அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/1/17

சில குணாதிசயங்களும் மரபணுக்களும் (2)

சில குணாதிசயங்களும் மரபணுக்களும் (2)

                                                                                தம்பி 
=====

                                                      தம்பி என்று இங்கே சொல்லப்போவது எங்க வீட்டு சண்டை சேவல் பற்றி ....எங்க வீட்ல நிறைய கோழி புறா எல்லாம் வளர்த்தோம் ..அதில் சண்டைக்கோழி வகைகள் நிறைய விதவிதமா ..சண்டைக்கோழிகள் சேவல்கள் நாய்க்குட்டி போலவே கூட வரும் நான் வெயிலுக்கு  பாய் விரிச்சி தரையில் படுத்து தூங்குவேன் இதுங்க எப்படியோ மின்விசிறி காத்து தேடி ரூமுக்குள்ள வந்து பக்கத்தில் குடும்ப சகிதமா உக்காந்திருப்பாங்க :) குடும்பம்னா முதல் இரண்டாம் மூன்றாம் மனைவியர் சகிதம் :)
அப்படி ஒரு குடும்பத்து குழந்தைகள் 10 பேரில் திடீரென ஏற்பட்ட கோழிக்காய்ச்சலில் பத்தில் 9 இறக்க ஒன்று மட்டும் தப்பித்தது ..ரொம்ப ஸ்பெஷலா வெங்காயம் கீரை எல்லாம் கொடுத்து காப்பாற்றினோம் ..செல்லமா வளர்த்ததால் அவன்  என் கட்டில் கீழே கூடையில் தூங்குவான் பேரு தம்பின்னு வச்சேன் ..
இந்த குறிப்பிட்ட நோய் தாக்குதலுக்குப்பின் அவனுடைய அலகில் ஒரு சிறு மாற்றம் ..அது மேல்அலகு curvy ஆக வளர துவங்கியது ..அதனால் அவனுக்கு உணவு கொத்தி தின்ன முடியாது தவிட்டை நீரில் கரைத்து கிண்ணத்தில் ஏந்தி பிடிச்சா சாப்பிடுவான் ..
அப்படியே வளர்ந்து அவர் குடும்பஸ்தர் ஆகிட்டார் :) அப்படியே அவங்கப்பா போலவே மூன்று மனைவியர்:) அவரோட  வம்சத்தில் ஒரு குஞ்சுக்கு மட்டும் இதே போல வளைந்த அலகு :)
நோயால் தான் இவனுக்கு இப்படி ஏற்பட்டதுன்னு நினைச்சா அது மரபணுக்கள் மூலம் பரவி அவனது வாரிசுக்கு வந்திருக்கு ....
இந்த வளைந்த அலகு ஒரு வகை ஜெனட்டிக் டிஸார்டராம் ..இந்த வளைந்த அலகு பரம்பரை கோழிகள் நான்கைந்து சுமார் பல வருடங்கள் பிறந்தன எங்கள் வீட்டில் ..

                                 மகளின் தோள் மீது மல்ட்டி :) 
                                                                                
                            


 நமக்கெல்லாம்  தெரிந்த ஒரு பதிவர் :)) சின்ன பிள்ளையா இருக்கும்போது ரெயில் பூச்சி கம்பளி பூச்சி எறும்பு வண்ணத்துப்பூச்சி எது கிடைச்சாலும் ரூமுக்குள்ளே மருந்து அட்டை  பெட்டியில் போட்டு வச்சிடுவாங்களாம் இல்லைன்னா அவங்க போட்டிருக்கும் சட்டையின் பாக்கெட்டில் போட்டு வைப்பாராம் !! பல்லி அடிபட்டுக்கிடந்தாலும் வீட்டிலிருக்கும் ஜென்டமைசின் சோப்ராமைசின் நிபாசல்ப் ட்ரீட்மெண்ட் கொடுப்பாராம் :)   ஒருமுறை செத்த தேளை பாக்கெட்டில் வைத்திருக்கார் அவங்கம்மா மயங்கியே விழுந்தார்னா பாருங்க :)) அவருக்கும் ஒரு வாரிசு அப்படியே இன்னும்  கொஞ்சம் கூட அதிகப்படியா  எக்ஸ்டரா ஆர்டினரியா வீட்டு உடை வைக்கும் அலமாரியில் நத்தை எறும்பு கூட்டம் வண்ணத்து பூச்சி புழு என அடைக்கலம் கொடுத்து வைத்து வளர்ப்பாளாம்  அப்படியே அம்மாவுக்கு  தப்பாம பிறந்திருக்கு :)  பதிவரின் தந்தை பள்ளி செல்லும்போது அக்காலத்தில் LKG வகுப்பறைக்கு கிளி அணில் எல்லாம்  கூண்டோடு கொண்டு போவாராம் :) பாருங்கள் வம்சா வழியாக எப்படி சில குணங்கள் தொடர்ந்து வந்திருக்கு ..


                                        வரைபடத்தில் மகள் வரைந்த ஓவியம்                              
                                                    


இப்படித்தான் ஓவியம் வரைவதிலும் எங்கள் மகளுக்கு அவளின் சின்ன தாத்தா( என் கணவரின் சித்தப்பா தேர்ந்த ஓவியராம் ) மற்றும் எனது பெரியப்பா ஒருவரின் ஓவியம் வரையும் பழக்கம் இருவரின் திறமையும் மகளுக்கு வந்திருக்கு ..
                                                                                  
                                                    
இத்துடன் சுய தம்பட்டம் ஓவர் :) 


இது நட்பு ஒருவர் சொன்னது அந்த நண்பர் வீட்டில் அவருக்கு 2 தம்பி 2 தங்கையர் ..மாலைநேரத்தில் இவர் பொறுப்பாம் தம்பி தங்கச்சிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து கவனிக்க பெற்றோர் சொல்வார்களாம் ..இவர் என்ன செய்வாராம் அவருக்கு பிடித்த க்ரீம் ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்டுகளை வாங்கி அந்த பிஸ்கட்டுகளை இரண்டாக கவனமுடன் பிரித்து நடுவிலுள்ள க்ரீமை சுரண்டி எடுத்து உண்டுவிட்டு லாவகமாக பிஸ்கட்டை மூடி அந்த சின்ன பிள்ளைங்களுக்கு கொடுப்பாராம் அவர்கள் கேப்பாங்களாம் எங்கே க்ரீம் இல்லையே என அதற்க்கு கடையில் இருந்து வாங்கும்போதே க்ரீம் போடவில்லை என்று சின்ன பிள்ளைங்களை ஏமாற்றியிருக்கார் ..பல வருடம் கழித்து ஒரு நாள் அவர் வீட்டு மேசையில் தட்டில் இருந்த பிஸ்கட்டுகளை பார்த்ததும் அவருக்கு சிரிப்பு தாளவில்லையாம் அவரது மகன் எல்லா பிஸ்கட்டுகளையும் தந்தை போலவே பிரித்து க்ரீமை மட்டும் சாப்பிட்டு மூடி வைத்துள்ளான் :)  இதை ஆலயத்தில் நடந்த கெட் டு கெதரில்  childhood memories  பற்றி சொல்லும்போது அவர் சொல்லி சிரித்தார் :)..

சில நேரங்களில் நம்மிடம் இல்லாத குணங்களும் நமது குழந்தைகளுக்கு வந்திருக்கும் அது யாரவது ஒரு உறவினரின் குணமாக இருக்கும் ..நல்ல குணங்கள் வழி வழியாக தொடர்வதில் தவறில்லை ..
அதேபோல நமது எல்லா குணங்களும் பிள்ளைகளுக்கு வரும் என்றும் சொல்ல முடியாது எனக்கு நடனம் விருப்பம் ஆனா என் மகளுக்கு அறவே பிடிக்காது :) இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம் ..அடுத்த பதிவில் சுவையான ரசித்து ருசித்த சமையல் குறிப்புக்களுடன் சந்திப்போம் :) 
                                                          ***************************

52 comments:

 1. கோழி எல்லாம் கூட அப்படிப் பழகும்? நான் வளர்த்த நாலுகால் மோதி என்கூடத்தான் படுத்துக்கும்!

  மகள் வரைந்த ஓவியம் டாப். ஓ.. அதுவும் ஜீனில் வந்த குணமா! அட!


  இதில் அப்பா, பிள்ளை, சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே மாதிரி குரலையும் சேர்த்துக்கலாமா?

  ReplyDelete
  Replies

  1. இந்த வரையும் ஜீன்ஸ் மகளுக்கு 60 % தான் வந்திருக்கு மற்ற கசின்ஸ் இ தில் அட்டகாசமா கலக்குறாங்க இவள் ஆர்ட்டை ஒரு பாடமாக எடுத்திருக்கா..எக்ஸாமுக்கு முன்னாடி 25 படங்கள் வரையனும் .அதில் சிலதான் இவை .
   இவை சண்டை கோழிகள் வெரைட்டி ஆனா நாங்க ஆசைக்கு மட்டுமே வளர்த்தோம் ..நல்ல உயரமா இருக்கும் எல்லாம் அரபு நாட்டு இம்போர்ட் ..கூடவே நடந்து வரும் ..படங்கள் இருக்கு தேடி இணைக்கிறேன்

   Delete
  2. ஓ எஸ் சேர்த்துக்கலாம் :) இப்போ என் மகள் குரல் கூட என் குரல் மாதிரி இருக்கு என உறவினர்கள் சொல்றாங்க :)

   Delete
  3. ///AngelinMay 1, 2017 at 8:27 AM
   ஓ எஸ் சேர்த்துக்கலாம் :) இப்போ என் மகள் குரல் கூட என் குரல் மாதிரி இருக்கு என உறவினர்கள் சொல்றாங்க :)///

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா இப்போ நான் கொமெண்ட்ஸ் போடுறதா வாணாமா?:) முடியல்ல முருகா.. சகோ ஸ்ரீராமுக்கு என்ன சொன்னாலும் நம்பிடுவார் எனும் தெகிரியத்தில இப்பூடிச் சொல்லி ஒரு அப்பாவியை ஏமாற்றுவதுக்கு என் படுவன்மையான கண்டனங்கள்:).. விடமாட்டேன்ன்ன்:) முளையிலயே கிள்ளிடுவேன்ன் எங்கிட்டயேவா?:) ஹா ஹா ஹா மீ இப்போ காசிக் கேணிப் படிக்கட்டில் நிற்கிறேன்ன் நொட் இன் பிறி:)த்தானியா:).

   Delete
  4. ஸ்ஸ்ஸ்ஸ் :) ஹப்பா நான் சொன்னது பேசற குரல் பாடுறதில்லை ..நான் நேர்மையானவர்னு அந்த பகவான் சொன்னார் தெரியுமோ :)
   அவ பேசும்போது நான் பேசற மாதிரி இருக்காம் :)

   Delete
 2. எங்கள் வீடுகளில் பசங்களின் சின்னச் சின்ன அசைவுகளில் வீட்டின் மற்ற உறவினர்கள் மேனரிசங்கள் எல்லாம் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா இன்னொன்னு சொல்லணும் எங்கப்பா சின்னதில் இருந்தே தீவிர கருப்பு சட்டை :) ஆனா பொண்ணு ஆப்போசிட் :)

   என்னோட எல்லா குணமும் மகளுக்கு வரலை ..அவள் அப்பா தாத்தா இரு வழி தாத்தா அத்தைகள் குணம் அப்படியே வந்திருக்கு ..நிறைய சம்பவங்கள் இருக்கு அப்புறம் ஓவர் சுய தம்பட்டம் ஆகிடுமோன்னு கட் செஞ்சிட்டேன் பதிவை :)

   Delete
 3. நல்லதொரு பகிர்வு. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தங்கள் மகள் வரைந்துள்ள ஓவியங்களில் நல்ல உயிரோட்டம் உள்ளது.

  ஐந்து வயதே ஆன என் பேரன் அநிருத் நேற்று தனது ஓவிய நோட்டினை என்னிடம் கொண்டுவந்து ஆசையுடன் காண்பித்தான். நூற்றுக்கணக்கான படங்களை மிக நுட்பமாக, Free Hand இல் வரைந்து Pencil shading கொடுத்தும், கலர் அடித்தும் வைத்துள்ளான். நான் பிரமித்துப்போய் விட்டேன். அவனைக்கட்டிப்பிடித்துப் பாராட்டி விட்டு, அவன் கைகளை வாங்கி என் கண்களில் ஒத்திக்கொண்டேன். எப்படித்தான் பிறக்கும்போதே இத்தனை கற்பனைத் திறன்கள் அவனுக்கு ஏற்பட்டுள்ளதோ .... நினைக்க நினைக்க எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..நான் இதன் முதல் பகுதி போட்டேன் அதில் உங்களுக்கு சொன்னேன் அனிருத் பற்றி.. முன்பே உங்க பதிவில் பார்த்திருக்கேன் ..அனிருத் வரைந்த ஓவியங்களை நீங்கள் வரைந்த படங்களுடன்பதிவாக போடுங்க ..உங்களது ஓவிய திறமை அப்படியே அனிருத்துக்கு வந்திருக்கு .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   எவ்ளோ சந்தோசம் இல்லையா வாழ்த்துக்கள் உங்களுக்கும் அனிருத்துக்கும்

   Delete
  2. நூற்றுக்கணக்கான படங்களா !! வாவ் !! எனக்கு பார்க்க ஆவலாக இருக்கு .விரைவில் பிளாக்கில் அத்தனையும் பதிவிடுங்கள்

   Delete
  3. ஆவ்வ்வ் கோபு அண்ணன் ஒரு தனிப் போஸ்ட்டாகப் போடுங்கோ பேரனின் படங்களை. பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

   Delete
 4. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீ வருவதுக்குள் எல்லாரும் வந்திட்டினம்:)... எங்கட பரம்பரையில எல்லோரும் 1ச்ட்டாத்தான் வருவாங்களாம் அதுதான் மீ எப்பவும் 1ஸ்ட்டா ஓடி வருவேன் கொமெண்ட்டுக்கு :) சரி சரி போஸ்ட் படிச்சிட்டு கொஞ்சத்தால வாறேன்.

  ReplyDelete
 5. ஒரு சந்தேகம் மரபணுக்கள் மூலம் ஒற்றுமை தெரிவது வேறு குணங்களில் ஒற்றுமை தெரிவது வேறு என்று நினைக்கிறேன் எங்கள் குடும்பத்தில் பலருக்கும் கேட்கு திறன் குறைவாய் இருக்கும் சிலருக்கு கண்கள் சற்றே மாறுகண் மாதிரி இருக்கும் மற்றபடி உணர்ச்சிகள் எல்லாம் மரபுவழி வருகிறதா தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார் அதனால்தான் குணாதிசயங்களும் மரபணுக்களும் என தலைப்பு வைத்தேன் .
   வழுக்கை ,கைகளை சேர்த்து பிடித்தல் காது மடல் கண்ணாடி அணிதல் இதெல்லாம் மரபு வழி
   குணங்களில் ஒற்றுமை மாறிமாறிதான் வரும் என் மகள் 60 % மட்டுமே என்னை போல் :)

   Delete
 6. அதிரா “அக்கா”வுக்காகத்தானே ஜெஸிப்பிள்ளை பூங்கொத்து வச்சிருக்கிறா?:) தங்கியூ ஜெஸி தங்கியூ:).

  /// தம்பி என்று இங்கே சொல்லப்போவது எங்க வீட்டு சண்டை சேவல் பற்றி ///

  ஆங்ங்ங்ங் இப்போ புரிஞ்சுபோச்சு:).. அப்பா அம்மா எல்லாம் அப்பாவிகளாச்சே.. இந்த பிள்ளைக்கு எப்பூடி இந்தக்குணம் வந்துது என நான் கடந்த 7,8 வருசமா யோசிக்காத நாளே இல்லை:) இண்டைக்குத்தானே கண்டு பிடிச்சேன்ன்ன்:)..

  ஹா ஹா ஹா வரவர அதிராட கிட்னி ரொம்ப சார்ப்பாகிட்டே வருதே:) நேக்குப் பயம்மாக்கிடக்கூ இப்பூடி ஷார்ப்பாகிட்டே போனால் என்ன ஆகுமோ என:).

  ReplyDelete
  Replies
  1. Seine für Sie Tante ATHIRA :) ..JESSIE :))))äußern

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

   Delete
  3. ஸ்ஸ்ஸ் பப்புளிக்கில உப்பூடிக் கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்குடா அஞ்சு:).

   Delete
  4. கர்ர்ர் :) அது ஜெசி ஜெர்மன்ல ஆன்ட்டினு சொல்லியிருக்கா :)

   Delete
 7. ///பக்கத்தில் குடும்ப சகிதமா உக்காந்திருப்பாங்க :) குடும்பம்னா முதல் இரண்டாம் மூன்றாம் மனைவியர் சகிதம் //
  ஹையோ அஞ்சு என்னிடமும் இப்படிக் குட்டிக் குட்டிக் கதைகள் நிறைய இருக்கு.. கோழி, ஆட்டுக்குட்டி, பூஸ், பப்பி.. எல்லாரும் என் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்.. இப்போ நினைச்சுப் பார்க்க கவலையா இருக்கு.. என்ன இனிமையான காலங்கள் அவை.

  நம் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் இப்போ.. ரிவியில் பார்க்கினம் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. அதிரா இந்த குட்டி குட்டி கதைகள் நிறைய என்னிடமும் இருக்கு அப்பப்ப கொஞ்சமா எழுதும்போதே ஊர் நினைவு மனசை என்னமோ செய்யும் அதான் போட்டோக்களை இணைக்காம விட்டுட்டேன் .எவ்ளோ சந்தோஷமான இளம் பிராய நினைவுகள் அதெல்லாம்

   Delete
 8. /// கடைகள்ல பண்ற எதைத்தான் நம்பிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. அன்றைக்குத்தான், நானே ஒரு நாள் செய்துபார்க்கணும்னு தோன்றியது.//

  இதுதான் ஒரு சோகமான நிகழ்வு, ஆசையா வளர்ப்பவை கண் முன்னாலேயே பொத்துப் பொத்தென விழுந்து சாகும், ஆனா நாங்க முடிந்தவரை ஊசி போட்டுக் காப்பாற்றிடுவோம், சிலநேரம் ஊசி தாமதமாகிட்டால் இப்படி ஆகிடும்... அன்று நித்திரையே வராதெனக்கு:(.

  நானும் கையிலேயே கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பேன்.

  //இந்த வளைந்த அலகு ஒரு வகை ஜெனட்டிக் டிஸார்டராம் ..இந்த வளைந்த அலகு பரம்பரை கோழிகள் நான்கைந்து சுமார் பல வருடங்கள் பிறந்தன எங்கள் வீட்டில் ..
  ///
  ஹா ஹா ஹா அப்பூடியா? இருக்கும் நமக்கு அப்போ அது புரிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா அதுவும் இங்கே எல்லாத்துக்கும் வாக்சின் இருக்கு நம்ம நாட்டில் out break வந்தா ஆடுகள் கோழிகள் எல்லாம் போயிடும் ..இங்கே வெளிநாட்டில் பல நோய் கன்ரோல்ட் நம் நாட்டில் இன்னும் பல நோய்கள் உலாவுதே

   Delete
  2. அதுவும் அந்த அலகை வெட்ட ஸ்பெஷல் சிஸர்ஸ் இங்கே கிடைக்குது அதிரா

   Delete
  3. அச்சச்சோஒ கொப்பி பேஸ்ட் மேலே மாறிப்போச்சு... அதில் இதுதான் வந்திருக்கோணும்...

   //அப்படி ஒரு குடும்பத்து குழந்தைகள் 10 பேரில் திடீரென ஏற்பட்ட கோழிக்காய்ச்சலில் பத்தில் 9 இறக்க ஒன்று மட்டும் தப்பித்தது///

   Delete
  4. ஹையோ :) எனக்கும் இப்படி நடக்கும் அடிக்கடி :) பரவாயில்லை எனக்கு விளங்குச்சி ..நானும் பதில் போட்டுடேனா டிலீட் பண்ணல

   Delete
 9. //மகளின் தோள் மீது மல்ட்டி :) //
  ஹா ஹா ஹா கர்: மிரட்டி படமெடுத்திருக்கிறீங்க.. பிள்ள பயந்துபோய் இருக்கு... நல்ல அழகான முகம் ச்ச்சோஓ சுவீட்.

  மகளின் முதலாவது ஓவியம் சூப்பரோ சூப்பர்.. வாழ்த்துக்கள். இரண்டுமே நல்லாயிருக்கு. இது சத்தியமா அஞ்சுவிடம் இருந்து வரல்லே...

  எங்கள் வீட்டில் மூத்தவர் அப்படியே அப்பாவைப்போல குணம் நடை உடை உருவம் அனைத்திலும்.. 2வது என்னைப்போலவேதேன்ன்ன்:) ஹா ஹா ஹா:).

  //இத்துடன் சுய தம்பட்டம் ஓவர் :)
  ///

  ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆ முடிஞ்சிடுச்சா:) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :)மிரட்டிவிட்டது உண்மைதான் அதிரா ..கொஞ்சமும் மல்ட்டிக்கு புரிய மாட்டேங்குது ..ஜெஸியின் ட்ரை உணவை ஓடி போய் சாப்பிட்டுவிடறாள் ..இவளுக்கு அம்மா போலவே க்ரெயின் அலர்ஜி :) தனி வெட் உணவுதான் இல்லைனா வீட்டில் வேகவைத்த உணவு ..மனிதர்களுக்கே ஆசைப்பட்ட உணவை பார்த்து சபலம் வரும்போது பாவம் பூனை என்ன செய்யும் ..அன்னிக்கு தொடக்கூடாதுன்னு திட்டினேன் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா உடனே மகள் தோளில் வச்சி ஒரே கொஞ்சல் அதை படம் பிடிச்சேன் :)

   Delete
  2. அதெப்படி நீங்க சந்தோஷப்படலாம் :) வேறு வடிவில் சுய புராணம் தொடரும்ம்ம்ம்ம்ம் :)

   Delete
 10. ///அடுத்த பதிவில் சுவையான ரசித்து ருசித்த சமையல் குறிப்புக்களுடன் சந்திப்போம் :)
  //

  மிக அழகாக பதிவை எழுதி வந்து முடிவில் ஹார்ட் அட்டாக் வரப் பண்ணிட்டீங்களே கர்:)).. சரி சரி மீ இப்போ லிக்குயிட் ஃபூட் ஒன்லி:) காசியில இருக்கிறேனெல்லோ.. என்னை ஆரும் தேட வேணாம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :) நானும் மற்றும் பலரும் நீங்க தேம்ஸ்ல குதிப்பீங்க குதிக்க போறீங்கன்னு காத்திருந்து மெலிஞ்சு போயிட்டோம் !!
   அடுத்த அஸ்திரம் சமையல் குறிப்புத்தெங் :))))

   Delete
 11. இந்த கோழி சேவல் குடும்பம் பற்றிக் கூறியது அருமை..

  எங்கள் வீட்டு கோழியார் - சோறு வடித்த கஞ்சி + பச்சரிசி தவிடு குழைத்து வைத்தால் சாப்பிட மாட்டார்..

  அந்த சேவல் மட்டும் குறிப்பாக என் தந்தையின் அருகில் அமர்ந்து அவரோடு உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது..

  மூன்று வழிமுறை வரை இப்பழக்கம் தொடர்ந்திருந்தது..

  பதிவின் செய்திகள் - அருமை.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !! சந்தோஷம் ஐயா ..எங்க வீட்ல கோழி ஆடு மாடு எல்லாமே இருந்தது ..எல்லாமே பிள்ளைங்க மாதிரிதான்
   முட்டையிடணும்னா கோழி அம்மாவின் சேலை நுனியை இழுக்கும் பிறகு அம்மா அதை பிடித்து பஞ்சாரத்தில் அடைப்பாங்க முட்டையிட்டு செல்லும் ..இதெல்லாம் அப்படியே நினைவில் இருக்கு ..வருகைக்கும் அழகிய நினைவுகளை பகிர்ந்ததற்கும் நன்றிகள் ஐயா ..

   Delete
 12. மகள் வரைந்த ஓவியம்
  மிக மிக அருமை

  சொகுசாய் முதுகில் சாய்ந்து
  பூனையார் கொடுக்கும் போஸ் அற்புதம்

  ஜீன்ஸ் குறித்த சுவையான தகவல்களை
  மிகவும் இரசித்தேன்

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா ..மகளின் 11 ஆம் வகுப்பு சப்ஜெக்ட்ஸில் ஆர்ட் உம ஒன்று அதனால் இதைப்போல 25 வரைந்திருக்கா ..
   வீட்டில் இருந்ததை படமெடுத்தேன் ..தோளில் ஒய்யாரமாயிருக்கும் பூனை எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை தனது குடும்பமாக ஏற்றுக்கொண்டது :) வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

   Delete
 13. குழந்தை வரைந்த ஓவியம் மிக அழகாக வந்திருக்கிறது ....பாராட்டுக்கள் உழந்தையிடம் சொல்லி உங்களை ஒவியமாக வரைய சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :) ஏற்கனவே வரைஞ்சா அது ஸ்கூலில் இருக்கு அதாவது போட்டோ எடுத்து அங்கேயே வரைஞ்சிருக்கா ..எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் தருவாங்க ..அநேகமா இங்கே விரைவில் வெளிவரும் :)

   இப்போல்லாம் நீங்க வேலை பிஸியா ..அடிக்கடி காணாமப்போறீங்க ..எனக்கு அதிராவை ஓட்ட ஒரு கை குறையுது :)

   Delete
  2. உங்களின் பதிவுகள் எல்லாம் பளாக்க்ர் ரீடரில் மெதுவாக அப்டேட் ஆகிறது அதனால் நீங்கள் எப்ப பதிவு போடுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் வந்து பார்க்கும் போது பலர் கும்மி அடித்துவிட்டு போய்விடுகிறார்கள். எங்கள் பளாக் ஸ்ரீராம் அவர் பதிவிட்டபின் பேஸ்புக்கில் பதிவதால் உடனே பார்க்க முடிகிறது மற்ற நாட்களில் அவர் தளத்திற்கு வருகிறேனோ இல்லையோ தீங்கள் கிழமை கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவேன். காரம் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அது

   Delete
  3. அதிராவை நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒட்டினால் அவர் தேம்ஸ் நதிக்குள் இருந்து வெளியவே வரமாட்டார்

   Delete
  4. ஒஹொ okay. நான் ஒரு நேரம் இடைவெளி கொடுப்பென் சில நேரம் உடன் அடுத்த பதிவை பப்லிஷ் செய்வேன் :) அடுத்த பதிவு சமையல் தான் .இன்னிகு டிரெய்லர் போடலாம் நு நினைத்து இருந்தேன். Okay bye have a nice day..

   Delete
  5. எனக்கும் அதே பிரச்சனை..மதுரை சொல்வது போல்....கும்மி அடிக்க லேட் ஆகுது....அதிரா வை கலாய்க்க வந்தால் அல்ரெடி..மதுரை கும்மி அடித்திருப்பார்..ஐயோ விட்டு வீட்டோமேன்னு தோணும்....

   கீதா

   Delete
 14. அதெப்படி உங்கள் குழந்தைக்கு உங்கள் வீட்டு சைடில் உள்ள ஜீன் மட்டும் வருகிறதா உங்கள் கணவ்ரின் வீட்டு சைடில் இருந்து வரவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் ட்ரூத் :) அதான் போன பதிவில் சொன்னேனே அவளது அப்பா வழி தாத்தா எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்ஸும் வாசிப்பார் வயலின் பியானோ எல்லாம் வாசிப்பார்னு அவர் போல தான் இவளுக்கு இசை ஞானம் வந்திருக்கு :)

   Delete
 15. அருமையான பதிவு. கோழிஏற்பட்ட துன்பங்கள் நீங்கள் அத்ற்கேற்றார் உணவு கொடுத்து வளர்த்தது எல்லாம் அருமை. எல்லா உயிர்களுக்கும் மரபணுக்குள் உண்டு. ஏழு தலைமுறையில் குடும்பத்தில் உள்ள ஒருவரின் குணநலங்கள் , உடல்வாகு, வரும் என்று சொல்கிறார்கள்.
  மகளின் ஓவியம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ....எங்க வீடு பண்ணை வீடு மாதிரிதான் அக்கா கிளி அணில் கூட இருந்தன ..அப்பா அம்மா போனபின் ஒன்றுமில்லை இரண்டு பைரவர் மட்டுமே இருக்காங்க ஊரில் தங்கையிடம் .
   வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் நன்றிக்கா

   Delete
 16. மரபணு, குணாம்சங்கள் பற்றி நீங்கள் எழுதியது நல்லா இருக்கு. எல்லார் வீட்டுலயும் இதைப் பார்க்கலாம். குழந்தைகளோட செயல்களை அப்சர்வ் பண்ணினாலே இது தெரிந்துவிடும். ரெண்டு மூணு பசங்களுக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் (Permutation Combination) இருக்கும். அதனால்தான் ஒரே பெற்றோருக்குப் பிறந்த பசங்களுக்குள் ஒருத்தர் நல்லவனாகவும், இன்னொருத்தன் முரடனாகவும், ஒருத்தன் கோழையாகவும் என்று வித வித குணங்களுடன் பிறக்கிறார்கள். எல்லாம் அச்சடிச்சா மாதிரி பிறந்தால் நல்லாவா இருக்கும்?

  ஓவியங்களும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் ,ஹையோ ஒரு வீட்டில் 4 பிள்ளைங்க இருந்து நாலும் திருடனா போனா அல்லது நாலும் படு கோழையா இருந்தா அந்த குடும்ப நிலைமை நினைத்தும் பார்க்க முடியாது .மிக அழகா சொன்னிங்க ..உலகத்திலும் அப்படிதான் எல்லாம் பாலன்ஸ்ட்டா இருக்கனும் அதுபோல தான் மனித குணங்களும் .வருகைக்கும் கருத்துக்கும் ஓவியத்தை ரசித்ததற்கும் மிக்க நன்றி

   Delete
 17. ஓவியம் அருமை ! இந்த மரபணு அதிகம் தொல்லை போலும் தலைமுறைக்கு[[

  ReplyDelete
 18. ஹை ஏஞ்சல் மகளின் தோளில் மீது மல்டி சூப்பர்!! மகள் வரைந்த படங்களும் வெகு அழகு! நல்ல திறமை இருக்கிறது. வாழ்த்துகள்!

  இந்த மரபணு சில சமயங்களில், என்னடா இது நம்மகிட்ட இல்லாத குணாதிசயங்கள் எல்லாம் இந்தப் பிள்ளைக்கு வந்திருக்கு...யார்கிட்டருந்தோனு நினைக்க வைக்கும்...சில திறமைகள் உட்பட...

  என் இரு செல்லங்களில் கண்ணழகி என்னுடன் தான் படுக்கும். ப்ரௌனி யும் அப்படித்தான் என்றாலும், இருவரும் பங்காளிகள் என்பதால் மாற்றி மாற்றி ஃப்ரீயாக விடும் போது என் பக்கத்தில் தான் இருவரும் படுப்பார்கள். இருவருக்கும் ஒரே அம்மா சேம் வெல்பிங்கில் பிறந்தவர்கள் என்றாலும் இருவருக்குமே சில குணங்கள் வித்தியாசமாக இருக்கும். மேட்டிங்க் போது அம்மா இரண்டு அல்லது மூன்று பைரவரொடு கலந்திருந்தால் இப்படி வித்தியாசங்கள் வருவதுண்டு. அம்மா சேம் என்றாலும் ஒரே வெல்பிங்கில் என்றாலும்...உங்களுக்கும் தெரிந்திருக்கும்...

  நல்ல பதிவு தொடருங்கள்....தொடர்கிறோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..ஆமாம் இன்னும் நிறைய சம்பவங்கள் விஷயங்கள் எல்லாமே நினைவுக்கு வந்தது இது போதும்ன்னு ஸ்டாப் செஞ்சிட்டேன் .இன்னும் பயணம் தொடர்கிறதா ..சீக்கிரம் முடிஞ்சி வாங்க :)
   மகளுக்கு ஒருசில காரெக்டர்ஸ் மட்டுமே என்னுது பல விஷயங்களில் அவள் அப்பாவை அவள் இரு தாத்தாக்களை போல இருக்கா ..என்னைபோலில்லாதது எனக்கு பெரும் சந்தோஷம்

   Delete
 19. எங்க வீட்டிலும் நிறைய ஆட்கள்.அதேபோல் வீட்டுச்செல்லங்களும் நிறைய. பைரவர் 3. பூஸ்குடும்பம்,வாத்து 2,சேவல், மயில்கள், பசு,கன்றுகுட்டிகள்,ஆடுகள் என. உங்க பதிவை வாசித்தபிந்தான் யோசித்தேன். எங்க வீட்டில் ஆடும்,பசுவும் பரம்பரை வழியா நிற்கினம். சித்தப்பாதான் அவைகளை பராமரிப்பார். அவர் சில கதைகள் சொவார். அப்போ புரியவில்லை. இப்ப உங்க பதிவை வாசித்தபிந்தான் அவை ஞாபகம் வருது. ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்து பின் நடக்க ஆரம்பிக்க விந்திதான் நடக்கும். அது அதன் பாட்டிமாதிரி என சித்தப்பா சொல்வார். சித்தப்பாவுக்கு இவைகளில் சரியான விருப்பம்.அதனால பக்கத்தில யாருக்கேனும்தான் கொடுப்பார். பிரியமனமில்லை. ஏனென்றா ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாமெல்லோ அதுக்குதான். (குட்டியின் பாட்டியை மகள் பிறந்ததும் பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுத்துவிட்டார். )எல்லாவற்றுக்கும் பெயர் வைத்துதான் அழைப்போம். எல்லாமே நல்லா விளங்கும் அவைகளுக்கு. நினைத்தால் கவலைதான் வரும்.
  வா,வ் என்னா ஒரு அழகு,போஸ் ஜெசி. மல்ட்டியும் அழகா ஆனா கோபமா இருக்கா.
  நீங்க பதிவு போடும் போது சின்னதா இப்படி விடயங்கள் சின்னதா பதியுங்க அஞ்சு.சுயதம்பட்டமெல்லாம் இல்லை. நல்லதொரு பதிவு.

  ReplyDelete