அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/19/17

போவோமா ஊர்கோலம் ..

ராஜி பக்கம் ஒரு படத்தை அனுமதியுடன்  சுட்டு எடுத்து வந்து அதை குவிலிங் செய்து நட்பு ஒருவரின் பிறந்த நாளுக்கு பரிசளித்தேன் :)

                                                          என்வலப்பில் வைத்தப்பின்                          


நாங்க தினமும் வாக்கிங் செல்லும் பகுதி கால்வாய் பக்கம் அமைந்துள்ளது ..ஒவ்வொரு கால்வாயிலும் நிறைய படகு வீடுகள் செல்லும் .சில ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் வருடம் முழுதும் கூட மக்கள் தங்கி  இருப்பாங்க அதிலேயே
 ..சில கால்வாய்களில் மடை இருக்காது ஆனா பலவற்றில் பயணிகள் இந்த மடையை கடந்தே செல்ல வேண்டும் .. படத்தில் காணப்படுவது மடை ஆங்கிலத்தில் locks என்பார்கள் .Boats and ships get through a waterway by going into a lock, which is a big chamber in the water with moveable gates at each end, then waiting as a valve is opened and the water from that lock flows into the next lock (or next body of water if just one lock), raising or lowering the boat automatically.

நீர்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற அல்லது மறிக்க உதவும் மடை..இது நான் நடந்து போகும்போது சுட்டது :)

                                                                                

                                                  
வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை
மடை என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவு . இது மரம் அல்லது இரும்பினால் ஆனது . படகுகளில் பயணிக்கும்போது ஆங்காங்கே கைகளால் இம்மடைகளை திறக்கவும் அல்லது மூடவும் வேண்டும்  இங்குள்ள பிரித்தானியருக்கு பொழுதுபோக்கு கோடையில் குடும்பமாக இந்த மாதிரி படகுகளை வாடகைக்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்கு எடுத்து செல்வார்கள் .இதுக்குள்ள டிவி ப்ரிட்ஜ் காஸ் குக்கர் தூங்க மெத்தை எல்லாம் அமைந்த ஒரு குட்டி நீரில்நடமாடும்  வீடுதான் இந்த boats ..அதில் அவங்க  வீட்டு பைரவர்கள் கூண்டில் வளர்க்கும் பறவைகள் மற்றும் பூஸார்களும் சிறு தொட்டிகளில் செடிகளும் உடன் பயணிப்பர்  ..ஆறு  நபர்கள்  தங்க  ஆகும்  வாடகை செலவு 500 -800 பவுண்ட்ஸ் ..இது 4-5 நாட்களுக்கு மட்டும் ..ஒரு டிவி ஜர்னலிஸ்ட் இப்படி ஒரு படகை வாங்கி அதில் குடியிருக்கார் ..காணொளியில் பார்க்கவும் ..


                                                                             
இவரைப்போல சிலர் வீடு வாங்க ரொம்ப செலவாகுதுன்னு 20,000பவுண்ட்ஸ் கொடுத்து செகண்ட் ஹாண்ட் போட்ஸ் வாங்கி அதை தங்களுக்கேற்றவாறு வடிவமைத்து நீரிலேயே வாழறாங்க !! லண்டன் பகுதியில் மட்டும் மக்கள் கிட்டத்தட்ட  10,000  இந்த படகுவீடுகளில் நிரந்தரமாக குடியிருக்காங்க .solar தகடுகள் அப்புறம் கியாஸ் சிலிண்டர்கள் சமையல்  எரிசக்தி தேவைக்கு பயன்படுத்தறாங்க ..


நாங்களும் வெயிலிலும் குளிரிலும் 10000 ஸ்டெப்ஸ்க்கு மேலே  நடக்கிறோம் :) 
                                                                                     அப்படியே வாங்க எங்க தோட்டத்தில் மலர்கள் அழகா மலர்ந்திருக்கு வந்து பார்த்திட்டு போங்க :)
                                                                                 
 


 

என்வலப்பின் வைக்கும் முன் 

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

69 comments:

 1. என்னே மலர்கள்...!!

  அசர வைக்கிறது...!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி ..இந்த வருடம் இங்கே வெயிலைவிட மழை அதிகம் நம்மூர் காய்கறிகளை பயிரிட முடியலை அதனால் மலர்செடி விதைகள் மட்டும் தூவி விட்டிருக்கேன் .சில செடிகள் அங்கேயே விட அடுத்த ஆண்டு முளைக்கும் ..இப்பவே நிறைய வண்ணத்திப்பூச்சிகள் வர துவங்கிட்டாங்க

   Delete
 2. நோஓஓஓஓஓஓஒ மீ 2ண்ட்டாஆஆஆஆ:)... என்வலப்பில் வச்சபின்னும், வைக்க முன்னும் அழகோ அயகூ.. கார்ட்:).

  ReplyDelete
 3. ///நீர்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற அல்லது மறிக்க உதவும் மடை..இது நான் நடந்து போகும்போது சுட்டது :)///

  ஓ இப்போதான் தெரியும் “மடை” எனில் என்னவென்று. “மடை திறந்த வெள்ளம்போல்” எனப் படிச்சிருக்கிறேன் கதைகளில்.. ஆனா மடை பற்றி பெரிதா யோசிக்கவில்லை.

  இன்னொன்று நம் கோயில்களில்.. சுவாமிக்குப் படைப்பதையும்.. மடை வைத்தல் என்போம்.

  ReplyDelete
  Replies
  1. மடை திறந்து தாவும் நதியலை நானா பாட்டு நினைவுக்கு வருதா மியாவ் :)
   புது வார்த்தை கற்று கொடுத்தேன் என் அக்கவுண்டில் பணத்தை போட்டுடுங்க

   Delete
 4. ///நாங்களும் வெயிலிலும் குளிரிலும் 10000 ஸ்டெப்ஸ்க்கு மேலே நடக்கிறோம் :) // எதுக்கு நடக்கிறீங்க?:).. இன்னொரு டவுட்டூஉ.. “நாங்களும்” எனில்... வேறு ஆரு 10000 ஸ்ரெப்ஸ் நடக்கிறாங்க:).

  ReplyDelete
  Replies
  1. வூட்டுகாரர் வேலைக்கு போய்விடுகிறார் குழந்தையும் பள்ளிக்கு சென்றுவிடுகிறார் அப்ப நம்ம அம்மணி யார் கூட வாக்கிங்க் செல்லுகிறார் இப்படி எனக்கு கூட சந்தேகம் வரலை ஆனால் அதிராவிற்கு வந்திருக்கிறது இந்த சந்தேகத்தை போக்கிறவர்களுக்கு ஆயிரம் தம வோட்டு போடப்படும்

   Delete
  2. கர்ர்ர்ர் :) சந்தேகம் டவ்ட்டலாம் வரலைன்னா அது அந்த குண்டு பூனையே இல்லை :)
   சாட்டர்டே சண்டே அப்புறம் ஈவ்னிங் நேரம் கிடைக்கும்போது ஒரு இளஞ்சோடி வாக் போவாங்க :)..இப்போ டவுட் க்ளியர் ஆகியிருக்கும் அதனால் அந்த தம பத்திரமா இருக்கட்டும் :)

   Delete
 5. பூக்கள் அழகு, அதென்ன போனவருடம் தவறிய உருளைக்கிழங்கு முளைச்சிருக்கோ.. புல்லு ஏதும் பிடுங்கவில்லை எனத் தெரியுதே...

  நாங்களும் இன்னும் கார்டினில் கை வைக்கவில்லை:).

  ReplyDelete
  Replies
  1. Yes .oru corner la buttercups irukku .grass cut pannaan adhuvum poyidum adhaan antha corner vittu vachen

   Delete
  2. இந்த சீசன் கொஞ்சம் மழை அதிகம் அதான் பூக்கள் விதை தூவி விட்டாச்சு அது எல்லா இடத்திலும் வளர்ந்து இவரை டச் பண்ண கூடாதுன்னு சொல்லிருக்கேன் ..வீட்ஸ் எடுக்கறேன்னு நல்ல செடிலம் எடுத்துடுவார் :)

   Delete
 6. வியக்க வைக்கும் செய்திகளும், படங்களும், காணொளியும் அழகோ அழகு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..இந்த படகுகள் அடிக்கடி காணும் காட்சி .அதுவும் சம்மரில் நல்லா ரசிக்கலாம் உள்ளே அமர்ந்து .காணொளி தெரிந்ததா ,மிக்க நன்றி.

   Delete
 7. படங்கள் நல்லாருக்கு. போட் வீடு அமேசிங். 10,000 ஸ்டெப்சா... நடங்க நடங்க நடந்துக்கிட்டே இருங்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் ..நாங்களும் ரெண்ட்டுக்கு எடுத்து போகும் யோசனை இருக்கு அந்த மடை திறப்பது மட்டும் கொஞ்சம் வேலை அதிகம் ..சில போட்ஸ் ஒரு நாள் ட்ரிப் போல பிரயாணிக்கலாம் 10 பவுண்ட்ஸ் கொடுத்து உள்ளே டீ ஸாண்டவிச் தருவாங்க நாம் உக்கார்ந்து வேடிக்கைபார்த்திட்டே போலாம் மக்சிமம் 5 மணிநேரம் இருக்கலாம்

   14,000 கூட போயிருக்கேன் :)

   Delete
  2. நான் நிறைய நாள் 20,000லாம் தாண்டியிருக்கேன். ஒருநாள் 32,000 cross பண்ணினேன். இன்ஸ்ட்ரக்டர் 5கிமிக்கு மேல ஒருநாள் நடக்கவேண்டாம் அப்படின்னு சொன்னார் அளவுக்கு அதிகமாக நடக்கறது வேஸ்ட்னு சொல்லியிருக்கார்

   Delete
  3. ஆஆ !! 20,000 அம்மாடியோ .. ஆனால் ஒரு அளவுக்கு மேலே நடப்பதால் மிகவும் டயர்ட் ஆகும் ..14,000 போதும் ..
   எனக்கு 10,000 போதுமானது ..நான்தான் காப்பிக்கே சர்க்கரை சேர்க்கறதில்லையே :) ..
   இந்த நடை கூட கணவருக்கென ஆரம்பிச்சது ..ரொம்ப இனிப்பு பிரியர் .இட்லி தோசைக்கு நெய் சர்க்கரை தொட்டு சாப்பிட்டா என்னாவது :) ப்ரெஷர் எகிறிடுச்சி அதான் கொஞ்சம் சாப்பிட விட்டுட்டு நடக்க வைப்பேன்

   Delete
 8. அசத்தல் படகு வாழ்வு...
  உங்கள் வீட்டுப் பூக்கள் .. கவிதை போல அழகு

  ReplyDelete
  Replies
  1. வாங்க மது ..இங்கே டிராவல்லர்ஸ் என்றொரு வகையினர் இருக்காங்க சற்றேறக்குறைய நம்மூர் நாடோடிகள் மாதிரி அவர்கள் வாழ்வே இந்த படகு வீட்டில்தான் ..இப்போ அரசாங்கம் அவங்களை கொஞ்சம்ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் கொடுத்து வச்சிருக்கு ஏன்னா அவங்க பிள்ளைங்க ஸ்கூலுக்கு போவதில்லை .மலர்கள் சம்மர் அழகு :)

   Delete
 9. சாலை வழியைச் சோலை வழி
  எனச் சொல்லலாம் போல
  படங்களுடம் பதிவு
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அண்ணா அழகான தலைப்பை சொல்லியிருக்கீங்க சோலை வழி :) மிக்க நன்றி அண்ணா

   Delete
 10. வாழ்க்கையை இனிமையாக்க இந்த படகு வீடு உதவும் போலிருக்கே !
  #athiraMay 19, 2017 at 5:29 PM
  பூக்கள் அழகு#
  பூஜார் வந்தால் தோட்டம் பக்கம் விட்டுறாதீங்க ,பூக்கள் ஜாக்கிரதை :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பகவான்ஜி ..இங்குள்ளோர் நிறைய பேர் ரிட்டையர் ஆனதும் நண்பர்கள் குடும்பமா இப்படி போட்ஸ் வாடகைக்கு எடுத்து ஒரு மாதம் டிராவல் செய்வாங்க அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு :)
   ஆஹா நோ நான் கேட்டை பூட்டி வச்சிட்டேன் பூசார் குதிக்க முடியாது

   Delete
 11. ///இதுக்குள்ள டிவி ப்ரிட்ஜ் காஸ் குக்கர் தூங்க மெத்தை எல்லாம் அமைந்த ஒரு குட்டி நீரில்நடமாடும் வீடுதான்///


  இவ்வளவு இருந்தும் என்ன அழகான ஒரு பொண்ணுகூட இந்த போட் ஹவுஸில் இல்லையே ஹும்ம்ம் இந்த கருத்தை படிச்சதும் ஸ்விட் 16 நான் இருக்கேனே என்ரு தேம்ஸ்நதி கரையோரம் இருந்து சொல்ல வேண்டாம் இங்கு நான் சொன்னது அழகான பொண்ணை

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அவங்க போட்
   வீடை மட்டும்தான் தருவாங்க நாமதான் குடும்பத்தோட குடித்தனம் போகணும் அங்கே :)
   ..தேம்ஸ் நதில பெரிய சத்தம் கேக்குது எனக்கு உங்களுக்கு கேக்குதா :)
   அநேகமா பூனை ஏதாவது படகை பிடித்து நீந்தி எங்க ஏரியாக்கு வரக்கூடும் ஸ்டே அலெர்ட்

   Delete
  2. ஆமாம் ஏஞ்சல் எனக்குக் கேட்டுச்சு!!! மூச்சு இரைக்குதாமே பூனைக்கு!!!அதான் அவ்வளவு சத்தம் கேக்குதோ...ஹஹஹ்

   கீதா

   Delete
 12. ஹ்லோ ஏஞ்சல் இப்படி ஒரு படகை வாங்கிவிட்டு அப்படியே ஒரு 4 ப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பின்னா அப்படியே ஒரு நடை வந்துட்டு பொவ்வோம்ல

  ReplyDelete
  Replies
  1. ஹை ..நல்ல ஐடியா ..20,000 டாலர்ஸ் அனுப்பிடுங்க ..நான் வாங்கி எல்லா அரேஞ்மெண்ட்ஸும் செஞ்சி தயாரா வைக்கிறேன் :)
   நீங்க வருஷ வருஷம் வரலாம் ..

   Delete
 13. பூக்கள் அழகு இப்படியான படகு வீடு கேரளாவில் ஆலப்புழாவிலும் அதிகம் இருக்கே)))

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நேசன் .பூக்கள் அதிக பட்சம் 3-4 மாசம்தான் அதோட அக்டொபர்ல காணாப்போயிடும்
   ஆலப்புழை ..போட்ஸ் ஒரே இடத்தில இருக்கும் இல்லையா இது இங்கிலாந்து முழுதும் பயணிக்கலாம் அதுக்கு தனி மேப் இருக்கு

   Delete
 14. மடைதிறக்க வெள்ளைரார்கள் செய்து கொடுத்ததை நம்நாட்டில் பல நீர்த்தேங்கங்கள் பராமரிக்காமல் இப்ப தூர்நாற்றம் வீசுகின்றது!

  ReplyDelete
  Replies
  1. நம்மூர்காரங்க அந்த இடத்தை குப்பை கொட்டி வைக்க இல்லையா பயன்படுத்தறாங்க ..வேதனை

   Delete
  2. நேசன் நம்மூர்ல முதல்ல தண்ணியே தெரியாதே! ஏஞ்சல் சொல்லிருப்பதைப் போல ஒரே குப்பையாத்தானே மேல தெரியும்....வேதனை குளங்கள் நதிகள் கூட இப்படித்தான்...

   கீதா

   Delete
 15. நானும் நடக்கின்றேன் இன்னும் ஒளியைக்கானவில்லை )))

  ReplyDelete
  Replies
  1. நேசன் இங்கேயும் ஒளி வரும் போகும் ரெண்டு நாளா மழை கொட்டுது

   Delete
  2. கொடுத்துவைச்ச்வங்க பா இங்க ஒரே ஓளியா இருக்கே!!!!

   கீதா

   Delete
  3. எங்களுக்கு ஒளி எட்டாக்கனி

   Delete
 16. ஏஞ்சல் போட் வீடுகள் என்ன ஒரு அழகு இல்ல....மக்கள் என்னமா எஞ்ஜாய் செய்கிறார்கள். இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. என் மகனின் அத்தை லண்டனில் மிடில்செக்ஸில் தான் இருந்தாங்க அங்கு வீடும் இருக்கிறது இப்போது இங்குதான் அவர்கள் செட்டில்ட் என்றாலும் அந்த வீடு இன்னும் இருக்கிறது அங்கு அவ்வப்போது சென்று வருகிறார்கள். அங்கு இப்போது ப்ரெய்ன் ட்யூமருக்கு சர்ஜரிக்கு வந்திருக்காங்க அங்க தான் இருக்காங்க.

  பாருங்க போட்டுக்கு இணையா வாத்துகள் கம்பீரமா போகுது பாருங்க. அதுங்க நினைச்சுக்கும்..."பாரு மனிதர்களே நீங்க எல்லாம் காசு கொடுத்து இப்படி போட்ல மிதக்கிறீங்க எங்கள பாருங்க எந்தக் காசும் கொடுக்காம ஜாலியா மிதக்கறோம்னு..." ஹஹஹ்...

  மடையைப் பார்த்ததும் எங்க ஊர் வாய்க்கால இருக்கும் சின்ன சின்ன மடைகள் நினைவுக்கு வந்துச்சு. அப்ப எல்லாம் இப்படி மடை கட்ட மாட்டாங்க....கல்லு போட்டு, தடுப்பு போட்டு மறைப்பாய்ங்க வயல்லுக்குத் திருப்பி விட...சின்ன சினா வாய்க்கால்தான். பெரிய கால்வாய்/வாய்க்கால்ன இப்படி...எங்க ஊர்ல இருக்கும். நாங்க அப்போ இந்த வாய்க்கால், கால்வாய்கள்ல எவ்வளவு விளையாடிருக்கோம்...ஏன் என் ம்கன் பிறப்புறம் அவன் 1 ஆம் வகுப்பு வரை விளையாடிருக்கோம்...அவன் அப்படி எஞ்சாய் பண்ணுவான்...வாய்க்கால குதியாட்டம் போடுவான்...தண்ண்ப் பாம்பு எல்லாம் வரும். அவன் கையாலேயே பிடிப்பான்.

  சூப்பரா இருக்கு ஏஞ்சல் நீங்க வாக்கிங்க் போகும் ஏரியா....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ மிடில்செக்ஸ் ஏரியா லிட்டில் இந்தியா மாதிரியாச்சே நானும் முந்தி போயிருக்கேன் .நம்ம பாரிமுனை ஏரியாக்கு போன பீலிங் :)

   வாத்து களுக்கும் ஸ்வான்சுக்கும் செம ஜாலி லைப் :) போட்ல போக நாம 500-700 பவுண்ட்ஸ் இதுங்க ஜாலியா நீந்தி என்ஜாய் செய்றாங்க
   மடை நான் ஊரில் பார்த்ததில்லை ஏற்றம் மட்டும் பார்த்திருக்கேன் .அருமையான நினைவுகள் உங்களுடையவை .
   மூன்று இடங்க சிலது 10 மினிட்ஸ் ட்ரைவ் போயிட்டு அங்கும் நடப்போம் சிலது அஞ்சு நிமிஷ நடையில் வரும் ஏரியா
   அகா மொத்தம் அமைதியா இருக்கும் நிறைய நாலுகால் செல்லம்ஸ் போவாங்க

   Delete
 17. மகனும் சொல்லிக் கொண்டிருக்கிறான். தான் கொஞ்சம் செட்டில் ஆனதும் இப்படிப் படகு வீட்டுல நாம போணும்னு....சொல்லுவான் அம்மா நடக்குதோ இல்லையோ கனவு கண்டு சொல்லிக்குவமே! என்னிக்காவது நடக்காதா என்ன...என்பான்...

  தோட்டத்துப் பூக்கள் ரொம்ப அழகு!!! கலர்ஃபுல் ஏரியானு சொல்லுங்க....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. போய்ட்டு வாங்க .சில நேரம் செலவை பற்றி யோசிக்க கூடாது ..நல்லா என்ஜாய் செய்யலாம் .நாங்களும் ஜெசி மல்டியோட 3 நாள் போக ஐடியா இருக்கு :)

   தாங்ஸ் எங்க தோட்ட மலர்களை ரசித்ததற்கு ..இங்கே field மலர்களின் விதைகளை தூவினா போதும் எல்லாம் அழகா முளைச்சிடும்
   இப்ப நிறைய தேனீக்கள் வருது பட்டரபிலைஸ் வராங்க :)

   Delete
 18. பாருங்க போட் வீடு மட்டுமா அதுலயே ஊர் சுத்திடலாம் பாருங்க....சூப்பர்ல...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா இங்கே காரவான் ரோட்டிலும் இந்த படகுகள் நீரிலும் பயணிக்க ரொம்ப ஈஸி

   Delete
 19. படகு வீடுகள்! ஆஹா... சுவாரஸ்யம்தான். கொசு கடிக்காதோ!! (நம்ம புத்தி!)

  பூக்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க ஸ்ரீராம் :) ..இந்த படகு வீடுகள் ரிப்பர் செய்றா இடம் எங்களுக்கு அருகில்தான் ..தினமும் பார்ப்பேன் .
   கொசு கடி இருக்கும் ஆனா இங்கே நம்மூர் கொசு மாதிரி வில்லி கொசுக்கள் இல்லை அடுத்தது இங்கே நெட் மஸ்கிட்டோ க்ரீம் எல்லாம் இதுக்குன்னே விற்கிறாங்க .டான்க்ஸ் :) எங்க தோட்ட பூக்களை ரசித்ததற்கு

   Delete
 20. ஒரு முறை பார்க்கில் நடை பயிலும் போது இரண்டு மூன்று நாட்களாக ஒரு குடும்பம் அங்கே தங்குவதைக் கவனித்துப் பதிவில் எழுதினேன் அதற்கு பின்னூட்டமாக திரு அப்பாதுரை அவர்கள் ஊரில் ஒரு பணக்காரர் இப்படி வெட்ட வெளியில் தங்குவதையும் குறிப்
  பி ட்டிருந்தார் கொல்லத்தில் படகு வீடுகள் பார்த்திருக்கிறேன் தங்கினதில்லை. நமக்குக் கட்டுப்படியாகாது

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் ..இங்கே வெளிநாடுகளில் பலர் ஒரு காம்பிங் டென்ட் ,மெத்தை மற்றும் சில பொருட்கள் சமைக்க க்ரில் செய்ய என்று எல்லாமே போர்ட்டபிள் மடித்து சுருட்டி செல்லும் வகையில் தான் பயணம் செல்வார்கள் ..மேலும் நிறைய பேருக்கு இப்படி வெட்ட வெளியில் காம்பிங் செய்வது ஒரு பொழுது போக்கு .கொல்லம் படகு அப்போவே 40,000 என்று கேள்வி ..
   இங்குள்ள படகை வாடகைக்கும் எடுக்கலாம்

   Delete
 21. குவிலிங் கை வேலை அழகு.
  படகு வீடும், மலர்களும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி

   Delete
 22. அழகழகான படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..வருகைக்கும் படங்களை ரசித்ததற்கும் நன்றி

   Delete
 23. லண்டனின் ஒரு பகுதியை சுற்றிக் காட்டி இருக்கீங்க... :) அந்தப் பூக்கள் எல்லாம் அழகு..!! அடுத்த மாசம் உங்கு எலெக்‌ஷன் இல்லையா? அதைப் பற்றியும் எழுதுங்க..! படிக்க ஆவல்

  ReplyDelete
  Replies
  1. வாங்க..நீங்க பார்த்தது கடுகு அளவே .. நிறைய நேரம் படம் எடுக்கறதை விட ரசிப்பதில் டைம் போயிடும் ..
   எலெக்க்ஷனா :)எப்படியும் லேபர் அவுட் :)

   Delete
 24. ஓஒ இது ப்ரான்ஸ் நாட்டை சுத்தி ஓடுற செய்ன் நதில அதிகமா பாத்திருக்கேன்.அண்ணன் வீட்டுக்கு பின்னாடி ரெண்டே நிமிசம் நீங்க சொன்ன இத்தனை காட்சிகளையும் பாக்குறது ஒரு காலத்து பொழுதுபோக்கா இருந்திச்சு.ஸ்கூல் ல இருந்து வந்து இந்த ஆத்தக்கரைப்பக்கம் உள்ள பெஞ்ச் ல போய் உக்காருவோம் வீட்டுக்கு போனால் முதல் போறாக்கள்தான் சமைக்கவேணும் அதால இங்குட்டு போய் ஒளிச்சிருந்து பாக்குறது.அண்ணன்கள் 5 பேரில ஒருத்தன் வந்தாலும் பாவம் எண்டு ஓடிப்போய் சமைச்சுக்குடுக்குறது.தங்காவுகள் ,அக்கா வந்தால் தெரியாதமாதிரி இந்த கப்பல் போறதை பாத்துக்கொண்டு நிக்க வேண்டியதுதான்.நிறய தடவை ஒராளிட்ட ஒராள் மாட்டி இருக்கோம்.பின்ன எல்லாரும் போய் ஒரு இடத்திலயே ஒளிச்சால்.பொறுங்கோ தங்காவுகளுக்கு சொல்லி சிரிக்க போறன்.ஞாபக படுத்தீட்டீங்கள்.தோட்டம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) இனிய நினைவுகள் இல்லையா சுரே ..அப்பவே அவ்ளோ அட்டகாசம் :)
   நிறைய பிள்ளைங்க அக்கா அண்ணா தங்கைன்னு இருந்தாலே ஜாலிதான் ..
   என் பதிவு நினைவுகளை மீட்டியெடுத்ததில் மிக்க சந்தோஷம் :) இம்முறை ஒன்லி மலர்கள் தான் இப்போதைக்கு வெயில் காணவே காணோம் ..பொடேடோஸ் மட்டும் வளருது

   Delete
 25. ஆஹா அழகு க்வில்லிங்.நீண்ட நாட்களுக்கு பிரகு என நினைக்கிறென்.பூக்களும் என்ருமே அழகு தான் .படகு வீடு என்க்கும் பிடிக்கும் பார்கலாம்.கேரளா போகும் போது போக வேண்டும் என பார்ட்டனருக்கு ஆசை.

  ReplyDelete
  Replies
  1. மீரா பாலாஜி !!நீங்க முகப்புத்தக மீரா பாலாஜியா ??
   வாங்க ..quilling என் ஆங்கில பக்கத்தில் போடுவேன் அப்பப்போ இங்கும் பகிர்கிறேன் ..
   நான் கேரளா படகு வீடுகள் பார்த்ததில்லை கேள்வி மட்டுமே ....சென்று வாங்க ஒரு ட்ரிப் ..இதெல்லாம் ஒரு சந்தோஷமே ..டயர்ட் பிசி வாழ்க்கையில் ஒரு ரிலாக்சேஷன் ..மிக்க நன்றி மீரா

   Delete
 26. நானும் பல நேரங்களில் நினைத்ததுண்டு ஒருநாளாவது படகு வீட்டில் உறங்கவேண்டும் என்று...

  பூக்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லெர்ஜீ :) இந்த படகு வீடுகள் சில ஆங்காங்கே நிரந்தரமா நிற்கும் எங்க வீட்டுக்கு கொஞ்சம் தொலைவில் 5 வருஷமா ஒரு பெரியவர் அவரது வளர்ப்பு செல்லத்துடன் ஒரு படகு வீட்டில் இருக்கார் ...அங்கங்க MOOR செய்ய வளையங்கள் இருக்கும் அதில் கயிற்றால் கட்டிடுவாங்க ..எங்களுக்கும் இப்படி ஒரு இரண்டு நாளாவது வாடைக்கு எடுத்து படகு வீட்டில் குடியிருக்க ஆசை ,
   மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 27. ஆலப்புழாவில் சென்றிருக்கேன் படகு வீட்டில். இங்கு இருக்கா எனத்தெரியல. பார்க்கனும். நல்லா இருக்கும் இதில் போக. இம்முறை வெதர் எல்லாமே மாற்றிவிட்டது. சில மரங்கள் கூட பட்டுவிட்டது. இந்த வெதரால் ஒன்னுமே செய்யல இம்முறை. இந்த கிழமைதான் 30 சி க்கு வருது. நல்ல வெயில் என சொன்னாங்க. லீவு நாளும் கூடவே. எல்லா இடமும் க்ரில்தான் போடப்போறாங்க. எங்க ஏரிக்கரை போகமுடியாதபடி ஒரே சனமா இருக்கும்.
  அழகான படங்கல் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..இங்கேயும் வெயில் ஒளிஞ்சு விளையாடுது ..நேற்று கொளுத்துச்சி இன்னிக்கு இருட்டு ..என்னால் ஒரு காய்கறியும் போட முடியலை ,,இங்கே ஏரிக்கரையில் க்ரில் போடா தடா ..க்ரில் போட தனி இடம் பார்க் இருக்கு அங்கே தான் போவாங்க எல்லாரும் .மிக நன்றி ப்ரியா வருகைக்கும் கருத்துக்களுக்கும் .

   Delete
 28. க்வில்லிங் கார்ட் ரெம்ப அழகா செய்திருக்கீங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அந்த படம் ராஜி பக்கத்தில் சுட்டு எடுத்து செய்தது ..எம்ப்ராய்டரி டிசைன் ..நீங்க ரொம்ப நாளா கார்ட்ஸ் செய்யலை ஸ்டார்ட் பண்ணுங்க சீக்கிரமா

   Delete
 29. பூக்கள் எல்லாம் அழகு
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க மொஹமட் ..வருகைக்கும் படங்களை ரசித்ததற்கும் நன்றி

   Delete
 30. Replies
  1. முதன்முறையா வந்திருக்கீங்க வாங்க சார் ..வருகைக்கும் படங்களை ரசித்ததற்கும் நன்றி .

   Delete