அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/31/17

குழந்தையும் தெய்வமும்


 இன்று வாசித்த சில பதிவுகள் மனதில் பல நினைவுகளை மீட்டி எடுத்து விட்டன ..அதில் முதலாவது நம்ம அவர்கள் ட்ரூத் இந்த 
பார்வைகள் பலவிதம் ..குழந்தைகள் பற்றிய  பதிவு .
நமக்கு அசிங்கம் அருவருப்பாக தவறாக தோன்றுவது குழந்தைகளுக்கு சரி என்று தோன்றும் ஏனென்றால் அவர்கள் இறைவனின் மறுவுருவங்கள் .அவர்களுக்கு எதையும் நேருக்குநேர் சொல்ல தெரியும் உள்ளொன்று வைத்து புறம்பேசவும் தெரியாது..
அவர்களின் பார்வை தெளிவாக இருப்பதே இதற்க்கு காரணம் ..எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் வளர்ந்த பெரியவர்களால் அந்த குழந்தை மனதை மீண்டும் பெற சாத்தியமில்லை .


                                                                               


சம்பவம் ... 1,
----------------------

ஒரு சம்மர் ட்ரிப்புக்கு  வேல்ஸ் கடற்கரை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருந்தோம் .மொத்தம் 3 பேருந்து முழுதும் எங்கள் ஆலயம் மற்றும் சுற்றுவட்டார ஆலயங்களை சேர்ந்தவர்கள் பேருந்தில் இருந்தனர் ..அதில் ஒரு இந்தியர் தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தனது கையிலிருந்த சாக்லேட்டுகளை அள்ளி  தந்தார் ..ஒரு பெண் 8 வயதிருக்கும் வாங்கவேயில்லை .வேண்டாம் என சொல்லி விட்டது காரணம்  பின்னிருக்கையில் உள்ள தாயிடம்னு பெர்மிஷன்   கேட்கவும்  தாய் வேண்டாமென முறைத்துள்ளார்  .அந்த பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த  மற்றொரு பெண் 12 வயதிருக்கும் உடனே கையை நீட்டி வாங்கிவிட்டது ..8 வயது பெண்ணின் தாய் அந்த 12 வயது பெண்ணின் தாயை பார்த்து ..ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார் ..பன்னிரண்டு வயது பெண்ணின் தாய்க்கு கோபம் ..பிறகு சிறிது நேரம் கழித்து தனியே அந்த 12 வயது சிறுமியை அழைத்து தெரியாதோரிடமிருந்து உணவுப்பொருள் வாங்கக்கூடாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் எதற்கு வாங்கினாய் என கடிந்து கொள்ளவும் அச்சிறுமி சொன்னது //அம்மா நான்  அந்த சாக்லெட்டை உண்ணவில்லை ..நீங்கள் கவனித்தீர்களா ..ஒலிவியா வேண்டாம் என்றதும் அந்த அங்கிள் முகம் சுருங்கி போனது ஆனால் நான்  வாங்கி கொண்டதும் அவருக்கு மிகுந்த சந்தோஷம் ..எனக்கும் தெரியும் அம்மா நான்அதை  உண்ண  மாட்டேன் .just didnt want to offend him .என்றாள் .. அந்த ஒலிவியாவும் அந்த தாயின் குறுக்கீடு இல்லையென்றால் அந்த சாக்லெட்டை வாங்கியிருக்கும் என்று தோன்றுகிறது  ..
                                                                                    சம்பவம் 2...
சென்னை அண்ணாநகரில் ஒரு முகவரியை தேடி அலைந்து கொண்டிருந்தேன் கடும் வெயில் எனக்கு முன் ஒரு  கணவன் மனைவி சென்றுகொண்டிருந்தனர் அந்த ஆணின் தோளில்  ஒரு 1 வயதேயான குழந்தை அனைவரையும் பார்த்து சிரித்துக்கொண்டும் கையாட்டிக்கொண்டும் சென்றது அது யாரையெல்லாம் பார்த்து கையாட்டியதோ  அவர்கள் அனைவருமே தினக்கூலி கட்டிட வேலை செய்வோர் தள்ளுவண்டி வியாபாரிகள் நீர்மோர் விற்போர்... சற்று தூரம் நடந்து அந்த கணவன் மனைவி குழந்தை  அவர்களது பென்ஸ் காரில் ஏறி சென்றனர் .. அப்போது எனக்கு தோன்றியது இதே குழந்தை தனது வாலிப பிராயத்தில் இப்படி கள்ளம் கபடமில்லாமல் அனைவரையும் பார்த்து புன்னகைக்குமாவென !

சம்பவம் ..3 
ஒரு சிறுவன் எப்பவும் வாயில் விரலை வைத்து மற்றும் நூல் போன்றவற்றை  பல்லில் வைத்து விளையாடும் குணமுடையவன் அவனது தாய் எப்பவும் அவனிடம் . பாருப்பா தம்பி சும்மா பல்லை இப்படி நூலால் இழுத்தா ------  மாமாவைப்போல பல் விலகி பெரிய இடைவெளி கேப் வரும் அதுல ஈ கொசுவெல்லாம் போய் வரும் என்பார்  (அவனது மாமாவுக்கு முன்னம்பல்  ரெண்டும் நடுவில் பெரு விரல்  நுழையும் அளவு இடைவெளி )

ஒருமுறை குடும்பத்தினர் அனைவரும் இருக்கும்போது இவன் எப்பவும் போல வாயில் விரல் வைக்க தாய் முறைத்தார் குழந்தை சத்தமாக இல்லைம்மா நான் வாயில் விரல் வைக்கலை வைத்தால் ----மாமாவின் பல்லு மாதிரி ஆகிடும் எனவும் குடும்பமே சிரித்துவிட்ட்டது அந்த மாமாவும் அங்கிருந்தார் ..உதாரணம் கொடுக்கும்போது குழந்தைகளிடம் மிக கவனமாக இருக்க வேணும் என உணர்த்திய சம்பவம் இது ..


சம்பவம் ..4

ஒரு நண்பியும் நானும் மகளும் சூப்பர்மார்க்கெட்டுக்கு போனோம் .மகளுக்கு அப்போது 5 வயதிருக்கும் ..எனது நண்பி ஆந்திராவை சேர்ந்தவர் ஆனால் தமிழில் நன்கு பேசுவார் ..அவருக்கு ஒரு குணம் உண்டு யாரானாலும் நிக் நேம்ஸ் பட்டப்பெயர்  வைத்து குறிப்பிடுவார் .,பனைமரத்தான் ,கஞ்சா கருப்பு ,பூனைக்கண்ணன் ,குறுந்தாடி ,ஆப்ரஹாம் லிங்கன் ,பீட்டர் இங்கிலன்ட் (சும்மா தஸ் புஸ்ன்னு ஆங்கிலத்தில் பீட்டர் விடுவோராம் ) ஞானக்கிறுக்கன் ,பந்தாமுருகன் இப்படி நிறைய பெயர்களுண்டு அவர் டிக்ஷ்னரியில் .
இந்த பஞ்சாபி சீக்கியரை தலை என்று விளிப்பார் .அவர்கள் தலைப்பாகை அணிவதால் அந்த பெயராம் .
                                         
நாங்கள் பொருள் வாங்கிக்கொண்டு இருக்கும்போது ஒரு சீக்கியர் இவரது காலை  மிதித்து விட்டார் ..இவருக்கு வலி தாங்காமல்  உடனே என்னிடம் தமிழில்  //பாருங்க இந்த தலை காலை மிதிச்சிட்டு போறார் //என்றார் அதைக்கேட்ட என் மகள்  குடுகுடுவென வாசலுக்கு ஓடி  ஸ்டாப் என்று சொல்லி அவரது காலை இரண்டு நொடி உற்று பார்த்து நத்திங்ன்னு சொல்லிட்டு வந்தா ..அந்த சீக்கியருக்கும் புரியலை ..பிறகு மகள்  என் நண்பியிடம் ஆன்ட்டி  அது ஹெட்(head ) இல்ல full body தான் ..அது ஒரு தாத்தா எனவும் ,நண்பிக்கு  வெட்கம் தாங்கலை :) ஹெட் என்றால் தலை மட்டும் என்று நினைச்சிருக்கு குழந்தை :)..அன்றிலிருந்து நண்பி மிக கவனமாகவே பேசுகிறார் :)


             இத்துடன் நினைவுகள்  தற்சமயம் நிறைவுபெற்றது மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் 
..
                                                    ***********************

61 comments:

 1. எனது பதிவை படிப்பதன் மூலம் உங்களுக்கு புதிய பதிவு எழுத ஐடியா கிடைப்பதால் நீங்கள் எனக்கு ராயல்டி செலுத்த வேண்டும் நான் அதிகமாக வசூலிக்க மாட்டேன் ஜஸ்ட் நீங்க அதிராவிடம் இருந்து பெற்ற வைர நெக்லஸை மட்டும் எனக்கு அனுப்பிவைத்தால் போதும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க :) ஹாஹா :) அந்த நெக்லஸ் மட்டுமில்லை அந்த வீடு சாவியையும் பக்கத்தில் ஆற்றிலோடும் நீர்மூழ்கி கப்பலையும் உங்களுக்கே தரேன் :)

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் நகைகளை நான் தேம்ஸ் இன் நடுப்பகுதியில் குழி தோண்டிப் புதைச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:).. முடிஞ்சால் மூக்கைப் பொத்திக்கொண்டு போய் எடுக்கவும்:)... ஐ மீன் மூச்சைப் பிடிச்சுக்கொண்டு:)

   Delete
  3. OMG....இன்னும் வைர நெக்லஸ் பஞ்சாயத்து முடியலையா.....ஹஹஹ

   கீதா

   Delete
 2. அனைத்து சம்பவமும் அருமை அதில் இரண்டாவது மனதை தொட்டது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் !! எனக்கே பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது ..அந்த தொழிலாளிகள் அழுக்கு உடையுடன் இருந்தாங்க அது வளர்ந்த பெரியவங்க கண்ணுக்கு தெரியும் அந்த மழலைக்கு அழுக்கு தெரியலை பாருங்க அதுதான் குழந்தை

   Delete
  2. ///இரண்டாவது மனதை தொட்டது//

   வெளிப்பக்கமாகவா இருக்கு, ட்றுத்துக்கு மனது:).. அஞ்சு வாறீங்களா நாங்களும் போய்த் தொட்டுப்பார்த்திட்டு வருவோம்:).

   Delete
 3. சம்பவம்-1 ..... 12 வயது பெண்ணின் செயலும் அவள் சொல்லுவதும் மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது.

  சம்பவம்-2 ..... அந்த ஒரு வயது குட்டிக்குழந்தையின் செயல் அழகோ அழகு ! :)

  சம்பவம்-3 ..... உதாரணம் கொடுக்கும்போது குழந்தைகளிடம் மிக கவனமாகத்தான் இருக்க வேண்டும். மிகச்சரியே. இல்லை நமக்கே தர்ம சங்கடமாகிவிடும்.

  சம்பவம்-4 ..... உங்களின் மகளின் செயல் படிக்க சிரிப்பாக உள்ளது. கெட்டிக்கார சுட்டிப்பெண்ணாக இருந்து இருக்கிறாள் .... அப்போதே :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) ஆமாம் இக்கால பிள்ளைகள் அனைவருமே படு சுட்டி ..எதை சொன்னாலும் சட்டென பிடித்துக்கொள்ளுவார்கள் ..பேசும்போதும் மிக கவனமுடன் பேசணும் அவர்களுடன் :)
   ஹாஹா அந்த தலை மேட்டரிலிருந்து அந்த நட்பு யாரையும் கிண்டல் செய்வதை குறைத்து கொண்டார் :)
   வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
  2. http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_9035.html
   சொன்னதைச் சொல்லுமாம்...


   நவராத்திரி முதல் நாள், என்
   ஒன்றரை வயது அருமைப்
   பேத்தியிடம் சொன்னேன்:
   “கொலு பொம்மைகளைத்
   தொடாமல் பார்க்கணும்” என்று!

   அவள் அடுத்த பத்து நாட்களும்
   அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்
   கொலு பார்க்க வந்த
   பெரியவர்கள் அனைவரிடமும்.

   Delete
  3. http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_07.html
   புலிக்குக் கொடுத்த முத்தம் !
   -=-=-=-=-

   முதன் முதலாக
   ஐந்தும் மூன்றும் எட்டு என்று

   சரியாகச் சொன்ன
   என் குழந்தையை

   ”கணக்கில் நீ ‘புலி’ “ என்று சொல்லி
   முத்தம் கொடுத்துப் பாராட்டினேன்

   ”அப்பா ..... எனக்கொரு
   சந்தேகம்” என்றது

   ”சந்தேகம் எதுவாகினும்
   தயங்காமல் கேள்” என்றேன்

   ” ‘புலி’ க்கு கூட கணக்குப்
   போடத் தெரியுமா?” என்றது.

   Delete
  4. //அவள் அடுத்த பத்து நாட்களும்
   அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்
   கொலு பார்க்க வந்த
   பெரியவர்கள் அனைவரிடமும்.//


   அழகும் இனிமையும் இல்லையா மழலைகள் .அழகு செல்லம்

   Delete
  5. ஹாஹாஆ :) எப்படி இருந்திருக்கும் உங்களுக்கு
   metaphors போல சொல்லும்போது வசமா மாட்டிப்போம் வாண்டுகளிடம்

   Delete
 4. இன்று ஒருநாளில் ஒன்பதுபேர் புதுப்பதிவுகள்.. மீ அங்கொரு கால் இங்கொரு கால் என ஓடித்திரிகிறேன்ன் கர்ர்:).சில நாட்ட்களில் எப்பதிவும் வராது... ச்ச்ச்சும்மா எட்டிப்பார்த்திட்டு ஓடுவேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. இல்லைஅதிரா இங்கே ஸ்கூல் ஹாலிடேஸ் ஆரம்பிக்க போது சீக்கிரமா .நாங்க வெகேஷன் போறோம் அதான் கிடைச்ச நேரத்தில் போஸ்ட் போடறேன்

   Delete
 5. சம்பவம் 1- அந்த 12 வயதுக் குழந்தையின் அம்மா மட்டும் என் கையில் மாட்டினா:) அவ்ளோதேன்ன்ன்:).. அவவின் படமேதும் இருப்பின் எனக்கு அனுப்பி வையுங்கோ அஞ்சு:)ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. இந்த வருஷமும் ட்ரிப் போறோம் அவருக்கு தெரியாம ஒரு படம் எடுத்து மயில்கிட்ட அனுப்பறேன் :)
   எதுக்கு அவர் என்ன செஞ்சார்னு தேடறீங்க :)))))))))))

   Delete
  2. பிள்ளையைப் பார்த்து எதுக்கு முறைச்சா கர்ர்:)

   Delete
 6. சம்பவம் 2- சொல்ல முடியாது அஞ்சு, சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இப்படியான குணம் வரும்.. அப்படியே வளர்வார்கள்... அப்பா அம்மாவுக்குப் பயந்து 20 வயதுவரை அடங்கி நடந்தாலும் பின்பு பழைய படி மாறிவிடுவார்கள்... எங்கள் குயின் அம்மம்மாவின் பேரன்போல்:)..[ஹரி].

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா ..எதுவுமே வளர்ப்பு சூழல் எல்லாவற்றிலும் இருக்கு ..சிலநேரம் அடங்கி இருந்து rebel ஆகவும் சான்ஸ் உண்டு :) யாருக்கு தெரியும் இப்போ எப்படி இருக்கோ அந்த குழந்தை :)

   Delete
  2. ohh harry your grandson :)))))))))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் செல்லத்தம்பி:)

   Delete
 7. சம்பவம் 3- உண்மைதான் காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

  சம்பவம் - 4 - ஹா ஹா ஹா, உண்மைதானே.. எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது, எங்கள் அம்மப்பா ஒருவர் ஊரில் செயாமன் ஆக இருந்தவர், யாருக்கும் பயப்படமாட்டார். ஒரு தடவை கொழும்பு வெள்ளவத்தை ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.. ரோட்டோரத்தில் 4,5 ஆண்பிள்ளைகள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள், இவருக்கு/யாருக்குமே வழிவிடவில்லை, எல்லோரும் ஒதுங்கிப் போனார்கள்..

  இவர் மட்டும் நிமிர்ந்தபடி நடந்துபோய், அதில் ஒருவரின் காலையும் மிதித்து விட்டுப் போனார்ர்..
  உடனே அந்தத்தம்பி திரும்பி “என்ன ஐயா காலை உளக்கிக்கொண்டு போகிறீங்கள்?” என்றார்.. அதுக்கு இவர்...

  “பின்ன என்ன... உன் தலையையா உளக்கச் சொல்கிறாய்” எனக் கேட்டபடியே போனார்ர்:)ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா நல்லவேளை நண்பி அந்த பஞ்சாபி அங்கிளை கேக்கலை :) நிச்சயம் அதைத்தான் சொல்லியிருப்பார் அவரும் :)
   உன் கால் நடக்கற வழில இருந்தது நடந்தேன்னிருப்பார்

   Delete
 8. எங்கள் சின்னவருக்கு 3,4 வயதிருக்கும், நாம் எப்பவும் சொல்வதுண்டு பிரஸ் பண்ணாமல் சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் வாயில் பூச்சி வரும் என.

  ஆனா ஒருநாள் காலை எழுந்து வந்ததும் பிஸ்கட் ஐப் பார்த்து வேணும் என அடம்பிடிச்சார்ர்.. இல்லை பல்லில் பூச்சி வரும் என்றேன்ன்.. தொடர்ந்து அடம்பிடிச்சார்ர்.. நான் தான் 3 தரம் கேட்டால் கொடுத்திடுவேனே... சரி குழந்தைதானே எனக் கொடுத்தேன்.

  எடுத்துப்போய் செயாரில் இருந்து சாப்பிட்டு விட்டு, கிச்சினுக்குள் வந்து சொன்னார்ர்.. “அம்மா லுக் அட் மை ரீத்... நோ பூச்சி:)” என .. ஹா ஹா ஹா நான் அப்பூடியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) கூடாதுன்னா கூடாது நீங்களே குழந்தைக்கு கொடுத்திட்டு அப்புறம் ஷாக்ட் ஆனா எப்படி ? :)

   அது சரி உங்க சின்னவர் அப்படியே உங்களை மாதிரின்னு நினைக்கிறேன் கரெக்ட்டா :)))))))))))))

   Delete
  2. //எங்கள் சின்னவருக்கு 34 வயதிருக்கும்//

   @அதிரா.... என்னது? சின்னவருக்கே 34 வயதா?!! :P

   Delete
  3. அதைத்தான் நான் எத்தினி நாள் சொல்றேன் :) @ஸ்ரீராம் மேடம் மியாவ் சீனியர் சிட்டிசன்

   Delete
  4. ///ஸ்ரீராம்.June 1, 2017 at 1:36 AM
   //எங்கள் சின்னவருக்கு 34 வயதிருக்கும்//

   @அதிரா.... என்னது? சின்னவருக்கே 34 வயதா?!! :P///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பவுமே என் எழுத்துக்கள் படிக்கும்போது எல்லோரும் விளக்கெண்ணெய் கண்ணுக்குள் விட்டிட்டே படிக்கினமே முருகா:).. அது ஒன்றுமில்லை பாகுபலியில் அனுஸ்காவை ஸ்கிறீனில் பார்த்த எபெக்ட் தேன் இது:).. இதுக்குத்தான் சொல்றது தியேட்டருக்குப் போகாதீங்க என:) யாரு என் பேச்சைக் கெய்க்கிறாங்க:)..

   Delete
 9. அழகான செய்தித் தொகுப்பு..
  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படிப்பினை..

  இருந்தாலும் அந்த இரண்டாவது சம்பவம் - மனதைத் தொட்டது..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..ஆமாம் எனக்கும் அந்த சிறு குழந்தையின் கள்ளமில்லா முகம் கண்ணுக்குள் இருக்கு .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 10. குழந்தைகளின் உலகமும், மனமும் தனிதான். நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவங்கள் சில, மதன் ஜோக்சில் வரும் ரெட்டை வாழ் ரெங்குடு ஜோக்ஸை நினைவு படுத்துகிறது. சுவாரஸ்யமான சம்பவங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) மாமா தலையில் பேன் இருக்காது அப்படி இருந்தாலும் வழுக்கி விழுந்திடும் இல்லையாப்பானு :) வழுக்கை மாமா அப்பா இருவர் முன்னும் பேசும் ரெங்குடு ஸோ ஸ்வீட் :) நினைவுக்கு வருது

   Delete
 11. குறிப்பாக சம்பவம் மூன்று போலவே ஒரு மதன் ஜோக் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து ஆனந்த விகடனில் முன்பு வருமில்ல ..நல்ல ஜோக்ஸ் எல்லாமே அதில்
   ரெங்குடு ஸ்பைடரை நூலில் கட்டி தூங்கற ஒருத்தர எழுப்புவான் செம காமெடி அந்த கார்ட்டூன்லாம்

   Delete
  2. ஒரு அங்கிள் அவருக்கு ஆங்கிலபுலமை குறைவு vomiting என்பதை vomitation என்று அடிக்கடி உச்சரிப்பர் அதானால் அவர் பெயரை வாமிட்டேஷன் குருமூர்த்தி அங்கிள்னு சொல்லுவோம் அவருக்கு தெரியவே தெரியாதது ஹஸ்கி குரலில்தான் பேசுவோம் வீட்டில்
   இப்படி எத்தனையோ சொல்லலாம் பட்டப்பெயர் தவறுன்னு தெரியாத வயதில் செய்த கூத்துக்கள்

   Delete
 12. அனைத்தும் அருமை...

  குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் டிடி சரியா சொன்னிங்க .மிக்க நன்றி

   Delete
 13. அனைத்து சம்பவங்களும் அருமை ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்

  1. அந்த அம்மா என்றில்லை பல அம்மாக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்....என்ன அம்மா இவர்கள் என்றுதான் தோன்றுகிறது.

  2. அக்குழந்தை ஆஹா மனதைத் தொட்டது. வளர்ப்பு முறை நன்றாக இருக்க வேண்டும். இருந்தால் பின்னாளில் உலகை நேசிக்கும் நல்ல மனிதன் உருவாக வாய்ப்புண்டு.

  3. இப்படித்தான் குழந்தைகள். ஆனால் குழந்தை வளர்ப்பில் மிக மிக முக்கியம் எதிர்மறை விஷயங்களுக்கு யாரையும் குறிப்பிட்டு உதாரணம் சொல்லுவது நலல்தல்ல. நல்ல விஷயங்களுக்குப் பிறரை உதாரணமாகக் காட்டினால் நல்லது. அதற்கும் வரைமுறை உண்டு. லிமிட்டேஷன் உண்டு.!!! இலையா?

  4. ஹஹஹ்ஹ் அதானே தலை கீழயா இருக்கும்??!!!! குழந்தைகள் முன் பட்டப்பெயர்களும் கூடப் பேசக் கூடாது....இதுவும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கியம்....இல்லை என்றால் துடுக் குழந்தை என்றால் நம் மானம் போகும் பொது இடத்தில்...ஹஹஹ்

  குழந்தைகள் தெய்வத்திற்குச் சமம். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...ஆனால் பெரியவர்கள் தான், மதுரைத் தமிழன் தனது பதில் கருத்தில் சொல்லியிருந்தது போல், அவர்களைக் கெடுக்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..அது முழுதும் அந்த அம்மாவையும் குற்றம் சொல்லவும் முடியாது..இங்கே பிள்ளைகள் அதிக விழிப்பா இருக்கணும்னு ஸ்கூலில் சொல்லித்தருவதால் கூட இருக்கலாம் ..ஹாஹாஆ :) துடுக்குத்தனம் இயல்பிலேயே பெண் குழந்தைகளுக்கு அதிகம் ,நான் பல நேரம் தூய தமிழில் பேசுவேன் இவளுக்கு புரியக்கூடாதுன்னு :) நம் வாய் தானே நமக்கு எதிரி அப்படியும் மாட்டிப்பெண் மகளிடம் ..
   உண்மைதான் முந்தைய காலத்தில் இருந்த இன்னோசென்ஸ் இப்போ இல்லியோன்னு தோணுது கீதா ..லேட்டஸ்ட் டேகினாலஜி நாகரீக வளர்ச்சியில் பிள்ளைகளும் முற்றிவிட்டார்கள்

   Delete
 14. "வளர்ந்த பெரியவர்களால் அந்த குழந்தை மனதை மீண்டும் பெற சாத்தியமில்லை" - இதைத்தான் பைபிளின் ஆதியாகமம் சொல்லும் 'ஆதாம் ஏவாள்' கதையின் அர்த்தம். 'கள்ளமில்லாத உள்ளம்' குழந்தைகளுக்குத்தான் சாத்தியம். குழந்தைகள் முன்னால பெற்றோர் கேர்ஃபுல்லா நடந்துக்கலைனா, நிறைய எடத்துல Bulb வாங்கவேண்டியதுதான் ('ஐயோ அவரா. எப்போப்பாத்தாலும் கடன் கேட்பாரே. கடன் கேட்கிற மாமா' என்று பேசினால், குழந்தை அதைக் கவனித்து, அவர் முன்னாலேயே 'இவர்தானே கடன் கேட்கிற மாமான்னு சொல்லுவியே அவர்' என்று மானத்தை வாங்கிடும்)

  நாலு சம்பவங்களும் ரசிக்கும்படி இருந்தன. அதிலும் சிறு குழந்தை, தொழிலாளிகளைப்பார்த்து கை அசைப்பதும், 12 வயதுப் பெண் சாக்கிலேட் வாங்கிக்கொண்டதன் காரணமும் மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. @நெல்லைத்தமிழன் மிக சரியா சொன்னிங்க ..குழந்தைகள் கிட்ட பட்டப்பெயர் தெரிய மாதிரி பேசவே கூடாது நீங்க சொன்ன அந்த கடன் மாமா மேட்டர் ஹாஹா ..மறைந்த ஜெமினி கணேசன் அவர்களை எல்லாரும் சாம்பார் என்பார்கள் அதை (இப்போ சித்தி ராதிகா) சின்ன வயதில் அவங்கப்பா எம் ஆர் ராதாவை பார்க்க ஜெமினி வீட்டுக்கு போனப்போ ராதிகா ...//அப்பா சாம்பார் அங்கிள் வந்திருக்கார்னு //சொன்னார்களாம் :) ஒரு பேட்டியில் சொன்னார் ..வீட்லே எதை பேசறோமோ அது கிளிபிள்ளைங்க மாதிரி அப்படியே கொட்டிடுங்க குழந்தைகள் :)
   எங்களுக்கு தெரிஞ்ச ஒரு அங்கிள் எப்பவும் பைபிள் எடுத்து பிரசங்கம் செய்வார் அதனால் அவருக்கு பட்டப்பெயர் பைபிள் அங்கிள்
   என் தங்கச்சி ஒரு முறை சத்தமா பைபிள் அங்கிள் வந்திருக்கார்னு சொல்லிட்டா நல்லவேளை அவர் சீரியஸா எடுக்கலை :)

   Delete
  2. பைபிள் அங்கிள் என்று சொல்வதெல்லாம் பரவாயில்லை.

   "யார்றா வந்திருக்கா?" என்னும் அம்மாவின் கேள்விக்கு,

   "டிஃபன் நேரத்தில் கரெக்ட்டா கழுகு மாதிரி வருவார்னு சொல்வியே அந்த மாமாம்மா.." என்று பதில் வந்தால்?!!!!!

   Delete
  3. ஹாஹாஆ :) பாவம்அ எப்படி இருந்திருக்கும்ந்த அந்த மாமாவுக்கு :)) அங்கிளும் காலைல சரியா 8 மணிக்குத்தான் வருவார்
   அப்புறம் பைபிள் அங்கிள்னு டீசண்டா சொன்னேன் இதைவிட பொல்லாத பட்டபெயரெல்லாம் இருக்கு அது சின்ன வயதில் ஊரில் சீரியஸ்னஸ் தெரியாம சொல்லுவோம் இப்போ நினைச்சா சிரிப்பு வருது ..
   ஒருவர் அப்பாவின் நண்பர் தெரியாம பற்றாக்குறையை கொற்றாபறைன்னு ஸ்லிப் of தி டங் சொல்லிட்டார் :) அன்னிலேருந்து அவரை கொற்றாப்பரை அங்கிள் என்றே சொல்வோம் .அவருக்கு அது தெரியவே தெரியாது

   Delete
 15. எடுத்துக்காட்டிய நிகழ்வுகள் அனைத்தும் பாடங்கள்
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா :) வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் நன்றி

   Delete
 16. மற்றவர்களுக்கு சந்தோஷம் எனில் நாம் இறங்கிப்போவதில் தப்பில்லை என்ற குழந்தை மனசு பிடித்தவிடயம் முதல் சம்பவம் மிகவும் தெளிவு மிக்க பதில்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் சரியா சொன்னிங்க

   Delete
 17. இடம் பொருள் அறிந்து பேசவேண்டும் சிறுவர்கள் வாழும் இடத்தில்.இல்லையே பல்லுப்போய்விடும்)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் :) பல்லு போயிடும் தலையில் கல்லும் விழும் நமக்கு :)

   Delete
 18. நினைவலைகளில் பஞ்சாபி தலை ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) வாங்க கில்லர்ஜீ ..என் மகள் குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த பஞ்சாப் பெரியவர் காலையும் தலையையும் உற்று பார்த்தது இப்பவும் நினைச்சா சிரிப்பு வரும்

   Delete
 19. சம்பவங்கள் அனைத்தும் அருமை!

  புகைப்படமும் அதன்மீதிருந்த வாசக‌ங்களும் அதையும்விட அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா .வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கு நன்றிக்கா

   Delete
 20. அனைத்தும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க

   Delete
 21. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று பதிவுகள் இவை எல்லாம் சில குழந்தைகளின் எண்ணப்போக்கை வெளிப்படுதுகிறது நானும் என் பேரனின் செயல்களை ஆங்காங்கே பதிவுகளில் எழுதி ஈருக்கிறேன் கீதா மதிவாணன் எழுதி இருந்தஒரு சம்பவம் இங்கே பகிர்கிறேன் அவரது பெண் ( நிலா என்று பெயர் என்பதாக நினைவு) கோவிலில் நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்ற வேண்டும் என்பதைக்கேட்டிருந்தாள் கூடுதலாக ஓரிரு சுற்றுகள்விளையாட்டாகச் சுற்றி விட்டாள் அதைக் கூறியபோது அந்த ஓரிரு கூடுதல் சுற்றை எதிர் திசையில் சுற்றிக் கழிக்கட்டுமா என்றாளாம் ,

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..நிலா வெண்ணிலா தான் .எனக்கும் நினைவிருக்கு ..குழந்தைகள் மனதில் ஒன்றும் வைக்காமல் அப்படியேசொல்லிடுவாங்க ..இன்னும் ரசிக்கிறேன் எனது மகளின் ஒவ்வொரு செயலையும் ..என்ன இப்போ குறும்பு சற்று குறைந்துவிட்டது :) வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete
 22. குழந்தைகள் வாழ்க...
  ரூசோ இதனால்தான் சொல்கிறார், சமூகத்தை விட்டு வெகுதூரம் குழந்தைகளை விலக்கி வைக்கவேண்டும் என

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மது ..உண்மைதான் ..சமூக அழுக்கு அவங்க மேல் படவே கூடாது

   Delete