அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/10/17

நெல்லிக்காய் மோர்க்குழம்பும் ரசித்து ருசித்த சமையலும் ....

நெல்லிக்காய் மோர்க்குழம்பு
-------------------------------------------------------


                                                                               மோர்குழம்பு எங்க வீட்ல அடிக்கடி இடம்பெறும் சமையல் .பருப்பு சேர்த்து பருப்பு சேர்க்காம தாளித்த மோர்க்குழம்பு ,சுண்டக்கா ,சுக்கங்காய்வற்றல் சேர்த்த மோர்க்குழம்பு கோவைக்காய் சேர்த்த மோர்குழம்புன்னு விதவிதமா செய்வேன் ஒருமுறை காமாட்சியம்மா அவர்கள் நெல்லிக்காய் பச்சடி செய்திருந்தாங்க (எல்லாவற்றுக்கும் சுட்டியை பதிவின் இறுதியில் இணைக்கிறேன்) ..அந்த பச்சடி மாதிரிதான் இதுவும் ஆனா அதையும் மோர்க்குழம்பு செய்முறையும் இணைத்து வித் மை டச் நெல்லிக்காய் மோர்க்குழம்பாக்கியாச்சு
..சுவை அருமையாக இருந்தது ..இணையத்தில் நெல்லிக்காய் மோர்க்குழம்பு ஒன்றிரண்டு பேர்கள் செய்திருக்காங்க ஆனா அவங்க காயை வேகவைத்து அரைத்திருந்தாங்க அது எனக்கு பிடிக்கலை நான் அப்படியே பச்சையாகவே அரைத்து சேர்த்தேன் ..இப்போ செய்முறைக்கு போவோம் ..

தேவையான பொருட்கள் 
===========================
                                                                         நெல்லிக்காய்கள் ..................5/6  விதை நீக்கி வெட்டி வைக்கவும் 

                                                                  தயிர் .................................................1 1/2 கோப்பை 


                                                                                  

எங்க ஊர்ல புளித்த தயிர் கிடைக்காது டேஸ்டும் நல்லா இருக்காது ஆனா இந்த யோகர்ட் பரவாயில்லை .ருசி ஓரளவுக்கு வந்தது 

ஊறவைத்து அரைக்க
----------------------------------------

                                                              
கொத்தமல்லி விதைகள் ......2 தேக்கரண்டி 
துவரம்பருப்பு ................................1 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் ...........................2 
சீரகம் ....................................................1 தேக்கரண்டி 
உப்பு ..................................................... தேவையான அளவு 
பெருங்காயத்தூள் ...................... 1 சிட்டிகை 
மஞ்சள்தூள் ---------------1/4 தேக்கரண்டி 

தேங்காய் சில்லு ...........................6/7 துண்டுகள் 
எனக்கு தேங்காய் நிறைய சேர்த்தா  பிடிக்கும் :)

தாளிக்க 
---------------
வற்றல் மிளகாய் -----3
கடுகு -------------------------1 தேக்கரண்டி 
தேங்காயெண்ணை ...1 ஸ்பூன் 
கறிவேப்பிலை      ---------1 ஆர்க் 

                                                                   

அரைக்க கொடுத்தவற்றை 20 நிமிடம் நீரில் ஊறவைத்து ஒரு சுற்று அரைத்து அத்துடன் நறுக்கிய நெல்லிக்காய் துண்டங்களை சேர்த்து அரைக்கவும் .


பிறகு அரைத்த விழுதை அடுப்பில் சற்று அடி  கனமான பாத்திரத்தில் 4-5 நிமிடங்கள் மஞ்சள்த்தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து  மிதமான தீயில் கொதிக்க விடவும் 


அதன் பிறகு தயிரை 
பிளென்டரில் நீர் சேர்க்காமல் அடித்து அந்த வெந்துகொண்டிருக்கும் விழுதுடன் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும் .
பிறகு தாளிக்க கொடுத்த பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும் ..

                                                                              
இது காமாட்சியம்மாவின் சமையல் குறிப்பு பார்த்து செய்த அப்பளக்குழம்பு எப்பவோ பார்த்து மனதில் நினைவாய்  வைத்தேன் 

இப்போ சுட்டியை இணைக்க தேடுனால் காணோம் 
அதனால் மஹியின் பக்கத்தில் காமாட்சியம்மாவை குறிப்பு  பார்த்து மஹி செய்த குழம்பு  சுட்டியை இணைக்கிறேன் ..

அப்புறம் இது மதுரை தமிழன் செய்த ஒரிஜினலை அப்படியே அங்கு

சொல்லியிருந்த பொருட்களை வைத்து செய்த ஒரிஜினல் கொலை செய்யாத நார்த் ஸ்டைல் பன்னீர் பாவ்பாஜி மசாலா  தசா :)

                                                                              
பன்னீர் த.சா ரெசிப்பி 

நெல்லிக்காய் பச்சடி 
---------------------------------

அப்பளக்குழம்பு 
-------------------------


மற்றொரு பதிவில் சந்திப்போம் 
******************

80 comments:

 1. மோர்க்குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமானது
  மூன்றுவேளை கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லெர்ஜீ ..எனக்கும் மூணு வேளை யும் கொடுத்தா மோர்க்குழம்பு சாப்பிடுவேன் .இங்குள்ள மோர் அவ்ளோ ருசியில்லை நம்மூர் தயிரும் மோரும் ரொம்ப நல்லா இருக்கும் மோர்குழம்புக்கு .
   ஆங் மறந்துட்டேன் முதல் வந்து பின்னூட்டம் தந்ததற்கு இந்தாங்க ஸ்வீட்ஸ் :)

   http://4.bp.blogspot.com/-fCUYNi0dLJo/T51WPj6B6dI/AAAAAAAABqY/zjYCJ1UuoqI/s1600/DSC00567.JPG

   Delete
  2. aஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் கில்லர்ஜி டோன் டச்சூஊஊஊஊஊஉ டோண்ட் டச்சூஊஊஊஊஊஉ அது அதிராட கையில சுவீட் ஆக்கும்.. ஹையோ முருகா நேக்கு இப்போ லெக்ஸ்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல... வயலூர் முருகா வள்ளிக்கு நீலத்தில வைரக்கல் மூக்குத்தி போடுவேன்ன்ன்ன் என் பக்க பொருட்களைப் பாதுகாத்திடப்பா:)

   Delete
  3. வயலூர் முருக்ஸ் :) நம்ம தோஸ்த் உங்க க்ரெடிட் கார்டையே எனக்கு தரேன்னுட்டார்

   Delete
 2. பொதுவாக எங்கள் வீடுகளிலெல்லாம், புளித்த மோர் அதிகம் சேர்ந்துவிட்டாலே, காரசாரமான மோர்க்குழம்பு வைத்து அந்த புளித்த மோரை செலவழிக்க நினைப்பார்கள். தாங்கள் புளிப்பு ருசி வருவதற்காகவோ என்னவோ நெல்லிக்காயைச் சேர்த்து செய்துள்ளீர்கள். அருமையான ஐடியா. நிச்சயம் அது நல்லா ருசியாகவே இருக்கக்கூடும். படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..அதேதான் நீங்க சொன்னது போலவே இங்குள்ள தயிரும் மோரும் டேஸ்ட்லெஸ் நம்ம ஊரில் மோர்னா புளித்திருக்கும் இங்கே சும்மா கொழுப்பு நீக்கியதுன்னு சொல்லி டேஸ்ட்டை கெடுக்கறாங்க ..இந்த நெல்லிக்காய் தனி சுவையை தந்திருக்கு ..இந்த குழம்பில் மிக்க நன்றி அண்ணா வருகைக்கு அதுவும் தங்கள் பிசி நேரத்தில் வந்ததற்கு மிக்க நன்றி

   Delete
 3. மோர்க்குழம்பு தெரியும்
  நெல்லிக்காய் மோர்க்குழம்பு
  தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
  எனக்குப் பிடித்த குழம்பு
  அதுவும் மறு நாள் கொஞ்சம்
  புளிப்பேற அதன் ருசியே தனிதான்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா ..மிக்க நன்றி :) நெல்லிக்கா பச்சடி செய்முறையை கொஞ்சம் மாற்றி செய்து பார்த்தேன் ரொம்பவே நல்லா இருக்கு இப்படி மோர்குழம்பாக செய்தது .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 4. செய்முறையில் குறை இல்லை. கொஞ்சம் தண்ணீரில் விழுதை நல்லா கொதிக்கவைத்தபின், அதில் மோர் சேர்த்து உடனே கலக்கி, 1 நிமிடத்துக்கு மேலேயே வைக்கலாம். நல்லா இருக்கும். நெல்லிப் பச்சிடியையும் டிரெடிஷனல் மோர்க்குழம்பையும் சேர்த்தது. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

  ஆமா.. எலுமிச்சை ஊறுகாயை தட்டில் போட்டு படம் எடுத்துட்டு, அப்பளக் குழம்புன்னுலாம் சொல்றீங்க.

  @அதிரா - நான் சொன்னமாதிரியே நெட்ல நல்ல படமா பன்னீர் தசா போட்டிருக்காங்க ஏஞ்சலின். இதே படத்தை ஷான் பிராண்டிலேயே, பனீர் வெஜ் பிரியாணி மசாலா பாக்கெட்ல பார்த்திருக்கோம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ///@அதிரா - நான் சொன்னமாதிரியே நெட்ல நல்ல படமா பன்னீர் தசா போட்டிருக்காங்க ஏஞ்சலின். இதே படத்தை ஷான் பிராண்டிலேயே, பனீர் வெஜ் பிரியாணி மசாலா பாக்கெட்ல பார்த்திருக்கோம் இல்லையா?///

   என்னையா கூப்பிட்டீங்க மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்.. ஆரையாவது தேம்ஸ்ல தள்ளுவதாயின்.. கூப்பிட்ட உடனேயே மீ வந்துடுவேன்ன்ன்ன்ன்:).. இதுக்கெல்லாம் நேக்கு நோ வெய்க்கம் நோ ரோசம்ம்ம்:).. இருங்க படம் பார்த்திட்டு வாறேன்ன்:)

   http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/Cat-Landing-Grass-SMALLtrim.gif

   Delete
  2. ஆஹா ஆமா ஆமா.. நான் இதை படுபயங்கரமாக வழிமொழிகிறேன்ன்ன்ன்:) குளோஸப் ல கட் பண்ணிப் போட்டால்ல் எங்களுக்கு கண்டு பிடிக்கத் தெரியாது என நினைச்சுட்டாஆஆஆஆஆஅ:).. அதில உத்து உத்துப் பார்த்தேன்ன் அரிசி வேறு அவியல்ல:))..

   ///ஆமா.. எலுமிச்சை ஊறுகாயை தட்டில் போட்டு படம் எடுத்துட்டு, அப்பளக் குழம்புன்னுலாம் சொல்றீங்க.///
   அடுத்ததும் ஆமா ஆமா... பாதிக்கண்ணால பார்த்தேன்ன்ன் மாங்காய் ஊறுகாய்தேன்ன்ன்ன்ன்ன்:)

   Delete
  3. வாங்க நெல்லைத்தமிழன் அப்போவே சொன்னேன் அதிராகூட சேர்ந்தா 10000 டவுட்ஸ் வரும்னு :)
   அது அப்பளக்குழம்பு தான் சட்டியில் செய்ரதால் எல்லா குழம்பும் இப்படி திக்கா வருது :) நானா குழம்பு வகைக்கு மட்டும்மட்ட ரைஸ் யூஸ் செய்வேன் அதனால் தளர நீர்க்க இல்லைனாலும் டேஸ்டியா இருக்கும் ..அது நல்லெண்ணையில் பொரிச்சி குழம்பில்சேர்த்த நிறு ப்ராண்ட் அப்பளம் :)

   அப்புறம் இங்கத்திய தயிர் ஒரு செகண்ட் அடுப்பில் வச்சாலும் திரியுதே அதான் உடனே இறக்கிட்டேன் .ங்றகமா பவுடர் கலக்கரங்களோ தெரில .
   அவ்வ்வ் தசா :)அது எங்க வீட்டு பாத்திரம் இருங்க தட்டில் வச்சி எடுத்த படத்தை சேர்க்கறேன் பதிவில்

   Delete
  4. ////இப்போ சுட்டியை இணைக்க தேடுனால் காணோம் //

   ஆங்ங்ங்ங்ங்ங் நெ. தமிழன் இப்போ கன்ஃபோம் ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்:) இதுவும் செட்ல சுட்டதுதேன்ன்ன்ன்ன்ன்ன்:).. ஹையோ ஒரு மனிசர் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் நிம்மதியா இருக்க முடியுதோ?:).. இப்பூடித்தான் என் பொன்னான ரெசிப்பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாம் இனிமேல் சுட்டூஊஊஊச் சுட்டு எடுத்துப் போடப்போகினமே வயலூர் முருகாஆஆஆஆஆஆஆஆ:).. மீயிட புளொக்குக்கு பாதுகாப்பு வேணும்ம்ம்ம்ம்:).

   Delete
  5. ///அவ்வ்வ் தசா :)அது எங்க வீட்டு பாத்திரம்//
   தசா எனில் பாத்திரத்தின் பெயரா? கறியின் பெயரென நினைச்சனே:).

   Delete
  6. //இப்பூடித்தான் என் பொன்னான ரெசிப்பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாம் இனிமேல் சுட்டூஊஊஊச் சுட்டு எடுத்துப் போடப்போகினமே //

   எதுக்கு போலீஸ் என்னை கொலைக்குற்றத்தில் உள்ள பிடிச்சி போடவா ..உங்க ரெசிப்பீஸ் போட்டா பெயில் கூட கிடைக்காது :)

   Delete
  7. @நெல்லைத்தமிழன் இப்போ இணைச்சிட்டேன் நானா ஜெர்மனிலருந்து தூக்கிட்டு வந்த ப்ளூ கலர் போர்ஸிலீன் தட்டு :)

   Delete
  8. நான் சும்மா கலாட்டா செய்வதற்காகச் சொன்னேன். பன்னீர் தசா நல்லா வந்திருக்கு. நானும் ஒருதடவை முயற்சி செய்யணும் (அதுக்கு முன்னால ம.த பஞ்சாபி ரைஸ் செய்யணும்)

   "அப்புறம் இங்கத்திய தயிர் ஒரு செகண்ட் அடுப்பில் வச்சாலும் திரியுதே" - இங்க Flavored Milk, Straberry etc. நான் வாங்குவேன். லண்டனுக்கு வந்தபோதும், பழங்கள், பால், காரம் தேவைனா பிரெட், கொண்டுவரும் எலுமிச்சை ஊறுகாய் இதிலேயே காலத்தைக் கழித்துவிடலாம் என்று நினைப்பேன். அங்க முதல் முதல்ல ஸ்ட்ராபெர்ரி மில்க் வாங்கினபோது என்ன இவ்வளவு கெட்டியா, கூழ் மாதிரி இருக்குன்னு யோசிச்சேன். இங்க மாதிரி, பாதி பாட்டிலெல்லாம் ஒரேயடியாக சாப்பிடமுடியாது. அதுபோல் ஸ்டிராபெர்ரி பழமும் ரொம்ப ஃப்ரெஷா, சாஃப்டா இருக்கும். இங்க இம்போர்ட் பண்ணறதுனாலயோ என்னவோ பழம் ரொம்ப கெட்டியா இருக்கும். ஆனா, தாய்வான்ல, Flavored Milk ரொம்ப தண்ணியா இருக்கும். இது பாலா அல்லது தண்ணில கரைச்சதான்னு சந்தேகம் வர மாதிரி. தயிர் லண்டன்ல வாங்கியதில்லை.

   Delete
  9. //நான் சும்மா கலாட்டா செய்வதற்காகச் சொன்னேன்.//

   ஆவ் தாங்க்ஸ் ..இனிமே தொடர்ந்து சமையல் குறிப்பா போட்டுடறேன் :))))))
   ஆமாம் இங்கே தயிர் எதுவுமே ஒரே தன்மையை இருக்காது தேசி யோகர்ட் கிரீக் யோகர்ட் ,அப்புறம் ராணி யோகர்ட்னு இருக்கு அதும் சூப்பர் மார்க்கெட் வெரைட்டி பவுடரை கரைச்சி வச்ச டேஸ்ட்..இந்த பிளேவர்ட் யோகார்ட்லாம் தொடவே மாட்டேன் கொஞ்சமம் சுவையில்லையே .முந்தி ஆவின் துவங்கினாங்க இந்த பிளேவர்ட் தயிர் எவ்ளோ டேஸ்ட் அது ..அதேபோலத்தான் சீஸும் இங்கே பல வெரைட்டி கசக்குறமாதிரி இருக்கும் ..அதோடா இவங்க emulsifier, thickener, and stabiliser in foods. எதை சேர்க்கிறாங்கன்னு எனக்கு கொஞ்சம் பயம் ..

   Delete
  10. ///AngelinJune 10, 2017 at 10:44 PM
   //நான் சும்மா கலாட்டா செய்வதற்காகச் சொன்னேன்.//

   ஆவ் தாங்க்ஸ் ..இனிமே தொடர்ந்து சமையல் குறிப்பா போட்டுடறேன் :))))))///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் ஏதோ யோசனையில் இப்பவும் கலாட்டாதான் பண்ணியிருக்கிறார் தெரியுமோ.. ஓவரா துள்ளப்பிடா:)..

   நான் கிரீக் நச்சுரல் பிளேன் யோக்கேட் தவிர வேறெதுவும் வாங்குவதில்லை... எனக்காக சில நேரம் கூஸ்பெரி வாங்கிச் சாப்பிடுவேன்.

   Delete
 5. மோர்க்குழம்பில் என் பாஸ் எக்ஸ்பர்ட்டாக்கும்! இதோ படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க :)

   Delete
 6. என் சிஸ்டர் வீடுகளில் சீரகம் சேர்த்துச் செய்வார்கள். எனக்குப் பிடிக்காது என்பதால் பாஸ் சீரகம் சேர்க்க மாட்டார். தனியாவும் சேர்க்கமாட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் மோர்குழம்பில்வெரைட்டி இருக்கே சிலர் கடலை பருப்பு அரைப்பாங்க ..ஆனா நானா தனியா சேர்க்க காரணமே பருப்புகளின் அளவை குறைக்க

   Delete
 7. அப்பளக்குழம்பு நாங்களும் செய்வோம். இன் ஃபாக்ட் அதுவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பளக்கூட்டும் செய்வாங்க என் பாஸ்.

  ReplyDelete
  Replies
  1. யெஸ் :) எங்க வீட்ல அப்பளக்குழம்புக்கு நல்ல வரவேற்பு ஆனா அப்பளக்கூட்டு கோஸ் கடலைப்பருப்பு காம்பினேஷன் வீட்டில் இருப்போருக்கு பிடிப்பதில்லை :)

   Delete
 8. அப்பளக்குழம்பு சட்டென பார்த்தால் ஊறுகாய் போல இருக்கிறதே...! திக்கா இருக்கோ!

  ReplyDelete
  Replies
  1. ///ஸ்ரீராம்.June 10, 2017 at 2:58 PM
   அப்பளக்குழம்பு சட்டென பார்த்தால் ஊறுகாய் போல இருக்கிறதே...! திக்கா இருக்கோ!///

   ஹா ஹா ஹா ஒருவருக்கு சந்தேகம் வரலாம்.. இல்ல இருவருக்குக்கூட வரலாம்ம்ம்ம்:) இது மூவருக்கு வந்திடுச்சேஏஏஏ.. அடுத்து நிட்சயம் கீதாஅவுக்கும் வரும் இதே சந்தேகம்ம்ம் ஹாஅ ஹா ஹா:).

   Delete
  2. ஆமாம் ஸ்ரீராம் ..குழம்பு பொடி நானே அரைத்து சேர்த்தேன் அடுத்தது தண்ணீர் கொஞ்சம்தான் சேர்ப்பேன் சட்டியில் குழம்பு செய்ரதால் எப்பவும் திக்காவே வருது ..ஆனா செம டேஸ்ட்

   Delete
 9. மீ இப்போதேன்ன்ன்ன்ன்ன் லாண்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்

  http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/Cat-Landing-Grass-SMALLtrim.gif

  ReplyDelete
  Replies
  1. ஆவ் பார்த்து பார்த்து அந்த புல்லுகள் பத்திரம் ஒன்னும் நசுங்க கூடாது சொல்லிட்டேன்

   Delete
 10. என்னாதூ? நெல்லிக்காய் மோர்க் குழம்போ? பச்சைமிளகாய்ச் சம்பல் போல இருக்கூஊஊஊ நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் ..எல்லாருக்கும் என் ரெசிப்பி தவிர வேறெதெல்லாமோ கண்ணுக்கு படுது

   Delete
 11. //தயிர் .................................................1 1/2 கோப்பை //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கப் எனில் அளவு தெரியும் .. இது கோப்பை எனில் எந்தக் கோப்பை.. உங்களிடம் இருப்பது என்னிடம் இல்லை:) என்னிடம் இருப்பது சகோ ஸ்ரீராமிடம் இல்லை.. ஹையோ இப்போ எதுக்கு ச்ச்ச்சும்மா இருக்கிற அவரை இழுக்கிறேன் நான்.. எனக்கு என்னமோ ஆகிப்போச்ச்ச்:) இது எங்கள் புளொக் ஆக்கும் என நினைச்சுட்டேன்ன் வெரி சோரீஈஈஈ...:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர் :) எல்லாரையும் மிரட்டி பயங்காட்டி வச்சிருக்கீங்க :)
   எங்க எல்லாருக்கும் கப் அளவு தெரியும் :) பூனைக்கு cat பாத்திரம் அளவு போதுமா :))))

   Delete
 12. //அதன் பிறகு தயிரை
  பிளென்டரில் நீர் சேர்க்காமல் அடித்து அந்த வெந்துகொண்டிருக்கும் விழுதுடன் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும் .
  பிறகு தாளிக்க கொடுத்த பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும் ..///

  ஆஹா சோஒ ஈசியா இருக்கே.. அடுத்தமுறை தமிழ்க் கடைக்குப் போய் செய்துபோட்டுச் சொல்றேன்... சூப்பரா இருக்கு ஆனா இதில் மோர்க்குழம்பெனில் கொஞ்சம் இன்னும் தண்ணி சேர்த்திருக்கோணும் என நினைக்கிறேன், இது கட்டியாகி சட்னிபோல வந்துவிட்டது.

  இம்முறை அடுப்பை அணைக்க... ஆரைக் கூப்பிடுறீங்க நெ.தமிழனையா இல்ல ம.தமிழனையா?:) ஏனெனில் இருவரும் ஒரெ ஊர்க்காரர்களாமே:) சரி சரி எனக்கெதுக்கு மோர்க்குழம்பு வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்சூஉ.. எனக்கெதுக்கு ஊர் வம்பூஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா முதல்முறை கொஞ்சம் கட்டியா வந்தது அது ஒரு டைப் யோகர்ட் இன்னிக்கு செஞ்சது நல்லா நீர்த்து வந்தது கிரீக் யோகர்ட்

   Delete
 13. ///ஆமா.. எலுமிச்சை ஊறுகாயை தட்டில் போட்டு படம் எடுத்துட்டு, அப்பளக் குழம்புன்னுலாம் சொல்றீங்க.///
  அடுத்ததும் ஆமா ஆமா... பாதிக்கண்ணால பார்த்தேன்ன்ன் மாங்காய் ஊறுகாய்தேன்ன்ன்ன்ன்ன்:)//

  கடவுளே இந்த ஒருதடவை மட்டும் என்னைய காப்பாத்திருங்க .இனிமே சமையல் குறிப்பே போடமாட்டேன்

  ReplyDelete
 14. அப்போவே மல்ட்டி சொன்னா வேணாம் சமையல் குறிப்பு வேணாம்னு கேட்டேனா நான் :) இப்போ எல்லாத்திசையிலிருந்தும் சந்தேகம் வருதே :) ஆனாலும் கில்லெர்ஜீ கோபு அண்ணா ரமணி அண்ணா இவங்க தான் பெஸ்ட்

  ReplyDelete
 15. நெல்லிக்காய் மோர்க்குழம்பு. புளிப்பு இல்லாத மோரில் செய்யும்போது அதன்சுவை புளிப்பைத் தருகிறது. பச்சடி கொதிக்க வைக்க வேண்டாம். மோர்க்குழம்பு பால்பொங்கும் அளவிற்காவது அரைத்து விடும் ஸாமான்கள் மோருடன் வெந்து உறவாடுவதற்காக கொதிக்க வைக்கிறோம். பருப்பு சேர்த்து அரைப்பதும் மோர் திரியாமல் ஒழுங்கான முறையில் குழம்பு பதமாக வருவதற்கும். என்னுடைய அப்பளாக் குழம்பு காமாட்சி ப்ளாக்ஸ்பாட்டாட் காமில் போட்டோவுடன் இருக்கிறது. என்னுடையதும் அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொளகிறாய் என்பதில் மிக்க ஸந்தோஷம்.
  தயிரைக் கடைந்து கொண்டு அதில் அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து நிதான தீயில் கிளறிக்கொடுத்தாயானால் மோர்க்குழம்பு ஒழுங்காக வரும். ஒரு கொதி பால் பொங்குவது போல போதும். நீண்ட பிரஸங்கமா? இல்லை. விவரம் இதுதான்.
  நெல்லிக்காய் மோர்க்குழம்பு ருசியாக இருக்கு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அஆவ் !!வாங்க காமாட்சியம்மா உங்க ரெசிப்பிக்கள் அப்படியே மனசில் இருக்கு நானா எதையும் மறக்கவில்லை அடிக்கடி நெல்லி பச்சடி செய்வேன் காரக்குழம்பு செய்வேன் .இந்த ரெசிபி லிங்க் கிடைக்கலை மீண்டும் தேடி இணைக்கிறேன் .
   குறிப்புகள் டிப்ஸுக்களுக்கு மிக்க நன்றிம்மா .வருகைக்கும் எக்ஸ்டரா குறிப்புகளுக்கும் மிக்க நன்றிமா

   Delete
 16. லாஸ்ட்வீக் நெல்லிக்காய் இருந்திச்சு. செய்து பார்த்து இருப்பேன். இங்கும் மோர்க்குழம்பு ரெம்ப இஷ்டம். புட்டு,இடியப்பத்துக்கும் கூட அபி சேர்த்து சாப்பிடுவார். அவருக்கு பிடிக்கும். (மஞ்சள் சூப் வைக்கலையா என்பார் டொச் ல்). கண்டிப்பா செய்யனும். நல்லா இருக்கு உங்க ரெசிப்பி. அஞ்சுவின் வழி தனிவழி சமையலில்....அப்படியே செய்யப்பிடிக்காது சொல்ல வந்தேன். ஹா...ஹா..

  ஏன் அஞ்சு அல்டி சுப்பர்மார்கெட் தயிர் நல்லாயிருக்குமே..அது வாங்கி செய்ததில்லையா. இங்கு அல்டி தயிர் கொஞ்சம் டேஸ்ட் வித்தியாசம் மற்றைய மார்க்கெட் ஐ விட. நான் அதைதான் வாங்குவது.

  அஞ்சு மன்னிச்சூ......!! நானும் 'அட அஞ்சு எலுமிச்சை ஊறுகாய் ரெசிப்பி போட்டிருக்காவா... என நினைத்தேன். படத்தை டக்கென்று பார்த்தால் அப்படித்தான் தெரியுது... ..,

  இதுக்கெல்லாம் நீங்க சோர்ந்து போகக்கூடாது. சமையல் குறிப்பை போடாமல் விடவேண்டாம்,,,

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..தெரியாம கொஞ்சம் பெரிசா போட்டுட்டேன் அப்பளத்தை :) எல்லாருமே கூட்டு சதியா ஊறுகாய் னு சொல்றாங்களே :)

   Delete
  2. மஞ்சள் சூப் :)) ஹாஹா என் பொண்ணு குழம்பை கொம்பு னு சொல்வா ..இப்போ tamarind க்ரேவினு சொல்றா :)
   என் வழி தனி வழி :)) ஹாஹா போங்க ப்ரியா நீங்க என்னை ஓவரா புகழறிங்க :)

   Delete
  3. ப்ரியா இங்கே அல்டி லிடிலில் இங்கத்திய மில்க் தானே கிடைக்கும் ஆனா கிரீக் யோகர்ட் மட்டும் கொஞ்சம் சுவை சும்மாவே சாப்பிடலாம் ஆனா புளிப்பு குறைவுதான்

   Delete
 17. ///கடவுளே இந்த ஒருதடவை மட்டும் என்னைய காப்பாத்திருங்க .இனிமே சமையல் குறிப்பே போடமாட்டேன்///

  ஹா ஹா ஹா கடவுளே மீ அந்தாட்டிக்காவுக்கு பிளேனில கால் வைக்கும் வரையாவது இந்த ரெசிப்பீஸ்ல இருந்து பீஸ்ஸ்ஸ்ஸ் சேஎஃப் மீ:)

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ அப்படியா சேதி நான் தினமும் போஸ்ட் போடுவேன் அதுவும் மார்னிங் சமையல் ஈவ்னிங் பல்சுவை :) கால வைக்க விட மாட்டேன் இது என் வீட்டு மண் சட்டி மேல் ஆணை

   Delete
 18. /////AngelinJune 10, 2017 at 4:47 PM
  @நெல்லைத்தமிழன் இப்போ இணைச்சிட்டேன் நானா ஜெர்மனிலருந்து தூக்கிட்டு வந்த ப்ளூ கலர் போர்ஸிலீன் தட்டு :)///

  நெல்லைத் தமிழன்!! ரெண்டு தட்டுக்களையும் கொஞ்சம் வடிவா உத்துப் பாருங்கோஓஓஓஓ:).. “அம்மாவின் வயிற்றுக்குள்ளிருக்கும்போது தெரியுமாமே ஒரு இருட்டூஊஊஊஊஊஊஊ:).. அது இப்போ தெரியுதெனக்கூஊஊஊஊஊ:)).

  ReplyDelete
  Replies
  1. ஹலோ பூனை அந்த கருப்பு கண்ணாடியை கழட்டுங்க அப்போ வெளிச்சம் தெரியும் என் முக பிரகாசம் ஜொலிக்கும் கண்ணு கூசும் மெதுவா திறங்க :)))

   Delete
  2. @அதிரா - என்ன நீங்க கவனிக்காம விட்டுட்டீங்க. "ஜெர்மனிலருந்து தூக்கிட்டு வந்த" - எந்தக் கடைல இருந்தோ அல்லது வீட்டில இருந்தோ. அப்பவே இந்தப் பழக்கம் ஏஞ்சலினுக்கு இருந்திருக்கு போல. அதனால்தான் சர்வ சாதாரணமாக உங்க பக்கத்து ரெசிப்பில்லாம் இங்க தூக்கிட்டுவந்து போட்டுர்றாங்க. எப்படி இதைக் கேட்காம விட்டீங்க?

   Delete
  3. அவ்வ்வ் நாங்க ferry ல போட்டு எல்லாத்தையும் எடுத்து வந்தோம் ..என்னது :) அதிரா ரெசிப்பியா நோஊஊ :)எனக்கு பதிவுலக நட்புக்களின் மேலான உயிர் முக்கியம் :) அப்படிலாம் செய்ய மாட்டேன் மிஞ்சி போனா பாத்திரம் செடி பூ மட்டுமே அங்கிருந்து சுட்டு வருவேனாக்கும்

   Delete
  4. ஹா ஹா ஹா நான் ஒரு ரியூப் லைட் எனத் தெரிஞ்சே சொல்லித்தாறார் நெ.தமிழன்:)... அதானே.. மேலே என் கனடாச் சுவீட்ஸ் ஐயும் தூக்கி வந்திட்டா:)).. ஆவ்வ்வ்வ் இனிமேலும் களவெடுப்பீங்க என் பக்கத்தில:) ஹா ஹா ஹா:) சூப்பர் மாட்டி:).

   Delete
  5. நீங்க ஏன் உங்க பெயரைப் போடாம (ரெண்டுபேரும்தான்.. ஏ, அ), புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, மனநிலை, உங்க நட்புகளின் புதிய வாழ்க்கையில் நல்லது, எதை மிஸ் பண்ணுறீங்க போன்றவற்றை எழுதக்கூடாது? நான் பாரிஸ்ல ஒரு பூங்காவில், ஒரு ஸ்ரீலங்கன் கல்கண்டு பத்திரிகையை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார் (அங்க, வெயிலுக்காக ஏராளமான சேர் உண்டு. நிறையபேர் அதில் உட்கார்ந்திருப்பார்கள்). அவர்கிட்ட பேசினேன். ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு கதை, சம்பந்தமே இல்லாத சூழல், கலாச்சாரம், அதன் பிளஸ் பாயிண்டுகளும்தான் (அவர், இப்போ அரசு கொடுக்கற ஸ்டைபண்ட், உதவித் தொகையே போதும்னு வேலைக்குப் போறதை நிறுத்திட்டேன் என்று சொன்னார்)..

   Delete
  6. ம்ம்ம் எழுதலாம் சிலவற்றை ஏற்கனவே எழுதியிருக்கேன் .எனது வட்டத்தில் ஜெர்மனியில் ரொம்ப குறைவானோரே இருந்தாங்க ..
   நான் வாலண்டியரிங் செய்ர இடங்களில் சந்திக்கும் மனிதர்களை பற்றி நிறைய எழுதியிருக்கேன் ..நமது இந்திய இலங்கை குடும்பங்கள் இருக்காங்க ..இப்போதைய மூன்றாம் தலைமுறை பழக்க வழக்கம் அவங்க யோசனை எல்லாம் இருக்கு மனசில் ..
   டீனேஜ் மகளின் பார்வையில் என்று தலைப்பு கொடுத்து எழுதணும் மனசில் இருக்கு ..சில நேரம் பார்வைகள் மாறுபடும் அதான் யோசிப்பேன் ..இங்கே ஸ்கூலில் எல்லாவற்றையும் வெளிப்படையா சொல்லித்தருவாங்க ..doles பற்றிலாம் எழுதலாம் .....விடுமுறைக்கு பின் எழுத முயற்சிக்கிறேன் :)

   Delete
 19. ///AngelinJune 10, 2017 at 4:58 PM
  அப்போவே மல்ட்டி சொன்னா வேணாம் சமையல் குறிப்பு வேணாம்னு கேட்டேனா நான் :) இப்போ எல்லாத்திசையிலிருந்தும் சந்தேகம் வருதே :) ஆனாலும் கில்லெர்ஜீ கோபு அண்ணா ரமணி அண்ணா இவங்க தான் பெஸ்ட்///

  சந்தேகம் கேட்டது டப்பாஆஆஆஆஅ?:) இது எந்த நாட்டுச் சட்டம்ம்ம்?:)... எனக்கு தேவை கடமை நேர்மை எருமை:).. விடுங்கோ.. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:).. நாளைக்கு மறக்காமல் பிபிசி நியூஸ் பாருங்கோஓஓஒ:)..

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா கொடுத்த எருமை போதாதா நாநும் தரட்டுமா :) வீட்ல கட்டி வச்சிக்கோங்க :)

   Delete
  2. ///நாநும் தரட்டுமா :)////

   ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நெ. தமிழன் ஓடியாங்கோஓஓஓஓஓஓஒ ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டா:)) ஆவ்வ்வ் நேக்கு டமில்ல ஆரும் பிசுரேக்கு விட்டால் பிடிக்காதூஊஊஉ பொயிங்கிடுவேன்ன்ன்ன்ன்ன்:).

   Delete
  3. பிசுரேக்கு///haaaahaa

   Delete
 20. வாரம் ஒருமுறை மோர்க்குழம்பு தான்..

  ஆனால் - அது, காமாட்சியம்மா அவர்கள் சொல்லியிருப்பதைப் போல -

  >>> தயிரைக் கடைந்து கொண்டு அதில் அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து நிதானமான தீயில் கிளறிக் கொடுத்தால் மோர்க்குழம்பு... ஒரு கொதி - பால் பொங்குவது போல போதும்.. <<<

  எனினும், தாங்கள் அளித்திருக்கும் குறிப்பும் கவனத்தில்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜூ ஐயா .இங்கே கடைவதற்குப்பதில்தான் நான் மிக்சில அதற்கென்று ருக்கும் பிளேடால் சுற்றுவேன்
   மிடில் ஈஸ்ட் தயிர் சுவைன்னு கேள்விப்பட்டேன் இங்கே நல்ல இருக்காது லேசா சூடாக்கினா திரியுது .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 21. அன்புடையீர்..

  இங்கே - உள்நாட்டில் தயாரிக்கப்படும் (KDC) பால், தயிர் மற்றும் மோர் வகைகளே எனக்குப் பிடித்தமானவை..

  சவூதியில் இருந்து வருகின்ற - சில தயாரிப்புகளை விட சுவையுடையவை..

  பாலைத் தூளாக்கி அந்தத் தூளை மீண்டும் பாலாக்கி -
  என்னென்னெவோ செய்கின்றது நவீன விஞ்ஞானம்!..

  இவற்றுக்கிடையில் நாம் நலமுடன் வாழ வேண்டும்!..

  ReplyDelete
  Replies
  1. //பாலைத் தூளாக்கி அந்தத் தூளை மீண்டும் பாலாக்கி - //

   அதேதான் ஐயா அப்படி செய்ரதால் உணவின் சுவை கெட்டுது ..

   Delete
 22. நெல்லிக்காய் மோர்க்குழம்பில் நெல்லிக்காய் சேர்த்ததால் புளிப்பு வந்திருக்கும் சாதாரண மோர்க்குழம்பில் மோர் அல்லது தயிர் புளிப்பு இல்லை எனில் ஒரு சுண்டைக்காய் அளவு புளியை அரைக்கும் சாமான்களோடு சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம். நன்றாக இருக்கும். நெல்லிக்காய்ப் பச்சடியே இங்கே பிடிக்காது. மோர்க்குழம்பு எங்கே! நெல்லிக்காய் சாதமும் செய்யலாம். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா ..

   @அதிரா @நெல்லைத்தமிழன் இதை நோட் பண்ணுங்க :)
   என் சமையல் வாசனை கீதாக்காவை இந்த பக்கம் வர வைச்சிடுச்சே :)
   கன்பர்ம்டா இது அப்பளக்குழம்பு தான் போதுமா :))

   @கீதாக்கா ..இங்கே பஞ்சாபிக்காரங்க குஜராதிகாரங்க கடையில் இந்த நெல்லிக்கா குவிச்சு இருக்கு நான் தினமும் வள்ளலாரை கீரை ஸ்மூத்தில ஒரு நெல்லியும் சேர்ப்பேன்
   அடிக்கடி தொக்கு ,சாதம் ரசம் கூட செய்வேன் ..ஆனா மோர்குழம்புக்கு செம வரவேற்பு இங்கே வீட்ல வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
  2. சுண்டைக்காய் அளவு புளி //குறித்துக்கொண்டேன் எனக்கு நிச்சயம் யூஸ் ஆகும் இந்த ஊர் தயிர் பால்பவுடர்டேஸ்ட் வருமே இனி சேர்த்து அரைக்கிறேன்

   Delete
  3. ஹையோ சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் வல்லாரைக்கு தெரியாம வள்ளலாரை இழுத்திட்டேனே :)
   இந்த கூகிள் பொல்லாதது

   Delete
 23. @துரை செல்வராஜா. KDD Kuwait Danish Dairy. இங்கு நான் பொதுவா அதை உபயோகப்படுத்துவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. @ நெல்லைத்தமிழன்..
   KDD., (Kuwait Danish Dairy) இதை ஒரு பொருளாகவே மதிப்பதில்லை..
   நான் குறித்திருப்பது KDC - Kuwait Dairy Co., KDCow - எனும் பெயரில் வருபவை..

   பாலும் தயிரும் மோரும் - குறிப்பிட்டு சொல்லத்தக்கவை..

   Delete
  2. எங்க லண்டன் தயிர் நீங்க ரெண்டு பேரும் சொல்ற தயிர்களுக்கு கிட்டவே நெருங்க முடியாதது ஏன்னா இங்கே fat free லோ கொழுப்புன்னு சொல்லி தயிரை டேஸ்ட்டை கெடுக்கறாங்க

   Delete
 24. நெல்லிக்காய் மோர்க்குழம்பு எங்களுக்கும் புதிது... இருந்தாலும் வீட்டில் குறித்து வைத்துக் கொண்டார்கள்... (சோதனை எனக்கு தான்...!) நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. அநேகமா வரவர நான் சமையல் சயன்டிஸ்ட் ஆகிட்டு வரேனோனு டவுட் :) யாரும் கேள்விப்படாத ரெசிபிலாம் எனக்கு தோணுதே :)

   பரிசோதனையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 25. நெல்லிக்காய் மோர்க்குழம்பு இங்கு செய்வதாய் இருந்தால் புளிக்காத மோரில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
  நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வேன் அடிக்கடி பச்சையாக நெல்லிக்காயை துறுவி போட்டு தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து கலந்து கடுகு கருவேப்பிலை தாளித்து போடுவேன்.
  செய்து பார்க்கிறேன்.
  நிறைய சமையல் குறிப்புகள் இருக்கிறது பார்க்கிறேன். படங்களூடன் செய்முறை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா .ஆமாம் நம்மூர் மோர் தயிருக்கு ஓவரா புளிச்சிடும் அதனால் உரை குத்தி புளிக்காத தயிர்தான் நல்லது ..
   பச்சடியும் செய்வேன் நானும் அடிக்கடி ..மிக நன்றி அக்கா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

   Delete
 26. மோர் குழம்பு எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்...ஆன தனியா, சீரகம் சேர்க்க மாட்டேன்..

  நெல்லிக்காய் மோர்க்குழம்பு புதுசா இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..இதில் நிறைய விதம் இருக்கே நான் பருப்பை குறைசிச்சு தனியா விதை சேர்ப்பேன்.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   yes :) its my own recipe :)))))))

   Delete
 27. Replies
  1. வாங்க சகோ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 28. மன்னிக்கவும் மோர்க் குழம்பு எனக்குப் பிடிக்காது அதுவும் நெல்லிக்காய்.... அரிநெல்லிக்காயை சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன் சாப்பிட்டு நீர் குடித்தால் இனிக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் ..எனக்கு மோர்க்குழம்பு இருந்தா வேறேதும் வேண்டாம் :)
   கப்ல ஊத்தி ஸ்புனால் குடிக்கவும் பிடிக்கும் :)
   எனக்கு நம்மூர் குட்டி நெல்லி ஆசை அது இங்கே கிடைக்காது .
   வருகைக்கு நன்றி

   Delete
 29. உள்ளம் கேட்குமே மோர்

  ReplyDelete
 30. நெல்லி மோர்க்குழம்பு செய்வதுண்டு.பிரேஷ் கிடைக்கலைன...நெல்லிமுள்ளி வைச்ச செய்வதுண்டு.நானும் பச் ஹையாகத்தான்....அப்பலக் குழம்பும் செய்வதுண்டு... நெல்லி மோர்க்குழம்பு உங்கள் ரெசிப்பி. சூப்பர் குறித்தும் கொண்டேன்....பயணம்...கும்மி அடிக்க முடில..ட்ரெயினிலிருந்து...

  கீதா

  ReplyDelete