அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/4/17

நீலா ....மாலா ...

நீலா ....மாலா 
------------------------                                                                         


                                நீலாவும் மாலாவும் ஒரே கல்லூரியில்  பயிலும் மாணவிகள் இருவருக்குமே பாடங்களில் முதல்மதிப்பெண் எடுப்பதில்  போட்டி உண்டு ஆனாலும் அதில் மாலாவுக்கு கொஞ்சம் தான் மட்டும் எப்பவும் முதலில் எதிலும் நிற்கவேண்டும் என்ற சிறு அகங்காரமும் உண்டு ..தொலைவில் வசித்தாலும் வகுப்புக்கு  நேரத்துக்கு வருகிறாள் என்று நீலாவை ப்ரொபஸர் பாராட்டி விட்டால் அடுத்த நாள் முதல் நீலா வருமுன் வகுப்பில் மாலா இருப்பாள் ..தேர்வு தாளில் நீலாவைவிட ஒரு மதிப்பெண் குறைந்தாலும் ஒரு வாரம் தூக்கம் வராது மாலாவுக்கு. ..இப்படி எல்லாவற்றிலும் போட்டி மனப்பான்மையுடன் ஆனாலும்  அதை வெளிக்காட்டாமல் நீலாவுடன் பழகி வந்தாள் மாலா ...ஒரு முறை வகுப்பறையில் விரிவுரையாளர் வராத நேரம் எல்லா மாணவிகளும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்  ,பேச்சு அப்போதைய பேஷன் புது டிசைன் சல்வார் கமீஸ் பக்கம் திரும்பியது அப்போது நேரு மாமா கோட் போன்ற ஜாக்கட் டிசைன் வடிவில் உள்ள சல்வார் கடைகளில் விற்பனையாகியது (அதுவும் எதோ ஒரு திரைப்படத்தில் அப்போதைய பிரபல நடிகை அணிந்து வந்ததும் உடனே எல்லா கடைகளிலும் அதே டிசைன் பிரபலமாகிவிடும் இந்த உடைகள் நகைகள்  மட்டும் ..நதியா கம்மல் நதியா மிடி ,ரேவதி கம்மல் ஜிமிக்கி சுகன்யா பானுப்ரியா போட்ட சல்வார்கமீஸ் அமலா போட்ட dhoti சல்வார் இதெல்லாம் அப்போ ரொம்ப பிரபலமாக இருந்தது) ... 

       அப்போ நீலா  தனக்கு அதே டிசைனில் சல்வார் வாங்கியிருப்பதை சொன்னாள்..உடனே  மாலாவும்  சொன்னாள் தானும் அந்த டிசைன் வாங்கி வைத்திருப்பதாக ..மாலா  சொன்னாள்  நீலா நாளை இருவரும் அதே உடைகளை அணிந்து வருவோம் என ..பிறகு வீட்டுக்கு புறப்படுமுன் என்ன யோசித்தாளோ திடீரென நீலாவிடம் ..,நாளை வேண்டாம் வேறொரு நாள் இருவரும் புத்தாடைகளை சேர்ந்து அணிந்து வருவோம் என்று கூறினாள் .இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர் .மாலா .மனதில் ஒரு குறுஞ்சிரிப்பு //நீலா  நாளை நீ ஏமாறப்போகிறாய் அதென்ன எப்போதும் எனக்கு போட்டியாய் எல்லாவற்றிலும் நீயே முதலில் வருவது நாளை  பார் நான் மட்டும் புது ஆடை அணிந்து வருவேன் உனக்கு சொல்லாமல் என மனதில் நினைத்துக்கொண்டே உறங்க சென்றாள் ..அடுத்தநாள் காலை தனது புது ஜாக்கெட் கோட் டைப் சல்வாரை  பெருமையுடன் அணிந்து பளபளவென கல்லூரி சென்றடைந்தாள்  அங்கே அவள் கண்ட காட்சி .....................

நீலா முந்தின நாள் சொன்ன புது டிசைன் சல்வாருடன் வகுப்பில் அமர்ந்திருந்தாள் :)))
மாலாவுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது ..என்னப்பா நீலா  நீ இன்று புது உடை அணிய மாட்டேன் என்றுதானே நேற்று சொன்னாய் ?? அதற்கு நீலா ஆமாம்பா ஆனா மற்ற சல்வார் எல்லாம் அயர்ன் செய்ய வேண்டியதாக இருந்தது பஸ்ஸுக்கு தாமதமாச்சா அதனால் நேரத்தை மிச்சப்படுத்த புதியதை அணிந்தேன்  (ஆனால் இந்த நீலா மட்டும் மாலா புது சல்வார் சொல்லாமல் அணிந்து வந்ததை  பற்றி கேட்கவில்லை ).. .அதைவிட ஹைலைட் என்னவென்றால் வகுப்பில் எல்லா மாணவிகளும் சொல்லி வைத்தாற்போல  ..இருவரும் லேட்டஸ்ட் மாடல் சல்வார் அணிந்துள்ளீர்கள் ஆனால் நீலாவின் உடை மிகவும் அழகாக பொருத்தமாக இருக்கிறது என்று சொன்னதை கேட்டு மாலாவின் முகம் போன போக்கை பார்க்கணுமே :)))

52 comments:

 1. லேட்டஸ்ட் மாடல் சல்வார் போலவே அழகான கதை.

  எதிலும் போட்டி பொறாமைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 2. வாங்க கோபு அண்ணா ..உண்மைதான் ...ஹா ஹா :) லேட்டஸ்ட் சல்வார்னு இங்கே தினமும் புது டிசைன் வருது ஒன்றை வாங்கினா ஒரு 3 மாதத்தில் வேறே டிசைன் மாடல் வரும் அதுவும் இப்போதைய டிஸைனலாம் சல்வார் ன்னு சொல்றாங்க ஆனா மாக்சி மாதிரி இருக்கு :) ..

  ReplyDelete
 3. //.நதியா கம்மல் நதியா மிடி ,ரேவதி கம்மல் ஜிமிக்கி சுகன்யா பானுப்ரியா போட்ட சல்வார்கமீஸ் அமலா போட்ட dhoti சல்வார் இதெல்லாம் அப்போ ரொம்ப பிரபலமாக இருந்தது) ... ///இவர்கள் எல்லாம் ஓல்ட் ஜெனரசேனை சேர்ந்தவசர்கள் அம்மன் நீங்களும் அந்த ஜெனரேஷனை சேர்த்தவரோ நீங்க என்னை மாதிரி யூத் என்று அல்லவா நினைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. ஹ்ஹா :) இப்போ நமூர்ல இருந்திருந்தா லேட்டஸ்ட் பேசின் பாஷன்லாம் தெரிஞ்சிருக்கும் :) படம் பார்க்கறதில்லையே அதான் பழைய படங்களை அம்மா எங்க அம்மா சொல்வாங்க அதை வச்சி எழுதினேன் :)
   அம்மாடியோவ் இப்படிலாம் சொல்லி தப்பிக்க வேண்டியதாக இருக்கு ..

   Delete
  2. ஒரு கதை எழுதியிருக்கேன் அதில் அமலா பானுப்ரியா மட்டுமே உங்க கண்ணுக்கு படறாங்களா :)

   Delete
  3. I am at work that's why I put only one comment

   Delete
  4. NO PROB :) வேலை முடிஞ்சி வாங்க :) Avargal youth :)

   Delete
  5. மதுரை சகோ ஏஞ்சல் யூத் தான்... அழகா சின்ன பிள்ளைங்களுக்குச் சொல்வது போல எழுதிருக்கங்க....குழந்தை மனசு அவங்களுக்கு....

   ஏஞ்சல் இது கலாய்த்து இல்ல....நிஜமாவே பாராட்டு....காட் பிராமிஸ்...

   கீதா

   Delete
  6. ///ஏஞ்சல் இது கலாய்த்து இல்ல....நிஜமாவே பாராட்டு....காட் பிராமிஸ்...///
   ஓ மை லார்ட்ட்ட்ட்ட் இனி நான் பிரித்தானியாவில இருந்த பாடில்லை:)) ச்ச்சும்மாவே நடை ஒருமாதிரி இருக்கு:) இதோட ஃபிஸ் ட நடை ஸ்டைலே மாறப்போகுதே முருகா:).

   Delete
  7. ஹா ஹாங் :) தேங்க்ஸ் கீதா :) எப்டியோ அதிரா பார்த்துட்டாங்க நீங்க என்னை பாராட்டினதை எனக்கு இப்போ பறக்கிற மாதிரி இருக்கு

   Delete
  8. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படியே பறந்து கொஞ்சம் தேம்ஸ்க்கு வாங்கோ:)

   Delete
 4. ஹா ஹா ஹா இது அதிராவும் அஞ்சுவும் எனத் தலைப்பிப் போட்டுவிட்டு:) சே..சே மாத்திடலாம் என நீலா மாலா ஆக்கினதுபோல இருக்கே.. ஆவ்வ்வ்வ்வ்.. சரி விடுங்கோ இப்போ பெயரா முக்கியம். நதியா ரேவதி காலத்தில நான் பிறக்கக்கக்கூட இல்லயே.. சரி இதையும் விடுவோம்..:)

  ReplyDelete
  Replies
  1. ஆஹாங் இங்கே எல்லாருமே மனசாலே யூத் போலிருக்கே .நாமதான் அவசரப்பட்டுட்டோமோ :))

   Delete
  2. அதிரா என்ன சொல்ல வாரங்கன்னா அவங்கெல்லாம் சாவித்திரி சரோஜா தேவி காலத்து ஆட்கள் என்று சொல்ல வாராங்க

   Delete
  3. என்னது நதியா ரேவதி காலத்தில் அதிரா பிறக்கக் கூட இல்லையா....ஆஆ....அப்போ...80? ஏஞ்சல் வாட்ஸ் திஸ் கோயிங் ஆன்....மதுரை காய் கொடுங்க சாவித்ரினு அடிக்க நினைச்சு. உங்க கமெண்ட் கண்ணுல பட்டுருச்சு....அதே அதே....

   கீதா

   Delete
  4. ஆமா ஆமா ..சாவித்திரி இல்லை கண்ணாம்பா தான் சரி

   Delete
  5. ///Avargal UnmaigalApril 4, 2017 at 9:55 PM
   அதிரா என்ன சொல்ல வாரங்கன்னா அவங்கெல்லாம் சாவித்திரி சரோஜா தேவி காலத்து ஆட்கள் என்று சொல்ல வாராங்க//

   ஹலோ எச்சூச்ச்மீஈஈஈஈ.. இவங்கெல்லாம் ஆரூஊஊஊஊஉ?:) ஒருவேளை எங்க பூட்டியின் காலத்தவர்களாக இருக்குமோ?:)

   Delete
 5. இதில் வரும் இரு கதாநாயகிகளுமே நல்லவர்கள் கிடையாதே.. இருவருக்குள்ளும் போட்டி பொறாமையாகத்தான் இருக்கு... அன்று தொட்டு இன்றுவரை இந்த பொறாமை உணர்வு விட்டுப் போகாது... இதுக்கு வயது வித்தியாசம் கூடக் கிடைக்காது. எதுவும் தெரியாது குழந்தையாய் இருந்தால்கூட, தன் அம்மா மடியில் இன்னொரு பிள்ளை அல்லது பூனை நாய் இருந்தாலே பொறாமைப்பட்டு அடித்து.. எழும்பச் சொல்லி அழுகிறது...

  அப்போ வளர்ந்தோருக்கு... ஆளும்.. அறிவும்.. வளரும்போது, பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஅண்மையும்... கூடவே வளரும்தானே:).

  ReplyDelete
  Replies
  1. Awwwww neela is a very kind gentle good hearted girl 😇😇😇😇😇😇

   Delete
  2. அதிரா ..இது ஒரு குட்டி கதை போல எழுத பார்த்தேன் நீலா தெரியாம அன்னிக்கு போட்டுட்டு போனா நீலா நல்லவள் ..அந்த மாலா பற்றி ரொம்ப சொன்னா இன்னும் நீளும் அப்புறம் நானா எப்படி கோபு அண்ணா மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்ட்டா கதை எழுத பழகறதாம் ..

   Delete
  3. நௌ டெல் மீ எப்படி இருக்கு கதை :)

   Delete
  4. இப்போ மாலாவைப் படு கெட்ட வார்த்தையில் நாலு திட்டுத் திட்டச் சொல்றீங்கள்:) ஹா ஹா ஹா அப்பூடித்தானே?:).. சரி விடுங்கோ அஞ்சு புழைச்சுப் போகட்டும்... எவ்வளவுதான் போட்டி பொறாமை ஆணவம் கர்வம் இருப்பினும்.. அனைத்தையும் தாண்டி, தலை எழுத்து, விதி என ஒன்றிருக்கு.. அதை எவராலும் மாற்ற முடியாது...

   யாராவது நம்மேல் பொறாமைப் படுகிறார்கள் எனும்போது,எதுவும் நிரந்தரமில்லை என நினைத்து கடந்து போய்விட வேண்டியதுதான். அடுத்தவரை திட்டி, நம்மை நல்லவர்களாகக் காட்டி என்ன காணப் போகிறோம்...

   Delete
  5. ஹையோ சும்மாதான் சொன்னேன் .. எல்லா மனுஷரும் ஒரே மாதிரி இருந்தாலும் லைப் போரடிக்கும் :)its just a story

   Delete
  6. அந்த பொண்ணு படத்தில் போட்டிருக்கே அந்த சல்வார் அது எப்படி இருக்கு :)

   Delete
  7. சல்வார் பற்றி எல்லாம் என்னால் கமென்ட் சொல்ல முடியாது ஆனால் அந்த பொண்ணு மிக் ஸ்லிம்மாக அழகாக இருக்கிறது சரி சரி அதிராவும் ஏஞ்சலும் அந்த பொண்ணை கண்டு பொறாமை கொள்ளாதீர்கள்

   Delete
  8. ஓ.... இது நீங்கள் எழுதிய கதையா நான் என்னவோ உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நடந்த சம்பவத்தை பெயர் மாற்றி எழுதி இருக்கிறீர்கள் என நினைத்தேன்

   Delete
  9. கதை நன்றாக இருக்கிறது ஆனால் உதாரணங்கள் பழைய காலத்துக்கு ஏற்றதாக உள்ளது காலத்திற்கேற்ப மாறவேண்டும் முன்பு எல்லாம் பெண்கள் சேலை அது இது என்று போட்டி போடுவார்கள் இந்த காலத்தில் பேஸ்புக்கில் எத்தனை பேர் லைக் போட்டார்கள் எத்தன பேர்கள் தங்களை பாலோ பண்ணுகிறார்கள் என்ற பொறாமைதான் அதிகம்

   Delete
  10. உலகத்தில் எல்லாம் கண்டிப்பாக மாறும் ஆனால் மாறாதது ஒன்றே ஒன்றுதான் பெண்ணின் பொறாமை

   Delete
  11. ஆவ்வ்வ் :) இன்னிக்கு 14,200 ஸ்டெப்ஸ் நடந்து டயர்ட் ஆகிட்டேன் நாளை கமெண்டுக்கு பதில் தரேன்

   Delete
  12. சரி சரி ..நிச்சயம் அடுத்தமுறை கதை எழுதும்போது இந்த லேட்டஸ்ட் ட்ரெண்ட்களை நினைவில் வைக்கிறேன் ..ஆனா நான் இப்போ fb லையுமில்லை வாட்ஸாப் குழு எதிலையுமில்லையே அதைத்தவிர வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க உங்களுக்கு தெரிலனாலும் பரவால்ல உங்க இரண்டு காதுகளை நன்கு தீட்டி வச்சி உங்க ஆபீஸ்ல பொண்ணுங்க பேசும்போது ஒட்டு கேட்டாச்சும் எனக்கு டீட்டெயில்ஸ் தாங்க :))

   Delete
  13. மதுரை சகோ நானும் அப்படித்தான் நினைத்தேன் பெயர் மாற்றி...அதில் நிலாவின் பெயர் ஏஞ்சல் என்று நினைத்தேன்....

   கீதா

   Delete
  14. ஆனா அதிரா 4 கால் பூனையாச்சே :) கீதா

   Delete
 6. நல்லாருந்தது ஏஞ்சல்....குழந்தைகளுக்குச் சொல்லும் கதை போல்.... குமுதத்தில் வரும் ஒருபபக்கக் கதை...போல்.... சூப்பர்...நிறைய கதை எழுதுங்க ஏஞ்சல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) தாங்க்ஸ் கீதா ..நிச்சயம் முயற்சிக்கிறேன் மிக்க நன்றி

   Delete
  2. @ அவர்கள் உண்மைகள் ...உண்மைதான் மாறாதது பெண்களும் பொறாமையும் திருவிளையாடல் சீன்ல மாறாதது எதுவொன்னு சொல்லி அதுக்கு ஆன்சரா இதை போடலாம் :)\உண்மையை தைரியமாக சொல்லிவிட்டீர் எதற்கும் தலையில் ஹெல்மெட் அணிந்தே செல்லவும்

   Delete
  3. பொறாமையா? அப்பூடின்னா ஏதும் எக் ரெசிப்பியாஆஆஆஆஅ?:) ஆமா ஆமா அதை என்னால் என்றைக்கும் கைவிடவே முடியாது.

   Delete
  4. :) yes deviled egg recipe :)

   Delete
 7. அடடே... சின்னஞ்சிறு கதை. கதை சொல்லும் பாடம் ஜோர். காலத்தைக் குறிப்பிட்டு சல்வார் டிசைன் எல்லாம் சொல்லியிருப்பதால் சற்றே உண்மை கலந்தது!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆமா ஆமா :) உண்மை சம்பவங்களை சுலபமா கண்டுபிடிச்சுடலாம் :)மிக நன்றி ஸ்ரீராம்

   Delete
 8. ஹா அஹா.. இது எங்க பக்கத்து வீட்டம்மா கதையை விட கொடூரமா இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆமாம்ப்பா ..ஆமாம் ..நிறைய இருக்கு வெட்டிட்டேன் சம்பவங்களை .வாங்க சரவணன் ..அவங்கலாம் எப்படி இருக்காங்க ..உங்க பிளாக்ல அப்டேட் செய்யலையா ?:)

   Delete
 9. விதையொன்று விதைக்க சுரை ஒன்றா முளைக்கும்!.. - என்பார்கள் பெரியோர்கள்..

  அது தான் நினைவுக்கு வந்தது கதையைப் படித்ததும்!..

  அருமை.. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா ..எதை தருகிறோமோ அதையே பெற்றுக்கொள்வோம் ..மிக்க நன்றி

   Delete
 10. அதென்ன கதாநாயகிகள் இருவரும் நீலா மாலாவா ஏஞ்செல் அதிராவா பெண்கள் வயதைக் கேட்கக் கூடாது என்பார்கள் அதனால் அவரவர் கற்பனையில் ஏஞ்செலும் அதிராவும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க ஜிஎம்பி ஐயா ..இல்லை நாங்க இல்லை ஏனென்றால் எங்களில் நான் ஹியூமன் அதிரா பூனை ..

   Delete
  2. ஹா ஹா ஹா பூனைகளுக்கு ஜெலஸ் கிடையாதாக்கும்:)

   Delete
 11. முதலில் எனக்கு குழப்பமாகிட்டுது.2,3 தரம் கதை வாசிச்சுதான் புரிந்தேன் யாருக்கு எரிச்சல்,பொறாமை என. கதை அருமை அஞ்சு. அந்த சுடிதார் ரெம்ப அழகு. இப்ப உள்ளவங்களா பார்த்து ரித்திகா சிங்,கீர்த்தி சுரேஷ் என போட்டிருக்கனும்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) வாங்க ப்ரியா உண்மைதான் யாருக்கு எரிச்சல் பொறாமைன்னு நிறைய சந்தர்ப்பங்களில் கண்டுபுடிக்க முடியாமல்தான் போகிறது ..அது கூட புரியாம நாமும் வெள்ளந்தியா சில பொறாமை பிடிச்சதுங்க கூட பழகியிருப்போம் ஆனா என்ன பண்றது பத்து விரலும் ஒரே அளவில் இருந்தா எந்த வேலையும் பொருளையும் சேர்த்து பிடிக்க முடியாதே ..வெதர் கூட எப்பவுமே குளிராவோ இல்லை எப்பவுமே வெயிலாவோ இருந்தா நமக்கு போரடிக்கும் அதான் கடவுள் இப்படிப்பட்ட மனுஷங்களையும் ஆடுகள் மத்தியில் ஓநாய்கள் போல உலவ விடறார்னு நினைக்கிறன் :) நாம்தான் புத்தியை பயன்படுத்தி நடக்கணும் இல்லைனா இந்தமாதிரி ஜந்துக்களிடமிருந்து விலகி இருக்கணும் ..#எஸ் தமன்னா ரித்திகா லாம் சுரிதார் போடறாங்களா :) ரித்திகாவை பார்தேன் ஒரு படத்தில் அது பாக்சிங் போட்டுது ட்ரெஸ் ஒன்னும் கவனிக்கலை இனிமே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு உங்ககிட்ட கேட்டு போடறேன் :)
   இங்கே எப்பவும் பஞ்சாபியர் இந்த பாட்டியாலா சல்வார்தான் நிறைய இலியானா மாக்சி மாதிரி அனார்கலி சல்வார்
   மிக ந்நன்றி ப்ரியா

   Delete
 12. புதிய சல்வார்கள் எல்லாம் விலை அதிகம் மட்டுமே அதிக டிசைன் வருவதில்லை))) சென்னையில் அனுபவம் அப்படி))

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஒண்ணுமே இல்லாத துணிக்கு 2000 சொல்வாங்க அங்கே

   Delete
 13. பெண்களுக்கு எப்போதும் பொறாமைதான் உடைவிடயத்தில்)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க நேசன் ..சத்தமா சொல்லக்கூடாது வீட்டம்மா காதில் விழப்போது :)
   உடை விஷயத்தி ஸ்னேகா டு சமந்தா சேம் :) அதுவும் நம்ம ஊர்ல ரொம்பவே பிரச்சினை வரும் :)

   சென்னையில் சல்வார் இப்போ அவ்ளோ பிடிக்கலை நேசன் இங்கே நான் ரூபாலி அப்புறம் நிறைய வட இந்திய கடைகளில் வாங்குவேன் பரவாயில்லை

   Delete