அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/25/17

Prom ...பரீட்சை முடிந்தவுடன் ஒரு கொண்டாட்டம் :)Prom  ..
====


                                                                              இங்கே பிரைமரி பள்ளி இறுதியில்  6 ஆம் வகுப்பில் , உயர் நிலை பள்ளி முடியும்தருவாயில்   11 ஆம் வகுப்பிலும்  மற்றும்  (6 th Form ) 13 ஆம் வகுப்பிலும் ஆண்டு இறுதியில் பரீட்சை முடிந்ததும்  எல்லா பள்ளிக்கூடங்களிலும் இந்த ப்ரோம் மிக பிரபலம் ..எல்லா விஷயத்திலும் முன்னோடிகளான அமெரிக்காதான் இந்த ப்ரோம் எனும் பள்ளி ஆண்டிறுதி கொண்டாட்டத்தை துவக்கியது அது இப்போ இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக ஒவ்வோராண்டும் புது வடிவில் பிரமாண்டமாக ஆகி வருகிறது .அமெரிக்காவில் நடக்கிறது இங்கே அவங்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்   glee ,ஹானா  மோண்டானா மற்றும் ஹை ஸ்கூல் மியூஸிக்கல்ஸ் வழியே எங்க ஊருக்கும் வந்து விட்டது ..


Proms – the term is short for ‘promenade’ 

நம்ம ஊரிலும் இந்த ப்ரோம் நடக்கிறது என்று முன்பு ரமா ரவி அவர்கள் பதிவில் எழுதியிருந்தாங்க பெங்களூர் பள்ளிகளில் நடக்கும் இந்த ப்ரோம் பற்றி இப்போ அவங்க பக்கம் தேடினேன் பதிவை கண்டுபிடிக்க முடியலை ..வல்லிம்மா கூட ஒரு முகப்புத்தக ஸ்டேட்டஸ் போட்டிருந்தாங்க அமெரிக்கன் ப்ரோம் பற்றி ..

இதில் ஆறாம் வகுப்பிறுதியில் நடக்கும் ப்ரோம் பற்றி பெற்றோர் பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை ..அன்று வீட்டில் இருந்து ஒரு frock அல்லது ட்ரவுசர் ஷேர்ட்  கொண்டு செல்வாங்க பிள்ளைகள் அங்கேயே பள்ளியில் உடுத்தி பார்ட்டி போல செலிப்ரேட் செய்து டான்ஸ்  கேம்ஸ்  எல்லாம் விளையாடி முடித்து வீட்டுக்கு வருவாங்க ..அதிக பட்ச செலவு அவர்களுக்கான உணவுக்கு 10 பவுண்ட் கொடுக்கணும் ..அதன் பின்  11,மற்றும் 13 ஆம் வகுப்பு இறுதியில் நடக்கும் ப்ரோம் தான் கை கால் எல்லாம் கடிக்குமளவு செலவு வைக்கும் ..சிலர் 600 பவுண்ட் வரைக்கும் கூட செலவு செய்கிறார்களாம் ..

கூகிளில் தேடி எடுத்த சில ப்ரோம் காட்சிகள் )நன்றி கூகிள் )
                                               
                            குதிரை சாரியட்டில் இளவரசிகள் போல 
                                                 வந்திறங்கும்  மாணவிகள் 

                                                                                  

                          


இந்த உயர் நிலைப்பள்ளி 15/16 வயதில் நடக்கும் ப்ரொமுக்கு இப்பெல்லாம் பிள்ளைகள் குதிரை வண்டி சாரியட் , limousine,ஐஸ்க்ரீம் வான் ,பழைய மாடல் பஸ்,அல்லது கார்  ,இதையெல்லாம் வாடகைக்கு எடுத்து ப்ரோம் நடக்கும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள் ..

                                                                          


                             போன வருஷம் எங்க ஏரியாவில் விர்ருன்னு ஒரு கருப்பு நிற பஜாஜ் ஆட்டோவை பார்த்தேன் :) அப்போவே கம் ட்ரீ இது யெல்லோ பேஜஸ் பாதிரி அதில் தேடினப்போ 6 ஆட்டோஸ் ..இங்கே  (tuk tuk ) என்றழைக்கிறார்கள் இருந்தன .இவற்றை திருமணங்களுக்கு வாடகைக்கு விடறாங்கன்னு பார்த்தேன் ..இப்போ இந்த ப்ரொமுக்கும் இந்த ஆட்டோக்களை  மாணவர்கள் வாடகைக்கு அமர்த்தி ஹோட்டலுக்கு செல்கிறார்கள் :)

                                                                                   

                                                                           


                            டபிள் டெக்கர் பேருந்தை  வாடகைக்கு எடுத்து                                                          ப்ரோம் நடக்கும் ஹோட்ட லுக்கு செல்லும்                                                                                                மாணவர்கள் 
                                                                                 மாலை பங்க்ஷனுக்கு  என்ட்ரி கலக்கலா வித்தியாசமா இருக்கணும்னு ஒவ்வொருவரும் வித்தியாசமா அழகா உடை உடுத்தி இதுவரை போடாத மேக்கப் லிப்ஸ்டிக் தலையலங்காரம் எல்லாம் போட்டு செல்வார்கள் ..இதில் மாணவர்கள் bow அணிந்து அழகாக கோட் கருப்பு நிறத்தில் அணிந்து தலை முடிக்கு ஜெல் போட்டு கல்யாண மாப்பிளை போலவே இருப்பாங்க பார்க்க .மாணவிகள் தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா  மேக்கப்  நாலடி ஹீல்ஸ்  நகையலங்காரம்  என  இளவரசிகள் போல  ஜொலிப்பாங்க :)
                                                                    

                                                                                   
 


பெண்களின் ஆடை மாக்சி அல்லது ஈவ்னிங் டிரஸ் கையில் எடுத்து செல்ல ஒரு க்ளட்ச் இருக்கும் ..ஜனவரி முதலே பெரிய கடைகளில் இந்த ப்ரோம் ட்ரெஸ்ஸஸ் விற்பனையாக துவங்கும் ..ஆன்லைனிலும் விற்பனை கொடி கட்டும் ..Holiday Inn ,ramada hotel போன்ற பெரிய ஹோட்டல்களில் தான் இந்த கொண்டாட்டம் நடைபெறும் ,,அதற்க்கு பள்ளியே புக் செய்து விடுவார்கள் நாங்கள் 
பணத்தை கட்டிவிட வேண்டும் ..

இந்த அலங்காரத்துக்கு எல்லாம் காரணம் 11 ஆம் வகுப்பு வரை பள்ளியில் ஸ்ட்ரிக்ட் சீருடை சும்மா காதில் ஸ்டட்  மட்டும் அணியலாம் நோ மேக்கப் ஹேர் கலரிங் ..கருப்பு ஷூ மட்டும் அனுமதி ..நகமெல்லாம் வளர்க்கக்கூடாது  கியூட்டெக்ஸ் அணியக்கூடாது இப்படி கடும் சட்டதிட்டங்கள் ..அதனலேயே இந்த ஆண்டிறுதி  ப்ரொமுக்கு கலக்கலா செல்கிறார்கள்  மாணவ மாணவியர் ..மேலும் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் 12 சப்ஜெக்ட்ஸ் தேர்வு எழுதி முடித்து ரிலாக்சேஷனுக்காகவே இந்த ப்ரோம் கொண்டாட்டம் நடைபெறுகிறது ..


எங்க மகளும் இவ்வருடம் ப்ரோம் செல்கிறாள் ..பதினோராம் வகுப்பு பரீட்சை போன வாரம் தான் முடிவுற்றது ....இப்போதான் நர்சரியில் சிரித்துக்கொண்டே நுழைந்தாள் கால ஓட்டத்தில் 11 ஆம் வகுப்பு வந்து முடிந்தும்  விட்டது ...அவளுக்கு உடை மாக்சி டிரஸ் எடுத்தாச்சு எல்லா நண்பிகளும்  ஒன்றாக ஒரு நண்பியின் அம்மாவுடைய 8 சீட்டர் வானில்  ப்ரோம் நடக்கும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள் ..
                                                      ==============================

ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் ..


                                                                                  

                                                           ========================
அப்புறம் எங்களுக்கு விடுமுறை துவங்கியாச்சி ..பயணம் மேற்கொள்ள இருப்பதால் தற்காலிக விடுமுறை எனது வலைப்பூவுக்கு ..வெக்கேஷன் முடிந்து மீண்டும் புதிய சமையல் குறிப்புக்களை வாரி வாரி வழங்குவேன் :) 

அதுவரை   

                                                                         

எல்லாரும் சந்தோஷமா இருங்க :) 

அன்புடன் ஏஞ்சல் ..


74 comments:

 1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ இருங்க புறொம் க்கு மேக்கப் போட்டுக்கொண்டு வந்திருந்து படிக்கிறேன்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க மியாவ் வாங்க :) ==== பள்ளியில் கூட ப்ரோம் நடக்குதா ஹாங் ஹாஹாச் ஹூக் கிகிக்கிய்

   Delete
 2. ஆஹா இந்த புறொம்.. அதுவும் பெண்பிள்ளைகளின் மேக்கப் சொல்லி வேலை இல்லை.. இப்பவே மணப்பெண் கோலத்தைப் பார்க்கலாம்:)..

  நானும் கனடாவில் இப்படிப் பல பார்த்திருக்கிறேன். பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்.. பெற்றோருக்குத்தான் திண்டாட்டம்:).

  ReplyDelete
  Replies
  1. கனடா அமெரிக்கா தான் ப்ரொம் முன்னோடிகள்..ebay,Amazon.அப்புறம் ஆன்லைன் ஷாப்பிங் இப்பொ கொஞ்சம் மலிவு விலையில் விற்பனை இருப்பது பெற்றோர் க்கு கொஞ்சம் வசதி. .அந்த ட்ரெச மீண்டும் அவர் உடுத்த சான்சே கிடைக்காது :)

   Delete
 3. எங்களிடத்தில் யூனிவசிட்டி போக முன் ஸ்கூல் லீவ் பண்ணும்போதுதான் இப்படி நடக்கும். அதுக்கு ஜோடி ஜோடியாக டான்ஸ் ரெடி பண்ணி ஆட வேண்டுமாம்... அடுத்த வருடம் எங்கட மகனுக்கு ஜோடியா ஆட ஒரு கேள் தேவை ஹா ஹா ஹா:)...

  எங்கள் வீட்டுக்கு 2,3 வீடுகள் தள்ளி ஒரு ஸ்கொட்டிஸ் பிள்ளை, மகனின் வகுப்பிலேயே படிக்கிறா.. இருவரும் நல்ல ஃபிரெண்ட்ஸ். அப்போ நான் சொன்னேன்.. ஸ்கூலில் ஃபிரெண்ட்ஸ் ஆக இருங்கோ ஆனா அதுக்கு மேல் ஃபிரெண்ட்ஷிப் வேண்டாம் என.. அதுக்கு சொன்னார்.. இல்லை அம்மா இது டான்ஸ் ஆடும் வரைதான், பின்பு யூனிவசிட்டி போயிட்டால்ல்.. எல்லோரும் பிரிந்திடுவோம்.. அங்கு புது ஃபிரெண்ட்ஸ் தானே இருப்பார்கள் என... ரொம்பத் தெளிவாகவே இருக்கிறார்கள் இக்காலப் பிள்ளைகள்.... ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. Haahaa. ஹா கர்ர்ர்ர்ர்:) பிள்ளைகள் தெளிவா இருக்காங்க இப்போது.உங்கள் system வேறு இல்லையா.. இங்கே 11 த் முடிச்சு உடனெ சிலர் apprenticeship செய்ய செல்வார். மகள் ப்ரெண்ட் ரெண்டு பேர் நர்சிங் போராங் க .சில மாணவர் ஆர்மிக்கு. சிலர் காலேஜ் ..ஆனா 12,13 முடித்து தான் யுனிவெர்சிட்டி செல்ல இயலும் ..பாதி யில் போகிர பிள்ளைகளுக்கான ஒர் farewell என்றும் சொல்லலாம். அடுத்து நெக்ச்த் இயர் எல்லாம் வேறு க்ரூப் பிரிய நேரிடும்

   Delete
 4. //ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் ..//

  மீயும் மீயும் வாழ்த்துச் சொல்றேன்ன்ன்.. ரம்ளான் என்றாலே பிரியாணிதான் நினைவுக்கு வருது... ஆனா மீ இப்போ சைவமாக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர் :) சாப்பாட்டு ராணி

   Delete
 5. ///அப்புறம் எங்களுக்கு விடுமுறை துவங்கியாச்சி ..பயணம் மேற்கொள்ள இருப்பதால் தற்காலிக விடுமுறை எனது வலைப்பூவுக்கு ..வெக்கேஷன் முடிந்து மீண்டும் புதிய சமையல் குறிப்புக்களை வாரி வாரி வழங்குவேன் :) ///

  அப்பாடா அப்போ கொஞ்ச நாளைக்கு லாப் பரிசோதனை இல்லையா?:)... கோட் இஸ் கிரேட் பாருங்கோ:)...

  ஹப்பி ஹொலிடேய்ஸ்ஸ்ஸ்ஸ்:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் ..இப்படி ஓவர் ஹாப்பினஸ் உடம்புக்கு கெட்டது ..அப்புறம் இருக்கற சமையல் குறிப்பெல்லாம் தினமும் ஷெட்யூல் பண்ணி விட்டுருவேன் சொல்லிட்டேன் :)

   Delete
  2. இன்னாது மியாவ் இப்படிச் சொன்னா எப்பூடி.....பூஸார் மட்டும் என்னவாம்....உங்களுக்குப் பிங்க் பிடிக்கும் ந்றதுக்காக பீட் ரூட் இடியாப்பம் எல்லாம் பண்ணி....எல்லாரையும் டெஸ்ட் பண்ணலையா....

   மியாவ் சத்தம் எப்போ கேக்குமாம்..ஒரு மியாவ் இப்பதான் போகுது...இன்னுரு மியாவ் அல்ரெடி கான்...சீக்கிரம் வாங்கப்பா...

   கீதா

   Delete
 6. விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து மீண்டும் வலையுலகம் வந்து அனுபவங்களை பகிரவும் தங்களுக்கும் இனிய ரமதான் வாழ்த்துகள் உரித்தாகுக.....

  (இன்றிரவு எனது ரமதான் பதிவு ''நூர் இஸ்லாமிய வங்கி'' அவசியம் காணவும் நன்றி)

  ReplyDelete
  Replies
  1. விடுமுறை முடிந்து எக்ஸ்டரா புத்துணர்வோட வரேன் :)

   இதோ வரேன் உங்க பதிவுக்கு இப்போ ...
   வருகைக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 7. இனிய ரம்ஜான் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 8. ப்ரோம் நைட் குறித்து நிறய திகில் படங்கள் வந்திருக்கின்றன..
  பைதிவே ...
  ஹாப்பி வெக்கசன் ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கேன் ....இங்கும் அன்றுதான் நிறைய ப்ரோபோசல்ஸ் /டேட்டிங்எல்லாம் நடக்குமாம் :)
   இனி //என்ற இந்துமதி அம்மாவின் நாவல் ஒருமுறை படித்தேன் அது அமெரிக்காவில் குடியேறிய குடும்பம் எப்படி இந்த வெளிநாட்டு கலாச்சாரத்துடன் சமாளிக்கிறாராகள் என்று ..உண்மையில் வெளிநாட்டு வாழ் நம் பிள்ளைகள் குழப்பத்தில் கொஞ்சம் தவிக்கிறாரகள் நிறம் கலாச்சாரம் என பல வந்து முட்டி மோதும் ..
   மிக்க நன்றி சகோ வருகைக்கும் பின்னூட்ட்டத்திற்கும்

   Delete
 9. //அப்புறம் எங்களுக்கு விடுமுறை துவங்கியாச்சி .. பயணம் மேற்கொள்ள இருப்பதால்//

  தங்களின் பயணம் இனிமையாகவும், சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் அமைய என் இனிய நல்வாழ்த்துகள்.

  //தற்காலிக விடுமுறை எனது வலைப்பூவுக்கு ..//

  ஆஹா .... அப்போ எங்களுக்கும் ஜாலி தான் .... விடுமுறைதான்.

  //வெக்கேஷன் முடிந்து மீண்டும் புதிய சமையல் குறிப்புக்களை வாரி வாரி வழங்குவேன் :) //

  அடாடா ...... அதிரா ஓடியாங்கோ ...... ஏதேதோ சொல்லி இப்படி ஒரேயடியாகப் பயமுறுத்துறாங்கோ ... பாருங்கோ.

  //அதுவரை .... எல்லாரும் சந்தோஷமா இருங்க :) //

  சரி..... சரி...... இப்போதே சந்தோஷம் பொய்ய்ய்ய்ங்க ஆரம்பித்து விட்டதாக யாரோ அங்கு
  தேம்ஸ் நதிக்கரையில் சொல்வது என் காதிலும் விழுகிறது. :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க கோபு அண்ணா ..தேம்ஸ்கரை இன்னிக்கு பொங்கி ஆர்ப்பரிக்குதாம் நியூசில் சொன்னாங்க :)
   எல்லாம் என் பதிவை பார்த்துதான் :) சரி நீங்களும்இருங்க விரைவில் வருவேன் :)

   Delete
 10. படங்களும், பதிவில் உள்ள செய்திகளும் பிரமாதம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 11. வெக்கேஷன் முடிந்து மீண்டும் புதிய சமையல் குறிப்புக்களை வாரி வாரி வழங்குவேன் :( :( :(

  13ம் வகுப்புல நடக்கற ப்ரோமுக்கு அப்புறம், அவங்க அவங்க அவங்களோட வாழ்க்கைப் பயணம் தொடர ஆரம்பிச்சுடும்கறதுனாலயா? அதுக்கப்பறமும் பெற்றோர்கள் கண்காணிப்பு உண்டா அல்லது பசங்க அவங்க தனியாப் போயிடணுமா? எப்போ வரைக்கும் பெற்றோர்களின் ட்பென்டன்சி இருக்கும் (பாக்கெட் மணி போன்று செலவுக்கு பெற்றோர்களை எதிர்பார்ப்பார்கள்?)

  உங்கள் மகளுக்கும் நல்ல எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க நெல்லை தமிழன் ..நான் வெக்கேஷன்ல இருந்தாலும் என் நினைவு புதுப்புது ரெசிப்பிலா தான் இருக்கும் அதுவும் யாரும் செய்யாத சமையல் குறிப்பு :) சீக்கிரம் வரேன் :)
   //13ம் வகுப்புல நடக்கற ப்ரோமுக்கு அப்புறம், அவங்க அவங்க அவங்களோட வாழ்க்கைப் பயணம் தொடர ஆரம்பிச்சுடும்கறதுனாலயா?//

   13 வகுப்புக்கு அப்புறம் யூனிவர்சிட்டி இப்போ மக்கள் 11 முடிச்சிட்டா இப்பவே பல பிள்ளைகள் காலேஜ் போயிடறாங்க இல்லைனா apprenticeship போகறாங்க ..மகளின் நட்பு ஒருத்தி பரீட்சை கொஞ்சம் சரியா செய்யலைன்னு இப்பவே அட்வான்சா வேலைக்கு அப்ளை பண்ணிட்டா ..இங்கே 16 முடிந்தால் உடனே வேலைக்கு போகலாம் ..மேக்டானால்ட்ஸ் kfc அப்புறம் பெரிய வெர்ஹவுஸ்கள் சிப்ஸ் பாக்டரி எல்லாம் வேலை எடுத்து போயிடுவாங்க ..13 க்கு மேலே அவங்க தனியா பிளாட்டிங் போகலாம் படிப்புக்கு கவர்ன்மென்ட் உதவுவதால் ..இங்கே பிரச்சினை இல்லை ..நம்ம ஆசியர் மட்டுமே இன்னும் பொத்தி வைக்கிறாங்க
   ..மகள் வயதேயான நட்புக்களின் பிள்ளைகள் எல்லாரும் வேலை செய்ய ஆரம்பிச்சாச்சு பார்ட் டைம் இங்கே 8 மணிநேரம் வேலை செய்யலாம் ..
   இன்னும் நிறைய இருக்கு இதைப்பற்றி விரிவா ஒரு பதிவு பிறகு போடறேன் .வருகைக்கும் பின்னூட்ட்டத்திற்கும் மிக்க நன்றி ..

   Delete
  2. ஏஞ்சல் வாங்க புதுப்புது ரெசிப்பிக்களுடன்...போகும் இடத்துல கூட டேஸ்ட் பாக்கறத நம்ம ஸ்டைல்ல செய்யறா மாதிரி....சொல்லுங்க...

   கீதா

   Delete
 12. @அதிரா - புறொம் க்கு மேக்கப் போட்டுக்கொண்டு வந்திருந்து படிக்கிறேன் - இடுகையைப் படிக்கறதுக்குமா? சரி சரி... பத்துமணி நேரம் கழித்துத்தானே வந்து படிப்பீங்கன்னு நினைச்சால் உடனே வந்திட்டீங்களே?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) இல்லை லேட்டாகும்னு தெரிஞ்சி அவங்க மேக்கப் போடுமுன்னே வந்து பின்னூட்டம் தந்தாச் அப்புறம் காணலையே பாருங்க இன்னும் பூனை கண்ணாடி முன்னாடிதான் இருக்காங்க :)

   Delete
  2. ஹஹஹஹ்ஹ் அதிரா அதான் காணலியா எங்கள்ப்ளாகில் என் கதைக்கு கருத்து போடவே இல்லை...என்னைப் பார்த்துவிட்டுப் போயிட்டாங்க..

   கீதா

   Delete
  3. பூசாரைப் பிடிக்கிறேன்....வரட்டும்...ஹும் பூஸார் அழகாத்தானே இருக்கார் எதுக்கு மேக்கப்..ஹிஹீ

   கீதா

   Delete
 13. எங்களுக்கும் ஈத் 3 நாள் விடுமுறை இன்றிலிருந்து ஆரம்பம். (ஏற்கனவே வெள்ளி, சனி வார இறுதி விடுமுறை). இன்னைலேர்ந்துதான், காய்கறி/பழ மார்க்கெட் போனாலும் பழங்களை, பகலில் டேஸ்ட் செய்துபார்க்கமுடியும். கடந்த 30 நாட்களாக, வெளில, பகல்ல எதுவும் சாப்பிடமுடியாது, குடிக்கமுடியாது (தண்ணீர் வாங்கினாலும், ஆபீசில் அறைக்கதவை சார்த்திக்கொண்டுதான் குடிக்க முடியும்) எல்லோருக்கும் EID தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மெட்றாஸில் நேற்றே கொண்டாடிட்டாங்கன்னு நினைக்கிறேன் இங்கே லேட்டாதான் கொண்டாடுவாங்க ..காலையில் நிறையகுட்டீஸ் அழகா ட்ரெஸ் அணிந்து போறதை பார்த்தேன்..

   அவ்வ்ளோ கடுமையான சட்டதிட்டங்களா !!

   Delete
  2. ஆமா, என் கசின் மஸ்கட்டில் இருக்கிறார். குதிரை டாக்டர். ரமலான் நோன்பு சமயம் வீட்டில் சமையல் செய்ய முடியாதாமே...மணம் வரக் கூடாதாமே. அதனால் பகலில் தயிர்சாதம் மட்டும் செய்துவிட்டு அதுவும் சத்தமில்லாமல் அல்லது முந்தைய நாள் நோன்பு முடியும் மாலையில் தான் சமைப்பார்களாம் அதையே அடுத்த நாள் பகலிற்கும் கூட வைத்துக் கொண்டு விடுவார்களாம்...என்று சொன்னார்...நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு நெல்லைத்தமிழன்...

   கீதா

   Delete
  3. அப்படி கடுமை இல்லை கீதா ரங்கன். பொது இடங்களில் சாப்பிடக்கூடாது. (தண்ணீரும் குடிக்கக்கூடாது). பொதுவா மார்க்கெட்ல திராட்சை மாதிரி பழம் வாங்கும்போது, கடைக்காரன் பார்க்காத நேரம், ஒண்ணை எடுத்து சாப்பிட்டுப்பார்ப்போம். அதேபோல, முந்திரி போன்றவற்றை வாங்கும்போதும் (லூசில் வாங்கும்போது). அது மாத்திரம் ரொம்ப கேர்ஃபுல்லா இந்த மாதத்துல பண்ணிடக்கூடாது.

   ஆபீசுக்கு எடுத்துவந்து என்னுடைய ரூமில் சாப்பிடுவேன். இருந்தாலும், கண்ணாடி சன்னலை பேப்பரை ஒட்டி மூடிவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் ரமதான் மாதத்தில்.

   பகல்ல வீட்டுல என்ன பண்ணினாலும் கேள்வி கேட்கமாட்டாங்க (உண்மைல, இஸ்லாமியர்கள் மதியம் 3 மணிக்கே உணவு செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. அப்பதானே 6 1/2 மணிக்கு நோன்பு முடிந்தவுடன் சாப்பிடமுடியும்). இதைத் தவிர, சில ரெஸ்டாரன்டுகள் டெலிவரி மட்டும் மதியம் செய்வதற்கு அனுமதி உண்டு (அதாவது, நாம போய், லஞ்ச் பாக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அங்க உட்கார்ந்து சாப்பிடக்கூடாது). துபாயில் 3 வருடங்களுக்கு முன்பு (அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்) தவறுதலாக அங்கேயே பாக்கெட் பிரித்து லபக்கிய ஒருவன் போலீசில் மாட்டி உடனே ஜெயில்ல போட்டுட்டாங்க, ரமதான் முடிந்ததும் அவனை ஊரைப்பார்க்க திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்று சொன்னார்கள் (திரும்பி காலடி வைக்கமுடியாத அளவு).

   சவுதி என்றால், உணவை கனவில்கூட நினைக்கமுடியாது (அவ்வளவு ஸ்டிரிக்ட்). வீட்டில் செய்வதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.

   மஸ்கெட்/ஓமானைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியலை (ரமதான் கட்டுப்பாடைப் பற்றி மட்டும்)

   Delete
 14. இதை இப்போதுதான் முதலில் கேள்விப்படுகிறேன். நம்மூர் ஃபேர்வெல் டே போல "பசுமை நிறைந்த நினைவுகளே.." என்று ஆங்கிலத்தில் பாடுவார்களோ!

  ReplyDelete
  Replies
  1. இது அமெரிக்க இறக்குமதி இன்னும் கொஞ்சம் நாளில் நம்மூரில் வரலாம் ஆனா ரமா ரவி இது போல ஒரு செலிப்ரேஷன் முந்தி போட்டாங்க ..அதனால் பாம்பே டெல்லி பெங்களூரில் இருக்கலாம் இந்த ப்ரோம் ..

   எஸ் கேட்கணும் மகள்கிட்ட எப்படி நடந்த்தின்னு ..புதன் கிழமை தான் பங்க்ஷன் .

   ஜஸ்டின் பிபர் மைலி சைரஸ் இப்படி நிறைய சிங்கர்ஸ் பாட்டுக்கள் இருக்கு

   Delete
 15. நம்மூர் பஸ்டே யில் மாணவர்கள் அமர்க்களம் செய்வார்கள். நலல்வேளை அரசு இப்போ எல்லாம் அதைத் தடை செய்து வைத்திருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ !! அதெல்லாம் நினைச்சா நெஞ்சி பதறும் .கொஞ்ச நஞ்சமா அட்டகாசம் /.இப்போ தடை செஞ்சிட்டாங்களா நல்லது

   ..இது பிள்ளைங்க அமைதியா க்ரூப்பா போவாங்க அவ்வளவே

   Delete
 16. நீங்களும், அதிராவும் விடுமுறையில் செல்வது எங்களுக்கெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டது போல இருக்கும் என்று நினைக்கிறேன். வலைத்தளங்கள் அமைதியாக "ஏப்ரல் மே யில பசுமையேயில்ல.. (இப்போ ஜூன் ஜூலையில என்று பாடவேண்டும்) என்று பாடிக்கொண்டிருக்கும்!!

  :)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) இதில் மகளுக்கு பரீட்சை சீக்கிரம் முடிஞ்சதால் எங்களுக்கு விடுமுறை சீக்கிரம் ஆரம்பிச்சி மற்ற பிள்ளைகளுக்கு ஜூலை 20 வரை ஸ்கூல் இருக்கு ..
   இங்கே எப்பவுமே ஜூலை பாதிமுதல் செப்டம்பர் வரை லாங் ஹாலிடேஸ் .

   Delete
 17. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடி சந்தோஷமாகத் திரும்பி வாருங்கள். எங்கள் சார்பிலும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி :)

   Delete
 18. விடுமுறையில் இந்தியா வருமுத்தேசமுண்டா, இங்கெல்லாம்பள்ளிக் கொண்டாட்டங்களில் எத்னிக் ட்ரெஸ்போடுவதே ஃபாஷன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..இந்த வருடம் இந்திய பயணம் இல்லை ..இங்கேயும் பஞ்சாபி குஜராத்தியர் காக்ரா சோளி ,அனார்கலி ட்ரெஸ் போடறாங்க ..இலங்கை பிள்ளைங்க சிங்கலிஸ் ட்ரெடிஷனல் டைப் உடை அணியறாங்க ஒரு பொண்ணு அரைத்தாவணி போட்டு போன படமும் பார்த்தேன் ..

   Delete
 19. இது எங்கள் ஊர் பக்கம்வர ரொம்ப
  நாளாகும் என்றாலும் வந்துதான் தீரும்
  வந்தால் நல்லது போலத்தான் படுகிறது
  இந்த ஒரு நாள் கொண்டாட்டம் நிச்சயம்
  வாழ் நாள் முழுக்க நினைத்துப்
  பார்க்கும்படியாகத்தானே இருக்கும்

  விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடி
  கூடுதல் விறுவிறுப்புடன் பதிவுகள் தர வேணும்
  எனும் கோரிக்கையுடனும்..வாழ்த்துக்களுடனும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரமணி அண்ணா இதெல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்கள் .அதற்க்காகத்தான் இப்படி அரேஞ்சமென்ட்ஸ் செய்யறாங்க பள்ளிகளில்
   நம் நாட்டிலும் வரும் விரைவில் .மிக்க நன்றி அண்ணா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் விரைவில் சந்திப்போம் விடுமுறைக்குப்பின்

   Delete
 20. தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
  இனிய ரம்ஜான் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி அண்ணா ..மீண்டும் பதிவுகள் வழியே விடுமுறைக்குப்பின் சந்திப்போம்

   Delete
 21. Happy,Happy holiday anju...

  இங்கும் இந்த கொண்டாட்டம் இருக்கே. ஆனா உங்களிடத்தில் இருக்கும் சட்டதிட்டம் இல்லை.ஏன் எனில் இங்கு யூனிபார்ம் சிஸ்டம் இல்லை. ஆனா இதுக்கு இன்னும் செலவளித்து ட் ரெஸ் வாங்கி அமர்க்களப்படுத்துவார்கள். மகனுக்கு நெக்ஸ்ட் இயர்
  .ஆண்பிள்ளைகளென்றாலும் செலவுதான் ட் ரெஸ்க்கு. எல்லாம் மார்க் உடுப்புதான் வேணும் என்பார்கள்.
  ஈத் முபாரக் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன் இதில்.
  சந்தோஷமா,மகிழ்ச்சியா ஹாலிடேயை அனுபவிங்க அஞ்சு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..அங்கே ஜெர்மனியிலும் இருக்கா ..நாங்கள் இருந்தவரை பார்க்கவில்லை அப்போ மகள் நர்சரிதானே படிச்சா அதான் தெரியலை ..அங்கே எப்பவுமே யூனிபார்ம் இல்லையே ..இங்கே 12,13 இல் நோ யூனிபார்ம் ..கலர் உடை ஆனால் நீட்டாக இருக்கணும் நோ ஜீன்ஸ் கிழிச்சி விட்ட ஜீன்ஸலாம் அனுமதிக்க மாட்டாங்க அடுத்த வருடம் கருப்பு நிற formal உடை தான் அணியனும்

   மிக்க நன்றி ப்ரியா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ..அடுத்த ஆண்டு உங்க மகனின் அனுபவங்களை பதிவிடுங்க

   Delete
  2. உண்மைப்பா பிரியசகி. பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது நாம் தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிவார்கல். வளர்ந்த பின் மார்க் ஆடை, பாதணிகள் என குறைந்த விலையே 150 பிராங்கக்கும் மேலே ஆகுது. பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள் என வேறிபாடின்றி செலவுகள் தான் இங்கும். சில நேரம் மாதம் 3000 பிராங்க பசங்க தேவைக்கே எடுத்து வைக்க வேண்டி வருகின்றதே! வளர வளர செலவும் தான் கூடுகின்றது.

   Delete
 22. வெக்கேஷனை மகிழ்ச்சியாக கழித்த் வாருங்கள் ஏஞ்சலின்.
  நானும் இங்கு ரமலான் நல் வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.

  ப்ரோம்பற்றி தெரிந்து கொண்டேன், மகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிக்கா விரைவில் மீண்டும் பதிவுகள் ஊடே சந்திப்போம் .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிக்கா

   Delete
 23. அட! இங்கே இந்த வாரம் என் மகனுக்கு காலேஜ் லைவ் முடிந்து விருது வழங்கும் விழா புதன் கிழமையும், மகளுக்கு ஸ்கூல் லைவ் முடிந்ததான விழா வியாழனும் நடக்க இருக்கின்றது. இங்கும் கடைசி நாளில் கிராண்டாக தங்கள் விருப்பப்படி ஆடை அணிந்து வருவார்கள். மகள் இம்முறை ஆசிரியர்களுக்கு பரிசு வாங்க 50 பிராங்க கொடுக்க வேண்டும் என கேட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தம் 20 பேர் படி மூன்று வகுப்பில் 60 பேருக்கு ஐம்பது பிராங்க படி மூவாயிரம் பிராங்க ஆகுமா கிப்ட் வாங்க என கேட்டேன். இத்தனை வருடம் கற்பித்த ஆசிரியர்கள் என்பதனால் கிராண்ட் பார்ட்டி யும் கிப்டுக்குமாக இந்த காசு சேர்ப்பதாக சொன்னாள். இங்கேயும் இந்த வாரத்தோடு பள்ளி விடுமுறை ஆரம்பம். ஆகஸ்ட் 15 வரை விடுமுறை இருந்தாலும், மகளுக்கு காலேஜும், மகனுக்கு ரயில்வேயில் வேலையும் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்குவதனால் யூலை கடைசி வரை மட்டுமே எங்களுக்கு ஹாலிடே. இத்தாலி பீச் ஏரியா செல்லலாமா என யோசிச்சிட்டிருக்கோம்.

  உங்கல் விடுமுறை பாதுகாப்பானதாக இருக்கட்டும், நடப்பு செய்திகள் பயணத்துக்கு அத்தனை உகந்ததாக இல்லாதது போல் இருப்பதனால் விடுமுறைக்கு செல்லும் இடங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. யூரோப் முழுக்க இப்போ ஸ்கூல் முடியும் சீசன்தானேப்பா அதான் எல்லா பன்க்ஷனும் ஒரே நேரம் வருது ..

   இங்கே பெரிய பரிசுன்னு தரவேண்டிய அவசியமில்லை ..பெயர் பொறித்த கப் இல்லைனா ஒரு பாட்டில் ஒயின் ,
   சின்ன பொம்மைகள் அப்புறம்ன் கார்ட்ஸ் ....
   ..அடுத்த வருஷம் யூனிபார்ம் வேறுஇல்லை அது இப்பவே கண்ணை கட்டுது :)
   தாங்க்ஸ்பா ..ஆமாம் நான் கவனமாத்தான் தேர்வு செய்வேன் ..சில நாட்கள் ஷார்ட் ட்ரிப்ஸ் இங்கே உள்நாட்டில்தான் .
   அப்புறம் துருக்கி போகலாம்னு இவர் சொல்றார் ஆனா இன்னும் முடிவு செய்யலை
   மிக்க நன்றி நிஷா

   Delete
  2. ஹை நிஷா உங்கள் மகன் மற்றும் மகளுக்கு வாழ்த்துகள் நல்ல எதிர்காலம் அமைந்திடவும்!!!! கிட்டத்தட்ட இங்கு ஃபேர்வெல் செலிப்ரேட் செய்வது போலத்தான் இருக்குது இல்லையா....நீங்கள் சொல்லியிருப்பதும்...ஆசிரியர்களுக்குக் கிஃப்ட் வாங்கிக் கொடுப்பதும் உண்டு...லஞ்ச் என்று...

   கீதா

   Delete
  3. துருக்கு நல்ல இடம்..எனது ஸிஸ்டர் இன் லா அஃபிசியலாகச் சென்று வந்தார். என்ன அவருக்கு வெஜிட்டேரியன் ஃபுட் கிடைக்கக் கஷ்டப்பட்டதாகச் சொன்னார். ஆனால் தங்கியிருந்த ரூமில் சிறிய கிச்சன் இருந்ததால் வெஜ் ஃபுட்டுக்குத் தேவையான பொருட்கள் பார்த்து ப் பார்த்து வாங்கியதாகச் சொன்னார். கொஞ்சம் ட்ரை ப்ளேஸ் என்றார்.

   நீங்கள் சென்றால் யுரோப் சைட் துருக்கி போவீர்கள் இல்லையா மற்றொரு பகுதி ஆசியா துருக்கியாச்சே...அதற்கு என்டெர் செய்ய விதிமுறைகள் உண்டா? யுரோப் என்றால் பயணம் செய்யலாமே உங்களுக்கு அதனால் கேட்டேன்..

   அப்புறம் நம்ம ஏரியாவுக்குக் கதை அனுப்பிவிட்டேன் ஏஞ்சல். ஆனால் உங்கள் பயணம் நெருங்கிவிட்டது இல்லையா. எனக்கும் நெட் பிரச்சனையால் அனுப்ப இயலவில்லை இன்றுதான் அனுப்ப முடிந்தது.

   சரி எந்த இடம் போனாலும் ஸேஃபா போயிட்டு நல்லா எஞ்சாய் செய்துட்டு....எங்களை எல்லாம் டிக்கெட் விசா இல்லாமல் அழைத்துக் கொண்டு போய் சுற்றுப்பார்க்க வையுங்கள்!!! ஓகேயா....

   கீதா

   Delete
 24. ப்ரோம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகின்றேன் உங்களின் பகிர்வு மூலம் ஆட்டோவுக்கு டுக்டுக் என்று வெள்ளையர்கள் சொல்லும் போது சிரிப்பாக இருக்கும்)))

  ReplyDelete
 25. இனிய வசந்தகால விடுமுறையைக்கொண்டாடுங்கள். மீண்டும் வரும் போது வலையில் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் உங்க பிரான்சில் இருக்கா இந்த ஆட்டோ ரிக்ஸ்ஹாஸ் :) இங்கே இப்போ வெட்டிங்குக்கே ஹயர் செய்றாங்களாம் அதும் சம்மர் டைமில் நல்லா இருக்குன்னு :) சந்திப்ப்போம் விடுமுறைக்குப்பின் பதிவினூடாக

   Delete
 26. நல்ல முன்னேற்றம்தான் ,ஆனால் , இங்கே பெரும்பாலான கல்லூரிகளில் இரு பாலர்கள் பேசிக் கொள்ளத் தடை நீடிக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவான்ஜி ..அளவுக்கதிகமா கட்டுப்பாடு போட்டாலும் பிள்ளைங்களுக்கு பிடிக்காதே ..இங்கே எல்லாரும் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோர் பேச்சையே கேட்பாங்க ..கட்டாய திருமணம்லாம் செய்யமுடியாதது . அவங்க போக்குக்கே தான விட்டு பிடிக்கணும்

   Delete
 27. விடுமுறை இனிமை. பார்க்கலாம் வந்த பிறகு. அன்புடன்

  ReplyDelete
 28. ஏஞ்சல்! வந்த்டுட்டேன்...மீ....லாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டு...ஹஹஹ் அதிரா போல...னெட் இப்பத்தா வேலை செய்யத் தொடங்கியிருக்கு...

  இந்த ப்ரோம் பற்றி விசு கூட ப்ரோம் என்று சொல்லாவிட்டாலும் இதே நிகழ்வை அவரது மகள் சென்றது பற்றி எழுதியிருந்தார். வழக்கம் போல நகைச்சுவையுடன்..

  நாம் முன்பு ஃபேர்வெல் கொண்டாடுவது போல இல்லையா ஏஞ்சல் அதற்கே அப்போது காசு கொடுக்க வீட்டில் பல கேள்விகள் தருவதற்குக் கஷ்டப்படுவாங்க. இப்ப காலத்துக்கேத்த மாதிரி மாறியிருக்கோ....இங்கயும் வந்துரும்...நாமதான் எல்லாமே வெஸ்டர்னர்ஸ காப்பி அடிக்கறோமே....பிஸா கல்சர் போல இதுவும் வந்துரும். அல்ரெடி வந்துருக்கும்னுதான் தோணுது...

  ஸோ ஹாலிடேய்ஸா....அதிரா போயாச்சு போல இப்ப நீங்களுமா...அப்ப கும்மி இல்லாமல் போரடிக்கும் தான். வலைகள் அமைதி காக்கும்....

  எனிவே கொண்டாடிவிட்டு வாருங்கள் ஹாப்பி ஹாலிடேய்ஸ்....எஞ்சாய்!!! ஜெசி செல்லங்கள் எலலம் என்ன செய்யப் போகிறார்கள்??!!

  மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய மனமார்ந்த வாழ்த்துகள்!

  கீதா

  ReplyDelete
 29. வாங்க கீதா :) ..ஆமாம் ப்ரோம் அமெரிக்க இறக்குமதி தான் பிக் பிரதர் இப்போ பிக் பாஸா இறக்குமதி ஆகியிருக்கு நம் நாட்டில் அப்டியே ப்ரொமும் வரும் அங்கும் ..
  ஹாலிடேஸ் போயிட்டு வரோம் ..cattery யில் விடப்போறோம் ..முதலில் பெட் சிட்டர் கிட்ட விட நினைச்சோம் ஆனா ஜெஸி தேடுவா எங்களை அதான் பெட்டர் cattery அங்கே சேப்டி கூட ..
  மிக்க நன்றி கீதா

  ReplyDelete
 30. அனைவருக்கும் எங்கள் தாமதமான ரமலான் வாழ்த்துகள்!

  ReplyDelete
 31. ரம்ஜான் வாழ்த்துக்கு நன்றி சகோதரி
  -mohamed-

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் பதிவுகள் ஊடே சந்திப்போம் .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

   Delete
 32. happy holidays anju...


  சந்தோசமாகவும் , பாதுகாப்பாகவும் விடுமுறையை கொண்டாடிவிட்டு வாங்க...

  மேலும் பல புதிய செய்திகளை சொல்லிருக்கீங்க...nice..

  ReplyDelete
 33. super super photos m dresses m attakasam. namma ilavarasi engke. :)

  ReplyDelete
 34. ரொம்பவும் சுவாரஸ்யமான பதிவு ஏஞ்சலின்! புதிய தகவல்கள்! அழகிய புகைப்படங்கள்!
  விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க என் அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 35. எங்கே இன்னும் விடுமுறை முடியவில்லையோ அஞ்சலின்? நலம் தானே?

  ReplyDelete
 36. வணக்கம் !


  அஞ்சுவின் வலையில் என்றன்
  ..அகவிழி பதிந்த வேளை
  மஞ்சரி மயங்கும் வண்ணம்
  ..வகைவகை யாகச் சின்னப்
  பிஞ்சுகள் கூடிக் கொண்ட
  ..பிரிவுப சாரம் கண்டே
  கொஞ்சுமோர் பிள்ளை போலக்
  ..குழைந்துதான் போனேன் நானே !

  மிகவும் அருமை வாழட்டும் தலைமுறை
  வாழ்க நலம் !

  ReplyDelete
  Replies
  1. வருக வருக சீராளன் :) நாம் முகப்புத்தகத்தில் சந்தித்திருந்தாலும் பதிவில் இப்போதான் மீட்டிங் :)
   அழகான கவிதையோடு என்ட்ரி கொடுத்ததற்கு நன்றிகள்

   Delete