அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/18/17

அன்புள்ள சித்தப்பாவுக்கு....                                                                                    

முன் குறிப்பு

 ..தோட்டத்தில் பறவைகளுக்கு உணவிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு புறா கடிதம் ஒன்றை என்னிடம் தந்தது அதை பிரித்து படித்தேன் அனுப்புனர் பெறுநர் முகவரி  இல்லை ..நான் வலைப்பதிவர்னு புறாவுக்கு தெரிஞ்சிருக்கும்போல :) அந்த கடிதத்தை இங்கே பகிர்கிறேன் ..


அன்புள்ள சித்தப்பாவுக்கு நலம் நலமறிய ஆவல் ..உங்களுக்கு கடிதம் எழுதணுமென்று நீண்ட நாள் ஆசை
..உங்களை நான் சித்தப்பா என்று அழைக்க காரணம் நீங்கஅப்படியே எங்க அப்பா மாதிரி இருப்பதுதான் ஒரே காரணம் .என்று நினைச்சா அது தப்பு நீங்க எங்கப்பாவை விட கொஞ்சூண்டுதான் வயதில் இளையவர் அதனால் பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு சித்தப்பான்னு கூப்பிடறேன் ...


சித்தப்பா அப்போ எனக்கு சின்ன வயசுதான் ஆனாலும் இன்னும் பசுமையா நினைவிருக்கு நம்மூர்  சரஸ்வதி தியேட்டர்ல நீங்க நடிச்ச  படம் போட்டாங்கன்னு அப்பா அம்மா தம்பி எல்லாருமா  போனோம் .. எல்லாரும் விசில் அடிச்சாங்க எனக்கு படம் கதை ஒண்ணுமே தெரில ஆனா நீங்க நடந்து தலையை ஸ்டைலா திருப்புவீங்க வாயில் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பீங்க பார்க்க ஜாலியா இருந்தது ..சிகரெட் தீமைலாம் அப்போ தெரில ஆனா ரசிச்சோம் .அப்போ ஸ்கூலிலும் உங்களைப்பற்றி பேசுவாங்க பரணியும்  பரசுவும் இனிப்பு சிகரெட் மிட்டாயை அதே மாதிரி தூக்கிப்போட்டு விளையாட்டு காமிச்சாங்க ..அப்புறம் சித்தப்பா நாங்க உங்க படங்கள் நிறைய பார்த்தோம் ஒரு காலத்தில் ..எனக்கு ரொம்ப பிடிச்சது   ,பிள்ளயாரப்பா னு யானைக்குட்டி கூட நடிச்ச படமும் 
அஞ்சிலிருந்து  ஐம்பது வரையும் தமன்னா  ஒரு கேள்விக்குறியும்தான்.. அப்போல்லாம்  அது ஒரு பொழுதுபோக்கு  ...அப்பா உங்களை மாதிரியே பெரிய காலர் வச்ச கட்டம்போட்ட சர்ட் போடுவாங்க அம்மாவுக்கு உங்க பட ஹீரோயின்ஸ் கட்டற புடவை ரொம்ப பிடிக்கும் . நான்கூட உங்க கூட நிறைய படத்தில நடிச்சவங்கள தான்  நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நினைச்சேன் .
                                    
                        அப்புறம் ஒரு படம் உங்களுது ரிலீஸ் ஆச்சு  அங்கிள்  அங்கிள்னு ஒரு பொண்ணு கூப்பிடும் அதில் சித்தி ....சித்தின்னா அச்சோ அவங்க இல்லை :) இது உங்க மனைவி ..அவங்க  ஒரு காட்சியில் வந்தாங்க அப்புறம் அந்த காட்சிகளை எடிட் செஞ்சிட்டு உணவு பரிமாறும் கைகளை மட்டும் காட்டினாங்க .சித்திக்கு பொதுவில் முகம்காட்ட ஆசையில்லையாம் ..அதுமாதிரிதான் தங்கச்சிங்களையும் காட்டாமையே வளர்த்திங்க ...அந்த சாமி படத்தை  கூட விடலை எல்லாரும் உங்களுக்காகவே அதையும் பார்த்தாங்க .. ரசிகர்களுக்கு .உங்க மேலே ஒரு தனி மதிப்பு  ஆரம்பிச்சது ..  அப்புறம்  சித்தப்பா  நீங்க  கமலா லதிகா கூட நடிச்ச படங்களையும் பார்த்தோம்...


அப்புறம் உங்க கூட ஹீரோயின்சா நடிச்ச எல்லாரும் உங்களுக்கு அம்மாவா அக்காவா நடிச்சது  சிரிப்பா வந்தது 
உங்க படத்து பாட்டெல்லாம் எல்லார் வீட்டு ரேடியோலையும் டேப் ரெக்கார்டலையும் ஒலிக்கும் ..அந்த பெரிய கண்ணனும் நீங்களும் நடிச்ச காமெடி காட்சிங்களாம் ரொம்ப பிரபலமாச்சி ..

என் ப்ரண்டு ஒருத்தி 100 போஸ்ட் கார்ட் உங்க படம் மட்டுமே போட்டது வச்சிருந்தா ..எனக்கு கூட ஒண்ணு தந்தா.அப்புறம்அந்த படத்தில்அங்கிள்னு கூப்பிட்ட  பொண்ணே உங்க கூட ஹீரோயினா நடிச்சிச்சு ..அது காலத்தின் கோலம் அதையும் ஏத்துக்கிட்டாங்க  ரசிக சிகாமணிஸ்..அப்போ தியேட்டர்ல உங்க பட முதல் காட்சிக்கு காசு பூ  ரூபா நோட்டு ஒரு ரூபா காயின்ஸ்லாம்விழும் ...ஆஹா சித்தப்பா எவ்ளோ பேர் மனசில் இருக்கார்னு நினைச்சிப்போம் .. எல்லா பொண்ணுங்களும் குர்த்தா போட்டு கழுத்தில் ருத்ராட்ஷ மணியெல்லாம் டிஸைனா போட்டு சுத்தினாங்க .. இப்பிடி நல்லாத்தான் போயிட்டிருந்தது திடீர்னு யார் உங்க மனசை கெடுத்தாங்கன்னு தெரில ..ஒரே பஞ்சு பஞ்சா பேச ஆரம்பிச்சீங்க   எனக்கு புரிஞ்சு மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும் .இள வட்டங்கள் .உங்கள மாதிரி தலை முடிய பங்க் விட்டு வளர்த்தாங்க உங்கள மாதிரி பலூன் பேண்ட் போட்டாங்க திடீர்னு விபூதி நெத்தில முழுசா தீட்டிக்கிட்டு வந்தாங்க  உங்க பஞ்சு பேச்செ கேட்டு நிறைய பேர் தறிகெட்டு திரிஞ்சாங்க  அரசியல் அடுத்த பிரதமர்னுலாம்  பேசி திரிஞ்சாங்க .இதெல்லாம் கேட்டோ இல்ல பெரிய தலவலிகளின் சீண்டலாலோ அந்த   நேரம்  கொஞ்சம்கூட சவுண்டு விட்டீங்க சித்தப்பா ..டிவி பேப்பர்லலாம் உங்களை பற்றித்தான் பேச்சு நான்கூட நெனச்சேன் அடடே சிங்கத்தை  சீண்டிப்புட்டாங்க அதான் சிங்கம் சிங்க நடை போடப்போகுதுன்னு சொல்லி வாய மூடலை சிங்கம் ஆல்ப்ஸ்  மலைக்கு போயிடுச்சி :) என்னமோ நினைச்சேன் சித்தப்பா கொஞ்சம் நாள் உங்க விஷயந்தான் பரப்பரப்பா  போச்சு ..

உங்களுக்கு கொஞ்சம் வழுக்கை விழுந்ததும் தாங்க மாட்டாம சில ரசிக சிகாமணிகள்  முன்னந்தலையை ஷேவ் செஞ்சி விட்டுகிட்டு அவங்க பாசத்தை காமிச்சாங்க  ஒரு நாள் வெள்ளை முடி முளைச்ச தாடியோட உங்கள பார்த்த ரசிக சிகாமணிகள் தலைவா இப்படி பண்ணிட்டியே னு பொலம்பினாங்க ....ஆனாலும் அவர்களின் மனங்களில் உங்களுக்கான  இடம் அசைக்கப்படாமல் இருந்தது அப்போ மெதுவா சித்தியும் தங்கைகளும் வெளியில் மீடியாவில் எட்டிப்பார்க்க முகங்காட்ட ஆரம்பிச்சாங்க ..சித்தி நீங்க என்னவாகணும்னு ஒரு கூ(க)ட்டமைப்பு உங்களுக்குள்ள இருக்குன்னு சொல்லி எல்லாரையும் குழப்பினாங்க ..எவ்ளோ பிசியா படிப்பு வேலை கதின்னு  இருந்தாலும் இந்த கூத்துக்களைலாம் ஒரு கூட்டம் தனியா கவனிச்சிட்டே வந்தது அது நீங்க ஆக்டர் அவ்ளோதான் நல்ல மனிதர் அது போதும்னு ஓரிரு துளியூண்டு நம்பிக்கை பிரியம் வச்ச கூட்டம் சிலரை எதுக்கு ஏனென்று தெரியாமலே பிடிச்சி போயிடும் அதுமாதிரிதான் சிலருக்கும் உங்களை  விருப்பம் ..ஒருவேளை அது தெரிஞ்சோ என்னமோ அடிக்கடி ஒளிஞ்சி பிடிச்சி விளையாட ஆரம்பிச்சீங்க ..எனக்கெல்லாம் சொல் ஒன்னு செயல் ஒண்ணுன்னு இருக்கணும் ஆனாலும் உங்களை நிறையபேர் வருவாரா  வருவாரா வரப்போறதில்லைனு கிண்டல் செய்யும் போது ..அட பெரியவர்வ
விடுங்கப்பா அவரைன்னு சொல்லத்தோணும் ....இப்படி ஒன்னு இல்லை 20 வருஷம் விளையாட்டு காட்டினீங்க நீங்க அந்த காலம் போல் இந்த காலமில்லை சித்தப்பா நீங்க பாடின பாட்டையே போட்டு கேட்டு பாருங்க புரியும் .....நீங்க கோலாம்பரி கூட வேலை செய்த படத்தை  ரசிச்சாங்க அப்புறம் வந்த பப்பிடத்தை உடைச்சாங்க மக்கள் ..செருப்புக்காக காலை வெட்டிக்கிட்டிங்கன்னு எல்லாரும் சொன்னாங்க ..இந்த இடைவெளில நாட்டில் நிறைய பத்திரிகைகள் வலைத்தளங்கள் முகப்புத்தகம்  எல்லாம் பிரபலமாச்சு கூடவே யார் என்ன செஞ்சாலும் உடனே வெளிச்சத்துக்கு வரவும் ஆரம்பிச்சது நீங்க யாருடைய   இறுதி பயணத்துக்கு போலைனாலும் கேள்விகேட்க ஆரம்பிச்சாங்க  .சில வருஷமுன்னாடி சென்னை ஏர்போர்ட்டில் ஒரு பக்கத்துக்கு வாசலை VIP வரார்னு பயணிகளை வேற பக்கமா போக வச்சாங்க .. நான் லுப்தான்சாக்கு கியூவில் நிக்கும்போது ஒரு புயல் என்னை கடந்து போன உணர்வு உங்களை அடையாளமே தெரில ஆனா பக்கத்தில் அந்த டைரக்டரை வச்சி கண்டுபுடிச்சேன் அப்போ இன்னோர் கியூவில் எமிரேட்ஸ் லைனில் காமெடி கதாநாயகனாக ஒரு காலத்தில்  வலம் வந்த  இன்னொரு நடிகர் உங்கள விட ரொம்ப சின்னவர் இருந்தார் .இதுவும் காலத்தின் கோலம்னு நினைச்சேன்.சில வருஷமுன்னாடி மருத்துவ சிகிச்சைக்கு போன நேரம் உங்க ரசிக சிகாமணிகளுக்கு ஆடியோ ரெக்கார்ட்  செய்து அனுப்பினீங்க நானும் கேட்டேன் ..உங்க குரல் கேக்க பாவமா இருந்திச்சி ..சாமி சித்தப்பாக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு வேண்டிகிட்டேன் இத்தனைக்கும் உங்க படத்தை நான் தியேட்டர்ல  பார்த்து பல வருஷமாச்சு ..அதுவும் சமீபத்துல ரிலீஸ் ஆன உங்களது  பல   படங்களை  பார்க்கவேயில்லை  .

அப்புறம் நீங்களும் நடிச்சிட்டிருந்திங்க  இன்னமும் நடிக்கிறிங்க ..இப்போ உலகம் மாறிடுச்சு சித்தப்பா எல்லாத்துக்கும் memes போட்டு தாக்கறாங்க .தங்கச்சி உடான்ஸுக்கு கூட MEMES போட்டு கலாய்ச்சாங்க 20 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை இன்னும் நீங்க சொல்லிட்டே இருக்கீங்க சித்தப்பா .என்   பிள்ளைக்குக்கூட உங்கள பிடிக்கும் ஐ லைக்  தட் ஹண்ட்ஸம் ஸ்டைலிஷ்  தாத்தா  னு சொல்லும் ..நாங்கூட வெளில சத்தமா சொல்லிடாத ரசிகஸ் நான் தான் வேணும்னே சொல்லிக்கொடுத்தேன்னு என்னை தாக்கிடுவாங்கன்னு  சொல்லி வச்சேன் .கடிதம் நீண்டிடிச்சி சித்தப்பா ..ஒண்ணே ஒன்னு நீங்க எல்லார் மனசிலும் எப்பவும் இருக்கணும்னா காமெராக்கு முன்னாடி  மட்டும் நடிங்க சித்தப்பா ..இப்பவும் உலகம் பூரா இருக்கும் தமிழரின்  மூணாம் தலைமுறை நெருப்புடா நெருப்புடான்னு சொல்லி திரியறாங்க அந்தளவு சின்னஞ்சிறுசுக மனசில் கூட இருக்கீங்க .. அந்த அங்கிள் னு கூப்பிட்ட  பொண்ணோட மகளே  உங்களுக்கு கீரோயினா நடிச்சாலும் பார்க்க ஒரு கூட்டம் இன்னும் இருக்குன்னு கேள்விப்பட்டேன்.எவ்வளவோ மனசுக்குள்ள இருந்தாலும்இதுக்கு மேலே வெளிப்படையா ஒன்னும் எழுத வார்த்தை  வரலை ..NO COMMENTS  என்று சொல்லிக்கொண்டு  ..இத்துடன் என் கடிதத்தை நிறைவு செய்றேன் ..

இப்படிக்கு 

அன்புள்ள  யாரோ ....


                                                     ****************************
டிஸ்கி ...
புறா என்கிட்டே கொடுத்துட்டு சொல்லசொல்லிடுச்சி இந்த கடிதம் ஒரு கற்பனை கற்பனை கற்பனை அதைத்தவிர வேறொன்றுமில்லை என்று கூறிக்கொண்டு பறந்து விட்டது ..


                                                           ***********************

99 comments:

 1. ஆஆஆஆஆஆவ்வ்வ் மீ ட 1ச்ட்டூஊஊஊஊ.. ஓ அஞ்சுவுக்கு சித்தப்பா எனில் அடிராக்கு ஹையோ அதிராக்கு அப்பப்பா வாக்கும்... இருக்கட்டும் இருக்கட்டும் கொஞ்சத்தால வாறேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க மியாவ்..நான் மட்டும் தனியா அடி வாங்கினா நல்லாருக்காது கைய பிடிச்சிக்கோங்க சேர்ந்தே வாங்குவோம் :)

   Delete
  2. நோ நோ ஆளை விடுங்கோ.. என்னால களி எல்லாம் சாப்பிடமுடியாதூஊஊஊஊஉ:)

   Delete
  3. ஹையோ ஹையோ களியா :) ரொம்ப ஆசைதான் திஹார்ல காஞ்ச ரொட்டிதான் கிடைக்கும்

   Delete
  4. என்ன அதிரா பூசாரா இருந்துட்டு இப்படிச் சொல்லுறீங்க நாம ஏஞ்சலுக்குப் பூனைப்படையா போகோனூம்....நம்ம பைரவிகளும் துணைக்கு இருப்பாங்க...ஆனா ஒன்னு என் வீட்டு பைரவிகள்ல ஒன்னு இருக்கே அதுக்கு யாராச்சும் பிரியாணி கொடுத்துட்டா அம்புட்டுத்தான் அவங்க பக்கம் வாலாட்டிட்டு போயிடும் ஹிஹிஹிஹி/

   கீதா

   Delete
  5. ஹாஹா :) நிசம்மான தொண்டர் படை தான் கண்ணழகியும் ப்ரவுனியும்

   Delete
 2. சில வரிகள் தாண்டியதுமே சித்தப்பா யாருன்னு தெரிந்தது. நல்ல மடல். அவரும் அடுத்த பட ப்ரமோஷன்ல இருக்கார். அவரை ஏன் தொந்தரவு செஞ்சுகிட்டு.. பாவம்...

  ReplyDelete
  Replies
  1. யாரு :) ஹையோ இது சும்மா கற்பனைதான் ஸ்ரீராம் ஹாஹாஆ

   Delete
  2. ஆங்ங்ங்ங் ஸ்ரீராம் கரீட்டாக் கண்டு பிடிச்சுட்டார்ர்:)... அஞ்சுவுக்கு இருட்டடி விழப்போவது உறுதி:).

   Delete
  3. ஹாஹ்ஹா :) எனக்கு அடி விழப்போவது நிச்சயம் மேலும் என் பிளாக்கில் இந்த பதிவுக்கு பின் இல்லை பொன்னூட்டமிட்ட முதல்
   ஆள் உங்களுக்கும் சேர்த்தே இருட்டடி :)

   Delete
 3. சித்தப்பாவோட படம் ரிலீஸ் ஆகுற நேரம் மட்டும்தான் ரசிகர்களை சந்திப்பதும், பேட்டி கொடுக்கிறதும் நடக்குது. அது வரைக்கும் வீட்டில சித்தி சொல் பேச்சு கேட்டு அமைதியா இருக்கார். எது எப்படியோ, அவரு நடிச்சா மட்டும் போதும்... வேற எதுவும் வேண்டாம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி :) அதேதான் ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் மாதிரி இருக்கு :) இவர் நடிச்சா அது போதும் இதுக்கு மேலே வேறெதுவும் வேணவே வேணாம் ..

   Delete
 4. //தோட்டத்தில் பறவைகளுக்கு உணவிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு புறா கடிதம் ஒன்றை என்னிடம் தந்தது அதை பிரித்து படித்தேன்///
  புரிஞ்சுபோச்சு.. புறாவிடம் கடிதம் கொடுத்தனுப்பிய காலத்து ஆளா நீங்க..?:).


  ///நீங்க எங்கப்பாவை விட கொஞ்சூண்டுதான் வயதில் இளையவர் அதனால் பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு சித்தப்பான்னு கூப்பிடறேன் ...///
  இங்கின எனக்கொரு டவுட்டூ.. இல்லேன்னா எப்பூடிக் கூப்பிட்டிருப்பீங்க?????:).

  ReplyDelete
  Replies
  1. ஆங் :) அங்கிள்னு கூப்பிட்டிருப்பேன்

   Delete
 5. சித்தப்பா அப்போ எனக்கு சின்ன வயசுதான் ///
  கரீட்டூ:) இப்போதைய வயசுதான் எங்களுக்குத் தெரியுமே:).

  ////ஆனா நீங்க நடந்து தலையை ஸ்டைலா திருப்புவீங்க வாயில் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பீங்க பார்க்க ஜாலியா இருந்தது .///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதைவிடப் பெயரையே போட்டிருக்கலாம்:).

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிச்சிட்டிங்களா :) ஆமா ஆமா :) அவரேதான்

   ஏற்கனவே தூங்கும்போது யாரோ கட்டையால் அடிக்கிற கனவு வருது அதான் மறைமுகமா போட்டேன் :)

   Delete
 6. ///அப்புறம்அந்த படத்தில்அங்கிள்னு கூப்பிட்ட பொண்ணே உங்க கூட ஹீரோயினா நடிச்சிச்சு ..அது காலத்தின் கோலம் அதையும் ஏத்துக்கிட்டாங்க //

  இனி அந்தப் பொண்ணிட பொண்ணுகூட நடிக்கக்கூடும் இவரோட ஹீரோயினா:) அதையும் விசிலடிச்சு ஏற்றுக்கொள்ளுவாங்க:).. எதுவும் ஆச்சரியப்படுறத்துக்கில்ல:).

  ///இத்தனைக்கும் உங்க படத்தை நான் தியேட்டர்ல பார்த்து பல வருஷமாச்சு ..அதுவும் சமீபத்துல ரிலீஸ் ஆன உங்களது பல படங்களை பார்க்கவேயில்லை .///

  மீயும்தேன், கடேசியா கனடாத்தியேட்டரிலபோய்ப் பார்த்து இண்டவலோடு நித்திரையாகி, படம் முடிஞ்சதும் எழும்பி வீட்டுக்கு வந்தேன்:)

  ReplyDelete
  Replies
  1. HAAHAA :) எறி எறி னு ஒரு படத்தில் குட்டிப்பாப்பாவை நடிச்ச பிள்ளையின் அம்மா சொல்லுச்சு இப்போ மகளா நடிக்கிறா நாளைக்கு அவருக்கு ஜோடியா நடிப்பானு :) கடவுளே சினிமா மோகத்திலிருந்து மட்டும் எங்க தமிழ்நாட்டை காப்ப்பாத்திடு மற்றதை நாங்க பார்த்துக்கறோம்னு தோணும் ..சினிமாவை சும்மா பொழுதுபோக்கா மட்டுமே நினைக்கணும் அங்கே சாப்பிடற பாப்கார்ன் பாக்கெட்டை அங்கியே வீசிட்டு வர மாதிரி

   Delete
  2. நான் தியேட்டர் ல தமிழ் படம் பார்த்து -- -- வ்ருஷமாச்சு :)

   Delete
  3. யெஸ் ஏஞ்சல் சினிமா மோகத்துலருந்து தமிழ்நாடு எப்ப மீளுமோ அப்போதான் விடிவுகாலம்...

   கீதா

   Delete
 7. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மக்களே... அஞ்சு அரசியலில் குதிச்சிட்டாஆஆஆஆ:) இனி இப்பக்கம் வந்து போவதுக்கும் நான் கொஞ்சம் ஓசிக்க வேண்டி இருக்கே முருகா:)... அம்மா.. சின்னம்மா.... இனி மீனம்மாவா?:) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்:).

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா டோன்ட் வொர்ரி இன்றே இப்படம் கடைசி

   Delete
  2. அதிரா நோ சான்ஸ்! ஏஞ்சலாவது அரசியல்ல குதிக்கறதாவது! பாவம் அவங்க கட்சில சேறதுக்கு நம்ம ப்ளாகர்ஸ் தவிர யாரும் இருக்க மாட்டாங்க! ஹிஹி பின்ன அரசியல்னா நிறைய உடான்ஸ் வுடனுமே...அதெல்லாம் நம்ம ஏஞ்சலுக்கு வரவே வராது சுட்டுப் போட்டாலும்...நம்ம மதுரை டெய்லி பதிவு போட்டுக்கிட்டே இருப்பாரு...ஏஞ்சலின் அரசியல் பத்தி...ஹிஹி

   கீதா

   Delete
  3. ஐயோ சொல்ல மறந்துட்டேனே... தலைப்பு இப்படி எல்லாம் இருக்கலாம் "சாக்கடை அரசியலில் ஒரு ஏஞ்சல்" "அரசியலில் மதர்தெரேஸா" "பூனையும் அரசியல் பேசுமா" "பூனைக்கே கறுப்புப் பூனைப்படை" என்றெல்லாம் வர ஆரம்பித்துவிடும்!!

   கீதா

   Delete
  4. என்ன அதிரா உங்க செக்கரட்டரிய இப்படி அம்போனு விட்டுட்டுப் போகலாமா...அவங்க அரசியல்ல இறங்கினா...நானும் நீங்களும் வலது கை இடது கை அல்லக்கைகளாக இருக்க வேண்டாமா....அவங்களுக்குப் பாதுகாப்பான உணவு நம்ம நிஷா கைல...இப்படியல்லோ போகோணும்...அப்புறம் பிரியாணி வைச்சாத்தான் போராட்டம்னு தேம்ஸ்ல போராட்டாம் எல்லாம் பண்ணக் கூடாது சொல்லிப்புட்டேன்...

   கீதா

   Delete
  5. ஹையோ ஹையோ :) கீதா அரசியலா நானா அரிசில கல்லு பொறுக்க கூட லாயக்கில்லை நான் :)
   அதுக்கு திறமை தனித்திறமை வேணும் ..நாமெல்லாம் அதிராவை சாமியாராக்கி அப்புறம் அரசியலுக்கு வர வைப்போம்

   Delete
  6. அஞ்சு அரசியல்ல குதிச்சா வோட் போடும் எல்லோருக்கும் வைரத் தோடு வழங்கப்படும்:)- உபயம் கீதா:).... அதை எடுத்து தன் கையால் வழங்க இருப்பவர் அதிரா....

   Delete
 8. //டிஸ்கி ...
  புறா என்கிட்டே கொடுத்துட்டு சொல்லசொல்லிடுச்சி இந்த கடிதம் ஒரு கற்பனை கற்பனை கற்பனை அதைத்தவிர வேறொன்றுமில்லை என்று கூறிக்கொண்டு பறந்து விட்டது ..//

  ஆமா ஆமா.. அரசியலில் குதிப்பவங்க ஆரம்பம் கற்பனைதான் பண்ணுவினம் தெரியுமோ?:)...

  ReplyDelete
  Replies
  1. அப்போ அந்த முதலமைச்சர் பதவி உங்களுக்கு உங்க அஜிஸ்டெண்ட் நான்தான் :) நீங்க டெய்லி சட்டசபைக்கு போவீங்களாம் நான் உங்க கூடவே ஜெல்புக்கு இருப்பேனாம்

   Delete
  2. ஆஹா அப்ப ஏஞ்சல் அதிராவை அப்போலாவில் சேர்த்துவிடுவாங்க என்று நினைக்கிறேன்

   Delete
  3. அப்போ புறாவுக்குச் சித்தப்பாவா அவரு!!!ஹிஹீ

   கீதா

   Delete
  4. ஆமா ஆமா அந்த ரூம் பக்கத்து ரூம் இன்னும் காலியாம் அது அடிராக்கே

   Delete
  5. முதல்ல எனக்கும் தேம்ஸ்க்கும் கறுப்புப்பூனைப் படை பாதுகாப்பு ஏற்பாடு பண்ணுங்கோ... அடுத்து புல்லெட் புரூவ் வீடு ஏசி போட்டது, ஹோம் தியேட்டர் அண்ட் சுவிமிங் பூலுடன் ஏற்பாடு பண்ணுங்கோ:)..

   Delete
 9. சிவாஜி மட்டும்தான் வயசுக்கேற்றதுபோல நடிச்சுக்கொண்டு வந்தார், இக்காலத்தில எல்லோரும் சாகும்வரை ஹீரோ வாகவே நடிக்கோணும் என ஆசைப்படுவதுதான் எரிச்சலைக் கொடுக்குது.. பணத்துக்காக குட்டிப் பிள்ளைகளெல்லாம், அவர்களுக்கு ஹீரோயினாக நடிக்க ரெடியாகிடுறாங்க...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மியாவ் அப்படியே கண்ணை மூடிக்கிட்டு முதல் மரியாதைன்னு ஒரு படம் வந்துச்சே ராதாவுக்கு அதில் 20 வயசுதான் இருக்கும் அங்கிள் தாத்தா சிவாஜிக்கு நிச்சயம் அப்போ 50 க்கு மேலிருந்திருக்கும் :) அதை நினைச்சி பாருங்க :)

   Delete
  2. உண்மைதான் ..வேதனையான விஷயம்

   Delete
  3. அதிராவும் லஜினி மாதிரி யங்காக வேஷம் போட்டு இன்னும் ஸ்வீட் 16 என்று சொல்லிகிட்டு இருக்கிறாங்க என்ரு ஒருத்தர் எங்கிட்ட வாட்ஸ்ப்பில் சொல்லி சிரிக்கிறாங்க ஆனா அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேன்

   Delete
  4. ஹஹஹஹ ஏஞ்சல் அதிரா உங்களுக்குப் பெரியம்மா ல....80 ஆகிப் போச்சுல்ல அதான் மறதி வந்துருச்சு போல...சிவாஜி வயசுக்கேத்தா மாத்திரி நடித்தாராமா!!??!!?

   கீதா

   Delete
  5. @அதிரா -- சிவாஜி படம் எதுவும் பார்த்ததில்லையா? ஶ்ரீதேவி அவருக்கு மகளா நடிச்சாங்க. அப்புறம் ஒரு படத்துல காதலியா(மனைவியா) நடிச்சாங்க. சிவாஜி பையன் பிரபுவுக்கு படங்களில் மனைவியா நடிச்ச அம்பிகா (ராதாவின் அக்கா), சிவாஜியின் மனைவியா பிற்காலத்துல நடிச்சாங்க (ஏன்னு ஒரு காரணம் இருக்கு. இங்க எழுதக்கூடாது). நடிப்புல இதெல்லாம் சகஜம். ஏன்னா பெரும்பாலும் ஹீரோவுக்குத்தான் படம் பார்க்க ரசிகர்கள் வராங்க. இல்லாட்டி 60 வயது ரஜினி, 25 வயது ஸ்ரேயாவுடனான சிவாஜி காட்சிகளை ரசிக்க முடியுமா?

   Delete
  6. ஹாஹா :) ஆமாம் நெல்லை ..கேள்விப்பட்டிருக்கேன் :) தனியா பூனைக்கு டியூஷன் எடுக்கணும்

   Delete
  7. ஹாஹா ஆமாம் கீதா ஆனா ஸ்ரீலங்கா மக்களுக்கு சினிமா அவ்ளோ பரிசியமில்லை 90 வரை அதான் நிறைய விஷயங்கள் தெரில பூனைக்கு

   Delete
  8. @avargal truth //ஒருத்தர் எங்கிட்ட வாட்ஸ்ப்பில் சொல்லி சிரிக்கிறாங்க ஆனா அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேன்//

   i know :) i know

   Delete
  9. ஹலோ... மேன்மை தங்கிய ட்றுத் அவர்களுக்கு ஒரு வட்ட மேசை மாநாடு தேம்ஸ் கரையில் அரேஞ் பண்ணியிருக்கிறேன்ன்ன் உடனே வரவும்:)

   Delete
  10. @Angel /// ஸ்ஸ்ஸ் 2,3 தடவைகள் பார்த்திட்டேன் 1ச்ட் மரியாதை... சூப்பர் மூவி... அதில் தப்பிருப்பதா எனக்கு தெரியல்ல... அதில் சிவாஜி க்கு ஜோடி வடிவுக்கரசி தானே....
   ஆனா வயதான காலத்தில் தேவை மனதுக்கு ஆறுதலான வார்த்தைகள்தான் அதனாலதான் ராதாவின் அன்புக்கு கட்டுப்பட்டார்ர்...

   Delete
  11. நெல்லத் தமிழன்..... நேக்கு முத்துராமன் அங்கிளை அடுத்து சிவாஜியை ரொம்பப் பிடிக்கும்.... நம் மனதுக்கு ரொம்பப் பிடிச்சோரின் குறைகள் நமக்குத் தெரியாதாம் எனப் புலாலியூர்ப் பூஸானந்தா சொல்லியிருக்கிறார்:)..

   அதனால எனக்கு தெரியல்ல:) ... ஹையோ எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊ:).

   இல்ல உன்மையில் நாங்க சினிமா அதிகம் பார்ப்பதில்லை, செலக்ட் பண்ணியே பார்ப்போம். அதுக்காக சினிமாவுக்கு எடிரியும் இல்லை:)... அது என்ன படம் நினைவிருந்தால் சொல்லுங்களேன்... சிவாஜி ஸ்ரீதேவி நைச்சது... பார்த்திடுவோம்:).

   Delete
  12. ///
   AngelinMay 19, 2017 at 8:48 AM
   ஹாஹா ஆமாம் கீதா ஆனா ஸ்ரீலங்கா மக்களுக்கு சினிமா அவ்ளோ பரிசியமில்லை 90 வரை அதான் நிறைய விஷயங்கள் தெரில பூனைக்கு////

   கர்ர்ர்ர்ர் இது என்ன புதுக்கதை... அடிச்சுக் கலைக்கப் போகினம் ஓடிப்போய் கட்டிலுக்கு கீழ ஒளிங்கோ... ச்ச்ச்ச்சும்மா போனாப்போகுது என விட்டால்ல்... எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேச்சைப் பாருங்கோவன் கர்ர்ர்ர்ர்...

   ஆனா அதிரா 90 பிற்பகுதியில் பிறந்தமையால் நான் இப்போதான் பழைய படங்கள் தேடிப் பார்க்கிறேன் இது உண்மை....:).

   Delete
  13. கரண்ட் இல்லாத யுத்த காலத்தில்கூட, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீடாக ரேன் எடுத்து ஜெனறேட்டர் பிடிச்சு விடிய விடிய அந்த அயலவர்கள் எல்லோரும் கூடியிருந்து புதுப்படங்கள் பார்த்த பரம்பரையாக்கும் இலங்கை மக்கள்... இந்த சினிமா மோகத்தை சொல்லியனுப்புங்கோ ரஜனி அங்கிளுக்கு... இப்போ "நோ கொமெண்ட்ஸ்" ஸாமா? கர்ர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  14. ஹையோ ஹையோ :) இந்த பூனைக்கு மணத்தக்காளி பற்றி விளக்கவே ஒரு யுகமாச்சு .இப்போ சினிமாவா :).மியாவ் ஓகே வரேன் பொன்னாத்தா கொஞ்சம் பொல்லாத ஆத்தா சரி அதுக்கு குயில் வேஷத்துக்கு இன்னொரு லேடிய போட்டிருக்கலாமே அதேதுக்கு 30 வயசு சின்ன பொண்ணுதான் ஹிரரோயினா போடணுமா .மலையாளப்படங்களில் இன்னும் திருமணமாகி குழந்தை பெட்ரா நடிகைகள் கதாநாயகிகளாவே நடிக்கிறாங்க

   Delete
  15. பாபுவில் பேபி
   கவரிமானில் மகள்
   சந்திப்பு வில் லவர் :)

   all wiki info

   Delete
  16. @அதிரா - ள, ழதான் தகறாரு. இப்போ பெயரை எழுதுவதிலும் பிரச்சனையா?

   சிவாஜி, ஸ்ரீதேவி நடித்த படம் கவரிமான், சந்திப்பு. இதில் கவரிமான் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

   பிரச்சனைக்கு உரிய படம் திருப்பம். பிரபு, அம்பிகா நடித்தது. சிவாஜியும் உண்டு. அவருக்கு ஜோடி சுஜாதான்னு நினைக்கிறேன். படம் பப்படம்னு கேள்வி. சிவாஜி அம்பிகா நடித்தது வாழ்க்கை. இதுவும் நல்லாருக்கும்.

   சிவாஜியை வெறுக்கணும்னா, அவர் நடித்த லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஹிட்லர் உமானாத் போன்ற படங்களைப் பார்க்கலாம், உங்களுக்கு பொழுது போகலை, நேரத்தைக் கொல்லணும்னு நினைச்சால். நான் ஹி.உ. தியேட்டரில் பார்த்துவிட்டு அத்தோட சிவாஜியின் மேல் இருந்த கிரேசைத் தொலைத்துவிட்டு வந்தவன்.

   Delete
  17. ஹையோ போச்சு :) எல்லாரும் ஓடி ஒளிங்க :) அடிராக்கு :)) படங்கள் பேர் கிடைச்சு அடுத்தது படம் ரிவ்யூதான்

   Delete
  18. ஹா ஹா ஹா மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.. நல்லவேளை சிவாஜியை வெறுக்கும் படமேதும் நான் பார்க்கவில்லை.. :).

   ஓகே கவரிமான் பார்த்துவிட்டு, அடுத்த ரிவியூவில் உங்களைச் சந்திக்கிறேன்ன்.. அஞ்சு ஓடாதீங்க தேம்ஸ் கரையில் வச்சே உங்களுக்கு படக்கதை சொல்லிடுவேன்:).

   Delete
 10. வித்தியாசமான... சுவாரஸ்யமான கற்பனை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க :) சகோ டிடி நலமா ..ஆமா ஆமா கற்பனை தான் :)

   Delete
 11. சித்தப்பா ஒரு தடவ சொன்னா.... :) :)

  அவர்தானே அந்த சித்தப்பா..?

  தம்ன்னா ஒரு கேள்விக்குறி..., அஞ்சில் இருந்து ஐம்பதுவரை.... ஹாஹா!

  எனக்கு அவரைப் பிடிக்கும்... பட் உங்க கடிதமும் நல்லாத்தான் இருக்கு..!

  ReplyDelete
  Replies
  1. ஓ!! அது சீக்ரெட்டா சொல்லிருக்கீங்களா ஏஞ்சல்!!! ஹஹஹஹ்...ஹலோ நீங்க என்னதான் முழு பூஷணிக்காய சோத்துக்குள்ள மறைக்க நினைச்சாலும் அது காமிச்சுக் கொடுத்துரும்ங்கோ...ஹிஹி

   கீதா

   Delete
  2. ஹாஹாஆ :) உண்மையில் எழுதறதா வேணாமான்னு பல யோசனைக்குப்பின்னே தான் பதிவை பப்லிஷ் பண்ணினேன் ..அந்த மாறுபாடான இருதயம் மட்டும்தான் ரொம்ப எரிச்சல் மூட்டியது 96 ழும் குழப்பம் 21 வருஷம் கழிச்சும் குழப்பமா :))
   நான் பூசணிக்காயை மட்டுமே இலையில் வச்சிட்டேன் சாதத்தை போடலா :)))))))

   Delete
 12. அன்புள்ள சித்தப்பாவுக்கு என்ற தலைப்பை ரஜினிக்கு ஒரு கடிதம் என்று வைத்து இருந்தால், உங்களுக்கான எங்கோ போயிருக்கும். வித்தியாசமான ரசிகை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா வாங்க அண்ணா :) முந்தி சின்ன வயதில் அவர் படங்கள் பிடிக்கும் இப்பவும் ஒரு நடிகராக அதுவும் முந்தைய பழைய படங்களில் பார்த்த அவராக மட்டுமே பிடிக்கும் அண்ணா ..ஆனா வார்த்தையை திருப்பி திருப்பி சப்பாத்தி ரொட்டி சுடற மாதிரி மாறும் அந்த குணம் நெருடும் ..வேறென்ன பண்ணுவார் மதில்மேல் பூனையாப்போச்சு அவர் நிலை :)

   Delete
  2. அப்புறம் அண்ணா அரசியல்வாதிகளை கட்சிகளை கூட தைரியமா தாக்கி பதிவு போட்டுடலாம் இவர் விஷயத்தில் எந்த மூலைலேருந்து கல் விழும்னு அனுமானிக்க முடியாது :)

   Delete
  3. அப்புறம் அண்ணா அரசியல்வாதிகளை கட்சிகளை கூட தைரியமா தாக்கி பதிவு போட்டுடலாம் இவர் விஷயத்தில் எந்த மூலைலேருந்து கல் விழும்னு அனுமானிக்க முடியாது :)// ஆமாம் ஆமாம்...ஏஞ்சல் ஜாக்கிரதையாத்தான் சொல்லணும்...

   கீதா

   Delete
  4. தலைப்பை ரஜினிக்கு ஒரு கடிதம் என்று வைத்து இருந்தால், உங்களுக்கான எங்கோ போயிருக்கும் > என்பதில் உங்களுக்கான ஹிட்ஸ் எங்கோ போயிருக்கும் என்று திருத்தி வாசிக்கவும். >

   Delete
  5. ஆமாம் அண்ணா நேற்றே விளங்கிச்சு ,,இன்னும் நேரடியா தாக்கி எழுதற தைரியம் வரல :)

   Delete

 13. அம்மாவும் சின்னாம்மாவும் இல்லாததால் உங்கள் சித்தப்பாவீற்கு கொஞ்சம் ஆசை வந்துடுச்சு போல ஏதோ இருக்கிற நல்ல பெயரையும் சொத்தையும் பாதுகாக்காமல் இப்படி ஆசைபட்டால் இருப்பது போச்சுடா நொள்ளைக்கண்ணா என்பது மாதிரி ஆகிவிடும்

  ReplyDelete
  Replies
  1. அதேதான் :) இருக்கிற பெயரை காப்பாத்திக்கிட்டா அவருக்கு நல்லது ..நமக்கெல்லாம் அம்னீஷியா செலக்டிவ் அம்னீஷியா கூட கிடையாதுன்னு அவருக்கு பாவம் தெரில ..

   Delete
  2. என்னதான் இமயமலைக்குப் போனாலும் ஆசை யாரை விடுதுனு சொல்லுங்க...ஆனா ஒன்னு ஆன்மீகம்னா இமயமலைக்குப் போனாத்தான்னு இல்ல அத வீட்டுல இருந்துக்கிட்டே கூட ப்ராக்டிஸ் பண்ணலாமே...

   கீதா

   Delete
  3. ஆமாம் கீதா அது சும்மா ஒரு சாக்கு :)

   Delete
 14. ஆமாம் இவர் உங்களுக்கு சித்தப்பான்னா அதிரா உங்களுக்கு பெரியம்மா முறைதானே

  ReplyDelete
  Replies
  1. ஹாஆஹாஆ :) ஆமா ஆமா பெரியம்மாவேதான்

   Delete
 15. ஆஹா கடிதம் அழகாய் சிலிர்க்கின்றது சித்தப்பாவின் நடிப்பு சிகாமணிகளின் பால்யகாலம் நினைவுக்கு வருகின்றது இனிக்கும் ))) அது ஒரு காலம் இனியும் சித்தாப்பாவுக்கு ஒரு கூட்டம் நிச்சயம் விசில் ஊதும் நெருப்புடா பருப்புடா)))

  ReplyDelete
  Replies
  1. இவங்க விசில் ஊத்தட்டும் கடவுட்டுக்கு பால் ஊத்தட்டும் ஆனா பேச்சு மாறிமாறி பேசினா வெறுப்பு தானே வரும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பறவங்களை எப்படி தலைமையா ஏற்க முடியும் ..நிலையான முடிவை இத்தனை வயதுக்கு மேலே கூட எடுக்க முடில பாருங்க :)

   Delete
 16. தம்மன்னா என்ன 6 இல் இருந்து 60
  வரை நடிக்கும் தகுதியுள்ள சித்தியல்ல))) சித்திக்கு பிள்ளைகள் போல பேர்சொல்லி ஐநாவில் அமரும் ஆசையைப்பற்றியும் சித்தப்பாவுக்கு கடிதம் பேசியிருக்கலாம்))) கடிதம் அருமை நீண்டது என்றாலும்))).

  ReplyDelete
  Replies
  1. ஐநா வா ஆஆ !!இது எப்போ எனக்கு தெரியாமப்போச்சே தெரிஞ்சிருந்தாக அதையும் சேர்த்திருப்பேன் :) ஹஹ்ஹா :)
   இன்னும் நிறைய மனதில் இருந்தது கடிதம் படிச்சு எனக்கு கல்லடி நிச்சயம் விழும்னு தெரியும் அதான் கட் பண்ணிட்டேன் :)

   Delete
 17. நல்ல மடல் சகோ! அவர் அமைதியா இருந்தாலே போதும். தன்னையும் குழப்பிக்கிட்டு மக்களையும் குழப்பிக்கிட்டு. ஒரு காலத்துல அவர் வந்தா நல்லாருக்குமோனு தோனிச்சு ஆனா அவர் அப்புறம் பேசினது எல்லாம் மாறி மாறி....படம் மட்டும் போதும்னு இருந்துட்டா நல்லது...அதுவும் டூயட் பாடாம...

  கீதா : சேம் கருத்து..முதல் வரிகள் படிச்சுட்டு வந்ததுட்டே இருக்கும் போதே தெரிஞ்சுருச்சு...யாருக்குனு....அது சரி சித்தாப்புவுக்கு கடிதம் எழுதி புறாகிட்ட கொடுத்துட்டு
  அட்ரெஸ் எழுதாம விட்டீங்கனா அது எப்படி கொண்டு கொடுக்கும்? ஹிஹீ அந்தப் புறாவுக்கு அட்ரெஸ் கண்டு பிடிக்க முடியலையாம்...அந்தப் புறா இமயமலைக்கு எல்லாம் கூட போச்சாம் கண்டுபிடிக்க முடியலைனு திரும்ப உங்ககிட்டயே கொண்டு கொடுத்துருச்சு போல...ஹஹஹ்....

  ReplyDelete
  Replies
  1. ஹாஃஹாஆ:) ஒரு வேளை புறா அவரை மாதிரியே குழம்பி போயிருக்கும் அதனால்தான் ஊரெல்லாம் தேடி லெட்டர் என்கிட்டே வந்திடுச்சு ..நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா ..அவர் குழப்பத்தில் இருக்கார் பேசாம கொஞ்சம் வாய்க்கும் மனசுக்கும் ரெஸ்ட் கொடுத்தா தெளிவாகிடுவார்

   Delete
  2. அவர் எங்கே இருக்கார்னு அவருக்கே தெரில அதான் அட்ரஸ் எழுதலை

   Delete
 18. எந்திரன் 2.0 க்கு 400 கோடி பட்ஜெட். இப்பவே பட ப்ரமோஷன் ஆரம்பிச்சாத்தான் தீபாவளி ரிலீசுக்குச் சரியா இருக்கும்.

  ஆமாம் ... அவங்ககிட்ட சேர்ந்து அரசியல்ல சம்பாதிக்க நினைக்கக்கூடாதுன்னு சொன்னதால் லண்டன் காதுல புகை புகையா வந்து இப்படி எழுதியிருக்கீங்களோ? வேணும்னா உங்களுக்கு கொள்ளை (ஐயையோ கொள்கைனு வாசிச்சுக்கோங்க) பரப்புச் செயலாளர் போஸ்ட் கொடுக்கச் சொல்லிரவா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஆஅஹா :) அப்போ தனிக்கட்சி இல்லையா ?? :) பாவம் கூட்டணி வச்சிக்கபோறவங்க நிலைமை அவர் எப்போ என்ன பேசுவார்னு அவருக்கே தெரியாதே :) கொ ப செ :)) எனக்கு மெரினால இடம் வாங்கித்தர எவ்ளோ ஆசை உங்களுக்கு :)
   அவர் சினிபீல்டனில் சம்பாதிச்சதே போதும் இனிமே என்னத்த அரசியலுக்கு வந்து ஆகப்போது .2 ஒ தான் புதுப்படமா ரைட் ரைட் ஆனா தீபாவளிக்கு ரொம்ப டைம் இருக்கே

   Delete
 19. மனதில் உறுதி வேண்டும் வாக்கைனிலே இனிமை வேண்டும் நேர்பட உரைக்கும் திண்மை வேண்டும் ஏனிந்த அச்சம்

  ReplyDelete
  Replies
  1. இனிமே நீங்க சொன்ன மாதிரி தைரியமாவே போஸ்ட் போடறேன் சார் :)

   Delete
 20. ராஸ்கல் நானும் ஏதோ நிறைய புறா வளத்தனீங்கள் ,அந்த புறாக்கு உண்மையாவே கடிதம் குடுக்க ட்ரெய்னிங் குடுத்து அது வாயில கவ்வினபடி பறந்து வந்து சொய்ய்ய்ய்ய்ங் நு உங்க முன்னாடி லாண்ட் பண்ணி சக்கு புக்கு சக்கு புக்கு நு உடம்பை அசைச்சு நடந்து வந்து லெட்டர்ர் குடுத்த கதை எண்டு நினைச்சுட்டன்.நான் என் லைஃப் ல பாத்தது சிவாஜி முக்கால்படம் ,குசேலன் கால் பாதி அம்புட்டுத்தேன்.அதுவும் தியேட்டர்ல வேற பராக்கு இல்லாததால பாத்தது.அதைவைச்சு இதெல்லாம் விளங்கும்???? சரி விடுங்கோ சனி அட்டமத்துக்கு வந்தால் வரவேண்டிய நேரத்தில அங்கிள் சிங்கிலா கரீட்டா முதலமைச்சரா வருவார் .அப்பரம் அவரு செயிலுக்கு போகும் வரைக்கும் பேசுற டயலாக்ல வச்சு நாம ஓட்டிருவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) இதுக்குதான் நீங்க பக்கத்தில இருந்தா தைரியமா பேரோட எழுதிருப்பேன்ல :) இப்படி புறாவை வச்சி பதிவை எழுதியிருக்க மாட்டேன் :) இந்த பூஸ் பாருங்க ஓடியே போய்ட்டாங்க :)
   நமக்கும் பொழுது போகணும் அங்கிள் வரட்டும் அப்பவும் இப்படித்தான் ஓட்டுவோம் :)
   இப்போ situation பாட்டு போகுதாம் அங்கிள் ஸ்பெஷல் ..ஒரு பெண் புறா :)
   நான்லாம் சித்தப்பா படம் னு இல்லை தியேட்டர்ல எந்த தமிழ் படத்தையும் பார்க்கலை :)))

   Delete
  2. எந்த தமிழ் படமும் தியேட்டர்ல பாக்கலையாம் ...விஷால் விஷால் இங்கே ஒரு குற்றவாளி வாக்குமூலம் குடுத்திருக்கிறார் .விச்சாலு எங்கு இருந்தாலும் மேடைக்குப்பின்னால் வரவும்.

   Delete
  3. ஹையோ என் வாய்தானே எனக்கு எதிரி :)

   Delete
 21. என்னது சித்தப்பாவா ?

  டூ மச்.

  நல்ல அறிவுரை தரும் கடிதம்

  ஆனாலும் சொளீர்

  காமிராவுக்கு முன்னால மட்டும் நடிங்க ...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஅஹ் :) அங்கிள்னு கூப்பிட்டா நல்லாருக்காது அதான் சித்தப்பாவாக்கிட்டேன் :)

   மிக்க நன்றிங்க :)

   Delete
 22. புறா கொண்டு வந்து கொடுத்த யாரோ எழுதிய கடிதம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா :) கடிதத்தை ரசித்ததற்கு மிக்க நன்றி

   Delete
 23. வாயில் ஸிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிப்பீங்க. இந்த வரியிலேே சித்தப்பா யாரெனப்புரிந்துவிட்டது. நான் பட விமரிசனங்களைப் படிப்பவள்தான். இருந்தாலும் புறாவும் கடிதமும் ரஸமான கற்பனை. நிஜமும் அதுவே. படித்து முடித்ததும் சிரிப்பு வந்தது. அப்பா !!!!!! அன்புடன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) காமாட்சியம்மா வாங்க :) உலகத்துக்கே தெரியுமே அப்படி தூக்கி போட்டு ஸ்டைலா பிடிப்பவர்யார்னு ..வருகைக்கும் பதிவை ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் நன்றி

   Delete
 24. தாய் மாமன் எனும் அன்பின் உறவுக்கு அடுத்து மிக இனிமையான உறவு உண்டெனில் - சித்தப்பா!...

  என்னுடைய சித்தப்பாக்கள் தான் என்னை வழி நடத்தினர்...

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா :) இவர் வயது காரணமா சித்தப்பாவை ஏற்றுக்கொள்ளப்பட்டார் பதிவுக்காக :)
   இவர் மாநிலத்தையே வழி நடத்த போர்றார்னு காது வழி சேதி :)

   Delete
 25. சித்தப்பா நல்ல கிண்டல்
  அருமையான கடித உரை இப்படி எழுத தோன்றிய தங்களது சிந்தனைக்கு முதலில் இராயல் சல்யூட்.

  மேலும் பாராட்டி எழுத இயலவில்லை காரணம் தற்போது செல்லின் வழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லெர்ஜீ :) இதை எழுதி முடிச்சு போடறதா வேணாமான்னு ரொம்ப யோசிச்சி வரது வரட்டும்னு தைரியத்தை வரவழைச்சு போட்டேன் :)
   மிக்க நன்றி ரசித்து பாராட்டியமைக்கு ..

   Delete
  2. தங்களது யோசனையில் காரணம் இருக்கின்றது நாட்டில் நிறைய அறியாமடந்தைகள் ஊர்ந்து திரிகின்றனவே...

   Delete
  3. 100 % உண்மையே .. இன்னும் பல நத்தைகள் பயாஸ்கொப் /பிலிம்ரோல் பெட்டிலருந்து வராததே என் தயக்கத்துக்கு காரணம்

   Delete
 26. சுவாரஸ்யமான கற்பனை

  ReplyDelete