அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

11/4/19

ஓ மனமே ஓ மனமே !!!!

முந்தைய பதிவில் துவங்கிய ஓ மனமே  தொடர்கிறது ............

மனநலத்துக்கு உகந்த மஞ்சள் ரோஜா :) எங்க வீட்டில் பூத்தது :)

                                                                               

                                                                                


இந்த மனநலக்குறைபாட்டில் 4 நிலைகள் இருக்கு 

                                                                              
ஒவ்வொரு நிலை பற்றியும் தெரிந்துகொள்ள லிங்க்கில் சென்று வாசிக்கவும் 


 நமக்கு தலை வலிச்சா மருத்துவர்கிட்ட சொல்ல முடியும் வயிறு வலிச்சா சொல்ல முடியும் ஆனா இந்த மனநோய் பாதிப்புள்ளானோருக்கே அது தெரியாதது .அவங்களை சுற்றியுள்ளோர் சொன்னால்தான் மருத்துவருக்கு நோயாளியின் நிலை புரியும் பிறகு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து மருந்து பரிந்துரை செய்வார் .

தன்னைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எப்பவும் நெகட்டிவான  எண்ணங்கள், பேச்சு, செயல் மற்றும் எல்லாவற்றிலும் வேகம் குறைதல் போன்றவை மன அழுத்தநோயின் அறிகுறிகள். பள்ளி கல்லூரி பதின்மப்பருவத்தினர்  போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியில் பின்தங்கல், வீட்டைவிட்டு ஓடிப்போதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம்.

                                                                                     


எல்லாருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கு அது அமைதியா உறங்கிக்கொண்டிருக்கு  என்று கமல் அங்கிள் ஒரு படத்தில் சொன்னதை சமீபத்தில் நெல்லைத்தமிழன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார் ,உண்மையில் நாம் அனைவருக்கும் இந்த மன குறை  மைல்டா  இருக்கு ஆனால் அதை மேற்கொள்ளும் வழிமுறைகளை அதை கட்டுப்படுத்தும் வித்தையை பெரும்பாலானோர் அறிந்ததால் அந்த மிருகத்தை அடக்கி ஆண்டு வெற்றி பெறுகிறோம்.  .அதை கட்டுப்படுத்த தெரியாதோர் தங்கள் தவறை உணர்ந்து திருத்த இயலாதோர்   கஷ்டப்படுகின்றாரகள் ,வீண் முடிவுகளை மேற்கொள்கிறார்கள் .
இருதய அடைப்பு , டயபட்டீஸ் ,இரத்த அழுத்தம் போன்றவற்றால் நீண்டகாலம் அவதிப்படுவோர்களுக்கும்  மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

அனைவருக்குமே வாழ்க்கை நந்தவனமாக பூந்தோட்டமாக அமைவதில்லை.

                                                                               


 சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருப்பாங்க சிலருக்கு தவறான வளர்ப்பு துஷ்ப்ரயோகம் செய்த பெற்றோர் / abusive childhood / குடிகார /சூதாட்ட தந்தை,விவாகரத்தான பெற்றோர் ,இவர்கள் சண்டைகளை பார்த்து வளரும் பிள்ளைகள்.மேலும் சிலரை கவனித்தால்  வன்முறை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் அதிகமானோர் இளவயதில் அத்தகைய விஷயங்களால் பாதிக்கப்பட்டிருப்பாங்க .
இதனால்தான் இங்கே வெளிநாடுகளில் முதலில் DBS  செக்கிங் செய்தே வேலையில் சேர்ப்பார்கள் .நம் நாடுகளில் மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதனால்தான் வக்ர குணங்களால் இளவயதில்  பாதிக்கப்பட்ட  பல ஹோமோ சேப்பியன்ஸ்  கொடூர ஜந்துக்கள் உள் மனவிகாரங்களுடன் தாராளமா உலாவுகின்றன. மனதை சந்தோஷமா வைச்சாலே பல மன பிரச்சினைகள் ஓடிப்போய்டும் ஆனா சிலர் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகிறாரகள் இதனால அவர்களுக்கும் சுற்றியுள்ளோருக்கும் பாதிப்பு ஆகிறது .

                                                                                  உளவியல் ரீதியா மனோரீதியா யோசித்தால் புரிபடும் இளவயதில் பட்ட /பார்த்த சம்பவங்கள் அழியா சுவடுகளாக ஆறாத  ரணங்களாக ஆழ்மனதில் கொடூர மிருகங்களாக  தூங்கும் .அவை சந்தர்ப்பம் வாய்க்கும்போது எதிர்பாரா நேரம் வெளி வரும் .
சிலர் எப்பவும் கெட்ட வார்த்தைகளே பேசிட்டிருப்பாய்ங்க அது அவர்கள் இளவயதில் கேட்ட வார்த்தை பிற்காலத்தில் வருது .ஒரு  மனைவியை சந்தேக சூடு வார்த்தைகளை சொல்லி வாட்டுவதை பார்த்த மகன் சரியான வளர்ப்பு முறை வழிநடத்தல்  இல்லாவிடில் நிச்சயம் பின்னாளில் தனது  மனைவியை சந்தேகிக்கும் கணவனாகவே அமைய அதிக சாத்தியக்கூறுகள் உண்டு . சிலருக்கு inferiority complex .  அது சிலநேரம் பேய்பிடித்தாடும் .தன் பொருள் கைவிட்டுப்போய்டுமோ என்ற பயம் தனக்கு அடிமையாய் இருக்க வைத்தல் .இவையெல்லாமும் கூட மனக்குறைபாடுகள் .இன்னும் சிலர் குற்றஉணர்விலே வாடுவார்கள் .அச்சோ இந்த தப்பை செஞ்சிட்டேனே அதை செஞ்சிட்டேனே என்று எப்பவும் படபடப்பில் இருப்பாங்க .

இன்னொருவர் எனக்கு தெரிந்தவர் தான் சிறுவயதில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களை இன்னமும் நினைவில் வைத்து அதை முன்னுதாரணமாக்கி பார்ப்போரை அவ்வப்போது நக்கல் நையாண்டி செய்வார் .இப்படி செய்வது ஒரு அற்ப்பதிருப்தியை தந்து விடுவதால்  சமாதானமாகிறார் . சிலருக்கு வன்முறை காணொளிகளை காண்பது சிங்கம் முயலை வேட்டையாடுவது போன்றவற்றை பார்ப்பது என இப்படி மன நல  குறைகள் பலருக்கிருக்கு . ஒரு பெண்மணி அதீத சுத்தம் டேபிளை தொட்டாலும் கையை டெட்டால் போட்டு 10-20 முறை கழுவுவார். அது எக்ஸ்ட்ரீமுக்கு போய் ஒரே நாளில் பலமுறை குளிக்க ஆரம்பித்திருக்கிறார் .குழந்தையின் டயப்பரை கூட தொட மாட்டாராம் .இவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து சரியாக்க 3 1/2 வருடங்கள் ஆனதாம் . . இப்படி நிறைய இருக்கு .
                                                                                        

எல்லாருக்கும் பிஸிக்கல் முதல் உதவிப்பற்றி தெரிந்திருக்கும் .இது மெண்டல் ஹெல்த் முதல் உதவி .ஒருவர் குழப்பத்தில் இருக்கிறாரா தடுமாற்றத்தில் இருக்கிறாரா என்பதை கண்டுபிடித்து உடனே அவருக்கு உடனடி உதவி செய்ய சரியான இடத்துக்கு வழிநடத்துவது தான் மனநல முதலுதவி .அந்த மஞ்சள் பந்து ஸ்ட்ரெஸ் பந்து  .கோபம் ப்ரெஷர் இருக்கும்போது அதை அமுக்கி ரிலீஸ் செய்ய ஸ்ட்ரெஸ் காற்றாய் பறந்திடும் .

                                                                                     


                                                         அந்த பேட்ஜ் எனக்கு கொடுக்கப்பட்டது அதை அணிந்தே நான் செல்வேன் .இந்த முதலுதவி ட்ரெயினிங் எனக்கு சமீபத்தில் பெரிய உதவி செய்தது .எங்கள் ஆலயத்தில் ஒரு பெண்மணி ஹால் அட்மின் பணிகளை செய்பவர் கொஞ்சம் மைல்ட் குறைபாடுகள் .பிரிட்டிஷ் பெண்மணி அடிக்கடி பயந்து பயந்து படபடப்புடன் திக்கி பேசுவார் .
                    அவரிடம் எதோ ஒரு பிரச்சினை இருக்குன்னு மட்டுமே தெரியும் .ஒரு நாள் ஆலயத்தில் இருந்து எனக்கு படபடப்புடன் தொலைபேசினார் ஏஞ்சலின் ஐ அம் இன்  பிக் ட்ரபிள் என்று எதோ சொல்கிறாரா அவர் குரல் கேக்காதபோல் அவ்ளோ சத்தமா செக்யூரிட்டி அலாரம் பெரிய ஒலியெழுப்பி ..ஒன்றுமில்லை செக்யூரிட்டி அலாரம் கோட் மாற்றி போட்டிருக்கார் நான்  உடனே என்னிடம் இருந்ததை அவருக்கு மெசேஜில் அனுப்பி போனிலும்  சொல்லி சரி செய்யவைத்தேன் . பிறகு உடனே கணவரை என்னை ஆலயத்தில் விட சொன்னேன் இவர் மட்டும் அங்கே நெஞ்சைப்பிடித்தபடி .என்னை பார்த்ததும் ஓவென்று அழுதுவிட்டார் .அவருக்கு பிரஷர் அதிகமாகி படபடப்பு  வந்திருக்கு பயத்தில் .பிறகு அவரை ஆஸுவாசப்படுத்தி அவருக்கு துணையா  இருந்து அவரை வீடுவரை விட்டு வந்தேன் .அதாவது என்ன சொல்கிறேன் என்றால் இந்த மெண்டல் ஹெல்த் முதலுதவி பாதிக்கப்பட்டவரின் மன நிலையை நமக்கு புரியவைக்கும் . நிறையபேர் வாய்விட்டு உதவி கேட்க தான் பிரச்சினையில் இருக்கிறோம் என்பதை சொல்ல தயங்குவார்கள் .நாமாய் புரிந்து உதவி செய்து காப்பாற்றுவது சிறந்ததில்லையா .பிறகு அவரது திக்கி பேச்சு பயத்துக்கெல்லாம் காரணத்தை சொன்னார் .அவர் கணவர் ஒரு மனநல பாதிக்கப்பட்டவர் .சரியான குடிகாரர் மற்றும் ட்ரக்ஸ் உபயோகிப்பவர் அவரால்  இவர் அதிக மனஅழுத்தம் ஆகி ஒருகட்டத்தில் மருத்துவர் ஆலோசனைப்படி   பிரிந்திருக்காங்க .ஆனாலும் இப்பெண்மணிக்கு அந்த பயம் பதட்டம் இன்னும் இருக்கு .தனியா ஓரிடத்தில் இருக்க பயமாம் .பூட்டிய அறையில் கதவுகள் ,குறுகலான கதவு வெளியேறுமிடம் இதெல்லாம் பார்த்தா பயப்படுவாராம் . இப்படி அவருக்கு அன்று  உதவிசெய்ய எனக்கு இந்த ட்ரெயினிங் உதவியது .மயக்கம் கலக்கம் துன்பம் துயரம் எல்லாம் நம்மெல்லாருக்கும்  வரும் ஆனால் ஆங்கிலத்தில் ஒரு சொற்றடர் உண்டு அது  Do Not Feed the Fears!  .ஒருவரின் பலவீனம் அவரை மேற்கொள்ளும் தருணம் பயம் என்னாகுமோ ஏதாகுமோ என்ற யோசனைகளை உருவாகும்போது மனரீதியான பாதிக்கப்படுகிறாரகள் . எனக்கு பாடமெடுத்தவர் நைஜீரியன் .அவர் இளவயதில் அவரது தந்தை மொடாக்குடியர் 12 பிள்ளைகள் .இவரது அம்மா ஒரு பாத்திரத்தில் சூப் செய்து அனைவரையும் அதில் ரொட்டி தொட்டு உண்ண  வைப்பாராம் .தனியே ஊற்றி பரிமாறினால் போதாதே :( 
ஆனால் அவர் முட்டி மோதி பல்கலைக்கழகம் சென்று படித்து இங்கிலாந்து வந்து இப்போது பன்மடங்கு சம்பாதிக்கிறார் .அவரது தந்தை தாயை  துன்புறுத்தியது ,இளவயதில் வறுமை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டது எதுவும் அவரது முன்னேற்றத்துக்கு தடையா இல்லை .தன் கஷ்டம்தான் பெரிது என்று புலம்புவோர் தங்களைவிட  எளியோரை நினைத்து பார்த்தால் போதுமானது அவர்கள் பிரச்சினையெல்லாம் தூசு போல் தெரியும் .பசுமையான நினைவுகளை மட்டும் பின்னோக்கி பார்ப்பது மனநலத்துக்கு நல்லது .மனநலம் ............ தொடரும் ...

முக்கியக்குறிப்பு ...இது பார்த்த கேட்ட அனுபவங்களை வைத்து எழுதப்படும் தொடர்  . சில விஷயங்களை சொல்ல நாம் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை வலிகளை உணர்ந்த அனுபவமே போதுமானது ..

50 comments:

 1. நல்லதொரு தொடரை ஆரம்பித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள். மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பல சமயங்களிலும் அடையாளம் காண முடியாமலும் போய் விடுகிறது. நெருங்கிப் பழகினால் தவிர! இன்னும் சிலர் தங்கள் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதையே புரிந்து கொள்ள மாட்டார்கள். அடுத்தவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
  அதிலும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் முன்னர் வரும் PMS என்னும் Pre Menstrual Syndrome, menopause சமயங்களில் ஏற்படும் மன அழுத்தம், அடுத்து, அடுத்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களில் வெகு சிலருக்கு வரும் Post partum depression இவற்றை உடனே கண்டு கொண்டு சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லை எனில் பின்னாட்களில் இது பெரியதொரு மன நோயாக உருப்பெற்று விடும் ஆபத்து உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா . அதே அதே .குழந்தை பிறந்த தாய்மாருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிறைய ஏற்படுத்து அவர்கள் பெரும்பாலும் தனிக்குடித்தனம் மற்றும் ஐசோலேட்டட் குடும்பங்கள் சேர்ந்த பெண்கள் .மற்றும் அந்த pms பற்றியும் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை .அதை உடனிருக்கும் கணவன் உறவினர்கள் புரிந்துகொள்ளணும் .மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே  பாதிக்கப்பட்டவரின் சுற்றியுள்ளோர் கவனிக்கணும் .புது வேலை துவங்கிடுச்சி அதனால் பதிவுகள் நேரம் கிடைக்கும்போது ரிலீஸ் ஆகும் :)

   Delete
  2. கர்ர்ர்ர் இதே போஸ்ட்டுக்கு முதல்தரம் அனு 1ச்ட், 2 ம்தரம் மீ, இப்போ கீசாக்காவா கர்ர்ர்ர்ர்ர்:) நல்லவேளை இத்தோடு வெளியாகிவிட்டது ஹா ஹா ஹா.

   Delete
 2. உங்கள் உதவும் மனப்பான்மை மனதில் பெருமையைத் தருகிறது. அதற்கேற்றவாறு உங்கள் கணவர் மற்றும் மகள் இருவரும் உங்களைப் புரிந்து கொண்டிருப்பது ஓர் அதிர்ஷ்டம் தான்! கடவுள் அனுகிரஹம் நிறையக் கிடைக்கட்டும். இம்மாதிரி சேவைகள் தொடர்ந்து புரிந்து வர உங்கள் ஆரோக்கியமும் உதவட்டும். நீண்ட ஆரோக்கியத்தோடு இருக்கப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா .சக மனுஷருக்கு நம்மால் ஆனா உதவி .என் மகள்தான் இதில் எனக்கு ஆசிரியை :)ஆமாம்க்கா இன்றும் வார்டில் ஒரு மனிதரை சந்தித்தேன் அந்த விவரம் அடுத்த பதிவில் .

   Delete
  2. ஹையோ கீசாக்கா உங்களுக்கென்ன உசுப்பேத்தி விட்டுப்போட்டு நிம்மதியா நித்திரை கொள்ளுவீங்க:) எனக்கெல்லோ காது புளிக்கப்போகுது:)...
   நான் சூப்பரா எழுதியிருக்கிறேனாம்:), இன்னும் தொடரட்டாம்:)... பாருங்கோ அதிரா எல்லோரும் என்னைப் புகழீனம் என ஒரே மயிலுக்கு மேல மயில் வரப்போகுது எனக்கு;) மீ ஊரிலில்லை டெல்லிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)

   Delete
  3. ஹாஹா :)  யாராவது ஒரு பாராட்டு சொன்னாலே எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட மாதிரி இருக்கும் :) கீதாக்கா பாராட்டினது மீக்கு எவரெஸ்ட்கே விசிட் செஞ்ச மாதிரி அதனால் நிறைய எழுத போறேன் :))

   Delete

 3. நல்லதொரு தொடராக இருக்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ட்ரூத் .எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பப்போ பதிவை தொடருவேன் 

   Delete
  2. போச்சு போச்சு இனி மீ நாட்டில இருந்த பாடில்லையாக்கும்:)

   Delete
  3. ஹஆஹ்ஹா :)) ஷ்ஹ்ஹ் அமைதியா இருங்க மியாவ் நானே இன்னும் அதிர்ச்சில இருந்து மீளலா :)என்னை பாராட்டிட்டார் ட்ரூத் :)

   Delete

 4. ஒரு சிலரைத்தவிர அனைத்து மனிதர்களும் மனநிலை குறைபாடுகள் உள்ளவர்கள்தான் என்ன விகிதாச்சாரம்தான் வேறுபடுகிறது...உதாரணமாக குழந்தையோ மனைவிய்யோ கணவனோ சகோதர சாகோதரிகளோ தவறு செய்யும் போது அடிக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள்.... முழு மனநிலை சரியுள்ளவர்கள் கோபபடமாட்டார்கள் அடிக்க மாட்டார்கள் திட்டமாட்டார்கள் பிர்ச்சனை அறிந்து அதற்கு ஆலோசனை சொல்லுவார்கள் ஆனால் மனநிலை சரியில்லாதவர்கள் அவர்களின் மனவளர்ச்சிக்கு தகுந்தபடி அடிப்பார்கள் திட்டுவார்கள் கோபப்படுவார்கள்... இதில் நான் நீங்கள் என்றும் பலரும் அடங்குவோம் பைத்தியகார ஹாஸ்பிடலில் உள்ள மனநிலை குன்றியவர்கள் ஒரு செயலை பல தடவை செய்து கொண்டு இருப்பார்கள் அது போல நாமும் அதே செயலை சில தடவைகள் செய்து கொண்டிருப்போம் அவ்வளவுதான் வித்தியாசம் விகிதாச்சாரம் குறைவாக இருப்பதால் நாம் மனநிலை குன்றியவர்களாக நினைக்கமாட்டோம்

  ReplyDelete
  Replies
  1. அதேதான் ட்ரூத் அந்த ஒன்றிண்டு பேர்கூட அடக்கி வச்சிட்டு இருப்பாங்க ..எல்லா மனுஷங்களுக்கு எல்லா உணர்வுகளும்  இருக்கு மனநலத்தில் குறைவுள்ளவர்களுக்கு சில உணர்வுகள்மட்டும் ப்ரத்யேகமா வெளிக்காட்டப்படுத்து .எல்லாம் இடம் சூழல் சுற்றியுள்ளோர் சார்ந்தே அமைகின்றது 

   Delete
 5. சூப்பர் அஞ்சு. அழகா எழுதி இத்தொடரை ஆரம்பித்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள். பல பேர் இம் மன அழுத்தத்தால் பாதிகப்பட்டிருக்கிறாங்க. மாத்திரை எடுக்கிறவங்க கூட இன்னமும்) இருக்கிறாங்க. ஆனா சில பேர் இதனை தவறாக புரிந்துகொண்டு, மாற்றமுடியா வியாதி என நினைத்து அதிலேயும் வருத்திக்கொள்கிறார்கள். இங்கு டிப்ரெஷன் ஆல் பாதிகப்படுவதற்கு பல காரணங்கள்.முக்கியமா தனிமை. அடுத்து பிள்ளைகள், வாழ்வியல் ஏமாற்ரங்கள் என பல.
  உங்களுக்கேற்ற பணிதான்.தொடர்ந்து இப்பணியினை மேற்கொள்ள மனமர்ந்த வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து டைமிருக்கும்போது எழுதுங்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .ஆமாம் அதேதான் மாத்திரை எடுக்கிறவங்க தொடர்ந்து எடுக்கணும் மருத்துவர் சொல்வதை  சரியா தொடரனும் .இல்லைன்னா பிரச்சினைதான் .இதைப்பற்றி விரிவா ஒருவரைப்பற்றி வரும் பதிவில் சொல்கின்றேன் .மிக்க நன்றி ப்ரியா .இதுதான் எனக்கான பாதையான்னு இன்னும் புரியலை டிமென்ஷியாவும் இப்போ செய்கின்றேன் நேரத்தை ஸ்ப்ளிட் செய்து இரண்டிலும் செய்ய ஆசை .

   Delete
 6. தொடர் படிப்பதற்கு மனதுக்கு ஏதோவொரு இனம் புரியாத உணர்வைத் தருகிறது.
  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மனம் ஏதேனும் கஷ்டப்படுத்திட்டேனா சகோ ?இது இங்கே மனநலவார்ட்டில் வேலைசெருமுன் பெரிய ட்ரெயினிங் கொடுத்தாங்க அப்போ கற்று பிறகு நேரில் பார்த்ததெல்லாம் எனக்கு மனோதிடத்தை கொடுத்திருக்கு நம்மை சுற்றியுள்ளோரை இன்னும் அதிகமா சந்தோஷமா வைக்கணும்னு விழிப்புணர்வை தந்திருக்கு 

   Delete
 7. அருமையாக சொன்னீர்கள். பதிவு அருமை.
  //அவருக்கு அன்று உதவிசெய்ய எனக்கு இந்த ட்ரெயினிங் உதவியது .//

  உங்கள் இயல்பான உதவும் குணத்திற்கு நீங்கள் பெற்ற பயிற்சியும் உதவியது.
  மனநலம் குன்றியவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் ஆதரவும், அன்பும், அரவணைப்பும் இருந்தால் விரைவில் நலம் பெறுவார்கள். அது போல் சர்வீஸ் செய்பவர்கள் உங்களை போல் கிடைத்து விட்டால் விரைவில் நலம் பெறுவார்கள்.

  நேரம் கிடைக்கும் போது உங்கள் பணியில் கிடைத்த அனுபவங்களை எழுதுங்கள்.
  பயன் உள்ள தொடர்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோமதிக்கா ..இந்த முதல் உதவியில் ALGEE  ஆக்க்ஷன் பிளான் என்று சொல்லிக்கொடுத்தாங்க அது மிகவும் உதவுச்சி எனக்கு .இங்கேயே சொல்வதைவிட அடுத்த பதிவில் சொல்கின்றேன் :))மிக்க நன்றிக்கா 

   Delete
 8. பயனுள்ள நல்லதொரு தொடர்.  நீங்கள் சொல்லியிருப்பவற்றைப் படிக்கும்போது நாம் எப்படி என்கிற எண்ணமும், நமக்குத் தெரிந்தவர்கள் எப்படி என்கிற எண்ணமும் வந்து போகிறது.  உண்மையில் இரண்டு நாட்களாக இந்த மனப்பிரச்னை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறோம்.  நெருங்கிய உறவு ஒருவர் மனா ரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறார்.  முதலில் அவரிடமே இதெல்லாம் மனசுதான் காரணம் என்று சொன்னோம்.  இப்போது சொல்லாமல் அவர் பயத்தை போக்க முயற்சித்து வருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் .சமீபகாலமா   விஷயத்தையும்  அலசி சிந்தித்து செய்வேன் எப்படி பத்தி தருவேன் எப்படி ரியாக்ட் செய்வேன்  என்பதை முதலில்  அனுமானிப்பேன் எதிராளியிடத்தில் என்னை   தன்மையை யோசிப்பேன் .இதனால் நிறைய சாதகங்கள் பொறுமை எல்லாம் வந்திருக்கு .அந்த நெருங்கிய உறவினருக்கு அவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்க .எப்பவும் அவர் தனியாயில்லை என்பதை உறுதிப்படுத்துங்க எப்பவும் துணையா இருங்க 

   Delete
 9. மனநலம் என்று எடுத்துக் கொண்டால் உண்மையில் உலக மக்கள் தொகையில் 99.9% எல்லோரும் ஏதாவது குறைபாடுடன்தான் இருப்பார்கள்.  விகிதாச்சாரம்தான் மாறும்.  முழு மனநலத்துடன் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் 100க்கு 100 உண்மை 

   Delete
 10. இந்தத்தொடரில் நீங்கள் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் பற்றி எல்லாமும் சொல்வீர்களா?  

  ReplyDelete
  Replies
  1. சில பயிற்சிகள் செய்தோம் அவை பின்வரும் பதிவுகளில் வரும் 

   Delete
 11. எங்கள் அலுவலகத்தில் நான் பார்த்த இரண்டு குடும்பங்கள்.  கஷ்டப்பட்ட குடும்பங்கள்.  மூன்று வேளை முழுதாக சாப்பிடக்கூட முடியாத அளவு கஷ்டப்பட்ட அடிப்படைப் பணியாளர் குடும்பங்கள்.  ஒரு குடும்பத்தின் (ஒரே) பையன் நன்றாய்ப் ஒப்படைத்து முன்னேறி இப்போது யு எஸ்ஸில் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறான்.  இன்னோருக்குடும்பத்தின் பையன் ஒன்பதாம் வகுப்பு தாண்டாமல் கண்டவர்களுடன் சேர்ந்து கண்டபடி சுற்றுகிறான்.   பெற்றோருக்கு கூட மரியாதை தருவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் சொன்னேன் ..அந்த நைஜீரியன் பாருங்க இப்போ உயர் பதிவியில் இருக்க காரணம் அவர் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தரல்ல .பூ விற்பவர் பானை விற்பவர் பிள்ளைகளுக்கு உயர் மதிப்பெண் எடுக்க துணை நிற்பது வாழ்வில் வெற்றி பெறணும்  என்ற  போராடும் குணம் இருப்பதால் .அதனால்தான் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்னு தலைப்பை வைச்சேன் ஆனா ரெண்டு தடவை பதிவு விளையாட்டு காட்டினத்தால் அந்த ஹெடிங்கை தூக்கிட்டு ஓ மனமேன்னு மாத்தினேன் :)

   Delete
 12. அருமையான தொடர் மற்றும் விஷயங்கள். பாராட்டுகள் ஏஞ்சலின். பிறகு வந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் ..நிதானமா படித்து சொல்லுங்க ..நானும் வேலை பிஸிதான் :) நேரமிருக்கும்போது அப்டேட் செய்கின்றேன் 

   Delete
 13. பயனுள்ள பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கௌதமன் சார் 

   Delete
 14. அருமையான தொடர்...

  // வலிகளை உணர்ந்த அனுபவமே போதுமானது //

  உண்மை...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ .மிக்க நன்றி 

   Delete
 15. மஞ்சள் ரோஜா :) எங்க வீட்டில் பூத்தது :)///
  இது புதுசாப் பூத்ததுபோல தெரிகல்லியே:) முன்பு பார்த்தமாதிரி இருக்கே:)

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாவி ஆவீ :) அது வருஷா வருஷம் பூக்குது :) அதிலென்ன டவுட் உங்களுக்கு 

   Delete
 16. சரி மீ விசயத்துக்கு வருகிறேன்:)... நீங்க சொல்லியிருக்கும் காரணங்கள் இங்கும் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக உள்ளது அஞ்சு:)... என்ன ஒன்று அழவோடிருக்கிறது ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் ..அதனால்தான் யாரையும் ஜட்ஜ் செய்யக்கூடாதுன்னு மனசில் உறுதியா இருக்கேன் 

   Delete
 17. சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லிட்டீங்க, உண்மைதான் உலகில் எத்தனை விதமான பிரச்சனைகள், நாம் நமக்கிருப்பதை பெரிதாக நினைத்துக் கவலைப்படுகிறோம்.

  சிலரின் சில மனநிலையைப் பார்த்து சிலசமயம் நான் அமைதியாகிவிடுவதுண்டு., அவருக்குள் என்ன பிரச்சனை இருக்குதென நமக்குத் தெரியாதெல்லோ.
  வோஷிங்டனில் இரு லேடீஸ் பஸ் இல் ஏறினார்கள், தாம் இருவரும் சேர்ந்திருக்கோணும் என , அங்கிருந்த ஒருவரை எழும்பி வேறு சீட்டில் இருக்கச் சொன்னார்கள், அவர் மறுத்துவிட்டார், உடனே கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே வேறு சீட்டில் இருந்தார்கள், நிறைய எம்டி சீட்ஸ் இருந்தது, இவர்கள் நிறைய துணி மூட்டைகள் வச்சிருந்தனர்,
  ஆனா 2வது ஹோட்டில் இறங்கி விட்டார்கள், இறங்கியும் பஸ் ஐ கலைச்சு அந்த சீட் குடுக்காதவரை திட்டினர்.... அவர்களின் மனநிலை பாதிப்பை நாம்தான் புரிஞ்சு நடக்கோணும்...

  ReplyDelete
  Replies
  1. அச்சோவ் ..சீட் மாறி அமர்ந்த குறைந்தா போய்டும் .சிலர் இப்படி கேட்டா அவங்களுக்குவழி விடுவது நல்லது இல்லின்னா பாருங்க இடம் மாற மறுத்தவர் பேருந்தில் இறங்குமட்டும் மேலும் அந்நாள் முழுதும் அவர்களின் ஏச்ச்சு அவரை ரவுண்ட் அடிக்கும் :(மூவ் பண்ணியிருந்தா நிச்சயம் நன்றி சொல்லியிருப்பாங்க அது அவர் நாளை அழகாக்கியிருக்கும் 

   Delete
  2. ஏஞ்சலின் - தன் இடத்திலிருந்து நகராமல் இருப்பதில் என்ன தவறு? அவருடைய சாய்ஸ் இல்லையா? குறுகிய பேருந்து பயணம்தானே. அதிலும் இரண்டுபேரும் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிக்கணும் என்று நினைக்கிற தன்னலத்தைக் குறை சொல்லியிருக்கலாம்.

   நான் பெரும்பாலும் என் சீட்டை விட்டுத்தருவதில்லை. ஹா ஹா. இங்க இரயிலில், மேல் பர்த், கீழ் பர்த் என்றெல்லாம் இருக்கும்போது, வயதானவங்க மேல் பர்த்ல படுப்பது கஷ்டம், பர்த் மாத்திக்கிறீங்களா என்றெல்லாம் கேட்பாங்க. ஒரு காலத்துல எனக்கு அதில் பிரச்சனை இருந்ததில்லை. இப்போல்லாம் மேல், மிடில் பர்த்ல படுத்து எழுந்துக்கும்போது கழுத்து பிரச்சனை வருது. அதுனால நான் அந்த மாதிரி ரிக்வஸ்டை ஏற்றுக்கொள்வதில்லை.

   Delete
  3. எனக்கு மேல் பர்த் வந்தால், யாரிடமும் வேறு பர்த் கேட்கும் வழக்கமும் இல்லை. அதையும் சொல்லணும் இல்லையா?

   Delete
  4. ஹையோ ஹையோ :) இருங்க சொல்றேன் ரெண்டு பை நம்மூர் சிமெண்ட் பை மெட்டீரியல் போலெ இருக்கும் பெரிய காது கைப்பிடி வைத்து இரண்டு மூட்டை அளவு துணி மற்றும் பொருட்களை தூக்கிட்டு போறவங்க பெரும்பாலும் ஆதரவற்ற ஹோம்லெஸ் வகையினர் .அவர்களை பார்த்தாலே ஈஸியா கண்டுபிடிக்கலாம் .அப்படிப்பட்டவர்களை பார்த்து புரிந்துகொண்டு நாம்தான் பதமா நடக்கணும் .இப்போ அவர்கள்  இடம் சீட் தராததால்  திட்டிய திட்டை கேட்க உங்களால் இல்லை என்னால முடியாது :)  பார்த்தவுடன் நமக்கே புரியும் அதனால்தான் சொன்னேன் அவர் இடம் மாறியிருந்தன பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம்னு .ட்ரெயின் பெர்த் எல்லாம் இவர்கள் வர மாட்டாங்க :) இது குறுகிய பிரயாண நேரம்தானே அதனால்தான் அவர் இடம் மாறியிருந்தன அந்த வசவுகளை கேட்காதிருந்திருக்கலாம் .இவ்வளவு ஏன் இப்படிப்பட்டவங்க தம்முக்கு நெருப்பு கேப்பாங்க நாம இல்லைனு பொலைட்டா சொல்லிட்டு போய்டணும் 

   Delete
 18. சில விஷயங்களை சொல்ல நாம் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை வலிகளை உணர்ந்த அனுபவமே போதுமானது ..///
  அல்லோ மிஸ்டர், ஆராவது வந்து, நீ என்ன டொக்டரா? எனக் கேட்டிடுவார்கள் எனும் பயமோ? ஹா ஹா ஹா அவ்ளோ தைரியசாலி.... அதிராவைத் தவிர ஆருமில்லை இங்கு அதனால பயப்பிடாதீங்கோ:)...
  ஹையோ மீ ஒரு அப்பாவி:) மீ ஓடிடுறேன்:)

  ReplyDelete
  Replies
  1. அதானே உங்களை மீறி யாரும் என் மேலே கையை வைக்க முடியுமா ?? :)) யாருக்கு அவ்ளோ தைரியம் இருக்கு உங்களை தாண்டி என்னை எதிர்த்து பேச :)மக்களே மக்களே யாராருக்கு என்னை திட்டணுமோ வாங்க அங்கே என் பக்கம் ஓனர் வீடு இருக்கு அங்கே முதலேபேசிட்டு வாங்க :))

   Delete
  2. ஹா ஹா ஹா:) அங்கே அநாமிகாவும் இருக்கிறாவாக்கும் பாதுகாப்புக்கு:)

   Delete
 19. மன நிலை பாதிப்படைந்தவர்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது ரொம்பவும் கொடுமையானது. நமக்கு அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுமை இருப்பதில்லை. என் சொந்த மாமாவுக்கும் அப்படிப்பட்ட நிலைமை வந்து, மிகுந்த அறிவாளியான அவர் வாழ்க்கை முழுவதும் (கல்லூரி காலத்திலிருந்து) சிதைந்து போனதைப் பார்த்திருக்கிறேன்.

  கடவுள் ஏன் அவர்களுக்கு அப்படிப்பட்ட தண்டனையையும், அவர்களைப் பெற்ற, கூடப்பிறந்தவர்களுக்கும் கஷ்டத்தையும் கொடுக்கிறாரோ... தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மனநல பாதிப்பை  நிலையிலேயே கண்டுபிடிச்சிட்டா பிரச்சினை இல்லை அதை முற்ற விடும்போதுதான்    யாராலும் கண்ட்ரோல் பண்ணமுடியாத நிலைக்கு போகிறது .  தண்டனை என்று நினைக்க கூடாதது நம்ம நம் மனநலத்தை நாம்தானே கவனிக்கணும் .
   உங்க மாமா அவர்களின் மனச்சிதைவுக்கு காரணம் என்னன்னு அறிந்தீர்களா ? சிலநேரம் வேலை பளு எக்ஸ்ட்ரீமுக்கு கொண்டுபோயிடும் .இந்த இடத்தில ஒன்றை சொல்லணும் ஆனால் அதை பதிவில் சொல்கின்றேன் நானா சமீபத்தில் சந்தித்த நம்மூர்க்காரர் பற்றி நம்மூர் என்றா இந்தியா .இங்கே வெள்ளைகாரங்க கவனிச்சீங்கன்னா எப்படியும் 6 மாதத்துக்கு ஒருமுறை ஸ்பெயின் கிரீஸ் துருக்கின்னு போய்டுவாங்க .ரிலாக்சேஷனுக்காம் .மனதை உடலை புத்துணர்வை அவைக்க இச்சிறு பயணங்கள் உதவும் .இப்போ நீங்க அடிக்கடி கோவில் பயணம் போவதுகூட உங்களை உற்சாகப்படுத்துகிறது இல்லை அதுபோல 

   Delete
  2. ஒரு விதத்தில் நீங்க சொல்றதுல அர்த்தம் இருக்கு. எப்பப்பார்த்தாலும் ஆபீஸ், முடிஞ்சு வீட்டுக்கு வந்தா தமிழ் சீரியல்கள் என்று வீட்டிலேயே வாழ்க்கை வாழறவங்களுக்கு உலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாது.

   அடிக்கடி சுற்றுப்பயணம் போகணும். ஒவ்வொரு பயணத்திலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம், மனசையும் ரிலாக்ஸா வச்சுக்கலாம்.

   பொதுவா வெள்ளக்காரங்க, காசை நம்மைப்போல சேமிப்பு சேமிப்பு என்று இருப்பதில்லை. வாழ்க்கையையும் அனுபவிக்கறாங்க. நம்ம ஊர்லயும் இந்த மெண்டாலிட்டி வந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.

   Delete
  3. நெல்லைத்தமிழன் ..இப்போ புது வேலையில் சேரும்போது ஆன்லைன் ட்ரெயினிங் கொடுத்தாங்க ஸ்ட்ரெஸ் அட் work place அதை சமாளிப்பது அப்புறம் நைட் ஷிப்ட் வேலை செய்தா என்ன கண்ணாடி அணியனும் என்பதெல்லாம் நேரில் ட்ரெயினிங் தந்தாங்க .வெளிநாட்டினருக்கு சேமிப்பு கிடையவே கிடையாது ஆனா தொடர்ந்து நாலு நாள் லீவ் கிடைச்சாலும் rucksack எடுத்திட்டு ஆன்லைனில் பிளைட் டிக்கெட் எடுத்து ஸ்பெயின் போர்ச்சுக்கல் பிரான்ஸ்னு போய்டுவாங்க .ஒரு இலங்கை தமிழரும் சொன்னது இதைத்தான் .வருஷம் ஒருமுறை ட்ரிப் போகலைன்னா அவருக்கு ஸ்ட்ரெஸ் கூடிடுமாம் 

   Delete
 20. மனம் ஒரு புதையல், மனம் ஒரு மந்திரச்சாவி, மனம் ஒரு குரங்கு என்றெல்லாம் சொல்லுவார்கள். நீங்கள் மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு தொடரை தொடங்கியிருக்கிறீர்கள். நன்று, வாழ்க நலம்.

  ReplyDelete