அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/30/17

ரசித்து ருசித்த சமையல் :) with Angels Touch :)                                                                         

இது சுடச்சுட செய்தது :) இன்று நம்ம அவர்கள் ட்ரூத் ஒரு சமையல் குறிப்பு போட்டிருந்தார் உடனே சமைத்து ருசி பார்த்தாச்சு .

இப்போ சுடச்சுட எனது கிச்சனிலிருந்து உணவு மேஜைக்கு 

                                                                              எனக்கு சமையல் குறிப்புகளை அப்படியே செய்து பார்ப்பதை விட கொஞ்சம் என் ஸ்டைல் டச் வர மாதிரி செய்வேன் ..குளிர்சாதனப்பெட்டியில் ஒரு வாரமா வாங்கி வைத்த  desi panneer இருந்தது ..எப்பவும் எல்லா காய்கறிகளுடனும் சேர்த்து வதக்கி உண்பேன் ..இன்னிக்கு மதுரை தமிழரின் ரெசிப்பி பார்த்ததும் சிங்கம் களத்தில் இறங்கிடுச்சி
..ஆனா என்கிட்டே பாவ்பாஜி மசாலாத்தூள் இல்லை ..முன்பு ஒருமுறை வாங்கி வைத்து ஒரு டீஸ்பூன் சேர்த்தே வாய் வெந்துபோனது எனக்கு :) மேலும் வடஇந்திய பஞ்சாபி குஜராத்தி மசாலாக்களில் அதிகமா பட்டை கிராம்பு ஏலம் போன்ற பஞ்சரத்ன மசாலா வாடை அடிக்கும் அது எனக்கு பிடிக்காது அதனால் வீட்ல இருந்த பொருட்களை பயன்படுத்தி செய்தென் ..ஒரிஜினல் ரெசிப்பியில் பாவ் பாஜி மசாலா இருந்தது அதற்குப்பதில் நான் 1/2 தேக்கரண்டி கேரளா double horse பிரியாணி மசாலாவையும் அத்துடன் 1 தேக்கரண்டி மேளம் காஷ்மீரி மிளகாய்த்தூளையும் சேர்த்தேன் ..மேலும் ஒரிஜினல் ரெசிப்பியில் டொமாட்டோ கெட்ச் அப் இருந்தது ..நான் அதையும் சேர்க்கலை எதிலெல்லாம் கலரும் மோனோ சோடியம் க்ளூட்டமேட்டும் இருக்கோ அதற்கெல்லாம் வீட்டில் தடா ..எப்பவாது க்ளூட்டன் இல்லா தக்காளி சாஸ் வாங்கி வைப்பேன் அதுவும் இன்று வீட்டில் இல்லாததால் அதை தவிர்த்துவிட்டேன் ..அடுத்தது வெங்காயம் இந்த ஊரில் சிவப்பு கலரில் உள்ளே லைட்டா பர்ப்பில் நிறத்தில் கிடைக்கும் இதை pizza மற்றும் சான்ட்விச்சுக்கு என பயன்படுத்துவாங்க இனிப்பு கலந்த சுவையா இருக்கும் .நம்மூர் வெங்காயம் போல் காரமிருக்காது அதைத்தான் பயன்படுத்தினேன்


                                                                              

                                           

                                            

         
சுடசுட செய்து அங்கே பின்னூட்டமும் கொடுத்தா ட்ரூத் சொல்றார் அங்கே பின்னூட்டத்தில் 

//வெரி குட்...... நல்லா இருக்கலாம் ஆனால் 24 மணிநேரம் கழித்துதான் உண்மையில் உடல் நிலை நல்லா இருக்கா இல்லையா என்று சொல்லமுடியும் அதையும் பொறுத்து இருந்து பார்த்து பதில் போடவும் //


அந்த பின்னூட்டத்தையும் இங்கே இணைக்கிறேன் இதனால் சகல மானோருக்கும் நான் அறிவிப்பது யாதெனின் 24 மணிநேரம் கழித்து என்னை என் குடும்பத்தாரை காணவில்லையென்றால் அவர்கள் உண்மைகள் என்கிற மதுரை தமிழர் தான் காரணம் என்று ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு பூட்டு போட்ட பெட்டியில் வைத்துள்ளேன் :)


                                                                                    
                                                             *****************

77 comments:

 1. சுடச்சுடச் செய்து ரசித்து ருசித்த சமையல் :) with Angels Touch :) + படங்கள் அனைத்தும் அருமையோ அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..முதல் வந்ததுக்கு உங்களுக்கு கொடுக்க வெங்காய சமோசா தேடினேன் அப்புறம் யோசிச்சேன் நானே சுடசுட செய்து தரேன் உங்களுக்கு .டோன்ட் டெல் அதிரா .
   வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 2. அவர் சொன்ன எல்லாத்தையும் போடலை. ஒண்ணொண்ணுக்கும் இன்னொரு பொருள் போட்டுருக்கீங்க. பனீராவது போட்டீங்களா அல்லது, Frozen ஐட்டம் சேர்க்கத் தடா என்றதுனால, இட்லி பண்ணி அதை cut பண்ணி, பனீருக்குப் பதிலாப் போட்டீங்களா?

  இத்தனையும் செய்துட்டு, 'மதுரைத் தமிழர்' காரணம்னா எப்படி. (என்ன இருந்தாலும் அவர் எங்க ஊர்க்காரர்)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் அம்மாடி எவ்ளோ ஊர்க்காரர் பாசம் :) :) எல்லாமே அவர் சொன்னதை போட்டேன் desi பன்னீர் வீட்டில் மீதி பாக்கெட் இருக்கு :)வேணும்னா proof கு படம் போடறேன் ..

   அவர் சொன்னதில் பாவ் பாஜி மசாலாவும் கெட்சப்பையும் தான் சேர்க்கலை அதான் கலர் லைட்டா இருக்கு :)

   யாரவது உத்தமபாளையம் நாகர்கோயில் தர்மபுரிக்காரங்க இருக்கீங்களா கொஞ்சம் ஆதரவு தாங்க எனக்கு :)

   Delete
  2. ///நெல்லைத் தமிழன்May 30, 2017 at 3:37 PM
   அவர் சொன்ன எல்லாத்தையும் போடலை. ஒண்ணொண்ணுக்கும் இன்னொரு பொருள் போட்டுருக்கீங்க.//

   ஆங்ங்ங்ன் அது அது நெல்லைத்தமிழன் அப்பூடிக் கேளுங்கோ:) அப்பாடாஆ.. இப்பூடியாவது நம் கட்சிக்கு ஆள் சேர்த்திடோணும்...:)..

   அதேதான் ச்ச்ச்சும்மா என்னமோ பண்ணிட்டிப்போட்டு ஓடிவந்து கூவுறா.. தான் மதுரைத்தமிழனுக்காக செய்தாவாம்ம் கர்ர்ர்ர்ர்:) அவர் இப்பூடிப் புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கிட மாட்டார் டொல்லிட்டேன்ன்:).. ஹா ஹா ஹா

   Delete
  3. ///பனீராவது போட்டீங்களா அல்லது, Frozen ஐட்டம் சேர்க்கத் தடா என்றதுனால,//

   இங்க ஃபுரோசின் இல்லாமல் கிடைக்குதே பன்னீர்.. பிரிஜ் ல தான் இருக்கும்.

   Delete
  4. ///இத்தனையும் செய்துட்டு, 'மதுரைத் தமிழர்' காரணம்னா எப்படி. (என்ன இருந்தாலும் அவர் எங்க ஊர்க்காரர்)///

   ஆவ்வ்வ்வ் இது என்ன புயுக் கதை.. நெல்லையை இப்போ மதுரை என ஊருக்கு பேர் மாய்த்திட்டாய்ங்களோ சொல்லவேயில்ல:)..

   ///யாரவது உத்தமபாளையம் நாகர்கோயில் தர்மபுரிக்காரங்க இருக்கீங்களா கொஞ்சம் ஆதரவு தாங்க எனக்கு :)//

   ஆமா அஞ்சு ஆமா.. மீ உத்தம புய்த்திரி:).. டெல்லுங்கோ என்ன வேணும்? எனி யெல்ப்?:)

   Delete
  5. ஆவ் :) நான் frozen பொருள் பட்டர் பன்னீர் எல்லாம் ஆர்கானிக் வெரைட்டி சேர்ப்பேன் அதுக்கு நோ தடா ..இந்த க்ளூட்டன் தான் தொல்லை தர பொருள் அதை எந்த வடிவிலும் அனுமதிப்பதில்லை

   Delete
  6. உத்தம புத்திரியா ..ஹையோ வம்பே வேணாம் ..தவளை தன வாயால் கெட்டதாம் :)

   Delete
  7. miyaav :)truth is half sengottai thirunelveli and half madurai ..

   Delete
  8. அப்போ அவரை ஹாஃப் மதுரைத் தமிழன் எனப் பெயர் மாத்தச் சொல்லிடுங்கோ அஞ்சு:).

   Delete
  9. ஹாஆஹா :)))))))))))

   Delete
  10. நெல்லைதமிழருக்கு கோயில் கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.......தனி ஒரு மனிதனாக அரசியலில் போராடிக் கொண்டும் மனைவியுடன் போராடிக் கொண்டிருந்த என்னை பார்த்து யாரும் இரக்கப்படவில்லை ஆனால் நெல்லைதமிழர்மட்டும்தான் ஊர்காரர் என்ற பாசத்தில் என் மீது அக்கறை கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு கோயில் கண்டிப்பா கட்டிதீருவேன். அதனால அதிரா ஏஞ்சல் கீதா எல்லோரும் மறக்காமல் ஆளுக்கு பத்தாயிரம் டாலர் அனுப்பி வைக்கவும் இல்லைன்னா என் அரசியல் செல்வாக்கை வைத்து உங்க வீட்டிற்கு ஆட்ட்டோ அனுப்பி வைக்கப்படும்

   Delete
  11. @அதிரா விட்டால் என் பெய்ரை ஆப்பாயில் தமிழன் என்று மாற்ற சொல்லிவிடுவிங்க போல இருக்கே

   Delete
  12. நான் ஒரு நல்ல சுவையான் ரிசிப்பி போட்டால் அதை பண்ணுறேன் என்ரு சொல்லி ரிசிப்பையை கொலை பண்னிட்டேங்களே......ஆமாம் என்ன உங்க வூட்டுகாரர் இன்று சமைக்க மாட்டேன் என்று சொல்லி ஸ்டிரைக் பண்னியதால்தான் இந்த கிச்சன் களோபரமா என்ன?

   Delete
  13. உங்க ரெசிபில கொடுத்த பாவ்பாஜி மசாலா என்னை காலி பண்ணிடுமே அதில் கலர் சேர்க்கிறாங்க னு நினைக்கிறேன் அதான் வாங்கி வர கூட சொல்லலை ..காரம் நானா குறைச்சிதான் போடுவேன் :)

   Delete
  14. ஹாஹ்ஹா :) என்னாவொரு பாசம் ஊர்ப்பாசம் :) கீதாவையும் அதிராவையும் நானா சேர்த்துக்கறேன் நாங்க மூணுபேராம்
   #உங்களை ஓடவைக்க அதிராகிட்ட சொல்லி பாட்டு பாட சொன்னா போதும் நெல்லைத்தமிழன் எங்க பக்கம் வந்திடுவார்

   Delete
  15. ஏஞ்சல் இதோ நாகர்கோயில் காரி நான் வந்துட்டேன்....மதுரை சகோ, ஏஞ்சல் உடனே உங்க ரெசிப்பிய செஞ்சு ஃபோட்டோ எடுத்து க்ரியேட்டிவா செஞ்சுருக்காங்க...பாவம் கொயந்தை....(ஆஹா அதிரா மொழி வந்துருச்சே!!!)

   //உங்களை ஓடவைக்க அதிராகிட்ட சொல்லி பாட்டு பாட சொன்னா போதும் நெல்லைத்தமிழன் எங்க பக்கம் வந்திடுவார்//

   ஹஹஹஹ் ஏஞ்சல் அப்படிப் போடுங்க!! அதிரா பாடினா ஹஹஹ்ஹ் மதுரை பாவம்பா...

   கீதா

   Delete
  16. ஆனா ஒன்னு...மதுரை இந்த ரெசிப்பிய போட்டு அந்த மணம் ஸ்விஸ் வர எட்டி.இது என்னாப்பா நியூஜெர்சி இங்க மணக்குதுனு...நிஷாவோட ஹோட்டல் ஃபுட் மணத்தையும் தாண்டி.... நிஷாவையே இழுத்துக் கொண்டாருந்துச்சு பாருங்க!!! ஹஹஹ்

   கீதா

   Delete
  17. இன்னிக்கு ரெண்டாம் முறையும் பாவ் பாஜி மசாலா வாங்கி செய்தாச்சு கீதா :)

   Delete
 3. ஆஆஆஆஆஆ மின்னாமல் முழங்காமல் இந்தச் சம்பவம் எப்போ நடந்திச்சூஊஊஊஊஊ:)... ஹா ஹா ஹா இன்று லாப் எலி கோபு அண்ணனோ மியாவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :) மூணாவதுதான் லாப் எலி முதல் வந்த ரெண்டுபேருமே placebo

   Delete
  2. நோ நோ மீ ஒன்லி எலி பாபகியூ தேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)..

   ஹையோ மசமசவெனப் பேசிக்கொண்டிருக்காமல் கோபு அண்ணனுக்கு ஒரு கோல் போட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கோஓஓ அவரோடு..., இல்லையெனில் அவர் ஹேமாவுக்கு.. சே..சே.. அவசரத்தில டங்கு வேற ஸ்லிப் ஆகுதே கர்:) ...கோமாவுக்குப் போயிடப்போறாரே:).. அவசரப்பட்டு ஓடியாந்து முதலாவதா டிஷ் ஐத் தூக்கிட்டார்ர் கர்:) சாப்பாட்டுப் பிரியர் என்பதற்காக இப்பூடியா?:) ஆரு சமைச்சது என ஓசிக்க வாணாம்ம்?:) ஹையோ மீக்கு லெக்ஸும் ஆடல்ல ஹாண்ட்ஸும் ஓடல்ல:)... சுனாமிப் பேரழிவை விட ரென்ஷனா இருக்கே இப்போ:).

   Delete
  3. ஹாஹா :) நானேதான் சொன்னேனே அவருக்கு ஸ்பெஷலா வெங்காயசமோசா சுடசுட தயாராகுது :) நீங்கதான் மெயின் லாப் எலி இந்த போஸ்டுக்கு

   Delete
  4. என்னாதூஊஊஊஊஊ சமோசாவாஆஆஆஆஅ?:) நோஓஓஓஓஒ விடமாட்டேன்ன்ன் கோபு அண்ணனைக் காப்பாத்தியே தீருவேன்ன்ன்:) கோபு அண்ணன் தொட்டிடாதீங்க:).. உங்களுக்கு நெல்லைத்தமிழனிடம் கெஞ்சிக் கேட்டாவது அடை வாங்கித் தாறேன்ன்.. சமோசால கை வச்சிடாதீங்க பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

   Delete
 4. ///சுடசுட செய்து அங்கே பின்னூட்டமும் கொடுத்தா ட்ரூத் சொல்றார் அங்கே பின்னூட்டத்தில்

  //வெரி குட்...... நல்லா இருக்கலாம் ஆனால் 24 மணிநேரம் கழித்துதான் உண்மையில் உடல் நிலை நல்லா இருக்கா இல்லையா என்று சொல்லமுடியும் அதையும் பொறுத்து இருந்து பார்த்து பதில் போடவும் /////

  ஆச்சா.. ஆச்சாஆ? 24 மணி ஆச்சா எனக் கேட்டேன்ன்:).. அஞ்சூஊஊஊஊஉ அஞ்சூஊஊஊஊஉ கண்ணைத் திறங்கம்மா.. ம்ட்றுத் பாவமில்லயா?:) நீண்ட காலத்துக்குப் பிறகு இன்றுதான் ஆசையா ஒரு ரெசிப்பி போட்டார்ர்:) இப்பவே கையுக்கு சங்கிலி போகப்போகுதே...

  இப்போ நான் ட்றத்தைக் காப்பாற்றுவேனா இல்ல மயக்க நிலையில் இருக்கும் அஞ்சுவைக் காப்பாத்துவேனா? இல்ல மீ ஓடிப்போய்த் தேம்ஸ்ல குதிக்கட்டோஓ நிலைமை கவலைக்கிடம்ம்ம்:)...

  ReplyDelete
  Replies
  1. என்னை வழி அனுப்பறத்தில் எவ்ளோ குஷி பூனைக்கு :)
   அந்த நிலை கஷ்டம் உங்களுக்கு வரக்கூடாதுன்னே மூச்சை இழுத்து பிடிச்சி உலாவுறேன் நான்

   Delete
  2. ஆஹா ஏஞ்சல் பூனையாருக்கு உங்க தக்காளி சாதம் மூக்குல வேர்த்துருச்சு...அதான் இப்படி தேம்ஸ்ல குதித்து நீஞ்சி உங்க வீட்டுக்கு வரதுக்குத்தான் ப்ளான் போல..ஹிஹிஹி

   கீதா

   Delete
 5. //சிங்கம் களத்தில் இறங்கிடுச்சி/// சிங்கமா? ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏ?:).

  ///அதுவும் இன்று வீட்டில் இல்லாததால் அதை தவிர்த்துவிட்டேன் ..//
  அப்போ இது ட்றுத்ட ரெசிப்பி இல்ல:) ஹையோ முருகா... என்னை ஏன் இன்னும் உசிரோடு:) விட்டுவச்சிருக்கிறாய்ய்ய்ய்ய்:).. இதை எல்லாம் பார்க்க நேக்கு வேர்க்காத உதடெல்லாம் வேர்க்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
  Replies
  1. ஆமா சிங்கம்தான் :)சிங்கிளா எவ்ளோ கலாட்டா செய்றோம் :)

   Delete
  2. பூனைக்கு மூக்கு தானே வேர்க்கும் :)

   Delete
  3. பாருங்க ஏஞ்சல் பூனையார் மீசைய முறுக்கிக்கிட்டு இப்போ ஒரு ரெசிப்பி போடுவாங்க பாருங்க...

   கீதா

   Delete
 6. ///எனக்கு சமையல் குறிப்புகளை அப்படியே செய்து பார்ப்பதை விட கொஞ்சம் என் ஸ்டைல் டச் வர மாதிரி செய்வேன்///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த சமாளிப்புக்கேசன் எல்லாம் வாணாம்ம்ம்:) நான் இதை ஒத்துக்க மாட்ட்டேன்ன் இப்பவே பொயிங்கிறேஏன்ன்ன்ன்.. நேக்கு நீதி தேவை:).. எனக்கு கடமை நேர்மை எருமை தான் முக்கியம்.. அல்லது ஸ்ரீராம் புயு:) ஓடர் போட்டிருப்பதைப்போல:) ஒரு சாம்பிள் பார்சல் அனுப்புங்கோ:)..

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) நட்புன்னா நம்பனும்

   Delete
  2. நோஓஓஓஓஒ இப்பவே டிவோஸ் க்கு வக்கீலை ஏற்பாடு பண்றேன்ன்ன் நேக்கு நீதி தேவை:)

   Delete
  3. யாரு அருள்நிதியா :)

   Delete
  4. நோஓஓஓஓஓஒ வக்கீல் வண்டுமுருகன்:)

   Delete
  5. https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTHVD8Uc7U_guokLb5Tc5i0RbUrcprSTtP1KbE8cmv_HvvKt5ALPA

   Delete
  6. யெஸ் இதோ வந்துட்டேன் :)

   Delete
  7. யெஸ் இதோ வந்துட்டேன் :)// ஏஞ்சல் நீங்கதான் வக்கீல் வண்டுமுருகனா ஹஹஹ்ஹி..

   கீதா

   Delete
  8. இல்லை அவர் சார்பா படம் மட்டுமே போட்டேன் :)))))))))

   Delete
 7. சுட சுட செய்து சுட சுட சாப்பிட்டு, சுட சுட பதிவு போட்டாச்சா!
  அழகாய் இருக்கு பார்க்க.
  சுவையும் நன்றாக இருந்து இருக்கும் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..மிகவும் ருசியாகவே இருந்தது ..மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 8. சமையல் செய்தது மட்டுமல்ல
  அதைப் பதிவில் பதிந்த் விதமும்
  மிகவும் ருசிக்கும்படியாய்...
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா ..அவர் கொடுத்த செய்முறை சுலபமா இருந்தது ..வீட்டில் தேவையான பொருட்களும் முக்கால்வாசி இருந்ததால் உடனே செய்து சாப்பிட்டோம் .மிக்க நன்றி அண்ணா

   Delete
 9. இதைத் தானே போன வாரம் செய்தேன்..

  என்ன ஒரு பிரச்னை என்றால் Tomato Ketchup எதற்குமே பயன்படுத்துவதில்லை..
  தவிரவும் பூண்டு இஞ்சி இவற்றை மசித்துக் கொள்வது பழக்கம்...

  வழக்கமாக சாம்பார் மசாலாத் தூள் தான் உற்ற துணை...

  இன்னொரு சேதி!.. - எல்லாவற்றையும் வதக்கி -
  பாஸ்மதியுடன் ''தம்'' வைத்து விடுவேன்!..

  இங்கே ரமலான் நோன்பு ஆரம்பமாகியிருப்பதால் -
  வேலையும் உணவும் தூக்கமும் சற்றே நேரம் மாறி இருக்கின்றன..

  நல்ல சமையல் குறிப்புகளை அள்ளித் தாருங்கள்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா :) நான் டொமாட்டோ கெட்ச்சப் சேர்ப்பதில்லை ..இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு க்ளூட்டன் இண்டாலரன்ஸ் இருப்பது தெரிந்த நாள் முதல் ஒவ்வொரு உணவிலும் msg இருக்கானு பார்த்தே வாங்கறேன் .
   சாம்பார் பொடி வற்றல் குழம்புக்கு நல்லா இருக்கும் ..இந்த வகை ரெசிப்பிக்கு கொஞ்சம் கரம் மசாலா கொஞ்சம் காஷ்மீரி மிளகாய்த்தூள் கலந்த நல்லா இருக்கும் ..இனி நிறைய சமையல் குறிப்புகள் வெளியிடுவேன் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

   Delete
 10. உங்கள் பதிவு கண்டுதான் மதுரைத் தமிழன் பக்கம் சென்று வருகிறேன்.  //எதிலெல்லாம் கலரும் மோனோ சோடியம் க்ளூட்டமேட்டும் இருக்கோ அதற்கெல்லாம் வீட்டில் தடா ..//

  ஐயோ.. நான் இவ்வளவு கேர் எடுத்தெல்லாம் பார்ப்பதில்லை!


  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :) வேற வழியே இல்லை ஸ்ரீராம் ..நானா உணவில் எதை சாப்பிட்டாலும் ஒவ்வாமை பிரச்சினை வருது அதனால் டாக்டர்ஸ் மிக கவனமுடன் இருக்க சொல்லியிருக்காங்க என்னை .தமிழ் கடையில் வாங்கிய வேர்க்கடலை சக்கி பார் சாப்பிட்டாக்கூட அலர்ஜி வரும் எனக்கு கொஞ்சம் பிங்க் கலர் ரெட் கலர் சேர்த்த ஜோஸ் குடிச்சா கன்னங்கள் முகம் எல்லாம் அதே கலர் வரும் ..பீட்ரூட் கூட லார்ஜி தான் ..கத்திரி தொட முடியாதது ..மாகி நூடில்ஸ் அந்த டேஸ்ட் மேக்கரில் msg இருக்கே அதுவும் எனக்கு ஆகாதது .

   Delete
 11. அந்த ஊர் வெங்காயத்தைப் பார்த்தால் பீட்ரூட்டோடு கலப்புமணம் செய்தாற்போல இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா அதேதான் :)உள்ளேயும் லைட் பர்ப்பிள் நிறம் இருக்கும் இதில் இனிப்பு சட்னி போல செய்வாங்க :) நல்லா இருக்கும்

   Delete
 12. முதல் பிளேட் தசா படத்தைப் பார்க்கும்போது சாதம் உதிர் உதிராக வராதது போலத் தெரிகிறதே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அது சீரக சம்பா இல்லைனா தஞ்சாவூர் பொன்னி சேர்த்தா உதிரியா வந்திருக்கும் ..இது லாங் க்ரெயின் ரைஸ் இங்கு கிடைப்பது அது லேசா கஞ்சி காட்டும் சமைத்து தட்டில் போட்டு படமெடுத்தேன் கொஞ்ச நேரம் தம் பிடித்திருந்தா சட்டியில் வைத்து நீர்த்தன்மை இருக்காது ..சரியா கண்டு பிடிச்சீங்க :)

   Delete
 13. நேற்று யதேச்சையாக இங்கும் பாஸ் 'தசா' தான் செய்திருந்தார். நோ கெச்சப். நோ பாவ்பாஜி மசாலா .நோ பனீர். ஆனால் முப உண்டு! எங்கள் 'தசா' காரசாரமாய் இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் நானா காரம் குறைச்சே சேர்ப்பேன் அப்படி சேர்த்தாலும் மிளகு சீராக காரம் மட்டுமே :) ஹாஹா உங்க வீட்லயும் தசாவா :) பனீர் இப்போதான் முதல்முறையா சேர்த்தேன் நல்லாவே இருக்கு

   Delete
 14. தக்காளி கெட்சப் சேர்க்கப் பிடிக்கலைனா பரவாயில்லை. நல்ல சாறுள்ள தக்காளியைத் தேவைக்கேற்ப ப்ளாஞ்சிங் செய்து மிக்சியில் அடித்துக் கொண்டு சேர்க்கவும். நான் இம்முறையை தான் மடர் பனீர் செய்வதற்கும் பயன்படுத்துகிறேன். ஒவ்வொருத்தர் தக்காளி ப்யூரி வாங்கி வைச்சுக்கறாங்க. அதையும் தக்காளி நிறையக் கிடைக்கும் சமயங்களில் தோல் நீக்கிச் சாறு எடுத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கெட்டியாக ஆனதும் ஆற வைத்து எடுத்து ஃப்ரீசரில் வைத்து விடுவேன். (இப்போல்லாம் நாங்க ரெண்டு பேர்தான் என்பதால் செய்வதில்லை) இதைத் தேவைப்படும்போது பயன்படுத்திக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா முதல்முறையா அதுவும் எனது சமையல் குறிப்புக்கு வந்திருக்கீங்க :)
   குறித்துக்கொண்டேன்க்கா ..அதே போல் செய்து வச்சிடறேன் ..இங்கே தக்காளி பாஸ்ட்டாக்கு யூஸ் செய்ர சாஸ் கூட ஆர்கானிக் தான் நான் பயன்படுத்துவேன் இதே போல செய்து பார்க்கிறேன் மிக நன்றிக்கா .
   இங்குள்ள தக்காளி எப்பவும் பால் உருட்டி விளையாடலாம் அவ்ளோ கடினமான தோல் .என் சமையலில் ப்ரிட்ஜில் தக்காளி இல்லாத நாளே இல்லை :) ஆனா மகளுக்கு அந்த தோல் பிடிக்காது அதனால் பியூரியா செய்து வச்சா அவ கண்டுபிடிக்க மாட்டா நன்றிக்கா

   Delete
  2. ஏஞ்சல் நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க....அதே போல நீங்க புலி பேஸ்ட் கூட செய்து வைச்சுக்கலாம் உங்களுக்கும் தெரியாம இருக்காது. புளியை குக்கரில் வைச்சு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் விட்டு எடுத்து ஆறியதும் நல்லா பிழிஞ்சு எடுத்து பாட்டில்ல வைச்சு ஃப்ரிட்ஜுல வைச்சுட்டா அப்பப்ப யூஸ் பண்ணிக்கலாம்...ஹேண்டியா இருக்கும்...

   கீதா

   Delete
  3. ஆஹா !! நிறைய குறிப்புகள் வச்சிருக்கீங்க கீதா ,,தாங்க்ஸ் செய்றேன் இதுபோல

   Delete

 15. ஹலோ இப்படி ஒரு பதிவு போடப் போறேன் என்று சொல்லி இருந்தீங்க.....ஆனால் அதை போட்டுட்டு கம்னு இருந்தா எனக்கு எப்படி தெரியும் தகவல் சொல்லி அனுப்பி இருக்க வேண்டாமா? இப்ப ஸ்ரீராம் என்னோட பதிவிற்கு வந்து கருத்து சொன்ன போதுதான் எனக்கு தெரிஞ்சுது ஹும்ம்ம்ம் அதுக்குள்ள அதிரா வந்து அட்காசம் பண்ணிட்டு போயிருக்காங்க

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ :) பரவாயில்லை அதுக்குள்ளே உங்க ரெசிப்பி இங்கிலாந்தில் ஐரோப்பாவிலே மிடில் ஈஸ்ட்டிலே எல்லாம் பிரபலமாகிடுச்சே எவ்ளோ வியூஸ் தெரியுமா ரஷ்யா உக்ரேயின் கூட வந்து பார்த்தாங்க

   Delete

 16. நான் ஒரு நல்ல சுவையான் ரிசிப்பி போட்டால் அதை பண்ணுறேன் என்ரு சொல்லி ரிசிப்பையை கொலை பண்னிட்டேங்களே......ஆமாம் என்ன உங்க வூட்டுகாரர் இன்று சமைக்க மாட்டேன் என்று சொல்லி ஸ்டிரைக் பண்னியதால்தான் இந்த கிச்சன் களோபரமா என்ன?

  ஏஞ்சல் நான் பதிந்த ரிசிப்பையை செய்து பார்க்கப் போகிறேன் என்று சொன்ன முதல் நான் டிவியை ஆன் பண்ணி ப்ரேக்கிங்க் நீயூஸ் ஏதும் வரப்ப போவதுதா என்று நாள் முழுவதும் கண் கொத்தி பாம்பா பார்துக் கொண்டிருந்தால் இங்கே அம்மா சமியத்து அதையும் படம் எடுத்து பதிந்து இருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. அந்த பாவ்பாஜியை சேர்த்திருந்தா என் தொண்டை எரிஞ்சி போயிருக்கும் :) எவ்ளோ ஆசை எனக்கு உங்க ஐடியா புரிஞ்சிபோச்சி எப்படியாவது என்னை க்ளோஸ் பண்ண பிளான் :) கர்ர்ர்ர் அதுவும் கெட்சப் எனக்கு மகா எதிரி
   அவர் ஸ்ட்ரைக் பண்ணலையே அவர்தானே காய்கறி வெட்டி தந்தார் எப்பவும்போல

   Delete
 17. ஹலோ நான் மும்பை ஸ்டைல் தக்காளி சாதம் ரிசிப்பி போட்டால் அதை பார்த்துவிட்டு நீங்க செளத் இண்டியன் ஸ்டைலில் தக்காளிசாதம் பண்னுவது பற்றி பேசுறீங்களே

  ReplyDelete
  Replies
  1. அய் :) அதனால்தானே ஏஞ்சல்ஸ் டச் னு தலைப்பு வச்சேன்

   Delete
 18. இப்ப எந்த டிப்சை நான் ஃபாலோ பண்ணனும்?!

  ReplyDelete
  Replies
  1. இரண்டையுமே செய்து பாருங்க ராஜி இது லண்டன் சவுத் ஸ்டைல் ரெசிப்பி அது அமேரிக்கா நார்த் ஸ்டைல் ரெசிப்பி :))))))))))

   Delete
  2. ஹஹஹ் பேரு சூப்பர்!!1

   Delete
 19. வித்தியாசமான பனீர் சேர்த்த தக்காளிசாதம். பார்க்க நல்லாயிருக்கு. இங்கு பனீர் மார்க்கெட்டில் இல்லை.தமிழ்கடையிதான் இருக்கு.அது வாங்க எனக்கு விருப்பமில்லை.நானே செய்வதுதான். டோபு கிடைக்கும். இந்த வெங்காயம்தான் நானும் பாவிக்கிறேன்.
  இங்கு சிலபேர் tomoto ketchup சேர்த்து சமைப்பாங்க அஞ்சு. பனீர்,காளான் கறிக்கு சேர்ப்பாங்க. எனக்குFrench fries ல தொட்டுக்க தந்தாலே சாப்பிடமாட்டேன்.இங்கு fleisch tomote ஒன்னு இருக்கு நல்ல திக் ஆ இருக்கும்.
  டேஸ்ட் என்று சொல்லியிருக்கிறீங்க செய்துபார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) டோபு நானா சமைச்சதில்லை நல்லா இருக்குமா ?..இது ரொம்ப டேஸ்டியா இருக்கும் கட்டாயம் செய்து பாருங்க.
   பன்னீர் நான் stir fry போலத்தான் செய்வேன் எல்லா காய்கறிகள் சேர்த்து மசாலாவும் போடாம கொஞ்சூடு உப்பு கடைசில கொஞ்சம் சீஸ் அவ்ளோதான் :)

   Delete
 20. ஆஹா மதுரையின் ரெசிப்பி இங்கே நான் லேட்டு ஆறிப்போச்சோ..நிறைய கும்மி போல தோணுது மதுரை தலை பூனைத் தலை நெல்லை ஸ்ரீராம் எல்லாரும்வ் வந்தாச்சு...ம்ம்ம் நான் லேட்டு,,டைனிங்க் டேபிள்ல!!

  ஏஞ்சல் பாவ் பாஜி மசாலா எம் டி ஆர் ப்ராண்டுமா அலர்ஜி ஆகுது?? அங்கு கிடைக்கலையோ. அப்புறம் கெச்சப் பதிலா வீட்டுலயே தக்காளி வென்னீரில் போட்டு தோலுரித்து அரைச்சு செய்யலாமே உங்களுக்குத் தெரியாததா..!!!

  அருமை. நிஷா ஒரு டிப்ஸ் கொடுத்துருந்தாங்க மதுரையின் தளத்தில்...பனீரைப்
  எண்ணையில் லைட்டாக வறுத்தும் போடலாம்னு...நான் நாம் வழக்கமாகச் செய்யும் தக்காளி சாதத்தில் செய்ததுண்டு ஆனால் மதுரையின் ரெசிப்பி புதுசு இனிதான் செய்யணும்...

  உங்க ஸ்டைலும் சூப்பர்தான்....யும்மி!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..பாவ் பாஜி அலர்ஜி இல்ல ஆனா காரமாயிருந்தது முந்தி வாங்கினப்போ ....எஸ் கீதாக்கா சொன்ன மாதிரிதான் செய்யப்போறேன் இனிமே ..இன்னிக்கும் பாவ் பாஜி மசாலாவோட சேர்த்து மீண்டும் செய்தாச்சு படமும் அடுத்த பதிவில் வரும் :)

   Delete
 21. பெட்டியில் பூட்டி வைத்ததை ஒரு கோப்பி எடுத்து இங்கு பிரசுரித்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) உண்மையில் நானா ஒரு ஸ்டாம்ப் பேப்பரை க்ரியேட்டிவா செய்து இங்கு இணைக்க நினைச்சேன் :) ஆனால் ..என் டச் இருந்ததால் ரெசிப்பியில் நம்ம தப்பிக்க சான்ஸ் கொஞ்சம் இருக்கு ..அதுக்கென்ன கவலை இன்னிக்கு பாவ்பாஜி மசாலாவாங்கி அப்படியே அவரது ஒரிஜினல் ரெசிபியை செய்திட்டேன் .உங்க ஐடியாவை செயல்படுத்தப்போகிறேன் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

   Delete
  2. ஆனால் ..என் டச் இருந்ததால் ரெசிப்பியில் நம்ம மதுரை தமிழர் தப்பிக்க சான்ஸ் கொஞ்சம் இருக்கு ..என்று வாசிக்கவும் :)
   டைப்பும்போது அதிரா பக்கம் ஊருணி கமெண்ட் நினைவில் வந்ததில் வார்த்தை விடுபட்டது :)

   Delete
 22. ஏட்டிக்குப் போட்டிப் பதிவா என் வீட்டில் விருந்தினர்கள் வந்தால் என்மனைவி தக்க்காளி சாதம் செய்வாள் சாம்பார் ரசம் என்று வேண்டாமே ஒரே சாதம் பலரும் விரும்பும் ரெசிபி

  ReplyDelete