அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/12/17

இது எங்க ஏரியா :)                                சனிக்கிழமை நானும் அவரும் எப்பவும்போல canal வழியா செல்லங்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு வாக்கிங் போனோம் ..கொஞ்சம் தொலைவு சென்றதும் ஒரு பிரிட்டிஷ் ஆணும் அவரது மனைவியும் புஷ் சேரை தள்ளிக்கிட்டு வேகமா எங்க முன் வந்தாங்க..அந்த பொண்ணு கண்ணில் பயத்துடன் சொன்னார் ..//அங்கே ஒரு ஸ்வான் குடும்பம் இருக்கு ஒருவரையும் அவ்வழியே கடந்து போக விடாம பாய்ந்து கொத்துது கவனம் என்றார் ..நானும் இவரும்  வேகமா முன்னே சென்று பார்த்தால் இதோ இவங்க கணவன் மனைவி பிள்ளைங்க நாலுபேர்                                                                               
போற வழியில் மனைவியும் பிள்ளைகளும் சன் பாத் எடுத்துக்கொண்டு .., அந்த குடும்பத்தலைவன் எல்லாரையும் இறகை  விரித்து அட்டாக் செய்கிறாற்போல் நிற்கின்றான் :) அந்த பக்கம் 6 பிரிட்டிஷ் பிள்ளைகள் எல்லாம் டீனேஜர்ஸ் நல்ல வெயில் நேரமாதலால் குட்டி ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து ஸ்வான் கொத்தினா அவ்ளோதான் எனும் நிலைமை ..ஸ்வான் பிள்ளை நான் அடிக்கடிசந்திப்பவர் எனவே என்னை ஒன்னும் செய்யலை :) மூவ் //என்றதும் மெதுவா அசைந்தான் ஆனால் உக்கிரம் என்னை தாண்டி அந்த பிள்ளைங்களை பாய்ந்து கொத்துவதில் குறியாக இருந்தான் நான் கிட்டே போய் கொஞ்சமாக தமிழில்பேச்சு கொடுத்துக்கொண்டே  ரொட்டி துண்டங்களை கொடுத்தேன் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போது அந்த 6 பேரும் வேகமா போயிட்டாங்க தாங்க்யூ என்று கத்திகொண்டே :) அவர்களுக்குள் பேசியது என் காதில் விழுந்தது ..தட் லேடி ஸ்போக் டு தோஸ் பெர்ட்ஸ் :) ..

                                                                                        அப்புறம் ஸ்வான் குடும்பத்தலைவனை சமாதானப்படுத்தி தண்ணியில் குடும்பத்தை இறக்கி அனுப்பி வைத்தேன் ..அன்னிக்கு படம் எடுக்க முடியலை ..இன்று காலை மீண்டும் அவ்வழியே சென்றோம் ரெண்டு rotweilers வைத்துக்கொண்டு இரண்டு ஆண்கள் நின்றுகொண்டிருந்தாங்க நானும் நினைத்தேன் எதோ நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ரெண்டு எட்டு வைத்து பார்த்தா :) முந்தா நேற்று பார்த்த அதே குடும்பம் தகப்பன் அட்டாக் செய்ய தயாராய் :) அவனுக்கு பயந்து இந்த பைரவர்களை வைத்துக்கொண்டு அந்த இருவரும் கடந்து செல்ல முடியாமல் ..எனக்கு விளங்கி விட்டது கிட்டே சென்று எப்பவும்போல முதலில் ஆங்கிலத்திலும் பின்பு தமிழிலும்  பேசி சமாதானப்படுத்தி அந்த rotweiler உரிமையாளருடன் கடந்து செல்ல விட்டேன் அவர்களும் உரக்க நன்றி சொல்லி சென்றனர்,, 

பிறகு நாங்களும் சென்று விட்டோம் அடுத்த பக்கம் பாலத்தில் ஏறி பார்த்தால் சைக்கிளில் செல்லும் ஒருவரை போக விடாமல்  அட்டகாசம் செய்தது ஸ்வான் .இறுதி வரை அவரை விடவில்லை அவர் வந்த வழியே திரும்புவதை தொலைவில் இருந்து பார்த்தேன் .


                        இந்த ஸ்வான்கள் தங்கள் குழந்தைகளை காக்க தான் இப்படி உக்கிரமாக இருக்காங்களாம் ..எங்கே யாராவது பிள்ளைங்களை தாக்குவார்களோ என அலெர்ட்டா இருக்குங்க என்று நெட்டில் படித்திருக்கிறேன் ..ஆனா ஆச்சர்யம் என்னை மட்டும் கொத்தவில்லை என் கணவரையும் கொஞ்சம் கழுத்தை நீட்டி ஹிஸ்ஸிட்டது ..நான்  மிரட்டியதும் பயந்து நிறுத்தியது அந்த அப்பா ஸ்வான் ..இதையெல்லாம் பார்த்து இவர் ஆச்சர்யமா  ------  ரொம்ப கிரேட் ..பூனைகிட்ட பேச முடியுது  நாய் கிட்ட பேச முடியுது  புறா கிட்ட  வாத்து ஸ்வான்ஸ் கூட விட்டுவைக்கலை என்றார் :)  அதோட இன்னொன்னும் சொன்னார் ஒரு சேர் போட்டு கொடுக்கறேன் தினமும் இந்த பக்கம்போறவரவங்களுக்கு உதவுங்க கம்யூனிட்டி சர்வீஸ் போலாச்சு என்று  .கர்ர்ர்ர்ர் :)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------எப்படி இருந்த என் வாத்து பாப்பாஸ் :)


                                                                                   

இப்போ பாருங்க :)

                                             

இதோ படத்தில் ஒரு கை ஏந்திப்பிடித்திருப்பது பிளாக்பெரி பழங்கள் :) 

                                                                                      


மூன்று வருஷம் முன் இந்த பிளாக்பெரி செடியை அது முள்ளில்லா வகை கார்டன் சென்டரிலிருந்து வாங்கி வந்து நட்டு வைத்தேன் இரண்டு வருடங்கள் நல்லா பழங்கள் பறித்து உண்டோம் ..செடி அவ்வளவு பெரிசா வளரல்ல ..இதில் முள்ளுள்ள வகை எல்லா இடத்திலும் தானா வளரும் ஆனா கைகாலெல்லாம் பதம் பார்த்துடும் அவ்வளவு கூறிய முட்கள் உண்டு காட்டு வகைசெடிகளில் .இந்த செடி நாங்க வாக்கிங் போற வழியெல்லாம் கூட இருக்கு கைநீட்டி பறிச்சி சாப்பிடுவேன் எப்பவும் ..எங்க வீட்டு செடி சம்மருக்கு வளர்ந்து வின்டர் நேரம்  காய்ந்து மீண்டும் சம்மருக்கு துளிர்க்கும் ..இந்த ஏப்ரல் மாதம் ஒரு செடி அதே இலைகள் ஷேப்பில்  தளன்னு வளர்ந்தது பெரிய இலைகளுடன் பக்கத்தில் .நானும் நினைத்தேன் எதோ பறவை எச்சம் வழியா வேற  செடிதான் புதிதா பக்கத்தில் முளைத்திருக்குன்னு .ஆனால் ஒரிஜினல் செடி பூச்சி அரித்த மாதிரி சுருங்கி இருந்தது நம்ம அக்கா மாலாவை ஹெப்சி தங்கையை அபிஷேகம் பண்ணியும் பயனில்லை போன வாரம் அந்த பக்கம் நடந்தப்போ காலை கீறி இரத்தம் வரவும் பிறகு  நன்கு கவனித்தால் அது ஒரிஜினல் செடியில் இருந்தே வளர்ந்த புது கிளை ..

                                                                             
எனக்கு ஆச்சர்யம் ..முள்ளில்லா வெரைட்டியில் 3 வருடம் கழித்து எப்படி முள் தோன்றும் என பிறகு செடி டாக்டர்ஸை விசாரித்ததில் சொன்னார்கள் ..நான்கைந்து செடிகளின் செல்களை சேர்த்து உருவாக்கினதாம் இந்த முள்ளில்லா வகை .தண்டு  பகுதி செல்கள் முள்ளில்லாமல் வளரும் தன்மை மற்றும் வேர் பகுதி முள்ளுள்ள செடியாய் வளரும் செல்களை கொண்டவையாம் ..அந்த வேர் ஏதாவது சுற்றுப்புற சூழல் காரணிகளால் பாதிப்புக்குள்ளாகும்போது அந்த முள் வளரும் செல்கள் அப்பர் ஹாண்ட் எடுத்து கடகடன்னு வளர துவங்குமாம் ..நில மட்டத்தில் வெட்டி விட சொன்னார் நண்பர் அப்படியும் வளர்ந்தால் முழு செடியையும் எடுத்துடனுமாம் ....

--------------------------------------------------------------------------------------------------------------------------

Gordon Ramsay யும் ஜெயில் தட்டு மெதுவடை சட்னியும் 
--------------------------------------------------------------------------------------------


                                                                             
Gordon Ramsay ✔ @GordonRamsay
I didn't know you can tweet from prison https://twitter.com/sychlops/status/849914013202952192 …
10:28 AM - 6 Apr 2017
  176,404 176,404 Retweets   402,611 402,611 likes


எங்க ஊர் பிரிட்டிஷ் செலிப்ரிட்டி chef கோர்டன் ராம்ஸேகிட்ட ட்விட்டர்ல ஒருத்தர் நம்ம சாம்பார் மெதுவடை படத்தை அனுப்பி ரேட் திஸ் food என்று கேட்டிருக்காங்க ..அந்த மனிதருக்கு சாம்பார் தெரியுமா இல்ல தேங்கா சட்னிதான் தெரியுமா ?? அவர் வடைத்தட்டை பார்த்துட்டு ..ஜெயிலில் இருந்து ட்வீட் செய்யும் வசதிலாம் இருக்கான்னு பதில் கொடுக்க நம்ம சாம்பார் வடை ரசிகர்கள் பொங்கி தாக்கி அடிச்சிருக்காங்க அவரை ட்விட்டரில் ..என் பொண்ணு சொன்னா இந்த விஷயத்தை :)
இவ்ளோ  நேரம் பதிவை பொறுமையா படித்த அனைவருக்கும் எங்க வீட்ல பூத்த ரோஸ் இந்தாங்க ..

போன வருஷம் நிறம் மாறிய ரோஜா நினைவிருக்கா அதே தான் இது இந்த வருடம் மலர்ந்த பூ 


                                                                                  


அப்புறம் எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க நான் படிக்கப்போறேன் :)
தேம்ஸ் கரை  நோட் திஸ்                                                                                  


மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ...

111 comments:

 1. ஆஆஆஆவ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:) எங்கள் புளொக்கில் பார்த்து ஓடி வந்தேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. முதலா வந்த உங்களுக்கு இதோ இந்த அழகிய பூ சாடி மலர்களுடன் :)
   https://4.bp.blogspot.com/-YGK5G0fcMaE/WTR0-Dux4OI/AAAAAAAANnk/V2TyLOWsVAISe_JDxtLa3QyY9SDvFSVnACLcB/s400/IMG_5467.JPG

   Delete
 2. ///இதோ படத்தில் ஒரு கை ஏந்திப்பிடித்திருப்பது பிளாக்பெரி பழங்கள் :) ////

  ஹா ஹா ஹா சிரிச்சு முடியுதில்ல:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) போனதடவை நெல்லைத்தமிழன் சொல்லியுமோ இன்னும் களவெடுப்பதை நிறுத்தல்ல கர்ர்ர்ர்ர்ர்:).. ஹையோ பூவா, பழமாக் களவு போய் இப்போ அதிராவின் கையோடு களவு போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இப்போ ஹொலிடே க்கு அந்தாட்டிக்கா போகப் பயம்மாக்கிடக்கூஊஊஊஊஊஊஊ:)

  ReplyDelete
  Replies
  1. என் பிளாக்பெரி பழங்கள் படமெல்லாம் வதன புத்தகத்தில் இருக்கு அப்படியே விட்டுட்டு வந்திட்டேன் அதான் அவசரத்துக்கு உங்க கையை சுட்டுட்டேன்.டோன்ட் worry நான் பத்திரமா பாத்துக்கறேன் உங்க பிளாக்கை

   Delete
  2. இந்த(உல)க்கையை அங்கேயே எங்கேயோ என்றோ பார்த்தோமே என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

   2014-ம் வருடம் என்று எனக்கு ஞாபகம்.

   மூன்று வருடங்கள் ஆகியும் அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்ய்கா பளபளன்னும் அப்படியே இருக்குதே ....

   ஐ மீன் அந்த ஃபுல் ஹேண்ட் சொக்கா ! :)

   Delete
 3. // நானும் அவரும்//

  அப்பூடின்னா நான் ஆரை எண்டு நினைப்பேன்ன் முருகாஆஆஆஆ?:).. அந்த கேள் ஃபிர்ண்ட் வச்சிருக்கும் தாத்தாவை நினைப்பேனா:).. இல்ல... .... நினைப்பேனா:).. வாணாம் நேக்கு இண்டைக்குக் காலம் சரியில்லை:)ஹா ஹாஅ ஹா மீ அடக்கி வாசிக்கப்போறேன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) இதைப்பார்த்து என் அவர் மயங்கி விழபோறார் சொல்லிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர் :)
   அவர் மை hubby

   Delete
 4. ///..ஸ்வான் பிள்ளை நான் அடிக்கடிசந்திப்பவர் எனவே என்னை ஒன்னும் செய்யலை :) மூவ் //என்றதும் மெதுவா அசைந்தான் //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமா கதை விடுறா இந்த ஃபிஸ்ஸூ தாங்க முடியல்ல சாமீஈஈஈஈ:).. எனக்காராவது ஒரு ஸ்ரோங் ரீ ஊத்திக் குடுங்கோ பிளீஸ்ஸ்:).. போஸ்ட் படிக்கும் தெரிகிரியமே இல்லாமல் இருக்கு:).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) உங்களுக்கு பொறாமை :) எனக்கு பறவை பாஷைலாம் தெரிஞ்சிருக்குன்னு

   Delete
  2. போனாப்போகுது இந்த மேடையிலயே வச்சுப் பட்டம் கொடுத்திடலம்.. பறவை ஏஞ்சல்:) ஹா ஹா ஹா:)

   Delete
  3. ஹஆஹாஆ :) எங்கே அந்த பொற் கிழி அதும் வேணுமெனக்கு

   Delete
 5. ///அவர்களுக்குள் பேசியது என் காதில் விழுந்தது ..தட் லேடி ஸ்போக் டு தோஸ் பெர்ட்ஸ் :) ..///

  ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:)... இன்னொன்றும் சொல்லியிருப்பார்களே:) அது உங்க காதில் விழவில்லை:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:)..

  அது சரி கதைகளில் வருவதுபோல ரொட்டித் துண்டுகளோ?:) நீங்க சுட்டதோ?:).. அடுத்த நாள் போய்ச் செக் பண்ணினணீங்களோ?:) சுவான் டடி ஓகேயா என:) எனக்கு டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. அவங்க சொன்னது இன்னும் இருக்கு அதெல்லாம் சொன்னா நீங்க மயக்கம் போடுவீங்க அதனால் சொல்லலை எடிட்டட் :)
   கர்ர்ர் இப்போ தினமும் விசிட் பன்ரேனாக்கும் :) என் பேச்சை மட்டுமே கேட்பான் மை ஸ்வான் சன்

   Delete
 6. //பிறகு நாங்களும் சென்று விட்டோம் அடுத்த பக்கம் பாலத்தில் ஏறி பார்த்தால் சைக்கிளில் செல்லும் ஒருவரை போக விடாமல் அட்டகாசம் செய்தது ஸ்வான் .இறுதி வரை அவரை விடவில்லை அவர் வந்த வழியே திரும்புவதை தொலைவில் இருந்து பார்த்தேன் .//

  என்னா ஒரு பில்டப்பூஊஊஊ தான் மட்டும் ஏதோ பிரிட்டிஸ் ராணுவப் பணியாளர் எனும் நினைப்பு:)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ மியாவ் விஷயம் தெரியாதா இங்கிலாந்து நாட்டில் இருக்கும் ஸ்வான்ஸ் எல்லாம் பிரிட்டிஷ் ராணிக்கே சொந்தமாம் ..அப்போ அவங்க ப்ரொடெக்ட் பண்ணி பேசி வழிவிட வச்ச நான் ராணுவ பணியாளர்தானே :) எனக்கு knighthood அவார்ட்கிடைக்கும் இதுக்கு.. உங்களுக்கு ஒரு பால்கனி டிக்கட் தர சொல்றேன் எம்பி குதிச்சி வாழ்த்திட்டு போகணும் சொல்லிட்டேன் :)

   Delete
 7. /// ரொம்ப கிரேட் ..பூனைகிட்ட பேச முடியுது நாய் கிட்ட பேச முடியுது புறா கிட்ட வாத்து ஸ்வான்ஸ் கூட விட்டுவைக்கலை என்றார் :) ///

  ஆமா ஆமா நானும் இதை படு வன்மையா ஆமோதிக்கிறேன்ன்ன்...:).

  ///எப்படி இருந்த என் வாத்து பாப்பாஸ் :)//

  அவங்களா இவங்க.. இப்போ ஒரு மாதம்தானே ஆச்சு.. அதுக்குள்ளா?.. இது வேறு வாத்துக்கூட்டமாக இருக்குமோ என சந்தேகமாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. http://kaagidhapookal.blogspot.com/2017/04/blog-post_24.html

   அவங்கதான் ஏப்ரல் இரண்டாம் வாரம் போட்டோ எடுத்திருக்கேன்
   24 தேதி பதிவு போட்டேன் இப்போ ஜூன் செகண்ட் வீக் கணக்கு சரி :)

   Delete
  2. //ஆமா ஆமா நானும் இதை படு வன்மையா ஆமோதிக்கிறேன்ன்ன்...:).//

   ஹாஹா அவர் பூனைன்னு சொன்னது உங்களைத்தானேன்னு நினைக்கிறேன் :)

   Delete
 8. //வழியெல்லாம் கூட இருக்கு கைநீட்டி பறிச்சி சாப்பிடுவேன் //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அப்பூடிச் சாப்பிடக்குடா அஞ்சு.. வீட்டுக்கு கொண்டு வந்து உப்புத்தண்ணியில் போட்டு விட்டுப் பின்னர் சாப்பிடுங்கோ.

  Gordon Ramsay யும் ஜெயில் தட்டு மெதுவடை சட்னியும் /// ஹா ஹா ஹா:)

  ///

  ReplyDelete
  Replies
  1. அவ்வ் அப்போ ஏற்கனவே சாப்பிட்டது என்ன பண்றது ??
   இனிமே சால்ட் பாத் குடுத்து சாப்பிடறேன் ..

   கோர்டன் ராம்சே தட்டை ஜெயில் ட்றேன்னு நினைச்சிட்டார் பாவம்

   Delete
 9. //அப்புறம் எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க நான் படிக்கப்போறேன் :)
  தேம்ஸ் கரை நோட் திஸ் ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கொண்ணும் புகையவில்லை:) ஐ ஆம் ரீடிங் பொன்னியின் செல்வன் ஆக்கும் க்கும் க்கும்:)... அஞ்சு அந்த மோர்க் குழம்பிருந்தா கொஞ்சம் குடுங்கோ மீக்கு:).

  ReplyDelete
  Replies
  1. புகை வராத மாதிரியே என்னா ஒரு பில்டப் :) நோ அதை தர மாட்டேன் :) அது மை ஒரிஜினல் சொந்த ரெசிப்பி

   Delete
 10. //இதோ படத்தில் ஒரு கை ஏந்திப்பிடித்திருப்பது பிளாக்பெரி பழங்கள் :) //

  அது யாருடைய கை எனத் தெரியாமல் எனக்கு என் மண்டையே வெடிச்சுடும் போலிருக்குதே !

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) இன்னுமா கண்டுபிடிக்கலை :)

   Delete
 11. பதிவினில் வெளியிட்டுள்ள ஸ்வான் படங்களெல்லாம் அழகோ அழகாக உள்ளன.

  உங்களால் பறவைகளுடன் பேசி பஞ்சாயத்து செய்து, வழிப்போக்கர்களில் பலரைக் காக்க முடிந்துள்ளது .... படிக்கும் எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நான் சின்னத்தில் இருந்தே இப்படித்தான் :) ஆடு பூனை கோழிக்கிட்டெல்லாம் பேசியிருக்கேன்

   Delete
 12. //எங்க வீட்ல பூத்த ரோஸ் இந்தாங்க ..//

  சூப்பர் ரோஜா ..... அதுவும் உங்க வீட்ல பூத்த ரோஜா ..... தேங்க் யூ வெரி மச். :)

  ReplyDelete
 13. படத்தில் உள்ள சாம்பார் வடை + சட்னி நல்லா இருக்குது.

  அதை வெளியிட்ட காரணம் அதைவிட நல்லா இருக்குது. :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா எனக்கு சாம்பார் வடை பிடிக்கும்னு மகளுக்கு தெரியும் அதான் சொன்னா

   Delete
 14. //அப்புறம் எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க நான் படிக்கப்போறேன் :)//

  அடடா, இப்போ நான் புத்தம் புதிய பதிவு வெளியிட்டிருக்கும்போது, அதையெல்லாம் படிக்கப் போனால் எப்பூடி ......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. அது சும்மா தேம்ஸ் கரையோரம் வசிக்கும் பூனையை வம்புக்கிழுத்தேன்

   Delete
 15. //நான் மிரட்டியதும் பயந்து நிறுத்தியது அந்த அப்பா ஸ்வான் .. இதையெல்லாம் பார்த்து இவர் ஆச்சர்யமா ------ ரொம்ப கிரேட் .. பூனைகிட்ட பேச முடியுது நாய் கிட்ட பேச முடியுது புறா கிட்ட வாத்து ஸ்வான்ஸ் கூட விட்டுவைக்கலை என்றார் :) அதோட இன்னொன்னும் சொன்னார் ஒரு சேர் போட்டு கொடுக்கறேன் தினமும் இந்த பக்கம்போறவரவங்களுக்கு உதவுங்க கம்யூனிட்டி சர்வீஸ் போலாச்சு என்று .கர்ர்ர்ர்ர் :)//

  சூப்பர் !

  பல விஷயங்கள் அடங்கிய அழகான வித்யாசமான பகிர்வு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 16. பொதுவாக காக்கைகள் இது மாதிரித் தாக்குதல்கள் நடத்தும். நானும் வாங்கியிருக்கிறேன். வாத்து கூடவா? ரொம்ப முன்னேறி விட்டன போலும்!

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களை வெறியோடு தாக்கியிருக்கு ஒரு ஆண் ஸ்வான்

   Delete
  2. நானும் காக்காகிட்ட கொத்து வாங்கியிருக்கேன் :)

   Delete
 17. பைரவர்களை வைத்திருப்பவர்கள் கூட வாதத்துக்கு பயந்து நிற்பது ஆச்சர்யம். பைரவர்கள் எதிர்க்கவில்லையா? இல்லை, வாத்து பைரவருக்கு பயப்படவில்லையா?!! அதே போல பழகிய உங்களை நினைவு வைத்து கட்டுப்படுவதும் ஆச்சர்யம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இதில் முக்கியமான விஷயம் ஒன்ற்று இருக்கு எங்க நாட்டில் உள்ள எல்லா அன்னப்பறவைகளும் பிரிட்டிஷ் ராணிக்கு சொந்தமானவை அதனால் அவற்றுக்கு நாம் தொல்லையோ கொடுக்க கூடாது ..பைரவர்களை லீஷில் தான் கொண்டு போகணும் அவை இந்த அன்னக்குடும்பத்தை டிஸ்டர்ப் செய்ய கூடாதுன்னு சட்டம் ..இந்த அப்பா பறவையை யாரோ டீஸ் செஞ்சிருப்பாங்க ..அடுத்தது 10 முட்டையிடுமாம் அதில் சில நரி magpie காக்கா ஹெரான்ஸ் எல்லாம் தூக்கிப்போய் மிஞ்சினத்தை பத்திரமா பாதுகாக்க தான் இவ்வளவு aggressive ..அப்புறம் அண்ணன்கள் தேவை நடக்கும் வழியில் கூடு கட்டி முட்டை பீட்டா அதையும் அப்புறப்படுத்தக்கூடாதாம் கவுன்சிலில் சொல்லி தற்காலிக வேலி போட்டு அதை மூடுவாங்க அவ்ளோ ப்ரொடெக்ஷன் இங்கே

   Delete
 18. ரோட்ஸைடில் இருக்கும் பழங்களை எப்படி தைரியமாக சட்டென எடுத்து சாப்பிடுகிறீர்கள்? வேறு பழமாக இருந்து விட்டால்?

  ReplyDelete
  Replies
  1. இந்த பழங்கள் தனியே நாட்டு வளர்த்திருப்பாங்க பறவைகளுக்கு அதனால் குறிப்பா தெரியும் எல்லாத்தையும் தொட மாட்டோம் ..

   Delete
 19. ஒரு ஃப்ளோவில் கார்தான் ராமசாமி என்று படித்து விட்டேன். பின்னர்தான் சரியாகப் பார்த்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நான் அப்படிதான் வாயில் நுழையாத இல்லை அவங்களுக்கு தெரியாம பேச பேரை தமிழ்படுத்திடுவேன் ..
   ஒரு குர்டிஷ்க்காரர் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாங்க அவங்க மகன் பேரு எதோ வாயில் நுழையாது kaemer என்று வரும் , அவனை பக்கத்து வீட்டு குமார் னு சொல்லிப்போம் ..:)
   நம்ம வசதிக்கு மாத்திக்க வேண்டியதுதான் ..இந்த கருட ராமசாமி பிரிட்டிஷ் தொலைக்காட்சியின் செஃப் ,,நம்மூர் தாமு அங்கிள் மாதிரி

   Delete
  2. ஏங்க... ராம்சே எங்க.. நம்மூர் தாமு எங்க.. 'என்ன கொடுமை சரவணன்'. அவர் ரெஸ்டாரன்ட்ஸ்லாம் மிஷ்லன் ஸ்டார் வாங்கினவை. அவர் நடத்தற நிகழ்ச்சிகளெல்லாம் உலகமெங்கும் ஒளிபரப்பாகுது.

   Delete
 20. ரோஜா அழகு.

  படிக்கவேண்டிய புத்தகங்கள் லிஸ்ட் சுவாரஸ்யம். எழுதியவரைக் கண்டுபிடிக்க தலையைச் சுற்றிச் சுற்றி படிக்க வேண்டியிருந்தது!

  ReplyDelete
  Replies
  1. அது ரொம்ப க்ளோசப்ல எல்லாத்தையும் எடுத்தேன் ..பிகேபி ராஜேஷ் குமார் ,தி ஜா ,அனுராதா ரமணன் புத்தகங்கள் ..
   ரோஜா போன வருஷம் முகப்புத்தகத்தில் போட்டேன் ஊதா நிறம் கொஞ்சம் பிங்கா மாறிடுச்சு எனது வைத்தியத்தில்

   Delete
 21. ஆகா, வாத்துகளோடு உரையாட முடிகிறதா
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க அண்ணா ஆமாம் எதோ அதுங்களுக்கு தமிழ் கொஞ்சம் கற்று புரிய வைச்சிட்டேன் :)
   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 22. யதார்த்த நிகழ்வுகள் சொல்லிய விதம் ரசிக்க வைத்தது பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி :) மிக அருமையா புரிந்துகொண்டிங்க அன்றாடம் பார்ப்பவற்றை பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி ..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 23. பிளாக்பெரி பழங்கள், ரோஜா - அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி :) அந்த பழங்கள் அழகா ..மெதுவா சொல்லுங்க :) தேம்ஸ்கரை பூனை குதிக்கிறாங்க அவங்க கைதான் அது :)
   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ

   Delete
 24. மனதின் அன்பு மொழியை தெரிந்து கொண்டு உங்கள் இருவரையும் ஸ்வான்ஸ் அட்டாக் செய்யவில்லை.

  பிளாக்பெரி பழங்கள் , சாம்பார் வடை, புத்தபுது ரோஜா, படிக்கும் கதைகள் என்று பலதரபட்ட செய்திகள் அருமை.படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்கா ..அது அங்கிருந்த எல்லா பிரிட்டிஸ்காரங்களுக்கும் ஆச்சர்யம் ..நாங்க மட்டுமே வெளிநாட்டினர் ஆன்னா எங்களை அந்த ஸ்வான்ஸ் கொத்தவில்லை ..உங்க கிட்ட சிட்டுக்குருவிகளை பறவைகளும் மாடும் வரமாதிரி இங்கே ஸ்வான்சும் வாத்தும் அன்புடன் பழககறாங்க என்கிட்டே

   Delete
 25. படங்களெல்லாம் அழகு
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மொஹமட் ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க

   Delete
 26. சூப்பர்..சூப்பர்..
  ஸ்வான் கூட எல்லாம் பேசுறிங்க...

  "ஒரு சேர் போட்டு கொடுக்கறேன் தினமும் இந்த பக்கம்போறவரவங்களுக்கு உதவுங்க கம்யூனிட்டி சர்வீஸ் போலாச்சு என்று .கர்ர்ர்ர்ர் :)"

  ....செம்ம

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) வாங்க அனு :) அவர் ஒரு முடிவுக்கு வந்திட்டார் என்னை அங்கே வேலைசெய்ய வைக்க :)

   Delete
 27. ஸ்வான் குடும்பமும், வாத்து கூட்டமும் ....அழகு..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா அனு தினமும் இவங்களை பார்க்கலைன்னா எனக்கு மனசுக்கு எதோ போலிருக்கும்

   Delete
 28. காலை கீறி இரத்தம் வரவும் பிறகு நன்கு கவனித்தால் அது ஒரிஜினல் செடியில் இருந்தே வளர்ந்த புது கிளை...

  ....கொடுமைக்கார செடி போல.. இல்ல நீங்க பார்க்கலன்னு கீறி கூப்பிடுதோ..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா ரொம்ப கொடுமைதான் ..முள்ளு பார்த்திங்களா பயங்கர ஷார்ப்

   Delete
 29. ரோசாப்பு ....அழகு...

  அனுராதா ரமணன், தி.ஜா புத்தகமும் தான் தெளிவா இருக்கு...சீக்கிரம் எல்லா புத்தகத்தையும் படிச்சுட்டு சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. மற்றது ராஜேஷ்குமார் ,பி கே பி ..ம்ம் படிக்கணும் கொஞ்சம் நேரமில்லை இன்னும் நிறைய லைப்ரரில இருக்கு எடுத்திட்டு வரணும் :)

   Delete
 30. ஹை வாத்து பிரெண்ட்ஸ்...ஆம் நாம் அன்புடன் பழகினால் கட்டுப்படும்...அவர்கள் எரியாதானே...நாமதான் அவங்க இடத்துல புகுந்துக்கறோம்.... புக்ஸ் சூப்பர்....(கீதா: தெம்ஸுக்குப் புகை...ஹிஹி.)

  விரிவா எழுத முடில..டைப் பண்ணும் ஆள் (கீதா மொபைலில் அடிக்க முடிலப்பா...) பயணத்தில்....ஸோ...

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ பயணமா கீதா அன்ட் துளசி அண்ணா அதான் உங்களை காணோமேன்னு நினைச்சேன் ..ஆமாம் கீதா பறவையோ இல்ல நாலுகால் செல்லமோ நாம் அன்பா பழகினா அவங்களும் அன்பை தருவங்கா ..அந்த டீனேஜர்ஸ் கொஞ்சம் ரூட் பிஹேவியர் ஸ்வானை சீண்டினதால் அக்ரெஸிவ் ஆகிட்டாங்க ஸ்வான்ஸ்

   Delete
  2. நான் தான் பயணத்தில் இருந்தேன் ஏஞ்சல். துளசியின் கமென்டும் நான் தானே போடுவது!!! அதான்...இன்றுதான் வருகை.

   ஆமாம் எந்த உயிரினமும் நாம் அன்பு செலுத்தினால் ஏன் காட்டு விலங்குகள் கூட....நம் அன்பிற்குக் கட்டுப்படும். ஆமாம் ஏஞ்சல் டீனேஜர்ஸ் மற்றும் சில குழந்தைகள் ஏன் பெரியவர்கள் கூட ஜூவில் விலங்குகளை டீஸ் செய்யும் போது அவை சில சமயம் அக்ரெசிவ் ஆவதுண்டு....
   படங்கள் எல்லாம் கொள்ளை அழகு....வாத்துக் குட்டீஸ் என்ன அழகா இருக்காங்கப்பா....ஆனா ஒன்னு சொல்லணும் இயற்கை இயற்கைதான்...தில்லி செல்லும் போது அதுவும் ரயிலில்....ஜன்னல் வழியாக வேடிக்கப்பார்த்துக் கொண்டெ ... இடங்கள் மிக அழகாக இருக்கும்...காட்டுச் செடிகள் கூட அழகுதான்...எல்லாவற்றையும் ரசிப்பதால்....எக்செப்ட் ரயில் நிலையங்கள் அருகில் வரும் நதிகள் என்று சொல்லப்படும் சாக்கடைகள் தவிர!!! நதிகள் இப்படியாகின்றனவே என்று மனம் வேதனைப்படும். ஏனென்றால் எல்லா ஊர் வரும் போதும், ரயில் நிலையம் நெருங்கும் சமயம் அருகில் சாக்கடை போன்ற சிறிய நதிகள், அல்லது பெரிய கால்வாய் போன்ற சாக்கடைகள் அதன் அருகில் குடிசைகள் என்று...மிகவும் வேதனையாக இருக்கும்...

   கீதா

   Delete
 31. அன்னப்பறவைகள் படம் ரொம்ப அழகு. நானும் இவ்வளவு பெரிய அன்னப்பறவைகளை Hyde Parkல உள்ள நீர் நிலைல பார்த்திருக்கேன். அதுவும் பறந்துக்கிட்டே தண்ணீர்ல ஓடறது ரொம்ப நல்லா இருக்கும். நைமிசாரண்யத்துல (உ.பிரதேசம்) இந்த சைசுல உள்ள அன்னம் என்னைப் பார்த்து 'உஸ் உஸ்' என்று கோபமாக வந்தது. அதன் காரணம் அப்போ புரியலை. ஏன் என்னை மட்டும் பார்த்து கோபமா வருதுன்னு (என் ஹஸ்பண்டை ஒண்ணும் பண்ணலை).

  பிளாக்பெர்ரி வச்சிருக்கறவங்க, தன்னோட படத்தைக் களவாடினாலும் கண்டுபிடிக்கும்படியாக 16 பிளாக்பெர்ரி பழங்கள்தான் உள்ளங்கைல வச்சிருக்காங்க. கவனிச்சீங்களா?

  கார்டன் ராம்சே உங்க ஊர் ஆளா? நான் அமெரிக்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அவருடைய நிகழ்ச்சிகள்லாம் ரொம்ப நல்லா இருக்கும். நான் முன்னெல்லாம் ரசிச்சுப் பார்ப்பேன் (நிகழ்ச்சில நான்-வெஜ் ஃபுட் காமிச்சாலும், அவர் நிகழ்ச்சியை நடத்தும் விதத்துக்காகப் பார்ப்பேன்)

  பதிவைப் படிச்சதற்கு சாம்பார் வடையே கொடுத்திருக்கலாம். ரோஸை வச்சு என்ன பண்ணறது?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன் இயற்கையிலேயே பெண்கள் கிட்ட எல்லா வாயில்லா ஜீவன்களும் அன்பாதான் இருக்கும் :)
   இன்னொரு சம்பவம் இருக்கு அது ஒரு ஜெர்மன் பெண்மணி சொன்னார் சில வகை மான்களுக்கு அதனருகில் செல்பவர் அசைவமா சைவமா என்கிறதை பொருத்தும் கிட்ட நெருங்குமாம் . ..இன்னொன்று நாம் அணிந்திருக்கும் சட்டை கலர் ஏதாச்சும் பிடிக்கலைன்னா ாலும் கோபமா அடிக்கும் வாத்து வான்கோழி போன்ற பறவைங்க

   Delete
  2. ஹாஹாஹா :) 16 க்கும் மேலிருக்கும் போலிருக்கு :)
   கோர்டன் ராம்சே ..ஸ்காட்டிஷ் அங்கே பிறந்து ஷேக்ஸ்பியர் சிட்டில வளர்ந்தவராம் அவர் மனைவியும் குக்கெரி செஃப் தானாம்

   Delete
  3. சாம்பார் வடைக்கு எங்க வீட்ல வரவேற்பில்லை அதனால் எப்ப வடை செய்றேனோ அன்னிக்கு சாம்பாரையும் செஞ்சி அதில் முக்கிடுவேன் :) இங்கே ஒரு கடசாலையும் நம்பி வாங்க முடியாதது பழைய மாவு ப்ரிட்ஜில் வச்சி எடுத்து சுடறாங்க எனக்கு பயம் சாப்பிட .

   Delete
  4. காட்டுக்குப் போகும்போது, கண்டிப்பா பெர்ஃப்யூம் போட்டுக்கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்துவாங்க. விலங்குகளுக்குப் பிடிக்காது, அல்லது அவை வெறுக்கும் (அல்லது பிடிக்கும்) மணம்னா, ஆபத்துன்னு. நிஜமாவே, சைவம், அசைவம்லாம் வியர்வை வாசனைலயே தெரிஞ்சுடும்னு சொல்வாங்க.

   Delete
  5. https://www.holidaycheck.de/pm/bilder-videos-sesselbahn-edenkoben/f6b24e8b-cb23-369f-b8e1-a57c020624e4/-/m/picture/mediaId/ac1d0576-62fd-3854-aa95-0de2f6e3f1bf
   பாதி எழுதும்போதே பப்லிஷ் ஆகிடுச்சு
   http://www.rietburgbahn-edenkoben.de/

   Delete
  6. இங்குள்ள மலையில் மேலே மான்கள் இருக்கு அவை என்கிட்டே ஓடி வந்தாங்க அப்போதான் அந்த ஜெர்மன் லேடி சொன்னார் அப்புறம் நான் பெர்பியூம் :) ரெண்டும் நெருங்க முடியாதது :) வாசனை அலர்ஜி இருக்கு எனக்கு மயக்க மருத்துப்பதில் இதை அடிச்சா பிளாட் :)
   அதனால்தானோ என்னவோ மான்கள் ஓடி வந்தாங்க என்கிட்டே

   Delete
  7. பெண்கள் கிட்ட எல்லா வாயில்லா ஜீவன்களும் அன்பாதான் இருக்கும் - 'நாங்க உள்பட (ஆண்களுக்கு கல்யாணம் ஆனப்பறம் கேட்கறது மட்டும்தான் வேலை. பேசறது Better halfதானே. அதனால நாங்களும் வாயில்லா ஜீவன் தான்)

   Delete
  8. ஹாஹாஆஅஹா :)

   நெல்லைத்தமிழன் நீங்க அநியாயத்துக்கு உண்மையை சொல்லி சிரிக்க வைக்கறீங்க :)

   வெட்டிங் ரிசப்ஷனில் mc /மெய்ட் of honour /டோஸ்ட் ஸ்பீச் குடுப்பாங்க இல்லையா அப்போ ஒரு அங்கிள் பேசும்போது சொன்னார் கல்யாணத்துக்கு முந்தி ஆண் பேசுவார் அதுக்கப்புறம் மனைவியும் கணவனுக்கு சேர்த்தே பேசுவார்னு :) அது உண்மைதான் போலிருக்கு ஹாஹாஆ :)..உங்க பின்னூட்டத்தை கணவர் கிட்ட சொன்னேன் சிரிக்கிறார் :)

   Delete
  9. ///பிளாக்பெர்ரி வச்சிருக்கறவங்க, தன்னோட படத்தைக் களவாடினாலும் கண்டுபிடிக்கும்படியாக 16 பிளாக்பெர்ரி பழங்கள்தான் உள்ளங்கைல வச்சிருக்காங்க. கவனிச்சீங்களா?///

   haa haa haa எண்ணியும் பார்த்திட்டார்ர்ர்:)

   Delete
  10. யெஸ் நெல்லைத் தமிழன் காட்டிற்கு என்றில்லை வெட்னரி கிளினிக்கில் கூட பெர்ஃப்யூம் போடக் கூடாது...மருத்துவர்கள் பொதுவாகப் போட மாட்டார்கள்......விலங்குகளுக்கு நல்லதல்ல என்று....

   கீதா

   Delete
 32. இதைப் படிக்கும்போது இன்னொன்று நினைவுக்கு வந்தது. அதிரா, அவங்க வீட்டுல ஒரு மரத்தை வெட்டினபோது, இன்னொரு மரம் பட்டுப்போயிடுத்துன்னு சொல்லியிருந்தாங்க. ஒவ்வொரு உயிரிடமும் நாம பேச முடியும். மரங்கள், செடிகளோட பேச முடியும், நம்ம MOODஐப் பொறுத்து அவைகளும் தங்கள் MOODஐ மாற்றிக்கும், காண்பிக்கும் என்று ஜகதீஷ் சந்திரபோஸ் நிரூபித்திருக்கிறார். அதாவது, கெட்ட எண்ணமுள்ள ஒருவனை செடி அருகில் வரச் செய்து செடி ரியாக்ட் செய்வதையும், நல்ல எண்ணத்தோடு அணுகும்போது செடி வேறுவிதமாக ரியாக்ட் செய்வதையும் ஆய்வகத்தில் நிரூபித்திருக்கார்.

  இதை வச்சு, அதிரா, அடுத்து தன்னைக் கொலை செய்யறதுக்கு முன்னால நாமளே தற்கொலை பண்ணிக்குவோம்னு அந்த இன்னொரு மரம் நினைச்சதுன்னு நீங்க CONCLUDE பண்ணினால், அது எனக்குத் தெரியாது, நான் காரணமல்ல.

  ReplyDelete
  Replies
  1. 100 % உண்மை எல்லா ஜீவனுக்கும் மனசும் உண்டு எங்க வீட்ல ஊரில் பெங்களூர் ரோஸ் செடிக்கு நீங்க சொன்னது நடந்திருக்கு :)
   அப்புறம் ..மரத்துக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் இல்லைனா அந்த மரம் தனது துணையை வெட்டியதால் உடன்கட்டை மாதிரியும் செய்திருக்கும் ..எங்க வீட்ல ஊரில் ஒரு பொருந்தா காதலர் சோடி இருந்தாங்க ..அவங்க ஒரு ஆன் சண்டை சேவலும் பெண் கினி கோழியும் ..ஒண்ணாவே நடப்பாங்க அருகில் மரத்தில் அமருவாங்க பார்க்க அழகா இருக்கும் .இந்த மொபைல் போன்லாம் இல்லையே இல்லனா படமெடுத்து வச்சிருப்பேன் .அப்போல்லாம்ஒரு நாள் ஆண் சேவல் நோய்வாய்ப்பட்டு இறக்க இந்த பெண் கினி கோழி சாப்பிடாம தண்ணி குடிக்காம 3 நாள் கழிச்சி மரித்து போச்சு :(   Delete
  2. ///இதை வச்சு, அதிரா, அடுத்து தன்னைக் கொலை செய்யறதுக்கு முன்னால நாமளே தற்கொலை பண்ணிக்குவோம்னு அந்த இன்னொரு மரம் நினைச்சதுன்னு//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  3. நெல்லைத் தமிழன் உங்கள் கருத்தை 100% ஆமோதிக்கிறேன்! பூக்களைப் பறிக்கும் போது கூட அவற்றிடம் பேசிவிட்டு, அவற்றின் அனுமதி கேட்டுத்தான் பறிக்க வேண்டும் என்பார்கள். துளசி உட்பட!

   கீதா

   Delete
 33. பல்சுவை பதிவுகள் ஒரே பதிவினில். ஒரே மூச்சில்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளங்கோ அண்ணா :) ஆமாம் மொத்தமா இப்பறவைகள் தோட்டம் எல்லாத்தையும் பல்சுவையா போட்டாச்சு :)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 34. அன்பு வண்ணம் கொண்ட அன்னத்தின்
  கோப வண்ணம் தீர்த்து வைத்த
  பண்பு வண்ணம் வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா :)

   Delete
 35. நிறைந்த விஷயங்கள்..
  பிளாக் பெர்ரி பழங்கள் மிகவும் விருப்பம்!..

  இனிய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை அய்யா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

   Delete
  2. இந்த பிளாக் பெரிஸ் இங்கே வழியெல்லாம் வளர்ந்திருக்கும் ஆசையா இருக்கும் எனக்கும் பிடிக்கும்

   Delete
 36. அவர்களிடம் யாராவது சொல்லுங்களேன் அன்பிற்கு அடைக்கும் தாள் இல்லை மொழியும் இல்லை என்று

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் ..ஆமாம் அன்புக்கு எந்த வரைமுறை அளவுமுறை அளவுகோல் எதுவுமில்லை அந்த பறவைகள் அவற்றின் மொழிக்கும்தான் :)

   Delete
 37. உங்க ஏரியாவில ஒரு தாதா வை வளர்க்கிறீங்க போல.. பரவாயில்லை உங்க சொல்லுக்கு கட்டுப்படுது. நாங்க நடக்கிற பிகஸே யிலும் இருக்காங்க அஞ்சு. பெரிய சவுண்ட் விடுவாங்க. ஷரோன் அப்பா சொன்னதுதான் ஹைலட்டே...ஹா..ஹா..
  ப்ளாக்பெரிபழ படத்தை பார்த்தால் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆஹா. இது சுட்ட (பழமா) படமாஆஆ..
  தகவல் அருமை அஞ்சு. நான் பறிச்சு சாப்பிட்டதே இல்லை. பக்கத்தில இருக்கு. இனி பறிக்கவேண்டியதுதான்.
  .Gordon Ramsay...ஹா..ஹா.. செம தட்டை இனி பார்த்தால் இதுதான் ஞாபகம் வரும்.
  அழகு ரோஜா. இங்கும் இப்ப பூத்து இருக்கிறாங்க. பல தகவல்கள் படங்கள் அருமை அஞ்சு..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க ப்ரியா உங்க ஏரியாவிலும் இதே அட்டகாசமா இவங்க :) புதுப்பேட்டை தாதாமாதிரி இது canal சைட் தாதா :)
   கணவர் சொன்னது /// அப்பப்போ நம்மளை வாரி விடலேன்னா தூக்கம் வராதே இவங்களுக்கு :)

   கீகீகீ :) சுட்ட பழம்தான் :) ஊதிட்டு சாப்பிடுங்க :) வெரி hot :)

   ஆவ் எதுக்கும் ஜெர்மன்காரங்க கிட்ட செடி பழம் விவரம்கேட்டு சாப்பிடுங்க ..

   ஆமாம் ப்ரியா அந்த குழித்தட்டு எங்க வீட்லயும் இருக்கு எங்க ஹோட்டலில் இந்த குழித்தட்டுத்தானே யூஸ் செய்வாங்க :)
   வருகைக்கும் பின்னூட்டத்துக்கு ம் நன்றி ப்ரியா எப்போ பிளாக் மறு திறப்பு விழா ?

   Delete
 38. அழகான படங்கள்.இந்த ஸ்வான் தாக்குதல் ப்ற்றி எதோ ஒரு நூலில் wodehouse தமாசாகச் சொல்லியிருப்பார்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் ..ஆமாம் வூஸ்டர்/வெரி குட் ஜீவ்ஸ் எதோ ஒன்றில் படித்தேன் ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 39. அன்னப்பட்சியின் செயல்கள் ஆச்சரியம் தான்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் பேரண்டல் கேர் ..அத்தனை பாசம் பிள்ளைங்க மேலே

   Delete
 40. பிளாக்பெரி பழம் தனிச்சுவை இங்கும் வேலையில் அதிகம் பயன்படுத்துவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதுவும் முள்ளில்லா வெரைட்டி மிகவும் இனிப்பு

   Delete
 41. வாசிக்க அதிகம் நூல் கிடைத்துவிட்டது இனி விமர்சனம் எதிர்பார்க்கலாம்)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாசிப்பதோட அவ்ளோதான் என் வேலை

   Delete
 42. மெதுவடை /உழுந்துவடை மிகவும் பிடிக்கும் அதுவும் சென்னைப்பக்குவம் போல இங்கு கிடைப்பதில்லை)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் சரவணபவன் சென்னை டேஸ்ட் நினைச்சா மனம் ஏங்கும் .அன்னிக்கே அரைத்து உடனே செய்ரது எப்பவும் ருசி

   Delete
  2. ஏங்க.... ஈஸ்ஹேம்ல கிடைக்கறதில்லையா? அங்கேயும் சரவண பவன் இருக்குதானே.

   Delete
  3. 2:15 மணிநேரம் கார்ல ட்ரஐவ் செஞ்சி போகணும் நாங்க அவுட் ஒப் லண்டன் :)
   இல்லன்னா தாண்டியா பஸ்ஸில் ரெண்டரை டு மூணு மணிநேரமாகும் :)

   கொஞ்சம் பக்கத்து சிட்டில சென்னை தோசா வந்து மூடிட்டாங்க

   Delete
 43. உன்கிட்ட பேசாத எதுவுமே கிடையாது போல இருக்கு. அன்னம் பெரிய கோபக்கார அப்பாவைப்போல உள்ளது. உன்னிடம் கட்டுப்பட்டது என்றால் தமிழின் இனிமைக்கா, அல்லது அஞ்சுவின் பாசத்திற்கா? உன்கணவரும் மிக்க நல்ல வேலைதான் உனக்கு சிபாரிசு செய்தார். பல்சுவை விருந்தாக எத்தனை விதமான விஷயங்கள். ரோஜா என்ன. ப்ளாக்பெரி செடி என்ன ,வடை என்ன என்ன என்ன என்று பாட வேண்டியதுதான். உன் பிளாகிற்கு வந்து விட்டு அவர்கள்யார்,இவர்கள்யார் என்று தேடப் போய்விடுகிறேன். இப்படி பலபேர் தெரிந்தது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சியம்மா :) அன்னங்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்திட்டேன் :) தினமும் அவ்வழியே சென்று பார்த்துவிட்டு வரேன் ..மிக்க சந்தோஷமா இருக்கு உங்க பின்னூட்டங்கள் .இன்னிக்கு வெந்தய பருப்பு குழம்பு செய்தென் அங்கே வந்து சொல்றேன்

   Delete
 44. இதுக்கு பேரு ஜெயில் தட்டா?!

  நவ்வாப்பழம் மாதிரி பளபளன்னு பிளாக்பெர்ரி... வெரி நைஸ்...

  ReplyDelete
  Replies
  1. அந்த பிரிட்டிஷ் செப் கண்ணுக்கு அப்படி தோணியிருக்கு :) ஆமா நல்லா ருசியா இருக்கும் பிளாக் பெரி பழம்

   Delete
 45. கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறன் இங்க. அருமையான இடுகை ஏஞ்சல். ஒரே போஸ்ட்ல நிறைய விஷயங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா :) பார்த்தது ரசித்தது எல்லாத்தையும் ஒரே இடத்தில எழுதி வச்சிட்டேன் இப்போல்லாம் ட்ரூத் சொன்னதுக்கப்புறம் பதிவின் அளவை குறைச்சிட்டேன் தெரியுமோ :)
   மிக்க நன்றி இமா

   Delete