அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/24/17

வந்ததே வசந்தம் :) மற்றும் எனது பேலியோ பயணம் ..swans ducklings

வந்ததே வசந்தம் :) 


முதலில் ஒரு சந்தோஷமான விஷயம் நாங்க அடிக்கடி நடைபயிற்சி  செல்லும் வழியில் வசிக்கும் எங்கள் வளர்ப்பு மகள் 12 குழந்தைகளுக்கு தாயாகி என்னையும் என் கணவரையும் பாட்டி   தாத்தா ஆக்கிட்டா :) நல்ல கடும் குளிர்காலத்தில் கூட நான்  அவ்வழியே சென்று வாத்துக்களுக்கு உணவிட்டு வருவேன் ..அந்த வாத்து 12 பாப்பாக்களையும் கூட்டிட்டு என்னை நோக்கி வந்தாள் :) அன்னிக்குத்தான் முதலா தனது குழந்தைகளுக்கு வெளியுலகை அறிமுகம் செய்கிறாள் தாய்..
 காண கண்கொள்ளா காட்சி ..குட்டிக்குட்டி பஞ்சு பந்துகள் கீச் கீச்னு பார்க்க அவ்ளோ சந்தோசம் எங்களுக்கு ..
 இதோ  படங்கள் ..

                                                                                         


சென்ற பதிவில் ஆலயத்தில் என்னை பார்த்த பலர் என்னிடம் ஒன்று கூறினார்கள் என்றேனே நினைவிருக்கா ? :)  அது அது அது :)
எல்லாருமே சொன்னது நான் உடல் மெலிந்துவிட்டேன் ..2016 ஜனவரி முதல் இந்த பேலியோ உணவுமுறையை துவங்கினேன் பிறகு என்னால் தொடர முடியாத சூழலில் .(காரணம் அவர்கள் பரிந்துரைத்த முட்டை மீன்  இறைச்சி வகையறாக்களை என்னால் உண்ண இயலவில்லை )..பிறகு வெறும் சைவம் பேலியோ உணவு  உண்டு வந்தேன் அதில் எடைக்குறைப்பு மெதுவாகவே இருந்தது ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்தது மிக முக்கியமாக கடந்த 4-5 வருடங்களாக இருந்த மகரந்த அலர்ஜி என்னை விட்டு ஓடிவிட்டது..
டயட் துவங்கும்போது முதல் பத்து நாட்களுக்கு பயங்கர சபலமாக இருக்கும் .வாக்கிங் போனாலும் தோசை வாசனை சமோசா வாசனை எல்லாம் வந்து மூக்கில் பட்டு பசி உண்டாகும் ..இதெல்லாம் சில நாட்களுக்கு தான் பிறகு சே அரிசியா வேணாம்னு வெறுப்பு வரும் :) இப்போ மெயின்டெனன்ஸ் டயட்டில் இருப்பதால் ஒரு கோப்பை அரிசி சாதம் உண்ணலாம் ஆனாலும் எனக்கு வாரம் ஒருமுறை மட்டுமே அதையும் உண்ண பிடிக்குது ..

                                 கோதுமை அறவே இல்லை எனது உணவில் நிறைய காய்கறிகள் காலிப்ளவர் சாதம் என வாழ்க்கைமுறை மாறிவிட்டது  பல வருடங்கள் 2016 க்கு  முன்வரை காலை  பிஸ்கட்டுகள் இல்லைனா வெள்ளை ப்ரெட் .பகலில் குழம்புடன் ரஸ்க் என கொஞ்சமும் தரமில்லா உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் மட்டுமே சாப்பிடுவேன் .வெறும் சப்பாத்தியா சாப்பிடுவேன் ஆனால்  இப்போ மாறிவிட்டது உணவு பழக்கம்   ..காலை ஒரு கோப்பை க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் ..பகல் வெரைட்டியாக கூட்டு பொரியல் எல்லாம் பேலியோ காய்கறிகள் சாலட்  க்ரீன் ஸ்மூத்தி இரவு  வெஜிடபிள் சூப் .சமையல் செய்ய எண்ணெய் நல்லெண்ணெய் தேங்காயெண்ணை ஆலிவ் எண்ணெய்மட்டுமே சமையலில்..நாள் முழுதும்  அசதியுடன்  தூக்கமா  வரும் ஆனால்  இப்போ full எனர்ஜி  ..தற்போது எடை 57..அதை அப்படியே தொடர்கிறேன் ..தினமும் 10,000 -12,000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன் ..பருப்புகளில் எதையும் உணவில்சேர்ப்பதில்லை .குழம்பு மசாலா கூட பருப்பு இல்லாமலே அரைக்கிறேன் ..காபி குடிப்பேன் சர்க்கரை சேர்க்காமல் ..எடை குறைப்பு எனது இலக்கு இல்லை ..ஆனால் பலவித ஒவ்வாமைகளால் கஷ்டப்பட்டப்போ இந்த க்ளூட்டன் இல்லா பேலியோ உணவுமுறைதான் எனது உடல் நலத்தை  சீராக்கியது ..ஒவ்வாமைன்னா எதற்கும் அலர்ஜி உண்டாகும் எனக்கு ஒரு கலர் சேர்த்த பொருள் ஸ்வீட் சாப்பிட்டாலும் பிரச்சினை தான் ....தட்டு நிறைய வழிய வழிய அரிசி சாதம் போட்டு குழம்பு ஊற்றி உண்ட காலமெல்லாம் போச்சு :) ஆனால் உடல் ஹெல்த்தியா இருக்கு ..முன்பு தலைவலி இடைவிடாது வரும் இப்போ அதெல்லாம் ஓடியே போச்சு ..உடல் நலன் காக்க அரிசியின் கோதுமையின்அளவை குறைங்க ..எல்லாம் சீராகும் ..குறிப்பா தினமும் நடக்கணும் அது பல பிரச்சினைகளை குறைக்கும் ..மிக முக்கியமா நான் வீட்டிலேயே சமைத்து உண்பேன் .எண்ணெயில் குளித்த மற்றும் எந்த குப்பை உணவுகளையும் தொடுவதில்லை ..

இது நாங்கள் தினமும் நடக்கும் பாதை மற்றும்பாதையில் பூத்துள்ள செர்ரி  மரம் 

                                                                                 

இது இன்னொரு பிள்ளை :) அவன் மனைவி எங்கோ முட்டையில் அடைகாக்கிறா ..அதனால் தனியே சுற்றுகிறான் :) 


                                                                          

பேலியோ தொடர்புடைய பதிவுகள் மனோ அக்கா விளக்கமா எழுதியிருக்காங்க 


http://muthusidharal.blogspot.co.uk/2017/02/blog-post_20.html

http://muthusidharal.blogspot.co.uk/2017/03/2_3.html


மிக முக்கியமான விஷயம் எந்த ஒரு புதிய டயட் மேற்கொள்வதாக இருப்பினும் முறையே மருத்துவ ஆலோசனை பெற்றே துவங்கவும் 
மற்றுமொரு பதிவினில் சந்திப்போம் ....
62 comments:

 1. நீஞ்சி வரும் பெண் வாத்து + 12 வாத்துக்குஞ்சுகள் படம் அழகோ அழகாக உள்ளன.

  ஒயிட் கலர் ஆண் வாத்து தனிமையிலும் இனிமையாக அதைவிட அட்டகாசமாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபு அண்ணா ..12 பேரும் துறுதுறுன்னு இருக்காங்க இன்னிக்கும் பார்த்தேன் ..
   அந்த தனிமை விரும்பி கொஞ்சம் நாளில் பிள்ளைகளை அவர் மனைவி கூட்டி வரும்போது பொறுப்புகள் கூடும் :)

   Delete
 2. //இது நாங்கள் தினமும் நடக்கும் பாதை மற்றும்பாதையில் பூத்துள்ள செர்ரி மரம் //

  சூப்பராக உள்ளது. இதில் ’நாங்கள்’ என்றால் யாரோ ? ஒருவேளை அதிராவோ ?

  நீங்கள் 57 என்றால் அவங்க 97 ஆஆஆஆ ? சரி ... சரி ... யார் எத்தனை இருந்தால் நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்.

  நான் பல்லாண்டுகளாக 95 to 98 ஐயே மெயிண்டைன் செய்து வருகிறேனாக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) இல்லை கோபு அண்ணா நானும் என் கணவரும் மற்றும் விடுமுறை நாளில் மகளும் ..அதிரா வாக்கிங் லாம் போகாத குண்டு பூனை :)

   Delete
  2. அப்புறம் அதிராவின் வயது அல்லது எடை சொல்லும்போது 88 ,99 இப்படித்தான் சொல்லணும் இல்லைன்னா நம்பரை மாற்றிபோட்டுக்கும் குண்டு பூனை

   Delete
  3. My current weight is 55 kg, note pannidunko.

   Delete
 3. உங்கள் வளர்ப்பு மகள் உங்களை அடையாளம் கண்டுகொள்வாளா!

  டயட்! என்னால் கடைப்பிடிக்க முடியாத ஒன்று.

  படங்கள் அழகு. தனியான அந்தப் பையனைப் பார்த்தால் பாவமா இருக்கு. பையனா பொண்ணா!

  ReplyDelete
  Replies
  1. ///பையனா பொண்ணா!//

   ஹா ஹா ஹா சகோ ஸ்ரீராமுக்கும் சந்தேகம் வந்திடிச்சு:).. அஞ்சு கமான்.. எனாக்கும் இதே டவுட்டுத்தேன்ன்:) கிளியர் த டவுட் பீஸ்ஸ்ஸ்:).

   Delete
  2. @ sriram and athiraa :) the knob on top of the beak, in the Male is significantly larger ..thats how i found that it was the male

   Delete
  3. ஸ்ரீராம் அது நாங்க தினமும் நடக்கும் பாதை இன்னிக்கு பேரப்பிள்ளைங்க ஓடோடி வந்தாங்களே ..வீடியோ நெக்ஸ்ட் பதிவில் :)
   ஏற்கனவே முதல் நாள் எடுத்தது 20 mb சைஸ் இணைக்க முடில ..

   எனக்கு வேற வழி இல்லை நான் கடைபிடிக்கலைன்னாலும் டயட் என்னை விடாது :) அவ்ளோ ஒவ்வாமையும் சரியாக காரணம் இந்த டயட்தான் :)

   Delete
 4. Fantastic dear. Keep it up. Duck mamma is so sweet.

  ReplyDelete
  Replies
  1. Thanks Vallimmaa :) ஒரு வீடியோ எடுத்தேன் வல்லிம்மா இணைக்க முடில அவங்க முதல் நாள் குட்டியூண்டா இருந்தாங்க ..இன்னிக்கு போனப்ப எடுத்த வீடியோ கொஞ்சம் வளர்ந்திட்டாங்க :) நெக்ஸ்ட் பதிவில் போடறேன் ..

   Delete
 5. அது எப்படி?.. ஆச்சர்யம்!..

  கொத்த மல்லித் தழை, கொய்யா, பீர்க்கு, பீட்ருட், சுரைக்காய், கோவைக்காய் - எனது சமையலில் தவறாமல் இடம் பெறுபவை..

  அதிலும். காலிஃபிளவர் - ஆஹா.. அது செய்கின்ற மாற்றங்கள்...

  பிஸ்கட், பிரட், புரோட்டா - வகையறாக்களுக்கு விடை கொடுத்தாகி விட்டது..
  அந்த டயட் இந்த டயட் என்றெல்லாம் இல்லை..

  இரண்டாண்டுகளுக்கு மேலாக எடை சீராக இருக்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க சந்தோசம் நல்ல விஷயம் ஐயா ..நான் சப்பாத்தியை விட்டதுமே உடம்பு பழைய நிலைக்கு திரும்பி விட்டது ஆரோக்கியமா இருக்கு
   இந்த காய்கறித்தட்டில் தினமும் மாற்றம் வரும் ..பீட்ரூட் சும்மா வாங்கினதை வைத்தேன் மக்களுக்கு செய்ய வணங்கியது நான் அடிக்கடி கொத்தமல்லி ஜூஸ் வல்லாரை ஜூஸ் முருங்கைக்கீரை சூப் தினமும் இரண்டு கொய்யா காய்கள் என சாப்டுவேன்
   ஆரோக்கியம் நன்றாக இருக்கு அடிஷ்னலா எடை குறைந்துவிட்டது ..இனிப்பு சின்னத்தில் இருந்தே உண்பதில்லை அது எனக்கு ப்ளஸ் பாயிண்ட்

   Delete
 6. வாஆஆஆவ்வ்வ்வ் முதேல்ல் தடவையாக அஞ்சு பாட்டியாகிட்டா.. வாழ்த்துக்கள் அஞ்சு....

  எல்லோரும் ஓடியாங்கோ அஞ்சுவை வாழ்த்துங்கோ... விரும்பினால் போஸ்ட் போட்டே வாழ்த்திடலாம்:).

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் மேடம் எனக்கு உடன் பிறவா சகோதரி நீங்க என்பதால் நீங்களும் பாட்டிதான் :)
   முதலா குழந்தைங்களுக்கு சீர் விடுவாங்க பட்டு துணி வெள்ளி சங்கு எல்லாம் வரணும்

   Delete
  2. சீர்கொண்டுட்டு வாங்க

   Delete
  3. /// உடன் பிறவா சகோதரி ///
   கரீட்டு.. குடும்பத்தின் மூத்த வாரிசுக்கு மூத்த வாரிசு நீங்க:), கடசி வாரிசின் கடசி வாரிசு நான்:) நமக்குள் 20 வயசு இடைவெளி இருப்பதை மறந்திட்டீங்க:).. மீ சுவீட் 16 பாட்டியாக்கும்:)..

   என்னாது வெள்ளி, சங்கா? எதுக்கு? ஹைோ நா வள்ள இந்த வெளாட்டுக்கூஊஊஊ:).

   Delete
  4. ஹையோ மறந்துட்டேன் வெள்ளி கொலுசு கூட போடணும் வாத்து பாப்பாக்களுக்கு ..உடனே புறப்பட்டு வாங்க தொட்டில் பங்க்ஷனுக்கு ..கர்ர்ர்ர்ர்

   Delete
  5. 12 செட் வெள்ளி கொலுசாஆஆஆஆ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்... இப்பூடி மனிசருக்கு குழந்தைகள் கிடைச்சா இந்திய முறையில் தாய் மாமாவின் கதி????? :).

   Delete
 7. என்னாதூஊ 12 பேரக்குழந்தைகளோ.. முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்கோ:)., ஆனா பரம்பரைக் கலரே மாறிட்டுதே அஞ்சு.. ஒருவேளை கலப்புத் திருமணமாக இருக்குமோ? சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்... மிகுதிக்கு பின்பு வாறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹ்ஹா :) சந்தேகம் வரலைன்னா அது அதிராவே இல்லையே :) கர்ர்ர்ர்ர் அது மல்லார்ட் டக்ஸ் அந்த நிறத்தில் இல்லைனா தான் டவுட் வரணும் :)

   சீக்கிரம் வந்து பெரிய பாட்டி முறைக்கு நீங்களே திருஷ்டி சுத்துங்க குழந்தைகளுக்கு ..12 வெள்ளி சங்கில் இனிப்பும் கொண்டாங்க
   அப்புறம் தொட்டில் பங்கஷன்லாம் இன்னும் இருக்கு கெட் ரெடி :)

   Delete
 8. வாத்துக்கள் படம் பார்க்கவே நல்லா இருக்கு. முன்னமேயே வாத்துகளின் படத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

  பேலியோ டயட் பார்த்தேன். அதையும் நல்லா ஆராயவேண்டியதுதான். வெஜிடேரியன், சுலபமா ஃபாலோ பண்ணத்தக்கதா, என்ன என்ன சாப்பிடணும்னு படிக்கணும். எனக்கு சாலட்லாம் பிடிக்காது. ப்யூர் வெஜிடேரியனுக்கு என்ன டயட் என்றெல்லாம் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் சகோ சுமார் தொடர்ந்து ஒன்றரை வருஷமா அதே வழியாக அதாவது அவங்க ஏரியாவை கடந்து நாங்க வாக்கிங் செல்கிறோம் அதனால் அங்குள்ள ரெசிடென்ட்ஸ் ரொம்ப ஸ்நேகமாகிட்டாங்க :) இருட்டு நேரத்திலும் குவாக் குவாகினு ஓடி வருவாங்க ..இது இந்த வருஷத்து பேபிஸ் :) ..

   வெஜிடேரியன் டயட்டில் நான் ரா வீகனும் கொஞ்சம் சேர்த்துக்கறேன் அதுதான் க்ரீன் ஸ்மூத்தி ..
   பனீரிலும் வெரைட்டி டிஷஸ் செய்றாங்க .நீங்க முகப்புத்தகத்தில் பார்த்தா நிறைய ரெசிப்பீஸ் கிடைக்கும்
   முன்னோர் உணவுனு ஒரு வலைபூவ்வே இருக்கு ..நானா பிறகு லிங்க் தரேன்

   Delete
 9. ஒரே அடியா பன்னிரண்டு பேரன்பேத்திகள். வாழ்த்துகள் அழகு அம்மாபோலவே பசங்களும். மிஸ்டர் வாத்தும் அழகாஇருக்கார். டயட்டில் முன்னேற்றம் இருந்தால் அது ஒன்றே போதும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சியம்மா :) ஒரே செட்டில் 12 பேர் :) அம்மா பொறுப்பா கவனிக்கரா வாண்டுகளை ..இன்றும் பார்த்தேன் ..ஓடி வருதுங்க குட்டிஸ் ..மிக்க நன்றிமா டயட் ஒழுங்கா செல்வதுதான் எனது உடலுக்கும் நல்லது

   Delete
 10. //குட்டிக்குட்டி பஞ்சு பந்துகள் கீச் கீச்னு பார்க்க அவ்ளோ சந்தோசம் எங்களுக்கு ..
  இதோ படங்கள் ..//
  ஓம் அஞ்சு இவைகளைப் பார்த்தால் கண்ணை நகர்த்தவே முடியாது, எனக்கு வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்க ஆசை.. தூக்கிவரப்பிடாதெல்லோ:)

  ReplyDelete
  Replies
  1. என்னா ஒரு ஆசை :) காமெரா வச்சி புடிச்சா அவ்ளோதான் :) அவங்கம்மா அப்புறம் என்னைப்பற்றி என்ன நினைப்பா ..தாய்கிட்டருந்து பிரிச்சா பாவம் இல்லையா குண்டு பூனை :)

   Delete
  2. பாட்டி வீடுதானே....:)

   Delete
  3. ஹாஹா ஹாங் :) ஆனாலும் ஒரு காலம் வரை அம்மாகிட்டத்தான் இருக்கணும் பாப்பாக்கள்

   Delete
 11. பேலியோ டயட் என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்னைப் பொருத்தவரை எந்த டயட்டும் இல்லாமல் எடை ஒரே சீராக இருக்கிறது சிலர் சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள் சிலர் வாழ்வதற்காக சாப்பிடுகிறார்கள் உண்ணும்போது உணவு பரிமாறப்படும்போது செய்ய வேண்டிய பயிற்சி தலையை இடம் வலமாக ஆட்ட வேண்டும் வாத்துகளின் பாட்டிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜி எம் பி சார் ..நம்ம நாட்டில் இயற்கையாகவே வியர்க்கும் எந்த டயட்டிங்கும் தேவையில்லை இங்கே நமது உடலுக்கு ஏற்ற சூழல் இல்லை .மேலும் எனக்கு ஒவ்வாமைகள் இருப்பதால்தான் நான் டயட்டிங் எடுக்க வேண்டிய கட்டாயம் .
   பேலியோ என்பது முன்னோர் உணவு முறை

   Delete
 12. ///
  சென்ற பதிவில் ஆலயத்தில் என்னை பார்த்த பலர் என்னிடம் ஒன்று கூறினார்கள் என்றேனே நினைவிருக்கா ? :) அது அது அது :)//

  அதைத்தான் நான் அன்றே சொல்லிட்டனே:) இப்ப போய் பில்டப்பூக் குடுக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆனா ஆதாரத்தோடு நிரூபித்தாஅல் மட்டுமே நாங்க நம்புவோம்... கண்ணால காண்பதும் பொய் காதால கேட்பதும் பொய் என புலாலியூர்ப் பூஸானந்தா சொல்லியிருக்கிறார்:).

  ReplyDelete
  Replies
  1. ஆங் !! நான் நிறைய பதிவுகள் போட இருக்கு இங்கே படத்தை போட்டு வம்பில மாட்டிக்க மாட்டேன் :)

   மெயில் பார்த்து அஞ்சூ நீங்க மெலிஞ்சிட்டீங்கன்னு சொன்நீங்களே :)))))))))))

   Delete
  2. அச்சோ அச்சோ அபச்சாரம் அபச்சாரம்.... இது எப்போ நடந்திச்சூஊஊஊஊ??:).

   Delete
 13. உங்களுக்கு அலர்ஜி இருப்பதால் இப்படி கவனமா இருப்பதே மேல்ல், ஆனாலும் காபோஹைதரேட் இல்லாமல் நெடுகவும் இருப்பது சிலநேரங்களில் உடம்பைக் கெடுத்து விடும்.. நீங்க மீற் வகையும் சாப்பிடுவதில்லை எல்லோ... கிழங்கு வகைகளைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கோ.

  உண்மை நித்திரைத் தூக்கத்துக்கு பாதிக் காரணம் சாப்பாடுதான்.. இனிப்பு, எண்ணெய் , மாச்சத்து இவை மூன்றும் தூக்கத்தைக் கொடுக்கும் + கெடுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதிரா அவ்வப்போது கிழங்கு சாப்பிடறேன் .வேற வழியின்றிதான் டயட்டிங் செய்றேன் ..எஸ் முன்பு நாள் முழுதும் தூங்குவேன் எப்பவும் மயக்க நிலையில் இருக்கும் உடலும் மனமும் இப்போ டோட்டலி சேஞ்ட்

   Delete
 14. கொய்யாப்பயம்:) பார்க்க ஆசையாக இருக்கு, ஊரில் பிடுங்கிச் சாப்பிட்டோம், இங்கு வாங்கிச் சாப்பிடுகிறோம். பிசுக்கங்காய் நான் அதிகம் வாங்குவதில்லை, இடைக்கிடை வாங்கி பால்சொதி வைப்பேன் இடியப்பம், புட்டுக்கு சூப்பராக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நான் டெயிலி ரெண்டு கொய்யா காய் சாப்பிடறேனே :) இங்கே காய் வகைகள் மாறிமாறி உண்பேன்

   Delete
 15. எனக்கு இங்கு நடப்பதுக்கு ரைம் போதவில்லை, அதிலும் குளிர் மழைத் தாக்குதல், அதனால பழையபடி ஜிம் ஸ்ராட் பண்ணியிருக்கிறேன்... அதுதான் எனக்கு எனர்ஜி கொடுக்கிறது.

  நான் யாருடைய டயட்டையும் பின்பற்றுவதில்லை, அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி எடுத்து, எனக்கென தனி டயட் உருவாக்கி வச்சிருப்பேன் எப்பவும்:).. என் சமையல் குறிப்பைப்போல:) ஹா ஹா ஹா:).

  uங்கள் நடக்கும் பாதை ஏனோ கொஞ்சம் பயமாகவே இருக்கு.. எனக்கு இப்படித்தனிமையான இடங்களில் நடக்கப் பயம்.

  இங்கும் இப்போ திரும்பும் இடமெல்லாம் செரி மரப்பூக்கள்.. படங்கள் எடுத்திருக்கிறேன், போட ரைம் கிடைக்கோணும்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ பயந்தாங்கொள்ளி பூனை :) அது கொஞ்சம் மழை நேரம் அதான் இருட்டு மற்றபடி எப்பவும் பிசி ஏரியா நிறைய பேர் பைரவருடன் வாக் போவாங்க .வாங்களேன் ஒருநாள் என்கூட போயிட்டு வருவோம் :)

   Delete
  2. நானும் பேலியோவை எனக்கு வசதியாக கொஞ்சம் கிள்ளி தான் எடுத்தேன் :)

   Delete
  3. நோ நீங்க அந்த வாத்து ஏரில தள்ளிவிடப்பிளான் பண்ணியிருக்கிறீங்க, நா மாட்டேன்ன்ன்:)

   Delete
  4. ஹையோ ஹையோ பூனையின் அறிவே அறிவு :) அதில தள்ளினா எழும்பி வருவீங்க பெரிசா ஆழமில்லை :)
   நான் உங்களை ஓகனேக்கல் நீர்விழ்ச்சில தான் வசந்த கால நதிகளில் பாடிகிட்டு தள்ளி விடுவேன் :)

   Delete
  5. ஹையோ உங்களுக்குப் புரியல்ல, அரை அடித் தண்ணியானாலும் விழுந்திட்டால் எழும்பத் தெரியாதெனக்கு, சுவிமிங் பூல்ல நட்ட மரம் மாதிரியே உலா வருவேன் எங்கிட்டயேவா ஹா ஹா ஹா :).

   Delete
  6. http://simplycatbreeds.org/images/cats-and-water2.jpg

   ippadithaane :))))))))

   Delete
 16. எங்கே அமெரிக்கா பக்கம் இருந்து சத்தமே காணம்?:).. பூரிக் கட்டைக்குப் பதில் உலக்கையாலதான் விழுந்திருக்குப் போல:) பின்ன போற வாற இடத்திலயும், கண்ட நிண்ட ஆட்களிட்டயும்.. நயந்தாராவை அனுப்பி வை எனச் சொன்னால்... மாமியும் எவ்ளோ நாளைக்குத்தான் பொறுமை காப்பா:)..

  ஹையோ இப்போ எந்த ஹொஸ்பிட்டல்ல எத்தனையாம் வார்ட் லயோ தெரியல்லியே:)... எதுக்கும் ஒரு பெட்டி ஒரேஞ் உம் நல்ல ரோயல் ஹாலா அப்பிளும் வாங்கி வையுங்கோ அஞ்சு, பின்னேரம் போய்ப் பார்த்திட்டு வரலாம்:)..

  ஊசிக்குறிப்பு:
  நடந்தே போவோம்.. அப்போதானே ஸ்ரெப் கவுண்டருக்கும் நல்லது:).

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஒருவேளை பருப்பு குழம்பு செய்யும்போது அடுப்பை அணைச்சிட்டாரோ பாவம் :) ..இல்லைனா கராஜில் வச்ச மீன்குழம்பை மாமி பார்த்திட்டாங்களோ :)) எப்படியோ எதுக்கும் ஒரு கெட் வெல் சூன் கார்ட் ரெடி பண்ணிடறேன் :)
   ஆப்பிள் எல்லாம் வேணாம் :) சாப்பட முடியுமோ தெரிலா ..100% ஜூஸ் பாக்கெட் கொண்டுபோவோம் ..

   Delete
  2. ஏன்ன்ன் பல்செட்டும் உழுந்திட்டுதோஓஓஒ உலக்கை அடியில ஹா ஹா ஹாஅ :)

   Delete
  3. ஹாங் ஹாஆஆ :)

   Delete
 17. பேலியோ உணவு முறைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ

   Delete
 18. வாத்து இன்னும் வளமாக வளரட்டும்))) வாத்து என்றாலே நினைவில் ஒரு தங்கை )))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன். தினமும் பார்க்கிறேன் குட்டி வாத்து குழந்தைகளை. ஆம் நினைவு வரும் எனக்கும். அங்கே முக புத்தகம் பக்கம் ரெவரி வந்தா இங்கே அனுப்பி வைஙக .

   Delete
 19. இந்த டயட் எல்லாம் இன்னும் சிந்திக்கவில்லை .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ..இப்போது சிந்தித்தல் பின் காலத்தில் உதவும் நேசன்

   Delete
 20. வாத்து குழந்தைகள் வாவ்!!! 12ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க!!!!! 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ்கனு நம்மூர்ல சொல்லுவாங்கல....அதான் ஹிஹிஹி....பையன் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கானே..தனியா சுத்துர்வன் ..செர்ரி. மரம் பூ அழகு....உங்கள் நடை பாதையே மனத்தைத் கொள்ளை கொள்கிறது....
  பேலியோ...சூப்பரா வோர்க்கவுட் ஆகுது போல..பயணம்..அதனால்..மொபைலில் இருந்து அடிப்பதால்...கும்மி அடிக்க முடியல...ஹஹஹ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா ..12 பேருமே சட்டுனு வளர்ந்திட்டாங்க ..ஸ்ரீராமுக்கு ஒரு குட்டி வீடியோ எடுத்தேன் நேற்று :) அடுத்த பதிவில் இணைக்கிறேன் .


   ஆமாம் கீதா பேலியோ உடன் க்ளுட்டன் free நல்லா உதவுது .கோடை விடுமுறையை என்ஜாய் செய்யுங்க டைம் இருக்கும்போது வாங்க :)
   எனக்கும் அதிராவுக்கும் கூட போர் அடிக்குது உங்க கும்மி இல்லாம :))

   Delete
 21. நான் இருப்பதும் மெயிண்டனன்ஸ் டயட்தான். எடைக்குறைப்பு இலக்கல்ல. உடல் ஆரோக்கியமா இருக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. அதேதான் ..நோ ஜங்க் நோ ஸ்வீட் லெஸ் கார்ப் ..இவ்வளவே .ஆரோக்கியம் நல்லாவே இருக்கு

   Delete
 22. 12 பேரும் இப்போ வளர்ந்திருப்பாங்க. அழகான படங்கள் அஞ்சு.. நாங்க நடக்கும் பாதையும் ஏரியை சுற்றிதான் இவங்க நிறையபேர் இருக்காங்க. ஆட்களை பார்த்துப்பார்த்து நல்லா பழகிட்டாங்க. முன்பு உணவு கொடுப்பாங்க. இப்போ தடை அதற்கு.
  நோய் இல்லாமல் இருந்தாலே போதும் அஞ்சு. இப்போ சின்னதுகளுக்கே என்னமோ சுகயீனங்கள். நானும் உங்க எடைதான். உணவு கட்டுபாடு இல்லை. ஸ்வீட் கொஞ்சம் குறைக்கனும். வாரம் ஒரு முறைதான் சாதம்.கொய்யா எங்களுக்கும் கிடைப்பதால் வாங்குறோம் அடிக்கடி.

  ReplyDelete