அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

11/17/19

ஓ மனமே ஓ மனமே !!!! (2)இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள் வரக்கூடும் யாருக்கு பிரச்சினைகள் இருக்கு .அப்படிபட்டோரை பார்க்க நேரிட்டால் எப்படி நாம் முதலுதவி செய்யணும் என்றெல்லாம் சொல்லி தரப்பட்டது .சில காணொளிகளும் காட்டினாங்க .அதோடு சில விஷயங்கள் யாருக்காவது பிடிக்கலைன்னா எழுந்து போய்டலாம்னும் சொன்னாங்க .ஒரு பெண்மணி பைபோலார் பற்றி காணொளி துவங்கியதும் எழும்பி சென்று 45 நிமிடம் பின் வந்தார் .முகமெல்லாம் சிவந்து அழுது இருந்தார் .அவர் ஒரு சீனியர் நர்ஸ் .
மன நலம் பிரச்சினைகள் அனைவருக்குமானது என்பதை உணர்த்தியது இது .

                                                                                          Anxiety-- எதை செய்தாலும் ஒரு பயம் சரியா செய்தோமா இல்லை யாரவது தவறா நினைப்பாங்களா இப்படியே இவங்க குழம்பி கொண்டிருப்பர் 

 bipolar disorder   -- ஒண்ணு ஓவர் சந்தோஷமா இருப்பாங்க இல்லைன்னா அப்படியே உடைஞ்சி அழுவாங்க இது மாறிமாறி வரும் .Anger/  கோபம்

எப்போ வரும் எதுக்கு எங்கே வரும்னு தெரியாது சிலருக்கு அடிக்கடி வரும் படபடப்பு PANIC அட்டாக் இதோடு சேர்ந்து வரும் .

ஒருவர் சொன்னது //It feels like there's a ball of fire in the middle of my chest that blurts its way straight out of my mouth and burns the people around me.//

கோபப்படுவதில் தவறில்லை ஆனால் கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த தெரியணும் இல்லைன்னா அது கோபப்படுபவரை விழுங்கிடும் .

ஆகையால் Non-violent or passive aggression அதாவது அஹிம்சாவழியில் எதிர்ப்பை காட்டுவதே சிறந்தது .

Depression --- இது நம்ம எல்லாருக்குமே இருக்கும் வந்து போகும் பிரச்சினை. 

Obsessive-compulsive disorder (OCD)
கதவை பூட்டினோமான்னு திறந்து மூடி பார்ப்பது ,எழுதின லெட்டரை என்வலப் திறந்து பத்துமுறை பார்ப்பது தனிமை பயம் 
அப்புறம் Phobias, Psychosis,Schizophrenia, SAD Seasonal affective disorder (SAD)Suicidal feelings, ஹாலுசினேஷன்ஸ் , உள்ளே யாரோ பேசும்  குரல் ஒலி கேட்டல் இப்படி நிறைய சொல்லி தந்தாங்க .இதில் ஹியரிங் வாய்ஸ் பற்றி டெமோன்ஸ்ட்ரேஷன் செய்தப்போ எனக்கு அழுகை வந்தது ..ஒரு கோன் வடிவத்துக்கு பேப்பரை சுற்றி மேசையில் அமர்ந்து உரையாடும் இருவரில்  ஒருவரின் காதில் பேசணும் அது //உன் அருகில் இருப்பவர் கெட்டவர் நம்பாதே உன்னை அபியூஸ் செய்வார் டோன்ட் ட்ரஸ்ட்  ஹெர் //இப்படி சொல்லணும் .அது கேட்பவரை  குழப்பிவிடும் . .அதுபற்றிய காணொளி பார்த்து  எனக்கு நெஞ்சே வலித்தது  .இப்படியெல்லாம் பிரச்சினைகளா மனிதருக்குன்னு :( 


மேற்கூறிய சிலவற்றுக்கு கட்டாயம் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கணும் ..பாதியில் நிறுத்தவும் கூடாது .எல்லாம் மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படணும் .

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஆண் சிறுவயதில் ஒரு புரட்சி இயக்கத்தில் சேர்ந்து அவர்கள் செய்யும் காரியங்களுக்கு உடந்தையாக இருந்தவர் பிற்காலத்தில் பல போராட்டத்துக்குப்பின் அந்த குழுமம் எல்லாம் முடிவுக்கு வந்த நிலையில் வேறொரு நாட்டுக்கு குடிபெயர்ந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ஆனாலும் ஆழ்மனதில் அந்த புரட்சிகர கூட்டத்தில் இருந்தபோது பட்ட கஷ்டங்கள் பின்விளைவுகள் எல்லாம் அவருக்கு அவ்வப்போது நினைவில் வந்துபோகும் அதையும் கடந்து முன்னேறும்போது வேலை யில் சில பிரஷர் ஏற்பட்டு டிப்ரெஷனில் வீழ்ந்தார் அவருக்கு இந்த யாரோ பேசுவது போன்ற auditory hallucination வந்திருக்கு   மீண்டும் பழைய நினைவுகள் இறந்த சடலங்கள் இழப்புக்கள் எல்லா நினைவும்  கிளறப்பட மருத்துவ சிகிச்சை எடுக்க நேரிட்டது .தன்னால் தனது பிள்ளைகளுக்கு பிரச்சினை ஏற்படுமோ என்று பயந்து அவர்களை விட்டு விலகி தனிமையில் இருந்தார் அதனால் இன்னும் டிப்ரஷன் அதிகமாகி ஒழுங்காக மருந்துகள் எடுக்காமல் ஒரு நாள் தன்னை தானே முடித்துக்கொண்டார் .


இன்னொரு சம்பவம் ஒரு ஆண் 10 வயது முதல்  சில  போராளி இயக்கங்களால் உந்தப்பட்டு தீய வழிகளில் சென்றுவிட்டார் கூடவே போதை வஸ்துவும் .இந்த போராளி இயக்கங்கள் பெரும்பாலும் தங்களுக்கு அடிமையாக்கி வைக்க போதை வஸ்துக்களை கொடுத்து பழக்கி இருக்கிறார்கள் .தான் செய்வது தவறு என்பதை உணரவிடாமல் மந்த நிலையில் வைப்பது . இந்த நபருக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டபோது மிக மோசமான நிலை .வெறிபிடித்தவர்போல் ஒரு குறிப்பிட்ட நாட்டை மிகவும் கேவல காது கொடுத்து கேட்க முடியாத வசவுச்சொற்க்களால் திட்டுவார் . போனில் சில காணொளிகளை பார்த்து அழுவார் .அந்த போதை வஸ்துவை கொடுக்க சொல்லி கெஞ்சுவார் .இவற்றை பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது .இளவயது சிறுவயது பிராயம் என்பது எத்தனை அருமையான காலகட்டம் அதில் சந்தோசம் மட்டுமே இருக்கணும் . இனி வருங்காலத்திலாவது 
பிள்ளைகள் குறைவற்ற போர் சூழலற்ற வறுமையற்ற பேதமையற்ற  சந்தோஷமான வாழ்க்கை வாழணும் என்றே பிரார்த்தித்தேன் இந்த காணொளிகளை சம்பவங்களை பார்த்தபோது .


ஒரு 35 வயது ஆண் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் குறிப்பிட்ட மதத்தினரை பொது வெளியில் வசை பாடுவார் தான் இனவெறித்தாக்குதலுக்கு  சிறு வயதில் உள்ளானதா சொல்வார் .இப்போ நல்ல வேலை பணம் பதவி இருந்தும் 10  வயதில் தான் கேலிக்குள்ளானது அவரை இன்னும் வாட்டுகின்றது . இதனால் இப்போ மனைவி பிரிந்து விட்டார் இவரது பழக்கங்கள் பிடிக்காததால் .இவரது பிளாஸ்க்பேக்ஸ் இவருக்கு சோதனைகளை கொடுத்துவிட்டது .

இது பத்திரிகையில் வந்தது ஒரு பஞ்சாபி பெண் தான் பள்ளிக்கூடத்தில் கேலிக்குள்ளானது எப்படி டிப்ரஷனில் ஆழ்த்தியது என்று விவரித்தார் .இவரின் தாத்தா பாட்டி பஞ்சாபில் இருந்து இங்கிலாந்து வந்தவர்கள் 1980 களில் .வந்தவுடன் இங்கே ரெஜிஸ்டர் செய்யும்போது டாக்டர்ஸ்கிட்டயும்  ரெஜிஸ்டர் செய்யணும் அப்படி செய்பவர்கள் அதே பஞ்சாபில் ஒரு வகையினர் அங்கே புதிதா வந்தவர்கள் ரோடு கூட்டியதை அவர்கள் வாயால் கேட்டு தெரிந்து ஊரெல்லாம் பரப்பி சிரித்து அது இப்பிள்ளையின் பள்ளிக்கூடம் வரை சென்றுள்ளது. அந்த பெண் படிக்கவே முடியலை முன்னேறாமல் போனார் .எத்தனைமன உளைச்சல் பாவம் பிள்ளைகள் .அதிலிருந்து இங்கே இன்னும் ஸ்ட்ரிக்ட் ஆக்கிட்டாங்க நிறம் குறித்து கேலி வந்தாலும் ஸ்கூல் விட்டு அனுப்பிடுவாங்க  இதற்கு ASBO என்று பெயர் .இதுபற்றி அறிய  .

இப்படி பல சம்பவங்களை காட்டினார்கள் பிறகு வேலையில் சேரும் நாள் வந்தது .இந்த ட்ரெயினிங் காலகட்டத்துக்குள் யாரையும் எந்த சூழலிலும் ஜட்ஜ் செய்யக்கூடாது .பொறுமை மிக அவசியம் என்பதை புரிந்துகொண்டேன் . மேலும் கெட்ட வார்த்தைகளில் திட்டினாலும் பொறுமையுடன் இருக்கணும் காரணம் அவர்கள் தன்னிலையிலில்லை என்றும் புரிந்துகொண்டேன் .இதற்குள் மகள் ஜுனியர் ஆராய்ச்சி அம்புஜம் இந்த வேலை பற்றி அதன் சூழல் பற்றி ஆராய்ச்சி செய்து என்னை வேலைக்கே போகவேண்டாமென தடுத்தா :) ஆனா எனக்கோர் பழக்கமுண்டு ஒரு முடிவை எடுத்தா நானே அதுக்கப்புறம் என் பேச்சை கேக்க மாட்டேன் :) ஒரு வழியா முதல்நாள் மனம் முழுக்க படபடப்புடன்  ஹாஸ்பிடலுக்கு நுழைந்தேன் .
*********************************************************************************


இது அதுவா இருக்குமா இதுவா இருக்குமா அந்த மதமா  அந்த இயக்கமா இந்த இயக்கமா என்று யோசிப்பதை விடுத்து நாம் ஒவ்வொருவரும் நம்மை அவர்கள் இடத்தில வைத்து  பொருந்தி பார்த்தா அவங்களோட வேதனைகளை புரிய இயலும் .


                                                                                                தொடரும் ............................


35 comments:

 1. Replies
  1. வாங்க கீதாக்கா ..நிதானமாகவே வரலாம் .எனக்கு எப்போ டைம் கிடைக்கும் என்று எனக்கே தெரியாது :) அதான் கிடைச்ச நேரத்தில் போடறேன் 

   Delete
 2. முதல் இமேஜ் வரிகள் மிக அழகு.  சேமித்துக்கொன்டேன்.  மொத்தப் பதிவையும் சேமித்து வைத்துக் கொள்வதே நல்லது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் ..எனக்கும்  மிகவும் பிடித்தது அது .இன்னும் பல அனுபவங்கள் கிடைச்சிருக்கு எனக்கு 

   Delete
 3. பொதுவாக மனிதர்களில் 90% மனதில் ஏதாவது சிறு பிரச்னையாவது உள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று சொல்வார்கள்.  இந்தப் பொருளில் ஜேகேவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று ஒரு கதை கூடஎழுதினார் என்று நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் குறையற்ற மனிதர்களே இல்லை ஆனாலும் அதையெல்லாம் தாண்டி கிடைத்த வாழ்க்கையை நல்லமுறையில் வாழனும் 

   Delete
 4. Obsessive-compulsive disorder (OCD)  இல்லாத மனிதர்களுண்டா?  சிறிய அளவிலாவது?

  ReplyDelete
  Replies
  1. கிக்கிக்கீ :) எனக்கும் இருக்கு .oven அணைச்சேனா இல்லியானு முன்னே அடிக்கடி டவுட் வரும் இப்போ கொஞ்சம் குறைவு :)

   Delete
  2. எனக்கு இந்த இடுகையைப் படித்துவிட்டேனா, கருத்து போட்டாச்சா என்று அடிக்கடி சந்தேகம் வரும்.

   Delete
  3. ஹாஹா :) வாங்க நெல்லைத் தமிழன் ..அது இந்த பதிவுக்கு மட்டும் ஒரே தலைப்பு அது குழப்பிடுச்சோ :)

   Delete
 5. ரொம்ப நல்ல பதிவு. நல்லா ஆழமா யோசிச்சு எழுதி இருக்கீங்க. இதிலே உள்ள சில நோய்கள் இருப்பவர்களை இப்போவும் பார்க்க முடிகிறது. முக்கியமா நான் சொன்ன போஸ்ட் பார்டம் டிப்ரெஷன் உள்ள பெண்கள் சரியான கவனிப்பு இல்லாமல் மன நோயாளியாகவே ஆகி விட்டனர். கோபம் குறைந்தாலே பல மன நோய்கள் குறையும் என நினைக்கிறேன். அதே போல் கடந்த காலத்தை நினைப்பது. இது எனக்கும் இருக்கு. வலுக்கட்டாயமாக மனதைத் திருப்புவேன். சில சமயம் அது போன போக்கிலும் போகும். பின்னால் நினைச்சுப் பார்த்தால் வெட்கமாக இருக்கும். என்றாலும் இதோடு போராட்டம் தான்! நமக்கே இப்படின்னா நீடித்த மனநோயாளிகள் பாடு இன்னும் கஷ்டம். அவங்களுக்குத் தேவையான ஆதரவையும் இசைவான வார்த்தைகளையும் அன்பையும் காட்ட வேண்டும். உங்களுக்கு இத்தகைய வேலைகள் செய்யும் அளவுக்குப் பொறுமை மட்டுமின்றி, அன்பான மனதும் பரந்த மனப்பான்மையும் உள்ளது. உங்கள் பணி சிறக்கப் பிரார்த்திக்கிறேன். திரும்ப வருவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா இன்னும் போஸ்ட் பார்ட்டம் பற்றி எழுதணும் .நூற்றுக்கு நூறு உண்மை பெண்கள் ஹார்மோன்கள் பிரச்சினையால் படும் பாடு இருக்கே :( இந்த ppt ஒரு பெண்ணை லண்டனில் மிக மோசமா பாதித்து ..எனக்கும் பழைய நினைவுகள் எல்லாம் வந்து போகும் இப்போல்லாம் உடனே மனதை வேறுபக்கம் திருப்பிடறேன் .வலைப்பூவும் ஒரு வகையில் ரிலாக்சிங் தான் .மிக்க நன்றிக்கா இயன்றவை சீக்கிரம்  மனநலம் முடிச்சிட்டு டிமென்ஷியா பக்கம் செல்லப்போகிறேன்

   Delete
 6. //இளவயது சிறுவயது பிராயம் என்பது எத்தனை அருமையான காலகட்டம் அதில் சந்தோசம் மட்டுமே இருக்கணும் . இனி வருங்காலத்திலாவது
  பிள்ளைகள் குறைவற்ற போர் சூழலற்ற வறுமையற்ற பேதமையற்ற சந்தோஷமான வாழ்க்கை வாழணும் என்றே பிரார்த்தித்தேன் இந்த காணொளிகளை சம்பவங்களை பார்த்தபோது .//

  நானும் அப்படித்தான் பிரார்த்தித்து கொள்வேன் இப்படி பட்ட செய்திகள், காணொளிகளை பார்க்கும் போது.

  எங்கும் அமைதியும் நிலவ வேண்டும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..அதேதான் எனது பிராத்தனை .எப்பவுமே சிலரின் நிலை பார்த்தா அழுகையா வரும் .எத்தனை வேதனைகளை 10 வயதுக்கு கீழுள்ள பிள்ளைகள் சந்திக்கிரார்கள் :( 

   Delete
 7. Replies
  1. மிக்க நன்றி அக்கா 

   Delete
 8. ஆஆஆஆஆஅ இந்த அசம்பாவிதம் எப்போ நிகழ்ந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இந்தப் போஸ்ட் வெளிவரும்போது மீ நல்லதொரு கனவு கண்டு கொண்டிருந்தேன்.. அதாவது கீதா ஒரு லட்டுத்தருவதுபோலவும், அதை அஞ்சுவுக்குக் காட்டிக் காட்டிச் சாப்பிடுவதைப்போலவும் கனவு வந்துதே:) உங்களுக்கு ஒத்துக்கொள்ளாது எனத் தரவில்லை நான் பார்த்தீஈங்களோ உங்களை சேஃப் பண்ணியிருக்கிறேஎன் கனவிலும்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)).

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) நைட்டோட நைடத போஸ்ட் போட்டேன் இலக்கிய தும்மல் :) கம்மல் /பம்மல் 

   தேங்க்ஸ் ladoo நீங்களே சாப்பிட்டு இன்னும் குண்டாகுங்கா 

   Delete
 9. //Anger/ கோபம்//

  ஆஆ அவசரமா ஏஞ்சல் எனப் படிச்சிட்டேன்...

  ReplyDelete
 10. மனநலம் பற்றி நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க, உண்மைதான் அஞ்சு, இதுபற்றி நிறைய சொல்லலாம், எனக்கும் பல பல சம்பவங்கள் தெரியும்... ஹொஸ்பிட்டலில் இருந்தாலே பல விசயங்கள் இப்படி தெரியவரும்...

  தொடருங்கோ.. பின்பு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் எத்த்னை அனுபவங்கள் கிடைச்சாச்சு இந்த குறுகிய காலத்தில் ..தொடர்கிறேன் 

   Delete
 11. //நாம் ஒவ்வொருவரும் நம்மை அவர்கள் இடத்தில வைத்து பொருந்தி பார்த்தா அவங்களோட வேதனைகளை புரிய இயலும்//

  இதைத்தான் நானும் எப்பவும் சொல்வதுண்டு, என்பக்கத்தில் இதுபற்றிய ஒரு போஸ்ட் முன்பு போட்டேனே, ஒரு அண்ணன் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார் என...

  கோபம் காட்டுவதை விட்டுவிட்டு, முதலில் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனத்தான் எண்ண வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் .நல்ல விஷயங்களை பகிரும்போது அது மனதில் பதிஞ்சிடும் அப்படிதான் இதுவும் உங்கபதிவில் இருந்து என்னுள் போனதோ !!

   Delete
 12. இத்தொடர் செம இன்ரஸ்டிங் அதோடு நல்ல அனுபவம். அஞ்சு நீங்க சூப்பரா எழுதுறீங்க. அதுவும் ஆங்கில வார்த்தைகளையும் போடுவது அருமை. ocd எனக்கு அயர்ன் பாக்ஸ் போட்டால்தான் வரும். மற்றபடி இப்ப சமீபகாலமா காஸ் பாவிக்கிறன். நல்லகாலம் அதில் ஓவ் செய்யும் மீற்றர் இருக்கு.நான் அதை நிற்பாட்டினால் காஸ் தானாக அணையும் பின் அடுப்பை ஓவ் செய்யலாம்.கிச்சன் வாசல் பக்கம் என்றபடியால் எட்டிபார்த்துவிட்டு போவேன். எல்லாம் பார்த்தாலும் டவுட் வரும் .இப்ப நானும் குறைச்சிட்டேன். கடைசி வரிகள் மிகவும் அருமையானது. உண்மையில் அவங்கவங்க இடத்தில் இருந்து பார்க்கனும். இவ்வாறான பலவிதமான குணாதிசயங்கள் கொண்டவங்களோட பழகுவது மிகசவாலான விடயம். பொறுமைதான் மிக அவசியம்.உங்க சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .எனக்கு இந்த ocd கொஞ்சம் காலமுன் பாடாய்படுத்தும் சர்ச்சுக்கு பொய் 10 நீமிஷன் கழிச்சு கணவரை வீட்டுக்கு அனுப்பி செக் செய்யலாம் சொல்லியிருக்கேன் .ஒரு கட்டத்தில் மகள் வீட்டை விட்டு புறப்படுமுன் போட்டோ எடுத்து காமிக்க துவங்க எல்லாம் சரின்னு பார்த்துக்க :) 
   ஆம் பிரியா எத்தினை மனிதர்கள் எத்தனை உணர்வுகள் .ஒவ்வொருவரும் unique .மிக்க நன்றி பிரியா தொடர்ந்து வந்து என்னை உற்சாகமூட்டுவதற்கு 

   Delete
 13. // கதவை பூட்டினோமான்னு திறந்து மூடி பார்ப்பது //

  பூட்டிய பூட்டை இழுத்த்த்த்த்த்த்த்த்து ஆயிரம் முறையை தொங்குவது...!

  நரம்புத் தளர்ச்சி ஆரம்பம் ஆவது இங்கே தான்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி . உண்மைதான் அங்கேதான் பிரச்சினை  நிறையபேருக்கு துவங்குது .இங்கே பூட்டு கிடையாதது கதவு சாத்தினா ஆட்டோ லாக் ஆகிடும் அதனால் hand பாகில் ஒரு சாவி எப்பவும் உள்ளேயே வச்சிருப்போம் 

   Delete
 14. எத்தனை எத்தனை விதமான மன கஷ்டங்கள் ...

  நல்ல சுழல் இருந்தால் மீண்டு வருவோர் பலர் ...


  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் அஞ்சு ...தொடர்ந்து பகிருங்கள் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்கப்பா அனு ..மிக்க நன்றி .அவர்களுக்கு அவர்களை புரிந்துகொள்ளும் மனிதமனங்கள் மிக அவசியம் .

   Delete
 15. படிக்கும் பொழுதே மனம் கனக்கிறது. நேரில் பார்க்கும் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நம்மில் பெரும்பான்மையோருக்கு ஏதோ ஒரு வகை மனக்கோளாறு இருக்கிறது. சிலருடைய பாதிப்பு வெளியே தெரிந்து விடுகிறது. 

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பானுக்கா ..நானா பார்த்தவற்றில் சில மிகவும் அழுத்தம் தரக்கூடும் என்கிறதால் சொல்லாமல் மறைப்பேன் .சிலவற்றை சொல்லக்காரணம் அனைவருக்கும் புரிதல் என்பது அவசியம் என்பதர்க்காகவே 

   Delete
 16. படிக்கும் காலங்களில் பரிட்சைக்கு செல்லும் பொழுது பொழுது ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறேனா? என்று அடிக்கடி பர்ஸை மெள்ள திறந்து பார்ப்பேன். இப்போது டெபிட்/க்ரெடிட் கார்டை உபயோகிக்கும் பொழுது, கார்டை திரும்ப வாங்கி விட்டோமா என்று அடிக்கடி சந்தேகம் வரும்.  

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா நம் எல்லாருக்கும் இது இருக்குக்கா :)

   Delete
 17. இயல்பாக அனைவருடைய வாழ்விலும் எதிர்கொள்ளப்படுவது. பகிர்ந்த விதம் அருமை.
  தமிழ் விக்கிபீடியா நவம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  ReplyDelete