அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/17/17

ஈஸ்டர் ...அன்றும் இன்றும்

ஈஸ்டர் ... 



                                                                                 



                        நாங்கள் 10 வயதில் கொண்டாடிய ஈஸ்டருக்கும் பல வருடங்கள் கழித்து  எங்கள் மகளின்  பதின்மத்தில் கொண்டாடும் ஈஸ்டருக்கும் தான் எத்தனை வித்தியாசம் !! நாங்கள் பள்ளி படிக்கும்போது எங்க பகுதி பேக்கரிகளில் ஹாட் க்ராஸ் பன் பெரிய வெள்ளியன்று விற்பனையாகும் அன்று ஆலயத்தில் காலை 11 முதல் பிற்பகல் 3 வரை ஆராதனை  நடக்கும் ஆராதனை  முடிந்ததும்
நீர் மோர் வழங்கப்படும் .அனைவரும்   அன்று விரதமிருந்து மூன்று மணிக்கு மேலே தான் உணவு உண்பார்கள் அது கூட உளுந்து சேர்த்த கஞ்சியும் தேங்காய் துவையல் அல்லது சைவ சமையல் ..பலர் அந்த நாற்பது நாளுமே ஒரு பொழுது விரதம் இருப்பார்கள் ..பிறகு அடுத்த நாள் சனிக்கிழமை சண்டே ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஆலயத்தில் ஜீசஸ் க்ரைஸ்ட் தமிழில் மொழிமாற்றம் செய்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் ..ஜீசஸை சிலுவையில் அறையும் காட்சி கண்டு நாங்க சின்ன பிள்ளைங்க எல்லாருமே தேம்பி அழுது கண்ணீர் ஆறாக ஓடும் ...பிறகு அன்று ஆலயத்தை முழுதும் மல்லிகை லில்லி மலர்களால் அலங்கரிப்பார்கள் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு ஈஸ்டர் ஆராதனை நடைபெறும் புத்தாடை அணிந்து செல்வோம் ..பிள்ளைகளுக்கு ஈஸ்டர் முட்டைகள் வழங்குவார்கள் .அது வெள்ளை  அல்லது லைட் வர்ணத்தில்  இனிப்பு சுவையோடு உடைக்கக்கூடியவாறு  இருக்கும்..

                                                                                


 அதை உடைத்தால் உள்ளே 8 நியூட்ரின் பாரிஸ் மற்றும் எக்லர்ஸ் இன்னும் சில வகை சாக்லேட்ஸ் உள்ளிருக்கும் ..வீட்டில் காலை தோசை மற்றும் குருமா செய்வாங்க ..ஈஸ்டருக்கு ஸ்பெஷலா தொதல் /தொல்தொல் ,விவிக்கா அல்லது உரப்பம் செய்வாங்க ....அப்புறம் முக்கியமான விஷயம் 7/8 மாசத்துக்கு முந்தியே திராட்சை பழங்களை கல் சாடி அல்லது மண் பானையில் போட்டு வீட்டிலேயே ஒயின் தயாரித்து வழங்குவார்கள் ..ரொம்ப எல்லாம் வராது ஆளுக்கு பாட்டில் மூடி அளவு தான் 5 மில்லி தான் வரும் ..
அதை  கண்ட்ரி (ரவை மற்றும் நட்ஸ் சேர்த்து செய்வது )கேக்குக்கும் பயன் படுத்துவாங்க ..இது தான் அன்றைய ஈஸ்டர் 

                       இங்கே வெளி நாட்டில் வந்தபின் தான் ஈஸ்டர் என்ற திரு நாளை  சாக்லேட் முயல்களும் சாக்லேட் முட்டைகளும் ஆக்கிரமித்து கொண்டதை பார்த்தேன் .இங்கே ஈஸ்டர் என்பதை ஸ்ப்ரிங் விழா வாக கொண்டாடுகிறார்கள் ..பிப்ரவரி வாலன்டைன்ஸ் டேக்கு பிறகு இந்த ஈஸ்டர் முட்டைகளும் சாக்லேட்டுகளும் கடை செல்புகளில் அடுக்கி வைத்திருப்பார்கள் ..ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கும் முதன்முதலில் கணவர் வாங்கி கொடுத்த முயல் பொம்மையை உடைக்கவே மனம் வரலை ஆறேழு மாதங்கள் வைத்து மெதுவா குப்பை தொட்டிக்கு போச்சு : அத்தனை அழகு  இந்த சாக்லேட் முட்டைகள் மற்றும் முயல்கள் இங்கே .வீட்டையும் பிளாஸ்டிக்  முட்டைகளால் மற்றும் மலர்களால் அலங்கரிப்பார்கள் ..



இங்கே பெரிய வெள்ளி ஆராதனைக்கு சென்றோம் ..ஒரு ரெவெரென்ட் மிக உருக்கமாக சிலுவைப்பாதை இயேசுவின் பாடுகளை விவரிக்கவும் ஒரு பத்து பேர் தேம்பி அழ ஆரம்பித்து விட்டனர் ..அதில் இன்னொரு பெண் பாதிரியாரும் இருந்தார் ..எனக்கும் அழுகை வந்தது நான்  கண்ணை மூடி ப்ரே செயறமாதிரி மறைச்சிட்டேன் ..அப்போ முன்பு சொன்னேனே அந்த லீ (லியனார்டோ) அந்த சிறுவன் நடந்து சென்று அந்த பெண் பாதிரியாரின் கண்களை துடைத்து விட்டான் ..எனக்கு அதைப்பார்த்து இன்னமும் அழுகை வந்து விட்டது ..அந்த குழந்தைக்கு எத்தனை விவரம் பாருங்கள் !!.

ஈஸ்டர் தினம் ஞாயிறு காலை ஆராதனைக்கு சென்றோம் பிள்ளைகள் அனைவர்க்கும் சாக்லேட் முயல்களை வழங்கினார்கள் பிறகு egg hunt   நடைபெற்றது ஆலய வளாகத்தில் புற்கள் செடிகள் இடையே ஒரிஜினல் மற்றும் சாக்லேட் முட்டைகளை ஒளித்து சிறுவர்களை விட்டு தேடி எடுக்க வைத்தார்கள் ..அது வரைக்கும் சந்தோஷமா போயிட்டிருந்தது ..நான் ஆல்ட்டர் க்ளீனிங் எல்லாம் முடித்து துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது ஓவென ஒரு அலறல் கூரையை பிய்க்கும் சத்தம் ..ஒரு கென்யா நாட்டு பெண்மணி அயோ என் மகன் ஸ்டிவை காணோம் என்று ஆர்ப்பாட்டம்..ஆலயதில் இருந்த அனைவரும் ஆளுக்கொரு மூலை சிதறி ஓட தேட துவங்கினோம் கேட்டை விட்டு போனால் அவனுக்கு ரோட் க்ராஸ் செய்ய தெரியாது வயது 7 அவனுக்கு adhd /dyslexia பிரச்சினையும் உண்டு ஒரு இடத்தில அமைதியாக இருக்க முடியாது ..பாவம் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தை அதனால் எப்பவும் அவனது தாய் அவனருகில் இருப்பார். முன்பு ஒரு விழிப்புணர்வு பதிவில் அவனைப்பற்றி எழுதியிருந்தேன் சில உணவு வழக்கங்களால் அவனுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி வந்து குணமானது ஆனால் பெற்றோரால் தொடர்ந்து உணவை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை ..அந்த பதிவு இங்கே  .
http://kaagidhapookal.blogspot.co.uk/2014/11/loud-speaker-9.html

.இப்படி ஆளுக்கொரு திசையில் தாயின்அலறல் கேட்டு ஓடினோம் ..எங்குமில்லை அவன் திடீரென மற்றொரு சிறுவன் ஒரு ஆடி காரை பார்த்து சிரித்து கையாட்டிக்கொண்டிருக்கிறான் யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை இன்னொரு பெண்மணி காரருகில் சென்றால் !! அங்கே ஸ்டிவ் அவனது தந்தையின் காரை திறந்து உள்ளே ஏறி சைல்ட் லாக்கையும் போட்டு உக்கார்ந்து அவனிடம் உள்ள சாக்லேட்டுகளை அனைவருக்கும் காட்டி கொண்டுருக்கிறான் ..அதற்குள்  அவனை தேடி ஓடிய அவனது அப்பாவை யாரோ அழைத்து வந்து காரை திறந்தனர் ..உள்ளிருந்து ஹாய் ஐ ஹாவ் 5 bunnies அண்ட் 4 எக்ஸ் என்று சிரித்துக்கொண்டே  சொல்கிறான் அவன் அம்மா  மயங்கி விழும் நிலையில் !! ஆனால்  ஸ்டிவுக்கு நடந்தது ஒன்றுமே தெரியல்ல இப்படியாக எங்கள் ஈஸ்டர் சன்டே களேபரமாக நேற்று முடிந்தது :)


முக்கியமான விஷயம் ஒரு 10 பேராவது என்னிடம் ஒன்று சொல்லியிருப்பார்கள் அது என்னவென்று அடுத்த பதிவில் :)


                               மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

57 comments:

  1. ஆவ்வ்வ்வ் மீ தான் 1ஸ்ட்டுப்போல ஈஸ்டர் எக்ஸ் முழுவதும் எனக்கே:) ஆனா நான் சாப்பிட மாட்டேன் எனக்கு சுவீட், சொக்கலேட்ஸ் புய்க்காது...

    கார்ட் ரொம்ப சூப்பரா வந்திருக்குது அஞ்சு, குட்டியா அழகா செய்திருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு சாக்லேட் எக்கெல்லாம் தர மாட்டேன் அதிரா ஸ்பெஷலா கிலுகிலுப்பை பாம்பு முட்டை :) தான் தருவேன்

      அந்த கார்ட் இந்த பதிவில் அழுதாரே லியனார்டோ கண் துடைத்து விட்ட அவருக்கு தான் தந்தேன் :) ரொம்ப சந்தோசம் அவருக்கு

      Delete
  2. வணக்கம்
    நெகிழ்வான நினைவுகளும்
    பரபரப்பான இன்றுகளும் அருமை

    மதம் எப்படி மனிதரை பிணைத்துவைக்கிறது என்பதற்கான சாட்சியாக இந்த பதிவு இருக்கிறது.

    முற்பகுதி நினைவலை அருமை,
    இன்றய பிரார்த்தனை நேரத்தில் கண்ணீரைத் துடைத்த சிறுவன் நினைவில் இருக்கிறான் ..

    நல்ல பதிவு சகோ
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மது ..உண்மையில் சொல்லனும்னா அந்த நாள் போல் இந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை இப்போ எல்லாமே வியாபார நோக்கில் நடப்பது போல இருக்கு மெக்கானிக்கல் லைப் .

      அந்த சிறுவன் கண்ணீர் துடைத்தவன் பற்றி ஏற்கனவே பதிவில் எழுதியிருக்கேன் அவனுக்கு life threatening டிசெபிலிட்டி ஆனாலும் அந்த குழன்தையின் சந்தோஷத்தையும் அன்பையும் சொல்ல வார்த்தையில்லை ..நேற்று நான் மஞ்சள் நிற உடை அவனும் மஞ்சள் நிற சர்ட் அணிந்து வந்தான் ..பேச்சு சரியா வராது ஆனாலும் என் உடையையும் அவன் உடையையும் தொட்டு எதோ சொல்ல முயற்ச்சித்தான்

      Delete
  3. /// நாங்கள் 10 வயதில் கொண்டாடிய ஈஸ்டருக்கும் பல வருடங்கள் கழித்து எங்கள் மகளின் பதின்மத்தில் கொண்டாடும் ஈஸ்டருக்கும் // 60 வருடங்க்அள் கழிச்சு எனச் சோட் அண்ட் சுவீட்டாச் சொல்லியிருக்கலாம்:) சரி போனாப்போகுது விடுங்கோ.

    உண்மைதான், எங்கள் பிள்ளைகளுக்காக முன்பு வீட்டிலேயே எக் ஹண்டிங் வைப்போம்.. ச்பெரும்பாலும் மோல் களிலும் எக் ஹன்டிங் நடக்கும்.. அதுக்கும் புக் பண்ணி விட்டிருக்கிறோம்.. எப்படியோ பணம் உழைப்பதற்காகவே இப்போதெல்லாம் நிகழ்ச்சிகள் பெருகிவிட்டது பக்திக்காக அல்ல.

    என்ன அழகனகான ஈஸ்டர் எக்குகள்.. உள்ளேயும் சுவை வித்தியாசமான ரேஸ்ட்டாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அட ஆமால்ல :) நான் 10 வயதில் கொண்டாடியதற்கும் இப்போ அதிரா 88 வயதில் கொண்டாடுவதற்கும்னு எழுதியிருக்கணும் ..தாங்க்ஸ் அதிரா தவறை சுட்டி காட்டியதற்கு :)

      இங்கே காட்பரீஸ் கம்பெனி எக் ஹண்டிங் செய்றாங்க ..உண்மைதான் அதிரா இப்போ இதை வியாபாரமாகிட்டாங்க

      Delete
  4. ஹா ஹா ஹா “ஈஸ்டர் சண்டேயும் ஸ்டிவ்வும்”... நல்லாவே முடிஞ்சிருக்கு. நோர்மல் குழந்தைகளையே கண்காணிப்பது கஸ்டம், அதிலும் இப்படிக் குழந்தை எனில் மிகவும் கஸ்டமே பராமரிப்பது.... எத்தனை பெற்றோர் இப்படி ஓய்வின்றி குழந்தைகளைக் கவனிக்கிறார்கள்.. கடவுள்தான் அக் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மியாவ் .அந்த பையனின் அம்மா அலறின அலறலுக்கு கோயிலில் இருந்த முக்கால்வாசிப்பேர் ரோட்டுக்கு நால்திசையிலும் ஓடினோம் ..நான் உங்கள்மாதிரி ஹீல்ஸ் போடும் வழக்கம் இல்லாததால் விர்ருனு ஓடினேன் ..:)

      அந்தம்மா அழுகை இன்னும் காதில் ஒலிக்குது எப்பவும் கவனமா இருப்பாங்க ..அவன் கிடைச்சதும் ஸ்டிவ் ஒய் டிடி யூ டூ திஸ் ஐ லவ் யூ என அப்படி ஒரு அழுகை அப்பாவும் ஒரு பக்கம் கண்ணீரோட .. இந்த பெற்றோருக்கும் God துணையா இருக்கணும்

      Delete
    2. ///.நான் உங்கள்மாதிரி ஹீல்ஸ் போடும் வழக்கம் இல்லாததால் விர்ருனு ஓடினேன் ..:)///
      ஓடினீங்க சரி... எதுக்கு ஓடுறோம் எனத் தெரிஞ்சுதான் ஓடினீங்களோ?:).. ஹா ஹா ஹா.

      ஸ்கூலுக்கு ஒரு தாய் டுவின்ஸ் கேள்ஸ் பேபீஸ் உடன் வந்திருந்தா.. 2 வயதிருக்கும். ஒரு குழந்தை பூச்சியைப் பார்த்து ஃபிளை ஃபிளை எனக் கத்தியது.. அது கத்துவதைப் பார்த்த மற்றது... என்ன நடந்ததென்றே தெரியாமல், தான் நின்ற இடத்திலிருந்து துள்ளித் துள்ளிக் கத்திச்சுது பாருங்கோ:) ஹா ஹா ஹா அதை நினைச்சுட்டேன்:)..

      Delete
    3. ஹா ஹாங் :) ஒரு காலத்தில் எதுக்கு சிரிக்கிறாங்கன்னு புரியாம யாரும் தப்பா நினைக்ககூடாதின்னு நானும் சிரிப்பேன் :) ஆனா இது தெரிஞ்சேதான் ஓடினேன் வழில கூட பார்த்து கேட்டாங்க வாட் ஹாபண்ட்னு ..சொல்லிகிட்டே ஓடினேன் ..குட்டி பையன் காணோம்னு
      அப்டியே ஓடும்போது நியூஸ் கிடைச்சது விடல்லையே நானு கிடைச்சிட்டான்னு திரும்ப கத்திகிட்டே ஓடினேன் ..நான் எதுக்கு ஒடினேன்னு எல்லாத்துக்கும் தெரிணுமில்ல

      Delete
    4. அப்போ நீங்க ஓடினதைப் பார்த்தால், சேர்ஜ் ஐ விட்டு வெளியே புஸ்பா அங்கிள் கடைவரைக்கும் ஓடியிருக்கிறீங்க, இது ஸ்டிவ் க்காக ஓடினமாதிரி தெரியல்ல, ஸ்ரெப் கவுண்டருக்காக ஓடினமாதிரியெல்லோ இருக்கு...:)

      Delete
    5. HAA HAA :)Public public dont reveal the secret

      Delete
  5. ///முக்கியமான விஷயம் ஒரு 10 பேராவது என்னிடம் ஒன்று சொல்லியிருப்பார்கள் அது என்னவென்று அடுத்த பதிவில் :)//

    எனக்குத் தெரியாதோ? நீங்க இப்போ குண்டாகிட்டீங்க, இனியாவது ஜிம்முக்குப் போங்கோ எனச் சொல்லியிருப்பினம்.. ஹாக் ஹாக் ஹக்க்க்க்க்க்க்:).

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர் அவங்க சொன்னதை கேக்குமுன்னாடியே இப்படி நெஞ்சு ஹாக்அ ஹாக்குன்னு அடைக்குதே உங்களுக்கு :)அதை அடுத்த பதிவில் சொன்னா என்னாவிங்களோ :) எதுக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வைங்க

      Delete
    2. நோஓஓஓஒ மீ அந்தாட்டிக்காவுக்கு அவசரப் பயணம் போறேன்ன்.. ட்ரம்ப் அங்கிளோடு மீட்டிங்:). 3 வீக்ஸ் ஆல்தான் வருவேன்:).

      Delete
    3. அந்த பதிவை படிக்காம நீங்க ஒரு எட்டு காலை அசைக்கவும் முடியாது ..அப்புறம் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அரை கிலோ வெயிட் ஏறிடும் உங்களுக்கு ஹாஹா

      Delete
    4. ஹஹஹஹ் அதிரா ஏஞ்சல் சொல்லுவது போல எதுக்கும் இன்சுரன்ஸ் எடுத்து வைச்சுக்கோங்க.... செக்ரட்டரிகு ஒயுங்கா பணம் கொடுக்கலியோ..ஹிஹிஹி

      கீதா.

      Delete
    5. ஹஹஹஹ் அதிரா ஏஞ்சல் சொல்லுவது போல எதுக்கும் இன்சுரன்ஸ் எடுத்து வைச்சுக்கோங்க.... செக்ரட்டரிகு ஒயுங்கா பணம் கொடுக்கலியோ..ஹிஹிஹி

      கீதா.

      Delete
    6. ஆமா முக்கியமா ஆக்சிஜன் மெஷின் நர்ஸ் எல்லாரையும் பக்கத்தில் வச்சிக்கோங்க மியாவ் அப்போதான் நல்லது

      Delete
  6. உங்கள் ஞாபகசக்திக்கு பாராட்டுகள் சகோதரி...

    அடுத்த பகிர்வை எதிர்நோக்கி ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) மறதி கொஞ்சம் குறைவுதான் எனக்கு :) அதுவே எனது பலமும் பலவீனமும் :)

      Delete
    2. ஏஞ்சல் கை கொடுங்க...இந்த மறதியால் எனக்குத் திட்டு விழும் வீட்டில் நிறைய...ஆனால் அதுவே எனக்குப் பலமும் கூட...கெட்டவைகளை வெகு எளிதில் மறந்து விடுவேன்....யாரேனும் நினைவு படுத்தினால் கூட சட்டென்று வராது....நிகழ்வுகள் மனதில் இருக்கும்.....அதுவும் நல்ல விஷுவல் நிகழ்வுகள் இயற்கை இவை எல்லாம் ...உங்கள் கருத்தே பலமும் பலவீனமும் அதே அதே...

      கீதா

      Delete
    3. ஹா ஹா கீதா நான் என் கணவரை முதமுதலில் சந்தித்தப்போ என்ன கலர் சர்ட் போட்டர்னு கூட நினைவு வச்சிருக்கேன் ஆனா அதே அவருக்கு ஒன்னும் நினைவில்லை :) சில நேரங்களில் மறதி நல்லது எதுக்குன்னா கெட்டது எதுவுமே நினைவில் இருக்க கூடாது

      Delete
  7. http://kaagidhapookal.blogspot.com என்று எப்போது மாறப் போகிறீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ டிடி ..மாத்திடறேன் விரைவில் :)

      Delete
    2. நான் அன்றே சொன்னேன் அவ மாத்தல்ல.. இப்போ டிடி சொன்னதும் மாத்திட்டா அவ்ளோ பயம் எல்லோருக்கும் சகோ டிடியில்:) ஹா ஹா ஹா எனக்குத்தான் ஒரு பூஸ்குட்டிகூடப் பயப்பூடாதாமே:).

      Delete
    3. ஹாஹா :) உண்மைதான் சகோ டிடி சொன்ன வேகத்தில் செஞ்சிட்டேன் :)
      உங்களுக்கெல்லாம் யாரவது பயந்தா அது உலக அதிசயம் அதெல்லாம் எப்பவும் நடக்காது மியாவ்

      Delete
  8. சின்ன வயசில் ஈஸ்டர் பற்றி அவ்வளவாக தெரியாது கல்லூரி படிப்பு முடித்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் பாளையங்கோட்டையில் நண்பரின் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது வழக்கம் அமெரிக்கா வந்த பின் சர்ச்சிற்கு போகும் பழக்கம் வந்தது அதன் பின் நண்பரின் வீட்டில் கொண்டாடி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது ஈஸ்டருக்கு சர்ச் போகும் பழக்கம் மட்டும் உண்டு நேற்று 12 மணி பிரார்த்தனை கூட்டதிற்கு சென்று வந்தோம் அவ்வளவுதான்

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஆங்கிலிக்கன் இங்கே coe சர்ச் of இங்கிலாண்ட் ..மிட்நைட் மாஸ் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே .ஈஸ்டர் ஆராதனை காலை 10 மணிக்குத்தான் நடக்கும் எப்பவும் எங்களுக்கு ..
      சன்டே ஸ்கூல் விபிஎஸ் மனன வசனம் இப்படிலாம் ஒரே படிப்பு போலத்தான் சின்னதில் ..கான்பர்மேஷன் எடுக்க கூட எங்களை நிறைய மனப்பாடம் செய்ய வைப்பாங்க எங்க ஊர்ல ..இங்கே அதெல்லாம் கிடையாதது பிள்ளைங்களுக்கு

      Delete
  9. உங்கள் சிறுவயது ஈஸ்டர் கொண்டாட்டங்கள் இந்தியாவில் இருந்திருக்கும். இப்போது அங்கே வெளிநாட்டில். அதுவே ஒரு வித்தியாசம்! இப்படி துறுதுறு குழந்தையை வைத்துக்கொண்டு அந்தப் பெற்றோர் எப்படி அலட்சியமாக இருந்தனர்? நல்லவேளை, கிடைத்து விட்டான்.

    தாமதமான ஈஸ்டர் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் :) ஆமாம் சிறு வயது கொண்டாட்டம் திருமணமாகும்வரை இந்தியாவில்தான் ,பிறகு ஜெர்மனியில பிறகு இங்கே சாக்லேட் விஷயத்திலும் நாட்டுக்கு நாடு சுவையும் வெவ்வேறு ..அவன் துறுதுறுப்புதான் பாவம் அந்த பெற்றோரும் ரொம்ப கவனமா இருப்பாங்க ஈஸ்டர் எக் ஹண்டிங் நேரத்தில் மிஸ் ஆகியிருக்கான் ஆனா நல்ல வேளை அவங்கப்பா கார்லயே ஏறி அமர்ந்தது பெரிய விஷயம்

      Delete
  10. பதினைந்து வருடங்களுக்கு முன் இயேசு நாதரின் வரலாற்றுச் சித்திரத்தைப் பார்த்து
    கதி கலங்கி சில நாட்கள் மௌனமாக இருந்திருக்கின்றேன்..

    இத்தனைக்கும் இயேசுவின் வரலாறு அறிந்தது தானே ..

    ஆனாலும் - இயேசுவின் சிலுவைப் பாடுகளைக் காட்சிகளாகக் கண்டதும் தாங்கிக் கொள்ள இயலவில்லை..

    அன்பைப் போதித்தவருக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள்..

    தலை சாய்க்கவும் இடமில்லாதிருந்த தேவகுமாரனுக்காக மனம் இரங்கும் -
    ஏன் ஐயா.. இத்தனை வேதனைகளை ஏற்றுக் கொண்டீர்!?.. - என்று...

    மனிதம் ஏன் மாறிப்போனது?..

    எங்கள் சித்தர் வழிபாட்டில் இயேசு நாதருக்கும் போற்றி கூறுவோம்...

    இறை தத்துவம் என்பது மாபெரும் கடல்..
    அங்கிருந்து தான் நதிகள் எல்லாம் தோன்றுகின்றன..
    அங்கே தான் எல்லாமும் சங்கமிக்கின்றன..

    நாம் புழங்கிக் கொண்டிருப்பவை வேறு வேறு படித்துறைகள்.. அவ்வளவு தான்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா ..உங்கள் பதிவில் குறிப்பிட்ட வேதநாயகம் சாஸ்திரியாரின் பாடல்கள் கர்நாடக இசையில் எவ்வளவு இனிமை .எனக்கு அவரது பாடல்கள் மிக விருப்பம் .எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன அதை மட்டுமே நாம் பற்றி கொள்ளணும் கூட மனிதத்தையும் சேர்த்து ..நானா மிகவும் உருகி அழுதது PASSION OF CHRIST பார்த்துதான் ..
      மிக்க நன்றி ஐயா

      Delete
  11. லண்டன்ல முத முதல்ல சாக்லேட் முயல்களைப் பார்த்ததும் அது HOLLOW என்று தெரியாமல், முழுவதும் சாக்கிலேட் என்று நினைத்தேன். ரொம்ப குறைவான விலையா இருக்கே.. வாங்கணும்னு நினைச்சேன்.. ஆனா வாங்க விட்டுப்போய்விட்டது. இப்போ அது எல்லா ஊரிலேயும் கிடைக்குது (இங்கயும்).

    இங்கயும் ஆபீசில் நண்பர் ஒருவர், வீட்டில் ஒரப்பம் செய்துகொண்டுவந்திருந்தார். இந்தப் பண்டிகைக்கு இந்த உணவு என்று யார் தீர்மானித்திருப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை தமிழன் ..அந்த ஹாலோ விஷயம் தெரியாம நான் முதலில் கொஞ்ச நேரம் கையிலேயே வச்சிருந்தேன் கைசூட்டுக்கு அமுங்கி போச்சு :) அதே போல கிறிஸ்துமஸ் சாண்டாவும் ஹாலோவா இருக்கும் ..சாக்லெட்ல LINDT மட்டுமே எப்பவாது சாப்பிடுவேன் .அதை வாங்கிட்டு போங்க பிள்ளைங்களுக்கு பிடிக்கும் ..
      ஹா ஹா யாரு எல்லாம் குடும்ப பெரியவங்கதான் தீர்மானிச்சி வச்சிருப்பாங்க முக்கியமா நாகர்கோவில் கேரளா திருவனந்தபுரம் மக்கள்தான் செய்து பரப்பி இருக்கணும் இந்த ஸ்பெஷல் உணவு ஈஸ்டருக்குன்னு

      Delete
  12. ஆஹா! ஏஞ்சல் உங்களுக்கு ஈஸ்டர் விஷஸ் சொல்ல நினைத்து பயணத்தில் போனதால் சொல்ல முடியாமப் போச்சு. நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரி கத்தோலிக்கப் பள்ளி என்றாலும் என் தோழிகள் சிலர் ஆங்கிலிக்கன்ஸ். பள்ளி சர்ச்சிலும் கொண்டாடுவார்கள் இருந்தாலும் நான் தோழிகளுடன் சென்றிருக்கிறேன். உளுந்து கஞ்சி, துவையல் என்று சாப்பிட்டுருக்கிறேன். சமீபத்தில் மகன் பாண்டிச்செரியில் படித்ததால், அங்கு நான் தங்கியிருந்த போது எதிர்த்த வீட்டில் என் தோழி புனிதா வுடன் ஈஸ்டர் கொண்டாடி மகிழ்ந்ததுண்டு. அது போல கிறிஸ்ட்மஸ்.....என்று. பள்ளியில் இருந்தவரை முஸ்லின் தோழிகள் எனக்கென்று சைவ உணவு கொண்டு வருவார்கள் அவர்கள் செய்யும் ரமலான் நோன்புக் கஞ்சி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை கீதா இவ்வாரம் முழுதும் விஷஸ் சொல்லலாம் :) உளுந்து கஞ்சி அநேகமா எல்லா சவுத் சைட் கிறிஸ்தவர்கள் வீட்டிலும் பெரிய வெள்ளி மென்யு என்று நினைக்கிறேன் நாகர்கோவில் திருநெல்வேலி கேரளா மக்கள் இதை செய்வாங்க
      .நானும் ஜலீலா சொல்லி தந்த மாதிரி வெஜ் நோன்பு கஞ்சி செய்வேன் .வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா அண்ட் துளசி அண்ணா

      Delete
  13. குட்டிப்பையன் கண்ணீரைத் துடைத்தது நெகிழ வைத்தைது சகோ/ஏஞ்சல். உங்கள் பதிவும் அருமை. உங்கள் நினைவுகள்...நாஸ்லால்ஜிக் இல்லையா?!!!

    துளசி: எங்கள் வீட்டருகில் சுற்றி கிறித்தவர்கள்தான். எனவே வீட்டிற்கு உணவுகள் எல்லாம் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. அந்த குட்டி பையன் லீ என்ற லியனார்டோ முன்பு சொல்லியிருக்கேன் அவனைப்பற்றியும் ..உண்மையில் பார்த்த அனைவருமே நெகிழ்ந்து போனாங்க அவன் செயகைக்கு ..அப்போ :) ஓரப்பம் விவிக்கா எல்லாம் வந்ததா துளசி அண்ணாக்கு ஆஹா சந்தோசம்

      Delete
  14. ஏஞ்சல் எடிஹெச்டி க்கு உணவுப் பழக்கம் மிக ம்கிய முக்கியம். க்ளூட்டன் கூடாது. ஃபைபர்தான் அதிகம் கொடுக்க வேண்டும் என்று இங்கு என் கசினின் குழந்தைக்கு மருத்துவர் சொல்லியிருக்கிறார். பல உணவுகளை அவனிடமிருந்துக் காப்பாற்ற என் கசின் மிகவும் டாக்டிக்ஸ் உபயோகிக்க வேண்டியிருக்கு....பாவம் குழந்தைகள். அவர்களுக்கு எதுவுமே தெரியதில்லையே.....இக்குழந்தைகளைக் காணும் போதும், இவர்களைப் பார்க்கும் போதும் மனம் நெகிழ்ந்து விடும் அவர்களுடன் பேசுவது, விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். அதற்காகவே என் கசினின் வீட்டிற்குச் செல்வதுண்டு. அவனுக்குப் பிடித்த அவன் சாப்பிடலாம் எனும் உணவுகளைச் செய்து எடுத்துக் கொண்டு போய் அவனுடன் பேசி அவனது டிக்ஷனரி வார்த்தைகளை இப்போது மெதுவாகக் கற்று வருகிறேன்....ஏனென்றால் அவனால் நம்மைப் போல் தெளிவாகப் பேச முடியாது இல்லையா...ஓரிரு வார்த்தைதான் பேசுவான். 15 வயதாகிறது. இப்போது அவனைக் கட்டிக் காப்பது கடினமாகத்தான் இருக்கிறது. பல பயிற்சிகள் கொடுக்கிறாள் என் கசினும் அவனுக்காகவே ஸ்பெஷன் எஜுக்கேஷன் படித்தாள். இப்போது சைக்கியாட்ரி ப்ராப்ளமும் சேர்ந்துள்ளது. இங்கு நல்ல தெராப்பிஸ்ட் கிடைக்க கடினமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாள். ஃபேமஸ் என்று சொல்ல்லப்படுபவர்கள் அட்டென்ஷன் கொடுப்பதில்லை....கமர்ஷியலாக இருக்கிறார்கள் என்று பேர் அறியப்படாத தெராப்பிஸ்ட் தேடி இப்போது ஒருவரை ஃபிக்ஸ் செய்திருக்கிறாள்...உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா ..இந்த ஸ்டிவ் பேசுவதில் குறையேயில்லை ஆனால் கூட்டத்தை கணடதும் அழுவான் தலையை சுற்றி திரும்பி அவனுக்கு பயம் போன்ற உணர்வு வரும் ஆலயத்தில் அனைவரும் ஜெப நேரம் தியானத்தில் இருக்கும்போது ரொம்ப பயப்படுவான் ஆயர் சொல்லும் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை உதாரணமாக ஆமென் எனும்போது தானாகவே எஸ் ஆமென் என்று உரக்க சத்தமிடுவான் ..பாவம் ஒரு இடத்தில அமர் முடியாதது .அந்த லிங்கில் நானா சொன்னது தான் கீதா க்ளூட்டன் நம் போன்றோருக்கே ஹைப்பர் ஆக்டிவ்னஸ் தரும்போது இந்த குழந்தைகள் பாவம் ..உங்க உறவினர் மகனுக்கு வீட்டில் பெட் இருக்கா அவற்றுடன் பழகினா ரிலாக்சிங்காக இருக்கும் ..மிக முக்கியம் உணவில் தான் கவனம் இருக்கணும் கலர் சேர்த்த எதுவுமே தரக்கூடாது எல்லா உணவும் வீட்டில் தயாரித்த க்ளூட்டன் இல்லா உணவே நல்லது

      Delete
    2. ஆமாம் கீதா இவன் போன்றோரை நாங்கள் ஆலயத்தில் ஒன்றுமே சொல்ல மாட்டோம் ..சத்தம் போட்டாலும் ஒரு சில ஆப்பிரிக்கர் முணுமுணுப்பார்கள் ஆனால் பலர் அமைதியா சகிப்பாங்கா ..என்ன செய்ரது குழந்தைகள் பாவம் ..என் கிட்ட ஓடி வருவான் விளையாட சில நேரம் நேரே ஆல்டர் உள்ளே ஓடிடுவான் மெதுவா அழைத்து வருவேன் ..

      Delete
  15. HAPPY EASTER - GREETINGS CARD குட்டியூண்டா அழகா இருக்குது.

    ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் கார்டை ரசித்ததற்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
  16. முதலில் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் தாமதமாக ஏஞ்சலின். அன்றும் இன்றும் ஈஸ்டர் விழா பகிர்வு அருமை.
    மலரும் நினைவுகள் என்றும் இனிமை.
    சிறு வயதில் பள்ளியில் ஏசுவின் திரைப்படம் காட்டுவார்கள், கோவையில் இருக்கும் போது இமானுவல் ஆலயத்தில் ஏசுவின் காவியம் என்று காட்டுவார்கள் பார்த்து இருக்கிறேன்.
    உங்கள் கைவண்ணத்தில் ஈஸ்டர் வாழ்த்து அட்டை அழகு.
    குழந்தை கிடைத்து விட்டது மகிழ்ச்சி. அவன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். மகன் ந்ண்பர்களுடன் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவான் பேரன் முட்டைகளை அவன் நண்பர்களுடன் தேடுவான்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா ..புது வீட்டில் செட்டில் ஆகியாச்சா ..புது நண்பர்கள் அதான் பறவைகள் வருகின்றனரா உங்களை சந்திக்க ..ஆமாம் அக்கா பல வருடங்கள் முன்புநடந்த விழா வைபவங்களை இன்னும் நினைத்து பார்க்க சந்தோஷமா இருக்கு ..
      ஈஸ்டர் எக் ஹன்ட் இந்த வருடம் நல்லா நடந்தது வெயில் ஞாயிறு முழுதும் அதனால் கோலாகலம்தான் எல்லா பார்க்குகளிலும் ..ஆமாங்கா அந்த சிறுவன் குழந்தை தான் அவனுக்கு இன்னும் சரி தவறு தெரியல மூத்த பிள்ளை அவனுக்கப்புறம் இரண்டு இருக்கு அவர்கள் நார்மல் பிள்ளைகள்..மிக்க நன்றிக்கா

      Delete
  17. ஈஸ்டர் வாழ்த்துக்கள் அஞ்சு. எல்லாமே அபி சின்னதா இருக்கும்போது ஈஸ்டர் எக் வைத்து இருக்கோம். இப்படித்தான் எங்களுக்கு புதுவருடம்,தீபாவளி. இங்கு வந்தபின் இந்த கொண்டாட்டங்க வித்தியாசமான அனுபவம்.
    கொஞ்சநேரத்துக்குள் எல்லோரையும் கலவரப்படுத்திவிட்டார். திரும்ப நல்லவிதமாக கிடைத்தது கடவுளின் கிருபை,பிரார்த்தனைகளால்.
    அழகான கார்ட் அஞ்சு. சொல்லத்தேவையில்லை உங்க கைவண்ணம் பற்றி. அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ப்ரியா ..ஆமாம் ஜெர்மனில வாங்கின எக் டெக்கரேஷன்ஸ் பத்திரமா வச்சிருக்கேன் ..10 வயது வரை ஷாரனுக்கு வீட்டை டெகரேட் செய்வோம் இப்போ விட்டுட்டோம் .ஆமாம் பிரியா அந்த பையன் கிடைச்சது பெரிய சந்தோஷம் அன்னிக்கு ..
      மிக்க நன்றி ப்ரியா ..இன்னும் நீங்க பிளாக் பூட்டு போட்டு வச்சிருக்கீங்க :) ..நீங்க குயில்லிங்ம் செய்ரதில்லை சீக்கிரமா மீண்டும்தி றப்பு விழா நடத்துங்க

      Delete

  18. மகிழ்வான நினைவுகள் ...

    ஈஸ்டருக்கு ஏன் முட்டையில் கிப்ட், கிராப்ட் னு எனக்கு தெரியாது ......போன வருடம் தான் அதற்கான காரணத்தை அறிந்தேன் ...அதுவும் சரியான்னு முழுசா தெரியல ...கொஞ்சம் சொல்லுங்க அஞ்சு ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு ..அது resurrection என்பதற்கான சிம்பல் ..கல்லறையை திறந்து ..மூடி இருப்பது கல்லறை அதிலிருந்து ஜீசஸ் உயிர்தெழுந்ததை குறித்தல் ..அப்புறம் முயல் குட்டி போடும் ஸ்ப்ரிங் சீசன் அதுவும் அதுங்க குட்டி போட்டா ஒன்றிரண்டில்லை 7/8 போடும் வளமான எதிர்காலம் நம்பிக்கை ஸ்ப்ரிங் சீசன் சேர்த்து முயலையும் சேர்த்திருக்காங்க

      எம்ப்டி tomb என்பதை விளக்கத்தான் அந்த சாக்லேட் முட்டைகள் hollow வாக இருக்கும்

      Delete
    2. முந்தைய ஆர்த்தடாக்ஸ் ஆலயங்கள் மத நம்பிக்கையில் முட்டையில் மீது சிவப்பு வர்ண டிசைன் போடுவார்களாம் ஜீசஸ் சிலுவையில் இரத்தம் சிந்தியதை குறிக்க ..இப்போ பெயிண்ட் போடாம கலர் தாள் சுத்தறாங்க .ஜேர்மனிய நிஜ முட்டையை வேகா வச்சி பெயிண்ட் அடிச்சி விப்பாங்க

      Delete
  19. இங்கேயும் முட்டைகள் விற்பனை அதிகம் தான் ஈஸ்டர் என்றாலே! பாவம் அந்த சிறுவன் கொடை வள்ளல் போல தேடவைத்து தன் நிலையை மறந்து விளையாட்டில் ஆர்வமுற்றவனாக!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நேசன் ..அவன் ஓவர் எக்சைட் ஆகிட்டான் .ஐரோப்பாவில் எல்லா நாட்டில் ஒரே போல தானே இந்த கொண்டாட்டம்

      Delete
  20. பிள்ளைகளை தனியாக விடக்கூடாது என்று ஆலோசனை சொல்லி இருப்பார்கள்))) தொதல் நினைவு இன்னும் சுவையாக நாவில். குமுளியில் நல்ல தொதல் கிடைக்கும் சென்னையைவிட!

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அத்துடன் இப்படி பட்ட பிள்ளைகளை விடவே கூடாது ..குமுளி தொதல் நான் ருசித்ததில்ல ரொம்ப நல்லா இருக்கும் போலிருக்கு.

      Delete
  21. ஈஸ்டர் பதிவு படித்தேன். எல்லாம் தெரிந்து கொண்டேன். பின்னூட்டங்களிலிருந்து மேலும் விவரங்கள் தெரிந்து கொண்டேன். அப்பா எவ்வளவு அழகாக எழுதுகிராய். நேரம் போனதே தெரியவில்லை. படித்து ரஸித்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சியம்மா ..மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்

      Delete