அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/13/18

காலா :)ற நடந்தப்போ :)


எனக்கு காலாற நடக்கறது ரொம்ம்ம்ப பிடிக்கும் .எப்பவும் கொளுத்தி எரியும் எங்க ஏரியா இந்தமுறை காலை வாரி விட்டது .
3 வாரமா தொடர் மழை .இப்போதான் கொஞ்சமா சூர்யா எட்டிப்பார்க்கிறார் :) .காலாற போனப்போ எடுத்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு ..


கொஞ்ச நாள் முன்னே  மினி மாடல்  கோவில் கட்டும் வேலையில் பிசியா இருந்தேன் :) அந்த எக்சிபிஷன் சமீபத்தில் நடந்தது அந்த படங்கள் இங்கே .முதல் படம் நாங்க செய்தது :)


                                                                                

                                                                                                                                                                        

                                                                             

இவை அங்கே வந்திருந்த சில கோயில்களின் அணிவகுப்பு 


அப்படியே அந்த கண்காட்சி பார்த்திட்டு வெளில வந்தா பெரிய மைதானத்தில் இளைஞர் இளைஞிகள் கூட்டம் எல்லாரும் ரெயின்போ வண்ணத்தில் கொடி போல் முதுகில் போர்த்திக்கிட்டு போறாங்க .நிறைய பேர் அதே நிற தொப்பி ,டி சர்ட் இப்படி வானவில் நிறத்தை முன்னிறுத்தி அனைவருமே காணப்பட்டார்கள் .


மியூசிக் பேண்ட் எல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது .
நான் ஆர்வக்கோளாறில் படமெடுக்க ,மகள் தடுத்தாள் :)
ஆனாலும் ஒண்ணு க்ளிக்கிட்டேனே :)
அப்புறம் வெளியில் தூரம் வந்ததும் அவள் சொன்னது அது LGBT 
சமூகத்தினருக்கான ஒரு கெட் டு கெதர் அவர்களுக்கான ஆதரவாளர்கள் அவர்களை ஒதுக்க கூடாது அவர்களை வெறுக்கவோ அவர்களை டிஸ்க்ரிமினேட் செய்யக்கூடாது அனைவரும் சமம் என்று சப்போர்ட் செய்ய ஒவ்வொரு சிட்டியில் நடக்கும் பரேட் ஆம் அது ..
அதில் பார்த்தது கால்வாசி  இந்திய மாணவ மாணவிகள் மேலும் எல்லாரும் ஸ்கூல் பிள்ளைகள் கூட்டத்தில் உள்ளவர்களை ப்ரொட்டக்ட் செய்ய நாலைந்து போலீஸ் வாகனங்கள் .வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு விஷயம் நமக்கு ஏற்புடையதாக இல்லாமற்போனாலும் அந்த விஷயத்தில் நம் எதிர்ப்பை காட்ட முடியாது .சிறு முக சுழிப்பும் தவறு இங்கே .அவர்களையும் ஏற்றுக்கொள்ளனும் என்றெல்லாம் அட்வைஸ் மகள் கொடுத்துக்கொண்டே வந்தாள் :)
மேலும் சொன்னாள் அவள் நட்புக்கள் இவளையும் அழைத்தார்களாம் அந்த விழாவுக்கு இவள் தான் பிசி என்று சொன்னாளாம் .அப்பா அம்மாவுடன் தான் வீக் எண்ட் என்றாளாம்.
 :)   


அதை கேட்டுகிட்டே வெளியே வரும்போது அணிலார் :)

இங்கே பாரும்மா உலகத்தில் பிடிச்சது பிடிக்காதது நல்லது கெட்டது இப்படி எல்லாம் இருக்கும் உனக்கு ஒன்று பிடிச்சிருக்குன்னு எல்லாருக்கும் அதே விஷயம் பிடிக்கணும்ம்னு அடம்பிடிக்க கூடாது 
அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் புரிஞ்சிதான்னு சொல்ற மாதிரி இருந்திச்சி :)


========================
அப்புறம் நம்ம ஏரிக்கரையோரம் நடந்தப்போ 
புதிதாய் இரண்டு குடும்பங்கள் :)


கிச்சு கிச்சின்னு சத்தம்போட்டுட்டு இத்துனூடு உடம்பை க்ளீன் பண்ணிக்கிட்டிருந்தாங்க :)

அப்படியே கடைக்கு போனப்போ அங்கே ஷெல்பில் பார்த்தது 
பூனைகளுக்கான சோம பானம் :)ஆல்கஹால் இல்லாத ஒயின் :)
இதில் CATNIP சுவை இருப்பதால் பூனைகள் விரும்புமாம் .

அப்படியே எங்க தோட்டத்துக்கு நடந்து போனப்போ :)
சில வருஷமுன் கடையில் 10 பென்னி கொடுத்து வாங்கிய பூஞ்சான் பிடித்த செடி அதில் நீல நிறம் என்று இருந்ததால் வாங்கினேன் இவ்வருடம்  கொஞ்சம் ப்ளூ கலர் வந்த மாதிரி தெரியுது :)

அப்புறம் எங்க தோட்ட  மஞ்சள் ரோஸ் 
இந்த வருடம் ஸ்லைட்டா பிங்க் பார்டர் அடிச்சு பூத்திருக்கு :)


இவை நைஜெல்லா மலர்கள் 

சரி காலாற நடந்ததில் டயர்ட் ஆகியிருப்பிங்க கொஞ்ச நேரத்தில் திப்பிலி ரசம் செஞ்சி தரேன் அங்கே வாங்க :)


==========================


81 comments:

 1. இந்தியாவில் கூட இதற்கு ஒப்புதல் கொடுத்து கோர்ட் சொல்லி இருப்பதாக செய்தி படித்த நினைவு. காலம் மாறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் வாங்க :) இங்கே இதெற்கென பெரிய அளவில் போராட்டம்லாம் நடந்தான் அதுக்கு அப்புறம் சமூகம் அவர்களை கொஞ்சம் மதிக்க ஆரம்பிச்சிருக்கு பயத்தில்

   Delete
  2. நோஓஓஓஓஓஓஓ இது அநீதீஈஈஈஈஈஈஈஈ:)) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

   Delete
  3. ஏதோ தெரியாமல் முதலில் வந்துவிட்டேன் - நேரம் ஒத்துவந்ததால்... அதற்காக இப்படியா அலறுவீர்கள்? தூக்கிவாரிப்போட்டது!!

   Delete
  4. //ஏதோ தெரியாமல் முதலில் வந்துவிட்டேன்//

   இனிமேல், அதிரா வந்திட்டாவோ எனக் கேட்டிட்டு வாங்கோ ஹா ஹா ஹா:))

   Delete
 2. தலைப்பில் காலா வைக் கொண்டுவந்து விட்டீர்கள்! பதிவு ஹிட் ஆகிவிடும்! தொடர்மழையா? கொஞ்சம் இங்கேயும் அனுப்புங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாகா :) ஹையோ ஹையோ எப்டிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க :)

   Delete
 3. மினி மாடல் கோவிலை சற்றுப் பெரிதாக வெளியிட்டிருக்கலாமோ....

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் இந்த மினி மாடலை காமராக்குள் அடைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் நிறைய படம் எடுத்து வச்சிருக்கேன் பார்ட் பார்ட்டா .நிறைய போட்டா பதிவில் போரடிக்கும்னு விட்டுட்டேன்

   Delete
  2. இருங்க FEDEX ல அனுப்பறேன் :) மழையை

   Delete
  3. இப்போ ஒரு படம் இணைச்சேன் பாருங்க

   Delete
  4. பார்த்து விட்டேன். ஜோர்!

   Delete
  5. //ஸ்ரீராம்.June 13, 2018 at 4:31 PM
   மினி மாடல் கோவிலை சற்றுப் பெரிதாக வெளியிட்டிருக்கலாமோ....//

   ஒரு உணமி ஜொள்ளட்டோ ஸ்ரீராம்.. அவோக்கு இன்னும் ஒழுங்காப் படமெடுக்கவே தெரியல்ல:) இதில ஒம்பேது புளொக் கேய்க்குதாம் ஹையோ... ஆஆஆஆஆஆஆ இப்போ எதுக்கு நிலம் வெடிக்கும் அளவுக்குத் துரத்துறா:))

   Delete
  6. நான் துரத்தலை நீங்கதான் ஓடறீங்க :))

   Delete
  7. நான் துரத்தலை நீங்கதான் ஓடறீங்க :))

   Delete
  8. //ஒரு உணமி ஜொள்ளட்டோ ஸ்ரீராம்.. அவோக்கு இன்னும் ஒழுங்காப் படமெடுக்கவே தெரியல்ல:)//

   அப்படியா? இது எனக்கு செய்தி!

   //இதில ஒம்பேது புளொக் கேய்க்குதாம் ஹையோ...//

   ஹா... ஹா... ஹா...

   Delete
 4. அந்தப் பூவின் படத்தில் ப்ளூ கலர் வந்த மாதிரித் தெரிகிறதா? எனக்குத் தெரியவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. ங்கே :)) அப்போ என் கண்ணுக்கு பேர்ப்பில் கலரா கொஞ்சமா தெரியுதே :) அவ்வ்

   Delete
  2. ///அந்தப் பூவின் படத்தில் ப்ளூ கலர் வந்த மாதிரித் தெரிகிறதா? எனக்குத் தெரியவில்லையே...///

   ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்பூடித்தான் விடாதீங்கோ ஸ்ரீராம் .. என் கண்ணுக்கும் புளூ தெரியல்ல:)) ச்சும்மா அடிச்சு விட்டிருக்கிறா ஹையோ ஹையோ:)

   Delete
  3. ஹலோ மெடிடேஷன் பூனை :) ஒழுங்கா தெரியுதுன்னு சொல்லணும் .நெகட்டிவ் ரிப்லி வந்தா மெடிடேஷன் not working :)

   Delete
  4. அம்மா தேவதையே என் கண்ணுக்கு பூ எல்லாம் புழூஊஊஊஊஊஊவாத்தெரியுதூஊஊஊஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா இப்போ ஓகேயாஆஆஆஆஆஆ:))

   Delete
  5. மீ சொன்னது புளூ அல்ல:) புழு:)) ஹையோ ஹையோ ழுவுக்கும் ளு வுக்கும் வித்தியாசம்கூடத்தெரியல்ல:)) ஒழுங்கா என்னிடம் வாங்கோ டமில் ஜொள்ளித்தாறேன்ன்:))

   Delete
 5. தலைப்பை கண்டு உங்கள் சித்தப்பாவைப் பற்றிய விமர்சனமோ என்று நினைத்து விட்டேன். நல்லவேளை....

  படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா :) வாங்க கில்லர்ஜி நான் சினிமா படமெல்லாம் பார்க்கிறதில்லை . சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும் ஆனா சிவாஜியே பிளைட்டில் பார்த்தது நமக்கு ட்ரெய்லர் போதும் :)
   படங்களை ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 6. ஹலோ நீங்கள் கட்டிய சர்ச்சை மட்டும் அழகாக போட்டோ எடுத்து மற்ற்வைகளை அப்படி எடுக்காமல் விட்டுவிட்டீர்களே.....சரி சரி அழுகாதீங்க உங்கள் சர்ச்ம் அழகாக வந்திருக்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. எங்க சர்ச்சில் மினி சர்ச்சை சில வாரம் வச்சிருந்தோம் அதனால் க்ளோசப்பில் எடுத்தேன் .அங்கே எக்சிபிஷனில் கிட்ட போய் எடுக்க வசதியில்லை அதான் லாங் ஷாட் ..டான்க்ஸ் அழகா இருக்குன்னு சொன்னதுக்கு :)

   Delete
  2. ///ஹலோ நீங்கள் கட்டிய சர்ச்சை மட்டும் அழகாக போட்டோ எடுத்து மற்ற்வைகளை அப்படி எடுக்காமல் விட்டுவிட்டீர்களே//

   ஹா ஹா ஹா மீ கேய்க்க வந்ததை ட்றுத் கேட்டிட்டார்ர்.. எல்லாம் அந்த பன்னீர் மசாலா சாப்பிட்ட எபெக்ட்டுட்தான்ன்:)))

   Delete
  3. ஹலோ மியாவ் அங்கே போய் திப்பிலி ரசம் குடிங்க சரியாகிடும் :)

   Delete

 7. குழந்தைகளிடம் இருந்து இந்திய பெண்மணிகள் மேலை நாட்டுகலாச்சாரத்தை பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ட்ரூத் நீங்க சொல்றது உண்மைதான் குழந்தைங்க புரிதலே வேறு .ஆனா நாம் ஊரில் பிறந்து இங்கே வந்தோமில்லையா டைம் எடுக்கும்ப்பா :)

   Delete
 8. பதிவு எழுதுவதை விட தலைப்பு வைப்பதுதான் கஷ்டம். ஒருவேளை தலைப்பு வைத்துவிட்டுதான் கில்லர் ஜீ அண்ணா எழுதுறாரோ என்னவோ?
  நல்லா எழுதுறீங்க அஞ்சு.
  சூப்பர்ப் அஞ்சு மினி மாடல். எல்லா மாடல்களிலும் எனக்கென்னவோ உங்க மாடல்தனித்து தெரிவதா தெரிகிறது அழகா செய்திருக்கிறீங்க.
  அணிலார் சொவதென்னவோ உண்மையான கருத்து. யாரையும் யாரும் வற்புறுத்தக்கூடாது. (ஆனா அணிலார் யாருக்கு இதை சொல்றார் .....)
  அவங்களுக்குதான் எவ்வளவு சுதந்திரம். குடும்பமா சுத்துவாங்க ஆற்றங்கரையோரமா..
  ஆவ் சோமபானமா. .நல்லாகுடிக்கிறார். சாப்பிட்டுவிட்டே நல்லா தூங்குவாங்க. இது வேறயா..
  நானும் 3 வகை ர்ரோஸ் வைத்திருக்கேன். யெல்லோ ரோஸ் மாதிரிதான் ஒன்று. 2 ரோஜாவும் அழகா இருக்கு.
  படங்கள் எல்லாமே அழகா இருக்கு.
  இங்கு இனி பப்ளிக் ல படம் கண்டபடி எடுக்கமுடியாது அஞ்சு.
  ஒருத்தங்களை இன்னமும் காணல....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :)இன்னிக்கு தலைப்பை வச்சிட்டுதான் எழுதினேன் :)
   ஹாஹா
   //எல்லா மாடல்களிலும் எனக்கென்னவோ உங்க மாடல்தனித்து தெரிவதா தெரிகிறது அழகா செய்திருக்கிறீங்க
   //
   மிக்க ப்ரியா ..இதை செஞ்சு கை வெட்டுப்பட்டு நல்லவேளையா முதலில் முடிச்சிட்டேன் :)
   பில்டிங் கட்டினது என் கணவர் :)

   அணிலார் யாருக்கோ சொல்றார் :) அப்பப்போ அணிலார் பேசுவார் இனிமே
   இங்கேயும் யாருக்கும் தெரியாமத்தான் எடுப்பேன் .ஒருத்தவங்க மெடிடேஷன்ல இருக்காங்க :)
   மிக்க நன்றி ப்ரியா

   Delete
 9. எல்லோரும் கால் ஆற:) அமருவார்கள்:)) அதென்ன காலாற நடப்பது கர்ர்ர்ர்ர்ர்:)) தலைப்பிலேயே டமிழ்ப் பிழை இருக்கிறது.. எங்கே எங்கள் தமிழ்ப் புலவர்:)) கூப்பிடுங்கோ அவரை மேடைக்கு:))... ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. கால் +ஆற = காலாற மியாவ் :) தமிழில் டீ குடிச்ச உங்களுக்கு தெரியாததா :))

   Delete
  2. அதேதான் கால் ஆறோணும் என்றால் ஒழுங்கா ஒரிடத்தில இருக்கோணும் எனச் சொன்னேன்:))

   Delete
 10. சரி அடிஅடி என அடிச்சிட்டேன்ன் இனித்தான் போஸ்ட் படிக்கப் போறேன்ன் ச்ச்சோ டோண்ட் டிசுரேப்பூ மீ ஓகே?:)

  ReplyDelete
 11. அந்த கோயில் கட்டிய கைகளுக்கு மீ வைரத்தில காப்புப் போடப்போறேன்ன், நிஜமாத்தான்.. பூ, மரம் மக்க்கள் எல்லாமே சூப்பரா இருக்கு. [எதுக்கும் ஆடித்தள்ளுபடி வரட்டும்]..

  உண்மையில் மிக அழகு அஞ்சு.. ஆனா ஸ்ரீராம் சொன்னதைப்போல இன்னும் அழகா படமெடுத்திருக்கலாம்.. இது ஒழுங்கா தெரியவில்லை...

  செலக்ட் பண்ணி விட்டார்களோ? உங்களுடையது நிட்சயம் செலக்ட் ஆகும்.. அங்கு இருப்பவற்றில் இதுதான் அதிகம் மினக்கெட்டு செய்ததாக தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. //மீ வைரத்தில காப்புப் போடப்போறேன்ன், நிஜமாத்தான்.//

   பறக்கிற மாதிரி இருக்கு :) எஸ் நாங்கதான் பெஸ்ட் :)சொல்லிட்டாங்க
   ஹலோ மியாவ் நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்றேன் ஐ போனில் எடுத்ததே கன்னா பின்னான்னு வருது ..எனக்கு இன்னும் படமெடுக்க ட்ரெயினிங் தேவை :)

   Delete
  2. இது ஞானிதான் எழுதினதா? அவர் உங்களைப் பாராட்டி நான் படித்ததே இல்லையே. இதுல ஏதேனும் உள்குத்து இருக்கா?

   ஏஞ்சலின் - நீங்க அப்பாவி. உடனே நம்பிட்டீங்களே. எதுக்கும் கொஞ்சம் செக் பண்ணிப்பார்த்துட்டு அப்புறம் நம்புங்க.

   Delete
  3. ஆமாம் நெல்லைத்தமிழன் எனக்கும் டவுட் இருந்திச்சி .சந்தேகத்தை தீர்க்க 5 டைம்ஸ் என் கணவர் கையை கிள்ளி பார்த்தேன் கத்தினார் :) அப்போ உண்மையைத்தான் பூஸார் சொல்லிருக்கார்னு கன்பார்ம் பண்ணிட்டேன் :))))))))
   //ஏஞ்சலின் - நீங்க அப்பாவி.// I AM FLYING :)

   Delete
  4. //நெ.த.June 14, 2018 at 5:09 AM
   இது ஞானிதான் எழுதினதா? அவர் உங்களைப் பாராட்டி நான் படித்ததே இல்லையே. இதுல ஏதேனும் உள்குத்து இருக்கா?//

   https://media.giphy.com/media/KQwZNdsEtMecg/giphy.gif

   Delete
 12. //நான் ஆர்வக்கோளாறில் படமெடுக்க ,மகள் தடுத்தாள் :)
  ஆனாலும் ஒண்ணு க்ளிக்கிட்டேனே :)//

  ம்ஹூம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்ஞூறு கிலோ மீட்டர் தொலைவில இருந்து கிளிக்கினதுக்குத்தானே இந்த பில்டப்பூ?:)

  ReplyDelete
 13. ///இங்கே பாரும்மா உலகத்தில் பிடிச்சது பிடிக்காதது நல்லது கெட்டது இப்படி எல்லாம் இருக்கும் உனக்கு ஒன்று பிடிச்சிருக்குன்னு எல்லாருக்கும் அதே விஷயம் பிடிக்கணும்ம்னு அடம்பிடிக்க கூடாது
  அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் புரிஞ்சிதான்னு சொல்ற மாதிரி இருந்திச்சி :)///

  ஒரு ஞானி அதிரா சொல்லிப் புரியாததெல்லாம் ஒரு அணில்ப்பிள்ளை சொல்லியா புரிஞ்சீங்க?:))..

  இருப்பினும் எனக்கொரு டவுட்டூ அணிலாரைப் படமெடுட்த்ஹது ஆரூஊஊஊ?:)).. சூப்பரா போஸ் குடுக்கிறாரே...

  இன்று அம்மா சொன்னா.. கார்டினில் ஒரு அணில் வந்திருந்தது .. நான் முயல் என நினைச்சேன்.. அவ்ளோ பெரிசு.. கிரே கலர்.. முதுகில் கோடுகள் இல்லை” என்றா...

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் :) கர்ர்ர் :) உங்களை ஏமாற்றலாம் ஆனா என் பொண்ணுகிட்ட முடியவே முடியாது :) ரொம்ப ஸ்ட்ராங்கா அடிச்சி சொல்லிடுவா :)
   அதுபோல அனிமல்ஸ் என்ன சொல்றாங்கன்னு எனக்கு புரியுமே :) அதான் உங்க கூடவே அடிக்கடி சுத்தறேன்
   ஹீஹீ நான்தான் அணிலாரை எடுத்தேன் :) அனிமல்ஸ் மட்டும் ரொம்ப க்ளோஸ் என்கூட .வாங்களேன் உங்களையும் அய்கா எடுக்கறேன்

   இங்கே வாக் பண்ணும்போது அந்த ஏரியாவில் குறுக்க நெடுக்க நடக்குங்க அணில்சும் :) எல்லாம் முயல் சைஸ்தான்

   Delete
 14. ஆவ்வ்வ்வ்வ்வ் அன்னக் குடும்பம் என்னா அழகூஊஊஊஊ என் கண்ணே பட்டிடும்போல இருக்கு... எங்கள் அன்ன ஃபமிலி அன்று படம் போட்டனே அஞ்சு.. இம்முறை அவை முட்டையிடவுமில்லை குஞ்சு பொரிக்கவுமில்லை... இப்போதானே குஞ்சுகள் வரும் சீசன்.. அல்லது இன்னும் காலம் இருக்கோ..

  அடிக்கடி பார்க்கிறேன் தம்பதிகள் மட்டும் என்சோய் பண்ணிக்கொண்டிருக்கினம் ஆற்றில்:)). குழந்தை குட்டி பற்றி எக்கவலையும் இல்லாமல் ஹா ஹா ஹா கர்ர்:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் :) எப்போ ரிலீஸ் ஆனங்ஙனே தெரிலா :)
   நானா ஹே பீரில் ஏரிப்பக்கம் போகாததால் முதல் நாளை மிஸ் பண்ணிட்டேன் இனிமே டக் குடும்பங்களும் வருவாங்க

   Delete
  2. ஹாஹா ஹனிமூன் கப்பிள் :)

   Delete
 15. சோமபானம்??? புதுப்பெயர் எனக்க்கு.. ஒருவேளை அன்றைய வகுப்புக்கு மீ அப்செண்ட் போலும்.. பிக்கோஸ் மீக்கு டமில்ல டி ஆக்கும்.

  ஆனா எங்கட டெய்சிப்பிள்ளை சரியான நாடகக்காரி அவவுக்கு எதுவுமே பிடிக்காது.. பூனை எனில் பால் குடிக்கும் எனத்தான் படிச்சோம்ம் ஆனா எங்கட டெய்ஷிக்கு பால் பிடிக்காது ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. அநேகமா இதோட ஆப்சென்ட் ஆனா கிளாஸை கூட்டி கழிச்சி பார்த்தா நீங்க தமிழ் வகுப்புக்கே போகலைன்னு கை ஜோசியர் சொல்லறார்

   Delete
 16. //அதில் நீல நிறம் என்று இருந்ததால் வாங்கினேன் இவ்வருடம் கொஞ்சம் ப்ளூ கலர் வந்த மாதிரி தெரியுது :)//

  பொய்யாகச் சொல்ல மாட்டார்களே இங்கு.. ஏதும் தவறுதலாக லேபல் மாறுப்பட்டு விட்டதோ சேல் என்பதால்... ஆனா விழிம்பில கொஞ்சம் நீலம் கலப்பாக இருக்கு.. நீங்க மை பூசி விடவில்லைத்தானே?:).

  ஆனா நல்ல அழகான பெரீய ரோஸ்ஸ்ஸ்..

  ReplyDelete
  Replies
  1. இது ப்ளூ னுதான் போட்டிருந்தது :) காரர் நான் சாயமடிக்கலை
   நான் வாங்கிட்டு வர எல்லாமே ரெண்டு மூணு வருஷத்தில் மாறுதே கர்ர்ர் :)

   Delete
 17. ஹலோ ரோஜாக்குப் பின்னால கார்டின் இன்னும் கிளீன் பண்ணாமல் இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதை விட்டுப்போட்டு அணில் பிடிக்கவும் சுவான் பிடிக்கவும் சுத்திக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஐவியை நாங்க வளர விட்டுட்டோம் .பேர்ட்ஸ் ஒளிய ய வசதின்னு .இது 2 வீக்ஸ் முன்ன எடுத்து நேத்து கணவர் லீவில் க்ளியர் பண்ணிட்டார் தோட்டத்தை

   Delete
 18. /// ஸ்லைட்டா பிங்க் பார்டர் அடிச்சு பூத்திருக்கு :)//

  கேள் ஆக மாறுகிறதோ? சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
 19. //இவை நைஜெல்லா மலர்கள் //
  டெய்சிப் பூக்களும் தெரியுதே.. மீயும் நேற்று கிராஸ் கட் பண்ண முன் அந்த யெல்லோ பிளவேர்ஸ் டெய்சி பிளவேர்ஸ் எல்லாம் படமெடுத்தனே.. விரைவில் போட்டுக் கொல்லுவேன்ன் வெரி சோரி போட்டுக் கொள்வேன் புளொக்கில் எனச் சொன்னேன்:)

  ReplyDelete
  Replies
  1. ஹலோமியோவ் அது மஞ்சள் பாப்பி :)
   மலர்களை இத்தனையும் பார்க்கலாம் போடுங்க போடுங்க :)

   Delete
 20. நீல நிறம் எங்கே? கோயில் கட்டிய கைகள் உண்மையாகவே வைரக்காப்புக்குத் தகுதியானவங்க தான்! மற்றத் தகவல்கள் எல்லாம் அருமை. பூனைக்கும் சோமபானம்? புதுத் தகவல்! நைஜெல்லாப் பூக்கள் முதல் தரமாப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கிக்கிக்கீ:) நீலம் அது வெளுத்துப்போச்சு :)
   நைஜெல்லா எங்க வீட்ல நிறைய இருக்கு .சீரக வெரைட்டிதான் :)
   இங்கே பூனை பைரவர்களுக்கும் இருக்கு :)

   Delete
  2. சரி அப்ப உடனே அனுப்பி வைங்க :) வைரக்காப்பு :)

   Delete
 21. எல்லா படங்களும் மிக அழகு.
  நீங்கள் செய்த மினி மாடல் கோவில் அழகு.
  மகள் சொன்னவை அருமை.
  அணில் அழகு.
  ஏரிகரையோர குடும்பம் வெகு அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா .மிக்க நன்றி .மகள் தான் எனக்கு ஆசிரியர் :) இங்கே

   Delete
 22. திப்பிலி ரசம் சாப்பிட வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா சுட்ட அப்பளத்துடன் தரேன் :)

   Delete
 23. மலர்கள் எல்லாம் அழகு.

  //பறக்கிற மாதிரி இருக்கு :) எஸ் நாங்கதான் பெஸ்ட் :)சொல்லிட்டாங்க //

  வாழ்த்துக்கள் ஏஞ்சல்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) நன்றிக்கா

   Delete
 24. குட்டி குட்டி கோவில் மாடல் க்கள் எல்லாம் சூப்பர்...உங்கதும்..

  அனைத்து படங்களும் பளிச் பளிச்...

  வாத்து குடும்பம் செம்ம..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு .வாத்து குடும்பம் தொடர்ந்து வருஷா வருஷம் பார்க்கிறேன்ப்பா .மிக்க நன்றி மாடல்களை ரசித்தமைக்கு

   Delete
 25. கோவில் மாடல் அருமை. மற்றவங்களோட மாடல்களையும் க்ளோஸப்ல போட்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் .நிறைய படமா எடுத்தேன் ..அதென்னமோ ஐபேடிலிருந்து டைரக்ட்டா இணைக்க நேரமெடுத்துச்சு ..அதான் பாதியை கட் பண்ணிட்டேன் .அதோட அவங்க டிஸ்பிளே வைச்ச இடம் அவ்ளோ வெளிச்சமாவும் இல்லை .

   Delete
 26. இதைப் போன்ற மாதிரிகளை நிறையவே செய்ததுண்டு பள்ளி நாட்களில்..
  அப்போதெல்லாம் இதற்கான சாதனங்கள் கிடைப்பது மிகவும் அரிது...

  அப்ழைய நினைவுகளைத் தூண்டின - இந்த மாடல்கள்!..
  வாழ்க நலம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா இதோட பேஸ் பழைய அட்டைப்பெட்டி .மற்றும் பல பொருட்கள் ரீசைக்கிள் செய்யப்பட்டவை ஆஹா நினைவுகளை தூண்டிவிட்டேனா .எழுதுங்களேன் ஸ்கூல் அனுபவங்களை .மிக்க நன்றி அண்ணா

   Delete
 27. கோவில் மாடல் நன்றாக இருக்கிறது. சோம பானம் குடிக்கும் பூனையும்(இதுக்கு வந்த வாழ்வைப் பாருடா என்கிறார் யாரோ), அணிலும் அது கூறும் கருத்தும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுக்கா மிக்க நன்றி :)
   இங்கே வளர்ப்பு பிராணிகளுக்கு சொகுசு அதிகம்தான் :)

   Delete
 28. மாடல்கள் ரசிக்கும்படி இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா .மிக்க நன்றி

   Delete