அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/29/18

அவள் பறந்து போனாளே :)

மனதை அரித்த பாதித்த  எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி  எழுதலாம்னு  நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்டு மனசுக்குள் பதிவுகள் பற்றி இன்கிபிங்கி பாங்கி போட்டுக்கிட்டிருக்கும்போது :)  ஜன்னல் வழியே பார்வையை திருப்பினேன் .அங்கே ஒரு புறா செல்லம் பக்கத்துக்கு வீட்டு பின் கூரை மேலமர்ந்து எதோ தலையை அசைத்து அசைத்து எதையோ சொல்ல முற்பட்டுக்கொண்டிருந்தது.
                                                                                         


.ஒருவேளை கடும் வெயிலால் பசியோ என்னமோன்னு நினைத்து வீட்டில் இருக்கும் பறவை  உணவை கையில் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றேன் .அங்கே எப்போதுமில்லாமல் ஆச்சர்யமா  குண்டு பிரபு தரையில் அமர்ந்து மீன் குளத்தில் எதையோ உற்று பார்த்துக்கொண்டிருந்தான் .அப்படி அவன் என்னத்தை பார்க்கிறான் என்று திரும்பினா !! அது சாம்பல் நிறத்தில் ஒரு சிறு பூங்குஞ்சு குட்டி பேபி புறா தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கு !! உடனே அப்படியே அள்ளி கொண்டு வந்தேன் குழந்தையை .அந்த குழந்தையின் அம்மா தான் கூரையில் அமர்ந்து தன்  குழந்தை பூனை வாயில் மாட்டிக்கொள்ளுமோவென தவித்துக்கொண்டிருந்தது .இப்போ நான்  தூக்கியது பார்த்ததும் எங்க வீட்டு கூரைக்கு ஷிப்ட் ஆகியது அம்மா புறா :) இன்னும் அதே படபடப்புடன் 


வீட்டுக்குள் கொண்டுவந்து டவலில் துடைத்து மகள் மடியில் :)

                                               உர்ரென கோபத்துடன் 
                                                                           
     புறாக்களை இப்படி அழகா பிடிக்க வேண்டும் 
     இல்லைன்னா அதுங்க உடம்புக்கு வலிக்கும் 
                                                                கூகிள் படம்      
இந்த புறாக்குஞ்சுகள் எப்பவும் இப்படித்தான் கிட்ட கையை கொண்டுபோனா இறக்கையால் அடிக்கும் :) எங்க வீட்டு அனுபவம் .கிட்டத்தட்ட 50-60 ஜோடி புறாக்கள் இருந்தன எங்க சென்னை வீட்டில் .
ஒவ்வொரு புறாவும் முட்டையிட்டு குஞ்சுகளை கொண்டுவரும் சிலநேரம் சில புறாக்குஞ்சுகள் எல்லார்கிட்டயும் சென்று சாப்பாடு ஊட்டிப்பாங்க .அதுங்களை தொட்டில் குழந்தைனு கேலி செய்வோம் .கொஞ்சூண்டு முடி லேசா மொட்டைத்தலை பெரிய தொப்பை வயிற்றுடன் இந்த புறா குஞ்சுகள் உக்காரும் அழகே தனி :) சரி இப்போ லண்டன் வரேன் :) 

கொஞ்சம் ஈரம் காய்ந்ததும் மீண்டும் தோட்டத்துக்கு கொண்டு சென்றேன் .அந்த அம்மா புறா அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருக்கு .பாவமா இருந்தது .பிறகு மகளின்ரூம் ஜன்னல் அருகே கொண்டு செல்ல மெதுவா எங்கள் கூரையின் மேல் வந்தமர்ந்தது தாய் புறா .நான் மெதுவா கூரையின் ஓரத்தில் குட்டியை விட்டேன் சடாரென கூரையில் இருந்து அம்மா எங்கள் பக்கம் வந்துவிட்டாள் .இந்த குஞ்சு குடுகுடுன்னு கீச்சிட்டு கூரை மீது நடந்து அம்மாகிட்ட போயிடுச்சி அந்த காட்சியை விவரிக்க வார்த்தையில்லை .மகளின் போனில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில படங்களை எடுத்தேன் அப்போ இரவு 9:45 .
                                                                                                        அம்மாவை பார்த்ததும் ஓடுறா குழந்தை              
                                                                                

                                      என்னதான் பேசிக்கறாங்களோ 

                                அம்மாவுடன் செல்லக்கொஞ்சல் .காண கண் 
                                    கோடி வேண்டும் :)

                                   அம்மா அவங்கதான் என்னை தண்ணியிலருந்து 
                                           காப்பாற்றினாங்கன்னு சொல்லுதோ !
                                                                         


இத்தனை நேரமும் எங்க வீட்டு குட்டி சாத்தான்களை எங்கள் பெட்ரூமில் அடைத்து வைத்து விட்டோம் .இதில் ஒரு விஷயத்தை மறந்து தொலைத்தோம் ஆவலுடன் இன்னொரு க்ளிக் எடுக்கும்போது கூரையின் அம்மாவுடன் கொஞ்சிக்கொண்டிருந்த புறா குஞ்சு திடீரென என்னை நோக்கி கூரை மேல் நடந்து வர (ஒரு வேளை தாங்க்ஸ் சொல்ல வந்திருக்குமோ !!)  அந்த அடுத்த பக்கமிருந்து ஒரு கால் பதுங்கி வர சடாரென பாய்ந்து அடித்தது புறாக்களை . ஆஆ அது மூன்றாவது வீட்டு ஜூடியின் பூனை !! ஒரு நொடி இதயம் நின்ற பீலிங் எனக்கு வேகமா மகளையும் கணவரையும் அடுத்த வீட்டு தோட்டத்துக்கு அனுப்பி பார்க்க சொன்னேன் .

                                                                                      


அங்கே பயந்து மூலையில் நடுங்கியவாறு குட்டி பாப்பா !
இப்போ அம்மா புறவம் பயத்தில் பறந்து விட்டாள் .மீண்டும் புறாக்குஞ்சை  வீட்டுக்கு கொண்டு வந்து பாதுகாப்பான ஜெஸியின் கூடைக்குள்  வைத்து ஹாலில் வைத்து கதவை சாத்தி  விட்டோம் .
                                                                                 

            வேட்டை யாடும் முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஜெஸி 
                                                                                    
                                                           கதவுக்கு அடுத்தப்பக்கம் :)

இரவு முழுதும் அந்த புறா அம்மாவுக்கு தூக்கம் வந்திருக்குமோ தெரில .காலை 7 மணிக்கு தோட்டத்துக்கு போனப்போ 

                                                                                   
அங்கே கூரை ஆன்டென்னாவில் உட்க்கார்ந்திருந்தா !!.எனக்கு பாவமா இருந்தது .மீண்டும் காலை முதல் எங்க வீட்டு குட்டிப்பிசாசுகள் அட்டகாசம் .ரெண்டு பேரும் என் யோசனைகளை மோப்பம் பிடித்தாற்போல் வேண்டுமென்றே சோலார் பேனல் கீழே ஒளிஞ்சிருந்தாங்க :) சாமியை வேண்டிக்கிட்டு ஒருவழியா ரெண்டையும் பிடிச்சி வேற இடத்தில போட்டு பிறகு சரியா 12 மணிக்கு அந்த கூண்டை கூரை பக்கமா வைத்தேன் .உள்ளிருந்தே பறக்க துடிக்குது பேபி :) அப்புறம் மெதுவா கதவை திறக்க ஒரே டேக் இல் விர்ரென  பறந்துட்டா /டான் :) லக்கி .ஓவர் நைட்டில் பெயர்சூட்டுவிழாவெல்லாம் நடத்திட்டோமே நாங்க :)
 இந்த லக்கி ..பெயர் காரணம் என் கண்ணில் பட்டு ரெண்டு வெளி பூஸார்களின் வாய்க்கு தப்பியதால் இந்த நேம் வச்சா மகள் .
இந்த ஸ்டேஜில் புறா குஞ்சுகளை SQUAD என்று அழைப்பார்கள் .அப்பா அம்மாவுடன் பறக்க எத்தனிக்கும்போது அவசரத்தில் மரத்தில் இருந்து விழுந்திருக்கு குழந்தை .எப்படியோ பத்திரமா குழந்தையை அம்மாவுடன் சேர்த்தாச்சு :) .ஆனாலும் நேற்றைய அந்த தாயின் தவிப்பு இன்னும் கண்ணுக்குளேயே இருக்கு எனக்கு .
                                                             
                                                      **************************


                                                            

139 comments:

 1. //பக்கத்துக்கு வீட்டு பின் கூரை மேலமர்ந்து எதோ தலையை அசைத்து அசைத்து எதையோ சொல்ல முற்பட்டுக்கொண்டிருந்தது.//

  என்ன ஒரு இலக்கியத்தனமான ஆரம்பம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) இன்னிக்கு பூனைக்கு தாங்கவே முடியாது :) நீங்க முதல் வந்திட்டீங்க .

   ///
   என்ன ஒரு இலக்கியத்தனமான ஆரம்பம்!//   ஹாஹ்ஹ பாருங்களேன் ஒரு நாள் ஒரு கலப்பு வார்த்தை கூட இல்லாம ஒரு பதிவை எழுத்து எல்லாரையும் மயக்கம்போட வைக்கிறேன் :)

   Delete
 2. பூனைகள் நீந்தாதோ? அதுவரை புறாவை விட்டுவைத்த குண்டு பிரபுவின் பெருந்தன்மை!

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்னமோ அவன் சந்தர்ப்பத்துக்காக வெயிட் பண்ணியிருந்த போலிருந்தது .பூனைகள் புலியின் குணம் கொண்டவை ஆனால் புலியைவிட திருட்டு குணம் அதிகம் எப்போ எங்கிருந்து அட்டாக் செய்யும்தனே சொல்ல முடியாது .
   அவனுக்கு பெருந்தன்மைலாம் இருக்காது கொஞ்சம் ஓவர் வெயிட் :) உடம்பை தூக்கி ஓட கஷ்டம் :) அந்த நேரம் எங்க வீட்டு டெவில்ஸ் உள்ளே தூக்கத்தில் இல்லைனா சமபந்தி போஜனம் நடந்திருக்கும் :)

   Delete
 3. //இத்தனை நேரமும் எங்க வீட்டு குட்டி சாத்தான்களை எங்கள் பெட்ரூமில் அடைத்து வைத்து விட்டோம் //

  ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஊரில் நாங்க கிளி புறா பூனைகள் வளர்த்திருக்கோம் ஆனா அந்த பூனைகள் ஒரு தடவை கூட எங்க வீட்டு பறவைகளை நெருங்கினதில்லை .# ஆனா ஜெசி அண்ட் ப்ரண்ட்ஸ் கூட்டமே பெர்ட்ஸ் பிரியர்கள் :)

   Delete
 4. புறாவைக்காத்த புண்ணியவதி! வாழ்க..

  அவங்க அம்மாவுக்கு நன்றி சொல்ல வார்த்தையே வந்திருக்காது!

  ReplyDelete
  Replies
  1. பாவம் ஸ்ரீராம் அந்த தாய் பட்ட வேதனை .தன் குழந்தை பூனை வாயில் மாட்டிக்குமோ இல்லை நீரில் மூழ்குமோன்னு தவியா தவிச்சது இன்னும் நினைக்க கஷ்டமா இருக்கு

   Delete
 5. எவ்வளவு பொறுமையாக படம் எடுத்து இருகிறீர்கள் சபாஷ்.

  பறவைகளில் புறாவை யாரும் கொஞ்சலாம் அருவருப்பு தோன்றாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி .அது பப்பில் கூரை மேல் எடுத்து எல்லாமே என் மகள் எடுத்தா .அந்ததாயும் சேயும் சேரும் காட்சி பார்க்க அழகோ அழகு .நான் முழுமையா அனைத்தையும் காட்சிப்படுத்தலை ஒரு சந்தர்ப்பத்தில் ஊட்டியும் விட்டது தாய் குழந்தைக்கு .

   Delete
  2. புறாக்களுக்கு பித்தப்பை இல்லை .உணவு உட்கொண்டா புளிக்காததால் அதை பாலாக்கி குழந்தைக்கு ஊட்டுமாம் அதனால்தான் அவற்றை தூய்மையின் சின்னமா சமாதான தூதுவரா சொல்றாங்க .

   Delete
  3. புதிய தகவல்.

   Delete
  4. இதை ஒரு தாத்தா சொன்னார்க்கா எனக்கு :) எங்க வீட்டுல நிறைய புறா இருந்தது ஆனா நானாக விற்கவோ கொடுக்கவோ மாட்டொம் .தாத்தா சொன்னார் பலர் தேவையற்ற காரணத்துக்கு புறா கேப்பாங்க அதை தரக்கூடாது அது மிகவும் அப்பழுக்கற்றது crop regurgitation
   செய்வது புறாக்கள் மட்டுமேனு

   Delete
 6. முதல்படம் சமாதானப்புறாவை பறக்க விடுகிறீர்களோ...?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா இல்லை :) சரியான கிளிப் ஆர்ட் கிடைக்கலை அதான் அந்த படத்தை தேர்ந்தெடுத்தேன்

   Delete
 7. ஏதோ.. திகில் படம் பார்த்தாற் போல இருக்கு!...

  நல்லவேளை.. தாயும் மகளும் தப்பித்தார்களே!..
  அந்தமட்டில் சந்தோஷம்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை அண்ணா :)ஆமாம் தாயும் மகளும் தப்பித்து .மகளை மறுநாள் பறக்க விடும்வரை எனக்கு தில் திகில் அனுபவம்தான் :)

   Delete
 8. முதல் பாராவை படிக்கும் போது மிக அழகாக ஆரம்பித்து இருந்தது பிடித்து இருந்தது அதை பாராட்டலாம் என்று கருத்து பகுதிக்கு வந்தால் ஸ்ரீராம் எனக்கு முன்னால் முந்தி என்ன ஒரு இலக்கியத்தனமான ஆரம்பம்! என்று கருத்து இட்டு இருந்தார்.

  அதன் பின் எனக்கு உங்களை பாராட்ட மனசு இல்லை... காரணம் நானும் உங்களை பாராட்டி அதன் பின் வருபவர்களும் பாராட்டினால் அதன் பின் எல்லாமே இலக்கியமாக எழுத ஆரம்பிச்சு இயற்கையாக உங்கள் மனதில் இருப்பதை சொல்லும் வழக்கம் போய்விடுமோ என்று நினைத்ததால் பாராட்டாமல் செல்லுகிறேன்...

  ஆனால் புறாவை நேசித்து பாதுக்காத்து அனுப்பிய உங்களின் அன்புக்கு இரக்க உணர்வுக்கு என் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் :) கர்ர்ர் மனசில் பாராட்டணும்னு தோணுச்சுனா உடனே பாராட்டலைன்னா உடம்பு வெயிட் கூடிடும் :) அதிரவை பாருங்க அதான் எவ்ளோ நடந்தாலும் வெயிட் ஏறுமுகமாவே இருக்கு :)

   இலக்கியமா ? நானா :) நமக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராதே :) டோன்ட் worry :)

   புறாவை மற்றும் எல்லா ஜீவராசியையும் ஆபத்திலிருந்து காப்பாற்றத்தானே நம்மை கடவுள் படைச்சிருக்கார்.இது நம்மாலான சின்ன ஹெல்ப் சின்ன ஜீவன்களுக்கு .இன்னிக்கு காலைல ஜீசஸ் லக்கியை பத்திரமா அம்மாவுடன் சேர்க்க உதவுங்கன்னு ப்ரே பண்ணேன் அந்நேரம் குபீர்னு சிரிக்கிறார் கணவர் .இதெல்லாம் கடவுள் வேலையான்னு ?
   அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனா லக்கி அழகா பறந்திடுச்சே :) ப்ரேயருக்கு அப்புறம் :)

   Delete
  2. புறாவை மற்றும் எல்லா ஜீவராசியையும் ஆபத்திலிருந்து காப்பாற்றத்தானே நம்மை கடவுள் படைச்சிருக்கார்.இது நம்மாலான சின்ன ஹெல்ப் சின்ன ஜீவன்களுக்கு//

   யெஸ் இதை அப்படியே டிட்டோ செய்யறேன்...ஏஞ்சல்...முடிஞ்ச அளவு முயற்சி செய்யலாமே...எங்க வீடுல அணில், புறா, வொவ்வால், பூஸார், ஆமை, பைரவர்/வி எல்லாம் ....ஏன் எலி கூட!!!!! ஹா ஹா ஹா

   நானும் ப்ரே பண்ணுவேன் அதுங்க எங்க இருந்தாலும் வாழ்கனு!

   கீதா

   Delete
  3. ஹலோ எங்க வீட்டு பக்கம் பாம்பும் கரடிகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன... இறைவன் படைத்த அந்த ஜீவராசிகளை காப்பாற்ற வாருங்களேன்

   Delete
  4. ஹை 5 கீதா :) நம் இருவரின் சிந்தனைகள் எப்பவும் ஒன்றுதானே :)

   Delete
  5. உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேனா தெரில ஆனா நான் pg முடிச்சிட்டு ஹையர் ஸ்டடீஸுக்கு அப்ளை பண்ணும்போது டார்ஜீலிங்கில் கரடி கன்சர்வேஷனுக்கு அப்ளிகேஷன் போட்டேன் ப்ப்ச் ..ஹிந்தி தெரியாததால் ரிஜெக்டட் அண்ட் கரடிகள் மிஸ்ட் மீ :)
   இல்லைனா இந்தியாவின் ஜென் குடால் ஆகிருப்பேனாக்கும்
   நாம தொல்லை தராவரைக்கும் கரடியோ பாம்பு நம்கிட்ட வராது .

   வேணும்னா டிக்கட் போடுங்க வந்து கரடியை ப்ரண்டாக்கி காட்டறேன் :)

   Delete

 9. பறவையினங்கள் என்றாலே எங்களுக்கு அலர்ஜி

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) :) எங்க வீட்டில் ஊரில் புறா கோழி எல்லாம் இருந்தது ..எனக்கு விலங்கு பறவை நோ அலர்ஜி :)

   Delete
 10. ஆஆஆஆஆஆஆஆஆ நானில்லாத நேரம் பார்த்துப் புறாக் கதையோ? இதென்ன இது? என்ன ஆச்சு... அதிரா ஊர் சுத்தப் போன அன்று பார்த்து புறாக்கதை சொல்றா அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நில்லுங்க வாறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஹையோ யாரவது பிடிங்க என் பிளாக் ஒரு பக்கமா சாயுது இந்த பூனையால் :)
   வாங்க மியாவ் வாங்க ..ஸ்கூல் ஹாலிடேஸ் ஆரம்பிச்சாச்சா உங்களுக்கு .எங்களுக்கு இன்னும் 10 நாளில் .
   நேற்று நடந்தஉ இன்று பகல் வரை நடந்த சம்பவம் பத்திரமா பறக்க விட்டதும் இங்கே போஸ்ட்டா போட்டேன் :)

   Delete
  2. இதைத்தான் நேட்த்து எபில சொல்லிருந்தீங்க இல்லையா ஏஞ்சல்?!!!

   கீதா

   Delete
 11. ///மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை///

  ஹையோ ஆண்டவா பில்டப்பூத் தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈ ஏதோ நீல் ஆம்ஸ்ரோங் ரேஞ்க்கெல்லோ போய்க் கொண்டிருக்கிறா:)).. இந்த ஜிந்தனை நாட்டுக்கு நல்லதில்லயே.

  ReplyDelete
  Replies
  1. என்ன நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கோட நிறுத்திட்டேங்க இன்னும் நாலு பேரை சேர்த்து சொன்னா மீக்கு ஆப்பி :)
   நானெல்லாம் தத்துவம் சொன்னா தாங்க மாட்டீங்க :) சொல்லட்டா :)

   Delete
  2. இல்ல அவருக்குத்தான் வயசு அதிகம் அதனால அவ்ர்தான் உங்களுக்குப் பொருத்தமான உவமை:)

   Delete
 12. // ஜன்னல் வழியே பார்வையை திருப்பினேன் .அங்கே ஒரு புறா செல்லம் பக்கத்துக்கு வீட்டு பின் கூரை மேலமர்ந்து எதோ தலையை அசைத்து அசைத்து எதையோ சொல்ல முற்பட்டுக்கொண்டிருந்தது.//

  ஓஒ அஞ்சுக்கு விசன் கிளியர் என்பதனை ஒத்துக்கறேன்:)).. மேலே தொடர்வோம்:)

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் :) எனக்கென்ன உங்கள மாதிரி வயசாகிடுச்சா :) என் விஷன் ஆல்வேஸ் கிளியரோ க்ளியர்

   Delete
  2. தெரியும்.. தெரியும்:)

   Delete
  3. https://pics.onsizzle.com/some-relationships-are-like-tom-and-jerry-they-irritate-each-4265043.png

   Delete
 13. //அங்கே எப்போதுமில்லாமல் ஆச்சர்யமா குண்டு பிரபு தரையில் அமர்ந்து மீன் குளத்தில் எதையோ உற்று பார்த்துக்கொண்டிருந்தான்///
  ஆங்ங்ங் அஞ்சுவே ஜொள்ளிட்டா பிரபு குண்டூஊஊஊஊ என:)) இதை என் மகள் பார்த்தாவோ அவ்ளோதேன்ன்ன்ன்ன்:) மாப்பிள்ளை வாணாம் என மூணு கால்ல குதிப்பா:))

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் உங்க குண்டு பொண்ணுக்கும் அவன் சரியான ஜோடி :) பரவல்லோ அவன் மதரின்லாவும் அஜஸ்ட் பண்ண சொல்லுங்க அவளை

   Delete
  2. ஏஞ்சல் நான் சொல்ல நினைத்ததை சொல்லிட்டீங்க ஹைஃபைவ் ஹா ஹா ஹா ஹாஹா மதரின்லா ஹா ஹா ஹா ரொம்ப ரசித்தேன் உங்க பதிலை

   கீதா

   Delete
 14. //.அப்படி அவன் என்னத்தை பார்க்கிறான் என்று திரும்பினா !! அது சாம்பல் நிறத்தில் ஒரு சிறு பூங்குஞ்சு குட்டி பேபி புறா தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கு !!//

  ஓஓஓஒ ஹையோ.. நல்லவேளை வேறு பூஸ்கள் ஏதும் அட்டாக்குக்கு வந்திடாமல் பிரபுக்குண்டு காவல் காத்திருக்கோ..

  ReplyDelete
  Replies
  1. இல்லை மியாவ் அந்த குண்டன் தனியா ஸ்வாஹா பண்ணியிருப்பான் நான் பார்க்காட்டி .

   Delete
 15. //அம்மா தான் கூரையில் அமர்ந்து தன் குழந்தை பூனை வாயில் மாட்டிக்கொள்ளுமோவென தவித்துக்கொண்டிருந்தது .இப்போ நான் தூக்கியது பார்த்ததும் எங்க வீட்டு கூரைக்கு ஷிப்ட் ஆகியது அம்மா புறா :) இன்னும் அதே படபடப்புடன் //

  ஓ ச்சோ சுவீட்ட்... அந்நேரத்தை நினைக்க நமக்கு கை கால் நடுங்குது.. அந்த அம்மாப்புறாவுக்கு எப்படி இருந்திருக்கும்... தன் கண் முன்னே குழந்தையைக் கொல்ல ஒரு பூனை ரெடியாகுது.. அதை தடுக்க முடியாத பாவியாக இருக்கிறேனே என எண்ணியிருக்கும்... எனக்கு கேள்விப்பட்ட எத்தனையோ இலங்கைக்ப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்து உலுப்புதே:(..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா :( மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும் .இடம்பார்த்து கூடு கட்டி முட்டையிட்டு குழந்தைக்கு ஊட்டி பறக்க சொல்லித்தரும்நேரம் கண்முன்னே உயிர் தவிப்பது சொல்லொணா துயரம் :( மனிதரோ விலங்கோ எல்லாருக்கும் தாய்மை அன்பெனும் உணர்வுண்டு

   Delete
  2. எல்லா அம்மாக்களுக்கும் இந்தத் தவிப்பு இருக்கும் இல்லையா ஐ மீன் செல்லங்களின் தாய்களுக்கும்....பைரவர்கள் மூன்று 4 மாதத்தில் வீன் அவே ஆவது வரை அம்மாக்கள் உறுமுவார்கள்....

   கீதா

   Delete
  3. ஆமாம் கீதா இதேபோல் ஒரு அணில் சம்பவம் ஊரில் நடந்தது பிறகு பகிர்கிறேன்

   Delete
 16. //வீட்டுக்குள் கொண்டுவந்து டவலில் துடைத்து மகள் மடியில் :)

  உர்ரென கோபத்துடன் ///

  ஹா ஹா ஹா இதில கோபம் வேறையோ?:) இல்ல அஞ்சு அந்த பேபி நினைச்சிருக்கும்.. அந்தக் குண்டுப்பூஸ் தனக்கு உதவி செய்வதற்காக வந்து பொண்ட் அருகே இருந்தது, இந்தக் குண்டுப்பாட்டி[அஞ்சுவைச் சொன்னேன்.. புறாக்குஞ்சின் முறையில:).. அது டப்பா?:)] பொல்லாதவ என்னைத்தூக்கி தன் வீட்டுக்குள் கொண்டு வந்திட்டா.. வைரவரே இந்தக் குண்டுப்பாட்டியிடம் இருந்து என்னைக் காப்பாத்துங்கோ என வேண்டியிருக்கும்:)) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :) அதிரா இந்த புறாக்குஞ்சுகளின் குணமே இப்படித்தான் :) உர்ரென கர்ர்ர் மோடில் இருக்கும்ங்க பாய்ஞ்சி பாய்ஞ்சி அடக்கும் செய்யும் ஊரில் எங்க வீட்டில் :)

   Delete
 17. //புறாக்களை இப்படி அழகா பிடிக்க வேண்டும்
  இல்லைன்னா அதுங்க உடம்புக்கு வலிக்கும்
  கூகிள் படம் //

  ஹா ஹா ஹா ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படித்தூக்க வேண்டும் என இருக்கெல்லோ? வாத்தை கழுத்தில, முயலை காதில இப்படி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :) என் மகளுக்கு பிடிக்க தெரில சொல்லிக்குடுத்தேன் .அனால் முயல் விஷயத்தில் காது தப்பாம் :) கையில் அணைத்தே பிடிக்கணும்ங்கிறாங்க இங்கே

   Delete
  2. ஆமாம்!!! ஒவ்வொன்றையும் மனிதக் குழந்தைகள் உட்பட....எஸ் ஏஞ்சல் முயல் வெரி சென்ஸிட்டிவ் இல்லையா அணைத்துத்தான் பிடிக்கணுமாம் மகன் சொன்னான் காதைப் பிடித்துத் தூக்கக் கூடாது என்றான்...

   கீதா

   Delete
  3. ஆமாம் கீதா நம்மூரில் தப்பா காதை பிடிக்க சொல்றாங்க அது கூடாததும்

   Delete
 18. //ஒவ்வொரு புறாவும் முட்டையிட்டு குஞ்சுகளை கொண்டுவரும் சிலநேரம் சில புறாக்குஞ்சுகள் எல்லார்கிட்டயும் சென்று சாப்பாடு ஊட்டிப்பாங்க .அதுங்களை தொட்டில் குழந்தைனு கேலி செய்வோம் ///

  ஹா ஹா ஹா இவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதுக்கே குடுத்து வச்சிருக்கோணும்.. என்ன அழகா பேசுவார்கள்.. பேன் பார்ப்பார்கள்... ஹா ஹா ஹா சொல்லி முடியாது என்ன..

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஜோடி ரெகுலரா எங்க வீட்டு கூரையில் கொஞ்சிகிட்டே இருப்பாங்க :) பார்க்க கொள்ளை அழகு

   Delete
  2. அவங்க மரீட்டா? இல்ல லவ்வேர் ஆ அஞ்சு?:)

   Delete
  3. living together :)))))))))))

   Delete
 19. // சரி இப்போ லண்டன் வரேன் :) //

  ஓ எத்தனை மணிக்கு? எந்த பிளைட்டில? நடு சீற்றா? விண்டோ சீற்றா?.. பிக்கப் பண்ண வரட்டோ?:))

  ReplyDelete
  Replies
  1. நான் சூப்பர் வ்உமன் :) நானே பறந்து வருவேன் :)

   Delete
  2. ம்ஹூம்ம்.. வானத்தில இருக்கிறது எல்லாம் மூக்கில பட்டு பாதியிலயே லாண்ட் ஆகிடப்போறீங்க டூப்பர் உமன்:))

   Delete
  3. :)) அதான் காப்பாற்ற நீங்க இருக்கீங்களே

   Delete
 20. //இந்த குஞ்சு குடுகுடுன்னு கீச்சிட்டு கூரை மீது நடந்து அம்மாகிட்ட போயிடுச்சி அந்த காட்சியை விவரிக்க வார்த்தையில்லை//

  ஹா ஹா ஹா புரியுது கண்முன்னே காட்சி விரியுது:))... எவ்ளோ ஹப்பியா இருந்திருக்கும். நெஞ்சுப்படபடப்புக் குறைஞ்சிருக்கும்... தன் பிள்ளையை விசாரணைக்காக ஆமி பிடிச்சுப்போய், விசாரணை முடிஞ்சு ஓகே நீ போகலாம் என விட்டதும்.. அங்கு இருக்கும் சிட்டுவேஷன் போல இருந்துது ஹையோ ஆண்டவா... என்ன ஒரு ஆனந்தமாக இருந்திருக்கும்..

  அந்த மம்மிப் புறா சொல்லியிருப்பா.. விடியட்டும் உன்னைக் கே எஃப் சி க்குக் கூட்டிப் போகிறேன் என :))

  ReplyDelete
  Replies
  1. விசாரணை /ஆர்மி :( எத்தனை வேதனைகள் இல்லையா எப்பவும் மறக்காத ஒரு சம்பவம் முக புத்தகத்தில் ஒரு தம்பி எழுதினது .விசாரணைக்கு போன அன்று அவர் பிறக்க தந்தை :(
   சே எத்தனை கொடுமைகள் இல்லையா

   Delete
  2. இது ஏஞ்சல் வீட்டு புறா :) ஸோ KFC பக்கம் போகாது :)

   Delete
  3. அச்சச்சோ பாவமே அப்போ வல்லாரை ஊஸ் மட்டும்தானா கர்ர்:))

   Delete
  4. https://i.ytimg.com/vi/1xTRBMddFjQ/hqdefault.jpg

   Delete
 21. //அம்மா அவங்கதான் என்னை தண்ணியிலருந்து
  காப்பாற்றினாங்கன்னு சொல்லுதோ !///

  ம்ஹூம்ம்ம்ம்ம் நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாமே:)).. ஹையோ அம்மா நோட் பண்ணுங்கோ அதோ அந்தா நிக்கிறாவே அந்தப் பாட்டிதான் என்னை உள்ளே தூக்கிப் போனா.. நான் சிரிக்காமல் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என இருந்தேனா.. பயத்தில திரும்ப கொண்டு வந்து வெளியே விட்டிட்டா பார்த்து வைங்கம்மா அவவை எனச் சொல்லியிருக்கும்.. ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. நான் பாட்டினா நீங்க கிரேட் க்ராண்ட் மாதர் அந்த பேபிக்கு :))

   Delete
  2. அல்லோ மிஸ்டர்...,
   ஜெசி யே எனக்கு சிஸ்டர் ஆக்கும்:))

   Delete
 22. //புறா குஞ்சு திடீரென என்னை நோக்கி கூரை மேல் நடந்து வர (ஒரு வேளை தாங்க்ஸ் சொல்ல வந்திருக்குமோ !!) //

  ஐயா ஜாமீஈஈஈஈஈஈஈ என்னால தாங்க முடியல்ல.. பிளீஸ்ஸ்ஸ் ஆராவது என்னைத்தூக்கிப் போய் தேம்ஸ்ல போடுங்கோ... உடம்பெல்லாம் கொதிக்குதூஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. கூல் கூல் :) இருங்க ஜேசிபி இல்லை கிரேன் ஆர்டர் கொடுக்கறேன் உங்களை தூக்கி போட

   Delete
  2. ஒரு 59 கிலோவைத்தூக்க தெகிரியமான ஆட்கள் ஆருமே இல்லியா?:) கீதா இல்லாட்டில் கீசாக்கா தூக்குவாவாக்கும்:))

   Delete
  3. சரியா எழுதுனும் :) 95 கிலோவை யாராலும் தூக்க முடியதுஉஉஉ

   Delete
  4. ஹையோ, இந்த குண்டுப் பூஸாரை நான் , குழந்தை! எப்படித் தூக்குவேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  5. ஆமாம் கீதாக்கா :) ஆனா அதுக்குதான் நான் கிரேன் ஆர்டர் பண்றேன் யூ டோன்ட் ஒர்ரி

   Delete
 23. //அங்கே பயந்து மூலையில் நடுங்கியவாறு குட்டி பாப்பா !
  இப்போ அம்மா புறவம் பயத்தில் பறந்து விட்டாள் .மீண்டும் புறாக்குஞ்சை வீட்டுக்கு கொண்டு வந்து பாதுகாப்பான ஜெஸியின் கூடைக்குள் வைத்து ஹாலில் வைத்து கதவை சாத்தி விட்டோம் .//

  ஆவ்வ்வ்வ் நான் நினைக்கிறேன் அஞ்சு.. குஞ்சுவுக்கு செட்டை ஈரமாக இருந்திருக்கும் அதனால பறக்க முடியல்ல.. எங்கள் வீட்டுக்கு வந்த “மழையில் நனைந்த புறாப்பிள்ளை”.. போல.. செட்டை நன்கு நீரில் நனைந்தால் இவர்களால் பறக்க முடியாது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா .POND இல் முழுக்க நனைந்து அதான் பறக்க முடில

   Delete
 24. //வேட்டை யாடும் முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஜெஸி //

  ஹா ஹா ஹா பின்ன தேடிப்போகாமல் கையுக்கு பிரியாணி வந்திருக்கு:) நோகாமல் நொங்கெடுக்கும் யோசனை ஹா ஹா ஹா..

  ReplyDelete
 25. ஜெஸிப்பிள்ளையின் தவிப்பு புரியுது.. மல்ட்டிப்பிள்ளை எங்கே போனா அந்நேரம்?

  //இரவு முழுதும் அந்த புறா அம்மாவுக்கு தூக்கம் வந்திருக்குமோ தெரில .காலை 7 மணிக்கு தோட்டத்துக்கு போனப்போ
  //

  ஓஓஓஓஓஓஓஒ மை கோட்ட்ட்ட்.. நைட் ஸ்லீப் பண்ணியிருக்காதோ?:(

  ReplyDelete
  Replies
  1. அவளும் சேர்ந்திட்டா ஆனால் ஜெஸியின் தைரியம் திருட்டுதனம் மல்டிக்கு குறைவுதான்
   .தூங்கியிருக்க மாட்டா .என்ன ஒரு ஆங்க்ஸைட்டி யா இருந்திருக்கும் அந்த ஜீவனுக்கு

   Delete
 26. //சாமியை வேண்டிக்கிட்டு ஒருவழியா ரெண்டையும் பிடிச்சி வேற இடத்தில போட்டு பிறகு சரியா 12 மணிக்கு அந்த கூண்டை கூரை பக்கமா வைத்தேன் .உள்ளிருந்தே பறக்க துடிக்குது பேபி :) அப்புறம் மெதுவா கதவை திறக்க ஒரே டேக் இல் விர்ரென பறந்துட்டா /டான் :) லக்கி///

  வாவ்வ்வ்வ் இப்போ செட்டை நன்கு காய்ந்திருக்கும்.. ஈசியா பறந்திருப்பா.. குட் கேள்:).. அதுசரி அஞ்சு குஞ்சு போயா? கேளோ? ஜொள்ளவே இல்ல நீங்க?:))

  நல்ல முடிவு... என்னமோ தெரியல்ல இப்படியானதெல்லாம் நம்மிடம் தான் வந்து அகப்படுது.

  எங்கள் வீட்டிலும் டெய்ஸிப்பிள்ளை பிடிச்சு வரும் ஸ்பரோ க்கள்.. என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு சிலது சொர்க்கம் போயிருக்கு... நான் நினைச்சுப் பார்ப்பேன்ன் கடசித்தண்ணி பருக்கத்தான் என்னிடம் வந்ததோ என... அதுதான் சிலசமயம் புரிவதில்லை.. சிலது பறந்தும் இருக்கு...

  எதுவாயினும் எம்மால் முடிஞ்சது...

  ReplyDelete
  Replies
  1. ஆணா பொண்ணான்னு தெரில :) அநேகமா பெண்ணாயிருக்கும்னு நினைச்சிதான் அவள் பறந்து போனாள் னு எழுதினேன் .
   என் கணவரும் கேட்டார் :) உங்களைத்தேடியே எல்லாம் வாறாங்களேன்னு :)
   எதோ என்னால் ஆன உதவி காப்பாற்றி விட்டேன்

   Delete
  2. // டெய்ஸிப்பிள்ளை பிடிச்சு வரும் ஸ்பரோ க்கள்.. என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு சிலது சொர்க்கம் போயிருக்கு.//

   ஹா... ஹா... ஹா... அஞ்சு கைக்கு வருபவை பிழைத்து விடுகின்றன. நம் கைக்கு வருவதோ....!!!!!

   Delete
  3. ஆஹா நானும் இளவரசி காப்பாற்றப்பட்டாள்னுதான் எழுதிருக்கேன் ஏஞ்சல் ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  4. இத்தனை நேரம் எங்க வீட்டுக் குட்டிச் சாத்தாங்களை பெட்ரூமில் அடைத்துவிட்டோம்//

   .மீண்டும் காலை முதல் எங்க வீட்டு குட்டிப்பிசாசுகள் அட்டகாசம் .ரெண்டு பேரும் என் யோசனைகளை மோப்பம் பிடித்தாற்போல் வேண்டுமென்றே சோலார் பேனல் கீழே ஒளிஞ்சிருந்தாங்க :) //

   இந்த ரெண்டும் வாசிச்சு சிரிச்சு முடிலை அதுங்க எப்படி அலை பாஞ்சுருக்கும்னு தெரிஞ்சுச்சு....

   எங்க வீட்டுலயும் பூஸார் நடமாட்டம் அதிகம் இந்த பைரவி துள்ளுவா பாருங்க...ஹையோ...ப்ரௌனி இருந்தா அவளும் கொஞ்சம் எக்ஸைட் ஆவா ஆனா துரத்த மாட்டா ஆனா இந்த கண்ணி இருக்காளே செம வில்லி பூஸாருக்கு

   கீதா

   Delete
  5. அதிரா - //என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு சிலது சொர்க்கம் போயிருக்கு...// - நல்லவேளை ஸ்காட்லாண்ட் வரும் வாய்ப்பு இல்லை. அங்கு வந்து ஒருவேளை உங்களையும், மருத்துவரையும் ஒருசேர பார்த்துட்டுவரலாம் என்று நினைத்தால், க டை சி 'குளிர் பானம்' உங்கள் கையால் ஆகியிருக்கும். ஆளை விடுங்க... ஹா ஹா ஹா

   Delete
  6. hahhaaha :) ROFL @ Nellai thamizhan :)))
   http://i0.kym-cdn.com/photos/images/original/001/234/262/81f.jpg

   Delete
  7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ச் ரீராம் & நெ.தமிழன் :).

   உங்களுக்கு தெரிஞ்ச ஆராவது வாழ்க்கை வெறுத்து விட்டது எனச் சொன்னால்:) உடனடியா எங்களிடம் அனுப்புங்கோ.. மீ கடசித் தீர்த்தம் குடுத்து கைலாயம் அனுப்பி வைக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா.. பின்ன வாழ்க்கை வெறுத்து விட்டதெனச் சொல்லிக் கொண்டே வாழ்வோரை எனக்குப் பிடிக்காதாக்கும்:))..

   ஆனா ஒன்ரு மட்டும் கன்ஃபோமாத் தெரியும்.. எனக்கு நரக வாசல்தான் திறக்கும்:)) ஹையோ நேக்குப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊ:))

   Delete
  8. ஹாஹாஹா :) அது எனக்கா அமையுது .@ஸ்ரீராம் .நெகட்டிவா நடந்தா எனக்கு கெட்ட்டது அது கடவுளுக்கு நல்லாவே தெரியும் அதனால்தான் பலத்தை என் கண்ணில் காட்டமாட்டார் :) என்னால் தாங்கக்கூடியதை மட்டுமே எனக்கு காட்டுவார்

   Delete
 27. ஹையோ ஆராவது கீதாவைக் கொஞ்சம் பிடிச்சு வையுங்கோ:)) விடிய எழும்பி வந்து பார்த்திட்டு:)) ஓவர் துள்ளலா இருக்கப் போறா.. அதிராக்கு நல்லா நித்திரை வருது.. ஓவரா சத்தம் போட்டு அதிராவை டிசுரேப்பூப் பண்ணக்கூடா என கீதாவிடம் ஜொள்ளி வையுங்கோ:)) ஊக்கே?:).

  ReplyDelete
 28. ஒருவேளை அந்தத் தாய்ப்பறவை நினைத்திருக்கும்...

  "அப்படியே விட்டிருந்தா முதல்லயே நான் என் குழந்தையைக் காப்பாத்தி அழைச்சுகிட்டுப் போயிருப்பேன்.... இந்த அம்மா ஏதோ செஞ்சு லேட் பண்ணி பீதி உண்டாக்கிட்டாங்க... சிங்காரவேலன்ல குசுப்பு ஆண்ட்டியை உலக்கைநாயகர் தண்ணிக்குள்ள பிடிச்சு அமுக்கின மாதிரி..."

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !!அதெல்லாம் நான் பார்க்கல்லியே :) அப்போ நானா குழந்தை ஒன்லி வாத்து கோழி மாடு எல்லாத்தையும் வருமே அந்த பாட்டை மட்டும் போட்டு பார்த்துட்டு ஆஃப் பண்ணிட்டேன் வீடியோவை :)

   Delete
 29. பறவைகள் அதிகம் வளர்த்தது இல்லை. கூடாதுனு சொல்வாங்க எங்க வீட்டிலே எல்லாம். ஆனால் அடைக்கலம் தேடி வந்திருக்கின்றன. மருந்து போட்டுக் காப்பாத்தி இருக்கோம். பின்னர் அதுங்களாவே பறந்துடும். படிக்க ஆரம்பிக்கையில் கு.பி. எங்கே பட்சணம் பண்ணப் போகுதோனு கவலை. அப்புறமாத் தான் மனசு சமாதானம் ஆச்சு. நல்ல வேலை செய்தீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் அப்படிதாங்கா ஊரில் பலதை காப்பாற்றி விட்டு அனுப்பியிருக்கோம் சிலது எங்க வீட்டுக்கே பாசம் காரணமா திரும்பி வந்திடும் எங்கம்மாவுக்கு காகங்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் அப்படி ஒரு பந்தம் :)

   இந்த குட்டி பிசாசுகளை மேய்ச்சி கட்டுப்படுத்தி வைக்கிறதே பெரும் பாடச்சு எனக்கு

   Delete
 30. ஏஞ்சல் செம ஆரம்பம்...!!! ரொம்ப லைக்கினேன்....பாதி வாசிச்சுட்டேன்...ஜெஸி படம் ஏதோ விஷமம் பண்ணப் போவது போல இருக்கே....ஹையோ பார்க்கறேன்...புறா குஞ்சு பாவம்...நிறைய இருக்கூ வரேன்...

  லாஸ்ட் கமென்ட் கண்ணுல பட்டுருச்சே......இதோ வ்ந்துட்டேன் பூஸார் உங்களை எழுப்ப!! ஹையோ என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம்! புஸார் போதும் உறங்கினது...என் சத்தம் கேக்குதோ....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும்

   Delete
 31. ஆமாம் கரெக்டுதான் இங்க இரு மதர் தெரஸா இருக்காங்களே அவங்ககிட்ட குறிப்பு காமிச்சாலே போதுமே என் குட்டிய காப்பாத்திருவாங்க...அவங்க இந்த ஜன்னல் பக்கம் திரும்பி பார்க்கணுமே!!! சாமீயீ இந்த பூஸார் வேற என் குஞ்சுவை முறைச்சுக்கிட்டே இருக்கேனு மனசுல ஆயிரம் ஓடியிருக்கும்....

  பாருங்க கரீக்டா அதோட பாஷைய நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க பாருங்க...சூப்பர் ஏஞ்சல்...Really you live in tune with nature!!!!!

  குடோஸ்!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா !!இன்னும் ஆச்சர்யமா இருக்கு அந்த 9:30 இரவு ,வெளிச்சம் இருந்து ஆனா அந்த தாய் என் கண்ணில் பட்டது .நானா போனது அதுக்கு உணவிட .அதன் தவிப்பு கண்ணில் நீர் வரவைத்து

   Delete
 32. குண்டு பிரபு ஹா ஹா ஹா ஹா ஹா பாவம் வடை போச்சேனு நினைச்சுருப்பான். பூஸார் டக்க்னு பாஞ்சுர மாட்டாங்க...அப்படியே கொஞ்ச நேரம் கான்சென்ட்ரேட் பண்ணி அட்டாக் பண்ணுவாங்க அது பூஸார்களின் குணம் கேட் ஃபேமிலி....அந்த அட்டாக் பண்ணப் போறாங்கனு ஈசியா அவங்க பார்வை பாடி லேங்குவேஜ் வைச்சுக் கண்டு பிடிச்சுரலாம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா :) அடுத்தநாள் க்ராம்பியா இருந்தான் :) ஆனா என்ன பண்ண

   Delete
 33. பூசார்களின் கான்சென்ட்ரேஷன் அந்த இலக்கை அடிக்க செமையா இருக்கும் பைரவர்களுக்கு அத்தனை கிடையாது....

  கீதா

  ReplyDelete
 34. ஆமாம் புறாவை பிடிப்பது இப்படித்தான் இல்லைனா அவங்களுக்கு கன்வீனியன்டாவும் இருக்காது வலிக்கும் தான். நாங்களும் எங்க வீட்டுல புறா ரெஸ்க்யூ பண்ணியதில் தெரிந்து கொண்டது.

  சிலர் சொல்லுவாங்க புறாக்களினால் சில வியாதிகள் மனிதருக்குத் தொற்றும் அப்படினு. அட போங்கப்பா...மனுஷன் வக்ர புத்தியவிடவா நு தோணும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நானா டிசீஸ்க்கெல்லாம் கவலைப்படவே மாட்டேன் :) மனுஷ மனசின் அழுக்கைவிடவா பறவை நோய் நம்மை தாக்கிடப்போது

   Delete
 35. இந்த குஞ்சு குடுகுடுன்னு கீச்சிட்டு கூரை மீது நடந்து அம்மாகிட்ட போயிடுச்சி அந்த காட்சியை விவரிக்க வார்த்தையில்லை .மகளின் போனில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில படங்களை எடுத்தேன் அப்போ இரவு 9:45 .//

  சம்மர் சோ கொஞ்சம் லைட்டிங்க் இருந்துச்சோ....உங்க ஊர்ல லேட்டாகும்ல

  உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லதான் வந்திருக்கும் பாவம்

  ஹையோ பக்கத்து வீட்டு வில்லன் பாஞ்சுட்டானா...ஹையோ என்னாச்சு பார்க்கறேன் சுபம்னு போட்டீங்களா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சுபமா இல்லைனா இங்கே பதிவே போட மாட்டேன் கீதா :)

   next door neighbours cat is villi :) vamp .karuvaandis sister karuvaachi

   Delete
 36. ஹப்பா ஏஞ்சல் (தேவதை! சத்தியமா உங்க அம்மா அப்பா உங்களுக்குச் சரியான பெயர் வைச்சுருக்காங்க!!!! என்ன ஒரு ப்ரெடிக்ஷன் இல்ல!!!) இருக்க பயமென்!!!

  இளவரசி காப்பாற்றப்பட்டாள்!! பொண்ணு?

  ஹையோ ஜெஸி கூடையிலா...அவளுக்குக் கொஞ்ச நாள் தூக்கமே வராதே...புறா பறந்து போனப்புறம் கூட அந்தக் கூடை ஸ்மெல் தெரியுமே சுத்தி சுத்தி வருவாங்களே...ஹா ஹ ஹாஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வேடிக்கை என்னனா ஜெசிக்கு அவளோட பாஸ்கெட் பார்த்தா பயம் :) வெட் விசிட் நேரம் கூடிய பார்த்தா ஓடி ஒலிவா .ஆனா இதில் லக்கி இருப்பது தெரிஞ்சி பயமில்லாம போறா கிட்ட

   Delete
 37. அம்மா புறா தூங்கிச்சோ இல்லையோ கண்டிப்பா ஜெசி மல்டி தூங்கியிருக்க மாட்டாங்கஹாஹாஹாஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. yes :) they were eager to catch the bird

   Delete
 38. ஹப்பா எப்படியோ லக்கி லக்கிதான்!!! நல்ல நேம்....நாமகரணம் சூட்டுவிழா ஹா ஹா ஹா நாங்களும் இப்படித்தான் இங்க நிறைய பெயர் எல்லாம் வைச்சுருக்கோம் இப்ப மகன் வந்தப்பா எல்லா அல்லக் கைகளையும் அறிமுகப் படுத்தி....வெள்ளையன், மூக்கழகன், ஸாஃப்டி, ஜொள்ளன், எல்லாரையும் ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா :) அட்டகாசமான பெயர்கள் :)

   Delete
 39. குட்டி மீண்டும் வந்தது கூட நீங்க காப்பாத்துவீங்கனு இருக்கும்...அந்த பகக்த்துவீட்டு பூனை வருவது தெரிஞ்சுருக்கும் அதான்....எப்படியோ ஹப்பா சுபமா முடிஞ்சுச்சே...சூப்பர்!!! எங்கிருந்தாலும் வாழ்க!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ரங்கன் - நேற்று மருத்துவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு வளர்க்கும் நாலு கால், யார் வந்தாலும் 'தலைவலி' வருமளவு குரைத்துக்கொண்டிருந்தது. ரொம்ப எரிச்சலாப் போயிடுத்து. பக்கத்துல போய் ஒரு 'அறை' அந்த நாலுகாலுக்கு விடலாமா என்று தோணிவிட்டது. நானெல்லாம் பெட் அனிமல்ஸ் வளர்க்க லாயக்கில்லை போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

   Delete
  2. இல்லை நெல்லைத்தமிழன் சில பைரவர்களுக்கு ஏதாச்சும் நேச்சர் அழைப்புக்காகவும் கத்துவாங்க ..அது செயினில் இருந்தா ?
   எனக்கும் பைரவர்களுக்கும் நிறைய தொடர்புண்டு எங்கே பார்த்தாலும் கட்டிப்புடி வைத்தியம்தான் :)

   அந்த ஜீவனுக்கு என்ன ஸ்ட்ரெஸ் இருந்ததோ பாவம் இப்போல்லாம் மிருகங்களுக்கும் ஸ்ட்ரெஸ் வருது .பின்னே முந்தி சாதம் மட்டும் தந்தோம் இப்போ அங்கயம் ராயல் canine உணவாமே தராங்க :(

   Delete
 40. செம விவரணம் ஏஞ்சல் ரொம்ப ரசித்தேன்....

  கீதா

  ReplyDelete
 41. //அது சாம்பல் நிறத்தில் ஒரு சிறு பூங்குஞ்சு குட்டி பேபி புறா தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கு !! //


  உங்கள் கண்ணில் பாட்டாளே! புறாகுஞ்சு அவள் லக்கி தான்.
  ஏஞ்ச்சலும், ஏஞ்சலின் மகளும் காப்பாற்றி விட்டாச்சு. இனி அவை வானில் சிறகடித்து பற்கும் போது எல்லாம் ஏஞ்சலின் நினைவு வரும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா :) இந்த சம்பவத்துக்கு அப்புறம் இன்னும் மூன்று ஜோடி எங்க தோட்டத்தில் சுத்துறாங்க . மகள் கையால் உணவு வாங்குது :)

   Delete
 42. அம்மாவுடன் செல்லக்கொஞ்சல் .காண கண்
  கோடி வேண்டும் :)//

  உண்மை, உண்மை.
  நானும் கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அக்கா நீங்க எடுக்கும் காணொளிகள் மகன் வீட்டு குழந்தைங்க எல்லாம் நினைவுக்கு வந்தாங்க :)

   Delete
 43. பூனையும் பாவம்தான். புறாவும் பாவம்தான். எப்படியோ சமாளித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நெல்லை தமிழன் .அதேதான் எப்படியோ காப்பாற்றி பறக்க விட்டதே சந்தோசம் எனக்கு .பூனை பாவம்தான் ஆனா என் கண்ணில் பட்ட குழந்தையும் பாவம்தானே

   Delete
 44. Replies
  1. வாங்க .டிடி மிக்க நன்றி

   Delete
 45. Replies
  1. அப்போ 61 இல்லியோ :) நூறு வயசாச்சா :)

   Delete
 46. Good samaritan...! sசென்னையில் என் மகனின் வீட்டில் வேளச்சேரியில் புறாக்கள் அதிகம்
  அதிகாலையில் அவற்றின் கர்ண கொடூரக் குரல் எரிச்சல் தரும் ஒரு நாள் செடித்தொட்டியில் புறாவின்முட்டை இருந்தது வீட்டு வேலைக்காரி அதை தூக்கிப் போட்டு விட்டாள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்

   Delete
 47. மிக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் ஏஞ்சல். ஸ்ரீராம் போட்டிருக்கும் பாசிட்டிவ் செய்திகளுக்கு இணையானது இந்த செயலும்.
  ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஒரு குருவி மின்விசிறியில் அடிபட்டு கீழே விழுந்து விட்டது. என்னோடு பணி புரியும் பெண் அதை கையில் எடுத்து, மெதுவாக தடவி கொடுத்து, கொஞ்சம் தண்ணீரும் பருக கொடுத்தாள். அதை பருகி விட்டு, அந்தக் குருவி பறந்து போனதை பார்த்த பொழுது, எங்கள் எல்லோருக்கும் வந்த நிம்மதியை இப்போதும் உணர்ந்தேன். 

  ReplyDelete
  Replies
  1. தாங்க்யூ தாங்க்யூ :)
   அக்கா அந்த சந்தோசம் சொல்ல வார்த்தையில்லை .எங்க மெட்ராசை வீட்டில் குருவி கூடு கட்டும்போது அந்த குடும்பம் வெளியே பறக்கும் வரை சீலிங் பேன் போடா தடா போடுவாங்க அம்மா

   Delete
 48. வீக்கெண்ட் பிஸி .எல்லாருக்கும் விரைவில் பதில் தரேன் :)

  ReplyDelete
 49. பாராட்டுக்கள் அஞ்சு..


  படிக்க படிக்க ரோம்ப திகில் கதை மாதரி இருந்துச்சு...

  லக்கி பேபி ரொம்ப லக்கி தான் அதான் அஞ்சு பார்வையில் விழுந்துருக்கா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு .மிக்க நன்றிப்பா .லக்கியை பத்திரமா பறக்க விடும் வரைக்கும் மனசு நிலையில்லாம இருந்தது

   Delete
 50. அருமையான படங்கள். நிகழ்வு மனதில் பதிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா

   Delete
 51. ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு அஞ்சு.. இந்த பரபரப்புக்கிடையிலும் நீங்க படம் எடுத்ததை பாராட்டவேணும். வாசிக்கும்போது எனக்கும் அந்த அம்மா புறாவின் தவிப்பும்,படபடப்பும் கண்ணில் வந்தன. லக்கி புறா லக்கிதான்.ஆயுள் கெட்டி அதுக்கு. அழகாக எழுதியிருக்கீங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .ஆமாம் நான் தோட்டம் போக காரணமே அந்த தாயின் தவிப்பு .நான் பசிக்கு எதோ கேக்குதுன்னு நினைச்சேன் எந்த இடத்தில இருந்தா என் கண்ணில் படும்னு அதுக்கு தெரிஞ்சிருக்கே !!
   படம் எடுத்தது மகள் :)
   உங்க ஊரில் வெதர் எப்படி இங்கே கொளுத்துது

   Delete
 52. Sibi mannan kathaithaan. such a sweet gesture Angel. God Bless both mothers you and puraa and dauchters Lucky and Sharon.

  ReplyDelete