அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/8/17

லண்டன் ஸ்டைல் அவியல் :)

லண்டன் ஸ்டைல் அவியல் :)
--------------------------------------------------

                                                                  எங்கள் பிளாக்கில் என் சமையல் குறிப்பு வெளியானதில் இருந்து எனக்குள் ஒரு ஸ்பார்க் தீப்பொறி பற்றி எரிகிறது ..http://engalblog.blogspot.com/2017/04/blog-post_3.html

அது இப்போ விதவிதமா சமைத்து வலைப்பதிவில் போட்டு உங்களுக்கெல்லாம் நல்லது செய்யணும்னு மனசு துடிக்குது :) நேற்று கூட முருங்கையிலை சாம்பார் முருங்கையிலை சூப் பொரியல் எல்லாம் செய்தென் ஆனா படம் எடுக்காததால் இங்கே போட முடியலை ..அடுத்தது உலக முழுதும் இருந்து பார்வையாளர்கள் என்னுடைய சமீபத்திய புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டையும் முருங்கை ரசத்தையும் மீண்டும் மீண்டும் வந்து ரசிக்கிறாங்க ..அவங்க விருப்பத்திற்கிணங்கி வாரம் ஒரு சமையல் குறிப்பை வழங்க இருக்கிறேன் .
.   
இன்று  எங்க வீட்ல அவியல் செய்தேன் ..
அவியலுக்கு எத்தனை வகை காய்கறிகளையும் சேர்க்கலாம் ஆனால் இது லண்டன் ரெசிப்பி அதனால் நான் சேர்த்த காய்கறிகளில் இரண்டு வெளிநாட்டு  காய்களும் இருக்கு ..


                                                                         


தேவையானவை 
==================
 நறுக்கிய காரட் ..           1 கோப்பை 
Zucchini or courgette      ....         1 கோப்பை 
கோவைக்காய் 
இரண்டாக அரிந்தது ...1 கோப்பை 
கருணைக்கிழங்கு ...... 1 கோப்பை 
சேப்பங்கிழங்கு ..............1 கோப்பை 
வாழைக்காய் ...................1 கோப்பை 
காராமணி பீன்ஸ் 
நறுக்கியது        ................. 1 கோப்பை 
முருங்கைக்காய் 
நறுக்கியது             .............1 கோப்பை 
வெள்ளை பூசணி ...........1 கோப்பை 
மாங்காய் .............................1 கோப்பை 
வெள்ளரிக்காய் ...............1 கோப்பை 

அரைக்க 
----------------

தேங்காய்   ...........................1 கோப்பை 
சீரகம்            ...........................2 தேக்கரண்டி 
பச்சைமிளகாய் ................4
தேங்காய் எண்ணெய் ..1 மேஜைக்கரண்டி 
உப்பு தேவையான அளவு 
தாளிக்க ..சிறிது கறிவேப்பிலை 
தயிர் ............................................1 கோப்பை 


இப்போ இந்த காய்கறிகளில் வேக நேரமெடுக்கும் காய்களை (முருங்கை ,காராமணிக்காய்  ,காரட் சேப்பங்கிழங்கு கருணைக்கிழங்கு ) ஒரு பாத்திரத்திலும் கொஞ்சம் மென்மையான காய்களை ( வெள்ளரி சுக்கினி பூசணி வாழைக்கா மாங்காய் கோவைக்காய்  தனியே வேறொரு பாத்திரத்திலும் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும் .

                                                                               

பிறகு இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து தேங்காய் சீரக பச்சைமிளகாய் அரைத்த விழுதுடன் கலந்து உப்பு சரிபார்த்து மீண்டும் குறைந்த தீயில் வைக்கவும் ..

                                                                           

பிறகு கொஞ்சம் திக் கன்சிஸ்டன்சி வந்ததும் தயிரை ஒரு கண்ணாடி கோப்பையில்  ஊற்றி நன்கு அடித்து அடுப்பில் இருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்து விடவும் ..
பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சுட வைத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவியல் கலவையில் கொட்டவும் .
சுவையான லண்டன்  ஸ்டைல் அவியல் தயார் :)

                                                                                

என் மகளுக்கு தளர தளர இருந்தால்தான் சாப்பிட  விருப்பம் . அவரவர் விருப்பத்துக்கேற்ப நீர்த்தன்மையை கூட்டியோ குறைத்தோ சமைக்கலாம் ..

தாராளமா காய்கறிகளை சேர்த்ததில் மூன்று bowl அவியல் வந்தது 
ஓன்று ஸ்ரீராமுக்கு :)  ஒன்று எங்களுக்கு மூணாவது யாருக்குன்னு மல்ட்டிகிட்ட கேட்டேன் அது அவர்கள் உண்மைகள் அவரை சுட்டு காட்டுது :) வந்து எடுத்துக்கோங்க ..
அதிராவுக்கு முருங்கை கீரை சூப் ரெடியாகுது ஸோ டோன்ட் க்ரை டியர் :)

இன்று காலை வாக் போகும்போது ரோட்டோரம் ஒரு வாத்துக்குஞ்சு 
கணவர் தடுத்தும் கொண்டு வந்து வீட்டில் சின்ன பாத்திரத்தில் நீர்வைத்து அந்த வாத்து பாப்பாவை அதில் நீந்த வைத்தேன் :)எப்படி இருக்கு வாத்து பாப்பா :)                                                                                                                  மற்றுமொரு பதிவில் சந்திப்போம் :)

115 comments:

 1. ஆஹா... முழு நேர சமையல்ராணி ஆயாச்சு போல...

  அவியல் என்றாலே காத தூரம் ஓடுறவன் நான்... நல்ல சமையல் குறிப்பு...
  அவியல் விரும்புவர்களை இங்கு அழைத்து வருவோம்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க தம்பி வாங்க ..சும்மா இருந்த என்னை பிளாக்ல குறிப்பு எழுத வச்சது உசுப்பி விட்டது ஸ்ரீராம் தான் :)
   அவியல் பிடிக்காதா ? என் மகளுக்கு ரொம்ப விருப்பம் ..அதுக்கு முக்கிய reason வெங்காயம் சேர்க்காததால்
   மிக்க நன்றி தம்பி .

   Delete
 2. படங்களுடன் செய்முறைக்குறிப்புடன்
  சொல்லிச்சென்ற விதம்
  மிக மிக அருமை

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா அங்கே அமெரிக்காவிலும் இதே பொருட்கள் கிடைக்கும் செய்து பாருங்க :) மிக்க நன்றி

   Delete
 3. குறிப்பாக உசிப்பி விட்டவருக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க ரமணி அண்ணா .மிக்க நன்றி ..ஒரு சமையல் மகாராணி உருவாகிறார்

   Delete
 4. //அடுத்தது உலக முழுதும் இருந்து பார்வையாளர்கள் என்னுடைய சமீபத்திய புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டையும் முருங்கை ரசத்தையும் மீண்டும் மீண்டும் வந்து ரசிக்கிறாங்க .. அவங்க விருப்பத்திற்கிணங்கி வாரம் ஒரு சமையல் குறிப்பை வழங்க இருக்கிறேன்.//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

  அதிரா கெதியா ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா எதுக்கு இப்போ அந்த குண்டு தைரியசாலியை கூப்பிடறீங்க :) எப்படியும் நாளைக்குத்தான் வருவாங்க :)

   Delete
  2. ////அதிரா கெதியா ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.////
   நாஆஆஆ.. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் கோபு அண்ணன்.. என்னாச்சூஊஊஊஊ அவியல் சாப்பிட்டு மயக்கம் வருதாஆஆஆஆ?:) ஹையோ படிச்சுப் படிச்சுச் சொன்னனே.. அஞ்சுட சமையல் பார்க்க மட்டும்தேன் சாப்பிட அல்ல என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் பேச்சை ஆரு கேட்கிறா..:).. சரி சரி பயப்பிடாதீங்கோ இதுக்கு சகாயம் வச்சு தாறேன்ன்.. அது என்ன விசமெனினும் முறிச்சிடும்:) ஹா ஹா ஹா மீஈஈஈ முருங்கில ஏறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:).

   Delete
  3. athira April 8, 2017 at 9:23 PM

   //கோபு அண்ணன்.. என்னாச்சூஊஊஊஊ அவியல் சாப்பிட்டு மயக்கம் வருதாஆஆஆஆ?:) ஹையோ படிச்சுப் படிச்சுச் சொன்னனே.. அஞ்சுட சமையல் பார்க்க மட்டும்தேன் சாப்பிட அல்ல என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் பேச்சை ஆரு கேட்கிறா..:).. சரி சரி பயப்பிடாதீங்கோ, இதுக்கு சகாயம் வச்சு தாறேன்ன்.. அது என்ன விசமெனினும் முறிச்சிடும்:) //

   சகாயம்.....ஆ?
   கஷாயம்....ஆ?

   ஒருவேளை .... சகாய விலையில் கஷாயமா இருக்குமோ? :)))))

   Delete
  4. ஹா ஆஹா கோபு அண்ணா ஒரு விஷத்தை இன்னொரு விஷம் முறிக்குமாம் :)
   அது சகாயம் ஐஏஸ் ஆபீசர் நினைப்பில் கசாயத்தை சகாயமாக்கிடுச்சி குண்டு தைரியசாலி

   Delete
 5. கலர் கலரா காய்கறிகளும் மஞ்சள் வாத்துப் பாப்பாவும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா ..எனக்கு சாம்பார் அப்புறம் அவியல் அப்புறம் வெஜ் ப்ரைட் ரைஸ் இதுக்கு இப்படி கலர் கலரா போட்டு செய்ய ஆசை

   Delete
 6. Zucchini or courgette .... 1 கோப்பை
  கோவைக்காய் இரண்டாக அரிந்தது ...1 கோப்பை
  கருணைக்கிழங்கு ...... 1 கோப்பை
  சேப்பங்கிழங்கு ..............1 கோப்பை

  மேலே கூறியுள்ள நான்கு காய்கறிகளும் + பொதுவாக எந்தவொரு அவியலும் நான் சாப்பிடுவதே இல்லை. எனினும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆவ் !! கோபு அண்ணாக்கு அவியல் பிடிக்காதுன்னு எங்க வீட்டு மல்ட்டிக்கு தெரிஞ்சிருக்கே :) நான் அஞ்சு விரலை காட்டினேன் அதுகிட்ட அது உங்க பேர் இருக்கற விரலை டச் பண்ணலை :) ஹா ஹா :)
   கோபு அண்ணா உங்களுக்கு முருங்கைக்கீரை தோசை ரெசிப்பி ஸ்பெஷலா வரும் :)
   zucchini அங்கேயும் கிடைக்குதா அண்ணா !! thanks annaa

   Delete
  2. கோபு அண்ணன்.. இவற்றை நீங்க மட்டுமில்ல.. நானும்தேன்ன்.. ஏன் பொதுவா எல்லோருமே சாபிட மாட்டினம்:).. ஹையோ ஹையோ:).

   ///நான் அஞ்சு விரலை காட்டினேன்//
   எனக்கிப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகோணும்.. அந்த அஞ்சு விரலில், மற்ற நால்வரும் ஆரூஊஊஊ:)...

   Gopu annan.. this is for you...

   https://i.ytimg.com/vi/Mr-aUZltxek/hqdefault.jpg

   Delete
  3. தொப்பி போட்ட பியானோ வித்வானும் பூனையாரும் தங்களின் கைகளின் ஐந்து விரல்களையும் டச் பண்ணுவது அழகாக உள்ளது. மிக்க நன்றி, அதிரா.

   Delete
 7. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மக்கள்ஸ்ஸ்ஸ்.. அஞ்சு ரெண்டாம் தடவையா சமைஞ்சிட்டாஆஆஆஆஆ:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே இண்டைக்கு அடிக்கடி கர்ர்ர்{இந்த கர்ர் என் டங்குக்கு சொன்னேன்}..

  அஞ்சு ரெண்டாம் தடவையா சமைச்சிருக்கிறாஆஆஆஆஆ.. அவியலாமே.. லண்டனில ஆரும் அவிப்பினமோ?:).. எனக்கு வெள்ளாவி வச்சுத்தான் அவிச்சாங்களோ. வெளுத்தாங்களோ பாட்டு நினைவுக்கு வந்து தொலைக்குதே... சரி நில்லுங்க வாறேன்ன்ன்.. எதுக்கும் படிச்சுப் பார்ப்போம்.. கடவுளே.. முதல்ல ஒரு கப் இஞ்சி ரீ பிளீஸ்ஸ்ஸ்.. அப்போதான் இந்த அவியல் செமிக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. //அஞ்சு ரெண்டாம் தடவையா சமைஞ்சிட்டாஆஆஆஆஆ:).. //

   ஹைய்யோ ..... குபீரென்று சிரித்ததில், என் விலா எலும்பே சுளுக்கிக்கிச்சு அதிரா.
   டைம்லி ஜோக் சூப்பரோ சூப்பர். அடிக்கடி இதுபோல டங்கு ஸ்லிப் ஆகக் கடவது. :)

   Delete
  2. அதிரா ஏஞ்சல் முன்னாடியே நியைய ரெசிப்பி போட்டுருக்காங்களே...ஊறுகாய், சிறுதானியத்துல, ராஜ்கீரா மாவுல செய்யறது என்றெல்லாம் நினைவு இருக்கு...

   கீதா

   Delete
  3. அதிரா உங்களுக்கு இஞ்சி ரீ எல்லாம் கிடையாது! உங்க செக்ரட்டரி உங்களுக்கு அருகம்புல் ஜீஸ்தான் கொடுக்கச் சொல்லிருக்காங்க ஹிஹீஹிஹி

   கீதா

   Delete
  4. நோஓஓஓஓ கீதாஆ.. அமெரிக்கா டொக்டர் சொல்லிட்டார்ர் அறுகம்புல்லு ஆடு மாட்டுக்குத்தானாம் நமக்கு ஆகாதாம் என.. அதனால வெறி சொறி:) அதெல்லாம் டச்சு பண்ண மாட்டேன்ன்.. வேணுமெண்டால்ல் ஹொட்டா ஒரு மொக்கா சொல்ல முடியுமோ பீஸ்ஸ்ஸ்?:)

   Delete
  5. கீதா :) ஜூஸ்லாம் வேணாம் நாலு புல்லு பிச்சு போடுங்க பூனை கடிச்சி சாப்பிடட்டும்

   Delete
 8. ///எங்கள் பிளாக்கில் என் சமையல் குறிப்பு வெளியானதில் இருந்து எனக்குள் ஒரு ஸ்பார்க் தீப்பொறி பற்றி எரிகிறது//
  ஆவ்வ்வ்வ்வ் அப்போ இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணம் எங்கட சகோ ஸ்ரீராம் தானா?:).. ஆண்டவா அவர் ஆளமறியாமல் காலை வச்சிட்டாரே:).

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஆழம் ஆழம்

   Delete
  2. ஹா ஹா ஆழம் ஆழம்

   Delete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  4. அதிரா நம்ம ஸ்ரீராம் ரொம்ப நல்ல பையன்!!! பாருங்க எத்தனை செஃப் உருவாகிட்டு வராங்க...வீட்டுக்குள் மட்டும் இருந்தவங்க எல்லாம் இப்ப உலகம் முழுவதும் அறியரா மாதிரி....சரி நீங்களும் ஒன்னு எங்கள் ப்ளாகுல எழுதிப் போட்டீங்கதானே....ஸ்ரீராம் ஆழம் எல்லாம் பார்க்க மாட்டார்...

   கீதா

   Delete
  5. அப்படி சொல்லுங்க கீதா :)

   Delete
 9. ///சுவையான லண்டன் ஸ்டைல் அவியல் தயார் :)///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கும் கொஞ்ச நாளைக்கு அதிரா வீட்டு, டெய்சியின் பெட்டுக்கு கீழ ஒளிச்சிருங்கோ.. லண்டன் சனம் அடிக்க வரப்போகினம்.. கைல கால விழுந்தாவது உங்களை மீ காப்பாத்துவேன் டியர்:).. டோண்ட் வொறி:).

  ReplyDelete
 10. ஹலோ மியாவ். லண்டன்ல செஞ்ஜா அது லண்டன் அவியல் . பிபிசி அஞ்சும் ஆனந்த் கூட எங்கள் ப்லாக் ரெசிபி பார்த்து மயங்கி என்ன ஒர் சவுத் இந்திய ரெசீபி கேட்டாங்க தெரியுமா

  ReplyDelete
 11. பார்க்க கண்ணுக்கு அழகாத்தான் இருக்குது, ஆனா எனக்கென்னமோ இது சாம்பாறுபோல குமைஞ்சிடும்போல தோணுது. சுக்குணி, கோவைக்காய், மாங்காய் எல்லாம் எப்படியும் கரைந்திடுமே அஞ்சு.. நான் வைக்கும் சாம்பாறு இப்படித்தான் இருக்கும், ஆனா கிழங்கு வகையில் இவ்வளவு போடமாட்டேன்.. இதுக்கு தயிர் தேவையோ?.. தேங்காயே போதுமெனத் தோணுது.

  ReplyDelete
  Replies
  1. அதிரா இது ஒரு சூப்பர் டிஷ்....இப்படித்தான் செய்வாங்க செஞ்சு பாருங்க அப்புறம் சொல்லுங்க....இது சாம்பார் இல்ல...

   கீதா

   Delete
  2. ஹா ஹா :) கீதா ஒரு மணத்தக்காளியையே அதிராவால் இன்னும் ஐடென்டிபை செய்ய முடில :)
   பூனை செஞ்ச வாழைப்பழ ரொட்டியும் அருகூட்டு தோசையும் இன்டர்நெஷனல் பேமஸ் தெரியுமோ :)

   Delete
  3. இல்லை அதிரா தனித்தனியா வேக வைத்து சேர்த்தா கரையாது ..குக்கரில் வேகவைக்க கூடாது pan தான் நல்லது

   Delete
 12. ///ஓன்று ஸ்ரீராமுக்கு :) ஒன்று எங்களுக்கு மூணாவது யாருக்குன்னு மல்ட்டிகிட்ட கேட்டேன் அது அவர்கள் உண்மைகள் அவரை சுட்டு காட்டுது :) வந்து எடுத்துக்கோங்க .///
  கடவுளே வெயிட் வெயிட்.... குடிக்க முன்னம் இடது கையில லைவ் இன்சூரன்ஸ் ஐ எடுத்து வச்சிட்டு வலது கையால குடிங்கோ பிளீஸ்ஸ்.. சொன்னாக் கேளுங்கோ:)).. ஹையோ என்னையும் இழுத்து விட்டிட்டாவே.. கடவுளே இப்போ நானும் ஐ விட்னெஸ் ஆ போக வேண்டி வரப்போகுதே ஜாமீஈஈஈஈஈஈஈ:).


  ///அதிராவுக்கு முருங்கை கீரை சூப் ரெடியாகுது ஸோ டோன்ட் க்ரை டியர் :)///

  நோஓ நோஒ தங்கியூ:).. ட்றுத்தான் அழுதுகொண்டிருக்கிறார் இன்னும் ஆளைக் காணம்.. நீங்க இதை அவரிடமே குடுங்கோ.. நான் பொன்னாங்காணி வறை செய்யப்போறேனாக்கும்:)..

  ReplyDelete
  Replies
  1. ர்ர்ர்ர் :) நான் என்ன செய்தாலும் அதில் உங்களுக்கும் பாதி பங்கு ..நான் என்னோட உயிலில் எழுதி வச்சிட்டேன் ..உங்க சொத்தில் பாதி எனக்கு ..ஆனா விவரமா என் சொத்தை பொண்ணு பேறுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டேன் :))

   Delete
 13. //இன்று காலை வாக் போகும்போது ரோட்டோரம் ஒரு வாத்துக்குஞ்சு
  கணவர் தடுத்தும் கொண்டு வந்து வீட்டில் சின்ன பாத்திரத்தில் நீர்வைத்து அந்த வாத்து பாப்பாவை அதில் நீந்த வைத்தேன் :)//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மையாக்கும் என நினைச்சுட்டேன்ன்:)...

  ///எப்படி இருக்கு வாத்து பாப்பா :)///
  அஞ்சுவைப்போலவேஏஏஏ நல்லா நீந்துது:).

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹாங் :) நான் அடிக்கடி இப்படி சொல்வேன் ஆனாலும் எனக்கு ரியல் வாத்துக்குஞ்சு போலிருந்தது அதிரா ..எஸ் கலர் கூட என்னை மாதிரியே மஞ்சள் :) அதையும் சொல்லுங்களேன்

   Delete
 14. ///அடுத்தது உலக முழுதும் இருந்து பார்வையாளர்கள் என்னுடைய சமீபத்திய புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டையும் முருங்கை ரசத்தையும் மீண்டும் மீண்டும் வந்து ரசிக்கிறாங்க ..அவங்க விருப்பத்திற்கிணங்கி வாரம் ஒரு சமையல் குறிப்பை வழங்க இருக்கிறேன் ///

  எனக்காராவது சுட்டாறிய தண்ணி அடிங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

  https://lh3.googleusercontent.com/-nWC5cilVC50/V8ib4zDj2rI/AAAAAAAAAII/oI9Fz_I35OEo7fWGem_iU0WPSHa0F9OYgCLcB/s320/Cat%2BFainted.JPG

  ReplyDelete
  Replies
  1. ஹலோ குண்டு பூனை :) தண்ணி ஆறலை சுட சுட இருக்கு கெட்டிலோட எடுத்துக்கோங்க :)யூ ஜெலஸ் கேட்

   Delete
 15. முதலில் வாத்துக் குஞ்சு ரொம்ப அழகா இருக்கு க்யூட்டி!!!! பார்க்கும் போது மனதிற்கு என்ன சந்தோஷமாக இருக்கும் இல்லையா? சூப்பர்! வீடே ஏதோ நிறைந்தது போல இருக்கும். அங்கு வாத்து எல்லாம்வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாமோ? ஸ்பெஷல் பெர்மிஷன் எதுவும் வாங்க வேண்டாமோ? இங்கு வைல்ட் லைஃப் துறையின் அனுமதி வேண்டும்....ஆமை, அணில், வாத்து, குரங்கு, உடும்பு, இப்படியானவற்றை வீட்டில் வைத்துக் கொள்ள. ஒரு முறை மழைக்காலத்தில் அடையாரில் குடியிருந்த வீட்டில் பின்னாடி தண்ணீர் தேங்கியது அப்போது ஒரு ஆமை எப்படியோ வந்திருந்தது. ஆறு குளங்களில் இருக்கும் குளத்தாமை அப்புறம் அதை வீட்டிற்குள் வைத்து கேரட் கேபேஜ் போட்டால் அது சாப்பிடவில்லை. பயம் போலும். அப்புறம் கிண்டி பார்க்கில் கொண்டு கொடுத்துவிட்டோம். அங்கு கொண்டு கொடுத்ததும் அங்கு சுத்தம் செய்யும்பெண்மணி வீட்டிற்குள் ஆமை வரக் கூடாது கெட்டது நடக்கும். எனவே கோயிலில் விளக்கு ஏற்றச் சொன்னார்கள். மகன் என்னிடம் அம்மா அந்த ஆமைக்காகப் ப்ரேயர் பண்ணுவோம் என்றான்!!!!

  எஞ்சாய் ஏஞ்சல் வித் டக்லிங்க்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹையோ ஹையோ இன்னும் என்னை இதெல்லாம் பார்க்கும்படி வச்சிருக்கிறியே ஆண்டவாஆஆஆஆ:).. நம்ம கீதாவுக்கு ஒண்ணுமே புரியுதில்ல.. அஞ்சு போடும் சமையலில் இருந்து வாத்துக்குஞ்சுவரை எல்லாமே உண்மை என நம்ம்பி....:) இதில வேற என்னையும் இக்குறிப்பை செய்து பார்க்கட்டாம்ம் கர்ர்:).. நான் இன்னும் லைவ் இன்சூரன்ஸ் எடுக்கல்லியே கீதா:)...

   ஹையோ ஓடிப்போய் முட்ட ஒரு சுவர்கூடக் கிடைக்குதில்ல:).

   Delete
  2. ஹா ஹா கீதா :) அது யாரோ சின்னப்பிள்ளை போகும்போது ப்ராமில் இருந்து விழுத்திருக்கும்னு நினைக்கிறேன் :)அங்கேயே விட்டா எல்லாரும் அதை மிதிப்பாங்களேன்னு தூக்கிட்டு வந்தேன் அந்த குட்டி ரப்பர் வாத்தை

   Delete
  3. இங்கே வீட்டில் எல்லாரும் வளர்ப்பாங்க கீதா :) ஆனா கன்டரிஸைடில் ப்ராப்லம் இல்லை ..
   இப்போ ஆமை பற்றி ஒரு விஷயம் நினைவுக்கு வருது :)தாங்க்ஸ் ரிமைன்ட செஞ்சதுக்கு :)
   ஸோ ஸ்வீட் அம்மா போலவே பிள்ளை ..ஆமைக்கு ப்ரே செய்ரது சிலரால் மட்டுமே சாத்தியம் ..நானும்கோயிலில் eucharist கண்டில் கொளுத்தும்போது ஒரு காண்டில் எல்லா ஜீவராசிகளுக்கும் னு சொல்லி பெயர் செய்வேன்

   Delete
  4. கர்ர்ர்ர் பூனை :) கீதா என்னைப்போல நான்கூடதான் உங்களை இன்னும் குண்டு பூனைன்னு நினைச்சிட்டிருக்கேனே :)

   Delete
 16. என்னை மறந்துட்டீங்களே ஏஞ்சல் அவியல் கொடுக்க....சரி சரி மதுரை தமிழன் சகோவுக்கு எடுத்து வைச்சுருக்கீங்கல்ல அவர் இன்னும் வரல ஸோ எனக்கு அத அனுப்பிருங்க..ஹிஹிஹி..இனி என்ன செஞ்சாலும் (வெஜ் தான்...) எனக்கும் ஒரு பார்சல் சொல்லிப்புட்டேன்....ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா நான் ஒன்லி வெஜ் தான் :) கணவருக்கு மட்டுமே அவ்வப்போது நான் வெஜ் ..பொன்னும் என் பக்கம் வந்துட்டா :) அதுக்கு நானா பட்ட பாடு இருக்கே :) விரைவில் உங்களுக்கு ஸ்பெஷல் ரெசிப்பி வெளிவரும்

   Delete
  2. ஷ்ஹ்ஹ்ஹ :) அவர் லேப் RAT Dont reveal the secret :)

   Delete
 17. அதிரா ஒரு கம்ப்ளெயின்ட் உங்க பெட்டிக்கு..ஹஹஹ் உங்க செக்ரட்டரி ஏஞ்சல் எனக்கு அவியல் தரலை....எப்படி விட்டாங்கனு கேளுங்க...ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது என் செக்கரட்டறிக்கு நல்லாவே ட்ரெயினிங் குடுத்து வச்சிருக்கிறேன்:)... அதனால சமையல் ரேஸ்ட் பார்க்க எனில்.. அப்பாவி ஆண்களைத்தான் கூப்பிடுவா:)[பேப்பரைப் படிச்சுக்கொண்டே.. நல்லாயிருக்கு எனச் சொல்லி, வெள்ளைப் பேப்பரில் கை எழுத்தும் போட்டிடுவினம்:)..

   .. நம்மைக் கூப்பிட்டால்.. கண்ணால பார்த்தவுடனேயே கதை கந்தலாகிடும் என பிஸ்க்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு:).. வர வர எல்லோரும் ரொம்ப உசாராகிட்டே வர்றாங்க:)

   Delete
  2. ஆஹா ஹா :) கீதா அன்ட் துளசி அண்ணா :) உங்களுக்கு தனி ஸ்பெஷல் ரெசிப்பி ரெடி செய்றேன் விரைவில் :)

   Delete
  3. GARRRRRRRRRRRRRR FOR ATHIRAAV :)

   Delete
 18. ஏஞ்சல் பார்க்கவே அழகா இருக்கு!! அப்போ சூப்பர் டேஸ்ட் ஆ இருக்கும்!! இதே போலத்தான் நான் செய்வேன். சில சமயம் கேரளத்து ஸ்டைலும்...அவங்க தேங்காயோடு பூண்டும் கொஞ்சமா வைச்சு அரைப்பாங்க. சின்ன வெங்காயம் காயோடு போடவும் செய்வாங்க கொஞ்சம் அரைக்கவும் செய்வாங்க....அது ஒரு டேஸ்ட். என் மகனுக்கு இதுவும் பிடிக்கும் ஸோ அடிக்கடி செய்வேன். தயிர் கொஞ்சமா கடைசில சேர்த்து நல்லா பிரட்டி எடுத்துருவாங்க. காயோடு மஞ்சள்தூளும் போட்டு வேகவைப்பாங்க. எங்க வீட்டுலயும் நீங்க செஞ்சுருக்கறா மாதிரிதான் செய்வாங்க ஆனா மஞ்சள் தூள் போட்டு செய்வோம். தளர இருக்காது கேரளத்து அவியல் கெட்டியாக...இருக்கும்.

  நீங்க செஞ்ஞ்சுருக்கறது சூப்பரா இருக்கு. அதுவும் காய் கட் பண்ணி வைச்சுருக்கறது அழகா இருக்கு ஏஞ்சல்!!! உங்கள் ஆர்வம் டெடிக்கெஷன் எல்லாமே எல்லாத்துலயும் தெரியுது!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வெங்காயமா? போண்டா? ஹலோ கீதா... அதற்குப் பேர் அவியல் இல்லே... குருமா!

   Delete
  2. ஆவ் தாங்க்ஸ் கீதா ..வெங்காயம் பூண்டு இனிமே ட்ரைபன்றேன் .வெங்காயத்தையும் அரைக்கணுமா ?
   என் பொண்ணு இதை ஆசைப்பட்டு சாப்பிட காரணமே வெங்காயம் இல்லாததால்தான் :) நானா சூப்புக்குகூட ஆராய்ச்சி சேர்ப்பேன் அப்புறம் சன்னா மசாலாவுக்கு தக்காளி சேர்த்து அரைப்பேன் இல்லைனா அவ எடுத்து போடுவா வெங்காயத்தை ..ஓஹோ ,உங்கள் முறை வித்யாசம் அதையும் ட்ரை பண்றேன் நானா மஞ்சள் தூள் சேர்த்தேன் அனா கொஞ்சூண்டு ஒரு பின்ச்தான் தயிர் சேர்த்து நலன் கப்பில் போட்டு குடிக்கத்தான் :)

   Delete
  3. போண்டா இல்லை பூண்டா? ஐயோ கூகிள் கவுத்துடுச்சு! ஐ..யாங்...

   Delete
  4. ஆமால்ல பூண்டு வெங்காயம் சேர்த்தா மசாலா வாசனை வருமே ..நானும் இப்போதான் கேள்விப்படறேன் ..
   ஹாஹா :) இந்த கூகிள் எப்பவுமே என்னை புரட்டுது :) நானும் என்று எழுதி பப்லிஷ் பண்ணா நனையும் அப்படின்னு காட்டும் இல்லனா நானா நானா என்று காட்டும் சிலநேரம் விட்டிடுவேன் :)

   Delete
  5. எனக்கு போண்டா வும் சட்னியும் சாப்பிட ஆசையா இருக்கு ரத்னா கபே :)
   இங்கே செய்யலாம் ஒரு மூட்டைப்பூச்சிக்கு ஓரே கொளுத்தினமாதிரி ஒரு போண்டாக்கு ரொம்ப வேலை :)

   Delete
 19. மல்டிக்கு ஒரு செல்ல தட்டு ஏஞ்சல்!!! அது எங்களை மறந்துருச்சு!!! ஹஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. :)சம்மர் டைம் தானே இப்போ ஒரே அணில்கள் பறவைகள் சத்தத்துக்கு டச் பண்ணாம ஓடிருச்சு :)
   இல்லை கீதா நானா அஞ்சு விரல்களை காட்டினேன் எப்பவுமே ரெண்டு காட்டுறோம்னு :) ..அப்புறம் லேப் எலிகள் ட்ரை பண்ணட்டும்னு உங்கள விட்டுடுச்சோ தெரில மல்ட்டி

   Delete
 20. ஸ்ரீராம் பிஸி! அவரைத்தான் பாராட்டணும்...எல்லாரையும் கதை எழுத வைக்கிறாரு!! சமையல் செய்ய வைக்கிறாரு!!!

  ஏஞ்சல், அதிரா ஒரு மேடை போட்டுருவமா!!! ஸ்ரீராமுக்கு...ஆனா அவரு தலைய காட்டவே மாட்டாரு!! ஹஹஹ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா காதைக் கிட்டக் கொண்டுவாங்கோ ஒரு ரகசியம் சொல்றேன்:).. அண்டைக்கு சகோ ஸ்ரீராம் புளொக்கைத் திறந்தனா.. திரு ஜீவி அவர்களின் படம் போட்டிருந்துதா... நான் அதிலயே தடாரென மயங்கி கீழே விழுந்திட்டேன்ன் இவர்தான் சகோ ஸ்ரீராம் ஆக்கும் என:)...
   ஹையோ ஹையோ இப்போவெல்லாம் அடிக்கடி நாக்குக்கீழ குளிசை வைக்கும் நிலைமைக்கு ஆளாகிடுறேன்:) இந்த புளொக் போஸ்ட்டுகளால்:). ஹா ஹா ஹா.

   Delete
  2. தலையைக் காமிச்சா மொட்டை அடிச்சுடுவாங்களேன்னு ஒரு பயம் தேன்!

   Delete
  3. // இவர்தான் சகோ ஸ்ரீராம் ஆக்கும் என:)..//

   Grrrrrrrr...!

   Delete
  4. ஹாஹா :) ஆமாம் கீதா ஸ்ரீராம்குரல் மட்டும் கேட்டுட்டோம் :) சீக்கிரமா ஒரு குறும்படம் எடுத்து அவரை முகத்தையும் காட்ட வச்சிடுவோம் :)
   அப்படி இல்லைனா எங்க சமையல் குறிப்புகளை புக்கா வெளியிட்டு அவரை தலைமை தாங்க வச்சிடுவோம் .

   Delete
  5. ஹாஹா அதிரா எப்பவுமே அவசரம் ..இந்த அழகில் என்னை அடிக்கடி குறை மாச பாப்பா என்று சொல்றது :) நீங்கதான் அவசர பாப்பா :)

   Delete
  6. @sriram இதுக்குதான் ஒரு தொப்பி கண்ணாடி போட்ட படத்தையாவது போட்டுடுங்க இல்லைனா அதிரா பார்க்கிறவங்களையெல்லாம் ஸ்ரீராமனு கன்பியூஸ் ஆவாங்க

   Delete
  7. ////AngelinApril 9, 2017 at 2:47 PM
   @sriram இதுக்குதான் ஒரு தொப்பி கண்ணாடி போட்ட படத்தையாவது போட்டுடுங்க இல்லைனா அதிரா பார்க்கிறவங்களையெல்லாம் ஸ்ரீராமனு கன்பியூஸ் ஆவாங்க /////

   அப்போ ஸ்ரீராம் , பவர்ஸ்டார் மாதிரி இருப்பார் எனச் சொல்ல வாறீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... சகோ ஸ்ரீராமின் நித்திரை போச்சே அஞ்சுவால:) எதுக்கு அவரில இவ்ளோ கோபம் அஞ்சு:).. தலைசுத்துற அவியலைக் கொடுக்கிறீங்க.. பவர்ஸ்டார் என்றீங்க:)... .

   ஊசிக்குறிப்பு:
   நான் மம்முட்டி ரேஞ்ல நினைச்சு வச்சிருக்கிறேன்:).. ஹா ஹா ஹா இனிமேல் இப்பக்கம் தலை வச்சும் படுக்க மாட்டேன்ன் ஜாமீஈஈஈஈஈஈஈ.. நாங்க அந்தாட்டிக்கா போறோம்ம்:)

   Delete
  8. கர்ர்ர்ர் :) இல்லை உங்களுக்கு எப்பவும் பவர் ஸ்டார் நினைப்புதான் :) ஹாஹா :)
   ஸ்ரீராம் ஹாஹா மம்முட்டியா நான் மோகன்லால் மாதிரின்னு சொல்ல நினைச்சேன் ஸ்ரீராம் அடிக்க வற்ரற உங்களை ஓடிடுங்க அதிரா :)

   Delete
 21. சமையல் குறிப்புக்கு ரசிகர்கள் நிறையவே உண்டு. புத்தகக் கண்காட்சிகளில் பொன்னியின் செல்வன்களுக்கு இணையாக அடுத்து அதிகம் விற்பனை ஆகும் புத்தகம் சமையல் புத்தகம்தான் தெரியுமோ!

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான், உலகில் திடீர்ப் பணக்காரர் ஆவோரும் இந்த சாப்பாட்டுக்கடை ஆரம்பிப்போர்தான்... எந்தக் காலத்திலும் இதுக்கு குறையிருக்காது.

   Delete
  2. தாங்க்ஸ் ஸ்ரீராம் :) ஹாஹா :) ஸ்கொட்லாண்டில் அதிரா பவன் லண்டனில் அஞ்சுபவன் நாங்க துவங்கறோம் :)

   Delete
 22. புதுசு புதுசாக முயற்சி செய்தால் வீட்டில் உள்ளவர்கள் நம்மைச் சற்றே பீதியுடன் பார்க்கும் சாத்தியக்கூறும் உண்டு! கொஞ்ச காலம் சொத்திப்புகளுக்குப் பின் ஒரு நிலைக்கு வருவோம். அப்போது "பரவாயில்லை.. இப்படி புதுசாக இவன் முயற்சிப்பது அவ்வளவு மோசமாக இருக்காது" என்கிற நம்பிக்கை வீட்டில் உள்ளவர்களுக்கு வந்தபின் பிரச்னை இருக்காது. அப்படி ஒரு நம்பிக்கையை வரவைக்கணும்!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) எங்க வீட்டில் ஆல்வேஸ் சோதனை தான் :) அந்த சயின்டிஸ்ட் மட்டும் ஒரே ஆள் லேப் ராட்ஸ் ரெண்டு பேர் .பல வருஷமா இதே தொடருது :)

   they have to trust me :)

   Delete
 23. நாங்கள் அவியலில் கோவைக்காய், முருங்கை போடமாட்டோம். மாங்காய் கூடப் போடமாட்டோம். இது கேரளா ஸ்டைலாக இருக்கலாம். போலவே சீரகம் சேர்க்க மாட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. ஆவ் அப்படியா அப்ப உங்க வீட்டு ரெசிப்பி போடுங்க எங்கள் ப்லாகில் :)
   அவியலில் விதம் விதமா இருக்கும் போலிருக்கே :)

   Delete
  2. 'நாங்கள் கொஞ்சம் புளி சேர்ப்போம். அப்படி இல்லைனா, மாங்காய் போடலாம். புளிப்பு டேஸ்ட் அவியலுக்கு நல்லா இருக்கும் (ஏன்னா.. அவியல், சாதம் மட்டும்தான் சாப்பிடுவோம். தேவைனா, அப்பளாம்). அவியல்ல, ஹோட்டல்ல, முருங்கை சேர்ப்பார்கள். அதுல பிரச்சனை, முருங்கையைத் தூக்கிப்போட்டுட்டு சாப்பிடணும். பூண்டு, வெங்காயம் இதை அவியல்ல போட்டுக் கேள்விப்பட்டதில்லை. நல்லா இருக்கும்னு தோணலை. ஸ்ரீராம் சொன்னதுபோல், சீரகம், தேங்காய், பச்சை மிளகாயோட சேர்க்கறதில்லை. அதேமாதிரி, கருணைக்கிழங்கு சேர்க்கறதில்லை. சேனை சேர்க்கலாம் (குறைந்த அளவு). சேனை, தொண்டை அரிக்காமல் இருக்கணும். இல்லைனா மொத்த அவியலே ஒரு மாதிரி ஆகிடும்.

   நீங்கள் எழுதியிருக்கும் அளவு சரியில்லை. 1 கப் என்பது ஒவ்வொரு காய்க்கும் போட்டீங்கன்னா, அவியல் ரொம்ப ஜாஸ்தியாயிடும். என்ன காய் போட்டாலும், ஒரு பாத்திர அளவில் மொத்தம் 3/4 பகுதிதான் என்று வைத்துக்கொண்டால்தான் கடைசில, அவியல் அளவு சரியா இருக்கும்.

   Delete
  3. நெல்லைத்தமிழன் சகோ ஒரே ஒரு பெரிய சந்தேகம் வந்திருச்சு கருணைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் ஒண்ணுதானே ??

   நீங்க இந்த அவியல் குறிப்பு போட்டிருக்கீங்களா எங்கள் ப்லாகில் போடலைன்னா சீக்கிரம் போடுங்க எனக்கு உங்கள் செய்முறை ஆசையா இருக்கு சாப்பிட்டு பார்க்க

   நான் கப் என்றது குட்டியா வெள்ளை கலரில் அரிசி போடும் கப் அளவு ..ஆனா நிறய்ய காய்கள் வந்தது வெட்டி சேர்க்கும்போது அதுக்காக தேங்காய் அளவையும் தயிர் அளவையும் கூட்டி விட்டேன் ..

   Delete
 24. //ஒன்று ஸ்ரீராமுக்கு ;;//

  ஆஹா.. நன்றி. தன்யனானேன்! சுவையோ சுவை. அவியல் செய்த உடனே சாப்பிட்டால் ஒரு சுவை. கொஞ்சம் (கொஞ்சம்தான். நிறைய இல்லை) புளித்த உடன் சாப்பிட்டால் இன்னொரு சுவை! பெரும்பாலும் அவையளை சாதம் சாப்பிடும்போது சாப்பிடுவதைவிட தனியாக கப்பில் வைத்து அவ்வப்போது சாப்பிட்டு விடுவேனாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. high 5 :) எனக்கும் இந்த குழம்பு ரசம் அவியல் மோர்க்குழம்பு குடிக்கிற பழக்கம் இருக்கு :)
   சுட சுட ஆஹா சூப்பர் டேஸ்ட் .இங்கே தயிர் நம்மூர் மாதிரி கிடையாதது ஆனாலும் அடஜஸ்ட் செஞ்சி குடிக்கலாம்

   Delete
 25. அவியலில் Zucchini or courgette இதன் பங்கு என்ன? என்ன அது?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) நானும் ஒரு ரெண்டு மாசமாதான இதை சேர்க்க துவங்கினேன் முந்தி செய்யும்போது zucchini சேர்க்கல்ல ..நம்ம துளசி அக்கா தான முகப்புத்தகத்தில் சொன்னாங்க சுக்கினி அவியலில் சேர்க்கலாம்னு ..இதோட டேஸ்ட் வெள்ளரிக்காய் மாதிரி ஆனா அதைவிட குழையும் தன்மை குறைவு ..லண்டன் ஸ்டைலுக்கு லண்டன் வெஜிடபிள்

   Delete
  2. https://en.wikipedia.org/wiki/Zucchini

   பரங்கிக்காய் வெள்ளரி பூசணி மூணும் சேர்த்த கலவை டேஸ்ட்டா இருக்கும்

   Delete
 26. அடுத்தமுறை எங்களுக்கு ஒரு bowl அவியல் Parcel...(!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி :) நிச்சயம் பெரிய பௌல் உங்களுக்கு அனுப்பிடறேன் ..
   நம்ம சமையல்பூ உலகம்ரா பரவணும் :) சாமீ எல்லாருக்கும் நேர்த்திக்கடன் என் சார்பில் அதிரா மருத மலையை உருண்டு வரப்போறாங்களாம் ..ப்ரண்ட்ஷிப்ன்னா இப்படி இருக்கணும்

   Delete
 27. ஹலோ போன வாரம் நான் செஞ்ச அவியலை யாரோ என் வீட்டில் எட்டி பார்த்து அதை இங்கே பதிவாக போட்டு இருக்காங்க என்ன நான் பண்ணும் போது தயிர் சேர்க்க மாட்டேன் ஆனால் என் மனைவி செய்யும் போது தயிர் சேப்பா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா :) இதென்ன வம்பா போச்சு ..நான் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் அவியல் செஞ்சிடுவேன் குடும்பத்துக்கு அப்புறம் எனக்கு கிழங்குகள் சேர்க்காம தனியா செய்வேன் சூப் போல குடிக்க ..தயிர் சேர்க்கலைன்னா டேஸ்டியா இருக்குமா ? சிலர் ஆம்சூர் எனக்கு தயிரில் வெஜ்ஜிஸ் மிதந்தாதான் ரொம்ப பிடிக்கும் .. திக் கன்சிஸ்டன்சி வருமில்ல அது ரசத்தோட நல்ல இருக்கும் அதையும் ட்ரை செய்றேன்

   Delete
 28. நல்லா சமைச்சு குழந்தைக்கு போடுங்க இன்னும் சில வருஷங்கள்தான் அதன் பின் அமெரிக்கா வந்து பிட்சா, பாஸ்தா பிரெட்ட்டுன்னு குழந்தை சாப்பிடும் ஒரு வேளை என் வீட்டு பக்கம் வந்து படித்தா நல்ல சாப்பாடு சாப்பிட வாய்ப்புக்கள் உண்டு

  ReplyDelete
  Replies
  1. டிவில ஒரு ப்ரோக்ராம் பார்ப்பா பொண்ணு அதில் காட்டும் pizza பர்கர் எல்லாம் மெகா சைசில் இருக்கும் எனக்கே பார்க்க பயங்கரமா இருக்கும் எப்படி இதெல்லாம் சாப்பிடறாங்க ..அடிக்கடி சொல்வா :) இங்கே பாருங்கம்மா என்று காட்டி சிரிப்பா :) ஆனா அவளுக்கு வீட்டு சாப்பாடுதான் ரொம்ப பிடிக்கும் ரசம் தான் எப்பவுமே அவள் விருப்பம் ..
   சொல்லிடறேன் அவள்கிட்ட :) ஆனா சப்பாத்தி உருட்டியே நீங்க காலி :) அவ்ளோ ஆசை சாப்பிடுவா ..நானா இப்போ கொஞ்சம் கட்டுப்படுத்தி வச்சிருக்கேன்

   Delete
 29. அது என்ன நீங்களும் சரி அதிராவும் சரி நான் வராதா நேரமா பார்த்து பதிவுகள் போடுறீங்க

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா :) அப்படி இல்லை உண்மைல எனக்கு சாட்டர்டே போஸ்ட் போட யோசிப்பேன் ஏனென்றால் வீகென்ட் கணினி பக்கம் வருவது குறைவு அது சூடு ஆறுமுன் போட்டுடணும்னு நேற்று போஸ்ட் போட்டேன் :)

   Delete
 30. அருமை
  சாப்பிட வரலாம்னா டிக்கெட் செலவே அரை லகரம் வரும் போல ...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க சகோ மது ..அதுக்கென்ன அங்கே பாருங்க கதவுக்கு வெளில DHL பார்சல் சர்வீஸ் நிக்கிறாங்க ..நானா உங்க பின்னூட்டம் பார்த்ததும் அனுப்பிட்டேன் டோர் டெலிவரி :)

   Delete
 31. ஆஹா...சமையல் மகாராணிக்கு வாழ்த்துக்கள்...

  உங்கள் சேவை இந்த உலகத்துக்கு தேவை...

  ம்ம்ம்...my all time favorite...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு :) ஹை 5 ..உங்க பிளாக்ல உங்க செய்முறை போடுங்கப்பா ..எனக்கும் வித்யாசமா செஞ்சு பார்க்கா ஆசை இருக்கு
   எனக்கு ரொம்ப பிடிக்கும் அவியல் ..
   //சேவை சமையல் மகாராணி //அவ்வ் :) மெதுவா சொல்லுங்க அனு அங்கே அதிரா நிலமதிர ஓடி வராங்க :) எதுக்கும் ஒளிஞ்சிக்கோங்க ரெண்டு நாளைக்கு

   Delete
 32. Hi friends church poyittu vanthu reply tharen ..😇😇😇😇😇😄😄😄

  ReplyDelete
 33. சிலர் அவியலில் தயிருக்குப் பதில் புளி சேர்ப்பார்கள் எனக்கு இந்த அவியல் என்றாலேயே அலர்ஜி யாகும் நேரம் ஓணம் சமயம் ஓணம் முடிந்து எந்த கேரள நண்பர் வீட்டுக்குப் போனாலும் அவியல் துரத்தும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் :) உங்களுக்கும் அவியல் பிடிக்காதா :) நான் உணவுகளை டைம்டேபிள்படி தான் செய்வேன் வாரம் ஒரு நாள் அவியல் ,சாம்பார் வத்த குழம்பு ரசம் மோர் அப்புறம் ப்ரைட் ரைஸ் இதில் ஏதாவதொன்னு சன்டேஸ் மட்டும் ரிப்பீட் ஆகும் ..இங்குள்ள பிள்ளைங்கள சாப்பிட வைக்க ரொம்ப கஷ்டம் ஆனா எங்க பொண்ணு இப்படி குடுத்தா நல்ல சாப்பிடுவா நிறைய காய்கறிகளும் உடம்புக்கு நலதின்னு செய்றேன் நானும் ..அவியலில் ஆம்சூர் பவுடர் போடுவாங்க புளி இப்போதான் கேள்விப்படறேன் ..எனக்கு தயிர் மோர் சேர்த்தா ரொம்ப பிடிக்கும் அவியலில் கிழங்கு சேர்க்காம எனக்கு தனியாவும் செய்வேன் :)

   Delete
 34. சூப்பர்ர் ஏஞ்சல்...சுகினி சேர்த்து செய்துருக்கீங்க,கோவைக்காய் சுவை போலவே தான் இருக்கும்.இப்போ எனக்கு அவியல் சாப்பிட ஆசையா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. அஆவ் வாங்க மேனகா :) என் லண்டன் ஸ்டைல் அவியல் உங்களை கூட்டிட்டு வந்திருச்சே :)
   ஆமாப்பா துளசி அக்கா சொல்லித்தான் எனக்கும் தெரியும் அவியலில் காரட் கோவைக்கா அப்புறம் சுக்கினி சுவை நலல இருக்கு ..இதோ பார்சல் அனுப்பறேன் :)

   Delete
 35. அவியல் செய்முறை நல்லா இருக்கு ஏஞ்சல், ஆம்சூர் பவுடரே மாங்காய் சேர்த்ததும் தானே?
  அவியலுக்கு தயிர் சேர்த்து என்ன எந்த காய்க்கும் தயிர் சேர்த்து சமைத்ததில்லை. நான் முயற்சித்து பார்க்கின்றேன். தயிர் சேர்த்தாலே நீர்த்தன்மை ஆகி விடும் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஷா :) ஆமாம் ஆம்சுர் பவுடர் காயவைத்த மாங்காய்தானே அதையும் பயன்படுத்தலாம் ஆனா ப்ரெஷ் டேஸ்ட் எனக்கு பிடிக்கும்பா அதான் மாங்காயை சேர்த்தேன்

   Delete
  2. நல்ல திக் யோகர்ட் கடைசீல சேர்த்து பிரட்டினா நீர்க்காதுப்பா ..என் மகளுக்கு சாதத்தோட பிசைந்து சாப்பிட தளர இருந்தாதான் பிடிக்கும் அதோட எனக்கும் சூப் மாதிரி குடிக்க பிடிக்கும் :)
   நீங்க யோகர்டை ஸ்ரீகண்ட் செயறமாதிரி துணில போட்டு வடிகட்டி செய்யுங்க அப்போ நீர்த்தன்மை குறைவா வரும்

   Delete
  3. கடவுளே என்னானது தெரில புது புது சமையலெல்லாம் பேரெல்லாம்அ ம்னீசியால இருந்து எழுந்ததும் நினைவு வருமே அப்படி தனா வருது எனக்கு :))

   Delete
 36. அவித்த உணவுகளுகள் தான் உடலுக்கும் ஆரோக்கியம் என்று இங்க ஒரு எண்ணக்கரு உண்டு சமையல் நேரமும் சிக்கனம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ஆமாம் நீராவியில் அவித்த உணவுகள் மிக நல்லது உடலுக்கு ..எந்த தீங்கும் வராது

   Delete
 37. வாத்து குஞ்சு இன்னும் அழகாய் இருக்கு!

  ReplyDelete
 38. என் பதிவு எரிசேரி மனைவி ஸ்டைலுக்கு அதிரா வந்தாயிற்று. நீங்கள் இன்னும் வரவில்லை

  ReplyDelete
  Replies
  1. எரிசேரி ? எந்த வலையில் ..எனக்கு அப்டேட் காட்டலையே ..வருகிறேன் இதோ

   Delete
 39. அருமையான அவியல். காய் வெட்டி வைத்து இருப்பதே அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..அவியல் எனக்கு மிகவும் பிடிக்கும் ..மிக்க நன்றிக்கா :)

   Delete
 40. ஆ...அஞ்சு..ஞாயிறுகளில்தான் நான் நீங்க செய்வதுபோல் சாம்பார்,ர்சம்,அவியல் கூட்டு,பொரியல் எல்லாம் செய்வது. அன்றுமட்டுமே சாதம். நானும் இப்படியேதான் செய்வேன் (உங்க செய்முறையேதான்)அஞ்சு.இந்த ஞாயிறு அவியல், பருப்பு ரசம் செய்தேன். என்ன நான் சுகினி,கோவைக்காய் சேர்க்கல. நெக்ஸ்ட் டைம் சேர்த்து செய்யனும். மாங்காய்தான் போட்டேன்.
  தே.எண்ணெயில் தாளிதம். சூப்பரா இருந்தது. குறிப்புகள் போடுங்க அஞ்சு. நீங்க செய்வது ஈசியா இருக்கும் செய்ய. இன்று உங்க ரெசிப்பி கோதுமை தோசை.
  அக்கா சொன்ன மாதிரி காய்கறி வெட்டியது அழகா இருக்கு. நானும் இப்படி ஒரே அளவா வெட்டப்பழகீட்டன். பார்க்க அழகா இருக்கும்.
  (ஈஸ்டர்,நியூஇயர் இம்முறை லண்டனில் சனிதான் வந்தோம். அதுதான் லேட்.)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹாவ் மீ பீலிங் ஷை :) நீங்களும் அவியல் செய்திங்களா வெறி குட் :)
   அங்கே தேம்ஸ் கரையோரம் யாரோ காலால் மண்ணை கிளரும்போலிருக்கே :) அதிராவை எங்காவது பார்த்திங்களா :)

   சுக்கினி கோவக்காய் சேருங்க நல்லா இருக்கு ..நான் அடிக்கடி உங்களுக்காகவே ஸ்பெஷல் ரெசிப்பீஸ் போடறேன் :)
   எப்போ நீங்க பிளாக் வீட்டு கதவை திறக்க உத்தேசம் ?

   Delete