அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/26/17

அன்புள்ள நாட்குறிப்புக்கு .... :)


அன்புள்ள நாட்குறிப்புக்கு .


 நான் நலம் ..நீ நலமா ...இது வரை நானும் நீயும் சந்தித்து உரையாடியதில்லை ..பல வருடங்கள் முன் படிக்கும்காலத்தில் உடன் படிக்கும் மாணவிகள் பலருக்கு இந்த டைரி எழுதும் பழக்கம் இருந்தது  ..நானும் ஆரம்பித்தேன் சில நாட்களிலேயே எழுத ஏதும் தோன்றாததால் அப்படியே விட்டுவிட்டேன் ..மேலும் எல்லா சம்பவங்களும் தேதி வாரியாக மூளையில் பதிந்து வைத்திருப்பதால் அங்கிருந்தே தேடியெடுத்துவிடுவேன் ...திடீரென ஒரு ஆர்வம் நாமும் மீண்டும் டைரி எழுத துவங்கலாமேயென்று ..ஆகவே கடந்த வாரம் முதல் இந்த வாரம் வெள்ளி வரை நடந்த நிகழ்வுகளை இங்கு எழுதுகிறேன்  ;)

அன்புள்ள நாட்க்குறிப்பே    போன  வாரம் கால்வாய் வழியே வாக்கிங் செல்லும்போது எனது அன்னப்பறவை  செல்லங்களை சந்தித்தேன் அவர்கள் குடும்பத்தில் இவ்வாண்டின் புது வரவுகள்  5 குழந்தைகள் சாம்பல் நிற புஸு  புஸு பந்துகளாக அன்றுதான் முட்டையில் இருந்து வெளி வந்து வெளியுலகை காண்கிறார்கள் ..காண கண்கொள்ளா காட்சி இதோ நான் பதிவு செய்த காணொளியும் படங்களும் ..இங்கே கடந்த மூன்று நாட்களாக கடும் வெயில் 26  டிகிரி !!..என்ன ?சிரிக்கின்றாய் சென்னையில் 40 டிகிரி பார்த்த நீ 26 க்கு புலம்புகிறாய் என்கிறாயா :) நம்ம ஊர் 40 க்கு சமம் இந்த ஊர் 26 டிகிரி ..மேலும் புற  ஊதா கதிர் வீச்சின் அளவு 8 இருக்கும் அது மிக அதிகமாக இருக்கின்றது இன்று ..

                                                                      இன்று காலை  கால்வாய் வழியே வாக்கிங் சென்றபோது ராக்கி தாத்தாவை மீண்டும் பல நாட்களுக்கு பின் சந்தித்தேன் :) எத்தனை சந்தோஷமான மனிதர் அவர் !! அவரது தங்கைக்கு 78 வயதாகிறதாம் இன்று அவருடைய பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் பத்து வயதை கூட்டி 88 என்று எழுதி வைத்ததை சந்தோஷமாக ஒரு குழந்தை போல சிரித்துக்கொண்டே சொன்னார் :) நேரம் போவதே தெரியவில்லை இப்படிப்பட்ட குழந்தைகளுடன் பேசும்போது ..


மகளுக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கின்றது இதுவரை 5 பரீட்சை முடிந்து விட்டது ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்ததும் கணினியில் தான் எழுதிய பதில் சரியா என தேடி பார்க்கிறாள் ..நம்மூர் போல வினாத்தாள் தனியா இருக்காது இங்கே .அதனால் கேள்விகளை மனதில் நினைவாக வைத்து வீட்டுக்கு வந்து தேடுகிறாள் ..:) எனக்கு பழைய நினைவுகள் வந்தது நானும் அப்படித்தானே கேள்வித்தாளை வைத்து புத்தகத்தை பிரித்து விடை சரியா என பார்ப்பேன் :) என் நட்புக்கள் எல்லாரும் திட்டுவார்கள் ..அந்த நினைவு வந்தது .அப்புறம் பயாலஜி பாடம் படிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்லி கொடுத்தேன் அதில் environmental variation (Variation caused by the surroundings is called environmental variation.) என்பது பற்றி சொல்லிக்கொடுக்கும்போது உதாரணத்துக்கு  அதிரா ஆன்ட்டி வீட்டில் கிச்சனில் வளர்ந்த சூர்யகாந்திப்பூ என்றேன் ..அத்தனை ஸ்ட்ரெஸ் பரீட்சை  ப்ரெஷரிலும் மகள் விழுந்து விழுந்து சிரித்தாள் :) அட் ஹிரா ஆன்ட்டி இஸ் வெரி funny என்றாள் :) ஹாஹாஆ  

அப்புறம் நாட்குறிப்பே உனக்கு இங்கிலாந்தில்  மான்செஸ்டர் நகரில் ariana grande யின் பாடல் நிகழ்சியில்  நடந்த அந்த துர்  சம்பவம் தெரிந்திருக்கும் ..
மனதை பாரமாக்கிய சம்பவம் இறந்தவர்களில் பலர் இளவயதினர் ..இச்சம்பவத்தில் காயமுற்றோரை குறிப்பாக  18 வயதுக்கு கீழுள்ளோரை  இங்கிலாந்து மகாராணி அவர்கள் சிகிச்சை பெறும்  குழந்தைகள் மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார் ..மகாராணிக்கு 91 வயது ஆகிறது ஆனாலும் இவ்வயதிலும் அவர் வந்து நலம் விசாரித்தது பலருக்கு வியப்பையளித்தது ....

அப்புறம் பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மைத்துனி pippa middleton னின் திருமண வைபவத்தில் குட்டி இளவரசரின் சேட்டைகளை எல்லா பத்திரிகை செய்தியிலும் வாசித்தேன் 
                                                                                          


..3 வயது குட்டி இளவரசர் இத்திருமணத்தில் page boy ..மணப்பெண்  சித்தியின்  திருமண உடையின் தவழும்  கீழ்  பகுதியை மிதித்துக்கொண்டு நின்றாராம் :) பிறகு பேப்பர் confetti இருந்த கூடையை தலைகீழா கவிழ்த்திருக்கார் ..அம்மா கேட் ஷ்ஹ் என்று கண்டித்ததையும் பேப்பரில் போட்டார்கள் ..ஆலயம் செல்லும்போது காரில் சீட் பெல்ட் போடாமல் குட்டி  இளவரசர்  நின்று கொண்டு பயணம் செய்த காட்சியை நியூஸ் பேப்பரில் வெளியிட்டு வருங்கால மகாராணி கேட் க்கு கண்டனம் தெரிவித்திருக்காங்க ..

                                                                                      

அரச குடும்பத்தில  இருக்கறது ரொம்பவே கஷ்டம் போல :) எதை செய்தாலும் நியூஸில் வந்திடுது எனக்கு  தெரிஞ்சு எத்தனையோ குட்டிஸ் தாங்களே பெல்ட்டை கழட்டி லூட்டி அடிச்சிருக்குங்க..ஓடற காரில் ..நின்னுகிட்டு வேடிக்கை பார்த்தா தப்பா ?? :)  (இது குட்டி இளவரசரின் மைண்ட் வாய்ஸ் )

குட்டீஸ்களின் லூட்டி குறும்பு எனும்போது எங்கள் மகள் 4 வயதில் செய்த ஒரு விஷயம் நினைவுக்கு வருது சின்ன பிள்ளையாக இருக்கும்போது எல்லா பிள்ளைகளும் பட்டாம்பூச்சி போல ஓரிடத்தில் நிக்காம ஓடுவது இயல்பு இவளும் அப்படி வேகமா எங்க கையை விட்டு முன்னே சென்றாள் ஒரு தமிழ் தம்பி இவளிடம் வந்து பாப்பா இப்படி வேகமா  ஓடினா பஸ் காரில் அடிபடும் அதோ அங்கே சக்கர வண்டில போறாரே  அந்த அம்மனிதர் போலாகிடும் என்றார் அதற்கு மகள்  சட்டென்று அச்சோ  பாவம் தாத்தா நான் வேணும்னா என் ஒரு காலை  தரட்டுமா அவருக்கு என்றாள்  ..அட்வைஸ் சொன்ன அந்த தம்பி அசடு வழிய நின்றார் :) 

உனக்கு லூயிஸ் தெரியும்னு நினைக்கிறேன் ,,லூயிஸுக்கு முதல் பால் பல் விழுந்து விட்டதாம் தூக்கிட்டு வந்து காட்டினான் குழந்தை என்னிடம் ..

அப்புறம் நாட்குறிப்பே எங்க வீட்டுக்கு மல்ட்டி வந்து எங்களை அதன் சுவீகார பெற்றோராக குடும்பமாக தத்தெடுத்து ஒரு ஆண்டு ஆகிறது ..

இத்துடன் இவ்வார சிறு குறிப்புகள் நிறைவு பெறுகின்றன நாட்குறிப்பே :)

மீண்டும் அடுத்த வாரம் உன்னுடன் பேசுவேன் அதுவரை bye :)


                                                                  ********************
79 comments:

 1. ஆவ்வ்வ்வ் நாட் குறிப்பிற்கே ஒரு 200 வயசிருக்கும்போலிருக்கே அப்போ எழுதியவருக்கு?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

  ///நான் நலம் ..நீ நலமா ...இது வரை நானும் நீயும் சந்தித்து உரையாடியதில்லை//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதனால்தான் உங்களுக்கு கையால் எழுதும் பழக்கம் இல்லாமல் போச்ச்ச்ச்ச்:).. நான் எனக்கு எழுதத் தெரிந்த காலம் முதல் எழுதிவந்தேன்ன்.. பின்னர் நாட்டுப் பிரச்சனையால் கைவிட்டு விட்டேன்.. ஏனெனில் நான் எழுதுவதை இன்னொருவர் படிக்க்கும் வாய்ப்பே அதிகம்.. இடம்பெயர்வுகளால்.

  ReplyDelete
  Replies  1. //நான் எனக்கு எழுதத் தெரிந்த காலம் முதல் எழுதிவந்தேன்ன்//
   since 6 years still continuing at 88 isnt it :)))))))

   Delete
  2. முதல் வருகைக்கு உங்களுக்கு ஏதாவது தரணும் மியாவ் இந்தாங்க ஜெஸியின் cat treat ஒரு குட்டி துண்டு

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு வைர மூக்குத்திதான் இப்போ தேவை.. வள்ளியின் நேர்த்திக்கடனை நிறைவேற்ற:)

   Delete
 2. ///திடீரென ஒரு ஆர்வம் நாமும் மீண்டும் டைரி எழுத துவங்கலாமேயென்று //
  என்ர லூர்த்து மேரி மாதாவே.. இனி எங்களை நீங்கதான் காப்பாத்தோணும்... டெய்லி புனித நீரில் மூழ்கி எழும்புவேன்ன்.. இந்த டயறியை மட்டும் ஒளிச்சிடுங்கோ:)..

  ஹையோ ரோபோ தொடங்கிட்டுது அஞ்சு கர்ர்ர்:)..

  ReplyDelete
  Replies
  1. அது ரெண்டுபேரும் ஒரே நேரம் கமெண்டும்போது ரோபோக்கு பொறாமையாம்

   யாரும் ஒளிக்க முடியாதே இது கூகிள் வசம் கொடுத்திட்டேன்

   Delete
 3. ///ஆகவே கடந்த வாரம் முதல் இந்த வாரம் வெள்ளி வரை நடந்த நிகழ்வுகளை இங்கு எழுதுகிறேன் ;)///
  இல்லயே நீங்க இங்கின சிலதை மறைச்சிட்டீங்க:) ஹீல்ஸ் உடன் போய் தடக்கி விழுந்து அதிரா தூக்கி விட்டதெல்லாம் காக்கா தூக்கிட்டுப் போயிட்டுதோ?:)..

  இம்முறை அஞ்சு:) குஞ்சுகளோ?:) ஆவ்வ்வ்வ்:)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ நீங்களும் நானும் ஒரே அலைவரிசைனு சொன்னதுக்கு நீங்க விழுந்ததை நானுன்னு சொல்லிட்டிங்களே மியாவ் :)

   yes 5 :) 5 :)

   Delete
 4. வீடியோவும் குட்டீஸும் நல்லாயிருக்கிறாங்க..

  வளமையை விட இம்முறை அதிக வெக்கை ஆகிட்டுது இங்கும்.. எங்களுக்கு எவ்வளவு வெக்கை எனினும் வீட்டுக்குள் ஒரு குளிர்மை இருக்கும்.. இன்று அது கொஞ்சம் குறைஞ்சுபோச்சு.. அவ்ளோ வெக்கை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிராவ் ..இங்கும் ரொம்பவே கொளுத்தி எடுத்து விட்டது ..ஆனா இன்னிக்கு மழை என்று சொன்னாங்க இதுவரை இருட்ட கூட இல்லையே :)

   Delete
 5. குழந்தைகளுக்கும் கட்டுப்பாடா...? சிரமம் தான்...

  செல்ல மக்களின் நல்ல மனதிற்கு வாழ்த்துகள்... வாழ்க நலம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி ..இங்கே காரில் செல்லும்போது பெல்ட் அணிவது கட்டாயம் அதுவும் சிறு பிள்ளைகள்னா மிகவும் அவசியம் ..ராஜா குடும்பமா இருந்தாலும் ஒரே ரூல் தான் :) எல்லா குட்டீஸும் சின்ன வயதில் இப்படி குறும்பு கொப்பளிக்க தான் பேசுவார்கள் அதில் எங்க மகள் ஒரு புள்ளி அதிகம் .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 6. தேதி வாரியாக நினைவிலேயே வைத்திருப்பது சிறப்பு. நல்ல நினைவுகள் சரி, வேண்டாதவற்றைக் கிழித்து எறிந்து விடுங்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் ..அதேதான் எனக்கு பெரிய பிரச்சினை ..இந்த வல்லாரை வேற எல்லாத்தையும் நினைவு கூற வச்சிடுது ..தீயவற்றை மறந்தாலும் ஒரு மூலையில் இருக்கும் அதை விரட்டி விடுவேன்

   Delete
 7. நாட்குறிப்பு நானும் சிறு வயதில் எழுத முயற்சித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆவ் !!என் மகள் தினமும் எழுதறா :) ..இது பதிவை தேத்த எழுதிய குறிப்புக்கள்

   Delete
 8. பாரதியாரின் வெள்ளை நிறத்தொரு பூனைக்குட்டி வரிகளை மாற்றி வாத்துக்குப் பாடலாம்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆமா .இப்போ சாம்பல் நிறம் முழு வெண்மையாக 10 மாதங்கள் ஆகும்

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஸ்ரீராம்:)

   Delete
  3. இதற்கு ஏன் கர்ர்ர்ர்...?

   Delete
  4. பூனைக்குட்டிப் பாட்டை மாத்தக்குடா:) வாத்துக்குஞ்சுக்கு புறிம்பா எழுதி.. 2ம் பரிசு வாங்கிய எங்கட “பாடகரை” க் கூப்பிட்டு பாட வச்சிடலாம்:)

   Delete
 9. ராக்கி தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை எங்கள் சார்பிலும் சொல்லுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. பிறந்தநாள் ராக்கி தாத்தாவின் தங்கைக்கு.. தாத்தா இஸ் 82 இயர்ஸ் :)

   Delete
 10. பரீட்சை எழுதியதும் அப்படியே மறந்து விடுவேன். வீட்டில் வந்து விடைகளைச் சரிபார்த்து நிம்மதி இழக்கும் பழக்கம் இல்லை! ஏனென்றால் பெரும்பாலும் நிம்மதி நிறைய பறிபோய் விடும்!

  ReplyDelete
  Replies
  1. அதேதான் .நட்புக்களுடன் டிஸ்கஸ் செய்யும்போதும் நிம்மதி போயிடும் அதனால் தான் புக் பார்ப்பேன் வீட்டில் ..என் ப்ரொபஸர் சொல்வார் வினாத்தாளை அங்கேயே கிழிச்சிட்டு போயிடுங்கன்னு :)

   Delete
 11. உங்கள் மகளின் குழந்தை பதிலை ரசித்தேன்.

  மல்டிக்கு இனிய தத்துநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இதைப்போல பல பதில்கள் இருக்கு :)பெரும்பாலும் நான் பல்ப் வாங்கியவை அவை ..ஓ மல்ட்டி கிட்ட சொல்கிறேன் :)

   Delete
 12. நாட்க்குறிப்பு அருமை. அதிராவை நினைத்து குழந்தை சிரித்தது மகிழ்ச்சி. அதிராவிற்கு வாழ்த்துக்கள். இப்படி எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளட்டும்.
  பதிவுலகம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது அதிராவின் வரவால்.
  காணொளி அருமை.
  மற்ற நிகழவுகள் செய்திகள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா :) அதிராவால் எல்லோருமே சிரிக்கிறோம் உண்மையே :) இப்போல்லாம் பதிவுகள் கலகலன்னே இருக்கு ..
   காணொளி மற்றும் படங்களை ரசித்தர்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
  2. ///பதிவுலகம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது அதிராவின் வரவால்.////

   ஆவ்வ்வ்வ்வ்வ் கோமதி அக்கா நிஜமாவா சொல்றீங்க கேட்டதும் இப்பவே தேம்ஸ்ல குதிக்கலாம்போல வருதூஊஊஊஊஉ:).. மிக்க நன்றி... தன்யனானேன்ன்ன்.. ஆவ்வ்வ்வ் நான் இதை ஸ்ரீராமிடம் இருந்து களவெடுக்கவில்லை என்பதை இந்த அஞ்சுவின் குயிலிங் ரோஸ் மீது அடிச்ச்ச்ச்ச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:)..

   ரோஸ் எங்கயோ?:) வெயிட் அண்ட் சீஈஈ:)..

   Delete
  3. ஹாஹா :) சபாபதே கோபு அண்ணாவின் ட்ரேட் மார்க் வசனம் ,தன்யனானேன் ஸ்ரீராமின் ட்ரேட் மார்க் வசனம் :) யூ காப்பி cat

   Delete
  4. தன்யனானேன் சகோதரிகளே....!!

   Delete
  5. ஹா ஹா ஹா சந்தோசமாக இருக்கு...

   Delete
  6. ///யூ காப்பி cat//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது காப்பி இல்ல கொப்பி யாக்கும்.. காப்பி என்றால் கொஃபி ஹா ஹா ஹா விடமாட்டேன்ன்.. டமிலைக் கொல்ல விடமாட்டேன்ன்:)

   Delete
  7. என்கிட்டே தமிழ் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிக்குது உங்ககிட்ட வந்தா மர்கயா தொடர்ந்து postmortem தான் :))

   Delete
 13. அடுத்தவங்க நாட்குறிப்பை எப்படி படிக்கறது. நானென்ன.....அ...வா? அதுனால படிக்கலை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க நெல்லை தமிழன் இது திறந்து வச்சிருக்க பக்கத்தை வாசிக்கலாம் :) சில நாட்குறிப்புகளுக்கு பூட்டு சாவிலாம் இருக்கு இங்கே கடைகளில் ..தைரியமா படிங்க என் நாட்குறிப்பு பக்கங்களை

   Delete
  2. அஞ்சூஊஊஊஊஊஊஊஉ நெல்லைத் தமிழன் என்ன சொல்லியிருக்கிறார்ர்ர்ர்?:) எழுத்துக்கள் இடையில அழிஞ்சிருக்குது?:))... என்னைச் சொல்லி இருப்பாரோ?:) சே..சே.. அப்பூடி ஈக்காதூஊஊஊஊஊஊ:) அவர் ரொம்ப நல்லவர்:)

   Delete
  3. நெல்லைத்தமிழன் பொய்யே சொல்ல மாட்டார் :) அவர் சொன்னது உங்களைத்தான்

   Delete
  4. ///AngelinMay 27, 2017 at 1:42 PM
   நெல்லைத்தமிழன் பொய்யே சொல்ல மாட்டார் :) அவர் சொன்னது உங்களைத்தான்///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சபை நாகரீகம் கருதி.. ககககறுப்புச் சீலையால போர்த்து மறைக்க வெளிக்கிட்டேன்ன்.. இப்பூடிப் போட்டுடைக்குதே இந்த ஃபிஸ்ஸூஊஊஉ:)

   Delete
 14. // ஒரு தமிழ் தம்பி இவளிடம் வந்து, “பாப்பா இப்படி வேகமா ஓடினா பஸ் காரில் அடிபடும் அதோ அங்கே சக்கர வண்டில போறாரே அந்த அம்மனிதர் போலாகிடும்” என்றார் அதற்கு மகள் சட்டென்று ”அச்சோ பாவம் தாத்தா நான் வேணும்னா என் ஒரு காலை தரட்டுமா அவருக்கு என்றாள் ..”

  குழந்தையின் துடுக்கான மற்றும் இரக்கத்துடன் கூடிய இளகிய மனதினை ரஸித்தேன்.

  படங்களும் செய்திகளும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..ஆமாம் ..அதே நேரம் இந்த வாண்டுகளிடம் பேசும்போது கவனமாகவும் இருக்கணும் அட்வைஸ் சொல்ல வந்தவரையே இந்த குட்டீஸ் அசடு வழிய வச்சிடுவாங்க :)

   இப்படித்தான் ஒரு சிறுவன் அவன் அப்பாவின் ரேசர் எடுத்து ஒரு புருவத்தை மழித்திருக்கான் அவன் உறவினர் இங்கே பருப்ப இப்படி செஞ்சா கண்ணு போயிடும்னு சொன்னதுக்கு அந்த பையன் பரவால்ல நான் இன்னொரு கண்ணால் பார்த்துப்பேன் என்றானாம் :) இந்த குட்டீஸ் கிட்ட வாயை கொடுக்கும்போது அதி கவனமாவே இருக்கணும் :)

   வருகைக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அண்ணா

   Delete
 15. நான் நினைக்கிறேன் நீங்க அதிராவிடம் கொஞ்சம் ட் ரெயினிங் எடுக்கனும் அஞ்சு டயறி எழுத....
  இங்கு நல்ல நடைமுறையாக வைத்திருக்காங்க. அந்த நாட்குறிப்பு புக் பார்க்க ஆசையா இருக்கும்.விதவிதமா.. நீங்க சொன்னதுபோல் பூட்டோடு. நானும் ஊரில எழுதினதோடு சரி. பதிவு எழுத நல்லது குறிப்பாக எழுதிவருவது.ஷ்ரோனுக்கு கூட அடிராஆன்ரியின் funnyவிளங்குது..
  இங்கு எவ்வளவு இம்போர்ட்டெண்ட் சீட் பெல்ட் பூட்டுவது. போடாவிட்டால் பைன். நீங்க சொன்னதுபோல் அரசருக்கும் ரூல்ஸ்தான்.ஊரிலும் போயும் நான் வேக் கிலில் போனபோது பூட்ட சிரித்தார்கள். driver பூட்டினா போதும் என்றார்கள். நான் இங்குள்ள நடைமுறை சொன்னேன். ஆனா அங்கு ஹெல்மெட் கட்டாயம். 3பேர் போனாலும் 3வரும் போடவேண்டும். சீட் பெல்ட் கவனித்தால் நல்லது.(ஊரில்)..

  ReplyDelete
  Replies
  1. ////priyasakiMay 27, 2017 at 9:29 AM
   நான் நினைக்கிறேன் நீங்க அதிராவிடம் கொஞ்சம் ட் ரெயினிங் எடுக்கனும் அஞ்சு டயறி எழுத....//

   ஆங்ங்ங்ங்ங்ங்.. முதல்ல ஃபீஸ் ஐ என் எக்கவுண்டுக்கு அனுப்புங்கோ அம்முலு:)..

   Delete
  2. ப்ரியா :) நான் சொல்ல வந்ததை பூனை சொல்லிட்டாங்க :)
   இப்போ பீஸ் அனுப்பட்டாம் கர்ர்ர்ர் :)
   என் தமிழ் மறந்து போகவா :))

   ப்ரியா நீங்களும் எழுதுவீங்களா டைரி ..இங்கே டிராவல் ஜர்னல் கூட விண்டாஜ் ப்ரிண்ட்ஸ் போட்டது அழகா பூட்டு சாவியோடல்லாம் கிடைக்கும் நம்ம ஊர்ல சிக்னல் கூட மதிக்க மாட்டாங்க மக்கள் சீட் பெல்ட் கேக்கணுமா .இது ஷார்ட் டிஸ்டன்ஸ் என்பதால் கேட் கவனிக்கல போல

   Delete
  3. வீடியோ இப்போதான் பார்க்கமுடிந்தது அஞ்சு. சூப்பர் பாமிலி.. சின்னவங்களா(குழந்தைங்க உட்பட) இருக்கும்போது அழகுதான்..

   Delete
 16. ஆகா.. நாட்குறிப்பு பதிவு அருமை..

  அடுத்தவரின் நாட்குறிப்பைப் பார்க்கவே கூடாது என்பார்கள்..
  ஆனால் படிக்கக் கிடைத்தது இனிமை..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜூ ஐயா ..இந்த குறிப்பில் பொதுவான அனைவருக்கும் சொல்ற மாதிரிதான் எழுதினேன் :)
   தைரியமா வாசிக்கலாம் ..மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

   Delete
 17. ///?சிரிக்கின்றாய் சென்னையில் 40 டிகிரி பார்த்த நீ 26 க்கு புலம்புகிறாய் என்கிறாயா :) நம்ம ஊர் 40 க்கு சமம் இந்த ஊர் 26 டிகிரி ..மேலும் புற ஊதா கதிர் வீச்சின் அளவு 8 இருக்கும் அது மிக அதிகமாக இருக்கின்றது இன்று ..///

  உண்மைதான், ஊருக்குப் போய் இப்படிச் சொன்னால்ல் வெளிநாட்டுக்குப் போய் லெவல் வந்திட்டுது என்பினம்.. ஆனா இங்கு தோல்கள் எல்லாம் மென்மையாகிவிட்டது இந்தக் காலநிலைக்கு..

  நம் ஊரில் குழந்தைகளின் உடம்பு தொட்டால்.. இறுக்கமாக இருக்கும்.. ஆனா இந்நாட்டில் அப்படியில்லை... நம் உள்ளங்கால்களும் மிகவும் மென்மையாகிவிட்டது .

  ReplyDelete
  Replies
  1. ஹையோ அதை ஏன் கேக்கறீங்க ..ரொம்ப நக்கலடிப்பாங்க எங்க வீட்ல :) இந்த கொசுங்க தேடி வந்து கடிக்கும் பாருங்க மார்க் போகவே போகாது :)

   இங்கே ஸ்கின் உடனே ரெட் ஆகிடும் எனக்கும்

   Delete
 18. அப்போ ராகித் தாத்தாவின் தங்கைக்கு அஞ்சுவின் வயது ... ஆவ்வ்வ்வ்வ்வ்:).

  /// அட் ஹிரா ஆன்ட்டி இஸ் வெரி funny என்றாள் :) ஹாஹாஆ ///
  ஹா ஹா ஹா மீக்கு எத்தனை பெயர்கள் இந்த பென்னாம்பெரியா வேல்டில்:)...


  https://s-media-cache-ak0.pinimg.com/736x/ac/4f/fe/ac4ffe5925869dba6b5e86a56f002e39.jpg

  ReplyDelete
  Replies
  1. பூஸ் இஸ் ஹோல்ட்டிங் எ லவ்லி ரோஸ் :)

   அது இங்குள்ள பிள்ளைங்க pronounce நம்மை போல வராதே நாம் தா என்பதை இவங்க ட்ஹா ன்னுதானே உச்சரிக்கிறாங்க
   என் பொண்ணு எப்பவும் அட்ஹீரா ஆன்டின்னுதான் சொல்லுவா உங்க பேரை :)

   Delete
 19. ///.மகாராணிக்கு 91 வயது ஆகிறது ஆனாலும் இவ்வயதிலும் அவர் வந்து நலம் விசாரித்தது பலருக்கு வியப்பையளித்தது ....//
  குயின் அம்மம்மாவின் குணம்தான் அதிராக்கும் வந்திருக்குதென பக்கிங்காம் பலஸ் ல பேசுறாங்க:).. அவ வெரி பன்னி:) அம்மம்மா.. இங்கே பன்னி எனத்தான் எழுதட்டாம் என நெல்லைத்தமிழன் சொல்லித்தந்திருக்கிறார்ர்:).. ஹையோ இனி என் டமில் மறந்திடுவன் போல இருக்கே..:)

  ReplyDelete
  Replies
  1. haahaa :) உங்களை பன்னினு எப்படி மியாவ் சொல்லுவேன் ..நல்லாயிருக்காதுன்னுதானே ஆங்கிலத்தில் எழுதினேன் ஆனா அதுதான் உங்க ஆசைன்னா எடிட் செய்யறேன் :) அட்ஹிரா ஆன்டி இஸ் வெரி பண்ணி :))))))))))))))

   Delete
 20. //அதற்கு மகள் சட்டென்று அச்சோ பாவம் தாத்தா நான் வேணும்னா என் ஒரு காலை தரட்டுமா அவருக்கு என்றாள் ..அட்வைஸ் சொன்ன அந்த தம்பி அசடு வழிய நின்றார் :) ////

  ஹா ஹா ஹா.. குட்டீஷிடம் பேசும்போது நான் வலு கவனம்:)

  ஓ மல்ட்டி வந்து ஒருவருடமாகிட்டுதோ? எங்கள் புளொக் கதையில் .. அந்நேரம் வந்ததாக்கும் என நினைச்சேன்ன்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா மல்ட்டி வந்து ஒன் இயர் ஆகிடுச்சு அதாவது வீட்டுக்குள் ஜன்னலேறி குதிச்சி வந்த முதல் நாள் அது வந்து கணவர் காலருகே கட்டிப்பிடித்து அமர்ந்தது சரியா ஒரு வருஷம் ஆகுது :)

   அம்மாடியோ இந்த வாண்டுகள் குறும்பை எப்போ எங்கே அசடு வழியவைப்பாங்கனு சொல்ல முடியாதது .
   ஒரு வீட்டில் ரெண்டு பிள்ளைகள் இருவரும் ஒருவர் அம்மா போல வெள்ளை மற்றது அப்பா போல கருப்பு நிறம் ..நண்பர் ஒருவர் இருவரை பார்த்து உங்கப்பா நல்லா இருக்காராமா என்று தனித்தனியே விசாரிக்க அந்த வாண்டு ஒன்னு சொலிருக்கு அங்கிள் எங்க ரெண்டுபேருக்கும் ஒரே அப்பாதான்:) கேள்வி கேட்டவர் ஷாக்ட் :)

   Delete
  2. ஹா ஹா ஹா இப்பெல்லாம் பிள்ளைகள் ரொம்பத் தெளிவு...

   எங்கள் ஸ்கூலில் குட்டீஸ் சொல்லும்.. மம்மியும் மம்மியின் boy ஃபிரெண்டும் வந்தார்கள்...,
   டடியும் டடியின் கேர்ள் பிரெண்டோடும் பீச் போனேன் இப்படி...:)

   Delete
  3. ஹாஹாஆ :) இதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்றேன்

   Delete
 21. நானும் நாட்குற்ப்புகளை சுமார் ஏழு ஆண்டுகள் எழுதி வந்தேன் என் நாட்குறிப்புகளில் அந்த நாளில் என் மனதில் தோன்றுவதே எழுத்தாய் இருக்கும் மிக முக்கியமான மன நினைவுகளுக்கு அந்தக் காலத்தைய நாட் குறிப்புகளைப் பார்ப்பதுண்டு பலரும் அந்த நாளைய வரவு செலவுகளையும் தினப்படியான செயல்களையும்நாட்குறிப்பில் எழுதுகின்றனர் என் நாட்குறிப்புநான் அந்த நாளில் இருந்த மனநிலைக்கெ கொண்டு போய் விடும் ஒரு சந்தேகம் உக்களுக்கும் அதிரா (இப்போது கூட ஆஷா போஸ்லேயும் )வுக்கு என்ன பொருத்தம் சீண்டல்கள் நிறையவே இருக்கிறதே சும்மா உவ்வாவுக்கவா நிஜமாகவா

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் .ஆமாம் என் அங்கிள், கணவரின் அப்பாவுக்கு இந்த பழக்கம் இருந்தது ..அவர் வாழ்நாளில் எழுதிய அத்தனை நாட்குறிப்புக்களையும் ஒவ்வொரு மகனுக்கும் பிரித்து கொடுத்தார்கள் அவர் நினைவாக ..அந்த காலத்து ஆங்கிலம் கிறுக்கல் எழுத்து அதுவும் இங்க் பேனாவால் மட்டுமே எழுதுவார் ..ஆச்சர்யமாக இருந்தது ..
   எனக்கு எப்பவும் டைரி எழுதும் பழக்கமேயில்லை ..இங்கே ஒரு வாரத்தின் எல்லா நிகழ்வுகளையும் தொகுக்க இந்த தலைப்பை பயன்படுத்தினேன் :)

   ஆஷா போஸ்லேவும் நானும் இந்த கார்ட்டூன் காரெக்டர்ஸ் டாம் அன்ட் ஜெரி மாதிரி :) ஒரு நாளில் 5 தடவையாவது ஆஷா போஸ்லேவை பார்க்கிற இடத்திலெல்லாம் சீண்டலைன்னா எனக்கு தூக்கம் வராது :)

   எங்க இருவரில் நான் தான் ஜெரி மவுஸ் :)

   வருகைக்கும் தங்கள் நினைவுகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி

   Delete
  2. ////எங்க இருவரில் நான் தான் ஜெரி மவுஸ் :)///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்.. அவர் இதை இப்போ கேட்டாரா? கேட்டாராஆஆஆஆஅ?:).

   Delete
  3. ஒவ்வொரு ஆண்டும் ஓசி டயரி வரும்.கிடைத்த அன்று "இன்று டயரி கிடைத்தது" என்று எழுத ஆரம்பிப்பேன்.அதிகபட்சம் ஒரு வாரம்.அதன் பின் பக்கங்கள் காலிதான்.
   மூளையில் பதிந்து வைத்து எழுத்தில் கொணர்ந்திருப்பது அருமை

   Delete
  4. எனக்கு நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்ப்பதில் தனி ஆனந்தம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார் ..

   Delete
 22. டைரி எழுதுவது நல்ல பழக்கமே... அவைகளை நாளை நமது சந்ததிகள் படிக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லெர்ஜீ ..ஆமாம் இங்கே பதிந்து வைப்பதையும் ஒரு நாள் மகள் பிற்காலத்தில்படிப்பாள் என்ற நம்பிக்கை இருக்கு ..

   நான் டைரிஎழுதுவதில்லை ஆனால் முக்கிய சம்பவங்களை ஆல்பமாக்கி ஒரு ஸ்க்ராப் புக் போல் செய்து வைத்துள்ளேன் தேதி இடம் நாள் எல்லாம் எழுதி ,,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 23. வாத்து பற்றி நானும் ஒரு பதிவு விரைவில் போடனும்)))

  ReplyDelete
 24. நாட்குறிப்பு முன்னர் நானும் எழுதுவேன் இப்ப கொஞ்சக்காலம் அதை மறந்தாச்சு))) இனி அடுத்த வருடம் முதல் எழுத சிந்திக்கின்றேன்)) அதிராவை இப்படியா பழிவாங்க வேண்டும்)))

  ReplyDelete
 25. அரச குடும்பத்தில் பிறந்தால் அதிக தொல்லைதான் .

  ReplyDelete
 26. குண்டுவெடிப்பும் அரசியின் மனிதநேயமும் சிந்திக்க வேண்டிய விடயம். நாட்குறிப்பு மிக அழகாய் இருக்கு.

  ReplyDelete
 27. வாங்க நேசன் ,ஆமாம் 91 வயதிலும் வந்து விசிட் செய்து நலம் விசாரிப்பது பெரிய விஷயம் ..வாத்து :) அங்கேயும் குடும்பங்கள் வெளி வந்தாச்சா :)
  நிறைய பேருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கே :)
  அதிராவை சீண்டாட்டி பூஸ் குற்றமாயிடும் :) வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நேசன்

  ReplyDelete
 28. ஆன் பிராங்கின் டையரி படிப்பது போல இருந்தது

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ் :) ஆன் பிரான்கா :) உண்மையில் அந்த பெயரை எழுத நினைச்சேன் என்னமோ மனசுக்கு வலிக்கும் அவளின் படம் பழைய டைரி படம்லாம் பார்க்கும்போது ..
   இது சும்மா நிகழ்வுகளின் கோப்பு :)
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 29. ஏஞ்சல் பயணத்தில் இருப்பதால் தாமதம்....அதுக்குள்ள நிறைய கும்மி அடிச்சாச்சு போல....இனிதான் எல்லாம் பார்க்கணும்...

  டைரிக் குறிப்பு செம...நான் முன்பு கல்லூரிக் காலத்தில் எழுதியதுண்டு. அப்புறம் எழுதுவது இல்லை.

  உங்களுக்கு செம மெமரி ஏஞ்சல்! அதுக்கு முதலில் வாழ்த்துகள்! அதுவும் தேதி எல்லாம் நினைவிருக்கும் என்றால் பெரிய விஷயம். எனக்கெல்லாம் ரொம்ப மெமரி புவர். ஹிஹிஹி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா ,,அந்த மெமரித்தான் அட்வான்டேஜ் அண்ட் டிஸ் அட்வான்டேஜ் எனக்கு :)
   புது பதிவு இன்னும் வரல்லியே உங்க பக்கம்பயண பிசியா

   Delete
 30. ராக்கி தாத்தாவின் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! தாத்தாவின் குறும்பு இந்த வயதிலும் ஹஹஹ் இளைஞர்!!! அந்த இளைஞருக்கும் வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள் ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்...

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் சந்திக்கும்போது சொல்வேன் கீதா ..அவருக்கு நிக்க வச்சி பேசுவதில் தனி சந்தோஷம்

   Delete
 31. வாத்துகள் வாவ்!! வெள்ளை வெளேர்...வாஷிங்க் பௌடர் நிர்மா நு முன்னடி எல்லாம் வெள்ளை குட்டி தேவதை/கள் ஃப்ராக் விரிய அழகாக ஆடி விளம்பரம் தருவார்களே அது போல நிர்மாவிற்கு விளம்பரமோ என்று இந்த வாத்துகளும் அழகோ அழகு!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா .விடுமுறை பயணத்தில் தாமதம்னு புரிந்துகொண்டேன் நோ ப்ராப்ளம் :)
   ஆமாம் குட்டிஸ் அழகோ அழகு குட்டி பஞ்சு பந்து மூட்டைகள் தான் அழகா நீந்தி வராங்க

   Delete
 32. குழ்ந்தைகள் தெய்வத்திற்குச் சமம்
  என்பதுதான் எவ்வளவு பொருத்தமான உவமை
  இல்லையெனில் எனது காலைத்தருகிறேன்
  என மிக இயல்பாகச் சொல்லமுடியுமா
  நாட்குறிப்பு கவித்துவமாய்...
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete