அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

10/17/19

எதிர்பார்ப்பில்லா புன்னகை , பேருந்து அனுபவங்கள்

கென்யா ஆன்ட்டி 


===================

இது வண்ணத்துப்பூச்சி பண்ணையில் எடுத்தது ..
                                                                              

                                                                          
முன்குறிப்பு
=============

                                                                              


கஜனி படத்தில் அசின் கேரக்டர் நினைவிருக்கா :) நானும் கொஞ்சமே கொஞ்சம் அசின் தான் ஐ மீன் அந்த கேரக்டர்தான் :) ஒருவேளை முறுக்கு தாஸ் :) எங்காச்சும் என்னை தொடர்ந்து கண்காணிச்சாரோ  தெர்ல:) அந்த மாதிரி நிறைய ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ரோட் க்ராஸ் பண்ணி விட்டிருக்கேன்
.அது ஒரு விரலை வாயில் சூப்பிட்டே அக்கா அக்கா ரோட் க்ராஸ்ன்னு கெஞ்சும்ங்கள் :)  ஆனா அந்த குட்டீஸுக்கே தெரியாத ரகசியம் 

அது :)

அதுங்கள கைய பிடிச்சிட்டு அவங்க துணையுடன்  நான் தைரியமா ரோட் க்ராஸ் பண்ணினது :) 

                                                                                       
இது  சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் . நான் ஹாஸ்பிடலில் வேலை செய்கிறேன் . எங்களுடைய மனநல வார்ட் மெயின் ஹாஸ்பிடல் அருகில் தான்  உள்ளது .பேருந்தில் பயணிக்கும்போது பல நோயாளிகள் அவுட் பேஷண்ட்ஸ் என்னுடன் பயணிப்பார்கள் .பலர் 50 வயதிற்கும்  க்கும் மேலுள்ளவர்கள் .என்னை மற்றும் கழுத்தில் இருக்கும் அடையாள அட்டை பார்த்ததும் சினேகபாவத்துடன் புன்னகை வீசுவார்கள் . நாம் பதிலுக்கு முகமலர சிரிச்சா இன்னும் தைரியமாக பேச ஆரம்பிப்பார்கள் .இப்படி நிறைய பாட்டி தாத்தாக்கள் என்னுடன் உரையாடுவதுண்டு .இறங்கும்போது நன்றி சொல்லிட்டு போவாங்க .அன்றும் பேருந்தில் ஏறினப்ப பார்வையில் பட்டவர் இந்த கென்யா ஆன்ட்டி . இந்தியாவில் இருந்து கென்யாவுக்கு குடியேறி அங்கே இருந்து பின்பு இங்கிலாந்து வந்தவர் .பேருந்தின் இருக்கையில் படபடப்போடு அமர்ந்திருந்தார் முகமெல்லாம் வியர்த்து மூச்சு வேகமா வந்தது ..நாமாய் சென்று அவசரப்பட்டு விசாரித்து வம்பில் மாட்டிக்ககூடாததுன்னு அமைதியா இருந்தேன் .இறங்குமிடம் வந்தது wheel rollator walker உதவியுடன் மூச்சு வாங்க நடக்க இயலாமல் நடந்து சென்றார் .ஒருவருக்கும் நின்று உதவி வேண்டுமான்னு கேட்கக்கூட நேரமில்லா அவசர உலகம் :(  .பிறகு தயக்கத்தை விட்டு நானே அவரிடம்  அருகில் சென்று ஆர் யூ ஆல்ரைட் ? என்று கேட்டதுமே அழுகையுடன் ஆரம்பித்தார் .எக்ஸ்ரே எடுக்க இவரும் இவரது கணவரும் ஒன்றாக பேருந்தில் ஏறினார்கள் இவரது மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் மறந்துவிட்டதால் கணவர் பாதிவழியில் இறங்கி சென்று விட்டாராம் .பாவம் துணைக்கு ஒருவருமில்லை .பிறகு நானே அவரை போக வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்றேன் .டிக்கெட் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்கையில் அமரவைத்து விட்டு வந்தேன் . அத்தோடு எதிர்பாராத மனதிருப்தியையும் சந்தோஷத்தையும் மூட்டையாய் கட்டிக்கொண்டு நான்  வேலை செய்யுமிடம் நோக்கி நடந்தேன் .                                                      இன்னொரு நாள் ஒரு ஜமைக்கன் பெண்மணி கையில் உணவு பார்சலுடன் என்னருகில் அமர்ந்திருந்தார் .எப்பவும் போல் ஒரு வணக்கம் ப்ளஸ் புன்னகை உதிர்த்ததும்  உடனே அவரும் புன்னகையுடன் துவங்கினார் ..அவரது வளர்ப்பு பிள்ளைகள்  அவருக்கு உணவு கூட தருவதில்லையாம் .பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அவரை அலைக்கழிக்கிறார்கள் .அதனால் சீக்கியர் கோவிலில் உணவை பெற்றுக்கொண்டு ஹாஸ்பிடல் ஏரியாவில் அமர்ந்து உணவை சாப்பிட போகின்றேன் என்றார் ..எத்தனை மனிதர்கள் எத்தினை குரூர குணங்கள் .பிறகு நான்  இறங்குமிடம் வந்ததும் தேவதை போல் தான் பேசுவதை கேட்டது தனக்கு  ஆறுதலா இருந்தது என்று சொன்னார் ..

                                                                                
எதுக்கு இதை சொல்கிறேன் என்றால் யாராவது ஒருவருக்கு நம்முடைய சிறு புன்னகை ஒரு சந்தோஷத்தை தரலாம் .அதனால் எப்பவும் புன்னைகையுடன் உலாவுங்கள் :) 

                                                                                         

அது மனுஷரை பார்த்து மட்டுமில்லை எல்லா ஜீவராசியை பார்த்தும் புன்னகை வீசி செல்லுங்கள் 

நான் கூட இவரை பார்த்து சிரிச்சேன் ஓடி வந்து என் கைப்பையை தோண்டினார் எதையோ எதிர்பார்க்கிறார்னு புரிந்தது அருகிலுள்ள கடைக்கு சென்று கொஞ்சம் கடலை வாங்கி கொடுத்தேன் :)


                                                                                

                        உங்கள் எதிர்பார்ப்பில்லா  புன்னகை  இன்னொருவரின் நாளை உற்சாகப்படுத்தட்டும் .

                                            ********************************************

163 comments:

 1. Replies
  1. யெஸ்ஸ்ஸ் :) நீங்க தான் truth first :)  
   உங்களுக்கு ஸ்பெஷல் லண்டன் ஸ்டைல் தட்ட இட்லி அனுப்பி வைக்கிறேன் 

   Delete
  2. இன்று ஆபிஸுக்கு மட்டம் போட்டதால் உங்க பதிவை இடனே பார்க்க முடிந்ததால் மீ பர்ஸ்ட் இல்லையென்றால் மீ லாஸ்ட்

   Delete
  3. உங்க இட்லியை நீங்களே வைச்சுகுங்க நான் இப்பதான் தோசை வித் தக்காளி சட்னி சாப்பிட்டேன்

   Delete
  4. ஓஹோ அப்படியா ..எனக்கு இனிமே லீவ் கிடைக்குமா தெரிலா . முழு நேரம் work பண்ணப்போறேன் .அதனாலதான் கிடைச்ச நேரத்தில் பதிவை போட்டுட்டேன்

   Delete
  5. உங்களுக்கு பொற்றாமை நானா தட்டை இட்லி சூப்பரா செய்றேன்னு .உங்களுக்கு கொடுத்து வைக்கில :))

   Delete
  6. அச்சச்சோ தேவதை முழு நேர வேலைக்கு போனால் அப்ப எங்க கதி என்னாவது.. வேண்டாம் வேண்டாம் வேலைக்கு போக வேண்டாம் இங்கு வரும் மற்ற ந்ண்பர்களே என்னுடன் இந்த போராட்டத்தில் கலந்து வெற்றி பெறஸ் செய்யுங்கள்

   Delete
  7. என்னுடைய மைச்சினிச்சுயும் அத்த்திம் பேர் உங்களுக்கு என் சாப்பாட்டை பார்த்து பொறாமை என்று சொல்லுவாள் ஹீய்ஹீ

   Delete
  8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) நான் சைன் செய்து  கொடுத்துட்டேன் :)  ..ஷிஃப்ட் மாறினாலும் மொக்கைகள் தொடரும் 

   Delete
  9. ///அத்த்திம் பேர் உங்களுக்கு என் சாப்பாட்டை பார்த்து பொறாமை என்று சொல்லுவாள் ஹீய்ஹீ///

   பார்த்தீங்களா உங்க மனசு ஒரு செக்கண்டில் ஹாப்பி ஆக்கிட்டேன் :) எவ்ளோ  ஸந்தோஷம் :) 

   Delete
  10. தட்டையாக கொஞ்ச்ம மெத்து மெத்து என்று இருந்தால் அதற்கு ஊத்தாப்பாம் எண்ரு பெயர் இட்ட்லி என்றால் குஷ்பூ போல இருக்கனும் இது கூட தெரியாம்ல சமையல் டிப்ஸ் எல்லாம் சொல்லிறீங்களேம்மா

   Delete
  11. மைச்சினி என்றதும் நான் சந்தோஷப்படுகிறேன் என்று நீங்கள் சொலவ்தை கேட்டால் என் மைச்சினிச்சி சந்தோஷப்படுவாள் பாவம் என் மைச்சினிச்சியின் அத்திம் பேரை பற்றி உங்களுக்கு தெரியாது கடந்த ஆண்டு இரண்டு தடவை உங்க வீட்டுக்கு வரவா என்று கேட்ட போது யூ ஆர் நாட் வெல்கம் என்று போனிலே சொல்லிவிட்டேன் அத்ன் பின் கட்ந்த வாரம்தான் அவள் பொண்ணுக்கு எங்க ஊரில் ஒரு போட்டி இருந்ததால் சில நாட்கள் தங்கிவிட்டு சென்றாள்

   Delete
  12. மச்சினியின் அத்திம்பேர் ??? நல்லா விவரமா இருந்தேன் செக்கண்டில் குழப்பிட்டாரே ட்ரூத் என்னை 

   Delete
  13. ஆஹா இப்பத்தான் குழம்ப ஆரம்பிச்சு இருக்கீங்களா சரி சரி என் முயற்சியை தொடர்கிறேன் இன்னைக்கு நல்லா குழ்ப்பி விட்டுதான் போகனும் ஹீஹீ

   Delete
  14. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ட்றுத்:)

   இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது? எனக்கு இண்டைக்கு ரைமே கிடைக்கவில்லையே...

   Delete
  15. ஆஹா ஆத்தா வந்துடுச்சு இனிமேல் சாமி ஆடப் போகுது நாம் அதுக்குள்ள இடத்தை காலி பண்ணிடனும்

   Delete
  16. மச்சினியின் அத்திம்பேர் ???//

   ஹா ஹா ஹா ஏஞ்சல் அது மதுரையேதான்!! குழம்பிட்டீங்களா?!!!!!

   கீதா

   Delete
 2. மிக அருமை. இத்தனையும் உங்கள்கூடப் பிறந்தவை. நானெல்லாம் இதை வளர்த்துக்கொள்ள வேண்டும். முயற்சி செய்யணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா .. சில விஷயங்கள் இங்கே வெளி நாட்டில் கற்றுகொண்டவையக்கா .நம்மூரில் பல தடைகள் வரும் .எனக்கு BSc நர்சிங் லூதியானவில் கிடைத்தும் அப்பா அனுப்பலை .இப்படி நிறைய உன்னால் முடியாதது நீ பயப்படுவன்னே சொல்லி தடுத்திட்டாங்க .இப்படி தைரியமே இல்லாம தான இருந்தேன் இங்கே வந்தே வளர்த்துக்கொண்டேன் பல விஷயங்களை 

   Delete
 3. நீங்க ரோட்டை கராஸ் செய்ய குழந்தையின் கையை பிடித்து சென்றது போல உங்கள் கிச்சனை க்ராஸ் பண்ன உங்க வூட்டுகாரரரின் கையை பிடித்து சென்றதாக வாட்ஸப்பில் ஒரு செய்தி வருகிறதே அது உண்மையா

  ReplyDelete
  Replies
  1. அச்சோ !! அது ஸ்னாப்சாட்டில் யாரையும் சேர்க்க கூடாதுன்னு சொன்னாங்க தெரியாம உங்களை ஆட் செஞ்ஜா இப்படியா பப்லிக்கில் போட்டு கொடுப்பது :))))))))இந்த ரகசியம் நமக்குள்  இருக்கட்டும் 

   Delete
  2. இந்த ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்.. சரி சரி... அப்ப நாம் அதிராவை பற்றி பேசிய கிசுகிசுக்களை ரகசியமாக வைச்சிருக்க வேண்டாமா?

   Delete
  3. அதை அப்படியே வச்சிக்கோங்க நம்ம தோழி இல்லையா :)

   Delete
  4. உங்களுக்கு அவங்க தோழியாக இருக்கலாம் ஆனால் அவங்க என்றைக்கும் எனக்கு ஆண்டிதான்

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்😣கர்ர்ர்ர்ர்ர்ர் ட்றுத்துக்கு நான் ஆன்ரிவைரஸ் ஆக்கும்:)

   Delete
  6. என்னது ட்ரூத்துக்கு நீங்க ஆண்ட்ரியாவா??

   Delete
  7. ஹாஹா :) ஏற்கனவே பூனை இன்னிக்கு கீதாக்கா கிட்ட வசமா மாட்டி :) இப்போ இங்குமா :)

   Delete
 4. ஆண்டிக்கு செய்த உதவிக்கு பாராட்டுக்கள்...... ஆமாம் அந்த ஆண்டி ட்ரீட்மென்டுக்கு அமெரிக்க ஹாஸ்பிடலுக்கு போகனும் என்று சொல்லி இருந்தால் விமான டிக்கெட் எடுத்து அனுப்பி இருப்பிங்களோ?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) அதான் உங்க அக்கவுண்ட் நம்பர் இருக்கே அதை கொடுத்து டிக்கட் வாங்கி உங்க அட்ரஸுக்கே அனுப்பிடுவேன் ஆன்டியை 

   Delete
  2. என் அக்கவுன்ட்டில் டிக்கெட் எடுத்து அனுப்பினால் நடராஜா சர்வீஸில்தான் டிக்கெட் எடுத்து அனுப்ப முடியும்

   Delete
  3. இங்கே நீங்க் ஆண்டி என்று சொன்னது அதிரா ஆண்டியைத்தானே???

   Delete
  4. அதிரா ஆண்டிக்கு டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம் அங்கிள் ட்ரெம்பிக்ற்கு போன் போட்டு சொன்னால் போது அதிரா ஆண்டியை நல்லா கவ்னிச்சுக்குவார்ரு

   Delete
  5. பூனை இந்த ரிப்லைஸ் பார்த்து பிராண்ட போறாங்க :)

   Delete
  6. நான் முதல் கருத்து போட்டதற்கும் ப்ராண்டப் போறாங்க அவங்க நல்லா பாரண்டாட்டும் அவங்க் பிராண்டுவது அருகில் இருக்கும் அவங்க வூட்டுக்காரதைதான் நம்மை இல்லையே ஹீஹீ

   Delete
  7. ஒருநாள் வேர்க் போகாட்டில் வீட்டில ஒழுங்கா கிளீனிங் குக்கிங் செய்து மாமியை றிலாக்ஸ் ஆக்காமல் இங்க ஆரு உங்களை 1ஸ்ட்டாக் குதிக்கச் சொன்னது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

   உங்க எல்லோருக்கும் பொறாமை ட்றம்ப் அங்கிளுக்கு மீ பேசனல் செக் ஆக இருப்பது:).
   ஆக்ஸுவலி அவர் தனிப் பிளேன் வாங்கித்தருவதாகச் சொன்னார்:).. நான் வாணாம் என்றிட்டேன்:)... எனக்கு அடக்கொடுக்கமாக இருக்கத்தான் பிடிக்குமாக்கும்:)

   Delete
  8. வாங்க வாங்க அடக்கஒடுக்கம் :)) 

   Delete
  9. ஹலோ நான் வொர்ர்க்கு போகவில்லைதான் வேலை செய்யாமல் மட்டம் போட்டதுதான் ஆனால் குக்கிங்க் க்ளீனிங்க் வேலைக்கு மட்டும் மட்டம் போட முடியாது இப்படி நான் வேலை பார்த்தால்தான் மாமி ரிலாக்ஸ் ஒருவேளை நான் கூக்கிங்க் க்ளீனிங்க் வேலைக்கு மட்டம் போட்டால் மாமி ரிலாக்ஸாக இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டிற்கு வந்து பூரிக்கட்டையை எடுத்து பிஸியாகிடுவாங்க அதுக்கெல்லாம் நான் இடமே தரதில்லையாக்கும்

   Delete
  10. அடக்க ஒடுக்கமான பொண்ணுக்கு ட்ரெம்ப் வாங்கி தருவேன் சொன்னது விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையில் உள்ள விமானத்தை ஆனால் அதை அப்பாவி அதிரா ஏதோ உண்மையான விமானத்தை வாங்கி தருவதாக நினைச்சுகிட்டு இருக்காம் பாவம் தேம்ஸ் நதியில் குதிக்க போரேன் என்று கட்டாந்தரையில் குதித்து தலையில் அடிப்பட்டதில் இருந்து இப்படித்தான் பேசுவதாக வாட்ஸப்பில் வந்த தகவல் தெரிவிக்கிறது

   Delete
  11. 😡🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

   Delete

 5. //யாராவது ஒருவருக்கு நம்முடைய சிறு புன்னகை சந்தோஷத்தை தரலாம்///

  மிக மிக உண்மை மற்ற நாட்டவர்களை பார்த்து புன்னகை செய்தால் அவர்களுக்கு சந்தோஷம் தரும் ஆனால் எதிரி வரும் இந்திய பெண்களை மட்டும் பார்த்து புன்னகைக்க கூடாது அது அவர்களுக்கு சந்தேகத்தை கொடுக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹையையோ :) இப்போ என்னை வம்பில் மாட்டி விடக்கூடாது :) அந்த இந்தியப்பெண்களை என்கிட்டே அனுப்புங்க நானா ட்ரெயினிங் கொடுக்கறேன் ..நல்ல ஸ்மைல் கெட்ட ஸ்மைல் வித்யாசம் சொன்னா சந்தேகப்படமாட்டாங்க .

   Delete
  2. உங்களுக்கு அமெரிக்கா வாழ் இந்திய பெண்களை பற்றி ஒன்றுமே தெரியவில்லை அவர்களிடம் அமெரிக்கன் ஸ்மைல் பண்ணினால் சந்தோஷப்படுவாங்க ஆனால் இந்தியன் ஒருவன் ஸ்மைல் பண்ணினால் சந்தேகப்படுவாங்க....

   Delete
  3. இதைப்பற்றி விவரமா எழுதலாம் ..நானே புன்னகைத்து வெறுத்து இப்போல்லாம் யோசித்தே புன்னகைக்கின்றேன் நம் நாட்டினரை பார்த்து 

   Delete
  4. மதுரைத் தமிழன் - அது நாம காலம் காலமா நடந்துக்கிட்ட முறைனாலதானே.

   இந்த தலைமுறைலதான் கொஞ்சம் மாற்றம் தெரியுது

   Delete
  5. ஆஹா தப்பு என் மீதுதான் என்று நினைத்து இருந்தேன்..... நல்ல வேளை நெல்லைதமிழன் அது நம் முன்னோர்கள் செய்த தவரூ என்று சொல்லி என்னை காப்பாதிட்டார், தோழனுக்கு தோள் கொடுத்திருக்கிறார் நெல்லைதமிழன்.... இன்ங்க் தோழிங்களும் இருக்கிறாங்களே ஏதாவது கின்டலுக்கு சொன்னால் பூரிக்கட்டை வாங்கி அனுப்புவது இல்லை என்றால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று 100000000 தட்வை போடுவதும் ஹும்ம்

   Delete

 6. //யாராவது ஒருவருக்கு நம்முடைய சிறு புன்னகை சந்தோஷத்தை தரலாம்///

  மிக மிக உண்மை மற்ற நாட்டவர்களை பார்த்து புன்னகை செய்தால் அவர்களுக்கு சந்தோஷம் தரும் ஆனால் எதிரில் வரும் இந்திய பெண்களை மட்டும் பார்த்து புன்னகைக்க கூடாது அது அவர்களுக்கு சந்தேகத்தை கொடுக்கும்

  ReplyDelete
 7. கஜினி படத்தில் அசின் கேரக்டர் ஞாபகம் இருக்கிறதா? நல்லாவே ஞாபகம் இருக்கிறது அவங்க ஒல்லியாக் மிக ஸ்லீமாக இருப்பாங்க.... ஆனால் அந்த கேரக்டருக்கும் உங்களுக்கு எந்த விதத்திலும் பொறுத்தம் இல்லையே.....

  ReplyDelete
  Replies
  1. ஹலோ நானா குணத்தை மட்டுமே சொன்னேன் .இப்போ நான்  அசினை விட ஒல்லியாகிட்டேன்னு சொன்ன நம்பவா போறீங்க 

   Delete
  2. நான் நம்பிட்டாலும் நீங்க் ஒல்லியாகவா மாறப் போறீங்க ஹீஹீ

   Delete
  3. இருங்க ரெண்டு கிரீன் டீ குடிச்சிட்டு தெம்பா வரேன் :)

   Delete
  4. உங்கள் கூற்றுப்படி ஒல்லியாக இருக்கும் நீங்கள் க்ரீன் டீ குடித்தால் மேலும் ஒல்லியாகி தேவதைக்கு பதில் ஆவியாகத்தான் வருவீங்க எத்ற்கும் ஜாக்கிரதை

   Delete
  5. அலர்ஜியை விரட்ட எனக்கு பச்சை தேநீரும் பாகற்காய் டீயும் ஹெல்ப் 

   Delete
  6. போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தீங்களோ இப்படி ப்ச்சை தேனீரும் பாவக்காயும் சாப்பிடுவதற்கு... நம்க்கு எல்லாம் சூடான் காபியும் வாழக்காய் பஜ்ஜியும்தான்....

   Delete
 8. நல்ல வேளை அந்த ஜமைக்கன் அம்மணி சீக்கியர் கோவிலில் உணவை பெற்றுக் கொண்டார். நல்ல வேளை நீங்க சமைச்ச உண்வை கொடுத்திருந்தால்..... நினைக்கவே உடம்பெல்லாம் பதறுது ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. உங்களை லண்டன் வரவைச்சி ஸ்பெஷல் சாப்பாடு விருந்து போட்டே ஆகணும் 

   Delete


  2. உங்களுக்குள் என் மீது இப்படி ஒரு கொலை வெறி இருப்பது இப்போதுதான் தெரிஞ்சது அம்மாடியோவ் இந்த பொண்ணுக்கிட்டே ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கனும்மடா சாமி

   Delete
 9. தேவதை பேசுவது போல சரியாக சொல்லி இருக்கிறார் தேவதை போல இருக்கிறீங்க என்று சொல்லவில்லை தேவதை என்றால் ஸ்லிம்மாக பறந்து வரும் ஆனால் நீங்க? ஹூம் ஹூம் நீங்க அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்ட்டேன்

  ReplyDelete
  Replies
  1. garrrrrrrrrrrr :)
   நான் என் போட்டோவை போட்டா இவ்ளோ ஸ்லிம்மானு அதிர்ந்திடுவீங்க அதனால் போடமாட்டேனெ 

   Delete


  2. ஹலோ குழந்தை கல்லூரிக்கு சென்று படித்து முடிக்கும் வரை நான் உயிரோட இருக்கனும்..... அதனால போட்டோஷாப் பண்ணிக் கூட உங்க போட்டோவை போட்டுடாதீங்க அப்புறம் ஹார்ட் அட்டாக் எனக்கு வந்துடும் அவ்வளவுதான் சொல்லுவேன்

   Delete
  3. என்ன ட்ரூத் நீங்க இப்படி சொல்லிட்டீங்க ..ப்ரெண்டுக்கு இப்படிலாம் செய்வேனா :)
   அதிகபட்சம் கை கால் எலும்பு மட்டுமே பிரேக் ஆகும் அதுக்கு மேலே பாதிப்பு வராது 

   Delete

  4. ஆஹா உங்களுக்குள் ஒழிந்திருக்கும் ரெளடித்தனம் வெளி வர ஆரம்பிச்சுட்டதே எதற்கும் நான் ஜாக்கிரைதையாகத்தான் இருக்கனும்

   Delete
  5. நானா ரௌடியா :)))))))) என் கணவர் கிட்டே கேளுங்க  என்னைப்போல அப்பாவி உலகில் இல்லைன்னு சொல்வார் :)

   Delete
  6. ஆமாம் அப்படி உங்க கணவர் சொல்லைன்னா அவர் கை காலுக்கு ஆபத்துல்ல வந்திடும்....

   Delete
 10. அவர் பார்த்து புன்னகைத்தர்கு கட்லை வாங்கி கொடுத்தீங்க ஒருவேளை நான் பார்த்து புன்னகைத்து இருந்தால் பாட்டில் வாங்கி தந்து இருப்பீங்களா இல்லை காலில் கிடப்பதை எடுத்து இருப்பிங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) கோக் பாட்டில் கூட தரமாட்டேன் ..வேணும்னா ஸ்ப்ரிங் வாட்டர் வாங்கி தரேன் 

   Delete
  2. ஹ்லோ நான் மாதிரை சாப்பிடுவதற்கு மட்டும்தான் தண்ணீர் குடிப்பேன் மற்ற நேரங்களில் எல்லாம் காபிதான் எனக்கொரு சந்தேகம் ஸ்ப்ரிங்க் வாட்டர் குடித்தால் நடக்கும் போது குதித்து குதித்து நடப்போமா அல்லது சாதாரணமாகத்தான் நடப்போமா?

   Delete
  3. ம்ம் :) ஸ்ப்ரிங் மாதிரி நடப்பீங்க :) அதாவது இளவேனிற்காலம் மாதிரி 

   Delete
 11. பதிவு வந்ததே தெரியவில்லை.  அதற்குள் 44 கமெண்ட்ஸ்!  இன்னும் எவ்வளவு உள்ளே இருக்கிறதோ?!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .இது டிராஃப்டில் இருந்தது .அதான் பப்லிஷ் பண்ணினேன் .இன்னும் நிறைய இருக்கு :) 

   Delete

  2. நான் நிறைய கமெண்ட் போட்டேன் ஸ்ரீராம் அம்மணி உடனே அதை பப்ளிஷ் பண்ணாமல் கொஞ்ச கொஞ்சமாக வெளியிடுகிறார்கள் எல்லாத்திலேயும் டையட் கடைபிடிப்பதால் இதிலும் கொஞ்ச்ம் கொஞ்சம் என்று வெளியிடுகிறார்கள்

   Delete
 12. மைகாட்...    எல்லாம் மதுரை கமெண்ட்ஸ்!  அசந்துட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு அவருக்கு லீவாம் :) அதான் இங்கே கலகலத்திட்டார் ஸ்ரீராம் :)

   Delete

  2. தினமும் காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 அல்லது 12 மணிக்கு தூங்க செல்வேன் நேற்று இரவு பெண்ணை ஈவினிங்க் க்ளாஸுக்கு கூட்டி சென்றுவிட்டு அவளுக்காக இரண்டு மணி நேரம் காரில் காத்திருக்கும் போது அப்படியே தூங்கி இருக்கிறேன் அதன் பின் அவளை டாக்டர் ஆபிஸிற்கு கூட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு வர்ம் போது இரவுன் 9.30 அதன் பின் இரவு சாப்பாடு முடித்துவிட்டு சன்னியை வாக்கிஏகு கூட்டி சென்று விட்டு மணியை பார்த்தால் 11 ஆகிவிட்டது நேற்று மழையும் மிக் அதிக வேக காற்று வீசியாதால் மிக குளிராகவும் இருந்தது அதனால் என்னவோ உடம்பு மிக டையர்டாக இருந்ததால் நான் வேலைக்கு போகாமல் மட்டம் போட்டு இருக்கிறேன்

   Delete
  3. 4 மணிக்கே வா ?? அச்சோ நாங்க நல்லா தூங்குற நேரத்தில் நீங்க வேலைக்கு போறீங்களா ??

   Delete
  4. வீட்ல சுக்கு இருந்தா பிளாக் காபி போட்டு குடிங்க ட்ரூத் .மிக்க நன்றி இன்னிக்கு வந்து கலகலப்பூட்டினத்துக்கு 

   Delete
  5. அச்சச்சோ நாங்க நல்லா தூங்குகிற நேரத்தில் நாங்க என்பது இந்தியர்கள் என்று சொல்லுங்க அவங்கத்தான் இன்ங்க 7 மணிக்கு எந்திருச்சு 9 10 மணிக்கு ஆபீஸ் போவாங்க இங்க் நீயூஜெர்ஸியில 8 மணி 9 மணி ரயில்லி பயணிப்பவர்கள் அனைவரும் அநேகமாக இந்தியர்களாகத்தான் இருப்பார்கள் இவங்க பயணம் ஆரம்பிக்கு நேரத்தில் அமெரிக்கர்கள் அந்த நாளில் பாதி நாளை கழித்து இருப்பார்கள்

   Delete
 13. கென்யா ஆண்ட்டி நெகிழ வைக்கறாங்க என்றால் ஜமைக்கன் பெண்மணி கண்கலங்கவைக்கிறார்.  உங்கள் உதவும் குணத்துக்குப் பாராட்டுகள்.  எனக்கெல்லாம் இவ்வளவு பொறுமை கிடையாது ஏஞ்சல்...

  ReplyDelete
  Replies
  1. அவங்க  ரெண்டு பேருமே பாவம் ஸ்ரீராம் .கென்யா ஆண்ட்டிக்கு ரொம்ப பிரச்சினைகள் ஆர்த்ரைடிஸ் நடக்க முடியாம பார்க்க பாவமா யிருந்தது .அன்னிக்கு கற்றுக்கொண்டது ஒருவர் முகத்தை கடுகடுப்பா வைக்க காரணம் உள்ளே இருக்கும் வலிகளும் ஒரு ரீஸன் .ஜமைக்கன்  ஆன்ட்டி ரொம்ப பாவம் அட்லீஸ்ட் உணவாவது கிடைக்கிறதேன்னு நினைச்சு சந்தோஷப்படணும் 

   Delete
  2. இங்க தம்பி ஒருவன்( யாரதுன்னு கேட்க கூடாது இங்க இருப்பது ஒரு தம்பிதான் அது மதுரைத்தமிழந்தான்) மாமிகிட்ட மாட்டிகிட்டும் முழிப்பது கண்டு இரக்கப்பட யாரும் இல்லை அதைவிட்டுவிட்டு வெளிநாட்டு ஆண்ட்டிகள் மீது இரக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்

   Delete
  3. இருங்க உங்க அக்கா வருவாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு பாப்போம் :)

   Delete
  4. அதிரா நமக்கு ஆண்ட்டி முறை நமக்கு இருப்புது ஒரு சேச்சி அதுவும் கீதா(துள்சி) ஒரு வேளை கீதா சேச்சியைத்தான் சொல்லுறாங்களோ என்னவோ. கீதா சேச்சி எப்பவும் இந்த மதுரைக்க்கு சப்போர்ட் பண்ணுற ஆள் சேச்சி ப்ளிஸ் சீக்கிரம் வாங்க

   Delete
  5. பூனை படுத்தால் எலிக்குக் கொண்டாட்டமாமே:)).. அப்பூடி ஆச்சே இங்கின நிலைமை.. நேற்று கையைக் கட் பண்ணிட்டேன்ன்.. அதனால சத்து ஓய்வெடுக்கையில் இங்கு என்ன அட்டகாசம் கர்ர்ர்:)).. இதுக்காகத்தான் நான் 1ஸ்ட்டாக ஓடி வருவேன்.. அப்போ என் வாலைப் பார்த்திட்டே எல்லோரும் றிவேர்ஸ்ல ஓடிடுவினம்.. நான் ட்றுத்தைச் சொல்லல்லே:))

   Delete
 14. இன்று மாலை மானசீகமாக ஒரு செகண்ட் உங்களை நினைத்தேன்.  'ஸாரி ஏஞ்சல்' என்று நினைத்துக் கொண்டேன்!  ஒன்றுமில்லை...  மழைபெய்துவருகிறது இரண்டு நாட்களாய்...   வழியில் நத்தைகள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன.   முடிந்தவரை பார்த்து நடப்பேன்.  என்றாலும் ஒரு நத்தையை பச்சக் என்று.....   அதுதான்!

  ReplyDelete
  Replies
  1. அறியாமல் நடந்ததுதானே .இனி கவனமா நடங்க :) நான் தோட்டம் பக்கம்  நைட் டைம்ஸ் patio பக்கம் போகவே மாட்டேன் :) இவங்க பிரீயா உலாவுவாங்க 

   Delete
 15. அணிலை சோம்பேறியாக்குகிறீர்கள்!!!!   அதுவாக அதற்கான உணவைத் தேட விடுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. என்ன ஸ்ரீராம் சின்ன குழந்தைங்க வீட்டுக்கு வந்தா சாக்லேட் இல்லை பிஸ்கெட் தாறோமில்லையா அது மாதிரிதான் :) இவங்க acorn எடுத்து எல்லா இடத்திலும் விண்டருக்கு ஒளிச்சி வைக்கிறாங்க :) .இதோ இவரும் தூக்கிட்டே போனார் பிறகு  அதை சைடில் வச்சிட்டே இந்த நட்ஸை சாப்பிட்டார் 

   Delete
 16. ஒரு சிறு புன்னகை நம் நாளையே சந்தோஷமாக மாற்றிவிடும்...  சமயங்களில் எனக்கும் அது நேர்ந்து அனுபவித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்திங்களா :) நான்  சொன்னது உண்மைதானே . 

   Delete
 17. ஹலோ இப்பத்தான் உங்க பதிவின் தலைப்பை பார்த்தேன்... நானாக இருந்தால் கென்யா ஆண்ட்டியின் பேருந்து அனுபவங்கள் என்று தலைப்பு இட்டு இருப்பேன் அதை பார்க்கும் நம் மக்களு சூப்பர் ஹிட் பதிவாக மாற்றி இருப்பார்கள்

  ReplyDelete
 18. நல்ல குணம் ஏஞ்சலின். வாழ்க வளமுடன்.

  விலங்குகளும் நம் நல் மனதைப் புரிந்துகொள்ளக் கூடியவை.

  ReplyDelete
  Replies
  1. நீங்க நேத்தைய புதன்கிழமை பதிவை போய் பாருங்க உடனே அடக்கவொடுக்கம் எக்கச்சக்கமா :) திருதராஷ்டிரன்  பற்றி மாத்தி சொல்லி மாட்டுப்பட்டாங்க :)
   அப்பா இப்போதான் நிம்மதி :))))))))))))

   Delete
  2. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் எதோ நம்மாலான சிறு உதவி நம்முடன் பூமியை பகிரும் உயிர்களுக்கு 

   Delete
 19. உங்க குணத்துக்கு ஏற்ற ப்ரொஃபஷன்.

  மனநிலை அவ்வளவாக சரியில்லாதவர்களால் உங்களுக்குப் பிரச்சனைகள் வருவதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் அது கொஞ்சம் விரிவா எழுதணும் ..இவர்கள் மென்டல் ஹெல்த் பேஷண்ட்ஸ் பெரும்பாலும் 80 சதவீதம் ஆங்கிலேயர் ,20 சதவீதம் ஆப்பிரிக்கர் ,இந்தியர் பாகிஸ்தானியர் .கழுத்தில் ஒரு லான்யார்ட் மாட்டி இருப்போம் யாராவது அட்டாக் பண்ண வந்தா பிரெஸ் பண்ணினா அலார்ம் அடிக்கும் .பயமெல்லாம் முதல் நாள்  மட்டுமே .இப்போ மிகவும் பிடித்த இடமாகிப்போச்சு .அவர்களை பார்க்கும்போது .நாமெல்லாம் வாழும் வாழ்க்கைக்கு தெய்வத்துக்கும் பேரண்ட்ஸுக்கும்  கோடி நன்றி சொல்லணும் .
   விரைவில் எழுதுகின்றேன் விரிவாக 

   Delete
 20. நீங்க சொல்றதை நம்பி பெண்களைப் பார்த்துப் புன்னகைத்தால் பதிலுக்கு அவங்க புன்னகைப்பாங்களா இல்லை நாங்க ஓட வேண்டியிருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்த்மிழன் நாம் எதிரில் வரும் பெண்களை பார்த்து புன்னைகைக்கும் முன் நம் பக்கதில் மனைவி இருக்கிறாங்களா என்று பார்த்து கொள்ளனும் அப்படி இல்லாவிட்டால் மத்தளம் கதிதான் நமக்கு ஏற்படும்... அனுபவஸ்த்தன் சொன்னால் கேட்டுகிடனும்

   Delete
  2. கர்ர்ர்ர் :)) ஹாஹாஹா ..  நிச்சயம் அன்போட புன்னகை கிடைக்கும் 

   Delete
 21. //குட்டீஸுக்கே தெரியாத ரகசியம்//

  ஹா.. ஹா.. உண்மையை சொல்லி நான் அதிரா இல்லை என்பதை நிரூபிச்சிட்டீங்க!

  நான் இதுவரையிலும் பொதுநல சேவையில் ஈடுபாட்டுடன் இருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அந்த உண்மை இங்கே தான் சொன்னேன் :) அந்த குட்டீஸுக்கு தெரியாது இல்லைன்னா நம்மை மதிப்பாங்களா :)நானா ரோட் க்ராஸ் பண்ணி விட்ட ஒரு குட்டி பயல் இப்போ அமெரிக்காவில் டாக்டர்னு கேள்விப்பட்டேன் :)

   Delete
  2. அது உண்மையில் மனசுக்கு சந்தோஷத்தை தரும் .எப்போலாம் நேரம் கிடைக்குதோ தொடர்ந்து செய்யுங்க 

   Delete
 22. உங்களது பதிவு எனக்கு அபுதாபியில் பழக்கமான ஜமைக்கா மேடம் நினைவுக்கு வந்தார்.

  வயது 60 இருக்கும் (இத்தகவல் அதிராவுக்கு பயந்து கொண்டு)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் அப்படி ஒருவரை தெரியுமா ..ஹ்ம்ம் பாவமா யிருந்தது இவர் நம்ம ஊரில் ஆங்கிலோ இந்தியர் இருப்பங்களே அதுபோல இருந்தார் .ஹாஹா :) எப்படியும் மாட்டிகிட்டீங்க அதிரா வந்து பிடிக்கப்போறார் :))

   Delete
 23. ஹலோ நான் போட்ட கமெண்ட்டில் பலவற்றை காணவில்லை அதை எந்த காக்கா தூக்கி போய்ருச்சு ஒரு வேலை ஸ்பெம் பாக்ஸில் உட்கார்ந்து இருக்கோ என்னவோ

  ReplyDelete
  Replies
  1. ட்ரூத் :) எல்லாம் பத்ரமாதான் இருக்கு :) காக்கா நம்ம ப்ரண்டு எடுத்து போனாலும் திரும்ப கொண்டாந்து வச்சிடும் :) அது எங்க ஜெஸி இங்கும் அங்கும் ஜம்பிட்டிருந்தா அதான் கம்பியூட்டரை ஷட் பண்ணிட்டு போனேன் இப்போ ரிலீஸ் பண்ணியாச்சு 

   Delete
 24. அனைத்தும் அருமை.
  தேவதை என்றால் உதவும் குணம் இல்லாமல் இருக்குமா?

  முருகராஜ் உங்களைப் பார்த்து தான் அந்த பாத்திரத்தை உருவாக்கி இருப்பார் என்பது உண்மைதான்.


  கென்யா ஆன்ட்டிக்கு உதவியது மகிழ்ச்சி.

  முன்பு பள்ளியில் மாறல் வகுப்பு உண்டு அதில் நீதி போதனைகள் உண்டு. இன்று என்ன செய்தீர்கள் உதவி ? யாருக்கு என்ற கேள்வி கேட்பார்கள். பெரும்பாலும் தெருவை கடக்க உதவி செய்தது , கீழே விழுந்த குழந்தைக்கு முதலுதவி செய்தது தான் சொல்வோம்.

  ஏன் வீட்டில் அம்மாவுக்கு உதவ மாட்டீர்களா? என்று ஆசிரியர் கேட்பார். காலை சீக்கிரம் எழுந்து வம்பு செய்யாமல் உணவை உண்டு பள்ளிக்கு சீக்கிரம் கிள்மபி வருவதே அவர்களுக்கு செய்யும் உதவிதானே! என்று நினைத்துக் கொள்வேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..ஹாஹா :) இது முருகதாஸுக்கு தெரிஞ்சா :)
   அது நம்ளளில் பெரும்பாலோர் உதவி செய்திருப்போம்க்கா ..சிலர் பயம் காரண்மாஒதுங்கி இருப்பாங்க .மற்றபடி எல்லாருக்கும் இக்குணமிருக்கும்க்கா .எங்களுக்கும் ஸ்கூலில் எம் ஐ .மாறல் இன்ஸ்ட்ரக்ஷன் காலை முதல் பீரியட் வரும் ..இப்படி நிறைய படிச்சிருக்கோம்.இப்போல்லாம் ஸ்கூல்ஸில் இருக்கன்னு தெரில .மிக்க நன்றி அக்கா 

   Delete
 25. மலர்கள் படம், அணில் படம் மிக அழகு.
  அணில் உங்கள் கை பையை சோதனை இடுவது அதன் நெருக்கத்தை காட்டுது.

  //நிறைய பாட்டி தாத்தாக்கள் என்னுடன் உரையாடுவதுண்டு .இறங்கும்போது நன்றி சொல்லிட்டு போவாங்க .//
  அவர்களுடன் உரையாட ஆள் இல்லாத போது தேவதை போல முகமலர சிரித்து பேசினாள் அவர்களுக்கு மன ஆறுதல்தானே!

  ஜமைக்கன் பெண்மணி கதை சோகம் அவருக்கு தேவதை போல ஆறுதல் சொன்னது மகிழ்ச்சி.

  அன்பு செய்யுங்கள், புன்னகை செய்வதால் அந்த நாளின் பொழுது நன்றாக இருக்கும் என்பது உண்மை.

  உங்கள் குணங்கள் வாழ்க!
  வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. அந்த அணில்கள் கூட்டமா இங்குள்ள பழைய கத்தீட்ரலில் இருக்காங்க அது ஹிஸ்டாரிக் பிளேஸ் என்பதால் விசிட்டர்ஸ் அதிகம் ..இவங்க எல்லா மக்களுடனும் நட்பாகி தோள் மேலெல்லாம் ஏறுவங்க :)
   மலர்கள் இங்கே வண்ணத்துப்பூச்சி பண்ணையில் பார்த்தேன் ..முழுதும் மூடி வைத்து வளர்க்கிறாங்க சூடா இருக்க .

   Delete
 26. மிகவும் அற்புதமான பதிவு. உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது, அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன்னருளன்றோ என்னும் கண்ணதாசன் வரிகளை நினைத்துக்கொள்கிறேன். உங்கள் சேவை உள்ளத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி கௌதமன் சார் 

   Delete
 27. //இது வண்ணத்துப்பூச்சி பண்ணையில் எடுத்தது ..//

  அல்லோ மிஸ்டர் வ.பூச்சி பாமில வண்ணத்திப்பூச்சியை வளர்க்காமல் செம்பருத்தியோ வளர்க்கிறார்கள் கர்ர்ர்ர்:)).. நீங்களும் இதுதான் வ.பூச்சி எனப் படம் பிடிச்சு வந்திருக்கிறீங்க ஆனா மீ நம்ப மாட்டேன்..

  ஆனாலும் இரு பூக்களும் ரொம்ப ஃபிறெஸா.. அழகா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ மியாவ் ..அவை அடுத்த பதிவில் போடறேன் :) இது பதிவில் சும்மா இணைத்தேன் அஞ்சு மாதிரின்னு சொல்ல ஹஆஹாஆ :)
   அதுங்க பளீர்னு பிரெஷா இருந்ததால்தான் இங்கே போட்டேன் மியாவ் செம அழகா இல்ல 

   Delete
 28. //அதுங்கள கைய பிடிச்சிட்டு அவங்க துணையுடன் நான் தைரியமா ரோட் க்ராஸ் பண்ணினது :) //

  ஆஆஆஆஆஆஆஆஅ இது சைல்ட் அபியூஸ்.. இப்பவே ஃபோன் பண்றேன்.. 1008 க்கு பூஸோ கொக்கோ:))

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ் :) இப்படி ஒரு கோணம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேன் ஹாஹாஆ :)) ஆமாம் மியாவ் நீங்க ஸ்கூல் போகும்போது எப்படி க்ராஸ் பண்ணீங்க அதை ஷேர் பண்ணுங்க ப்ளீச் :)

   Delete
  2. ஹா ஹா ஹா ஒரு கதை இருக்குது சொல்கிறேன் பின்பு:)..

   Delete
  3. //புன்னகை இளவரசி அதிரா:)//

   aaawwwww :) from when??

   Delete
 29. கென்யா ஆன்ரிக்கு செய்த உதவிக்கு மகிழ்ச்சி சந்தோசம் தான் ஆனா நீங்க வேர்க்குக்கு ரைம் க்குப் போக வேண்டாமோ...

  //அத்தோடு எதிர்பாராத மனதிருப்தியையும் சந்தோஷத்தையும் மூட்டையாய் கட்டிக்கொண்டு நான் வேலை செய்யுமிடம் நோக்கி நடந்தேன் .
  //

  அல்லோ ஓவரா இதுக்கெல்லாம் மூட்டை அளவில ஜந்தோசப்படக்கூடாது.. இன்னும் உங்கட பாங் எக்கவுண்டையும் குடுத்திருந்தால் மீ ஆப்பி ஆகியிருப்பேன் சரி விடுங்கோ..

  உதவி செய்யும் மனம் இருப்பினும், இப்படி சந்தர்ப்பம் நமக்கு அமையவும் வேண்டும் அஞ்சு.. எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் அமைவது குறைவு., உங்களுக்கு அமைஞ்சதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. ஆங் அதுதான் முக்கியமா அன்னிக்குப்பார்த்து நான் ஒரு மணி நேரம் சீக்கிரமாவே போய்ட்டேன் :) அதுவும் சீக்கிரமா போறோமேன்னு எங்க ஸ்டாப்பில் இறங்காம கடைசி ஸ்டாப்பில் இறங்கினதால்தான் ஆன்டியின் கஷ்டம் தெரிஞ்சது ..

   Delete
 30. //பிறகு நான் இறங்குமிடம் வந்ததும் தேவதை போல் தான் பேசுவதை கேட்டது தனக்கு ஆறுதலா இருந்தது என்று சொன்னார் ..//

  உண்மைதான் வயசானோருக்கு அதிகம் தேவையில்லை, கொஞ்ச நேரம் நாம் பேச மாட்டோமா எனத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனா அஞ்சு பல வயசானோருக்கு இங்கு உதவி செய்யப் போனாலும் பிடிக்காது .. தாம் ஸ்ரெடியாக இருக்கிறோம் என்பது போலவும் இருப்பினம் ஹா ஹா ஹா.

  //அதனால் எப்பவும் புன்னைகையுடன் உலாவுங்கள் :) //

  ஆஆவ்வ்வ்வ்வ் கொட் த ரைட்டில்:)) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. டைட்டில் கிடைச்சாச்சா :) நௌ ஸ்டார்ட் தி மூசிக் :)சிலர் நீங்க சொல்றதுபோல் அடம் தான் மியாவ் .ங்க ஆலயத்துக்கு ஒரு ரிட்டயர்டு vicar வருவார் .கம்யூனியன் நேரம் கூட தானே செய்யணும்னு அடம் .வயசு 85 இருக்கும் ..விட்டுத்தான் பிடிக்கணும் ..உதவி என்பதை விட பேசிட்டு போனா அதுவும் ஒரு சப்போர்ட் 

   Delete
 31. //உங்கள் எதிர்பார்ப்பில்லா புன்னகை இன்னொருவரின் நாளை உற்சாகப்படுத்தட்டும் //

  சிலரைப் பார்த்துச் சிரிச்சா லூஸ் என்கினமே அஞ்சு அப்போ மீ லூஸா?:)) மீ சிரிச்சது டப்பா?:)

  ReplyDelete
  Replies
  1. சே சே :) யார்சொன்னா ..இருங்க நான் ட்ரெயினிங் கொடுக்கறேன் அப்புறமா யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க :) அக்கவுண்ட்ல பீஸை போடுங்க முதல் லெசன்  அனுப்பறேன் 

   Delete
 32. ஆவ்வ்வ் அஞ்சு இது என்ன அதிராவின் ரெக்கார்ட் ஐ முறியடிச்சிட்டீங்க ட்றுத் உதவியால்.. இப்படி அடிக்கடி லீவு போடுங்கோ ட்றுத். இப்படி கொமண்ட்ஸ் பார்க்க அந்நாட்கள் ஞாபகம் வருகிறது. நிறைய பேர் மிஸ்ஸிங்.
  இங்கே இம்மாதிரியான ஆட்கள் நிறைய.. மனதில் நிறைய கவலைகள்,ஏக்கங்களோடும் இருக்காங்க. யாராவது ஆறுதலா பேசமாட்டாங்களா என.
  எங்களுக்கு வளர்ப்பிலேயே இவ்வுதவி செய்யும் குணத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். பஸ்ஸில் வயதானவர்கள் வந்தால் எழும்ப மாட்டார்கள். எங்களுக்கு அப்படி இருக்கமுடியாது. ஆனாலும் சில வயதானவர்கள் இருக்கமாட்டார்கள்.வீம்பு இருக்கு.
  அட...முறுக்குதாஸுக்கு கூட தெரிந்திருக்கு..ரஜினிதாத்தா நடிக்கும் அடுத்த படத்திலயும் ஏதாவது போட்டுவிடப்போறார். ஹா..ஹா..ஹா...
  ஆவ்வ்வ் செம்பருத்தி பூ அழகா இருக்கு. அணில்பிள்ளைக்கு பயமில்லாமல் வருகிறாரா. இனி அவங்களுக்கு உணவு தேடமுடியாது.குளிர்காலம். நாம வைப்பதை சாப்பிடுவாங்க. இங்கு இப்ப தொடர்மழை.. குருவிகள் எல்லாரும் நான் வைக்கும் தட்டை வந்து பார்ப்பாங்க. நானும் ஏமாற்றாமல் வைக்கிறேன்.
  உண்மையில் இப்படி யாருக்குகாவது நம்மால் ஆன உதவியை செய்தால் அன்று ஏற்படும் மனநிறைவுக்கு அளவே இல்லை. உங்க சேவை செய்யும் உள்ளத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அஞ்சு, அத்துடன் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ வாங்க ப்ரியா :) அது நேற்று ட்ரூத் ரிலாக்ஸ்டாக ஓய்வில் இருந்ததால் அதகளம் அட்டகாசம் செஞ்சிட்டார் /உண்மைதான் முந்தி எத்தனை கலாட்டா நம் பதிவுகளில் .பலர் காணவில்லை ..மாற்றத்துக்கு ஷாப் போயிட்டு வந்து பதில் தரேன் பிரியா 

   Delete
  2. ஹாஹாஆ வாங்க ப்ரியா :) அது நேற்று ட்ரூத் ரிலாக்ஸ்டாக ஓய்வில் இருந்ததால் அதகளம் அட்டகாசம் செஞ்சிட்டார் /உண்மைதான் முந்தி எத்தனை கலாட்டா நம் பதிவுகளில் .பலர் காணவில்லை ..மற்றத்துக்கு ஷாப் போயிட்டு வந்து பதில் தரேன் பிரியா 

   Delete
  3. @ ப்ரியா வர வர நீங்க ஒரு கடமையை மறக்கறீங்க :) அது பூனையை வாரி விட்றதுக்கு வரமாட்டேங்கறீங்க :)ரீசண்டா மேடம் திருதராஷ்டிரர்க்கு 100 மனைவின்னு சொல்லி மாட்டின ஸ்டோரி தெரியுமோ :)))))))))))
   ஹப்பா எல்லார்கிட்டயும் சொன்னா தான் ஆரஞ் ஜூஸ் குடிச்ச மாதிரி புத்துணர்வா இருக்கு எனக்கு :))

   Delete
  4. //எங்களுக்கு வளர்ப்பிலேயே இவ்வுதவி செய்யும் குணத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். பஸ்ஸில் வயதானவர்கள் வந்தால் எழும்ப மாட்டார்கள்//
   உண்மைதான் ப்ரியா ..ஜெர்மனிக்கு வந்த புதிதில் டாக்டர் கிட்ட போனப்போ ரிசப்ஷனில் கால்மேல் கால் போட்டு உக்கார்ந்திருந்தேன் யாரயுமில்லாததால். கொஞ்ச நேரத்தில் ஒரு பாட்டி வரவும் டபக்குனு கலாய் இறக்கினேன் ..பாட்டி உடனே டோட்ச்சில் கேட்டாரா கணவர்கிட்ட இவர் எக்ஸ்பிளேயின் பண்ணதும் இதுதான் எங்கள் நாட்டு வழக்கம்னு அவ்ளோ குஷி பாட்டிக்கு :) எதுக்கு சொல்றேன்னா .நம்ம ஊரில் பெரியோருக்கு மாறியதய் கொடுப்பதே நம் வழக்கம் .
   மிக்க நன்றி ப்ரியா விரிவான பின்னூட்டத்திற்கு 

   Delete
  5. ஹா..ஹா.. இது எப்ப நடந்தது.. 100 மனைவியாஆஆஆ...அதுவும் திருதராஷ்டிரருக்கு...ஆவ்வ்வ் மிஸ் பன்னிட்டேனே.. இப்படி தரமான சம்பவம் நடக்குதென்றா அது பூஸாரால்தான்..

   Delete
 33. ஏன்ஜெல் என்னும் பெயருக்கு ஏற்றார் போல் எத்தனை நல்ல மனது நம் ஏஞ்சலுக்கு! வாழ்க! வண்ணத்துப்பூச்சி பண்ணையில் எடுத்தது என்று பூக்களை மட்டும் போட்டிருக்கிறீர்களே, வண்ணத்து பூச்சிகளை நாங்கள்தான் வரைந்து கொள்ள வேண்டுமா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுக்கா :) இது பூக்களை மட்டும் போட்டேன் பட்டாம்பூச்சியும் வரும் விரைவில் அடுத்த பதிவில் :)
   மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்துக்கும் 

   Delete
 34. சகோதரி ஏஞ்சல் உங்களின் மனம், சேவை எல்லாமே பாராட்டிற்குரியது. அருமையான பணி செய்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்து மற்றும் கருத்துகளில் அது மிகவுமே பிரதிபலிப்பதையும் பார்த்திருக்கிறேன். தொடரட்டும் உங்கள் கனிவான கருணை சேவை. இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்றேன்றும் கிடைக்கும்!

  பூக்கள் அழகாக இருக்கின்றன.

  பாராட்டுகள் வாழ்த்துகள்!

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா ..நலம்தானே ..மிக்க நன்றி அண்ணா வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் ..இன்னும் படங்கள் விரைவில் வரும் 

   Delete
 35. பூக்கள் செமையா இருக்கு ஏஞ்சல்! ரொம்ப அழகு.

  நானும் ஒரு பாட்டியை இங்கு பேருந்தில் சந்தித்தென். அவருக்கே தெரியாமல் எதையோ பார்ப்பது போல் ஒரு ஃபோட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் அதைப் போடலாமா என்று தயக்கம். அவர் ஒரு மனநிலை கொஞ்சம் ஒரு அழுத்தத்தில் இருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தது. பேருந்தில் என் அருகில் உட்கார்ந்தார். மீதி பதிவில் இருக்கட்டும் இங்கே எழுதினால் பதிவு போல் ஆகிடும். இங்கு கென்யா ஆண்டி பற்றி வாசித்ததும் அழத் தொடங்கினார் என்றது எனக்கு அது நினைவு வந்துவிட்டது...

  இருங்க கென்யா ஆண்டி பார்த்துவிட்டு வருகிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் கீதா  படங்கள் இன்னும் இருக்கு விரைவில் வரும் :)
   சிலருக்கு சொல்லாம மனதுக்குள் வச்சிருக்கிறதால தான் அழுத்தம் ஆகுது ..free யா சொன்ன ரிலாக்ஸ் ஆகும் விரைவில் எழுதுங்க 

   Delete
 36. congrats GOOD SAMARITAN ஒரு புன்னகைக்கு விலையா என்ன

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் :) மிக்க நன்றி .அதானே காசா பணமா ..ஒரு புன்னகை அது நறுமணம்  வீசட்டும் 

   Delete
 37. அத்தோடு எதிர்பாராத மனதிருப்தியையும் சந்தோஷத்தையும் மூட்டையாய் கட்டிக்கொண்டு நான் வேலை செய்யுமிடம் நோக்கி நடந்தேன் .//

  இது இதுதான் ஏஞ்சல்!! நம்மை ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் இருக்க வைக்கும். ஒவ்வொரு நாளும் நாம் யாருக்கேனும் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு வேண்டிய தருணத்தில் உதவும் தருணம் நமக்குக் கிடைத்தால் அதுவே பெரிய ப்ளெஸ்ஸிங்க்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கே வெளிநாடுகளில் அன்பாய் அவர்கள் பேசுவதை கேட்பதே அவர்களுக்கு பெரிய உதவி கீதா .அதேதான் பெரிய பிளெஸ்ஸிங் ..மனத்திருப்தி அதுபோதும் 

   Delete
 38. .அவரது வளர்ப்பு பிள்ளைகள் அவருக்கு உணவு கூட தருவதில்லையாம் .பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அவரை அலைக்கழிக்கிறார்கள் .அதனால் சீக்கியர் கோவிலில் உணவை பெற்றுக்கொண்டு ஹாஸ்பிடல் ஏரியாவில் அமர்ந்து உணவை சாப்பிட போகின்றேன் என்றார் ..எத்தனை மனிதர்கள் எத்தினை குரூர குணங்கள் .பிறகு நான் இறங்குமிடம் வந்ததும் தேவதை போல் தான் பேசுவதை கேட்டது தனக்கு ஆறுதலா இருந்தது என்று சொன்னார் ..//

  "யெஸ் மை-ஹெர் நேம் இஸ் ஏஞ்சல்!!!!"

  பாவம் இல்லையா அவர். எப்படி இப்படி எல்லாம் செய்ய மனது வருகிறது சாப்பாடு கூடக் கொடுக்காமல் பணம் பிடுங்கிப் பேய்கள்..இப்படியான கதைகள் கேட்டால் மனம் வருந்திவிடுகிறது..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த பணம் பிடுங்கி பேய்கள் எக்கச்சக்கம் கீதா யிங்கே .பெரிய ஸ்டோரீஸ் இருக்கு பணம் பணம் மட்டுமே அவர்கள் குறி ..நான் நிறையபேரை பார்த்திருக்கேன் .ஒரு மினி மார்க்கெட் ஓனர் தகப்பனுக்கு பல் செக்கப்புக்கு பணம் பே பண்ண வேண்டியிருக்குன்னு ரிஷப்ஷனிஸ்ட் சொன்னதும் செக்கப் செய்யாம கூட்டிட்டு போய்ட்டான் !!

   Delete
  2. அடப் பாவி! கொடுமை ஏஞ்சல்!

   இங்கு சென்னையில் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் அப்படி உறவினர்களை (குழந்தை, கணவன், மனவி, அம்மா, அப்பா யாரானாலும் சரி) விட்டுட்டுப் போயிடுவாங்க அப்படிப்பட்டவங்களைக் காப்பாத்தி அவங்களுக்கு ரிஹேபிலிட்டேஷன் ஒருத்தங்க செஞ்சுட்டுருக்காங்க. முன்னாடி நான் யோகா க்ளாஸ் போய் அங்கு வகுப்பும் எடுத்தப்ப அவங்க பழக்கம். சுமதி ரமேஷ் அவங்க பெயர்.

   கீதா

   Delete
 39. எதுக்கு இதை சொல்கிறேன் என்றால் யாராவது ஒருவருக்கு நம்முடைய சிறு புன்னகை ஒரு சந்தோஷத்தை தரலாம் .அதனால் எப்பவும் புன்னைகையுடன் உலாவுங்கள் :) //

  யெஸ் அதே அதே அதே ஏஞ்சல்!! நான் இதை முழுவதும் டிட்டோ செய்வேன்! சிலர் நாம் ஸ்மைல் செஞ்சாலும் செய்ய மாட்டாங்க...நான் அதைக் கண்டு கொள்ளவே மாட்டேன்...ஹிஹிஹி...நாம் ஸ்மைல் செய்யும் போது முகத்தை வேறு பக்கமும் திருப்பிக் கொள்வார்கள்..நெவர் மைன்ட்!! நம் புன்னகை மாறாது!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது சிலருக்கு பயம் கீதா :)  நானா புன்னகைச்சிட்டு வணக்கம் சொல்லிட்டு போய்டுவேன் .அவங்க சொல்றாங்களானு கூட எதிர்பார்க்கக்கூடாது :) நம்ம வேலை be ஹாப்பி ஸ்ப்ரெட் ஹாப்பினஸ் 

   Delete
  2. டிட்டோ ஏஞ்சல்!!!

   கீதா

   Delete
 40. அது மனுஷரை பார்த்து மட்டுமில்லை எல்லா ஜீவராசியை பார்த்தும் புன்னகை வீசி செல்லுங்கள்//

  ஹைஃபைவ்!!!!!!

  கீதா

  ReplyDelete
 41. அடுத்த கமென்ட் அடித்ததை இங்கு போடும் போதுகரன்ட் போச்!!!

  உங்கள் எதிர்பார்ப்பில்லா புன்னகை இன்னொருவரின் நாளை உற்சாகப்படுத்தட்டும் .//

  அதே அதே அதே!!! இதற்கும் ஒரு ஹைஃபைவ்!!

  பரவால்லையே ஏஞ்சல் அணிலார் பக்கத்தில் வருகிறாரே!! அணிலார் அழகு!! க்யூட்டா புஷ்ன்னு இருக்காரே..இவர் சிப்மங்க் இல்லை என்று நினைக்கிறேன் கோடுகள் இல்லைதானே? ஸ்குரில் தான் இல்லையா..

  சென்னையில் வீட்டில் எத்தனையோ வரும் கொஞ்சினாலும் ஓடிவிடுவார்கள். ஆனால் இங்கு பங்களுரில் ஒரே ஒருவர் மட்டும், ஒரு பார்க்கில் அருகில் வந்தார் கொடுத்ததை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம்!! படம் எடுத்து வைத்திருக்கிறேன்..ரொம்பச் சின்னவர்!!

  வண்ணத்துப் பூச்சிகள் வருமா!!!?? எடுக்க முடிந்ததா ஏஞ்சல்?

  அனைத்தும் ரசித்தேன்!! உங்க அம்மா அப்பா தீர்க்கதரிசிகள் உங்களுக்குப் பெயர் சூட்டியவர்கள் என்ன பொருத்தமாக வைத்திருக்காங்க!!!

  பாராட்டுகள் வாழ்த்துகள் ஏஞ்சல்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இவர் கோடில்லா அணிலார் கீதா :) ஆனா செம ப்ரெண்ட்லி :)
   இங்கே தோட்டத்துக்கு வருவாங்க அணிலார் இப்பவே அவங்க உணவை குளிர் க்காலத்துக்கு ஒளிச்சு வைக்கிறாங்க :)பட்டாம்பூச்சிகள் வரும் சம்மரில்  .அந்த பூக்கள் எடுத்து பட்டாம்பூச்சி பண்ணையில் சூடா கவர் செஞ்ச இடம் அது அங்குமிங்கும் பறப்பாங்க .அழகா இருக்கும்.. மிக்க நன்றி கீதா பாராட்டுக்களுக்கு :)

   Delete
  2. அதான் ஆச்சரியம் அணிலார் இத்தனை ஃப்ரென்ட்லியா வந்துருக்காரே..

   ஹா ஹா ஒளிச்சு வைச்சுக்கறாங்க..// பின்ன பாவம் அப்ப அதுங்களுக்கு எல்லாமே பனியா தானே இருக்கும்

   ஓ படம் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்...

   பட்டாம் பூச்சி பறக்கறதே அழகுதான்...

   கீதா

   Delete
 42. செல்லங்கள் பற்றி ஒரு கருத்து போட்டேனே வந்ததா நு தெரியலைஏ நான் வாக்கிங்க் போகும் போது செல்லங்களிக் கொஞ்சினால் உடனே பக்கத்தில் வருவாங்க பிக்கி போடுவது பற்றி...சரி அப்புறம் வந்து பார்க்கிறேன் வந்துச்சான்னு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அது முன்பெல்லாம் தைரியமா லாப்டாப்பை திறந்து வச்சிட்டு கிச்சனுக்கும் லிவிங் ரூமுக்கு வந்து போவேன் :)இப்போ ஜெசியால் ஒவ்வொரு நேரம் மூடிட்டு போறேன் :)

   Delete
  2. ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   Delete

 43. ஹலோ போஸ்ட் போட்டுவிட்டு அதன் பின் அந்த போஸ்டை டெலீட் பண்ணிட்டீங்களா அல்லது உங்க ஜெஸி டெலீட் பண்ணிவிட்டதா?

  ReplyDelete
  Replies
  1. அது முடிக்கமுன்னே ஜெசி ஜம்ப் பண்ண கைதட்டுப்பட்டுது .

   Delete
 44. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

  என்று தலைப்பை வைத்துவிட்டீங்க அடுத்த இடுகைக்கு... ஆனால் என்ன எழுதறதுன்னு தெரியலையா?

  அப்படியே ப்ப்ளிஷ் பண்ணிட்டீங்க!

  அதிராவா இருந்தா ரெண்டு பூனைப்படம், காவிவந்த ஊசிக்குறிப்பு, வாட்சப்பில் வந்த நகைச்சுவைனு நிரப்பியிருப்பாங்க... ஹா. ஹா

  ReplyDelete
  Replies
  1. haahaa :) that was accidental ..if i dont take notice of jessie for a while she starts walking on my laptop :) ..haven't finished the post .will publish when i finish

   Delete
  2. நானும் பார்த்தேன் எடுத்துட்டீங்க போல ஏஞ்சல்...நேற்று எல்லாம் வரவே முடியலை தளம் பக்கம்...

   பார்த்தா போர்ட்ல உங்க இடுகை இருந்திச்சு
   இப்ப வந்து பார்த்தா காணலை சோ இங்கு வந்தேன்...இப்பத்தான் தெரியுது...

   அப்ப அடுத்த பதிவு அதுனு சொல்லுங்க..

   நான் இன்று பதிவு போட நினைத்து முடியலைப்பா...இன்னும் நிறைய வாசிக்கவே இருக்கு...

   கீதா

   Delete
 45. சிறு புன்னகை ஒரு சந்தோஷத்தை தரலாம் .அதனால் எப்பவும் புன்னைகையுடன் உலாவுங்கள் :) ..நிச்சியமாக


  சிரிக்கும் பூக்கள் , மகிழும் அணிலார் எல்லாம் அழகு ...


  எதிர்பார்ப்பு இல்லா அனுபவங்கள் தொடரட்டும் ..


  இந்த பதிவுக்கு நான் வரல ன்னு ...நேத்து போட்ட பதிவை delete பண்ணலாமா ...இது நியாயமா அஞ்சு ...நானும் first ன்னு கமெண்ட் எல்லாம் போட்டு ...


  ReplyDelete
  Replies
  1. இல்லப்பா இல்லப்பா அதை டிலீட் பண்ணலை ..அது எனக்கே தெரியாம பப்லிஷ் ஆகி ..இட்ஸ் இன் ட்ராப்ட் :)  எடிட் செய்து விரைவில் பப்லிஷ் பண்றேன் 

   Delete