிரைவசி confidentiality இதையும் கருத்தில் கொள்ளணும் .எக்காரணம் கொண்டும் சம்பந்தப்பட்டவர் பெயரை வெளியிடக்கூடாது .

                                                                                     

                         ஒரு பொருள் நாம் அதிகம் விரும்பும் ஒன்று அதிகம் நேசிக்கும் ஒன்று நம்மை விட்டு போய் விடுமோ கிட்டாமல் போய்டுமோ  என்ற பயமே மனநல குறைபாட்டின் துவக்கப்புள்ளி .அந்த பொருள் நம்மைவிட்டு போகாம இருக்க எடுக்கும் பிரயத்தனங்கள் எல்லாம் அடுத்தகட்டத்துக்கு ஒருவரை தள்ளுகிறது .நம்நாட்டில் பெரும்பாலும் காதல் தோல்வி அல்லது பணக்கஷ்டம் தான் மனநலத்தை பாதித்து தற்கொலைக்கு தள்ளுகிறது ஆனால் வெளிநாட்டில் பெரும்பாலான மனநல   பேஷண்ட் ஹிஸ்டரி  சொல்வது அவர்களின் நிலைக்கு முக்கிய  காரணம் பெற்றோர் மண முறிவு மற்றும் தீய பழக்கங்கள் ..தனுஷ்

=======


இச்சிறுவனுக்கு 19 வயது இருக்கும்  ஒருவருடனும் பேசமாட்டான் தனியே தனது இரு கைகளையும் விரித்து வெறித்து பார்ப்பான் .

தனியே சிரிப்பான் .சில நேரம் அழுவான் கதவு பின்புறம் ஒளிந்தவாறு நம்மை பயத்துடன் பார்ப்பான் இவனது பெற்றோர் நல்ல செல்வாக்கான குடும்பம் .திருமணமாகி நான்கு மகன்கள் பிறந்து அதில் தனுஷுக்கு 13 வயதாகும்போது விவாகரத்து செய்துள்ளனர் .அங்கே துவங்கியது பிரச்சினை .பெற்றோரின் பிரிவை ஏற்க தனுஷுக்கு இயலவில்லை .


மெதுவே தீய பழக்கங்களுக்கு அடிமையானான் கஞ்சா சிகரெட் கேன்னபிஸ்  இப்படி பழக்கம் முற்றியதில் ஒருநாள் தன்னையறியாமல் வீட்டை எரித்திருக்கிறான் .இதில் ஒரு சகோதரன் மூச்சடைத்து மரித்து .போலீஸ் சிறையில் 1 வருடம் சிறார் சீர்திருத்த சிறையில் இருந்திருக்கிறான் .பிறகும் அவன் நிலையில் மாற்றமில்லை .எதையோ இழந்த வெறித்த நிலையில் இருப்பான் ..ஒருமுறை விடைபெறும்போது கைகொடுக்க முயன்றதும் சரேலென்று விலகி //வேண்டாம் என் கரங்கள் அழுக்கு என்றான் //

பிறகு நான் நம் பாணியில் வணக்கம் சொல்லி வெளியேறினேன் .

அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் நான் எப்போ வருவேனென்று தேடுவானாம்  என்று மற்றொரு நர்ஸ் சொன்னார் .எனக்கும் அவர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சர்யம் யாருடனும் பழகாத ஒருவன் இங்கு வந்து 5 மாதங்களில் முதன்முறையாக என்னை பற்றி விசாரித்திருக்கிறான் . இந்த இடத்தில அவனை கொண்டு வந்து சேர்த்ததுடன்  சரி இதுவரை தனுஷை  யாரும் பார்க்க வரவில்லை.


இந்த தனுஷ் என்ற பெயரை சூட்ட காரணம் .காதல்கொண்டேன் பட தனுஷ் .அதில் வரும் காட்சிகள் மிகவும் மனதை பாதித்தது /ஒரு ஏழை சிறுவனை எப்படியெல்லாம் மன ரீதியா கஷ்டப்படுத்தியிருப்பர் .இன்னும் நம் நாட்டிலும் உலகெங்கும் நடக்கிறதே இக்கொடுமைகள் :(  


                                                                           
டிமென்ஷியா 
===============
இந்த பயிற்சியில் இருந்தபோது எங்களுக்கு முக்கியமாக அறிவுறுத்தப்பட்டது எந்த முதியவரானாலும் அவர்களை தொட்டு பேசக்கூடாது . காரணம் இளவயதில் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் சீண்டல்களுக்கு ஆளாகி இருக்கலாம்  நமது சாதாரண தொடுதல் கூட அவர்கள் நினைவு  பின்னோக்கி சென்று பயம் உண்டாக்கக்கூடும் .அவர்களிடம் அனுமதி பெற்றே கையை தொடலாம் .
அடுத்தது அவர்கள் நம் கையை பிடித்தி நடக்க விரும்பினால்நமது கை ஏந்துவது போன்ற நிலையில் இருக்கணும் கையை நாம் பற்றக்கூடாது அவர்கள் நமது கையை பற்ற எதுவாக இருக்கணும் .

அங்கே ஒரு நாள் ஒரு 80 வயது பெண்மணி அங்குள்ள கேர் சப்போர்ட் பணியாளரை கெட்ட வார்த்தைகளால் மற்றும் ஐ வில் கில் யூ என அர்ச்சித்துக்கொண்டிருந்தார் .பிறகுதான் தெரிந்தது .அப்பெண்மணியின் ஆடை  அவர் நடந்து செல்லும்போது அலங்கோலமாக இருந்தது அதை அந்த கேரர் பின்புறமாக அவருக்கு தெரியாம அனுமதிபெறாம நல்லது செய்வதா நினைத்து  இழுத்து சீராக்கி விட்டிருக்கிறார் . இதிலிருந்து அறிந்தது நல்லது செய்யணும்னாலும் யாரா இருந்தாலும் அவர்கள் பெர்மிஷனுடனே செய்யணும் குறிப்பாக மெண்டல் இல்னஸ் உள்ளவர்களிடம் அதீத கவனமுடன் இருக்கணும்.

                                                                                         

இத்தொடர் நாம் அறிந்தோ அறியாமலோ யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்ற நோக்கில் எழுதுகிறேன் .நமக்கே அறியாமல் நம்மை சுற்றி யாரேனும்  அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குகிறவர்களாக இருப்பார்கள் மிகுந்த கோபக்காரராகவும் இருப்பார்கள் சண்டைக்காரராகவும் இருப்பார்கள்  எதோ ஒரு புள்ளியை விடாப்பிடியாக பிடித்து தொங்கிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் செய்வதே சரியென்னும் மனப்போக்கில் இருப்பார்கள்   எல்லாவற்றுக்கும் எதோ ஒரு பின்புலம் காரணம்  ஒன்றுண்டு என்று நினைத்து அனைவரையும் ஏற்கும் மனப்பக்குவத்தை பெறுவோம் .
                                                         
அத்துடன் நேரம் கிடைக்கும்போது எழுதி முடிக்கணும்னு நினைக்கின்றேன் .அதனால் அடிக்கடி பதிவுகள் வரலாம் ஆம் :)

இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க 

https://kaagidhapookal.blogspot.com/2019/11/blog-post_4.html
https://kaagidhapookal.blogspot.com/2019/11/2.html
மனநலம்        தொடரும் ...................................33 comments:

 1. தனுஷின் இந்த நிலைப்பாட்டுக்கு பெற்றோர்களே காரணமென்பது வேதனையே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ .ஆம் அதுவே வேதனையான உண்மை.இங்கே பல தனுஷுகள் இருக்காங்க ஒரு சிலர் ரூமை விட்டு வருவதில்லை உணவும் மறுத்துவிடுகிறார்கள் எதையும் பார்த்தாலே பயப்படறாங்க .இவற்றை பார்க்கும்போது மனம் பதைக்குது 

   Delete
 2. மிக மிகக் கஷ்டமான வேலை. ஆனாலும் விரும்பி ஏற்றிருக்கிறீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் அனைத்து நலன்களையும் அந்த ஆண்டவன் வழங்கப் பிரார்த்திக்கிறேன். தனுஷ் போல் எத்தனை பேர் உலகில் இருக்கிறார்களோ தெரியலை. இந்த விவாகரத்து இப்போ இந்தியாவிலும் சகஜமாகிக் கொண்டு வருகிறது. என்ன செய்ய முடியும்! 80 வயது மூதாட்டியைக் கேட்டுக் கொண்டு உடையைச் சரி செய்திருந்தாலும் அவருடைய மனநிலையில் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க முடியாது. அதுவே தவறாகவும் இருந்து விடும். :((((( சவாலான வேலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா .டிமென்ஷியா மிகவும் மோசமானது அது பற்றியும் மனநலத்தில் இணைக்கிறேன் .அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்வேன் .தனுஷ் போல் பலர் இருக்காங்க ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிம்ப்டம்ஸ் .எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த வேலையை மென்டல் ஹெல்த் தொடரவிருக்கிறேன் .எதோ ஒரு மனசு கொஞ்சம் நம்மால் ரிலாக்ஸ் ஆச்சுனாலே அதுவே வெற்றியும் சந்தோஷமும் நமக்கு .80 வயது பாட்டி நிலை பாவம் தான் ஆனால் அவருக்கே தான் செய்வது என்னன்னு தெரியாத நிலை 

   Delete
 3. நல்ல தொடக்கம்.  டிமென்ஷியா பற்றி எல்லாம் இன்னும் சற்று  விளக்கக்  குறிப்புடன் எழுதலாம் என்று தோன்றுகிறது. எங்கள் அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு எடுக்க ஒரு மருத்துவரிடம் சீட்டு வாங்கச் செல்வார்கள்.  அது அவர் உதவியாளர் ஒருவரிடம் கையெழுத்துப்போடப்பட்டு தயார் நிலையில் இருக்கும்.  அந்த உதவியாளர் அதில் பெரும்பாலும் நிறைய பேர்களுக்கு டிமென்ஷியா என்றே போட்டுத் தருவார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் நான்  நினைத்தேன் பலர் டிமென்ஷியா பத்தி விளக்கமா எழுதியிருப்பாங்க அதனால் சிம்ப்டம்ஸ் பற்றி மட்டும் சொல்லலாம்னு .அடுத்த பதிவில் இணைக்கிறேன் 

   Delete
 4. தனுஷின் பெயர்க்காரணம் ஓகே.   தனுஷின் அந்தப் படத்தில் அவர் கேரக்டர்  அமைப்பை நானும் அப்போதே யோசித்திருக்கிறேன்.  ஆனாலும் போதைப் பழக்கத்தால் சொந்தச் சகோதரனை உயிருடன் எரித்து விட்டவனை அவர்கள் வீட்டில் யாரே நோயாளி என்று ஏற்றுக்கொள்வார்கள்!  கஷ்டம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ அந்த படத்தை பார்த்துட்டு அழாத நாளேயில்லை .ஒரு பெற்றோரில்லா சிறுவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள் .இப்பவும் மனசுக்குள் அடுத்து யங் OFFENDERS என்று 18 வயதுக்கு கீழுள்ள சிறார்களுக்கு உதவி செய்ய ஹைலி Vulnerable பிள்ளைகளுக்கு ஹெல்ப் செய்ய அப்பிளிக்கேஷன் போடலாமான்னு தோணுச்சு .கணவர் இதுவே எனக்கு அதிகம் வேணாம்னுட்டார் .தனுஷன்னு பெயர் சூட்ட இன்னொரு காரணம் அந்த படத்தில் வரும் தனுஷ் போன்ற தோற்றமே இச்சிறுவனுக்கும் .அவன் தெரிஞ்சி செய்யலை ஸ்ரீராம் .இது psychosis என்பார்கள் இந்நிலை Pyromania is an impulse control disorder in which individuals repeatedly fail to resist impulses to deliberately start fires, in order to relieve tension or for instant gratification

   Delete
 5. இங்கு வரும் பதில்களை வைத்து நீங்கள் நிறைய ஆராய்ச்சி /ஸ்டடி செய்யலாம்.  நான் எந்தவகை மனஅமைப்பைச் சேர்ந்தவன் என்றும் ஆராயலாம்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நான் கீன் அப்ஸசர்வர் தான் :) ஆனா யாரையும் இவர் இப்படின்னு மதிப்பிடக்கூடாது மனநலத்தில் :)

   Delete
 6. மிகவும் பொறுமையும், புரிதலும், அன்பும் தேவைப்படும் வேலை.  உங்களுக்குத் பொருத்தமானது.  இப்பணியில் நீங்கள் சிறக்க எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்நாளில் இல்லாத பொறுமை இப்பணியில் சேர்ந்து எனக்கு கிடைச்சிருக்கு ஸ்ரீராம் .என் மகளே சொல்றா .அம்மா எனக்கே ஆச்சர்யமா இருக்கு உங்க அணுகுமுறை இப்போல்லாம் என்று :)

   Delete
 7. // அனைவரையும் ஏற்கும் மனப்பக்குவத்தை பெறுவோம் //

  ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி .எங்களுக்கு வேளையில் சேருமுன் கொடுத்த பயிற்சியில் முக்கியமா முதலில் சொன்னது இதுதான் யாரையும் ஜட்ஜ் செய்ய வேண்டாம் இட்ஸ் ஓகே டு பி நொட் ஓகே ..அடுத்தது நம்மை அந்த இடத்தில வைத்து பொருத்தி பார்த்து நாம் எப்படி ரியாக்ட் செய்வோம்னும் நினைக்கணுமாம் .உண்மையில் பல பொறுமைகளை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கு இந்த வேலை 

   Delete
 8. தனுஷ்ப்பற்றி படித்து மனம் வேதனை படுகிறது. உங்கள் அன்பான குரல், அன்பான தோற்றம் அவனை தேட வைத்து இருக்கிறது உங்களை. நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்.
  80 வயது அம்மாவை பற்றி சொன்னதும் யார் யார் என்ன மன நிலையில் இருக்கிறார்கள்! ஏன் இப்படி இருக்கிறார்கள் எல்லாம் தெரிந்து கொள்வதும் அவர்களை அணுகும் முறையும் மாறுபடும் என்று தெரிகிறது.

  உங்களால் அவர்களை மனதளவில் சந்தோஷபடுத்த முடியும்.
  நன்றாக செய்வீர்கள் . உங்கள் பணியில் வெற்றியும், மன நிறைவு கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..டிமென்ஷியா பல சிம்ப்டம்ஸ் கொண்டது .அணுகுமுறை மிக கவனமுடன் இருக்கணும் .மிக்க நன்றி அக்கா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் 

   Delete
 9. முதலில் கடைசி பந்தி என் மனதை தொட்டுவிட்டது. உங்க அனுமதியுடன் சுட்டுகிறேன். எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை.
  சூப்ப்பர்ப் அஞ்சு. எவ்வளவு பொறுமையாகவும்,சரியான மனப்பக்குவத்துடனும் செய்யவேண்டிய வேலை. சின்ன பிசகானாலும் தவறாகிவிடும். நானும் வாழ்த்துகின்றேன் அஞ்சு. உங்க நல்லெண்ணத்துக்கு எந்த குறையும் வராது. இருக்கும்போது 4பேருக்கு நல்லவனா வாழனும்.
  தனுஷ் கதை கேட்க மனது கனக்கிறது. இந்நாட்டில் இந்த மாதிரி சம்பவங்கள் தானே நித்தம் நித்தம் பார்க்கிறோம். மகனுடன் படித்த பிள்ளைகளின் பெற்றோர் பாதி பேர் டிவோஸ். . பாதிப்பு பிள்ளைகளுக்குதானே..அவர்களை பார்த்தே இவர்கள் பிறகு கண்டினியூ. இது இங்கு சாதாரணமாகவே போச்சு. இல்லையெனில் தவறான வழி. இப்ப Depression வேறு சேர்ந்திருக்கு.

  தனுஷ் க்கு ஆதரவான,அன்பான பேச்சுக்கு ஏங்கலாம். அட்லீஸ்ட் அன்பான பார்வைக்கு கூட ஏங்கலாம். எவ்வளவு வலிமையான,வலியுடன் கூடிய வார்த்தை அவன் சொன்னது "என் கரங்கள் அழுக்கு".
  ப்பா..எத்தனை எத்தனை வித்தியாசமான மனிதர்கள் மத்தியில் நாங்கள் வாழுகின்றோம்.தெரியாமல் எத்தனை இருக்கு.
  தொடர்ந்து செய்யுங்கள் உங்க சேவையினை,அப்பப்போ எழுதுங்கள். கடவுள் எப்போதும் துணையிருப்பார் உங்களிற்கு..
  Best wishes.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா தாராளமா எடுத்துக்கோங்க பிரியா :)
   உண்மைதான் பொறுமை இல்லேன்னா அவ்ளோதான் .அதேபோல் அனைவரையும் ஏற்கும் மனப்பக்குவமும் வேண்டும்னு சொன்னாங்க எங்களுக்கு யாரையும் மதிப்பிடல் கூடவே கூடாது .தனுஷ் இன்னும் குற்ற உணர்வில் இருக்கிறான் :( இது ஒரு வகை psychosis இவர்களுக்கு டென்சன் அதிகமாகும்போது அதை குறைக்க தீ கொளுத்திப்போடுவாங்கலாம் .இன்னும் பலர் சூசைட் மனநிலையில் .ஒரு பைலட் செய்த் வேலையாள் குழந்தைகள் உயிர் போச்சே ஜேர்மனில .அதோட மருந்து எடுத்தா கன்டின்யூ பண்ணனும் இல்லைன்னா அவ்ளோதான் 

   Delete
 10. ஆஆஆஆ இது எப்போ வெளிவந்துது... ஈவினிங் புளொக் பக்கம் பார்க்கும் மூடு வரவில்லை எனக்கு.
  அஞ்சு உண்மைதான் நல்ல விசயங்கள் சொல்றீங்க... நோய் வருவது வேறு... அது விதி... தடுக்கமுடியாது, ஆனா இப்படியானவர்களைக் கேலி செய்யும் ஆட்கள் இருக்கிறார்களே நம் நாடுகளில் அவர்களுக்குத்தான் உண்மையில் மனநலம் பாதிக்கப் பட்டிருக்குது என்பேன்.

  இங்கு சின்னவர்களே புரிந்து கொள்கிறார்கள் அதுவும் ஒரு நோய் என்பதனை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் ..இங்கே நம்மைவிட இங்கே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு நல்ல புரிதல் இருக்கு .யாரையும் கேலி செய்ய மாட்டாங்க அன்னிக்கு என் கணவரிடம் சொல்லியிருந்தேன் .ஜெசி vet கிட்ட போட்டு வந்து டாக்டர் சொன்னதை உங்ககிட்ட சொன்னேனே மெயிலில் ..ஜெசி ஹெல்தி அம்மா மாதிரி ஆனா வெயிட் குண்டாகி அதிரா ஆன்ட்டி மாதிரின்னு //அதுக்கு மகளுக்கு கோபம் ..//யூ ஆர் நோட் சப்போஸ்ட் டு say சோ ..என்கிறா .குண்டு என்பது சொல்லக்கூடாதாம் ஒருவரையும் :)

   Delete
  2. பதிவுகள் அடிக்கடி ரிலீசாகும் இனி:)))))

   Delete
 11. இங்குள்ள குழந்தைகள் அதிகம் மனநலம் குன்றிப் பிறக்கிறார்கள் அஞ்சு... பெற்றோரின் தீய பழக்கங்களால்...

  தனுஸ் 13 வயசுவரை நன்றாக இருந்தவரெனில் , நோர்மலுக்குக் கொண்டுவரலாமே... குடும்ப சப்போர்ட் இல்லாமல் போயிட்டுதாலயாக இருக்கலாம்...

  பாட்டியை தொட்டதற்குத் திட்டிப் போட்டாவோ ஹா ஹா ஹா உசாரான ஆள்தான் ... நான் பாட்டியைச் சொன்னேன் நீங்க டொடருங்கோ...

  ReplyDelete
  Replies
  1. தீய பழக்கங்களால் மற்றும் பெற்றோரால் ஏற்படும் மன குழப்பங்களால் பிள்ளைகள் வாழ்க்கை பாதிக்கப்படுத்து .இதை அடுத்த பதிவில் சொல்கின்றேன்..13 வரை நோர்மல் ஆனா அதன்பின் மிக மோசமான நிலை மருந்தின்றி கட்டுப்படுத்த முடியாது .ELATED என்பார்களே அந்த நிலை .அந்த பாட்டிக்கு தான் என்ன சேறோம்னே தெரியாது .அடுத்தநாள் அதே கேரருடன் சிரித்து  பேசிட்டிருக்கார் 

   Delete
 12. Hi Angel,
  Long time reader of your blog. Living in Bristol. I am in full time job. But I'd like to volunteer in old age homes / care homes. Can you give me details, like whom to approach?

  Thanks

  ReplyDelete
  Replies
  1. Hi Anitha , you can find the details here http://www.uhbristol.nhs.uk/work-for-us/volunteering/
   its the NHS SITE.
   simultaneously visit a care home nearer to you and they will give you the details .

   Delete
  2. Also look for Care Homes that Are Rated As Good Or Outstanding By CQC. cqc is care quality commission that give reports and ratings

   Delete
 13. படித்தேன்.

  பெற்றோருக்கு பசங்க வளர்ப்பில் பெரிய பங்கு இருக்கு.

  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நெல்லை தமிழன் 

   Delete
 14. மனத்தை நெகிழ்த்தும் சம்பவங்கள். மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே ஏளனமாகப் பார்க்கும் சூழலில் அவர்களுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மதிப்பளித்து நடத்துவது மனம் தொடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா .நலமா .மிக்க நன்றிப்பா .நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு அனுபவமும் என்னை வலிமையாக்குது 

   Delete
 15. மனதை நெகிழ்த்தும் விஷயங்கள். //மனநலத்துறையில் அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு தரணும் மற்றும் பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும் என்பது முக்கியமான கோட்பாடு //  இவற்றை எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்றினால் மனநல பாதிப்பு என்பதே வராது இல்லையா? உங்களுக்கு கடவுள் நல்ல தேக பலத்தையும், மனோ பலத்தையும் இறைவன் அருளட்டும்.  

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பானுக்கா 

   Delete