அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/10/17

வசூல் ராஜா MBBS கட்டிப்புடி வைத்தியம் :)

Free Hugs / கட்டிப்புடி வைத்தியம் :)

                                                                                                   நம்ம மக்களுக்கு அன்பு காட்ட நேரமே இல்லாமப்போனதால்தான் உலகத்தில இருக்கவே கூடாத மன   உளைச்சல்கள் வெறுப்பு கோபம் ,சண்டை ,சச்சரவு  , பொறாமை ,மன அழற்சி இன்னும் பற்பல நோய்கள் எல்லாம் கணக்கிலடங்காம குப்பைகளாக நிரம்பி குமிந்துள்ளன ..சந்தோஷமான ஆழ்மனதில் இருந்து வரும் சிரிப்பும் அன்பான அரவணைப்பும் இந்த வேண்டா நோய்களை  மனுஷரிடமிருந்து தூர விரட்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
ஆரத்தழுவுதல் அல்லது அரவணைத்தல்    தனிமை, மனச்சோர்வு, மனக்கலக்கம் மற்றும் மனஅழுத்தத்தை குணப்படுத்தி விரட்டியடிக்குமாம் .  .இங்கே hugs அணைத்தல் என்று குறிப்பிடுவது வசூல் ராஜா MBBS, படத்தில் கமல்ஹாசனும் முன்னாபாய் MBBS,  படத்தில் சஞ்சய் தத்தும் அன்பா அணைப்பாங்களே ஒரு தாய் குழந்தையை அணைப்பதுபோல அந்த அணைத்தலைத்தான் குறிப்பிடுகிறேன் ..அன்பா அரவணைக்கும்போது மன பாரங்கள் இறக்கி மனசு ரிலாக்ஸ்டாக உணரும் என்றும் கூறுகிறார்கள் ..சில வருடங்கள் முன்பு இங்கே டவுனில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தோம் .அப்போது கணவர் என்னை வேகமாக வர சொல்லி கண்ணாடி வழியே காண்பித்தார் அங்கே நீல நிற டி சர்ட் அணிந்த ஒரு ஐந்தாறு ஆண்களும்பெண்களுமாக ( இரண்டு  பிரிட்டிஷ் பொண்ணுங்களும் மீதி ஜமைக்கான் ஆண்களும்)  கையில் ஒரு பேனர் அதில் free hugs என கையால் எழுதியிருந்தது  வைத்துக்கொண்டு போவோர் வருவோரை கட்டி அணைத்து கொண்டிருந்தார்கள் அவர்களிடம் அனுமதி பெற்றே .. இவர் என்னை சீக்கிரம் கடையை விட்டு   வெளில வர  சொன்னார் நான் சொன்னேன் இல்லை இன்னும் ஷாப்பிங் முடியலை அப்புறமா போவோம்னு சொல்லிட்டேன் :) ..பிறகு கண்ணாடி வழியே பார்த்தேன் ஷாப்பிங் செய்துக்கொண்டே ..நிறையபேர் தயங்கினார்கள் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் அன்போடு ஒருவரையொருவர் முன்னாபாய் க்ரீட்டிங்ஸ் சொல்லி  சென்றார்கள் 
     
                   வட இந்தியர்கள் மிக தைரியமானவர்கள் நான் பார்த்தப்போ பஞ்சாபி பெண்கள் தைரியமா சிரித்துக்கொண்டே hug கொடுத்திட்டு போனாங்க  ..நம்ம குஷ்பூ கூட எல்லா  விழாக்களிலும் அன்பா அரவணைக்கும்.. ..வட இந்தியர்கள் எங்கள் ஆலயத்தில் கிட்டத்தட்ட ஆங்கிலேயர்போலத்தான் அன்பாய் அரவணைப்பாங்க .எங்க ஆலயத்தில் முன்பு சொன்னேனே அந்த லின் அவரும்  எப்பவும் கமான் கிவ் மி எ ஹக் என்பார் கைகளிரண்டை  அகல விரித்து ..இங்கே வெளிநாட்டினர் பல முதியோர் அப்படிதான் ஆரம்பத்தில் நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது ஆனா அது ஜஸ்ட் ஒரு ஹக்.beary hug போல .இந்த அணைத்தல் மூலம் மன இறுக்கம் மற்றும் கோபம் போன்ற குணங்கள் குறைந்ததாகவும் கூறுகிறார்கள் ..
இவையெல்லாம் மனிதர்களை கண்டதும்கை கூப்பி வணங்கும் பாரம்பர்யம் மிக்க நம் நாட்டினருக்கு கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும்..நானே ஜெர்மனியில் இருந்தபோ துவக்கத்தில்  பலர்க்கு ஹலோ வாயால் சொல்லி இரண்டு கைகளாலும் வணக்கம் சொல்லி இருக்கேன் ..கை நீட்டி குலுக்க வருவோர் என்ன நினைத்திருப்பாங்க :( அப்புறம் கணவர் சுட்டிக்காட்டினார்  பிறகு மாற்றிக்கொண்டேன் ..ஆனா இங்கே வெள்ளைகாரங்க மனசும் வெள்ளை தான்  .இனம் நிறம் பாகுபாடில்லாம கைகுலுக்கி  ஆரத்தழுவி  வாழ்த்துவார்கள் .சரி இப்போ இந்த free hugs எனும் அமைப்பு பற்றி நான்  ஆராய்ச்சி செய்தப்போ நெட்டில் படித்தவற்றை இங்கு பகிர்கிறேன் ..இந்த மூவ்மெண்ட் juan mann என்ற மனிதர் ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து வைத்தது .


                                                                                    

மனசுக்கு ரொம்ப துக்கமான யாருமற்ற நேரத்தில் அவருக்கு இப்படி ஒன்று உதித்து கையில் ஒரு பேனரை வைத்து ஷாப்பிங்  மாலில் நின்றாராம் பலர் பார்த்தும் பார்க்காதமாதிரி போயிருக்காங்க அப்போ ஒரு வயதான பாட்டி கிட்ட வந்து கட்டி  அணைச்சிட்டு சொன்னாராம் ..//நான் காலைலேருந்து  ரொம்ப துக்கமாயிருந்தேன் பல வருடம் என்னுடன் வளர்த்த pet இன்று காலை மரணமடைந்துவிட்டது ..இப்போ  உன்னை அணைத்தபின் மனதுக்கு அமைதியாக இருந்தது எனது பாரத்தை இறக்கி வைக்க நீ உதவினாய் என்றாராம் .அதுபோல தொடர்ந்து பலரும் முன்வந்தனர் அது ஒரு செயின் effect போல அப்படியே மகிழ்ச்சியை பரப்பி வந்தது ஆனால் திடீரென போலீஸ் சில பல காரணங்களுக்காக இதனை தடை செய்தனராம் .ஆனாலும் ஆங்காங்கே இனமும் பெர்மிஷனோடு அரவணைத்தல் தொடர்கிறது ..இதில் மனிதரைதான் அரவணைக்கணும்னு இல்லை தெரப்பி அனிமல்சான நாலு கால்  செல்லங்களையும் அணைக்கலாம் :)                                                                                


                                                                                     

இதோ   பெரிய பூனை :) தனது நட்பு கெவின் ரிச்சர்ட்ஸனை   கண்டதும் என்னமா அரவணைக்குது !!

                                                                           

முக்கிய குறிப்பு டிஸ்கி
---------------------------------------- 

மக்களே நான் போஸ்ட் போட்டேன்னு யாரும் அவசரப்பட்டு கண்ணுமண்ணு தெரியாம பெர்மிஷன் இல்லாம யாரையும் அரவணைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ..


                                                         ****************

71 comments:

 1. கண்களால் சொல்லும் சிரிப்பு போதுமே...!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ ..ஆனா இங்கே வெளிநாட்டினர் பலர் சிரிக்க கூட மறந்த நிலையில் குளிருக்கானு தெரில இருக்கமாத்தான் போவாங்க ..

   Delete
 2. வசூல் ராஜா MBBS கட்டிப்புடி வைத்தியம் போன்று, ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்றால் இதில் ஒரு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

  யோசித்து முன்னெச்சரிக்கையுடன் கடைசியில் சொல்லியுள்ள ’முக்கிய குறிப்பு டிஸ்கி’ மிகவும் பயனுள்ளது + அவசியமானது. :)

  அனைவரையும் யோசிக்க வைக்கும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா ஆமாம் ..எனக்கு முந்தி goodrej ப்ரிட்ஜ் ஜோக் நினைவுக்கு வருது :) ஒரு பெண்மணி ப்ரிட்ஜ் வீட்டுக்கு வந்ததும் எங்கே ..puff என்று தேடின மாதிரி ஜோக் வரும் அதான் டிஸ்கி :)

   Delete
 3. உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தவிர
  வேறு யாரிடமும் தவறியும் சிரித்துவிடக் கூடாது என
  கங்கணம் கட்டிக் கொண்டு வாழும்
  நம்மின மக்களுக்கு இது வித்தியாசமாக
  ஏன் ஒருவகையில் கேலிக் கூத்துக் கூடத் தோன்றும்தான்

  அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா நம் நாட்டு வழக்கம் வேறு இங்குள்ளவர்கள் சிந்தனையும் பழக்கமும் வேறு மிக்க நன்றி அண்ணா

   Delete
 4. நான் வந்திட்டேன்ன், முடியல்ல அஞ்சு, ஈஸ்டர் ஹொலிடேயில் பாதி முடிஞ்சுது, ஆனா நான் இந்த ஹொலிடேயில் என்னவெல்லாம் பண்ணி முடிக்கோணும் எனக் கட்டிய கங்கணத்தில் கால்வாசிதான் முடிச்சிருக்கிறேன்.. இனி புதுவருசமும் வருது... வரும் வெள்ளிவரை நான் கொஞ்சம் பிஸி:)...

  தலைப்புப் பார்த்ததும் பாடல் தான் நினைவுக்கு வருது. இது உண்மைதானே, நம்மூர்களில் எதுக்காக, ஒரு துக்க வீட்டுக்குப் போவோர் கட்டியணைத்து அழுகிறார்கள்.. உண்மையில் மனப் பாரம் குறையும். மனதில் எந்த கள்ளம்கபடமும் இல்லாமல் இருக்கோணும், ஹக் பண்ணுகிறோம் எனும் நினைப்பே எழாமல் இருக்கும் இந்த வெள்ளையர்களிடையே.

  இங்கு ஸ்கொட்டிஸ் இல் ஒரு பழக்கம் இருக்கு, ஆண்களும் ஆண்களும் ஹக் பண்ண மாட்டார்கள்.. அது தப்பு எனும் எண்ணம் இருக்கு. நம் வீட்டுக்கு வரும் ஸ்கொட்டிஸ் காரகள்.. ஆணும் பெண்ணும், என்னை ஹக் பண்ணிவிட்டே உள்ளே வருவார்கள்.. ஆனா பெண் மட்டுமே கணவரை ஹக் பண்ணுவா, ஆண்கள் கை குலுக்குவதோடு சரி. அத்தோடு முத்தம் எல்லாம் கொடுப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நானும் அதிரா ..குயில்லிங் செய்து முடிக்கணும் ஒரு ஆர்டர் ..
   நீங்கசொல்றது சரியே அவங்க வெள்ளையர் அதை கட்டியணைத்தல் என்ற நினைப்பேயில்லாம செய்வாங்க அது ஆறுதல் சொல்வது போலத்தான்

   Delete
 5. ஆனா நல்ல நட்புக்கள் எங்கு என்னைக் கண்டாலும் ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமும் தருவார்கள்... இந்த நடை முறை நம்மவர்களில் இல்லைத்தானே, ஆனா இப்போ நம் பெண்கள் ஒருவரை ஒருவர் காணும்போது கட்டிப்பிடிக்கிறோம். சந்தோசமாகத்தானே இருக்கு...

  நேற்று மோல் போயிருந்தபோது, அங்கு ஒரு ஈரான்/ஈராக் கடை(பான்சி சொப்) இருக்கு.. அந்த ஓனரை எனக்கு ரொம்ப காலமா தெரியும், பழக்கமில்லை, கடையில் பார்த்திருக்கிறேன்... நேற்று பார்க்கிறேன், ஒரு வெள்ளைப் பெண்ணைக் கண்டதும்.. நண்பிபோல இருக்கு.. இருப்பினும் அப்பெண் சங்கடப்படுவதைப் பார்க்க கஸ்டமாக இருந்துது... இவர் ஓடிச்சென்று அப்பெண்ணை கட்டி அணைப்பதோடு விடாமல் கன்னத்தில் பல இச் இச்... எனக்கென்னமோ அது ”இடம் கண்ட இடத்தில் மடம் பிடுங்குவதுபோல” வே இருந்துது.... சிலது பார்க்க நச்சுரலாக இருக்கும்... இது மனதுக்கு அப்படி தோணல்ல.. சரி விடுவம் நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)...
  எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

  ReplyDelete
  Replies
  1. இச் இச்சா ?? ஹா ஹா நான் அப்படிப்பட்ட தருணங்களில் குனிவேன் சரியாய் காதுக்கு வரும் ..பெண்கள்தான் அதிரா :)

   Delete
 6. ஆனா உண்மையில் கட்டி அணைப்பதன் மூலம்[மனதுக்குப் பிடித்தோர்], நிறைய ஸ்றெஸ் றிலீவ், டென்சன் குறையும்.. துக்கம் ஆறும்... பிள்ளைகள் உயர்ந்திட்டாலும்.. வளர்ந்திட்டாலும் இப்பவும் கட்டி அணைக்கிறோம்ம்.. நீங்க சொன்னதுபோல,, மனிசர் மட்டுமில்லை.... நாம் வெளியே போய் வந்தால் டெய்சி ஓடிவருவா, தொட்டுத்தூக்கி தடவி விட்டால் தான் ஹப்பி ஆவா... நிறையவே சொல்லலாம்... ஆனாலும் இது கலாச்சாரம் சம்பந்தப்பட்டதே... நம் நாட்டுக் கலாச்சாரத்தில் இது கிடையாது என்பதனால்... வெளிநாட்டிலும் நம்மவர்கள் இப்படி நடப்பதில்லையே... நடந்தால் அது தப்பாகவே தோணும்... எக்செப்ட் துக்க வீடுகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா ..நாலுகால் ஜீவன்கள் பாய்ந்து கட்டிப்பிடிக்கும் நம்மை .ஜெசி மல்ட்டி அப்படித்தானே .நண்பியின் பெட் அப்புறம் மார்லீ எல்லாம் என்னை எங்கே பார்த்தாலும் கட்டிப்பிடிச்சு அன்பை சொல்லுவாங்க ..இங்கே நோர்த் இந்தியர் இப்போ ரொம்ப forward சீக்கியர் மட்டும் கொஞ்சம் ஒருசாரார் இன்னும் அவங்களுக்குளேயே சில கோட்பாடுகள் வச்சிருக்காங்க ..ஆனால் பலர் தங்களை மாற்றிக்கொண்டார்கள் ..

   Delete
 7. ஹக் பண்ணலாம் என வந்தால் இங்கின ஆரையும் காணம் ஹா ஹா ஹா எஸ்கேப் ஆகிடுறேன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி அதிரா ஏஞ்சல் எல்லாம் இங்கே இல்லை தைரியமா இருக்கலாம். Free Hug என்ற ஒரு பதிவை போட்டுவிட்டும் அதை படித்துவிட்டும் மதுரைத்தமிழனை கட்டிபிடிக்கலாம் என்று சில பேர் வருவதாக எனக்கு தகவல் வந்துச்சு அதனால்தான் யாரும் இல்லாத நேரமாக இங்க வந்தேன்

   Delete
  2. ஹலோ யாரவது இந்த பதிவை நயன் தாராவிற்கு அனுப்பிவிட்டு என் வீட்டுக்கு அவரை அனுப்பிவையுங்களேன்

   Delete
  3. garrrrrrrrrrrr :) தூக்கத்தில் ரெண்டு ரெண்டா தெரியுது நாளைக்கு வரேன் கமெண்ட் தர

   ஆமாங்க ..நீங்க மல்ட்டி ஸ்டோரி படிச்சீங்களா எங்கள் ப்லாகில் ..அந்த மல்ட்டி எங்களை அடாப்ட் செஞ்சுக்கிட்டா ..டெயிலி என்னை கட்டி பிடிச்சிக்கும் அவ்ளோ அன்பு ..என் பொண்ணுக்கு அது மேலே அவ்ளோ ஆசை மடில வச்சிகிட்டுதான் பாடம் படிப்பா

   Delete
  4. ஹலோ இப்பதான் எங்களுக்கு விடிஞ்சுருக்கு...நான் வந்துட்டன்ன்ன்ன்ன்ன்ன்....நீங்க எல்லாரும் தூங்கறீங்களே சரி சரி வெயிட் பண்ணறேன்...பின்னாடி வரேன்..இப்ப கிச்சன் வேலை...

   கீதா

   Delete
  5. மதுரைத் தமிழன் சரி சரி வீட்டுல பூரிக்கட்டையோட எங்க சகோதரி ரெடியா இருக்காங்க....போங்க...ஹஹஹஹ்

   கீதா

   Delete
  6. ஏன் மதுரைத் தமிழன் இன்னும் நயன் லையே இருக்கீங்க இப்ப ஹன்சிகா, அனுஷ்கா ஷெட்டி...இப்படி.எத்தனை பேர் இருக்காங்க..ஹும்..

   கீதா

   Delete
  7. /////Avargal UnmaigalApril 10, 2017 at 11:34 PM
   ஹலோ யாரவது இந்த பதிவை நயன் தாராவிற்கு அனுப்பிவிட்டு என் வீட்டுக்கு அவரை அனுப்பிவையுங்களேன்/////
   ஆத்தில மாமி இருக்கிற நேரமா? இல்லாத நேரமா? விளக்கம் பிளீஸ்ஸ்ஸ்:).

   Delete
  8. ஹலோ :) லைலா அலி அங்கே நியூ ஜெர்சில ஒருத்தருக்கு ஹக் வேணுமாம் கொடுக்கறீங்களா ப்ளீஸ்

   Delete
  9. http://www.womenboxing.com/images/laila2sprite.jpg

   Delete
 8. ஹக்காவது கொடுத்துவிடலாம் ஆனால் தோளின் மீது யாரவது கைபோட்டு நடந்தால் அது எனக்கு பிடிப்பபதில்லை இந்தியாவில் இருக்கும் போது நண்பர்களோடு ஊர் சுற்றும் போது தோளின் மீது கைபோட்டு நடந்து இருக்கிறேன் ஆனால் அமெரிக்கா வந்த பின் அது அடியோட மாறிவிட்டது

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) எனக்கும் தோளில் கை அப்புறம் பின்னாலிருந்து தலையை தட்டுவது திடீரென முதுகை தொடுவது பிடிக்காது :)

   Delete
 9. ஹக் பண்ணி தூங்குவதற்கு என்னிடம் நாய்குட்டி உள்ளது அதை ஹக் பண்ணினால் மன அழுத்தம் அப்படியே போய்விடும் நாய்க்குட்டிக்கு நான் ஐ லவ் யூ சொல்வதை கணக்கிடவே முடியாது என் வாழ்க்கையில் நாயுக்கு அடுத்த படியாகத்தான் என் குழந்தைக்கும் மனைவிக்கும் சொல்லி இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆம் மதுரைத் தமிழன் சகோ நானும் என் செல்லங்களைக் கட்டிக் கொண்டு அன்பைப் பொழியும் போது எந்த மன அழுத்தமும் போயே போச்....இதோ இப்போது கணினியில் டைப்பும் போது கூட என் காலடியில் என் செல்லம் கண்ணழகி படுத்துக் கொண்டு அதுவும் காலை ஒட்டிப் படுத்துக் கொண்டிருக்கிறாள். எப்போதும் என் பின்னாலேயே வந்து கொண்டிருப்பாள். நான் எழுந்தால் அவளும் எழுந்துவிடுவாள்....உங்கள் செல்லப்பிள்ளை சன்னி உங்களிடம் இருப்பது போல்...

   கீதா

   Delete
  2. @அவர்கள் ட்ரூத் கீதா ஸ்ரீராம் ..இன்னிக்கு கணவருடன் டவுன் போனேன் ..எப்பவும் பணம் கேட்டு சிலர் ஒரு mug வைத்து உக்காந்திருப்பாங்க நான் இயன்றவரை பணம் தருவேன் ..கணவருக்கு உடன்பாடில்லைனாலும் நோசொல்ல மாட்டார் ,ஆனா யாராவது அவர்கள் பெட் செல்லத்துடன் இருந்தா நிச்சயம் நான் பணத்தை போட்டு வருவேன் .இன்னிக்கு ஒரு தாத்தாவும் அவர் கருப்பு செல்லமும் நான் பணம் கொடுக்கும்போது அது கண்களால் சிரித்தது என்னைப்பார்த்து ..மற்றவர்களுக்கு இது எப்படினாலும் தோணலாம் ஆனா எனக்கு அந்த நிமிஷம் ஜிவ்வுனு வானில் இறக்கை வச்சு பறக்கும் உணர்வு அதைப்பார்த்து கணவர் சொல்றார் நீங்க போட்டதில் உங்களுக்கு blessing கிடைச்சா அதில் பாதி எனக்கும் வேணும்னு :) அவருக்கே ஆச்சரியம் அந்த சேலம் என்னை பார்த்து சிரித்தது

   Delete
 10. மிக முக்கியமான பகிர்வு. அகிலமெங்கும் அன்பு பரப்பப்பட வேண்டும். சில காலங்களாகவே என்னைப்பற்றி நான் உணரும் ஒரு விஷயம், சமீப காலங்களில் நான் புன்னகையை மறந்திருக்கிறேன். நானே உணர்ந்திருந்தாலும் மாற்றிக்கொள்ள முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எனக்கு இது முக்கியமான பகிர்வு. மகன்களுடன், மனைவியுடன் சிரித்து சகஜமாகப் பேசியும் வருடங்களாகிறது. ஆனால் அதற்காக நான் சிடுமூஞ்சியாய் இருக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். எனது இருபது வயதுகளில் இருந்ததுபோல நான் இல்லை என்று உணர்ந்து மாற்றிக்கொள்ள முயற்சித்து வரும் வேளையில் அதற்கான பூஸ்ட்டாய் இந்தப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. சகோ ஸ்ரீராம், உங்களை நான், அஞ்சுவின் கேட்டு வாங்கும் பகுதிக் கதையில்தான் முதலில் சந்தித்தேன்... அந்நேரம் நீங்க ஏனோதானோ என்பதுபோல, ரொம்ப அமைதியாக இருந்ததாக தோன்றியது, சமீபத்தில் இதைபற்றி அஞ்சுவுடனும் பேசினேன்.. அதாவது, இப்போ நீங்க நிறையவே மாறி வருவது தெரிகிறது, உங்களுக்குள் ஒளிச்சிருந்த நகைச்சுவையும், குழந்தைத்தனமும் இப்போ எழுத்துக்களில் வெளிப்படுவது பார்க்கக் கூடியதா இருக்குது.

   வீட்டில், குடும்பத்தில் கொமினிகேசன் ரொம்ப முக்கியம்.. நாம் அவ்வளவுக்கு எவ்வளவு கலந்து பேசுகிறோமோ அவ்வளவு பிரெண்ட்ஸிப்.. கணவன் மனைவி, பிள்ளைகளுக்குள் உருவாகும்..

   பிள்ளைகளும் நெடுகவுமோ நம்மோடு இருக்கப்போகினம், இக்காலத்தில் யூனிவசிட்டி போனாலே.. அப்பையே ஹொஸ்டல், வேலை, திருமணம் என தூரப் பறந்திடும் வாய்ப்புக்களே அதிகம், பின்பு கவலைப்பட்டு பிரயோசனமில்லை... இப்பவே அவர்களோடு நன்கு ஒட்டி, கதைத்துப் பேசுங்கோ.

   இன்னுமொன்று, சிடுமூஞ்சி என்றெல்லாம் இல்லை, கொஞ்சம் குறைச்சுப் பேசி, தனிமையாக நடக்க ஆரம்பித்தால், பின்னர் அதுவே நமக்கு ஈசிபோல பழகிடும்.. அதுக்கு இடம் கொடுத்திடக்கூடாது... சரி சரி ஓவராக் கதைச்சிட்டனோ?:).

   Delete
  2. ஸ்ரீராம் நானும் உங்கள மாதிரித்தான் once upon a time ரிசெர்வ்ட் டைப் ஆனா இப்போ அப்படியில்லை பார்த்தீங்க இல்லையா எங்க அட்டகாசத்தை இதோ ரெண்டு கால் பூனைதான் then my pets my hubby and daughter பிளாக் நட்புக்கள் எல்லாருமே காரணம் :) ஜாலியா இருங்க ஏனெண்றால்பிள்ளைங்க நம்மை வாட்ச் பண்ணிட்டே இருக்காங்க கலகலப்பா இருக்கணும் ..எங்க வீட்ல கணவரும் மகளும் என்னை ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுவாங்க

   Delete
  3. @ஸ்ரீராம் ..ஆமா அந்த பைரவரை பிரீயா விட்ருக்கலாம் ஆனால் லீஷுடன் பப்லிக் பிளேஸில் கொண்டுபோகணும் என்று சட்டம் சில வகை பைரவர்கள் மஸ்ஸில் கூட அணியனும் ஆனா எங்க ஏரியாவில் வாக்கிங் போகும்போது யாரும் போடறதில்லை

   Delete
 11. பைரவரை சங்கிலியால் கட்டி வைத்திருக்காமல் இயல்பாய் இருக்க வைத்திருக்கலாம். ஆனாலும் என்ன ஒரு அன்பான ஜீவன்? அதிராவுக்கு ஒரு கேள்வி. பழகுவதில், அன்பில் போட்டி வைத்தால் பைரவர், பூனை எது வெல்லும்?

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே அன்பானவைதான் ஸ்ரீராம். ஆனால் பைரவர்தான் ஒரு இஞ்சு மேலயோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் அப்பாவிகளோனு தோனும்...நம்ம அதிராவைப் போல்...ஏமாந்துரும்....அரை.....சரி சரி வேண்டாம்....ஹஹஹ்ஹஹ்

   கீதா

   Delete
  2. ஹையோ ஆண்டவா.. அப்பாவா அம்மாவா நல்லவர் எனக் கேட்பதுபோல இருக்கே:). இங்கு வந்துதான் பூஸ் மட்டும் வளர்க்கிறோம், ஊரில் எப்பவும் ஒரு பைரவரும் ஒரு பூஸும் இருப்பார்கள் வீட்டில்.

   இதில பூஸ் பப்பியை விட, அதை வளர்க்கும் ஓனரில்தான் அனைத்தும் தங்கியிருக்கு. என்னோடிருந்தால் இரண்டையுமே ஒரே மாதிரியேயேதான் பழக்கி வைத்திருப்பேன். இது பற்றிய ஒரு பெருந்தொடரே முன்பு எழுதியிருக்கிறேன், நேரமுள்ளபோது என் பக்கத்தில் வெளியிட நினைச்சுக்கொண்டிருக்கிறேன், கால நேரம் வருகுதில்லை.

   சிலபேர், பப்பியை/ பூஸை வாங்கி சாப்பாட்டை மட்டுமே கொடுப்பார்கள்.. அப்போ அவையும் சாப்பிட்டு விட்டு தூங்கும்.. இதைத்தானே பண்ணும்... நாம் வளர்க்கும் வளர்ப்பிலும், காட்டும் அன்பு பாசத்திலும் தான், அவை திரும்பக் காட்டும்.... அன்பும், பழக்கமும் இருக்குது.

   Delete
  3. பறவைகளுக்கும் கோழி புறாக்கள் கிளி கூட அன்பானவைதான் ஸ்ரீராம் கீதா அதிரா ..ஆனால் பைரவர்கள் ஒரு பாயிண்டில் வெற்றி பெறுகிறார்கள்

   Delete
  4. @ஸ்ரீராம் ..ஆமா அந்த பைரவரை பிரீயா விட்ருக்கலாம் ஆனால் லீஷுடன் பப்லிக் பிளேஸில் கொண்டுபோகணும் என்று சட்டம் சில வகை பைரவர்கள் மஸ்ஸில் கூட அணியனும் ஆனா எங்க ஏரியாவில் வாக்கிங் போகும்போது யாரும் போடறதில்லை

   Delete
 12. பிரான்ஸ் ஐ எஸ் தாக்குதல்களின் பொழுது ஒரு இஸ்லாமிய வாலிபர் ப்ரீ ஹக்ஸ் என்று சொல்லி கண்களைக் கட்டிக் கொண்டு நின்றார்.

  அவரை பெருங்கூட்டம் தழுவிச் சென்றது.

  வெகு நெகிழ்வான சம்பவம் அது

  நினைவில் வந்தது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நானும் பார்த்தேன் டிவில ..இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கு ..இணைத்தா பதிவு மீண்டும் பழைய லாங் MODE போயிடும்னு விட்டுட்டேன் .மிக்க நன்றி அந்த நெகிழ்வான சம்பவத்தை நினைவூட்டியதற்கும்

   Delete
 13. இங்கே அரபு கலாச்சாரத்திலும் கட்டித் தழுவி வரவேற்பது உண்டு...

  அவ்வளவு ஏன்?..
  நமது பண்பாட்டிலும் ஆரத்தழுவி வரவேற்று மகிழ்ந்த குறிப்புகள் உண்டு...

  நாம் தான் மன இறுக்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா . மன இறுக்கம் கொஞ்சம் தளர்த்தினா மனசும் ரிலாக்ஸ் ஆகிடும் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
  2. செல்வராஜ் சார் சொன்னதில் CLARITY இல்லை. அரபு கலாச்சாரத்தில், ஆண்-ஆண், பெண்-பெண் கட்டித் தழுவி வரவேற்பது மட்டும்தான் உண்டு. ஒருவரது திருமணத்தில், (நாம் நம்ம அரபி நண்பரின் திருமணத்துக்கோ அல்லது நிச்சயதார்த்தத்துக்கோ சென்றிருந்தால்) ஒரு பெண்ணையும் பார்க்கமுடியாது. 'கல்யாணத்துக்கு நமக்கு அழைப்பு' என்றால் (இஸ்லாமியர் இல்லாதவரை அழைத்திருந்தால்) வீட்டில் சென்று ஒரு அறையில் உணவு சாப்பிட்டுவிட்டு வரலாம். ஒரு பெண்ணையும் காணல் இயலாது. இஸ்லாமியராக இருந்தால், திருமணத்தின்போது அவர்கள் கோவிலுக்குச் செல்லலாம். அங்கும் ஒரு பெண்ணையும் காணல் இயலாது)

   Delete
  3. வாங்க நெல்லை தமிழன் ..ஆணுக்கு ஆண் பெண்ணுக்கு பெண் hug பற்றித்தான் அவரும் சொன்னார் என்று நினைக்கிறேன் ..ஆமாம் மணமகள் நிறைய பூவெல்லாம் முகத்தை மறைக்கும் VEIL மாதிரி போட்டு லேடிஸ் மட்டுமே பார்க்க முடியும் ...வயதில் முதியோருக்கு கண்டிப்பா இந்த அரவணைத்தல் மன மகிழ்ச்சியை தரும் .

   Delete
 14. கட்டிப்பிடி வைத்தியம் மிகவும் நல்ல வைத்தியம்....மீண்டும் வருகிறேன் ஏஞ்சல்...

  கொஞ்சம் வேலை...துளசிக்கும் பதிவை அனுப்பியிருக்கேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அஸ் யூஷுவல் நான் ரிவர்ஸ் ஆரடர்லருந்து வரேன் ஹா ஹா :)நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா

   Delete
 15. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் விடமாட்டேஎன்ன்ன்ன் இதோ புறப்பட்டிட்டேன்ன்ன்ன் ட்றுத் இடம் சிக்கியிருக்கும் ஒரு நாலுகால் அப்பாவிக் குட்டியைக் காப்பாற்றியே தீருவேன்ன்ன்... அஞ்சூ கொண்டுவாங்கோ அந்த பெட் ரெஸ்கியூ நம்பரை பிளீஸ்ச்ச் ... நேக்கு காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல...:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அதிரா தெளிவா சொல்லணும் ட்ரூத் வீட்ல ரெண்டு அப்பாவி வாயில்லா ஜீவன் இருக்கு ஒன்னு சன்னி இன்னொரு பெட் :) truth
   இப்போ யாரை காப்பாற்ற போறீங்க

   Delete
 16. அன்பின் வெளிப்பாடு இந்தக் கட்டிப்பிடி போலும் அது மூன்றாம் மனிதர்களிடமிருந்து வருமா சிலர் மூக்கோடு மூக்கு உரசி அன்பைக் காட்டுகிறார்களாம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா அது அந்த Māori greeting in New Zealand பழங்குடியினர் வாழ்த்தும்முறை..hongi என்பார்கள் ..நமக்கு வணக்கம் போல்தான் அவர்களுக்கு ..
   யாருமே இல்லாதவர்களுக்கு மூன்றாம்மனிதர்தானே அன்பை கொடுக்கணும் ..அதற்குத்தான் நாம் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று என் நண்பி சொல்வார்

   Delete
 17. manam pakuva patal palaka valakathai maara mudium. ex. valathu kaiel elutha palagiya palar thider ena edthu kaiyal elutha varathu. athu pola thaan nam palaka valakamum. thagavaluku vaalthukal. http://www.anatomictherapy.org/ ithu thagavalukaga.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க விஜயகுமார் ..மனதை சந்தோஷமா வைச்சிகிட்டா அதுவே பக்குவப்படும் .தகவலுக்கும் நன்றி ..
   நீங்க பிளாக் வைத்திருக்கீங்களான்னு பார்த்தேன் வீடு அஸ்திவாரம் படம்லாம் இருக்கு அதற்குப்பின் வேறே எழுதலையா ..
   வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க

   Delete
 18. .சந்தோஷமான ஆழ்மனதில் இருந்து வரும் சிரிப்பும் அன்பான அரவணைப்பும் இந்த வேண்டா நோய்களை மனுஷரிடமிருந்து தூர விரட்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்// இது உண்மை....இப்போது வேண்டுமானால் ஆராய்ச்சி....

  நம்மூரில் ஏஞ்சல் உங்களுக்கும் தெரிந்திருக்கும்...நம்மூரில் நாம் குழந்தைகளை இடுப்பில் தானே தூக்குவோம்...அது அக்குழந்தைக்கு மிகுந்த செக்யூர்ட் ஃபீலிங்க் கொடுக்கும். அதாவது கைக்குழந்தை, மற்றும் சிறிய வயது...நடக்க்த் தொடங்கியதும் அணைத்தல், கை பிடித்து நடத்தல். குழந்தை அழும் போது தோளில் சாய்த்து அரவணைத்து ஆறுதல் சொலல்..அப்புறம் வளர வளர, அவர்களுக்கு வருத்தம் அழுகை வரும் போது அணைத்து மடியில் படுக்க வைத்து வருடிக் கொடுத்தல்....பருவ வயதில் கூட...இல்லையா...

  வட இந்தியர்கள் எப்போதுமே யாரைப் பார்த்தாலும் தோளோடு தோள் சேர்த்து அரவணைத்துதான் க்ரீட்டிங்க் சொல்லுகிறார்கள்.

  நாலுகால் தெரப்பிஸ்ட்ஸ் வெகு அருமை அழகு!!!!!! ரொம்பப் பிடித்தது...இங்கும் ப்ளுக்ராசில் தெரப்பிக்கு என்று முன்பு அனுப்பி வந்தார்கள் இப்போது இருக்கானு தெரியலை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா நாம் இடுப்பிலும் தோளிலும் தூக்கி நெருக்கமாக வைத்திருப்பதால்தான் பிள்ளைங்க மிகவும் ஒட்டுதலோட இருக்காங்க .
   இப்போ வெளிநநாட்டினரும் இடுப்பில் வைக்கறாங்க :) வசதியா இருக்கும் போல இவர்களுக்கும் ..
   நாலு கால்ஸ் தீர்ப்பை அதுங்க நம்மை பார்த்து வாலாட்டினாலே போதுமே மனசு ஜிவ்வுனு ரெக்கை கட்டி பறக்கும் ..மேலே தமிழன் சகோவுக்கும் ஒரு பதில் தரேன் அதையும் வாசிங்க இன்னிக்கு நான் ஜிவ்வுனு பறந்தேன் :)ஒரு செல்லத்தால்

   Delete
 19. அட! கமல் படத்துல வரும் கட்டிப் புடி வைத்தியம்தானே! ஏஞ்சல் சகோ! மிக அருமையான பதிவு. நிறைய தகவல்கள் அறிய முடிகிறது. இப்படித் தேடித் தேடித் தரும் தங்கள் ஆர்வத்திற்கும் பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அதே தான் ..கடையுள்ளருந்து படமும் எடுத்தேன் அது வேற கணினியில் இருக்கு

   Delete
 20. ஏஞ்சல் அன்பு என்ற ஒன்றை வளர்த்துக் கொண்டால் அதுவும் கண்டிஷன் இல்லாத அன் கண்டிஷனல் லவ் வளர்த்துக் கொண்டால் நம் பார்வை எல்லாமே மாறும் எப்போதும் மகிழ்ச்சிதான்...இல்லையா...அன்பைப் பெறுவதை விட...அன்பை நாம் வழங்கும் போது அது தரும் பாசிட்டிவ் எனர்ஜி வேறு எதுவும் இல்லை அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை....நல்ல பதிவு ஏஞ்சல்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ..எதையும் எதிர்பார்த்து வருவது உள்ளார்ந்த அன்பு இல்லை ..மார்லீ தினமும் என்னை பார்க்கும் கட்டி ஹக் செய்யும் நான் தடவி கொடுப்பேன் அதற்கு முன்பே என்னிடம் அது அன்பாவே இருக்கும் ..ஒரு நாலு கால் ஜீவனிடம் இப்படி பழகும்போது இரண்டு கால் மனிஷரிடமும் எதிர்பார்ப்பின்றி பழகணும் ..மிக்க நன்றி கீதா

   Delete
 21. அன்பான அணைப்பை அனைத்து உயிர்களும் விரும்பும் தானே ஏஞ்சலின்.
  இயேசு ஆட்டுக்குட்டியை அணைத்துக் கொண்டு இருப்பார் எவ்வளவு அழகாய் ஆடு கண் மூடி ரசிக்கும்.
  பழைய பாடல் நினைவுக்கு வருது //அணைத்து வள்ர்ப்பவளும் தாயில் அல்லவா? அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா? //

  செல்ல பிராணிகள், நாய், பூனை எல்லாம் உடம்பை வளைத்து நம் உடல் மேல் ஈஸிக் கொண்டு இருக்கும். நாம் செல்லமாய் அணைத்து உடலை வருடிக் கொடுத்தால் அவை எவ்வளவு ஆனந்தப்படும்.

  எவ்வளவு வயதானலும் கைகளை ஆதரவாய் பிடித்து முதுகை வருடிக் கொடுத்து ஒரு செல்ல அணைப்புக்கு ஏங்கும் முதியவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உடல் நோய், மன நோய் எல்லாம் பறந்து விடும் அணைப்பில்.

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அக்கா தாயன்பு இறைவனின் அன்புக்கு ஈடானது தான் இந்த அணைப்பும் ..பலருக்கு இங்கே மன உளைச்சல் அதை குறைக்க தவறான பாதையை தேடறாங்க அதைவிட மனது விட்டு சிறிது அன்பாய் கவலை மறந்து ஒரு உள்ளார்ந்த அன்புடன் அணைத்தல் சிறந்தது என்கிறார்கள் அக்கா .மனா பாரம் லேசாகினா அதுவே பெரிய நன்மையல்லவா ..இன்னிக்கு கடைக்கு போனோம் ஒரு வயதான பாட்டிதான் உரிமையாளர் கிட்டத்தட்ட அரை மணிநேரம் பேசினார் எங்களை விடுவதாயில்லை உண்மையில் எனக்கும் கணவருக்கும் அவ்ளோ சந்தோஷமக்கா அவங்க கிட்ட பேசியதில்

   Delete
 22. :) Me getting adjusted to these hugs slowly!! :) Good post!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க மஹி ..அங்கேயும் ஹக் இருக்கா :) சரி இப்போ நான் air hug bear HUG உங்களுக்கு தரேன் டோன்ட் டெல் பூஸ்

   https://media.tenor.co/images/e655fb971c10844bcb6d29da37739b99/tenor.gif

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... சாண்டல் வூட் சோப் போட்டுக் குளிச்சிட்டுக் குடுங்கோ.. எயாடெல் ஹக் ஐ:)

   Delete
 23. உண்மையில் கட்டிப்புடி வைத்தியம் சிறந்த உளவியல் நிவாரணி .நாம் தான் தவறான கண்ணோட்டத்தில் நோக்குகின்றோம்!

  ReplyDelete
 24. ஆரத்தழுவினான்,ஆற்றுப்படுத்தினான் இறுகத்தழுவி என்றெல்லாம் இலக்கியத்தில் இந்த நிவாரணி முன்னேறே குறிப்பிட்டு இருப்பதையும் மறக்கூடாது. தமிழில் கமலைவிட முன்னாபாயில் சஞ்சையின் உடலியல் நடிப்பு எனக்கு அதிகம் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. ஆமா நேசன் எனக்கும் சஞ்சய் தத் நடிப்பு தான் பிடிச்சது ..ஒருவேளை ஆல்வார்ப்பேட்டை ஆண்டவர் ஆக்ஸன்ட் சரியில்லையா தெரில

   Delete
 25. நம்ம குஷ்பூ???? சேச்சே சிரிக்கிறதுக்கு ஒரு ஸ்டிக்கர் கூட இல்லாத ப்ளாக் .இன்னா ப்ளாக்மே இது.
  கட்டிப்புடி வைத்தியம். ம்ம்ம் நல்லதுதான் . எனக்கு டீ வேணும் மாதிரி இருந்தால் என் சிஸ் ஐ கட்டி கொஞ்சுவேன்.தங்காவுகளிட்ட ஏதாச்சும் திருடினாலும் கேள்வி கேக்க முன்ன கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுடுவன்.கவலைக்கு கட்டிபுடிக்கிறனோ இல்லியோ தப்பு செஞ்சா இதை செஞ்சு தப்பீடுவேன்.ஹப்பி கொலிடே அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க சுரே ..எனக்கும் ஒரு ஸ்மைலி கூட போட முடில்லன்னு அப்புறம் கர்ர்ர் போடறதுக்கு ஆங்கிரி எமோடிக்கோன் இதுக்கெல்லாம் கஷ்டமா இருந்துது :) கூகிள் அத்தையை கெட்டி இப்போவே மனு கொடுப்போம் சீக்கிரமா ஸ்மைலி போடா ஏற்பாட்டுக்கு செய்யுங்கன்னு :) ..என் பொண்ணும் அப்படிதான் டீ வேணும்னா ஸ்பெஷலா எது வேணும்னாலும் கட்டிப்புடிப்பா ..நான் சின்னத்தில் ஏதாவது உடைச்சிட்டேன்னா காணாம போட்டேன்னா கட்டிப்புடிப்பேன் அம்மாவை

   ஹாப்பி ஹொலிடேஸ் உங்களுக்கும்

   Delete
 26. மிகவும் அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ மொகமத்

   Delete
 27. இதி நாங்க சின்னதிலேயே ஆரம்பித்துவிட்டோம் என நினைக்கிறேன் அஞ்சு. ஏன்னா நீங்க சொன்ன மாதிரி காரியம் ஆகனும்ன்னா உடனே கட்டிபிடிதான். இங்கும் நான் நல்லா தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் ,ஜேர்மன்காரர் எனில் கட்டிபிடிப்பார்கள். அமைப்பு ஒன்றில் மனஇறுக்கத்தில் இருப்பவர்களுக்கு வாய்விட்டு சிரிக்க,கட்டிபிடிவைத்தியம் என நடாத்துகிறார்கள். இங்கு வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள் , பிள்ளைகள் இருப்பார்கள் ஆனா அவர்களை கவனிக்கமாட்டார்கள் இப்படியானவர்கள்தான் பாதிப்பு அதிகம். நாங்க இவர்களுக்காக ஒருமுறை மியூசிக் ப்ரோக்ராம் செய்தோம் அஞ்சு. எல்லாரும்(ஆண்,பெண்) அன்புக்காக ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.
  வளர்ப்புபிராணிகள் கதையே வேறு அஞ்சு. அவங்க நாங்க வெளியில் சென்று வீட்டுக்கு வந்தால் காட்டும் அன்பு இருக்கே அது சொல்லிடமுடியாது. எல்லாமே(கவலைகள்,கோபம்,வெறுப்பு,களைப்பு) மறந்துபோகும். நல்ல பதிவு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா ..வயதான முதியோர் தனிமையில் இருப்போர் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகிறார்கள் இங்கேயும் ..பாவமா இருக்கும் பெரும்பாலோனோர் ஓல்ட் ஏஜ் ஹோமில் ..இந்த அரவணைப்பு அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்

   Delete