அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/25/18

நினைவு ஜாடி /Memory Jar                                                                                கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் .நாங்க பரிசுப்பொருட்களை மிட்நைட் சர்வீஸ் போயிட்டு வந்த பிறகே பிரிப்போம் .இந்த பரிசை பிரித்ததும் எனக்கு மனதில் தோன்றியது நம்மூரில் ஆரஞ்மிட்டாய் பாட்டிலில் விற்பாங்களே அதுபோல தோணுச்சு :) பிறகு சரி இதை ஊறுகாய் போட யூஸ் பண்ணிக்கலாம்னு
கணக்குப்போட்டு முடிக்கிறதுக்குள்ள :)மகள் என்கிட்ட கேட்டா 
அம்மா இது என்ன தெரியுமா ??
நான் :) ஸ்வீட்ஸ் போடும் பாட்டில் என்றேன் .சிரித்தவாறு சொன்னாள் ,இல்லை மாம் இது பேர் மெமரி ஜார் ..ஒவ்வோர் வருஷமும் முதல் தேதி துவங்கி என்னெல்லாம் இன்ட்ரெஸ்டிங்கா நடக்குதோ அந்த சம்பவத்தை குட்டி தாளில் எழுதி தேதியிட்டு சுருட்டி உள்ளே போடணும் .நம்மை சிரிக்க வைத்த அழவைத்த ,இப்படி எல்லா சம்பவங்களையும் எழுதி உள்ளே போட்டுவிடனும் பிறகு ஆண்டு இறுதி 31 டிசம்பர் ஜாடியை திறந்து ஒவ்வொரு காகித சுருளை வாசித்து அந்த சம்பவங்களை நினைவு கூறணும் என்றாள் :)

         இது மகள் எழுதி சேமிக்கும் மெமரி ஜார் :) ஒரு ஆர்வத்தில் உள்ளே என்ன இருக்குனு மேலோட்டமா பார்த்ததில் :)

                                                                               
                                 
இது சமீபத்தில் லண்டன் சென்ற டிக்கட் .விக்ட்டோரியா ஸ்டேஷனில் என்று எழுதி இருந்தது :)
நான்கூட அன்னிக்கு வழுக்கி எங்கேயும் விழல்லியேன்னு நினைச்சேன் :) பிறகு எழுதியிருக்கா 
//A LADY WALKED THROUGH GATES WITHOUT INSERTING  TICKET //
A GENTLE MAN HELPED HER //
Ticket barriers உள்ளே டிக்கட்டை நுழைச்சாத்தான் கதவு திறக்கும் அது தெரியாம அந்த பெண்மணி நேரே நடக்க அலார்ம் அடிச்சது :)
உடனே பின்னாலிருந்த ஒருவர் அவருக்கு தனது  டிக்கட்டை போட கதவு திறந்தது .அதை எழுதியிருக்கா .
உள்ளே  மெமரி என்று நிறைய பிரிண்ட் செய்த தாள்கள் இருந்தது 
                                  அம்மாடியோவ் :) இது என் கையை கண்ணாடியில் வெட்டிக்கொண்ட நாள் :)  அன்றிரவு X ரே எடுத்தப்போ ஒரு ஸ்லிப் கொடுத்திருக்காங்க  .மகள் அதை எடுத்து அவங்கப்பாவை என் கை போல் வரைய சொல்லி  சுருட்டி பத்திரப்படுத்தியிருக்கா :)
கர்ர்ர்ர்ர் ..இது கணவருக்கு என் கையை எப்படி வரைஞ்சிருக்கார் பாருங்க ....
மற்றவற்றை பிரிச்சா இன்ட்ரெஸ்ட் போயிடும்னு மூடி வச்சிட்டேன் :)
                                                                ************************

சில நேரங்களில் நம்மை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே நாம் எல்லாரையும் கிண்டல் செஞ்சிகிட்டு இருப்போம் இது அப்படியான சம்பவம் :)

                                                                          


எதோ  எப்பவும் அதிராவை கிண்டலடிக்கறோமேன்னு தோணினதில் :) கணவருக்கு தமிழ் ஸ்பெல்லிங் டெஸ்ட் வைத்தேன் .அவருக்கு ழ /ள சுட்டு போட்டாலும் வராதுன்னு எனக்கு தெரியும் ,ஆகவே எப்படி எழுதறார்னு பார்த்தேன் :)

முதலில் ஈஸியான வார்த்தையை கொடுத்திட்டேன் போல .கரெக்ட்டா எழுதிட்டே வந்தார் :)
எனக்கு பொழுது போகணுமே அதனால் வண்ணத்துப்பூச்சி எழுத சொன்னேன் :) சக்ஸஸ் :) வெற்றி ஹாஆஹா :)


அடுத்தது ஒரு திருக்குறள் ஈசியா குடுத்திட்டேனோ !அதெப்படி :) விடக்கூடாதுன்னு 
யாகாவாராயினும் நாகாக்க குறளை எழுத சொன்னேன் :)
நல்ல காலம் துப்பார்க்கு துப்பாய அந்த நேரம் நினைவுக்கு வரலை .
ஹாஹாஆ :)
தமிழில் எழுதுவது இவருக்கு மறந்தே போயிருக்கு .இனிமே தினமும் இம்போசிஷன் கொடுக்கணும் :)

நீதி ..யாரையும் கிண்டல் கேலி செய்யுமுன் யோசிக்கணும் போல :)

சரி சரி :) முறைக்காதீங்க மியாவ் .இனிமே எப்பவாச்சும்தான் உங்களை கிண்டல் செய்வேன் :)

***********************************

82 comments:

 1. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊ:) என்னாதூஊ ஊறுகாய் ஜாடி கிறிஸ்மஸ் பிரசண்ட்டாக் குடுத்தவையோ கர்ர்ர்ர்ர்ர்:) எப்பவும் சாப்பாட்டு நினைப்புத்தான்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க மியாவ் .அது பார்க்க அப்படித்தானே இருக்கு

   Delete
 2. இப்படி ஒரு மெமெறி ஜாடி இருப்பது எனக்கும் தெரியாது அஞ்சு... பிள்ளைகளுக்குத்தான் இப்படி விதம் விதமா தெரியும்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :) அப்போ நான் நினைச்சதில் தப்பிலியே :) ஆமாம் மியாவ் .நமக்கு தெரியாததெல்லாம் இந்த பிள்ளைங்களுக்கு தெரியும்.புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்க

   Delete
 3. ///இது மகள் எழுதி சேமிக்கும் மெமரி ஜார் :) ஒரு ஆர்வத்தில் உள்ளே என்ன இருக்குனு மேலோட்டமா பார்த்ததில் :)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ஜொன்னனே ஹொஸ்பிட்டல்ல பக்கத்து றூமில கதைச்சதை ஒட்டுக் கேட்டது போதாதென இப்போ ஒளிச்சுப் படிச்சிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:) பத்து தோப்புக்கரணம் போடுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நான் முழுசும் படிக்கில .நல்லா பாருங்க ரெண்டுதான் படிச்சேன் மீதியை மூடிவைச்சிட்டேன்

   Delete
 4. ///இப்படி எல்லா சம்பவங்களையும் எழுதி உள்ளே போட்டுவிடனும் பிறகு ஆண்டு இறுதி 31 டிசம்பர் ஜாடியை திறந்து ஒவ்வொரு காகித சுருளை வாசித்து அந்த சம்பவங்களை நினைவு கூறணும் என்றாள் :)//

  இப்போ என்ன அவசரம் 7ம் மாதமே திறந்து படிச்சதுமில்லாமல் போஸ்ட் வேறு கர்ர்ர்ர்:) நீங்க கு கு வே தான்ன்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. கிகிக்கிக்கீ :) பின்னே எனக்கு ஒரு பதிவுக்கு கன்டென்ட் வேணுமே :)

   Delete
  2. /நீங்க கு கு வே தான்ன்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா//

   அ கு தானே வரும்?!! அதென்ன கு கு?

   Delete
  3. அது குறைமாதக் குழந்தை ஸ்ரீராம்:))

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரக்குடுக்கனு சொல்லிட்டார் ஸ்ரீராம் என்னை :)

   Delete
 5. ////கர்ர்ர்ர்ர் ..இது கணவருக்கு என் கையை எப்படி வரைஞ்சிருக்கார் பாருங்க .///

  கரெக்ட்டாத்தான் கீறியிருக்கிறார் விரல்கள் எல்லாம் வளைஞ்சிருக்கு:) நான் நினைச்சது கரீட்டூஊ:).. உடனே ஒரு சிக்கின் குருமா செய்து குடுங்கோ அஞ்சு:) ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :) ஒரு படம் முகப்புத்தகத்தில் ரவுண்ட் வந்ததே நினைவிருக்கா :) கணவன் மனைவியை உக்கார வச்சி படம் வரைவார் :) கன்னாபின்னன்னு ஸ்டிக் உருவம்போல :) மனைவி அது தெரியாம அழகா வரையரான்னு போஸ் கொடுப்பார் அந்த படம் தேடி போட நினைச்சேன் ஹாஹாஆ :)

   Delete
 6. வந்நாதி பூச்சி////
  ஹா ஹா ஹா சேவ் பண்ணிட்டேன்:) இது எனக்கு அடிக்கடி உதவும்:)

  ஒருவேளை ஏதும் புதுவகைப் பூச்டியாக இருந்திடப் போகுது ஹா ஹா ஹா:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) உங்களுக்குன்னே டெஸ்ட் வச்சேன் தெரியுமோ :) சேவ் இட் :)

   Delete
 7. ///யாகாவாராயினும் நாகாக்க குறளை எழுத சொன்னேன் :)
  நல்ல காலம் துப்பார்க்கு துப்பாய அந்த நேரம் நினைவுக்கு வரலை .///

  ஆண்டவா ஜேசுவே முடியல்ல என்னால:) ஏதோ திருக்குறள் எல்லாமே தெரிஞ்சவ போல என்னா ஒரு பில்டப்பூ:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :) டேபிள் மேலேறி சொல்லுங்க நீங்க 10 டைம்ஸ்   துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
   துப்பாய தூஉம் மழை

   Delete
  2. ஹா ஹா ஹா இது பிக்பொஸ் பார்த்ததிலிருந்து சொல்லிப் பார்க்கிறேன் தடுமாறுது கர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

   Delete
  3. ஹாஹா :) இதென்ன குறளுக்கு வந்த சோதனை :) பிக்பாசெல்லாம் திருக்குறள் solla வைக்கிறாங்களா ? நான் நடுவில் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன் அப்போ வந்ததா ?

   Delete
  4. என்னது பிக்பாஸ் எல்லாம் பாக்கீறீங்களா...... கெட்ட பொண்ணுங்க கெட்ட பொண்ணுங்க

   Delete
  5. இந்த திருக்குறளை விமானத்தில் வைச்சு சொல்லீடாதீங்க உங்களை அரெஸ்ட் பண்ணிடுவாங்க

   Delete
  6. //ஜேசுவே முடியல்ல என்னால:) ஏதோ திருக்குறள் எல்லாமே தெரிஞ்சவ போல// - அதிரா... உங்களுக்கும் குறள் நஹி மாலுமா? போட்டிருக்கிற குறள்களையெல்லாம் படிச்சிருந்தீங்கன்னா, அதில ஓராயிரம் தவறுகளைக் கண்டுபிடித்திருக்கலாமே. ஈழத்துல தவறுதலா 'டி' கொடுத்துட்டாங்களா இல்லை 'குறள்' வகுப்புக்கு வழக்கம்போல் மட்டம் போட்டுட்டீங்களா?

   Delete
  7. நெல்லைத்தமிழன் அது அவர் எழுதினது அதை அப்படியே நேர்மையா போட்டேன் .எனக்கு குறள் ஓரளவுக்கு தெரியும் :) ஆனா மியாவுக்கு தெரியாதே :) மேடம் மீனாட்சி பழம் பறிக்க போனதில் குறள் வகுப்பு கட் அடிச்சிட்டங்களாம்

   Delete
  8. ஹாஹாஹா :) மதுரை ட்ரூத் ,,அது நாங்க பிக் பாஸ் பார்க்கிறதே அவங்களை ஓட்டத்தான் ..பெரிசா ஆர்வமில்லை ..
   எதுக்கும் சொல்லி பார்க்கிறேன் உங்க பேரை சொல்லிட்டு துப்பார்க்கு குறளை

   Delete
 8. ///நீதி ..யாரையும் கிண்டல் கேலி செய்யுமுன் யோசிக்கணும் போல :)///

  எதுக்கும் ஒருக்கா தேம்ஸ் கரைக்கு வாங்கோ:) நான் உங்களுக்கு டமில் ஸ்பெலிங் ரெஸ்ட் வைக்கோணும்:)..

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் மியா என் மிஸ்டேக்க்லாம் சில்லி சில்லி :) அது அவசரத்தில் டைப்பும்போது வருவது :)

   Delete
 9. ///சரி சரி :) முறைக்காதீங்க மியாவ் .இனிமே எப்பவாச்சும்தான் உங்களை கிண்டல் செய்வேன் ///

  அப்போ காசிக்குப் போகலாம் வாங்கோ:).. தேடுறேன் தேடுறேன் எனக்கு ஆள் கிடைக்குதில்லையே கூட்டிப்போக:)..

  குட்டிப் போஸ்ட் எனினும் இன்றஸ்ரிங்கா இருக்கு கீப் இட் மேலே:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் .நிறைய போட்டு எனக்கே எங்கே எதை போட்டேன்னு நினைவுக்கு வர்ரதில்ல .அதான் சுருக்கிட்டேன் போஸ்டை .தாங்க்ஸ் தாங்க்ஸ் :)பாராட்டுக்கு

   Delete
 10. நல்ல வேளை யாரும் எனக்கு மெம்மரி ஜார் பரிசா தரலை ஒருவேளை தந்து அதில் நான் நான் பார்த்து பேசி பழகிய பெண்களைன் பெயர் அவர்கள் தந்த கிப்ட் இப்ப்படி எழுதி அந்த ஜாரில் போட்டு வைத்தால் என் மனைவி ஏஞ்சல் மாதிரி எடுத்து படிச்சிட்டா..... அப்பாடா நினைக்கவே மனசு பதறது

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் பரிசு 10 மெமரி ஜார்ஸ் :) இப்பவே எவ்ளோ செலவானாலும் அனுப்பி வைக்கிறேன் :)
   நாங்க எதிர்பார்த்தது மட்டும் நடந்தா :)) ஹாஹா :)

   Delete
 11. ஏஞ்சல் உங்க கணவரை அடுத்த தடவை டெஸ்ட் செய்யும் போது பெண்கள் பெயரை சொல்லி எழுதச் சொல்லுங்கள் எந்தெந்த பெயரை எல்லாம் சரியா எழுதுகிறார் என்று பார்த்து அந்த பெயருடைய ஆட்கள் அவரின் சர்க்கிளில் இருந்தால் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்,,,,

  ReplyDelete
  Replies
  1. துரை - உங்கள மாதிரி ஆட்கள்தான், மனைவி இந்த மாதிரி செக் பண்ண நினைத்தால், வேண்டுமென்றே தப்பு தப்பாக எழுதித் தப்பிக்கப் பார்ப்பார்கள். உங்க விஷயத்துல உங்க மனைவி, யார் யார் பெயரைத் தப்பா எழுதியிருக்கீங்களோ, அவங்க உங்க சர்க்கிளில் இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தணும். ஹா ஹா ஹா...

   நான் 5ம் வகுப்பு படித்தபோது, என்னுடன் இரண்டு நாட்டுக்கோட்டைச் செட்டியார் பசங்க படிச்சிட்டிருந்தாங்க. (ஏன் சொல்றேன்னா, அவங்க வீடுகளே பெரிய கோட்டை மாதிரி ரொம்பப் பெருசா இருக்கும், பணக்காரங்க). அவங்க அப்பாவுக்கு, தன் பசங்க பீடி குடிக்கிறாங்களோன்னு சந்தேகம் (ஒரு முறை அவங்க என்னை பெட்டிக் கடையிலிருந்து பீடி/சிகரெட் வாங்கித் தரச் சொன்னாங்க, காசை என்னிடம் கொடுத்து. காரணம், பெட்டிக் கடைக்காரர் அவங்க அப்பா கிட்ட சொல்லிடக்கூடாது என்பதால்). ஒரு நாள், அவங்க அப்பா, வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று அவங்க ரெண்டு பேர்ட்டயும் ஆளுக்கு ஒரு சிகரெட் குடுத்து, பத்த வச்சுக்கோங்க, பரவாயில்லை.. நம்ம குடும்பத்துல உள்ளதுதான்' என்று சொன்னாராம். அலெர்ட் ஆன ரெண்டுபேரும், வாய்ப்பக்கம் வைப்பதை வெளியேயும் வெளிப்பக்கம் இருக்கவேண்டியதை வாய்ப்பக்கமும் வைத்து (ஃபில்டர் சிகரெட்) பற்ற வைக்க முயற்சித்தாங்களாம். அதைப் பார்த்து அவங்க அப்பா, 'சரிதான் நம்ம பசங்களுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது, நம்மகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணவங்கதான் தவறாச் சொல்லியிருக்காங்க' என்று நினைத்துக்கொண்டாராம். மறுநாள் இருவரும் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னாங்க.

   Delete
  2. @ truth ..ஹா ஹா :) எங்க பூனைக்கு ஜெஸின்னு பெயர் வைச்சத்தில் ஒரு குட்டி டவுட் இருக்கு :)
   ஆனா மகளும் கூட்டணி அமைச்சு பெயர் வச்சா அதனால் விட்டுட்டேன் ..

   அவருக்கு அவர் அக்கா தங்கச்சி பேரை எழுத சொல்லி அவங்களுக்கு அதை போஸ்ட் பண்ணனும் நல்ல ஐடியா கொடுத்திருக்கிங்க :)

   Delete
  3. @நெல்லைத்தமிழன் இந்த விஷயம் உங்கப்பாக்கு தெரியுமா :)) அவங்களுக்கு உதவப்போய் நீங்க மாட்டியிருந்தா ?
   ஆனாலும் அந்த பசங்க செம விவரம் :)

   Delete


  4. நெல்லைத்தமிழன் என் மனைவிகிட்ட பெயரை தப்பு தப்பா எழுதிகாட்டினாலும் அல்லது சரியாக எழுதிகாட்டினாலும் அல்லது ஒன்றுமே எழுதவில்லை என்றாலும் எப்பொழுதும் கவனம் செலுத்தி கொண்டே இருப்பது மட்டுமல்லாமல் அப்ப அப்ப பூரிக்கட்டையால் தலையில் இரண்டு போடு போட்டுகிட்டு இருப்பார்கள் ஏனென்றால் தன்னை ஏமாற்றியது போல வேறு எந்த பெண்னையும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதால்...

   Delete
 12. கேட்டதில்லை மெமரி ஜார்! சம்பவங்கள் ருசிகரம்! உங்க இம்பொசிஷனும் பிரமாதம். முன்னெல்லாம் நானும் எல்லோருக்கும் கொடுத்துட்டிருந்தேன். யாரும் திருந்தலை! விட்டுட்டேன். ! இந்த அதிராவுக்குக் கொடுக்கக் கூடாதோ!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதாக்கா ..இங்கே வெளிநாட்டில் வந்துதான் இதெல்லாம் அதுவும் ஸ்கூல் போற பிள்ளைங்ககிட்டருந்து கத்துக்கிட்டேன் ..டைரியை டைரி கூட ஜர்னல் மாதிரி எழுதறாங்க ..போட்டோஸ் போட தனி ஸ்க்ராப் புக் இப்படி எத்தனை இருக்கு .
   நீங்களும் இம்போசிஷன் கொடுத்தீங்களா :) ஆனா அது ஒரு ஜாலி அனுபவம்தான் :))
   அதிராவுக்கு இம்போசிஷனா :)) கசடதபற யரல வழள எத்தனை தரம் கொடுத்தேன் தெரியுமா :))
   கடைசீல நானும் அவங்க வழிக்கே போய்ட்டேன் :)

   Delete
 13. இதுவும் நல்லாத்தான் இருக்கு டைரி போல....

  அது உங்கள் கையா ? நான் முள்கரண்டி'னு நினைச்சுட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கில்லர்ஜி ..நீங்களும் ட்ரை பண்ணுங்க ..ஆண்டு இறுதியில் வாசிக்க சுவராஸ்யமாயிருக்கும் :)

   என்னது முள் கரண்டியா !!! நல்ல வேளை பேப்பர் சின்னதா போச்சி இல்லைனா இவர் என்னை எப்படி வரைஜிருப்பார்னு கற்பனை கூட பண்ண முடியல

   Delete
 14. ஹா... ஹா... குறள் தப்பித்தது...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி சகோ :) ஆமாம் வள்ளுவரே வந்து மொத்துவார் இதுக்குமேல எழுத வைச்சா இவரை

   Delete
 15. நினைவு ஜாடி ...சூப்பர்


  நல்லா இருக்கும் ல எழுதி போட்டு கொஞ்ச நாள் கழித்து வாசிக்கும் போது...


  ஆஹா...தமிழ் விளையாடுது செம்ம

  இங்க பையன்னு க்கு ஸ்கூல் ல கிடையாது..வீட்டில் சொல்லி குடுத்தது தான் அவன் வாசிப்பை கேட்டால் அப்படி இருக்கும்...


  காமெடி யா..

  ReplyDelete
  Replies
  1. அனு .இதுமாதிரி நாமே க்ரியேட்டிவா செய்யலாம்பா .சாதா பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலையும் மேசன் ஜார்சையும் இப்படி நமக்கு ஏற்றாப்போல் மாற்றலாம் ..

   தமிழ் துள்ளி தான் விளையாடுது :)

   Delete
 16. //தமிழில் எழுதுவது இவருக்கு மறந்தே போயிருக்கு // - அவருக்கு தமிழ் எழுத மறந்துடுச்சுன்னு சொல்ற உங்களுக்கு குறளே மறந்துடுச்சே..

  யாகாவாராயினும் நா காக்க 'காவாக்கால்' சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. இந்த 'காவாக்கால்' எங்க போச்சு? அது அவர் தப்பு இல்லை. உங்க தப்பூ

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் 124357790]-][,24578 டைம்ஸ் ..
   நானா சொன்னதை அவர் சரியா காதில் வாங்கலை :) பாதியை முழுங்கிட்டார் ..இப்படினு தெரிஞ்சா ஆடியோ ரெக்கார்ட் செஞ்சி போட்டிருப்பேன் .

   Delete
 17. ஆதி பகவன் முதற்றே - அவர் பகவான் என்று நீங்கள் சொல்லியபடி எழுதியிருக்கிறார். சரிதான் நீங்க சொன்னது.

  நீதி ..யாரையும் கிண்டல் கேலி செய்யுமுன் யோசிக்கணும் போல :)

  ReplyDelete
  Replies
  1. அந்த காமெடியை ஏன் கேக்கறீங்க :) நானா பகவன் னு தான் சொன்னேன் இவர் இல்லையில்லை பகவன் வராது பகவான் தான் சரின்னு அடம் பிடிச்சார் :) நானும் அப்படியே விட்டுட்டேன் :))))))

   Delete
  2. நோஓஓஓஓஓ நெல்லைத்தமிழன் நம்பிடாதீங்க:) இவ தப்புத்தப்பாத்தான் சொல்லிப்போட்டு எங்களுக்கு மழுப்புறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 18. நினைவு ஜாடி அருமையா இருக்கு. மகளுக்குத் தெரியாம அதை எடுத்துப் படிக்கிறீங்க. அநியாயம் இல்லையோ?

  ReplyDelete
  Replies
  1. ஹையோ நெல்லை தமிழன் அவகிட்ட பெர்மிஷன் கேட்டுத்தான் எடுத்தேன் அதுவும் சுருட்டாம வச்சிருந்தத்த்தை மட்டுமே எடுத்தேன் .ஏற்கனவே பல் தேவதை போஸ்ட்டில் கூட அவ சேமிச்சு வச்ச பற்களை காட்ட வேணாம்னு சொன்னா அதனால் அந்த குட்டி பெட்டியை மட்டும் படம் எடுத்தேன் .அதோட இது குடும்ப ஜார் மூணு பேருமே எழுதி ;போடறோம்

   Delete
 19. அந்த பாட்டிலைப் பார்க்க பூண்டு மாத்திரை பாட்டில் மாதிரி இருக்கு. மெமரி ஜாரா? பொருத்தம்தான். நல்ல ஐடியா

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மெடிக்கல்ஷாப்பில் போலோ ,மின்டி ஜார் புளிமிட்டாய் ஜாடி நினைவுக்கு வந்தது

   Delete
 20. அம்மா பற்றிய கவலையில் மெமரி ஜாரில் அதையும் சேமித்திருக்கும் மகளின் கவலை. அதே கவலை ப்ளஸ் டென்ஷனில், பதற்றத்தில் உங்கள் கையை 'அப்படி' வரைந்திருக்கும் உங்கள் ஆத்துக்காரர்..! யாருக்கு பாசம் அதிகம்?!!!

  ReplyDelete
  Replies
  1. அதில் கவனிச்சீங்களா எங்க மகள் //drawn by dad //னு எழுதி வச்சிட்டா :))
   அவளுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் ஜூவுக்கு போனாலும் டிக்கட்ஸை கேட்டு வாங்கி வச்சிப்பா .இந்த குணம் அவள் அப்பா கிட்டருந்து .எனக்கு எல்லாம் மனசில் இருக்குமே :)

   //யாருக்கு பாசம் அதிகம்?!!!// haahaaa :) both

   Delete
  2. // அவளுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் ஜூவுக்கு போனாலும் டிக்கட்ஸை கேட்டு வாங்கி வச்சிப்பா .இந்த குணம் அவள் அப்பா கிட்டருந்து .//

   எண்பதுகளில் நான் பார்த்த திரைப் படங்களின் டிக்கெட்களை என் டைரியில் சேர்த்து வைத்திருந்தேன். ஏழெட்டு வருடங்கள் அப்படிச் செய்தபின்...   தூக்கிப்போட்டு விட்டேன்!

   Delete
  3. என் கணவர் நிறைய விமான டிக்கட்ஸ் வைச்சிருக்கார் !!கலெக்ஷனை பார்த்தா அதிர்ந்திருவீங்க :) இந்த சேர்த்து வைக்கிற பழக்கம் அவங்க குடும்பத்தில் எல்லாருக்குமே இருக்கு :) இறந்து போன அவங்கம்மா எப்பவோ அவங்க சகோதரிக்கு எழுத்தின (her sister ) கடிதத்தை எலலா ப்ரதர்ஸும் போட்டோகாப்பி வச்சிருக்காங்க :)))))))))))
   நானும் பலது சேர்த்து வைக்க காரணம் இவர் தான்

   Delete
 21. மகள் மட்டும்தான் எழுதி போட்டிருக்கிறாரா? நீங்கள் இருவரும் ஒன்றும் அதில் எழுதிப் போடவில்லையா? அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாட்டில்களா?!!

  ReplyDelete
  Replies
  1. நானும் எழுதி போட்டிருக்கேன் அதெல்லாம் ஆண்டு இறுதியில் தான் திறப்பேன் .இது குடும்ப ஜார் அதனால் மூவருமே எழுதறோம் :)

   இது மேலாக இருந்ததை பிளாக் போஸ்டுக்கு சும்மா எடுத்து போட்டேன் போட்டேன் :)

   Delete
 22. யாகாவாராயினும் குறள் பாடாத பாடு பட்டிருக்கிறது. சிறுவார்த்தைகள் ஓகே. அவர் வெளிநாட்டிலேயே வளர்ந்தவரோ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் 10 ஆம் வகுப்போடு தமிழ் படிக்கவுமில்லை எழுதவுமில்லை .இப்பவும் செய்திகள் ஆன்லைனில் வாசிப்பார் ஆனா அவரை பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் எழுத வைத்த அருமை பெருமை எனக்குதான் :)

   Delete
 23. நினைவு கூர்வது என்பதே சரி. ற வராது.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ் :) அப்போ நானே தப்பாதான் இவ்வளவு நாளும் எழுதறேன் போல :) இனிமே கூர்வது என்று எழுதறேன்

   Delete
  2. ஆஆஆஅவ்வ்வ் ஸ்ரீராம் அஞ்சுவுக்கு ர/ற பிரச்சனை இருக்கு:)) நீங்க ரகசியமா ஃபலோ பண்ணிப் பாருங்கோ.. விரலுக்கு விறல் எனத்தான் எழுதுவா ஹா ஹா ஹா:)) எங்கிட்டயேவா:)) மீ ஒளிச்சிருந்து வோச் பண்றேன் ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கை ஹா ஹா ஹா:))

   Delete
  3. கர்ர்ர் அது ஜிமெயில் காப்பி பேஸ்ட்டும்போது முதலில் வருவதை எடுக்கும்போது இப்படி நடக்குது

   Delete
  4. // மீ ஒளிச்சிருந்து வோச் பண்றேன் ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கை ஹா ஹா ஹா:)) /

   பாருங்க அதிரா.. நீங்க வேற தமிழ்ல டி ஆக்கும்!

   Delete
 24. நமக்கு நினைவுகளை சேமிக்க ஜாடி ஏதும் தேவை இல்லை அதுபாட்டுக்கு வந்து நினைவு படுத்தும் இப்போது வலைப்பக்கங்கள் உதவுகின்றன முன்பு டயரி எழுதும்வழக்கமிருந்தது

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் .இது சும்மா சம்பவங்களை மட்டும் திரும்பி பார்க்க ..குட்டி ஸ்லிப்பில் எழுதி ஆண்டிறுதில வாசிக்க சந்தோஷமா இருக்கும்

   Delete
 25. உங்கள் மகளுக்கு தோழி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு மெமரி ஜார்ஸ் விவரம் மிக அருமை.
  மகள் எழுதிய குறிப்புகள் மகளின் அன்புக்கு சான்று.
  குடும்ப ஜாரில் எழுதியதை மீண்டும் எடுத்து படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் தான்.
  உங்கள் கணவர் வரைந்த கை அவசரத்தில் வரைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

  கணவரை திருக்குறள் எழுத வைத்தது அருமை. பெருமை உங்களைத் தான் சேரும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா :) படம் உடனே வரையல்லா :) பொண்ணு டேட் போட்டிருக்கா பாருங்க :) வேணும்னே வரைஞ்சிருப்பார் :)) வெறுப்பேற்ற ..
   அடுத்தது ஆத்திசூடி எழுத வைக்க யோசனை :)

   Delete
 26. ஐ யம் ப்ரெசெண்ட்!! :) உங்க கைய இம்பூட்டு அயகா வரைஞ்சிருக்காரே...அதுக்காகவே அவரோட தமில;) மன்ச்சிர்லாம்!! கிக் கி !! மெமரி ஜார் ஐடியா நல்லா இருக்கு..சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா :) மஹி நல்லவேளை இன்னும் என்னைய வரைய சொன்னா எப்படி இருக்கும் படம்னு கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியலை :))கையே அதிர வைக்குதே :)

   மெமரி ஜார் நீங்களும் செய்யுங்களேன் மஹி :) செடி நடும்போது அப்டியே நடற கையை ஹப்பியை விட்டு வரைய சொல்லலாம் :)
   ஹாஹ்ஹா லண்டன் ஆர்ட்டிஸ்ட் வரைந்த கையை பார்த்தாச்சு அப்படியே அமெரிக்க ஆர்டிஸ்டின் திறமையையும் பார்க்கா ஆசை :)

   Delete
 27. இந்த பதிவு தாவி போயிட்டுதே.....
  மெமரி ஜார் பார்த்ததுதாம் ஞாபகம் வருது. பழைய வீட்டில் வைத்தி எழுதி போட்டவர் மகன். பின் இப்போ இல்லை. புது விடயங்கள் இங்கு தான் தெரியவந்திருக்கு.
  ஆனா இங்கு மெமரி ஜார் இல்லாமல், ஒரு பாக்ஸ் நிறைய கணவர் ப்ளைட் டிக்கெட் போடிங் கார்ட்ஸ் என வந்ததிலிருந்து அத்தோடு டயரி என சேர்த்து வைத்திருக்கார். (கூடவே பழைய லெட்டர்ஸ்,கார்ட்ஸ்.)
  இனி ஒவ்வொருநாளும் ட்ரெயினிங் தான் போல..ஹா..ஹா.. உங்க கணவர் எழுத்து அழகா இருக்கு.
  ஆனா உங்க மகள் நல்லபிள்ளை. வரைந்தது அப்பா என எழுதிட்டா. இப்படி செய்து பின் வாசிக்கும்போது ஒரு சந்தோஷம்தான்.

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு நோட்டிபிகேஷன் லேட்டாதான் காட்டுது ப்ரியா ..
   ஆமா ஜேர்மனிய பழங்கால vintage treasure chest ஒன்னு வாங்கி இவரும் சேர்த்தார் இங்கே அதுவும் பத்திரமா யிருக்கு :)
   மகனும் சேர்ப்பாரா ! இங்கே எல்லா பிள்ளைகளும் செய்யறாங்க ..
   ஹாஹாஹா அவர் கையெழுத்து முத்துமுத்தா இருக்கும் தமிழ் இங்கிலிஷ் டொச் எல்லாத்தையும் ஸ்டைலிஷா எழுதுவார் ..
   ட்ரெயினிங் தொடரலாம் :)

   இல்லை மகளுக்கு இவர் வரைஞ்சு கையை பார்த்து சிரிப்பு வந்தே //அப்பா வரைந்ததுன்னு //எழுதிட்டா :

   Delete
 28. உங்கள் மகளுக்கு கிடைத்த மெமரி ஜார் சூப்பர்! நான் என் கணவருக்கு பரிசளித்து, அதில் முக்கிய நிகழ்வுகளை எழுதிப் போடச் சொல்கிறேன். வீட்டில் நடக்கும் பெரும்பான்மையான விஷயங்களை மறந்து விடுகிறார். நான் நினைவூட்டினால் என்னுடைய கற்பனை என்று வேறு சொல்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்கா விடாதீங்க :) ஆனா நகை கிஃப்ட் கொடுத்ததை ரசீதோட எழுதி போட்டா அதை மட்டும் எடுத்திடுங்க :)

   Delete
  2. அடடா! இங்கேயும் அதே கதை தான் பானுமதி. இதுக்காக நான் E.R.C. class எல்லாம் எடுக்க வேண்டி இருக்கும். :)))))))

   Delete
  3. //ஆனா நகை கிஃப்ட் கொடுத்ததை ரசீதோட எழுதி போட்டா அதை மட்டும் எடுத்திடுங்க :)// அப்படி எல்லாம் இவருக்கு எதுவும் தெரியாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ப்ளாஸ்டிக் டப்பாவோ, டப்போ, கிண்ணமோ புதுசா டிசைனில் வந்திருக்கும். வாங்கிட்டு வந்துட்டு என் கிட்டே வாங்கியும் கட்டிப்பார்! :))))))

   Delete
  4. இல்லக்கா:) receipt மெமரி ஜாரில் பார்த்தா திரும்ப அதே பரிசு கிடைக்காம போய்டுமே :))))))
   எங்க வீட்லயும் இதே கதை ஆனா தக்காளி வெங்காயம் உருளை இதெல்லாம் மீண்டும்மீண்டும் வரும்

   Delete
  5. மறதிக்கு மொத்த குத்தகை இவரும் அதுக்கு ஆப்போஸிட்டா வல்லாரை எபெக்டில் நானும் இருப்பது பல நேரம் எனக்கு சாதகமே .ஆனால் பொண்ணு எந்த வகுப்பில் படிக்கிறா என்கிறதையே மறந்து மாற்றி சொல்றார் :)

   Delete
 29. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் திருக்குறள் டிக்டேஷனா போடுவீர்கள்? பாவம் திருக்குறள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) இல்லக்கா ..எந்த அளவு எழுதறார்னு சும்மா செக் பண்ணிப்பார்த்தேன் ஆனாலும் அக்செப்ட் செய்ய மாட்டேங்கிறாரே
   பகவன் இல்லை பகவான் தான்னு சொல்றார் :)

   Delete
 30. மெமரி கேள்விப்படாத ஒன்றாய் இருக்கிறது,,/

  ReplyDelete