அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/6/17

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே :) வந்ததே

                                                                                   

முந்தி முந்தி காலத்தில சின்ன பிள்ளையா இருந்தப்போ ஸ்கூலுக்கு பிறந்தநாளுக்கு கலர் ட்ரெஸ் போட்டு பார்லே நியூட்ரின் சாக்லேட் பெட்டி கொண்டுபோவோம் ..பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமைகளில்  மட்டும் கலர் டிரஸ் போட அபூர்வமா அனுமதி கொடுப்பாங்க ..விரல் நகம்லாம் ஸ்கூல் பி.டி வகுப்பில்  கையை நீட்டி நிக்க சொல்லி ஒழுங்கா வெட்டியிருக்கானு பார்ப்பாங்க கொஞ்சம் வளர்ந்திருந்தாலும்  ரூலரால் கை  முட்டியில் அடி  விழும் .ரெண்டு ஜடை எண்ணெய் போட்டு வாரி மடிச்சு கருப்பு ரிப்பன் கட்டணும்..அதேதான் ஆடு மாதிரி தான் போவோம் :)
 .வெள்ளை ஷூவுக்கு பிளாங்கோ போட்டு வைப்போம் ..கூட்டமாவே ஸ்கூலுக்கு சைக்கிளில் போவோம் .எல்லார் கிட்டயும் BSA SLR லேடிஸ் பைக் இருந்தது ....
அசெம்பிளி  முடிஞ்சி வகுப்புக்கு போகும்போது  ஸ்கூல் பாட்ஜ் குத்தியிருக்காட்டி 1 ரூபாய் அபராதம் கட்ட வைப்பாங்க ..இந்த வாலன்டியர் வேலை பார்க்க ரெண்டு வருஷம் ஒரே வகுப்பில் பெயிலாகி இருக்கும் முரட்டு பொண்ணுங்களை வைத்திருப்பாங்க .அந்த முரட்டு பெண்கள் பி.டி ஆசிரியைகளுக்கு ரொம்ப செல்லம் .ஏனென்றால் அந்த பெண்களால் மட்டுமே டிஸ்கஸ் த்ரோ ஷாட் புட்,ஜாவ்லின் போன்ற போட்டிகளில் பள்ளிக்கு நிறைய ஷீல்டுகள்  கிடைக்கும் ....நாங்கல்லாம் பூனைகுட்டிங்க மாதிரி பயந்து நடுங்குவோம் அந்த பெண்களை  பார்த்தாலே :)
யாரவது ஒரு படத்தை பார்த்தா அடுத்த நாள் அந்த சினிமா கதையை ஸ்கூல் லன்ச் டைமில் முழு கதையையும் சொல்லுவோம் அந்த மாதிரி கதை சொல்லிகளை சுற்றி பெரிய கூட்டமே அமர்ந்து கதை கேட்பாங்க ..
பன்னீர் புஷ்பங்கள் சுரேஷும் நினைவெல்லாம் நித்யா  கார்த்திக்கும் அப்போ எங்க விருப்ப ஹீரோஸ் :) சலங்கையிட்டாள் ஒரு மாது என்ற பாடலை பார்த்து அமலா மாதிரி டான்ஸ் கற்றுக்கொண்டோம் :)  ராஜபார்வை கமலையும் மாதவியையும் பாக்கெட்டில் கைகளை விட்டு காதலின் தீபம் ஒன்றே பாடும் ரஜனியையும்  ரசித்தோம் ..சத்யராஜ் விஜயகாந்தையும் அவ்வப்போது ரசிப்போம் :)..புன்னகை மன்னன் ரேவதி போலவும் நடனமாட பழகினோம் ..இந்த பாக்யராஜ் படங்களை மட்டும் பார்க்க எங்களுக்கு அனுமதி இல்லை ..
அம்பிகா மட்டும் எப்படி தலையில் ஹேர் பின் குத்தாம தலைமுடியை விட்டு வராங்கனு  சீனியர்அக்காக்களை கேட்போம் ..
நதியா கம்மல் நதியா ஸ்கர்ட் வாங்கி போட்டு பார்த்துக்கிட்டோம் கூடவே நதியா மாதிரி (பூவே பூச்சூடவா படத்தில் ) ஊஞ்சலை தாண்டி காலை உடைச்சிக்கிட்டாங்க சில பொண்ணுங்க :) 
ரவி சாஸ்திரியையும் சேட்டன் ஷர்மாவையும் போரிஸ் பெக்கரையும்  ஆன்ட்ரே அகாசியையும்  எங்க  புக் அட்டையில் இருக்கிறமாதிரி பார்த்துக்கிட்டோம் :) ..சினிமா சீரியல்னு பொது அறிவை வளர்த்துக்கிட்டாலும் வகுப்பில் முதல் மதிப்பெண்ணுக்கு போட்டா போட்டி நடக்கும் ..


தொலைக்காட்சியில் வண்ணக்கோலங்கள்  சோவின் டிராமாக்கள் sv சேகர் டிராமாக்களை பார்த்து ரசித்தோம்  சிரித்தோம் ..
ரஜினிக்கும் கமலுக்கும் தனி கோஷ்டி சண்டை போடுவோம் .ரகுவரனின் ஒரு மனிதனின் கதை பார்த்து அழுதோம் ..ஆளவந்தார் கொலை வழக்கு டிராமா பார்த்து பயந்து நடுங்கினோம் ..ரெயில் சிநேகம் ட்ராமாவின் இந்த வீணைக்கு தெரியாது பாடலை ரெக்கார்ட்  செய்து அடிக்கடி கேட்டோம் ..சக்தி 90 தொலைக்காட்சி தொடரை அம்மாக்கள்  திட்டத்திட்ட பார்த்தோம் ..சூப்பர் ஹிட் முக்காபுலா  பார்த்தே ஹிந்தி அறிவை  வளர்த்துக்கொண்டோம் .எப்படியாவது காஜா பீடி கணேஷ் பீடியை பெட்டி கடையில் வாங்கியே தீரணும்னு பெட் வச்சோம் :)) டிவியில் பாத்திமா பாபு செய்தி வாசிக்கும்போது வேணும்னே சானலை மாற்றி அண்ணன்களை கடுப்பேற்றினோம் :)  ஷோபனா ரவி யின் உச்சரிப்பை ரசித்தோம் ..தினமும் வெவ்வேறு சாரி போடறாரேன்னு ஆச்சர்யப்பட்டோம் .. ஆங்கில அறிவை உச்சரிப்பை வளர்க்க ரினி சைமனையும் சுனீத் tandan  பிரணாய் ராய் கீதாஞ்சலி  அய்யரையும் உற்று கவனித்தோம் ..Derrick ,டல்லஸ் ,இன்விசிபிள் மேன் எல்லாம் பார்த்தோம் .                                       கிஸ்ஸான்  மற்றும் ரஸ்னாவில்   சோடா மிக்சிங் செஞ்சி குடிச்சோம் ..kikaappo ,தம்ப்ஸ் அப் கோல்ட்ஸ்பாட்  குடிச்சி ஆசையை தீர்த்தோம் :)கோலி கலரையும்  விட்டுவைக்கவில்லை நாங்கள் .பிறகு சாந்தியும் ஸ்வாபிமானும் பார்த்து மாலைப்பொழுதை கழித்தோம் ..TOEFL டெஸ்டுக்கு தயாரானோம் MBBS கோச்சிங் கிளாசுக்கு போனோம் கலர்கலரா ஸ்கர்ட் டாப் அணிந்தோம் பாவாடை தாவணி அணிந்தோம் !எப்படா அம்மாவின் சேலைகளை கட்டுவோம் என காத்திருந்தோம் ..
FLAMES விளையாடி மகிழ்ந்தோம் :) அப்பப்போ ஜுனியர் விகடனையும் நக்கீரனையும் திருட்டுத்தனமா புக்கு உள்ளே வச்சி படிச்சி அரசியல் பொது அறிவையும் வளர்த்துக்கிட்டோம் ..ரிசல்ட் வர அன்னிக்கு பேப்பருக்கு சொல்லி வச்சி வாங்கினோம் ..தொலைந்து போனவர்கள் பார்த்து உணர்ச்சி வசப்பட்டோம் ..
ஜுனூன் பார்த்து அதே மாதிரி தமிழாடினோம் ஹா ஹா :)  சித்திரபாவை சிலந்திவலை என் இனிய இயந்திரா எல்லாம் கொஞ்சம் பார்த்தோம் ..பாண்டிச்சேரி, பூண்டி ,கோனே பால்ஸ் ,வேடந்தாங்கல்  ,மகாபலிபுரம்  எல்லாம் சுற்றினோம் யார்யாருக்கு அத்தை மாமா மகன்கள் இருக்காங்கன்னு லிஸ்ட் எடுத்து கிண்டலடிப்போம் :) க்ரெகர் மெண்டல் //லா//  பற்றி ஜெனெடிக்ஸ்ல படிக்கும்போது உதாரணத்துக்கு அப்போதைய   ஜோடிகள் நினா குப்தாவையும் விவியன் ரிச்சர்ட்ஸையும் சொல்லி சிரிப்போம் ..
நைட்ஷோவுக்கு கூட்டமா தெருவே திரண்டு போவோம் வசந்த மாளிகை பார்க்க ..காம்ப்பிளானையும் ஹார்லிக்ஸையும் மடக்மடக்குனு குடிப்போம் ,பிரிட்டிஷ்  மற்றும் அமெரிக்கன் எம்பசி லைப்ரரிகளில் மெம்பரானோம் ..வேணும்னே ரோட்ல நடக்கும்போது அந்த புக்ஸ் தெரிய மாதிரி காட்டிகிட்டு நடப்போம் :)


உங்க யாருக்காவது  இது மாதிரி நினைவுகள் வருகிறதா ?  :))

இடுப்பில் அமர்ந்த நிலவை தரையில் இறக்கிவிடவே மனமில்லை 
ஆஹா !! என்ன ஒரு வரிகள் மற்றும் ஜேசுதாசன் குரல் செம !!                                                                           

என்ன திடீர்னு பழைய நினைவுகள்னு யோசிக்கறீங்களா ..அதொன்றுமில்லை போரடிக்குதேன்னு யூ டியூபில் ஒரு டிராமா பார்த்தேன் ..அது ஒரு பொண்ணு சோபாவில் படுத்திருக்கா ஒரு மாதிரி திமிரா கால்மேல் கால் போட்டு என்னதான்பா நடக்குதுன்னு பார்த்திட்டிருக்கும்போதே , திடீர்னு பாம்பா மாறினா அடிக்கடி புஸ்ஸ்ஸ்ஸ் னுமூச்சு வேற பயந்தே  போயிட்டேன் குஷ்பூவின் கணவர் எடுக்கும் சீரியலாம் அவ்வ்வ் பாம்பு மாதிரி அந்த பொண்ணு என்னா வில்லத்தனம் பண்ணுது சட்டுனு ஆஃப் செஞ்சிட்டு முந்தி எப்படி இருந்தது பள்ளிக்கூட  நாட்கள் டிவி படிப்பு ஸ்கூல்என்று நினைவை  சுழல  விட்டேன் :)அவ்ளோதான் .ஆக மொத்தம் தூங்கிட்டிருந்த நினைவுகளை கிளறி விட்ட மோகன் ஜிக்கும் கீதா அக்காவுக்கும் நன்றிகள் :)                                                                *******************

70 comments:

 1. மீ ஈஈஈஈ லாண்டட்ட்ட்ட்:) மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)..

  ///அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே :) வந்ததே/// நண்பனே நண்பனே நண்பனே.... சே..சே..சே.. டங்கு ஸ்லிப் ஆச்சூஊஊ நண்பியே நண்பியே.. நண்பியே.....:).

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க மியாவ் வாங்க முதல் ஜம்ப் நீங்கதான் கண்ணை மூடிட்டு குதிங்க

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேம்ஸ் வத்தட்டும் வெயிட்:)

   Delete
  3. Neenga jump pannunga adhu thaan aa vatrum haaaaaaiiiooo

   Delete
 2. ஆஆவ்வ்வ்வ்வ் கேட்டிருக்கிறேன் சில தடவைகள் இப்பாடல்... சூப்பர் பாட்டு.... இந்த தேம்ஸ்க்குத் தெரியாது... இதில் குதிப்பவர் யாரென்றூஊஊஊஊஊஊஊஉ:)..

  ReplyDelete
  Replies
  1. Intha poonaiyum aria athu ithai thalla povathai yaar endru haaa haaa

   Delete
 3. ///முந்தி முந்தி காலத்தில சின்ன பிள்ளையா இருந்தப்போ //
  ஓ இப்போ வளர்ந்திட்டீங்களாக்கும்?:)...

  ///பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமைகளில் மட்டும் கலர் டிரஸ் போட அபூர்வமா அனுமதி கொடுப்பாங்க ///
  இதென்ன புதுக்கதையா இருக்கு.. சனிக்கிழமையில் பள்ளிக்கூடமா? கர்:)..

  ReplyDelete
  Replies
  1. மேடம் மியாவ் முன்பு 90 களில் இந்தியாவில் சனிக்கிழமை ஸ்கூல்ஸ் இருக்கு
   உங்க ஊர்ல இல்லியா ????

   Delete
  2. எங்களுக்கு ஒருகாலத்திலும் அப்படி இல்லயே... ஓ நீங்க 90 க்குக் காலமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ 2000 காலமாக்கும்..க்கும்..க்கும்:)

   Delete
  3. ///.ரெண்டு ஜடை எண்ணெய் போட்டு வாரி மடிச்சு கருப்பு ரிப்பன் கட்டணும்..அதேதான் ஆடு மாதிரி தான் போவோம் :)
   .வெள்ளை ஷூவுக்கு பிளாங்கோ போட்டு வைப்போம் ..கூட்டமாவே ஸ்கூலுக்கு சைக்கிளில் போவோம் ///

   ஹா ஹா ஹா அதேதான்... நான் நினைக்க நீங்க சொல்லிட்டீங்க:) இதை நான் கொஞ்சம் மாத்தி போஸ்ட் போடுறேன்.. விறை:)வில்:).

   Delete
  4. எங்கள் ஸ்கூலில் ஃபைனல் இயர் மீ ஃபிரிஃபெக்ட்டாக இருந்தேனாக்கும்:).. ஆனா ஒரு குட்டிப்பூஸும் நடுங்காது.. இருப்பினும் அன்பாலயே அடக்கிடுவேன் ஆட்களை:).

   /// லன்ச் டைமில் முழு கதையையும் சொல்லுவோம் அந்த மாதிரி கதை சொல்லிகளை சுற்றி பெரிய கூட்டமே அமர்ந்து கதை கேட்பாங்க ..///

   ஹா ஹா ஹா நாங்க ஆவிச் சாத்திரம் பார்த்து அதில் வருங்காலக் கணவரின் பெயர் சொல்லு எனக் கேட்டு.. அதை வச்சே.. கொஞ்சக்காலத்தை ஓட்டிடுவோம்ம்.. எனக்கு கரெக்ட்டாஆத்.... தப்பாச் சொல்லிச்சுதே ஹா ஹா ஹா:)

   Delete
  5. ///மேடம் மியாவ் /// ஹலோஓஓஒ... மீ மேடம் இல்லை கன்னீஈஈஈஈ.. நான் என் ராசியைச் சொன்னேன்:)

   Delete
  6. ஓ நீங்க 90 க்குக் காலமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ 2000 காலமாக்கும்..க்கும்..க்கும்:)//

   ஆமா நீங்க கிமு நான் கிபி போதுமா

   Delete
  7. //நாங்க ஆவிச் சாத்திரம் பார்த்து//அவ்வ்வ்வ் என்னாது ஆவி சாத்திரமா ஹையோ பயமாருக்கே :)

   Delete
  8. அதிராவ் சீக்கிரம் உங்க ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் ஐடி கார்ட் எல்லாம் ப்ரூப் வச்சி போஸ்ட் போடணும் சொல்லிட்டேன் :)))))))

   Delete
 4. ஒவ்வொன்றும் மிகவும் அழகான நினைவலைகள்.

  அதனை மிகவும் அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப் படித்து மகிழ்ந்தேன்.

  //இந்த வாலன்டியர் வேலை பார்க்க ரெண்டு வருஷம் ஒரே வகுப்பில் பெயிலாகி இருக்கும் முரட்டு பொண்ணுங்களை வைத்திருப்பாங்க .அந்த முரட்டு பெண்கள் பி.டி ஆசிரியைகளுக்கு ரொம்ப செல்லம் //

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க கோபு அண்ணா ..அந்த பொண்ணுங்க மிரட்டற மாதிரிதான் நடப்பாங்க ஆனா பகல் வேளையில் மாத்ஸ் சயன்ஸ் க்ரூப் ஸ்டடி நடக்கும்போது எங்க ஆட்சி அந்த பொண்ணுங்களை நிறைய எழுத வைப்போம் :) நாங்க ராங் ஹோல்டர்ஸ் தான் க்ரூப் லீடர்ஸ் :) வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா

   Delete
 5. எங்களுக்கு ஏனோ அப்போ சினிமா நாட்டம் பெரிதா இருக்கவில்லை, ஒரு சில பிள்ளைகள் மட்டும் படங்கள் கலெக்ட் பண்ணுவார்கள்... நான் எதுவாயினும் ஸ்ரிக்கேர்ஸ் கலெக்ட் பண்ணுவதில் ஆர்வம்... சொக்கலேட் இல் ஃபிரீ ஸ்ரிக்கர் வரும்.. பெரும்பாலும் கிரிக்கெட் பிளேயேர்ஸ் தான் இருக்கும்... அதுக்காகவே சொக்கலேட் வாங்குவேன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. அதான் தெரியுமே ஆதி காலத்து ஸ்டிக்கர்களாம் உங்க டைரில ஒட்டி வச்சிருக்கீங்களே :)

   எனக்கு ஸ்டிக்கர்ஸ் அவ்ளோ கிடைக்கலை அப்போ ..தொலைக்காட்சி அப்போதான் எல்லார் வீட்லயும் வர ஆரம்பிச்சது அப்புறம் தூர்தர்ஷன் டெல்லி ப்ரோக்ராமில் பொது அறிவு நிகழ்ச்சிகள் நிறைய போடுவாங்க ஸன்டேஸ்ல ரீஜனல் மூவீஸ் போடுவாங்க எல்லாம் அவார்ட்ட் படங்கள் ..நல்லாயிருக்கும் அதிரா

   Delete
 6. ///அப்போதைய ஜோடிகள் நினா குப்தாவையும் விவியன் ரிச்சர்ட்ஸையும் சொல்லி சிரிப்போம் ..///

  இதைவிட நீங்க உங்க பிறந்த ஆண்டையே சொல்லியிருக்கலாம் ஹையோ ஹையோ:)..

  ///,பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கன் எம்பசி லைப்ரரிகளில் மெம்பரானோம் ..வேணும்னே ரோட்ல நடக்கும்போது அந்த புக்ஸ் தெரிய மாதிரி காட்டிகிட்டு நடப்போம் :)///
  இந்தக்குணம்தானே இப்பவும் தொடருது:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

  அதென்னது போஸ்ட்டுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லைப்போல இருக்கே.. என்னாச்சு திரீரென?... லேடீஸ்போமியா?:) ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுதூஊஊஊஊ:)..

  ReplyDelete
  Replies
  1. மேடம் மியாவ் நாங்கள் என்று சொன்னது 85-95 மாணவர்களை என்னையல்ல
   நினா குப்தா ரிச்சர்ட்ஸ் தெரியுதுனா நீங்க எனக்கு அக்காவே ஹாஹாஆ ஹுரோ

   Delete
  2. அழகன் படத்தில் இந்த பாட்டு ஒலிக்கும் அப்போலேருந்து எனக்கு ஆசை இந்த பாட்டு

   Delete
  3. ///நினா குப்தா ரிச்சர்ட்ஸ்//
   இவிங்க எல்லாம் ஆரூஊஊ.. சத்தியமா தெரியாதெனக்கு ச்ச்சும்மா அடிச்சு விட்டேன்ன் ஹா ஹா ஹா:).

   Delete
  4. கர்ர்ர்ர் :) ஹாஹாஆ :)

   Delete
 7. //என்ன திடீர்னு பழைய நினைவுகள்னு யோசிக்கறீங்களா ..அதொன்றுமில்லை போரடிக்குதேன்னு யூ டியூபில் ஒரு டிராமா பார்த்தேன்///

  இல்ல இல்ல.. இதுக்கு காரணம் நம்மையும் அறியாமல் நமக்குள் தூங்கிய “அந்த” அனிமலைத் தட்டிவிட்ட.. எங்கள்புளொக்.. மோகன் ஜி இன் கவிதைதான் ஹா ஹா ஹா..:)

  எனக்குள்ளும் ஒரு தொடர் அன்றிலிருந்து ஓடிட்டே இருக்கு.. போடலாமா வாணாமா... சின்னிவிரலா பெருவிரலா? இரண்டில் ஒன்றைத் தொடுங்கோ:) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. //மோகன் ஜி இன் கவிதைதான் ஹா ஹா ஹா..:)///


   yes:)))))))))))
   நான் முழு கையையும் தொட்டுக்கறேன் நீங்க பதிவு போடுங்க

   Delete
 8. சுவாரஸ்யம்தான். ஆனால்எ ன்ன , இதெல்லாம் எழுதினால் நம் வயசு தெரிந்து விடுகிறது!

  இந்த வீணைக்கு தெரியாது பாடல் சஹானா ராகம். அதே ராகத்திலேயே "பார்த்தேன்.. சிரித்தேன்... பக்கம் வரத் துடித்தேன்.." பாடல், சொன்னா இனிக்குது சுகமா இருக்குது போன்ற திரைப்பாடல்கள் உண்டு!

  சனிக்கிழமைகளில்தான் எங்களுக்கும் கலர் ட்ரெஸ். தீபாவளிக்கு மறுநாள் ஸ்பெஷல் பெர்மிஷன் உண்டு! திரைப்படம் பார்த்துவிட்டு கதை சொல்வதில் நான் உண்டு! என் கறபனையையும் சேர்த்து விடுவேன்! படம் பார்த்து விட்டு அந்த மாதிரிக்கு காட்சிகள் இல்லை என்று நண்பர்கள் சொல்வார்கள். நான் பார்க்கும்போது இருந்தது என்பேன். நம்ப மாட்டார்கள். ஆனாலும் சுவாரஸ்யமாக அடுத்த படத்துக்கும் கதை கேட்பார்கள்!

  ஓ... எங்கள் பிளாக் மோகன்ஜி கவிதைதான் காரணமா? கேட்டால் சந்தோஷப்படுவார்!

  ReplyDelete
  Replies
  1. /// இதெல்லாம் எழுதினால் நம் வயசு தெரிந்து விடுகிறது!//
   ஹா ஹா ஹா... டவுட்டாவே இருந்த அஞ்சுவின் வயசு .. இன்று 55 மேல இருக்கும் என்பது கன்ஃபோமாச்ச்ச்ச்ச்ச்:)..

   Delete
  2. @ Athiraaa gundu cat ///சனிக்கிழமைகளில்தான் எங்களுக்கும் கலர் ட்ரெஸ்./

   இதை வாசிங்க ஸ்ரீராம் கூட கலர் ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு போயிருக்கார் :)

   Delete
  3. /சுவாரஸ்யம்தான். ஆனால்எ ன்ன , இதெல்லாம் எழுதினால் நம் வயசு தெரிந்து விடுகிறது!//
   கர்ர்ர்ர் :) இப்போ தெரிஞ்சாதான் என்ன :))))))))
   ஆமாம் சஹானா ராகம் நினைவிருக்கு சித்ரா ஜேசுதாஸ் இருவருமே அழகா பாடியிருப்பாங்க ..
   ஆமாம் மோகன்ஜி அன்னிக்கு அந்த கவிதை போட்டு எல்லாத்தையும் கிளறிவிட்டுட்டார் :)
   ரெண்டுநாளா எங்க ஸ்கூல்தான் கனவில் வந்திட்டிருக்கு புங்கை மரம் அப்புறம் குல்மொஹர் மரங்கள் சூழ்ந்தது எங்கள் பள்ளி அது அப்படியே நினைவிலாடியது

   Delete
  4. பாருங்க மக்களே அதிரா அவங்க உண்மை வயதை சொல்லிட்டாங்க :) 55 ஆம் ஹஆஹாஆ

   Delete
 9. வணக்கம்
  கடந்த கால நினைவலைகளை சொல்லிச் சென்ற விதம் சிறப்பு....வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நினைவுகளை ரசித்ததற்கும் நன்றிகள் ரூபன்

   Delete
 10. ஏஞ்சல் ஹை ஃபைவ்....டிட்டோ டிட்டோ..டிட்டோ...ஸ்கூல் அனுபவங்கள் சேம்....படங்கள்....ரூல்ஸ்...கேம்ஸ்.... நான் பாஸ்கெட் வால், நெட் வால், த்ரோ பால், பேஸ் பால்...நன்றாக விளையாடுவேன். ..டீமில் போட்டார்கள்.வீட்டுக்குத் தெரியாது...கிராமம்...மாவட்ட அளவில் விளையாடுவதற்கு வீட்டில் அனுமதி இல்லாததால்.கேம்ஸ் க்கு பூட்டு...

  நீங்கள் சொல்லியிருக்கும் டிவி தொடர்கள் அவ்வளவாகப் பார்த்தது இல்லை...டிவி இல்லை எனவதால்.....மற்றபடி டிட்டோ டிட்டோ...தினமும் பள்ளியிலும் சரி, கல்ல்ஓரியிலும் சரி சர்ச்சுக்குப் போய் காண்டில் ஏற்றி முழங்காலிட்டு ப்ரே செய்யாமல் இருந்தது கிடையாது....தேர்வு சமயம் என்றால் கேட்கவே வேண்டாம்....ஜேசு குட்டி (ஜீஸஸ்), ஆஞ்சு குட்டி(ஆnja நேயர்),சிவன்... எல்லாரும ரொம் ப பிசியாக இருப்பார்கள்...டிமாண்ட் கூடும்..ஹாஹா...சர்ச் கூட்டமாக இருக்கும்...

  பல நினைவுகளை மீட்டி யது....

  பின்னர் வருகிறேன் மீண்டும். இன்னும் உங்கள் பதிவுகள் இருக்கு வாசிக்க..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா :) அப்போதான் தொலைக்காட்சி பேட்டி மெதுவா சென்னை வீடுகளில் வலம் வர துவங்கியகாலம்
   தூர்தர்ஷன் ப்ரொக்ராம்ஸ் மட்டுமே எங்க வீட்டில் தெரியும் சன் கனெக்க்ஷன் கொடுக்கலை முதலில் அப்போதைய தொடர்கள் வாரம் ஒரு நாள் தான ஒளிபரப்புவாங்க அதனால் அந்த ஒருநாளை படிப்பை முடிச்சிட்டு ஹோமஒர்க் முடிச்சிட்டு பார்க்க உக்காருவோம்
   நானும் பாட்மிண்டன் டீமில் இருந்தேனே :)

   Delete
 11. ஒரு எழுத்தையும் விடாம படிச்சாச்சு..

  திகட்டத் திகட்ட சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருக்குது!..

  இருந்தாலும் -
  ராதாவை நினைவு படுத்தாமல் விட்டது குற்றம் என்கின்றார்கள் பெரியோர்கள்!..

  ReplyDelete
  Replies
  1. சார்... பெண் பார்வையில் எழுதியதனால், நம் கனவுக்கன்னிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டார். இருந்தாலும் மன்னித்துவிடலாம்.

   Delete
  2. >>> நம் கனவுக்கன்னிகளையெல்லாம் <<<

   உண்மை தான்..

   ( நல்லவேளை.. நமக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைத்தது சந்தோஷம்.. இல்லாவிட்டால் - ஏன்யா.. சும்மா இருக்க முடியலையா..ன்னு எங்கேருந்தாவது உருட்டுக் கட்டை பறந்து வரும்!..)

   Delete
  3. ஹாஹ்ஹா :) உண்மையா ராதாவுக்கு இவ்ளோ பெரிய ரசிகர் வட்டம் இருக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை :) என் கணவரை கேட்டேன் .அவர் ஒருத்தர்னு இல்லை எல்லாரையும் பிடிக்கும் மீனா பிடிக்கும் ரேவதி பிடிக்கும்னார் மற்றபடி கொஞ்சம் மிரட்டி கேட்டா உண்மை வரக்கூடும் :)))

   பதிவை ரசித்து படித்ததற்கு மிக்க நன்றி துரை செல்வராஜ் ஐயா மற்றும் நெல்லைத்தமிழன் :)

   Delete
  4. இல்லை ஏஞ்சலின். காலம் மாற மாற கனவுக்கன்னிகளும் மாறும். அதுனால, எல்லாரும் ராதா ரசிகர்கள்னு நினைக்காதீங்க. ராதா போய், அமலா போய், ... சிம்ரன் போய், ரம்பா போய்,... தமன்னால வந்து நிக்குது இப்போ (அனுஷ்கா இல்லை.. இல்லவே இல்லை). அதுனால, எங்களை நம்பி ராதாவைப் பற்றி எழுதுனீங்கனா, படிக்க ஆளிருக்கமாட்டார்கள் (நான் முதல்கொண்டு)

   Delete
  5. ஹாஹா :)ஓகே ஓகே நாங்ககூடதான் கார்த்திக் போய் ரகுமான் போய் அரவிந்த்சாமி போய் அஜித் போய் இப்போ யார்னு தெரிலா :) படங்கள் பார்ப்பது இப்போ கதைக்கு மட்டுமே ..
   அனுஸ்கா ???????? ஒருத்தர் ஒளிஞ்சி பார்ப்பார் இந்த பின்னூட்டத்தை :) அவர் சிரிச்சிட்டிருக்கார் இப்போ

   Delete
  6. குடுகுடுப்பையா இல்லாம
   இப்படித் தான் கலகலப்பா இருக்கணும்!..

   இந்த சேதி இன்னும் வீட்டுக்குத் தெரியாது!..

   Delete
  7. ராதாவை விட எனக்கு அம்பிகா பிடிக்கும்! சாந்தி கிருஷ்ணனையும் பிடிக்கும். அவர் சாயலில் எனக்கொரு தோழி இருந்தார்! அப்புறம் அமலா... சிம்ரன், நயன், அப்புறம்.... அப்புறம்... அப்புறம்... அனுஷ்க்கா!

   Delete
  8. அனுஷ்காக்கு அப்புறம் :)))))))))))))))

   Delete
  9. எங்க அக்காங்க அவங்க தோழிங்க எல்லாம் அப்போ ராதா சாந்தி கிருஷ்ணா ஸ்டைலில் சாரீஸ் கட்டுவாங்க நாங்க வியந்து பார்ப்போம்

   Delete
 12. எல்லா நினைவுகளும் நல்லா இருந்தது. ஒரு டைம் மெஷின்ல அந்த பீரியட்டை திரும்பப் பார்ப்பதுபோல் இருந்தது.

  ஆனா, சில சம்பவங்கள் கோர்வையா இல்லை (அதாவது அந்த அந்த டைமைச் சேர்ந்தவையாக). சடக்கென்று 'வசந்த மாளிகை'-இது எங்க அம்மா காலத்தயது. ஆன்ட்'ரா அகஸ்ஸியை ரசிக்கிறீங்க. எங்க கனவுக்கன்னி ஸ்டெஃபி கிராப் உங்க ஞாபகத்துக்கு வரலை. கார்த்திக், சுரேஷ்லாம் உங்க ஹீரோஸ்னு சொல்லிட்டு கனவுக்கன்னி ராதாவை (இப்போ இருக்கறவங்க இல்லை. அவங்க, 4-5 ராதாவைச் சேர்த்துச் செஞ்சவங்க, நான் சொல்றது அலைகள் ஓய்வதில்லை ராதா) மறந்துட்டீங்க. முந்தின சில படங்கள் கவுந்த வருத்தத்துல பாரதி ராஜா, கிடைச்ச ராதாவை பூக்களில் குளிப்பாட்டி படம் எடுத்திருப்பார்.

  பன்னீர் புஷ்பங்கள் படம் ஞாபகம் வரும்போதே, உமா ரமணன் (சில பாடல்கள் மட்டும் பாடியுள்ளார்) பாடிய 'ஆனந்த ராகம் கேட்கும் காலம்' பாடலும், அதே சமயத்தில் வந்த அலைகள் ஓய்வதில்லையின் 'ஆயிரம் தாமரை ம்ஹும் ம்ஹும் ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலும் மனதில் ஓடுகிறது.

  எங்க 10ம் வகுப்பு ஹாஸ்டல்ல, இரவு உணவுக்குப்பின் (7:30 மணி இரவு சாப்பாடு) 8:30 வரை மைதானத்தில் குழுக் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க விட்டுவிடுவார்கள். அதில் சிலர், தான் சமீபத்தில் பார்த்த படத்தை, சீன் பை சீனாக கதை சொல்லும் (கிட்டத்தட்ட வசனங்களோடு) திறமை பெற்றவர்கள் இருப்பார். ஒரு படமே 1 வாரத்துக்குமேல் ஓடும். ஏன்னா கிடைச்ச 1/2 மணி நேரத்துல நீட்டி முழக்கி வசனத்தோடு சொல்லும்போது 4-5 நாளாயிடும். இதையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க.

  காலேஜ் படிக்கும்போது (முதல் செமஸ்டர் சமயத்திலேயே) நண்பர்களோடு, இரவு 6 மணி ஷோ அலைகள் ஓய்வதில்லை திருனெவேலி பூர்ணகலாவிலும், 9:30 மணிக்கு பன்னீர் புஷ்பங்கள் பார்வதி தியேட்டரிலும் பார்த்துவிட்டு நடு இரவு பாளையங்கோட்டையில் ஹாஸ்டல் மதில் சுவர் ஏறி ஹாஸ்டலுக்குள் நுழைந்ததும் மனதில் ஓடியது.

  ரயில் சினேகம்-அப்போது பாலசந்தர் நிறைய அட்டஹாசமான சீரியல்கள் எடுத்தார். அவரது பங்களிப்பு (மர்மதேசம் போன்றவை) சன் தொலைக்காட்சிக்கு ரொம்பவும் உபயோகமாக இருந்தது. ஆனால், ரொம்ப, 'படைப்பாளியின் உரிமை'யை அழிக்கும்விதமாக சன் உரிமையாளர்கள் நடந்துகொண்டதால், அந்தத் தொலைக்காட்சியைவிட்டு மின்பிம்பங்கள் வெளியே வந்தது (அதுதான் முதல் தடவை). பாலசந்தர், மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும் விதமாக முழுப்பக்க விளம்பரம்லாம் கொடுத்திருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அது ஒரு பாடாவதி தியேட்டர் பழய படம் மட்டுமே போடுவார். Will come later .

   Delete
  2. ஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் கட்சிக்கு இப்போ கரெக்ட்டான ஆள் கிடைச்சிடுச்சூஊஊஊ:) சகோ ஸ்ரீராமைக் கட்சியில் சேர்க்கப் பார்த்தார்..:) அவர்தான் இப்போ வாயே திறக்கிறாரில்லையே..:) சொண்டோடு நிண்டிடுது வார்த்தை:)ஹா ஹா ஹா...

   இப்போ அஞ்சு கட்சியில் இணைஞ்சிட்டாஆஆஆ[நான் சொன்னது வயசுக் கட்சி}... ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பாலைவன ஒட்டகத்திடம் சாப்பிடக் கொடுத்திடுங்கோ:) எது வந்தாலும் இன்று நான் தேம்ஸ் பக்கம் போகப்போவதில்லை:).. மீ எஸ்கேப்ப்ப்ப்:).

   Delete
  3. @நெல்லைத்தமிழன் வாங்க வாங்க ! அருமையான நினைவுகள் இல்லையா சிலர் மட்டும் நினைவுகளை பூட்டி போட்டி வச்சிக்கறாங்களாம் ஹாஹா :) நான் அதிராவையும் ஸ்ரீராமையும் தான் சொல்றேன் :)))))))))

   அது அந்த வசந்தமாளிகை படம் அப்புறம் நெஞ்சம் மறப்பதில்லை எல்லாம் பழைய படங்களை எங் ஏரியா விலுள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் போடுவாங்க ..அந்த தியேட்டர்ல எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து புது படம் என்றால் அது ரிலீஸ் ஆகி வேற தியேட்டர்ல ஓடி அப்புறம்கு றைஞ்சது ஒரு வருஷம் கழிச்சே இங்கே வரும் ..அந்த கூட்டமா நாங்க மூவி பார்க்கபோவதை எதுக்கு சொன்னேனா எங்க வீடெல்லாம் வரிசையா ஒரு மினி காலனி போலெ இருக்கும் இப்போ பக்கத்து வீட்ல யார் இருக்காங்கன்னு கூட தெரியாம வாழறோம் ஆனா அப்போ பக்கத்துக்கு வீடு எதிர் வீடு நாலாம் வீடு என்று எல்லார் குடும்பங்களும் ஒன்றாக போவோம் 10 மணி ஆனாலும் எங்க ரோட்டில் தனியா நடந்து போகலாம் அவ்ளோ சேப்டி

   Delete
  4. /காலேஜ் படிக்கும்போது (முதல் செமஸ்டர் சமயத்திலேயே) நண்பர்களோடு, இரவு 6 மணி ஷோ அலைகள் ஓய்வதில்லை திருனெவேலி பூர்ணகலாவிலும், 9:30 மணிக்கு பன்னீர் புஷ்பங்கள் பார்வதி தியேட்டரிலும் பார்த்துவிட்டு நடு இரவு பாளையங்கோட்டையில் ஹாஸ்டல் மதில் சுவர் ஏறி ஹாஸ்டலுக்குள் நுழைந்ததும் மனதில் ஓடியது.//


   ஆஹா இதுவல்லவா சந்தோசம் இந்த மாதிரி நினைவுகளை மீட்டி பார்க்கும்போது கிடைக்கும்சந்தோஷமே சந்தோஷம்
   ஹை 5 நெல்லை தமிழன் ..ஹாஹா :)

   நான் நிறைய படங்கள் அப்போ பார்க்க முடிஞ்சத்தின் காரணம் எங்க அண்ணன்களும் அக்காக்களும் தான் :)

   இவங்க ப்ரெசிடென்சி அப்புறம் அவங்க நட்புக்கள் நியூ காலேஜ் ஸ்டெல்லா மேரிஸ் இந்த க்ரூப் ஒண்ணாவே போவாங்க இவங்களுக்கு போக எங்களை சாக்கா வச்சிப்பாங்க ..அப்படிதான் எனக்கு சான்ஸ் அமைஞ்சது நானும் நல்லபிள்ளையா இவங்க லவ் ஸ்டோரீஸ் எதையும் போட்டே கொடுக்கல :) ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே பாதை பார்த்துட்டு வருவேன் ..

   Delete
  5. ஹாங் ஹாகா :) ஆமாம் அது என்னனா ஏற்கனவே மோகன்ஜி ஸ்கூல் நினைவுகளை கிள்ளி விட்டுட்டார் அவர் கவிதையில் அப்புறம் கீதாக்கா வேற அந்த பாப்பின்ஸ் கமர்க்கட் படங்களை போட்டு எழுதி இன்னும் உசுப்பி விட்டுட்டாங்க :)
   எல்லாம் சேர்ந்து மொத்தமா நான் அந்த நாட்களுக்கே போயிட்டேன் :) சத்தியமா ராதாவுக்கு இவ்ளோ விசிறிங்களான்னு ஆச்சர்யமா இருக்கு ..உண்மைல ஒரு வரி எழுதியிருந்தேன் அது ராதா ஒரு பக்கமா காதை மூடின மாதிரிதான் ஹேர்ஸ்டைல் வைப்பாங்க அது பற்றி எழுதியிருந்தேன் காபி பேஸ்டும்போது கட்டாகிடுச்சி அப்புறம் வயசான நடிகர் திலகம் கூட ராதாவானு அப்போ எங்களுக்கு கோபம் :)..சன் டிவி மேட்டர்லாம் எனக்கு தெரியவேயில்லை ..நான் ஸ்கூல் படிக்கும் வரைதான் கொஞ்சம் டிவி பார்த்தேன் அப்புறம் பெரிசா இன்டெரெஸ்ட் வரல்ல ..ரெயில் ஸ்நேகம்லாம் என்ன மாதிரி அட்டகாசமான தொடர்கள் ..மாது சீனு கிரேசி மோகன் க்ரூப் கூட நல்லா சீரியல்ஸ் எடுப்பாங்க மௌலி காத்தாடி ராமமூர்த்தி..இவர்களும் பேமஸாச்சே அப்போ

   Delete
  6. அப்புறம் அந்த ஸ்டெபி கிராப்பும் ஜஸ்ட் மிஸ்ட் தான் :) பொதுவா இரு சாராருக்கும் சேர்த்து எழுதியிருந்தா ஸ்டெபி வந்திருப்பாங்க :)
   உண்மைல தோண்ட தோண்ட பூதம் கிளம்பின மாதிரி நிறைய வந்தது எழுத கொஞ்சம் நிறுத்திட்டேன் ..ராதா விஷயத்துக்காக தனியா ஒரு பதிவு போட்ருவோம் :))

   Delete
 13. பல நினைவுகளை மீட்டுக்கின்றது அந்தநாள் ஞாபகம் அம்பிகா முதல் நதியா என்று சினிமா மட்டுமா ரயில் சினேகம் நாடகம் எனக்கும் பிடித்தது பாடல் மிகவும் விரும்பிக்கேட்பது ஒரு காலம்)))

  ReplyDelete
  Replies
  1. நேசன் அங்கேயும் இலங்கைளயும் இந்த டிராமா ஒளிபரப்பினாங்களா !! ரொம்ப நல்ல இருக்கும் வாரம் ஒரு பார்ட் தான் போடுவாங்க ஒன்றோ இரண்டோ விளம்பரங்கள் அவ்ளோதான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் ..இப்பெல்லாம் வில்லிகள் மாயமா இருக்கே தொலைக்காட்சி தொடரெல்லாம்

   Delete
 14. அன்று செய்தி வாசிப்போரின் உச்சரிப்பு அழகுக்கு இப்ப ஈடாகாதவர்கள் இன்றைய செய்திவாசிப்போர்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் ஷோபனா ரவி பாத்திமா பாபு சந்தியா தமிழன்பன் ஐயா இவங்கள மாதிரி யாராலும் உச்சரிப்பு சொல்ல வராது

   Delete
 15. ரகுவரன் முதல் பாக்யராஜ் வரை நடனமே தனிச்சிறப்புப்பதிவு பலது எழுதலாம் அந்தநாள் நினைவுமீட்டி)) ராதா பற்றிய உங்களின் அடுத்த பதிவு இன்னும் அறியாத தகவல் சொல்லும் என நினைக்கின்றேன் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ராதா போஸ்ட் கான்சல்ட் :) இப்போ தமன்னா இலியானதானாம் :)
   நீங்க எழுதலாமே பாடல் ரசிகராச்சே நீங்க

   Delete
 16. எனக்கும் ஸ்கூல் நினைவுகள் குருந்தன் வாத்தியார் நினைவுகள் வந்தது

  கடந்த வாரம்தான் அறிந்தேன் வாத்தியார் இறந்து விட்டார் என்ற செய்தி என்னை மட்டும் அடிக்காதவர் காரணம் நான் படிப்பில் கெட்டி படித்ததுவரை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லெர்ஜீ ..உங்களுக்கும் பழைய நினைவுகள் வந்து போனதா !! அதேதான் அன்று மோகன்ஜீ எக்ஸ்கர்ஷன் பற்றி கவிதையா போட்டாலும் போட்டார் இப்போ எனக்கு ஸ்கூல் கனவா வந்திட்டிருக்கு ..எங்க ஸ்கூலில் பிடி க்ளாஸில்தான் நிறைய அடி விழும் ..
   அப்போ மல்லிப்பூ வைக்க கூட அனுமதியில்லை சில பெண் பிள்ளைகள் சரம்சரமா வைத்து வருவாங்க அதுக்கும் திட்டு விழும் ஸ்கூலில் .அப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட் நான் படித்த கத்தோலிக்க பள்ளியில்

   எங்க டீச்சர்ஸ் சிலரை பார்த்தேன் ஒருவர் dementia வந்து பார்க்கவே பாவம் ..

   Delete
 17. மலரும் நினைவுகள் அருமை.
  நதியா ,அம்பிகா, வரும் போது ராதாவும் வருவார்களே என்று நானும் நினைத்தேன்.
  மலரும் நினைவுகள் சொல்லிக் கொண்டே போகலாம். அன்று முழுவதும் அதன் நினைவுகள் ந்ம்மை ஆட்க்கொள்ளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..அது எப்படியோ ராதா பற்றி எழுதினது காபி பேஸ்ட் செய்யுன்போது கட்டாகிடுச்சி :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
 18. தற்செயலாக என் கண்ணில் பட்டதே இது....

  http://gokisha.blogspot.com/2012/08/blog-post_9514.html

  ReplyDelete
 19. ஹல்லோ அக்கா.. உள்ளே வரலாமா..??

  ReplyDelete
  Replies
  1. வாங்க svaagat he ..
   எல்லாரும் fb லருந்து பிளாக் பக்கம்வரமாதிரி இருக்கே !

   Delete
  2. என்ன இருந்தாலும் ப்ளாக் போல வருமா? அதான் ரிட்டர்ன் ஆகிட்டேன் :)

   Delete
 20. செம நாஸ்டால்ஜிக்

  ReplyDelete
 21. அப்பபா.. அந்த கால நினைவு நானும் உங்களால மீட்டியாச்சு. முதல் பந்தியில் சொன்னதே எனக்கும்.
  எங்க ஸ்கூல்ல பர்த்டே மட்டுமே கலர் டிரெஸ். மற்றபடி யூனிபர்ம் தான். சனிக்கிழமை ஸ்கூல் இல்லை. ஆனா எக்ஸாம் டைமில் திடீரென கிழமைநாளில் ஸ்கூல் இல்லாமல் போனால், அந்த நாளுக்குகாக வைப்பாங்க சிலபஸ் முடிக்க. இது எங்க ஸ்கூல்ல் இருந்தது.
  டைகட்டாமல் விட்டால்,நகம் வெட்டாமல்,தலையை எண்ணெய் வைத்து ஒழுங்கா வாரி பின்னலிட்டு கட்டி,ஸு போட்டுக்கொண்டு போகாவிட்டால் பனிஷ்மெண்ட்தான். அதிலும் ஒரு குறிப்பிட்ட மிஸ் இருக்கா, அவா க்ளாஸ் டீச்சரெனில் கேட்கவே வேண்டாம். எங்களுகும் தூரதர்ஷன் வரும் அதற்கு ஆண்டெனா செட் செய்வது இருக்கே... அது ஒரு தனி கதை. ஒரு ஆள் ஆண்டெனா பூட்டிய பைப் பை திருப்பி வருதா?... வரல்லை. இன்னும் அந்த பக்கம்,இந்தப்பக்கம் என சொல்லி அதை ஒரு வழியா செட் செய்து பார்க்க சீரியல் முடிந்திருக்கும்.. அங்கு ரூபவாஹினின்னு டிவி அதில் வரும் சிங்கள நாடகம் விரும்பி பார்ப்போம். சிங்கப்பூர் ஒலி,ஒளி என ப்ரோக்ராம். அப்படி ஒரு காலம்.. நானும் ப்ரெண்ட்ம் பேசி மீட்போம் அந்த நாட்களை. இப்ப அவளும் இல்லை. உங்க புண்ணியத்தில திரும்ப மீட்டியாச்சு..
  சூப்பரா எழுதுறீங்க அஞ்சு. கீ இட் அப்.

  ReplyDelete