அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/6/17

நேர்காணல்/ நேர்முகத்தேர்வு ...ஒரு ஃப்ளாஷ்பேக் ..
நேர்காணல் ஒரு ஃப்ளாஷ்பேக்  ..


                                                                                                     சில வருடம் முன்பு   லண்டனில் ஒரு  ரெஸ்டாரண்டில் மதிய உணவு சாப்பிடும்போது அங்குள்ள தொலைக்காட்சியில் எதோ ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .பெயர் தெரியவில்லை ..அதில்  கதாநாயகன் ப்ரிலிமினரி முடிந்து  IAS இன்டெர்வியூவுக்கு செல்கிறார் ..நேர்காணலின்போது அதிகாரி ஒரு பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டுவிட்டு இன்டெர்வியூ வந்த கதாநாயகனை அந்த பேனாவை  எடுக்க சொல்வார்
உடனே கதாநாயகன் மேஜையில் உள்ள  அழைப்பு மணியை அழுத்தி வெளியில் உள்ள  பணியாளரை அழைத்து அந்த பேனாவை  எடுக்க வைப்பார்  ....நீங்களே எடுத்திருக்கலாமே என அந்த அதிகாரி கேட்டதற்கு இவர் அதற்கென்று பணியாளர் இருக்கும்போது நான் செய்ய தேவையில்லை என்று  பதில் சொல்வார் .(இந்த சம்பவம் பற்றி ஏற்கனவே முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கேன் இங்கு மீள் பதிவு அங்கே வாசிக்காதோருக்கு )
ஒரு நிமிடம் என்னை அந்த இடத்தில இருத்தி நினைத்து பார்த்தேன் ..என்னை அங்கு வைத்து பார்க்க காரணம் நான் ஒரு காலத்தில் UPSC கோச்சிங் வகுப்புக்கெல்லாம் சென்றேன் ஆனா ஜஸ்ட் மிஸ்ட் :)   நேர்மையான மிக  மிக தைரியமான பெண் ஐ ஏ எஸ்  அதிகாரி கிடைக்க ..இந்திய திருநாட்டுக்கு கொடுத்து வைக்கல ..நான் அந்த இன்டெர்வியூவில் இருந்திருந்தா நிச்சயம் எழுந்து சென்று அந்த பேனாவை எடுத்து   பயபக்தியுடன்  அதிகாரி கையில் எடுத்து கொடுத்திருப்பேன் :)) நாம யாரு உலக மகா அறிவாளியாச்சே என் அருமை பெருமைலாம் பூனைக்கு நல்லாவே தெரியும் :) யாரவது அட்ரஸ் கேட்டாலே அவங்களை அட்ரஸுக்கே கைப்பிடுச்சி கொண்டு விடுவோமே நாங்கல்லாம் :)..நான் மட்டுமில்லை பலர் மனதுக்குள் திட்டினாலும் பேனாவை எடுத்து கொடுத்திருப்பார்கள்  அந்த நேரத்தில் இது நாம் செய்ய வேண்டிய வேலை தானா என  சமயோசிதமாக யோசிக்க நேரமிருக்குமா என்று எனக்கும் தோன்றவில்லை.சில கேள்விகள் நேர்காணலில் கேட்பார்கள் .. trickish  கேள்விகள் போலத்தான் இதுவும் .
Question: I have three apples. If you take away two from me, how many do you have?
Answer:    2. ..
Question: How many sides does a circle have?
Answer:    Two. An inside and an outside

இதைத்தான் நேர்முகத்தேர்வுகளில் உளவியல் ரீதியாக ஒரு ias அதிகாரியாகப்போறவர் எப்படி பதில்  தருகிறார் எப்படி சில சம்பவங்களை எதிர்நோக்குகிறார் போன்ற ட்ரெயினிங் எல்லாம் தந்து உருவாக்குகிறார்கள் என  நினைக்கிறேன் .. ..
முன்பு  எம்பிளாய்மென்ட் நியூஸ் என்றொரு பத்திரிகை செவ்வாய்தோறும் வரும் .அதில் சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலைகளுக்கு அப்புறம் இந்த CSIR UGC தேர்வுகள் பற்றிய விவரங்கள் அதில் இருக்கும் அதெல்லாத்துக்கும் கூட விடாம விண்ணப்பித்தேன் ..அதில் வரும் வேலைகள் அனைத்திற்கும் ஹிந்தி தெரிந்திருக்கணும் அதெல்லாம் யாருக்கு  தோணுச்சு மனம்  போக்கில் விண்ணப்பம்  செய்து வைப்பேன். zoological சர்வே of இண்டியாவில் ஒரு வேலை ரிசர்ச் அசிஸ்டன்ட் மாதிரி படிச்சிட்டே வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தேன்  அது கரடிகள் பற்றிய படிப்பாம் .யாரும் சிரிக்க கூடாது சொல்லிட்டேன்.. அதற்கு மரம் ஏறி மரத்துக்கு மேலே இரவு நேரங்களில் கரடிகளை அபசர்வ் செய்யணுமாம் .நல்லவேளை அந்த கரடிகள் தப்பிச்சு எனக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைக்கலை ...

         .இப்படி சேலத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்து வைக்க அதற்கான நேர்முக தேர்வு அண்ணாநகரில் நடைபெற்றது ..அந்த நேர்முகத்தேர்வு நடந்த இடம் ஒரு மல்ட்டி STOREY கட்டிடம் ..அப்போதுதான் பாதி கட்டிட வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது  கிரவுண்ட் தளத்தில் தச்சு வேலை செய்து கொண்டிருந்தவரை இன்டெர்வியூ நடக்கும் பிளாக் பெயர் சொல்லி ,எங்கிருக்கு என்றேன் அவர் 6 ஆம் தளத்தில்..இதோ லிப்ட் இருக்கு அதில் போங்க என்றார் .நானும் உள் நுழைந்து 6 ஆம்  தள பொத்தானை அமுக்கியாச்சி 2 தளங்கள் சென்றதும் எனக்கு மயக்கம் வரும் போலாகி விட்டது என்னவென்றால் லிப்ட் இரண்டு தளம் தாண்டியதும் அதன் மேலுள்ள அறைகளின் சுவர்கள் முற்றிலும்  கட்டி முடிக்கப்படாததால் காலி  தளங்கள் வழியே செல்லும்போது வெளிப்பக்கம் அப்படியே தெரியுது ஏணியில் ஏறும்போது சுற்றிலும் தெரியுமே அதுபோல .அப்படியும் சமாளித்து 6 ஆம் தளம் சென்று இன்டெர்வியூவை முடித்து வெற்றிகரமாக திரும்பினேன் ....முக்கியமான விஷயம் வரும் போது படிகள் வழியே நடந்து வந்தேன் 6 தளங்களையும் கடந்து ..அந்த லிப்ட் கொத்தனார் மற்றும் என்ஜினீயர்கள் மட்டும் கட்டுமானம் முடியுமட்டும் பயன்படுத்துவதாம் அனைத்து தளத்தின் படிக்கட்டுகளும் மட்டும் கட்டி முடிந்திருக்கு ..பிறகு  அந்த  வேலை கிடைத்தும் போக முடியாத சூழ்நிலை ..இதெல்லாம் இப்போ நினைவுக்கு வர காரணம் ஜிஎம்பி ஐயா அவர்களின் நேர்காணல் பதிவு அப்புறம் நேற்று மகள் திட்டவட்டமாக சொல்லிட்டா அம்மா நீங்க யூனிவெர்சிட்டியில் சேர்ந்து உங்கள் படிப்பை தொடரணும் ,நான் இன்னும் இரண்டு வருடங்களில் வெளிநாடு படிக்க  சென்றுவிடுவேன் அதனால் வீட்ல உக்காந்து லேசியா இருக்காம மேலே படிக்க போங்க :)
அது மட்டுமில்லாம ஆன்லைனில் நிறைய recap கோர்சஸ் எடுத்து கொடுத்திருக்கா மகள் ..இங்கே வெளிநாட்டில் ஒரு வசதி உண்டு படிக்க வயது ஒரு தடையில்லை..எதையும் பாஸிட்டிவா யோசிச்சு அணுகும்போது வெற்றி வாய்ப்பு கிடைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் .. ஆகவே ..என்னைப்பற்றிய  அவள் கனவு மெய்ப்படுமோ :) லெட்ஸ் வெயிட் அன்ட் ஸீ :))


                                                           **********************
112 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ் நான் வந்துட்டேன்ன்ன்ன் திரும்ப வந்துட்டேன்ன்ன்.. துக்கம்.. :) ஹா ஹா ஹா... ரஜனி அங்கிள் ஸ்டைல்ல டெல்லிப் பார்த்தேன்.. இருங்கோ படிச்சிட்டுத்தான் கொமெண்ட்ஸ் போடுவேன்ன்... இது சாப்பிட முன் கைகழுவுறமாதிரி ஒரு கொமெண்ட்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நான் எப்பவும்போலா ரிவர்ஸ் ஆர்டார்ல வந்தேன் இப்போதான் முதல் கமெண்ட் :)ரிப்லி தரேன் வெல்கம் மியாவ் :)


   இன்னது ரஜினி அங்கிளா :) இருங்க அவங்க ரசிகர்ஸ் கிட்ட போட்டு கொடுக்கறேன்

   Delete
 2. ///// சில வருடம் முன்பு லண்டனில் ஒரு ரெஸ்டாரண்டில் மதிய உணவு சாப்பிடும்போது அங்குள்ள தொலைக்காட்சியில் எதோ ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .பெயர் தெரியவில்லை ..அதில் கதாநாயகன் ப்ரிலிமினரி முடிந்து IAS இன்டெர்வியூவுக்கு செல்கிறார் ..நேர்காணலின்போது அதிகாரி ஒரு பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டுவிட்டு இன்டெர்வியூ வந்த கதாநாயகனை அந்த பேனாவை எடுக்க சொல்வார்/////

  ஹா ஹா ஹா அது ஐ ஏ எஸ் ஆ? நான் ஐ பி எஸ் என கீதாவுக்கு கொமெண்ட்டில் குடுத்திட்டேன் போல இருக்கே.. சரி விடுங்கோ...

  இது முன்பு எழுதி வெளியிட்ட போஸ்ட்போல நினைவு வருதே அஞ்சு? மீள் பதிவோ? இதனை முன்பு படிச்சிருக்கிறேன் இங்கு.

  ReplyDelete
  Replies
  1. வெறி குட் :) இந்த சினிமா சம்பவம் இங்கே போடலை அங்கே முகப்புத்தகத்தில் போட்டது ..உங்களுக்கும் நினைவு சக்தி இருக்கே ..வாழைத்தண்டு சாப்பிடத்தாலியா

   Delete
  2. haahaa :) நீங்க கீதாவுக்கு ஐபிஎஸ் என்று குடுத்தப்போ தான் சட்டுனு இந்த ias =நினைவை இங்கு இணைத்தேன்

   Delete
 3. ////நேர்மையான மிக மிக தைரியமான பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிடைக்க ..இந்திய திருநாட்டுக்கு கொடுத்து வைக்கல///

  அ அ அ அ அ அ ஸ்ஸ்ஸ்பிரின் இருந்தா ஒண்டு தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்... அந்த நாக்குக்கு கீழ வைக்கும் குளிசை எங்கே?:) ஹையோ நேக்கு ஹார்ட் அட்டாக் வந்து 5 நிமிசமானதுபோலவே ஒரு பீலிங்ஸூ:)... மசமசவெண்டு பார்த்துக் கொண்டிருக்காமல் 999 க்கு அடிச்சு, முதல்ல அதிராவைக் காப்பாத்துங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)..... அந்த இந்திய திருநாட்டை ஒரு ஐபிஎஸ் இடம் இருந்து காப்பாற்றியதைப்போல:)..

  ReplyDelete
  Replies
  1. அதுமட்டும் கனவிலும் நடக்காது மேடம் மியாவ் ..உங்களை வலுக்கட்டாயமா பிளாக் பக்கம் வரவழைச்சதே இந்த காரணத்துக்காகத்தான் :)))))))))))) நாளைக்கு அடுத்த போஸ்டும் ரெடி

   Delete
  2. ஹையோ எனக்கு இப்பூடி ஆகும் எனத் தெரிஞ்சிருந்தா:) ஆரோட கைல கால்ல விழுந்தாவது உங்களை ஐபிஎஸ் ஆக்கிட்டு, இங்கின நாங்க நிம்மதியா இருந்திருப்போமே:)..

   Delete
  3. சேசே வெறி பேட் பீப்பிள் :) என்னை துரத்தி விரட்டறதில் என்னா ஆனந்தம்

   Delete
 4. //// நாம யாரு உலக மகா அறிவாளியாச்சே என் அருமை பெருமைலாம் பூனைக்கு நல்லாவே தெரியும் :) ///
  ஹையோ நான் ஒரு அப்பாஆஆஆஆஆவி:) ச்சும்மா இருக்கிற அப்பாவியை இப்பூடிக் கோத்து விடுதே இந்த பிஸ்ஸூஊஊஊஉ:)... ஆமா ஆமா அருமை பெருமை எல்லாம் அந்தாட்டிக்கால இருந்து அமேரிக்காவரை தெரியுமே:)..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :)அதை சொல்லியாகணுமே ரஷ்யா முதல் லிதுவேனியா மால்ட்டா லாத்வியா PORTUGAL ஸ்பெயின் தாய்லாந்து உக்ரேயின் கிரீஸ் இங்கிருந்தெல்லாம் பிளாக் வாசிக்கப்படுது தெரியுமா

   Delete
  2. ஹா ஹா ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஏன் கோபு அண்ணனை விட்டீங்க... அவர்தான் எப்போ என் காலை வாரலாம் என கண்ணில விளக்கெண்ணெய் விட்டிட்டு உலாவுறார்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சு அம்முலு வின் கார்டினில் வீசிடுங்கோ:)

   Delete
  3. நான் தோட்டத்தில் தான் வீசினேன் ஆனாலும் ஒரு பறவை அதை பிடிச்சி எடுத்திட்டுபோய் கோபு அண்ணா வீட்டில அதுவும் அவர் மொட்டை மாடியில் வாக் போவார் அந்த நேரம் பார்த்து அவருக்கு ஹாண்ட் டெலிவரி கொடுத்திருச்சி :)

   Delete
 5. ///யாரவது அட்ரஸ் கேட்டாலே அவங்களை அட்ரஸுக்கே கைப்பிடுச்சி கொண்டு விடுவோமே நாங்கல்லாம் :).////

  ஆமா.. ஆமா அந்த சென்னைப் பாலத்தைக் குறொஸ் பண்ணின கதையைப்போலதானே:).. இன்னும் எத்தனை பேர் ஏமாறப்போறாங்களோ:) ஆண்டவா என்னை மட்டும் காப்பாத்துங்ங்ங்:).

  ReplyDelete
  Replies
  1. இது தப்பாச்சே :) உங்களுக்கு ஆனாலும் இவ்வளவு நினைவு இருக்கவே கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர் ..ஒருவேளை என் ரெசிப்பி பார்த்து எல்லாரும் வல்லாரை சாம்பார் ஸ்மூத்தில இறங்கிட்டாங்களோ

   Delete
  2. வந்துட்டேன்ல என்னைவிட்டை அரட்டை அடிச்சா சும்மா இருப்பேன என்ன வந்துட்டேன்ல   /////யாரவது அட்ரஸ் கேட்டாலே அவங்களை அட்ரஸுக்கே கைப்பிடுச்சி கொண்டு விடுவோமே நாங்கல்லாம் :)./


   இவ்வளவு நல்ல மனசு இவங்களுக்கு இருக்கும் என்று தெரிஞ்சா நான் அமெரிக்கா வரும் போது அட்ரஸை இவங்ககிட்ட கொடுத்து கேட்டு இருந்தால் அட்ரஸுக்கே கைப்பிடுச்சி கொண்டு விடூ இருப்பார்கள் எங்களுக்கும் விமான செலவு மிச்சம் ஆகி இருக்குமே


   அதிரா உங்க விலாச்சதை எங்கிட்ட சொல்லுங்க அதை இவங்கிட்ட கொடுத்து வழி கேட்குறேன் அதன் பின் என் கையை பிடிச்சு உங்க வீட்டிற்கு கூட்டி சென்று விடுகிறார்களா என்று பார்ப்போம் அப்படி அவங்க விடலைன்னா இவங்க இந்த பதிவில் சொல்லி இருப்பது பொய்யாகததான் இருக்கும்

   Delete
  3. Athiraa naan Minnie mouse mask pottirukken ..don't tell truth that I am hiding under the table. .neengalum vaanga athiraa olinjippom😂😂😂😂😂

   Delete
  4. ஹலோ ட்றுத் எச்சூச்ச்மீஈஈ... பஸ் ஸ்ராண்டுக்குப் போனா அந்தக்காவைத் தொட்டுப் பார்த்தேன் என்றீங்க இப்போ கையை பிடிக்க சொல்றீங்க.... :) கர்ர்ர்ர்ர் எதுக்கும் ஜாக்ர்ர்ர்தை மாமி வீட்டிலெல்லாம் புளொக் எழுத விடுவினமோ எனக் கேட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.(இது வேற மாமி வீடு):)

   Delete
  5. அஞ்சு எதுக்கும் உங்கட கைக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைங்கோ:), பிறகு மூக்கைச் சிந்திக்கொண்டு வந்து... அதிரா ஜெல்ப் மீ என நிக்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:).

   Delete
  6. அவ்வ்வ்வ் ஹா ஹா :) ட்ரூத் நான் அட்ரஸ் சொல்றது எதோ அமிஞ்சிக்கரை டு அண்ணாநகர் இல்லைனா புரசைவாக்கம் டு கீழ்ப்பாக்கம் அநியாயத்துக்கு லண்டன் டு அமெரிக்கா நானா நடக்கமுடியுமா

   Delete
  7. நோ நூஊ !! நான் மாட்டேன் அமெரிக்கால மட்டுமில்ல உலகம்பூரா தெருவுக்கு தெரு எதிரிஸ் இருக்காங்க உங்களுக்கு ..உங்களை நான் அட்ரஸ் காட்ட கூட்டிப்போனா என் அட்ரஸ் காணாம போயிரும் :) எனக்கு உங்க ஐடியா தெரியும் என்னை எதோ வம்பில் மாட்டிவிட பிளான் தானே இந்த அட்ரஸ் கூட்டி போய் விடற ஐடியா

   Delete
  8. ஆமாம் ப்ரண்ட் நேத்து நான் அதிரா ப்ரியா கும்மி அடிக்கும்போது உங்களை தேடினேன் :) அது அமெரிக்கா ஐரோப்பா டைம் ல நீங்க வர லேட்டாகிடுச்சி //இவ்வளவு நல்ல மனசு இவங்களுக்கு இருக்கும் என்று தெரிஞ்சா நான் அமெரிக்கா வரும் போது அட்ரஸை இவங்ககிட்ட கொடுத்து கேட்டு இருந்தால் அட்ரஸுக்கே கைப்பிடுச்சி கொண்டு விடூ இருப்பார்கள் எங்களுக்கும் விமான செலவு மிச்சம் ஆகி இருக்குமே/// அவ்வாவ் இனிமே எதை சொன்னாலும் நாப்பதுதரம் யோசிச்சிதான் சொல்லணும் போலிருக்கே :)

   Delete
 6. ////Question: I have three apples. If you take away two from me, how many do you have?
  Answer: 2. ..
  Question: How many sides does a circle have?
  Answer: Two. An inside and an outside///

  அப்போ ஐ ஏ எஸ் இண்டவியூல பாஸ் ஆகோணும் எனில்.. கணக்கை தப்புத் தப்பா படிச்சு வச்சிருக்கோணும் என்கிறீங்க?:)

  ReplyDelete
  Replies
  1. அதுலாம் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும் டைப் கேள்விகள் அதிரா கணக்கும் அதற்கும் தொடர்பில்லை கொஞ்சம் ட்ரிக்கி அன்ட் HILARIOUS மாதிரி இருக்கும்

   Delete
 7. ///முன்பு எம்பிளாய்மென்ட் நியூஸ் என்றொரு பத்திரிகை செவ்வாய்தோறும் வரும் .அதில் சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலைகளுக்கு அப்புறம் இந்த CSIR UGC தேர்வுகள் பற்றிய விவரங்கள் அதில் இருக்கும் அதெல்லாத்துக்கும் கூட விடாம விண்ணப்பித்தேன்///

  ஜேசுவே... சென்ரல் கவுண்மெண்ட் தப்பியது, ஆனா நாங்க மாட்டுப்பட்டிட்டோம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாங் ஹா :) பாருங்களேன் கண்டம் விட்டு கண்டம் வந்து விதி வலியது இல்லியா மியாவ்

   Delete
 8. ///.அதில் வரும் வேலைகள் அனைத்திற்கும் ஹிந்தி தெரிந்திருக்கணும் அதெல்லாம் யாருக்கு தோணுச்சு மனம் போக்கில் விண்ணப்பம் செய்து வைப்பேன்///

  ஹா ஹா ஹா என் சமையல் குறிப்பைப் போலவே தேன்ன்ன்ன்ன்:)..

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் நீங்க:) உங்க சமையல் குறிப்பெல்லாம் //அதுக்கும் மேலே டியர் :) மனிதர் உணர்ந்துக்கொள்ள அது மனித சமையல் அல்ல அல்ல அல்ல ..எக்கோ கேக்குதா ப்ரியா கீதா

   Delete
  2. அதிராவுக்கு கீதா என்றொரு பெயரும் உண்டா

   Delete
  3. ஹா ஹா :) இல்ல அது about athiras recipes ..நான் எக்கோ கேக்குதான்னு ப்ரியா கிட்டயும் கீதா கிட்டயும் கேட்டேன் :)

   Delete
 9. ///அதற்கு மரம் ஏறி மரத்துக்கு மேலே இரவு நேரங்களில் கரடிகளை அபசர்வ் செய்யணுமாம் ///
  ஹா ஹா ஹா என்னா பில்டப்பூ சாமீஈஈஈஈ.. இந்த முருங்கிமரத்திலயே:) ஏற வைக்க முடியாமல் நான் தள்ளாடிட்டு இருக்கிறேன்ன்.. இதில வேற மரமேறி கரடி வோச்சிங்ங்ங்ங்:).. முடியல்ல முருகா:).. என்னா தைரியம் உங்களுக்கு... இதெல்லாம் யாரிலயோ இருக்கும் கடுப்பில் அப்பிளிகேசன் போட்டதுபோல இருக்கே.. ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. அது அதிரா :) கடுப்பில்லை அப்போல்லாம் ஒருவேகம் துடிப்பு கொஞ்சம் இருக்கும் ஏதாச்சும் செய்யணும்னு இப்போ அதே துடிப்பு இரட்டை மடங்காகிடுச்சு

   Delete
  2. இடத்தையெல்லாம் பார்க்காம தானே அப்ளிகேஷன் போட்டு வச்சேன்

   Delete
 10. ///நல்லவேளை அந்த கரடிகள் தப்பிச்சு எனக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைக்கலை ...//
  நான் இப்போ ஹிந்தி படிக்கிறேன் அஞ்சு, வேணுமெண்டால் உங்களுக்கு ரியூசன் தாறேன்:)..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வேணாம் இங்கத்தைய கரடிகளும் கரடிங்களுக்கு ஐரோப்பிய லாங்க்வேஜ் தான் வேணும் நான் போலிஷ் ஸ்பானிஷ் படிக்கப்போறேன் ..
   நீங்க டியூஷன் கொடுத்து நான் அம்னீஷியாவில் விழணும்னு உங்க ஆசை எனக்கு :)தெரியும் உங்க எண்ணம்

   Delete
  2. இல்ல அதில்ல என் எண்ணம், எப்பூடியாவது உங்களை கரடியிடம் அனுப்பி எடுக்கோணும் என்பதே என் எண்ணம், ஆசை எல்லாமே:)..

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒவ்வொரு கொமெண்ட்டுக்கும் “நீ ரோபோ இல்லை என்பதை நிரூபி எனக் கேட்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் எப்போ ரோபோ ஆனேன்?:) நம்ப மாட்டுதாம்ம்:)

   Delete
 11. ///அப்படியும் சமாளித்து 6 ஆம் தளம் சென்று இன்டெர்வியூவை முடித்து வெற்றிகரமாக திரும்பினேன் ....முக்கியமான விஷயம் வரும் போது படிகள் வழியே நடந்து வந்தேன் 6 தளங்களையும் கடந்து ..அந்த லிப்ட் கொத்தனார் மற்றும் என்ஜினீயர்கள் மட்டும் கட்டுமானம் முடியுமட்டும் பயன்படுத்துவதாம் அனைத்து தளத்தின் படிக்கட்டுகளும் மட்டும் கட்டி முடிந்திருக்கு//
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் என்ன சிரிப்பு உங்களை தனியா ஏத்தி இறக்கியிருக்கணும் அந்த லிப்டில்

   Delete
 12. ///வீட்ல உக்காந்து லேசியா இருக்காம மேலே படிக்க போங்க :)///
  கரீட்டு, மகள் கர்க்ட்டாத்தான் சொல்லியிருக்கிறா... ஓன்லைன் கோஸ் செய்யலாம் அஞ்சு.. செய்யுங்கோ..

  //இங்கே வெளிநாட்டில் ஒரு வசதி உண்டு படிக்க வயது ஒரு தடையில்லை..///

  ஆமா ஆமா கரீட்டூஊஊஊஊ 66 வயசிலயும் ஆரம்பிக்கலாம் தொடங்குங்கோ:).. அப்பப்ப ஆடு தானாக வாள் எடுத்து வந்து குடுத்து என்னை வெட்டு வெட்டு என்கிறதே ஹா ஹா ஹா:)

  ReplyDelete
  Replies
  1. தவளை தவளை :) 13 வயசில் கூட university போகலாம் தெரியுமா :)

   Delete
 13. ///ஆகவே ..என்னைப்பற்றிய அவள் கனவு மெய்ப்படுமோ :) லெட்ஸ் வெயிட் அன்ட் ஸீ :))//

  இந்தக் கனவு மெய்ப்படும்.. ஆனா மகளோடு, அவ போகும் யூனிவசிட்டிக்கு.. அது அமெரிக்கா ஆனாலும், பாய் படுக்கையோடு பின்னாலயே போகலாம் எனும் கனவை மட்டும் விட்டிடுங்கோ ஹா ஹா ஹா:)...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! அதுக்கு ஐடியா போட்டேன் அதிரா அவ ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா அவ வேற நாட்டிலும் நானா இந்த நாட்டிலும் தான் படிக்கணுமாம் மல்டி ஜெஸிலாம் நான்தானே பார்க்கணும் பாய் மூட்டை கட்ட சான்ஸே கொடுக்கல என்பொண்ணு

   Delete
  2. ஷரோனுக்கு அதிரா ஐடியா கொடுத்திருப்பாவோ..... ஷரோ குட் கேர்ஸ் ஆச்சேஏஏ.... டவுட்...

   Delete
  3. ஆமாம் ப்ரியா எனக்கும் இப்போதான் தோணுது ஷாரன் பிளாக் follower ஆனா மியாவ் பக்கம் ..கன்பரம்டா இது பூனை கோச்சிங் தான் :)

   Delete
  4. அமெரிக்கா வந்தா எங்க வூட்டு பக்கம் உள்ள காலேஜா பார்த்து சேருங்க ஏன்னா எங்க வூட்ட்டு புள்ளை வேற மாநிலத்தில்தான் போய் படிக்கும் இங்குள்ள இண்டிய் குழந்தைகள் தொலை தூரப் பகுதியில்தான் போய் படிக்கும்

   Delete
  5. ஓஹோ ! அப்படியா ..இங்கே எல்லா பிள்ளைங்களும் வீடு பக்கத்தில் தான் சேர பார்ப்பாங்க ஏனென்றால் வீட்டில் அருகில் இருந்தா 9000 பவுண்ட்ஸ் இவங்களுக்கு கவர்ன்மென்ட் தரும் பணம் அப்படியே இவங்க கைக்கு கிடைக்கும் இல்லைனா அது ஹாஸ்டல் போர்டிங் என செலவாகிடும் ..ம்ம் பார்ப்போம் god வில்லிங் அங்கே சீட் கிடைச்சா பார்த்துக்கோங்க எங்க மகளை :)

   Delete
 14. //நேற்று மகள் திட்டவட்டமாக சொல்லிட்டா அம்மா நீங்க யூனிவெர்சிட்டியில் சேர்ந்து உங்கள் படிப்பை தொடரணும் // நல்ல கண்டிஷன்தான் ஷ்ரோன் போட்டது..கண்டிப்பா தொடருங்கள் அஞ்சு. இங்கேதான் நிறைய வசதிகளிருக்கே. கனவு மெய்படும்.
  நான் உங்க பதிவை வாசிக்கும்போது நீங்க எழுதிய இந்த வசனத்தை நினைத்தேன்....///பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிடைக்க ..இந்திய திருநாட்டுக்கு கொடுத்து வைக்கல /// ஹா.ஹா.
  அதிராவின் கொமண்ட் வாசிக்கதான் எனக்கும் ஞாபகம் வருது....வல்லாரை ஸ்மூர்த்தி குடிக்கனும்.அவ்வ்
  //காலி தளங்கள் வழியே செல்லும்போது வெளிப்பக்கம் அப்படியே தெரியுது ஏணியில் ஏறும்போது சுற்றிலும் தெரியுமே அதுபோல// படங்களில் பார்த்தமாதிரி. பார்க்கும்போதே எனக்கு தலைசுத்தும். நீங்க யாரு..... தைரியமான பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி......ம்ம் வந்திருக்கு வேண்டியவர். இங்க படிச்சு லண்டனில் ஐ.ஏ.எஸ் அதிகாரியா வாங்க அஞ்சு.....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ப்ரியா ஒருவேளை என் IAS விஷயத்தை போற இடத்திலெல்லாம் சொல்லிட்டேன் போல :) யாரும் மறக்கலியே ..

   லண்டனில் IAS சான்ஸ் இல்லை அதைவிட பெரிய கனவா யோசிச்சி வச்சிருக்கேன் அநேகமா நான் பாலிடிக்ஸ்ல இறங்கலாம்னு நினைக்கிறேன் ப்ரியா .ப்ரைமினிஸ்டர் போஸ்ட் தான் இப்போ கண்ணுக்குள் நிக்குது .ஜெர்மனிலருந்து நீங்க வந்து பதவியேற்பு விழாவுல கலந்துக்கணும் சொல்லிட்டேன் :)

   Delete
  2. ப்ரியா இப்பவும் அந்த முழுதாக முடிக்காத பில்டிங் லிப்ட் அதை நினைச்சா உடம்பு நடுங்கும் எனக்கு :)

   Delete
  3. ஆஹா.... நான் இதை நினைக்கல. குட் ஐடியா...டன்.. நான் கண்டிப்பா வந்திடுவேன்.....அதோடு யூனியனில திரும்ப இணையவேண்டும் சரியா. எனக்கு முன்வரிசையில இடம் தரவேணும்.....இப்ப பூஸு க்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கனுமே...

   Delete
  4. ஹா ஆஹா :) யெஸ்ஸு நானா இணைச்சுடுவேன் ..ஆனா ஸ்கொட்டிஷ்க்காரங்கா தனியா மிளகாவா போக ஆசைப்படறாங்க :)அவங்களை தனியே பிடிச்சு தேம்ஸில் தள்ளிட்டு நாம் கைகோர்ப்போம் :) என்ன ப்ரியா இப்பிடி சொல்லிட்டீங்க எனக்கு பக்கத்துக்கு சீட்டே நீங்கதான் ..ஸ்டேஜில் தெரியுமா :)

   Delete
  5. ஓ....பக்கத்து சீட். வாவ்.. தாங்க்யூ அஞ்சு. ஆமால்ல..ஸ்கொட்டிஷ்காரங்க தனியா சீ(ரகமா)க்கிரமமா வெளியே போகபோறாங்களாம்... ம்..தேம்ஸ்தான் சரி. அடிக்கடி போக ஆசைப்படும் இடம்..

   Delete
  6. என்னாதூஊஊஊஊஊ பிரை... மினிஸ்டரா??? அது என்ன சாப்பாடு? ஏதும் ஸ்பெசல் ஃபிரையாஆஆஆஆ?:).. நேக்கு வாணாம்ம்ம்.. நான் ஒயிலி ஃபூட் எல்லாம் சாப்பிடுவதில்லை.... அதனால இஞ்சி இடுப்பழகியாகியிருக்கிறேன்ன்.. இதில வாழைத்தண்டும் சேர்ந்து... விரைவில் மிஸிஸ் பிரித்தானியா நாந்தேன்ன்:)..

   நீங்க இருவரும் ஃபிரை எல்லாம் சாப்பிட்டு தேம்ஸ் கரையில உருண்டு கொண்டு வாங்கோ.. வோக் போகிறேன் எனச் சொல்லி:).

   Delete
  7. என்ன ஏஞ்சல் நீங்களும் பிரியாவும் சேர்ந்து டீல் போடறீங்க நம்ம அதிராவை விட்டுப் போட்டு ஹஹஹஹ்ஹ் அவங்கள உங்க மினிஸ்ட்ரில சேர்த்துக்கிட்டீங்கனா இம்சை அரசன் இரண்டாம் புலி கேசி போல இருக்கும்ல....ஜாலியா..ஹிஹிஹி...என்ன அதிரா நான் சொல்லுறது சரிதானே

   கீதா

   Delete
  8. ஆமாம் கீதா ..தம்மாத்தூண்டு நாடு வச்சிக்கிட்டு நாங்க தனியா மிளகான்னு இந்த ஸ்கொட்ஸ் ஒரே பில்டப்பு ..அதான் ..இப்போ சொல்லிட்டேன் குயின் எங்ககளுக்கே சொந்தம் நீங்க மகாராணி பேறே சொல்லக்கூடாதுன்னு சட்டம் போடப்போறோம் :) அந்த அஞ்சு இடுப்பழகி அதிராக்கு

   Delete
 15. ///நேர்காணலின்போது அதிகாரி ஒரு பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டுவிட்டு இன்டெர்வியூ வந்த கதாநாயகனை அந்த பேனாவை எடுக்க சொல்வார்
  உடனே கதாநாயகன் மேஜையில் உள்ள அழைப்பு மணியை அழுத்தி வெளியில் உள்ள பணியாளரை அழைத்து அந்த பேனாவை எடுக்க வைப்பார் ....நீங்களே எடுத்திருக்கலாமே என அந்த அதிகாரி கேட்டதற்கு இவர் அதற்கென்று பணியாளர் இருக்கும்போது நான் செய்ய தேவையில்லை என்று பதில் சொல்வார்//


  இந்த இடத்தில் நான் இருந்திருந்தால் பியூனை கூப்பிட்டு அந்த் பேனாவை எடுத்து குப்பை தொட்டியில் போட சொல்லி இருப்பேன் காரணம் கேட்டால் கையில் இருப்பது தவறி விழுந்தால் நான் எடுத்து கொடுத்திருப்பேன் ஆனால் அதை நீங்கள் தூக்கி கிழே போட்டதால் அடு ங்களுக்கு வேண்டாம் என்று நினைத்து குப்பையில் போட சொன்னேன்... நல்லா இருக்கிற பேனாவை கிழே தூக்கி போட நீங்க லூசா என்ன என்று கேட்டு இருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹ்ஹ நல்ல விட்!! நானும் எடுத்துதான் கொடுத்திருப்பேன் என்றாலும் எனக்குத் தோன்றியது இது......எனக்கு மேசை அடியில் பழக்கம் கிடையாது என்று சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றியது...இது அந்தப் பதவிக்குத் தேவையான ஒன்றில்லையா...

   கீதா

   Delete
  2. இந்தியா ஒரு சிறந்த பிரதமரை அரசியல் வல்லுனரை சாணக்கியரை இழந்து விட்டது ..:) அவர்கள் ட்ரூத் நீங்க மட்டும் பிரதமந்திரியாகியிருந்தா நம்ம நாடு எங்கேயோ போயிருக்கும்:) இப்போகூட நீங்க அமெரிக்க எலெக்ஷ்னலா நீக்கலாம் :)

   Delete
 16. //நேர்மையான மிக மிக தைரியமான பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிடைக்க ///

  ஏஞ்சல் மட்டும் ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆகி இருந்தால் நான் அமைச்சராக ஆகி இருப்பேன் இரண்டும் நடக்காமல் போச்சு

  ReplyDelete
  Replies
  1. அது சரி மதுரை சகோ நீங்கள் அமைச்சர் ஆகியிருந்தால் உங்களை யாருங்க நீங்க இப்ப அரசியல்வாதிகளை வாருவது போல் வாரியிருப்பாங்கனு யோசிச்சுட்டுருக்கேன்...

   நாங்கதான் இருக்கோமே அதுக்கு...ஏஞ்சல், அதிரா, நிஷா மீ எல்லாரும் சேர்ந்து....ஹஹ்ஹ்

   கீதா

   Delete
  2. @ avargal unmaikal //ஏஞ்சல் மட்டும் ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆகி இருந்தால் நான் அமைச்சராக ஆகி இருப்பேன் இரண்டும் நடக்காமல் போச்சு//
   ஹாஹா :) அந்த இரண்டுமே நடக்காததால் தான் இந்தியான்னு ஒரு நாடு உலக வரைபடத்தில் இன்னும் கொஞ்சமாச்சும் ஓட்டிட்டிருக்கு :)))))))
   Delete
  3. @கீதா ஹாஹா ஹா :) அதேதான் நானும் நினைச்சேன் memes போட்டே ஒட்டியிருப்போம் இவரை

   Delete
  4. ஆட்டோ அனுப்பிச்சு வாயை மூடி இருப்பேன்ல

   Delete
 17. ///அதற்கு மரம் ஏறி மரத்துக்கு மேலே இரவு நேரங்களில் கரடிகளை அபசர்வ் செய்யணுமாம் .நல்லவேளை அந்த கரடிகள் தப்பிச்சு எனக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைக்கலை ...///

  ஒகோ ஒகோ ஓ ஒ ஓகோ அப்ப குரங்கிற்கு ஹிந்தி தெரியாததால்தான் வேலை கிடைக்கலையோ

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ..அப்போ ஒருத்தர் கேட்டாங்க .கரடி கூட வேலை செய்ரதுக்கு எதுக்கு உனக்கு ஹிந்தினு :)
   இப்போ நினைச்சாலும் சிரிப்பு வரும் அதெல்லாம் நானா செய்யக்கூடிய வேலையா :)

   Delete

 18. //நான் இன்னும் இரண்டு வருடங்களில் வெளிநாடு படிக்க சென்றுவிடுவேன்///


  ஆஹா உங்க பொண்ணு இந்தியாவீற்கு சென்று படிக்க போகுதா..... எதுக்கு கேட்கிறேன் என்றால் உங்க பொண்ணை பொருத்தவரை இந்தியா அதற்கு வெளிநாடுதானே? சரி சரி இப்படி நான் கேட்டேன்னு அந்த பச்ச புள்ளைகிட்ட சொல்லிடாதீங்க அவங்க பாட்டுல அமெரிக்க படிக்க வருவேண் என்று சொல்லிட்டு கையோட ஒரு பூரிக்கட்டையையும் சேர்த்து எடுத்துட்டு வந்திடப் போறாங்க

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ஷரன் அமெரிக்காதான் வருவார்! ஏஞ்சல் பூரிக்கட்டை மற்றும் சப்பாத்தி ப்ரெஸ்ஸர் பார்சல் கண்டிப்பாக அனுப்புவார்!!! சரிதானே ஏஞ்சல் நான் சொல்லுறது!! பி ரெடி ஹஹஹஹ்

   கீதா

   Delete
  2. விதி வலியது :) அவர்கள் ட்ரூத் நண்பரே :) full bright கமிஷன் ப்ரோக்ராமாம் அவங்கத்தகங ஐரோப்பிய மாணவர்களை ஸ்கொலர்ஷிப் தந்து அங்கே உங்க நாட்டில் படிக்க வைக்கிறாங்கன்னு குட்டி மேடம் சொன்னாங்க .அகடோபர்ல லண்டன் ஒன் டே ஒரு ஈவென்ட் போறா இப்படி மாணவர்களுக்கு அட்வைஸ் தருவங்களாம் எப்படி அப்ளிகேஷன் போடறது தாதுபற்றிய விவரம்லாம் தருவங்களாம் பொண்ணு சொன்னா :) அதனால் பூரிக்கட்டை ப்ரெஸ்ஸருடன் அங்கே வர சான்ஸ் அதிகம் உண்டு

   Delete
  3. ஹாஹா :) ஆமாம் கீதா ..இவர் வசமா மாட்டிகிட்டார் நம்மகிட்ட

   Delete
 19. ஆஹா இந்த பதிவை அதிரா படிச்சிட்டு நானும் அந்த காலத்தில் சினிமா காலேஜுக்கு சென்று நடிப்பு கற்று ஜெமினி கணேஷன் கூட நடிக்க முயற்சி செய்தேன் அது முடியாமல் போச்சு அந்த விரக்தியில் மேலை நாட்டுக்கு வந்துட்டேன் இப்ப ஏஞ்சல் காலேஜுக்கு போனால் நானு ந்டிப்பு கல்லூரிக்கு போய் நடிப்பு கற்றுக் கொண்டு விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகி
  ஆக அல்ல ஒரு கோவை சரளா மாதிரி நடிச்சு பிரபலம ஆகப் போன்றேன்ணு சொல்லாம இருக்கனுமே கடவுளே எங்களை நீதானப்பா காப்பாற்ரனும்

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹ மதுரைத் தமிழன் நிச்சயமாக அதிரா கோவை சரளா ஆகலாம்!!! அந்தத் திறமை உண்டு ஏன் நகைச்சுவை ஆர்த்தியை விட்டுவீட்டீர்கள்!!ஐயோ தெரியாமல் சொல்லிட்ட்ட்ட்ட்டன்..அதிரா என்னை தேம்ஸில் தள்ளூவதற்குள் மீ எஸ்கேப்!!! ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  2. என்னை ஜெயம் ரவிக்கு கேட்டாக.... விமலுக்கு கேட்டாக சூரியாக்கு கேட்டாக... தப்பா நினைச்சிடாதீங்க கதாநாயகியா நடிக்கத்தேன்ன்ன்:) நான் போகல்ல:), குயின் அம்மம்மா விடல்ல என்னை, மகாராணி பரம்பரை இதுக்கெல்லாம் போகக்குடா என்றிட்டா...:).
   கீதா, ட்றுத்துக்கு ஆர்த்தியைத் தெரியாதெல்லோ அதெல்லாம் யங் ஜெனரேஷன் , அவருக்கு தெரிஞ்சதெல்லாம் கி மு காலம்தேன்:).

   Delete
  3. ஹையோ அவர்கள் ட்ரூத் சரியா கண்டுபுடிச்சிட்டீங்களே ..இப்போ ஜெமினி கணேஷனுக்கு பதில் யாரை ஹீரோவாக்கலாம்னு நீங்களே சொல்லுங்க :) நீங்க மனசுல யாரை நினைக்கறீங்கன்னு நான் சொல்லட்டா :) பவர் ஸ்டார் தானே :))

   Delete
  4. கீதா !! ஆர்த்தியா ஹாஹா :) சிறப்பான தேர்வு அ... ஆவாகிறார்

   Delete

  5. ஆர்த்தின்னு சொன்ன அதிரா சரியான குண்டு என்று கிண்டல் பண்ணியது போல ஆகிவிடும் என்பதால் விட்டுவிட்டேன். நான் விட்டாலும் ஏஞ்சலும் கீதாவும் விட மாட்டேங்கிறார்கள் எல்லாம் பொறாமைதான் அதிரா நோட் திஸ் பாயிண்ட்

   Delete
  6. கர்ர்ர்ர் :) அநியாயத்துக்கு இப்போ எங்களை வம்புல மாட்டி விட்டுட்டார் கீதா இவர் :)

   ஏற்கனவே மியாவ் வாழைத்தண்டு ஜூசா குடிச்சி வாழை மரமே இல்லாமா போச்சு இப்போ இதை பாரத அவ்ளோதான்:)

   Delete
 20. //நேர்மையான மிக மிக தைரியமான பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிடைக்க .. இந்திய திருநாட்டுக்கு கொடுத்து வைக்கல ..//

  இதைப் படித்ததும் அதையே நினைத்து மிகவும் வருத்தத்தில் இருப்பதால் :(
  மேற்கொண்டு என்ன சொல்வது என்றே புரியாமல் ஸ்தம்பித்துப் போய் உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ கோபு அண்ணா நீங்க என் மேலே அபார நம்பிக்கை வச்சிருப்பிங்கனு நினைச்சேன் இப்படிலாம் ஸ்தம்பிக்கக்கூடாது ..
   வ்ண்ணக்கு நைட்டெல்லாம் கனவு தெரியுமா இந்த போஸ்டை எழுதிட்டு ..உங்க மின்னூல்கள் வெளியீட்டு விழா நடக்குது அதுக்கு நான் (ஆட்சியர்) தலைமை தாங்கற மாதிரிலாம் வந்துது ..இந்த விஷயத்தை படிச்சிட்டு திருச்சில சுற்றும் கழுத குட்டிகளுக்கு கொடுத்திடுங்க அதிராவுக்கு காதும் கண்ணும் ஷார்ப் :) கிழிச்சி தூக்கிப்போட்டா எடுத்து ஒட்டி படிப்பாங்க

   Delete
  2. THIS REVISED ONE IS TO BE PUBLISHED, PLEASE.
   ==============================================

   Angelin April 7, 2017 at 8:25 AM

   //ஹையோ கோபு அண்ணா நீங்க என் மேலே அபார நம்பிக்கை வச்சிருப்பிங்கனு நினைச்சேன் .... இப்படிலாம் ஸ்தம்பிக்கக்கூடாது ..//

   கோபு அண்ணாவுக்கு அஞ்சுமேல் அபாரமான நம்பிக்கையும், பிரியமும் எப்போதும் உண்டுதான். இது நம் அதிராவுக்குத் தெரியாட்டியும், அன்புள்ள ஆச்சிக்குத் தெரியுமாக்கும். ஆச்சியை அழைத்துக் கேட்டுப்பாருங்கோ ... அவள் நம் அன்பினைப்பற்றி அழகாகச் சொல்லுவாள்.

   //இன்னைக்கு நைட்டெல்லாம் கனவு தெரியுமா இந்த போஸ்டை எழுதிட்டு .. உங்க மின்னூல்கள் வெளியீட்டு விழா நடக்குது .. அதுக்கு நான் (ஆட்சியர்) தலைமை தாங்கற மாதிரிலாம் வந்துது.//

   சொன்னா நம்ப மாட்டீங்கோ .... எனக்கும் அதே போலக் கனவுகள் வந்துச்சு.

   தலைமை ஏற்க வந்த திருச்சி மாவட்ட நிஜமான இன்றைய ஆட்சித்தலைவர் அவர்களை, நானும் அதிராவுமாகச் சேர்ந்து ஓரம் கட்டிவிட்டு, மிகப்பிரபல எழுத்தாளரும், பதிவருமான, மனித நேயமும் .. பிராணிகள் (பூனைகள்) நேயமும் மிக்க எங்கட அஞ்சுதான் தலைமை ஏற்க வேண்டும் என மிகவும் வற்புருத்தி மேடையில் ஏற்றி VIP Chair இல் அமர வைத்து மகிழ்ந்து கொண்டேன்.

   கோபு அண்ணாவுக்கு தங்கம், வைரம், வைடூர்யம் என நிறைய பதக்கங்கள் அஞ்சுவின் அன்பான ராசியான கைகளால் அளித்து கெளரவிப்பது போலவும் அடுத்தடுத்து ஏதேதோ இன்பக் கனவுகள் வந்துகொண்டே இருந்தன.

   திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன், விழா மேடையையும் காணோம், அன்புக்குரிய அஞ்சுவையும் காணும், தங்கம், வைரம், வைடூர்யம் எதையும் காணும். எங்கட அதிராவைக் கேட்கலாம் என்று பார்த்தால் அவளையும் காணும்.

   எல்லாவற்றையும் களவாடிக்கொண்டு போனது அந்த அதிராவாகத்தான் இருக்கும் என நீங்க சொல்லவருவதாக நான் சொல்ல மாட்டேன்.

   ஏனென்றால் அதிரா இஸ் ய குட் கேர்ள் சின்ஸ் சிக்ஸ் இயர்ஸ் டு சிக்ஸ்டி இயர்ஸ் :)))))

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
  3. //சொன்னா நம்ப மாட்டீங்கோ .... எனக்கும் அதே போலக் கனவுகள் வந்துச்சு.
   திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன், விழா மேடையையும் காணோம், அன்புக்குரிய அஞ்சுவையும் காணும், தங்கம், வைரம், வைடூர்யம் எதையும் காணும்//
   இதுக்கெல்லாம் மூல காரணம் அந்த அதிராவேதான் எல்லாத்தையும் ஒரே நேரம் சுருட்டிட்டு போக ஒரே ஒரு பூனையால் மட்டுமே முடியும் டவுட்டே இல்லை அது அதிராத்தான் அண்ணா :)   Delete
 21. ஸ்மார்ட் ஒர்க், ஹார்ட் ஒர்க் என்ற இரண்டில் ஸ்மார்ட் ஒர்க்குக்கே முதலிடம். ஆனால் மணியடித்து ஆளை வரவழைத்து பேனாவை எடுக்க வைப்பது ஓவர். இப்படிப் பார்த்தால் அமைச்சர்களுக்கு அதிகாரிகள் செருப்பு சரி செய்து விடுவது கூட காம்ப்ரமைஸ் ஆகிவிடும். அந்த பியூனுக்கு நாம் வேறு ஒரு முக்கிய வேலை கொடுத்திருந்தால், கீழே இருக்கும் இந்தப்பேனாவை டுக்க அவரை வரவழைப்பது எப்படி சரியாகும்.. என்னதான் பேனா எடுப்பது என்பது ஒரு குறியீடு ஆயினும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம். அது சும்மா படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சின்னு நினைக்கிறேன் ..அந்த கதநாயகனை இன்டெர்வியூ செஞ்சவர் பாராட்டின மாதிரி வந்தது ..நான் ரொம்ப நேரம் தோசையம் சாம்பார் வடையும் கூட டேபிளில் வச்சது மறந்து பார்த்தேன் இப்படிலாம் நடக்குமான்னு .ஒருவேளை நான் எண்ட்றேன்ஸ் எழுதி இன்டர்வியூக்கு போயிருந்தா அட்லீஸ்ட் ஒரு ஐடியாவாது கிடைச்சிருக்கும் :)) அப்போ கன்பார்ம்டா ஒரு எளிமையான கடும் உழைப்பாளியை இந்திய திரு நாடு இழந்து விட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்கள் :))
   அவ்வ் லைப்ல திரும்பி பார்க்கலாம் ஆனா ஓடி வந்த பிறகு திரும்பி ஆரம்பிச்ச இடத்தில மீண்டும் போய் நிக்கிறது கஷ்டம் ஹா ஆஹா :)

   Delete
 22. என்னுடைய நேர்காணல் அனுபவங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் நிறைய படை எடுத்து கடுப்பாகி இருக்கிறேன். வந்த இரண்டு வெற்றிகளில் ஒன்றை நானே வேண்டாம் எண்டு சொன்னேன். காரணம் அந்த ஊரில் மக்களை பார்ப்பதே அரிது! அரைமணிக்கொரு முறை யாராவது ஒருவர் கண்ணில் படுவர்!

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ அப்படியா ..நானா நேர்காணலினு போனது நாலைந்து இடங்களுக்கு நிறைய அப்ளிகேஷன் போடுவேன் சிலது நார்த் பக்கம் ஹிந்தி தெரியலைனு ரிஜெக்டட் ..சிலதுக்கு நேர்காணலுக்கு போக முடியா சூழல் இப்படி நிறைய தடைகள் ..ஆளில்லா ஊரா !! அது கஷ்டமாச்சே ..நமக்கெல்லாம் சுற்று வட்டாரமே கலகலன்னு இருக்கணும்

   Delete
 23. தமிழ்நாடு ஒரு இலக்கியவாதி ஐ ஏ எஸ் ஆபீஸரை இழந்து விட்டது போலிருக்கே. நல்லபடியாய் மேல்படிப்பு முடியுங்கள் (நோ.. நான் ஃபீமேல் படிப்புதான் படிப்பேன்னு ஆடம் பிடிக்கக் கூடாது!!) மென்மேலும் உயர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) சிரித்தேன் ..நான் அப்படி அடம்புடிக்க கூடிய ஆள்தான் ..ஆனா இப்போ இன்னொரு கவலையும் சேர்த்து படிக்கச் போயிட்டா என்னுடைய சமையல் ஆராய்ச்சியெல்லாம் அப்ரப்ட்டா நின்னுடுமென்னும் கொஞ்சம் கவலையா இருக்கு ஆனாலும் முன் வச்ச காலை பின் வைப்பதில்லை

   Delete
  2. அவ்வ்வ் இலக்கியவாதியா !! ஹையோ அதிரா இதை பார்த்தா அவ்ளோதான்

   Delete
 24. நிச்சயம் மெய்ப்படும்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ரமணி அண்ணா நலமா இருக்கீங்களா ..நிச்சயம் ஏதாவது கோர்ஸில் சேருவேன் அண்ணா .மிக்க நன்றி

   Delete
  2. ரமணி சார் இப்ப எங்க ஊரில் இருக்கிறார் மீண்டும் சந்தித்து உங்களை பற்றி வம்பு அளக்க போறோம்ஹிஹி

   Delete
  3. ஹாஹாஹா:) அவர் இப்போ அங்கே வந்திருக்கார்னு பிளாக்ல படிச்சேன் உங்க வீட்டுக்கு வந்தா நானும் ஹாய் சொன்னேன்னு சொல்லுங்க ..அப்புறம் நல்லவிதமான இந்த மாதிரி அந்தமாதிரி அருமை பெருமைகளை மட்டும் சொல்லணும் :) சொல்லிட்டேன்

   Delete
 25. ஏஞ்சல் டிட்டோ!!! பல வரிகள் எனது அனுபவத்தை நினைவுபடுத்தியது! யுபிஎஸ்சி, எம்ப்ளாய்மென்ட் நியூஸ், சிஎஸ் ஐ ஆர்...எல்லாம். கிடைத்தும் போகவில்லை. ஃபெல்லோஷிப் என்ட்ரன்ஸ் எக்சாம் ஹால் டிக்க்டெட் எல்லாம் வந்தும் வீட்டில் போக அனுமதிக்கவில்லை. இருந்தது கிராமம். தேர்வு சென்னையில். இப்படி எத்தனையோ கனவுகள்...

  உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்! அங்கு எந்த வயதிலும் படிக்கலாம்.ஆம். என் மகனும் சொல்லிக் கொண்டிருக்கிறான். தான் கொஞ்சம் செட்டில் ஆனதும் என்னை அங்கு வரச் சொல்லி படிக்கச் சொல்லியிருக்கிறான்.,...பார்ப்போம்....நடக்கிறதா என்று..

  நிச்சயமாகச் சேருங்கள் ஏஞ்சல்! வெல்வீர்கள்! வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் நான் சென்னையில் இருந்தே அம்மா என்னை விடலை கீதா ..அதனால்தான் நானும் கணவரும் மக்கள் விஷயத்தில் அவ ஆசைக்கு விட்டுட்டோம் ..மே பி அந்த காலம் அம்மாங்க நம்மை கைக்குள்ள பொத்தி வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் ..
   இக்காலத்தில் பாருங்க பொண்ணுங்க எவ்ளோ forward .எதையும் தைரியமா ஏறெடுக்கிறாரகள் .
   அது அப்போ அந்த வயசில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளணும்னு ஒரு வேகம் இருந்தது ..நீங்களும் படிங்க ..எத்தனையோ கோர்சஸ் இருக்கு கீதா ....இங்கே எல்லா வசதியும் இருக்கு ஆன்லைனில் நீங்களும் ஸ்டார்ட் பண்ணுங்க ரெண்டு பேருமே சாதிப்போம் thanks geethaa

   Delete
 26. ஏஞ்சல் மீ டூ பேனாவை எடுத்துக் கொடுத்துருப்பேன்...அட்ரஸ் கேட்டா வீடு வரை கொண்டு விடுவது....கண்டு பிடித்தேனும்....இப்படி நிறைய சொல்லலாம்...ஆனால் வீட்டில் இதற்கெல்லாம் மண்டகப்படியும் கிடைக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹையோ கீதா நானும் இப்படித்தான் அவசரக்குடுக்கை மாதிரி நல்லது செயறதா நினைச்சி வம்புல மாட்டியிருக்கேன் ,
   நம்ம ஒரே அலைவரிசையாச்சே ..ஹை 5
   அந்த நேரத்தில் யோசிக்கறதாவது ஹா ஹா :)நம்ம அவர்கள் ட்ரூத் இப்போ ஒரு அட்ரஸ் கேட்கிறாரே வாங்க கொண்டு போய் விட்டுட்டு வருவோம்

   Delete
 27. ஏஞ்சல் சகோ தங்களைப் போல் நானும் பல முயற்சி செய்து கிடைக்காமல், ஆனால் ஆசிரியராகும் எண்ணம்தான் மேலோங்கி இருந்ததால் அதுவும் கூட எளிதில் கிடைக்காமல் தாமதமாகத்தான் கிடைத்ததது. தங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துளசி அண்ணா நிறையபேருக்கு இப்படி நடந்திருக்கு ..உண்மையில் நானா திருமணம் ஆனதும் இங்கே uk வந்திருந்தா Mbbs படித்திருக்கலாம் ஏனென்றால் நம்ம நாட்டில் pg முடிச்சவங்க இங்கே ஒரு எண்ட்றேன்ஸ் எழுதி 3ப்ளஸ் 1 வருஷம் படிச்சா டிக்ரீ கிடைக்கும் என்றரகள் ஆனால் வயது 30 இற்கு கீழ் இருக்கணும் ..
   நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ஆனா சந்தோஷமா இருக்கோம் கடவுள் புண்ணியத்தில் ..நானும் பி எட் படிச்சேன் ஆனா எங்கும் work செயலை .இங்கும் nvq முடிச்சேன் மேலே படிக்க தொலைவு போகணும் அதனால் விட்டுட்டேன்

   Delete
  2. என்னது டாக்டரா கடவுளே மக்களை காப்பாற்றிய உனக்கு கோடான கோடி ஸ்தோஸ்திரமப்பா

   Delete
  3. ஹாஹா :) உங்களுக்கு பொறாமை :)) எப்படியும் நாங்கல்லாம் வீட்டு டாக்டரம்மாங்கதானே :) என்ன அந்த ஊசிபோட மட்டும் யாராச்சும் கற்றுக்கொடுத்தா நானும் டாக்டர்தான் :)

   Delete

 28. நேர்காணல் அனுபவங்கள் அருமை.
  திறமைகள் நிறைய உங்களிடம் ஏஞ்சலின்.
  மகளின் கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்.
  மகளுக்கு தெரியும் தானே! தாயின் திறமைகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..புது வீட்டில் செட்டில் ஆகியாச்சா ..புதிய நட்புக்கள் அதான் பறவைகள் வருவார்களே உங்களை சந்திக்க ..
   நன்றி அக்கா இங்கே பல அம்மாக்கள் இப்படிதான்க்கா பிள்ளைங்க பல்கலைக்கழகம் போகும்போது இவங்களும் படிக்கச் போயிடுவாங்க :) அவ விடமாட்ட போலிருக்கு நேற்றே நிறைய ஓபன் யூனிவர்சிட்டி விபரமெல்லாம் எடுத்து கொடுத்திருக்கா
   மிக்க நன்றி அக்கா ..

   Delete
 29. சில பதில்கள் நேர்காணலுக்குச் சென்று வந்தபின்தான் நமக்கு மண்டையில் உதிக்கும்

  ReplyDelete
  Replies
  1. அதென்னவோ உண்மைதான் ..பல நேரம் அந்த நேரம் தோன்றாதது லேட்டா தோணும் இதை சொல்லியிருக்கலாமோ அதுவா இருக்குமோன்னு

   Delete
 30. அம்மாடி ,..இன்னிக்கு பார்த்து எங்க வீட்ல சமையல் வேலை அதிகம் ..முருங்கை கீரை பொரியல் சாம்பார் ராய்தா ஆலூ ஜீரா எல்லாம் செஞ்சிட்டு வரேன் எல்லாருக்கும் பதில் கொடுக்க

  ReplyDelete
 31. மற்ற எல்லாவற்றையும் விட அந்த லிப்ட் அனுபவம் பயங்கரமானதுதான். The Baby's Day out படம் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா :) நான் மிகவும் பதறிப்போனேன் அன்னிக்கு .. அடிக்கடி நினைவுக்கு வரும் .

   Delete

 32. மக்களே இன்னொரு சமையல் குறிப்பு வெளி வரப் போகுது ஜாக்கிரதையாக எல்லோரும் ஒடிப் போங்கள்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) நானே போட்டோஸ் எடுக்காம விட்டுட்டேன்னு கவலைல இருக்கேன் :)

   Delete
 33. கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் ஹிந்தி தெரியாமல் போனதும் வருத்தமே )) என் போன்ற கரடிகளைவிட அது மேல்))

  ReplyDelete
  Replies
  1. thanks :)அதேதான் நேசன் ஹிந்தி இங்கே லண்டன்லேயும் நிறைய பேர் கேப்பாங்க :) பேச தெரியுமான்னு ..கொஞ்சம் [படித்து வைத்திருக்கலாம் அட்லீஸ்ட் தெரியும்னு நாலு வார்த்தையாவது பேச உதவியிருக்கும்

   Delete