அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/2/17

Loud Speaker ...46 தேம்ஸில் விழுந்த பூஸார், British Currency


இன்றைய முக்கிய செய்தி :) தேம்ஸில் விழுந்த பூஸார் ,
                                                                       


இங்கே லண்டன் பகுதிகளில் தேம்ஸ் நதி  ஓரம்  நிறைய அலுவலகங்கள் அமைந்திருக்கும் ..அந்த அலுவலகங்களில் எலி தொல்லைகளை தடுக்க பூனைகளை வளர்ப்பார்கள் ..லண்டனில் எலியா !! என எனக்கும் இங்கே வந்த புதிதில் ஆச்சரியமாகத்தான் இருந்தது .இங்கே கரப்பான் பூச்சி கூட இருக்காம் !! ஆனால் நான் பார்த்ததில்லை
.எங்கள் பிரதமரின் வீட்டிலேயே எலிகளை கண்ட்ரோல் செய்ய ஒரு பூசாரை  கொண்டு வந்தார்கள் அவர் இன்னும் அங்கேதான் இருக்கிறார் :) ..இந்த RoDMA  நிறுவனத்துக்கு சொந்தமான பூனை பெயர் FELIX ..இந்த படத்தில் இருப்பவர்
                                                                         
மேதினம் அன்று இந்த பூனையை இன்னோர் பூனை துரத்தி தேம்ஸ் நதியில் தள்ளி விட்டிருக்கு :)) அப்போ அந்த வழியே வந்த ஒருவர் விறுவிறு என சென்று குனிந்து நீரில் விழுந்த பூனை ஃபீலீக்ஸை தூக்கி எடுத்து நிலத்தில் விட்டிருக்கிறார் அது சிசிடிவியில் பதிவாகி இன்று பிபிசி நியூஸில் காலை  செய்தியில் சொன்னார்கள் ..பூனைக்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம் பத்திரமா இருக்காம் .
நீரில் விழுந்த பூனையை காப்பாற்றியவர் தான் இன்னிக்கு டாப் ஹீரோ லண்டன் முழுதும் :)

காணொளி தெரியல்லைனா இந்த சுட்டியில் பார்க்கவும் 

                                                                           


                                                                             
ஸ்கூல் அபராதத்தை நாணயங்களில் கட்டிய தந்தை 


இங்குள்ள பள்ளிகளுக்கு 7 வாரம் தொடர்ந்து பள்ளிக்கூடம் இருந்தா அதன்பின்னர் 10 நாளோ அல்லது இரண்டு வாரங்களோ விடுமுறை தருவாங்க .பெரிய சம்மர் விடுமுறை ஜூலை இறுதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பெரிய நீண்ட விடுமுறை ..ஆனால் அப்போ வெக்கேஷன் செல்வதென்றால் அதிக செலவாகும்னு இங்குள்ள பெற்றோர் ஏப்ரல் மற்றும்  பிப்ரவரி டிசம்பர் கிடைக்கும் விடுமுறைகளில் துபாய் எகிப்து ஸ்பெயின் என்று அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வார்கள் ..இப்படிப்பட்ட பயணங்கள் 3 வாரம் எடுக்கும் திரும்ப வர பள்ளிக்கூடங்களில் இப்படி அதிகப்படியா சொல்லாமல் விடுமுறைக்கு போனா அபராதம் கட்டணும் ...ஒரு பிள்ளைக்கு 60 பவுண்டுகள் ..நம்மூர் கணக்குப்படி ஐந்தாயிரம் இந்திய ரூபாய் வரும் ..ஸ்வான்ஸீ பகுதியை சேர்ந்த ஒரு தந்தை தன்னிடமுள்ள 1 மற்றும் 2 பென்னி நாணயங்களை 60 பவுண்ட் அளவுக்கு சேர்த்து வாளியில் சுமந்து சென்று கவுன்சிலில் அபராதத்தை கட்டியுள்ளார்..
நம்ம ஊர்ல ஒரு பைசா ரெண்டு பைசாவெல்லாம் இப்போ புழக்கத்தில் இல்லை ஆனால் இங்கே இருக்கே ..:)

                                                                                 இது எங்க ஊர் புது பிளாஸ்டிக் ஐந்து பவுண்ட் தாள்கள் ..இதை மடக்கலாம் சுருட்டலாம் வழுவழுப்பா இருக்கு .
எங்க பிரிட்டிஷ் மகாராணி உருவம் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது ..
                                                                              

                                                                            


.இதில் 4 நோட்டுத்தாள்களில் அதில் ராணியின் படத்தின்  ஊடே
ஜென் ஆஸ்டனின் படம் உள்ளதாம்    ஆங்கில எழுத்தாளர்  ஜேன்  ஆஸ்டனின் உருவம் ENGRAVE செய்து பொறிக்கப்பட்டிருக்காம் 
இந்த பிளாஸ்டிக் பாலிமர் நோட்டுக்கள் நீடித்து உழைக்குமாம் .
ஆனா இதில் TALLOW எனும் மிருக கொழுப்பை சேர்த்துள்ளதால் வீகன்ஸ் மற்றும் வெஜிடேரியன்ஸ் மிகுந்த கோபமடைந்தார்கள் ..
இந்த டாலோ மெழுகுவர்த்தி பிளாஸ்டிக் பைகள் சோப்பு ஆகியவற்றிலும் சேர்ப்பார்களாம்  ஆகவே  இதற்கு மாற்றாக   வேறு முறையை கண்டுபிடிப்போம்னு பாங்க்  ஒப் இங்கிலாந்து அவங்களை சமாதானப்படுத்தியிருக்கு ..எங்க ஜெசி அஞ்சு பவுண்ட் தாள்களை கிட்ட நெருக்கி காட்டினா ரொம்ப கியூரியஸ் ஆவா !! முதலில் எனக்கு விஷயம் தெரியலை அப்புறம்தான் இந்த அனிமல் கொழுப்பு அதில் இருப்பதே பூனைகள் அதை விரும்புதுன்னு கண்டுகொண்டேன் ..


                                                                            


அந்த தாள்களை கொடுத்தா  ஒரு தாளுக்கு 50,000 பவுண்டுகள் கிடைக்கும் .இதுவரை மூன்று தாள்கள் கிடைத்துவிட்டது இன்னும் ஒரே ஒருதாள் சர்க்குலேஷனில் இருக்கு ..யாரந்த அதிர்ஷ்டசாலின்னு தெரில :) 


இது எங்க நாட்டு புது ஒரு பவுண்ட் நாணயம்  :)


                                                                                 

இங்கிலாந்தில் திடீர்னு எதுக்கு புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை அறிமுகப்படுத்தினாங்கன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க :) அவ்வளவு போலி ONE பவுண்ட நாணயங்கள் புழக்கத்தில் இருக்காம் !! அதை கட்டுப்படுத்த வழி தெரியாம அரசாங்கம் புதிய 12 சைட்ஸ் உள்ள ஒரு பவுண்ட் நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ..இப்போ சேர்த்து வச்ச பழைய ஒரு பவுண்டையெல்லாம் செலவழிச்சிட்டிருக்கேன் :) இங்கே வங்கியில் கொடுக்கணும்னா அதுக்குன்னு ஸ்பெஷல் பிளாஸ்டில் குட்டி பைகள் இருக்கும் ஒரு நாளுக்கு 5 பிளாஸ்டிக் பைகள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள்  மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் .


                                                                             

                            அடுத்தது ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் பதிவில் சந்திப்போம் :)


                                                         ====================


63 comments:

 1. என்னாதூஊஊஊஊஊஉ தேம்ஸ்ல பூஸார் விழுந்திட்டாராஆஆஆஆ?:) தள்ளி விட்டது ஆரூஊஊஊ?:) இப்போ எனக்கு தள்ளி விட்டவரைத்தான் தெரிஞ்சாகோணும்... எனக்கு இங்கின ஒருவரில் சந்தேகமாகவே இருக்கு:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஆஹா :) நானும் அந்த மெகா தைரியசாலியை பார்க்கணும் யாரது ???

   Delete
 2. இங்கு இந்த அபராதம் கட்டும் முறை இல்லை அஞ்சு, லெட்டர் கொடுத்து பெர்மிசன் கேட்டால் ஓகே.

  ///யாரந்த அதிர்ஷ்டசாலின்னு தெரில :)///
  என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:) நான் தான் நல்லநேரம் வரட்டுமென்று லொக்கரில் வச்சிருக்கிறேன்ன்.. இப்போ டமில் மனத்தில்:) மகுடம் சூட்டியிருப்பதால்ல்... அநேகமாக அந்த 50, 000 நேக்குத்தான்:).. லோன் வேணுமெனில் இப்பவே அப்பிளிகேசன் போட்டு வையுங்கோ:)..

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஈஸ்டர் விடுமுறைக்கு 14 நாள் லீவுக்கு ஒரு மாதம் வெகேஷன் போயிருக்காங்க நிறைய பேர் :) அபராதம் கட்டிட்டு போறோம்னு கூலா சொல்றாங்க

   Delete
  2. ஹையோ பூனை இது பிரிட்டிஷ் பவுண்டுக்கு மேடம் :) ஸ்கொட்டிஷ் பவுண்டுக்கு வெவ்வே

   Delete
 3. யேஸ்ஸ் புது வன் பவுண்டுகள் பளபளா என மின்னுது.. ஒரேயடியாகக் குவிக்கிறார்கள்.. பழைய பவுண்டுகளைக் காண்பது கஸ்டமாஅக இருக்கு வரவர.

  ///அடுத்தது ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் பதிவில் சந்திப்போம் :)///
  ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா இம்முறை தப்பிட்டேன் ஜாமீஈஈஈஈ:) அஞ்சுவின் போஸ்ட் வந்திருக்கு எனப் பார்த்தாலே நெஞ்சு பூஸுக்குப் புஸுக்கு என அடிக்குதே:).. என்ன சமையலோ என நினைச்சு:).

  ReplyDelete
  Replies
  1. எனக்கொரு டவுட் ..இங்கே கடைல ஸ்கொட்டிஷ் நோட்ஸ் வாங்க மாட்டேங்கறாங்களே அங்கே எப்படி ?

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர் :) நான் இப்போ சமையல் பிரபலமாகும் :)

   Delete
  3. English people பலருக்கு பொது அறிவே இல்லை அஞ்சு, இங்கிலண்ட் கறண்சி தவிர வேறெதுவும் தெரியாது அவர்களுக்கு. இங்கு அப்படியில்லை, சாதாரணமான புழக்கமாகவே இங்கிலண்ட் அண்ட் ஸ்கொட்டிஷ் கரண்சி பாவனையில் இருக்கும் மிக்ஸ்ட் ஆக.

   Delete
  4. ஆமாம் அதிரா ..நீங்க சொல்றது அவ்வளவும் உண்மை ..இன்னும் ஆதிகாலத்து சிஸ்டம்ஸ் தான் பலர் ..கம்பியூட்டர் கூட operate செய்ய மாட்டாங்க ஆன்லைன் பாங்கிங் தெரியாது பக்கத்துக்கு நாட்டுக்கு கூட பார்க்காத பலருண்டு

   Delete
 4. //ஒரு நாளுக்கு 5 பிளாஸ்டிக் பைகள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள்.//

  ?????

  மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். ............. Repeated

  ReplyDelete
  Replies
  1. அது கோபு அண்ணா ,,சின்ன பிளாஸ்டிக் பைகள் இங்கே வங்கிகளில் தருவாங்க அதில் 20 பவுண்ட் வேல்யூவுக்கு ஒரு பவுண்ட் நாணயங்களை நிரப்பி சீல் செய்து தரணும் ஒரு நாளில் அப்படி ஐந்து பிளாஸ்டிக் பைகளை மட்டுகே அவர்கள் அக்ஸட்ப் செஞ்சு அதற்கான பணம் 20 பவுண்டை ரூபாய் தாள்களாக தருவாங்க

   Delete
  2. இப்போ அந்த பிளாஸ்டிக் என்வலப் படத்தையும் இணைத்திருக்கிறேன்

   Delete
  3. //இப்போ அந்த பிளாஸ்டிக் என்வலப் படத்தையும் இணைத்திருக்கிறேன்//

   பார்த்தேன். சந்தோஷம். நல்ல தரமானதாக இருக்கும் எனத் தெரிகிறது.

   Delete
  4. ஆமாம் அந்த பிளாஸ்டிக் பைகள் ரியூசபிள்

   Delete
 5. வித்யாசமான அழகான பதிவு.

  மிகவும் நியாயமான நா-ண-ய-மா-ன பதிவு.

  காணொளி அருமை.

  படங்களெல்லாம் அழகு.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா பதிவை ரசித்து வாசித்தமைக்கு நன்றிகள்

   Delete
 6. பூனை விழுந்தால் இப்படி காப்பாற்றலாம் ஆனால அதிரா விழுந்தால் ???

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) நானா விழுந்து புரண்டு சிரிக்கிங் இந்த கமெண்டுக்கு :) அதிராவை யாரவது தள்ளி விடணும் இந்த பீலீக்ஸை இன்னோர் பூஸ் தள்ளிவிட்ட மாதிரி :)
   அப்படி விழுந்தா நிலநடுக்கம் ஏற்படும் அதனால் யார் தள்றதா இருந்தாலும் எனக்கு அட்வான்ஸ்ட் நோட்டீஸ் குடுங்க நான் வெளிநாட்டுக்கு வேற எங்காச்சும் போய்டறேன்

   Delete
  2. அதிரா விழுந்தாத்தானே????? காப்பாற்றுவீங்க ஹாஆ ஹாக்க்க் ஹாஆஅ:).

   Delete
 7. அதிரா விழுந்தால் நதியில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியே வந்து ஊரெல்லாம் வெள்ளமாகிவிடுமோ?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அப்போ அந்த தண்ணில இருக்க மீனெல்லாம் கூட கஷ்டபடும் அதனால் பெட்டர் கிணத்தில் தள்ளிடுவோம்

   Delete

  2. கிணறு சிறியதாக இருக்குமே அதுகுள்ள அவங்க நுழைய முடியுமா?

   Delete
  3. அதெல்லாம் தெரியாது எப்படியாவது மூட்டை கட்டியாவது தள்ளிடுவோம்

   Delete
  4. ஹலோ எச்சூச்ச்மீ , நான் தனியே எங்கேயும் கால் வைக்க மாட்டேன்ன்ன், துணைக்கு யாரையாவது கைல இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுவேன்... அதனால என்னைத் தள்ள இருப்போர் முதல்ல உங்களுக்கு லைவ் இன்சூரன்ஸ் எடுத்திடுங்கோ பிளீஸ்ஸ்:)...

   Delete
  5. ஹஹஹஹ.... மதுரை சகோவின் கமெண்ட்ஸ் அதுக்கு உங்கள், அதிரா பதில்கள்....செம...சிரிச்சு முடிலப்பா....

   Delete
  6. பூசார் வெரி flexible..ரொம்ப...சமர்த்து.. ஸோ கினருள்....ஈஸி..ஹஹஹ..ஆன பூசார் நீச்சலில் சாம்பி யான் அல்லோ..சரிதானே அதிரா..ஹிஹி

   கீதா

   Delete

 8. கடந்த ஜனவரியில் இங்கு ஒருத்தர் A Virginia man used 300,000 pennies to pay sales tax அவர் கொடுத்த காசை எல்லாம் இரவு ஒரு மணி வரை எண்ணினார்கள்

  ReplyDelete
  Replies
  1. அம்மாடியோவ் !! பொல்லாத வில்லங்கம் பிடிச்ச ஆளாயிருப்பாரோ ..இங்கேயம் இப்படிப்பட்ட கூத்துக்கள் நிறைய இருக்கு ..இந்த 60 பவுண்ட் பைன் ஸ்கூல் நேரத்தில் எகிப்துக்கு போனதுக்காம் .அப்பா வேணும்னே செஞ்சிருக்கார் :)

   Delete
 9. சமையல் குறிப்பு விளம்பரம் எந்திரன் படம் ரீலீஸ் போல விளம்பரம் அதிகமாக இருக்கே?

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ :) சும்மாதேன் ..இப்போல்லாம் நான் நல்லாவே சமைக்கிறேன்னு என் கணவர் பாராட்டு பத்திரம் கொடுக்கறார் :) அதான் தைரியமா ட்ரெய்லர் ஓட்டறேன் :)இனிமே வீடியோ டீஸரும் வரக்கூடும்

   Delete
 10. அந்த பவுண்ஸ் அதிஸ்ரசாலி யாரோ[[! ஆனாலும் தலைப்பு சூப்பர்[[ நானும் அதிரா இந்த வாட்டி நிஜத்தில் தேம்ஸ்சில் பாகுபலிக்கு டிக்கட் கிடைக்காமல் குதித்துவிட்டாரோ என்று ஓடிவந்தேன்[[

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் ரொம்பத்தான் ஆசை எல்லோருக்கும்:).

   Delete
  2. ஹாஹாஆ :) வாங்க நேசன் நாமெல்லாம் எவ்ளோ ஆவலா இருக்கோம் இல்லையா :) இந்த பதிவு போட்ட வேகத்தில் 125 வியூஸ் 1 மணிநேரத்தில் அப்போ எத்தினி பேர் ஆவலா இருக்காங்கன்னு பாருங்க

   Delete
  3. ஹேய் அந்த பாகுபளியே... அதிரா தான் இது தெரியாதா...

   கீதா

   Delete
 11. காணொளியை இங்கேயே கண்டு ரசித்தேன். பூனையும் ஒத்துழைத்து அவர் கைகளுக்குள் வந்ததே..

  நான் தஞ்சையில் பள்ளியில் படிக்கும் காலத்தில் அமலராஜா என்கிற ஆசிரியர் இருந்தார். அவர் போடும் அபராதங்கள் விநோதமானவை. ஐந்து செல்லாத மூணு பைசா, இரண்டு தாமரைப்பூ படம் போட்ட இருபது பைசா, செல்லாத இப்படி. அதையும் உடனடியாக மறுநாளே கட்டவேண்டும். இல்லாவிட்டால் எணிக்கைக் கூடிவிடும்!

  "எங்க பிரிட்டிஷ் மகாராணி"...! :)))))

  இந்தியா பாணியில் புது நாணயங்கள் அறிமுகப் படுத்திட்டாங்க போல!

  ReplyDelete
  Replies
  1. //"எங்க பிரிட்டிஷ் மகாராணி"...! :)))))///

   ஆமா ஆமா அதிராட அம்மம்மா:)

   Delete
  2. ஆமாம் ஸ்ரீராம் ..இங்குள்ள பூனைகள் பைரவர் போலத்தான் பழகுவர் ..அவற்றுக்கு நன்கு தெரியும் ..இங்கே என்னமா ரோட் க்ராஸ் பண்ராங்க இந்த பூனைங்க உங்களுக்கு தெரியுமா முந்தி ஒருமுறை சொன்னேனே ஸ்ட்ரீட் cat bob ..அவன் இப்படித்தான் ரொம்ப க்ளெவர் ..

   Delete
  3. ஸ்கொட்டிஷ் தனியா போகணுங்கறாங்க அதனால் மஹா ராணி எனக்கு மட்டும் அம்மம்மா :)

   Delete
  4. இங்கே பழைய 5 பவுண்ட் தாள்கள் பஞ்சு போல காகிதம் அதைவிட இந்த பிளாஸ்டிக் தாள்கள் நல்ல இருக்கும்னு மாத்திட்டாங்க ..ஒரு பவுண்ட் நாணயத்தில் இங்கிருப்பதில் பாதிக்குமேல் போலி நாணயங்களாம் :) சிரிப்பு வருதில்ல

   Delete
  5. பூனைகள் அங்கு ரொம்வ வித்தியாசமா இருக்காங்க...இங்கு பொல் இல்லை...சூழல் தான் காரணம் போல.....

   கீதா

   Delete
 12. காணொளியில் தெரியும் இந்தக் குளத்தில்தான்... மன்னிக்கவும் நதியில்தான் விழப்போவதாக அதிரா அடிக்கடி பயமுறுத்துவார்கள் இல்லை?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) இது நதியை ஊருக்குள் கொஞ்சம் திருப்பி விட்டிருக்கினம்:)...

   Delete
  2. ஸ்ரீராம் மற்றும் மற்றவர்களுக்கும். பொதுவா நாம இந்தியால பார்க்கிற நதிகள், பெரிய கரைகளுடனும், மணற்பரப்புடனும் இருக்கும். தண்ணீர் குறைவா இருக்கிற காலங்கள்ல, ஆற்று நடுவில் சென்று மணற்பரப்பில் அமர்ந்துவிட்டு வரலாம் (நான் சொல்வது 80கள்ல. அதுக்கு அப்புறம்தான் மணலை வாரி வாரி எடுத்து பள்ளமாக்கிட்டாங்களே தாமிரவருணில). இப்போகூட ஸ்ரீரங்கம் காவேரில பார்க்கலாம்.

   ஆனால், பல நாடுகள்ல, நதி என்று அவர்கள் குறிப்பிடுவது கிட்டத்தட்ட இரண்டு கரைகளிலும் சிமென்ட் வைத்துக்கட்டிய ஓடையின், பெரிய வடிவம். சில நதிகள்லாம் (அப்படி சொல்லப்படுவதெல்லாம்) 50 அடி அகலம்தான் இருக்கும், பெரிய ஓடைபோலத் தோன்றும் (பாரிஸ் சீன், மான்செஸ்டரில் பார்த்த நதி, தேம்ஸும்தான்-ஆனால் லண்டன்ல, கரைல அலையடிக்கும், மணற்பரப்பு கிடையாது, தாய்பேய்ல பார்த்த நதி போன்று பலவும்). இதுல ரொம்ப முக்கியமானது என்னன்னா, நம்ம ஊர் மாதிரி, நதி அங்க உள்ளவர்களுக்குச் சொந்தமில்லை, அதாவது, துணியைக்கொண்டு தோய்ப்பது, இஷ்டப்படி விழுந்து குளிப்பது போன்று. அது பொதுச் சொத்து. TRESPASS பண்ணக் கூடாது.

   நம்ம ஊர்லதான், பொதுச் சொத்து என்பதன் அர்த்தம், "எல்லோரும் நாசப்படுத்தலாம்" என்பது. அதனால்தான் கோவிலுக்குப் போய், பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தூணில் கையைத் துடைத்துவிடுகிறோம், குங்குமம் போன்றவற்றை ஏதாவது கார்னரில் தட்டிவிடுகிறோம்.

   Delete
  3. @நெல்லைத்தமிழன் நானும் ஜெர்மனிக்கு போனபுதிதில் இவர் என்னை ரைன் நதி பாக்க போறோம் ரெடியாகுங்கன்னு சொன்னார் ..நான் மணல் சிப்பி எல்லாம் இருக்கும்னு பெரிய எதிர்பார்ப்போடு போனேன் :) தண்ணீரில் போகணும்னா அந்த போட் ஹவுஸ்களை வாடகைக்கோ அல்லது டிக்கெட் எடுத்தோ தான் போக முடியும் ...எல்லா நதியிலும் டக்ஸ் ஸ்வான்ஸ் தாராளமா நீந்தும் நாம் மர நிழலில் பிக்நிக் பாய விரித்து இளைப்பாறலாம் .நான் வாக்கிங் போகும் canal வழியே இந்த நதிக்கு போட்டில் செல்ல ஒரு வாரத்துக்கு ரெண்ட் 750 பவுண்டுகள் ..போட் வீட்டினுள் நாமே சமைக்க தூங்க வசதியுண்டு ..இங்கே பொது சொத்துனா குப்பை போட்டவரை எடுத்து தொட்டியில் போடா வைக்கவும் நம்மக்குரிமையுண்டு ..நம்ம ஊர்ல ம்ஹூம்

   Delete
  4. @ஸ்ரீராம் :) ஹாஹா அதே தான் since 2010 நான் பார்க்கிறேன் பூனையின் இதே வசனத்தை .

   இங்கே நதிகள் ஓரம் இரண்டு பக்கமும் இப்படி ஆபீஸ்கள் பெரிய ரிவர் வியூ வீடுகள் அதுவும் சில இடத்தில ஒரு வீட்டின் வாசலிலிருந்து அடுத்த வீட்டுக்கோ கரைக்கோ குட்டி போட்டில் செல்லும் வசதி என உண்டு ..
   தேம்ஸ் சில பகுதிகளில் ஓடும் எங்க பக்கம் ரிவர் avon
   ஷேக்ஸ்பியர் சிட்டி பதிவில் போட்டிருப்பேன்

   லிங்க் தரேன்

   Delete
  5. http://kaagidhapookal.blogspot.com/2011/07/stratford-upon-avon.html

   Delete
  6. நெல்லையின் கருத்தை டிட்டோ சொல்கிறேன்....யெஸ்...நம்மூர்ல..நதிகள் படும் பாடு....சொல்ல முடியாது...ஏதோ நம் சொத்து போல...

   கீதா

   Delete
 13. எலியைப் பிடிக்கத் தெரிந்த FELIX நீச்சல் கற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ!..

  பாவம்.. இவனுக்கு (!) நீச்சல் தெரியாது என்பதைத் தெரிந்து கொண்டு தான்
  நதியில் தள்ளி விட்டிருக்கின்றான் வில்லன்!..

  வேறெதாவது ரகசியம் இருக்குமோ?..

  நமக்கு எதுக்கு ஊர் வம்பு!?..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) இருக்கக்கூடும் ஐயா ..அவரவர் எல்லையை தாண்டக்கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்காம் பூஸார் மத்தியில் :)

   Delete
 14. Replies
  1. மிக்க நன்றிங்க ..சகோ

   Delete
 15. ஐயையோ.. என் கிட்ட எத்தனை யூரோ, பவுண்ட் சில்லறைகள் இருக்குதுன்னு பார்க்கணுமே... எவ்வளவு காசு வேஸ்ட்டாகப் போகுதோ.

  உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஒரே காசு உள்ள BAGஐ, எடை பார்த்துத்தான் இவ்வளவு பணம் இருக்கிறது என்று குறித்துக்கொள்வார்கள். எண்ண மாட்டார்கள். எல்லா மதிப்புள்ள காசுகளையும் கலந்துவைத்தால், வேறு வழியில்லாமல் பிரிக்க வேண்டிவரும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நெல்லைத்தமிழன் அந்த பிளாஸ்டிக் பாக்குகளில் மேலே எழுதியிருக்கு பாருங்க ..எனக்கு ஒரு பவுண்ட் காயின்ஸ் சேர்ப்பதில் பேரார்வம் பர்சில் வைக்க முடியாதே ஹெவியாதலால் .எல்லாத்தையும் ஒரு பெரிய கோக் பாட்டில் உண்டியலில் சேர்த்து பாட்டிலை தூக்க முடியாம அங்கேயே வெட்டி எடுத்து கொஞ்சம் கொஞ்சமா இப்போ செலவழிச்சிட்டிருக்கேன் ..அக்டொபருக்குள் ஒரு பவுண்ட் கொடுத்து முடிக்கணும் .பழைய காகித 5 பவுண்ட் தாள்கள் மே 5 ஆம் தேதியுடன் நிறுத்திடுவாங்க கடைகளில் பெறுவதை ..போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கிகளில் கொடுத்த ஏற்றுகொள்வாங்க

   Delete
 16. விலங்குகளுக்கு நீந்தத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்த தேம்ஸ் குளம் ஐ
  மீன் நதி என்னவோ ஏதோ என்றிருந்தேன் அவ்வளவு பில்ட் அப் அதற்கு உங்கள்பதிவுகளில்

  ReplyDelete
  Replies
  1. பைரவர்கள் நல்லா நீந்துவாங்க சார் .பூனைகளுக்கு இயற்கையாவே நீரைக்கண்டா பயம் .ஷாலோவா இருந்தாலும் தப்பிச்சி கரையேறி இருக்கும் இது ஓரமெல்லாம் தடுப்பு கட்டியிருக்கு

   Delete
  2. thames river boat cruiseல போறதுக்கு என்றே நிறைய பேர் சொந்த போட் வாங்கி வச்சிருக்காங்க அதைவிட கரையோர வாட்டர் வியூ வேணும்னு வீடுகளை எவ்ளோ விலை கொடுத்தும் வாங்குவாங்க ஆகவே நீங்கள் இங்கே படத்தில் காண்பது ஒரு குட்டி மூலை மட்டுமே :)

   Delete
 17. படங்களெல்லாம் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மொகமட் .பதிவை ரசித்ததற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 18. பூனைதானே என்று நினைக்காமல் சற்று ரிஸ்க் எடுத்து காப்பாற்றியவர்க்கு ஒரு சபாஷ் போடலாம்.

  மேலும் தகவல்கள் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா ..ஆமாம் ரெண்டு நாளைக்கு அந்த பூனையை காப்பாற்றியவர் பற்றித்தான் லண்டன் பத்திரிக்கைகளெல்லாம் செய்தி போட்டார்கள் ...இங்கே இப்படி நிறைய பேர் இருக்காங்க நரி அப்புறம் சில சிறு விலங்குகள் இப்படி நீரில் விழுந்தா பொதுமக்கள் தைரியமா உதவி செய்வாங்க ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

   Delete
 19. பாவம் அந்தப் பூனை...காப்பாற்றியவருக்கு போக்கே....நல்ல மனிதர். காணொளி பார்த் தோம்...பூனையும்..ஒத்துழைத்து....சூப்பர்....
  ஓ அங்கும் நாணயம் டிமாநிட்டைசேஷனா...புது நோட்டு நல்லாருக்கே...இங்கும் அப்படி நோட்டு வந்தால் நல்லது...நோட்டு சீக்கிரம் கிழஞ்சி சொல்லாம ஆகுது....அதுவும் 10 ரூ சீக்கிரம் கிழியுது....

  ReplyDelete
 20. இங்கு ஸ்கூலிற்கு பைன் கட்டத்தேவையில்லை. லெட்டர் கொதுக்கனும் ஆனா அதிக நாட்களெனில் சொல்லனும்.பெர்மிஷன் எடுக்கனும், லெட்டர் கொடுக்கனும்.
  இங்கும் இந்த பூஸ் விவகாரம் சானலில் காட்டினார்கள் அஞ்சு.மாறி
  மாறி காட்டும்போது இவர் அன்றைய ஹீரோவாகிட்டார். இங்குதான் பிள்ளைகளை விட இவங்களுக்கு முக்கியத்துவம் அதிகமே. புது நோட்டு அழகா இருக்கு..

  ReplyDelete