அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/1/17

ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் ,புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ,முருங்கைக்காய் ரசம்                                இன்றைக்கு நான் சமையல் பற்றி பேசலாம்னு இருக்கிறேன் :) அப்படியே எல்லாரும் தரையில் பாய் போட்டிருக்கேன்அதில்  உட்கார்ந்துக்கோங்க :)  .உக்காரும்போது அதிராவை ஓரத்தில் விட வேண்டாம் ..ஹெவி வெயிட்டுக்கு ஒரு பக்கமா போயிடும் கார்ப்பெட் பாய் அதனால் அதிராவை  நடுவில் உட்காரவைச்சிட்டு சுற்றி எல்லாரும் அமரவும்   .

இப்போ இந்த மந்திரப்பாய் உங்களை சில வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்லப்போகிறது ..


                                                                                

அது விர்ரென பறந்து இறங்கிய இடம் ..சென்னையில் ஒரு வீடு ,நன்கு விழாக்கோலம் பூண்டுள்ளது வீட்டின் முன்னே வாழைமரம் நட்டு வர்ணமடித்து  வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன
..இப்போ அந்த வீட்டுக்குள்ளே நுழைகிறோம் ..பயப்பட வேண்டாம் அங்குள்ள பைரவர்கள் நம்ம  பிரண்ட்ஸ்தான் ஒன்றும்  செய்ய மாட்டாங்க அங்கே சமையலறையுள் ஒரு அப்பாவி ஜீவன் :) (இப்போதைய பதிவர் )ரசம் செய்து கொண்டிருப்பது தெரிகிறதா ? ..(அவர் ஏன் திருமணத்துக்கு ஒரு வாரமுன் சமையலறையில் ரசம் செய்கிறார் ! நடந்தது என்ன ..இந்த கேள்விக்கெல்லாம் ஒரே பதில் அந்த பதிவருக்கு அப்போ சமைக்க தெரியாது ஆகவே அவரின் தாயார் அவசர அவசரமாக சமையல் பயிற்சி அளித்து கொண்டு இருந்தார் ..)
அந்த ஜீவனுக்கு குழப்பம் ரசத்துக்கு பூண்டு  மிளகு சீரகம் தனியா எல்லாம் போடணும் ஆனா எப்படி போடணும் அரைக்கணுமா இல்லைன்னா அப்படியே முழுதாகவேவா என்று குழப்பம் அருகில் அம்மா இல்லை சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ..அதனால் அந்த அப்பாவி ஜீவன் என்ன செய்தது என்றால் தன்னருகில் உள்ள ஒரு நாலு கால் செல்லத்திடம் இரண்டு விரலை காட்டி ஒன்றை தொடு பப்லு ..என்றது பப்லுவும் ஒன்றை தொட்டது சரியென இந்த ஜீவன் கடுகு தாளித்து முழு பூண்டு முழு சீரகம் முழு தனியா உப்பு எல்லாவற்றையும் புளி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்து விட்டது ..இதோட காட்சி நிறைவு பெற்றது எல்லாரும் திரும்பி பார்க்காம மீண்டும் பாயில் அமர்ந்துக்கோங்க :) 

 அதை பார்த்ததோடு போதும் ..அதுக்குமேல அந்த அப்பாவி ஜீவனின் பெற்றோர் வந்து தட்டில் சாதம் ரசத்தை போட்டு சாப்பிட்டு அலறிய மற்றும்  ரசமெல்லாம் குப்பையில் போன கதைலாம் வேணாம் :) வருங்கால மருமகனை நினைத்து நொந்து அந்த பதிவரின் தாய் பல மங்கையர் மலர் புத்தகங்களின் குறிப்புகளை அவசர அவசரமாக ஊருக்கு புறப்படுமுன் கிழித்து தந்தார் மேலும் பதிவர் வெளிநாடு சென்றபின்னும்  சமையல் புத்தகங்கள் தொடர்ந்து 10 வருடங்களுக்கு அவருக்கு  தபாலில் அனுப்பி வைத்தாராம் அந்த அம்மா :) அவற்றில் சில உங்கள் பார்வைக்கு இங்கே :)
                                                                            
                                                                                

                                                                                
                                                                                   


ஆனாலும் அப்போதும் சில பல உணவு பொருளின்  பெயர்களை குழப்பி சமையலையே குழப்பியுமிருக்கிறார் அந்த பதிவர் :) திருமதி டி .என் .சேஷன் அவர்களின் பாலக்காட்டு ரெசிப்பியில் வற்றல் மிளகாய் என்பதை தவறுதலாக மோர் மிளகாய் என நினைத்து சுமார் ஒரு வருடத்துக்கு வாழைக்காய் புளியிட்ட கறியில் மோர்மிளகாய் அரைத்து சமைத்தும் இருக்கிறார் :)  அது அந்தகாலம் ..
இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம் ..எப்படில்லாம் இருந்த அந்த பதிவர் பின்னாளில் சமையல் குறிப்புகளில் கலக்கோ கலக்கென்று மிக பிரபலமாகி விட்டார் :) (எல்லாரும் நம்பணும் இல்லைனா அவ்ளோதான் :) அதிராகிட்ட சொல்லி கீசக வதம் படத்தோட விமர்சனத்தை எழுத வைப்பேன் ..)  அதுவும்  நானே சொந்தமா செய்த நெல்லிக்கா ரசத்தை இன்னொரு சமையல் பதிவர் செய்து பார்த்து அவர் ப்லாகில் போடுமளவுக்கு பிரபலம் :) எனக்கு அப்படியே பறக்கிற மாதிரி இருந்தது :) அந்த பதிவு இங்கே :)

சமையல் என்பது உண்மையில் ஒரு அழகிய கலை பொறுமையா நிதானமா செய்தா மிக அருமையாக வரும் .எனக்கு ஆரம்ப நாட்களில் பொறுமை இல்லை இப்போ நிறையவே பொறுமையை வளர்த்துக்கொண்டதால் :) ரசித்து சமைக்கிறேன் ருசியும் மிக அருமையாக வருகிறது ..
இப்படி  சமீபத்தில் ரசித்து ருசித்த இரண்டு சமையல் குறிப்புக்கள் இங்கே ..


1,ஒரு காணொளியில்  யாரோ ஒரு புடலங்காயை வெகு வேகமா படபடபன்னு வெட்டிட்டு ஒரு ரெசிப்பியும் கொடுத்திருந்தாங்க இதில பொன்னான கைகள் புண்ணாகலாமானு கூடவே பாடிக்கிட்டு :) யாருன்னு பார்த்தா நம் அவர்கள் ட்ரூத் :) ..அதை பார்த்து செய்த புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ..இந்த கூட்டின் ஸ்பெஷாலிட்டி இதில் வெங்காயம் இல்லாததால் என் மகளுக்கு ரொம்பவே பிடித்து போனது :)  நமது நண்பர் அவர்கள் உண்மைகளின் வீட்டு ரெசிப்பி :) புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ..                                                                                   

2,மனோ அக்கா அவர்களின் செய்முறையில் முருங்கைக்காய் ரசம் ..இது வரைக்கும் இப்படி ஒரு சுவையை நான் சுவைத்ததில்லை .அதில் வெங்காயம் பூண்டு இஞ்சி மிளகு சீரகம் தேங்காய்  எல்லாம் ஒரு சுற்று சின்ன ஜாரில் சுற்றி சேர்த்தேன் மற்றும் சாம்பார் பவுடருக்கு பதில் காய்ந்த மிளகாயும் தனியாவும் சேர்த்திருந்தேன் ..ஒரு கோப்பையில் ஊற்றி குடிக்கும்போது செம ருசி ..

                                                                                       

                                                                                 
நீங்களும் முயற்சித்து பாருங்கள் .நிச்சயம் பிடிக்கும் ..நான் முருங்கைக்காய் பருப்புடன் வெந்த பின் காய்களை தனியே எடுத்து ஒரு பெரிய கிண்ணத்தில் கொஞ்சம் நீர் சேர்த்து கையால் பிழிந்து அந்த சக்கைகளை எடுத்தபின் அந்த நீரையும் பருப்பு கலவையில் சேர்த்தேன் பின்பு தாளித்ததும் இன்னும் கொஞ்சம் அலங்காரத்துக்கு மிளகுத்தூள் தூவி விட்டேன் ..அக்காவின் பதிவு இங்கே ....இப்பொழுதெல்லாம் நிறைய புதிய சமையல் குறிப்புக்கள் மனதில் ஓடுகிறது விரைவில் மற்றுமொரு புதிய சமையல் குறிப்போடு உங்களனைவரையும் சந்திக்கிறேன் :)101 comments:

 1. முருங்கைக்காய் ரசம் செய்து பார்த்து பாராட்டி எழுதியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ஏஞ்சலின்! உங்களுக்கு என் அன்பு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா ..ரசம் நல்லா ருசியா இருந்ததுக்கா ..என்னாலே நம்ப முடில அது நான்தான் செய்தெனான்னு :)
   எல்லாம் உங்கள் ஈஸி செய்முறை குறிப்புக்கே நன்றி

   Delete
 2. என்ன அதிரா? உங்க அஞ்சுவுக்கு நிஜமாகவே சமையல் செய்யத் தெரியுமா?

  ஏதேதோ சொல்லி இங்கு ஒரேயடியா அள்ளித் தெளித்திருக்காங்கோ. :)

  ஆனால் படங்களெல்லாம் ஜோராகவே இருக்குது. [ஒருவேளை களவாடப்பட்ட படங்களாக இருக்குமோ என நீங்கள் சொல்ல நினைப்பது எனக்கும் புரிகிறது]

  வெறும் கார்ப்பெட் மட்டுமே உள்ளது. அதன் நடுவிலே உற்றுப்பார்த்தும் ஒருவரையும் காணோம். அதிரா ஒருத்தருக்கே அந்த கார்ப்பெட் உட்காரப் போதாது. அது ஏதோ மிதியடி போல உள்ளது. அதில் ஏராளமானவர்கள் அமர்ந்து அப்படியே பறந்து எங்கேயோ போகணுமாமே .... நான் வரப்போவது இல்லை அதிரா.

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா அதெல்லாம் நானே செய்து எடுத்த படங்கள் ..அதிராவுக்கு நான்தானே காரடையான் நோன்படை விளக்கம் கொடுத்தேன் இன்னுமா சந்தேகம் :) .அப்புறம் அது ஒரிஜினல் அலாவுதீன் டிஸ்னி கார்ப்பெட் பாய் ..அதில் அமர்ந்தா எல்லா இடத்துக்கும் விசா இல்லாம கூட்டிட்டு போகும் ..:) தயங்காம ஏறுங்க :)

   Delete
  2. //கோபு அண்ணா அதெல்லாம் நானே செய்து எடுத்த படங்கள் ..//

   எனக்கு இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இப்போதெல்லாம் உங்களால் நன்கு சமைக்க முடியும். பொதுவாக காலேஜ் படிப்பு முடியும் வரை, குழந்தைகள் யாரும் சமையல் அறை பக்கம் வர மாட்டார்கள். மேலும் தாயாரும் அந்தக் குழந்தைகளை சமைக்கச் சொல்ல மாட்டார்கள். திருமணம் நிச்சயமாகும் போது மட்டுமே சொல்லித் தருவார்கள். யாருக்குமே ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பிறகு அவர்களே (+) (-) எல்லாம் செய்து மிகச் சுலபமாகக் கற்றுக்கொண்டும் விடுவார்கள்.

   //அதிராவுக்கு நான்தானே காரடையான் நோன்படை விளக்கம் கொடுத்தேன் இன்னுமா சந்தேகம் :).//

   அதானே. அதிராவுக்குத்தான் இதெல்லாம் ஒன்றுமே தெரியாது. காரடைக் கொழுக்கட்டையை இட்லிச் சட்டியில் அவித்த வடை என்று சொல்லியிருந்தாங்கோ.

   //அப்புறம் அது ஒரிஜினல் அலாவுதீன் டிஸ்னி கார்ப்பெட் பாய் ..அதில் அமர்ந்தா எல்லா இடத்துக்கும் விசா இல்லாம கூட்டிட்டு போகும் ..:) தயங்காம ஏறுங்க :)//

   ஹைய்யோ .... அது மட்டும் வேண்டாம். விஷப்பரீக்ஷையாகி விடும். அதிரா மட்டும் போகட்டும். நான் அதிராவுக்காக விட்டுக்கொடுத்து விடுகிறேன்.

   Delete
  3. ///வெறும் கார்ப்பெட் மட்டுமே உள்ளது. அதன் நடுவிலே உற்றுப்பார்த்தும் ஒருவரையும் காணோம். அதிரா ஒருத்தருக்கே அந்த கார்ப்பெட் உட்காரப் போதாது. அது ஏதோ மிதியடி போல உள்ளது. அதில் ஏராளமானவர்கள் அமர்ந்து அப்படியே பறந்து எங்கேயோ போகணுமாமே .... நான் வரப்போவது இல்லை அதிரா.///

   ரொம்ப நல்லது கோபு அண்ணன்:).. அது சுவீட் 16 மட்டுமே உட்காரும் கார்பெட்:) நீங்க இருந்தால் தலை சுத்தி விழுந்திடுவீங்க.. பிறகு ஆன்ரிக்கு ஆர் பதில் சொல்றதாம் கர்ர்ர்ர்:)

   Delete
  4. நான் எல்லாம் அம்மா சொல்லித்தராமலேயே.. சமைக்கத் தெரியுமாக்கும் திருமணத்துக்கு முன்பே:) ஆனா மூத்த மகனுக்கு 3 வயதானபின்பே சமைக்கத் தொடங்கினேன்:).. இப்ப கூட சொல்லுங்கோ யாருக்கும் கலியாண வீட்டு ஓடர் எனில்:) என் கையால நானே செய்து அனுப்புறேன்ன்.. தோசை, இட்லி எல்லாம் எத்தனை மட்டும் வேணும் எனச் சொன்னால் போதும்... ரெசிப்பி மட்டும் கேய்க்கப்பூடா:) அடிச்சுக் கேட்டாலும் டெல்ல மாட்டேன்ன்:).

   Delete
  5. தெய்வமே நல்ல வேளை தூங்குமுன் இந்த கமெண்டை என் கண்ணுக்கு மறைச்சிட்டையே ஆண்டவா நன்றி :)

   Delete
 3. நாமதான் சமையல் ரொம்ப பொறுமையாச் செய்வேன்...
  முருங்கைக்காய் ரசம் வைத்து சாப்பிட ஆசை... ஆனா அம்மா சொல்லியிருந்த செய்முறை விளக்கம் பார்த்து... ஓடிட்டேன்...
  ஆனா பொறுமையா செய்து பார்த்திருக்கீங்க....
  வாழ்த்துக்கள் அக்கா...

  ஆமா இம்புட்டு புத்தகமா அனுப்பி வச்சாங்க...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) பாதி புக்ஸ்தான் படத்தில் இருக்கு இன்னும் இதைவிட நிறைய இருக்கு..எல்லாத்தையும் போட்டா பதிவு நிறைஞ்சிடும்னு போடல்லை ..சிலதெல்லாம் 94 ஆம் வருஷத்து புக்ஸ் இன்னும் வச்சிருக்கேன் ..

   ரசம் கொஞ்சம் நேரமெடுத்தாலும் ருசி நல்லா இருக்கு நிச்சயம் செய்து பாருங்க

   Delete
 4. யாரது ஏப்ரல் ஃபூல் அன்று சமையல் குறிப்புப் போட்டு மிரட்டுவது
  ///ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் ,புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ,முருங்கைக்காய் ரசம்///

  இவற்றை எல்லாம் எங்கயோ நான் பார்த்திருக்கிறேனா:).. சரி அது போகட்டும்.. நானும் இப்போ ஒரு மாதமா... பல வருசங்களுக்குப் பிறகே கண்ணால கண்ட புடலங்காயில ஒரு ரெசிப்பியை அயகா:) செய்து போட்டு இண்டைக்குப் போட்டிடலாம்.. நாளைக்குப் போட்டிடலாம் என நினைக்கும்போதெல்லாம்... புடலங்காய் ரெசிப்பி எனவே போஸ்ட் போடுகினமே ஆண்டவா.. என்னுடையதை எப்போதான் நான் போடப்போறேனோ... அதுக்கு முன்னமே காசிக்குப் போயிடுவேன் போல இருக்கே ஆண்டவா:)..

  ReplyDelete
  Replies
  1. ஹையோ நான் அந்த பாயிலேறி உலகத்தின் அடுத்த கோடிக்கே போயிட்டேன் ..ஜீசஸ் என்னை காப்பாத்துங்க அதிராகிட்டருந்து

   Delete
  2. ஆமா ! நீங்க மைண்ட் வாய்ஸ்ல பேசறதா நினைச்சுகிட்டு அப்படியே சொன்னிங்க புடலங்கா கூட்டு பற்றி நான் அதை உடனே செஞ்சிட்டேனே :)

   Delete
 5. // அப்படியே எல்லாரும் தரையில் பாய் போட்டிருக்கேன்அதில் உட்கார்ந்துக்கோங்க :) //

  புரியுது புரியுது... அஞ்சுட ரெசிப்பி பார்த்து பொத்துப்பொத்தென மயங்கி விழுந்து மண்டையை உடசிச்சிட்டாலும் என, ரொம்ப உசாராகி.. ஆரம்பமே பாயில இருந்து படிக்கச் சொல்லிட்டீங்க:)..

  ///உக்காரும்போது அதிராவை ஓரத்தில் விட வேண்டாம் ..ஹெவி வெயிட்டுக்கு ஒரு பக்கமா போயிடும் கார்ப்பெட் பாய் அதனால் அதிராவை நடுவில் உட்காரவைச்சிட்டு சுற்றி எல்லாரும் அமரவும் .////

  அது மக்கள்ஸ்ஸ்.. அஞ்சுவுக்கு எப்பூடிப் புரிய வைப்பதெனத் தெரியல்ல:), அதனால வெயிட் பற்றி எல்லாம் பேசுறா:) உண்மை என்னான்னா:)... அதிரா ரொம்ப நல்லவ, வல்லவ:) என்பதனால அவவை நடுவில உட்கார வச்ச்சால், எல்லோரையும் அணைச்சு.. விழ விடாமல் பாதுகாப்பா எண்டுதான் அஞ்சு சொல்ல வந்தா...:) இல்லயா அஞ்சூஊஊஊ:)).. [அஞ்சுக்கு ஊ.கு:-ஆமா ஆமா எனத் தலையாட்டோணும் சொல்லிட்டேன்ன் இல்லையெனில் தெரியும்தானே:) கல்லைக் கட்டிப்போட்டுத் தள்ளிடுவேன் தேம்ஸ்ல:)]

  ReplyDelete
  Replies
  1. //ரொம்ப உசாராகி.. ஆரம்பமே பாயில இருந்து படிக்கச் சொல்லிட்டீங்க:)..//

   according to england wales scotland health and safety act நானா ரொம்பவே கவனமா இருப்பேன் ..இலேனா நான்தானே உங்க ட்ரீட்மென்டுக்கு பணம் கட்டியாகணும்

   Delete
  2. நான் உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன் :)
   நீங்க நடுவுல இருந்தாத்தான் மற்றவர்களுக்கு நல்லது :)

   Delete
  3. அம்மா தாயே நான் நடுவுலதான் இருக்கிறேன்ன்ன் கெதியாக் கிளப்புங்கோ பாயை:).. ஆண்டவா காசி வரைக்குமாவது என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடப்பா:)

   Delete
 6. ///இப்போ இந்த மந்திரப்பாய் உங்களை சில வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்லப்போகிறது .///

  நோஓஓஓஓஓ அதில நான் இருக்க மாட்டேன்ன்.. அதில இருந்தால் தீக்குளிச்சிடுவேன் எனத்தானே உட்காருங்க என அன்பா ஆசையா சொல்றீங்க.. அதில புளி.. சே சே புலி.. நெருப்பு எல்லாம் இருக்கே:)

  ReplyDelete
  Replies
  1. இல்லையே நான் உங்களை மட்டும் மிரட்டினேன் :)

   Delete
 7. ///அங்கே சமையலறையுள் ஒரு அப்பாவி ஜீவன் :) (இப்போதைய பதிவர் )///

  ஹையோ தற்பெருமை தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ.. ஆண்டவா.. நெஞ்சில கையை வச்சு ஹார்ட் அட்டாக் வந்திட விட்டிடாமல் தொடர்றேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. நல்லதுக்கே காலமில்லை ஒரு அப்பாவியை அப்பாவின்னுதானே சொல்லணும் :)

   Delete
 8. ///தன்னருகில் உள்ள ஒரு நாலு கால் செல்லத்திடம் இரண்டு விரலை காட்டி ஒன்றை தொடு பப்லு ..என்றது///

  ஹையோ ஹையோ ஹையோ இத்தனை வருடமா எத்தனை பேரிடம்தான் தொடச் சொல்லிக் கேட்டிருப்பீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பூஸ் பப்பி கூட விட்டு வைக்கல்ல இதில்:))... ஆவ்வ்வ்வ்வ் விடுங்கோ மீ முருங்கி மரத்தில:) ஏறி இருந்து மிச்சம் படிக்கிறேன்ன்ன்:).. எனக்கென்னமோ ஆகுதே ஜாமீஈஈஈஈ:))

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் இப்போ மல்ட்டிதான் எனக்கு இந்த விரல் டச் பண்ணுது இப்போ :) அது பழகிடுச்சி எப்பவும் ரெண்டு விரல் கைகாட்டி டச் செய்ய சொல்லும் பழக்கம் :) ஜெசி செய்யாது மல்ட்டி அழகா தொடுமே

   Delete
 9. ///இதோட காட்சி நிறைவு பெற்றது எல்லாரும் திரும்பி பார்க்காம மீண்டும் பாயில் அமர்ந்துக்கோங்க :) ///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் இடையில ஏதும் சூனியம் வைச்சீங்களோ?:) நாங்க வந்த நேரம் தொடங்கி அதே பாயிலதானே இருக்கிறோம்ம் எழும்பச் சொல்லவே இல்ல:)

  ReplyDelete
  Replies
  1. பாய் வீட்டு முன்னாடிதானே இறங்குச்சி :) பைரவர்களையெல்லாம் பார்த்திங்களே அது வீட்டுக்குள்ளே :) கிச்சனுக்கு போய் இறங்கினா அந்த சமைக்கிற குழந்தை பயந்திடாதா :)

   Delete
 10. /// வருங்கால மருமகனை நினைத்து நொந்து அந்த பதிவரின் தாய்///

  நோஓஓஓஓஓ நோஓஓஓஒ இவ்விடத்தில தெளிவு படுத்தோணும் இல்லாட்டில் நான் கீழே குதிச்சிடுவேன்ன்.. முருங்கி மரத்திலிருந்து:)..... ... சமையலை நினைச்சோ மருமகன் பாவம் என மாமி நொந்தாங்க.. சரி வாணாம் விட்டிடலாம்..:)

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேற :) அவர் மருமகனோட எதிர்காலத்தை நினைச்சி ரொம்பவே நொந்து போயிட்டார் :)மகளை பற்றி நன்கு அறிந்தவர் புரிந்தவராச்சே

   Delete
 11. புத்தகம் எல்லாம் அழகா அடுக்கி வச்சிருக்கிறீங்க ஆனா இதிலிருந்து எத்தனை குறிப்புக்கள் செய்தீங்க?:)


  ///வற்றல் மிளகாய் என்பதை தவறுதலாக மோர் மிளகாய்/// நாங்கள் வத்தல் எனில் மோர் மிளகாயைத்தானே சொல்வோம்ம்.. இது என்ன புயுக்கதை?:)..

  ////எப்படில்லாம் இருந்த அந்த பதிவர் பின்னாளில் சமையல் குறிப்புகளில் கலக்கோ கலக்கென்று மிக பிரபலமாகி விட்டார் :)////
  ஹையோ முருங்கிக்கொப்பு முறியுதே... என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓஓஒ:).

  //எல்லாரும் நம்பணும் இல்லைனா அவ்ளோதான் :) அதிராகிட்ட சொல்லி கீசக வதம் படத்தோட விமர்சனத்தை எழுத வைப்பேன் ..)///

  என்னாது குழந்தைகளுக்கு சோறூட்ட வெருட்டும் பூச்சாண்டிபோலவே ஆக்கிட்டீங்களோ அதிராவை:).. இருங்க உங்களுக்கு 4 வருட கம்பி எண்ணும் தண்டனை வாங்கித்தாறேன்ன்:) அதுக்கு முன்னர்.. அந்தப் “பூரிக்கட்டையில்” ஓங்கி ஒரு அடி அடிச்சுட்டுப் புறப்படுங்கோ:)..


  ///செய்த நெல்லிக்கா ரசத்தை இன்னொரு சமையல் பதிவர் செய்து பார்த்து அவர் ப்லாகில் போடுமளவுக்கு பிரபலம் :) ///
  ஹையோ ஆண்டவா அந்த அப்பாவி ஆரோ தெரியல்லியே.. எந்தக் ஹொஸ்புட்டல்ல எத்தனை நாள் வோட்டில் இருந்தாரோ தெரியல்லியே:).. இதுக்குத்தான் இடைவெளி விடாமல் வந்தேன்ன்.. இடையில் 2 வருடம் இடைவெளி விட்டேனா:) அந்த அப்பாவியைக் காப்பாற்றேலாமல் போச்சே என்னால:).. நான் வந்திருந்தா இப்படி குறிப்பைச் செய்து பார்த்துப் போடும் அளவுக்கு அசம்பாவிதம் நடக்க விட்டிருப்பேனா:)..

  ReplyDelete
  Replies
  1. லிங்க்கை போய் பாருங்க :) அது பிரபல பதிவர் :) மேனகா
   கர்ர்ர்ர் ..நீங்க ஏறி இருக்கறது முருங்கைமரம்னு நினைச்சுகிட்டு பாவக்கா கொடியில் அதை விட்டு இறங்குங்க பாவம் அந்த கொடி

   ஹா ஆஹா:) இப்பெல்லாம் யாரையாவது மிரட்டி வழிக்கு கொண்டாரா நான் உங்க ரெசிப்பீஸ் உங்க சினிமா விமர்சனங்களை தான் யூஸ் பண்றேன் :)
   நேத்துகூட என் கணவர்கிட்ட உங்க ரெசிப்பி ஒண்ணை காட்டி மிரட்டி நானா செஞ்ச சாப்பாட்டை சாப்பிட வச்சேன் .
   அது எந்த ரெசிப்பி தெரியுமா அந்த வாழைப்பழ ரொடீஈ :)

   Delete
  2. பாதி புக்ஸ்தான் படத்தில் இருக்கு மீதி வேற ஒரு பதிவில் போடறேன் :) அப்புறம் ஆரம்ப நாட்களில் அதை பார்த்து செய்தென் பிறகு தன் கையே தனக்குதவின்னு நானே சமையல் களத்தில் குதிச்சிட்டேன் :)

   Delete
  3. ///அது எந்த ரெசிப்பி தெரியுமா அந்த வாழைப்பழ ரொடீஈ :)/// karrrrrrrrrrrr:)

   ///நானே சமையல் களத்தில் குதிச்சிட்டேன் :)/// ஏதோ அரசியலில் குதிச்ச மாதிரி என்னா சவுண்டு விடுறீங்க:) ஓவரா பில்டப் காட்டினா அப்புறம் அந்த ஜேர்மனி:) சுண்டங்காய்:) மட்டரை அவிட்டு விட்டிடுவேன் ஜாக்க்க்க்க்க்ர்ர்தை:).. நாம ஆரு:) இப்பூடி மிரட்டி மிரட்டியே என் காலத்தை ஓட்டிடுவேன்:).

   Delete
 12. ///1,யூ டியூபில் யாரோ ஒரு புடலங்காயை வெகு வேகமா படபடபன்னு வெட்டிட்டு ஒரு ரெசிப்பியும் கொடுத்திருந்தாங்க இதில பொன்னான கைகள் புண்ணாகலாமானு கூடவே பாடிக்கிட்டு :)//

  ஹா ஹா ஹா பாட்டு வேற கேட்டுச்சா உங்களுக்கு:) எனக்கென்னமோ கலியாணத்தைக் கட்டிப்பார்ர் பிள்ளையைப் பெத்துப்பார்ர் எனச் சொல்லிச் சொல்லியே ஓங்கி ஓங்கி அடித்ததுபோல இருந்துதே:) புடலங்காயில்:).

  ReplyDelete
  Replies
  1. ஹஹ்ஹாஆ :) இதுக்கு பதில் கொடுக்க திருவாளர் ட்ரூத் அவர்களை சபைக்கு வர அழைப்பு விடுக்கிறேன்

   Delete
 13. கூட்டு கொஞ்சம் தண்ணியாகிட்டமாதிரி இருக்கே அஞ்சு, நல்லாயிருக்கு... நான் இதுவரை பாசிப்பருப்பில் செய்ததில்லை.. மைசூர் பருப்புத்தான்.. பொன்னாங்காணிக்கீரைக்குத்தான் பாசிப்பருப்பு சேர்ப்போம்.

  முருங்கி ரசம் சூப்பர்.. எனக்கும் செய்ய ஆசை, ஆனா நான் தக்காளி சேர்க்க மாட்டேன்.. புளி மட்டும் சேர்த்து ட்ரை பண்ணப்போறேன்ன்.


  ////இப்பொழுதெல்லாம் நிறைய புதிய சமையல் குறிப்புக்கள் மனதில் ஓடுகிறது விரைவில் மற்றுமொரு புதிய சமையல் குறிப்போடு உங்களனைவரையும் சந்திக்கிறேன் :)///

  ஆத்தங்கரை ஆத்தா.. கொஞ்சம் சொல்லிவிடுங்கோ அதிரா அந்தாட்டிக்காவுக்கு பாக் பக் பண்ணிட்டா என:)...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா நானா கொஞ்சம் தளர விட்ட மாதிரி தான் செய்தென் .உடனே படமெடுத்தால் அது நீர்க்க இருக்கு ..சட்டியில் செய்வதால்ன்னு நினைக்கிறன் ..ஆனா ஆறினதும் திக் ஆகி விட்டது ..ஹை பூனைக்கு தக்காளி pidikkaathaa :) எனக்கு அலர்ஜி வாராத ஒரே உணவு தக்காளிதான் :)

   Delete
  2. அதிரா இந்த கூட்டுகளுக்கு பாசிப்பருப்பு இல்லைனா கடலை பருப்பு மட்டுமே சேர்க்கணும் மைசூர் பருப்பு வெஜிடபிள்ஸின் சுவையை மாத்திடும்

   Delete
  3. காதைக் கொண்டு வாங்கோ:) நாங்க வடை தவிர, கறிகளுக்கு கடலைப்பருப்பு ஊஸ்ஸ்ஸ் பண்ணுவதே இல்லை:).. துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மைசூர் பருப்பு இவையில் மட்டும்தேன்ன்ன் கறி:).

   Delete
  4. நானா மைசூர் பருப்பு வாங்கறதே இல்லை அதிரா ..பாசிப்பருப்பு போட்டு செய்யுங்க

   Delete
 14. தொடர்ந்து பத்து வருடங்களுக்கா.....!! அட!

  மோர்மிளகாய் போட்டு, அந்த ருசி நாக்குக்கு ஏற்புடையதாக இருந்ததால்தானே தொடர்ந்து செய்து சாப்பிட்டீர்கள்? புதிது புதிதாக முயற்சித்துப் பார்ப்பதுதான் என் வழக்கமும் கூட!

  ReplyDelete
  Replies
  1. அப்புறமும் வருஷா வருஷம் போகும்போதும் புக்ஸை சேர்த்து வச்சி தருவாங்க ..பழைய புக்ஸ் பெமினா லருந்து கிழிச்ச ரெசிப்பீஸ் எல்லாம் தந்தாங்க ..இன்னும் வச்சிருக்கேன் .

   அந்த ருசியை அதுதான் ருசின்னு நினைச்சிருக்கேன் :) பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து செஞ்சப்போதான் அதன் உண்மையான சுவை கிடைத்தது :)

   Delete
  2. //பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து செஞ்சப்போதான் அதன் உண்மையான சுவை கிடைத்தது//

   அதென்ன உண்மையான சுவை? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன!

   Delete
  3. ஹா ஹா :) அதாவது சாப்பிடக்கூடிய சுவை உண்மையான நல்ல சுவை :)

   Delete
 15. மதுரைத் தமிழன் யூ டியூபில் கொடுத்திருக்கிறாரா? அட... இப்போ உடனே பார்க்க முடியாதே... அப்புறம் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. no sriram its from his blog not you tube :)nan thaan குழம்பிட்டேன் ..வெர்றி ஸாரி
   மாத்திடறேன் வெறும் காணொளின்னு

   Delete
 16. மனோ மேடம் சொன்ன முருங்கிக்காய் (அதிரா கவனிக்கவும்!) ரசமும் செய்து பார்த்து விட்டீர்களா.... நானும் செய்து ருசிக்க வேண்டும் சீக்கிரமே...

  ரசித்து ருசித்துச் செய்வதுதான் நல்ல சமையல்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா சுசிச்சு சுசிச்சுச் செய்து சாப்பிடோணும் :)

   Delete
  2. ஸ்ரீராம் ..அந்த ரசம் நலல இருக்கு நீங்க அந்த பச்சை கலர் கோப்பையில் அவியல் போட்டு குடிப்பீங்களே அதே மாதிரி குடிக்கலாம் சீக்கிரம் செஞ்சிருங்க :)

   Delete
  3. சமையல் மட்டுமில்லை எந்த காரியத்தையும் வீட்டுத்தோட்டம் கார்ட்ஸ் மலர் அரேஞ்சமென்ட் எல்லாமே ரசித்து செய்யும்போது அதன் பலன் இரட்டிப்பாகும் ,,
   அம்மா அதென்ன ரெண்டு பேரும் அடிக்கடி எனக்கு தெரியாம ரகசியம் பேசறீங்க எனக்கு உடனே தெரியணும் :)

   Delete
  4. //நீங்க அந்த பச்சை கலர் கோப்பையில் அவியல் போட்டு//

   ஓ மை காட்! என்ன ஒரு ஞாபக சக்தி!

   Delete
  5. ஹா ஹா :) எனக்கு கொஞ்சம் ஞாபக சக்தி அதிகம் :)

   Delete
 17. ///இன்றைக்கு நான் சமையல் பற்றி பேசலாம்னு இருக்கிறேன் :///

  அதுதானே பார்த்தேன் எங்கடா சமைக்க போறேன்னு சொல்லப்போறீங்களோ என்று பார்த்தால் பேசப் போகிறேன் என்று உண்மையை சொல்லீட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. லொள்!!! ஹஹஹ்ஹ்

   கீதா

   Delete
  2. !#@%$&^%*&&(()()*&&$@#T:) garrrrrr

   Delete

 18. //அதிராவை நடுவில் உட்காரவைச்சிட்டு சுற்றி எல்லாரும் அமரவும் .///


  அதிரா உட்கார்ந்த பின் வேறு யாரும் உட்கார அதில் இடம் இருக்காதே

  ReplyDelete

 19. ///வருங்கால மருமகனை நினைத்து நொந்து அந்த பதிவரின் தாய் பல மங்கையர் மலர் புத்தகங்களின் குறிப்புகளை அவசர அவசரமாக ஊருக்கு புறப்படுமுன் கிழித்து தந்தார்///

  இப்ப மருமகன் சமைப்பதில் மிக கெட்டிகாராக ஆகிவிட்டாராமே

  ReplyDelete
  Replies
  1. அயான் ங்கா யாஐயாங் யுடான் ங்க்க் :) ஒண்ணுமில்லை அழுதேன் ..அவர் சமையல் கத்துக்காம இருக்கறதுதான் எனக்கு safety :)
   எதோ நானா சமைச்சி போடறதை அப்படியே மறு பேச்சில்லாம சாப்பிடறார் அது போதும் :)

   Delete
  2. இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வைச்சு காப்பாறுகிறவருக்கு இதுநாள் வரைக்கும் வாய்க்கு ருசியா இதுவரை ஏதும் கிடைக்கலை என நினைக்கும் போது உங்க வூட்டுகாரரை நினைச்சா மனசு வலிக்கிறது..... ஹும்ம் போன பிறவியில் என்ன பாவம் செய்தாரோ

   Delete
  3. Pona piraviyil avar naanaagavum naan avaraagavum irunthiruppomnu ninaikkiren haa haa a 😃

   Delete
 20. நம்ப முடியவில்லை வில்லை


  இந்த ரசம் ஏஞ்சல் செய்ததா அல்லது ஏஞ்சல் வூட்டுகாரர் செய்ததை இவர்கள் படம் எடுத்து போட்டு இருக்காங்களா? நிச்சயம் இதற்கு போலீஸ் விசாரணை வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் :) நம்பித்தான் ஆகணும் :) இல்லைனா கீசக வதம் ரிவ்யூ ரெடி பண்ண சொல்வேன் அதிராகிட்ட :)

   Delete
 21. இன்று எங்கவூட்டு மாமி சமைச்சாங்க ரசம் கோவக்காய் கறி & பாவக்காய் கறி நன்றாகே சமைச்சு இருந்தாங்க வழக்கமாக பசியோடு காத்து இருக்கும் போது சொதப்பிடுவாங்க ஆனால் என்ன ஆச்சு அவங்களுக்கு என்று தெரியவில்லை நன்றாகே சமைச்சு இருந்தாங்க இப்பதான் அவங்களை பாராட்டி இங்கு வந்து பார்தால் நீங்களும் சமையல் பற்றி பதிவு போட்டு இருக்கீங்க


  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் இங்க பாருங்க அவங்க வீட்டு மாமி சொதப்புவாங்களாம்....நமக்கென்ன பூரிக்கட்டை ரெடியா இருக்கும் அங்க....ஹஹஹ்

   கீதா

   Delete
  2. அம்மாடியோவ் !! எவ்ளோ தைரியமா சொதப்புவாங்கன்னு சொல்றீங்க :) இதெல்லாம் கேட்டா அப்புறம் என் கணவரும் தைரியம் வந்து பேச ஆரம்பிச்சிடுவார் :) ..இவ்ளோ நாளும் அமைதி புறா அவர்

   Delete
  3. எங்க அண்ணன் வாயில்லா பூச்சிங்க அவர் அப்படி எல்லாம் பேசமாட்டார் காரணம் அவருக்கு நல்ல உண்வின் ருசி எப்படி இருக்கும் என்றே தெரியாமல் உங்க கூட இத்தனை வருஷம் வாழ்ந்திட்டாரு

   Delete
 22. முருங்காய் ரசம் ரெசிப்பி அருமை ஆனால் முருங்காய தோலை எடுக்காமல் விட்டுவிட்டால் அதை சாம்பார் என சொல்லாமோ ஹீஹீ இதை அவங்க தளத்தில் கேட்டால் அவங்க கரண்டியால் என் தலையை பதம் பார்த்துவிடுவார்களோ என்று நினைத்து கேட்காமல் வந்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. இல்லை மதுரைத் தமிழன் நல்லாவே இருக்கும் நான் செய்வதுண்டு. ஆனால் வீட்டில் பெரியவர்கள் பூண்டு வெங்காயம் சேர்க்க மாட்டார்கள் என்பதால் அவை தவிர பிற இங்கீரீடியன்ட்ஸ் அதே ஆனால் சாம்பார் பொடிக்குப் பதிலாக வீட்டில் செய்யும் ரசப்பொடி...சேர்த்து செய்வதுண்டு. ரொம்ப நல்லாருக்கும் ...

   பெரியவங்களுக்குத் தனியா செஞ்சுட்டு எங்களுக்கு இதெல்லாம் சேர்த்துச் செய்து பார்த்துடணும்....

   கீதா

   Delete
  2. நான் கரண்டியெல்லாம் பயன்படுத்த மாட்டேன் :) ரெண்டு மண் சட்டி இருக்கு .பரவாயில்லையா :)
   ஹா ஹா


   பிழிவதால் மேலும் சூப் கன்சிஸ்டன்சி மாதிரி இருப்பதால் மேலும் மிளகு சீரகத்தால் ரசம் நல்லாவே இருக்கு :)

   Delete

 23. ஹலோ யூடியுப்பில் ஒன்றும் போடவில்லை நேரடியாக வீடியோவை என் தளத்தில்தான் பதிந்து இருந்தேன் நல்லா பாருங்க.. இங்கு பூரிக்கட்டையால் அடிவாங்கி தலையும் உடம்புதான் புண்ணாகி இருக்கு அட்வாங்காத இடம் கைகள் மட்டுமே அத்னால்தான் கைகள் மட்டும் தெரியுமாறு வீடியோ போட்டு இருந்தேன்

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ :)எல்லா வீடியோவையும் யூ டியூபில் பார்த்து குழம்பிட்டேன் ..வெர்றி ஸாரி
   மாத்திடறேன் வெறும் காணொளின்னு ..

   Delete
  2. அதான் தெரியுமே மதுரைத் தமிழன்....உங்க உடம்பு பூரா கட்டோடு....அப்புறம் இங்ங்க பாருங்க..நீங்களும் இருக்கீங்களே,,,, மதுரைத் தமிழன் பாருங்க எப்படி.. கட்டோடு சமையல் செய்யுறாரு நு எல்லா பெண்களும் அவங்கவங்க ஹஸ்பண்டை திட்டுவாங்களேனு நல்ல மனசோட மதுரைத் தமிழன் அப்படியான வீடியோவை போடலை இல்லையா தமிழன்??!!!

   கீதா

   Delete
  3. மாமி தப்பு பண்ணிட்டாங்க கீதா :) அந்த கையை விட்டு வச்சது பெரிய தப்பு :)))))))

   Delete

  4. மாமி என் கையை உடைச்சால் எனக்கு மிக சந்தோஷம் காரணம் அதன்பின் பாத்திரம் கழுவ வேண்டாம் சமைக்க வேண்டாம் அவங்களுக்கு துணி அயர்ன் பண்ணி தர வேண்டாம் ஹும் ஆனால் மாமி மிக புத்திசாலி அதனால் கைக்கு மட்டும் சேதம் வாரமல் பார்துதான் அடிப்பாங்க

   Delete


 24. என் பொண்ணுக்கும் பிடித்த கூட்டு புடலங்காய் கூட்டுதான் அது உங்கள் வீட்டுப் பெண்ணிற்கும் பிடித்து இருக்கிறது என்று அறிந்த போது சந்தோஷம்

  ReplyDelete
  Replies
  1. அதுவும் நானா செய்த சதி :) என் கணவர் அவளுக்கு non வெஜ் கொடுக்கணும்னு சொல்வார் ஆனா நான் என்னை மாதிரி அவியல் மோர் சாம்பார் ரசம் தேங்காய சேர்த்த கூட்டுக்களுக்கு பழக்கிட்டேன் இப்போ அவளுக்கு அசைவம் பிடிக்கலையாம் :) எப்படி நம்ம ட்ரெயினிங்

   Delete
  2. இங்க வீட்டில் 95 % வெஜ்தான் சிக்கன் ஃபிஷ் அவ்வப்போது மாமி வீட்டில் இல்லாத போது சமைப்படு உண்டு

   Delete

 25. அடுத்த ரெசிப்பி அதிராவிற்கு பிடித்த எக் ரெசிப்பி முடிந்தால் வருகிற திங்கள் கிழமை செய்யலாம் என்று இருக்கிறேன் மாமி வீட்டில் இல்லாதாபோதுதான் எக் செய்ய முடியும் திங்கள் கிழமை என் நாள் அன்றுதான் நான் சுதந்திரமாக இருக்கும் நாள்

  ReplyDelete
  Replies
  1. முட்டையா !!!! .எங்க வீட்ல ரெண்டு பேர்தான் எக் ஈட்டர்ஸ் :) waiting for you recipe :)))
   எனக்கும் முட்டைக்கும் ஆகவே ஆகாது வீட்டில் நிறைய சண்டைகோழிங்க வளர்த்தோம் அந்த முட்டை ஒவ்வுன்னும் ரொம்ப ஹெவி அன்ட் ரிச் சாப்பிடவே முடியாதது அப்போ வந்த வெறுப்பு அதோட நிறுத்திட்டேன் ..பேலியோவுல சேர்ந்தப்போ வேற வழிஇன்றி 10 நாள் ஸ்ட்றா போட்டு குடிச்சேன் அப்புறம் அதையும் கைவிட்டுட்டாச்சு எல்லா முட்டையும் அதிராவுக்கே கொடுத்திடுங்க :)

   Delete
 26. சமையலை விட உங்களது பதிவு சுவையாக இருக்கின்றது..

  அடுத்து வரும் நாட்களில் சில குறிபுகளைச் செய்து பார்க்கிறேன்(?)!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா:) வாங்க ஐயா ..மிக்க நன்றி ..நீங்களும் சமைப்பீர்களா ..செய்து பாருங்க முருங்கை ரசம் புடலங்கா கூட்டு செம காம்பினேஷன்

   Delete
 27. பதிவ படிச்சு சிரிச்சுட்டேன் ஏஞ்சல்!! செம சுவையான பதிவு!!!! அழகா எழுதியிருக்கீங்க...

  ஐயோ எப்படிப்பா 10 வருஷம் மோர்மிளகாய் அந்த டேஸ்ட் தெரியாமப் போச்சா....நானும் முதலில் து பருப்பு, க பருப்பு, வித்தியாசம் தெரியாமத்தான் அப்புறம் உ பருப்பு, பயத்தம் பருப்பு வித்தியாசம் தெரியாம மாத்தி மாத்திப் போட்டு அப்புறம் கன்டெய்னர்ல எழுதி வைச்சுட்டு... கொஞ்ச நாள்தான் அப்புறம் இயற்கையாவெ எல்லாத்துலயும் ஆர்வம் இருந்ததுனால புதுசு புதுசா சமைக்கறதுல ஆர்வம் உண்டுன்றதுனால நிறைய சமைச்சுப் பார்ப்பேன்...மகன் வளர்ந்த பிறகு நிறையவே...அவனும் விரும்பிச் சாப்பிடுவான்...உங்கள் மாதிரிதான் நிறைய செய்து பார்ப்பேன்...உங்க இந்த ரெசிப்பியும் செஞ்சு பார்த்துடறேன்...

  அப்புறம் நெல்லி ரசம் எங்க மாமியார் செய்வாங்க ஸோ நானும் செய்யறதுண்டு. மாதுளை ரசம், ஆரஞ்சுரசம்...இப்ப 4 டேய்ஸ் முன்னாடி கூட செய்தென். கொழுமிச்சை ரசம், நார்த்தங்காய் ரசம், சாத்துக்குடி ரசம்...பைனாப்பிள் ரசம்...ரோஸ் பெட்டல் போட்டு ரசம் னு மனசுல தோணுறது எல்லாம்...மோஸ்ட்லி இந்த ரசத்துல எல்லாம் பூண்டு, வெங்காயம் இல்லாமத்தான் இருக்கும். மிளகு ஜீரகம் தனியா பொடி/ரசப்பொடி...போட்டு...சிட்ர்ஸ் ன்றதுனால புளி போடாம....ஆரஞ்சுக்கும், பைனாப்பிளுக்கும், ரோஸ் ரசத்திற்கு மட்டும் கொஞ்சம் புளி சேர்த்து...என்று...ஃஇப்படி...

  உங்க நெல்லி ரசம் போய் பார்க்கறேன்...செய்து பார்க்கனும்...

  சூப்பர் ஏஞ்சல் கலக்குங்க...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா நானும் அந்த கூட்டை சாப்பிட்டதில்லை இவரும் சுவைத்ததில்லை அதனால் எங்களுக்கு வாழைக்காய் புளி கறி இப்படித்தான் இருக்கும்னு நினைச்சிட்டோம் :) அடிக்கடி செஞ்சதில்லை வாரம் ஒருமுறை அப்போ தினமும் மென்யு போட்டு தான் சமைப்பேனாக்கும் :)) ..ப்ரிட்ஜில் magnet போட்டு லிஸ்ட் வச்சிடுவேன் அப்பாலும் தயிர் என்று கல்யாண சாப்பாடு ரேஞ்சில் இருக்கும் எல்லாம் புக் பார்த்து செய்ரது ..2008 ல தான் வற்றல் மிளகாய் படம் யாரோ ரெசிபில தந்திருந்தாங்க இல்லைனா தொடர்ந்து மோர் மிளகாய் தான் சேர்த்திருப்பேன் ..மாதுளை ரசம் எப்படி செய்ரது எனக்கு சொல்லுங்க ..பங்களாதேஷ் நார்த்தங்காய் கிடைக்கும் நான் செஞ்சிருக்கேன் .பைனாப்பிள் கொஞ்சம் அலர்ஜி அதனால் செய்ய மாட்டேன்

   Delete
 28. இன்று எங்கள் வீட்டில் வேப்பம்பூ ரசம். இது இரு முறையில் செய்வதுண்டு. ஒன்று என் மாமியார் செய்வது போல மோர் ரசம் என்றும் சொல்லுவாங்க...இன்னுனு நான் செய்வது...ரெசிப்பி அளவு எல்லாம் இல்லாம செய்யறதுனால இங்க கொடுக்க முடியலை ஏஞ்சல்...கண்ணளவுதான்...அதான்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் வேப்பம்பூ ரசம் ரொம்ப ஆசைப்பா கீதா இங்கே முருங்கைப்பூ வருது ஆனா வேப்பம்பூ லண்டனில் கிடைக்கும்னு சொன்னாங்க .இது வரை பார்க்கலை .சுவை எப்படி லேசா கசக்குமா ?

   Delete
 29. உங்க ரசமும், கூட்டும் நாக்கில் நீர் ஊறவைக்கிறது...சூப்பர்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் பேலியோவில் இருப்பதல் ரொம்பவே கண்ட்ரோல் பண்ணினாலும் ஒரு கரண்டி புடலங்கா கூட்டை அள்ளி போட்டேன் வாயில்
   ரசம் அப்படியே குடிக்கலாம் :) நீங்களும் செய்ங்க

   Delete
 30. உங்க நெல்லி ரசம் பார்த்துட்டேன். மாமியார் செய்வது போன்றுதான் என்ன பூண்டு, சுக்கு போடாம செய்வாங்க....நான் உங்க முறைல செய்து பார்க்கறேன்....சூப்பர்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) தாங்க்ஸ் கீதா ..பூண்டு எனக்கும் சேர்க்க பிடிக்காது ஆனா ரசம் புளி குழம்புகளுக்கு சேர்ப்பேன் ..சுக்கும் இதிலதான் முதல்முறையா சேர்த்து செஞ்சேன் .செஞ்சிட்டு உங்க பிளாக்ல போடுங்க அதை பார்த்து ஒருத்தர் தானே தேம்ஸில் குதிக்கணும்

   Delete
  2. என்னது பூண்டு பிடிக்காதா வாழ்க்கையில் முக்கியமான டேஸ்ட்டை நீங்க கோட்டைவிட்டு இருக்கீங்க

   Delete
 31. necessity is the mother of invention .....! என்னதான் சமையல் செய்தாலும் கைப்பக்குவம் வேண்டும் அம்மாவின் சமையலுக்குப் பழகிப் போனவர்கள் மனைவி கையால் சமைப்பதையும் சாப்பீடுப்பழகிக் கொள்ள வேண்டும் யார் எப்படி சமைத்தாலும் இந்த முருங்கைக் கீரை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் ஆடுகளுக்குப் போடும் தழைகளை உடலுக்கு நல்லது என்று சமைத்துப் போடும்போது ஆஹா அந்த அனுபவமே தனி பாவம் உங்கள்கணவரும் குழந்தைகளும் எளிடான நல்ல சமையலையே செய்யுங்கள் கற்றுக் கொள்ளுங்கள்அதற்கு முன் சமையல் பண்டங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) G.M.B ஐயா இப்போ பழகிட்டேன் இப்போல்லாம் நல்லாவே செயகிறேன் .அது பழைய நினைவுகள் வந்தது ரசம்லாம் சொதப்பினது அந்த காலம் :) இப்போ வெரைட்டி ரசம் செய்வேனே ..THAT was long long ago :)got confused with dried chilli and thayir chilli :)

   Delete
 32. நிஜமாவே நீங்கதான் சமையல் பண்ணீங்களா அக்கா?? நம்பவே முடியலை.. ஹி ஹி சூப்பர்..
  நான் உங்க மேல பயங்கர கோபத்தில் இருக்கேன்.. :(

  ReplyDelete
  Replies
  1. அடக்கடவுளே !! இதென்ன அபிக்கு இப்படி ஒரு சந்தேகம் :) நான் தான் சமைச்சேன் புடலங்காய் கூட்டு அண்ட் ரசம் ..thanks :)
   ஏன் கோபம் அபி :) நான் இனிமே வாரம் ஒரு ரெசிப்பி சொந்த ரெசிப்பி போடபோறேனே :)

   Delete
 33. ஆஹா ...வாசிச்சு சிரிச்சதில் எழுத வந்த கொமண்ட் கூட மறந்துபோச்சு. புடலங்காய் கூட்டு போல இங்கு இப்போ வாழைப்பூ, முருங்கை இலை கூட்டு செய்கிறேன். இந்த முறையில் ஒருக்கா செய்யோனும். ஆனா வெங்காயம் இல்லாமலா.. ம்..செய்துவிடவேண்டியதுதான்..
  அருமையா அழகா எழுதியிருக்கீங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) ஒரு காலத்தில் செய்யாத அட்டகாசம் இல்லை நான் எல்லாம் குழப்பியடிச்சு செய்வேன் ..நீங்க இதே மாதிரி செய்து பாருங்க ப்ரியா ,,நல்ல டேஸ்டி ..வெங்காயம் என் மகள் சாப்பிட மாட்டா ..அதனால் சேர்க்காம செஞ்சேன்

   Delete
 34. எல்லோரும் என்னை வைச்சு செய்யற மாதிரியே ஒரு பீல் ..
  சமையலில் எனக்கு வெந்நீர் வைக்கவே தெரியாது ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மது :) ஆனா எங்க வீட்ல அப்பா நல்லா சமைப்பார் நளபாகம் ஆண்களுக்குரியது என்பார்களே :)

   நீங்க சமைக்க தெரியாம இருக்கிறது மைதிலிக்கு நல்லது ஹாஹா ..நான் இவர்கிட்ட கேட்டுப்பேன் இந்த கூட்டு இந்த குழம்பு சாப்பிட்டுருக்கீங்களா என்று அப்புறம்தான் சமைப்பேன் அவருக்கு தெரியாததுன்னா பிரச்சினை இல்லை :)

   Delete
 35. aaaaavvvvv me the 100th

  https://www.google.com/search?q=cat+flying+image&newwindow=1&client=aff-maxthon-maxthon4&hs=6At&affdom=maxthon.com&channel=t23&source=lnms&tbm=isch&sa=X&ei=y_gdVcmZFdDSoASy7oC4CA&ved=0CAgQ_AUoAQ#imgrc=Yliwmltwu20z3M:

  ReplyDelete
  Replies
  1. நூறாவது கமெண்ட்டை போட்ட அதிராவுக்கு நூறு நெத்திலி கருவாட்டை தருகிறேன் :)

   Delete