அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/11/17

சர்க்கரை இனிக்கிற சர்க்கரையும் நானும் :)                                                                                                                              இங்கே என்னை சுற்றி குஜராத்தியர் பஞ்சாபியர் இனிப்பு கடைகள் மூலைக்கொன்றாக இருந்தாலும் சாக்லேட்டுகள் விதவிதமாக கிடைத்தாலும் எனக்கு இனிப்பு என்பது சிறு வயது முதலே  மனதுக்கும் நாவுக்கும்  நெருக்கமான பண்டமில்லை  :) சிறு வயதில் இருந்தே நான் இனிப்பு உணவுகளை  விரும்பியதில்லை
....சர்க்கரை பொங்கல் சாப்பிட மாட்டேன் ,புட்டுக்கு சர்க்கரை சேர்க்க மாட்டேன் பாயசம் தொட மாட்டேன் கேசரி ஒரே ஒரு விள்ளல் ..சிறு வயதில் உறவினர் நண்பர் வீடுகளுக்கு போனால் தட்டு நிறைத்து பால்கோவா மில்க் ஸ்வீட்ஸ் எடுத்து ஊட்டாத குறையாக கையில் வைப்பார்கள் ..அந்த நேரம் ஜிஞ்சர் உண்ட அதிராவின் குரு போலத்தான் இருப்பேன் :)  
             
              கேக்கெல்லாம் சாப்பிட்டதே இல்லை ஊரிலிருக்கும்போதே :) இவ்வளவு ஏன் பாலில்   சர்க்கரை போட்டா குடிக்க மாட்டேன் எப்பவும் அம்மாவுக்கும் எனக்கும் இந்த விஷயமா ஒத்து போகாது ..பால் பொங்கி வரும்போதே சர்க்கரையை போட்டுவிடுவார் அம்மா ..நான் முகர்ந்து பார்த்தே கண்டு பிடிச்சிடுவேன் சர்க்கரை இருக்கு என்பதை ..எல்லாரும்  பால் சாதத்துக்கு சர்க்கரை சேர்ப்பாங்க ஆனால் நான் மட்டும் உப்பு சேர்த்து சாப்பிடுவேன் :)  பிஸ்கட் கூட  உப்பு பிஸ்கெட் தான் எனக்கு சிறு வயதில் பிடித்த பிஸ்கெட்..   அதுவும் சின்ன சதுரங்களாக சீரகம் சேர்த்த பிஸ்கட்  அப்புறம் முறுக்கு மிக்ஸர்  சிப்ஸ் இவைதான் பிடிக்கும் .இந்த பார்லே குட் டே எல்லாம் கிட்டவே சேர்த்ததில்லை ..ப்ரெட் பட்டர் ஜாம் பிடிக்கவே பிடிக்காது :) இப்படி இனிப்பே ஏன்  எனக்கு விருப்பமில்லாமல் போச்சுன்னு எனக்கே தெரில ,,முன்பெல்லாம் கருப்பு காப்பிக்கு இனிப்பு சேர்ப்பேன் இப்போ அதுவுமில்லை பால் காபி சர்க்கரையில்லாம  தான் பிடிக்குது ..கள்ளிச்சொட்டு காபின்னுவாங்களே அதே :) ..
                      
                            அதனால் சமையல் செய்ய அதாவது திருமணமானதும் பெரிதாக இனிப்பு வகைகள் செய்ய பிரயத்தனப்படவில்லை அதற்க்கு முக்கிய காரணம் நான் ஒரிரு  முறை செய்த பாயாசம் பேயாசமாகி என்னை வஞ்சித்ததும் காரணமாக இருக்கலாம் .சில காலம் கழித்து கணவருக்கு மைசூர் பாகு செய்ய துவங்கி அது கடலைமாவு இனிப்பு கஞ்சி ஆனதும் காரணமாக இருக்கலாம் .அல்லது இரு வருடங்கள் முன்பு எப்படியாவது  கணவருக்காக தேன் மிட்டாயை செய்யணும்னு ஆசைப்பட்டு மாவு தயாரித்து அதை எண்ணெய்யில் போட ..அது கையெறி குண்டுகள் போல கிச்சனேல்லாம் பெரும் சத்தத்துடன்  நாற்திசையிலும்  சிதறி   வெடித்து கழுத்தில்  பட்டு அவதிப்பட்டதாலும் இருக்கலாம் :)   ஆனா ஒரு உண்மையை ஒத்துக்கணும்  இந்த இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் மட்டும் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை :) அதனால் எந்த டின்னர் உறவினர் வருகை என்றால் இந்த ஜாமூன்கள் மட்டும் தயாராக ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அழகாக வீற்றிருப்பர் .. எனக்கு இனிப்பு பிடிக்கலைனாலும் நான் சேர்த்து வச்சிருக்கற புத்தகங்களில் நிறைய இனிப்பு சமையல் குறிப்பு இருக்கு அதை ஒவ்வொன்றா இங்கே ரிலீஸ் செய்ய போறேன் :) ..நீங்கள் செய்து ரசித்து ருசிக்கலாம் :)அசோகா ..
------------------

                                                                              

கோபு அண்ணா கலையரசி அக்கா  அவர்கள் மின்னூல் விமர்சனத்தில் //கோதுமை மாவில் அசோகா என்ற பெயரில் பெண் வீட்டார் செய்து சாப்பிடக் கொடுத்திருந்த ஸ்வீட் தன் வாயின் மேல் அன்னத்தில் ஈஷிக்கொண்டிருக்க, அத்துடனேயே மிகவும் கஷ்டப்பட்டு “//இந்த அசோகா அல்வா பற்றி குறிப்பிட்டிருந்தார் 
இதோ அதன் படமும் செய்முறையும் ..பழைய மங்கையர் மலரிலிருந்து 
                                                                                 

                                                                                

இது நெல்லை தமிழன் ரெசிப்பி உருளைக்கிழங்கு கூட்டு எங்கள் பிளாக்கில்  வந்தது .http://engalblog.blogspot.com/2017/04/blog-post_17.html

அடிக்கடி எங்கள் வீட்டில் செய்கிறேன் மிக நன்றி நெல்லை தமிழன் அன்ட் எங்கள் பிளாக் .
கிழங்கு நான் கொஞ்சம் பெரிதாக திருத்தி:) சேர்த்தேன் ..காரணம் இது ராயல் பேபி ஜெர்சி குட்டி கிழங்கு ..                                                                                 

                                                                                    


அடுத்து மற்றுமொரு பதிவில் எனது சமையல் குறிப்புடன் 
மற்றும்  சமையல் குறிப்பு சேமிப்பிலுள்ள எடுத்து ஒட்டிய சமையல் குறிப்புக்களுடன் :) சந்திக்கின்றேன் 
                                                           *****************************
113 comments:

 1. 'எனது சமையல் குறிப்புடன் சந்திக்கிறேன்' என்று போட்டிருக்கிறீர்கள். இதுல மங்கையர் மலர் காபி பேஸ்டான்னா இருக்கு.

  'இனிப்பு பிடிக்காது' - அடக் கடவுளே... எனக்கு இனிப்பைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. பாயசம் பண்ணும்போது, எனக்கு மட்டும் பால் சேர்க்காமல் (வெல்லப் பாயசத்தில்) எடுத்துவைக்கச் சொல்லிடுவேன். பால் சேர்த்தா இனிப்பு குறைந்துவிடும் என்று.

  என்ன என்ன கதையெல்லாம் (சாக்குதான் வேற என்ன. இனிப்பு உடம்புக்கு கெடுதல், டயபடீஸ் வந்துரும் அது இது என்ன) சொல்லி உங்கள் கணவரை உங்கள் வழிக்குக் கொண்டுவந்தீர்களோ. என்னைக்கேட்டால், உங்களைப் பார்த்தால் 'ஐயோ பாவம்' என்றிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சமையல் குறிப்பு சேமிப்பிலுள்ள எடுத்து ஒட்டிய சமையல் குறிப்புக்களுடன் என்று தட்டியிருக்கணும் :) அவசரத்தில் டைப்பிட்டேன்

   Delete
  2. ஹய்யோ நீங்க வேற நேற்று ஒரு மக்நம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ஒரே சர்க்கரை மூட்டைக்குள்ள மூழ்கின பீலிங் எனக்கு

   Delete
  3. என் கணவர் அப்பப்போ ஸ்வீட்ஸ் கடையில் வாங்கி சாப்ட்டுப்பார் :)))))))))

   Delete
  4. அடக் கடவுளே... எனக்கு இனிப்பைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. பாயசம் பண்ணும்போது, ///

   ஹாஹா தெரியுமே ஜாங்கிரி ஜிலேபிலாம்செய்ர அளவுக்கு இனிப்புமேல் ஆசைன்னு

   Delete
  5. அடுத்து வர இருக்கும் பதிவுகள்னு ' கினோவா தோசை... தட்டு தோசை....' அப்படீன்னு 'காகிதப்பூக்கள்'ளுக்குக் கீழ ஸ்க்ரோல்ல கொடுத்திருப்பது - அடிரா (அப்படித்தான் அவர் பதிவுகளில் எழுதியிருக்கிறார்) வைப் பயமுறுத்தவா?

   Delete
  6. ஹாஹா :) கண்டுபிடிச்சிட்டிங்களே அதுஅப்பப்பொ BE கேர்புல்ன்னு சொல்லிபூஸாரை மிரட்டத்தான் :)

   அந்த ஓடற ரெசிப்பிசை ரொம்ப வருஷம் முன்னாடி போட்டேன் இப்போ அதிலே ட்ரெய்லர் ஓட்டலாமான்னு ஐடியா வருது :)
   விரைவில் பரிசீலிக்கிறேன் :)

   Delete
  7. நெல்லைத் தமிழன் அண்ட் ஏஞ்சல் ஹஹஹ செமையா பூசாரைக் கலாய்த்திருக்கீங்க....அவர் எங்கே காணோம்..தேம்ஸ் நதிக்கரையில் வாலைச் சுருட்டிக் கொண்டு யாரேனும் சமோசாவும் ரீயும் தருவார்கள் என்று காத்திருக்கார் போலும்....மியாவ் மியாவ்...

   கீதா

   Delete
  8. ஹாங் ஹா :) கீதா ஒருவேளை வாக்கிங் போகும்போது ரூட் மாறி வேறே கண்டத்துக்கு போனாங்களோ தெரில :)

   Delete
  9. //அப்படீன்னு 'காகிதப்பூக்கள்'ளுக்குக் கீழ ஸ்க்ரோல்ல கொடுத்திருப்பது - அடிரா (அப்படித்தான் அவர் பதிவுகளில் எழுதியிருக்கிறார்) வைப் பயமுறுத்தவா?//

   ஹா ஹா ஹா இண்டைக்குத்தான் நெல்லைத்தமிழன் முறையா நிமிர்ந்து நிண்டு:), அஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்ர்:) ஹா ஹா ஹா:)..

   அது நான் தேம்ஸ்ல குதிப்பேன், தீ மிதிப்பேன் எண்டெல்லாம் சொல்லி மிரட்டி வச்சிருப்பதால்தான், சமையல் குறிப்பு கொஞ்சம் ஸ்லோவாகியிருக்கு இல்லை எனில் பிரேக் இல்லாமல் போய் எங்காவது முட்டி மோதியிருப்பா இந்நேரம்:).

   Delete
  10. //அவர் எங்கே காணோம்..தேம்ஸ் நதிக்கரையில் வாலைச் சுருட்டிக் கொண்டு யாரேனும் சமோசாவும் ரீயும் தருவார்கள் என்று காத்திருக்கார் போலும்....மியாவ் மியாவ்...
   //

   இப்போவெல்லாம் வால் போனாலும் பறவாயில்லை தலை தப்புவதே பெரிய விசயம் என நினைச்சு:) வாலைச் சுருட்டுவதில்லை:) கீதா.

   //AngelinMay 12, 2017 at 9:03 AM
   ஹாங் ஹா :) கீதா ஒருவேளை வாக்கிங் போகும்போது ரூட் மாறி வேறே கண்டத்துக்கு போனாங்களோ தெரில :)///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதூஊஊஉ.. இது என் குருவோட தார மந்திரம்:).. அதைத்தான் மீயும் ஃபலோ பண்றேன்:)..
   ஒரு அப்பாவிப் பிள்ளையைக் காணல்லயே போய் தேம்ஸ்ல தேடிப்பார்ப்பமே எண்டில்லாமல் கச்சானும் பொப்கோனும் இல்லாத குறையா அரட்டை பண்ணியிருக்கினம் கர்:).

   Delete
  11. ஹாஹா :) உங்களை காணோமே என்கிறது விட எனக்கு நீங்க ஸ்டெப்ஸ் நடக்க மலை மேலேறிட்டீங்களோன்னு நினைச்சேன் எப்படியும் வெயிட்டுக்கு உருண்டு வருவீங்கன்னு நம்பிக்கை இருந்தது :)அதான் தேடலை

   Delete
  12. இதோ அடுத்த போஸ்ட் வாழைப்பூ குழம்பு வருது

   Delete
 2. சின்னக்குழந்தையிலிருந்தே இனிப்புகள் பிடிக்காது என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  //அந்த நேரம் ஜிஞ்சர் உண்ட ஒருவரின் குரு போலத்தான் இருப்பேன் :) //

  அச்சச்சோ .... அவங்க மனசு புண்படப்போகிறதே என்ற கவலையுடன் கிளம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :)
   வாங்க கோபு அண்ணா அதெல்லாம் குரு பக்தி நிறையா அவருக்கு உண்டு குறு கிட்ட தீட்ஷை எடுத்த படத்தை ப்ரேம் போட்டு வச்சிருக்காராம் :)

   Delete
  2. ஆமாம் அண்ணா எனக்கு பெரிய ஆர்வமில்லை இந்த இனிப்புக்களில் அதுவும் பால்கோவாலாம் பார்த்தாலே ஓடுவேன்

   Delete
 3. என் அக்கா கணவர் பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளியின்போது இப்படிச் சொன்னார்! "உன் அக்கா மைசூர் பாக் செய்தாள். ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்தோம்"

  எனக்கும் இனிப்பு வகையறாக்கள் பிடிக்காது என்றாலும் சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விரும்பிச் சாப்பிடுவேன். திகட்டாமல் கொஞ்சம் ஸ்வீட் கம்மியாக இருக்கவேண்டும்!

  மங்கையர்மலர் ரெசிப்பியும், எங்கள் ப்ளாக் ரெசிப்பியும்! ஸூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் மங்கையர் மலர் ரெசிப்பி பழைய புக்ல இன்னும் பத்திரமா இருக்கு ..ஆனா ஒண்ணுகூட நான் செஞ்சி பார்க்கலை :)
   எங்க வீட்ல அப்பா அம்மா தங்கை மூணுபேரும் ஸ்வீட் மக்கள் :) அம்மா சப்பாத்தி பூரிக்கும் பால் சர்க்கரை தொடுவாங்க தோசைக்கு நெய் சர்க்கரை அப்பா சப்பாத்தி உள் சர்க்கரை தேங்கா பூரணம் வச்சி போளி மாதிரி செய்வார் ..என் கணவருக்கும் இனிப்பு ஆசை ..இங்கே தான் கடைங்க நிறைய இருக்கே அதனால் எனக்கு பிரச்சினையில்லை ..
   ஆரம்பத்தில் கொஞ்சம் ஓகே நிலையில் இருந்தேன் இப்போ சுத்தமா பிடிக்கவே மாட்டேங்குது

   Delete
  2. நான் செஞ்சதெல்லாம் கப்ல தான் ஊற்றி குடிக்கிறமாதிரி வரும் ..அதனாலேயே ரிஸ்க் எடுக்கறதேயில்லை இப்பெல்லாம்

   Delete
 4. எனது கருத்து வந்துச்சா... குழப்பமாக இருக்கு வந்தால் இதை நீக்கி விடவும்.

  ReplyDelete
  Replies
  1. இல்லையே வரலை ....நோ ப்ராப்லம் மீண்டும் பின்னூட்டமிடுங்க

   Delete
  2. //AngelinMay 11, 2017 at 4:20 PM
   இல்லையே வரலை ....நோ ப்ராப்லம் மீண்டும் பின்னூட்டமிடுங்க//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்குப் புரொப்ளம் இல்ல:) அவருக்கெல்லோ புரொப்ளம்:)

   Delete
 5. ஏஞ்சல் சகோ! நான் இனிப்பை மிகவும் விரும்பிச் சாப்பிடுபவன் ஆனால் எல்லாம் தடா இப்போது ஏன்னா நான் இனிமையானவன்!!! ஹஹ்ஹ நல்லதொரு ஸ்வீட் ஆனால் எங்கள் வீட்டிலெல்லாம் கேரளத்து ஸ்வீட் அதுவும் அபூர்வம் இப்படி வெரைட்டியாக எல்லாம் செய்வதில்லை. என் குழந்தைகளில் என் மகள் என்னைப் போல. ஸ்வீட் விரும்பி!!

  கீதா: ஏஞ்சல் எப்பவுமே நான் ஹைஃபைவ் சொல்லுவேன் உங்களோடு. ஆனால் இதில் மட்டும் இல்லை ஹிஹிஹி...யெஸ் நான் ஸ்வீட் விரும்பி ஆனால் என் உடலில் சர்க்கரை இருப்பதால் ஸ்வீட்டுகளுக்கு என் மீது பொறாமை!..

  அசோகா ஹல்வா வீட்டில் செய்வதுண்டு. சென்ற தீபாவளிக்குக் கூடச் செய்தேன். இதே ரெசிப்பி கலெக்ஷன் என்னிடமும் இருந்தது...திருவையாறு அசோகா ஹல்வா ரொம்ப ஃபேமஸ் என்று புத்தகம் ஒன்றில் வாசித்த நினைவு. அந்தக் கடை பெயர் கூட போட்டிருந்தார்கள் அது மறந்து போயிற்று ரெசிப்பி கூட போட்டிருந்தார்கள். நான் எனது ஃபைலில் தேடிப் பார்க்கிறேன்....நல்ல விஷயம் உங்களுக்கு ஸ்வீட் பிடிக்காது என்பது!!!

  நெ த வின் ரெசிப்பி ஆம் நான் வீட்டில் அடிக்கடிச் செய்வது!!! ஒரு ஸ்வீட்டுக்கு ஒரு கார டிஷ்!! சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா :) எனக்கும் சேர்த்து என் கணவர் நிறைய ஸ்வீட் சாப்பிடுவார் ..எனக்கு சின்னதிலிருந்தே ஸ்வீட்ட்டில் ஆர்வமில்லாததால் பல்லெல்லாம் பத்திரமா யிருக்கே :) இவருக்கு கடைவாய் பல்லெல்லாம் FILLING ..நான் சொல்லி காட்டுவேன் எப்பவும் இதை .சந்தோஷமான விஷயம், என் மக்களுக்கும் ஸ்வீட் பிடிக்காது என்னைப்போல வரா

   Delete
  2. ///எனக்கு சின்னதிலிருந்தே ஸ்வீட்ட்டில் ஆர்வமில்லாததால் பல்லெல்லாம் பத்திரமா யிருக்கே :)///

   ஓ என் மகனின் பால் பற்களும் ஒரு பொட்லில் பத்திரமா இருக்கு.. இதுபோலவா அஞ்சு நீங்களும் பிடுங்கிப் பிடுங்கி பத்திரப்படுத்தி வச்சிருக்கிறீங்க?:) அதுதானே இப்போ பல்செட் தானே அது... அப்பவே தெரியுமே எனக்கு:)

   Delete
  3. அவ்வ்வ் :) பல்லெல்லாம் என் வாயிலேயே பத்திரமா இருக்கு போதுமா :)

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை அதிரா நம்போணும்?:) ஆதாரத்தோடு நிரூபியுங்கோ:) டெண்டிஸ்ட் இடம் சேர்டிபிகேட் வாங்கி வந்து காட்டுங்கோ:).

   Delete
  5. வாங்க நான் ஆ திறந்து என் பல்லையே காட்டறேன் :)

   Delete
  6. ”சுப்பிரிவிக்கி” பேஸ்ட் போட்டு பிரஸ் பண்ணிட்டுக் கூப்பிடுங்கோ வாறேன்ன்ன்:)..

   Delete
 6. இந்த இனிப்பு ஏன் சிலருக்கு பிடிக்கவில்லை என்ற விடயம் பெரிய கதை போல எழுதனும் நானும் பால்கோவா அதுவும் மதுரையில் இருந்து கஸ்ரப்பட்டு வாங்கி வந்து சென்னை விமான நிலையத்தில் சில உடமையை தூக்கிவீசி நிறைக்காக ))) பாரிஸ் வந்த போதும் பால்க்கோவா ஒரு சுவையும் இல்லை இதைவிட ஒரு இட்லி பொடி வாங்கி வந்து இருக்கலாம் என்ற கூற்றுக்கும் நிறைய தொடர்பு இருக்கும் போல))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் :) எனக்கு இந்த இனிப்பு பேரை கேட்டாலே சர்க்கரை தொட்டில முங்கின மாத்திகிரி இருக்கும் அதே தான் உங்க வீட்லயுமா :)) நிச்சயம் ஆராய்ச்சி செய்தெ ஆகணும் சிலருக்கு மட்டும் ஏன் இனிப்பு விருப்பமில்லைனு :)

   Delete
  2. நேசன் நம்மூர் ஸ்வீட்ஸ் அந்த சூழலுக்கு நல்லா இருக்கும் இங்கே பிளைட்டில் வரும்போது டெம்ப்ரேச்சர் எல்லாம் அந்த ஸ்வீட்ட்டின் தன்மையை மாற்றும் அதான் சுவை மாறிடுது

   Delete
 7. //அந்த நேரம் ஜிஞ்சர் உண்ட அதிராவின் குரு போலத்தான் இருப்பேன் :) // ஹஹ்ஹாஹ்ஹ குருவின் சிஷ்யையும் அப்படியே தானோ??!!!! எங்கே ஆளைக் காணோம்??!!! ரையர்டாகி ரீ குடிச்சுட்டுருக்காங்க போலும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க கீதா :) நான் அடுத்தது சமையல் ரெசிப்பினு போட்டேன் போன பதிவில் அதான் பயந்து ஓடிட்டாங்க போல :)
   ஆனா பூனையை நம்ப முடியாது ஒளிஞ்சிருந்து அட்டாக் செய்யும் எதுக்கும் ரெடியா இருப்போம் கம் ஹோல்ட் மை ஹாண்ட்ஸ்

   Delete
  2. யாரது என் குருவைப் பற்றிப் பலகாரம் செய்வது.. வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:).. பரிகாசம் செய்யிறது... அவர் ஒரு பார்வை பார்த்தாலே ஓடிடுவீங்க டெல்லிட்டேன்ன்:)..

   அதிராவைக் காணமே என்னாச்சோ ஏதாச்சோ.. தேம்ஸ்ல குதிச்சிட்டாவோ என எண்ணாமல்... இங்கின ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கே கர்ர்:)..

   மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்:).

   Delete
  3. சேசே :) தேம்ஸில் நீங்களாவது குதிக்கிறதாவது :) எப்படியும் வருவீங்க தெரியும் அதான் நாங்க தேடி எங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணல
   காசி //அது ரொம்ப பழைய படம் நீங்க புதுசா பவர்ஸ்டார் படம் பாருங்க :)

   Delete
  4. அதிரா பரவால்ல காசிக்குப் போனாலும் கங்கை இருக்கு குதிக்க!!ஹிஹிஹீ நீங்க போற இடம் எல்லாம் ஏதேனும் ஒரு நதி இருக்கும் போல இல்ல நதி இருக்கும் இடமா தேடித்தான் போவீங்கல்ல....ஹிஹிஹி
   எஞ்சல் அன்னிக்கு அப்புறம் வர முடியாம போச்சு...இனி னோட்டிஃபிக்கேஷன் கொடுத்த்துட்டுப் போறேன் அப்பதான் உங்களுக்குக் கை கொடுக்க முடியும் பூசார் வரும் போது ஹஹஹ்
   கீதா

   Delete
 8. நான் மைதாவிற்குப் பதில் கோதுமை மாவு சேர்ப்பதுண்டு...இது அந்த திருவைஅயறு ரெசிப்பிலருந்து கற்றுக் கொண்டதுதான்...அப்புறம் அவர்கள் ஏலக்காய் போடுகிறார்கள்....நான் சில சமயம் போடுவேன் ஆனால் பொதுவாக நான் ஒரிஜினல் சுவையை விரும்புவதால் அதாவது அந்தப் பருப்பு நெய்யின் கலவையை...ஏலம் சேர்த்தால் அது டாமினேட் பன்னும் ஸோ சேர்க்காமலும் செய்வதுண்டு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ஏலம் நிறைய நேரம் நான்தான் சீனியர்னு முதலில் நிற்கும் எல்லாத்திலும் ..டீயில் போட்டாலும் முந்திரிக்கொட்டை மாதிரி அது வாசனைதான் காட்டும் ..

   Delete
  2. ஹஹஹஹ் முந்திரிக் கொட்டை உங்க பதிலை ரசித்தேன்...

   கீதா

   Delete
 9. ஏஞ்சல் நானும் இப்படி நிறையமங்கையர் மலர் மற்றும் பல புத்தகங்களில் வந்த்வற்றை யார் வீட்டிற்கேனும் போனால் அங்கு பார்த்தால் குறித்து வைத்து எழுதி வைத்துள்ளேன். எல்லாம் 29 வருடங்களுக்கு முன்....இப்போது எல்லாம் அழியும் தருவாயில் உள்ளன. இங்க் பென் நோட்டும் கிழியும் நிலையில். பல வற்றை கம்ப்யூட்டரில் டைப்பி சேமிக்க வேண்டும் என்று நினைட்துள்ளேன் ஆனால் பல வேலைகளுக்கு நடுவில் ஐயோ என்றும் இருக்கு...பார்ப்போம்...திருவையாரு அசொகா என்று மொத்தம் 5 குறிப்புகள் உள்ளன. அந்தக் கடையில் செய்வது பற்றிய குறிப்பைக் காணவில்லை...இல்லை நான் பெயர் எழுதாமல் விட்டுவிட்டேன் போலும்....

  ஒருகுறிப்பில் ஒரு கப் பருப்பிற்கு 3 கப் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் 1 1/2 கப் என்றிருக்கும் ரெசிப்பியைத்தான் செய்வதுண்டு. இதோ லிங்கில் பாருங்கள் இதுதான் நான் செய்யும் அளவு....ஏலம் போட்டும் போடாமலும்..நான்.கலர் சேர்ப்பதில்லை...https://www.youtube.com/watch?v=509TJ9nedkA

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எல்லாத்தையும் டைப் செஞ்சி வைங்க கீதா என் தாள்கள் பத்திரமா இருக்கு ..எல்லாம் ஆதிகாலத்தில் இருந்து சேர்த்தது ..
   நானும் இங்கே வலையில் கொஞ்சம் renovation செய்றேன் முந்தி எல்லா பதிவிலும் கவிலிங் சமையல்னு ஒண்ணா போட்டு லேபிள்ஸில் குழம்பி வச்சி இப்போ மீண்டும் re இங்கே செய்றேன் ..thanks for the link

   Delete
  2. ///.எல்லாம் ஆதிகாலத்தில் இருந்து சேர்த்தது ..///
   இப்போதானே ட்றுத் எல்லாம் வெளில வருது:).. ஹையோ இது வேற ட்றுத். ஆதிகாலக் குறிப்புக்களை வச்சா காலத்தை ஓட்டிட்டு இருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:).. இதுக்குத்தான் சொல்றது சுவீட் 16 குறிப்புக்கள் படிக்க என்பக்கம் வாங்கோ என:).

   Delete
  3. கர்ர்ர்ர் :) எது அந்த cous cous பொங்கலா அவ்வ் நோ நாங்கல்லாம் வாழணும்னு ஆசைப்படறோம்

   Delete
  4. ஆமா ஆமாஅ நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க அஞ்சு:) மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் திங்கட் கிழமை எங்கள்புளொக்கில் அடிராட.. [ஹையோ மறந்திருந்ததை நெ.த நியாபகப்:) படுத்திட்டாரே]

   குஸ் குஸ் பொங்கல் வெள்
   இவர இருக்கிறது.. எல்லோரும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து:) வாக்குகளையும் கொமெண்ட்களையும் அள்ளி அள்ளி வீசும்படி மிகவும் மென்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:).. ஆவ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊ ஸ்ரீராம் எதுக்கு இப்போ அவசரமா காவி உடை தரிக்கிறார்:).. இரவோட இரவா சாமியார் ஆகிடப்போறாரோ என் குறிப்புக் கிடைக்க முன்:).. விடமாட்டேன் என் ரெசிப்ப்பி வெளிவரும் சொல்லிட்டென்ன்ன் எல்லோரும் ரெடியா இருங்கோ பீஸ்ஸ்ஸ்:).

   Delete
  5. நோ நோ :) நான் இன்னிக்கே இந்தியாவுக்கு அதுவும் கரண்ட் வராத குக்கிராமத்துக்கு போறேன் ..என்னால் அந்த காட்சியை காண முடியாது ..பாவம் ஸ்ரீராம் :) அந்த பொங்கல் பார்த்து மயங்கி விழுந்தவங்க ஸ்ரீராமைதான் sue செய்ய போறாங்க :)

   Delete
  6. என்னாது ஸ்ரீராம் காவி உடையா? மேபி அவர் ஏதேனும் தொடரில் நடிக்கிறாரோ?? ராமாயணம் மகாபாரதம் இப்படி ஹஹஹ்ஹ்

   அதிரா என்னா பொங்கல் அது? புரியலியே!!! ஏஞ்சல் ஹெல்ப் ப்ளீஸ்

   கீதா

   Delete
  7. ஓ! ஏஞ்சல் ப்ளாகை ரி அரேஞ்ச் பண்ணுறீங்களா..குட்...பார்த்து எதுவும் மிஸ் ஆகிடாம..

   கீதா

   Delete
  8. அது கீதா :) ஸ்ரீராமுக்கு அதிரா சமையல் குறிப்பு அனுப்பறாங்களாம் :) அதை கேட்டதுமே அவர் காட்டுக்கு போக ரெடியாகிட்டாராம் :)

   Delete
  9. ஆமாம் கீதா ..நிறைய குறிப்புக்கள் இடம் மாறி லேபிள்ஸ் சரியில்லாமா இருக்கு அத்ஹான் இப்போ சரி செஞ்சிட்டிருக்கேன்

   Delete
 10. ஹான் சொல்ல மறந்துட்டேன் சீனிக்குப் பதிலா நான் வெல்லம் போட்டும் செய்வதுண்டு....அதுவும் ரொம்ப டேஸ்டியா இருக்கும்...

  கீதா

  ReplyDelete
 11. அந்த லிங்கில் அவர்கள் டால்டா சேர்ப்பது போல் தோன்றுகிறது. நான் எப்போதுமே வீட்டில் காய்ச்சும் நெய் அல்லது ஆவின் நெய்தான்...அல்லது அமுல் வேறு எந்த நெய்யும் சேர்ப்பதில்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நானும் அதேதான் கீதா நெய் அல்லது ஆர்கானிக் பட்டர் வாங்கி உருக்கி செய்வேன்

   Delete
 12. வணக்கம்

  செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் நாங்களும் வீட்டில் செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன் :) அந்த ஸ்வீட் மங்கையர் மலர் ரெசிப்பி .உருளை கூட்டு நெல்லைத்தமிழன் ரெசிப்பி இரண்டாவதை மட்டுமே நான் செய்தென்
   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

   Delete
 13. எனக்கும் இனிப்பில் நாட்டம் கிடையாது ஆனால் காரம் பிடிக்கும் பாகற்காய் மிகவும் பிடிக்கும்

  தங்களது அனுபவம் நன்று ஆனால் செய்து பார்க்க அச்சமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு காரம் ரொம்ப போட்டாலும் இல்லை இனிப்பு நிறைய இருந்தாலும் அவ்ளோ விருப்பமில்லை ரெண்டுக்கும் நடுவில் இருக்கிற உப்பு சேர்த்த முறுக்கு சிப்ஸ் எல்லாம் பிடிக்கும் :)

   இந்த பயத்தாலேயே ஸ்வீட்ஸ் செயறதை விட்டுட்டேன் ..இங்கே நிறைய கடைகள் இருக்கே அதிரா வீட்டு பக்கம் ஒரு ஸ்வீட் கடை கூட கிடையாது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்

   Delete
  2. ///அதிரா வீட்டு பக்கம் ஒரு ஸ்வீட் கடை கூட கிடையாது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நேக்கும் சுவீட் பிடிக்காது ஏனெனில் மீ சுவீட் 16 எல்லோ:).. நான் பிறந்து ஒரு வயதானதும் கவ் அண்ட் கேட் மில்க் பவுடரில சீனி போட்டு அம்மா தந்தாவாம்ம்.. நான் துப்பிப்போட்டனாம்.. பின்பு சீனி போடாமல் தர, குடிச்சனாமே.. அப்பவே அப்படி:).

   Delete
  3. ஆமா ஜெசி மல்ட்டி கூட சுகர் இல்லாமைதான் பால் குடிப்பாங்க :)

   Delete
  4. அப்பவே இன் 1958 லதானே ஹாஆ ஹாஆஆ

   Delete
  5. ஹையோ இப்போ எதுக்கு... ............... ரை:) வம்புக்கு இழுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 14. அப்பாடா.. மூன்று முறை செல்லில் டைப்பி தோற்று மீண்டும் அனுப்புவதற்குள் போதுமென்றாகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா நேற்று நானும் உங்க போஸ்ட்க்கு ஐ பேடிலிருந்து பின்னூட்டம் போடவே முடில ஆனா வோட் மட்டும் செய்ய விட்டுச்சி ..மீள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 15. இனிப்பு பிடிக்காது என்பது ஆச்சிரியம் தான். சமையல் குறிப்புகள் கட்டிங் நானும் நிறைய வைத்து இருக்கிறேன். புது புது சமையல்கள் செய்து பார்ப்பேன்.
  ஒவ்வொரு தீபாவளிக்கும் புது இனிப்பு தான் செய்வேன். இப்போது ஏதோ சமைத்து சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் வந்து விட்டது. குழந்தைகள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால்தான் இனிப்புகள் செய்வது. விஷேங்க்ளில் கொஞ்சம் பாயசம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..ஆமாங்கா எல்லாருமே என்னை கேலி செய்வாங்க சில நேரம் யார் மனசும் புண்படக்கூடாதுன்னு இனிப்பை எடுத்து கைக்குட்டைல சுத்தி வச்சிப்பேன் கல்யாணங்களுக்குப்போனா என் இலை ஸ்வீட்ட பக்கத்துக்கு இலைக்கு தள்ளிவைப்பேன் :) இந்த பத்திரிக்கை குறிப்பு நிறையவே இருக்கு .ப்லாகில் போட்டா பத்திரமா இருக்கும்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
 16. கொஞ்ச நாளாவே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டு இருக்குது, பழையபடி நான் காணாமல் போயிடுவேன் என:).. ஒருவேளை காணாமல் போயிட்டால்ல்.. காசியில் இருக்கும் பூஸானந்தா ஆச்சிரமத்தில் வந்து என்னிடம் தீட்சை பெற்றுச் செல்லவும்..

  ஊசிக்குறிப்பு:
  புளொக் நட்புக்களுக்கு.. தீட்சை இலவசம்:).

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் காணாம போக விட மாட்டோம் :) நல்லா தெரிஞ்சிக்கோங்க நீங்க இங்கேயே இருந்து பீட்சா சே டங் ஸ்லீப்ட் தீட்சை கொடுங்க :)

   Delete
  2. என் உள்ளுணர்வு கூட ஒண்ணு சொல்லுது :)

   Delete
 17. விள்ளல் எனும் புதிய சொல் ஒன்றை அறிந்து கொண்டேன். நன்றி அக்கா :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படியா மிக்க நன்றி

   Delete
 18. என்னது இனிப்பு புடிக்காதா? நீங்கள் மனுஷ ஜென்மாம்தானா?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ் அம்மாடி :) வராம வந்து ஒரு பிள்ளையை இப்படியா டவுட் படறது :))
   முதல்ல சொல்லுங்க நீங்க குழந்தை மாமி எல்லாம் எப்படி இருக்கீங்க ..இன்னிக்கு உங்க வீட்ல என்ன ஸ்பெஷல் ..உங்க மகன் எப்படி இருக்கான் .நீங்க கராஜ்ல வச்ச மீன் குழம்பு இன்னும் இருக்கா :)

   Delete

  2. மீன் குழன்பு காலியாகி நாட்களாகிவிட்டது கடந்த ஞாயிற்று கிழமை ஊரில் இருந்து அண்ணன் அண்ணி வந்திருந்தார்கள் அவர்களை லஞ்சுக்கு வீட்டிற்கு அழைத்து இருந்தேன் மகளுக்கு காலையில் ஹாக்கி ப்ராக்டிஸ் இருந்ததால் மாமியை அனுப்பிவிட்டு நான் சமைத்தேன் வீட்டில் மாமியின் ஆலோசனைபடி சைவ உணவுகளை தயாரித்துவிட்டு அவருக்கு தெரியாமல் shrimp பிரியாணி தயாரித்து வைத்திருந்தேன் சாப்பிடும் நேரம் வந்ததும் அதை டேபிளில் எடுத்து வைத்தேன் அதை பார்த்த மனைவி களவாணிபயலே இதற்காகவா என்னை மகள் கூட அனுப்பிவைத்தாய் என்று சொல்லி சிரித்தாள் மனதிற்குள் திட்டி இருப்பாள் என் சாப்பாடை சாப்பிட்டுவிட்டு வழக்கம் பொல மற்றவர்கள் சொல்லுவது போல நீ ஏன் ரெஸ்டராண்ட் ஆரம்பிக்க கூடாது என்று கேட்டார்கள் அண்ணியும் அண்ணனின் பெண்ணும் என்னிடம் ரிசிப்பையை கேட்டார்கள். இதில் என்ன விஷேசம் என்றால் அவர்கள் அடிக்கடி நான் வெஜ் சமைத்து சாப்பிடுபவர்கள் நானோ மனைவிக்கு தெரியாமல் திருட்டு தனமாக எப்போதாவது சமைப்பவன் இருந்தாலும் அவர்களை விட சிறப்பாக சமைக்கிறென் என்று அவர்கள் வாயால் கேட்கும் பொது சதோஷமாக்த்தான் இருக்கிறது

   Delete
  3. //என் சாப்பாடை சாப்பிட்டுவிட்டு வழக்கம் பொல மற்றவர்கள் சொல்லுவது போல நீ ஏன் ரெஸ்டராண்ட் ஆரம்பிக்க கூடாது என்று கேட்டார்கள் அண்ணியும் அண்ணனின் பெண்ணும் என்னிடம் ரிசிப்பையை கேட்டார்கள்//

   எதோ எழுதியிருக்கீங்க ஆனா கண்ணு தெரிலா :)))))))))))))))
   அதிரா வந்து படிச்சு சொல்லுங்க ப்ளீஸ் :)

   Delete
  4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தற்பெருமை தாங்ங்ங்க முடியல்ல சாமீஈஈஈஈஈ:)... என்னையும்தேன் சொல்றாங்க ரெஸ்டோரண்ட் ஆரம்பிங்க என:) இதை எல்லாம் நான் வெளில சொல்லிட்டா இருக்கிறேன்?:)...

   அச்சச்சோ மறந்துபோய் பேசிட்டேன்.... ஆவ் ட்றுத் நீங்க சூப்ப்பரா சமைப்பீங்க என உங்கட உழுந்தம் ரைஸ் பார்த்தே கண்டுபிடிச்சேன்...... ஸ்ஸ்ஸ் இல்லாட்டில் வோட் போடாமல் விட்டிடப்போறாரே:).

   Delete

 19. எனக்கு இரண்டும் பிடிக்கும் ஆனால் காரம் சற்று அதிகமாக பிடிக்கும்.....மாம்பழம் ஆப்பிள் போன்றவைகளுக்கு கூட உப்பு காரம் போட்டுதான் சாப்பிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. என் பொண்ணுக்கு ஆப்பிள் வித் சால்ட் அன்ட் பெப்பர் எனக்கு கொய்யா செங்காய் மிளகாய்த்தூள் வித் உப்பு பிடிக்குமே

   Delete

 20. //சமையல் செய்ய அதாவது திருமணமானதும் பெரிதாக இனிப்பு வகைகள் செய்ய பிரயத்தனப்படவில்லை அதற்க்கு முக்கிய காரணம் நான் ஒரிரு முறை செய்த பாயாசம் பேயாசமாகி என்னை வஞ்சித்ததும் காரணமாக இருக்கலாம் .சில காலம் கழித்து கணவருக்கு மைசூர் பாகு செய்ய துவங்கி அது கடலைமாவு இனிப்பு கஞ்சி ஆனதும் காரணமாக இருக்கலாம் .அல்லது இரு வருடங்கள் முன்பு எப்படியாவது கணவருக்காக தேன் மிட்டாயை செய்யணும்னு ஆசைப்பட்டு மாவு தயாரித்து அதை எண்ணெய்யில் போட ..அது கையெறி குண்டுகள் போல கிச்சனேல்லாம் பெரும் சத்தத்துடன் நாற்திசையிலும் சிதறி வெடித்து கழுத்தில் பட்டு அவதிப்பட்டதாலும் இருக்கலாம் ///


  இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் சாப்பாட்டுக்கு கூட கிச்சன் பக்கம் ஒதுங்கியதே இல்லை என்று

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா :) வாங்க மொத்தமா காபி பேஸ்ட் செஞ்சு கலாய்க்கறீங்களா ஹாஹா :)
   இன்னிக்கு பொண்ணு ஒரு டீஸ்பூன் சர்க்கரை தெரியாமல் ஈவ்னிங் காபிக்கு போட்டுட்டா அது இன்னும் நெஞ்சில் heart burn மாதிரி இருக்கு தெரியுமா ..கிச்சனில் ஸ்வீட் மட்டுமே செயறதில்ல மேலே பாருங்க நெல்லை தமிழன் ரெசிபிலாம் செஞ்சி பார்த்தேனே

   Delete
  2. இதில் இருந்து என்ன தெரிகிறது தெரியுமா இப்பதான் நீங்கள் நெல்லைதமிழன் ரிசிப்பியை பார்த்து சமைக்க கற்று கொள்ளுறீங்க என்று... ஹீஹீ நீங்க கல்லை எடுத்து என் மண்டையை உடைக்க நினைப்பது எனக்கு புரிகிறது நல்லவேளை உங்களிடம் இருந்து தூரத்தி இருப்பதால் தப்பித்தேன்

   Delete
  3. ரொம்ப சந்தோஷப்படாதிங்க :) என் பொண்ணு இந்த சம்மர் ஹாலிடேசுக்கு நியூயார்க் வரணும்னு சொல்லியிருக்கா :) டிக்கட் போடப்போறேன் கடவுளை வேண்டிக்கோங்க

   Delete
  4. ஒரு சமையல் சிங்கத்தை சீண்டிட்டீங்க :)என் ப்லாகில் போட்ட எல்லா சமையல் குறிப்பையும் தேடி எடுத்து தனி போஸ்ட்களாக போடப்போறேன் :) ஏற்கனவே லேபிள்ஸ் எல்லாம் செட் செஞ்சிட்டிருக்கேன் வரேன் இதுவரைக்கும் நான் செஞ்ச அத்தினி சமையலும் இங்கே டிஸ்பிளே செய்யப்படும் டும் டும் டும்ம்ம்ம்ம்ம்ம் :)

   Delete
  5. ஹையோ இந்த அக்கினிப் பிரவேசம் எப்போ எனச் சொல்லிடுங்கோ பிளீஸ்:) நான் அவசரமா அந்தாட்டிக்கா போகோணும்:).

   Delete
  6. தங்கமலை ரகசியம் திடீர்னு வரும்

   Delete
 21. இன்று கூட இந்தியாவில் இருந்து அண்ணன் வாங்கி வந்த ஜாங்கிரியை சுவைத்து மகிழ்ந்தேன் இரவில் சாப்பிட்ட்டு முடித்தது எதாவது ஒரு ஸ்வீட் சாப்பிடுவோம்.. ஆ சொல்ல மறந்துட்டேன் நானும் சுகர் பேஷண்ட்தான்

  ReplyDelete
  Replies
  1. //இரவில் சாப்பிட்ட்டு முடித்தது எதாவது ஒரு ஸ்வீட் சாப்பிடுவோம்//
   ஹையோ இந்த பழக்கம் உங்க மைத்துனருக்கு இருக்கே :))

   Delete
 22. என்னது? இனிப்பு பிடிக்காதா? கேசரியும், சர்க்கரைப் பொங்கலும், கூடவே பாயாசமும் இருந்தால் வேறு எந்த உணவுமே வேண்டாமே... போதும், போதும்கிற அளவுக்கு சாப்பிட்டதால இப்போ அவ்வளவா சாப்பிடுறதில்லை...

  ReplyDelete
  Replies
  1. ஆவ் !!! வாங்க கார்த்திக் ..எல்லாருமே எண்ணி வினோத ஜந்துவை பார்க்கிற மாதிரி இருக்கே :)
   ஆமாம்பா ஆமா :)எனக்கு மட்டும் பிடிக்கலையா இல்லைன்னா என்னோட யாரவது இந்த லிஸ்டில் சேருவங்களான்னு பார்த்தேன் ஒருத்தரும் வரலா ..சரி சரி நீங்கலாம் நல்லா இனிப்பு சாப்பிடுங்க :)எனக்கும் சேர்த்து ஆனால் என் உணவு பழக்கம் திடீரென மாறியிருக்குனு நினைக்கிறன் கடந்த சில வருடங்களில்

   Delete
 23. அது சரி, போற போக்கில அதிரா அக்காவையும் கிண்டல் அடிச்சிட்டுப் போயிட்டீங்க :)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நான் எங்கே ஒ ரு நுனி கிடைச்சாலும் ஒரு குட்டியூண்டு பிளேஸ் கிடைச்சாலும் பூனையை உருட்டுவேன் வாருவேனே :)
   அதிரா டாம் cat நான் ஜெரி மவுஸ் :))))

   Delete
  2. ///அதிரா டாம் cat நான் ஜெரி மவுஸ் :))))////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  3. ஹை அதிரா அக்காவா ஹிஹிஹிஹி....ஏஞ்சல் கார்த்திக்குமே அதிரா அக்காவா ஹாஅ அட!!!

   கீதா

   Delete
  4. அதுதானே :) இனிமே இனிப்பு 16 னு எங்காச்சும் பூஸ் சொல்லட்டும் :)

   Delete
 24. இனிப்பை விரும்பாத இனியவரே வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) மிக்க நன்றி மிக்க நன்றி

   Delete
 25. hru pa,cant see u n FB....B/w Lovely post .now am craving for halwa .

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா. நான் நலம்பா .நீங்க பாப்பா மகன் எல்லாம் நலமா. வரென்பா அங்கே .அல்வா செய்து இருகிங்கலா இந்த அசோகா வெரைட்டி .செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
  2. Yes,here we r all fine,what abt u & sharon....come back soon in FB...Not yet try the halwa,will try it soon angel !!

   Delete
 26. #பார்லே குட் டே எல்லாம் கிட்டவே சேர்த்ததில்லை#
  உண்மையை சொல்லுங்க ,TRUE பிஸ்கட்டாவது உண்டா ?அதிரா பூஜார் ரீ குடிக்கச் சொன்னதால் இங்கே வந்தேன் ,தொட்டுக்க பிஸ்கெட்கூட இல்லேங்கிறீங்களே :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவான்ஜி நீங்க இங்கே வருவது செகண்ட் டைம் :) ஏற்கனவே அந்த வொயிட்னர் பதிவில் வந்திங்க ..
   பிஸ்கட் நான் சாப்பிட மாட்டேன்றத்துக்காக உங்களுக்கு இல்லை சொல்ல மாட்டேன் :) உங்களுக்கு top பிஸ்கட் தரேன்
   இப்போ இந்தியால இருக்கா டாப் பிஸ்கட் ..

   Delete
  2. கர்ர்ர்ர்ர் மசமசன்னு பேசிக்கொண்டிருக்காமல் நல்ல நெஸ்ட்டமோல்ட் போட்டு ரீ குடுங்கோ.. இல்லாட்டில் அஞ்சு ரீ தரல்ல நான் இனி வரமாட்டேன் எனச் சொல்லிடப்போறாரே:)

   Delete
  3. #இப்போ இந்தியால இருக்கா டாப் பிஸ்கட் #
   அது இருந்தாதான் உங்களுக்கு ஒரு லோடு அனுப்பியிருப்பேனே :)

   Delete
  4. ஆஆ அப்போ அதையும் நிறுத்திட்டாங்களா ?? அது உப்பு சுவையோட நல்லா இருக்கும்

   Delete
 27. #நல்ல நெஸ்ட்டமோல்ட் போட்டு ரீ குடுங்கோ#
  ரெண்டு வருடம் கழித்து வந்திருக்கேன் ....நல்லா சொல்லுங்க அதிரா :)

  ReplyDelete
  Replies
  1. haahaa :) கிரீன் டீ தரேன் :) good for health

   Delete
 28. அட இனிப்பு புடிக்காதா...

  எனக்கு இனிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்...

  அதுவும் நிறைய எல்லாம் சாப்பிட தோணாது...கொஞ்சம் கொஞ்சமா கடிக்காம ரசுச்சு சாப்பிடறது தான் இஷ்டம்...

  அசோகாவும் ரொம்ப ஆசை...இந்த வாரம் செய்யணும்..


  உங்க உருளைக்கிழங்கு கூட்டும்..ம்ம்ம் நல்ல இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..ஹாலிடேஸ்லாம் எப்படி போகுது ..உங்களுக்கு இனிப்பு பிடிக்கும்னு தெரியுமே உங்க பிளாக்ல பார்த்திருக்கேன் ஸ்வீட்ஸ் கேக் எல்லாம் ..:) அளவோடு கூட எனக்கு இப்போ பிடிக்காம போச்சு என்னென்றே தெரில :)
   உருளக்கூட்டு இப்போ அடிக்கடி செய்றேன் :)

   Delete
 29. அசோகா...
  பார்சல் பிளீஸ்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நிச்சயம் அனுப்பறேன் :)

   Delete
 30. இங்கு வந்த புதுசில் வாங்கி சாப்பிட்டாச்சு. இப்போ ஏனோ பிடிக்குதில்லை. ஆனா காராமா சாப்பிட்டால் சின்ன விள்ளல் சாக்லேட் அவ்வளவுதான். கோப்பி சுகர் போட்டு குடிப்பதால்(1டீஸ்பூன்) அது மட்டும் போதுமே என நிறைய சாப்பிடமாட்டேன். பொங்கல் அன்று மட்டும் விதிவிலக்கு. வீட்டில் கணவருக்கு இனிப்பு பிடிக்காது. சில நேரம் என் கஷ்டப்படித்தலால் சாப்பிடுவார்..
  போற இடத்தில் டீ , காப்பிக்கு சுகர் வேண்டாமே என்றால், உடனே உங்களுக்கு சுகர் இருக்கா என கேட்டு வைப்பாங்க பாருங்க.. அப்ப ஒரு கோபம் வரும்... அவங்களை சொல்லியும் குற்றமில்லை.இங்கு நிலமையும் அப்படிதான். யாரைப்பார்த்தாலும் சுகர், கொலஸ்ரால் என்கிறாங்க.
  சில ஸ்வீட் ரெசிப்பி செய்யனும்ன்னு செய்து பார்க்கிறதுதான். அபிதான் சாப்பிடுவார் பிறகு.
  ஆனா இங்கிருக்கும் வெள்ளைகள் மார்க்கெட்டில் நிறைய சாக்லேட் அள்ளுவாங்கப்பா. பார்க்கவே பயமாயிருக்கும்...
  உ.கி ரெசிப்பி செய்து பார்க்கனும்..

  ReplyDelete