அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/4/18

உங்களிடம் சில வார்த்தைகள் ....கேட்டால் கேளுங்கள்

உங்களிடம் சில வார்த்தைகள் ....கேட்டால் கேளுங்கள் 
===============================================






                                                                                     
                                      
                                      இது நம்ம நண்பர் மதுரைத்தமிழன் ஆரம்பித்து வைத்துள்ள தொடர் பதிவு .உண்மையாக அவரால் எனக்கும் ஒரு அட்வைஸ் கிடைத்தது அந்த பதிவை அவர்பக்கம் தேடோதேடென்று தேடினேன் கண்ணுக்குப்படலை ..அது நட்பு பாராட்டும்  விஷயத்தில்  அளவாக இருத்தல் இது அநேகமா  2012 /2013 இல் எழுதினார்னு நினைக்கிறேன். அப்புறம் அதிராமியாவ்  கிட்டயிருந்தும் அட்வைஸ் கிடைச்சிருக்கு :) எப்பவுமே மியாவ் என்னை கு .கு என்று சொல்வாங்க :) அது குறைமாதக்குழந்தை :) நான்  எல்லாத்துக்கும் அவசரப்படுவேன் அதை வச்சி சொல்வாங்க :) அந்த அட்வைஸ்  நான்  இப்போல்லாம் கவனமுடன் follow செய்கிறேன் .தாங்க்ஸ் மியாவ் :) 
அப்புறம் நெல்லைத்தமிழனின் பின்னூட்டங்கள் .  உங்கள் பிள்ளைகள் கொடுத்துவைத்தவங்க எல்லா விஷயத்தையும் அழகாய் அவதானித்து விளக்குவார். சிலருடைய எழுத்துக்கள் நடவடிக்கைகள் பின்னூட்டங்கள் நம்மை பண்படுத்தும் .எனக்கு வாழ்க்கையை புரட்டிப்போட்டு அடிவாங்கிய சம்பவம் அப்படி அடிபட்டு நொந்தநேரத்தில் கிடைத்த அட்வைஸ் அப்படியெல்லாம் பெரிய கஷ்டம்ல்லாம் கடவுள் எனக்கு தரவில்லை.ஏன்னா அவருக்கு தெரியும் சின்ன  கஷ்டமும் தாங்கும் வலிமைகூட இல்லாத பதர் நான் என்று  . :) .அநேகமா இந்த பதிவுக்கு நான் பொருத்தமான நபர்தானா என்றும் எழுதுமுன் தயக்கம் வந்தது .  

நான் யாருக்கும் அட்வைஸ் தருமளவு பக்குவப்படவில்லை ஆனால் நான் கற்ற பெற்றவற்றை இங்கே பகிர்கிறேன் 

முக்கிய குறிப்பு .பதிவு நீண்டுவிட்டது :) ஆகவே எனது அடுத்த பதிவு ஒரு வாரகாலம் கழித்தே வெளிவரும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமா வந்து  படிங்க :)
அட்வைஸ் ..இது இலவசமாக நாம் கேட்காமலேயே கிடைக்கும் ஒன்று .எப்போ எங்கிருந்து எந்த  சூழலில் என்றெல்லாம் தீர்மானிக்கவே முடியாதபடி தானே  வரும் :)
இப்படி வரும் ஆலோசனைகள் நமக்கு பாடமாக பண்படுத்த ,வழிநடத்த உதவலாம் ஆனால் பாடம் கற்றுக்கொள்ளப்போவது நாம் மட்டுமே ..

                                                                              
ஆரம்பிக்குமுன் ஒரு அரிய தத்துவத்தை மிக கவனமுடன் கஷ்டப்படாம களவாடிக்கொண்டு வந்துள்ளேன் :) எங்கேயிருந்து களவாடினேன் என்பதை கண்டுபிடிப்போருக்கு ஒரு சின்ன  கிண்ணத்தில் கத்திரிக்கா தொக்கு அனுப்பிவைக்கப்படும் :)

()உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்கவேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

எல்லார்கிட்டயும் ஒரு சில  மைனஸ் பாயிண்ட் இருக்கும் அப்படி என்னிடமுள்ள சில மைனஸ்களை இதுவரை ப்ளஸ்ஸாக்க முடியவில்லை :) என்னிடம் உள்ள மிகப்பெரிய மைனஸ் எளிதில் உணர்ச்சிவசப்படுவது ..என் கணவர் மற்றும் மகள் இருவரும் அடிக்கடி சொல்வது .. you are too emotional ஆனால் அதே சமயம் எமோஷனல் ஆனாலும் எந்த விளிம்புக்கு போனாலும் மனதுக்கு இஷ்டமில்லாத தவறு என்று தோன்றுகிற பட்சத்தில் அப்படியே அனைத்தையும் விட்டு விலகுவேன் . 

அப்பா 
=====

அப்பா இப்போ உயிருடன் இல்லை ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் எனக்கு மறக்காது ..இப்பவும் நேர்மையான பிற ஜீவராசிகளை நேசிக்கும் ,எந்த  சூழலையும் எதிர்கொள்ளும் பொறுமையை கற்றுக்கொடுத்தவர் அப்பா ..எனக்கு 11 வயது இருக்கும் எனக்கு தெரிந்தது நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பது மட்டுமே மற்றபடி உட்பிரிவுகள் பற்றி தெரியாத வயது அப்போ ஒருமுறை அப்பாவுடன் பேசும்போது என் பிரென்ட் ரோமன் கத்தோலிக்க பெண் என்று சொன்னேன் ..உடனே அப்பா கடிந்துகொண்டார் ..நீ முதலில் ஒரு ஹியூமன் பிறகே மதம் எல்லாம் வரும் இன்னொருமுறை இப்படி சாதி மத பிரிவை வைத்து பேசக்கூடாது என்றார்.அதேபோல அவருடைய நெருங்கிய நட்புக்கள் கிறிஸ்துவரல்லாதோர் மட்டுமே. இன்னொன்று அவர் எந்த இடத்திலும் யாரிடமும் பேசும்போதும் மதக்கருத்துக்களை திணிக்கும் வண்ணம் பேசியதே இல்லை ..
அவர் சொன்னது அப்போ சின்ன வயதில் மனதில் ஆழப்பதிந்தது இதுவரை பாரபட்சமில்லாமல் அனைவருடனும் பழகும் குணத்தை கற்றுக்கொடுத்தார் அப்பா .அதேபோல தவறு நானே செய்திருக்கும் பட்சத்தில் தயக்கமின்றி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குணத்தையும் கற்றுக்கொடுத்தவர் அப்பா .தவறு செய்வது மனித இயல்பு ஆனால் ஐயோ தவறு செய்துவிட்டோமென்று சுயபரிதாபத்தில் நாம் வீழவே  கூடாது விழுந்தாலும் எழும்பணும் அதுவும் பிள்ளைகள் விழுந்தால் அவர்களை தூக்கி எடுக்க பெற்றோர்  உதவி செய்யணும் .இங்கே விழுந்தால் என்பது வாழ்க்கையில் என்று அர்த்தம் கொள்ளவும் ..



                             அப்பாவுக்கு எப்பவும் உண்மை பேசணும் எந்த சூழலிலும் பொய் பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்திருக்கார் லஞ்சம் தரக்கூடாது வாங்கவும் கூடாது . எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் இருக்கிறேன் .இந்த குணத்தால் இன்னமும் போலித்தனமான மனிதர்களை கண்டுவிட்டால் நெஞ்சு கொதிக்கும் எத்த்னையோ போலியாய் நடிப்போரை  அடிக்க தோன்றும் அப்பாவிகளை ஏமாற்றுபவர்களை எரிக்க தோன்றும் ஆனால்  அவர்களை குற்றம்  தீர்க்க  கடவுள் இருக்கிறார் என்று பொறுமையாக கடந்துவிடுகிறேன் இதுவும் அப்பாவிடம் கற்றதே .
                             
                              இன்னொரு அட்வைஸ் இதுவும் அப்பாவிடமிருந்து ..அப்பாவின் நண்பர் மகள் காதலில் விழுந்து திருமணம் புரிந்தவர் அவளது கணவர் அவரை மிகவும் துன்புறுத்துவாராம் கொஞ்சம் சைகோ லவ் டைப் தனக்கு மட்டுமே அவள் சொந்தம் நட்பு யாரிடமும் பேசக்கூடாது பேசினால் பிறர் அவளுக்கு அட்வைஸ் தருவார்கள் அதனால் அவள் தன்னைவிட்டு பிரிவாள் என்று பயத்தில் அப்பெண்ணை அநியாயத்துக்கு  அடக்கி வைத்து  டார்ச்சர்   கொடுத்தான்  .அப்பாவின் நண்பர் ஒரு அப்பாவி அப்பாவிடம் வந்து புலம்ப அப்பா அந்த சைக்கோவை ஒன்றும் செய்யவில்லை அவன் கை காலை உடைச்சி மிரட்டியிருந்தா அதுவும் பாதகமாகியிருக்கும் :) அந்த பொண்ணு இன்னும் அதிகமா லவ்வொட  அவனுக்கு சேவை செஞ்சிருக்கும் .மெதுவாக அந்த பெண்ணை அழைத்து அவளிடம் சில உபதேசங்களை கொடுத்தார் .. இங்கே பாரும்மா உனது வாழ்க்கை  உனது சுதந்திரம் சர்வ காலமும்  அடிமையாக இருக்க போகிறாயா என்றாராம் அந்த பெண் என்ன யோசித்தாரோ தெரியலை பிறகு சில நாட்களில் டைவர்ஸ் வாங்கி பின்னாளில் பிரபல வக்கீலாகிவிட்டார் :) அவரை நன்கு புரிந்த  மற்றொரு நல்ல வாழ்க்கை துணையையும் பெற்றார் .இப்பவும் சொல்வார் அப்பாவால்தான் தனது அறிவுக்கண் திறக்கப்பட்டதென்று .இதையெல்லாம் நான் பார்த்து வளர்ந்து உள்வாங்கிக்கொண்டேன் .
அதேபோல் எனக்கு திருமணமாகி  புகுந்த நாட்டுக்கு செல்லு முன் அப்பா சொன்னது . எந்த சூழலிலும் யாருக்கும் எதற்கும் பயப்படாதே உண்மையை சொல் உன் மனசாட்சி சொல்லும் வழிப்படி நட .குறிப்பாக யாராக  இருந்தாலும் அவர்களுக்கு அடிமையாக இருக்காதே .மனதில் பட்டதை பிறர் மனம் புண்படாதவரை சொல் அப்படி அவர்களுக்கு நீ சொல்வது கஷ்டம் தரும் என்று நினைத்தால் அந்த மாதிரி விஷயங்களுக்கு இடமே தராதே அளவோடு பழகினால் ,அப்போ இல்லை இயலாது என்று  சொல்லவே தேவை வராது என்றார்  .இது வரை  அதைத்தான் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன் ஆனால் சில சமயம்  சிலரிடம் மட்டும் ஓவர் அன்பால் மரியாதையால்   இடம் தருவேன் .அதனாலேயே சிலரிடம் இல்லை முடியாது வேண்டாம் என்ற வார்த்தைகளை சொல்லாமல் தவிர்க்கிறேன் என்று தோணுது ..நேர்பட பேசி ஒருவர் மனதை காயப்படுத்துவது கொஞ்சம் சிரமமே ஆனாலும்  சில விஷயங்களில் பேசித்தான் ஆகணும் பார்ப்போம் இனியாவது ஸ்ட்ராங்காக இருக்கிறேனா என்று :) என் பிரச்சினை என்னவென்றால்  எதிராளியிடத்திலும் என்னை வைத்து இருத்தி  பார்ப்பது .

அம்மா 
=======
இந்த  அம்மாங்களுக்கு  தலையெல்லாம் கண்கள் :) அதுவும் சந்தேகக்கண்கள் என்று நினைக்கிறேன்.
சிலரை பார்த்தவுடன் அம்மாவுக்கு உள்ளுணர்வு சொல்லிவிடுமாம் இவர் குணம் சரியில்லை என .ஒரு நட்பு  மனம் நிறைய பொறாமையுடன் என்னுடன் இருந்தது காலம் கடந்து எனக்கு தெரிந்தது .அதை கேள்விப்பட்டபோது  மனதுக்கு கஷ்டமாக இருந்தது  அதை  ஆரம்பத்தில் கண்டறிந்திருந்தால் அல்லது அம்மா சொல்படி அவரது நட்பை விட்டு விலகி இருந்தால் நான்  உயரம் தொட்டிருக்க முடியும் .ஒரு பெரிய நிறுவனத்தில்  எனக்கு கிடைத்த ஒரு opportunity இந்த நட்பால் தடைபட்டது . ஆனால்  அந்த சின்ன  வயதில் அம்மா சொல்லும்போது அதை  பெரிதாக கணக்கில் எடுக்கலை அம்மா மேலேதான் கோபம் வரும் . ஆனால் நான்  செய்த தவறுகளை ஒருபோதும் மறக்காததால் அதை என் மகள் செய்துவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறேன் 

                                 எனக்கொரு பழக்கமுண்டு எக்ஸாம் ஹால் போகும் வரையிலும் கூட படிக்கும் அனைவருக்கும் அமர்ந்து தெளிவாக பாடங்களை விளக்கி எளிய நடையில் சொல்லித்தருவேன் இறுதியில் எக்ஸாம் ஹாலில் தெம்பெல்லாம் போய் மயக்கமடைந்த நிலையில் அரைகுறை உயிருடன் பரீட்சை எழுதி வருவேன் .எனது பலவீனம் என் மகளுக்கும் கொஞ்சம் வந்தது துவக்கத்திலேயே கண்டுபிடித்தேன் என்னைப்போலவே எளிதில் ஆழமாக பழகி உணர்சிவசப்படும் குணம் அவளுக்கும் இருந்தது .இதை அவளது 12 வயதில் கண்டுபிடித்தேன் ஒரு ஜெர்மன் கட்டுரை மாய்ந்து மாய்ந்து எழுதி அதில் A ஸ்டார் எடுத்தாள் .இவளுடன் படிக்கும் ஒரு மாணவி  இங்கு சிறுவயதுமுதல் மகளின் தோழி ஒன்றாகவே செகண்டரியில் சேர்ந்தார்கள் .அந்த மாணவி இவளிடம் கட்டுரையை ஆசிரியர்  இவளுக்கும் காண்பிக்க சொன்னதாக  பொய் சொல்லியிருக்கா .ஆனால்  நான்  நம்பவில்லை இவள் துறுதுறுவென தனது கட்டுரையை எடுத்துக்கொண்டு பையில் வைத்தாள் .

நான்  உடனே மகளிடம் ஆசிரியருக்கு மெயில் அனுப்பி அவர் அப்படி சொன்னாரா என்று விசாரிக்க சொன்னேன் தயங்கிக்கொண்டே என்னையும் திட்டிக்கொண்டே இவள் விசாரிக்க பதில் வந்தது //நோ // இவள் உடனே அந்த நட்பிடம் இல்லை நான்  தர  மாட்டேன் உனக்கு வேண்டுமென்றால்  எப்படி எழுதுவதென்று சொல்லித்தரேன் என்றாள் .அதற்க்கு அப்பெண் நீ ட்ரூ கிறிஸ்டியன் இல்லை உனக்கு உதவிசெய்ய மனமில்லை என்றெல்லாம் சொல்லியதாம் :) ஆனால் மகள் திடமாக இருந்ததால் பல கட்டுரைகளில் இவளுக்கு ஸ்டார்ஸ் கிடைத்து உள்ளது .அதேபோல இன்னொரு பஞ்சாபி கிறித்தவ பெண்  எப்பவும்  பிரித்தானிய பிள்ளைகளுடன் நட்ப்பாக இருந்த பெண் ஆண்டு இறுதி தேர்வில் மகள்  உயர்மதிப்பெண் எடுத்ததும் மற்றவர்களை விட்டு இவளை பிடித்துகொண்டாள்  ஒவ்வொருநேரம் இவளிடம் டிஸ்கஸ் செய்வது ப்ராக்டிகலில் இவளது துணையுடன் பிராக்டிகல் வேலைகளை முடிப்பது ஹோம்ஒர்க்கில் அனைத்தையும் இவளை கேட்டு செய்வது (இத்தனைக்கும் அந்த பெண் டியூஷனும் செல்கிறாள் ) என இவளையே பற்றிக்கொண்டிருந்தாள் இதை நான்  கண்டுபிடித்துவிட்டேன் ..சிலரின் குணம் அது எப்படியாவது முன்னேறணும் அது பிறரைப்போல காப்பியடித்து அவர்களை பற்றிக்கொண்டு மேலே செல்வது அப்புறம் பற்றியகைகளை தூக்கி எறிவது சிலர் இருப்பாங்க அவர்களுக்கு நாம் ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தால் இரண்டொரு மாதம் கழித்து நாம் அறிமுகப்படுத்தியவரையே நமக்கு அறிமுகப்படுத்தும் வகையினர் :)அது குறுக்கு புத்தி உள்ள சில மனித இயல்பு நாம்தான் தெளிவான சிந்தையுடன் இருக்கணும்  .பைபிளில் ஒரு வசனமுண்டு wise as serpents, and harmless as doves. இதை மகளுக்கு புரிய வைக்க நினைத்தேன் .

                          இப்படி ஒருநாள் மிகவும் டயர்டாக வந்தா மகள் பரீட்சையன்று  .அம்மா எக்ஸாம் எழுத முடியலைமா எல்லாம் தெரியும் ஆனா கண் இருட்டி வந்தது என்றாள் .நான் கண்டுபிடித்துவிட்டேன் .யாருக்காவது லெசன்ஸ் சொல்லிதந்தாயா ..ஆமாம்மா  நாலு பேருக்கு டூ அவர்ஸ்  சொல்லிக்கொடுத்து அப்புறம் எக்ஸாம் போனேன் என்றாள் :) பாருங்கள் விதை ஒன்று  போட்டா  என்ன கிடைக்கும் :)  பிறகு அவளை அமர்த்தி நான் பட்ட கஷ்டங்களை சொன்னேன் எப்படி முன்னேராமல்  போனேன் என்றும் சொன்னேன் அன்றுமுதல் எக்ஸாம் ஹாலுக்கு செல்லும் வரை இவள் யாரிடமும் வாய் திறப்பதில்லை இவ்வளவும் நான் பட்ட அனுபவங்களை சொல்லி வளர்த்ததால் தான் இல்லைனா  இவளும் என்னைப்போல் ஏமாளியாகியிருப்பா :).ஆனால் இப்பவும் பிள்ளைகளுக்கு பாடம் புரியாத  நேரம் பாடங்களை சொல்லித்தரா ஆனால் பரீட்சைமுன் எதுவும் செய்வதில்லை .உதவி செய்வதில் தவறில்லை ஆனால் அதனால் நமது நிலை தடுமாறிடக்கூடாது .
ஆனால் ஒன்று பிள்ளைகளிடத்தில் மட்டும் அட்வைஸ் அளவாக ஹைக்கூ போல இருக்கணும் இல்லைனா அவங்க ஓவர்டேக் பண்ணிடுவாங்க சொல்பேச்சைக்கேளாமல் .

நம்ம போதாத காலம்னு ஒன்றிருக்கு அது நண்டு சிண்டெல்லாம் நமக்கு பளார்னு அறையறாப்ல அட்வைஸ் சொல்லிட்டு போவாங்க :)
அப்படி சமீபத்து அட்வைஸ் என் ஜுனியர் கிட்டேயிருந்து :)
மகளுடன் பள்ளியில் படிக்கும் நெருங்கிய நட்பு எதோ சாப்பிடக்கூடாத பொருளை அது ஒரு இலை நம்மூர் முருங்கை அதை எந்த  வழியிலோ பார்மசியில்  வாங்கி  தவறாக பயன்படுத்தியிருக்கு அதை  அந்த பெண்ணின் தாய் கண்டுபிடித்து அப்பெண்ணின் போன் உட்பட எல்லாவற்றையும் பயன்படுத்த தடை  போட்டுட்டார் .தான் செய்த தவறை அந்த பெண் இமெயிலில் என் மகளுக்கு அனுப்பி இருக்கு //என்னை மன்னித்துவிடு  தவறு செய்துவிட்டேன்  நீ என்மேல் நல்ல அன்பும் பாசமும் வைத்திருந்தாய் ஆனால் உன்னை பார்க்க கூட எனக்கு கில்ட்டி எனக்கு அருகதையில்லை //.அது அந்த சிறு பெண்ணில் குற்றமில்லை வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு போறாங்க வயதுவந்த மகளுடன் நேரம் செலுத்துவதில்லை மேலும் படிப்பில் ஒரு உதவியும் செய்வதில்லை ஆனால் அப்பெண் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்று ஒரே அவளை திட்டியதால் அப்பெண் மனமுடைந்து தவறான பழக்கவழக்கங்களுக்கு இடமளித்திருக்கா .
கிறிஸ்துமஸ் விடுமுறைமுன்னே ஒருநாள் ஸ்னோ காரணத்தால் பள்ளி மூடப்பட்டது அப்போ அந்த பெண் எங்கள் மகளை தன வீட்டிற்க்கு வருமாறு சொன்னாள் ..என்னதான் எங்கள் மகள் மீது 100 சதவீதம் நம்பிக்கை இருந்தாலும்  அவளை அங்கே அனுப்ப விருப்பமில்லை எனக்கு .சிறுவயதுமுதல் ஒரு குணம் ஏதேனும் அசம்பாவிதமா தீயதோ நடந்தா அந்த திசையில் கண்ணையும் திருப்ப மாட்டேன் .அதனால் இல்லைம்மா இப்போ படிக்கவேண்டிய வேலை இருக்குனு சொல்ல சொன்னேன் .என் மகளும் ஒன்றும் என்னை எதிர்த்து பேசாமல் அப்படியே செய்தா.பிறகு மாலை  என்னிடம் அம்மா நீங்கள் நான் அங்கே செல்வதை விரும்பவில்லைத்தானே  என்று கேட்டாள் .நானும் ஆமாம்ம்மா என்று உண்மையை சொன்னேன் .
உடனே மகள் சொல்றா //அம்மா ஒருவர் தவறு செய்ததாலே  அவரை வெறுப்பது மாபெரும் தவறு.அப்பெண் செய்தது அறியாமையால் பெற்றோர் நிராகரிப்பால் .அவளுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் .அவள் அந்த பொருளை பயன்படுத்தியது மிகப்பெரும் தப்புதான் ஆனால் அவளை தனிமையில் விடவும் கூடாது ஷி நீட்ஸ் கம்பானியன்ஷிப் அண்ட் குட் ப்ரெண்ட்ஸ் ..என்றாள் .
இதே பெண்தான் மேலே ஜெர்மன் எஸ்ஸேவை மிரட்டி வாங்க முயற்சித்தவள் :) ஆனால் அந்த பெண்ணுக்கென கஷ்டப்பட்டு எங்க மகள் ஒரு ஸ்க்ராப் புக் செய்து அவளுக்கு தெரியாம அவளுடைய அம்மாவிடம் அப்பெண்ணின் சிறுவயது படங்களை மெயில் மூலம் வாங்கி பிரிண்ட் போட்டு கிறிஸ்துமஸ் பரிசாக அளித்தாள் .அந்த பெண் பரிசை திறந்த அன்று கண்ணீர் விட்டு அழுதாளாம் .அதை இப்பதிவில் இணைக்கவில்லை மற்றொரு பதிவில் இணைக்கிறேன் .
மகள் கூறியது  எனக்கு இந்த வாக்கியத்தை பொன்னான மொழியை படிக்கும்போது உரைத்தது ஆகவே இதையும் களவாடி இங்கு உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன் ..

//-------------------------------
“நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
ஆனால் உண்மையான நட்பு,

உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”
-------------------------------
இதுவும் சிறந்த  அட்வைஸ் நான்  பெற்றதில் .
=================================================================================




இதைப்போல நிறைய இருக்கு ஆனால் அட்வைஸ்கள் நீண்டாலும் ஒரு அயர்ச்சி ஏற்படும் அதனால் அவற்றை வேறொரு சமயம் சொல்கிறேன் .ஆனால் நீங்கள் வெளிநாட்டில் வாழ்பவரோ  அல்லது நம்நாட்டில் வாழ்பவரோ எங்கிருந்தாலும் பணத்தின் அருமையை பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள் .சினிமா  கேளிக்கைகளை அளவுடன் பார்க்க சொல்லுங்கள் யாரையும் ஹீரோஒர்ஷிப் செய்ய வேண்டாமென்று அறிவுறுத்துங்கள் . பெரியோரை மதிக்க கற்றுக்கொடுங்கள் .கடனுக்கு எப்பொருளையும் வாங்கி பழக்கி காட்டாதீர்கள் இருப்பதில் வாழ பழக்குங்கள் ..இவற்றைப்பற்றி எழுத இன்னும் நீளும் .இவற்றை நிறைய பேரிடமிருந்து குறிப்பாக எங்கள் ஆலயத்தில் உள்ள வயதான மெம்பர்சிடம் கற்றேன் ..
இப்படி ஒவ்வொருநாளும் நான் ஒரு மாணவியாக கற்றுக்கொண்டிருக்கிறேன் :) நான்  கற்றவற்றை பகிர்ந்துள்ளேன் இவை உங்களுக்கு இல்லைனாலும் பிள்ளைகளுக்கு பயன்படக்கூடும் எப்படி டீனேஜ் பிள்ளைகளிடத்தில் பழகுவது எப்படி என்பதை கற்றுத்தரக்கூடும் ..
இப்போ நான் கற்ற பெற்ற  அட்வைஸ்களை போல பலருக்கும் கிடைத்திருக்கும் ஆகவே இந்த தொடர் பதிவை தொடர்ந்து எழுதுமாறு  இந்த ஐவரை அழைக்கின்றேன் :)

 1,கருத்துக்களை கச்சிதமாக சொல்லும் கீதாக்கா  :) http://sivamgss.blogspot.co.uk/
   2,   கீதா ரெங்கன் மற்றும் துளசி  அண்ணா  :) http://thillaiakathuchronicles.blogspot.com/
   3, கவிதை காதலர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் http://engalblog.blogspot.com/
   4, உள்ளதை உள்ளபடியே பேசும் நேர்மையாளர் கில்லர்ஜி http://killergee.blogspot.com/

   5,பூவிழி http://poovizi.blogspot.com/

  

                                                   ********************************
அப்புறம் இவ்ளோ அட்வைஸ் நேர்மை பற்றியெல்லாம் பேசுபவர் மற்றவரின் அரிய கருத்துக்களை களவாடலாமான்னு யாரோ நினைப்பது எனக்கு கேட்குது :) நமக்கு உரிமையுள்ள இடத்தில இருந்து எடுத்துக்கொள்வதில் தப்பேயில்லை :)

=================================================================================

157 comments:

  1. அடியாத்தி.... நானுமா ?
    இன்னும் படிக்கவில்லை படித்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அழைப்பிற்கு நன்றி... எழுதுகிறேன் ஆனால் என்ன எழுதுவது ? அதுதான் தெரியவில்லை...

      Delete
    2. வாங்க கில்லர்ஜி :) சொன்னவுடன் ஓடோடி வந்ததற்கு நன்றி ..
      எழுதுங்க அங்கே மதுரைத்தமிழன் அவர் படித்த புத்தகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது மாதிரி ஏதாவது எழுதுங்க நாம் கற்றுக்கொண்ட பாடம் பதிவை படிக்கிறவங்களில் சிலருக்காவது பயன்படட்டும்

      Delete
    3. கில்லர்ஜி சிறிது கண்ணை முடி யோசியுங்கள் அதன் பின் எழுத விஷயம் மள மளவெண்ரு நிக்காமல் வரும்

      Delete
    4. இந்த பதிவைத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் சரியா

      இப்படி ஒரு நட்பா?
      http://avargal-unmaigal.blogspot.com/2012/01/blog-post_13.html

      நட்புக்கு ஒரு நல்ல விளக்கம் கூடிய ஒரு பதிவு தலைப்பு என்னவோ அரசியல் பதிவு போல இருக்கும் ஆனால் உள்ளே நல்ல விஷயத்துடன் கூடிய நட்பு பதிவு இது
      http://avargal-unmaigal.blogspot.com/2011/12/blog-post_22.html

      Delete
    5. கண்ணை மூடினால் தேம்ஸ்தான் தெரியுதூஊ:)..

      Delete
    6. @அவர்கள் உண்மைகள் ..பிரென்ட் இது ரெண்டுமேயில்லை .அதில் என் பின்னூட்டமும் இருக்கும் :)
      ஆனா எனக்கு நல்ல யூஸ் ஆச்சு அந்த நேரத்தில் உங்கள் போஸ்ட்

      Delete
    7. athiraமியாவ்January 5, 2018 at 1:08 PM
      //கண்ணை மூடினால் தேம்ஸ்தான் தெரியுதூஊ:)..//



      ஹாஹாஹா அது உங்களுக்கு மேடம் :)

      Delete
  2. ஏஞ்சல் சகோதரி/ஏஞ்சல் மிக்க நன்றி. எங்களையும் அழைத்தமைக்கு...

    உங்கள் அனுபவங்கள் பல சொல்லுது. உங்கள் பதிவைப் பெரிது என்று சொல்கின்றீர்கள் நாங்கள் இருவர் எழுத வேண்டும் என்றால் ரொம்பவே பெரிதாகிவிடும். சின்னதாகச் சொல்லறோம்.

    கீதா: எதிர்பார்த்தேன் ஏஞ்சல் நீங்க இல்லைனா அதிராகிட்டருந்து வரும்னு...நான் யோசித்து வைச்சுட்டேன்...எழுதறோம்...பதிவு வாசித்துவிட்டோம்...கொஞ்சம் கொஞ்சமாகக் கருத்துவ் வரும்...ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹீ ஹீ :) இது பாதிதான் கீதா அன்ட் துளசி அண்ணா :)
      இரண்டா பிரிப்பதில் உடன்பாடில்லை .ஏற்கனவே ஜெசி சார்ஜர் லாப்டாப் சார்ஜர் ரெண்டும் அடுத்த வாரமாகுமாம் மகளுக்கு ஸ்கூல் ஆரம்பிக்குமுன் பதிவை வெளியீட்டுடணும்னு போட்டுட்டேன் .மீதியை வேறு பதிவுக்கு சேவ் செஞ்சிட்டேன்

      Delete

    2. கீதா & துளசி இரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பதிவு எழுதக் கூடாது... ஆளுக்கொரு தனி பதிவு எழுதி ஒவ்வொருத்தவரும் குறைந்தது ஐந்து பேறுக்கு அழைப்பு விடுவிக்கனும் சும்மா தப்பிக்க விட்டுடுவோம்மா என்ன ஹீஹீ அது போல ஸ்ரீராம் மட்டும் எழுதி தப்பிக்க விடாமல் அவரையும் அவரின் வலைத்தளத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களை தனித்தனியாக எழுத சொல்லனும்

      Delete
    3. ட்றம்ப் அங்கிளிடம் ஏதும் அட்வான்ஸ் வாங்கியிருப்பாரோ ட்றுத்:)...

      Delete
    4. @அவர்கள் உண்மைகள் ..அதேதான் கௌதமன் ஸார் நிறைய அனுபவமிக்கவர் அவங்க சொன்ன நமக்கும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம் .எனக்கு நெல்லைத்தமிழனை அழைக்க ஆசை பிளாக் இருந்தா அவர் பெயரையும் இணைச்சிருப்பேன்

      Delete
    5. @Angel... நெல்லைத்தமிழன் எழுதலாமே... எங்கள் பிளாக்கில் வெளியிட்டு விடலாம்.

      Delete
    6. கர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஸ்ரீராம்:) நான் நெல்லைத் தமிழனை அழைச்சு எழுதச்சொல்லி எங்கள்புளொக் செவ்வாய் ஸ்டோரிக்கு அனுப்பும்படி கேட்க இருந்தேன் இப்பூடி அவடரப்படக்குடா ஜொல்லிட்டேன்ன்ன்:)

      Delete
    7. நெல்லைத்தமிழனை உங்கள் ஆசிரியர் குழுவில் இணைத்துவிடுங்கள் ஸ்ரீராம் அதற்கு பிறகு அவர் பதிவு எழுதாமல் தப்பிக் முடியாது..

      கெளதமன் சார் சின்ன சின்ன தகவல் பேஸ்புக்கில் இடுகிறார்....அவரையும் கலாய்க்லாம் என்றால் மனதில் ஒரு சிறு தயக்கம் தப்பாக ஏதாவது நினைத்து கொள்வரோ என்று அது போலத்தான் ஸ்ரீராமையும் முதலில் நினைத்து இருந்தேன் ஆனால் இப்ப அவர் தப்பாக எடுத்து கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்

      Delete
    8. நல்ல ஐடியா :) ட்ரூத் .ஆம் நாங்கூடத்தான் ஆரம்பத்தில் உங்களிப்பார்த்து எஸ் சார்னு அட்டெனஷனில் நிப்பேன் :) இப்பல்லாம் கொஞ்சம் கூட பயமேயில்லாம போச்சு

      Delete
    9. @ஸ்ரீராம் நீங்க எழுதும்போது நெல்லைத்தமிழனை தொடர சொல்லுங்க ..அது அனைவரும் படிக்க வசதியா இருக்கும்

      Delete
    10. இணையத்தில் கிடைத்த நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.

      நாம் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. தனிப்பட்ட முறையில் எந்தப் பயனையும் பெற்றதில்லை, கொடுத்ததில்லை. சம்பந்தமே இல்லாத வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள், வசிப்பவர்கள் நாம். ஆனாலும் நம் அனைவரிடமும் ஒரு நட்பு தோன்றியுள்ளது.

      35 வருடங்களுக்கு முன்பு, 'பேனா நட்பு' என்று சொல்வார்கள். இணையத்தில் அப்படிப்பட்ட நட்பு, வயது என்ற வேலியையும் தாண்டி நமக்குள் முகிழ்த்துள்ளது. அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

      Delete
  3. கடைசியில் சொல்லியிருக்கீங்க இல்லையா பணத்தின் அருமை எஸ் எஸ்...அது ரொம்ப ரொம்ப முக்கியம்...மகனுக்கு நான் ரொம்பவே சொல்லிக் கொடுத்தேன்..ஹீரோ வொர்ஷிப் எட்ஸ்ட்ரா...அவனிடன் சொன்னது என்னிடமோ அவன் அப்பாவிடமோ தவறு கண்டால் அதையும் தைரியமாகச் சொல்லணும் என்று...அம்மா அப்பா பெரியவர் தவறே செய்ய மாட்டாங்களா என்ன..ஸோ கண் மூடித்தனமான அன்பு கூடாது என்று...அவனும் எங்களிடமும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை...

    நான் என் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதைத்தான் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா .நிறைய இடங்களில் கண்ணால் காண்பது ..சின்ன பிள்ளைகள் ரொம்பவே பணத்தை விரயம் செய்றாங்க .எல்லாமே கஷ்டப்படாம கிடைக்கிறதால் அவங்களுக்கு அதன் அருமை தெரிறதில்லை .வேலை கிடைத்ததும் வெளிநாட்டு ட்ரிப் ஹாலிடேஸ் பிராண்டட் ட்ரெஸ் பென்ஸ் இல்லைன்னா உயர் ரக கார் இப்படித்தான் இங்குள்ளஇந்தியபிள்ளைகள் இருக்காங்க .

      Delete
    2. நானும் பணத்தின் அருமையை என் குழந்தைக்கு சொல்லி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால் அப்படி சொல்லிக் கொடுக்கும் முன்னால் அவளுக்கு பணத்தை காட்டிதானே சொல்லிதரமுடியும் நானும் பணத்தை பார்த்ததே இல்லை அதனால் கீதா ஏஞ்சல் அதிரா எல்லோருமாக சேர்ந்து எனக்கு ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி பணத்தை போடுங்களேன், பளிஸ்

      Delete
    3. கர்ர்ர் :) பணத்தின் அருமையை அது இல்லாதவர்களை காட்டித்தான் பழக்கணும் ..ஒரு படத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறவங்களை பார்த்து என் பொண்ணு தேம்பி அழுதா .அன்னிலேருந்து நோ food வேஸ்ட் :)

      Delete
    4. ஹலோ பொண்ணை எமோசனலாக வளர்க்காதீங்க....ப்ராக்டிகலாக வளருங்க அதாவது காலத்துக்கு ஏற்றவாறு வளர்க்கனும் இல்லையென்றால் மனசு உடைந்துவிடுவார்கள்

      Delete
    5. அது நான் சொல்லித்தராமலேயே வருதே :) ஜெனட்டிக்ஸ் னு நினைக்கிறேன் ஆனால் பல விஷயங்களில் அவள் என்னைவிட ஸ்ட்ராங் உண்மைதான் ஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வேணும் இக்காலத்து பிள்ளைங்களுக்கு

      Delete
    6. அவ அழததன் காரணம் உணவு ரொம்ப வேஸ்ட் பண்ணுவா நைசா ஒளிச்சி பக் பண்ணி கொட்டுவா சிங்கில் தண்ணி விட்டு கரைச்சி ஊற்றுவா .தீவில் சாப்பாட்டுக்கு கஷ்டபடர்வரை பார்த்து கில்டில் அழுதா

      Delete
    7. "பிராண்டட் ட்ரெஸ் பென்ஸ் இல்லைன்னா உயர் ரக கார் இப்படித்தான்" - இங்கு என்னுடன் வேலை பார்க்கும் அரபி பையன், சாதாரண சம்பளம் வாங்கும்போதே கடனில் BMI CAR வாங்கிட்டான். நான் அவன் கிட்ட, 'நீ பாக்கற வேலைக்கும், அதற்காக காரைக் கொண்டுபோகும்போது BMW காரா' என்று தோணுது. ஏன் பைசாவை வேஸ்ட் பண்ணற என்று கேட்டேன் (நமக்கென்ன என்று நினைக்காமல்).

      கடனில் எதையும் வாங்கக்கூடாது என்பது என் பாலிசி. அதேபோல் என்னிடம் கிரெடிட் கார்ட் எப்போதும் இருந்ததில்லை. நான் வைத்திருப்பது டெபிட் கார்டுதான். என் பசங்ககிட்டயும் சொல்லியிருக்கேன், கிரெடிட் கார்டு, லோன் என்பதெல்லாம், FUTURE MONEYஐ உபயோகப்படுத்துவதற்கு சமம். FUTUREல பணம் வருமா என்பதெல்லாம் நிச்சயமில்லை என்று.

      Delete
  4. எக்சாம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஹா ஹா ஹா நானும் அப்படிச் செய்ததுண்டு...நான் சொல்லிக் கொடுத்துட்டு எனக்கு ஊத்திக்கும் யாருக்குச் சொல்லிக் கொடுத்தேனோ அவங்க நல்ல மார்க் எடுத்திருப்பாங்க...ஆனால் அந்தப் பழக்கம் என்னை விட்டதில்லை...இப்பவும் தொடருது எக்ஸாம் இல்லைனாலும் வேற விஷயத்துல...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா :) எனக்கும் நடந்தது நம்ம உயிரை கொடுத்து கர்ணன் பரம்பரை ஆகிட்டோம் :) வேறவிஷ்யத்தில் மீயும்தான் :) ஹை 5 கீதா

      Delete
    2. ஹா ஹா ஹா.. என்னையும் பலதடவை சிலர், ஏணியாகப் பாவிச்சு மேலே போய்க்கொண்டிருப்பார்கள்.. மீ வச்ச இடத்திலேயே நிற்பேன்ன்:))... “இதுவும் கடந்து போகும்”:)..

      Delete
    3. நீங்க எக்ஸாம் முன்னால பலருக்கு சொல்லி கொடுத்து களைபடைந்து விடுவீர்கள் ஆனால் நானோ நன்றாக விளையாடி ஆட்டம் பொட்டு களைப்படைந்து விடுவேன் ஹீஹீ அப்புறம் எப்படி பாஸாகிவிட்டேன் என்று கேட்கிறீர்களா நான் வகுப்பில் மிக நல்லபிள்ளையாக நடித்து பேர் வாங்கிவிடுவேன் அதனால் என் ஆசிரியரும் பாவம்டா இவன் என்று நூற்றுக்கு முப்பதைந்து மார்க் போட்டு பாஸாக்கிவிடுவார்கள் எனக்கு இது ரொம்ப வருடமாக தெரியாமல் இருந்தது என்னடா நாம 35 மார்க்கு வாங்கும் அளவிற்காக எழுதி இருக்கிறோம் என்று. கடசியில் ஒரு நாள் வாத்தியாரிடம் வாய் விட்டு கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் இவன் பாவம் என்று மார்க் போட்டு பாஸாக்கி விட்ட கதை

      Delete
    4. ஸ்கூலில் என்ன விளையாட்டு :) அநேகமா உங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ரொம்ப அப்பாவிங்கனு நினைக்கிறேன் :)

      Delete
  5. எங்கிட்ட ரெண்டு வார்த்தை அன்பா பேசினா போதும் டபால்னு கவுத்துரலாம்...என்னை...நிறைய ஏமாந்துருக்கேன்...இன்னமும் ஏமாறுகிறேன்..மாத்திக்க முடியலை...தெரியுது ஆனாலும் மாத்திக்க முடியலை. அது போல யாராவது கஷ்டப்பட்டா அவங்க எப்படிப்பட்டவங்கனு எல்லாம் பார்க்கறது இல்லை உடனே ஏதாவது செய்ய முடியாதானு மனசு அடிச்சுக்கும்...செய்திடுவேன்...பணத்தால முடியாது எனக்கு ஜஸ்ட் ஃபிஸிக்கலா.....இதுக்காக நான் நிறைய வாங்கிக் கட்டிக்குவேன் ஆனாலும் என் மனசு அப்படிச் செய்யாம இருக்கறது தப்புனு சொல்லும் எதிர்பாராத அன்பை ப்ராக்டிஸ் பண்ணனும்னு பண்ணியதில் கற்றது....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா :) நானும் என் கணவரும் இதே குணம் ..அது இளகிய மனசு இருப்பதால் சட்டென நோ ,முடியாதுன்னு சொல்ல மனசு வராதே

      Delete
    2. ஹீஹீ கீதா இப்படி என்று தெரிந்திருந்தால் என் டூப்பு அவரை பார்த்த போது கவுத்திருக்க சொல்லி இருப்பேனே ஹீய்ஹீ

      Delete
    3. ஏஞ்சல் உங்க பக்கத்துவீடு காலியாக இருந்தால் சொல்லுங்க நான் அங்கே வந்து குடி வந்துடுகிறேன்

      Delete
    4. ஹாஹ்ஹா :) இப்போ கொஞ்சம் திருந்தியிருக்கிறோம் ரெண்டுபேருமே :)நீங்க பக்கத்து வீடு வந்தா நானா டெய்லி போட்டோ வீடியோ எடுத்து லைவ் அப்டேட் கொடுப்பேன் பூரிக்கட்டை அப்டேட்ஸ் :)

      Delete
    5. என்னடா தோழன் பக்கத்துக்கு வீட்டிற்கு வந்தால் அவர் அடி வாங்குவதில் இருந்து காப்பாற்றுவோம் என்று சொல்லமால் என்ன வைச்சு ரியாலிட்டி ஷோ பண்ண ஐடியா வைச்சிருக்கீங்க போல இருக்கே சுத்த மோசம்ப்பா நீங்க..

      Delete
    6. மாமி அடிச்சாங்கன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் ஆகவே நானா அவங்க சைட் தான் சப்போர்ட் :)

      Delete
  6. யெஸ் ஏஞ்சல் உங்களைப் போலவே நோ சொல்ல ரொம்பவே யோசிப்பேன் பிறர் மனம் புண்படக் கூடாது என்று நினைப்பதால்....அதை எப்படிச் சொல்வது என்ற தவிப்பு. அதே சமயம் தவறு செய்யறோமோ என்ற தவிப்பு என்று....சரி இங்கு பேசினால் பதிவுக்கு ஒன்னும் இல்லாம ஆகிடும் ஹா ஹா ஹா ஹா ஹா ..ஸோ இங்க நிறுத்திக்கறென்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா அங்கே பதிவில் எழுதுங்க :)

      Delete
    2. இப்படி எதுக்கும் எமோஷனல் ஆகிறது ரொம்ப கெட்டதாம் :)ஈஸியா ஏமாற்றிடுவாங்க

      Delete
  7. இன்னமும் உங்க பதிவ பார்த்துட்டு இங்க எழுதணும்னு தோனுது கை துறு துறுக்குது...அதுவும் நீங்க அம்மா அப்பானு எழுதியிருக்கீங்களா....அதைப் பார்த்ததும் எனக்கு நிறைய இருக்கு சொல்ல...சரி பதிவுல சொல்லறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் கீதா அன்ட் துளசி அண்ணா எழுதுங்க நீங்கள் பெற்ற ஆலோசனைகளை .நிறைய விஷயங்கள் உங்ககிட்டருந்து கற்றுக்கொள்கிறேன் .

      Delete
  8. ஆவ்வ்வ்வ் இந்த வருசம் பிறந்ததுதான் பிறந்துது எங்கேயும் மீ ட 1ஸ்ட்டா வர முடியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... கில்லர்ஜி இப்போ எதுக்கு உகண்டா ட்ரிப்பைக் கான்சல் பண்ணிட்டு இங்கின வந்தார்ர்:)....

    ///உங்களிடம் சில வார்த்தைகள் ....கேட்டால் கேளுங்கள்//

    ட்றுத்தைக் கேட்டிருக்க வேண்டிய கிளவி:) அங்கின ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊ:)).. அதென்ன கேட்டால் கேளுங்கள்:).. அப்போ கேட்காட்டில் போங்கோ வா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தலைப்பு சொல்லிட்டபடியால வேறு வழியில்லை மீயும் அதே தலைப்பையே போட்டு ஸ்ராட் மூசிக்க்க்க்க்க்க்க்க்க்:)).... எப்போ வ்வெளிவருதோ அந்தப் பரம் பொருளுக்கே வெளிச்சம்ம்ம்:))..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹ்ஹா :) வாங்க மியாவ் கேட்டல் கேளுங்களில் எனக்கும் என்னமோ ஒரு சிறு அசௌகரியம் தோணுச்சு ..:) சரி நமக்கு பிடிச்சது எடுத்து எழுதுவோம்னு விட்டுட்டேன்

      Delete
    2. பதிவின் தலைப்பு உங்களிடம் சில வார்த்தைகள் என்றுதான் முதலில் வைத்தேன் அதன்பின் தான் கேட்டால் கேளுங்கள் என்ற வரியை சேர்த்தேன் இந்த ரெண்டு வார்த்தைகள் படிக்க ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.....ஆனால் தலைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் அப்போதுதான் பலரையும் சுண்டி இழுக்கும் சில சமயங்களில் தலைப்பு மற்றவர்களை சீண்டும் படியாகவும் அல்லது நகைக்கும் படியாகவும் அல்லது என்னடா சொல்லி இருப்பான் என்று நினைக்கும் படியாகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் சொல்லும் நல்லதோ அல்லது கெட்டதோ பலரையும் சென்று அடையும் என்று நான் நினைக்கிறேன் அதுதான் என் வலைத்தளத்திற்கு வருகைதரும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இந்த காலத்தில் நல்ல விஷய்த்தை நல்லமாதிரி மிக அமைதியாக சொன்னால் கேட்க மாட்டார்கள்

      Delete
    3. //இந்த வருசம் பிறந்ததுதான் பிறந்துது எங்கேயும் மீ ட 1ஸ்ட்டா வர முடியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//
      வயசு ஆச்சுன்ன்ன அப்படித்தான் இப்படி சின்ன புள்ளைங்க கூட எல்லாம் பொட்டி இடக்கூடாது

      Delete
    4. ஹாஹாஹா :) ஆமாம் இந்த பூனை நிறைய நேரம் தானே வாய்யைகுடுத்து மாட்டிக்கும்

      Delete
  9. கறுப்புப் பூஸாரை மதில்மேல் போட்டூ.. கீழே நண்பர் மதுரைத்தமிழன் எனப் போட்டதைப் பார்க்க எங்கயோ இடிக்குது:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

    ///அந்த அட்வைஸ் நான் இப்போல்லாம் கவனமுடன் follow செய்கிறேன் .தாங்க்ஸ் மியாவ் :) ///

    ஹலோ எச்சூச்ச்மீஈஈஈஈ:)) உப்பூடிச் சொல்லிட்டு இப்பவும் கு கு வாத்தானே மளமளவெண்டு எழுதிப் போட்டிட்டீங்க:) மீ ஜொன்னேன் தானே :).. சரி என்ன சொன்னேன்ன்ன்ன்.. ம்ஹூம்ம் எனக்கே மறந்திடுச்சு விடுங்கோ:)).. பல நேரங்களில் நம் மனது நம் கொன்றோலுக்குள் நிற்காது.. அவசரப்படும்.. இதைச் சொல்லும் நானே எதையும் யோசிக்காமல்தான் மளமளவெனக் கொமெண்ட்ஸ் போட்டிடுவேன்ன்.. பின்பு சிலசமயம் தப்பாகிடுமே என ஒரே ஃபீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு மழையா இருக்கும்:)..

    ReplyDelete
    Replies
    1. ஹலோவ் :) என்ன சொன்னிங்க நினைவில்லையே திருப்பி சத்தமா சொல்லுங்க .இப்போ நீங்க தான் கு .கு .குக்கு .அந்த பூஸ் பின்னாடி பானரில் சில வார்த்தை கட்டாகி கவனிச்சிங்கள :)
      lost /saved

      Delete
    2. கு கு என்றால் குண்டு குழந்தை என்றுதான் அர்த்தமாம் அப்படின்னு எனக்கு அதிரா வாட்சப்பில் தமிழ் கற்று கொடுத்தாங்க

      Delete
    3. என்னாதூஊஊ வாட்சப்பிலயோ?:) மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன் ... ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)

      Delete
    4. அதிராவ் நீங்க வாட்சப்பில இருக்கீங்களா :) அதுவும் தமிழ் கற்றுக்கொடுத்தீங்களா .தெய்வமே இதென்ன தமிழுக்கு வந்த மாபெரும்சோதனை .

      Delete
    5. குண்டு குழந்தை :) ஹாஹாஹா இப்படிலாம் காலை வாரக்கூடாது :) நானா அவ்ளோ குண்டு இல்லை

      Delete
  10. ///அப்புறம் நெல்லைத்தமிழனின் பின்னூட்டங்கள் ///

    இதை நானும் படு வன்மையா ஆமோதிக்கிறேன்ன்... நகைச்சுவையோடு தட்டிக் கொடுத்துத் திருத்துவார்:)..

    ///சின்ன கஷ்டமும் தாங்கும் வலிமைகூட இல்லாத பதர் நான் என்று . :) ///

    ஹலோ கடவுளுக்கு மட்டுமில்ல மீ க்கும் தெரியும்:)).. காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ ஒரு பெயர் சொல்றேன்ன்ன்ன்:).. “புல்லுத்தடக்கி”:) ஹா ஹா ஹா... அதாவது புல்லுத்தட்டினாலே விழுந்து எழும்புவோரை அப்பூடிச் சொல்றதாக்கும்:).. சரி போனவருசம் எத்தனை தடவை உழுந்தூஊஊஊஊஊஊஊஉ உழுந்து எழும்பினீங்க எனக் கேய்க்கவே மாட்டேன்ன்:)) ஏனெனில் இது பலபேர் வந்து போகும் பப்புளிக்குப் பிளேசெல்லோ.. எனக்கது தெரியாதோ?:) அதாலதான் காதில சொன்னேனாக்கும்:)).. மீ இஸ் எ குட் கேள்ள்ள்ள்ள்:)))

    ReplyDelete
    Replies
    1. இந்த வருட resolution :) இனிமே உங்ககிட்ட எந்த ரகசியமும் அதுவும் எங்கே எத்தினி வாட்டி விழுந்தேன்னு சொல்லவே மாட்டேன் :) விக்ட்டோரியா ஸ்டேஷன் இஸ் ஸ்டில் பெண்டிங்

      Delete
    2. நான் தான் எதையுமே கேய்க்கவே மாட்டனே:)).. என்னைக் கேளு என்னைக் கேளு:)) எத்தனை தரம் விழுந்தேன்னு கேளு எனக் கேய்க்க வச்சிட்டு:)) இப்போ ஜொள்ள மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா... தானே விழுந்து.. பின்பு டக்கென தானே எழும்பி.. பின்பு அதை தானாகவே என்னிடம் ஜொள்ளி:).., அடிவாங்கும் என் முதல் எனமி:) நீங்களேதேன்ன்ன்ன்ன்:))..

      உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமோ?:)

      ஆண்கள் ஒரு விசயத்தைச் சொன்னால்.. அதை 3 ஆல பிரிச்சுப் பார்க்கோணுமாம்:))[ஓவர் புழுகர்களாம்:)]

      பெண்கள் ஒரு விசயத்தைச் சொன்னால் அதை 3 ஆல பெருக்கிப் பார்க்கோணுமாம்:)) ஹா ஹா ஹா:)).. [மறைப்பினமாம் பலதை:)]

      Delete
    3. என்ன எங்க வீட்டுமாமி மாதிரி நீங்களும் கிழே அடிக்கடி விழுவீங்களா என்ன

      Delete
    4. ஆஹா பேச்சோட பேச்சாக அதிரா ஒரு உண்மையை போட்டு உடைச்சிருக்காங்க //பெண்கள் ஒரு விசயத்தைச் சொன்னால் அதை 3 ஆல பெருக்கிப் பார்க்கோணுமாம்:)) ஹா ஹா ஹா:)).. [மறைப்பினமாம் பலதை:)]///

      அதிராவின் வயது 16x16X16 இப்படி பெருக்கி பார்த்தால் சரியாகத்தான் இருக்கும்

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்:) எதில வேணுமெண்டாலும் டச்சூ பண்ணுங்கோ பட் வயசில மட்டும் டச்சூஊப் பண்ண விடமாட்டேன்ன்ன்ன்ன் பிக்கோஸ் சுவீட் 16 எல்லோ:)..

      Delete
    6. @ Avargal Unmaigal ..:))
      ஹையோ இந்த பூனை வசமா மாட்டிக்குச்சி பூனைக்கு பூனை மட்டுமே எதிரி :) 16 டைம்ஸ் 3 ..48 .
      ட்ரூத் உங்க கணக்குப்படி சரிவராது என் கணக்கு பாருங்க

      Delete

    7. ஆஹா என்ன வைச்சு ரியாலிட்டி ஷோ பண்ண ஐடியா வைச்சிருக்கீங்க போல இருக்கே சுத்த மோசம்ப்பா நீங்க...
      ஹலோ நீங்க அதிரா உங்க தோழி என்பதால் தப்பாக கணக்கு பண்ணி 48ந்னு சொல்லி இருக்கிங்க... எங்க வாத்தியார் சொன்னபடி 16X16X16 தான் சரி

      ஆமாம் எதற்கு 16X16X16 ந்னு போட்டு வயசை சொல்லாமல் இருக்கிறேன் என்று கேட்ப்பிங்க நான் கணக்குல வீக் அதனாலதான் ஆன்ஸ்ர் தெரியாமா 16X16X16 ந்னு திரும்ப் திரும்ப சொல்லி இருக்கிறேன் ஹீஹீஹீ

      Delete
    8. ஹலோவ் 4096 வருது பூனை வில்லங்கம் புடிச்ச பூஸ் 4.096 .4ப்ளஸ் 0ப்ளஸ் 9ப்ளஸ் 6 னு மாத்தினாலும் மாற்றுவாங்க இல்லைனா நாலாம் மாசம் 96 ஆம் இயர் பிறந்தேன்னுவாங்க அதனால் 48 ஓகே

      Delete
    9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருவருக்கும் கண்ணிலதான் புரொப்புலம்ம்ம்:))

      Delete
  11. //நான் யாருக்கும் அட்வைஸ் தருமளவு பக்குவப்படவில்லை//

    அதுதான் எங்களுக்கு தெரியுமே:) இதை வேறு ஜொள்ளிக் காட்டோணுமோ?:).. சமையலிலாவது விரைவில் பக்குவப்பட:).. இதுவேற பக்குவப்படுறது:).. வாழ்த்துக்கள்:)..

    இங்கிலீசுக் கோட்.. மிக அருமையா இருக்கு.. அட்வைஸ் ஐ விட பல சமயம் ஒரு தட்டிக்கொடுத்து தடவி விட்டால்தான் மனம் அமைதியாகும்... ஆனா தூரத்தில் இருப்பின் அட்வைஸ் மட்டும்தானே கொடுக்க முடியும்..

    ///()உணர்வுகளும் உணர்ச்சிகளும்,//

    விடுங்கோ விடுங்கோ இப்பவே போறேன் காண்ட் கோர்ட்டுக்கு:)).. என் புளொக்குக்கு இன்சூரன்ஸ் தேவைவைவைவை:)).. கண்ட நிண்ட பொருட்கள் எல்லாம் களவு போகுது:)).. அது எங்கட கண்ணதாசன் அங்கிள் சொன்னது அஞ்சு:)..

    //என்னிடம் உள்ள மிகப்பெரிய மைனஸ் எளிதில் உணர்ச்சிவசப்படுவது ///
    இதேதான் என் பிரச்சனையும்... முக்கியமாக எதுக்கெடுத்தாலும் கண்கள் குழமாகிடும் கர்:)) அடுத்து எங்கேயோ ஆராருக்கோ ..யாரென்றே தெரியாதோருக்கு என்னமோ கொடுமை நடந்தால், அதை நினைச்சு நினைச்சு ரெண்டு நாளைக்குச் சாப்பிடாமல் இருப்பேன்ன்.. சதாம் ஹூசைன் அங்கிளைத் தூக்கில் போட்டதுக்கு அன்று நான் சமைக்கக்கூட இல்லை:... கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. அவரது மனநிலை எப்படி இருக்கும்.. நேரம் கொடுத்தாயிற்று தூக்குக்கு.. படங்களில் பார்த்ததை நேரில் நடக்கும்போது ஒரு மனிதராக இருந்து என்னால் சாப்பிடவே முடியவில்லை..:(..

    ReplyDelete
    Replies
    1. haiyo miyaav நானும் தான் எனக்கு அவரை சிங்கம் மாதிரி பார்த்திட்டு ஆர்மி பிடிச்சிழுத்து போன காட்சி பார்த்து ரொம்ப அப்செட் . இதுக்காகவே என் கணவர் சிலபல காட்சிகள் டிவில வந்தா ..இப்போ இந்த பக்கம் வராதிங்கன்னு அலெர்ட் பண்ணுவார் .ஆவ் அது ஐ தாசன் அங்கிள்தா :) சரி திருடும்போது அதெல்லாம் பார்க்கமுடில :).that english quote மகள் எதுக்கோ சேவ் பண்ணினது

      Delete
    2. மியாவ் உண்மையை சொல்லனும்னா .நானா பல செய்திகளை டிவில பார்ப்பதில்லை ..பார்த்தா நைட்டெல்லாம் கெட்ட கனவுகள் வரும் ..எல்லாருக்கும் எல்லாரையும் அடிமைப்படத்தணும் வல்லரசுகளின் ஒரே குறிக்கோள் இது

      Delete
    3. தூக்கு மேடைபற்றிலாம் நானும் யோசிச்சி அழுதிருக்கேன் :(
      எல்லா உயிரும் மனிஷ உயிர் ஆனா ஒன்னு மற்றதை கொல்ல துடிக்குது

      Delete
    4. அவர் தூக்கில் தொங்கியது, காணொளியாக எனக்கு வந்தது (அப்போ வாட்சப்லாம் இல்லை). பார்க்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. நல்ல ஆளுமை சதாம் ஹுசேன். இந்தியாவிடம் அன்புகொண்டவர்.

      "ஒன்னு மற்றதை கொல்ல துடிக்குது" - 'உயிர்' என்று பார்த்தால் எல்லா விலங்குகளும் உயிர் தானே. அதனைக் கொன்று தின்னவேண்டியிருக்கிறது அல்லவா? அதில் 'மனித உயிர்' உசத்தி என்று இருக்கிறதா என்ன?

      Delete
    5. ஆமாம் நெல்லைத்தமிழன் ..எங்க வீட்ல எத்த்னையோ கோழி புறா எல்லாம் இருந்தது .முட்டை தவிர வேறெதுக்கும் நாங்க பயன்படுத்தலை அதேபோல விற்பதுமில்லை பறவைகளை அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்றேன் :) பதிவை தேத்தணுமே .சதாம் கிங் தான் .பக்கத்துக்கு வீட்டில் ஒரு குர்டிஷ் குடும்பம் இருந்தாங்க அவங்க சொல்வாங்க அமேரிக்கா கால வைக்காட்டி எங்க நாட்டைப்போல அழகான நாடு பாபிலோன் தொங்குதோட்டம் என்னென்னவோ சொல்வாங்க சதாம் அத்த்னை அழகா வச்சிருந்தாராம் அந்த இடத்தை

      ஆமாம் நெல்லைத்தமிழன் நீங்க சொல்வது உண்மைதான் .என்னைப்பொறுத்தவரை எறும்பும் உயிர்தான் யானையும் உயிர்தான் .எல்லாத்துக்கும் வலி இருக்கு கையும் வாயும் நிறைய எழுத பரபரக்குது வேறொரு சமயம் சொல்றேன்

      Delete
  12. உங்கள் அப்பாவின் அட்வைஸ் கள் மிக சரியானதே.. நம்மால்தான் அதை உடனுக்குடன் புரிஞ்சுகொள்ள முடியவில்லை.. நானும் அப்பாவின் அட்வைஸ் என 2013 ல நிறைய எழுதிட்டேன்:).. இனி மீள் பதிவாக்குகிறேன்:))..

    //இங்கே விழுந்தால் என்பது வாழ்க்கையில் என்று அர்த்தம் கொள்ளவும் ..//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அப்போ கீழே விழுந்தால் மட்டும் தூக்கி விட ஆள் தேவையில்லையோ?:)

    ReplyDelete
    Replies
    1. கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் மியாவ் அப்பா அம்மா சொல்லும்போது புரியலை வாழ்க்கை கஷ்டங்கள் இப்போ தனியா நிக்கும்போதுதான் எல்லாம் தெரியுது .பாம்பி காட்டில் காணாமப்போச்சே அப்படி இருக்கு .
      மியாவ் நான் விழுந்தப்போ நானேதான் எழும்பினேன்:) யாரும் பார்க்கக்கூடாதேன்னு மேபி என் வயசுக்கு குவிக்கா எழும்பிட்டேன் உங்களுக்கு கஷ்டமாயிருந்ததோ தரைல விழுந்தப்போ எழும்ப :)) okay hereafter i will come and help hold my hands :)

      Delete
    2. என்னது நீங்க இரண்டு பேரும் என்னுடைய மனைவியின் இன்னொரு வெர்ஷானகவே இருக்கிறீங்க

      Delete
    3. ஷ்ஹ்ஹ் :) பப்லிக் பப்லிக் :) சமீபத்தில் விழுந்து எழுந்து உயிர் பிழைச்சேன் .அது இரவு புல் வழுக்கி முன்னாடி விழுந்தேன் பின்வாக்கில் விழுந்திருந்த பெரிய இரும்பு கம்பி ஓரம் .அநேகமா எல்லாரும் மாறிமாறி எனக்கு அஞ்சலிப்பதிவு போட்டிருப்பிங்க .விதி வலியது :)

      Delete
    4. இனிமே நீங்க கிழே விழுந்தால் உடனே பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு கூப்பிட்டு உங்களை உடனே ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்ப சொல்லுங்கள் நானும் உடனே லண்டனில் குண்டு விழுந்ததுன்னு பரபரப்பா ஒரு பதிவு போட்டுடுறேன் ஹீஹீ

      Delete
    5. கர்ர்ர் :) எவ்ளோ சந்தோசம் ஒரு அப்பாவி விழுந்து அடிபட்டா என்ன எதுன்னு விசாரிக்கம :) போட்டோ எடுக்கட்டாம் :) .

      Delete
    6. //பின்வாக்கில் விழுந்திருந்த பெரிய இரும்பு கம்பி ஓரம் .அநேகமா எல்லாரும் மாறிமாறி எனக்கு அஞ்சலிப்பதிவு போட்டிருப்பிங்க .விதி வலியது :)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
      ஐயோ இப்படி சும்மா தமாசுக்காயினும் சொல்லாதீங்க அஞ்சூஊ..ஊ...

      என்னவர் 14 வருடம் கோமாவில் கிடந்தது பின் தலையில் இரும்புக் கம்பி அடிச்சதால்தானே...
      அந்தக் கொடுமை இனி யாருக்கும் வரக்கூடாதுன்னு ஆண்டவன் கிட்டே வேண்டிக்கொள்கிறேன்.

      நீங்க வேற அஞ்சலிப்பதிவு, விதி வலியது அது இதுன்னு சொல்லி..... வேண்டாம் அஞ்சு. உங்களை வேண்டிக் கேட்டுக்கிறேன் இனியொருதரம் இப்படி சொல்லீடாதீங்க ப்ளீஸ் மா!

      Delete
    7. ஸாரி சாரி :( இளமதி மன்னியுங்க நானும் உண்மையில் இருட்டில் கவனிக்கலை .இங்கே எழுதும்போதும் அப்படியே சொல்லிட்டேன் .விளையாட்டுக்கும் இனி சொல்லலை ,வெரி சாரி

      Delete
    8. சரி சரி.. ஸாரில்லாம் வேணாம்.. மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் கேட்க வேண்டாம் மா. நானும் எமோஷனல்தானே..
      அதான் இப்படி ஆயிட்டேன்..
      என் மனதில் ஆழப் பதிந்த வலி அது. எங்கேனும் யாரும் சும்மா தடக்கி விழுந்தாலே ஐயோ அம்மான்னு அலறி என் பையனிடம் இப்பவும் அம்மா... ப்ளீஸ் ஏன் இப்படின்னு... கேட்கிறேன்.
      விளையாட்டையும் விபரீதமா மனசு நினைச்சுடுது. அதான்.

      நீண்ட காலம் நலமோடிருக்கணும் நீங்க! அஞ்சுன்னா அஞ்சுதான்!... :)

      Delete
  13. உங்கள் அம்மா போலத்தான் எங்கள் அம்மாவும் , பார்த்தவுடன் கணிப்பிட்டுவிடுவா ஒருவர் எப்படிப் பட்டவர் என:).. ஆனா என்னால இன்றுவரை கணிப்பிட முடிவதில்லை..
    நேரில் பழகும் மனிதர்களில்...என் கணிப்பீட்டில் சிரிப்போர் எல்லாம் நல்லவர்கள்:).. சிரிக்காமல் இருப்போர் எல்லாம் .. கொஞ்சம் ஒருமாதிரி ஆனவர்கள் என நினைப்பேன்... ஆனா சிரிச்சு சிரிச்சே நம்மைக் கவிழ்ப்போரும் பலர் உண்டு..

    ///“நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
    ஆனால் உண்மையான நட்பு,

    உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”///

    இதில்கூட எனக்கு 100 வீதம் நம்பிக்கை இல்லை அஞ்சு...:(.. இந்த நட்பெல்லாம் திருமணமாகும்வரைதான் உயிர் கொடுக்கும்:).. பின்பு குடும்பமா நட்பா என வரும்போது குடும்பம்தான் முன்னுக்கு வரும்...

    ஆனா நல்ல நட்பு இருப்பின் அப்பப்ப தடவி ஆறுதல் கொடுக்கும்... ஏனெனில் நம்மைப் புரிந்து வைத்திருப்போர் அவர்கள்தானே...

    உங்கள் மகள் சொல்வது உண்மைதானே, ஆனா ஒரு தாயாக இருக்கும்போது நமக்கு அது தெரிஞ்சாலும் நம் மனது ஏற்காது :(.

    ReplyDelete
    Replies
    1. மியாவ் இதை முதலில் சொல்லிடறேன் நான் பெரிய மூட்டையோட உங்க வீட்டுக்கு வந்து கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளினேன் இந்த நிழல் தத்துவமும் அங்கே கிடைச்சது அப்புறம்தான் பதிவு எழுதும்போது அதுக்கேற்ற போலிருந்ததா இணைச்சேன் :) அந்த பொண்ணு இவளோட 1 ஆம் கிளாசில் இருந்து நட்பு மோர் தன 12 இயர்ஸா ப்ரண்ட்ஸ்

      Delete
    2. உங்கள் அம்மாவின் குணம் எனக்கும் உண்டு ஆளை பார்த்தாலே அவர்கள் பேசுவதை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்

      Delete
    3. அதிரா நானா சிரிப்பவர்கள் சிரிக்காதவங்கனு வகைப்படுத்துவதில்லை ஆனால் .உள்ளே ஒரு பல்ப் லைட் அடிக்கும் :) கேர்புல் அப்படின்னு அது சொல்லும்போது கவனமா இருப்பேன் .
      அதிராவ் பெரும்பாலான அம்மாக்கள் அலெர்ட்டாதான் இருப்பாங்க .இதுவரை அம்மா சொன்னது எதுவுமே தப்பானதுஇல்லை உறவு நட்பு என எல்லாவற்றிலும் சரியா சொல்வாங்க ஆனா அவங்க சொல்லும்போது கோபமாவரும் .இப்படி ஸ்ட்ரெயிட் பார்வரடா இருக்கங்களேன்னு ஆனான் அத்தனையும் உண்மை .
      உயிர் வரை நட்பு அபூர்வமாத்தான் கிடைக்கும் அதிரா .அதெல்லாம் ஒரு வரம்

      Delete
    4. ஆம் அதிரா நமக்குத்தான் பிள்ளைங்களைப்பற்றி அதிகமா யோசிக்க தோணுது அது பிள்ளைகளுக்கு புரிய நாள் எடுக்கும் அவங்க புரிஞ்சிக்கும்போது அவங்களுக்கு டீனேஜ் பருவ பிள்ளைக இருப்பாங்க :)
      .அனால் என் கணவர் ரொம்ப கவனம் எதுக்கும் அவசரப்படமாட்டார் :) அன்னிக்கு மகள் போய்ட்டானு கேட்டப்ப நைசா என்கிட்டே பெர்மிஷன் கேக்க சொல்றார் :)

      Delete
    5. //Avargal UnmaigalJanuary 5, 2018 at 1:27 AM
      உங்கள் அம்மாவின் குணம் எனக்கும் உண்டு ஆளை பார்த்தாலே அவர்கள் பேசுவதை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்//

      அப்போ எங்களைப்பற்றி நாலு வார்த்தை நல்லதா எடுத்து விடுங்க

      Delete
  14. அச்ச்சச்சோ லாஸ்ட்டில் ஒரு பெரிய கொமெண்ட் எழுதி அனுப்பமுன் றிபிரெஸ் பண்ணி விட்டிட்டேன் கர் 4 மீ:)..

    ரொம்ம்ம்ம்பப் பெரிய பதிவா இருக்கும்போல என எதிர்பார்த்தேன் பட் அழகா, அளவா.. தெளிவா சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க.. எப்பூடி என் ள,ழ எல்லாம் துள்ளி விளாடுது:))..

    முடிவில அஞ்சு லாப் எலிகள் மாட்டுப்பட்டிட்டினமோ:))... ட்றுத்துக்கு ஹெட் சுத்தப்போகுது இப்போ:))...

    ஓகே அஞ்சு இத்துடன் நிறைவு செய்து கொண்டு “இந்த சமூகம்[என்னைச் சொன்னேன்:)] கீதாக்கா.. கீதா பக்கம் புறப்படுகிறேன்ன்”:))..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்படி அடிக்கடி நடக்கும் போஸ்ட் ஆகிடுச்சின்னு நினைச்சி வெளிவருவேன் .நிறையநேரம் கட் அன்ட் பேஸ்ட் செய்றதாலும் நடக்குது .
      ஹாஹாஹா முதல் முழு பதிவை பார்த்திருந்தா மயக்கம் போட்டிருப்பிங்க :) அவளோ பெரிசு அப்புறம் பாதியாக்கிட்டேன் .தாங்க்ஸ் மியாவ் உங்க வீடு பொருட்களை எனக்கு தந்து உதவினத்துக்கு

      Delete
  15. அருமையான ஆலோசனைகள் அப்பாவும் அம்மாவும் கொடுத்திருப்பது. மிகவும் பயனுள்ள அனுப்பவக்கருத்துக்கள் தங்களிடம் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நேசன் .எல்லா பேரண்ட்சும் நல்லவற்றைத்தான் சொல்லித்தராங்க .எப்பவும் பயன்தரும் ஆலோசனைகள் . நேசன் சந்தோஷமா பயணம் போய்ட்டு வாங்க .நீங்க ஏற்கனவே பயணம் துவங்கிட்டீங்கன்னு நினைச்சேன் திரும்பி வரும்போது வலையுலகில் இந்த தொடர் உங்களையும் அழைத்திருக்கும் :) வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் நலம்தானே .அப்படியே எங்க சென்னைப்பக்கம் போனா நான் ஹாய் சொன்னேன்னு சொல்லிடுங்க எங்க மெட்றாஸ் கிட்ட :)

      Delete
  16. நல்ல நட்பு எதுவரை வரும் என்ற கேள்வி என்னையும் இன்னும் சிந்திக்கவைக்கின்றது!)))) சில நேரத்தில் ஒத்த சிந்தனை தோன்றுமோ பலருக்கு?)))

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் நேசன் அதனால்தானே நாம எல்லாரும் இன்னமும் நம் நட்பை தொடர்கிறோம் 2011 லருந்து .அங்கே முகப்புத்தகத்தில் ரெவரி வந்தார்னா இங்கே பிலாக் பக்கம் அனுப்பி வைங்க

      Delete
  17. ஓ...அஞ்சு!...

    பதிவினைக் கண்டு ஆழப் பெருமூச்சு விட்டேன் நான்!..
    நல்லதொரு பதிவு. ஒரு சுய பரிசோதனை என்று சொல்லலாம்.
    எமது குணாதிசயம், எமக்குக் கிடைத்த புத்திமதிகள், நாம் குடும்பத்தினர்க்கும் அடுத்தவர்க்கும் தரும் ஆலோசனைகள் + புத்திமதிகள் என்று வகைப்படுத்தி உங்கள் பங்கில் மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்!

    உங்கள் பெற்றோர் குறிப்பாக உங்கள் அப்பா பெருமைப்பட வேண்டியவர் அஞ்சு!
    அம்மாவின் குணமும் அருமை. எனது அம்மாவும் உங்கள் அம்மாவைப் போலத்தான்..:)

    நீங்கள் உங்கள் மகளை அணுகும்விதம் அவளுக்கு எடுத்துச் சொல்லும்விதம் நல்லதொரு எடுத்துக்காட்டு!
    மெச்சுகின்றேன் உங்களை! வாழ்த்துக்கள் அஞ்சு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி .இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது எல்லாம் பாடங்கள்தான் .எங்க வீட்ல எங்களுக்கு நேர சொல்ல மாட்டாங்க ஆனால் நாங்களே புரிஞ்சிப்போம் .இதனால் தவறு செய்யுமுன் மனசு குறுகுறுக்கும் .பயமும் வரும் .எல்லா அம்மாங்களும் இப்படித்தான் :) இப்போ நமக்கும் அப்படித்தானே இருக்கோம் :) மகள்கிட்ட மட்டும் மிக கவனமா இருக்கநும் இந்த கால ஜெனரேஷன் இல்லையா .அறிவு அதிகம் நம்மைவிட :)

      Delete
  18. சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோர், அக்கா, அண்ணாவிலிருந்தும் கூட்டுக் குடும்பமெனில் கூடவே பேரன் பேர்த்தி, மாமா, சித்தப்பா சித்தின்னு இவர்களிடமிருந்தும் இந்த அனுபவம் எமக்குக் கிடைக்கின்றன.
    திருமணமானபின் பெண்ணாகில் கணவனிடமிருந்தும் கிடைக்கிறது.

    அஞ்சு.. நானும் கொஞ்சம் ஷோட்ரெம்பர் தான். இப்போஅதிலும் கடந்த ஒன்ரரை வருடமாக என்னை நானே நிதானப்படுத்தியிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்!

    காசிக்கு இவரின் இறுதிக்கடமை செய்யப் போன இடத்திலும் இவரின் அஸ்தி கரைத்த அந்தக் கங்கையில் மூழ்கினாலென்ன என்னும் அளவுக்குப் போன மனநிலை. அங்கு நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல எனக்குக் கிடைத்த சில அனுபவங்கள் என் ரென்ஷனைக் குறைத்தது, சிந்திக்க வைத்தது. அதன்பின் ரென்ஷன்படுவதில்லை. ஆனால் எங்கு நிற்கிறேன் என்றெல்லாம் பாராமல் கண்கள் குழமாகி ஓட அழுதுவிடுகிறேன்... அழுவது இப்பவரை உள்ளது..:(

    அட்வைஸ் எல்லோராலும் எமக்குக் கிடைக்கும். அதில் எல்லாவற்ரையும் எம்மால் கடிப்பிடிக்க முடியாது.
    ஆனால் அவற்றை எம் மனதில் மீண்டும் மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும்போது எம்மைக் கொஞ்சம் நிதானப்படுத்த, சரியாகச் செயற்படுத்த ஏதோ ஒரு சந்தற்பத்தில் நிச்சயம் உதவும்.

    வலைக்கே வராமலிருந்த என்னை நீங்கள், அதிரா, பிரியா, இமா,சீராளன் என்று நீங்கள் எல்லோரும் ஆளாளுக்குச் சொன்ன ஆறுதல்களும் அட்வைஸுமே இன்று என்னை அந்தப் பெரும் துயரிலிருந்து கொஞ்சமேனும் வெளிக் கொணர்ந்திருக்கிறது!
    வலைக்கு வர வைத்திருக்கிறது! என் வாழ்வில் வழிகாட்டிகளான பெற்றோருக்கு, கணவருக்கு இருக்கும் இடத்தைப் போல உங்கள் அனைவருக்கும் முக்கிய இடம் இருக்கிறது.!!!

    இப்பவும் எனது 2 பிள்ளைகளுக்கும் இருவரும் மணமுடித்தவர்கள் ஆயினும் தேவைப்படுமிடத்தில் வேண்டிய புத்திமதி சொல்கின்றேன்.
    ஆயினும் வாழும் காலம் முழுவதும் ஏதோ ஒருவகையில் நாம் யாரிடமாவது ஏதேனும் புத்திமதிகள் கேட்பவராகத்தான் வாழ்கிறோம் என்பது என் கருத்து.
    நானும் இப்பவும் என் மகனிடம் அம்மா ரொம்ப யோசித்துக் கொண்டிருக்காதேங்கோ, வெளியே போக வாங்கோ, பாட்டுக் கேளுங்கோ, மீராவோடு விளையாடுங்கோன்னு அவர்பங்கிற்குத் தரும் அட்வைஸ் கேட்கின்றேனே..:))

    நல்லதொரு சுய மீட்டற் பதிவு அஞ்சு! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!
    பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    இதனை உங்களுக்கு எழுதத் தூண்டிய சகோதரர் மதுரைத் தமிழன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இளமதி அவர்களை எனக்கு அவ்வளவாக தெரியாது ஆனால் அவரின் கணவரை இழந்த போது பலரும் பதிவிட்ட போதுதான் அறிந்து கொண்டேன் அந்த பதிவுகளில் நானும் ஆறுதல் சொல்லி சில வார்த்தைகள் பொட்டு இருந்தேன் அது யார் எழுதிய பதிவு என்று ஞாபகம் இல்லை.

      இளமதி அவர்களுக்கு என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்ம்மா

      Delete
    2. ///Avargal UnmaigalJanuary 5, 2018 at 1:31 AM
      இளமதி அவர்களை எனக்கு அவ்வளவாக தெரியாது ////
      இப்போ என்ன தெரியோணும்??? போட்டோ வேணுமோ:)? இல்ல பயோ டேட்டா? இல்ல பாங் டீடைல்?:)... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

      Delete
    3. ஆமாம் இளமதி உங்க மகன் சொன்னது மிக சரி நாம தான நம்மை இயல்புக்கு கொண்டாரனும் .எனக்கு எமோஷ்னல்னா .சாஹூகை எதற்கெடுத்தாலும் வருமாதுவும் யாரவது வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தினா .அவை கஷ்டப்படும் செய்தி படிச்சா ,குழந்தைகள் வன்முறை வயதானோர் ஏழ்மை பசி இதெல்லாம் பார்த்தா அவ்ளோதான் .இன்னும் என்னை திருத்தக்க முடியலை.லண்டன் போயிடு வந்து ஒரு வாரம் அழுதேன் ரோட்டிலுறங்கும் ஆட்களை பார்த்து :(
      உங்களுக்கு கங்கையில் கிடைத்த அனுபவங்கள் உங்களுக்கு பாடமாக அமைந்ததுபோல என்றாவது எனக்கும் ஒரு பாடம் கிடைக்கும் னு நம்பறேன் .உங்களை அழைக்க நினைத்து இருந்தேன் தொடரை அனல் 5 பேர்கள்தான் அழைக்கணுமாம் மதுரைத்தமிழன் சொன்னார் :) அநேகமா வெளியுலகம் முழுதும் அழைப்பு விடுக்க ஆட்கள் தேவை உங்களுக்கும் அழைப்பு இத்தொடரை தொடர் விரைவில் வரும் ..ஆனா அதுக்கு முன் நானா உங்களை இன்னொன்று செய்ய அழைக்கிறேன் .குவில்லிங் செய்யுங்க மீண்டும் ரொம்ப நாளாகுது உங்க கைவண்ணம் பார்த்து .மிக்க அன்றி அன்புக்கும் பாராட்டுக்கும்

      Delete
    4. மிக்க நன்றி மதுரைத் தமிழன்! என் வலைத்தளத்தில் தனித்தனியா நன்றி சொல்லாமல் எல்லோருக்கும் சேர்த்து நன்றி சொல்லிப் பதிவு போட்டேன். அந்த நன்றியை உங்களுக்கும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்!
      மீண்டும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே!

      Delete
    5. ஹையோ அதிரா.. அவர் வேற ஒண்ணும் கேட்கல. என்னை அவ்வளவா தெரியாதுன்னு மட்டும்தான் சொன்னார்..:)
      நீங்களா இப்ப அதுவேணுமோ இதுவேணுமோ என்று கேட்கிறீங்க... தற்சமயம் பாங்க் டீடெயில் கேட்டிட்டா... :))
      என்னைஎங்காச்சும் மாட்டிவிட்டிடாதீங்க சரியா? அன்னிக்கே சொன்னேன்!
      ஓடி ஒளிஞ்சிடுவேன்..:))

      Delete
    6. //உங்களுக்கும் அழைப்பு இத்தொடரை தொடர் விரைவில் வரும் ..ஆனா அதுக்கு முன் நானா உங்களை இன்னொன்று செய்ய அழைக்கிறேன் .குவில்லிங் செய்யுங்க மீண்டும் ரொம்ப நாளாகுது உங்க கைவண்ணம் பார்த்து .//

      அச்சோ இந்தத் தொடரில் எழுதுறதுக்குன்னு தனியா என்னிடம் ஒண்ணுமே இல்லை அஞ்சு. அதானே இங்கேயே சொல்றதெல்லாம் சொல்லீட்டேன்.
      நான் யாரு என் பேரு எப்பிடிப்பட்டவ.. என்ன எனக்கு ஆச்சு....ந்னு..:)
      புலம்பீடுவேன்... வேணாம்..:)

      குவிலிங் செய்யலாம்தான். எல்லாம் ஒண்ணாச் சேர்த்து எங்கின போட்டு வைச்சிருக்கேனோ எனக்கேதெரியாது..
      பார்ப்போம் அஞ்சு. முதல்ல இருந்து ஆரம்பிக்கணும் நான்..:)

      அன்பான ஊக்கம் தரும் உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி அஞ்சு! முயற்சி செய்கிறேன்!

      Delete
    7. ஓகே ஓகே சீக்கிரம் ஒரு கார்ட் செய்யுங்க :)

      Delete
  19. அதிரா கிட்டேயிருந்து அட்வைஸா? அட.. அவரிடம் நான் பார்த்த ஒரு விஷயம். அவர் நண்பர்களை எளிதில் கணித்து விடுகிறார். வெளியில் விளையாட்டாய் எழுதி வந்தாலும் அவர் மிகவும் ஆழமான மனிதர் (மனுஷி) என்று அறிந்து வைத்திருக்கிறேன். விளையாட்டாகவே அவர் சில மிக நல்ல, ஆழமான கருத்துகளை முன்வைத்துச் சென்று விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்ம் புல்லாஆஆ உருகிட்டேன்ன்ன்... இப்படி நீங்க சொல்லும்போது, என்னை இன்னும் நல்லபிள்ளையாக்கி நடக்கோணும் எனும் எண்ணம் வருது...

      ஆனா அந்த சொல்லுத்தான்ன்ன் எங்கயோ இடிக்குதூஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்:).../// மனுஷி/////
      மீ சுவீட் 16 எல்லோ:).

      Delete
    2. மனுஷி என்கிற வார்த்தைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை அதிரா...

      Delete
    3. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன்:)... கிளவி , ஆச்சி.. எண்டாலும் பிரச்சனை இல்லை எனக்கு:)... ஹையோ இதை ஆராவது கொண்டினியூ பண்ணிடப்போகினமே:)..

      Delete
    4. ஆமாம் ஸ்ரீராம் :) அட்வைசனா அட்வைஸ் அடிக்காத குறையா கிடைக்கும் எனக்கு .முந்தி ஜெர்மனிலருந்து ஸ்கொட்லான்ட் செட்டில் ஆக நினைச்சி டிக்கட் கூட போட்டோம் :) நாள்வேலை லண்டன் பக்கம் வந்தோம் இல்லைனா பக்கத்து இடம்னு நேரே காரெடுத்து வந்து அடிச்சிருப்பாங்க மியாவ்

      Delete
    5. ஹீஹீ :) அது ஸ்ரீராம் அர்ச்சுனன் கண்ணுக்கு மரத்தில் இருந்த மரப்பறவையின் கண் மட்டும் தெரிஞ்ச மாதிரி :) இந்த பூனைக்கு 16 ஸ்வீட் இது மட்டும் தான தெரியும் ஹாஹ்ஹா :)

      Delete
    6. ///அதிரா கிட்டேயிருந்து அட்வைஸா? அட.. அவரிடம் நான் பார்த்த ஒரு விஷயம். அவர் நண்பர்களை எளிதில் கணித்து விடுகிறார்///

      அப்ப என்னை மாதிரி உள்ள எதிரிகளை அவரால் கணிக்க முடியாது அப்படித்தானே அப்பாடி அதிராவின் கணிப்பு வலையில் நான் சிக்கவில்லை

      Delete
  20. நெல்லைத்தமிழன் பயங்கர வாசிப்பாளர். துளசி டீச்சர், வெண்காட்டுக்கு இணையான பயண அனுபவம் மிக்கவர். கவிதைகளும் படிப்பார், கதைகளும் படைப்பார். இளமதி, மாதவன் கவிதைகளில் திருத்தம் சொல்லும் அளவு தேர்ந்தவர்.ஆனால் ஒன்றும் தெரியாதது போலப் பேசுவார்.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.... வெங்கட் வெண்காட் ஆகிவிட்டது. ஸாரி.

      Delete
    2. ஆமாம் ஸ்ரீராம் :) நானா நிறைய இடத்தில பார்த்திருக்கேன் நெல்லைத்தமிழனின் பின்னூட்டங்கள் ஆழமானவை அறியாத விஷயங்களை கற்றிருக்கிறேன் அவர் பின்னூட்டங்கள் வாயிலாக .
      வெங்கட் //அது கூகிள் டைப் பண்ணும்போது இப்படி அடிக்கடி வரும் எனக்கும் நான் என்று டைப்பின நானா நானான்னு குழந்தைப்பிள்ளை போல எழுதி வச்சிருக்கேன் பல இடத்தில

      Delete
    3. ஸ்ரீராம் - நீங்க அதிராவைப் பற்றிச் சொன்னதை வைத்து, அவங்களைப் பற்றி உயர்வாக எண்ணினேன். என்னைப் பற்றியும் சொன்னதைப் பார்த்து, 'பூ இம்புட்டுதானா அதிரா', ஒண்ணும் சிறப்பா இல்லாத என்னையே ஸ்ரீராம் இப்படி பாராட்டும்போது, அதிராவும் என்னைமாதிரித்தானா என்று தோன்றிவிட்டது.

      எனக்கு தமிழில் விருப்பம் அதிகம். அதிரா சர்வ சாதாரணமாக இலக்கிய வரிகளைப் போடும்போது முதலில் எனக்கு மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. அதேபோல அவங்க, கொஞ்சம் சரியில்லாத பின்னூட்டங்களையும் சர்வ சாதாரணமா, நகைச்சுவையை உபயோகப்படுத்தி கடந்துவிடுகிறார். (எனக்கே தோணும், பிறரை கலாய்ப்பதில் பெருமை இல்லை. கலாய்க்கும்போது நாம அவங்களோட தன்னம்பிக்கையை கொஞ்சம் சேதப்படுத்த முயற்சிக்கிறோம். இது பெருமைக்குரியதல்ல. ஆனால் அதிரா ரொம்ப நகைச்சுவையா எடுத்துக்கறாங்க. அதுக்கே வாழ்த்துகள்)

      Brilliance பார்க்கும்போது எனக்கு பாராட்டவேணும்னு தோன்றும் (சீராளன், இளமதி - இவங்க தமிழ்ல Brilliant).

      வெங்கட் - அவருடைய பயணத்தைவிட நான் அவர்கிட்ட சிறப்பா பார்க்கறது, அவருடைய amiable nature. தனியா பயணம் செய்யறது மிகச் சுலபம். அதுக்கு பணம் இருந்தா போதும். ஆனா, கலந்து கட்டிய பழக்கங்கள் உள்ள நண்பர்களோடு பயணிப்பது, அதுவும் நிறைய பயணங்கள் அவர்களோடு சேர்ந்து பயணிப்பது பாராட்டக்கூடிய ஒரு குணம். பொதுவெளில கொஞ்சம்கூட controversy இல்லாமல் எழுதக்கூடிய திறமை வெங்கட்டுக்கு இருக்கிறது.

      இணையத்துல ஒவ்வொருத்தர்ட்ட ஒவ்வொரு திறமையைப் பார்க்கிறேன். சிலரிடம் குறைகளையும் பார்க்கிறேன், ஆனால் அவை தவிர்த்துவிடக்கூடிய குறைகள்தான்.

      இதனால்தான் இணையத்தில் பலரின் எழுத்துக்களை வாசிக்க interestingஆக இருக்கு.

      Delete
    4. வணக்கம் சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்களே!

      ரொம்பத் தாமதமாகவே இங்கு உங்களின் இந்தப் பினூட்டத்தினைப் பார்த்தேன்.

      //Brilliance பார்க்கும்போது எனக்கு பாராட்டவேணும்னு தோன்றும் (சீராளன், இளமதி - இவங்க தமிழ்ல Brilliant).//

      ஓஹ்!... நீங்கள் இத்தனை பெருமைப்படக் கூடியவர் சகோதரர் சீராளன் மட்டுமே!
      நான் இந்த Brilliance பதவுரைக்குள் இல்லை ஐயா!... என்னில் நீங்கள் கூறும் திறமை எதில் இருக்கிறதெனச் சொல்லுங்கள்...
      என்னைத் திறமைசாலியாக்க நானும் காலம்முழுக்க முயல்கிறேன். இன்னும் வெற்றி பெற்றேன் இல்லை.
      திறமை என்பது சிலருக்குப் பிறப்பிலேயே சேர்ந்திருக்கும். அதற்கு உதாரணம் நீங்கள், அதிரா, அஞ்சு, சீராளன் இப்படி...
      நான் அதை என்னிடமும் சேர்த்துகொள்ளப் பாடுபடுகிறேன். அவ்வளவே!..:)

      இருப்பினும் எனக்கும் திறமை இருக்கிறதோ இல்லையோ தங்களின் கணிப்பிற்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  21. ஆமாம், அட்வைஸ்தான் எல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பது. சிலசமயம் கேட்காமலேயே! அந்த அறிய தத்துவத்தை அதிரா தளத்திலிருந்து அடித்திருக்கிறீர்கள் என்பதை அவரிடம் நான் சொல்லமாட்டேன். கவலைப்படாதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹையோ :) கத்திரிக்கா தொக்கு காட்டித்தந்ததா :)
      எனக்கு அட்வைஸ் அனுபவம் பல கிடைச்சிருக்கு .சின் வயது முதல் அப்போல்லாம் அருமை தெரியலை இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரியுது

      Delete
  22. அப்பா உங்களுக்கு ஒரு முன் உதாரணமாய் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லாச் சூழலிலும் உண்மை பேசுவது மிகுந்த கடினமான ஒன்று. வள்ளுவரே பொய்மையும் வாய்மையிடத்து என்று பரிந்து பேசி இருக்கும்போது...!

    ReplyDelete
    Replies
    1. ஒரு இடத்தில இடம் பெயர் வேண்டாம் தவிர்க்கிறேன் ..அங்கே எனக்கு ஒரு விஷயத்துக்கு அந்த இடத்தின் பெரிய மனிதர் பெரும் தொகை கொடுத்தால் அக்காரியம் சுலபமாக முடியும் என்றார் அப்போ பிறகு ஒருவழியாக அந்த விஷயம் சுபமாக முடிந்தது எந்த லஞ்சமும் இன்றி ..பிறகு ஒரு மீட்டிங்கில் பேசும்போது அப்பா இவ்வாறு தான் பணம் கேட்கப்பட்டது ஆனால் லஞ்சமின்றி விஷயத்தை முடித்ததை சொல்ல அந்த இடத்தின் உயர் அதிகாரி இன்னொருவருக்கு கோபம் எப்படி தனது சக ஊழியர் இப்படி லஞ்சம் கேட்கலாம் என்று அந்த பெரிய மனிதரை செம டோஸ் விட்டுளளார் ..இப்போ வசமாக மாட்டியது நான் ..அனைவர் முன்னும் என்னிடம் கேட்டார் . நானா கேட்டேன் அந்த பணத்தை ..நான் கொஞ்சமும் பயப்படவில்லை கவலைப்படவில்லை ஆம் என்று சொன்னேன் நான் இல்லை என்று பொய் சொல்லியிருந்தால் என் அப்பாவை அவமானப்படுத்தியது போலிருந்திருக்கும் ஆனால் எனக்கு சலுகைகள் கிடைத்திருக்கும் .அப்படி ஒரு கேவலமான சலுகை எனக்கு தேவையில்லை என்பதால் நியாயமாக உண்மை சொன்னேன் .அதனால் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை ஆனாலும் எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் இருக்கிறேன்

      Delete
  23. என் அப்பாவைப் பொறுத்தவரை அவ்வளவாக எதிலும் பட்டுக்கொண்டதில்லை. அதே சமயம் அம்மா கொஞ்சம் - கொஞ்சம்தான் - கூர்ந்து கவனித்து சிலசமயம் கண்டுபிடிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்லயும் அப்பா வெளியூர் தான் நாங்க சென்னைவாசம் .மாதாமாதம் வரும்போது இப்படி உபதேசம் கிடைக்கு சின்ன வயதில் .ஆனால் அம்மா எப்பவுமே ஹாஸ்டல் வார்ட்டன் :)

      Delete
  24. உங்கள் பெண் உங்களைப்போலவே இருப்பதில் மகிழ்ச்சி. அதாவது அடுத்தவருக்கு உதவும் குணம், ஆதரவாய் இருக்கும் குணம் உண்மை பேசும் குணம் ஆகியவற்றில். எளிதில் உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக்கொள்வதே நல்லது. உங்கள் மகளின் தோழிக்கு எதற்காக உதவ வேண்டும் என்று உங்கள் மகள் சொன்னது அவர் மனதளவில் பண்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் அவளுடைய பணிவும் பொறுமையும் எனக்கே இன்னும் வரலை :) ரொம்ப ஆழமா யோசிச்சி செய்வா ஒவ்வொரு விஷயத்தையும் ...தாயுமானவள் அவள் எனக்கு .அவகிட்டயிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் .ஆனா கொஞ்சம் எளிதில் உணர்ச்சிவசப்படுவா இரக்க சுபாவம் .ஊர்பட்ட பெட்டிஷன்ஸில் சைன் பண்ணிவச்சிருக்க நேற்று மெயிலில் கவனித்தேன் எல்லாம் குழந்தைகள் வாயில்லா ஜீவன்கள் சேவ் தி பிளானட் ,சேவ் தி சி ,wwf இப்படி எத்த்னையோ

      Delete
  25. ஆமாம்.. கொஞ்சம் நீண்ட பதிவுதான்.. தொடர்பதிவு என்பதால் தொடரும் போட்டு விட்டீர்களா!

    ReplyDelete
    Replies
    1. தொடரும் ஆனால் வேற பதிவாக :)

      Delete
  26. என்னது கவிதை காதலர் ஸ்ரீராமா? புதுசா இருக்கே.. பானு மேடம் சிறுகதைக்கு காவலர் என்றார்! புதுசு புதுசா பட்டங்கள் கிடைக்கிறது. ஆனால் ஒன்று.. எப்போ தொடர்வேன் என்று தெரியவில்லை. எனக்கு கிடைப்பது வியாழன் ஒன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா :) நீங்கதான் அடிக்கடி மழை வானம் எல்லாம் பார்த்து கவிதை எழுதறீங்க அதனை பட்டம் கொடுத்தேன் :) சீக்கிரம் டைம் கிடைக்கும்போது எழுதுங்க

      Delete
  27. ஒரு மிகப் பெரிய விஷயத்துக்கு நான் தகுதியானவள் என நினைத்திருக்கிறீர்கள். ஆலோசனைகள், புத்திமதி நிறையக் கேட்டிருக்கேன். வயசிலே சின்னவங்க கிட்டே இருந்தும், பெரியவங்களும் சொல்லி இருக்காங்க! ஆனால் நீங்க சொல்லுவதைப் போல் என்னை நானே மாற்றிக் கொண்டிருக்கிறேனா? தெரியலை! யோசிக்கணும். என்ன எழுதுவது என்றும் புரியவில்லை. கொஞ்ச நாட்கள் மனசில் ஊறப் போட்டு வைக்கிறேன். அழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா :) நானே எழுதி முடிச்சிட்டேன் நிச்சயம் உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கும் சீக்கிரம் எழுதுங்க :) ரொம்ப நாள் ஊறினாலும் acharu ஊறுகாய் டேஸ்ட் தான் :) காத்திருக்கிறோம் தொடருங்கள் அக்கா

      Delete
  28. மதுரைத் தமிழன் எழுதியதன் சுட்டி இருந்தால் கொடுங்க! போய்ப் பார்க்கிறேன் அவர் என்ன எழுதி இருக்கார் என்பதை!

    ReplyDelete
    Replies
    1. http://avargal-unmaigal.blogspot.com/2018/01/few-words-if-you-want-to-listen.html

      Delete
    2. டெஸ்க்டாபில் தனி லிங்க் காட்டாம போச்சி பதிவில் காட்டினேன். இப்போ மேலே லிங்க் இணைச்சிருக்கேன்

      Delete
  29. ஏஞ்சல் முதலில் நான் கேட்டதற்கு இணங்க பதிவு எழுதி வெளியிட்டதற்கு நான் என் தலைசாய்த்து வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ( உடனே மாமியிடம் அடி வாங்கி தலை தொங்கி போய் இருக்கும் அதனால்தான் தலை வணங்கி இருக்கு என்று பொதுவில் கேட்டு விடாதீர்கள் அப்புறம் என் மானம் போகிடும் உடனே அதற்கு பதிலாக உங்களுக்கு இன்னும் மான ரோசம் எல்லாம் இருக்குதான்னு கேட்டு ஊரில் தலைகாட்டி நடக்க முடியாதபடி செஞ்சுடாதீங்க இதற்கும் பதிலாக மாமி என்ன இன்னும் உங்களை நடமாடடும்படியா விட்டு வைச்சிருக்காங்க என்று கேட்டு என் காலை உடைத்துவிட வேண்டாம்)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா :) தலை சாய்த்து தந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் :)

      Delete
  30. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏஞ்சல். பெரிதாக இருப்பதாக சொன்னாலும் பல நல்ல விஷயங்களை இந்த பதிவில் இருந்து கற்றுக் கொள்ள முடிந்தது பாராட்டுக்கள் ஏஞ்சல்.. இந்த பதிவை படித்த சந்தோஷத்தில் நான் சிறிது எமோஷனல் ஆகி போனேன்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க .உண்மையில் பல நினைவுகளை மீட்க உதவியது இந்த பதிவு .எப்பவும் செய்த தவறுகளை நினைச்சி பார்த்தா இனிமே தொடர மாட்டோம் அதுவும் ஒரு பாடம் .

      Delete

  31. நீங்கள் நீண்ட பதிவு எழுதிக் கொண்டிருப்பதாக சொன்னது இன்னும் எழுதி கொண்டிருக்கிறீர்கள் என நினைத்தேன் ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை என் டாஷ் போர்டில் இது வரை உங்கள் பதிவு தெரியவில்லை. இளமதி அவர்கள் என் பதிவிற்கு கருத்துக்கள் சொன்னதன் மூலமே நீங்கள் பதிவு எழுதி வெளியிட்டு இருப்பது தெரியவந்தது

    ReplyDelete
    Replies
    1. இளமதியிடம் மிகவும் பிடித்த விஷயம் நானா அடிக்கடி மறப்பதை அவர் அழகாய் செய்வார் .உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் நேற்று முடிச்சதும் நேர பப்லிஷ் பண்ணிட்டேன் .எப்படியும் வருவீங்கன்னு தெரியும் அதுவும் ஒரு ரீஸன் :)

      Delete
  32. Replies
    1. வாங்க அண்ணா மிக்க நன்றி

      Delete
  33. உங்கள் அப்பா சொன்ன பகுதி வரை படித்தேன். Every day is a learning opportunity. பெரும்பாலும் எல்லோருக்கும், "எல்லாம் எமக்குத் தெரியும்" என்ற எண்ணம்தான் இருக்கும்.ஆலோசனை என்பது கசப்பு மாத்திரை. பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன் .நிறைய விட்டிட்டேன் பதிவின் நீளம் கருதி .நிதானமா வாங்க இப்போதைக்கு அடுத்த பதிவு எழுத நேரமில்லை எனக்கும் .வந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

      Delete
  34. பொக்கிஷ அறிவுரைகள்....

    என்றும் நினைவில் கொள்ள வேண்டியவை...அருமை அஞ்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு .மிக்க நன்றிப்பா

      Delete
    2. ஏஞ்சல்.....கோபால் சார் பதிவுல உன் கமெண்ட் பாத்தேன் நீ...அதிரா.... என்னை இன்னுமா நினைவில் வச்சிருக்கீங்க.. நன்றிம்மா..

      பதிவு பெ.....ரி......சா...இருக்குது.. அப்புறமா வறேன்.

      Delete
    3. வாங்க வாங்க :) லக்ஷ்மி அம்மா .எனக்கு வெள்ளிக்கிழமை நீங்க நினைவில் வந்திங்க பிளாக் லிஸ்ட் எடிட் பண்ணும்போது உங்கரெண்டு பிளாகும் வரிசைப்படி வந்தது .ஒரு செகண்ட் மனசு சொல்லுச்சு நீங்க வருவீங்கன்னு :) அது வெள்ளி நைட் என்ன ஆச்சர்யம் நேற்று சனி நைட் உங்க கமெண்ட் கோபு சார் பக்கம் பார்த்தேன் அதான் உடனே சந்தோஷம் தாங்காம அங்கேயே பதில் போட்டேன் .உங்களை ரமா ரவி ஆச்சி எல்லாரும் தேடினோம் .ரொம்ப ஹாப்பிமா உங்களை மீண்டும் பார்த்ததில் .

      Delete
    4. எத்த்னை அன்போடு பழகுவீங்க எல்லாரிடமும் எப்படி உங்களை மறக்கமுடியும் எங்களால் .அதோட அயூப் என்ற அந்நியன் பிளாக் வைச்சிருப்பாரே அவர் கூட உங்களை விசாரித்தார் .அவர் fb ல கேட்டார் உங்களை

      Delete
  35. இங்க காலைல கமெண்ட் போட்டேனே..காக்கா தூக்கி போயோ.....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :) காக்கா தூக்கலைம்மா .அது நான் ஞாயிற்று கிழமைகளில் பகலில் தான் கம்பியூட்டர் பக்கம் வருவேன் அதான் பப்லிஷ் பண்ண தாமதம் .
      இது தொடர்பதிவா அதுவும் அட்வைஸ் வேற அதான் நீளம் :) நீங்க வந்ததே சந்தோஷம்மா

      Delete
  36. இன்றுதான் பதிவினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சுயமதிப்பீடு என்பதானது நம்மை பல வழியில் மேம்படுத்துவதோடு, பக்குவப்படுத்துவதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். அவ்வகையில் இப்பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா .தமிழ் வலைப்பூவுக்கு முதன்முறையா வந்திருக்கீங்க .அம்மா ஐயா நாம் நம்மை சுயமதிப்பீடு செய்யும்போது கொஞ்சம் திரும்பி பார்க்கும்போது பல நிறைகுறைகளை கண் முன்னே தோன்றும் அதில் சிறந்தவற்றை சொன்னால் பலருக்கு உதவும் நாமும் நம்மை திருத்திக்கொள்ள ஒரு சந்தர்பமாவது அமையும் .மிக்க நன்றி ஐயா


      Delete
  37. இப்போதான் முழுமையா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

    "அவரது நட்பை விட்டு விலகி இருந்தால் நான் உயரம் தொட்டிருக்க முடியும்" - என்னுடைய ஆபீசில் நான் இரண்டுபேரை பணி நீக்கம் செய்தேன். அதில் ஒருவன், ஒரு மாதம் கழித்து வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு முயற்சித்து, அவனுக்கு இவ்வளவு சம்பளம் தருவோம் என்று சொல்லி, அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அனுப்பப்போகிறார்கள். அதற்குள் இவன், அந்த இன்னொருவனிடம் இதனைப் பகிர்ந்துகொண்டான். அவன், அதே கம்பெனிக்கு நேரில் போய், அவனைவிட குறைவான சம்பளத்துக்கு தான் வேலைபார்க்கத் தயார் என்று சொல்லி வேலையைக் கவர்ந்துவிட்டான். வேலை மாற்றத்தையோ, சேரப்போகும் கம்பெனி பேரையோ, அங்கு வேலையில் சேர்ந்து ஒரு மாதத்துக்குள் யாரிடமும் பகிர்வது நல்லதல்ல என்ற என் எண்ணத்தை இது உறுதி செய்தது.

    "எக்ஸாம் ஹால் போகும் வரையிலும் கூட படிக்கும் அனைவருக்கும் அமர்ந்து" - நான் கல்லூரியில் படிக்கும்போது, நண்பர்கள், எக்சாம் எழுதப் போகும் நேரத்துக்குச் சற்று முன்னால் வந்து, 'இந்த சேப்டரைப் படித்தயா, இது முக்கியம் அது முக்கியம்' என்று குழப்புவார்கள். அதனாலேயே நான் எக்சாம் அன்று யாரிடமும் பேசமாட்டேன். அதுவும்தவிர, எக்சாம் முடிந்ததும், எதைப் பற்றியும் டிஸ்கஸ் செய்யமாட்டேன் (இல்லைனா, அந்த விடை தவறு, இது சரியில்லை என்று சொல்லி அடுத்த பரீட்சைக்கு மன நிம்மதியோடு படிக்க விடமாட்டார்கள். இதுலலாம் நாம் பாவம் பார்த்தால் நமக்குத்தான் கேடு).

    "நண்டு சிண்டெல்லாம் நமக்கு பளார்னு அறையறாப்ல " - வாழ்க்கைல கற்பதற்கு முடிவு என்பதே கிடையாது. நான் ஒரு ஒபினியன் வைத்திருந்தேன். என் பெண் (அப்போ அவளுக்கு 17 வயசு), அது ஏன் தவறு, நான் என்ன நினைக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னா. அது எனக்கு படிப்பினையாக இருந்தது. நமக்கு அடுத்த ஜெனெரேஷன் நம்மைவிட அறிவில் சிறந்தவர்கள், அவர்களுக்கு இல்லாதது, நம்முடைய அனுபவம் மட்டும்தான். அதனை மட்டும் அவ்வப்போது கோடி காண்பித்தால் போதுமானது. நாம எல்லாத்துலயும் மூக்கை நுழைத்தால், அவர்களோட வளர்ச்சிதான் தடைபடும். நம்மைப் போன்ற க்ளோனான நம்ம குழந்தைகள் இருப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கமுடியும்? (நாமே குற்றம் குறைகள் நிரம்பியவர்கள்).


    "பணத்தின் அருமையை" - எனக்கு சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த அனுபவம். என் பெண்ணிடம், இங்கு என்னுடன் இருந்தபோது (10ம் வகுப்பு வரை), நான் கையில் அவ்வப்போது பணம் கொடுத்து Mallகளில் கொண்டுவிட்டு தேவையான முறையில் செலவழிக்கச் சொல்லியிருக்கலாமோ என்று கேட்டேன் (Financially I was capable, but never spent lavishly or to some extend adequately). அதற்கு அவள், நீங்க செஞ்சதுதான் சரிப்பா, இல்லைனா நாங்க கெட்டுப்போயிருப்போம் என்றாள். I was immensely satisfied. பணத்தின் அருமை தெரியும்படிதான் குழந்தைகளை வளர்க்கணும்.

    எனக்கு இன்னொரு அனுபவம் நான் வேலை பார்த்த புதிதில் கிடைத்தது. நான் அப்போ ஆபீசராக இருந்தேன். அங்கு மெக்கானிக்கல் பிரிவில் ஒருவன் நல்ல மாடர்ன் உடையுடன் (கிழிந்த ஜீன்ஸ் போன்று...89ல்) இருந்தான். ஆனா பார்க்க நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன்போல் தெரிந்தான். எப்படியோ அவனுக்கு என்னைப் பிடித்துப்போயிற்று. (அவன் சம்பளம் மிகக் குறைவு). அவன் சொன்னான், அவன் பெற்றோர்கள் டாக்டர்கள், சின்ன வயதிலிருந்து அவன் எதைக் கேட்டாலும் அவர்கள் உடனே தந்துவிடுவார்கள், அவர்கள் தராதது, அவனுடன் அவர்கள் நேரம் செலவழிப்பது. பணம் நிறைய இருந்ததால் அவன் கெட்டுப்போய்விட்டானாம். பிறகு மனம் வருந்தி இங்கு வேலைக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு வேலை பார்க்கணும் என்ற அவசியமே இல்லை, அவ்வளவு பணக்காரன், ஆனால் வாழ்க்கையில் அடிபடவேண்டும் என்றுதான் இங்கு வேலைபார்க்கிறேன் என்றான். பணத்தின் அருமையை குழந்தைகள் உணரவைப்பது மிகவும் அவசியம்.

    நான் கற்றுக்கொண்டது, எப்போதும் பசங்களுக்கு அட்வைசை, கசப்பு மருந்துபோல் மிக மிகக் குறைவாகத்தான் கொடுக்கணும். நாம் செய்யாத எதையும் அவங்களுக்கு அட்வைஸாகச் சொல்லவே கூடாது. பெரும்பாலான சமயத்துல நாம செய்யறதைப் பார்த்துத்தான் அவங்க தாங்களும் இதனைக் கடைபிடிக்கணும்னு நினைப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. /அங்கு வேலையில் சேர்ந்து ஒரு மாதத்துக்குள் யாரிடமும் பகிர்வது நல்லதல்ல என்ற என் எண்ணத்தை இது உறுதி செய்தது.//

      ஆமாம் அந்த தவறை நான் ரெண்டு மூணுமுறை செஞ்சிருக்கேன் //

      இப்பவும் எனக்கு அம்மா பேச்சை கேட்டிருந்தால் நான் அந்த இடத்தில அஸோசியேட்டாக சேர்ந்திருப்பேன் ..அது பிற்காலத்தில் எனக்கொரு எக்ஸ்பீரியன்சை கொடுத்திருக்கும் ..அதோடு நேர்மையற்றவர்களை நம்பினேனேன்னு ஒவ்வொருநாளும் புழுக்கம் மனதில் .சிலபல விஷயங்களை சொல்லலை அந்த நட்ப்பால் நடந்தது .அதேபோல இன்னொருவர் நான் கஷ்டப்பட்டு பிரிட்டிஷ் கவுன்சில் அமெரிக்கன் கவுன்சிலில் சென்று நுணுக்கி அழகா எழுதிய நோட்ஸை அப்படியே பெரிய போல்டரில் போட்டு வச்சிருப்பேன் அதை நான் வீட்டில் இல்லாத நேரம் அம்மாகிட்ட வந்து கேட்டு எடுத்துபோட்டோ காப்பிபண்ணியிருக்கார்.அதே நட்பு பல வருஷம் கழித்து வேறொரு வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டார் நானா எப்படியோ கண்டுபிடிச்சி அவரை லெட்டரில் தொடர்பு கொண்டேன் .ஒரு ரிப்லி கூட போடலை :) ஒருவேளை நான் எங்கே அவங்க நாட்டுக்கு வர ஆசைப்படறேனோன்னு பயந்திட்டாங்க போல :)
      உங்க மகள் சொன்னது சூப்பர்ப் .என் மகளுக்கு உணவின் அருமையை உணர்த்தியது உஸ்தாத் ஹோட்டல் பட காட்சி .
      அதேபோல என் கணவர் அவள் ப்ரெண்ட்ஸுடன் செல்லும்போது பணம் கொடுத்தார் இந்த ஹாலிடேஸில் .அதில் முக்கால்வாசி திரும்ப கொண்டாந்தா அவளது வங்கியில் போடா சொல்லிட்டா :)
      நாங்கள் வாழும் நாட்டில் எப்படியும் பெனிபிட்டில் இருக்கலாம் எல்லா விதத்திலும் ஏமாற்றி அரசிடம் இருந்து பணத்தை கறக்கலாம் .இங்குள்ள வெள்ளைகாரங்க திருமணம் புரியாமல் லிவிங் டு கெதராக வாழக்காரணம் அவர்களுக்கு உறவுகளில் நம்பிக்கையில்லை அனால் இதை நம் நட்டு மக்கள் பணத்துக்காகவே செய்றாங்க .திருமணம் ஆகியும் இல்லை சிங்கிள் என்று காட்டினால் பல சலுகைகள் உண்டு .ஆனால் அப்படி திருத்தி பின் வழியாய் வரும் எதையும் ஏற்க மனம் எங்களுக்கு இடமளிக்காது .நிறையபேர் சொன்னாங்க இங்கே இப்படியெலலாம் ஏமாற்றி தான் மூணு கார் வச்சிருக்கோம்னு பகீர்னு இருக்கும் .

      அந்த எக்ஸாம் மேட்டரில் மிகவும் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் எனது வகுப்பு பெண் ஒருவர் சொன்னார் உனக்கென்ன பைத்தியமா என்று அப்போதே ..அதெல்லாம் அப்போ புரியலை .வகுப்பில் மயக்கம் வந்து எழுத முடியாம போனப்போதான் புரிஞ்சது .அதை மக்களுக்கும் புரிய வைச்சாச்சு அதேபோல சம்பவம் ஒரு இந்திய பெண்ணுக்கு நடந்ததை பார்த்தாளாம் ஆண்ட்ரே ஓடி வந்து என்னிடம் சொன்னால் அம்மா பாவந் தியா எல்லாம் தெரிந்தும் இன்னொரு மாணவனுக்கு பாடம் சொல்லித்தந்ததில் எழுத முடியாம faint ஆனாமா என்று .
      உங்கள் அலுவலகத்தில் வேலை செய்பர் நல்ல வாழ்க்கைப்பாடத்தை கற்றிருக்கிறார் இப்போதாவது .

      //நாம செய்யறதைப் பார்த்துத்தான் அவங்க தாங்களும் இதனைக் கடைபிடிக்கணும்னு நினைப்பாங்க//
      மிகச்சரி என் கணவரிடம் உள்ள ஒரு பழக்கம் அனைவருக்கும் உதவனும் என்று பாவம் பார்ப்பார் அதில்நிறைய பிரச்சினைகளில் மாட்டி அவதியும் படுவார் . என்னிடம் 50 அவரிடம் 50 சேர்ந்ததலோ என்னவோ மக்களுக்குதறல குணம் அதிகமாவே வந்திடுச்சு :) ஆனால புரிந்துகொள்ளும் பக்குவம் அவளுக்கு இப்போவே கிடைத்திருக்கு என்பதில்; மிகுந்த மகிழ்ச்சிதான் எனக்கு

      100 சதவீதம் உண்மை அதனால்தான் நாங்கள் எந்த தீயதுக்கும் இடம் கொடுப்பதில்லை .பார்ட்டிஸ் போறதில்லை எங்கள் வீடுகளில் கெட் டு கெதர் வைத்தாலும் எந்த உற்சாக பானத்துக்கும் இடமுமில்லை .
      மிக அழகாக நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிங்க நெல்லைத்தமிழன் உங்க பின்னூட்டத்தை படித்து முழு ரிப்லையும் கொடுத்திட்டுதான் எபி பக்கம் போகணும்னு பின்னூட்டமிட்டேன் :)

      Delete
  38. என்னுடைய அப்பா எனக்கு எப்போதும் 'அட்வைஸ்' மழை பொழிந்ததே இல்லை. அவர் செய்வதைப் பார்த்துத்தான் நான் கற்றுக்கொண்டேன். 50 பைசா, கடைக்காரன் அதிகமாகக் கொடுத்துவிட்டான் என்பதை அறிந்து அவர், 1 கிலோமீட்டர் நடந்து சென்று திருப்பிக் கொடுத்தார். நான் 3ம் வகுப்பு படிக்கும்போது, ஒரு பணக்காரர் வீட்டில் (அவர் பையன் என் வகுப்பு, அவங்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும்), Building Blocks விளையாடிய பிறகு (73ல், Building Blocks Plastic வாங்கணும்னா அவங்க எவ்வளவு பணக்காரங்க), அதில் ஒரு பிளாக்கை சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன். அன்று எங்க அப்பா, என்னை திரும்ப 1 கிலோ மீட்டர் நடந்து அவங்க வீட்டுக்குப் போய்க் கொடுத்துட்டு, Sorry சொல்லிட்டு வரச் சொன்னாங்க. இதெல்லாம்தான் எனக்குப் படிப்பினை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நெல்லைத்தமிழன் .அது ஆண்பிள்ளைகள் கொஞ்சம் அட்வைஸ்களை ஏற்பதில் ஸ்மார்ட் அப்பாவைப்பார்த்தே தவறுகளை திருத்திப்பாங்க .பெண் பிள்ளைகள் கொஞ்சம் ஏமாளிகள் உணர்வுகளுக்கு சட்டென அடிபணிவதால் உணர்ச்சிவசப்படுவதால் இந்த மாதிரி அட்வைஸ்கள் அவசியம்னு தோணுது அது appo ..இப்போதைய பொண்ணுங்க நம்மக்கே பாடம் நடத்தறாங்க :)
      ஆஹா ! இதே விஷயம் எங்க குடும்பத்தில் நடந்திருக்கு ஒரு பையன் கஸின் பக்கத்துக்கு வீட்டில் இருந்து விழுந்த பப்லிமாஸ் பழம் . பேரன்ட்ஸ் ரெண்டுபேரும் டாக்டர்ஸ் அவன் .அந்த பப்ளிமாசை எடுத்துட்டான் அவங்கம்மா டேபிள்மேலே பார்த்து கேட்டார் அவன் சொன்னான் பக்கத்துவீட்டுது னு உடனே அவன்கிட்ட அதை எடுத்துட்டுப்போய் அவங்ககிட்ட குடுத்துட்டு வர சொன்னாங்க சாரியும் சொல்லச்சொன்னாங்க ..காலைல விழுந்ததை ஈவ்னிங் தர்றான் என்பதையும் சொல்ல சொன்னாங்க :) இப்போ மகனும் டாக்டர் நான் கீழே கண்டுபிடிச்ச பணத்தை கூட கோயில் உண்டியலில் போட்டுடுவேன் .அப்புறம் காஷியர் எக்ஸ்டராவா குடுத்தா அதை திருப்பி கொடுத்திடுவேன் ..


      Delete
  39. ஆ.... எவ்வளவு பெரிய்ய்ய பதிவு.. நானும் லேட்டா வந்திட்டேன். ஆனாலும் ஆறுதலா 2தரம் வாசிச்சேன் அஞ்சு. உண்மையில் உலகில் இலவசமா நாம கேட்காமலே கிடைப்பது என்றால் இந்த அட்வைஸ் எனும் அறிவுரைகள். எனக்கும் இது பற்றி நிறைய இருக்கு. அதிரா அழைத்திருக்கா. எழுதனும்.
    உங்கள் அம்மா மாதிரிதான் எனக்கும். யாரையாவது பார்த்தால் மனசு உடனே சொல்லும். இது பார்த்தால் மட்டுமே . ஒரு சிலது பிழைத்திருக்கு கணிப்பு. ஆனா மோஸ்ட்லி சரியா இருக்கும்.
    பிள்ளைகளுக்கு இப்ப நாம சொல்லத்தேவையில்லை. அவங்ககிட்டதான் நாம கேட்கவேண்டியிருக்கு..
    உண்மையில் இப்பதிவிலிருந்து கூட அதாவது உங்க அனுபவத்திலிருந்து கூட எடுத்துக்கலாம் அட்வைஸ். இதுவும் ஒரு வாழ்க்கைபாடம்தான். நான் நிறைய எழுதல. ஏன்னா நானும் எழுதுவதற்கு. வைத்திருக்கேன்...
    எல்லாருக்கும் பெற்றார்தான் முதல் அட்வைஸர். அம்மா சொன்ன சில வார்த்தைகள் இன்றளவும் நினைத்து நினைத்து அழுவேன். ஏன்னா அப்ப விளையாட்டுத்தனத்தால் கேட்காமல் விட்டுவிட்டு இப்ப வருந்துகிரேன். ஊரில பழமொழி ஒன் று தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குபடகென்று அடிக்குமாம்.. அதுதான் இப்ப எனக்கும்.
    நல்லதொரு அனுபவ வாழ்க்கைப்பாடம் உங்க பதிவு. அதில் நீங்க பெற்றதும்,கற்றதும் பற்றி எழுதியிருக்கிறீங்க. நானும் வாசித்து உள்வாங்கி வைத்துக்கொண்டேன்.. நன்றி அஞ்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ப்ரியா .லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கீங்க :) சீக்கிரம் விரைவா போஸ்ட் எழுதுங்க :) உங்க வீட்டு அட்வைஸ்களை கேக்க ஆசையா இருக்கு மோஸ்ட்லீ எலலா அம்மாங்களும் சேம் தான் :)
      சீக்கிரம் ஸ்டார்ட் தி மூசிக்
      அட்வைஸ் அப்போ சொல்றதும் இப்போ இந்த காலத்துக்கும் யூஸ் ஆகும் ப்ரியா .வருஷம் காலம் மாறினாலும் மனுஷங்க குணம் மாறுவதில்லை அதனால் எக்காலத்துக்கும் அம்மா அப்பா அட்வைஸ் பயன்படும்

      Delete