அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/27/17

சில குணாதிசயங்களும் மரபணுக்களும் (1)



                சில குணாதிசயங்கள்  மரபணுக்கள் வழியே  சந்ததியினரை தொடரும் என்பது பற்றி ஜோதிஜி அவர்களின் என்னைப்பற்றி பதிவில் உள்ள பின்னூட்டத்தில்  வாசித்தபோது நம்மை சுற்றி  ஏதாச்சும் நல்ல விஷயங்கள் தொடர்கிறதா என்றும் அதேபோல இளம்பிராயத்தில் நம்மை அறியாமல் ஏற்றுக்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் காலமெல்லாம் வாழ்வில் தொடருமா  ! என்றும்  யோசித்துக்கொண்டிருந்தேன் அப்போ எங்க வீட்டில் மற்றும் அக்கம்பக்கம் தெரிந்தவர்கள் மத்தியில் இப்படி தொடரும் சில தொட்டில் பழக்கங்கள்  குணாதிசயங்கள் நினைவுக்கு  வந்தது

..

 எனக்கு தெரிந்த ஒரு பெண்  சிறு வயது  முதல் விரல்  சூப்பும் பழக்கம் உடையவர் அவரது வீட்டில் அவரது அக்கா தம்பி தங்கைகளுக்கு இந்த பழக்கமே இல்லை  அவரது திருமணம் முடிந்த பின்னரும் இவரை விடாமல் தொடர்ந்தது விரல் சூப்பும் பழக்கம் ..
அவருக்கு குழந்தையும்  பிறந்தது ..நாங்க எல்லாரும் பிறந்த குழந்தையை பார்க்க போனோம் பார்த்த மாத்திரத்தில் அனைவரும் சிரித்து  விட்டோம் ..ஏனென்றால் பிறந்து மூன்று நாளேயான குழந்தை கண்களை மூடி விரலை வாயில் வைத்தவாறு தூங்கிட்டிருந்தது :) அந்த பெண் குழந்தைக்கு இப்போ 25 வயதிருக்கும் இன்னமும் அந்த பழக்கத்தை விடல்லையாம் :)))
இது தாயிடமிருந்து மகளுக்கு  மரபணுக்கள் வாயிலாக தொடரும் தொட்டில் பழக்கம் :)
இன்னொரு பெண்ணின் குடும்பம்  கிறிஸ்தவர்கள் .. அவர்கள்  வீட்டில் இரண்டு பெண்கள் தந்தை அரசு ஊழியர் பல ஊர்களுக்கு அடிக்கடி வேலை மாற்றம் காரணமாக வீடு மாற வேண்டிய சூழல் ..இப்படி அந்த பெண்ணின் தாய் கர்ப்பமுற்ற நாள்முதல் மற்றும்  பிரசவ நேரத்தில் அவர்கள் அருகில் இருந்தது ஒரு சைவ  குடும்பம் ..அந்த வீட்டில் இருந்து இப்பெண்ணின் தாய்க்கு மூன்று வேளையும் பருப்பு நெய் தயிர் ஊறுகாய் தவறாது வரும் மற்றும் அப்பெண்ணின் தாயாருக்கு  வளைகாப்பு வைபவத்தை நடத்தியதும் அந்த  குடும்பத்தினரே ..இப்படி மிகவும் உதவியாக இருந்திருக்காங்க அந்த பிராமணர் குடும்பம் .சில மாதங்கள் கழித்து  குழந்தை பிறந்தது பெண் குழந்தை அந்த குழந்தைக்கு சிறு வயது முதலே அசைவமே ஆகாது ..பிராமணர் குடும்பத்துடன் அப்பெண்ணின் 2 வயது வரை தான் தொடர்பிருந்தது பிறகு பல ஊர்களுக்கு மாற்றம் வெவ்வேறு ஊர்களில் வசித்தார்கள் . நான் சென்னையில் இருந்தவரை அப்பெண் சுத்த சைவம்  வீட்டில் அவருக்கென தனி பாத்திரத்தில் சமையல் செய்ய சொல்வாராம் ..தாயின் வயிற்றில் இருக்கும்போது அவர் உண்ட உணவுகள் அவரை சைவமாக்கி விட்டது என்பார்கள்..அநேகமாக அவர் குணாதிசயம் இன்னும் மாறியிருக்காது என நம்புகிறேன் :) இது கருவிலிருந்தபோதே உணவு பழக்கம் வாயிலாக ஏற்பட்ட குணாதிசயம் ..
இதில் இன்னொரு வேடிக்கை அந்த சைவமாக மாறிய  பெண்ணுக்கு ஒரு தங்கை இவரது பெற்றோர் திருவாரூர் அருகில் வேலை செய்தபோது பிறந்திருக்கு ..அந்த பெண் குழந்தை பிறக்கும்போது உதவியது பக்கத்து  வீட்டு இஸ்லாமியர் :) குடும்பம் இதுக்கு மேலே நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் :) ஆனால் பாவம் அந்த பெண்களின் தாய்க்குத்தான் இருவருக்கும் தனி சமையல் செய்து முடியவில்லை என்பார்கள் :) 
இந்த உணவு பழக்கம் எப்படி இருவருக்கும் மாறியது என்று ஆச்சர்யத்துடன்  யோசிப்பேன்..

பெரியோர்  சொல்வார்கள் வளையல் சத்தம் பாட்டு ஒலி இதெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நன்கு பரிச்சியமாகுமென்று  ..என் மகள்  வயிற்றில் இருக்கும்போது வித விதமான இனிய இசை பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பேன் ..என் கணவர் ஸ்ட்ரிக்ட்டா சொன்னார் //தயவுசெய்து நீங்க பாடிடாதிங்க இந்த சிடியை மட்டும் ஒலியை உரக்க  வைத்து கேளுங்கன்னு !! அதை  அப்படியே தொடர்ந்தேன் ..எங்க மகளுக்கு அழகிய இனிய குரல் மற்றும் இசை மீது மிகுந்த ஆர்வம் இருக்கு வயலின் அழகா வாசிக்க கற்றுக்கொண்டு வருகிறாள் ..ஆலயத்தில் பாடகர் குழு மெயின் ஸோலோயிஸ்ட் அவள்தான் ..எங்க குடும்பத்தில் என்னைத்தவிர மற்ற உறவினர்கள் தாத்தா பாட்டி அனைவருக்கும் இசையென்றால் மிகவும் விருப்பம்..இதேபோலத்தான் கணவர் குடும்பத்திலும் .  ..இந்த இசைஞானம் மரபு வழியாக மகளுக்கு  வந்துள்ளது என்பதில் ஆச்சர்யமில்லை ..

எழுத எழுத இன்னும் நிறைய நினைவுகள் வருவதால் இந்த  பதிவு தொடரும் :)

இது ஸ்ரீராமுக்காக  ஸ்பெஷல் காணொளி :)


முந்தைய பதிவில் ஸ்ரீராம் ஆற்றங்கரை  வளர்ப்பு மகள் எங்களை நினைவு கூறுவாளா என்று கேட்டார் :) இதோ பாருங்க எங்க வாத்து மகளின் குட்டி பாப்பாங்க சிறகடித்து ஓடி வந்து நாங்க கொடுத்த ப்ரெட் துண்டங்களை  உண்ணும் காட்சி ..மிக பெரிய காணொளியை ட்ரிம் செய்ய வேண்டியதாப்போச்சு :( பாப்பாக்கள்  வேகமாக வந்தன எங்களை பார்த்து ..ஒரு நாலஞ்சி நாளில்  வளர்ந்திட்டாங்க :)

.

                                           






அடுத்த பதிவில் இன்னும் பல குணாதிசயங்களுடன்  சந்திப்போம் .


54 comments:

 1. சில குணாதிசயங்களும் மரபணுக்களும் (1) என்ற இந்தப்பதிவினில் பல ஆச்சர்யமான நிகழ்வுகளைப்பற்றிச் சொல்லியுள்ளீர்கள். இவை எல்லாமே மிகவும் உண்மைதான். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..ஆமாம் பல விஷயங்கள் ஆச்சர்யமூட்டுபவை இந்த குணாதிசயங்களில் ..இன்னும் தொடர்ந்து பகிரப்போகிறேன் ..உங்கள் வீட்டிலும் வரையக்கூடியவர் உங்க க்ராண்ட் சன் ..பரிசு கூட வாங்கியுள்ளார் என்று பதிவிட்டிருந்திர்களே ..
   அதேபோல பல திறமைகள் அடுத்த ஜெனரேஷனுக்கு தொடர்கின்றன ..
   மிக்க நன்றி அண்ணா

   Delete
 2. சில குணாதிசயங்கள் மரபணுக்கள் வழியே சந்ததியினரை தொடரும் என்பது உண்மைதான்.
  அருமையான பகிர்வு.

  மாமனை போல், தாத்தாவை போல் குணம் என்று வீடுகளில் குழந்தைகளின் குணநலன்களைப் ப்ற்றி சொல்லும் போது சொல்வார்கள்.

  //இசைஞானம் மரபு வழியாக மகளுக்கு வந்துள்ளது என்பதில் ஆச்சர்யமில்லை ..//

  உங்கள் மகளின் இசை ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.



  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..இதைப்பற்றி இன்னும் அடுத்த பதிவிலும் சொல்லயிருக்கிறேன் ..ஊரில் அப்படிதான் தாத்தாவின் கோபம் அம்மாவின் அன்பு என்று அனைத்தும் பேரப்பிள்ளைகளுக்கு குணாதிசியங்கள் மரபு வழி செல்வதை நானும் கூற கேட்டிருக்கேன் ..
   இசை எங்கள் வீட்டில் அனைவரும் ஏதாவது ஒரு கருவியை வாசிக்க அறிந்தவர்கள் ..

   Delete
 3. >>> சில குணாதிசயங்கள் மரபணுக்கள் வழியே சந்ததியினரை தொடரும் என்பது உண்மையே >>>

  எனது பேத்திக்கு இரண்டு வயது..
  ஒருமுறை கேட்டதோடு அவள் பாடுகிற பாடல் -
  சின்னச்சின்ன வண்ணக் குயில்.. கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா!..

  இதை யாரும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்க வில்லை..

  இந்தப் பாடல் வெளியான போது என் மகள் சின்னக் குழந்தை..
  அவளிடம் நான் இந்தப் பாடலைப் பாடி விளையாடியது எனது நினைவில் இருக்கின்றது..

  இப்போது அதே பாடலை என் பேத்தி பாடுவது ஆனந்தத்தின் எல்லை!..

  என் தந்தை இசைக் கலைஞர்.. எனக்கு இசை பயில ராசி இல்லை.. என் பிள்ளைகளுக்கும் அப்படியே..

  ஆனால், என் மகளுக்கு சின வயதில் நான் வாங்கிக் கொடுத்த மவுத் ஆர்கனில் என் பேத்தி எதையோ வாசிக்கின்றாள்..

  எல்லாம் இனிமை.. இனிமை தான்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா !! உங்க பேத்தியின் குணாதிசயம் வியப்பைவரவழைக்கிறது ..பாருங்கள் நீங்க பாடிய பாடல் குட்டி பாப்பாவுக்கு மிகவும் விருப்பமாகி அவள் மழலையில் மீண்டும் உங்கள் செவிக்கே வந்திருக்கு ....நீங்கள் அவளுக்கு இப்போதிருந்தே ஏதேனும் ஒரு இசை கருவி வாங்கி வையுங்கள் .எனது நண்பி ஒருவர் அவரது மகனுக்கு மினி பியானோ ஒன்றை வாங்கி தந்தாராம் 3 வயதில் அந்த மகன் இங்கே பல தேவாலயங்களில் பியானோ வாசிக்கிறார் ..கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

   Delete
 4. //எனக்கு தெரிந்த ஒரு பெண் சிறு வயது முதல் விரல் சூப்பும் பழக்கம் உடையவர் //
  ஹா ஹா ஹா இந்தப் பழக்கம் எங்கள் வீட்டில் யாருக்கும் இல்லை, ஆனா எனக்கு குழந்தைகள் கை சூப்புவது பார்க்கப் பிடிக்கும்..[ 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்] அதிலும் இங்கு எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் வாயில் சூப்பி இருக்கும்[dummy] எனக்கு என் குழந்தைகளுக்கும் இந்த டம்மி வைக்க விருப்பம், கணவர் வேணாம் பழக்கினால் கஸ்டம் எனச் சொல்லியும், இல்ல பிளீஸ் எனக்கது கொடுக்க விருப்பம் என வாங்கி, இரு பிள்ளைகளுக்கும் எவ்ளோ கஸ்டப்பட்டு வாயில் வைப்பேன் தெரியுமோ?:) ஹா ஹா ஹா ஒரு தடவைகூட உள்ளே எடுக்கல்ல இருவரும் கர்:) உடனேயே துப்பிடுவார்கள்... ட்றை பண்ணி களைச்சு விட்டிட்டேன்ன். கை விரலைக்கூட பிடிச்சுப் பிடிச்சுக் கொடுத்துப் பார்த்தேன் ம்கூம் முடியல்ல:) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. இது என்ன வித்தியாசமான ஆசை? இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாரிஸ் மெட்ரோவில் 18 வயதாவது இருக்கும் பெண் விரல் சப்பிக்கொண்டே வந்தாள். அவள் வயதொத்த நண்பியிடம் பேசி பதில் சொல்லும்போது மட்டும் வாயிலிலிருந்து விரலை எடுத்துவிட்டு பேசினாள். மீண்டும் விலை படக்கென்று வாயில் நுழைத்து சப்பிக்கொண்டிருப்பாள். கூடவே அவள் அம்மா வேறு. காலை 5:30 மணி ரயில். கூட்டம் வேறு. பார்க்கவே அசிங்கமா இருந்தது.

   Delete
  2. @நெல்லை தமிழன் சகோ ..இந்த பூனை இப்படித்தான் வித்தியாசமான ஆசைங்க வச்சிருப்பாங்க ..புளியன்கொட்டையை ரோஸ்ட் பண்ணி சாப்பிடுவாங்க ..பல்லாலேயே ஹேஸல் நட் உடைப்பாங்க இப்படி ஆயிரத்தில் ஒரு பூனை :))

   Delete
  3. நானும் ஜேர்மனில ஒரு பெரிய பெண்ணை பார்த்தேன் நீங்க சொன்ன மாதிரி வாயில் விரல் அவ்வ்வ் பார்க்க நல்லவேயில்லை அவ்ளோ அழகா ட்ரெஸ் செஞ்சி படிக்கிற பிள்ளை போலிருந்தா ..

   எங்க சர்ச்ல் ஒரு அவங்கம்மா விரலில் .அந்த பொண்ணு வேலைக்கும் போறா :)

   என் மகளுக்கு டம்மிஸ் கொடுத்திட்டு அதை நிறுத்த பட்ட பாடு ஹையோ அந்த டம்மிஸ் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் :)

   Delete
  4. http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

   Delete
 5. //அந்த பெண் குழந்தைக்கு இப்போ 25 வயதிருக்கும் இன்னமும் அந்த பழக்கத்தை விடல்லையாம் :)))///
  ஹையோ கொடுமை. நான் ஊரில் ஒரு குழந்தை பார்த்தேன் ஒரு 10,12 வயதிருக்கும், பெருவிரல் அப்படியே உள்ளே போகும்வரை தள்ளி சூப்புவார்ர்.. பக்கத்தில் இருக்கும்போது மணக்குது.. என்ன செய்வது தாய் சொன்னா, தான் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் முடியல்ல என.. கஸ்டம்தான்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் ..நான் கிட்டவே நெருங்க மாட்டேன் எங்க ஆலயத்தில் ஒரு 20 வயதி பெண் வாயில் விறல் சூப்பி நகத்தை கடிச்சிட்டே ஈரத்துடன் இருப்பா

   Delete
  2. சின்ன வயதுல, கட்டை விரலில் வேப்பெண்ணெய் தடவுவார்கள். அப்படியும் சரியாகலைனா வேற ஒரு கசப்பான மருந்து தடவுவார்கள். பொதுவா கட்டை விரலைத்தான் சூப்புவார்கள்.

   Delete
  3. ஆனா பாவம்ல குட்டி விரலில் கசப்பு தடவ மனசே வராது எனக்குன்னா ..இங்கே வெளிநாட்டுகாரங்க டம்மிஸ் குடுப்பாங்க இல்லனா
   அதோட ஒரு குட்டி SOFT பொம்மையும் குடுப்பாங்க பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் அதை பிடிச்சிட்டே தூங்கிடுவாங்க ..

   Delete
 6. ///அநேகமாக அவர் குணாதிசயம் இன்னும் மாறியிருக்காது என நம்புகிறேன் :)//
  நானும் இதை படுபயங்கரமா நம்புகிறேன்:)

  ReplyDelete
  Replies
  1. விசாரிச்சிட்டேன் :) மாறவில்லையாம்

   Delete
 7. எங்கள் சின்னவர் வயிற்றில் இருந்தபோது அதிகம் பிரட்டு இருந்தது எனக்கு, அப்போ நைட் நைட்டாக கோக் தான் குடிச்சேன். அவர் பிறந்து ஒரு வயதிலிருந்து கோக் தான் தேடிக் குடிப்பார்... பின்னர் நிறுத்திட்டோம் வீட்டில் வாங்குவதில்லை, எப்போதாவது அதிகம் கேட்டால் மட்டும் வாங்கிக் கொடுப்பதுண்டு..:)..

  ReplyDelete
  Replies
  1. எங்கம்மாவுக்கு கேரள நேந்திரம் சிப்ஸ் அது அப்படியே எனக்கு பிடிச்சி போச்சு ..இன்னமும் எனக்கு ஸ்பெஷலா வரும் அது என் மகளுக்கு இப்போ பிடித்த சிப்ஸ்

   Delete
 8. /////தயவுசெய்து நீங்க பாடிடாதிங்க இந்த சிடியை மட்டும் ஒலியை உரக்க வைத்து கேளுங்கன்னு !! ///

  சே..சே..சே... நான் ஒண்ணும் உங்க குரலை தப்பா நினைக்கவே இல்ல:).. அது நீங்க பாடி ரயேட் ஆகிடுவீங்க எனும் நல்லெண்ணத்தில்தான் அவர் அப்பூடிச் சொல்லியிருப்பார் கரீட்டுத்தானே?:)

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் மியாவ் அதேதான் :) நான் டயர்ட் ஆகக்கூடாதுன்னு அவர் சொன்னார் ..ஹஆஹாஆ :)

   Delete
  2. என்னா ஒரு சமாளிப்புக்கேசன்... ஒரு பேச்சுக்கு சொன்னா....:)

   Delete
  3. உண்மைக்கு பொண்ணு 4/5 மாசம் இருக்கும் பாடும்போது வாய மூடினா குட்டி கையால் :) எவ்ளோ இனிமை பாருங்க

   Delete
 9. //.இந்த இசைஞானம் மரபு வழியாக மகளுக்கு வந்துள்ளது என்பதில் ஆச்சர்யமில்லை ..///
  அது உண்மைதான் ஆனா நான் நல்ல ஒரு பரத நாட்டிய மேதை.. ஆனா நான் வீட்டில் ஆடினால்/பழக்கினால் ஏதோ ஒரு அனிமலைப் பார்ப்பதைப்போல பார்க்கினம் கர்ர்ர்:).. இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...............................................................................................:) என நான் கேட்கவே மாட்டேன் எனச் சொல்ல வந்தேனாக்கும்:).. எங்கிட்டயேவா?:).

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) எதுக்கு குழந்தைகளுக்கு ஹார்ட் அட்டாக் கொடுக்கறீங்க பாவமில்லையா வீட்டிலிருப்போர் :) நீங்க ஆடினதும் இங்கே கடல் மட்டம் உயர்ந்திடுச்சி :)

   Delete
  2. அப்போ நீங்க ஆடுங்கோ சமனிலையாகட்டும்... அதுதானாக்கும் நைட் முழுக்க கட்டில் ஒரு பக்கம் சரிஞ்சே இருந்துதே.... சுவரைப் பிடிச்சுக்கொண்டெல்லோ படுத்தேன் விழுந்திடாமல் கர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  3. அதுக்கென்ன வாங்க :) யாரது போடுங்க வஞ்சிக்கோட்டை வாலிபன் மூஜிக் :)

   Delete
 10. //முந்தைய பதிவில் ஸ்ரீராம் ஆற்றங்கரை வளர்ப்பு மகள் எங்களை நினைவு கூறுவாளா என்று கேட்டார் :) ///

  அவர் கேட்டதுக்க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லயே:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.

  வீடியோ பார்க்க சூப்பரா இருக்கு, கடவுளே குஞ்சுகள் எல்லாம் பிழைத்திட வேண்டும்...

  ///அடுத்த பதிவில் இன்னும் பல குணாதிசயங்களுடன் சந்திப்போம் .///
  ஓ மை கடவுளே.... கருணை மழையே மேரி மாதா .......:).. என்னைக் காப்பாத்துங்கோ மீ அஞ்சுவின் வயசினளவு மெழுகுதிரி எண்ணி ஏத்துவேன்ன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :) அவர் கேட்டது அம்மா வாத்துக்கு எங்களை நினைவிருக்காணு ..இங்கே அம்மா வாத்து குட்டிஸுக்கு சொல்லி வளர்த்ததாலோ இல்லை அத்தூண்களுக்கே தெரிஞ்சதாலோ தானே 12 உம் எங்களை பார்த்து ஓடி வராங்க :)
   பக்கத்தில் வேறொரு ஆள் நின்றார் அவரை சட்டையும் செய்யலை இந்த பாப்பாங்க :) தட் மீன்ஸ் அதுங்களுக்கு அம்மா சொல்லி கொடுத்திருக்கார் அதை சொன்னேன் :)

   Delete
  2. ஏத்துங்க எதுக்கு கொஞ்சம் உங்க வயசளவு அதான் 88 cm அளவு ஏத்துங்க

   Delete
 11. நான் சின்ன வயசில் இருந்து கல்லூரி படிக்கும் வரை பிராமாணாள் குடியிருப்பு பகுதிகளில் படித்து வளர்ந்து வந்ததால் என்னவோ சாப்பாட்டில் நான் கல்கத்தா பிராமிணாக மாறிவிட்ட்டேனோ என்னவோ

  ReplyDelete
  Replies
  1. யெஸ் நிச்சயம் இருக்கக்கூடும் .

   Delete
  2. ////Avargal UnmaigalApril 27, 2017 at 9:48 PM
   நான் சின்ன வயசில் இருந்து கல்லூரி படிக்கும் வரை பிராமாணாள் குடியிருப்பு பகுதிகளில் படித்து வளர்ந்து வந்ததால் என்னவோ சாப்பாட்டில் நான் கல்கத்தா பிராமிணாக மாறிவிட்ட்டேனோ என்னவோ////
   நம்பிட்டோம்ம்ம்:) கராஜ் பிரிஜ்ஜில இப்போ என்ன இருக்கு:)?.

   Delete
 12. மரபணு குணாதிசயங்கள் உண்மை என்பதே என் நிலையும்!வாத்துக்கள் அழகாய் நீந்துகின்றது காணொளியில்[[!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் தாத்தா பாட்டியிடமிருந்து அப்பா அம்மாவிடமிருந்து உறவினரிடமிருந்து என இவை பரவி செல்கின்றன

   Delete
  2. என்னாதூஊஊ நேசன் எப்போ தாத்தா ஆனார்ர்ர்ர்ர்ர்ர்?

   Delete
 13. இசை ஈர்ப்பு என்பதும் ஒரு மரபணு செயல் என்பது என் பாட்டன்/என் தந்தை/நான்/என் மகன் என்று பாட்டு என்றாலே மூழ்கிவிடுகின்றோம்!அடுப்படி சங்கீதம் காதில் விழுவதில்லை உதவாக்கரை /இத்தியாதி[[ இந்த ரகசியம் உங்களுடன் மட்டும்§ஈஈஈஈ! [[

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆமாம் நேசன் முன்பே நீங்க சொன்னிங்க பிரியன் உங்களைப்போலவே பாடல்களை கேட்க ஆரம்பிச்சுட்டார்னு :)
   அதென்ன சமையலறை சங்கீதம் பாத்திரம் கரண்டி சத்தமா :))

   Delete
 14. அபிமன்யு தனது தந்தை அர்ஜுனன், தனது தாயிடம் அரைகுறையாகச் சொன்ன பத்மவியூகத்தைக் கர்ப்பத்திலிருந்தே கேட்டுத்தான் அறிந்து கொண்டு போர்க்களத்தில் பத்மவியூகம் உடைத்து வெளியில் வரும் வழி அறியாது உள்ளே மட்டும் சென்று உயிரை விட்டதாக மகாபாரதக் கதை.

  நீங்கள் சொல்லியிருப்பவையும் ஆச்சர்யமூட்டுகிறது. சுவாரஸ்யம்தான்.

  காணொளி ஓடவில்லை. வேறு பிரவுசரில் பின்னர் முயற்சிக்கிறேன். (இப்போது க்ரோம்)

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ஆச்சர்யமாக இருக்கு ..பத்ம வியூகம் சம்பவம் ..வயிற்றில் உள்ள குழந்தைக்கு நாம் நினைப்பது கூட தெரியுமாம் ..

   இன்னும் சில சம்பவங்கள் அடுத்த பதிவில் சொல்கிறேன் ....காணொளி எனோ தெரியல இப்போதெல்லாம் வீடியோ எடுத்தாலும் பதிவிலோ இல்லை மெயிலிலோ இணைக்க முடிவதில்லை ..நீளம் அதிகம்னே சொல்லுது ..

   Delete
 15. இந்த பதிவை படித்துவிட்டு ஒரு கருத்தையும் சொல்லிட்டு பீரை குடித்து கொண்டே பிந்தி மாசாலா பண்ணி யோசிச்ச போதுதான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. நான் எங்கம்மா வயிற்றில் இருக்கும் போது எங்கம்மா மற்ற பெண்களிடம் அரட்டை அடித்து மகிழ்வார்கள் போலிருக்கு அதனாலதான் என்னவோ இந்த மரப்ணுவால் நான் பாதிக்கப்பட்டு பெண்களிடம் அதிகம் அரட்டை அடித்து கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹஆஹாஆஆ :) இந்த நேரம் பார்த்து கீதா அதிரா நிஷா எல்லாம் எங்கே போனாங்க :)

   ஆனால் ஒன்று ..நிச்சயமாக உங்க அம்மாவின் கலகல குணம் உங்களுக்கு வந்திருக்கு ..
   ..போற போக்கில் ஒரு விஷயம் கண்டு பிடிச்சிட்டேன் :)
   இந்த வார சமையல் குறிப்பு பிந்தி மசாலா :)

   Delete
  2. நோஓஒ ட்றுத் நீங்க அப்போ அரட்டை அடிக்க வேண்டியது, அந்த அம்மாவின் பிரெண்ட்ஸ் உடன் மட்டும்தான் நொட் அதெ லேடீஸ் :) விடமாட்டேன்ன்ன் பெண்களை காப்பாத்தியே தீருவேன்ன்ன் ஸ்ஸ்ஸ்:).

   Delete
  3. ஹஆஹாஆ :) ஹை எனக்கு இது பிடிச்சிருக்கே

   Delete
 16. நல்ல பதிவு சகோ
  மரபணுக்கள் தங்கள் பணியைச் செய்யத்தான் செய்கின்றன

  ReplyDelete
  Replies
  1. மிகவும் விந்தை இல்லையா ! இந்த மரபணுக்களின் பரிமாற்றம்

   Delete
 17. பெற்றோர்களின், உறவினர்களின் குணாதிசியங்கள் குழந்தைகளிடம் நிறைய பார்க்கலாம். குழந்தைகளே மரபுவழு குணாதிசியங்களின் கலவைதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நெல்லை தமிழன் சகோ ..நிறைய விஷயங்கள் அப்படி சொல்லலாம் .. :) இன்னும் நிறைய அடுத்த பதிவில் பகிர்கிறேன் ..
   காபி குடித்தவுடன் சிலர் உடனே ஒரு கோப்பை நீர் அருந்துவார்கள் இதே பழக்கம் எங்க பாட்டிக்கும் எனக்கும் இருக்கு :)

   Delete
 18. எனக்கும் சில கருத்துகள் உண்டுஅவை எல்லாம் ஹாபிட்ஸ்களே நல்லவை அல்லாததை மாற்ற வேண்டும் எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன் உறங்கச் செல்லும்போது தாயின் முந்தனையைப் பிடித்துக் கொண்டால்தானுறக்குவான் இதெல்லாவற்றையும் விட Iam ok you are ok புத்தகம் படித்ட்க்ஹிருக்கிறீர்கள் நான் முன்பு அதனை தமிழில் சுருங்க எழுதி இருந்தே ன் மீள்பதிவாக்கும் உத்தேசம் எழுகிறது இதைப்படித்த பிறகு

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார் ..அந்த புத்தகத்தை ஒரு முறை இங்கே லைப்ரரியில் எடுத்து உடனே அவசரமா ஒரு மாதம் இந்தியா பிரயாணம் செல்ல வேண்டியிருந்ததால் அடுத்த நாளே படிக்காமல் கொடுத்துவிட்டேன் ,,பிறகு அப்படியே விட்டுட்டேன் ..உங்கள் பதிவு வாசிக்க வேண்டும் சீக்கிரம் பதிவிடுங்கள் ..அது ஒரு உளவியல் மனவியல் சார்ந்த கதை அல்லவா ...ஆமாம் கெட்ட பழக்கங்களை விடுதல் நல்லது ..

   Delete
 19. ஸாரி சகோ/ஏஞ்சல், பதிவு அருமை. உண்மைதான் பல குணாதிசயங்கள், மேனரிசங்கள் தொடர்ந்து வருகிறது. காணொளி சூப்பர்.. நல்ல பதிவு தொடர்கிறோம்...

  கீதா: ஆம் ஏஞ்சல். உங்கள் மகளைப் போல என் மகன் கருவாக இருந்தப்ப, நிறைய கர்நாட்டிக் ஸாங்க்ஸ், பஜன்ஸ், கேட்பதுண்டு. அவனுக்கு இசையில் ஆர்வம் மட்டுமல்ல, நிறைய ராகங்களும் கண்டு பிடிப்பான். திரை இசையில் உள்ள பாடல் ராக அமைப்பு தெரிந்துவிட்டால் உடனே வீணையில் வாசிகக்வும் செய்வான். வீணை வாசிப்பான் நல்ல திறமை உண்டு. அதே போன்று நான் கொஞ்சம் ஆண்மை கலந்தவள் என்பார்கள் என் வீட்டில். எனக்கு மரம் ஏறுதல், உடற்பயிற்சி, விளையாட்டு எல்லாம் ஆர்வம் உண்டு. மகனுக்கும் கராத்தே நன்றாக வந்தது. நல்ல காலம் மூளையில் அவனது தந்தையின் மூளையைக் கொண்டு விட்டான். இதில் எனக்கொரு சந்தேகம் நெடுந்நாளாக உண்டு. ஆனால் அதுவும் உண்மை என்றே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தவரை நாம் கருவில் குழந்தை வளரும் போது நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நபரின் (ஆணோ, பெண்ணோ..அப்பா அல்லாது அம்மா அண்ணன் அல்லது தங்கை இப்படி ஏதேனும் ஓர் உறவு நண்பராகக் கூட இருக்கலாம்...)குணாதிசயங்களும் ஏற்படலாமோ என்றும் தோன்றுகிறது.....

  உடல் அமைப்பு, வெளி உறுப்புகள், சில நோய்கள், குணங்கள்....என மூன்று, நான்கு தலைமுறைக்கு முன் இருந்த நம் மூதாதையரின் சிலது கூட வர வாய்ப்புண்டு. இதில் முந்தைய தலைமுறையில் இல்லாத நோய்கள் கூட வர வாய்ப்புண்டு. எங்கோ தொடர்பு இருக்குமாம்.....சிறிதளவு....ஆனால் சில சமயங்களில் இப்படித் தலைமுறைகள் சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் தியரியின் படி மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. உதாரணம்..பயிர்களில் பூச்சிகள் மருந்து அடிக்கும் போது அதில் தப்பிக்கும் பூச்சிகளின் அடுத்த தலைமுறைக்கு இந்த மருந்து அடித்தாலும் ஒழியாது. எனவே புதிய மருந்து கண்டு பிடித்தால்தான் உண்டு. அதனால்தான் கரப்பான் பூச்சியும், கொசுவும்,எலிகளும் கூட ஒழிக்கவே முடியாது என்பார்கள். மகனது ஃபிசியாலஜி ப்ரொஃபசர் சொல்லுவாராம், உணவிற்காக ஆடுகளை வெட்டும் போது ஒவ்வொரு ஆட்டையும் அதன் பின் நிற்கும் ஆடுகள் காணத்தான் வெட்டுவார்களாம். கோழி, மாடு எல்லாமே...அப்போது அவை கத்தும் போது பயத்தில் ஏற்படும் ஹார்மோன் என்னதான் வேக வைத்தாலும் அந்த ஹார்மோன் உடையாதாம்...அது அப்படியேதான் உணவில் வரும் என்று சொல்லியிருக்கிறார். அது போன்று ஒரு தாய் கருவுற்றிருக்கும் போது அவளது எண்ண அலைகளில் ஏற்படும் உணர்வுகள் கூட வளரும் குழந்தையின் மரபணுவை மாற்றும் சக்தி கொண்டதாம். இப்படி நிறைய இருக்கிறது...நல்ல பதிவு ஏஞ்சல் தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. விரிவான விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி கீதா ..அதேதான் .இங்கே என் முஸ்லீம் நட்பு ஒருவருக்கு அவர் ப்ரெக்னென்ட்டா இருக்கும்பொது நிறைய உதவிகள் செய்தென் ..குழந்தை பிறந்து ஒரு வாரத்தில் என்னை பார்த்து அவ்ளோ சிரிப்பு இப்ப அக்குழந்தை 5 வயசு ஆனா எங்கே பார்த்தாலும் ஓடி வருவா கட்டி பிடிப்பா :) ..தாய் எப்பவும் என்னை பற்றி வீட்டில் பேசுவாராம் இக்குழந்த வயிற்றில் இருந்தப்போ ..ஆச்சர்யம்தான் சில விஷயங்கள்

   Delete
 20. ஆமாம் அது flight fright fight ஹார்மோன்

  ReplyDelete
 21. உண்மைதான் அஞ்சு. சில பழக்கம் தொடர்ந்து வரும்போல. எங்க தாத்தா சாதம், பொரித்து வைத்த குழம்பெனில் வாழைப்பழத்தோடு சேர்த்து சாப்பிடுவாராம்.. அந்த பழக்கம் எங்க வீட்டில் ஒரே ஒருத்தருக்கு வந்துவிட்டது எப்படி?.ஹி..ஹி.. யாருக்கு. எனக்குதான்..
  லண்டன் நண்பி நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர். ஊரில் இருந்தபோது அவரின் அம்மா ஏசுவார். அவரின் பாட்டி சொல்வார் தாத்தாவின் அப்பா நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று அதுதான் இவளும் கடிக்கிறாள் என. கடைசி வரை விடவேயில்லை.
  சிலபேர் நடை,உடை பாவனையும் கூட மரபணு வழி வந்தவையா இருக்கலாம்ன்னு தோணும்..
  வா.வ் ஷரோன் மியூசிக் கத்துக்கிறாங்களா. இப்படி ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி தேவைதான். அபியும் இப்ப கிட்டார் பழகிறார்.
  இன்ரஸ்டிங் போஸ்ட்.

  ReplyDelete